Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: அன்புக்குப் பூனையும் அடிமை

 

 
22chskopic

தென் கரோலினாவின் ஒரு வீட்டில் வசித்த டாபி என்ற பூனையை, அதன் உரிமையாளர் இன்னொருவருக்கு வழங்கிவிட்டார். 12 மைல் தொலைவில் இருந்தது அந்த புதிய வீடு. டாபிக்கு ஏற்கெனவே வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை. யாரும் கவனிக்காத நேரம் பார்த்து, வீட்டை விட்டு வெளியேறியது. 12 மைல்கள் நடந்து பழைய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. டாபியைக் கண்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாத டாபியை, தாங்கள் கொடுத்து விட்டோமே என்று குற்றவுணர்வு அடைந்தனர். இனி டாபியை யாருக்கும் கொடுக்க இயலாது என்று கூறிவிட்டனர்.

அன்புக்குப் பூனையும் அடிமை!

 

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றியவர் மிஸுகி நான்கனோ. எட்டு ஆண்டுகளாகப் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். சமீபத்தில் ஜப்பானியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார். காற்றிலிருந்து தனக்குத் தேவையான புரோட்டீனைப் பெற்றுக்கொள்வதாகவும் இப்போது தான் ஒரு சூப்பர் மனிதராக வலம் வருவதாகவும் கூறியிருக்கிறார். “2009-ம் ஆண்டு திடீரென்று பழ உணவுக்கு மாறிவிட முடிவு செய்தேன். ஆனால் நம் உடலுக்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துகள் தேவை. சமச்சீர் உணவில்தான் இவை கிடைக்கும். பழ உணவில் சமச்சீர் சத்துகள் கிடைக்காது. இதனால் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படலாம். பழ உணவைப் பற்றி நிறைய படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். அதன் மூலம் நீண்ட காலப் பழ உணவுப் பழக்கத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் என்னையே கினியா பன்றியாக நினைத்துக் கொண்டு, இந்தப் பரிசோதனையில் இறங்கினேன்.

ஒரே நாளில் பழ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழங்களைச் சாப்பிட்டு, உடலையும் மனதையும் தயார் செய்தேன். ஒருகட்டத்தில் தண்ணீர் கூடப் பருகாமல் முழுக்க பழ உணவுப் பழக்கத்துக்கு வந்துவிட்டேன். என் பரிசோதனைகளையும் முடிவுகளையும் வலைதளத்தில் எழுதிவந்தேன். 2015-ம் ஆண்டு தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தேன். பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. நான் பழங்களைத் தவிர விட்டமின் பி12, புரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் யாரும் நம்பவில்லை. மனித உடலுக்கு புரோட்டீன் அவசியம், அதை நான் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறேன்.

நான் பழ உணவுப் பழக்கத்தில் இருப்பதால், என்னுள் ஸ்பெஷல் வகை பாக்டீரியா வளர்ந்து வருகிறது. அதுதான் காற்றிலிருந்து புரோட்டீனை எடுத்துக்கொள்கிறது. தற்போது நான் சத்துக் குறைபாட்டால் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதைப் பொய் என்று நிரூபிக்கவே மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பழ உணவை மட்டும் சாப்பிடும் சூப்பர் மனிதன் என்பதை உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும்” என்கிறார் மிஸுகி நான்கனோ. இவரது உணவுப் பழக்கத்தை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

சூப்பர் மனிதரா என்பதைக் காலம்தான் நிரூபிக்கும்!

http://tamil.thehindu.com/world/article23634143.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: வலி நிவாரணியால் ஏற்பட்ட விபரீதம்

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
24chskopic
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது ஸ்கார்ட் பர்டி சமீபத்தில் வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டார். அதன் விளைவாகத் தற்போது பெண் மேல் உள்ள ஆர்வம் ஆண் மீது திரும்பிவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார். “6 மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பாதம் பாதிக்கப்பட்டது. அந்த வலியைக் குறைக்க, மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரை யைப் பரிந்துரைத்தனர். வலி தொடர்ச்சியாக இருந்ததால் வலி நிவாரணியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் காதலியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது இருந்த காதல் குறைந்துகொண்டே வந்தது. அவரிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது. இதனால் என் காதலிக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டோம். என்னுடைய இந்த மாற்றம் குறித்து ஒன்றும் புரியாமல் மிகவும் குழப்பம் அடைந்தார். எனக்கு காதலி மீதுதான் ஆர்வம் குறைந்ததே தவிர, பிற ஆண்களைப் பார்க்கும்போது காதல் ஊற்றெடுத்தது. 6 மாதங்களுக்குப் பிறகு காதலி, உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டார். அது குறித்து எனக்கு வருத்தமோ வலியோ இல்லாததை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். இந்த வலி நிவாரணியைத் தவிர, வேறு எதையும் புதிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாத்திரைக்கும் என்னுடைய விருப்ப மாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்தேன். இறுதியில் நான் ஓரினச் சேர்க்கையாளராக மாறியதற்குக் காரணம் இந்த மாத்திரைதான் என்ற முடிவுக்கு வந்தேன். என் காதலியை நேரில் சந்தித்து, இனி எப்போதும் உன்னை ஏற்றுக்கொள்ளவே இயலாது என்றும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டேன். முதலில் நம்ப மறுத்தவர், பிறகு நான் நேர்மையாக ஒப்புக்கொண்டேன் என்று பாராட்டினார். இந்த வலி நிவாரணி மீது நான் குற்றம் சுமத்தினாலும் இப்படி என் விருப்பம் மாற்றம் அடைந்ததில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்கிறார் ஸ்கார்ட் பர்டி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மருந்து நிறுவனம் மறுத்திருக்கிறது.

வலி நிவாரணியால் ஏற்பட்ட விபரீதம்!

 

சீனாவில் வாகனங்கள் நிறுத்தும் இடம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பார்க்கிங் டிக்கெட் வாங்காமல் வாகனங்களை நிறுத்தினால், அது கிரிமினல் குற்றம். பரபரப்பான நேரத்தில் போக்குவரத்து அதிகாரிகள் டிக்கெட்டில் இருக்கும் தேதியை மட்டும் சரிபார்த்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். சமீபத்தில் ஒரு பெண் தன்னுடைய காரில் பார்க்கிங் டிக்கெட்டை ஒட்டிவிட்டு, சென்றுவிட்டார். இதைப் பார்த்த போக்குவரத்து அதிகாரி காருக்கு அருகே வந்து பார்வையிட்டார். அதில் பார்க்கிங் டிக்கெட் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தேதி உட்பட மற்ற தகவல்கள் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால் அரசாங்க முத்திரை மட்டும் இல்லை. இது போலி டிக்கெட் என்பதைக் கண்டுகொண்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டார். அந்தப் பெண் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்காமல், காரைவிட்டு இறங்கியவுடன் சுற்றும் முற்றும் பார்த்து, பையில் இருந்த பார்க்கிங் டிக்கெட்டை ஒட்டுவதைக் கண்டார். வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் மாட்டிக்கொள்வார்கள்!

http://tamil.thehindu.com/world/article23654198.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: போட்டோஷாப் மேயர்

 

 
25chskopic
 

பிரேசிலின் அல்வோராடா பகுதியின் மேயராக இருக்கிறார் ஜோஸ் அர்னோ அப்போலோ. சமீபத்தில் இவரும் இவருடைய 2 உதவியாளர்களும் நகரில் நடைபெற்று வரும் அரசாங்கப் பணிகளைப் பார்வையிட்டதாக அதிகாரப்பூர்வமான பேஸ்புக் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. விளக்கமும் அளிக்கப்பட்டன. வேலை நடந்ததாகக் கூறப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மேயர் வராமல் இது எப்படி சாத்தியம் என்று அதிர்ந்து போனார்கள். இன்னும் சிலர் இந்தப் படங்களை ஆராய்ந்து, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் என்பதை நிரூபித்தனர். மேயருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் இடையே உள்ள தூரம், அந்தப் படத்துக்கும் இவர்களது படத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றவை இது போட்டோஷாப் என்ற உண்மையை வெளிப்படுத்திவிட்டன. இந்த விஷயம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவியவுடன் மேயர் அலுவலகம் அந்தப் படங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டது. ஆனால் இந்த விஷயத்தை வைத்து விதவிதமான மீம்கள் வெளிவந்துவிட்டன. மேயரும் உதவியாளர்களும் திரைப்படக் காட்சியில் தோன்றுவது, புகழ்பெற்ற மீட்பர் கிறிஸ்து சிலையின் கைகளில் நிற்பது, சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிற்பது போன்றெல்லாம் மீம்கள் வந்துவிட்டன. நிர்வாகம் இந்தச் செயலைக் கண்டித்திருக்கிறது. செய்யாத ஒரு வேலையைச் செய்ததாகச் சொல்லி, ஆதாரமாகப் படங்களையும் காட்டும்போது, அது இல்லை என்று நிரூபிக்க வேண்டியது மக்களின் கடமையாகிவிட்டது என்கிறார்கள் சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்கள்.

அட, மீம் போடுவதில் நம்மையும் மிஞ்சிவிட்டார்களே!

 

 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது ட்ரூ, 4 நாட்கள் பயணமாகத் தனியாகப் பாலி தீவுக்குச் சென்றிருந்தார். எப்போதும் பெற்றோருடன் சூடான விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். சிறிது நேரத்தில் சரியாகிவிடுவார். ஆனால் அன்று அம்மாவுடன் பயங்கரமாகச் சண்டை போட்டார். அம்மாவின் கிரடிட் கார்டைத் திருடினார். யாரிடமும் சொல்லாமல் பாலி தீவுக்குக் கிளம்பினார். ட்ரூவின் குடும்பத்துக்கு மிகவும் பிடித்த இடம் பாலி. அடிக்கடி சென்றிருக்கிறார்கள். இந்த முறை பெற்றோர் இல்லாமல் தனியாகச் சென்று, மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தார். பெற்றோர் எழுதி கையெழுத்துப் போட்டதுபோல் ஒரு கடிதம் வைத்திருந்ததாலும் இவரை விமானத்தில் அனுமதித்துவிட்டனர். விமானப் பணியாளர்கள், அருகில் இருந்தவர்கள் என யாரிடமும் ட்ரூ பேச்சு கொடுக்கவில்லை. பாலியில் மட்டும் ஓர் அதிகாரி அம்மா எங்கே என்று கேட்டார். நான் கழிவறைக்குச் சென்று வருவதற்குள் வெளியேறிவிட்டார். வாயிலில் காத்திருப்பார் என்றார். தங்கும் விடுதியில் அறைக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டதால், பிரச்சினை வரவில்லை. வாடகைக்கு ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டார். பாலியைச் சுற்றி வந்தார். ட்ரூவைக் காணாமல் அவரது பெற்றோர் தேடினர். பாலி வந்திருக்கும் விஷயத்தை அறிந்தனர். உடனே வந்து சேர்ந்தனர். “12 வயது சிறுவன் தனியாக விமானம் ஏறியதை, எங்கள் நாட்டு விமான ஊழியர்கள் கேள்வி கேட்காதது அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இவரது அம்மா எம்மா. “சாகசப் பயணத்துக்குத் திட்டமிட்டேன். அதை செய்து முடித்தேன்” என்கிறார் ட்ரூ.

