Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிகளிற்கு கூட்டமைப்பு குரல் கொடுத்ததாம்! மாவை திருவாய் மலர்ந்தார்!!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தாரென திருவாய் மலர்ந்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா.

பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரைக்கும் ஆதரவாக இருந்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம். எனவே,முன்னால போராளிகள் எமக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும்  அவர் கோரியுள்ளார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயமாக்க முயன்ற மஹிந்தவை நமது கட்டுக்கோப்பான ஒற்றுமையால் - வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி விரட்டினோம். அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் சரியான முறையில் பயன்படுத்தி எமது பேரம் பேசும் சக்தியை உலகுக்கு உணர்த்தவேண்டும். நமது போராட்டங்களும் தியாகங்களும் வீண் போகக்கூடாது" என்றும் அவர் சுட்டிக்காட்டீள்ளார். http://www.pathivu.com/news/42065/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   -----------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற தலைவர் மாமாவின் குடும்ப நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே சேகரப்படுத்தியுள்ளேன்... விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
    
    
  • By sudaravan
   ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காணப்படும் சுமூகமான நிலைமை பொதுத் தேர்தலுக்கு பிறகும் தொடருமாயின் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மிகுதி நிலங்களும் விடுவிக்கப்பட்டு மக்களை அங்கு மீளக் குடியேற வைத்து அவர்களை வாழவைக்க முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
   யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை இந்த ஆட்சி மாற்றத்தில் பொதுமக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
   அதற்கேற்ப நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் ஆரம்ப கட்டமாக விடுவிக்கப்பட்டது.   அதில் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அந்த ஆயிரத்து 100 ஏக்கர் என்பது வளலாய் நிலங்களையும் உட்படுத்தியதாக இருந்தது. வளலாய் நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ,ஆக்கிரமிக்கப்பட்ட
   நிலப்பரப்பிற்குள்ளோ வராது.     ஆனால் 1371  ஏக்கர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பிரதேசமாக இருந்த வகையில் 563 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
   வலளாய் பகுதியில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன்  கலந்துரையாடப்பட்டது.    அதனடிப்படையில் 18 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்கள் யாழில் மேலும் விடுவிக்கப்பட வேண்டிய நிலங்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளனர். 
     மேலும் மன்னார் முள்ளிக்குளம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் அந்த நிலமும் விரைவில் விடுவிக்கப்படும்
   எனவும் மாவை தெரிவித்தார்.http://www.pathivu.com/news/41658/57//d,article_full.aspx
  • By sudaravan
   நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நில அளவையாளர் திரு. கனகையா அழகேந்திரன் வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு வேட்பாளர். இவரையே நான் சிபாரிசு செய்தேன். திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா வெற்றி பெறக்கூடிய வேட்பாளரோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ அல்ல என்பதினால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரைச்சிபாரிசு செய்தவர்களே வெற்றிக்கு உழைக்கவேண்டும் என வடமாகாணசபையின் துணை அவைத் தலைவரும், தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளைத் தலைவருமான அன்ரனி ஜெயநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

   ம.அன்ரனி ஜெயநாதன்,
   தலைவர்,
   இலங்கை தமிழ் அரசுக் கட்சி,
   முல்லை மாவட்டக் கிளை,
   10.07.2015.

   கௌரவ மாவை சேனாதிராஜா,
   தலைவர்,
   இலங்கைத் தமிழரசுக் கட்சி ,
   மாட்டின்வீதி,
   யாழ்ப்பாணம் .

   மதிப்பார்ந்த ஐயா,

   நேற்று 10.07.2015 இல் சில இணையத்தளங்களில் நான் இலங்கைத் தமிழ் அரசுக கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பலர் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்தனர். இது தவறான செய்தியாகும். இது விடயமாக விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும்.
   இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தந்தை செல்வாவினால் தமிழ் மக்களின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். இதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தலைவர் பிரபாகரனால் ஒற்றுமைப்படுத்தப்பட்ட அமைப்பு. நான் 1970 இல் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தொண்டனாக உள்ளேன். வழிப்போக்கனாக வந்து கட்சியில் சேர்ந்தவன் அல்ல, அல்லது 2009 இன் பின் கட்சியில் இணைந்தவனும் அல்ல, அல்லது, தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நியமனம் கிடைக்கிற போது கட்சியில் சேர்ந்தவனும் அல்ல என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

   வன்னித்தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் உட்பட்ட கடந்த 35 வருடங்களாக இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாது இருந்தது. கடந்த மாகாணசபைத்தேர்தல் 2013 நடைபெற்ற போது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பிரதிநிதித்துவத்தை எனது வெற்றியின் மூலம் பெற்றுக்கொடுத்தவன் நான். முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சியை புனரமைத்து உறுப்பினர்களைச் சேர்த்து இன்றும் கட்டுக்கோப்பாகவும் முல்லைமாவட்டத்தில் கட்சியின் வேட்பாளர் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வகையிலும் வைத்துள்ளேன் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகின்றேன்.

