Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பேரிளம் பெண்களை' பார்த்தால் வழிவது ஏன்?


Recommended Posts

* "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு

வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர்.

மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர்.

"சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் குரங்குகளுடன் தான் "செக்ஸ்' வைக்க ஆலாய் பறக்கின்றன என்பதை கண்டு பிடித்தபோது, நிபுணர்கள் வியந்தனர்.

அந்தவகையில் "குரங்கில் இருந்து வந்தவன் மனிதன்' என்ற மரபியல் ஆதார அடிப்படையில் பார்த்தால், மனிதர்களில் சிலருக்கு, தங்களை விட வயது அதிகமான பெண்களுடன் "செக்ஸ்' விஷயங்களை பரிமாறிக் கொள்வதும், அவர்களுடன் நெருக்கமாக பழக எண்ணும் போக்கும் ஏற்பட, மரபியல் காரணம் இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து மார்ட்டின் முல்லர் கூறியதாவது: நாங்கள் எங்கள் ஆய்வுக்காக தொடர்ந்து சிம்பன்சி குரங்குகளின் குணங்களை ஆராய்ந்தோம். அப்போது, சில ஆண் சிம்பன்சி குரங்குகள், தங்களை விட வயது குறைவான பெண் குரங்குகளை அணுகுவதில்லை. வயது அதிகமான பெண் குரங்குகளை தான் தேடித்தேடி போய், "செக்ஸ்' நோட்டம் விட்டதை அறிய முடிந்தது.

தங்களை விட வயது குறைந்த பெண் சிம்பன்சி குரங்குகளை, இந்த ஆண் குரங்குகள் கண்டு கொள்ளவே இல்லை. இது தான் அவற்றின் மரபணு குணங்களை காட்டியது. அதிலும், சில ஆண் குரங்குகள், வெட்கப்படாமல் (?) தங்கள் ஆண் உறுப்புகளை வேறு காட்டி, தங்களை விட வயது அதிகமான பெண் குரங்குகளை ஈர்க்க பிரயத்னப்படுவதையும் நாங்கள் காண முடிந்தது.

மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளதால், செக்ஸ் விஷயங்களில் என்ன தான் வெளிப்படையாக இருக்க நினைத்தாலும், சில விஷயங்களில் வெட்கப்படத் தான் செய்ய நேரிடும். ஆனால், இப்படி பேரிளம் பெண்களுடன் "செக்ஸ்' நட்பு கொள்ளும் போது, அவர்கள் மீதான ஈர்ப்பு அதிகமாகிறது. இது தவறு என்று அவர்கள் மனதுக்கு தெரிந்தாலும், மரபணு காரணமாக, அவர்களால் அதை தடுக்கவோ, தவறு என்று பெரிதாக உணரவோ முடியவில்லை.

ஆண்களின் பரிணாம வளர்ச்சியை பார்க்கும் போது, சிம்பன்சிக்களுடன் மனிதன் பல வகையில் ஒத்துப்போகிறான். அந்த வகையில் "செக்ஸ்' விஷயத்திலும், இப்படிப்பட்ட குணங்கள் இருப்பதற்கு மரபணு தான் காரணம் என்பது தெரியவந்தது. இப்போது சிம்பன்சிக்களை வைத்து ஆராய்ந்து கண்டுபிடித்தாலும், விரைவில் மனிதர்களிடம் உள்ள இது தொடர்பான குணங்களை ஆராய விரும்பியுள்ளோம்.

இவ்வாறு மார்ட்டின் முல்லர் கூறினார்.

