• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

உலக மசாலா

Recommended Posts

உலக மசாலா: வெள்ளையாக மாறிய சாம்பல் அணில்கள்

 
masal_2598661f.jpg
 

பிரிட்டனில் சாம்பல் வண்ண அணில்கள்தான் வசித்து வந்தன. ஆனால் சமீபக் காலமாக வெள்ளை அணில்கள் தென்படுகின்றன. கண்களைத் தவிர உடல் முழுவதும் வெள்ளையாக மாறி இருக்கின்றன. ‘‘நிறக் குறைபாடும் மரபணு மாற்றமும் விலங்குகளையும் பறவைகளையும் வெள்ளையாக மாற்றிவிடுகின்றன.

பிரிட்டனில் 50 லட்சம் சாம்பல் அணில்கள் வசித்து வந்தன. இன்று கணிசமான அளவில் வெள்ளை அணில்களைப் பார்க்க முடிகிறது. வெள்ளைக் காகம், வெள்ளை மயில், வெள்ளை பாம்பு போன்றவை எல்லாம் இப்படித்தான் உருவாகி வருகின்றன’’ என்கிறார் வன ஆர்வலர் ஆண்ட்ரு ஃபுல்டன்.

ம்… இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழக் காத்திருக்கின்றனவோ…

நீண்ட காலம் வாழக்கூடியவை ஆமைகள். வெட் கிம் வளர்த்து வந்த கடல் ஆமை ஹாரிக்கு பின்னங்கால்களில் ஒன்று உடைந்துவிட்டது. 11 வயது ஹாரிக்கு பின்னங்கால் இல்லாமல் நகர்ந்து செல்வதோ, நீந்துவதோ மிகவும் கடினமாக இருந்தது. ‘‘குறைந்தது இன்னும் 50 ஆண்டுகளாவது வாழக்கூடியது ஹாரி. ஒரு கால் இழந்ததால் ஹாரியின் வாழ்நாள் குறைந்துவிடுமோ என்று அஞ்சினேன். என் காலத்துக்குப் பிறகும் ஹாரிதான் உலகில் வசிக்கும்.

அதனால் உலோகத்தால் ஆன சக்கரங்களை ஹாரியின் உடலில் பொருத்தும் யோசனையை கால்நடை மருத்துவமனையில் தெரிவித்தேன். அவர்களும் இதற்குச் சம்மதித்தனர். இதோ உலோக சக்கரங்கள் நன்றாக ஹாரியின் உடலில் ஒட்டிக்கொண்டன. ஹாரி சக்கரங்களைப் பயன்படுத்தி, நகர்ந்து செல்ல கற்றுக்கொண்டுவிட்டது. இனி ஹாரியைப் பற்றிக் கவலை இல்லை’’ என்கிறார் வெட் கிம்.

ஆமைக்குக் கால் கொடுத்த வள்ளல் வாழ்க!

ஜேசன் ஆக்ஸ்லீ இங்கிலாந்தில் வசிக்கிறார். விளையாட்டுப் பயிற்சியாளராக இருக்கும் ஜேசனுக்கு ஷூக்களைச் சேகரிப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இதுவரை 150 ஜோடி ஷூக்களைச் சேகரித்து இருக்கிறார். 50 ஜோடி ஷூக்களை படுக்கைக்கு அடியில் வைத்திருக்கிறார். 80 ஜோடி ஷூக்களை பரணில் போட்டு வைத்திருக்கிறார். மீதி 20 ஜோடி ஷூக்களை வைப்பதற்கு இடமில்லை.

தன் இரு மகள்களிடமும் அவர்களது அறையில் வைத்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டும், அவர்கள் மறுத்துவிட்டனர். ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாயை ஷூக்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறார் ஜேசன். ‘‘நானும் ஜேசனின் சேகரிப்புகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அவரது பொழுது போக்கை மதிக்கிறேன். ஆனால் வீட்டில் குடியிருப்பவர்களின் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, ஷூக்களுக்கு இடம் அளிக்க முடியாது. இனிமேலும் ஷூக்கள் சேகரிப்பதை ஜேசன் நிறுத்தவில்லை என்றால், நான் கிளம்பிவிடுவேன்’’ என்கிறார் அவரது மனைவி.

