Jump to content

அன்புள்ளம் கொண்ட கனடா தமிழர்களுக்கு: இச் சிறுமியின் கனவை நனவாக்குங்கள்


Recommended Posts

11665582_822978011142500_823026746345294

குறும்பும் புன்னகையுமாக இப் படத்தில் இருக்கும் இச் சின்னஞ் சிறு தேவதையை பாருங்கள்.

உலகின் அனைத்து மகிழ்வுகளையும் ஒன்றாக சரம் தொடுத்து மாலையாக்கியவள் போன்று  தோன்றும் இச் சிறுமி தீபிகா  இன்று இவ் உலகில் இல்லை.

Ewing Sarcoma  எனும் அறிய வகை புற்றுநோயின்  தாக்கத்திற்குள்ளாகி மூன்று வருடங்கள் போராடி இறுதியில் கடந்த மாதம் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டாள்.

ஒரு குழந்தையை கண் எதிரில் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது.. இக் கொடுமையை அனுபவித்து மகளை இழந்து போன பின்னும் இவ் சிறுமியின் பெற்றோர்கள் எத்தகைய வேதனையை அடைந்து இருப்பார்

ஆயினும் அவர்கள் வெறுமனே கண்ணீரிலும் துயரிலும் தோய்ந்து ஓய்ந்து போய்விடாது, இவ்வாறான நோய் பற்றிய ஆராச்சிக்காகவும், Sick Kids Hospital இல் உள்ள சிறுவர்களின் நலனுக்காகவும் தீபிகாவின் பெயரால் நிதி திரட்டுகின்றனர்.

இவ்வாறு நிதி திரட்டும் நிகழ்வு ஒன்று வரும் ஞாயிறு, ஜூலை 26 அன்று நிகழ இருக்கின்றது. ஸ்கார்புரோ மற்றும் மார்க்கம் பகுதிகளுக்கு அண்மையில் இருக்கும் ஸ்ரூவில்  பகுதியில் காலை 11 இல் இருந்து மாலை 7 மணி வரைக்கும் நிகழ இருக்கின்றது.

இவ் நிகழ்வுக்கு அன்புள்ளம் கொண்ட அனைவரும் சென்று உங்கள் சிறு பங்களிப்புகளை வழங்கி இச் சிறுமியினது அவளது பெற்றோரினதும் கனவு மெய்ப்பட உதவுங்கள்

இடம்: Balantrae Community Center Stouffville, Ontario
நேரம்:July 26, Sunday at 11:00am - 7:00pm

.
ஆங்கிலத்தில்

In loving memory of Theepika and to honour her spirit we are holding a Fundraising Event to raise money for Sick Kids. This event will have fun activities for the entire family.

 All proceeds will be going towards cancer research/fundings for children at Sick Kids Hospital. If you are unable to attend the event and would still like to contribute to this meaningful cause, we have setup an online donation link through Sick Kids. For donations please see the link below:

http://my.sickkidsdonations.com/PersonalPage.aspx?SID=6177265&LangPref=en-CA&EID=13975

 Theepika would love to have all of you attend this fundraiser to show your support in helping children who are battling cancer each and every day.

 Join us to help give the gift of saving lives!

முகனூல்: https://www.facebook.com/events/388890731308053/

இச் சிறுமி பற்றி: https://www.facebook.com/pages/In-Memory-of-Our-Angel-Theepika/822746547832313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ewing Sarcoma - வளரும் பிள்ளைகளை (10 - 21 வயது) தாக்கும் எலும்புப் புற்றுநோய் ஆகும். இது எப்படி உருவாகிறது என்பதற்கு இன்னும் பலமான ஆதாரங்கள் இல்லை. 

இது பெரும்பாலும்.. அதிகம் வளரும் எலும்புகளான.. தொடை.. கணுக்கால் என்பு.. இடுப்பு எலும்புகளை தாக்கும்.

கடுமையான தாக்கம் கொண்ட உறுப்புக்களை அகற்ற வேண்டி ஏற்படுவதோடு.. இந்த கெட்ட வகை புற்றுநோய் எலும்புகளை மட்டுமன்றி தாக்கம் கண்ட எலும்புகளை சுற்றி உள்ள இதர கலங்களிலும் பரவுவதால்.. பல சந்தர்ப்பங்களில் இது மரணத்தில் முடிகிறது.

நோய் அறிகுறிகளாக.. வீக்கம்.. தொடர் நோவு.. நிறை இழப்பு.. தொடர் காய்ச்சல் இருக்க வாய்ப்புள்ளது.

குழந்தைகளை.. வளரும் பராயத்தினரை அதிகம் தாக்கும் இந்த புற்றுநோய்க்கு எதிராக.. மருந்துகள்.. கதிர்வீச்சு சிகிச்சை அல்லது உறுப்புக்களை அகற்றுதல் மற்றும் இவை எல்லாம் ஒருங்கிணைந்து என்று தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்கள்.

நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது ஓரளவுக்கு சாத்தியமாகும். இன்றேல் வாழ்க்கை காலத்தை குறிப்பிட்ட காலம்.. அதிகரிக்கக் கூடிய வகையில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். 

நோயை கண்டறிய.. மற்றும் உறுதிப்படுத்த.. எக்ஸ் ரே மற்றும் பயாப்சி செய்வார்கள். 

இதற்கான சிகிச்சை முறைகள் செலவு கூடியவை என்பதாலும்.. இந்த நோயை தடுக்கக் கூடிய நிரந்தர வழிமுறைகள் நோக்கி ஆய்வுகள் செய்யப்பட வேண்டி உள்ளதாலும்.. இந்தச் சிறுமியின் அவரை ஒத்து மேற்படி நோய் தாக்குத்துக்கு உள்ளாகி இந்த உலகை நீத்தவர்கள் சார்பிலும் உங்கள் ஆதரவை நல்குங்கள். 

(இந்த நோய் தொடர்பான கல மரபணுக்காரணிகளை கண்டறிவதற்கான சில அடிப்படை ஆய்வுகளில் பல்கலை சார்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் இச்சந்தர்ப்பத்தில் இந்தக் கோரிக்கையின் முக்கியம் கருதி இதனை பதிவிடுகிறேன்.) 

உசாத்துணை:

http://www.nhs.uk/conditions/ewings-sarcoma/pages/introduction.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் பெயரிலும் ஒருசிறுதொகையை எம்மால் முடிந்த அளவிற்கு  உதவவேண்டும். நிழலி தலைமை வகுத்து கவனத்திலெடுத்தால் நன்றாக இருக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.