   தற்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியில் உள்கட்சி ஜனநயகம் இல்லை, வழிப்போக்கர்களாக வந்தவர்ககள் கட்சியை ஆக்கிரமித்துள்ளனர். கட்சியில் மூத்தவர்களுக்கு மதிப்பில்லை, கட்சியை வளர்ப்பதும் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்தும் பயனற்றதாகிவிட்டன. தேர்தல்காலங்களில் வேட்பாளர்களாக கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும், பிறகட்சியைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

   நடைபெற உள்ள பாராளுமன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பான தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவை எனது சிபாரிசின் பேரிலேயே வேட்பாளராக தெரிவு செய்ததாக கட்சித்தலைவர்கள் தமக்குத் தெரிவித்தாக பல புலம் பெயர் உறவுகளும் வன்னி மாவட்ட வாக்காளர் பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் எனக்குத் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு புறம்பானது. திருமதி சாந்தி ஸ்ரீஸகந்தராசா எமது கட்சியின் உறுப்பினர் அல்ல இவரை இலங்கைத்தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தலைவர் என்ற வகையில் நான் சிபார்சு செய்யவில்லை. என்பதையும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இணைப்பொருளாளரும் மத்திய குழு உறுப்பினரும் முல்லைமாவட்டகட்சியின் தலைவரும் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவருமான என்னுடன் மரியாதைக்கு கூட கலந்துரையாடாமல் கட்சியினால் எடுக்கப்பட்ட சர்வாதிகார முடிவு என்பதையும் அறியத்தருகிறேன்.

   நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நில அளவையாளர் திரு. கனகையா அழகேந்திரன் வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு வேட்பாளர். இவரையே நான் சிபாரிசு செய்தேன். திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராசா வெற்றி பெறக்கூடிய வேட்பாளரோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ அல்ல என்பதினால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரைச்சிபாரிசு செய்தவர்களே வெற்றிக்கு உழைக்கவேண்டும்.

   “நன்றி”

   (ம.அன்ரனிஜெயநாதன்)
   தலைவர்
   இலங்கைத்தமிழரசுக்கட்சி
   முல்லைத்தீவு மாவட்டம் கிளை

   பிரதிகள் :-

   1. இராசம்பந்தன் தேசியத் தலைவர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
   2. செயலாளர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
   3. நிர்வாகச் செயலாளர் - இலங்கை தமிழ் அரசுக் கட்சி.http://www.pathivu.com/news/41545/57//d,article_full.aspx
  • By sudaravan
   இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

   யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது.

   7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
   இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன்(ஈபிஆர் எல் எப்) , க.அருந்தவபாலன், சிறிகாந்தா(ரெலோ), சித்தார்த்தன்(புளொட்) ,சிறீதரன் ஆகியோரின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் அனந்தியாக இருக்க மாட்டார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.10 வது நபர் யார் என்பதில் இழுபறி நிலவுகின்றது.

   இதனிடையே போனஸ் ஆசனங்களுக்காக தேசியப்பட்டியலில் பரிந்துரை செய்யப்படும் பெயர்களுக்கு மிகுந்த போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு நிலை பேராசிரியரும் பேரவை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் உபதலைவருமான பேரா.சிற்றம்பலம் அவர்களுக்கு தேசியப்பட்டிலில் இடமளிக்குமாறு மாவை சேனாதிராஜாவை கோரும் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது .

