Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது.
 
ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டியாதாகி விட, அம்மாவின் கோவிலுக்குச் செல்லும் ஆசையும் குறைந்துவிட்டது.
 
பொதுவாக அப்பாவுக்கு உந்தப் பூசை புனஸ்காரங்களில் நம்பிக்கையே இல்லை. அதற்காக அம்மாவும் அப்பாவும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்றில்லை. வீட்டில் வைத்திருக்கும் சுவாமிப் படத்தின் முன் தினமும் காலையும் மாலையும் விபூதி பூசிக் கும்பிடுவார்கள். அவர்களைப் பார்த்து நாமும் அப்படியே பழகிவிட்டோம்.
என்னைப் நண்பர்கள் பலதடவை கேட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா என. எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கோவிலுக்குப் போய் வணங்குவது தான் முடியவில்லை என்பேன். நான் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. எனக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறது என்றெல்லாம் எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வததோடு சரி. சரி அப்பாவின் விடயத்துக்கு வருகிறேன்.
அப்பா பிற்காலத்தில் தமிழ் பாடசாலைகளில் இருந்த ஈடுபாட்டைக் கூட எங்களில் காட்டவில்லை என்னும் குறை எம் எல்லோருக்குமே உண்டு. காலை எழுந்து தன் கடன்கள் முடித்து தன் மேசையில் அமர்ந்தால் நாள் முழுதும் ஏதாவது எழுதியபடி பள்ளி அலுவல் தான் பார்ப்பார். மாலையில் சிறிதுநேரம் தொலைக்காட்சியும் பார்ப்பதுண்டு.
 
அப்பாவுக்கு பேரப்பிள்ளைகள் என்றால் உயிர். ஆனால் அவர் இறப்பதற்கு ஓரிரு வாரங்கள் இருக்கும் போது அவர் கண்ணை மூடிப் படுத்திருப்பார். பெரிதாக யாருடனும் கதைப்பதும் இல்லை. அவருக்கு ஏலாமல் இருக்கிறதாக்கும் என்று நாமும் அவருடன் கதைக்காமல் பார்த்துகொண்டு இருப்போம். அவர் பேரப்பிள்ளைகளைக் கூடத் தேடாதது மனவருத்தமாக இருந்தாலும் அவரின் தவத்தைக் கலைக்க மனம் வரவில்லை.
 
ஐயர் இரண்டு நாட்கள் பூசை செய்யவேண்டும் என்று கூற எனக்குக் கடுப்பானது. எதற்கு இரண்டு நாட்கள் ??வெளிநாடு என்றதும் எம்மை நான்றாகத்தான் இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இலங்கையில் ஒருநாள்தானே செய்வது என்று நான் பொரிய, அங்கு கீரிமலைக்குப் போய் துடக்குக் கழித்தவுடன் வீட்டைக் கழுவி எல்லாரும் சமைக்கத் தொடங்க மற்றவர்கள் வந்தபிறகு படைத்து தானம் குடுக்கிறது என்று என் தம்பி எனக்கு விளக்கம் கூற, ஏன் இங்கும் ஐயர் வந்து துடக்குக் கழிக்க நாம் சமைக்கலாம் தானே என்றேன்.

ஐயருக்கு நாள் முழுதும் எமது வீட்டில் நிக்கச் சரிவராது. அதுதான் இரண்டுநாள் வருவது என்றான். ஒருநாள் வருவதற்குக் காசு வாங்குவதில்லையா என்றேன். முதல் நாள் ஒரு நூறு யூரோவும் அடுத்த நாளுக்கு நூற்றைம்பது யூரோவும் தான் என்றான் தம்பி. நல்ல பிழைப்புத்தான் இவங்களுக்கு என்று முனுமுனுத்தபடி நான் நகர்ந்தேன்.