இதெல்லாம் ரொம்ப அநியாயம் ட்ரூ…!

http://tamil.thehindu.com/world/article23666861.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அன்புக்கு மரணமில்லை!

 

 
kate1

இங்கிலாந்தில் வசிக்கும் கிறிஸ் தனது 41-வது பிறந்தநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அன்று பொக்கிஷப் பெட்டியிலிருந்து ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை எடுத்துப் பிரித்தார். ‘என் அன்பு கிறிஸ், உனக்கு இன்று 41-வது பிறந்தநாள். இருந்த கொஞ்சம் முடியும் கொட்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் நீ மிகவும் வசீகரமாக இருப்பாய். எப்போதும்போல் நானும் என்னுடைய அன்பும் உன் கூடவே இருப்போம். ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துகள். அன்புடன் உன்னுடைய கேட்’ என்று அழகான கையெழுத்துகளில் இருந்த வாழ்த்தைப் படித்து, கண்ணீர் வடித்தார் கிறிஸ்.

”2001-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம். முதல்முறை பார்த்தபோதே என் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார். அவர் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். முதல் 5 ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் கழிந்தது. நாங்கள் சுற்றுலாவுக்குச் சென்றபோது திடீரென்று உடல் நலக் குறைவு. சாதாரணப் பிரச்சினை என்றுதான் நினைத்தோம். ஆனால் புற்றுநோய் என்று தெரிந்தபோது பயந்துவிட்டோம். விரைவிலேயே மனதைத் தேற்றிக்கொண்டு சிகிச்சையில் இறங்கினோம். 3 வருடக் கடினமான சிகிச்சையில் கேட் முற்றிலும் மாறிப் போனார். ஒருகட்டத்தில் குணப்படுத்த முடியாது என்று தெரியவந்தது. இனி மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், இயற்கையாக மரணத்தை சந்திக்கப் போவதாக கேட் சொன்னதை, நானும் ஏற்றுக்கொண்டேன். உற்சாகமாக மருத்துவப் பணிக்குத் திரும்பினார்.

முதிய நோயாளிகளை வழக்கம்போல் அன்பாகக் கவனித்துக்கொண்டார். தன்னைப் போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவும் விதத்தில் ‘ஹலோ மை நேம் இஸ்…..’ என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து, நன்கொடை திரட்டினார். இது பெரிய அளவில் பிரபலமானது. நன்கொடையும் குவிந்தது. புற்றுநோய் மருத்துவமனையின் அறக்கட்டளைக்குச் சென்றது. ராயல் கல்லூரியின் மருத்துவர்களுக்கான விருது, இளவரசர் சார்லஸ் கையால் கேட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் இளம் மருத்துவர் இவர்தான். பிறகு 2 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். நேரம் கிடைக்கும்போது நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். ஒரு பக்கம் கேட் மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அவரது உடல் மிகவும் மோசமடைந்தது. ஒருநாள் இரவு நான் கேக் சாப்பிடலாமா என்று கேட்டார். சாப்பிடாவிட்டாலும் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று சொன்னவுடன் சிரித்துவிட்டார்.

அன்று இரவு முழுவதும் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். சில நாட்களில் என் கையைப் பிடித்தபடி அவரது உயிர் அமைதியாகப் பிரிந்தது. என் மனைவியை இழந்து மிகவும் துயரப்பட்டேன். ஒரு வாரம் கழித்து அவருடைய படுக்கைக்கு அருகில் இருந்த பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. ‘உன்னுடைய 65-வது பிறந்தநாள் வரைக்குமான வாழ்த்து அட்டைகள் இங்கே இருக்கின்றன. கண்டிப்பாக அந்தந்த பிறந்தநாள் அன்றுதான் பிரித்துப் படிக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார். 2 ஆண்டுகளாக என் பிறந்தநாளை இதுதான் சுவாரசியப்படுத்துகிறது. இன்று அவர் இல்லாவிட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்த பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!” என்கிறார் கிறிஸ்.

அன்புக்கு மரணமில்லை!

http://tamil.thehindu.com/world/article23678551.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: லிட்டில் ப்ரூஸ் லீ!

 

 
27chskopic
 
 

ஜப்பானைச் சேர்ந்த 8 வயது ரைசியாய் இமாய், தற்காப்பு கலைகளில் மிகச் சிறந்தவராகத் திகழ்கிறார். தற்காப்பு கலைகளின் மகத்தான கலைஞர் ப்ரூஸ் லீயின் மறுபிறவிபோல் இருக்கிறார். தினமும் கடினமான உடற்பயிற்சிகளை விரும்பிச் செய்கிறார். பள்ளிக்கும் செல்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகத்தின் பார்வைக்குத் தெரிய வந்தார் இமாய். 1972-ம் ஆண்டு வெளிவந்த ப்ரூஸ் லீயின் ‘கேம் ஆஃப் டெத்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நன்சாகூ தற்காப்பு கலையை அப்படியே 4 வயதில் செய்து காட்டினார். உலகமே பிரமித்துப் போனது. தொலைக்காட்சிப் பெட்டியில் ப்ரூஸ் லீயின் திரைப்படம் ஓட, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு திரும்பி நின்று இமாய் அதையே செய்து காட்ட, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ப்ரூஸ் லீயின் ரசிகர்கள் அவரைப்போல் இன்னொருவர் உருவானது கண்டு ஆச்சரியமடைந்தனர். பாராட்டுகள் குவிந்தன. ஆனால் எந்தப் பாராட்டையும் புகழையும் இமாய் கண்டுகொள்ளவே இல்லை. தன்னுடைய லட்சியத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தினார். இந்த மூன்று ஆண்டுகளில் தன்னுடைய உடலை லிட்டில் ப்ரூஸ் லீயாக மாற்றியிருக்கிறார்!

“ஒரு வயதிலிருந்தே ப்ரூஸ் லீயின் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். நாட்கள் செல்லச் செல்ல அவனது ஆர்வம் அதிகரித்தது. தானாகவே கை கால்களை உதைத்து தற்காப்பு கலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவனது ஆர்வத்தைப் பார்த்துப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தோம். தினமும் காலை 6 மணிக்குப் பயிற்சி செய்ய ஆரம்பிப்பான். 2.5 மணி நேரம் பயிற்சியை முடித்துவிட்டு, பள்ளிக்குச் செல்வான். பள்ளியிலிருந்து வந்தவுடன் மீண்டும் 2 மணி நேரம் கிக்ஸ், நன்சாகூ போன்றவற்றில் பயிற்சி எடுப்பான். நன்சாகூ கலையில் மாஸ்டராகத் திகழும் இமாய், கேம் ஆஃப் டெத் திரைப்படக் காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினான்.

அதன்பிறகு நாளுக்கு நாள் இவனது திறமை வளர்ந்துகொண்டே இருக்கிறது. புகழும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இவனை ஃபேஸ்புக்கில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 33 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இவனைக் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு மாடலாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வயதுக்கு இவ்வளவு தற்காப்பு கலைகளைச் செய்வதே மிகப் பெரிய விஷயம். சிலர் இன்னும் பயிற்சி கொடுத்தால் நல்லது என்கிறார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இவன் வயதுக்குரிய இயல்பான குழந்தைகளின் விளையாட்டு, படிப்பு போன்றவற்றிலும் இவன் ஈடுபட வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறோம்” என்கிறார் இமாயின் அப்பா.

வழக்கம்போல் ஒரு பக்கம் இமாயின் திறமைகளைக் கண்டு. ‘லிட்டில் ப்ரூஸ் லீ’ என்று பட்டம் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குழந்தையை அவரது பெற்றோர் தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

லிட்டில் ப்ரூஸ் லீக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/article23691488.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கேள்வி கேட்பது குற்றமா?

28chskopic

சீனாவைச் சேர்ந்த இளம் மருத்துவர், 3 மாதச் சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளியே வந்திருக்கிறார். குவாங்ஸோவைச் சேர்ந்த 39 வயது டான் க்வின்டோங், கடந்த டிசம்பர் மாதம் மெய்பியான் என்ற வலைதளத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ‘ஹாங்மாவோ மருத்துவ ஒயின்’ சீனாவில் மிகவும் பிரபலமானது. இந்த ஒயின் நச்சுத்தன்மை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல், விளம்பரத்தில் சொல்வதுபோல் கடுமையான இதய நோய் மற்றும் வாத நோய்களைக் குணப்படுத்தவும் செய்யாது என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதங்களைக் கிளப்பியது. உடனே ஹாங்மாவோ நிறுவனம் மருத்துவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தது.

தங்களுடைய நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதால் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகச் சொன்னது. ஜனவரி 10 அன்று, மருத்துவர் டான் கைது செய்யப்பட்டு, 2,300 கி.மீ. தூரத்தில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவர் அதிர்ந்து போனார். பிறகுதான் அவருக்குக் காரணம் தெரிந்தது. ‘சீன மருத்துவ ஒயின் நச்சுத்தன்மை வாய்ந்தது’ என்ற கட்டுரை வெளியானதால், 2 விநியோகஸ்தர்களும் 7 வாடிக்கையாளர்களும் மருத்துவ ஒயினைத் திருப்பிக் கொடுத்து, பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் மருத்துவரே இப்படிப்பட்ட ஒரு கருத்தைக் கட்டுரையாக வெளியிட்டதில் உள்நோக்கம் இருந்ததாகக் கருதி, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.

மருத்துவரின் கைது, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. ஹாங்மாவோ ஒயின் மங்கோலியாவின் லியாங்செங் பகுதியில் அதிகமாக விற்பனையாகிறது. இதில் 67 வகை தாவரங்கள், சிறுத்தை யின் எலும்புகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் மூட்டு வலி, சிறுநீரகப் பாதிப்பு, சோர்வு, ரத்தசோகை, இதய நோய்கள் போன்றவற்றையும் குணமாக்குகிறது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. மருத்துவரின் கட்டுரையால் மக்களிடம் மருத்துவ ஒயின் மீது நம்பிக்கை குறைந்திருக்கிறது. மருந்துக்கடைகள் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று பாட்டில்களை எளிதில் தெரியாதவாறு அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

“பாரம்பரியச் சீன மருத்துவப்படி மருந்துகளைத் தயாரிப்பதாகவும் ஒரே மருந்து பல நோய்களைக் குணமாக்கும் என்று அதீதமாகச் சொல்லும்போதும் ஒரு மருத்துவனாக இயல்பாகவே கேள்வி எழுகிறது. ஒரு கேள்வி கேட்டதற்கு நான் அனுபவித்த தண்டனை போதும். எனக்காக ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் பேசினால் மறுபடியும் தண்டனை கிடைக்கலாம். சிறைத் தண்டனை மிக மோசமான அனுபவத்தைத் தந்திருக்கிறது. ஒரு குற்றவாளி கூட இப்படி நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மருந்து நிறுவனங்கள் நாம் நினைப்பதை விடவும் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. என்னை ஒரு ஹீரோவாகப் பார்க்க வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்றால்தான் இதற்குத் தீர்வு” என்கிறார் டான் க்வின்டோங்.

