Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: விளையாட்டு நல் வினையாகிவிட்டது!

 

 
vilayattujpg

நைஜீரியாவில் வசிக்கும் சோபி இஜியோமா, ஒப்பனைக் கலைஞர். ஃபேஸ்புக்கில் வந்த திருமண விளம்பரத்தைப் பார்த்தார். தோழிகளுடன் சேர்ந்து கிண்டல் செய்தார். ஜாலிக்காக ‘எனக்கு விருப்பம் இருக்கிறது’ என்று ஒரு பின்னூட்டமும் இட்டார். அடுத்த ஏழே நாட்களில் விளம்பரம் செய்த மனிதரையே திருமணம் செய்துகொண்டார்!

சிடிம்மா அமெடு அறைகலன்கள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தபோது, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்து, பெண் தேடச் சொன்னார்கள். “நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். சுயமாகத் தொழில் செய்து வருகிறேன். எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவன் என்பதால் என் இணையையும் மதிப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், என் மீது நம்பிக்கை இருந்தால் பதிலளியுங்கள். டிசம்பர் 31, 2017 நள்ளிரவு 12 மணி வரையே இந்த வாய்ப்புக் காத்திருக்கும். விருப்பமுள்ளவர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரே வாரத்தில் அதாவது ஜனவரி 6, 2018 அன்று திருமணம் நடைபெறும். வாழ்த்துகள்” என்று விளம்பரம் செய்திருந்தார்.

அமெடுவைத் திருமணம் செய்துகொள்ள ஒரு சிலரே ஆர்வம் தெரிவித்திருந்தனர். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் சோபியின் பின்னூட்டம் வந்துசேர்ந்தது. உடனே தனிப்பட்ட முறையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் உரையாட ஆரம்பித்தார்.

“நான் சும்மா ஜாலிக்காகத்தான் விருப்பம் இருக்கிறது என்று பதிலளித்தேன். சாட்டில் அவர் வந்தபோது மரியாதை நிமித்தமாகப் பதிலளிக்க ஆரம்பித்தேன். சில மணி நேரங்களில் இருவரும் நண்பர்களைப் போல உரையாட ஆரம்பித்துவிட்டோம். இரண்டாவது நாள், 500 கி.மீ. தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வந்துவிட்டார். உணவகத்தில் முதல் சந்திப்பு. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. யாரோ ஒரு மனிதரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அவரும் என்னை மனதளவில் மனைவியாகவே ஏற்றுக்கொண்டது போல் பேசினார். பிறகு அவருடைய உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றார். இருவரும் சென்றோம். அங்கே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு அன்றே எங்கள் வீட்டுக்கு வந்து, பெண் கேட்டார். என் அண்ணனுக்கு அமெடுவைப் பிடித்துவிட்டது. அப்பா இல்லாத எனக்கு, ஒரு நல்ல மனிதர் கணவராகக் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து, நிச்சயதார்த்தம் நடந்தது. நைஜீரியாவில் sickle cell anemia என்ற ரத்தக் குறைபாடு நோய் அதிகமாக இருப்பதால், நாங்கள் இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டோம். ஜனவரி 6 அன்று எங்கள் திருமணம் பாரம்பரிய முறைப்படி அழகாக நடந்து முடிந்தது. சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களில் அமெடு எவ்வளவு அருமையான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார் சோபி.

விளையாட்டு நல் வினையாகிவிட்டது!

 

http://tamil.thehindu.com/world/article22528502.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: குளிர்பானத்துக்கு அடிமையாகி பற்களை இழந்தவர்

 

 
27chskomasalapic

அயர்லாந்தைச் சேர்ந்த 32 வயது மைக்கேல் ஷெரிடனுக்கு பற்கள் முழுவதும் அரித்து, வாய் அழுக ஆரம்பித்துவிட்டது. அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களைக் குடித்ததால் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகளின் தந்தையான மைக்கேலுக்கு குளிர்பானங்கள் என்றால் உயிர். தினமும் 6 லிட்டர் வரை குடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பழக்கத்துக்கு அடிமையானதால், அரை மணி நேரம் குளிர்பானங்களைக் குடிக்காவிட்டால் தலைவலி, நடுக்கம் போன்றவை ஏற்பட ஆரம்பித்தன. இதனால் இவரே வேண்டாம் என்று நினைத்தாலும்விட முடியாமல் போய்விட்டது. ஆசைக்காகக் குடித்தவர், பிறகு தலைவலிக்குப் பயந்து குடிக்க ஆரம்பித்தார். இதனால் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தன. ஒரு சாண்ட்விச் கூட சாப்பிட முடியாத அளவுக்குப் பல் வலித்தது. சூடாக எதுவும் குடிக்க முடியாமல் போனது. உடல் நலம் கெட்டது. பற்கள் அரிக்கப்பட்டதால் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பேசுவதையும் சிரிப்பதையும் தவிர்த்து வந்தார்.

“யாரிடமும் பேசுவதற்கு வெட்கமாக இருந்தது. பற்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசவும் சிரிக்கவும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய பேச்சு யாருக்கும் புரியாமல் போனது. கிறிஸ்துமஸ் அன்று என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்தபடி ஒளிப்படம் எடுத்தார்கள். நான் மட்டும் வாயைத் திறக்காமல் சோகமாக நின்றேன். ஒரு குளிர்பானம் என்னை இவ்வளவு மோசமாக அடிமைப்படுத்தும் என்றோ, என் பற்களைச் சிதைக்கும் என்றோ நான் அறிந்திருக்கவில்லை. எல்லோரும் தூங்கி எழுந்தவுடன் காபி குடிப்பதுபோல, நான் குளிர்பானம் குடித்து வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது. மதுவைவிட இது மோசமான பழக்கம் என்று உணர்ந்தேன். வேலையில் அரை மணி நேரம் குளிர்பானம் குடிக்க மறந்தாலும் உடல் வியர்க்கும், தலை வலிக்கும், கைகள் நடுங்கும். மருத்துவரிடம் செல்ல எனக்குக் கூச்சமாக இருந்தது. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் வயதில் நான் இப்படி ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை எண்ணி வெட்கப்பட்டேன். அதனால் மருத்துவரிடம் செல்லாமல் சமாளித்து வந்தேன். கடந்த நவம்பர் மாதம் ஒரு விளையாட்டைக் காணச் சென்றிருந்தேன். அப்போது மிகவும் சிரமப்பட்டு சாப்பிடுவதைப் பார்த்து, பல் மருத்துவர் முரனாஹன் விசாரித்தார். அவரிடம் உண்மையைச் சொன்னேன். அவரது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். என் நிலையைக் கண்டதும் அதிர்ந்துவிட்டார். இதுவரை அரைகுறையாக இருந்த 27 பற்களை எடுத்திருக்கிறார். மீதிப் பற்களையும் எடுத்து, முழுமையாகச் சிகிச்சையளித்து, புதுப் பற்களை வைக்க வேண்டும். இதற்குச் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவாகும். நான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலை யாருக்கும் வர வேண்டாம் என்பதற்காகவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியே சொல்லிவிட்டேன். குளிர்பானங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்” என்கிறார் மைக்கேல்.

யாராவது இவ்வளவு தூரம் அடிமையாவார்களா!

http://tamil.thehindu.com/world/article22533256.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

 

 
28chskomasalapic

ஜெர்மனியில் இருந்த பெர்லின் சுவர் 1989-ம் ஆண்டு உடைக்கப்பட்டது. 80 மீட்டர் நீளமுள்ள சுவரின் ஒரு பகுதியைத் தற்போது 37 வயது கிறிஸ்டியன் போர்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார். பான்கோவ் மாவட்டத்தில் 2 ரயில் நிறுத்தங்களுக்கு இடையே இந்தச் சுவர் இருக்கிறது. உள்ளூர் அரசாங்கத்துக்கு இந்தச் சுவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அரசாங்க ஏடுகளில் சுவர் இடிக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்டுபிடித்த இந்தச் சுவர் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தார் போர்மன். சமீபத்தில் சுவரைப் பார்த்தபோது, புயலால் மிகவும் மோசடைந்திருப்பதைக் கண்டார். உடனே தன்னுடைய வலைப்பூவில், தான் கண்டுபிடித்த சுவரின் ஒரு பகுதி குறித்து எழுதினார். இந்தச் சுவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இதை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இதை இடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். “நான் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தச் சுவரைக் கண்டுபிடித்தாலும் அது பெர்லின் சுவர்தானா என்பதை உறுதிப்படுத்தவும் இடித்துவிடுவார்கள் என்று பயந்ததாலும் யாரிடமும் சொல்லவில்லை. 1961-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சுவர் ஜெர்மனியர்களைப் பிரித்திருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சுவர் இடிக்கப்பட்டது. சுமார் 140 கி.மீ. நீளமிருந்த இந்தச் சுவரை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாகத்தான் மக்களும் அரசாங்கமும் நினைத்திருந்தனர். ஆனால் 80 மீட்டர் சுவர் மட்டும் இன்னும் எஞ்சியிருக்கிறது. சுவர் பற்றிய கோபம் எல்லோருக்கும் மறைந்திருக்கும் என்பதாலும் சுவர் மோசமான நிலைக்குச் செல்வதாலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லியிருக்கிறேன். இதை ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்ற வேண்டும்” என்கிறார் போர்மன்.

வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

போலந்தில் கிராமத்துப் பண்ணையில் வசித்த இளம் பசு, அருகில் இருந்த காட்டுக்குத் தப்பிச் சென்றது. காட்டெருமைக் கூட்டத்துடன் சேர்ந்து 3 மாதங்களாக வாழ்கிறது. “நான் ஆராய்ச்சிக்காகக் காடுகளில் சுற்றி வருவேன். ஒரு காட்டெருமைக் கூட்டத்தில் வித்தியாசமான உருவத்தைக் கண்டேன். அது பழுப்பு வண்ணப் பசு மாடு என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். காட்டெருமைகளுடன் சேர்ந்து வாழாது பசு. காடுகளில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு, மோசமான வானிலையைச் சமாளித்து சுதந்திரமாக வாழ்கிறது. காட்டெருமைகளுக்குக் குளிரைச் சமாளிக்க அடர்த்தியான ரோமங்கள் இருக்கின்றன. ஆனால் பசு எப்படிச் சமாளிக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை காட்டெருமையுடன் இணை சேர்ந்தால் பசுவின் உயிருக்கே ஆபத்து. கலப்பினக் குட்டி உருவத்தில் பெரியதாக இருக்கும். அதனால் கன்று ஈனும்போது பசு உயிரைவிட நேரிடும். அதற்குள் பசுவை மீட்க வேண்டும். இது எளிதான விஷயம் இல்லை. குளிர்காலம் முடிந்தால், காட்டெருமைகள் காட்டுக்குள் சென்றுவிடும். அப்படிச் சென்றால் பசுவை மீட்கவே இயலாது” என்கிறார் விலங்குகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் கோவால்ஸிக்.