‘‘ஷூக்களை வாங்கி, கண் தெரியாத இடத்தில் வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதற்காக ஷுக்கள் வாங்குவதையும் விடப் போவதில்லை. பெரிய இடம் கிடைத்தால் பிரச்சினை தீரும்’’ என்கிறார் ஜேசன்.

ஷூக்களை, இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமே ஜேசன்…

லண்டனைச் சேர்ந்த மார்ஷ்மெல்லோ லேசர் ஃபீஸ்ட் என்ற டிசைன் ஸ்டூடியோ இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருக்கிறது. மரங்கள் அடர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, லிடார் என்ற கருவியைத் தலையில் மாட்டுகிறார்கள். சிறிது நேரத்தில் பல வண்ண லேசர் ஒளி மூலம் பூச்சிகளும் விலங்குகளும் கண்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன.

காட்சிக்கு ஏற்றவாறு இசையும் ஒலிக்கிறது. பூச்சிகள் மட்டுமில்லை, விலங்குகளும் பறந்து செல்கின்றன. காண்பவர்களுக்கு மிக அற்புதமான அனுபவத்தைத் தருகிறது. நிறுவனத்தின் இயக்குனர் பார்னே ஸ்டீல், ‘‘இதுவரை எங்கள் லிடார் கருவியை அணிந்தவர்கள் பிரமாதமான வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். காட்சி உண்மை அல்ல, மெய்நிகர் (வர்ச்சுவல் ரியாலிட்டி) காட்சிதான். ஆனால் உண்மையான விலங்குகளையோ, பூச்சிகளையோ நீங்கள் பார்ப்பது போல காட்சிகளாலும் ஒலியாலும் உணரவைத்து விடுகிறது’’ என்கிறார்.

எதிர்காலத்தில் விலங்குகளையும் பூச்சிகளையும் லிடார் மூலம்தான் பார்க்க முடியும் போலிருக்கு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வெள்ளையாக-மாறிய-சாம்பல்-அணில்கள்/article7809047.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: நூடுல்ஸ் மனிதர்

masala_2599778f.jpg
 

ஜப்பானில் வசிக்கும் 55 வயது டோஷியோ யமமோடோவுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்றால் விருப்பம் அதிகம். இதுவரை 40 நாடுகளைச் சேர்ந்த 5,500 வகை நூடுல்ஸ்களைச் சுவைத்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் நூடுல்ஸ் சாப்பிட்ட அனுபவங்களை, இணையதளத்தில் எழுதி வருகிறார்.

அந்த நாட்டுக்கு நூடுல்ஸ் எப்படி அறிமுகமானது, எப்படிச் சமைக்க வேண்டும், சோடியம் எவ்வளவு இருக்கிறது, கலோரிகள் எவ்வளவு போன்ற விஷயங்களை எல்லாம் சுவாரசியமாக எழுதி வருகிறார். இவரது இணையதளம் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. 1996-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 14 லட்சம் பேர் இவரது இணையதளத்தைப் பார்த்து இருக்கிறார்கள். சிலர் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் நூடுல்ஸ்களை அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

‘‘நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே நூடுல்ஸ் சமைக்க ஆரம்பித்துவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நூடுல்ஸ் மேல் இருக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு நூடுல்ஸையும் சமைத்து, சுவைத்த பிறகு மார்க் போடுவேன். அதி அற்புதமான நூடுல்ஸாக இருந்தால் 4 நட்சத்திரங்கள் கொடுப்பேன். நான் என் தொழில் காரணமாக பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

அங்கெல்லாம் நூடுல்ஸ்களை மறக்காமல் வாங்கி வந்துவிடுவேன். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நூடுல்ஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நலனை முக்கியமாகக் கருதினார்கள். உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களைச் சேர்த்தனர். ஆனால் இன்று எல்லாமே வணிகமயமாகிவிட்டன. வளர்ந்த நாடுகளில் கப் நூடுல்ஸ் மிகப் பிரபலமாக இருக்கிறது, வளர்ந்து வரும் நாடுகளில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பிரபலமாக இருக்கிறது. நூடுல்ஸ் தொடர்பான பணிகளுக்காகக் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். புத்தகங்கள் எழுதி வருகிறேன். இன்றும் வாரத்துக்கு 5 நாட்கள் நூடுல்ஸ்தான் சாப்பிடுகிறேன்’’ என்கிறார் டோஷியோ யமமோடோ.

