Jump to content
  • 0

பொதுத் தேர்தல் நாம் என்ன செய்யப் போகிறோம்?


Athavan CH

Question

வர இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தரப்பாக களமிறங்க முடியாதா?

எல்லோரும் ஒன்றிணைவதற்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைவதில் என்ன தவறு  இருக்கிறது?

இம்முறை மகிந்தவிற்கு சுதந்திரக் கட்சியில் இடம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர் தனித்து இறங்குவார் எனக் கணிக்கப் படுகிறது, அப்படியாயின் ஒரு மும்முனைப் போட்டி ஏற்படலாம், அப்படியான சந்தர்ப்பத்தில் நாம் அதிகளவிலான பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் எமக்கான கேள்வியைக் கூட்டலாம்.

உண்மையில் தமிழ் கட்சிகள் ஒரு ஒப்புக்காவது  மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடாத்தியிருக்கலாம், ஆனால் அவர்கள் இப்பவே தொகுதிப் பங்கீட்டில் பிசியாகி விட்டார்கள். பராவயில்லை , நாமாவது  இங்கு ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலைச் செய்வோமா? 

எம்மைப் பிரித்து சிதைப்பதிலேயே குறியாக இருக்கிறது பேரினவாதம். அதனால் தான் ஐ.தே.க குடாநாட்டில் கணிசமான வாக்குகளைப் பெறுவதற்காக மேலும் சில பகுதிகளை  இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதாக படம் காட்டுகிறார்கள், இவ்வளவு காலமும் குடா நாட்டிற்கு வரும் மகிந்தவின் அமைச்சர்மாருக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்த விஜயகலா திடீரெனச் சென்று அரசியல் கைதிகளைச் சந்திக்கிறார்? 

எது எப்படியும் இருக்கட்டும்........,

நாம் எமது சொந்த விருப்பு வெருப்புக்களைக் களைந்து நாளைய எமது சந்ததியினருக்கு எது முக்கியமோ அதை நோக்கி ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலைச் செய்வோம்......

Link to comment
Share on other sites

3 answers to this question

Recommended Posts

தேர்த்தல் முடியும் வரை இப்படியான வீரபிரதாப பேச்சுக்களை நாம் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரனுக்கு... கட்டுக்காசும் கிடைக்காமல் செய்தால் தான்.... தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருப்படும்.
வருகின்ற 18´ம் திகதி இவர்கள் இருவரையும்... அரசியலை விட்டே, துரத்தி அடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சம்பந்தன், சுமந்திரனுக்கு... கட்டுக்காசும் கிடைக்காமல் செய்தால் தான்.... தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருப்படும்.
வருகின்ற 18´ம் திகதி இவர்கள் இருவரையும்... அரசியலை விட்டே, துரத்தி அடிக்க வேண்டும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சம்பந்தனின் தலைமையை தாண்டிய ஒரு அரசியல் பாதை தற்சமயம் நாட்டில் இல்லை. நாம் விரும்பிய அரசியல் தளம் இல்லாவிடினும்பரவாயில்லை, மக்களின் நலனுக்காகவேணும் நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்,
திருகோணமலையின் போணஸ் ஆசனத்தை கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். குறந்ந்தது 3 தேசிய பட்டியல் எம்.பி க்களையாவது நாம் பெற வேண்டும். அதற்கு நாம் அதிகளவிலான வாக்குகளை பெறுவது அவசியம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைப்பு மிகப் பெரும் பலத்தை எமக்குத் தரும் என்பது எனது கருத்து. இதை எப்படி சாத்தியமாக்கலாம்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.