Jump to content

வடமாகாண சபை கிள்ளிவீசுகின்றது! மாவீரர் குடும்பத்திற்கு 3,500ரூபா!!


Recommended Posts

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு 43 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அறிவித்துள்ளார்.

அவ்வகையினில்
பாதிக்கப்பட்ட குடும்பமொன்றிற்கு வடமாகாணசபையால் வெறும் மூவாயிரத்து ஜநூறினையே வழங்கமுடியுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாணத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரும் போரால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  உயிரிழப்பு,சொத்து இழப்பு போன்றவற்றால் எமது மக்கள் மனதளவில் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

 இந்த போரின் வாயிலாக எமது மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் நான் எனது  அமைச்சுப் பொறுப்பை பதவியேற்றதன் பின்னர் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களிற்கு செல்கின்ற போது மிகவும் எனது மனதைப் பாதித்த விடயமாக எமது இனத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் அன்றாட உணவிற்கு கையேந்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

ஆகவே தான் இவர்களை பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் தான் எனது மனதில் ஆழப்பதியப்பட்டது.   அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டுக்கான எனது கொள்கைப் பிரகடனமாக பின்வருவோருக்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னுரிமை அடிப்படையில் சில முக்கியமான நபர்களை பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு
இருக்கின்றது.   அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு தற்போது அந்த வாழ்வாதார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.

குறிப்பாக மூன்று படிவங்கள் எமது கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக
வழங்கப்பட்டன.  
1) புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பங்களுடன் வசிக்கும்
போராளிகளின் தரவுப் படிவம்

2) போரால் உயிரிழந்த போராளிகளின் குடும்ப
விபரம்

3) தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரத் திரட்டுப்
படிவம்   

அதன் அடிப்படையில் கடந்த யூன் மாதம் 30 ஆம் திகதி இந்த படிவங்களினை சேகரிப்பதற்கான இறுதித் தினமாக அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் மேற்படி படிவங்கள் பூரணப்படுத்தப்பட்டு ஏறக்குறைய 12676 படிவங்கள் எமது திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர்களிற்கான வேலைத்திட்டத்திற்காக எனது அமைச்சினால் 43 மில்லியன் ரூபா நிதியினை மட்டுமே ஒதுக்கி இருக்கிறேன்.குறிப்பாக கோரிக்கையானது ஒப்பீட்டளவில் பாரியளவில் இருக்கிறது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளோடு ஒப்பிடும் போது ஒரு கணிசமான அளவினையே இவ்வாண்டு பூரணப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.http://www.pathivu.com/news/41600/57/3-500/d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர்கள் இந்த வேளையில் இதனை முன்னெடுக்கிறார்கள்???

கூட்டமைப்பின்  இது  போன்ற அநாகரீக வேசங்களை நாம் தெரியப்படுத்தமாட்டோமா??

Link to comment
Share on other sites

மக்கள் முட்டாள்களல்ல..

 

ஆனாலும் இப்படியாவது அந்தக் குடும்பங்களுக்கு ஒரு வேளை உண்பதற்காவது ஒரு வழி கிடைத்திருக்கிறதே என  ஆறுதல் அடைகிறது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.