Sign in to follow this  
அஞ்சரன்

அவர்களும் நாங்களும் .

Recommended Posts

அவர்கள் பேனைகள் எடுத்தனர் ...
நாங்கள் ஆயுதம் எடுத்தோம் ..
அவர்கள் வாட்டாரி எடுத்தனர் ...
நாங்கள் ஏகே துடைத்து கொண்டு இருந்தோம் ..
அவர்கள் திசைகாட்டி எடுத்தனர் ...
நாங்கள் மோட்டாருக்கு பாகை பிடித்தோம் ...
அவர்கள் வரைபடம் பார்த்தனர் ..
நாங்கள் ஜிபிஸ் இல் இலக்கு வகுத்தோம் ..
அவர்கள் கட்டிடம் கட்டினர் அழகா ...
நாங்கள் அவைகளுக்கு குண்டு வைத்தோம் ...
அவர்கள் அரசியலை படித்தனர் ..
நாங்கள் அரசியல் படிப்பித்தோம் ....
அவர்கள் நல்லுறவு பற்றி பேசினார் ..
நாங்கள் நாலுபேரை போட்டா சரி என்றோம் ..
அவர்கள் நாடுகளை அணைத்து வந்தனர் ...
நாங்கள் உள்ளவன் எல்லாம் துரோகி என்றோம் ..
அவர்கள் எம்மை அழிக்க வேண்டியவர்கள் என்றனர் ..
நாங்கள் முடிந்தா செய்யேன சவால் விட்டோம் ..
அவர்கள் முன் நகர முன் நகர ..
நாங்கள் தந்திரமா பின்னகர்த்தோம் ..
அவர்கள் இலக்கில் வந்து நிக்க ..
நாங்கள் இழவு வீட்டில் நின்றோம் ..
அவர்கள் இப்பொழுது பேனா தருகிறாகள் ..
நாங்கள் பென்சில் போதும் என்கிறோம் ..
அவர்கள் வியக்க பார்க்க ..
நாங்கள் விழிநீர்ருடன் நிக்கிறம் .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • முக்கியமான நேரத்தில், சுடாத துப்பாக்கி. அதிர்ச்சியடைந்த போலீசார்.  பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82), உடல் நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலமானார். ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராகும். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கு, கடந்த 21ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது, விதிமுறைப்படி, 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது. போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட முயன்றபோது, எந்த துப்பாக்கியும் சுடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள், துப்பாக்கியின் ரிசிவர் பகுதியை திறந்து குண்டுகளை பரிசோதித்து பார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தும், எதற்காக சுடவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகமாக இருந்த பகுதிகளில் ஒன்று பீகார். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில், அவசரத்திற்கு போலீசின் துப்பாக்கியே சுடவில்லை என்பதை பார்த்த நெட்டிசன்கள், இந்த வீடியோவை ஷேர் செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.Read more at: https://tamil.oneindia.com/news/patna/rifles-fail-to-fire-during-the-state-funeral-of-former-cm-jagannath-mishra-360823.html
    • இங்கே.. . "பாத்ரூம்"  ரொம்ப வழுக்கி விடுது.  
    • தமிழர்கள், தாற்றபோது வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது. கொத்தவுடன் அமெரிக்கா டீல் போடுகிறது sofa (vfa) க்கு, அதே நேரத்தி சர்வேந்திரா சில்வாவின் நியமனத்துக்கு நீலிக் கண்ணீர் வடிகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் அக்கறை இருந்திருந்தால், உண்மையில் கோத்தாவை ப்ரெசிடெண்ட் ஆக்க துணிந்ததை சிறி லங்கா அரசை கண்டித்திருக்க வேண்டும்.
    • எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது. நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.  
    • தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதம் கோட்டாவுக்கு கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என மேலும் தெரிவித்தார்.     http://athavannews.com/தமிழர்கள்-ஒருபோதும்-கோட்/