Jump to content

அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு - BBC தமிழ்


Recommended Posts

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தமிழரசு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாவதற்குப் பலர் விண்ணப்பம் செய்திருக்கின்ற நிலையில் விண்ணப்பம் செய்யாத அனந்தியை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என்றும் சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.

"தமிழரசுக் கட்சியிடம் கேட்பதற்குப் பதிலாக ஊடகங்களிடம் நாங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் தரவில்லை என்று அனந்தி கூறி வருகிறார்", என்றும் சேனாதிராஜா குற்றம் சுமத்தினார்.

nullதமிழரசுக் கட்சி தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று அனந்தி விமர்சனம்

அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியின் சார்பில் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கேட்டபோது, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், வேறு எந்த விடயம் குறித்தும் தனக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அனந்தி மறுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்குமானால், தனது நிலைப்பாட்டைத் தான் நிரூபித்திருக்க முடியும் என்றும் அனந்தி சசிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுக்கள் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என கேட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும், அந்த மக்களின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் வெற்றியீட்டப் போவதாகவும் அனந்தி சசிதரன் பதிலளித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150709_ananthi

Link to comment
Share on other sites

சக்தி ரங்காவினுடைய பிரஜைகள் முன்னணியில் அனந்தி போட்டியிடப் போவதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. இந்தச் செய்தி உ;ணமையானால் அனந்தி எடுக்கும் தவறான முடிவாக இது இருக்கும்.

 

காரணம் இலங்கையில் தற்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் மிகவும் பச்சோந்தித் தனம் கொண்டவராக இருப்பவர் ரங்கா என்பது என்னுடைய கருத்து.

பாம்புக்கு வாலையும் விலாங்கிற்குத் தலையையும் காட்டிக் கொண்டு ஒரு புறம் மகிந்த மற்றும் நாமலுடன் இரகசிய உறவை வைத்துக் கொண்டு நல்லாட்சிக்காகக் குரல் கொடுப்பவர் போல் காட்டிக் கொள்பவர்.

அண்மையில் சிரச தொலைக்காட்சியி;ல நடைபெறும் சடன நிகழ்ச்சியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருவருமே இவரது சுயரூபத்தை தோலுரித்த போது பல்லைக் காட்டி அதைச் சமாளித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மகிந்த பக்கம் தாவி மகிந்தவின் தோல்லி உறுதியான பின்னர் நல்லாட்சிக் காறருடன் சேர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்த ரங்கா மீண்டும் மகிந்த வருகின்ற செய்தி உறுதியான பின்னர் திரும்பவும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்.

அன்நதியின் தயவுடன் பிரஜைகள் முன்னணியை முன்னிலைப்படுத்தும் எண்ணத்தில் தான் அண்மையில மின்னல் நிகழ்ச்சிக்கு அனந்தியை அழைத்து பவுண்டரி அடிக்கக்கூடிய விதத்தில் பந்துகளைப் போடுவதைப் போலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்

 

அனந்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூடட்டமைப்பு நடந்த கொள்ளும் விதம் சரியல்ல அதற்காக அவர் வேண்டுமானால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் போட்டியிடலாம். அதை விடுத்து ரங்காவின் பிரஜைகள் முன்னணியுடன் சேருவது மிகத் தவறான முடிவாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் இந்த முடிவு பிழையான முடிவு என்றே கருதுகிறேன்.தமிழ்த் தேசிய முன்னணியில் இணைந்திருக்கலாம்.இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டி விடும். அத்துடன் ததேகூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கவே உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் இந்த முடிவை பேருவகையுடன் வரவேற்கிறேன்.

இது போல் புலம்பெயர் மொக்கடாசுகளின் கதையை கேட்டு மேலும் மேலும் கோமாளித்தனம் செய்து சம்சும் வெற்றியை உறுதிப் படுத்துமாறு வினயமாய் வேண்டிக்கொள்வதுடன், முடிந்தளவுக்கு கஜன் தேத்தண்ணி கடைக்கு போகும் வாக்குகளையும் சிதறடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புலவால்கள் counter productive அரசியலில், சொந்த செலவில் சூனியம் வைப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு கோமாளியையும் அக்கா சேர்த்துக் கூட்டிக்கொண்டு போகவேணும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தில் விஜயகலா அக்கா தெரிவு செய்யபட்ட போது 12000 வோட்டுக்கள்தான் எடுத்தவா. எனவே 80000 இருந்து 12000 என்பது நடக்க முடியாத காரியம் அல்ல. இந்த முறை பலரும் பிரிந்து கேட்பதால்,  ஒரு இடத்திற்கு அது 9000-10000 ஆகவும் வரலாம். எனவே அனந்தியை யாரும் இலகுவாக write off செய்யமுடியாது . 