நூடுல்ஸ் கிங்!

சீனாவின் நான்ஜிங் ஆற்றுப் பாலத்தின் மீது பேருந்தை ஓட்டி வந்துகொண்டிருந்தார் பியான் பெங்ஃபீய். பாலத்தின் மீது ஒரு பெண் வேகமாக நடந்து சென்று, சுவர் மீது ஏற ஆரம்பித்தார். சட்டென்று பேருந்தை நிறுத்தி வெளியே குதித்த பியான், ஆற்றில் குதிக்க இருந்த பெண்ணைக் காப்பாற்றிவிட்டார். அந்தப் பெண் தன்னைக் குதிக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பியானும் பயணிகளும் அறிவுரை கூறினார்கள். பிறகு காவல்துறையிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்தனர். பியானின் சமயோசித அறிவைக் கண்டு, பயணிகளும் அந்தப் பக்கம் வந்தவர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பியானுக்குப் பாராட்டுகள்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் விசினோ, நிலத்துக்கு அடியில் மிகப் பிரம்மாண்டமான குடியிருப்பைக் கட்டியிருக்கிறார். வெளியில் இருந்து பார்த்தால் அங்கே ஒரு குடியிருப்பு இருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியாது. உள்ளே சென்றால் ஆடம்பரமான நவீன வசதிகள்! இந்தக் குடியிருப்புகளை அணு குண்டுகளால் துளைக்க முடியாது, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஆபத்தை ஏற்படுத்த முடியாது.

உலகமே அழிந்து போனாலும்கூட ஒரு வருடம் வரை இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 80 பேர் உயிரோடு இருக்க முடியும். 4 நட்சத்திர விடுதி போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவ வசதி, எரி பொருள் வசதி, தண்ணீர் வசதி, பாதுகாப்பு என்று அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஎன்ஏ பாதுகாக்கும் வசதியும் இருக்கிறது. நிலத்துக்கு அடியிலேயே காய்கறிகளை விளைவித்துக்கொள்ள முடியும். இங்கே குடியேறுபவர்கள் துணிகளையும் அவர்களுக்கான மருந்துகளையும் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது.

பதுங்கு வீட்டிலிருந்து வெளியே வந்தால் விவசாயம் செய்யலாம், மீன் பிடிக்கலாம், வேட்டையாடலாம் என்கிறார்கள். இந்தக் குடியிருப்பில் தங்குவதற்கு பெரியவர்களுக்கு 23 லட்சம் ரூபாயும் குழந்தைகளுக்கு 16 லட்ச ரூபாயும் செலுத்த வேண்டும். உலகம் அழியக்கூடிய இறுதி நாட்களில் இந்தக் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களைத் தனி விமானங்கள் மூலம் இங்கே அழைத்து வந்துவிடுவார்கள். இதே போல ஜெர்மனியில் ஒரு பதுங்கு குடியிருப்பு கட்டும் முயற்சியில் இருக்கிறார் ராபர்ட் விசினோ. குடியிருப்பு அமைக்கும் இடத்தை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

உலகமே அழிஞ்ச பிறகு நீங்க எல்லாம் இருந்து என்ன செய்யப் போறீங்க?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நூடுல்ஸ்-மனிதர்/article7813286.ece

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: நாய்க்கு கிடைத்த சொகுசு!

 
 
masala_2601110f.jpg
 

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு, உரிமையாளருடன் நுழைந்த ஹாங்க் நாயைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. இன்டீரியர் டிசைனராக இருக்கும் காரி விட்மேன், தன் வளர்ப்பு நாய் ஹாங்க்கை முதல் வரிசையில் தன்னுடன் அமர வைத்துப் பயணம் மேற்கொண்டார். நோய் காரணமாக நாய்க்கு உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிட்டது. நாயால் தானாக எங்கும் நகர்ந்து செல்ல இயலாது. சக்கர நாற்காலியில் வசதியாக அமர வைத்துதான் அழைத்துச் செல்கிறார் காரி விட்மேன். விலங்குகளுக்கு உரிய பகுதியில் நாயை வைக்காமல், பயணிகள் இருக்கையில் நாயை வைத்ததில் பலரும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் பயணம் முழுவதும் ஹாங்க் அமைதியாக இருந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது.