Thanks:Dinamalar.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗 இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂 பாருங்கள், நேசக்கரம் நடத்தும், உங்கள் சமூக பொறுப்பு நிலைப்பாடு, உங்கள் இந்த தேவையில்லாத கருத்துக்களால் சிக்கலுக்கு உள்ளாகும் என்று முன்பு, உரிமையுடன் சொல்லி இருந்தேன். மேலே முல்லைநிலவன் கேள்வியினை நீங்களே கேட்டு பெற்றுக் கொண்டீர்கள் என்று கருதுகிறேன். வருந்தத்தக்கது. 😰
  • பதிலை நீங்களே எழுதி விட்டு எப்படி என்கிறீர்களே? வை.கோ இந்திய பா.உ! அவர் ஒரு கடிதம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கலாம்! அதனால் தான் அசைலம் கிடைத்தது என்பதை வை.கோவே மைக் போட்டுச் சொல்ல மாட்டார் - ஏனெனில் அவருக்கே தன் கடிதம் பல ஆவணங்களில் ஒன்றெனத் தெரியும்! சரி, தடா சந்திரசேகர் கொடுத்த ஆவணங்களில் சீமானின் கடிதமும் இருந்ததா? அகதிகள் உயர்ஸ்தானிகரிடம் கூட்டிச் செல்வது வேறு எவரும் செய்யக் கூடியதல்லவா? 
  • இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும்.  பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு. நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர். அது எப்படி நடந்தது? 🤔 *** அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று. அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல். உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது.  நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே...
  • நெடுக்கர், mansplaining தேவையில்லை. தமிழில் சீமான் சொன்னதை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் தான் இங்கே இருக்கிறார்கள்.  மேற்கு நாடுகளில் "புலிகளால் ஆபத்து" என்று அசைலம் கேட்பவர் சொன்னால் ஆதாரம் காட்ட வேண்டிய தேவை குறைவு. ஏனெனில் அவர்கள்  பல மேற்கு நாடுகளில் தடை செய்யப் பட்ட இயக்கம். அரசினால் ஆபத்தென்றால் "கைது செய்த பதிவிருக்கிறதா?" எனச் சில நாடுகளில் கேட்டிருக்கக் கூடும்! எனவே, பல தேசிய வீரர்களே புலிகளால் ஆபத்து எனச் சொல்லி அசைலம் எடுத்தனர் - இது இரகசியமல்ல! இப்படி இருக்கையில் டக்கி கொடுக்கும் கடிதம் ஏன் அவசியம்? டக்கிக்கு மேற்கு நாடுகளில் அவ்வளவு மரியாதை என்கிறீர்களா? 😂 யார் சொன்னாலும் ஒரு புழுகை, பொய்யை பூசிப் பூசி மினுங்க வைக்க வேண்டிய அவசியமேதுமில்லை!
  • அந்தத் தலைவர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சொல்கிறார். இங்கே தமிழ் தேசியம், தமிழர் நலனை குறித்து கருத்துக்களை கூறி, ஊழல் சுமந்த சம்பந்தமாக குரல் கொடுப்போர் அடக்கி ஒடுக்கப்பட்டு அல்லது ஒடுக்கப்பட்ட கொண்டிருந்தால்; அவர்கள் உங்களை போல் அயல்நாட்டில் சென்று அகதி அந்தஸ்து கோருவார்கள்.  அதே துணியில் அங்கே இந்தியாவில் அடைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகள், தமிழ்நாட்டு அகதி முகாமை விட்டு வெளியேறி அகதித் தஞ்சம் கேட்டாள் அவர்களுக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உறுதிப்படுத்தி கடிதம் அல்ல காட்சி அளிப்பேன் என உரத்துச் சொல்கிறார். அவரது வாதம் தமிழ்நாட்டில் தமிழருக்கு சட்டத்தின் பால் நடக்கின்ற அநியாயங்களும், நியாயம் சரிவரக் கிடைக்கவில்லை என்பதனை இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்துகின்றார். அவர்களினால் அதனை கையாள முடியவில்லை எனில் அவர்களின் குரல் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து ஒலிக்கும் என்பதனை கூறுகின்றார். அதனோடு அவர்களுடைய உயிருக்கும் அயல்நாட்டில் உத்தரவாதம் உண்டு என்பதனை சுட்டிக்காட்டுகின்றார். நீங்கள் விடாத புலுடா வா அவர் விட போகின்றார், நீங்கள் அப்படி அல்ல ஆகாசப் புளுகு....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.