Jump to content

Tim Horton ம் எனது கனடாவும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரகு Tim Horton னுடன் நிற்காமல் அமெரிக்கா வந்து ஒரு தடவை Dunkin Donut இலும் சுவை பாருங்கள் .
அப்போது என்னையும் கூப்பிடுங்கள் ஒரு ஓரமாக நின்று கோப்பி குடித்து விட்டு போகிறேன்.

எனது தொலைபேசி இலக்கம் இன்னமும் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
இல்லாவிட்டால்  eelapirean@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தரவும்.

Dunkin Donut  எனது ஊரிலும், மூன்று கிளைகளை அண்மையில் திறந்துள்ளார்கள்.:)

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

ரகு Tim Horton னுடன் நிற்காமல் அமெரிக்கா வந்து ஒரு தடவை Dunkin Donut இலும் சுவை பாருங்கள் .
அப்போது என்னையும் கூப்பிடுங்கள் ஒரு ஓரமாக நின்று கோப்பி குடித்து விட்டு போகிறேன்.

எனது தொலைபேசி இலக்கம் இன்னமும் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
இல்லாவிட்டால்  eelapirean@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தரவும்.

 

சசி, நான் கடந்த திங்கட்கிழமை சிட்னி வந்தடைந்தேன். ஆனால், இன்றுவரைக்கும் கனடா நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. முடிந்தால் அங்கே வந்துவிட ஆசை, ஆனால் அதை நான் தீர்மானிக்கமுடியாதென்பது வேதனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு Tim Horton னுடன் நிற்காமல் அமெரிக்கா வந்து ஒரு தடவை Dunkin Donut இலும் சுவை பாருங்கள் .
அப்போது என்னையும் கூப்பிடுங்கள் ஒரு ஓரமாக நின்று கோப்பி குடித்து விட்டு போகிறேன்.

எனது தொலைபேசி இலக்கம் இன்னமும் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
இல்லாவிட்டால்  eelapirean@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தரவும்.

வணக்கம் ஈழப்பிரியன்,

 

நான் கடந்த திங்கட்கிழமையே சிட்னி திரும்பிவிட்டேன். யாழின் பலரை சந்திக்க விருப்பம் இருந்தும், அங்கே இங்கேயென்று ஓடித்திரிந்ததினால் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் ஒருவரை மட்டும் அதிஷ்ட்டவசமாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கனடா பயணத்தில் மிகவும் சுவாரசியமானது நாங்கள் அமெரிக்காவுக்கு வாகனத்தில் சென்றதுதான்.

வேலைக்குப் போவோர்கள் போய், மிஞ்சியவர்கள் மிஞ்ச ஒரு 20 பேர்வரையில் அமெரிக்காவுக்கு போக ஆயத்தமானோம். மாமாவுக்குத் தெரிந்த ஒரு தமிழர்தான் சிறிய ஒரு பஸ்ஸின் ஓட்டுனரும், உரிமையாளரும்.

சனிக்கிழமை காலையிலேயே வந்துவிடுங்கள் என்று ஒரு சாட்டுக்குத்தான் சொல்லிவைத்தோம், மனுசன் தனது பெரிய பஸ்ஸையும் இழுத்துக்கொண்டு கலை ஆறு மணிக்கு முன்னமே வந்துவிட்டார். ஒரு 55-60 வயதுதான் இருக்கும்,  80 ஆம் ஆண்டு விஜயகாந்த்தைப் பார்த்த மாதிரி, ஆனால், தலைமுடி மட்டும் தேவர்மகன் கமலை ஞாபகப் படுத்தினார். பிரதாப் போத்தனின் கண்ணாடி, வெள்ளை நிற மடித்து ஸ்த்திரி போட்ட சேர்ட், நேர்த்தியாக அணியப்பட்ட கறுப்புநிற பான்ட், அதற்கேற்றமாதிரி சப்பாத்து. ஆள் கடமையில் கண்ணியமானவர் போல்த் தெரிந்தார். 

அவரை ஆறு மணிக்கு வரச் சொல்லிவிட்டு, நாங்கள் எல்லோரும் எங்களுக்கு வசதியான நேரத்துக்குத்தான் ஆயத்தமானோம். பல வீடுகளிலிருந்தும் உறவினர்கள் வரவேண்டி இருந்ததால் இழுபட்டு இழுபட்டு 8 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார்கள். 

நமது விஜயகாந்துக்கு சலிப்பும் கோபமும் வந்திருக்க வேண்டும். "என்னை ஆறு மணிக்கு வரச்சொல்லிபோட்டு, நீங்கள் 8 மணிக்கு வாறியள், போர்டரில குறைஞ்சது 2 மணித்தியாலமாவது நோண்டுவாங்கள், போதாக்குறைக்கு அவுட்லெட் மோலுக்குப் போகவேண்டும் எண்டெல்லாம் சொல்லுறியள், நேரம் காணாது, சொல்லிப்போட்டன்' என்று சலித்துக்கொண்டார்.

"சரி, சரி, எல்லாத்தையும் பாத்துக்கொள்ளலாம்" என்று அவரைச் சமாதானப்படுத்திவிட்டு பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஓடத் தொடங்கியது, ஒரு அரைமணிநேரம்தான் ஓடியிருக்கும், ஏ.ஸி வேலை செய்ய மறுத்துவிட்டது. பஸ்ஸின் கதவு பாதியில் திறக்கத் தொடங்கியது. ஓடியோ வேலை செய்யவில்லை. அடக்கடவுளே, இன்னும் 800 கிலோமீட்டர் போகவேண்டிக் கிடக்கு, அதுகுள்ளேயே வாகனத்தில் பிரச்சினையா? எங்களால் நம்ப முடியவில்லை. 

"என்ன அண்ணேய், இதெல்லாம் பாத்து வரமாட்டியளோ?" என்று நாங்கள் கேட்கவும், "நேற்றுத்தன் புதுசா ஒரு சொலிநொயிட் போட்டம் தம்பி, என்னெண்டு தெரியேல்லை, மக்கர் பண்ணுது" என்றார். 