   பேரா.சிற்றம்பலம் அவர்கள் பல தடவை பாராளுமன்ற தேர்தலி்ல் களமிறங்க எண்ணியபோதும் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.அவருடைய வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தமையால் அவரை தமிழரசுக்கட்சி களமிறக்கியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் இம்முறை தேசியப்பட்டியலில் உள்வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

   பல்கலைக்கழக பேரவையில் அரசியல் தேவையில்லை என்றும் ஈபிடிபி  ஆட்கள் வந்துவிட்டனர் என்று குரல் கொடுத்து  விட்டு தமிழரசுக்கட்சியின் இணைத்தலைவரை பேரவையில் கொண்டு வந்து இப்போது  அவருக்கு தேசியப்பட்டியல் கோரும் கடிதம் பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளப்படுவது எந்தவகையில் நியாயம் என விமர்சனம் எழுந்துள்ளது.அவ்வாறு அவர் கோருவதாயின் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகுவதே நல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

   சுமந்திரன் சென்ற முறை தேசியப்பட்டியலில் உள்வந்து தற்போது நேரடியாக தேர்தலில் களமிறங்குகின்றார்.சுமந்திரனுக்காக வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் நுாற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் இது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் களமிறங்கும் கஜேந்திர குமாருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான நேரடிப்போட்டியாக அமைய உள்ளது.

   இதேவேளை அனந்தி அவர்கள் கூட்டமைப்பு போட்டியிட சந்தர்ப்பம் தராவிட்டால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடுவதாக தெரிவித்திருக்கின்றமை கூட்டமைப்பில் கோபத்தினை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரம் மக்கள் முன்னணி ஆதரவாளர்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது ஏனெனில் அனந்தி மக்கள் முன்னணியினை தனது இரண்டாவது தெரிவாக கொண்டிருப்பதாகவும் அதனை தனது பாராளுமன்ற கனவை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்ள நினைப்பதாகவும் அவர்கள் குறைப்படுகின்றனர்.

   அவருக்கு முன்னணி சந்தர்ப்பம் வழங்கினால் முன்னணியினை பாதிக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். http://www.pathivu.com/news/41315/57//d,article_full.aspx
  • By sudaravan
   எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு-தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட்டியே பிரதான களமாக திறக்கவுள்ளது.
   இத்தேர்தலில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் நேரடியாகவும் போட்டியிடவுள்ளனர்.
   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே போட்டியிடவுள்ளனர்.
   நடந்து முடிந்த தேர்தல்களினில் கூட்டமைப்பு- ஈபிடிபி போட்டி நிலவிய போதும் இம்முறை அது கூட்டமைப்பு - தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட்டியாக பரிணாமம் பெற்றுள்ளது.http://www.pathivu.com/news/41310/57//d,article_full.aspx
 • Topics