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தில் விஜயகலா அக்கா தெரிவு செய்யபட்ட போது 12000 வோட்டுக்கள்தான் எடுத்தவா. எனவே 80000 இருந்து 12000 என்பது நடக்க முடியாத காரியம் அல்ல. இந்த முறை பலரும் பிரிந்து கேட்பதால்,  ஒரு இடத்திற்கு அது 9000-10000 ஆகவும் வரலாம். எனவே அனந்தியை யாரும் இலகுவாக write off செய்யமுடியாது . 

இல்லை வால்கானோ! 

சென்ற முறை தேர்தல் நடந்த 2010இல் மக்கள் விரிக்தியுற்ற நிலையில் இருந்ததால் பெருமளவு வாக்களிப்பு இடம்பெறவில்லை. 

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 350 000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2010 பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 168 000 மட்டுமே.

எனவே 20000 வாக்குகளுக்கு மேலே பெற்றால் தான் அந்த 5 சதவீத வாக்குகள் என்ற இலக்கை அடைய முடியும். அதிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதியில்லை.

மாறாக சிறு கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்திற்கு இம்முறை ஐதேக  டக்ளஸ் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் போட்டியில் இறங்கலாம். 

மாறாக கஜேந்திர குமார் கட்சியுடடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தவலுக்கு மணிவாசகன்.

எங்களுக்கும்  சம்பந்தர் மாதிரி வயது வட்டுக்க போறதால வார பிரச்சனைகள் :( 

Link to comment
Share on other sites

நன்றி தவலுக்கு மணிவாசகன்.

எங்களுக்கும்  சம்பந்தர் மாதிரி வயது வட்டுக்க போறதால வார பிரச்சனைகள் :( 

இந்த 5 சதவீத வெட்டுப்புள்ளி முறை குறித்த தெளிவில்லாமல் இருக்கிறது. காரணம்பழைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது 5 வீத வாக்குகள் கிடைத்தும் பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்காத உதாரணங்களும் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாவட்டத்தில் இருக்கும் அளிக்கப் பட்ட வாக்குகளை மொத்த சீட்டால் வரும் எண்ணிக்கை தான் 1 சீட்டிக்கான தகுதி என நினைக்கிறேன்.

100 வாக்குகள் அளிக்கப் பட்டு. 5 சீட்டுகள் இருந்தால் 100/5 =20. ஒவ்வொரு 20 வாக்கும் ஒரு ஆசனம்.

20 எடுத்தா ஒரு சீட், 40 எடுத்தா 2 சீட் இப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாவட்டத்தில் இருக்கும் அளிக்கப் பட்ட வாக்குகளை மொத்த சீட்டால் வரும் எண்ணிக்கை தான் 1 சீட்டிக்கான தகுதி என நினைக்கிறேன்.

100 வாக்குகள் அளிக்கப் பட்டு. 5 சீட்டுகள் இருந்தால் 100/5 =20. ஒவ்வொரு 20 வாக்கும் ஒரு ஆசனம்.

20 எடுத்தா ஒரு சீட், 40 எடுத்தா 2 சீட் இப்படி.

இந்த 5 சதவீத வெட்டுப்புள்ளி முறை குறித்த தெளிவில்லாமல் இருக்கிறது. காரணம்பழைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது 5 வீத வாக்குகள் கிடைத்தும் பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்காத உதாரணங்களும் இருக்கின்றன.

நான் நினைக்கிறன்:

5 வீதத்திற்கு குறைவு என்றால்: கட்டுக்காசை இழக்க வேண்டும் 

பிறகு , மற்றவர்கள் பெற்ற எல்லாவற்றையும் கூட்டி, மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையை விட ஒன்று குறைந்த இலக்கத்தால் வகுக்க வேண்டும் (அந்த ஒன்று போனஸ் ஆசனமாக வென்ற கட்சிக்கு போதும்). அதன் மூலம் முதல் சுற்றில் ஒரு அசனத்துக்குரிய வாக்குகள் தீர்மானிக்கபடும்.அதன் மூலம் முதல் சுற்றில் சில ஆசனங்கள் முடிவாகும்.