கேள்வி கேட்பது குற்றமா?

http://tamil.thehindu.com/world/article23706282.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நம்பிக்கை டானிக்!

 

 
29chskopic
 

பார்வையற்வர்கள் இயல் பான மனிதர்களைப் போல் வாழ்க் கை நடத்த முடியும் என்று பலரும் நிரூபித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அர்ஜென்டினாவில் பிறந்து, ஸ்பெயினில் வசிக்கும் 20 வயது மார்சிலோ லுசார்டி. இரண்டு ஆண்டுகளுக்கு இவரது வலது கண்ணில் வலியும் பார்வை குறைபாடும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்தபோது, மரபணுக் குறைபாடு என்று தெரிந்தது. விரைவில் இடது கண்ணும் பார்க்கும் சக்தியை இழந்துவிடும் என்று மருத்துவர்கள் சொன்னதுபோலவே நடந்துவிட்டது. மீண்டும் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பும் தற்போது இல்லை. திடீரென்று பார்வை இழந்தவுடன் மார்சிலோ நிலைகுலைந்து போனார். பார்வை இல்லாமல் இனி தன்னால் வாழ முடியாது என்ற மனநிலைக்கு வந்ததால், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது இவரது தோழியின் அப்பா, ஆறுதலாகப் பேசினார். நடந்ததை ஏற்றுக்கொள்ளப் பழக்கினார். பார்வை இல்லாவிட்டாலும் உலகில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

“உடைந்து போன என்னை விரைவிலேயே மீட்டெடுத்தனர் தோழியும் அவரது அப்பாவும். வழக்கம்போல் நண்பர்களுடன் ஸ்கேட் பார்க்குக்குச் சென்றேன். எல்லோரும் விளையாடுவதை சத்தத்தை வைத்து உணர்ந்தேன். அவர்களை உற்சாகப்படுத்தினேன். உடனே நண்பர்கள் என்னைச் சறுக்கு விளையாடில் பங்கேற்கும்படி வற்புறுத்தினார்கள். இப்படித்தான் மீண்டும் விளையாட ஆரம்பித்தேன். ஆனால் பார்வை இல்லாதவருக்குச் சறுக்கு விளையாட்டு எவ்வளவு கடினம் என்பது அப்போதுதான் தெரிந்தது. சாதாரணமானவர்கள் ஸ்கேட் போர்ட் மீது சரியாக நின்றுவிட்டால் விளையாட ஆரம்பித்துவிடலாம். ஆனால் நான் முதலில் சுற்றுச்சூழலைக் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் பார்வையாளர்களின் கரவொலி, கூச்சல் போன்றவற்றால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். நான் ஒலியை நம்பியே களத்தில் இருக்கிறேன். இதுபோன்ற சூழலில் நண்பர்கள் எனக்கு உதவுகிறார்கள். சறுக்கு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதில் பல உத்திகளையும் புதுமைகளையும் செய்து வருகிறேன். வேகமாகச் செல்லும்போது ஸ்கேட் போர்டைத் தலைகீழாகச் சுழற்றி மீண்டும் அதில் ஏறிச் செல்கிறேன்.

என்னுடைய விளையாட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் பார்வையோடு இருந்திருந்தால் கூட இப்படித் தனித்துவமாகப் பிரகாசித்திருப்பேனா என்று தெரியாது. பார்வை இழந்ததில் என் திறமை எனக்குத் தெரியவந்திருக்கிறது. ஏதாவது கஷ்டம் வந்தால் அதோடு வாழ்க்கை முடிந்தது என்று யாரும் நினைக்காதீர்கள். இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இல்லவே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்றவனாக மாறுவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் இன்று அதையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன். என்னுடைய சறுக்கு விளையாட்டைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்பதாகச் சொல்கிறார்கள். இது போதும் இந்த வாழ்க்கைக்கு. என் வாழ்நாளுக்குள் என் பிரச்சினைக்கான தீர்வை மருத்துவ உலகம் கண்டுபிடித்துவிடும் என்று நம்புகிறேன். அதுவரைக்கும் பிறருக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்க விரும்புகிறேன். அதுவும் இன்றைய உலகத்துக்கு மிகவும் முக்கியம்” என்கிறார் மார்சிலோ லுசார்டி.

நம்பிக்கை டானிக்!

http://tamil.thehindu.com/world/article23712977.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: என்றுதான் மறையுமோ இந்த மனித துவேஷம்!

 

 
01chskopic

கடந்த வெள்ளி அன்று 28 வயது ஆம்பர் பிலிப்ஸ் அமெரிக்காவின் வட கரோலினாவிலிருந்து வாஷிங்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். இவருக்கு அருகில் ஓர் அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். 45 நிமிடப் பயணத்திலும் வலது கையை மேலே தூக்கி வைத்துக்கொண்டு பிலிப்ஸ் மீது பட்டுவிடாமல் அமர்ந்திருந்தார். அடிக்கடி ஏதோ திட்டிக்கொண்டே இருந்தார். விமானப் பணிப் பெண்ணை அழைத்து, பிலிப்ஸ் மீது புகார் கொடுத்தார்.

“அந்தப் பெண் என்னை ஒரு மனிதராகக் கூடப் பார்க்கவில்லை. கறுப்பு குண்டுப் பெண் என்று எனக்கு முன்பாகவே புகார் கொடுத்தார். அவரது செய்கைகளை நான் என் மொபைல்போனில் வீடியோ எடுத்தேன். விமானம் இறங்கியவுடன் எனக்கு முன்பே அந்தப் பெண் வேகமாகச் சென்றுவிட்டார். நான் வெளியே வந்தபோது காவலர்கள் எனக்காகக் காத்திருந்தனர். என் உருவத்தைக் கண்டதும் அந்தப் புகாருக்கு உரியவர் நான் என்று முடிவு செய்துவிட்டனர். விசாரிக்க வேண்டும் என்றனர். நான்தான் புகார் அளிக்க வேண்டும். என் மீது என்ன புகார் என்று கேட்டேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய அடையாள அட்டையைக் கேட்டனர். கொடுத்தேன். பொதுவெளி யில் எப்படி நடக்க வேண்டும் என்று கூடத் தெரியாதா என்று கேட்டவுடன், நான் எடுத்த வீடியோவைக் காட்டினேன். உடனே என்னுடன் பயணித்த மற்ற பெண்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துவிட்டு, உன் புகாரை என்னால் விசாரிக்க இயலாது என்று கூறி அனுப்பிவிட்டார் அந்த அமெரிக்கக் காவலர். இந்த ஆதாரம் மட்டும் இல்லையென்றால் நான் இந்நேரம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டிருப்பேன். எவ்வளவு காலம் ஆனாலும் அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. சிலர் இவ்வளவு அநாகரிகமாகவும் நடந்துகொள்கிறார்கள். சொந்த நாட்டிலேயே மிக மோசமாக நடத்தப்படுகிறோம் என்பது தாங்க முடியாத வலியைத் தருகிறது. வெளியே வந்தவுடன் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்தேன். அதைப் பார்த்த விமான நிறுவனம், என்னை அவர்களது உயர் அதிகாரியைச் சந்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறது” என்கிறார் பிலிப்ஸ்.

என்றுதான் மறையுமோ இந்த மனித துவேஷம்..

 

இங்கிலாந்தைச் சேர்ந்த மால்கம் ட்ரோப், பள்ளியில் பணியாற்றி வருகிறார். பழங்கால அனலாக் கடிகாரங்களைத் தற்போதுள்ள மாணவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அதற்குப் பதிலாக டிஜிடல் கடிகாரங்களைப் பள்ளிகளில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். “குழந்தைகளின் வாழ்க்கையில் போன், டேப்லட், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவர்கள்களால் தேர்வு அறையில் வைக்கப்பட்டிருக்கும் அனலாக் கடிகாரங்களில் நேரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்காமல், டிஜிட்டல் கடிகாரங்களை வைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதைப் பார்த்துப் பலரும் கடிகாரங்களை மாற்றச்சொல்லிக் கேட்டு வருகிறார்கள். விரைவில் மாற்றம் வரும்” என்கிறார் மால்கம் ட்ரோப்.

காலத்துக்கு ஏற்றவாறு மாற வேண்டியதுதான்!

http://tamil.thehindu.com/world/article23736032.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

 

 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
05chskomasalapic
TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 

ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்பழம், மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது என்பதுடன், இதன் தோலையும் சாப்பிடமுடியும். சாதாரண வாழைப்பழங்களில் தோலில் கசப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிகக் குறைவான கசப்புடனும் காணப்படுகிறது. நூறு சதவீதம் இந்தத் தோலைச் சாப்பிட முடியும் என்கிறார்கள். இந்த வாழையை ‘உறைய வைத்து வளர்த்தல்’ என்ற முறையில் உருவாக்குகிறார்கள். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முறை. பனியுகம் முடிந்த பிறகு, தாவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் தோன்றிய தாவரங்களின் டிஎன்ஏவை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்று மோங்கே வாழை. அந்தக் காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் இன்றோ 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோங்கே வாழைப்பழம் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் ஒரு சிலரே வாங்கி, சுவைக்க முடிந்தது. காரணம் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க முடியவில்லை. இதன் உற்பத்தி மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு வாரத்துக்கு டி&டி பண்ணை 10 வாழைப்பழங்ளை மட்டுமே விளைவிக்கிறது. ஒரு பழத்தின் விலை சுமார் 362 ரூபாய்.

“வாழைப்பழம் பற்றிய கருத்துகளை அறிவதற்காக எங்களுக்குச் சில வாழைப் பழங்களைக் கொடுத்தனர். மற்ற வாழைப் பழங்களை விட மோங்கே மிகவும் சுவையானது. சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், மோங்கேயில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. மணம் அதிகமாக இருக்கிறது. அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டுகிறது. மிகச் சரியாகப் பழுத்திருந்தால் மட்டுமே தோலையும் சேர்த்து உண்ண முடியும். சாதாரண வாழைப் பழங்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் மோங்கேயில் பழுப்புப் புள்ளிகள் வந்த பிறகுதான் சாப்பிடமுடியும். மெல்லிய தோலாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கிவிட முடிகிறது. தோலின் சுவை கூட நன்றாக இருக்கிறது. வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. மிக முக்கியமாக செரடோனின் இருக்கிறது.