 • Posts

  • ஜே.ஆர். ஜெயவர்த்தனா கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை . 1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய நான்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் போட்டியிட்டார்கள். இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டனர். அவர்களுடைய புறக்கணிப்பு மிகதத் திவிரமாக இடம்பெற்றது. மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள்.  தேர்தற் புறக்கணிப்பு 98% வெற்றிபெற்றது. இதைத்தெடர்ந்து அப்போதைய ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடைய அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தது. தமிழ் பேசும் மக்கள் நாடாளுமன்ற மிதவாத அரசியற் தலைமையை நிராகரித்து தமிழ் தேசியவாதத்தை முழுமையாக நேசிக்கின்ற ஓர் தலைமைத்துவத்தை தெரிந்தெடுத்தமை சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவே இருந்தது. இதனால் ஜே.ஆர். ஜெயவர்த்தனா கறுப்புக் குடைகளைக் கண்டு மிரளும் கட்டாக்காலி மாடுகளைப் போல மிரண்டார்.   தனது படைகளைக் கட்டவிழ்த்துவிட அவர்கள் கந்தர்மடம் பகுதிகளில் வீடுகளை எரித்தனர். பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் ஓர் பதட்டமான சூழ்நிலை உருவாகியது. இந்தச் சம்பவங்கள் விரிவுபெற்று வவுனியாவிற்கும் பரவியது. அங்கும் கடைகள் எரிக்கப்பட்டன. இது பின்னர் திருகோணமலைக்கும் பரவியது. 1983ம் ஆண்டு யூன் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் திருமலையில் எங்கோ ஒரு தமிழ்க் கிராமத்தில் தமிழ் மகன் சிங்களவரால் வெட்டிப் படுகொலை செய்யப்படுகின்ற நிகழ்ச்சி மிகவும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. இந்நிலையில் திருகோணமலைப் படுகொலைக்கு எதிராக 1983ஆம் ஆண்டு யூலை மாதம் 01ம் திகதி தமிழீழ விடுதலை அணி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்களால் கடையடைப்பு முழு அளவில் நடத்தப்பட்டன. இந்தக் கடையடைப்பு நடைபெற்ற தினத்தன்று மாலை இரண்டு  மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த யாழ்தேவி தொடருந்து கோண்டாவிலில் வைத்து சில தீவிரப் போக்குடைய இளைஞர்களால் தீ மூட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தக் கதவடைப்பை ஒழுங்குபடுத்திய வைத்திய கலாநிதி எஸ்.ஏ.தர்மலிங்கம் அவர்களும் சுதந்திரன் நாளேட்டின் ஆசிரியர் கோவை மகேசன் அவர்களும் யாழ்ப்பாணம் காவற்றுறையினராற் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் இருவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சுதந்திரன் தமிழ் நாளேடும் மற்றும் சற்றடே றிவியூ (Saturday Review) ஆங்கில நாளேடும் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டன. அந்த அச்சகங்கள் சீல் வைத்துப் பூட்டப்பட்டன. அதே ஆண்டு யூலை மாதம் இருபத்து மூன்றாம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றின்போது பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடைய அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடாக தீவிரமாகப் பரப்புரை செய்தது. தமிழ்ப் புலிகள் பதின்மூன்று சிங்கள பௌத்த இராணுவத்தினரை யாழ்ப்பாணத்தில் கொன்று விட்டார்கள் என ஜே.ஆர் இனவாதப் பரப்புரையைத் தூண்டிவிட்டார். இறந்த இராணுவத்தினரது உடல்களை யாழ்ப்பாணத்திலேயே அடக்கம் செய்துவிட இராணுவத்தினர் விரும்பியபோதும் அப்போதைய வர்த்தக அமைச்சர் அத்துலத் முதலியும் ஜே.ஆரும் அந்தப் பதின்மூன்று இராணுவத்தினரதும் உடல்களை கொழும்புக்கு எடுத்து வந்து சிங்கள மக்கள் மத்தியில் காட்சிப்படுத்திய பின்னர் பொறளை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்ய விரும்பினார்கள். இறந்த பதின்மூன்று இராணுவ சிப்பாய்களையும் கனத்தையில் அடக்கம் செய்யப்படும் என்று ஜே.ஆர் அரசு மிகப்பெரும் அளவில் விளம்பரப்படுத்தியதால் கனத்தையில் பல ஆயிரக்கணக்கான சிங்கள இனவாதிகள் குழுமினார்கள். இருபத்துநான்காம் திகதி மாலையே பொறளையில் இருந்த சைவ உணவகம் ஒன்று தாக்கப்பட்டது. அன்று இரவு இக்கலவரம் மருதானை, கொட்டாஞ்சேனை, வத்தளை, நீர்கொழும்பு எனப் பரவியது. மறுநாள் யூலை இருபத்தைந்தாம் திகதி இச் சம்பவம் மேலும் விசாலிப்படைந்தது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, தெகிவளை, மொறட்டுவ, பாணந்துறை என கொழும்பின் தமிழர்கள் வாழும் எல்லாப் பகுதிகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் இரண்டு நாட்களில் கொழும்பில் வாழ்ந்த பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இதனால் பம்பலப்பிட்டி சென். பீற்றர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி எனப் பல பாடசாலைகளில் இலட்சக் கணக்கான தமிழர்களுக்காக அகதி முகாம்கள் திறக்கப்பட்டன. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்.   இக்கால கட்டத்தில் வெலிக்கடையில் ரெலோ இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, தேவன், ஜெகன் மற்றும் வவுனியா காந்திய இயக்கத்தைச் சேர்ந்த வைத்தியர் இராஜசுந்தரம் போன்றவர்களும் இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனர். குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது ஆற்றிய உரை நாளேடுகளில் பிரசுரிக்கப்பட்டபோது, அது ஜனாதிபதி ஜே.ஆர், அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்கா, சிறில் மத்தியூ போன்ற அமைச்சர்களுக்குப் பெரும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் கிளறியது. இதனால் சிறைச்சாலையில் வைத்து இவர்களது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டமும் போடப்பட்டது. இதற்கென கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட கொலைகாரப்படை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலைகாரப் படைக்குத் தாய்லாந்து விமானத்தைக் கடத்திச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சேபால ஏக்கநாயக்கா தலைமை தாங்கினார். யூலை மாதம் இருபத்தைந்தாம் திகதி காலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு காமினி திசநாயக்காவும், அத்துலத்முதலியும் சென்று தமிழ்ச் சிறைக் கைதிகளைக் கொள்ளுமாறு பச்சைக்கொடி காட்டிவிட்டுச் சென்றார்கள். அன்று மாலையே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட முப்பத்தைந்து தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றவோ, கொலை வெறியர்களான சிங்களக் கைதிகளைத் தடுக்கவோ சிறைச்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக யூலை மாதம் இருபத்தேழாம் திகதி மேலும் பதினேழு சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். மொத்தமாக இரு தினங்களிலும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐம்பத்திரண்டு சிறைக்ககைதிகள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பாக யூலை மாதம் இருபத்துநான்காம் திகதி திருநெல்வேலி, கந்தர்மடம் போன்ற இடங்களில் ஐம்பத்தொரு அப்பாவிப் பொதுமக்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் கல்விமான் கலா.