சுதந்திரத்துக்காகக் கடினமான வாழ்க்கை மேற்கொள்ளும் பசு!

http://tamil.thehindu.com/world/article22540148.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரூ.1 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய 20 வயது பெண்

30chkanhouse

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி க்ராகார்ட் 20 வயதிலேயே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கியிருக்கிறார். “16 வயதில் பள்ளியில் படிக்கும்போதே சொந்தமாக சம்பாதிக்க முடிவு செய்தேன். சாக்லெட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி, உணவு இடைவேளைகளில் விற்பனை செய்தேன். இதன்மூலம் மாதம் 3,600 ரூபாய் சம்பாதித்தேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சென்றுவிட்டேன். 5 பகுதி நேர வேலைகளில் சேர்ந்தேன். இவற்றின் மூலம் கிடைத்த 45 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் சேமிக்க ஆரம்பித்தேன். பிசினஸ் தொடர்பான படிப்பிலும் சேர்ந்தேன். நான் எளிமையான உடைகளைத்தான் அணிவேன். வெளியே சாப்பிட மாட்டேன். நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்ல மாட்டேன். மூன்றே ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் ரூபாயைச் சேமித்துவிட்டேன். நகரை விட்டுச் சற்று தொலைவில் இருந்த இரண்டு படுக்கையறை வீடு, ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்ததை அறிந்தேன். வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதற்கான முன்பணம் என்னிடம் இருந்ததால், உடனே கடன் கிடைத்தது. வீட்டை வாங்கி, நான் விரும்பியபடி புதுப்பித்தேன். 21-வது வயதில் என் சொந்த வீட்டில் குடியேறிவிட்டேன். என் வாழ்க்கையில் இந்தத் தருணம் அற்புதமானது. என் பெற்றோர் எப்போதும் எனக்கு அதிகமான பணத்தைக் கொடுத்ததே இல்லை. நீ சம்பாதித்து, உன் விருப்பப்படி வாழ்ந்துகொள் என்றுதான் சொல்வார்கள். இன்று அவர்கள் சொன்னது போலவே வீட்டை வாங்கிவிட்டேன்” என்கிறார் ஜென்னி! இவர் தற்போது வேலை செய்துவரும் நிறுவனத்தில், அனைவரும் ஜென்னியின் திறமையைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் ஜென்னி!

அமெரிக்காவைச் சேர்ந்த கிங் ஜான்சன் என்ற சிறுவன், பள்ளி இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். “இன்று மிக மோசமான நாள். அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? என்ற பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஐரோப்பியரான கொலம்பஸ் வருவதற்கு முன்பே, இங்கே பூர்வகுடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் இவருக்கு முன்பே பலர் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள் என்றும் என் அம்மா சொல்லியிருக்கிறார். அதனால் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று ஆசிரியர் சொல்வது பொய். எங்களுக்குத் தெரிந்த ஒரே கொலம்பஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞரான கிறிஸ்டோபர் ஜார்ஜ் வாலஸ்தான். எனக்கு கொலம்பஸ் தினத்துக்கு விடுமுறை கிடைப்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் பொய்யான விஷயத்தை எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். இன்னொரு கேள்வியும் தோன்றுகிறது. அமெரிக்கர்களால் எப்படி ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாற்றை போதிக்க முடியும்?” என்ற கேள்வியோடு முடித்திருக்கிறான் கிங் ஜார்ஜ். பலரும் இவனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி வருகிறார்கள்.

அது சரி, கண்டுபிடித்த அமெரிகோ வெஸ்புகியின் பெயரையே நாட்டின் பெயராக வைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு ஏன் இந்தக் குழப்பம்?

http://tamil.thehindu.com/world/article22584013.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 23 வயது இளைஞரை மணந்த 38 வயது பெண்!

 

 
31chskomasala%202

சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மணமகளுக்கு 38 வயது, மணமகனுக்கு 23 வயது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். 15 வயது இளையவரைத் திருமணம் செய்துகொண்ட இந்தப் பெண்ணுக்கு, முதல் திருமணத்தின் மூலம் 14 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. ஜனவரி 10 அன்று, ஹைனான் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக இந்தத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார் மணமகள். இவர் மீது காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் இளைஞர். வயது வித்தியாசத்தை நினைத்து முதலில் மறுத்தவர், ஒருகட்டத்தில் இளைஞரின் காதலை ஏற்றுக்கொண்டார். இவர்களது திருமணத்துக்கு இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்குள் மணமகள் கர்ப்பமாகிவிட்டார். அதனால் உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. உடனே 66 லட்சம் ரூபாய் ரொக்கமும் ஏராளமான நிலங்களும் ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரும் வீடுகளும் வரதட்சணையாகக் கொடுப்பதாகச் சொன்னார் மணமகள். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கிடைத்தவுடன் மணமகனின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார்கள். அவர்களின் ஆசியுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. மணமக்கள் இருவரும் அன்புடனும் காதலுடனும் காணப்பட்டனர். இந்தத் திருமணம் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

“இதுவே விவாகரத்து பெற்ற 38 வயது ஆண், 23 வயது பெண்ணை மணந்திருந்தால் அதை இந்தச் சமூகம் சாதாரணமாகக் கடந்துபோயிருக்கும். அதுவே வயதான பெண், தன்னை விட இளையவரை மணந்தால் பெரிய குற்றமாகக் கருதுகிறது. இது சமூகத்தில் நிலவும் ஆண்-பெண் சமத்துவமின்மையின் விளைவு. பணத்தைக் காட்டி அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ளவில்லை. இளைஞரின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாததாலே வரதட்சணை கொடுத்து, திருமணம் செய்திருக்கிறார். சக்தி வாய்ந்த தொழிலதிபராக ஒரு பெண் இருந்தாலும் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவரை எதிர்மறையானவராகவே சித்தரிக்கிறது” என்கிறார்கள் சீன சமூக ஆர்வலர்கள்.

காதலுக்கு வயது தடையில்லை!

வாஷிங்டனில் டெலிவரி நிறுவனத்திலிருந்து கொண்டு வந்த 3 பார்சல்களை வைத்துவிட்டுச் சென்றார் ஓர் ஊழியர். அவரது கார் அகன்றதும் வேகமாக ஒரு கார் வந்தது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி, 3 பார்சல்களையும் திருடிக் கொண்டு வேகமாக ஓடினார். எதிர்பாராமல் தோட்டத்தில் இருந்த பள்ளத்தில் தடுக்கி விழுந்தார். சுதாரித்து பார்சல்களை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது மீண்டும் விழுந்துவிட்டார். இந்த முறை பலமான அடி. அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவருடன் வந்தவர் அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு, காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். இந்தக் காட்சிகள் எல்லாம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகிவிட்டன. காவலர்களிடமும் மாட்டிக்கொண்டார் அந்தப் பெண்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது!

http://tamil.thehindu.com/world/article22606883.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பன்றியின் ஓவியம்

 

 
01chkanPigcasso-painting

தென் ஆப்பிரிக்கா வில் வசிக்கும் ‘Pigcasso’ என்ற பன்றியின் ஓவியம் ஒவ்வொன்றும் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. விலங்குகள் உரிமை போராட்டாக்காரர் ஜோன் லெஃப்சன் வளர்க்கும் பன்றிதான் இது. பிறந்து 4 வாரங்களே ஆன ஒரு பன்றிக் குட்டியை, இறைச்சிக் கூடத்திலிருந்து காப்பாற்றி வளர்த்து வருகிறார். தற்போது 2 வயதில் 204 கிலோ எடையுள்ள பெரிய பன்றியாக மாறிவிட்டது. “எங்கள் மையத்துக்கு வந்தபோது மிகவும் சிறியவளாக இருந்தாள். இவள் விளையாடுவதற்காக ஏராளமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்தேன். அதில் வண்ணங்களும் தூரிகைகளும் இருந்தன. சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனை விளையாட்டுப் பொருட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தூரிகையையும் வண்ணங்களையும் எடுத்துக்கொண்டாள். நான் ஒரு கேன்வாஸ் அட்டையை அவள்முன் வைத்தேன். வண்ணங்களில் தூரிகையை நனைத்து, கேன்வாஸில் வரைய ஆரம்பித்துவிட்டாள். ஒரு பன்றியால் ஓவியம் தீட்ட முடியும் என்பது எனக்கு வியப்பைத் தந்தது. அதிலிருந்து அவளுக்கு ஆர்வம் வரும் நேரத்தில் எல்லாம் வரைய ஆரம்பித்துவிடுவாள். விலங்குகள் மீட்பு மையத்தில் அவளுக்காக ஓவியக்கூடம் ஆரம்பித்தேன். ஓவிய ஆர்வலர்கள் இந்தப் படங்களைப் பார்த்து பிரமித்துவிட்டனர். இன்று ஒரு ஓவியத்துக்கு 2.3 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, வாங்கிச் செல்கிறார்கள்.

இதுவரை அவள் வரைந்த பெரும்பாலான ஓவியங்கள் விற்பனையாகிவிட்டன. இவள் வரையைப் போகும் ஓவியங்களை வாங்குவதற்கு காத்திருக்கிறார்கள். அவளாக விரும்பி வரைவதைத்தான் நான் விரும்புகிறேன். நான் அவளை ஒருநாளும் கட்டாயப்படுத்த மாட்டேன். இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, இனிப்பு தடவிய பாப்கார்ன் போன்றவற்றை சுவைத்துக்கொண்டே இடையிடையே தூரிகையைப் பிடித்துக்கொண்டு வரையும் பிகாசோவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. உலகிலேயே ஓவியம் தீட்டக்கூடிய ஒரே பன்றி பிகாசோதான். இவள் மூலம் பன்றிகள் புத்திசாலியானவை என்ற விஷயம் உறுதியாகியிருக்கிறது. எதிர்காலத்தில் நியூயார்க்கிலும் பாரிஸிலும் பிகாசோவின் ஓவியக் கண்காட்சியை நடத்த இருக்கிறோம்” என்கிறார் ஜோன் லெஃப்சன்.

பிகாசோ அளவுக்கு சம்பாதிக்கிறதே இந்த ‘Pig’casso!

இங்கிலாந்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி லீஃபி லியுவுக்கு பிறந்த 6-வது மாதத்தில் மூளை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எப்பொழுதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் குறைபாட்டுக்கு மருத்துவம் இல்லை என்பதால், மருத்துவர்கள் லியுவின் உணவுப் பழக்கத்தை மாற்றியிருக்கிறார்கள். மாவுச் சத்து உணவுப் பொருட்களைத் தவிர்த்து, முட்டை, இறைச்சி, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய் பழம் போன்றவற்றை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, வெண்ணெய் பழத்தை மட்டுமே சாப்பிட்டு வருகிறாள் லியு. “ஒரு நாளைக்கு 60 தடவை சலிப்பின்றி இந்தப் பழத்தைச் சாப்பிடுகிறாள். இதுவரை பிரச்சினை ஒன்றும் இல்லை. மருத்துவர்களால் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்ன எங்கள் மகள், 5 வயதைக் கடந்துவிட்டாள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் லியுவின் அம்மா.