"சரி, இதுக்கு ஒரு வழிதான் இருக்குது. போர்டருக்குப் போறதுக்கு முதல் வாற மக் டொனால்ட்ஸில பஸ்ஸை நிப்பாட்டிப் போட்டு, மக்கனிக்கை வரச் சொல்லுவம். எப்படியும் 2 அல்லது 3 மணிநேரத்தில ஆள் வந்துரும், அதுக்குப்பிறகு பிரச்சினையில்லை" என்று வெகு சாதாரணமாகச் சொன்னார். " அப்ப காலையில், நாங்கள் லேட்டாக்கிப் போட்டம் எண்டு சவுண்ட் விட்டீங்கள்?" எண்டு நாங்கள் கேட்டதுக்கு, சிரித்தே சமாளித்து விட்டார். 

அவர் சொன்ன மக்கனிக் மார்க்கத்திலிருந்து 3 மணி நேரத்தில் வந்தார். வாகனத்துக்கு உள்ளுக்கும், வெளியிலும் ஓடி ஓடி என்னவோ செய்தார். கொஞ்ச நேரத்தில் வாகனம் ஸ்டார்ட் ஆனது. ஏ. ஸி யும் ஓடியோவும் வேலை செய்யத் தொடங்கியது. கதவும் பூட்டிக் கொண்டது. "சரி, எல்லாரும் ஏறுங்கோ " என்று விஜயகாந்த் சொல்லவும் அவசரப்பட்டு எல்லோரும் ஏறிக்கொண்டோம். வாகனம் மக்டொனால்ட்ஸிலிருந்து வெளியேறி ஒரு 100 மீட்டர் போயிருக்கும், மீண்டும் அதே பிரச்சினை. 4 மணிநேரம் காத்திருந்தது பிரியோசனமே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு மக்டொனால்ட்ஸுக்கே வந்துவிட்டோம். "சரி, கடைசியா ஒருமுறை பாப்பம்" என்று விஜயகாந்த் சொல்லவும், அதுவரை சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்த மக்கானிக் கோபத்தில் அதை தூர எறிந்துவிட்டு மறுபடியும் பஸ்ஸின் பொனெட்டுக்குள் தலையை விட்டு துலாவ ஆரம்பித்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 2 மணிநேரம் போனது. எதுவுமே வேலை செய்யவில்லை. "சரி, இப்படிச் செய்வம். ஏ.ஸி இல்லாமல் உங்களால இருக்க ஏலுமெண்டால், நாங்கள் வெளிக்கிடுவம். வேற பிரச்சினை வந்தால், இன்னொரு பஸ் நிக்குது மாக்கத்தில, அதை எடுத்துக்கொண்டு வரசொல்லுவம். இல்லாட்டி, நாங்கள் எல்லாரும் திரும்பி மாக்கத்துக்குப் போய் இதை விட்டுட்டு, மற்ற பஸ்ஸிலதான் வரவேணும்" என்று சொன்னதும் எங்களுக்கு பகீரென்றது.

"ஏற்கனவே 6 மணித்தியாலம் வேஸ்ட்டாகி விட்டது. இனித் திரும்பி டொரொன்டோவுக்குப் போய் வாரதெண்டால், இண்டைய நாள் போயிரும், அதெல்லாம் வேண்டாம், இந்த பஸ்ஸிலேயே போவம், வேணுமென்டால் யன்னலைத் திறந்துபோட்டுக்கொண்டு ஓடுவம்" என்று சொன்னோம். அவரும் சந்தோசமாகத் தலையை ஆட்டிக் கொண்டே ஓடத் தொடங்கினார். 

Link to comment
Share on other sites

எனது தங்கையும் சிட்னியில் வசிக்கின்றா, என்னை அவுசுக்கு விசிட் அடிக்கும்படி அடிக்கடி கூப்பிடுவா , எனது அவுஸ் பயணம் இன்னமும் இழுத்துக் கொண்டே செல்கிறது, அண்மையில் கனடா சென்று வந்த எனது தங்கை, நீங்கள் அவுஸ் வராட்டிலும் பரவாயில்லை, ஒருக்கா கனடா போய்வாருங்கள் என்றா, அப்படி என்னதான் இருக்கு இந்தக் கனடாவில்................
ரகு உங்கள் தொடர் மிகவும் நன்றாக இருக்கிறது........ பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு சுவார்சியமாக உங்கள் பயணக்கட்டுரையை நகர்த்தி செல்கிறீர்கள். ரிம் கொட்டனில் 90களின் இறுதியிலும் 2000ங்களின் ஆரம்பத்திலும் சூப்பர் வைசராக பணிபுரிந்திருக்கிறேன்..... இப்போது கண்டாலும் பாஸ் எப்போது மறுபடியும் வேலைக்கு வாறாய் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. ரிம் கொட்டன் கோப்பி பிரபல்யம் ஆனால் எனக்கு மட்டும் அலர்ஜி மைக்கிரெய்ன் தலையிடி உள்ளவர்களுக்கு கண்ணில் காட்டக்கூடாத மிக முக்கியமான பானம். ரிம் கொட்டன் கோப்பிக்கடையை கொம்பனியில் எடுப்பதென்றாலும் குறைந்தது 5 வருட காத்திருப்பு தேவை மட்டுமல்ல பெருந்தொகை பணமும் வேண்டும். கனடாவிலேயே நல்ல பிஸினஸ் என்றால் ரிம் கொட்டன்தான். ரிம் கொட்டன் வேலை நல்ல கலகலப்பானது ஆனால் விடுமுறை எடுப்பது மட்டும் மிகக்கடினமானது..

 

நீங்கள் இங்கு வந்ததை எம்மில் யாருக்காவது தெரிவித்திருக்கலாம். விரும்பியவர்கள் நேரங்குறித்து சந்தித்திருப்போம். பரவாயில்லை. ஏதேச்சையாக நீங்கள் சந்தித்த யாழ் இணைய நண்பரைத் தெரியும் அதை நீங்கள் எழுதும்போதுதான் சுவார்சியமாக இருக்கும். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரகு தொடர் மிகச் சுவாரசியமாக இருக்கு. ஆனாலும் எப்படி யாழ் உறவுகளை சந்திக்காமல் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் மெது மெதுவாக வேகம் எடுக்கத் தொடங்கியது. 90...100...110...120 என்று அமெரிக்க எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அப்பாடா...ஒருவாறு எங்கள் அமெரிக்கப் பயணம் ஈடேறப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் நாம் சற்று இளைப்பாறத் தொடங்கினோம். இடைக்கிடையே கிண்டல்களுக்கும், பழைய நினைவு மீட்டல்களுக்கும் குறைவிருக்கவில்லை.