நிறைய மனிதர்களுக்கே கிடைக்காத விஷயம் ஒரு நாய்க்குக் கிடைத்தால் அதிருப்தி வராதா என்ன?

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் ஸி ஸுவோஷி. சமீபத்தில் சீனாவின் ஆண் - பெண் விகிதம் சமமின்மை குறித்த தன்னுடைய கருத்துகளை வெளியிட்டார். சீனாவில் ஒரே குழந்தை என்ற கொள்கை கடைபிடிக்கப்படுவதால் பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. 2020ம் ஆண்டு 3 முதல் 4 கோடி ஆண்கள் திருமணம் ஆகாமல் இருக்கப் போகிறார்கள். பணக்கார ஆண்களுக்கு எளிதில் பெண் கிடைத்துவிடும். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை ஆண்களுக்குத் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைப்பது கடினம். பெரும்பாலான இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, ஒரு பெண்ணை பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸி.

‘‘ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒற்றுமையாக வாழலாம். இதன் மூலம் ஏழ்மையையும் விரட்ட முடியும். ஆண்களுக்கும் துணை கிடைக்கும். எங்கும் நடக்காத விஷயத்தை நான் சொல்லிவிடவில்லை. ஒரு பிரச்சினைக்கு எனக்குத் தோன்றிய ஆலோசனையைச் சொல்லியிருக்கிறேன். எல்லா விஷயத்துக்கும் தர்க்கம் பார்த்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த ஆலோசனையை ஏற்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருந்துகொள்ள வேண்டியதுதான்’’ என்கிறார் ஸி.

‘‘இன்று இந்த யோசனை தவறாகத் தெரியலாம். ஆனால் ஆண்கள் குடும்பம் நடத்த பெண்கள் கிடைக்காவிட்டால் அது பெரிய சமூகப் பிரச்சினையாக மாறிவிடாதா? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து விடாதா? இதை விடச் சிறந்த யோசனையை யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்கிறார் ஸி.

சிக்கலான பிரச்சினைதான்..

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 65 வயது ஜாய் மிலின், பர்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயை மூக்கால் நுகர்ந்தே கண்டுபிடித்து விடுகிறார். ஜோயைப் பரிசோதித்த ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் உண்மைதான் என்று கூறியிருக்கிறார்கள்.

‘‘மற்றவர்களால் நுகர முடியாத விஷயங்களையும் என்னால் எளிதாக நுகர முடியும். ஒருவர் உடலில் கஸ்தூரி மணம் வந்தால் அவருக்கு பர்கின்சன் நோய் இருப்பதாக அர்த்தம். அனஸ்தீஸியா நிபுணரான என் கணவர் வரும்போது வித்தியாசமான மணம் வரும். ஒருநாள் அவர் உடலில் இருந்து வேறு மணம் வர ஆரம்பித்தது. அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. 6 ஆண்டுகளுக்குப் பிறகு பர்கின்சன் நோயால் தாக்கப்பட்டார். என்னால் எப்படிக் கண்டுபிடிக்க முடிகிறது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் மிகச் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறேன்’’ என்கிறார் ஜாய். எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பர்கின்சன் பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து பெறப்பட்ட 6 சட்டைகளையும் 6 சாதாரண சட்டைகளையும் கலந்து வைத்தனர். 12 சட்டைகளில் 11 சட்டைகளைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் ஜாய். ஒரு சட்டையில் மட்டும் வாசனை திரவியம் சேர்க்கப்பட்டிருந்ததால் அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. பர்கின்சன் பாதிப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நுகர்ந்தே ஜாய் கண்டுபிடித்து விடுகிறார் என்றால் மிகப் பெரிய அதிசயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிசயம்... அபூர்வம்… ஆச்சரியம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்க்கு-கிடைத்த-சொகுசு/article7817628.ece?homepage=true&relartwiz=true

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

"நாய்க்கு வந்த வாழ்வு" என்று உதைத் தான் சொல்வார்களோ!