ஐயோ… பாவம்!

http://tamil.thehindu.com/world/article22617153.ece

Link to comment
Share on other sites

On 28.1.2018 at 10:47 AM, நவீனன் said:

உலக மசாலா: வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

 

 
28chskomasalapic

ஜெர்மனியில் இருந்த பெர்லின் சுவர் 1989-ம் ஆண்டு உடைக்கப்பட்டது. 80 மீட்டர் நீளமுள்ள சுவரின் ஒரு பகுதியைத் தற்போது 37 வயது கிறிஸ்டியன் போர்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார். பான்கோவ் மாவட்டத்தில் 2 ரயில் நிறுத்தங்களுக்கு இடையே இந்தச் சுவர் இருக்கிறது. உள்ளூர் அரசாங்கத்துக்கு இந்தச் சுவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அரசாங்க ஏடுகளில் சுவர் இடிக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்டுபிடித்த இந்தச் சுவர் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தார் போர்மன். சமீபத்தில் சுவரைப் பார்த்தபோது, புயலால் மிகவும் மோசடைந்திருப்பதைக் கண்டார். உடனே தன்னுடைய வலைப்பூவில், தான் கண்டுபிடித்த சுவரின் ஒரு பகுதி குறித்து எழுதினார். இந்தச் சுவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இதை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இதை இடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். “நான் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தச் சுவரைக் கண்டுபிடித்தாலும் அது பெர்லின் சுவர்தானா என்பதை உறுதிப்படுத்தவும் இடித்துவிடுவார்கள் என்று பயந்ததாலும் யாரிடமும் சொல்லவில்லை. 1961-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சுவர் ஜெர்மனியர்களைப் பிரித்திருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சுவர் இடிக்கப்பட்டது. சுமார் 140 கி.மீ. நீளமிருந்த இந்தச் சுவரை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாகத்தான் மக்களும் அரசாங்கமும் நினைத்திருந்தனர். ஆனால் 80 மீட்டர் சுவர் மட்டும் இன்னும் எஞ்சியிருக்கிறது. சுவர் பற்றிய கோபம் எல்லோருக்கும் மறைந்திருக்கும் என்பதாலும் சுவர் மோசமான நிலைக்குச் செல்வதாலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லியிருக்கிறேன். இதை ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்ற வேண்டும்” என்கிறார் போர்மன்.

வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

 

http://tamil.thehindu.com/world/article22540148.ece

 

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: தனியே… தன்னந்தனியே…

 

 
03chskomasalapic

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இருக்கிறது மோனோவி. 2010-ம் ஆண்டு முதல் இந்த நகரில் ஒரே ஒரு வீடு மட்டுமே இருந்து வருகிறது. இந்த வீட்டிலும் ஒரே ஒரு மனிதர்தான் வசித்து வருகிறார். 84 வயது எல்சி எய்லர் என்ற பெண்தான் இந்த நகரின் மேயர், க்ளார்க், பொருளாளர், நூலகர், உணவகம் நடத்துபவர்! ஒவ்வோர் ஆண்டும் இந்த நகருக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது. தானே தேர்தலில் நின்று, தானே ஓட்டுப் போட்டுக்கொள்கிறார் இவர்! இந்த நகருக்குத் தேவையான சாலை, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஆண்டுக்கு 32 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகிறார். அரசாங்க ஆவணங்களில் இது யாருமற்ற ‘பேய் நகரம்’ என்று எழுத விடாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

“1930-ம் ஆண்டு மோனோவியில் 150 பேர் மட்டுமே வசித்த காரணத்தால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது 3 மளிகைக் கடைகள், சில உணவகங்கள், சிறைச்சாலை இருந்தன. என் கணவர் ரூடியை எனக்கு ஆரம்பப் பள்ளியிலிருந்தே தெரியும். நான் பட்டம் பெற்ற பிறகு, அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்துகொண்டிருந்த ரூடியைத் திருமணம் செய்துகொண்டேன். நானும் விமானப் படையில் பணி தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுடன் மோனோவிக்கு வந்துவிட்டேன். இங்கே என் அப்பா மூடிய உணவகத்தை மீண்டும் திறந்தேன். அப்போது தான் இந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இங்குள்ளவர்கள் பெரு நகரங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். 1960-ம் ஆண்டு இங்கிருந்த தேவாலயத்தில் என் அப்பாவின் இறுதிச் சடங்குதான் கடைசியாக நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தபால் நிலையம், மளிகைக் கடைகள், பள்ளிக்கூடம் எல்லாம் வரிசையாக மூடப்பட்டன. என்னுடைய குழந்தைகள் வேலை தேடி வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

1980-ம் ஆண்டு நகரின் மக்கள் தொகை 18 ஆக இருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் என் கணவரும் மட்டுமே எஞ்சியிருந்தோம். 2004-ம் ஆண்டு கணவரும் மறைந்துவிட்டார். 14 ஆண்டுகளாக நான் மட்டும் வசித்து வருகிறேன். நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை. வாரத்தில் 6 நாட்களும் உணவகத்தைத் திறந்து வைத்திருப்பேன். காலை 9 மணிக்கு உணவகத்தைத் திறந்தால் இரவு 9 மணிக்குதான் மூடுவேன். என் கணவரின் தனிப்பட்ட சேமிப்பான 5 ஆயிரம் புத்தகங்களை வைத்து, ஒரு நூலகத்தை நடத்தி வருகிறேன். மது அருந்துபவர்கள், உணவு சாப்பிடுபவர்கள், நூலகத்துக்கு வருகிறவர்கள் என்று மனிதர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் எனக்கு உண்டு. ஒரே மனிதர் வசிக்கும் நகரம் என்று மோனோவி பெயர் பெற்றுவிட்டதால், உலகம் முழுவதிலுமிருந்துகூட மக்கள் வருகிறார்கள். விருந்தினர் புத்தகத்தில் ஏராளமானவர்களின் கையொப்பங்கள் இருக்கின்றன. எனக்கு 5 பேரன், பேத்திகள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். 90 மைல் தூரத்தில் பேரன் ஒருவன் இருக்கிறான். மற்றவர்கள் நெதர்லாந்தில் வசிக்கிறார்கள். 84 வயதில் பிள்ளைகளுடன் இருக்கலாம்தான்… ஆனால் அங்கே புதிதாக நட்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமே! இங்கிருப்பதே எனக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார் எல்சி எய்லர்.

தனியே… தன்னந்தனியே…

http://tamil.thehindu.com/world/article22641486.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: என்னதான் சொன்னாலும் திகிலாகத்தான் இருக்கு!

 

 
04chskomasalapic

தாய்லாந்தைச் சேர்ந்த முகமது இவான், வீட்டிலேயே ஒரு முதலையை வளர்த்து வருகிறார். 200 கிலோ எடை கொண்ட 21 வயதான இந்த முதலையுடன் விளையாடுகிறார். பல் துலக்கி விடுகிறார். குளிக்க வைக்கிறார். “1997-ம் ஆண்டு ஒரு மீனவரின் வலையில் சின்னஞ்சிறு குட்டியாக மாட்டிக்கொண்டது. அதை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பணம் கொடுத்து வாங்கி வந்துவிட்டேன். ஆனால் என் வீட்டில் ஒருவரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக நான் முதலையைக் கைவிடவில்லை. கோஜெக் என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தேன். வராண்டாவில் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியை முதலைக்காகக் கட்டினேன். எனக்கு முதலைகளைப் பற்றி பெரிதாக விஷயம் ஒன்றும் தெரியாது. நாளடைவில் நேரிடையாகவே முதலையின் இயல்பை அறிந்துகொண்டேன். வீட்டிலுள்ளவர்களுக்கும் முதலையைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது 8 அடி நீள பிரம்மாண்டமான முதலையாக மாறிவிட்டது. என் குழந்தைகள் முதலையின் அருகிலேயே விளையாடுகின்றன. இதுவரை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. தினமும் 1.5 கிலோ முதல் 5 கிலோ மீன் வரை சாப்பிடுகிறது. இதைத் தவிர பெரிய செலவு ஒன்றும் இல்லை. வாரம் ஒரு முறை முதலையின் தோலைத் தேய்த்து, நன்றாகக் குளிக்க வைப்பேன். பல் துலக்கிவிடுவேன். உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் கூட முதலையைப் பார்க்க வருகிறார்கள். வெளிநாட்டுக்காரர் ஒருவர் 47 லட்சம் ரூபாய்க்கு முதலையை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். இது என் குழந்தை என்று மறுத்துவிட்டேன்” என்கிறார் முகமது.

என்னதான் சொன்னாலும் திகிலாகத்தான் இருக்கு!

ஃபேஷன் மாடலிங் துறையை எப்பொழுதுமே இளையவர்கள்தான் ஆதிக்கம் செலுத்திவருவார்கள். பெரும்பாலான மாடல்கள் 30 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஓல்டுஷ்கா மாடலிங் நிறுவனம், இந்த விதியை உடைத்திருக்கிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் மாடல்களாக இருக்கிறார்கள். ரோஸ்டர் என்ற மாடலுக்கு 85 வயது. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இகோர் கவார், ஒளிப்படக்காரராக இருந்தவர். இயற்கை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருப்பவர். தன்னுடைய நிறுவனத்தில் வயதான மாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இதுவரை 45 வயதிலிருந்து 85 வயது வரை 18 மாடல்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். “முதலில் 60 வயது மாடல்தான் எங்கள் நிறுவனத்தில் இளையவராக இருந்தார். 45 வயது செர்கே அவர் வயதை விட, தோற்றத்தில் முதுமையை அடைந்திருந்ததால் அவரை வேலைக்கு எடுத்தேன். இப்போது அவர்தான் இளையவர். வயதாக ஆக அழகு கூடுவதாக நினைக்கிறேன். நான் சந்தித்த அழகான முதியவர்களின் முகங்களே என்னை இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கத் தூண்டியது” என்கிறார் இகோர்

மாடலிங் உலகைக் கலக்கும் முதியவர்கள்!

http://tamil.thehindu.com/world/article22646044.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நாய் மீட்பு...

 

 
06chskomasalapic

இங்கிலாந்தைச் சேர்ந்த 51 வயது ரால்ப் பல்கர், 4 வயது மகளுடன் கல்லறைக்குச் சென்றார். மூத்த மகன் ஜேம்ஸ், 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற விஷயத்தை முதல்முறை மகளிடம் சொல்லும் படம், பார்ப்பவர்களின் மனதை உலுக்கிவிட்டது. “25 ஆண்டுகளுக்கு முன் எங்கள் அன்பு மகன் 2 வயது ஜேம்ஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவர்கள் 10 வயது சிறுவர்கள். அன்று ஷாப்பிங் மாலில் என் மனைவி பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று ஜேம்ஸ் காணாமல் போனான். மாலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 2 சிறுவர்கள் ஜேம்ஸை அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் தெளிவின்றி காணப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாலில் இருந்து இரண்டரை மைல் தொலைவில் இருந்த ரயில் தண்டவாளத்திலிருந்து உயிரற்ற ஜேம்ஸை கண்டுபிடித்தார்கள். தலையில் இரும்புக் கம்பியால் அடித்த காயங்கள்.

அன்பைத் தவிர வேறு எதுவும் அறியாத ஜேம்ஸை, இப்படிக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? காவல் துறை விசாரணையில் ஜான் வெனபில்ஸ், ராபர்ட் தாம்சன் என்ற 10 வயது சிறுவர்கள் ஜேம்ஸைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்களால் எப்படி இவ்வளவு கொடூரமான வன்முறையைச் செய்ய முடிந்தது? இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகவும் இளைய குற்றவாளிகள் என்ற பெயர் அவர்களுக்குக் கிடைத்தது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளிவந்த ஜான் வெனாபில்ஸ், மீண்டும் குழந்தைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 2010 மற்றும் 2017-ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜேம்ஸுக்குப் பிறகு நானும் மனைவியும் உடைந்து போனோம். ஒருகட்டத்தில் பிரிந்துவிட்டோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொண்டேன். என் மகள் நான் இழந்த சந்தோஷங்களை மீட்டுத் தந்திருக்கிறாள். அவளுடைய அண்ணன் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். 4 வயதாகிவிட்டதாலும் ஜேம்ஸ் மறைந்து இது 25-வது ஆண்டு என்பதாலும் முதல்முறையாகக் கல்லறைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவன் எவ்வாறு இறந்தான் என்பதைச் சொல்லவில்லை” என்கிறார் ரால்ப் பல்கர்.

