Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

ஓர் பேரிழப்பும் அதன் உளவியல் தாக்கமும் ... அஞ்சரன் முகடு சஞ்சிகை

Recommended Posts

வித்தியாவின் இழப்பு என்பதற்கு அப்பால் ,அதில் இருந்து குடும்பம் மீண்டு வருவதும் அல்லது அவள் நினைவில் மண்டு போவதுமாக ,நித்தம் நித்தம் கண்ணீரும் சோறுமாக அவள் பேச்சும் குறும்பும் விளையாட்டு சீண்டலும் என்று ஒரே ஆரவாரம் ,சிரிப்பொலியுடன் இருந்த வீடு இன்று பெரும் சோக முகில்களை தாங்கி இருண்டு எப்பொழும் விம்மி வெடிக்கும் கனத்த இதயத்துடன் ,அன்பான அவளது குரல் இல்லாது செவிகள் இனிமையான ஒலிகளை கூட கேட்க மறந்து கிடக்கிறது ...........

இவற்றுக்கு எல்லாம் அப்பால் அந்த கொடும் துயரின் பிடியின் இறுக்கத்தில் இருந்து தளர்வுகள் வரும் போது எல்லாம் ,சுற்றி உள்ள சமூகம் சரி இணையங்கள் ஊடகங்கள் என்று ஏதாவது ஒன்று ,அந்த ரண வேதனையை மீண்டும் பெரும் ஈட்டி கொண்டு தாக்குவது சொல்லனா துன்பம் ......
தங்களுக்குள் எழும் சுய இன்ப கேள்விகளை வித்தியா என்னும் பிஞ்சின் மீது எறிவதும் கானது என்று அவள் குடும்பம் மீதும் அள்ளி தெளிப்பது கூட ஒரு சில மனிதர்களுக்கு பேரின்பத்தின் திளைப்பை கொடுகிறது போலும் ......

பெற்ற பிள்ளையை பெரும் போரின் பிடியிலும்,பொருளாதார கஷ்டத்தின் மத்தியிலும் தன் நோய் இயலாமையை கூட பொருள் படுத்தாது கட்டைக்கனக்காக சைக்கிள் மிதித்து தந்தை பெரும் கனவுடன் வளர்த்த மகளை ஆளாகி தேவதைபோல் அலங்கரித்து ,தன் சுமைகளை ஒற்றை ஆளா அவள் சுமப்பாள் பாரு என்று செருக்குடன் வாழ்த் அந்த தாய் தந்தை மனநிலை எப்படி துடிக்கும் பதைக்கும் என்று கூட அறியாத சில மூடர்கள் அவர்களை பெரும்பாலும் மனிதர்களாகவே எடுக்க கூடாது ,பிள்ளையின் பிரிவின் ஊடாக உங்களுக்கு வீடு தந்ததாம் காசு தந்ததாம் என்று நலம் விசாரிக்கும் சாட்டில் விடுப்பு கேட்கும் தருணங்கள் உலகில் இவர்களும் வாழ்கிறார்கள் என்றே சாபிக்கும் ....
ஒரு நாள் பொழுது ஓயாது ஒலிக்கும் தொலைபேசியில் ,எவர் அன்பு விசாரிக்க எடுக்கிறார் ,எவர் வம்பு அளக்க எடுக்கிறார் ,எவர் வழக்கின் போக்கை கேட்க எடுக்கிறார் என்று குழம்பியே தொலைபேசியை கையில் எடுக்க வேண்டிய ஒரு பதட்டமான மன சூழலை உருவாக்கி விடுகிறது இந்த நல்ல மனிதர்கள் வேஷம் போடும் அயோக்கியர்கள் கேள்விகள் .........

சங்கங்கள் ,அமைப்புகள் ,நிறுவனங்கள் எல்லாம் உணர்ச்சி பெருக்கில் வித்தியா குடும்பத்துக்கு உதவி செய்கிறோம் என்று அவளின் இறுதி நாள்களில் ஒலிவாங்கி முன் ஓலம் இட்டுவிட்டு போய் விட்டார்கள் .....
அவர்களின் ஓலங்களில் சிக்கி தவிப்பது என்னமோ அவளின் குடும்பமே ,ஊருக்கும் பேருக்கும் புகழுக்கும் வசித்து விட்டு போனவர்களுக்கு தெரியாது ,சுற்றி இருந்து விடுப்பு பார்க்கும் சமூகம் சீட்டு கணக்கு போல் இதை எழுதி வைக்கும் அல்லது மனப்பாடம் செய்யும் என்று .......

அங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,இங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,அவர் கொடுத்ததாம் இல்லை இவரும் சேர்த்து கொடுத்ததாம் கிட்டத்தட்ட நல்ல காசு வந்திருக்கும் என்று பேசும் ,மனிதர்களாக உலாவும் விஷ ஜந்துக்கள் அறியமாட்டார் அவர்கள் நாளை என்ன சமைப்பார்கள் என்று .......