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: அழகில் ஏழ்மை இல்லை!

 
 
masala_2602720f.jpg
 

தாய்லாந்தில் வசிக்கும் 17 வயது கனித்தா பசாங், சமீபத்தில் மிஸ் அன்சென்சார்ட் நியூஸ் தாய்லாந்து 2015 என்ற அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் கனித்தா, அழகி பட்டம் வென்றது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கனித்தாவின் தாய் குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். அழகி பட்டம் வாங்கிய கையோடு தன் அம்மாவைத் தேடி வந்தார் கனித்தா. சாலைகளில் குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது.

“இன்னிக்கு நான் இந்த நிலையை அடைந்ததற்கு காரணம் என் அம்மாதான். அவருடைய உழைப்புதான். தானும் நேர்மையாக இருந்து என்னையும் நேர்மையாக வளர்த்திருக்கிறார். அதனால் அம்மா செய்யும் வேலை குறித்து எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் எனக்கு வந்ததில்லை. ஓய்வு நேரங்களில் குப்பைகளை அகற்றும் பணியில் நானும் ஈடுபடுவேன். போட்டியில் கலந்துகொண்டாலும் நான் பட்டம் வெல்வேன் என்று நினைக்கவில்லை. என் அம்மாவின் உழைப்பும் ஆசிர்வாதமும்தான் எனக்கு இந்தப் பட்டத்தை வாங்கித் தந்திருக்கிறது என்று நம்புகிறேன். என்னால் கல்லூரிப் படிப்பை வறுமை காரணமாகத் தொடர முடியவில்லை. இந்தப் பட்டம் வென்றதன் மூலம் எங்கள் நிலைமை முன்னேறும் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் கனித்தா.

நீங்க மட்டுமில்லை உங்க அம்மாவும் பேரழகி!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தன்னால் ஆன முயற்சியை எடுத்திருக்கிறார் 32 வயது கோபி ஸாஃப்ரிர். தன்னுடைய உணவு விடுதியில் அரபுகளும் யூதர்களும் மேஜைகளைப் பகிர்ந்துகொண்டால், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான தொகையில் இருந்து 50% பணம் மட்டும் செலுத்தினால் போதும். ‘அரபுகளை நினைத்து பயப்படுகிறீர்களா? யூதர்களை நினைத்து பயப்படுகிறீர்களா?’ எங்களுக்கு அரபுகளும் வேண்டாம், யூதர்களும் வேண்டாம். மனிதர்கள் மட்டும் நுழைந்தால் போதும். நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த மனிதர்கள். அரேபியர்களின் சிறப்பு உணவும் யூதர்களின் சிறப்பு உணவும் இங்கு எந்த நாட்டினருக்கும் எந்த மதத்தினருக்கும் வழங்கப்படும்’ என்று ஹீப்ரு மொழியில் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்.

“என்னுடைய செயல் மூலம் வன்முறையில் இறங்கும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் என் ஆதரவு இல்லை என்பதைப் புரிய வைத்திருக்கிறேன். எங்கள் நாடுகளைப் பற்றி ஊடகங்கள் தவறான தகவல்களையே தருகின்றன. எங்கள் நாடுகளுக்கும் அழகான இன்னொரு முகம் இருக்கிறது. ஊடகங்களில் சொல்லப்படும் இஸ்ரேலைவிட நிஜமான இஸ்ரேல் நன்றாகவே இருக்கிறது. மக்களாகிய நாங்கள் அமைதியையும் நியாயத்தையுமே விரும்புகிறோம், ஆதரவு அளிக்கிறோம். என் உணவகத்தில் அரபுகளும் யூதர்களும் ஒரே மேஜையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னுடைய சிறு முயற்சியால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நான் நம்பவில்லை. ஆனால் பிரச்சினை தீர்வதற்கான ஆரம்பப் புள்ளியாக என் உணவு விடுதி அமையுமானால் அதை விட வேறு என்ன வேண்டும்?’’ என்கிறார் கோபி ஸாஃப்ரிர்.