புத்திர சோகம் கொடுமையானது…

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த டெப்ரா வளர்த்த நாய், 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. நாயைத் தேடி அலைந்தார். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தார். ஆனால் நாய் கிடைக்கவே இல்லை. தற்போது விலங்குகள் பாதுகாப்பு மையத்திலிருந்து நாய் உயிருடன் இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. நாயை ஸ்கேன் செய்தபோது, மைக்ரோசிப்பில் இருந்த தகவல்களை வைத்து, தொடர்புகொண்டிருக்கிறார்கள். நாயை வரவேற்கத் தயாராக இருக்கிறது டெப்ரா குடும்பம்.

தொலைந்தது கிடைத்தால் மகிழ்ச்சிதான்!

http://tamil.thehindu.com/world/article22665272.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூனைகளின் நிலம்

 

 
07chskomasalapic

மேற்கு சைபிரீயாவில் உள்ள பனி சூழ்ந்த ப்ரைகோரோட்னி கிராமம், மற்ற கிராமங்களைவிட வித்தியாசமானது. இங்கே ஆயிரக்கணக்கான சைபீரிய பூனைகள் வசிப்பதால், ‘கோஷ்லாண்டியா’ அதாவது பூனைகளின் நிலம் என்று அழைக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிராமங்களைப்போல்தான் இதுவும் இருந்தது. 2003-ம் ஆண்டு 59 வயது அல்லாவும் அவரது கணவர் செர்கேயும் ஓர் அழகான சைபீரிய பூனையை கிராமத்துக்குக் கொண்டு வந்தனர். பபுஷ்கா என்ற இந்தப் பூனை, ஒரு வருடம் கழித்து 5 குட்டிகளை ஈன்றது. சில ஆண்டுகளில் பூனைகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது. அல்லாவின் பண்ணை, வீடு, தெரு என்று எங்கு பார்த்தாலும் பூனைகளாகத் திரிந்தன. எவ்வளவு பூனைகள் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், ‘பத்து லட்சம் பூனைகளுக்கு மேல் இருக்கலாம்’ என்று பதில் சொல்வார் அல்லா. சைபீரிய பூனைகள் உருவத்தில் பெரியவை. ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும். “பூனைகளைப் போல் அழகான உயிரினம் வேறு இல்லை! நாங்கள் தினமும் பூனைகளைப் படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். திடீரென்று எங்கள் சைபீரிய பூனைகளை, ‘நார்வே பூனைகள்’ என்று சமூக வலைதளங்களில் வெளியிட ஆரம்பித்தனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, எங்களின் அனுமதியின்றி, ஒரு நார்வே இணையதளம் ‘நார்வே பூனைகள்’ என்ற பெயரில் தொடர்ச்சியாக எங்களின் படங்களை வெளியிட ஆரம்பித்தது. இந்தத் தவறான தகவலை உலகம் முழுவதும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். கோஷ்லாண்டியா பூனைகளில் 2 வகைகள் இருக்கின்றன. காடுகளுக்குள் சென்று வேட்டையாடக்கூடியவை ஒரு வகை. இவை காடுகளுக்குள் சென்றால், திரும்பி வர பல மாதங்களாகும். மற்றொரு வகை வீட்டுப் பூனைகளைப் போலிருப்பவை. மனிதர்கள் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு, எலிகளை வேட்டையாடிக்கொண்டு இருப்பவை. இந்த இரண்டு வகை பூனைகளிலும் பெண் பூனைகள் கிராமத்தை விட்டு வெளியேறுவதில்லை” என்கிறார் அல்லா.

எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த பூனைகள்!

1980-ம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள காட்டில் ஓக் மரங்களை வெட்டும்போது, பதப்படுத்தப்பட்ட (மம்மி) நிலையில் ஒரு நாயைக் கண்டறிந்தனர். மரத்தின் மேல் பகுதியில் இருந்த பொந்துக்குள் இந்த நாய் இருந்தது. மரத்தை மெதுவாக வெட்டி, காட்டில் உள்ள மர அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டனர். 60 ஆண்டுகளாக இந்த வேட்டை நாய், மரப் பொந்துக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஓக் மரத்திலுள்ள அமிலம், நாயின் உடலைக் கெட்டுவிடாமல் பாதுகாத்திருக்கிறது. ‘ஸ்டக்கி’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய்தான் இப்போது அருங்காட்சியகத்தில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. “மரத்திலிருந்து இந்த நாய் வெளியே எடுக்கப்பட்டபோது, நாங்கள் இந்த நாயின் சிறப்பை அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பிறகுதான், இயற்கையாக பதப்படுத்தப்பட்ட நாய் என்பதையும் 60 ஆண்டுகள் பாதிப்பின்றி இருந்ததையும் அறிந்துகொண்டோம்” என்கிறார் அருங்காட்சியகத்தின் மேலாளர் பிராண்டி ஸ்டீவன்சன்.

‘மம்மி’ நாய்!

http://tamil.thehindu.com/world/article22674330.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஆண்!

 

 
08chkanbeauty

கஜகஸ்தான் 2018-ம் ஆண்டு அழகிப் போட்டியில் கலந்துகொண்டு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் 22 வயது அரினா அலியேவா. தற்போது இவர் பெண் அல்ல, ஆண் என்ற செய்தி அறிந்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இலி டியாஹிலேவ் மாடலாக இருக்கிறார். இவரது நண்பர்கள் அழகிப் போட்டி குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இவர், ‘முன்பெல்லாம் பெண்களிடம் தனித்துவமான அழகு இருக்கும். புற அழகு மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க வகையில் திறமைகளும் நற்பண்புகளும் அதிகம் இருக்கும். ஆனால் இப்போது இளம் பெண்கள் எல்லோரும் நவீன ட்ரெண்ட்களின் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஃபேஷன், மேக்அப், ஹேர்ஸ்டைல் போன்றவற்றை நேர்த்தியாக செய்துகொண்டால், அழகாகிவிடாலாம் என்று கருதுகிறார்கள். இன்று அழகியாக வருவது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. ஒப்பனை சாதனங்களின் உதவியால் ஒப்பனை போட்டு, படங்கள் எடுத்து, போட்டோஷாப்பில் வேலை செய்தால் ஒரு ஆண் கூட அழகி போட்டியில் வெற்றி பெறமுடியும்’ என்றார். இவரது கருத்தை நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் சொன்னதை நிரூபிப்பதற்காக, ‘மிஸ் விர்ச்சுவல் கஜகஸ்தான்’ அழகிப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். ஒப்பனை மூலம் பெண்ணாக மாறினார். அழகான சிகை அலங்காரம் செய்துகொண்டார். தன்னை விதவிதமாக படங்கள் எடுத்து, ‘அரினா அலியேவா’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. யாருக்கும் ஆண் என்ற சந்தேகம் சிறிதும் வரவில்லை. உடனே அழகிப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தார்.

“நான் 17 வயதிலிருந்து மாடலாக இருக்கிறேன். அதனால் ஒரு பெண் போல் நேர்த்தியாக ஒப்பனை செய்துகொள்வது எனக்கு எளிதாக இருந்தது. உருவத்தை எளிதாக மாற்றிய அளவுக்கு பேச்சு, நடை போன்றவற்றை மாற்ற முடியவில்லை. பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டேன். முழு நம்பிக்கையோடு போட்டியில் கலந்துகொண்டேன். பல சுற்றுப் போட்டிகளில் எளிதாக வெற்றியடைந்தேன். இறுதிப் போட்டியில் நான் பங்கேற்று இருந்தால், ஒருவேளை ‘கஜகஸ்தான் அழகி’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒரு பெண்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும், அதுதான் நியாயம். என் நண்பர்களிடம் சொன்னதுபோல் நான் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்ததிலேயே என்னை நிரூபித்துவிட்டேன். அதனால் என்னைப் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டேன். அதில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை என்றும், இன்றைய அழகு வெறும் உடல் சார்ந்த விஷயமாக மாறிவிட்டதையும் எடுத்துக் காட்டவே இவ்வாறு பங்கேற்றேன் என்ற விளக்கமும் அளித்தேன். நான் ஆண் என்று தெரிந்தவுடன் என்னை தகுதி நீக்கம் செய்தனர். அந்த இடத்துக்கு இன்னொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். என்னுடைய நண்பர்களால் நான் இறுதிப் போட்டி வரை சென்றதை நம்பவே முடியவில்லை. பலரும் என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டு, எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான அழகும் தனித்துவமான திறமைகளும்தான் உண்மை யான அழகு என்பதை அழகிப் போட்டி நடத்துபவர்களும் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் இலி டியாஹிலேவ்.

நீங்க சொல்வதிலும் நியாயம் இருக்கு!

http://tamil.thehindu.com/world/article22686288.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 19 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்த மூவர்

 

 
09chskomasalapic

கடந்த 1980-ம் ஆண்டு ராபர்ட் ஷஃப்ரான் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்முறையாக நுழைந்தார். அங்கே அவர் எதிர்பார்க்காத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இதுவரை சந்திக்காதவர்கள் அன்புடன் வரவேற்றார்கள், வாழ்த்தினார்கள், கட்டிப் பிடித்தார்கள். ராபர்ட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பலரும் ‘ஈடி’ என்று அழைத்தார்கள். மிகவும் குழப்பத்துடன் தன் அறை நண்பர் மைக்கேலை சந்தித்தார். அன்று நடந்த விஷயங்களைக் கூறினார். மைக்கேலின் கடந்த ஆண்டு அறையில் தங்கியிருந்தவர்தான் ஈடி காலண்ட். ராபர்ட்டுக்கும் ஈடிக்கும் அப்படி ஓர் உருவ ஒற்றுமை! இருவரும் ஒரே மாதிரி பேசினார்கள், சிரித்தார்கள், நடந்தார்கள். தன் பழைய அறை நண்பரும் புது அறை நண்பரும் ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த மைக்கேலுக்கு, இருவரும் இரட்டையர்களாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மிகவும் ஆச்சரியமடைந்தனர். 1961-ம் ஆண்டு ஜூலை 12 அன்று இருவரும் ஒரு தாய்க்குப் பிறந்திருக்கிறார்கள். பிறகு 2 வெவ்வேறு குடும்பத்தினரிடம் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தது. சில நாட்களில் டேவிட் கெல்மன் என்பவர் இரட்டையர்களைத் தொடர்புகொண்டார். அவர்களை நேரில் சந்தித்தபோது, அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. டேவிட்டும் இந்த இரட்டையர்களைப் போலவே இருந்தார், நடந்தார். பேசினார். அப்போதுதான் இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் என்பது தெரியவந்தது. மூவரும் ஒரே விதமான உணவுகளைத்தான் விரும்பினார்கள்.

