-
Topics
-
Posts
-
By ராசவன்னியன் · Posted
அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..! கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாரட்டத்தக்கது. பெண்ணென்றால் கேவலமா..? இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும். மரண தண்டையே சரியானது. -
By Maruthankerny · Posted
சுடவேண்டும் என்று சுட்டு இருக்கிறார்கள் பாலியல் வல்லுறவு ஒரு ஆணாதிக்க கொடூரம் என்றால் இது இன்னொரு போலீஸ் அராஜகம் ஒழுங்கான சட்டமுறைமை இல்லை என்பதே இதன் பொருள். இவர்களுக்காக வாதாட வந்து பொய்களை கூறும் இரண்டு வக்கீலை தூக்கி நீதிமன்றில் பொய்கூறிய குற்றத்துக்கு உள்ளே போட்டால் மீதி தானாக திருந்தும். -
By Maruthankerny · Posted
அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் ........... எங்கள் கல்வி அறிவென்ன சிந்தனா சக்தி என்ன உலக அரசியலில் புடுங்கிய ஆணிகள் என்ன முறிந்த பனைகளை முளைக்க பண்ணும் வித்துவான்கள் நாங்கள். அதெப்பிடி சீமான் எழுந்து தமிழரே தமிழர்தான் அழவேண்டும் என்று சொல்வது? -
ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார். தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. bbctamil
-
By ஈழப்பிரியன் · Posted
இதுவரை யாராவது பாராட்ட முன் வந்தார்களா? இதுவே எனது ஆதங்கம்.
-