அமைதி தூதரே அசத்துங்க!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அழகில்-ஏழ்மை-இல்லை/article7822012.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: குறைபாடு மாஷாவுக்கா, எதிர்ப்பாளர்களுக்கா?

 
 
maasa_2604085f.jpg
 

ரஷ்யாவில் வசிக்கிறார் 7 வயது மாஷா. பிறக்கும்போதே டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு. மாஷாவின் அம்மா மரினா கோல்டிஷேவா பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவரது பள்ளியிலேயே மாஷாவும் படித்து வருகிறாள். பள்ளி மாணவர்களை வைத்துப் புகைப்படங்கள் எடுத்து, பள்ளி ஆண்டு புத்தகத்தில் வெளியிட்டிருக்கின்றனர். ஒரு வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தைப் பார்த்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் கொதித்துவிட்டனர். ‘‘டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தையை எப்படிச் சாதாரண மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்கலாம்? எங்கள் குழந்தைக்கு அருகில் மாஷா இருந்தால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. உடனே புகைப்படத்தை நீக்க வேண்டும். 7 வயது குழந்தை எப்படி 11 வயது மாணவர்களுடன் அமர்ந்திருக்கலாம்?’’ என்று கேள்விகளை அடுக்குகிறார்கள். மாஷாவின் அம்மாவோ, ‘‘டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைதான். ஆனால் ஒருநாளும் பிற மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுத்ததே இல்லை. மிகவும் புத்திசாலி. குழந்தையை நானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் பணிபுரியும் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். மாணவர்களின் பெற்றோர் அவமானப்படும்படி எந்த விஷயத்தையும் மாஷா செய்யவில்லை. புகைப்படங்கள் எடுத்த நாளன்று, புகைப்படக்காரரிடம் தன்னை ஒரு புகைப்படம் எடுக்குமாறு மாஷா கேட்டிருக்கிறாள். புகைப்படக்காரர் மாஷாவை, இந்த மாணவர்களோடு உட்கார வைத்துவிட்டார். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. இதில் மாஷாவோ, நானோ எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்கிறார் மரினா. மிக அற்புதமான, புத்திசாலியான ஆசிரியர் என்பதாலும் தவறு மாஷா மீதோ, மரினா மீதோ இல்லை என்பதாலும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்ப்பு வலுக்கிறது. அதே நேரம் மாஷாவுக்காக, ரஷ்யாவின் சூப்பர் மாடல் நடாலியா வோடியானோவா உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

குறைபாடு மாஷாவுக்கா, எதிர்ப்பாளர்களுக்கா?

அமெரிக்காவின் மேற்கு சியாட்டில் பகுதியில் ஒரு வித்தியாசமான மையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே குழந்தைகளுக்காக ஆரம்பப் பள்ளியும் முதியோருக்கான இல்லமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியோர்களும் மனிதர் களுடன் பேசுவதையும் பழகுவதையும் அதிகம் விரும்புவார்கள். வாரத்தில் 5 நாட்கள் குழந்தைகள் முதியவர்களுடன் கலந்துரை யாடுகிறார்கள். நடனம், ஓவியம், இசை, மதிய உணவு, கதை சொல்லுதல் என்று பல விஷயங்களிலும் குழந்தைகளும் முதியவர் களும் சேர்ந்தே பங்கேற்று வருகிறார்கள். ‘‘ஒவ்வொரு நாளும் குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்குப் பிடித்தமான விஷயமாகிவிட்டது. பெற்றோர்களை விட பாட்டி, தாத்தாவுக்குப் பேரன், பேத்திகள் மீது கண்மூடித்தனமான அன்பு இருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் ரசிக்க வைக்கும். அதைத்தான் நாங்கள் இங்கே அனுபவிக்கிறோம். முதுமையில் தனிமை கொடுமையானது. நாங்கள் அந்தத் துயரத்தை அனுபவிக்கவில்லை’’ என்கிறார் முதியவர் ஒருவர். அதேபோல குழந்தைகளும் தங்கள் சொந்த தாத்தா, பாட்டி போல அத்தனை உரிமையுடன் பழகுகிறார்கள், விளையாடுகிறார்கள், விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட இவான் ப்ரிக்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர், இவர் களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். படத்தின் தலைப்பு ‘பிரசன்ட் பர்ஃபெக்ட்’. இந்தத் திரைப்படம் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.