மூவரும் தாங்கள் பிரிந்த காரணத்தை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அப்போதுதான் நயவஞ்சகமாகத் தாங்கள் பிரிக்கப்பட்டதை அறிந்தனர். மனநல மருத்துவர் நியுபார், இரட்டையர்களைப் பிரித்து, அவர்களின் மனநிலையை ஆராய்ச்சி செய்ய இந்தக் காரியங்களைச் செய்திருந்தார். ‘இயற்கையாக வளர்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கும்’ உள்ள வித்தியாசங்களை அறிவதற்கே இந்த ஆராய்ச்சி. 12-க்கும் மேற்பட்ட இரட்டையர்களைப் பிரித்திருக்கிறார். மருத்துவரும் தத்து கொடுத்த நிறுவனமும் தத்தெடுத்த பெற்றோர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கவே இல்லை. அவர்களை அறியாமல் மருத்துவரின் குழு அவர்களைக் கண்காணித்து வந்தது. ஆண்டுக்கு ஒருமுறை இந்தக் குடும்பங்களை ஒன்றிணைத்தனர். அப்போது குழந்தைகளிடம் தனித்தனியாகப் பேட்டி எடுத்து, படம் பிடித்து, ஆவணப்படுத்தினர். அந்த ஆவணப்படத்தில் டேவிட்டின் வளர்ப்பு அம்மா, “குழந்தை தூங்கி எழும்போது ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்வான். இவனது கற்பனை சகோதரன் குறித்து நாங்கள் அடிக்கடிப் பேசியது உண்டு. பிற்காலத்தில் தன் சகோதரனை நினைத்து இவன் மன அழுத்தத்துக்குச் சென்றான்” என்கிறார்.

ராபர்ட், டேவிட், ஈடி மூவரின் வளர்ப்புப் பெற்றோரும் இந்த விஷயம் அறிந்து கோபப்பட்டனர். மருத்துவர் நியுபரையும் அவரது குழுவினரையும் இந்தக் கொடூரமான பரிசோதனைக்காகச் சட்டத்தின் மூலம் தண்டிக்க இயலவில்லை. மருத்துவரோ, அவரது ஆராய்ச்சிக் குழுவினரோ எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை, இழப்பீடும் வழங்கவில்லை. தற்போது மருத்துவர் உயிருடனும் இல்லை.

ஐயோ… எவ்வளவு கொடூரமான ஆராய்ச்சி!

http://tamil.thehindu.com/world/article22699819.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு!

 

 
10chskomasalapic

பின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கு என்று பிரத்யேகமான சுற்றுலா விடுதி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார். “ஆண்களின் தொந்தரவு இன்றி, தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே இந்த விடுதியை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. இது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி. ‘சூப்பர்ஷி’ தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. நான் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன். அவர்தான் இந்தத் தீவு விலைக்கு வருவதாகச் சொன்னார். ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. தீவைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உடனே விலைக்கு வாங்கினேன். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் போன்றவற்றை உருவாக்கினேன். ஆரோக்கியமான உணவுக்கும் ஏற்பாடு செய்தேன். ‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்தேன். தற்போது என் தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்களே வந்து செல்கிறார்கள். ஜூலை மாதம்முதல் முறையாக ஆரம்பிக்க இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ்டினா ரோத்.

பால் பேதம் உடையணும்னு சொல்ற நேரத்தில் இது தேவையா!

பெலென் அல்டிகோசியா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டுக்குச் செல்ல விமானப் பயணச் சீட்டு வாங்கினார். அப்போதே தான் வளர்க்கும் வெள்ளெலியை விமானத்தில் அழைத்துச் செல்லலாமா என்று கேட்டார். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் விமானத்தில் ஏறியதும் வெள்ளெலியை அனுமதிக்க விமான ஊழியர்கள் மறுத்தனர். “நான் அனுமதி பெற்றுதான் விமானத்துக்குள் அழைத்து வந்தேன். என் செல்லப்பிராணியின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனால் பிறருக்கு வெள்ளெலியால் ஆபத்து இல்லை என்றேன். எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எங்காவது ஓரத்தில் வைத்துக்கொள்கிறேன் என்றதையும் ஏற்கவில்லை. கழிவறையில் வெள்ளெலியைப் போட்டு, கொன்றுவிடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் செல்லப்பிராணியை எங்கோ தனியாக விட்டுச் செல்வதற்குப் பதில், நானே கழிவறையில் போட்டுவிட்டு, 10 நிமிடங்கள் அழுது தீர்த்தேன். இந்த வலியைத் தாங்க முடியவில்லை. ஏற்கெனவே இரு முறை நான் விமானத்தில் வெள்ளெலியை அழைத்து வந்திருக்கிறேன். இந்த முறை அவர்களிடம் அனுமதி பெற்றுதான் விமானத்தில் ஏறினேன். அதனால் தவறு ஸ்பிரிட் விமான நிறுவனம் மீதுதான். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்திருக்கிறேன்” என்கிறார் பெலேன். “வெள்ளெலிக்கு மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னோம். அடுத்த விமானத்தில் கூட பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறினோம். ஆனால் அவசரமாக அவர் செல்ல வேண்டும் என்பதால் இந்த விமானத்தில் ஏறிவிட்டார். சட்டதிட்டங்களின்படிதான் நாங்கள் நடந்துகொள்ள முடியும்” என்கிறார் விமானத்தை ஊழியர்.

பாவம், அந்த வெள்ளெலி!

http://tamil.thehindu.com/world/article22711388.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தினமும் 24 கி.மீ. தூரம் நடக்கும் 76 வயது முதியவர்

 

 
11chskomasalapic

சீனாவின் குவாங்ஷி பகுதியில் வசிக்கிறார் 76 வயது ஷி யுயிங். இந்த வயதான காலத்தில் கடந்த 4 ஆண்டுகளாகத் தினமும் சுமார் 24 கி.மீ. தூரம் நடந்து செல்கிறார்! ஷியின் 9 வயது பேரன் ஜியாங் ஹாவோயெனுக்கு 2 வயதில் பெருமூளை வாத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 வயதானபோது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அம்மா வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அன்று முதல் அப்பாவின் அம்மாவான ஷிதான் ஜியாங்கைக் கவனித்து வருகிறார். மகனின் மருத்துவச் செலவு அதிகம் என்பதால், இவனின் அப்பா வெளியூரில் பல வேலைகளைச் செய்து சம்பாதித்துக் கொடுக்கிறார்.

“குழந்தை நோயால் பாதிக்கப்பட்டாலும் மிகவும் புத்திசாலி. ரொம்ப அன்பானவன். தினமும் மூலிகை மருந்துகளை வைத்து, இவனது கால்களுக்கு மசாஜ் செய்வேன். ஆரோக்கியமான உணவுகளைச் செய்து கொடுப்பேன். அவனை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். இனி வாழ்நாளில் நடக்க முடியாது என்று சொன்ன கால்களை நான் மருந்துகளாலும் என்னுடைய மசாஜாலும் ஓரளவு குணப்படுத்தியிருக்கிறேன். இப்போது ஜியாங்கால் எழுந்து நிற்க முடியும். எதையாவது பிடித்துக்கொண்டு சற்றுத் தூரம் நடக்கவும் முடியும்.

இது மற்றவர்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவனைப் பொருத்தவரை இது மிகப் பெரிய முன்னேற்றம். எனக்குப் பிறகு அவனை, அவனேதானே பார்த்துக்கொள்ள வேண்டும்? இந்தப் புத்திசாலிக் குழந்தையை வீட்டோடு முடக்கி வைக்க எனக்கு மனம் இல்லை. அதனால் பள்ளியில் சேர்த்தேன். எங்கள் வீட்டிலிருந்து 2.8 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பள்ளி. வாகன வசதி வைத்துக்கொள்ள எங்களிடம் பணம் இல்லை. அத்துடன் இவனை யாரும் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவும் முடியாது. அதனால் தினமும் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு நடக்கிறேன். காலை பள்ளியில் விட்டுவிட்டு வருவேன். மதிய இடைவேளைக்குப் போய் அழைச்சிட்டு வருவேன். வீட்டில் சாப்பிட வைத்து, சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்து மீண்டும் பள்ளியில் சென்றுவிடுவேன். மீண்டும் மாலை சென்று அழைத்து வருவேன். ஒருநாளைக்கு 8 தடவை இப்படி நடக்கிறேன்.

மற்றவர்கள் இதைப் பெரிய விஷயமாகச் சொன்னாலும் எனக்கு இதில் ஒரு கஷ்டமும் இல்லை. ஓடியாடக்கூடிய வயதில் ஒரு குழந்தை இப்படிப் பாதிக்கப்பட்டிருப்பதைவிட என் கஷ்டம் ஒன்றும் பெரிதில்லை. என்னுடைய விடாமுயற்சியால் நிச்சயம் ஒருநாள் ஜியாங் மற்றவர்களைப் போல எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு செல்கிறேன்” என்கிறார் ஷி யுயிங்.

பாட்டியின் முயற்சியால் ஜியாங் உடலில் முன்னேற்றம் தெரிந்தாலும் சாதாரணமானவர்களைப் போல் அவனால் மாற இயலாது. கணிதத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனுக்குப் பெருமூளை வாதத்தால் பேனாவைக் கூடப் பிடிக்க முடிவதில்லை. இவனது மருத்துவச் செலவுகளுக்குக் கடன் வாங்கினாலும், எப்படியாவது நல்ல கல்வியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷி யுயிங்.

பாட்டியின் அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் ஏதாவது மேஜிக் நிகழட்டும்!

http://tamil.thehindu.com/world/article22719978.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூனைகளின் காவலர்!

 

 
13chkanHappy-Cat-Sanctuary

நியூயார்க்கில் வசிக்கும் கிறிஸ் அர்செனாட், வீட்டிலேயே பூனைகள் சரணாலயத்தை அமைத்திருக்கிறார். 58 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், பூனைகளை வளர்ப் பதற்கு நெகிழ்ச்சியான காரணம் இருக்கிறது. 2006-ம் ஆண்டு இவரது மகன் எரிக், 24 வயதில் விபத்தில் இறந்து போனார். அதில் மிகவும் உடைந்து போனார் கிறிஸ். மகன் மறைந்து 2 மாதங்களாகியும் துயரத்திலிருந்து மீள முடியவில்லை. “ரயிலில் ஒரு ட்ரிப் முடித்த பிறகு விரக்தியாக நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் தண்டவாளங்களில் சில பூனைகள் சுற்றிக்கொண்டிருந்ததைக் கண்டேன். இப்படிப் பல வருடங்களாக பூனைகளைப் பார்த்திருந்தாலும் அன்று ஏனோ புதிதாகத் தெரிந்தது. என் மகனே பூனைகளாக மாறியதுபோல் தோன்றியது. வேகமாகச் சென்று பூனைகளைத் தூக்கினேன். உணவளித்தேன். பிறகு தினமும் அந்த ரயில் நிலையத்துக்கு சென்று உணவளித்தேன். ஒருகட்டத்தில் என் வரவுக்காக பூனைகள் காத்திருக்க ஆரம்பித்தன. விடுமுறை நாட்களில் பூனைகள் ஏமாற்றம் அடைந்துவிடும் என்று வருத்தமாக இருந்தது. சில பூனைகள் நோய்வாய்ப்பட்டிருந்ததைக் கண்டேன். இப்படியே விட்டால் அவை இறந்துவிடலாம். உடனே 20 பூனைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். பூனைகளுக்கு மருத்துவம் பார்த்தேன். ஆரோக்கியமான உணவுகளை அளித்தேன். நானும் என் மனைவியும் பூனைகள் வந்ததுமுதல் மிகவும் பரபரப்பாக இருந்தோம். எங்கள் மகன் பற்றிய துன்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. 12 ஆண்டுகளில் பூனைகள் குட்டி போட்டதால் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. சாலைகளில் ஆதரவின்றி திரியும் பூனைகள், விலங்குகள் மையத்தில் வளர்க்க முடியாத பூனைகள் எல்லாம் எங்களிடம் வந்து சேர்ந்தன. இதனால் சுமார் 300 பூனைகள் எங்கள் வீட்டில் சேர்ந்துவிட்டன.

