Jump to content

ஶ்ரீரங்காவிற்கு தேசியப்பட்டியலில் இடம் கிடைக்குமா?


Recommended Posts

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைத்த 12 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யாருக்குப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது.

எனினும், மகிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரி தரப்பிற்கும் இடையே தேசியப்பட்டியல் குறித்து காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதற்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அது தேசிய அரசாங்கம் உருவாக்குவது தொடர்பிலான இணக்கப்பாடாகும்.

பொதுத் தேர்தலுக்கு அண்மித்திருந்த போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலளார் நீக்கப்பட்டு, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டமையினாலே அக் கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பில் சில பிரச்சினைகள் தோன்றியது.

எனினும் தற்போது அப் பிரச்சினைகள் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஒதுக்கப்பட்டுள்ள 12 தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவிற்கு தேசியப்பட்டியலில் இடம்கிடைக்குமா என்பது குறித்து இன்னமும் உறுதியான தீர்மானம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஜே.ஶ்ரீரங்காவிற்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படக்கூடாது என பொதுஜன ஐக்கிய முன்னணியில் உள்ளவர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்கு சேகரிக்காது, ஶ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணிக்கு, வாக்கு சேகரித்ததால் அவருக்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கத் தேவையில்லையென கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாதிட்டு வருகின்றனர்.

எனினும், உயர்மட்ட அழுத்தங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தேசியப்பட்டியலை பெறுவதற்கு முன்னாள் எம்.பி ஶ்ரீரங்கா கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

http://www.tamil.srilankamirror.com/news/item/4017-2015-08-20-05-59-59

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.