Jump to content

பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...!


Recommended Posts

பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...!

password%20leftt.jpgணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி,  ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது,  'நம்முடைய பாஸ்வேர்டு பலமானதுதானா?' என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம்.

இத்தகைய அச்சம் உண்டாவது நல்லதுதான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானதுதானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 'பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது' என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு, எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத சிக்கலான பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஆனால் சிக்கலான பாஸ்வேர்டு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். தாக்காளர்கள் உள்ளிட்ட இணைய விஷமிகளால் கண்டுபிடிக்க முடியாதபடி பாஸ்வேர்டை அமைத்துவிட்டு பின்னர் உருவாக்கியவரே அதை மறந்து தவிப்பதால் என்ன பயன்? இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வை சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். அது என்ன வழி என்று பார்ப்போம்...

பாஸ்வேர்டு என்றவுடன், உங்கள் பிறந்த தினத்தையோ அல்லது நெருக்கமானவர்களின் பெயரையோ நினைத்துப்பார்க்கத்தோன்றும். அவற்றை வைத்துக்கொண்டு தான் பாஸ்வேர்டை உருவாக்குவீர்கள். இவை எல்லாம் ஆபத்தானவை என்கின்றனர். ஏனெனில் தாக்காளர்கள் இதுபோன்ற விவரங்களை கொண்டு நீங்கள் யோசித்தது போலவே யோசித்து பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே வழக்கமான உத்திகளை எல்லாம் விட்டு விட்டு, பாஸ்பிரேசில் இருந்து துவங்க வேண்டும் என்கின்றனர். அதென்ன பாஸ்பிரேஸ்? ஏதேனும் ஒரு நீளமான வாசகத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள், அது தான் பாஸ்பிரேஸ். அந்த வாசகம் உங்களுக்கு பிடித்தமான பாடல் வரியாக இருக்கலாம், நாளிதழ் அல்லது நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். குறைந்தது 10 வார்த்தைகளாக இருந்தால் போதுமானது. உதாரணத்திற்கு , இந்த வாசகத்தை எடுத்துக்கொள்வோம்: "My Daughter started at Kennedy College in 2006."

இது போன்ற பாஸ்பிரேசை தேர்வு செய்த பின், அவற்றில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை எல்லாம் வரிசையாக எழுதுங்கள். எல்லாம் பெரிய எழுத்துக்களில் இருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் இப்படி வரும்: MDSAKCI2006. அட இதுவும் பாஸ்வேர்ட் போல இருக்கிறதே என தோன்றுகிறதா?

passpassword%20550%201%281%29.jpg

இருங்கள், இந்த பாஸ்வேர்டை இன்னும் பலமாக்க வேண்டும். இந்த எழுத்து வரிசையில் எங்கெல்லாம் முடியுமா அந்த எழுத்துக்களுக்கு பதில் குறியீடுகளை போடவும். உதாரணத்திற்கு S மற்றும் A எழுத்துக்களுக்கு பதிலாக டாலர் குறியீடு ( $) மற்றும் இமெயில் குறியீடு (@) பயன்படுத்தவும். இப்போது உங்கள் பாஸ்வேர்டு இப்படி மாறியிருக்கும்: MD$@KCI2006.

இதன் பிறகு எந்த எழுத்துக்களை சிறிய எழுத்தாக மாற்றலாம் என பார்த்து மாற்றிக்கொள்ளவும். அதாவது இப்படி:  Md$@KCi2006. இப்போது பாதுகாப்பாக இருக்க கூடிய சூப்பர் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் தயார். அது மட்டும் அல்ல, இந்த பாஸ்வேர்டு, பெரும்பாலான சேவைகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு பொருந்தியும் இருக்கும்.

இப்படி நீங்களும் மிக எளிதாக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். இது பார்க்க சிக்கலாக தோன்றினாலும் அதை உருவாக்க பயன்படுத்த மூல வாசகத்தை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் பாஸ்வேர்டை உருவாக்கிய வழிமுறைகளை கொண்டு, அதை எளிதாக நினைவில் கொள்ளலாம்.

ஆனால் ஒன்று, என்னதான் வலுவான பாஸ்வேர்டாக இருந்தாலும் அதையே ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய சேவைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு சேவைக்கும் ஒரு தனி பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் கூட எளிதானதே.

hackers%20350%20.jpgநீங்கள் உருவாக்கிய மூல பாஸ்வேர்டை அடிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த சேவைக்கு புதிய பாஸ்வேர்டு தேவையோ, அந்த சேவையின் பெயரில் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை தனியே எழுதி அவற்றை பாஸ்வேர்டின் முதலிலும் கடைசியிலும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் ஒரு புதிய பாஸ்வேர்டு தயார். இதே முறையில் எல்லா சேவைகளுக்கான தனித்தனி பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம். எல்லாமே நினைவில் நிற்க கூடியதாகவே இருக்கும்.

பாஸ்பிரேஸ் கொண்டு பாஸ்வேர்டு அமைப்பதில் என்ன அணுகூலம் என்றால், ஒருவரது பாஸ்வேர்டை கண்டுபிடிக்க வேண்டும் என தாக்காளர்கள் முயலும் பட்சத்தில் அவர்கள் பிறந்த தேதி, செல்லப்பெயர் போன்ற அந்தரங்க விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி மாற்றி போட்டுப்பார்த்து சரியான பாஸ்வேர்டை ஊகித்து விடுவது சாத்தியம்தான். ஆனால் எந்த கில்லாடி தாக்காளராலும், ஒருவர் மனம் போன போக்கில் தேர்வு செய்த பாஸ்பிரேஸ் வாசகத்தை ஊகிக்கவே முடியாது. எனவே இந்த வகையிலான பாஸ்வேர்டுகள் மிகவும் பாதுகாப்பானவை.

இன்னொரு விஷயம் எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்டை துண்டு சீட்டிலோ அல்லது கம்ப்யூட்டரில் வேர்ட் பைலிலோ ,எக்செல் பைலிலோ குறித்து வைக்க வேண்டாம். பாதுகாப்பிற்காக தேவை என கருதினால், ஜிடிரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைக்குள் அந்த கோப்பை பாதுகாத்து வைக்கவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=49739

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.