அதனால் வீடு, தோட்டம் முழுவதும் பூனைகள் நிறைந்திருக்கின்றன. இரவில் மட்டும் படுக்கையறையில் இருந்து பூனைகளை வெளியேற்றி விடுவேன். அதிகாலை நான் கதவைத் திறப்பதற்காக 60 பூனைகளாவது காத்துக்கொண்டிருக்கும். இவை எல்லாமே கைவிடப்பட்ட பூனைகள் என்பதால், மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகின்றன. உணவு, பால், தண்ணீர் வைப்பது, இடத்தைச் சுத்தம் செய்வது, மருந்து கொடுப்பது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அலுப்பே தெரியாது. இவற்றில் எப்போதும் 30 பூனைகளுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டியிருக்கும். நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பூனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் தாளை ஒட்டி வைத்துவிடுவேன். அதனால் எந்தப் பூனைக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது எளிதாக இருக்கிறது. உணவு, பால், மருந்து, இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு செலவு அதிகமாகும். 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 64 லட்சம் ரூபாய் செலவானது. பலரும் விருப்பப்பட்டு நன்கொடைகள் வழங்குகிறார்கள். அதனால் தாக்குப்பிடிக்க முடிகிறது. எங்களால் பூனைகள் பலன் பெறவில்லை, பூனைகளால் நாங்கள்தான் துன்பத்தை மறந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்” என்கிறார் கிறிஸ்.

பூனைகளின் காவலர்!

http://tamil.thehindu.com/world/article22738465.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மில்லியன் டாலர் மணப்பெண்

 

 
15chkanmillion-dollar-bride

120கிலோ எடையில் செய்யப்பட்ட மிக அழகான கேக் லுல்வா. ‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில், ‘துபாய் மணமகள் 2018’ விழாவில் இந்த கேக் பெண் கலந்துகொண்டார். இந்த கேக்கை உருவாக்கியவர் டெப்பி விங்ஹாம். உலகின் மிகவும் செல்வாக்கான, மதிப்பு மிக்க கலைஞர். இதற்கு முன்பு 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷு, 4.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர ஆடை, 67 மில்லியன் டாலர் மதிப்புள்ள திருமண கேக் போன்றவற்றை தயாரித்து, உலக அளவில் ஆச்சரியப்பட வைத்தவர். இவரது சமீபத்திய படைப்பும் மிகவும் விலை குறைந்த படைப்பும் இந்த மணப்பெண் கேக்தான்! லுல்வா பாரம்பரிய அரேபிய உடையை அணிந்திருக்கிறார். இதில் 25 கிலோ சாக்லெட்டும் 50 கிலோ மிட்டாயும் சேர்க்கப்பட்டிருக்கிறது. “சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் நிஜமான மணப்பெண் போலவே தோற்றமளிக்கும். கற்பனையாக ஒரு விஷயத்தை உருவாக்குவதைவிட, நிஜத்தை என்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பதையே விரும்புகிறேன். இந்த மணப்பெண் உடையில் 5 ஆயிரம் பூக்களும் 10 ஆயிரம் சாப்பிடக்கூடிய முத்துகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, 5 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வைரமும் 2 லட்சம் டாலர் மதிப்புடையது” என்கிறார் டெப்பி விங்ஹாம்.

அடேங்கப்பா கேக்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் ‘தஸ் டைமெய் ஆரம்பப் பள்ளி’ உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. இந்தப் பள்ளியின் சீருடை இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சீருடையின் விலை சுமார் 45 ஆயிரம் ரூபாய்! ஏற்கெனவே பள்ளிக் கட்டணத்தால் அல்லல்படும் பெற்றோருக்கு இந்த விஷயம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. விலை அதிகம் உடைய சீருடையை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்கிறார்கள் பெற்றோர்கள். இந்த விஷயம் ஜப்பான் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாயும் சிறுமியருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாயும் சீருடையின் விலையாக இருக்கிறது. புதிய சீருடையுடன் பை, கோட், ஸ்வெட்டர், சாக்ஸ் போன்றவற்றையும் சேர்த்தால் 47 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் எதிர்ப்பை பள்ளிக்கும் கல்வித் துறைக்கும் இமெயிலில் அனுப்பி வருகிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகமோ, ‘எங்கள் பள்ளியை தனித்துவமாகக் காட்டுவதற்கே இந்தச் சீருடையைக் கொண்டு வர இருக்கிறோம். ஏப்ரல் முதல் இந்தச் சீருடையில்தான் மாணவர்கள் வரவேண்டும்’ என்கிறது.

எளிமையான சீருடைக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன்?

http://tamil.thehindu.com/world/article22758287.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிறையிலிருந்து தப்பிக்க கூடு விட்டு கூடு பாய்ந்த கைதி

 

 
Giancarlo-Delgado-twin

பெரு நாட்டைச் சேர்ந்த 28 வயது அலெக்சாண்டர் ஜெஃபர்சன், பாலியல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரைப் பார்ப்பதற்காக இரட்டையரில் இன்னொருவரான ஜியான்கார்லோ சிறைச்சாலைக்கு வந்தார். கைதிகள் சந்திக்கக்கூடிய பொது வான அறையில் சகோதரர்கள் இருவரும் சந்தித்தனர். உணவு, நண்பர்களின் கடிதங்கள் போன்றவற்றை ஒப்படைத்தார். அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், ஜியான்கார்லோவைத் தன் அறைக்கு யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றார் அலெக்சாண்டர். அங்கே அறை நண்பர் ஏற்கெனவே திட்டமிட்டபடி குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து வைத்திருந்தார். விஷயம் அறியாத ஜியான்கார்லோவும் பானத்தைப் பருகினார். சட்டென்று மயக்கமடைந்தார்.

உடனே அவரது உடைகளைக் கழற்றித் தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளை அவருக்கு அணிவித்தார் அலெக்சாண்டர். அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஏற்கெனவே அன்று காலை செயல் இழக்கச் செய்திருந்தார். அதனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. வேகமாகச் சிறையிலிருந்து வெளியேறிவிட்டார்.

மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த ஜியான்கார்லோ அதிர்ச்சியடைந்தார். தன் சகோதரனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே சிறை அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொன்னார். இருவரும் உருவத்தில் ஒரே மாதிரி இருந்ததால், யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தான் நிரபராதி என்றும் தன்னுடைய அடையாளங்களைப் பரிசோதிக்கும்படியும் கூறிக்கொண்டே இருந்தார்.

அதிகாரிகளும் ஒருகட்டத்தில் இவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு, பரிசோதிக்க முடிவெடுத்தனர். அதில் அலெக்சாண்டரின் விரல் ரேகை இருந்த ஃபைல் மட்டும் காணாமல் போயிருந்தது. ஜியான்கார்லோ தான் நிரபராதி என்று நிரூபிக்க இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோனதில் உடைந்துபோனார். அதிகாரிகள் விரல் ரேகை தவிர்த்து சில அடையாளங்களை வைத்து, இவர் அலெக்சாண்டர் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் குற்ற வாளி தப்பிக்க உதவிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பிச் சென்றபோது காவலில் இருந்த 6 காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறை மிகத் தீவிரமாக அலெக்சாண்டரைத் தேட ஆரம்பித்தது. ஓராண்டுக்குப் பிறகு கடந்த வாரம் கைது செய்திருக்கிறது. ஏற்கெனவே 12 ஆண்டுகள் கிடைத்த தண்டனையுடன் தப்பிச் சென்ற குற்றத்துக்காக மேலும் 4 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 16 ஆண்டுகள் சிறைக்குள் இருக்க வேண்டும் அலெக்சாண்டர்.

“கடுமைக்கும் பாதுகாப்புக்கும் பெயர் பெற்ற எங்கள் சிறைச் சாலையில் இருந்து ஒரு கைதி எளிதாக வெளியேறியது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் சிறை அதிகாரி ஒருவர்.

”அலெக்சாண்டரால் நான் அநியாயமாக ஓராண்டு சிறைக்குள் இருந்தாலும் அவன் மீது எனக்கு இன்னும் அன்பு இருக்கிறது. தவறு செய்யாத என்னைச் சிறைக்குள் தள்ளி, தப்பித்த அவனிடம் இது குறித்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்” என்கிறார் வெளியே வந்திருக்கும் ஜியான்கார்லோ.

தமிழ் சினிமா பார்க்கிற மாதிரியே இருக்கே!

http://tamil.thehindu.com/world/article22781419.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விடாமல் துரத்தும் பீட்சா

 

 
18chkanpizza

ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் குய்டோ க்ரோல், சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். யாரோ ஒருவர் இவரது அலுவலகத்துக்கு தொடர்ந்து பீட்சாக்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்பதுதான் புகார். கடந்த இரண்டரை வாரங்களாக 100-க்கும் மேற்பட்ட பீட்சாக்களை இவர் பெற்றிருக்கிறார். இவற்றில் ஒரு பீட்சா கூட இவர் ஆர்டர் செய்யவில்லை. “இரவு பகல் என்று பார்க்காமல் யாரோ எனக்கு பீட்சாக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆர்டர் செய்த பீட்சா வந்துகொண்டிருக்கிறது என்று தொடர்ந்து எனக்கு இமெயில்களும் குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. எங்கள் தெருவில் பீட்சா கொடுக்கவரும் நபர்கள் பெரும்பாலும் என்னுடைய அலுவலகத்துக்கு மட்டுமே வருகிறார்கள். யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வாதாடி ஜெயிக்காத என்னுடைய கட்சிக்காரர்கள் யாராவது கோபத்தில் இப்படிச் செய்கிறார்களா, அல்லது எனக்கு வேண்டப்படாதவர்கள் இப்படிச் செய்கிறார்களா என்று தெரியாமல் நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒருநாள் காலை 27 நிமிடங்களுக்குள் 15 பீட்சாக்கள் வந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் ஏதாவது வைரஸ் வந்து தானாக பீட்சா ஆர்டர் செய்கிறதா என்று கூடப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்றும் இல்லை. பீட்சா டெலிவரி இமெயில்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பயந்து, விடுமுறை நாட்களில் போனைத் தொடுவதே இல்லை. வேறு வழியின்றி புகார் அளித்திருக்கிறேன்” என்கிறார் குய்டோ க்ரோல். ஜெர்மன் சட்டப்படி இப்படி யார் என்று தெரியாமல் உணவையோ, பொருட்களையோ அவர்கள் விருப்பமின்றி அனுப்பி வைப்பது குற்றம். குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

சாப்பாட்டால் அடிப்பதுன்னு சொல்றாங்களே, அது இதுதானோ!

மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரின் மரியானோ ஜிம்னெஸ் தெருவில் வைக்கப்பட்டிருக்கிற ஒரு விளம்பரம் எல்லோரையும் பேச வைத்திருக்கிறது. அந்த விளம்பரப் பலகையில் தொப்பி அணிந்த மனிதரின் படமும் அவரது முழு பெயரும் இருக்கின்றன. ‘நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் என் தொடர்பை துண்டித்துக்கொண்டாய். போன் செய்தால் எடுப்பதில்லை. இமெயில்களுக்கு பதில் அனுப்புவதில்லை. ஃபேஸ்புக்கில் கூட என்னை உன் நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிட்டாய். மருத்துவப் பரிசோதனையில் என் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. உன்னை நான் அவசியம் சந்திக்க வேண்டும். உன்னை எனக்கு அறிமுகம் செய்த நண்பரின் பார்வைக்கு இந்த விஷயம் சென்றால், உன்னைப் பிடிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்களாக இந்த விளம்பரப் பலகையைப் பார்ப்பவர்களில் சிலர் சிரிக்கிறார்கள். பலர் அந்தப் பெண்ணுக்காக வருத்தப்படுகிறார்கள். இன்னும் சிலர் இதைப் படம் எடுத்து, சமூகவலைத்தளங்களில் போட்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். கார்லோஸ் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டாரா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

ஏமாற்றுபவர்களுக்கு ஒரு பாடம்!

http://tamil.thehindu.com/world/article22785528.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நவீன ராபின்ஹூட்

 

 
20chskomasalapic

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் வசிக்கும் தாமஸ் வியரா கோம்ஸ் மிக மோசமான குற்றவாளியாக அறியப்படுகிறார். சமீபத்தில் இவர் செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பிரேசிலில் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சகம் லட்சக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போட்டுவருகிறது. பல இடங்களில் நோய்த் தடுப்பு மையங்கள் செயல்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எல்லோரும் உற்றுநோக்கக்கூடிய பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. வழக்கம்போல் ஏழைகள் வசிக்கும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தாமஸ் வசிக்கும் பகுதியில் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் களுக்கு அரசாங்கத்தின் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. ஜனவரி 27 அன்று இரவு தாமஸ் தன்னுடைய ஆட்களுடன் கிளம்பினார். ஒரு மருத்துவமனையில் இருந்த மருந்துகளையும் இரண்டு மருத்துவ உதவியாளர்களையும் கடத்தினார். அவர் வசித்த பகுதி யில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கெல்லாம் இருவரை வைத்து, போட வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் இருவரையும் மீண்டும் மருத்துவமனையில் பத்திரமாகக் கொண்டுவந்து விட்டுவிட்டார். காவல் துறை இந்தக் கடத்தலைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சகம், விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. கடத்தல் செய்தி சமூகவலைதளங்களில் பரவி, பாராட்டுப் பெற்றுவருகிறது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர், “இது மக்கள் பணி என்பதால் அவரைப் பாராட்ட வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். தாமஸைப் பிடிப்பதற்கு உதவி செய்கிறவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நவீன ராபின்ஹூட்..!

இங்கிலாந்தைச் சேர்ந்த 45 வயது கார்ல் பொல்லார்ட், தன்னுடைய 14 வயது மகள் ஸ்டெபானியுடன் மெக்லஸ்ஃபீல்ட் நகருக்கு வந்தார். டிராவலாட்ஜ் என்ற விடுதியில் தங்கினார். அவர் அறைக்கு சென்ற 10 நிமிடங்களில் காவலர்கள் வந்தனர். ஸ்டெபானி யார், எதற்காக வந்தீர்கள் என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர். “என் அம்மா மிக மோசமான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவு காலம் அவரால் வாழ முடியும் என்று தெரியவில்லை. சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு பேத்தியைக் காண விரும்பினார். அம்மாவுடன் மருத்துவமனையில் என் மனைவி தங்கியிருக்கிறார். நானும் மகளும் மட்டும் விடுதியில் தங்க முடிவெடுத்தோம். ஆனால் நான் குழந்தைகளிடம் உறவு கொள்பவன் என்று தவறாக இந்த விடுதியைச் சேர்ந்தவர்கள் கருதி, காவல் துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு என் மகளுடன்தான் வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்தனர். அம்மாவின் நிலையை நினைத்து மிகவும் கலங்கிப்போய் வந்திருக்கிறேன். இங்கே காவலர்களின் விசாரணை என் மனநிலையை மோசமாக்கிவிட்டது. குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மகளின் முன்னால் அப்பாவை விசாரணை செய்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கடைசியில் விடுதி நிர்வாகம் மன்னிப்புக் கேட்டு, கட்டணம் இன்றி தங்கச் சொல்லிவிட்டது. இதனால் எல்லாம் என் மன வலியைக் குறைக்க முடியாது” என்கிறார் பொல்லார்ட்.

ஒரு தந்தையால் எப்படி இதைத் தாங்க முடியும்?

http://tamil.thehindu.com/world/article22803607.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூழ்கிய படகு.. மூழ்காத லட்சியம்

 

 
21chskomasalapic

அமெரிக்காவைச் சேர்ந்த டான்னர் ப்ராட்வெல், நிக்கி வால்ஷ் இருவருக்கும் சாகசப் பயணங்களின் மீது தீராத ஆர்வம். அதிலும் இருவர் மட்டுமே பாய்மரப் படகில் சென்று உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். அதற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர். போதுமான பணம் சேர்ந்தவுடன், தங்களது பயணத் திட்டத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண்டு பயணம் என்பதால் வீட்டை விற்றார்கள். 3.3 லட்சம் ரூபாயில் 49 வருட பழைய பாய்மரப் படகு ஒன்றை வாங்கினார்கள். மேலும் செலவு செய்து, படகைத் தயார் செய்தார்கள். இருவருக்கும் கடல் பயணம் குறித்த அனுபவம் இல்லாததால், டான்னரின் அப்பா ஒரு சிறிய பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இருவரும் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பினார்கள். வேலையை விட்டார்கள். இருக்கும் பொருட்களை விற்று, பணத்தை எடுத்துக் கொண்டார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் உலகப் பயணம் செல்லும் திட்டத்தைத் தெரிவித்தார்கள். கடந்த 6-ந் தேதி சாகசப் பயணத்தை ஆரம்பித்தார்கள். நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தனர்.

முதல் நாள் மகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பயணம் அமைந்தது. இரண்டாவது நாள் மாலை வரை அந்த மகிழ்ச்சி நீடித்தது. இரவு 8.45 மணிக்கு அருகில் இருந்த கரைப் பகுதியில் ஒதுங்கலாம் என்று படகைத் திருப்பினார்கள். ஆனால் படகு எதிலோ மாட்டிக்கொண்டு, திரும்ப மறுத்தது. டான்னர் சட்டென்று படகின் அடிப்பகுதிக்குச் சென்று பிரச்சினையை அறிய முயன்றார். படகுக்குள் தண்ணீர் புகுந்து, இவர்கள் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் மிதந்துகொண்டிருந்தன. நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த டான்னர், உடனே கடற்படையைத் தொடர்புகொண்டார். 40 நிமிடங்களில் அவர்கள் இருக்கும் பகுதிக்கு மீட்புக் குழுவை அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள். உடனே கொஞ்சம் பணம், துணிகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, உயிர்காக்கும் சிறிய படகில் இருவரும் ஏறிக்கொண்டனர். மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது, பாய்மரப்படகு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. மீட்புக் குழு இருவரையும் அருகில் இருந்த நகரத்துக்குப் பத்திரமாக அழைத்துச் சென்றது. அங்கே விடுதியில் தங்கியிருந்தனர்.

“எங்கள் லட்சியமே மூழ்கிவிட்டதாகத் தோன்றியது. பணத்தை இழந்துவிட்டோம். வேலையை விட்டுவிட்டோம். எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. இருவருக்கும் உறக்கமே வரவில்லை. மறுநாள் காலை டான்னரின் அம்மா வந்து சேர்ந்தார். விஷயம் அறிந்த உள்ளூர் மனிதர்கள் உதவிக்கு வந்தனர். எதிர்காலம் குறித்த நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. கையில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. புதுப் பாய்மரப் படகு வாங்க வேண்டும் என்றால் 6.4 லட்சம் ரூபாய் தேவைப்படும். எல்லோரும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றார்கள். நாங்கள் ஒருபோதும் எங்கள் லட்சியத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. மீண்டும் பணம் சேர்த்துக்கொண்டு, கடல் பயணம் குறித்த விஷயங்களைத் தெளிவாக அறிந்துகொண்டு நிச்சயம் ஒருநாள் பயணிப்போம்” என்கிறார் நிக்கி. இவர்களின் லட்சியப் பயணம் நிறைவேற வேண்டும் என்பதற்காகப் பலரும் உதவ முன்வந்திருக்கிறார்கள்.

படகு மூழ்கினாலும் லட்சியம் மூழ்கவில்லை!

http://tamil.thehindu.com/world/article22812497.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: எங்கிருந்தோ கேட்கும் மர்மக் குரல்..

22chkanWindsor

கனடாவில் உள்ள வின்ட்சர் நகர் குடியிருப்புப் பகுதியில் தினமும் அமானுஷ்யமான சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது, ஏன் வருகிறது, அதை எப்படித் தடுப்பது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. சில நேரம் மணிக்கணக்கில் நீடிக்கும், சில நேரம் நாட்கணக்கில் நீடிக்கும். தொடர்ந்து இந்த சத்தத்தைக் கேட்பவர்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, எரிச்சல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலர் இந்த சத்தத்துக்குப் பயந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

“ஆரம்பத்தில் பேய், பிசாசோ என்று பயந்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வீட்டுக்குள், காருக்குள் இருந்தால் இந்தச் சத்தத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். தோட்டத்துக்கு தண்ணீர் விடலாம் என்றாலோ, சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் இருக்கலாம் என்றாலோ முடியாது. இதுவரை 2,10,000 பேர் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் சத்தம் குறித்து ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்தம் எப்போது வரும், எப்போது நிற்கும் என்று சொல்ல முடியாது. வேறு இடங்களுக்கு செல்ல முடிந்தவர்கள் தப்பிவிட்டனர். நாங்கள்தான் இந்த சத்தத்துடனே காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். விலங்குகளின் நிலை இன்னும் மோசம். அவை மிகுந்த மன அழுத்தத்துக்கு சென்றுவிடுகின்றன. நாய்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்கின்றன. பூனைகள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை” என்கிறார் 64 வயது மைக் ப்ரோவோஸ்ட். பொறியாளர் டிம் கார்பென்டர், “இது ஏதோ இயந்திரங்களை வைத்து நிலத்தைத் தோண்டுவதுபோல் தெரிகிறது. பக்கத்து தீவுகளில் உள்ள அமெரிக்க இரும்பு தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்களை வைத்து வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் சத்தமா என்று தெரியவில்லை” என்கிறார். கனடா அரசாங்கமும் ஆராய்ச்சியாளர்களும் பிரச்சினையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க தொழிற்சாலை இந்தப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு இதுவரை ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாத சத்தமா?

ரஷ்யாவைச் சேர்ந்த 15 வயது மரியா ஸ்வெடோஸாரோவாவும் 12 வயது அனஸ்டாசியா வினோக்ராடோவாவும் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டனர். சகோதரிகள் இருவரும் வீடியோவில் தங்களின் இறுதி நிமிடங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். டிமிட்ரி என்ற இளைஞரை மரியா காதலித்திருக்கிறார். சிற்றன்னை இதைக் கண்டித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் மரியா என்கிறார்கள் அவரது தோழிகள். “என்னை மன்னித்துவிடு. நான் உன்னை அதிகம் விரும்புகிறேன், என்னை விட நல்ல இணை உனக்குக் கிடைக்கும்” என்று டிமிட்ரிக்கு வீடியோவில் தகவல் சொல்லியிருக்கிறார் மரியா. அனஸ்டாசியா, “போய் வருகிறேன். எல்லோரையும் உண்மையாக விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, 10 மாடி கட்டிடத்திலிருந்து ஒன்றாக குதித்து, இறந்து போயிருக்கிறார்கள். இது ப்ளூவேல் சவாலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடக் கொடுமையே!

http://tamil.thehindu.com/world/article22822136.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சாம்பல் பாதி; கறுப்பு பாதி!

