Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்...கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் பின்னணி.
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

ஈழநாதத்தின் வெளியீடு ( 2001 நாளிதழ் )

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை

இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) - 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) - 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை

இரண்டு - A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு - A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் சில மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர்.

எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகள் அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் தேசப்புயல்கள்.

தேசப்புயல்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்.

இவ் காணொளியில் கட்டுநாயக்க சண்டைக்களமும் தமிழ் மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்.ஆம். கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.
கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.

ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.

தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும்,யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.

இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை,
இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.

பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.

இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.

வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.

இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.

துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.

கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?

சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி.நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.

அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள்
ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?

ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.

எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.

உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.

கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் வீர வணக்கம்!
Edited by Ahasthiyan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் வீர வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது மகனும் கொல்லப் படாமல்,
17 விமானங்களை  குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் துவம்சமாக்கிய....
கரும்புலி மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்ட தாக்குதலில் பலியான வீரர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வீர மரணமடைந்தவர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது மகனும் கொல்லப் படாமல்,
17 விமானங்களை  குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் துவம்சமாக்கிய....
கரும்புலி மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.