Jump to content

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்


Recommended Posts

  • Replies 117
  • Created
  • Last Reply

நல்ல விடயம் தானே கனக்க பெண்கள் வருவார்கள் ஆண்களும் வருவார்கள்

போன் நம்பரும் தாருவார்கள் வாங்கி இரவில் படுக்கும் போது அப்பா அம்மாக்கு தெரியாம பேசலாம்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் பாடலாம் பாடாமலும் விடலாம்.

நீங்க காட்டிலிருந்து வெளியே வாறதுக்குத்தான் அவங்கள் பாடப்போறங்களாம் எண்டு செய்தி சொல்லுது

Link to comment
Share on other sites

வெண்புறா அமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வா :huh:

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறா அமைப்பினால் நடாத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி இது.

Link to comment
Share on other sites

:huh: :angry: இது இப்ப ரெம்ப முக்கியமா? கொஞ்ச நாளா இப்படி எதுவும் இல்லாம இருந்தது. திருந்திட்டினம் என்று பார்த்தா.....? மறுபடி வேதாளம் முருக்க மரம் ஏறுது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதில் என்ன தவறு உள்ளது திருந்துவதற்கு...?

Link to comment
Share on other sites

இது தொடர்பாய் ஒரு பேப்பரில் வந்திருந்த வாசகர்கடிதமொன்று (01/12/2006)

தைப்பொங்கலுக்கு இன்னிசை நிகழ்ச்சி ஒண்டு நடக்கப் போகிறதாம். கறோ பிரதேசத்தில வெண்புறா அதை நடத்துகிறதாம். எனக்கு விளங்கவில்லை ஏன் அதை இப்போ நடத்துகிறார்கள். யாழில எங்கட சனம் சாப்பிட வழியில்லாமல் இருக்குது இங்க என்னத்துக்கு இப்பிடியொரு களியாட்டம். சத்தியமாச் சொல்லுறன் எனக்கு சினிமாப் பாட்டு எண்டால் உயிர். ஆனா இந்த நேரத்தில அதுக்கு என்ன அவசரம். கலைஞர்களை மதிக்கிறேன் அவர்களில் எந்த விதமான வருத்தமும் இல்லை. ஆனால் இங்க இருக்கிற ஆக்களுக்கு அப்படி என்ன பிரச்சனை. யார் அழுதது இன்னிசை நிகழ்ச்சி வையுங்கோ எண்டு?.

சனம் இப்பதான் தலைவரின்ர உரையால கொஞ்சம் கூடிய அக்கறையோட ஊர் விசயங்களில ஆர்வமா நிக்குது. இதை அப்பிடியே மழுங்கடிக்கிறதுக்கே இந்த இன்னிசை நிகழ்ச்சி!!?. முட்டாள்! உனக்கென்ன தெரியுமெண்டு கத்துறாய். இந்த நிகழ்ச்சி மூலம் பணம் சேகரித்துத் தாயகத்துக்கு அனுப்பப் போகிறாங்கள் எண்டு சில அறிவுஜீவிகள் சொல்ல வருவினம்.

ஐயா! ஊரில கஷ்டம் எண்டால் பாட்டுப் படிச்சுத்தான் காசு வாங்கோணுமே? வாற காசு எப்பிடி எல்லாம் செலவாகும் தெரியுமே.

இப்ப பாத்திங்கள் எண்டால்! வாற கலைஞர்களுக்கு குடுக்க வேண்டிய ஒரு தொகை! நிகழ்ச்சியில் பாடுறதுக்கு இந்தியாவிலிருந்து இங்கு வாறதுக்கு ஒரு தொகை வெறும் நாலு பிரதான பாடகர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுடன் சில பரிவாரங்கள் வருவார்கள். அனேகமான வேளைகளில் அவர்களது இசைக்கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு பெருந் தொகை. வந்திறங்கிய பின்னர் அவர்களுக்கான பாதுகாப்பு. அவர்களை எங்கள் வீடுகளில் தங்கவைக்க முடியாது. அதனால் அவர்களுக்கு என்றொரு ஹொட்டேல் அதற்கான அடுத்த பெரும் செலவு. பின்னர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வரையுள்ள அனைத்து செலவுகள். இதற்குள் பிரதானமாக ஹொட்டேல் பிரயாணம் உணவு போன்றவைகள் அடங்கும். அந்தக் கலைஞர்களை அழகாக அவர்கள் மனம் கோணாதவாறு கவனிக்க வேண்டிய பொறுப்பு என்று ஒரு பிரச்சனை. இப்பிடி எங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது.