 

 
23chskocat

பிரான்ஸில் பிறந்த பூனை ஒன்று உலக முழுவதும் கவனத்தை ஈர்த்துவிட்டது. முகத்தின் சரி பாதி, சாம்பல் நிறமாகவும் மீதி கறுப்பாகவும் அமைந்திருக்கிறது. இரண்டு வெவ்வேறு மரபணுக்கள் சேரும்போது இப்படிப்பட்ட தோற்றம் உருவாவது உண்டு. இவற்றை கிமேரா பூனைகள் என்று அழைக்கிறார்கள். விலங்குகள், மனிதர்களில்கூட இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

சாம்பல் பாதி; கறுப்பு பாதி!

எவ்வளவு கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் கூடச் செலுத்தாமல், கடனை மறைய வைப்பதாகச் சொல்கிறார் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆன்மிக குரு. ஸ்விஸின்டோ வேர்ல்ட் டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஆர்பிட் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடனில் மூழ்கியிருக்கிறார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்களின் அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு மேஜிக் நிகழ்ந்து, தங்கள் கடன் கரைந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடன்களை மாயமாக மறைய வைப்பதாகச் சொல்கிறார் பபாக் சோகிஹார்டோனோடோனேகோரோ. இப்படிச் சொல்கிறவர்களை நம்ப முடியாது என்றாலும் கடனில் அல்லல்படுகிறவர்கள் இவரை நம்பத் தயாராக இருக்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் இவரது அமைப்புக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவரைக் கடவுள் போல் அவர்கள் நம்புகிறார்கள்.

“எனக்குப் பத்தாயிரம் டாலர் கடன் இருந்தது. ஆனால் ஸ்விஸின்டோவில் சேர்ந்த பிறகு என்னுடைய பிரச்சினைகள் காணாமல் போயின. எனக்கு ஒரு ரசீது வழங்கப்பட்டது. நான் வாங்கிய நிதி நிறுவனத்துக்குச் சென்று, ரசீதைக் காட்டி என்னுடைய ஆவணங்களைக் கேட்டேன். நான் கடன் வாங்கியதற்கான எந்தவித ஆதாரமும் அங்கே இல்லை. என்னுடைய பிறப்புச் சான்றிதழ் மட்டும் இருப்பதாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் நான் குருவை நம்பவில்லை. ஆனால் என் கடன் மறைந்தபோது இந்த அமைப்பு மீதும் குரு மீது அசாத்தியமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது” என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிமாரி டெட்டர்.

இந்தோனேஷிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த அமைப்பு மீது கடுங்கோபத்தில் இருக்கின்றன. தினமும் ஏராளமானவர்கள் ரசீதுகளை வைத்துக்கொண்டு, தங்கள் கடன் மறைந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். தங்கத்தையும் பிளாட்டினத்தையும் ஏராளமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் குரு. அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும் அரசாங்கத்திடமிருந்து தப்பிக்கவும் இதுபோன்று சிறு கடன்களை அடைத்து, மறைய வைப்பதாக நாடகம் ஆடுகிறார் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். நிதி மோசடிகளைக் கவனிக்கும் இந்தோனேசிய நிறுவனம், இவரை மோசடிப் பேர்வழி என்று கூறியிருக்கிறது.

“அரசாங்கம் தவறு செய்கிறது. நான் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை. என்னை நம்புகிறவர்களின் கடன் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறேன். எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் குரு பபாக்.

இந்திய கடனை இவரால் மறைய வைக்க முடியுமா?

http://tamil.thehindu.com/world/article22832583.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மரண பயத்தை காட்டிய சிங்கங்கள்

 

 
24chskolion

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் சஃபாரியில் சிங்கங்களைப் பார்க்க குழந்தைகளுடன் சென்றார் அபி டூட்ஜ். காருக்குள் அமர்ந்தபடி பூங்காவைச் சுற்றி வரும்போது, திடீரென்று கம்பிக் கதவைத் திறந்துகொண்டு சிங்கங்கள் ஆக்ரோஷமாக ஓடிவந்தன. “நானும் தோழியும் முன்பக்கம் அமர்ந்திருந்தோம். குழந்தைகள் பின்பக்கம் அமர்ந்திருந்தார்கள். சிங்கங்கள் வெளிவந்ததும் அத்தனை பேரும் பயத்தில் உறைந்து போனோம். சுமார் 30 சிங்கங்கள் எங்கள் காரைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிங்கம் காரின் முன்பக்கக் கண்ணாடியில் காலால் ஓங்கி அறைந்தது. அடித்த வேகத்தில் கண்ணாடி உடைந்து, சிங்கங்களுக்கு இரையாகிவிடுவோம் என்று நினைத்தேன். யாரும் யாருடனும் பேசும் நிலையில் இல்லை. வேகமாக காரை எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது. அதற்கேற்ற உடல் பலமோ, மன தைரியமோ இல்லை. ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் சிங்கங்கள் கொஞ்சம் அசைந்தால் இன்னும் கோபமடைந்துவிடலாம் என்று பயந்தேன். 50 நிமிடங்களுக்குப் பிறகு சிங்கங்கள் கொஞ்சம் சாந்தமடைந்தன. பூங்கா ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறோம்” என்கிறார் அபி டூட்ஜ்.

ஐயோ… ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கே!

எகிப்தைச் சேர்ந்த 30 வயது சமீஹா, திருமணம் ஆன 40 நாட்களில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஒரு சாண்ட்விச் கூட வாங்கித் தராத கஞ்சனாகத் தன் கணவர் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். “என் கணவர் அஹமது ஆசிரியராக இருக்கிறார். திருமணம் நடந்த இரவு, எனக்கு வெளியில் செல்வதெல்லாம் பிடிக்காது. பணமும் நேரமும் விரயம் என்றார். ஆனால் தினமும் ஒவ்வொரு விஷயத்திலும் கஞ்சத்தனத்தைக் காட்ட ஆரம்பித்தபோது வாழ்க்கை கடினமாகிவிட்டது. நல்ல வேலையில் இருக்கிறார். நல்ல சம்பளம் வாங்குகிறார். தவிர, வீட்டில் படிப்புச் சொல்லித் தருகிறார். ஒருநாள் கொஞ்சம் ரொட்டித்துண்டை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டேன். இன்னிக்கு ஏன் இவ்வளவு சாப்பிட்டே என்று கேட்டார். அந்த வாரம் முழுவதும் நான் ரொட்டி சாப்பிடக் கூடாது என்று தண்டனை கொடுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. என் மாமியாரிடம் சொன்னேன். அவர் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு, என்னை வெளியே அழைத்துச் செல்லும்படி கணவரிடம் சொன்னார். நாங்கள் இருவரும் முதல் முறை வெளியே சென்றோம். மிகவும் தாகமாக இருந்தது. ஏதாவது குடிக்க வாங்கித் தரும்படி கேட்டேன். குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரத்தில் பசி வந்துவிட்டது. சாண்ட்விச் கேட்டேன். நீ கேட்ட குளிர்பானம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். இனி எதுவும் வாங்கித்தர முடியாது என்று மறுத்துவிட்டார். ஒரு சாண்ட்விச் வாங்கித் தர முடியாத நிலையில் கணவர் இல்லை. வழியெல்லாம் என்னைத் திட்டிக்கொண்டே வந்தார். வாழ்க்கை வெறுத்துவிட்டது. காலம் முழுவதும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட முடியாது. என் பெற்றோரும் புரிந்துகொண்டனர்” என்கிறார் சமீஹா.

வாழ்க்கையைத் தொலைத்த கஞ்சத்தனம்!

http://tamil.thehindu.com/world/article22842077.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் சிகரெட் துண்டுகள்

 

 
25chskomasalapic

கலிபோர்னியாவைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக, புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி, சேகரித்தும் வருகிறார். கடந்த 14-ந் தேதியுடன் 10 லட்சம் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவிட்டிருக்கிறார். தினமும் இடுக்கி, குப்பைத் தொட்டியுடன் கிளம்பி விடுகிறார். கண்ணில் படும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்கிறார். தன்னுடைய சிறிய கருவியில் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்கிறார். “பத்து லட்சம் சிகரெட் துண்டுகளை மூன்றரை ஆண்டுகளில் நான் சேகரித்ததை எல்லோரும் சாதனையாக நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது வேதனை. சிகரெட் பிடிப்பவர்களை மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் தீங்கை விளைவிக்கிறது. குப்பைத் தொட்டியில் போடாமல், தெருவில் வீசும் சிகரெட் துண்டுகளே இவ்வளவு என்றால், மொத்த எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ஒரு சில நாட்கள் 3 ஆயிரம் சிகரெட் துண்டுகளைக் கூடச் சேகரித்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பவர்களிடம் குப்பைத் தொட்டியில் முறையாகப் போடச் சொல்வேன். பிறகு சிகரெட் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கி, பழக்கத்தை விட்டுவிடும்படிக் கேட்டுக்கொள்வேன். புகைப் பிடிப்பதை விடுகிறார்களோ இல்லையோ, தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் வீசும் வழக்கத்தையாவது சிலர் கடைபிடிப்பது என்னுடைய முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்” என்கிறார் சாலி டாலி.

சமூகத்துக்கு நல்லது செய்யும் சாலிக்கு வாழ்த்துகள்!

ரஷ்யாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கு 2011-ம் ஆண்டு வோல்வோக்ராட் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதால், ஒரு வாரம் கூட உயிருடன் இருக்காது என்றார்கள் மருத்துவர்கள். அதனால் தாயிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அவரை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றவர்களுக்குக் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தை இறந்து இரண்டு நாட்களாகிவிட்டதாகச் சொன்னார்கள் வருத்தத்தோடு திரும்பிவிட்டனர். ஆனால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தைகள் காப்பகத்திலிருந்து, 2.6 லட்சம் ரூபாயைச் செலுத்தும்படி ரசீது வந்தது. பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. காப்பகத்துக்கு நேரில் சென்றனர். மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகளை மருத்துவமனை, இந்தக் காப்பகத்துக்குக் கொடுத்துவிடும். குழந்தை உயிருடன் இருக்கும்வரை பெற்றோர் கட்டணம் செலுத்த வேண்டும். 7 வயதான தங்கள் குழந்தை உயிரோடு இருப்பதைக் கண்டதும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மருத்துவமனைக்குச் சென்று விஷயத்தைக் கூறி நியாயம் கேட்டனர். தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டது மருத்துவமனை நிர்வாகம். பெற்றோர் நீதிமன்றத்துக்குச் சென்று முறையாகத் தங்கள் குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் காப்பகம் ஏன் 7 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலிக்காமல் இருந்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்கள் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர், மருத்துவமனை மீதும் காப்பகம் மீதும் வழக்குத் தொடுப்பார்களா என்று தெரியவில்லை.

என்ன அநியாயம்?

http://tamil.thehindu.com/world/article22846481.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.