Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! -அனந்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென  வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.

யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.பதிவு இணைய செய்தி

மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்(க)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.பதிவு இணைய செய்தி

போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவருக்கு நடந்தது என்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.பதிவு இணைய செய்தி

உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.

இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.பதிவு இணைய செய்தி

ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.

மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார்.

உண்மையில், மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.பதிவு இணைய செய்தி

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.

அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல், எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது. வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.

வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.பதிவு இணைய செய்தி

இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.

முதலமைச்சர் அவர்கள் கூட, நடுநிலை நின்று, ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.பதிவு இணைய செய்தி

இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால், தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.

இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.

பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான, நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.

எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

நான் எனது கட்சியை விட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.பதிவு இணைய செய்தி

தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.பதிவு இணைய செய்தி

ஆனால், சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.

மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது. என்றுள்ளது.

 

http://www.pathivu.com/news/42040/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By கிருபன்
      ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்
      ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
      அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

      கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார். அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி. இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும், பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும், செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும்.
      ஆனால், இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்..
      கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல, தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
      ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார். இதனால், உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில், பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.
      2011ம் ஆண்டுக்குப் பிறகு, நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
      எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக, கடுமையான அதிருப்தியை அவருக்கும், அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும், பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.
      தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

      ஜி. எஸ். பி. பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல, இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில், கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார். இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார்.
      அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக, இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக, இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும், போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.
      இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி, இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு, அதற்கும் மேலாக, இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக, சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.
      புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக, அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர், ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும், எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.
      குறிப்பாக, சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன. இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது.
      ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில், சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள். அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.
      இந்த நேரத்தில் தான், நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி, தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது.
      அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள், அவர்களது ஊடகங்கள், ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.
      இந்த அடிப்படையில், பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன். அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன்.
       
      https://thinakkural.lk/article/143011
       
    • By Athavan CH
      இவ்வார மின்னல் நிகழ்ச்சியில்
      கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக
       
      http://www.tamilkingdom.com/2017/04/456_18.html
    • By sudaravan
      வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

      போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார்.

      இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

      எனினும் இறுதியாக நடந்த சமரசப்பேச்சுக்களினையடுத்து மாற்று தரப்பிற்கு இறுதி நாட்களினில் ஆதரவு கோரி அனந்தி களமிறங்குவாரென தெரியவருகின்றது.http://www.pathivu.com/news/41374/57//d,article_full.aspx
    • By sudaravan
      நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களினில் ஒருசாராரும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

      எனினும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

      தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்றும் மைத்திரிபால அரசாங்கத்துக்கு துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது எனவும் முன்னணி தெரிவித்துள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அந்த மூத்த உறுப்பினர் கூறினார்.

      வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்றும், அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.பதிவு இணைய செய்தி

      மேலும் சில தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.pathivu.com/news/41192/57//d,article_full.aspx
  • Topics

  • Posts

    • ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட…  புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம். அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 
    • புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு.. அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.. ஆகையால் அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுப்பது தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்.. அதேவேளை.. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.. எங்கள் ஊர் பள்ளிவாசலில் கூட குண்டுகள்வாக்கிடோக்கிகள் என்று பல ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தனர்.. அப்பொழுது நான் சிறுவன்.. சந்தைக்கு அப்பாவுடன் போன இடத்தில் என்கண்களால் கண்டகாட்சி இது.. இது அந்த பள்ளிவாசலுக்கு செல்லும் அவ்வூர் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் தெரியும்.. யாரும் புலிகளுக்கு தெரிவிக்காமல் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.. அதுமட்டுமல்ல எங்கள் ஊரில் நிகழ்ந்த நாலைந்து விமானத்தாக்குதல்களுக்கு வாக்கிடோக்கி மூலம் கீழிருந்து புலிகளின் முகாம்கள் குறித்து தகவல் விமானிக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போதே ஓரிரு முலீம்களை கையும் களவுமாக புலிகள் புலனாய்வுப்புரிவு எங்கள் ஊரில் கைது செய்ததை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் கொடுத்த தகவலில் வீசப்பட்ட குண்டுகளில் எமது ஊர் அப்பாவி சிறுவர் சிலரும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.. எனது ஆதங்கம் இந்த விடுதலைப்போரில் முஸ்லீம்கள் ஆதரவு தராவிட்டாலும் உபவத்திரவம் தராமல் தாமுண்டு தம்பாடு உண்டு என்று நடு நிலையாவது வகித்திருக்கலாம்.. ஆனால் துரதிஸ்டவசமாக முஸ்லீம்கள் வலிமை கூடியது தமக்கு பயந்தரக்கூடியது எதுவென்று பார்த்து அரச ஆதரவு நிலைப்பாடு எடுத்தது தமிழ் முஸ்லீம் இனங்களுக்குடையில் விழுந்த மாபெரும் பிளவுக்கோடும் அதன் விளைவாக நிகழ்ந்த மாறாவடுக்களுக்கும் காரணம் ஆகிவிட்டது..
    • நேஸ்சுக்கு தட்டுபாடு என்றால் இலங்கையில் இருந்து நேஸ்மார்களை எடுத்து மேலதிக பயிற்சி கொடுக்கலாமே
    • நிழலி இப்பகுதியில் தெரிவித்த எல்லாமே நல்ல கருத்துக்கள் 👍 கட்டுரை எழுதியவரின் நோக்கம் அப்படி என்று தான் நினைக்கிறேன். என்னுடைய கன்னட நண்பர்கள் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் நேரம் பார்த்து என்னை தமிழன் என்று கேலி செய்வதைக் கவனித்திருக்கிறேன் என்று சொல்கிறார். நாம் படித்த வேலை பார்க்கும் இடங்களில் இனவெறுப்பு கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் நண்பர்கள் என்று இருப்பவர்கள் இன வெறுப்பு பார்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள் எங்களை சிறுமைபடுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்திய தமிழ் திரைபடங்கங்களால் தமிழ் பேசும் மொழியாக ஓரளவு காலம் வாழும் என்று தான் நினைக்கிறேன். எனது நண்பருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது.  ஆனால் திரை அரங்கிற்கு சென்று தமிழ்படம் பார்ப்பார். தமிழ்பாட்டுக்கள் விரும்பி கேட்பார். அவரால் தான் கடைசியாக ஒரு ரஜனி காந்தின் படம் ஒன்று திரைஅரங்கிற்கு சென்று பார்த்தோம் 😂  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.