பிறகு, எஞ்சிய வாக்குகள்  கூட்டபட்டு-அதுவரை ஆசனம் கிடைக்காதவர்களின் வாக்குகளும் , மேலதிகமாக உள்ள முன்னணியில் உள்ள கட்ட்சிகளின் வாக்குகளும்;  அது எஞ்சியுள்ள ஆசனங்களுக்காக, அந்த எண்ணிக்கையால் வகுக்கப்படும் . அதன் மூலம் இன்னும் சில ஆசனங்கள் முடிவாகும் . அப்படி மேலும் ஒருமுறையோ இருமுறையோ செய்வார்கள் . 

நீங்கள் சொல்லுவது போல் 5% எடுத்த எல்லோருக்கும் ஆசனம் கிடைபதில்லை. 

- எனது நெருங்கிய உறவினர் மாவட்ட தெரிவு அத்தாச்சி அலுவலர்.அவர் சொன்ன செவி வழி கதையே இது :( 

மகேஸ்வரன் போட்டி போட்ட நேரத்தில் அண்ணன் மாவைக்கு 2வதோ 3 வதோ ரௌண்டில்தான் இடம் கிடைத்தது ...

Link to comment
Share on other sites

ஒரு மாவட்டத்தில் இருக்கும் அளிக்கப் பட்ட வாக்குகளை மொத்த சீட்டால் வரும் எண்ணிக்கை தான் 1 சீட்டிக்கான தகுதி என நினைக்கிறேன்.

100 வாக்குகள் அளிக்கப் பட்டு. 5 சீட்டுகள் இருந்தால் 100/5 =20. ஒவ்வொரு 20 வாக்கும் ஒரு ஆசனம்.

20 எடுத்தா ஒரு சீட், 40 எடுத்தா 2 சீட் இப்படி.

இல்லை கோசான் இது அவ்வளவு சுலபமான முறை இல்லை. 

 

நான் சிறிலங்காவில் இருக்கும் போது இதனை வாசித்திந்தேன் ஆனால் சரியாக ஞாபகம் இல்லை.

ஒவ்வொரு மாவட்டத்திற்குமான ஆசனங்களில் ஒரு ஆசனம் அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனமாக வழங்கப்படும். பீன்னர் 5 சதவீத த்திற்குக் குறைவாகப் பெற்றவர்களின் வாக்குகள் அகற்றப்படும்.

5 சதவீதத்தை விட அதிகமாகப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மிகுதி ஆசனங்களால் வகுக்கப்படும். பின்னர் அதற்கேற்ப ஆசனங்கள் பகிரப்படும். 

இப்படியாகத் தான் ஞாபகத்தில் உள்ளது. ஆனால் சரியாக நினைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சுயேட்சையாகக் கேட்டு ஈபிடிபியில் டக்ளஸ் தேவானந்தாவையும் இன்னுமொருவரையும் வரத்தான் உதவி செய்வார் என்று நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 5 சதவீத வெட்டுப்புள்ளி முறை குறித்த தெளிவில்லாமல் இருக்கிறது. காரணம்பழைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது 5 வீத வாக்குகள் கிடைத்தும் பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்காத உதாரணங்களும் இருக்கின்றன.

யாழ் மாவட்டத்தில்
1.செல்லுபடியான வாக்குகளை உறுப்பினர்களின் எண்ணிக்கையால்( மைனஸ் போனஸ் ஆசனம்)அதாவது 6 ஆல் வகுத்தல்.
உதாரணம்
செல்லுபடியான வாக்குகள் 398000 (398000/6 = 66000 சுமாராக
 ஒரு ஆசனத்திற்கு 66.000 வாக்குகள் தேவைப்பட்டால்
66.000 இற்கு அதிகம் வாக்குகள் கிடைத்த கட்சிகளுக்கு ஏற்றவாறு ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

கூட்டமைப்பு : கிடைத்த வாக்குகள் 228.000 (228000/66000=3.ஆசனம் + 1 = 4போனஸ் ஆசனம்

மிகுதி வாக்குகள் 30000 இந்த வாக்குக்களிற்கான ஆசனம்  அடுத்த சுற்றில் தீர்மானிக்கப்படும்  

முன்னணிக்கு 108.000(108000/66000=1  மிகுதி வாக்குகள் 42000

டக்ளஸ் 31000 ( முதல் சுற்றில் ஆசனம் எதுவும் இல்லை

ஐ தே க விற்கு 24000 ( முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் இல்லை .