இது உடல் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் உணர்வுகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் ஆரோக்கியம் கருதி, தோலை அவசியம் சாப்பிட்டு விடலாம்” என்கிறது சோராநியூஸ் நிறுவனம்.

ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உலக மசாலா- 'சிரிக்காமல் இருந்தால் அழகாகலாம்!'

 

 
kristian

பிரிட்டனில் வசிக்கிறார் டெஸ் கிறிஸ்டியன். 50 வயதைக் கடந்த டெஸ், கடந்த 40 ஆண்டுகளாகச் சிரிப்பதே இல்லை. சிரித்தால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிப்பதில்லை என்கிறார் டெஸ். ‘பத்து வயதிலேயே நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன்.

நான் படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சிரிப்பதால்தான் முகத்தில் சுருக்கம் தோன்றி வயதான தோற்றம் வருகிறது. அதனால் சிரிப்பதை விட்டுவிட்டேன்’ என்கிறார் டெஸ்.

எந்தச் சூழ்நிலையிலும் சிரிக்காமல் இருக்க பயிற்சி பெற்றிருக்கிறார். காலப்போக்கில் சிரிப்பு என்ற ஒன்றே அவரிடம் இல்லாமல் போய்விட்டது. 50 வயதிலும் இளமையாகத் தெரிவதற்கு, சிரிக்காததுதான் காரணம் என்கிறார். இவரைப் பார்த்து சில பிரபலங்களும் சிரிப்பதைக் குறைத்து வருகிறார்கள்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்களே… இது விநோதமா இருக்கு!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் 15 வயது ஜாக் ட்ரூமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். ஆனால் உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ட்ரூமனை சந்தோஷமாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தார் அவரது தோழி ஹன்னா பாய்ட். பள்ளியில் ஓர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ட்ரூமன் பங்கேற்கும் இறுதி நிகழ்ச்சி என்பதால் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். மருத்துவர்கள் ட்ரூமனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் ஹன்னா தன் தோழன் சந்தோஷமாக இறுதி நிமிடங்களைக் கழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கால்பந்து வீரரான ட்ரூமனை கோட், சூட் அணிவித்து அழைத்துச் சென்றார். முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு சென்றார் ட்ரூமன்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் ட்ரூமனை சூழ்ந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். பள்ளியில் இருந்த பத்து நிமிடங்களையும் சந்தோஷமாகக் கழித்த ட்ரூமன், அன்று இரவு இறந்து போனார். புற்றுநோயைத் தைரியமாக எதிர்கொள்ள வைத்து, கடைசி நிமிடங்கள் வரை சந்தோஷமாகக் கழிக்க வைத்த ஹன்னாவுக்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார் ட்ரூமனின் அம்மா.

அருமையான தோழி!

ஷாங்காய் நகரில் வசிக்கிறார் ஃபேங். ஒருநாள் தெருவில் ஆதரவற்ற நாயைக் கண்டார். அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். மனிதர்களைப் போல இரண்டு கால்களால் நடக்க பயிற்சியளித்தார். விரைவிலேயே பின்னங்கால்களால் மட்டும் நடக்க ஆரம்பித்தது நாய்.

பெண்கள் அணியும் ஆடை, கழுத்துக்கு செயின், தொப்பி, கூலிங்கிளாஸ், முதுகில் பை எல்லாவற்றையும் அணிவித்து, தினமும் மார்கெட்டுக்கு அழைத்துச் செல்கிறார் ஃபேங். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, ‘இதுவும் என் குடும்பத்தில் ஒருத்தி. எங்களைப் போலவே நாயையும் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறார் ஃபேங்.

ம்ம்… கொடுத்து வைத்த நாய்!

பிரிட்டனில் உள்ள மெக்ஸிகன் ஸ்ட்ரீன் உணவகங்களில் ஜனவரி மாதம் முதல் ஓர் உணவு அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மொறுமொறுப்பான காரம் நிறைந்த வெட்டுக்கிளி வறுவலை வாரத்துக்கு 1,500 பேர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

2013-ம் ஆண்டில் மிகக் குறைந்த அளவில் வெட்டுக்கிளி உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளிலும் பூச்சிகள் உண்ணும் கலாசாரம் வந்துவிட்டது. பூச்சிகளில் இருந்து ஏராளமான புரோட்டீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள்.

இனி, பூச்சியா என்று யாரும் அதிர்ச்சி காட்ட மாட்டார்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிரிக்காமல்-இருந்தால்-அழகாகலாம்/article6851883.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலக மசாலா: குரங்குகளின் தந்தை

 

 
15chkanmonkey

சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியில் அரிய வகை மக்காக் குரங்குகள் வசித்து வருகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்பு 50 குரங்குகளே இருந்தன. இன்றோ 2,800 குரங்குகளாகப் பெருகிவிட்டன. இதற்குக் காரணம் 69 வயது Dobrgyal. வனக் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை, ‘குரங்குகளின் தந்தை’ என்று அன்போடு அழைக்கிறார்கள். தினமும் 5 கி.மீ. தூரம் பயணித்து, குரங்குகளுக்குத் தேவையான உணவுகளை மூட்டைகளில் கொண்டுவந்து இறக்குகிறார். இவரைக் கண்டவுடன் குரங்குகள் ஓடி வருகின்றன. இவர் மீது ஏறி விளையாடுகின்றன. உடல்நலம் சரியில்லாத குரங்குகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, சில நாட்கள் மருத்துவம் பார்த்து, பிறகு இங்கே கொண்டுவந்து விட்டுவிடுகிறார். மக்காக் குரங்குகளை சீனா அரிய விலங்கினமாக அறிவித்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் இவர் தனிப்பட்ட ஆர்வத்தில் சொந்த செலவில் உணவுகளை வழங்கி வருகிறார். தற்போது இந்தப் பகுதியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். “எனக்கு வயதாகிவிட்டது. நான் இருக்கும் காலம் வரை குரங்குகளுக்கு உணவூட்டுவேன். அதற்குப் பிறகு என் மகன்கள் இந்தப் பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் இவர்.

 

அரிய மனிதர்!

வட பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் மிட்வே தீவில் ஆல்பட்ராஸ் என்ற அழகான கடற்பறவைகள் வசிக்கின்றன. இங்கு குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தெரியாமல் உண்டு, ஏராளமான ஆல்பட்ராஸ் பறவைகள் உயிரிழக்கின்றன. இதை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டன், ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். தாயும் குஞ்சுகளுமாக இறந்துபோன ஆல்பட்ராஸ் பறவைகளின் வயிற்றுக்குள் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. “இந்தத் தீவுக்கு அருகில் இருக்கும் கண்டமே வெகு தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து இந்தத் தீவுக்கு வந்து சேரும் பிளாஸ்டிக் கழிவுகளே இவ்வளவு என்றால், மக்கள் வசிக்கும் கடல் பகுதிகளில் எவ்வளவு கழிவுகள் இருக்கும் என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களோடு கலந்துவிட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடியவை. இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் பலரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சிதான். ஆனால் தனிநபர்கள் இப்படிச் செய்வதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. 10 கோடி பேர் பிளாஸ்டிக்கைக் கைவிட்டால் ஓரளவு மாற்றத்தைக் காண முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஆல்பட்ராஸ் மட்டுமில்லை, கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இங்கே வந்து படம் பிடித்திருக்கிறோம். மொத்தம் 92 நாட்களில் 400 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கடந்த மாதம் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறோம். விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ் ஜோர்டன்.

அச்சமூட்டும் பிளாஸ்டிக் மாசு…

http://tamil.thehindu.com/world/article23888884.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன். இத் தொடர் முடிந்து விட்ட்து என்று ..நான் நினைத்தேன் 

 

Link to comment
Share on other sites

உலக மசாலா:

 

 
19chskopic
 

ஜப்பானின் மிசோ நகரில் வசிக்கும் ஹிரோகா, மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவுகளின் படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். நட்சத்திர விடுதியில் கிடைக்கும் உணவுகளைப் போன்று இருக்கும் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. “ஒபி-ஜிஒய்என் குழந்தை பிறப்புக்கான மருத்துவமனை. இது சிறிய மருத்துவமனைதான். ஆனால் அங்கு வழங்கப்படும் விதவிதமான உணவுகளும் ருசியும் நட்சத்திர விடுதிகளில் கூட கிடைக்காது. குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒருவிதமான உணவுகளை வழங்குகிறார்கள். பிறந்த பின்பு வேறுவிதமான உணவுகளைக் கொடுக்கிறார்கள். எல்லாமே அவ்வளவு ருசி. குழந்தை பிறந்த இரண்டாவது நாளே வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டனர். எனக்கு மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் இருந்து, சாப்பிட வேண்டும் என்று ஆசை. அதனால் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டேன். மேலும் சில நாட்கள் ரசித்து, ருசித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். பொதுவாக மருத்துவமனைகளில் வழங்கப்படும் உணவை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இங்கே சாப்பிட்ட பிறகு வேறு எந்த உணவும் ருசியாகத் தெரியவில்லை” என்கிறார் ஹிரோகா.

 

அட, நாக்கில் நீர் ஊறுதே!

http://tamil.thehindu.com/world/article23933501.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புதையலை கொடுத்த பெரிய மனிதர்கள்

 

 
20chkanjewellery

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஸ்டேடன் தீவில் வசிக்கும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் பின்புறத்திலிருந்து விலை மதிப்பு மிக்க புதையலை எடுத்திருக்கிறார்கள். இதில் 35.35 லட்சம் ரூபாயும் வைரம், தங்கம், பச்சை மாணிக்கம் போன்ற விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்தன. மாத்யூவும் மரியா கொலொன்னா இமானுவேலும் வீட்டின் பின்புறத்திலுள்ள மரங்களை வெட்டச் சொன்னார்கள். அப்போது ஓர் உலோகப் பெட்டி மண்ணுக்குள் இருந்து வெளிவந்தது. “இந்தப் பெட்டிக்குள் ஏதாவது மின் உபயோக பொருட்களிருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மிகவும் பாதுகாப்பான பெட்டகமாக இருந்ததைப் பார்த்தபோது, ஏதோ மதிப்பு மிக்க பொருள் இருக்கும் என்று தோன்றியது. பெட்டியைத் திறந்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டோம். ஏராளமான டாலர் கரன்சிகளும் நகைகளும் விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்தன. அதில் இருந்த துண்டு காகிதத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் முகவரி இருந்தது. அவரிடம் ஏதாவது திருடு போய் இருக்கிறதா என்று விசாரித்தோம். 2011-ம் ஆண்டு திருடு போயிருப்பதாகச் சொன்னார். எதற்காக திருடர்கள் அங்கே திருடி, இங்கே புதைத்தார்கள் என்பதும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் புதையலை ஒப்படைத்துவிட்டோம். எல்லோரும் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். எங்களுடையது இல்லை என்பதால் கொடுத்துவிட்டோம்” என்கிறார் மாத்யூ.