ஒருவாறு அமெரிக்க எல்லையை அடைந்ததும், ஒரு பாரிய வாகன வரிசையில் நாமும் சேர்ந்துகொண்டோம். 10 அல்லது 20 நிமிடங்கள் சென்றிருக்கும், அமெரிக்க சுங்க அதிகாரப் பெண்மணி ஒருவர் எமது பஸ்ஸை நோக்கி வந்தாள். "நீங்கள் தவறான வரிசையில் நிற்கிறீர்கள். சுற்றி வாருங்கள்" என்று கைய்யைக் காட்டிவிட்டு கட்டிடம் ஒன்றிற்குள் மறைந்தும் போனாள். 

ஏற்கனவே அமெரிக்க சுங்க அதிகாரிகளினது ஆணவப் போக்குப் பற்றியும், அவர்கள் அமெரிக்கர் அல்லாதோரை நடத்தும்  முறை பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால், எமக்குக் கிடைக்கப்போகும் வரவேற்பைப் பற்றி ஓரளவுக்கு ஊக்கித்துக்கொண்டே அந்த சுங்கப் பெண்மணி காட்டிய திசையில் எமது பஸ்ஸை  மெதுவாக உருட்டிக் கொண்டு போனோம்,

அமெரிக்கச் சுங்கத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றின் முன்னால் அந்தப் பெண்மணி மீண்டும் தோன்றி " இங்கே நிறுத்துங்கள்" என்று சைகை காட்டிவிட்டு மீண்டும் மறைந்துபோனாள். என்ன செய்வதென்று புரியாமல் தவித்த நாங்கள் சிறிது சிறிதாக அந்த சுங்கத் திணைக்களக் கட்டிடத்தின் வாயிலுக்கு முன்பாக பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தோம். "என்ன செய்கிறீர்கள்? உங்களை யார் பஸ்ஸை விட்டு இறங்கச் சொன்னது ?" என்று கோபத்துடன் கூறியவாறே ஒரு சுங்க அதிகாரி பஸ்ஸை நோக்கி ஓடிவந்தான். இடுப்பில் பளிச்சென்று கைத்துப்பாக்கி வேறு.  சிறு பயம் பற்றிக்கொள்ள, எல்லோரும் அடித்துப்பித்துப் பிடித்து மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறி அமர்ந்து கொண்டோம்.

இன்னும் ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், "உங்கள் கடவுச் சீட்டுக்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு, குடும்பம் குடும்பமாக இறங்கி வாருங்கள்" என்று ஒருவன் அழைக்கவும், நானும், மனைவியும் பிள்ளைகளும் முதலில் இறங்கினோம். எங்களுக்குப் பின்னால் மற்றைய குடும்பங்கள் வந்து வரிசையாக நிற்க, "கதவுக்கு முன்னால் மறித்து நிற்கவேண்டாம், உள்ளே வாருங்கள்' என்று உள்ளிருந்து இன்னொரு அதட்டும் குரல் கேட்டது. என்னவொரு ஆணவம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, மேசையிலிருந்த அதிகாரி எம்மை அழைக்கும்வரை காத்திருந்தோம். எமது முறையும் வந்தது. கஷ்ட்டப்பட்டு முகத்தில் புன்முறுவலை அள்ளிப் பூசிக்கொண்டு அந்த அதிகாரியின் முன்னால் போய் நின்றோம். 'பாஸ்போட்' என்று எங்களின் முகத்தைப் பார்க்காமலேயே அவள் கேட்டாள். கொடுத்தோம். ஒவ்வொன்றாக வாங்கி ஸ்கான் செய்துவிட்டு, 'எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள், யாருடன் தங்கி நிற்கிறீர்கள், அமெரிக்காவுக்கு ஏன் வந்தீர்கள், உங்களுக்குப் பின்னால் வரிசையில் நிற்பவர்களை உங்களுக்குத் தெரியுமா, எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள், ஏதாவது ஆயுதம், போதைவஸ்த்து வைத்திருக்கிறீர்களா ? என்று அடுத்தடுத்து கேள்விகளை முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் கேட்டுவிட்டு நிமிர்ந்து எங்களின் முகங்களை நோட்டமிட்டாள். முழு அப்பாவிகள் போல நாங்கள் நின்றிருந்த நிலமையையும், நாங்கள் கூறிய பதில்களையும் கேட்டுவிட்டு, பிடியுங்கள் என்று பாஸ்போட்டுக்களை கைய்யில் தந்துவிட்டு எங்களை மீண்டும் பஸ்ஸில் ஏறச் சொன்னாள். அப்பாடா, தொல்லை தீர்ந்தது என்று பெருமுச்சூ விட்டவாறே பஸ்ஸில் அமர்ந்துகொள்ள ஒவ்வொன்றாக மற்றைய குடும்பங்களும் வந்து ஏறிக்கொண்டார்கள். பஸ் அமெரிக்க எல்லையினூடாக தூங்கா நகர் நியு யோக்கை நோக்கி பயணப்படத் தொடங்கியது.ஆப்போது நேரம் மாலை 4 மணி. 