நித்தம் அவள் பிரிவு கொடுக்கும் வேதனையை விட இந்த பரிகசிக்கும் மனிதர்கள் கொடுக்கும் வலி மிக கொடியது ,வித்தியா குடும்பம் அன்றும் இன்றும் இருக்கும் நிலை ஒன்றுதான் மறுத்தால் இப்பொழுது வித்தியா இல்லை என்பதே தவிர மற்றும்படி அவர்களின் வாழ்க்கை சம ஓட்டமே ,யாழில் ஒரு வாடகை வீட்டுக்கு கூட சிரமப்படும் நிலையில் இருந்துகொண்டு வந்த லட்சங்களை என்ன செய்வார்கள் இவர்கள் என்று பின்னாடியே சுற்றும் பேய்களை என்னவென்று சொல்வது ......

வீடுதரலாம் என்று சொல்பவர்கள் நேரில் போனால் ,ஓ நீங்க வித்தியா குடும்பமா பொலிஸ் கேஸ் விசாரணை என்று ஆக்கள் அடிக்கடி வந்து போவீனம் அதாலால் உங்களுக்கு வீடு தருவது எங்களுக்கு கடினம் என்று சொல்லும் போதும் நாம் இவர்களை நினைத்து கவலை கொள்வதா இல்லை வித்தியாவை நினைத்து கண்ணீர் விடுவதா அதன் மன அழுத்தம் உளைச்சல் எத்தகையது .....
நீதியை கேட்கும் கேட்க போராடும் அல்லது போராடுறம் என்று சொல்பவர்கள் முதலில் ,சம தர்மம் ஊடக தர்மம் கொண்டாவது நீதிக்கு வாய்ப்பு கொடுங்கள் ,நீங்கள் போடும் புகழ் தேடிய வெளிச்சத்தில் வித்தியா என்னும் மெல்லிய ஒளி தெரியாமல் போய் விடும் மனிதநேயத்தின் பெருமான்களே ....

நீங்கலாக வந்து கைகளை கொடுத்து விட்டு ,இதில் எனக்கு எந்த இலாபமும் வாராது எதுக்கு மினக்கேடுவான் என்று நினைத்து ,பொய்களை பலிகளை உதிர்த்து விட்டு ,உங்கள் சித்து விளையாட்டுகளை காட்டி விட்டு நீங்கள் போய் விடுவீர்கள் அடுத்த வருமானம் நோக்கி ஆனால் நாம் அதே திண்ணையில் இருந்து நீங்கள் எங்களுக்கு உதவி என்னும் பெயரில் பெரும் உபாதை கொடுத்ததை நாம் யாரிடம் சொல்லி அழுவோம் ...

ஆகவே மன அழுத்தத்தின் உச்சிக்கு செல்லும் வேளைகளில் ,குற்றம் இழைத்தவர்களை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்த வீம்பு பேசி விசரை கிளப்பும் மூதேவிகளை கொன்று போட்டால் என்ன என்று மனம் சிலவேளை சந்நிதம் ஆடுவது தவிர்க்க முடிவதில்லை ........

கண்களில் கண்ணீரும் இன்றி இருக்கும் அவர்களை விட்டு விடுங்கள், உங்கள் உதவிகள் என்னும் முள்கள் கொண்டு கீறி கிழிக்காது ,சமூக நீதிகளே.

 

11165288_443420022485434_4530665943597037025_n.jpg

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் அஞ்சரன்.

வணக்கம்  அண்ணே ...

 

நன்றி வருகைதந்த  அனைவருக்கும் tw_blush:

Share this post


Link to post
Share on other sites

ஒருவருக்கு இழப்புக்களால்  ஏற்படும்  உளவியல் தாக்கங்களும் தொடரும் விரக்தி நிலையும் மற்றவர்களுக்குத் தெரியாது.அவை சடங்களாகவே உணரப்படுகின்றன. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மனிதப் பண்பு.
பல இடங்களில் அது தமிழர்களிடம் இல்லாமற் போய் விடுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

ஒருவருக்கு இழப்புக்களால்  ஏற்படும்  உளவியல் தாக்கங்களும் தொடரும் விரக்தி நிலையும் மற்றவர்களுக்குத் தெரியாது.அவை சடங்களாகவே உணரப்படுகின்றன. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மனிதப் பண்பு.
பல இடங்களில் அது தமிழர்களிடம் இல்லாமற் போய் விடுகின்றது.

நன்றி வாத்தியார் வருகை தந்தமைக்கு. ...பக்கத்து வீட்டுக்காரனே அப்படி இருக்கும் போது வெளியே எப்படி பேசுவர் ?

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான கருத்து.
    • க.விஜயரெத்தினம் “சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார்.  திகிலிவெட்டையில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியை அது இழந்து வந்துவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக இருப்பும் பொருளாதார பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களுக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தொடர்ந்தும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பது இவர்களின் வாடிக்கையாக உள்ளது. “இதனைமாற்றவேண்டும். அப்போதுதான், கிழக்கு மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/போர்குற்றம்-பற்றி-பேசுவதற்கு-த-தே-கூவுக்கு-தகுதியில்லை/73-240938
    • ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம் ரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.  இன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில்,  ரயில் கடவையை  கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.  சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.  பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது. -எம்.றொசாந்த் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ரயல-கடவய-மறதத-யழல-ஆரபபடடம/71-240990
    • கோத்தாபயவின் பிரஜாவுரிமை விவகாரம்: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்யுமாறு கோரி, காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் தேநுவர ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 4 ஆம் திகதி குறித்த மனு நிராகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து தாம் கோரியிருந்த கட்டளையை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.  https://www.virakesari.lk/article/68902