 

புதையலை தூக்கிக் கொடுத்த பெரிய மனிதர்கள் வாழ்க!

 

 

ஸ்வீடனைச் சேர்ந்த 30 வயது ஜோஹன்னா சான்ட்ஸ்ட்ரம், தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பெயர்களை டாட்டூவாக போட்டுக்கொள்ள விரும்பினார். டாட்டூ கலைஞரிடம் பெயர்களைச் சொல்லிவிட்டு அமர்ந்தார். டாட்டூவைக் கண்ணாடியில் பார்த்து திருப்தியாக வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் கெவின் என்ற பெயர் கெல்வின் என்று மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். “என் கணவர்தான் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டினார். டாட்டூ கலைஞர் பெயர்களை எழுதித் தரும்படிக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். சரியாகக் காதில் விழவில்லை என்றால் இன்னொரு முறை அவர் கேட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி ஒரு புதிய பெயரை வரைந்து கொடுத்தால் என்ன செய்வது? டாட்டூ போட்ட உற்சாகம் கோபமும் எரிச்சலுமாக மாறிவிட்டது. உடனே டாட்டூ கலைஞருக்கு தகவல் சொன்னேன். அவர் சிரித்தவுடன் கோபம் இன்னும் அதிகமானது. இந்த டாட்டூவை மாற்றவோ அழிக்கவோ முடியாது. லேசர் மூலம் அகற்றிக்கொள்ளுங்கள். டாட்டூவுக்கான கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றார். டாட்டூவை லேசர் மூலம் நீக்குவதற்கான முயற்சியில் இறங்கினோம். அது அவ்வளவு எளிதாக இல்லை. வேறு வழியின்றி குழந்தையின் பெயரைக் கெல்வின் என்றே மாற்றிவிடும் முடிவுக்கு வந்துவிட்டோம். எங்கள் குடும்பத்தில் கெல்வின் என்ற பெயரில் யாரும் இல்லை. தனித்துவமான பெயருடன் எங்கள் மகன் இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டோம்” என்கிறார் ஜோஹன்னா.

பெயரையே மாற்றிவிட்டதே இந்த டாட்டூ!

http://tamil.thehindu.com/world/article23939719.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: காலத்தை வென்ற இளமை

 

 
22chskopic

ஜப்பானைச் சேர்ந்த ரைஸா ஹிராகோ புகழ்பெற்ற ஃபேஷன் மாடல். 47 வயதாகும் இவர், 20 வயதுபோல் தோற்றம் அளிக்கிறார். தன்னுடைய இளமையான தோற்றத்தால் நீண்ட காலம் நிலையான புகழுடன் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் படங்கள் போட ஆரம்பித்த பிறகு மேற்கத்திய நாடுகளில் ஏராளமான ரசிகர்களைப் பெற்று வருகிறார். இவரது படங்களைப் பார்த்து, ரசிகர்களாக மாறியவர்கள், இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காகத் தகவல்களைத் தேடியபோதுதான், 47 வயது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தனர்.

 

கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் ரைஸாவைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. இன்ஸ்டாகிராமில் அதுவரை 90 ஆயிரம் பேர் இவரைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். அதற்குப் பிறகு 2 லட்சம் பேராக எண்ணிக்கை உயர்ந்தது. இன்று 2,22,000 பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ”தோல் சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் என் இளமைக்கு காரணமா என்று எல்லோரும் கேட்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட என்னுடைய மரபணுதான் இளமைக்கு காரணமாக இருக்க முடியும்” என்கிறார் ரைஸா ஹிராகோ.

காலத்தை வென்ற இளமை!

 

யாராவது கிச்சு கிச்சு மூட்டினாலோ உள்ளங்கால்களைத் தொட்டாலோ கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருவது இயற்கை. கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, அடுத்தவர்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுவதைப் பார்த்தாலோ உள்ளங்கால்களைக் கூசச் செய்தாலோ இவருக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை! இந்தப் பெண்ணை வைத்து மருத்துவர்கள் ஆராய்ச்சியை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். “யாரோ ஒருவரின் உடலைக் கூசினால் கூட இந்தப் பெண்ணின் உடலைக் கூசியதுபோல் உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்தக் குறைபாட்டுக்கு mirror-touch synaesthesia என்று பெயர். இது மிரர் நியூரான்களில் ஏற்படும் குறைபாடு. இதன்மூலம் பிறருக்கு ஏற்படும் நிகழ்வை நமக்கே ஏற்படுவதுபோல் மூளை உணர்ந்துகொள்கிறது. வித்தியாசமான பகுதி யில் தொடுதல், பனிக்கட்டி நீரை ஊற்றுதல், நகைச்சுவை வீடியோவைப் பார்த்தல் என்று பல்வேறு விதங்களில் இந்தப் பெண்ணைப் பரிசோதித்தோம். நாங்கள் பிறருக்குத்தான் இதைச் செய்தோம், ஆனால் அவரைவிட இந்தப் பெண்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளானார். இவருக்கு ஏற்படும் இந்தக் கூச்சமும் சிரிப்பும் இயல்பாகவே ஏற்படுகிறது என்பதையும் அறிந்தோம். சில நேரங்களில் அவரால் தாங்க முடியாத அளவுக்குச் சிரிப்பு ஏற்பட்டு, அறையை விட்டு வெளியே சென்ற சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. வெல்வெட் துணியைத் தொடுவது, பல் துலக்கியால் கையில் தேய்ப்பது, பட்டுத் துணியைச் தொடுவது, வழவழப்பான மேஜையைத் தொடுவது, மாங்காய் சாப்பிடுவது போன்ற செயல்களைப் பிறர் செய்தாலும் இவர் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார். மிரர் நியூரான்கள் எல்லோருக்குமே இருக்கின்றன. பொதுவாக அவரவருக்கு ஏற்படும்போது சிரிப்பு வரும், இவர்களுக்கு அடுத்தவர்களுக்கு ஏற்படும்போது சிரிப்பு வருகிறது. உலக மக்கள் தொலையில் இதுவரை 1.6% முதல் 2.5% வரையான மக்கள் இந்த மிரர் நியூரான்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் எல்லோருக்கும் இந்தப் பெண் அளவுக்குத் தீவிரமான பாதிப்பு இல்லை என்பது ஆறுதல்” என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

புதுசு புதுசா நோய் வந்துகொண்டே இருக்கு!

http://tamil.thehindu.com/world/article23956306.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாத்துக் குஞ்சுகளைத் தத்தெடுத்த நாய்

 

 
23chskodog
 
 

இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில் சமீபத்தில் ஒரு வாத்து 9 குஞ்சுகளைப் பொரித்தது. வாத்தும் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லாப்ரடார் நாய் ஒன்று கவனித்து வந்தது. கடந்த வாரம் திடீரென்று தாய் வாத்து காணாமல் போய்விட்டது. நரி தூக்கிச் சென்றிருக்கலாம் என்கிறார்கள். தாய் இன்றி தவித்த வாத்துக் குஞ்சுகளை நாய் அரவணைத்துக்கொண்டது. நாய் செல்லும் இடமெல்லாம் குஞ்சுகளும் கூடவே செல்கின்றன. நாய் தலை மீது ஏறி நிற்கின்றன. முதுகில் வரிசையாக அமர்ந்துகொண்டு வலம் வருகின்றன. “குஞ்சுகளிடம் நாய் போகும்போது முதலில் பயந்தோம். ஆனால் தாய் வாத்து இல்லாததை அறிந்து, குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப்போல் அக்கறையாக பொறுமையாக குஞ்சுகளைக் கவனிக்கிறது” என்கிறார் இந்தக் கோட்டையின் இயக்குநர் ஜெராமி கோல்ட்ஸ்மித்.

 

வாத்துக் குஞ்சுகளைத் தத்தெடுத்த நாய்!

 

 

ஜப்பானைச் சேர்ந்த நோபுகாஸு குர்கி, மலையேற்ற வீரர். 2012-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறங்கினார். மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. நான்காவது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது, மிக மோசமான வானிலை மற்றும் உடல் நலப் பாதிப்பால் தன்னுடைய 9 விரல்களை இழந்தார். தன் தந்தையிடம் விரல்கள் இழந்த விஷயத்தைக் கூறியவுடன், “வாழ்த்துகள், விரல்கள் போனாலும் நீ உயிருடன் இருக்கிறாய் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது” என்று மகனை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் எவரெஸ்ட் முயற்சியை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்தார். தற்போது 8-வது முறையாக எவெரெஸ்ட் உச்சிக்குச் செல்லும் முயற்சியில் கடுமையான வானிலையைச் சந்தித்தார். ஒரு நாள் இரவு தந்தையைத் தொடர்புகொண்டார். “இதுவரை நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். நிலைமை மோசமாக இருக்கிறது. கடுமையான ஜுரம், இருமல்” என்றார். உடனே அவரது அப்பா மலையேறும் குழுவினரின் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். மீட்புக் குழுவினர் சென்று பார்த்தபோது காலம் கடந்திருந்தது. குர்கி இறந்து போய்விட்டார். இவரைப்போல் ஒரு தன்னம்பிக்கை மனிதரைப் பார்க்க முடியாது. “எவரெஸ்ட் உச்சியைத் தொடுவது முக்கியமும் இல்லை, சாதனையும் இல்லை. ஆனால் அதைத் தொடுவதற்கான முயற்சியில் எப்படி இருக்கிறேன் என்பதுதான் உண்மையிலேயே முக்கியமான விஷயம். அதைத்தான் வெளி உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறேன். சாதனையில் இல்லை உங்கள் வெற்றி, சாதனைக்கான முயற்சியில்தான் இருக்கிறது” என்று அடிக்கடி சொல்வார். இதுவரை தன்னுடைய மலையேற்ற அனுபவங்களை 2 புத்தகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை 6 கண்டங்களில் மலை உச்சிகளை எட்டியிருக்கிறார்.