பஸ் ஓடிக்கொண்டிருக்க ஓட்டுனரின் பேச்சுத்துணைக்கென்று ஒருவர் மாறி ஒருவராக அவருக்கு அருகில் அமர்ந்து சம்பந்தமில்லாமல் பேசுவதென்று முடிவெடுத்தோம். அதன்படி முதலாவதாக மாமா அமர்ந்து கொண்டார். அவர் ஓட்டுனருக்கு பேச்சுத்துணை வழங்கியதுமட்டுமல்லாமல், அவ்வபோது அமெரிக்கவீதிகளில் பிச்சை எடுப்பவர் போல நீளத்திற்கு நீளம் அலுவலகம் வைத்து பணம் பறிக்கும் "Freeway Tolls" உத்தியோகத்தர்களுக்கு பணத்தை அள்ளி வாரிக்கொண்டிருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் செல்லச் செல்ல இருள் கெளவத் தொடங்கியது. வானுயர்ந்த கட்டிடங்கள், வீடுகள், பண்ணைகள், பெரும் தோட்டங்கள், தொடர்ந்து வந்த ஆனந்தமான ஆறுகள் என்று அமெரிக்காவின் பசுமையான நிலப்பரப்பொன்றினூடாக மிகுந்த அவசரத்துடன் எமது பஸ் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் ஆணவம் மிக்க, ஆனால் பலமான நாட்டின் தலை சிறந்த நகர் பார்க்கும் ஆவலில் 20 பேரும், அவர்களை எப்படியாவது இரவு முடிவதற்குள் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் ஒருவருமாக 21 பேரைச் சுமந்துகொண்டு இரவிரவாக இருட்டை கிழித்துக்கொண்டு அமெரிக்க பசுமைத்தேச வீதிகளில் பஸ் அலறிக் கொண்டோடியது. 

தூக்கம் மெதுவாக பஸ்ஸிலிருந்தவர்களை அணைக்கத் தொடங்க பேச்சுக்களும், கிண்டல்களும் குரட்டை ஒலிகளாக மாறியிருக்க பஸ் எங்கும் நிசப்தம். அதுவரை ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருந்த மாமவின் சத்தத்தைக் கூடக் கேட்க முடியவில்லை.

திடீரென்று மிகப் பலமான அதிர்வோசை. பஸ் பள்ளத்தில் ஓடுவது போல தூக்கத்தில் எனக்கு கேட்கிறது, கஷ்ட்டப்பட்டு கண்விழித்துப் பார்த்தால், பஸ் பாதையில் அருகிலிருக்கும், எல்லைக் கோட்டில் தடதடவென்று ஓடிக்கொண்டிருக்க பஸ் ஓட்டுனரும் தூக்கத்திலிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியில் தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். மாமாவைத் தட்டி எழுப்பி, ஓட்டுனருடன் வலுக்கட்டாயமாக பேச்சுக் கொடுத்து, "அண்ணோய், நித்திரை வரூதெண்டால் , கொஞ்சநேரம் நிப்பாடிப்போட்டு, ஒரு கோப்பி குடிப்பம்' என்றேன். "இல்லையில்லை, எனக்கொரு பிரச்சினையுமில்லை, உப்பிடியே ஓடினமெண்டால், காலையில் 1 அல்லது 2 மணிக்குப் போயிடுவம், இல்லாட்டி விடிஞ்சுடும்' என்று மறுத்துவிட்டர். பஸ் ஓடிக்கொண்டேயிருந்தது. 

சிறிது நேரம் செல்லச் செல்ல, அவரது தூக்கம் மீண்டும் எங்களுக்குத் தெரிந்தது. கஷ்ட்டப்பட்டு கண்களை விரித்துப் பார்த்தபடி ஓட்டிக் கொண்டிருந்தார். களைப்பு ஒருபுறம், நித்திரைவெறி இன்னொருபுறம், நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்கிற கவலை மற்றொருபுறமிருக்க ஓட்டுனர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஸ்டியரிங் வீலின் முன்னால் அமர்ந்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது எமக்கு. 

இடைக்கிடையே தான் கொண்டுவந்த தண்ணீர்ப் போத்தலைத் திறந்து பலாரென்று முகத்தில் தண்ணீர் ஊற்றினார். இடைக்கிடையே பலமாக தனது இரு கன்னங்களிலும் அறையத் தொடங்கினார். அவ்வபோது, "அம்மா' என்றூ கூக்குரலிட்டவாறே, தன்னை மெதுவாக அரவணைக்கத் தொடங்கியிருந்த தூக்கத்தை கழற்றி எறியப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார். அவரின் நிலையைப் பார்க்க எங்களுக்கு ஒருபுறம் பாவமாகவும் , இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது. 

நிப்பாட்டி ரெஸ்ட் எடுப்பமெண்டாலும் கேட்கிறாரில்லை, கோப்பியும் வேண்டாம் என்கிறார். என்னதான் செய்வதென்று நாம் தெரியாமல் முளித்துக்கொண்டிருக்க, அவரின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் கவலைக்கிடமாக போய்க்கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்த எவருக்கும் பயணிகள் பஸ் ஓட்டும் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை, அப்படி இருந்தாலாவது அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நாங்கள் பஸ்ஸை ஓட்டலாம், ஆனால் அதுவும் முடியாதென்கிற நிலையில், உயிரைக் கைய்யில்ப் பிடித்துக்கொண்டு அவர் ஓட்டுவதைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். பஸ் மறுபடியும் பாதையை விட்டு விலகி, எல்லைக் கோட்டின் மீது செல்லமாக உரசத் தொடங்கியது. 

இனிமுடியாது. இப்படியே போனால், எங்கள் 20 பேருக்கும் அவர் அமெரிக்காவில் சமாதி கட்டிவிட்டு தானும் ஏறிப் படுத்துக்கொள்வார் என்று நினைத்துக்கொண்டே, "ஆண்ணோய், லேட்டாப் போனால்ப் பறவாயில்லை, ஆனால் போகவே முடியாமல் போனால்த்தான் கவலை. நிப்பாட்டுங்கோ பஸ்ஸை. நீங்கள் கொஞ்சநேரம் படுங்கோ நாங்கள் காவலிருக்கிறம்" என்று சற்று அதட்டிக் கூறவே அவரும் வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார். ஆனால் அடுத்த ரெஸ்ட் ஏரியா போவதற்கு இன்னும் 30 நிமிடங்களாவது ஓடவேண்டும். 

அந்த அமெரிக்கப் பயணத்தின் மிக நீண்ட 30 நிமிடங்கள், அந்த 30 நிமிடங்கள். குறட்டை விடாத குறையாக அவர் தூக்கத்தில் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருக்க, அவரைச் சூழ்ந்து எங்களில் 5 அல்லது 6 பேர் காவலிருக்க பஸ் தட்டுத் தடுமாறி, பிரதான வீதியிலிருந்து விலகி உள்வீதியொன்றினூடாக அடுத்த ரெஸ்ட் ஏரியாவை அந்த நள்ளிரவில் தேடிக்கொண்டிருந்தது. 