இத்தனைக்கும் நான் நிகழ்ச்சி நடக்கிற மண்ட பத்தைப் பற்றிக் கதைக்கவே இல்லை அதுக்கு எண்டு ஒரு பெருந்தொகை. இவ்வளவு செலவுகளின் பின் எங்களிடம் எவ்வளவு மிஞ்சப் போகிறது எண்டு அதை ஊருக்கு அனுப்ப பேகுறோம்?.

முழு நிகழ்ச்சிக்கான செலவும் குறைந்தது எத்தனை ஆயிரம் பவுண்ஸ்கள்? அத்தனையும் யாரிடம் இருந்து பெற்று அவர்களுக்காக செலவிடப்படுகிறது. எங்களிடம் இருந்துதானே! அதை நேரே எங்களிடம் வாங்கி நேரே தாயகத்துக்கு அனுப்பவேண்டியது தானே!

என்னட்டக் கேட்டால் ஒரு நாளும் தேவையில்லாத பெரும் செலவுகள் செய்து காசு சேர்க்கிறதில எனக்கு ஆர்வம் இல்லை. காசு அனுப்ப வேணும் எண்டால் காரணத்தைச் சொல்லியே சேகரிப்போமே. சுனாமிக்கு

நாங்க றோட்டில நிக்கேலயா? காசு கிடைக் கேல்லையா?

அதுவும் அது பொதுவான பிரச்சனை! இப்பிடிப் பாப்பம்.

ஏ9 பாதை நிலவரம் பற்றி இங்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திறம். அது சம்பந்தமான நிகழ்வுகள் நடத்திறம் எங்களுக்குள்ளே காசு சேர்ப்பம். வெளியில சேக்கிறதா இல்லையா நிலைமையைப் பாப்பம். செய்வம். இப்பிடி திட்டங்களைப் போட்டு பிரச்சனைகளை அணுகிறத விட்டுப் போட்டு எதுக்கெடுத்தாலும் காசைக் கரியாக்கி ஒரு இசை நிகழ்ச்சி. ஏனய்யா மக்களின்ர மனத்தை மயக்கி மழுங்கடிக்கிறியள்! ஐயோ விடுங்கய்யா சனம் பாவம் எல்லே-!!!

- உடையான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மக்களில அதுவும் ஒரு சிலர் தான் பங்களிப்பு செய்கிறார்கள். ஆயிரக்கணக்கில் எத்தனையோ பேர் ஒண்டும் செய்யாமல் இருக்கினம். அதோட வெளியாட்களிட்டை காசு சேர்ப்பதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம்.

எங்கட ஆட்களிட்ட சுத்தித்தி வராமல் பிரச்சனையை வெளியில கொண்டு செல்ல மிகவும் இலகுவான வழி.

உந்த ஒரு பேப்பரின்ர கதையை குப்பையில போடுங்கோ. ஏற்கனவே பல பத்திரிகைகள் வெளிவரும் போது இவைக்கு என்டு தனிய ஒரு பத்திரிகை வேணுமோ..?

தமிழ்தேசியத்தை காட்டி(விற்று) வயிறுவளர்க்கும் கூட்டம் இது. இது காணதென்று மேலும் ஒரு ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுனாமிக்கு காசு சேர்த்ததுடன் வெண்புறா அமைப்பின் செயற்பாடு முடிந்து விட்டதா. அல்லது இன்னொரு சுனாமி வந்தால்தான் நீங்கள் றோட்டில நிற்பீர்களா..?

வெண்புறா அமைப்பினால் நடாத்தப்பட்ட தாயக பாடல் போட்டி (தாயககாற்று) தாயகபாடலுக்கான நடனம்(நர்த்தன மாலை) ஆகிய நிகழ்வுகளில் எத்தனை பேர் பங்குபற்றினார்கள்?