முதல் நாள் அந்தியோட்டிக் கிரியைக்கு பெரிதாக பொருட்கள் இல்லை மரக்கறிகள், வீபூதி, சந்தனம் போன்றவையும் ஒரு இருபது பொருட்களுடன் ஐயர் பூசை செய்து தீபம் காட்டி ஒரு மணித்தியாலத்துள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள எனது தம்பிமார் இருவரும் வேட்டிகட்டி பவ்வியமாக ஐயருக்கு முன் அமர்ந்திருக்க அவர் துடக்கைக் கழித்துவிட்டார்.

அதன்பின் எல்லோருக்கும் விபூதி சந்தனம் குங்குமம் வழங்கப்பட அம்மா வீபூதி வைத்துச் சந்தானம் வைத்து குங்குமம் வைக்கக் கையைக் கொண்டு போகத் தம்பி உடனே பின்னுக்கு இழுத்து வைக்கக் கூடாது என்று அம்மாவை உறுக்குவதுபோல் சொன்னான். எனக்குக் கோவம் வர ஏன் வைக்கக் கூடாது என அவனை உறுக்க, பார்த்துக்கொண்டு நின்ற ஐயர் விடுங்கோ நிவேதா என்றவுடன் நானும் எதற்கு அவரின் முன்னால் என்று பேசாமல் சென்றுவிட்டேன்.

என்னுள்ளே கோபம் சுடர்விட்டு மேலெழுந்தது. ஐயர் போனபின் உடனேயே அம்மாவுக்குக் குங்குமத்தை வைத்துவிட்டு, அம்மா நீங்கள் விரும்பினால் பொட்டு வையுங்கள் என்றேன். அம்மாவுக்கு எது விருப்பமோ அதை செய்யட்டும். நீங்கள் யாரும் அம்மாவைக் கொமான்ட் செய்ய வேண்டாம் என மற்றவர்களுக்கும் கூறிவிட்டு அலுவலைப் பார்க்கத் தொடங்கினேன். மற்றச் சகோதரர்கள் என்னை  ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஆதரிக்காதது எனக்கு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது.
 
இத்தனைக்கும் என் தம்பி பத்து வயதில் எம்முடன் புலம்பெயர்ந்து வந்து ஐரோப்பியச் சூழலில் வளர்ந்தவன். அவனா இப்படி என என்னால் ஆச்சரியப்படாது இருக்க முடியவில்லை.
 
அடுத்த நாள் என்ன பொருட்கள் வேண்டும் ? எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டேன் தம்பியிடம். இந்தாங்கோ லிஸ்ட். எல்லாம் வாங்கிவிட்டேன். ஏதும் தவறிவிட்டதா என்று ஒருக்கா செக் செய்யுங்கள் என்று பொருட்கள் வைத்திருந்த அறைக்குக் கூட்டிப்போனான். லிஸ்டை விரித்துப் பார்த்த எனக்குத் தலை சுற்ற என்னடா ஐயர் ஒரு மாதத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம்  எழுதிவிட்டிருக்கிறாரா என்று கேட்க எதுவும் கூறாமலே தம்பி சென்றுவிட்டான். பாகற்காய் பயிற்றங்காய் தொடக்கம் அத்தனை மரக்கறிகள், தேங்காய்கள், மஞ்சள், எள்ளு இப்படி நீண்டுகொண்டே போனது பொருட்களின் எண்ணிக்கை. போதாததற்கு பாய், தலையணை, குடை, செருப்பு என இதெல்லாமா கொடுப்பார்கள் என்று நான் பொருட்களைச் சரிபார்த்து முடித்தேன்.
 
அடுத்தநாள் காலை ஏழுமணிக்கு நாம் எல்லாம் தயாராய் இருக்க ஐயர் முன்னே வர அவரின் பின்னால் ஒரு வயோதிக ஐயரும் அவரின் பின் இன்னும் ஒருவரும் வந்தார்கள். உவர் யார் என்று மூன்றாவதாக வந்தவரைக் காட்டிக் கேட்க, எம்மைக் காரில் கூட்டி வந்தவர் என்று ஐயர் சொல்லிவிட்டு தன் அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினார்.
 