அட! நல்ல விஷயத்தை உலகத்துக்குத் தெரியப்படுத்துவதும் நல்லதுதானே…

வாஷிங்டனில் உள்ள ஒலிம்பிக் தேசியப் பூங்காவுக்கு உட்பட்ட காலேவாக் கடற்கரையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஓர் அதிசய மரம். மரத்தின் வேர்ப்பகுதிக்கு அடியில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளத்துக்கு இரு பக்கங்களிலும் உள்ள மண்ணில் வேர்கள் பரவியுள்ளதால் மரம் கீழே விழாமல் இருக்கிறது. குறைந்த மண்ணில் ஊடுருவியுள்ள வேர்களில் இருந்து ஒரு பெரிய மரத்துக்கான சத்துகளும் எப்படிக் கிடைக்கின்றன என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக இப்படியே வாழ்ந்து வரும் இந்த மரம் மோசமான புயலிலும் பாதிக்கப்படவில்லை. இன்றும் பச்சை இலைகளுடன் புத்தம் புது மரமாகக் காட்சியளிக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக அந்தப் பகுதி மக்கள் இந்த மரத்தைப் பார்க்கிறார்கள்.

தன்னம்பிக்கை மரம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குறைபாடு-மாஷாவுக்கா-எதிர்ப்பாளர்களுக்கா/article7826195.ece?homepage=true&relartwiz=true

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பிராம்பிளுக்கு ஒரு பூச்செண்டு!

 
dog_2486952f.jpg
 

பிரிட்டனில் வசிக்கும் பிராம்பிள் நாயை எல்லோரும் உயர்வாக மதிக்கின்றனர். இதுவரை பிரிட்டனிலேயே அதிக தடவை ரத்த தானம் செய்த நாய் என்ற பெருமை பிராம்பிளுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தைத் தானமாக வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் 450 மில்லி ரத்தம் எடுக்கப்பட்டு, 4 நாய்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதுவரை 104 நாய்களின் உயிர்கள் பிராம்பிள் கொடுத்த ரத்தத்தால் காப்பாற்றப்பட்டுள்ளன. மரியா க்ரட்டாக் தன்னுடைய பிராம்பிள் குறித்து பெருமை கொள்கிறார். நாய்கள் பிறந்து ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்க முடியும் என்பதால், பிராம்பிள் தன் தானத்தை அதற்குப் பிறகே ஆரம்பித்திருக்கிறது. ரத்தம் கொடுத்த பிறகு, பிராம்பிளுக்குச் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த தானம் அளிக்க விரும்புவதில்லை. மரியாவும் பிராம்பிளும் பாராட்டுக்குரியவர்கள் என்கிறார்கள் ரத்த வங்கி ஊழியர்கள். பிராம்பிளின் சேவையைக் கெளரவிக்கும் விதத்தில் அதன் கழுத்தில், ‘நான் உயிர்களைக் காப்பாற்றக்கூடியவன்’ என்று எழுதப்பட்ட சிவப்புத் துணியைக் கட்டி வைத்திருக்கிறது ரத்த வங்கி.

பிராம்பிளுக்கு ஒரு பூச்செண்டு!

லியாம் பென்னெட், ‘டாசேஜ்’ என்ற புதுமையான உணவுப் பொருளை உருவாக்கியிருக்கிறார். சாசேஜ்க்கு நடுவே ஜாம் வைத்து உருவாக்கப்பட்டதுதான் டாசேஜ். இதில் பாதி சாசேஜும் பாதி ஜாமும் வைக்கப்பட்டிருக்கும்.