வரலாறாக மாறிப் போன மனிதர்!

http://tamil.thehindu.com/world/article23965431.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கோடீஸ்வரரின் திருமணம்

 

 
24chkanmarriage
 

ரஷ்யாவைச் சேர்ந்த 54 வயது கான்ஸ்டான்டின் ஷெர்பினின், மிகப் பெரிய கோடீஸ்வரர். எண்ணெய் வியாபாரம் செய்கிறார். தன் குழந்தைகள் மூலம் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ‘கோடீஸ்வரரின் திருமணம்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோவாக மாற்றிவிட்டது! 2 ஆயிரம் பெண்களில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இந்தப் பொறுப்பை கோடீஸ்வரரின் 3 மகள்களும் ஒரு மகனும் செய்து முடித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். போட்டியாளர்கள் இதுவரை திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். கான்ஸ்டான்டின் குழந்தைகளை, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும். இவர்களில் பெரும்பாலானோர் அழகு, வயது காரணமாக முதல்கட்ட தேர்வில் வெளியேற்றப்பட்டனர். 16 வயது மகள், “40 வயதாகும் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்? என் அப்பாவுக்கு இளமையான மனைவி வேண்டும். உங்களைப் பார்த்தால் எங்களுக்கே சலிப்பாக இருக்கிறது” என்றெல்லாம் சொல்வதுபோல் நாகரிகமற்ற முறையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. “நான் கூடைப்பந்து வீராங்கனை. உயரமாக இருப்பேன். என் அப்பாவுக்கு உயரம் பிடிக்கும்தான். ஆனால் இவ்வளவு உயரம் தேவையில்லை. நீங்கள் கிளம்பலாம் என்று 20 வயது பெண் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்” என்கிறார் இகாடெரினா. “இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. போட்டியாளர்கள் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். எல்லாவற்றிலும் வெற்றி பெறும் பெண், கோடீஸ்வர வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்றவராக இருந்தால் மணமகளாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதைக் கான்ஸ்டான்டின் குழந்தைகள்தான் முடிவு செய்வார்கள்” என்கிறது தொலைக்காட்சி நிறுவனம். கான்ஸ்டான்டின் இதுவரை 5 திருமணங்கள் செய்து, 5 முறை விவாகரத்தும் பெற்றுவிட்டார். 3 பெண்களுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார். அதுவும் ஒத்துவரவில்லை என்றதும், தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் குழந்தைகளிடம் விட்டுவிட்டார்.

 

தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இப்போ வியாபாரம் ஆயிருச்சு!

 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடனை திருப்பித் தராதவர்களிடமிருந்து வித்தியாசமான முறையில் வசூலிக்கிறார்கள். திரையரங்கில் திரைப்படம் போடுவதற்கு முன்பு, அந்தப் பகுதி யில் வசிக்கும் கடன்காரர்களின் படங்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிடுகிறார்கள். அதைப் பார்க்க நேரும் கடன்காரர்கள் கூனிக் குறுகிப் போகிறார்கள். “இப்படிப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் கடன்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பெரும் தொழிலதிபர்கள். அவர்களால் கடனைச் செலுத்த முடியும். ஆனாலும் செலுத்துவதில்லை. இப்படி விளம்பரம் செய்யும்போது வெகு வேகமாகக் கடனை அடைத்து விடுகின்றனர். இன்னும் சில நகரங்களில் போஸ்டர், பில்போர்ட், எலக்ட்ரானிக் ஸ்க்ரீன், பேருந்து பின்பக்கம் என்று பல்வேறு வகைகளில் கடன்காரர்களின் படங்களை வெளியிட்டு, கடனை வசூலிக்கின்றனர்” என்கிறார் சட்ட நிபுணர் லி க்வாங்.

கொஞ்சம் நாகரிகமாக வசூலிக்க முடியாதா?

http://tamil.thehindu.com/world/article23974708.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 71 வயதில் கர்ப்பமான முதல் பெண்

 

 
25chskopic
 

மெக்சிகோவின் மஸாட்லான் நகரில் வசிக்கிறார் 71 வயது மரியா டி லா லஸ். இவர் தற்போது 6 மாதக் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அழகான பெண் குழந்தைக்குத் தாய் ஆகிவிட்டால், உலகிலேயே வயதான அம்மா என்ற பட்டத்தையும் பெற்றுவிடுவேன் என்கிறார். “திடீரென்று உடல் சோர்வடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். நான் ஒன்பதாவது முறையாக அம்மாவாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. இந்த 6 மாதங்களில் 10 தடவை ஸ்கேன் செய்து, குழந்தை இருப்பதை உறுதி செய்திருக்கிறேன். மருத்துவர்கள் பெண் குழந்தை என்று சொல்லியிருக்கிறார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் என்னுடைய மற்ற குழந்தைகள் தங்களுக்குப் பிறக்கப் போகும் தங்கையை வரவேற்கத் தயாராக இல்லை. வயதான காலத்தில் பிரசவம் வேண்டாம் என்று கலைத்துவிடச் சொன்னார்கள். அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் குழந்தைகள் சொல்வதுதான் சரி என்றார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை” என்கிறார் மரியா. மெக்சிகோ முழுவதும் பிரபலமாகிவிட்ட மரியா, பொய் சொல்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டால், 71 வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெயரைப் பெறுவார் மரியா.

 

சாதனை படைப்பாரா இந்த மரியா?

 

 

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகெர் தேசியப் பூங்காவில் வசித்தது ஸ்கைபெட் ஸ்கார் என்ற சிங்கம். முதுமை காரணமாகத் தன்னுடைய குடும்பத்துக்கு உணவும் பாதுகாப்பும் வழங்க முடியாத சூழலில், குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. ஒரு காலத்தில் இந்தப் பூங்காவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்கம், பசிக்கு உணவின்றி எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது. சிங்கத்தின் இறுதி நிமிடங்களைப் படம் பிடித்தவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த லார்ரி அந்தோனி பான்னெல். “நான் இங்கே வந்தபோதே சிங்கம் மிக மோசமான நிலையில் இருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு எழுந்து நிற்கவே முடியவில்லை. சில அடிகள் நடப்பதும் விழுவதுமாக இருந்தது. ஒரு யானை சிங்கத்தை விரட்ட, பயந்து நகர்ந்த காட்சி கண்ணீரை வரவழைத்துவிட்டது. சிங்கத்தின் கடைசி நாள் மிகவும் கஷ்டமாக இருந்தது. நானும் நண்பரும் அந்தக் காட்சியைக் காண சகிக்காமல், வேறு இடத்துக்குச் சென்றுவிட்டோம். சில மணி நேரம் கழித்து வந்தபோது, சிங்கம் நிலத்தில் சாய்ந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு அடங்கியது. நான் சிங்கத்தின் வாழ்வையும் மரணத்தையும் நேரில் பார்த்துவிட்டேன். பூனைக் குடும்பங்களில் சிங்கமே குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறது. பெண் சிங்கம் வேட்டையாடுவது ஆண் சிங்கம் குடும்பத்தைப் பாதுகாப்பது என்று வேலைகளைப் பிரித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன. இரண்டு வயதிலேயே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் ஆண் சிங்கங்கள் தங்கள் குடும்பத்துக்காக எதிரிகளுடன் சண்டையிடுகின்றன. சவால்களை எதிர்கொள்கின்றன. தங்களால் அந்தப் பொறுப்பைச் சரிவர செய்ய முடியாதபோது குடும்பத்தினரால் வெளியேற்றப்படுகின்றன அல்லது தாங்களே வெளியேறிவிடுகின்றன” என்கிறார் லார்ரி அந்தோனி.

பட்டினியால் மடிந்த பரிதாப சிங்கம்…

http://tamil.thehindu.com/world/article23985042.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கால்கள் இல்லாமல் சிகரம் தொட்ட முதியவர்

 

 
27chskopic

சீனாவைச் சேர்ந்த 69 வயது ஸியா போயு இரண்டு கால்களையும் இழந்தவர். சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கிறார். இது இவருடைய ஐந்தாவது முயற்சி. 1975-ம் ஆண்டு சீன அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மலையேற்றக் குழுவில் ஸியாவும் பங்கேற்றார். உச்சியை அடைவதற்கு 250 மீட்டர் தூரம் இருக்கும்போது, மிக மோசமான வானிலை. 3 இரவு, 2 பகல் கூடாரத்தை விட்டு நகர முடியவில்லை. இனியும் இங்கே இருந்தால் உயிர் தப்பாது என்று எண்ணிய குழுவினர், கீழே இறங்க முடிவெடுத்தனர். அடுத்த தடவை தன்னுடைய கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தார் ஸியா. வழியில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது, குழுவில் இருந்த ஒருவரின் ஸ்லீபிங் பேக் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அவரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய ஸ்லீபிங் பேகைக் கொடுத்து உதவினார். அன்று இரவு உருவான கடினமான வானிலையால் அவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு ஒரு வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், இவரது கால்கள் மேலும் மோசமடைந்து, செயலிழந்துவிட்டன.

 

“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் என் கனவு நிறைவேறாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்டனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை எட்ட முடியாமல் போவது எவ்வளவு பெரிய துயரம் என்பதை, ஒரு மலையேற்ற வீரரால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். சில நாட்கள் வருத்தத்தில் இருந்தேன். திடீரென்று என் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. மனதை ஒருமுகப்படுத்தினேன். என்னால் மலையேறமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினேன். எனக்கு நானே சவால் விடுத்துக்கொண்டேன். என்னுடைய விதியை மாற்ற முடிவெடுத்தேன். 18 ஆண்டுகள் முயற்சி செய்து, 2014-ம் ஆண்டுதான் எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டு ஏற முடிந்தது. மோசமான வானிலையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்த ஆண்டும் வானிலை சரியில்லாததால் ஏற முடியவில்லை. 2016-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்ட 100 மீட்டர்களே இருந்தன. கடினமான வானிலையால் திரும்பி விடலாம் என்றார்கள் எனக்கு வழிகாட்டியாக வந்த ஷெர்பாக்கள். இவ்வளவு அருகில் வந்த பிறகு திரும்புவதற்கு எனக்கு விருப்பமில்லை. என்ன ஆனாலும் உச்சியை எட்டிவிடுவது என்று நினைத்தேன். ஆனால் ஷெர்பாக்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை எண்ணி, திரும்பிவிட்டேன். 5-வது முறை ஏற நினைத்தேன். ஆனால் நேபாள அரசாங்கம் இரண்டு கால்களை இழந்தவர்கள் மலையில் ஏறக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்துவிட்டது. என்னுடைய 40 ஆண்டுகால முயற்சி தோல்வி அடைவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திடீரென்று நேபாள நீதிமன்றம் எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இதை விட்டால் வேறு வாய்ப்பு வராது என்று, ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைத்தேன். எவரெஸ்ட் உச்சியை அடைந்தேன்! எனக்கு முன்பாக இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், 2006-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கிறார். நான் இரண்டாவது ஆள்” என்கிறார் சாதித்த மகிழ்ச்சியில் ஸியா போயு.