உந்த பத்திரிகையின் பொறுப்பாசிரியரே பங்குகொள்ளவில்லை ஆனால் அப்துல் ஹமீத்தின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்வில் மட்டும் வந்து நின்றார்;. உந்த நிகழ்விற்கு வாசகர் கடிதம் வரவில்லையோ.?

எதையும் துணிந்து சொந்தமாக எழுத திரணியற்றதுகள் வாசகர் கடிதம் என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு தங்கள் பலவீனத்தை மறைக்க முற்படுகினம்.

பத்திரிகையின் பெயரிலேயே குழப்பம். முதலில் உங்கட கு----டியை கழுவுங்கோ.

Link to comment
Share on other sites

ஒரு விடயம் எங்கே பிரசுரிக்கப்பட்டிருந்தது என்று விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்காக.

அது எங்கே பிரசுரிக்கப்பிட்டிருந்தது என்பதை விடுத்து அதில் சொல்லப்பட்ட விடயங்கள் சரியானதா அல்லது பிழையானதா என்று பார்ப்பதே சரியானது.

உண்மையில் ஒரு நல்ல காரியத்தக்காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் இதில் எத்தனை வீதமான பணம் அநியாயமாக இழக்கப்படப் போகிறது.

வருகின்ற கலைஞர்கள் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்நது இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் நிகழ்வைச் செய்ய வருவார்களா?

அவர்களுடன் இசைக்கலைஞர்கள் தொழினுட்பவியலாளர்கள் என்று எத்தனை பேர் வருவார்கள்.

அத்தனை பேருக்கமான விமானக் கட்டணங்கள், தங்குமிடச் செலவு, இதர செலவுகள். இப்படி பெருந்தொகையான பணச்செலவு இருக்கிறதே.

இது போன்ற ஒரு நல்ல காரியத்துக்காக நிகழ்வை ஒழுங்கு செய்வதை அறிந்தால் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இலவசமாகவே வந்து நிகழ்ச்சியைச் செய்து கொடுப்பார்களே.

ஆக விரயமில்லாமல் முழுப் பணமும் போய்ச் சேருமே. இவற்றையும் விழா அமைப்பாளர்கள் சிந்தித்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போன்று இந்த நிகழ்ச்சியை யார் செய்கிறார்கள் அவர்கள் நாட்டிற்கு என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். சுனாமிக்கு உண்டியல் குலுக்கி றோட்டில் நின்றவுடன் உங்கள் பணி முடியவில்லை. நாட்டில் பல தேவைகள் இருக்கின்றன.

இஞ்சயிருக்கிற நீங்களும் இவ்விழாவிற்கெதிராக கருத்தெழுதுபவர்களும் பத்திரிகைகாரர்களும் சேர்ந்து இவலசமாக ஒரு நிகழ்வை நடாத்தி எவ்வளவு பணம் உங்களால் திரட்டமுடியும். ஆகக் கூடியது ஆயிரங்கணக்கில் தானே.

நிகழ்வை நடாத்தும் வெண்புறா அமைப்பினர் செலவினை குறைத்தே நிகழ்வை நடாத்துவார்கள.; அதற்கா அவர்கள் அறிக்கைவிடவா முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈழப்பாடல்கள் என்றால் தான் போவீர்களா..?

Link to comment
Share on other sites

இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற கலைஞர்கள் யார்?

செஞ்சோலை அவலம் நடந்து தமிழகத்தின் பல பிரிவினரும கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்.

வெறுமனே தங்கள் 'களை'களை விற்பனை செய்வதற்காக மட்டும் ஈழத்தமிழர்களை திரும்பிப் பார்க்கும் இவர்களை வரவேற்று உபசரிக்க மானமுள்ள தமிழன் முன்வருவானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வியாபாரிகள் பணத்திற்காக உணர்சிபூர்வமாகபாடக்கூடியவர

Link to comment
Share on other sites

அரசிற்குப் பயந்து ஒதுங்குகிறார்கள் என்றும் சொல்ல முடியாது குமாரசாமி. ஏனென்றால் செஞ்சோலைப் படுகொலைகளைக் கண்டித்து ஆற்காடு வீரசாமி போன்ற அமைச்சர்களே போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.

நடிகர் சத்தியராஜ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் சீமான் (இன்னும் பலர்) போன்ற பல கலையுலகம் சார்ந்தவர்கள் இது போன்ற போராட்டங்களில் தமிழுணர்வுடன் கலந்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் பணம் பண்ண மட்டும் விமானம் ஏறும் கலை வியாபாரிகள்.