தெய்வாதீனமாக ஒரு பாரிய ஷொப்பிங் மோல் ஒன்றின் கார் பார்க் திறந்திருக்க, திறந்த வீட்டில் நாய் புகுவதுபோல எமது பஸ்ஸை உள்ளே கொண்டுசென்று நிறுத்தினோம். அப்போது காலை 1 மணி. அவரை பலாத்காரமாகத் தூங்கச் செய்துவிட்டு நாம் அனைவரும் பஸ்ஸை விட்டு இறங்கிக் கொண்டோம். கோடை காலமென்றாலும் கூட, அந்த நள்ளிரவில் குளிர் காற்று வீசிக்கொண்டிருக்க, எவருமேயற்ற அந்தக் கார்ப் பார்க்கில், நாம் மட்டும் தனியாக கூட்டமாக தமிழில் உரத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சற்றுத் தொலைவில் பஸ்ஸுக்குள் ஓட்டுனர் ஆழ்ந்த த்துக்கத்திற்குள் தன்னை முழுவதுமாகத் தொலைத்திருந்தார்.

அந்தக் கார்ப் பார்க்கின் மத்தியிலிருந்து பேசிக்கொண்டே அயலை அவதானிக்கத் தொடங்கினேன். இன்னும் பூட்டப்படாமலிருந்த ஒரு சில உணவுக் கடைகளில் இந்தியர்கள், மாணவர்களாகக் கூட இருக்கலாம். ஹிந்தியில் உரக்கப் பேசிக்கொண்டு தமது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். நாம் அங்கே ஏன் நிற்கிறோம் என்று அறியும் ஆவல் அவர்களுக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அந்த வெளியில் குளிர் காற்றிடையே நீண்டநேரம் நின்றிருந்தமையால், இயற்கை உபாதை களிக்க வேண்டிய தேவையேற்பட, இடம்தேடி குழுக்களாகப் பிரிந்து அலையத் தொடங்கினோம். 

ஒரு மணிநேரம், அல்லது அதற்குச் சற்றுக் கூடப் போயிருக்கலாம், "தம்பியவை, நான் தேவையானளவுக்கு நித்திரை கொண்டிட்டன், இனி வாங்கோ, ஓடினால்த்தான் காலையிலையெண்டாலும் நியு யோக்குக்குப் போக முடியும்' என்று கூறிக்கொண்டே ஓட்டுனர் எழுந்து வந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் தன் பயணக் கட்டுரையை மிக சுவாரசியமாக நடத்திச் செல்கிறாா். பத்திரமாக அமொிக்கா சென்று வந்தீர்களா என்று அறிய ஆவலாய் உள்ளது, தொடருங்கள். என்றாலும் கனடா உறவுகளை சந்திக்க தவிா்த்ததை மன்னிக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு சுவார்சியமாக உங்கள் பயணக்கட்டுரையை நகர்த்தி செல்கிறீர்கள். ரிம் கொட்டனில் 90களின் இறுதியிலும் 2000ங்களின் ஆரம்பத்திலும் சூப்பர் வைசராக பணிபுரிந்திருக்கிறேன்..... இப்போது கண்டாலும் பாஸ் எப்போது மறுபடியும் வேலைக்கு வாறாய் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. ரிம் கொட்டன் கோப்பி பிரபல்யம் ஆனால் எனக்கு மட்டும் அலர்ஜி மைக்கிரெய்ன் தலையிடி உள்ளவர்களுக்கு கண்ணில் காட்டக்கூடாத மிக முக்கியமான பானம். ரிம் கொட்டன் கோப்பிக்கடையை கொம்பனியில் எடுப்பதென்றாலும் குறைந்தது 5 வருட காத்திருப்பு தேவை மட்டுமல்ல பெருந்தொகை பணமும் வேண்டும். கனடாவிலேயே நல்ல பிஸினஸ் என்றால் ரிம் கொட்டன்தான். ரிம் கொட்டன் வேலை நல்ல கலகலப்பானது ஆனால் விடுமுறை எடுப்பது மட்டும் மிகக்கடினமானது..

 

நீங்கள் இங்கு வந்ததை எம்மில் யாருக்காவது தெரிவித்திருக்கலாம். விரும்பியவர்கள் நேரங்குறித்து சந்தித்திருப்போம். பரவாயில்லை. ஏதேச்சையாக நீங்கள் சந்தித்த யாழ் இணைய நண்பரைத் தெரியும் அதை நீங்கள் எழுதும்போதுதான் சுவார்சியமாக இருக்கும். தொடருங்கள்.

 

 

 

வணக்கம் சகாரா, சுமே, காவலூர்க் கண்மணி !

 

நான் கனடா வரும்போது முடிந்தவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். ஆனால் முதல் மூன்று வாரங்களுக்கும் அங்கிங்கு அசைய முடியாதபடி மனைவி அட்டவணை போட்டு வைத்துவிட்டார். ஆகவே டொரொன்டோ, மொன்ட்ரியால், கியூபெக், யூ.எஸ் என்று ஒரே ஓட்டம். வீட்டில் நின்றதே ஒரு சில நாட்கள்தான். ஆக இறுதிவாரத்தில் மட்டுமே மனைவி அருகிலுள்ள தமிழ்க் கடைகளில் தமிழ் உடுப்பு வாங்க கிளம்பிவிட்டதால், நான் வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஆனாலும் அந்த ஒரு சில நாட்களிலும் பின்னேரங்களில் யாராவது சொந்தங்களின் வீடுகளுக்குப் போகவேண்டி வந்துவிடும். ஆக எனக்கென்று ஒரேயொரு நாள் மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. அதில் எனது பக்க உறவுகள் சிலரைப் பார்க்கப் போனோம்.

 

என்னுடன் பல்கலையில் கூடப் படித்த இரு நண்பர்களை கடைசி நாட்களில்தான் பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

 

உங்களைக் காணாமல் வந்துவிட்டது கவலைதான். இனிவரும்போது ( ஒரு 3 அல்லது 4 வருடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) நிச்சயம் எல்லோரரையும் சந்திப்பதென்று முடிவெடுத்திருக்கிறேன். 

அதுசரி, நீங்கள் எப்போது இங்கு வருவதாக உத்தேசம் ?