மாபெரும் சாதனையாளருக்கு ஒரு பூச்செண்டு!

http://tamil.thehindu.com/world/article23996892.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புது வகை போராட்ட உத்தி

 

 
27chkanturkmenistan
 
 

மத்திய ஆசியாவில் இருக்கும் துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் குர்பாங்குலி பெர்டிமாக்சிமேடவ், தன்னுடைய பிரத்யேகக் குணங்களால் உலகம் முழுவதும் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறார். திடீர் திடீரென்று ஏதாவது சட்டம் கொண்டுவருவதில் வல்லவர். இவரது ஆட்சியில் மக்கள் பலவிதத் துன்பங்களை அடைந்து வருகிறார்கள். இவருக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பதாலும் அதுதான் அதிர்ஷ்டம் என்று நம்புவதாலும் சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உள்ள கறுப்பு நிற கார்களுக்கு தடை விதித்தார். அந்த நாட்டில் பெயிண்ட் விலை அதிகம் என்பதால், லட்சக் கணக்கில் செலவு செய்து நிறத்தை மாற்ற முடியாமல் வாகன உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

 

தினமும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் அதிபர் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே விரக்தியில் இருக்கும் மக்கள், இந்தச் செய்திகளைக் கண்டு மேலும் கோபம் அடைந்தனர். அதிபரை எதிர்க்கும் வழி தெரியாமல், கழிவறையில் அதிபரின் படங்கள் இடம்பெற்ற செய்தித்தாள்களை டாய்லெட் பேப்பராகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, பலரும் அதிபர் படங்கள் இடம்பெற்ற செய்தித்தாள்களை டாய்லெட் பேப்பருக்கு பதிலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தங்கள் அதிபர் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற விஷயம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்துவிட்டது. செய்தித்தாள்கள் கிடைக்காவிட்டால், அதிபரின் படங்களைப் பிரிண்ட் எடுத்து கழிவறைக்குப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டனர். பிரிண்ட் எடுக்க வசதியில்லாத குழந்தைகள் அதிபரின் முகத்தை மீசை, தாடியுடன் ஒரு தாளில் வரைந்து கழிவறையில் பயன்படுத்துகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ அதிபருக்கு தெரிந்துவிட்டது. அதிபரின் படம் போட்ட செய்தித்தாள்களை கழிவறையில் பயன்படுத்தக் கூடாது என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை மக்கள் கண்டுகொள்ளவில்லை. உடனே அதிபர் கடும் கோபம் அடைந்தார். இந்தப் பிரச்சினையை கவனிப்பதற்காகவே ஓர் அமைச்சரை நியமித்தார்.

அந்த அமைச்சர், வீடு, பள்ளி, அலுவலகம் போன்ற இடங்களில் உள்ள கழிவறைகளை கண்காணிக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். காவல் துறையினரின் பரிசோதனையில் பள்ளிக் குழந்தைகள்தான் அதிக அளவில் அதிபரின் படங்களைக் கழிவறையில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதுவரை இந்த விஷயத்தை அனுமதித்த சுகாதாரப் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். “இவரது ஆட்சியில் வருமானத்துக்கு வழியில்லை. டாய்லெட் பேப்பர் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. எனவே, பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துகிறோம். அதிபரின் படங்களும் செய்திகளும் வராத நாட்களோ, செய்தித்தாள்களோ கிடையாது. நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்கின்றனர் மக்கள்.

இப்போதும் தேசிய செய்தித்தாள்களில் பக்கத்துக்குப் பக்கம் அதிபரின் படங்களே இடம்பெற்றிருக்கின்றன. சுகாதாரப் பணியாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் பள்ளிகளில் தினமும் குப்பைத் தொட்டிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புது வகையான போராட்ட உத்தியாக இருக்கிறதே!

http://tamil.thehindu.com/world/article24003477.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விஷ மனிதர்

 

 
29chskopic
 
 

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 31 வயது ஜோய் குய்லிலன், ‘விஷ மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். விஷப் பாம்புகளை சர்வ சாதாரணமாகப் பிடிக்கிறார், அவற்றை முறையாகக் கையாள்கிறார், பாம்புகளைப் பற்றி அத்தனை விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். பாம்புகளின் விஷக் கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை சிறிது விஷத்தை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறார். 14 வயதிலிருந்து நாகப் பாம்புகளுடன் பழக ஆரம்பித்தார். அப்போது பாம்புகளை எப்படிக் கையாள்வது என்று அவருக்குத் தெரியாது. ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது. மருத்துவமனைக்குச் செல்லாமல், கடித்த இடத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, ஓய்வெடுத்தார். பொதுவாக விஷப் பாம்புகள் கடித்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், நினைவிழப்பார்கள், பிறகு மரணமடைவார்கள். ஆனால் ஜோய் தூங்கிவிட்டு, இயல்பாக எழுந்தார். அந்த நிகழ்விலிருந்து தனக்கு விஷத்தைத் தாங்கக் கூடிய சக்தி இருப்பதாக நினைக்க ஆரம்பித்தார். பாம்பு விஷத்தை அடிக்கடி உடலில் செலுத்தி, தன்னுடைய உடலை பாம்புக் கடியை எதிர்கொள்ளும் அளவுக்குத் தயார் செய்து வைத்துவிட்டார். இதுவரை நூற்றுக்கணக்கான பாம்புக்கடிகளை இவரது உடல் சந்தித்திருக்கிறது. இவற்றில் 5 முறை மட்டுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

 

“மரணத்துடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரிகிறது. ஆனாலும் பாம்புகளை விட்டு விலக நான் நினைத்ததே இல்லை. நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் என்னைக் கடித்திருக்கின்றன. அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்குதான் என் உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் மருத்துவமனை சென்று, சிகிச்சைப் பெற்றுத் திரும்பினேன். மருத்துவர்களே என்னைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சாதாரண மனிதர்கள் இந்தப் பாம்புக்கடிகளுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றார்கள். அதனால்தான் என்னை எல்லோரும் ‘விஷ மனிதன்’ என்று அழைக்கிறார்கள். விஷத்தைச் செலுத்திக்கொள்வதால் பாம்புக் கடியிலிருந்து தப்பிப்பதோடு, என் உடல் உறுதியடையவும் செய்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்னைப் பரிசோதித்தனர். அதில் சக்தி வாய்ந்த இரண்டு பாம்புகள் என்னைக் கடித்தன. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, நான் இயல்பாக இருப்பதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகே நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்தனர். என்னுடைய ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள், நாகப் பாம்பின் விஷத்தை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புப் பொருள் இவருக்கு இருக்கிறது என்று சான்றளித்திருக்கிறார்கள். இயற்கையைப் பேணுவதில் பாம்புகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பாம்புகளை நேசிக்கிறேன். பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுத்து வருவதை என் கடமையாக நினைக்கிறேன்” என்கிறார் ஜோய்.

செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் இடத்தில் முதலில் வேலை செய்துவந்த ஜோய், பிறகு பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கே பாம்புகளைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த டிம் ப்ரிட்ஜ் இவருக்கு முன்பே ‘விஷ மனிதராக’ வாழ்ந்திருக்கிறார்.

விஷத்தை விஷத்தால் எதிர்கொள்ளும் விநோத மனிதர்!

http://tamil.thehindu.com/world/article24020059.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கரப்பான் பால்

 

 

 
30chskopic
 

கரப்பான்பூச்சியின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவிதத் திரவத்தை ‘கரப்பான் பால்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பூமியிலேயே மிகவும் சத்து நிறைந்த பால் என்றால் அது கரப்பான் பால்தான். பிற்காலத்தில் கரப்பான் பால் சூப்பர் உணவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கரப்பான் பூச்சிகளில் ஒரு வகை, ‘பசிபிக் பீட்டில் கரப்பான்’. இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ந்தபோது, முட்டைகளை வெளியே இடாமல், உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை அறிந்தனர். கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பாலை உண்டு வளர்ந்த பிறகே குஞ்சுகள் வெளியே வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர். மாட்டின் பாலை விட 3 மடங்கு சத்து கரப்பான் பாலுக்கு இருக்கிறது என்கிறார்கள். “இந்தப் பாலில் புரோட்டீன், அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சர்க்கரை என்று ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கரப்பான்பூச்சியின் குஞ்சுகள், மற்ற கரப்பான் குஞ்சுகளைவிட மிக வேகமாக வளர்கின்றன. இதில் சத்து அதிகம் இருந்தாலும் மனிதர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது. 100 கிராம் கரப்பான் பாலைப் பெறுவதற்கு ஆயிரம் கரப்பான்பூச்சிகள் தேவைப்படும். பண்ணைகளில் கரப்பான்களை வளர்க்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிக அளவில் கரப்பான் பால் கிடைத்தால் காபியில் கலக்கலாம், ஐஸ்க்ரீம் செய்யலாம். அதற்கு முன்பு கரப்பான் பால் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மையளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் விஞ்ஞானி லியோனார்ட் சாவாஸ்.

 

கரப்பான் பாலையும் விட்டுவைப்பதில்லை!

 

 

சீனாவைச் சேர்ந்த வாங், ஜிங்ஸோங் நகரிலுள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடையில் அழகான ஜப்பான் ஸ்பிட்ஸ் நாய்க் குட்டியை வாங்கினார். மூன்று மாதங்கள் வரை வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் குட்டியைக் கவனித்துக்கொண்டார். நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது மற்ற நாய்கள், இதைக் கண்டு பயந்து ஒதுங்கின. அப்போதும் வாங்குக்குச் சந்தேகம் வரவில்லை. ஒரு மாதம் கழித்து இது நாய் போலவே இல்லை, வால் எல்லாம் நரி போல இருக்கிறது என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். அப்போதுதான் நாய் ஒரு முறை கூடக் குரைத்தது இல்லை என்பதையும் நாய்களுக்கான உணவுகளை அது சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதையும் உணர்ந்தார். “டையுவான் விலங்குகள் பூங்காவுக்கு நாயை அழைத்துச் சென்றேன். அங்கே இருந்த ஆராய்ச்சியாளர்கள், இது நாயல்ல, நரி என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் அது இதுவரை வித்தியாசமாக என்னிடம் நடந்துகொண்டதில்லை. என்னதான் வீட்டில் வளர்த்தாலும் நரி, நாயாக முடியாது. இன்னும் சில மாதங்களில் இது முழு வளர்ச்சியடைந்த நரியாக மாறிவிடும் என்றார்கள். அந்தப் பூங்காவிலேயே என்னுடைய செல்லப் பிராணியைக் கொடுத்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானாலும் என் செல்ல நரியை வந்து பார்க்கலாம் என்று பூங்கா அனுமதி கொடுத்திருக்கிறது. நரிக்குச் செய்யப்படும் செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் வாங்.

நாய் வாங்கப் போய், நரி வாங்கி வந்த கதை!

http://tamil.thehindu.com/world/article24030193.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தை பெற்றே பிரபலமான குடும்பம்!

