1959இல் கல்யாணபரிசு என்றொரு திரைப்படம் வந்தது. ஶ்ரீதரின் திரைப்படம் அது. முக்கோணக் காதல்கதை. அந்த திரைபடத்தில் “என்னக்காவை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று காதலனிடம் காதலி கேட்பாள்.
அப்போ எல்லாம் சரோஜாதேவி இல்லைன்னா விஜயகுமாரி
“மதம் பிடித்ததில்லை”என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று.
புனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கங்கை நதியே கங்கை நதியே
பதட்டமேன்?
இலங்கை தமிழரின் இரத்தத்தை
என்னுள் இறங்கிக் கழுவவோ?
கூடா நட்பின் கேடாய் நானும்
பாவ நதியாய் மாழவோ?
கங்கை நதியே கங்கை நதியே
பதட்டமேன்?
.