 

ரகுநாதன் தன் பயணக் கட்டுரையை மிக சுவாரசியமாக நடத்திச் செல்கிறாா். பத்திரமாக அமொிக்கா சென்று வந்தீர்களா என்று அறிய ஆவலாய் உள்ளது, தொடருங்கள். என்றாலும் கனடா உறவுகளை சந்திக்க தவிா்த்ததை மன்னிக்க முடியாது

பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டோம். ஆனால் பயணம் அப்பிடி இப்பிடித்தான் !

தொடருங்கள் ரகு தொடர் மிகச் சுவாரசியமாக இருக்கு. ஆனாலும் எப்படி யாழ் உறவுகளை சந்திக்காமல் ......

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? கனடாவிலா அல்லது மெசொப்பொத்தேமியாவிலா? சும்மா கேட்டேன் . சந்திக்காமல் வந்தது தவறுதான்....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று மிகப் பலமான அதிர்வோசை. பஸ் பள்ளத்தில் ஓடுவது போல தூக்கத்தில் எனக்கு கேட்கிறது, கஷ்ட்டப்பட்டு கண்விழித்துப் பார்த்தால், பஸ் பாதையில் அருகிலிருக்கும், எல்லைக் கோட்டில் தடதடவென்று ஓடிக்கொண்டிருக்க பஸ் ஓட்டுனரும் தூக்கத்திலிருப்பது தெரிந்தது.

அமெரிக்க பாரிய வீதிகள் எங்கும் இரு மருங்கிலும் உள்ள கரைகளில் இப்படி வெட்டிவிட்டுள்ளார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நியூயோர்க வந்து போயிருக்கிறீர்கள் என்றவுடன் மிகவும் ஏமாற்றமாக் இருக்கிறது.

எங்காவது வந்து ஒரு நிமிடமென்றாலும் சந்தித்திருப்பேன்.

யாழ்களத்தில் நான் மிகவும் விரும்பும் இருவரைத் தவறவிட்டுவிட்டேன்

முதலாமவர் விசுகர்.

இரண்டாமவர் நீங்கள். 

 

Dunkin Donut  எனது ஊரிலும், மூன்று கிளைகளை அண்மையில் திறந்துள்ளார்கள்.:)

இந்த கடைப் பக்கம் வருடத்தில் ஒரு தடவைக்கு மேல் போகாதீர்கள்.

அமெரிக்காவில் சாப்பிட்டே சாகலாம் என்னும் கடைகளில்

மைக்  டொனால்ட்டும் டன்கின் டோனட்சும் இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஒருமணி நேர நித்திரைக்கும், ஒரு கோப்பை காப்பியிக்கும் பிறகு ஓட்டுனர் விழித்துக்கொண்டார், அல்லது விழித்துக்கொண்டவர்போலத் தெரிந்தார். மறுபடியும் பஸ் ஓட ஆரம்பித்தது. 

ஒரு 2 மணித்தியாலங்கள் ஓடியிருப்போம். டீசல் முடியும் தறுவாய், எல்லோருக்கும் பசி. ஆகவே அமெரிக்காவின் பெயர் தெரியாத ஒரு ஊரில் கே. எப். ஸி ஒன்றின் முன்னால் பஸ்ஸை நிறுத்தினோம். ஓட்டுனர் டீசலை அடிக்க, நாம் ஓவொருவரும் ஒவ்வொரு திக்கில் காணாமல்ப் போனோம். திரும்பி வரும்போது பஸ்ஸின் பொனெட் திறந்திருக்க, மாமாவுடன் பஸ் ஓட்டுனர் கவலையாகப் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.

அருகில்ப் போய் விசாரிக்க, "தம்பி, பஸ்ஸின் கூரையின் மேலுள்ள லயிட் வேலை செய்யேல்லை, இவ்வளவு நேரமும் நான் அதைக் கவனிக்கயில்லை, ஆனால் அமெரிக்காவில பசெஞ்சர் வண்டிக்கு மேல் லயிட் போடாமல்ப் போனால்ப் பிடிப்பாங்கள்" என்று இழுத்துவிட்டு, 'இஞ்ச பக்கத்தில ஒரு மோட்டலில இண்டைக்குத் தங்கி விட்டு, காலையில் ப்ரெஷ்ஷா நியூ யோக்கிற்குப் போகலாம்" என்றார். நாங்கள் அமெரிக்காவில் நிற்கப்போவதே வெறும் ஒரு நாள்த்தான், அதற்குக் கூட இவர் ஆப்பு வைக்கப் போறார் என்றதும், நாம் சுதாரித்துக்கொண்டோம். "நான் லயிட்டைச் செக் பண்ணுறன், இண்டைக்கு இங்க நிற்க முடியாது, குறைஞ்சது காலையிலாவது நியூயோக்கிற்குள் நிற்க வேணும்" என்று கூறிவிட்டு மாமா லயிட்டைப் பார்க்கத் தொடங்கினார். ஒரு சில நிமிடங்களில் லயிட் எரியத் தொடங்கியதும், ஓட்டுனருக்கு வேறு எந்தச் சாட்டும் சொல்ல முடியாமல் போகவே, மறுபடியும் பஸ்ஸில் ஏறி வேண்டா வெறுப்பாக ஓடத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 14 மணித்தியாலங்களுக்கு மேல் தன்னால் சட்டப்படி பஸ் ஓட்ட முடியாது, "அது என்னைக் கொல்லுற மாதிரி" என்று சற்று அழுத்தமாகவே அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளும் நிலையில் பஸ்ஸினுள் இருந்தவர்கள் எவருமே இருக்கவில்லை, ஆனால் அவரின் கூற்றிலுள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தாலும் எதுவுமே செய்ய முடியவில்லை. ஏனென்றால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் ஏனையவர்கள் அப்போது இருக்கவில்லை. 

இன்னுமொரு 2 மணித்தியால ஓட்டத்தில் நியூயோக் நகரை அடைந்தோம். காலை 5 மணி. அப்போதே நகர் சுறூ சுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. நாங்கள் தங்க ஒழுங்கு செய்திருந்த இடம் நியூ யோக் நகர் மத்தியிலிருந்து ஒரு 30 நிமிட ஓட்டத்தில் இருந்தது . இடத்தின்பெயர் நினைவிலில்லை. ஆனால் அச்சொட்டாக அப்படியே கொச்சிக்கடை அல்லது மருதானையைப் பார்த்ததுபோல என்று சொல்லலாம். அந்தளவிற்கு குப்பையும், துர்நாற்றமும் வீசிக்கொண்டிருக்க, "ஆட, இது அமெரிக்காதானா, அல்லது வேறு எங்காவது வந்துவிட்டோமா?" என்று எண்ணத் தோன்றியது. 