முதலே ஐயர் எழுதியிருந்த அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தைக் கொண்டுவர ஐயர் அதற்குள் அரிசிமா, சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,பால், கருப்பு எள் என்பவற்றைப் போட்டுக் கலந்து குழைத்து அதை உருண்டைகளாகப் பிடிக்கிறார். கட்டாயம் இவ்வளவும் போடவேண்டுமோ ஐயா என ஒன்றும் தெரியாததுபோல் கேட்க்கிறேன். ஓம் இது பிதிர்களுக்குப் பிடித்தமானது என்று அவர் கூற அக்கா பேசாமல் இரேன் என்பதாய் என் மூத்த தம்பி என்னை  ஒரு பரிதாபப் பார்வை பார்க்கிறான். சரி எனக்கு என்ன என்பதுபோல் நான் அதன் பின் ஒன்றும் கதைக்கவில்லை.
 
நீங்கள் அப்பாவுக்காக மூன்று தானங்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஆத்மா சாந்திபெறும். முப்பது முக்கோடி தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மாட்டித்தான் தேவர்களாக நினைப்பார்கள். இங்கு மாடு இல்லையே. எந்தத் தடையுமின்றி அப்பாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்றபடி ஏகாதிஸ்டம், சமிண்டி, மாசியம் என்று ஏதேதோ எமக்கு விளங்காதது எல்லாம் ஐயர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் கூட்டிக்கொண்டு வந்த வயோதிகக் குருக்களையும் ஒரு துண்டை விரித்து இருத்தி இவர்தான் உங்கள் அப்பா என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்பாவுக்குச் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் அவருக்குச் செய்யுங்கள் என்றபடி மந்திரங்களைச் சொல்லி ஆரம்பித்தார்.

உங்கள் அப்பா நிட்சயமாய் சுவர்க்கத்துக்குத்தான் போவார். அவரை வடிவா வழியனுப்பி வையுங்கோ என்றுவிட்டு மரக்கறிகள் , அரிசி தானியங்கள் என்பவற்றைக் கொடுக்கச் சொல்லி, அப்பா சொர்க்கத்துக்குப் போகும் போது பசிக்கும் நேரம் சமைத்துச் சாப்பிட இது என்று அவற்றை அந்த வயோதிபரிடம் கொடுக்கச் சொல்ல தம்பி எடுத்து பவ்வியமாய்க் கொடுத்தான். சமைக்கப் பாத்திரம் வேணுமெல்லோ என்று என் மனதில் எழுந்த கேள்வியை என்னுள்ளேயே அமுக்கிவிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தன்.

அப்பா போட்டுக்கொண்டு போக வேட்டி சேட். அப்பாவுக்குக் குளிர்ந்தால் போர்க்க ஒரு  துணி. பாயும் தலையணையும் இரவில படுக்க. அடடா பெட்சீற்றை மறந்துவிட்டமே வாங்க என்றேன் நான். பரவாயில்லை என்றுவிட்டு ஐயர் தொடர்ந்தார். குடை ஒன்று வெயில் மழைக்குப் பிடிக்க. செருப்பு ஒருசோடி அப்பா சொர்க்கத்துக்குப் போற வழியில முள்ளுக் குத்தாமல் இருக்க என்றவுடன் என் வாய் என்னையறியாமல் சொர்க்கம் எண்டுறியள். பிறகு எப்பிடி கல்லு முள்ளு எல்லாம் அங்கே இருக்கும் என்று கேட்டுவிட்டது. அது அப்பிடித்தான் அம்மா நிவேதா என்றார் ஐயர். அம்மா திரும்பி பேசாமல் இரு என்றவுடன் வேறுவழியின்றி நான் பார்வையாளராக ஆனேன். 

Link to comment
Share on other sites

ம்ம்ம்... விளங்குது!  உங்கள் புண்ணியத்தால் ஐயர்மாரின் குடும்பம் ஒரு மாதம் சீவித்திருப்பினம். :) 

எழுதிய விதம் அருமை! ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த பிதேசத்தில் அரசுக்கு வரிகட்டாத பிழைப்பு ஐயர் பிழைப்பு.......இவ்வளவும் கொடுத்து ஐயரின்ட காலில் விழந்து கும்பிட வேணும் என்றும் சில சனம் அடம்பிடிக்கும்.....

ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

Link to comment
Share on other sites

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

புத்தனுக்கு ஏன் இந்தக் கொலை வெறி???:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்து கருத்தைப் பகிர்ந்த உறவுகள் மீனா, புத்தன், சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.

இந்தக் கதையை வாசித்துப் பலர் எதிர்மறைக் கருத்துக் கூறுவார்கள் என எண்ணினேன். இதுதான் இன்றைய யாழ் இணையத்தில் உள்ளோர்  நிலை.

புத்தன் கூறுவதில் உண்மை இருந்தாலும் நான் மனம் இல்லாமல் எழுதுவதில்லை. இனிமேல் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன் மீனா .

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

நாத்திகராய் இருக்கவேண்டியதில்லை அண்ணா. சில மூடத்தனமான எமாற்று வேலைகளையும் செய்கைகளையும் தான் மனம் ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

வர வர சுமேக்கு எழுத்தில் நாகரீகம் தெரியாமல் வருகுது என்பது உண்மை :shocked: வந்து நொண்டிச் சாட்டுச் சொல்லாமல் திருந்துங்கள் சகோதரி:grin:

கணவர் இறந்த பின் கறுப்புப் பொட்டுப் போடுபவர்களைத் தான் கண்டிருக்கிறேன். 

பொதுவாகப் பிராமணர் புடுங்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் புடுங்குவது தானே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது  போன்ற சந்தர்ப்பங்களில் 

கடமைக்கும்

பகுத்தறிவுக்கும் போட்டி வருவதுண்டு

அண்மையில் கூட அத்தாரின் துவசத்தில்

மருமகள் எல்லாவற்றையும் கொடுக்க

ஐயர் திருப்தியா என்று கேளுங்கோ என்று சொல்ல

அது பற்றி ஒன்றுமே தெரியாத எனது மருமக்கள் திருப்தியா ஐயா எனக்கேட்க

அவரும் திருப்தி என்று ஏதோ புரியாத மொழியில் ஏதோ எல்லாம் சொல்லிவிட்டு வாங்க

எனக்கு எதைப்பார்த்து திருப்தி என்றார்

பொருளையா பணத்தையா?

என வழமைப்படி சந்தேகம் எழ....

இப்படியே போகுது...

ஆனாலும் எனது இறப்புக்கு பின்னாலும்

எனது பிள்ளைகளும் என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக

இதைத்தொடரத்தான் போகிறார்கள் என்பது மட்டும் என்னையும் எனது மருமக்களையும் பார்த்ததில் புரிந்தது...

நல்லதொரு விடயத்தைத்தொட்ட சுமேக்கு நன்றிகள்

மீண்டும் மீண்டும் தம்பி அக்கா சிக்கலையும் அம்மாவையும் இழுக்காமல் இருத்தல் நன்று.

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

உங்கள் பாதுகாப்பு வேலி பொருந்தவில்லையே..

எப்பொழுதும் எளிய (வறுமை) மக்கள் இது போன்று செய்வதில்லையே:shocked:

(ஏதோ நம்மால முடிந்தது):grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

என்னையும் சேர்த்துத் தான் சொன்னது.

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

சரி மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணா.ஆனால் அன்றே எல்லாருக்கும் முன்னால வைத்து நான் சொல்லிவிட்டேன் நான் இறந்ததும் என் உடல் உறுப்புக்களை தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்குமாறும் எனக்கு எக்காரணம் கொண்டும் ஐயரைக் கூப்பிட்டு ஒன்றும் செய்யக் கூடாது என்றும்

நன்றி விசுகுஅண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

அதுதான் எல்லாம் கூகிளால வந்த வினை  :oO:

Link to comment
Share on other sites

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

நேரம் கிடைக்கும் போது

இவை பற்றி கொஞ்சம் விளக்கம் தரலாமே அண்ணா

எம் போன்றோர்களுக்கும்

எதிர்கால சந்ததிக்கும் பயன் தரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.