 

 
31chkanbig%20family
 
 
 

இங்கிலாந்தின் மிகப் பெரிய குடும்பத்தில் இன்னொரு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 43 வயது சூ ராட்ஃபோர்டும் 47 வயது ராட்ஃபோர்டும் யூடியூப் சானலில் தங்களின் 21-வது குழந்தை பிறக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள். குழந்தை பெற்றே பிரபலமானது இவர்கள் குடும்பம். “கடந்த செப்டம்பர் மாதம் எங்களுக்கு 20-வது குழந்தையாக ஒரு மகன் பிறந்தான். இனி குழந்தை பெறப் போவதில்லை என்று முடிவெடுத்தோம். ஆனால் மீண்டும் கருவுற்றிருக்கிறேன். இந்த முறை பெண் பிறக்க இருக்கிறாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏற்கெனவே எங்களுக்கு 11 மகன்களும் 9 மகள்களும் இருக்கிறார்கள். இதுவரை திட்டமிட்டே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டோம். இதுதான் திட்டமிடாத குழந்தை. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது மகிழ்ச்சியாக மாறிவிட்டது. 14 வயதில் எனக்கு முதல் குழந்தை பிறந்தது. 29 வருடங்களில் 20 குழந்தைகளைப் பெற்றிருக்கிறோம். இத்தனை குழந்தைகளையும் வளர்ப்பது கடினம்தான். ஆனாலும் இதை மகிழ்ச்சியாகவே நானும் ராட்ஃபோர்டும் செய்கிறோம்” என்கிறார் சூ.

 

“என்னுடைய ஆண்டு வருமானம் 45 லட்சம் ரூபாய்தான். இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்துவதற்கு இயலாது. வாரத்துக்கு 27 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அரசாங்கம் குழந்தைகள் பராமரிப்புக்காக வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அதனால் சமாளிக்கிறோம். மாதத்துக்கு 2 பேருக்குப் பிறந்த நாள் வந்து விடுகிறது. அதுக்கும் கிறிஸ்துமஸுக்கும் அதிகம் செலவாகும். மினி பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய் ஆரம்பப் பள்ளியில் விடுவேன். அடுத்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்களை அழைத்துச் செல்வேன். ஒரு நாளைக்கு 18 பாட்டில் பால், 3 லிட்டர் ஜூஸ், 3 பாக்கெட் செரியல் தேவைப்படுகிறது. இவை தவிர வளர்ந்தவர்களுக்கான உணவுகள் தனி. இங்கிலாந்திலேயே எங்கள் வீட்டில்தான் ஒருநாள் உணவுக்கு அதிகமாகச் செலவாகிறது. ஒவ்வொரு வேளை உணவையும் இரு விதமாகச் செய்வோம். வேலை இருந்துகொண்டே இருக்கும். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதிகாலை எழுந்தால் இரவு 10 மணி வரை வேலை இருந்துகொண்டே இருக்கும். பகலில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவிக்கு உதவுவது என்று நேரம் சரியாக இருக்கும். இரவில் வேலைக்குச் சென்றுவிடுவேன். ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா சென்று வருவோம். குழந்தைகளுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. 9-வது குழந்தை பிறந்த போது குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முயன்றேன். என் மனைவிக்கு அதில் விருப்பமில்லை. 21-வது குழந்தையுடன் போதும் என்று கூறிவிட்டார். இனி எங்கள் குடும்பம் பெரிதாக வாய்ப்பில்லை. எங்கள் இரண்டாவது மகள் சோபிக்கு 3 குழந்தைகள். சோபியின் தங்கை, தம்பிகள் எங்கள் பேரன் பேத்திகளைவிட இளையவர்கள்” என்கிறார் ராட்ஃபோர்ட்.

குழந்தை பெற்றே பிரபலமான குடும்பம்!

http://tamil.thehindu.com/world/article24042665.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கேக்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

 

 

 
01chskopic
 
 

ரஷ்யாவைச் சேர்ந்த 31 வயது எலினா நட், உலகிலுள்ள முக்கியமான கேக் கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு சிற்பம்போல் ஒவ்வொரு கேக்கையும் செதுக்கியிருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது கேக் என்றே தோன்றுவதில்லை. சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் வருவதில்லை. அப்படியே வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றும். “எனக்கு சமையல் கலையில் ஆர்வம் அதிகம். என்னுடைய ஆர்வத்தை கேக் மீது திருப்பினேன். உலகில் உள்ள மிகச் சிறந்த கேக் கலைஞர்களில் இருந்து என்னுடைய கேக் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக நிறைய உழைத்தேன். என்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க ஆரம்பித்தது. வியாபாரம் பெருகியது. 2015-ம் ஆண்டிலிருந்து இன்ஸ்டாகிராமில் நான் செய்யும் கேக்குகளின் படங்களை வெளியிட்டு வருகிறேன். 1.5 லட்சம் மக்கள் என்னைப் பின்தொடர்கிறார்கள். என்னைப் பற்றி யாரும் பேச வேண்டாம்; என் படைப்பைப் பற்றிப் பேச வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஒவ்வொரு கேக்கையும் செய்வதற்கு முன்பு திட்டமிடுவேன். தாளில் வரைந்துகொள்வேன். என் கேக்குகளில் இருக்கும் பூக்கள் இனிப்பால் செய்யப்பட்டவை. அவற்றையும் சுவைக்கலாம்” என்கிறார் எலினா நட்.

சாப்பிட வேண்டாம்; பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

 

 

சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் இருக்கிறது நம்பர் 11 நடுநிலைப் பள்ளி. இங்கே வகுப்புகளில் மாணவர்களின் முகத்தை 30 நொடிகளுக்கு ஒருமுறை படம் பிடித்துக் காட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை ஆர்வமாகக் கவனிக்கிறார்களா, இல்லையா என்பதை ஆசிரியரால் தெரிந்துகொள்ள முடியும். இதை ‘ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் பிஹேவியர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்’ என்று அழைக்கிறார்கள். கரும்பலகைக்கு மேலே பொருத்தப்பட்டிருக்கும் இந்த கேமராவில் கவனம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கோபம், பயம், ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகள் பதிவாகும். இதை ஆசிரியரின் மானிட்டருக்குத் தகவலாக அனுப்பிவிடும். நான்காவது வரிசையில் 2-வதாக அமர்ந்திருக்கும் மாணவன் வேடிக்கை பார்க்கிறான் என்று தகவல் சொல்லும். உடனே ஆசிரியர் அந்த மாணவனைக் கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பார். “கேமரா வந்த பிறகு நிறைய மாணவர்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. பாடத்தில் கவனமாக இருக்கிறார்கள். மதிப்பெண்களும் அதிகம் வாங்குகிறார்கள். இந்த கேமரா ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கிறது” என்கிறார் ஆசிரியர் வாங் சூ. “எங்களை எப்போதும் 2 கண்கள் கவனிக்கின்றன என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி, இப்படித் திரும்பினால் ஆசிரியரிடம் கேமரா காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் ஒரு மாணவர். இன்னொரு மாணவர், “முன்பெல்லாம் விளையாட்டுத்தனமாக இருப்பேன். இப்போது பாடத்தை கவனிக்கிறேன். அதிக மதிப்பெண் வாங்குகிறேன்” என்கிறார். ‘இது பள்ளியா, ஹிட்லரின் வதை முகாமா?’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

ஐயோ… என்ன கொடுமை இது?

 
 

http://tamil.thehindu.com/world/article24053499.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கருத்து தெரிவிப்பதில் கவனம்

 

 
Capture
 
 

நியூயார்க்கைச் சேர்ந்த மிஷெல் லீவைன் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மன்ஹாட்டனில் உள்ள மகளிர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வலைதளத்தில் விமர்சனமாக எழுதினார். இப்போது அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஜூன் சாங், 6.72 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்! ‘‘2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கமான பரிசோதனைக்காக நியூயார்க் ரோபோடிக் மகளிர் மருத்துவமனைக்குச் சென்றேன். ஒரு வாரம் கழித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்தது. பரிசோதனைக்குச் செலவான 87 ஆயிரம் ரூபாயில் 29 ஆயிரம் என்னுடைய பாலிசி தொகையில் சேராது என்பதால், அதைக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமான பரிசோதனைகளுக்கு என் பாலிசி தொகையே போதும். எப்படித் தொகை அதிகமானது என்று மருத்துவமனையில் கேட்டேன். அவர்கள் கோபமானார்கள். நான் இடுப்பில் கொஞ்சம் வலி இருப்பதாகச் சொன்னதால், ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். என் அனுமதியின்றி, எனக்குத் தெரியாமல் எப்படி இதைச் செய்யலாம் என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. தேவையின்றி எனக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டதாக நினைத்தேன். அந்த ஏமாற்றத்திலும் பணம் அதிகம் செலவான வருத்தத்திலும் இருந்தேன். என்னுடைய கருத்துகளை வலைதளத்தில் எழுதினேன். இனிமேல் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதைப் பார்த்து இன்னும் சில வலைதளங்கள் என்னை எழுதச் சொல்லிக் கேட்டன. அவற்றிலும் என் கருத்துகளைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். பிறகு எழுதியதையே மறந்துவிட்டேன். இப்போது மருத்துவர் ஜூன் சாங் என் மீது அவதூறு வழக்கு போட்டு, நஷ்ட ஈடும் கேட்டிருக்கிறார். என்னிடமிருந்து அதிகமான தொகை வசூலித்ததோடு, முறையான விளக்கத்தையும் அந்த மருத்துவமனை தரவில்லை. அதனால்தான் நான் எழுதினேன். இதில் தவறு என்ன இருக்கிறது? நான் எதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்?” என்று கேட்கிறார் மிஷெல் லீவைன்.

 

“மருத்துவமனைகளைப் பற்றி எழுதும்போது மிகக் கவனமாக எழுத வேண்டும். தவறான தகவல்களைப் பரப்பினால் அது மருத்துவமனையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். தவறான தகவல்களை அளித்ததோடு, ஒரு ஸ்டார் வேறு கொடுத்திருக்கிறார் மிஷெல். இது என் கட்சிக்காரரான ஜூன் சாங்கையும் அவரது மருத்துவமனையையும் மிகவும் பாதித்து இருக்கிறது. இவருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் மருத்துவரிடம் கேட்டு, தெளிவு பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கை விடுவதாக இல்லை. இதன் மூலமே என் கட்சிக்காரர் இழந்த மதிப்பை மீட்டெடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் கண்டதையும் எழுதுபவர்கள் கொஞ்சம் யோசித்து இனி எழுதவும் செய்வார்கள” என்கிறார் மருத்துவரின் வழக்கறிஞர். இதுவரை வழக்குக்காக 13.5 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டார் மிஷெல். 6.72 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் மக்களிடம் நன்கொடை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால் மிகவும் சொற்பமான தொகையே கிடைத்திருக்கிறது. நோயாளிகளுக்குச் சாதகமாகச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் இவர்.

கருத்து தெரிவிப்பதில் கவனம் தேவை!

http://tamil.thehindu.com/world/article24064201.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.