ஒருவாறு கஷ்ட்டப்பட்டு தங்கவேண்டிய வீட்டைப் புறாக்கூடுகள் போன்று நெருக்கமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டுத் தொகுதியொன்றிற்குள் கண்டுபிடித்தோம். வீட்டின் உரிமையாளர் ஒரு சீனர். 4 வார்த்தைகளை ஆங்கிலத்தில் கோர்த்துப் பேசுவதற்குக் கூட மிகுந்த சிரமப்பட்டார். 

தனக்கு வரவேண்டிய வாடகைப் பணத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாரேயன்றி, நாங்கள் கேட்ட கேள்வி எதையுமே கணக்கிலெடுக்கவில்லை. இணையத்தில் தங்குமிடத்தை நாம் ஒழுங்குபடுத்தியபோது வாகனத்துக்கும் இலவச பார்க்கிங் வசதி உண்டு என்று போட்டிருந்தார்கள். ஆனால் அந்த ஒடுங்கிய ரோட்டில், எமது பஸ்ஸை பாக் பண்ணவே முடியவில்லை. பஸ் அந்த வீதியில் நின்றால் முழுப் போக்குவரத்துமே முடக்கப்பட்டு விடும். பாவம் அந்த ஓட்டுனர், எங்களையும், கொண்டுவந்த சாமான் சக்கட்டுக்களையும் இறக்கி முடிப்பதற்குள் அந்தச் சந்தியை 3 அல்லது 4 முறை சுற்றி வரவேண்டியதாகிவிட்டது. 

ஒருவாறு சாமான்களை இறக்கி முடித்துவிட்டு, "ஸரி, உங்கள் பாக்கிங்க் எங்கே இருக்கிறது, வந்து காட்டுங்கள்" என்று நாங்கள் அந்தச் சீனரைக் கேட்கவும், "பாக்கிங்கா, சும்மா உந்த ரோட்டின் ஓரத்தில் பாக் பண்ணுங்கள்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். "இதுதான் உங்களின் இலவசப் பாக்கிங்கா?" என்று கடுப்புடன் கேட்டதற்கு, "இங்கே பாக்கிங் எல்லாம் கிடையாது, எல்லாமே ரோட்டில்த்தான் " என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நானும் மாமாவும் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம், "ஆண்ணோய், பஸ்ஸை எடுங்கோ, எங்கேயாச்சும் தள்ளியாவது பாக்கிங் இருக்கோ ஏண்டு தேடுவம்" என்று நாங்கள் சொல்லவும் அவரும் ஏறிக்கொண்டார்.

ஒரு மணிநேரம் அந்தப் பகுதியை சல்லடை போட்டுத் தேடினாலும் பஸ்ஸைப் பார்க் பண்ணுவதற்கு இடம் கிடைக்கவில்லை. நேரம் 7 மணியாகிவிட்டது. வெறும் வீதியோரத்தில் தனது பஸ்ஸைப் பாக் பண்ணுவதற்கு ஓட்டுனருக்கு மனம் வரவில்லை, எங்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 'தம்பியவை, நீங்கள் குறை நினைக்காட்டி ஒண்டு சொல்லுறன், நான் உப்பிடியே ஒரு 45 நிமிஷம் ஓடினால் ஒரு மோட்டல் வரும், அங்கே பஸ்ஸையும் பாக் பண்ணலாம், என்ர பஸ் பிரச்சினையாலதானே உங்கட பயணமும் மினக்கெட்டது? நீங்கள் இன்னொரு நாள் கூட அமெரிக்காவில நில்லுங்கோ, காசு மேலதிகமாக எனக்கு வேண்டாம், ஆனால் இப்ப போற மோட்டலுக்கு மட்டும் காசு தந்தியள் எண்டால்ச் சரி " என்று சொன்னார். எங்களுக்கும்அது சரியாகப் படவே, ஆமென்று தலையாட்டினோம். 

எம்மை தங்கும் வீட்டில் இறக்கிவிட்டு, அவர் தனது மோட்டலுக்கு போய்விட்டார். நாங்கள் நகரைச் சுற்றிப் பார்க்கும் முன்னர் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று வீட்டிற்குள் நுழைந்தோம். 

அமெரிக்க பாரிய வீதிகள் எங்கும் இரு மருங்கிலும் உள்ள கரைகளில் இப்படி வெட்டிவிட்டுள்ளார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நியூயோர்க வந்து போயிருக்கிறீர்கள் என்றவுடன் மிகவும் ஏமாற்றமாக் இருக்கிறது.

எங்காவது வந்து ஒரு நிமிடமென்றாலும் சந்தித்திருப்பேன்.

யாழ்களத்தில் நான் மிகவும் விரும்பும் இருவரைத் தவறவிட்டுவிட்டேன்

முதலாமவர் விசுகர்.

இரண்டாமவர் நீங்கள். 

இந்த கடைப் பக்கம் வருடத்தில் ஒரு தடவைக்கு மேல் போகாதீர்கள்.

அமெரிக்காவில் சாப்பிட்டே சாகலாம் என்னும் கடைகளில்

மைக்  டொனால்ட்டும் டன்கின் டோனட்சும் இருக்கிறது.

 

மன்னிக்க வேண்டும் ஈழப்பிரியன். எனக்கு அமெரிக்காவில் நடந்தவை எல்லாமே இப்போதும் ஒரு கனவுபோலத்தான் தெரிகிறது. ஒரு நாளிற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்றது எனக்கு அப்போது நினைவிற்கு வரவில்லை. இயந்திரத் தனமான நகர் வலம் வருதலுடன் எமது மிகச் சிறுத்த அமெரிக்கப் பயணம் முற்றுப்பெற்று விட்டது. உங்களைச் சந்திக்க முடியாமல்ப் போனதற்காக மனம் வருந்துகிறேன். அட்டவணை போட்டு இடம் பார்ப்பதுதான் நோக்கமென்றால் இப்படியான ஒரு பயணத்திற்கு வந்திருக்க மாட்டேன் என்று இப்போது நினைக்கிறேன். இனிவரும் பயணங்களாவது உறவுகளை நண்பர்களை சந்திக்கும் உணர்வுபூர்வமானவையாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது புனைபெயரை தனது இயற்பெயராகக் கொண்ட ரகுனாதனும் (வலது புறம்) நானும், அக்காவீட்டில் அவசரச் சந்திப்பொன்றின்போது எடுத்தது. 