ஆகவே இந்த விழாவைத் தமிழுணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் புறக்கணிக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது போன்று இந்த நிகழ்ச்சியை யார் செய்கிறார்கள் அவர்கள் நாட்டிற்கு என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். சுனாமிக்கு உண்டியல் குலுக்கி றோட்டில் நின்றவுடன் உங்கள் பணி முடியவில்லை. நாட்டில் பல தேவைகள் இருக்கின்றன.

இஞ்சயிருக்கிற நீங்களும் இவ்விழாவிற்கெதிராக கருத்தெழுதுபவர்களும் பத்திரிகைகாரர்களும் சேர்ந்து இவலசமாக ஒரு நிகழ்வை நடாத்தி எவ்வளவு பணம் உங்களால் திரட்டமுடியும். ஆகக் கூடியது ஆயிரங்கணக்கில் தானே.

நிகழ்வை நடாத்தும் வெண்புறா அமைப்பினர் செலவினை குறைத்தே நிகழ்வை நடாத்துவார்கள.; அதற்கா அவர்கள் அறிக்கைவிடவா முடியும்.

இந்த நிகழ்ச்சியை நடத்துக்கின்ற அமைப்பைப் பற்றியோ அல்லது அவர்களது பணிகள் பற்றியோ எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது.

ஆனால் இந்த அமைப்பு ஏன் மானங் கெட்ட தனமாக எம்மை மதிக்காத எம் சகோதரர்களின் எம் குழந்தைகளின் அவலச் சாவைக் கண்டு கொள்ளாத கலை வியாபாரிகளை வரவழைத்து உபசரித்து எம் தமிழ் மக்களின் பணத்தை அவர்களுக்காகக் கொட்டிச் செலவழிக்க வேண்டும் என்பது தான் எனது கேள்வி

Link to comment
Share on other sites

உண்மையில் ஒரு நல்ல காரியத்தக்காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் இதில் எத்தனை வீதமான பணம் அநியாயமாக இழக்கப்படப் போகிறது.

வருகின்ற கலைஞர்கள் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்நது இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் நிகழ்வைச் செய்ய வருவார்களா?

அவர்களுடன் இசைக்கலைஞர்கள் தொழினுட்பவியலாளர்கள் என்று எத்தனை பேர் வருவார்கள்.

அத்தனை பேருக்கமான விமானக் கட்டணங்கள், தங்குமிடச் செலவு, இதர செலவுகள். இப்படி பெருந்தொகையான பணச்செலவு இருக்கிறதே.

இது போன்ற ஒரு நல்ல காரியத்துக்காக நிகழ்வை ஒழுங்கு செய்வதை அறிந்தால் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இலவசமாகவே வந்து நிகழ்ச்சியைச் செய்து கொடுப்பார்களே.

ஆக விரயமில்லாமல் முழுப் பணமும் போய்ச் சேருமே. இவற்றையும் விழா அமைப்பாளர்கள் சிந்தித்தால் என்ன?

ஏன் ஈழப்பாடல்கள் என்றால் தான் போவீர்களா..?

இல்லை இல்லை அவர்கள் தாயகப் பாடல்கள் பாட மாட்டார்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் பணத்தை அள்ளிக் கொண்டு போக வருகிறார்கள். (அதைக் அள்ளிக் கொடுப்பதற்கும் நாம் இருக்கிறோமே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு காலம் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கலம் எத்தனை போர் புறக்கணிக்கின்றார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உள்ள அனைவருமே ஈழப்பாடல்கள் பாடியவர்கள்தான்.. புலிகளின் குரலிலும் ஒலிக்கிறதே இவர்களுடைய பாடல்கள்..

Link to comment
Share on other sites

அல்லாம் அவைகலுக்கு தெரியும். இதில் வரும் நிதி வாகரை மக்கலுக்காக செல்கிறது.

ஒன்று நடத்த வேனும் எண்டாள் செலவுகல் இருக்கும்

வரும் அனைவரும் எமது ஈளத்து படல்களை பாடியவர்கள் மட்டுமின்றி ஆதரவாலர்கலும் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.