Jump to content

திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசாவை ஆதரித்து பரப்புரை செய்ய முடியாது!! மாவைக்கு அன்ரனி ஜெயநாதன் கடிதம்!!


Recommended Posts

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நில அளவையாளர் திரு. கனகையா அழகேந்திரன் வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு வேட்பாளர். இவரையே நான் சிபாரிசு செய்தேன். திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா வெற்றி பெறக்கூடிய வேட்பாளரோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ அல்ல என்பதினால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரைச்சிபாரிசு செய்தவர்களே வெற்றிக்கு உழைக்கவேண்டும் என வடமாகாணசபையின் துணை அவைத் தலைவரும், தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளைத் தலைவருமான அன்ரனி ஜெயநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


ம.அன்ரனி ஜெயநாதன்,
தலைவர்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி,
முல்லை மாவட்டக் கிளை,
10.07.2015.

கௌரவ மாவை சேனாதிராஜா,
தலைவர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி ,
மாட்டின்வீதி,
யாழ்ப்பாணம் .

மதிப்பார்ந்த ஐயா,

நேற்று 10.07.2015 இல் சில இணையத்தளங்களில் நான் இலங்கைத் தமிழ் அரசுக கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பலர் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்தனர். இது தவறான செய்தியாகும். இது விடயமாக விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தந்தை செல்வாவினால் தமிழ் மக்களின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். இதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தலைவர் பிரபாகரனால் ஒற்றுமைப்படுத்தப்பட்ட அமைப்பு. நான் 1970 இல் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தொண்டனாக உள்ளேன். வழிப்போக்கனாக வந்து கட்சியில் சேர்ந்தவன் அல்ல, அல்லது 2009 இன் பின் கட்சியில் இணைந்தவனும் அல்ல, அல்லது, தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நியமனம் கிடைக்கிற போது கட்சியில் சேர்ந்தவனும் அல்ல என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வன்னித்தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் உட்பட்ட கடந்த 35 வருடங்களாக இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாது இருந்தது. கடந்த மாகாணசபைத்தேர்தல் 2013 நடைபெற்ற போது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பிரதிநிதித்துவத்தை எனது வெற்றியின் மூலம் பெற்றுக்கொடுத்தவன் நான். முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சியை புனரமைத்து உறுப்பினர்களைச் சேர்த்து இன்றும் கட்டுக்கோப்பாகவும் முல்லைமாவட்டத்தில் கட்சியின் வேட்பாளர் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வகையிலும் வைத்துள்ளேன் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகின்றேன்.

தற்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியில் உள்கட்சி ஜனநயகம் இல்லை, வழிப்போக்கர்களாக வந்தவர்ககள் கட்சியை ஆக்கிரமித்துள்ளனர். கட்சியில் மூத்தவர்களுக்கு மதிப்பில்லை, கட்சியை வளர்ப்பதும் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்தும் பயனற்றதாகிவிட்டன. தேர்தல்காலங்களில் வேட்பாளர்களாக கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும், பிறகட்சியைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

நடைபெற உள்ள பாராளுமன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பான தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவை எனது சிபாரிசின் பேரிலேயே வேட்பாளராக தெரிவு செய்ததாக கட்சித்தலைவர்கள் தமக்குத் தெரிவித்தாக பல புலம் பெயர் உறவுகளும் வன்னி மாவட்ட வாக்காளர் பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் எனக்குத் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு புறம்பானது. திருமதி சாந்தி ஸ்ரீஸகந்தராசா எமது கட்சியின் உறுப்பினர் அல்ல இவரை இலங்கைத்தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தலைவர் என்ற வகையில் நான் சிபார்சு செய்யவில்லை. என்பதையும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இணைப்பொருளாளரும் மத்திய குழு உறுப்பினரும் முல்லைமாவட்டகட்சியின் தலைவரும் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவருமான என்னுடன் மரியாதைக்கு கூட கலந்துரையாடாமல் கட்சியினால் எடுக்கப்பட்ட சர்வாதிகார முடிவு என்பதையும் அறியத்தருகிறேன்.

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நில அளவையாளர் திரு. கனகையா அழகேந்திரன் வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு வேட்பாளர். இவரையே நான் சிபாரிசு செய்தேன். திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராசா வெற்றி பெறக்கூடிய வேட்பாளரோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ அல்ல என்பதினால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரைச்சிபாரிசு செய்தவர்களே வெற்றிக்கு உழைக்கவேண்டும்.

“நன்றி”

(ம.அன்ரனிஜெயநாதன்)
தலைவர்
இலங்கைத்தமிழரசுக்கட்சி
முல்லைத்தீவு மாவட்டம் கிளை

பிரதிகள் :-

1. இராசம்பந்தன் தேசியத் தலைவர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
2. செயலாளர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
3. நிர்வாகச் செயலாளர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.http://www.pathivu.com/news/41545/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.