IMG_5505.jpg

Link to comment
Share on other sites

அடடா அவனா நீ ?????-----வணக்கம் தோழர் ..என்னை தெரியுமா ????

Link to comment
Share on other sites

அடடா அவனா நீ ?????-----வணக்கம் தோழர் ..என்னை தெரியுமா ????

குஞ்சி....என்ன கேள்வி இது.....உங்களை தெரியாமல் இருக்குமே?

Link to comment
Share on other sites

இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள்.

கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா அவனா நீ ?????-----வணக்கம் தோழர் ..என்னை தெரியுமா ????

என்னுடன் மொரட்டுவை பல்கலையில் குன்ஸி என்கிற பெயருடன் ஒருவர் படித்தார். ஒருவருடம் குறைவாகக் கூட இருக்கலாம். நீங்கள் அவராகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களின் பெயரை யாழில் பார்த்தவுடன் நினைத்துக்கொண்டேன். அப்படியிருந்தால் நிச்சயம் உங்களை எனக்குத் தெரியும்.

இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள்.

கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...

நன்றி மணிவாசகன்,

 

கனடாப் பயணம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சென்றுவந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் என்று என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. வாழ்ந்தால் இப்படியொரு இடத்தில் வாழவேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்திவிட்டது. திரும்பி வந்த முதல்வாரத்தில் கனடா நினைவுகளில் மூழ்கிப்போனேன். இங்கே எழுதுவதுகூட அந்த நினைவுகளுக்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுக்கவென்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

 

எழுத ஆரம்பிக்கும்போது, சாதாரணப் பயணக் கட்டுரைதானே, என்று எவருமே அக்கறை கொள்ளப்போவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், பலரும் தந்த உற்சாகம் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது. 

நீங்களுற்பட கனடாவில் வாழும் எல்லோர் மேலும் பொறாமையாக இருக்கிறது. கொடுத்துவைத்தவர்கள் !

 

இந்த நாடும் கனடா போலவும், அங்கிருப்போர் இங்குமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.........

Link to comment
Share on other sites

என்னுடன் மொரட்டுவை பல்கலையில் குன்ஸி என்கிற பெயருடன் ஒருவர் படித்தார். ஒருவருடம் குறைவாகக் கூட இருக்கலாம். நீங்கள் அவராகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களின் பெயரை யாழில் பார்த்தவுடன் நினைத்துக்கொண்டேன். அப்படியிருந்தால் நிச்சயம் உங்களை எனக்குத் தெரியும்.

நன்றி மணிவாசகன்,

 

கனடாப் பயணம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சென்றுவந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் என்று என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. வாழ்ந்தால் இப்படியொரு இடத்தில் வாழவேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்திவிட்டது. திரும்பி வந்த முதல்வாரத்தில் கனடா நினைவுகளில் மூழ்கிப்போனேன். இங்கே எழுதுவதுகூட அந்த நினைவுகளுக்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுக்கவென்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

 

எழுத ஆரம்பிக்கும்போது, சாதாரணப் பயணக் கட்டுரைதானே, என்று எவருமே அக்கறை கொள்ளப்போவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், பலரும் தந்த உற்சாகம் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது. 

நீங்களுற்பட கனடாவில் வாழும் எல்லோர் மேலும் பொறாமையாக இருக்கிறது. கொடுத்துவைத்தவர்கள் !

 

இந்த நாடும் கனடா போலவும், அங்கிருப்போர் இங்குமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.........

நீங்கள் என்ன தொழில் செய்பவர் என்று தெரியாது. ஆனால் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்த பலர் பொறியியலாளர்களாக பணி புரிகிறார்கள்  அல்லது பொறியியலாளர்கள் பலர் அவுசிற்கு குடிபெயர்ந்தார்கள் என்ற வகையில் நீங்க்ள உரு தரமான உத்தியோகத்தில் இருந்தால் கனடா வருவது அவ்வளவு உசிதமில்லை என்பதே எனது கருத்து.

காரணம் இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா இலங்கை  பல்கலைக்கழக பட்டத்தை அல்லது கல்வியை அங்கீகரிக்கின்றன. ஆனால் இங்கே பெரும்பாலும் பலவற்றை திரும்பப் படித்து பரீட்சை எழுத வேண்டி இருக்கும்.

நாடுகளைப் பொறுத்தவரை அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற நிலை தான்.

என்னைப் பொறுத்தவரை நான் வாழ்ந்த கனடாவையும் இங்கிலாந்தையும் ஒப்பிட்டால் இங்கிலாந்து சிறந்தது என்பது எனது அபிப்பிராயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நீங்கள் கொடுத்து வைத்தவர் முதல் தடவையிலேயே கனடாவை சுற்றிப் பார்த்து அமெரிக்காவிற்கும் போய் விட்டீர்கள்.

நான் பல தடவை கனடா சென்றும் பெரும்பாலும் உறவினர் வீட்டிலேயே காலம் கழிந்து விடும். எங்கேயாவது சுற்றிப் பார்க்க போவம் என்றால் அசைய மாட்டார்கள் அவர்களின் பாஸ்போட்டும் வங்கி லாக்கரில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் யாழில் காணகிடைக்கவில்லை போல.....பயணகட்டுரை நன்றாக போகின்றது.....தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரகுநாதனுக்கு ஒரு ஐம்பத்தைந்து வயதாவது இருக்கும் என எண்ணினேன்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரகுநாதனுக்கு ஒரு ஐம்பத்தைந்து வயதாவது இருக்கும் என எண்ணினேன்.:grin:

ஓரளவிற்குச் சரீயாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு 54 + ஆகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.