பரமேஸ்வரன், ; அவரது மாமனார் சரவணமுத்து ஆகியோரும் உள்ளடங்குவர். இதைவிட நாடுபூராகவும் வெடித்த இச் சம்பவத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரக் கணக்கான தமிழர்கள் காடையர்களுடைய தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள், கட்டடங்கள், வணிக நிலையங்கள் திரைப்பட அரங்குகள் தரைமட்டமாக்கப்பட்டன. தமிழர் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொழும்பில் பிரபல தொழிலதிபர் வை.ஏ.எஸ்.ஞானம், மகாராஜா நிறுவனம், கே.குணரட்ணம் எனப் பல நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின. ரேப்பியா என்ற நிறுவனம் இச் சம்பவத்தில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாவிற்கு மேல் தமிழர்களுடைய சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டதென மதிப்பீடு செய்தது. இந்தச் சம்பவத்தின் போது ஜே.ஆர் ஜெயவர்த்தனா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1983ஆம் ஆண்டு யூலை மாதம் இருபத்தேழாம் திகதி ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய ஜே.ஆர் பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு எந்தவித அனுதாபமும் தெரிவிக்காமல் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அசம்பாவிதங்கள் சிங்கள மக்களது இயல்பான மன உணர்வுகள் எனக் கருத்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து யூலை மாதம் இருபத்தொன்பதாம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் கொழும்புக்கு வந்துவிட்டார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அன்றைய தினம் மேலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கல்விமான் அருமைநாயகம் என்பவர் நுகேகொடையில் தனது வீட்டைப் பார்க்கப் போனபோது வெட்டிக் கொல்லப்பட்டார். கொழும்புப் புறக்கோட்டை காஸ்வேக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை செய்த தமிழ் இளைஞர்கள் பாதுகாப்புத் தேடி அந்நிறுவனத்தின் கூரைமீது இருந்தபோது அவ்வழியாக வந்த விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத ஜே.ஆர்ஜெயவர்த்தனாவுடைய அரசு 1983ஆம் ஆண்டு ஆவணி மாதம் நான்காம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்காக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்படி தனிநாடு கேட்டுப் போராடுதல், அதற்கு ஊக்கமளித்தல், உதவி செய்தல் என்பன போன்ற விடயங்கள் பாரதூரமான தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.             மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.     https://www.thaarakam.com/news/5f86d94e-0b61-4729-9348-efa3b31860d6  
  • 27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர். புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக  தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975  ஜூலை  27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பா  கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.   இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில்  தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.   முக்கிய குறிப்பு :   1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு  என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். 1974ஆம் ஆண்டு சனவரி பத்தாம் திகதி இறுதி நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள். மக்கள் உணர்வோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர்.  இறுதியாகத் தமிழகப் பேராசிரியர் “நைனா முகமது” பேசிக் கொண்டிருக்கும் போது    சிங்கள பேரினவாத அரசு மற்றும் அல்பிரட் துரையப்பா   இணைந்து பிறப்பித்த உத்தரவில் யாழ். உதவி காவற்துறைமா அதிபர் சந்திரசேகரா தலைமையில்  மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள். இச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர்.  அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவிக் காவற்றுறை அத்தியட்சகர்  சந்திரசேகரா பின்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.   https://www.thaarakam.com/news/54d4fff0-cdc6-4c33-afb0-7252b59bf091
  • ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவருக்கும் ஆகஸ்ட் 9 வரை விளக்க மறியல் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, அவரின் தந்தை மற்றும் சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் 48 மணி நேரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்பின்னர் இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களை 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான்ன் மரணம் தொடர்பில் மற்றுமொரு பிரேத பரிசோதனையை நடத்துமாறும், அதற்காக புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டியெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://www.samakalam.com/ரிஷாட்டின்-மனைவி-உள்ளிட்/    
  • பதினாறும் நிறயாத பருவ மங்கை Yanai Paagan T. M. Soundararajan K. V. Mahadevan       பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை பதினாறும் நிறையாத பருவ மங்கை
  • சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.