Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

ஓடும் விமானத்தில் குடிபோதையில் கலாட்ட செய்த நபர்: கை, கால்களை கட்டிவைத்த சகபயணிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஓடும் விமானத்தில் குடிபோதையில் கலாட்ட செய்த நபர்: கை, கால்களை கட்டிவைத்த சகபயணிகள்
 
swiss_drunken_001.jpgஓடும் விமானத்தில் சுவிஸ் பயணி ஒருவர் கலாட்டா செய்ததால் சக பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான TG971 என்ற விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து பாங்காங் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வந்த சுவிஸ் பயணி ஒருவர் திடீரென கலாட்டவில் இறங்கியதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த அவர் சகபயணிகளை திட்டியதோடு மட்டுமல்லாமல், இருக்கை மீது ஏறி நின்று அட்டூழியம் செய்து வந்துள்ளார்.

இதைக் கண்ட பெண்கள் உள்ளிட்ட குழந்தைகள் பயத்தில் கத்தியுள்ளனர். மேலும் அந்நபரை சகபயணிகள் அமைதிப்படுத்த முயன்றது தோல்வியில் முடியவே, அனைவரும் இணைந்து கலாட்டா செய்த நபரின் கை கால்களை கட்டி வைத்துள்ளனர்.

விமானம் பாங்காங் சென்றடையும் வரையிலான 6 மணி நேரமும் அந்நபரின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்த களேபரங்களில் மூன்று பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தாய் ஏர்வேஸ்ஸின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

http://www.coolswiss.com/view.php?22eOld0bcQa0Qd4e3yMM302cBnB2ddeZBnz303egAA2e4C0asacb2lOS43

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.