இரண்டாவது சுற்றில் இன்னும் இரண்டு ஆசனங்களை பெறுபவர்கள் யார் என்றால்  

முன்னணி மிகுதி வாக்குகளாக 42000 உடன் முன்னணியில் நிற்பதால் அவர்களுக்கு 1 ஆசனம்
அடுத்து 31000 வாக்குகளுடன் டக்ளஸ் முன்னணியில் நிற்பதால் அவர்களுக்கு 1 ஆசனம்.

7 ஆசனங்களும்  இப்படித்தான் ஒதுக்கப்படும்.

ஐ தே க 24000 இற்குப் பதிலாக 33000 வாக்குகள் எடுத்திருந்தால் டக்லஸ் இன் கட்சிக்குச் செல்லும் இடம் ஐ தே க விற்குக் கிடைக்கும்  

கட்சி மட்டத்தில்  அவர்கள் பின்னர் தங்கள் தேவைக்கேற்றவாறு விருப்பு வாக்குக்களை எண்ணி யார் பாராளுமன்றிற்குச் செல்வது என்று முடிவு செய்வார்கள்.

 

Link to comment
Share on other sites

 

யாழ் மாவட்டத்தில்
1.செல்லுபடியான வாக்குகளை உறுப்பினர்களின் எண்ணிக்கையால்( மைனஸ் போனஸ் ஆசனம்)அதாவது 6 ஆல் வகுத்தல்.
உதாரணம்
செல்லுபடியான வாக்குகள் 398000 (398000/6 = 66000 சுமாராக
 ஒரு ஆசனத்திற்கு 66.000 வாக்குகள் தேவைப்பட்டால்
66.000 இற்கு அதிகம் வாக்குகள் கிடைத்த கட்சிகளுக்கு ஏற்றவாறு ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

கூட்டமைப்பு : கிடைத்த வாக்குகள் 228.000 (228000/66000=3.ஆசனம் + 1 = 4போனஸ் ஆசனம்

மிகுதி வாக்குகள் 30000 இந்த வாக்குக்களிற்கான ஆசனம்  அடுத்த சுற்றில் தீர்மானிக்கப்படும்  

முன்னணிக்கு 108.000(108000/66000=1  மிகுதி வாக்குகள் 42000

டக்ளஸ் 31000 ( முதல் சுற்றில் ஆசனம் எதுவும் இல்லை

ஐ தே க விற்கு 24000 ( முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் இல்லை .

இரண்டாவது சுற்றில் இன்னும் இரண்டு ஆசனங்களை பெறுபவர்கள் யார் என்றால்  

முன்னணி மிகுதி வாக்குகளாக 42000 உடன் முன்னணியில் நிற்பதால் அவர்களுக்கு 1 ஆசனம்
அடுத்து 31000 வாக்குகளுடன் டக்ளஸ் முன்னணியில் நிற்பதால் அவர்களுக்கு 1 ஆசனம்.

7 ஆசனங்களும்  இப்படித்தான் ஒதுக்கப்படும்.

ஐ தே க 24000 இற்குப் பதிலாக 33000 வாக்குகள் எடுத்திருந்தால் டக்லஸ் இன் கட்சிக்குச் செல்லும் இடம் ஐ தே க விற்குக் கிடைக்கும்  

கட்சி மட்டத்தில்  அவர்கள் பின்னர் தங்கள் தேவைக்கேற்றவாறு விருப்பு வாக்குக்களை எண்ணி யார் பாராளுமன்றிற்குச் செல்வது என்று முடிவு செய்வார்கள்.

 

தெளிவான விளக்கத்திற்கு நன்றி வாத்தியார். 

 

ஆனால் ஐந்து சதவீதத்திற்கு குறைவான வாக்குகளைப்  பெற்றவர்களின் வாக்குகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படாது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆனால் ஐந்து சதவீதத்திற்கு குறைவான வாக்குகளைப்  பெற்றவர்களின் வாக்குகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படாது என நினைக்கிறேன்.

மணி அண்ணை நீங்கள் சொல்வதுபோலத்தான் 5% வாக்குகள் பெறாத கட்சிகளோ

குழுக்களோ உறுப்பினர்களைப் பெற முடியாது.
அத்துடன் அவர்கள் பெற்ற வாக்குகளும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்பட்டு

மிகுதி வாக்குகளே உறுப்பினர் பங்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.