-
Tell a friend
-
Topics
-
2
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
எனக்கும் இப்போ ஆர்வமில்லை. அதனால்தான் அந்த திரிக்கு ஒரு சிரிப்பு குறியை பதிலாக போட்டு கடந்தேன். நீங்கள் திணிப்பதாக நான் சொல்லவில்லை ஆனால் 10,000 வருடத்துக்கு முன் மனிதர் உழவு, நகர கட்டமைப்பை கட்டியதாக பலர் எழுதி உள்ளார்கள் ஆனால் அவை எல்லாம் 1+1=11 என்பதை போன்ற கதைகளே. மூலிகை பெற்றோல் ஒரு சின்ன உதாரணம். ராமர் பிள்ளை சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவர் காட்டிய செய்முறையில் அத்தனை ஓட்டைகள், மூலிகையில் பெற்றோலியம் ஜெல்லை கலந்து பித்தலாட்டம். ஆனால சில பத்து வருடங்களின் பின் எதனோல், பையோ பியுயல் ஏற்று கொள்ள பட்டது. கொன்செப்ட் ஒன்றுதான். ஆனால் நிறுவும் முறையில்தான் எல்லாம் தங்கியுள்ளது. -
By goshan_che · Posted
பகிர்வுக்கு நன்றி. கிறீஸ்தவருக்கு முதலே முஸ்லிம்கள் அவுஸ்ரேலியா வந்து விட்டார்கள் என்றும் மக்கசார் முஸ்லிம்களுடன் அபொர்ஜினிகள் திருமண பந்தம் வைத்தார்கள் எனவும் அண்மையில் வாசித்தேன். ஆனால் bookmark பண்ணவில்லை🤦♂️. நான் ஒரு ரயில் பிரியன். இல்லை வெறியன். உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். உங்கள் ஊரில் GAN என்று ஒரு ரெயில் ஓடுகிறது அடிலேட்-அலிஸ் ஸ்பிரிங்ஸ்-டார்வின்னை இணைப்பது. அதன் பெயரும் Afghan என்பதன் சுருக்கம்தானாம். வெள்ளையர்கள் வந்த பின் camel caravans மூலம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பொருட்களை நகர்த்தும் பொருட்டு பல ஆப்கானிகள் தருவிக்கபட்டார்களாம். பின்னர் அந்த பாதை வழியே ஓடிய ரயிலும் அதே பெயரில் ஓடுகிறதாம். -
By யாயினி · பதியப்பட்டது
தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு கொவிட்-19 கண்டி தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகவில்லை என தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தவும் கோவிலுக்குள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதை உறுதி செய்யவும் கண்டி பொலிஸ் பிரிவின் மேலதிக அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழும் தியவதன நிலமேயின் கடுமையான மேற்பார்வையிலும் நாளாந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. இதேவேளை தலதா மாளிகையில் பாதுகாப்பு வழங்கவென நிறுத்தப்பட்டிருந்த 21 பொலிஸார் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 237 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். Thinakkural.lk -
By Maruthankerny · Posted
இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான் நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது. ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும் இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம் அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில் ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன். நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின் அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்? ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும் கேட்க்க முடியாது போகிறது? ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும் மூலிகை பெட்ரோல் மாதிரி பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள் -
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007 இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம் கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர். சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர். இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது. மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.