‘‘எனக்கு உணவில் அதிக ஈடுபாடு உண்டு. எதையாவது புதுமையாகச் செய்ய முடியுமா என்று யோசிப்பேன். ஜாமை வைத்து டாசேஜை உருவாக்கினேன். பிரமாதமாக இருந்தது. பலரிடம் டாசேஜைச் செய்து, சுவைக்கக் கொடுத்தேன். எல்லோருமே அதன் சுவைக்கு மயங்கிப் போனார்கள். என்னுடைய டாசேஜை விற்பனைக்கு வைத்தேன். இன்று சாசேஜை விட டாசேஜைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்கிறார் லியாம். பன்றி, மாட்டு இறைச்சிகளில் தற்போது டாசேஜ் உருவாக்கப்படுகிறது. விரைவில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற டாசேஜைச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் லியாம். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி சுவை ஜாம்களில் டாசேஜ்கள் தயாரிக்கப்படுகின்றன. ’’எனக்கு நிதி உதவி கிடைத்தால் பெரிய நிறுவனங்களோடு போட்டி போடுவேன். என்னிடம் இருக்கும் நிதியை வைத்து ஓரளவே விற்பனையைப் பெருக்க முடிகிறது’’ என்கிற லியாம், நிதிக்காகக் காத்திருக்கிறார்.

சாசேஜ் இடத்தை டாசேஜ் பிடிச்சிருச்சே!

ரத்தம் குடிக்கும் காட்டேரிகளைக் கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். லூசியானாவைச் சேர்ந்த 28 வயது கட்ஸ்சென், தன் உடலில் இருந்து ரத்தத்தைத் தானே உறிஞ்சிக்கொள்கிறார். ’’சின்ன வயதிலிருந்தே ரத்தக் காட்டேரிகள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ரத்தக் காட்டேரிகள் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் நானே ஒரு ரத்தக் காட்டேரியாக உணர்ந்தேன். என்னுடைய ரத்தத்தை நானே உறிஞ்ச ஆரம்பித்தேன்’’ என்கிறார் கட்ஸ்சென். இவரைப் போலவே ரத்தம் உறிஞ்சுவதில் ஆர்வம் உள்ளவர் 43 வயது மைக்கேல் வாச்மியல். இருவரும் ரத்தக் காட்டேரிகள் குறித்த ஒரு விழாவில் சந்தித்துக்கொண்டனர். உடனே இருவருக்கும் காதல் வந்துவிட்டது. கட்ஸ்செனின் உடலில் பிளேடால் கீறி, ரத்தத்தை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்கிறார் மைக்கேல். சில நேரங்களில் நேரடியாக உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கிறார். ஒருமுறை ரத்தம் குடித்தால் பல மாதங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது என்கிறார். ’’எனக்கும் மைக்கேலுக்குமான அன்பும் புரிதலும் வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பான முறையில்தான் என் உடலில் இருந்து ரத்தத்தை எடுக்கிறார். அவருக்கு ரத்தம் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகிலேயே மிகவும் புரிந்துகொண்ட ஜோடிகள் நாங்களாகத்தான் இருப்போம்’’ என்கிறார் கட்ஸ்சென்.

ஐயோ… நீங்க ரெண்டு பேரும் நல்ல மருத்துவரைப் பாருங்க முதலில்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிராம்பிளுக்கு-ஒரு-பூச்செண்டு/article7466799.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சை...

 
 
um_2605089f.jpg
 

தென்கொரியாவில் தற்கொலை எண்ணம் வருகிறவர்களுக்கான புதிய சிகிச்சை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சவப்பெட்டிக்குள் படுக்க வைத்து, மரண அனுபவத்தை ஏற்படுத்தும் இந்தச் சிகிச்சை மிகப் பெரிய அளவில் தற்கொலைகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுகிறது.

தென்கொரியாவில் தினமும் 40 பேர் தற்கொலை செய்துகொள் கிறார்கள். சியோல் ஹைவோன் ஹீலிங் சென்டர் இவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம்.

ஒரு பெரிய அறையில் வரிசையாக மேஜை, நாற்காலிகள் போடப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் ஒரு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அமைதியாக நாற்காலியில் அமர வேண்டும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சவப்பெட்டிக்குள் படுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு உயிலோ, தங்கள் பிரியத்துக்கு உரியவர்களுக்குக் கடைசிக் கடிதமோ எழுத வேண்டும். சத்தமாக எல்லோருக்கும் கேட்பது போலப் படிக்க வேண்டும். விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்படும். மரண தேவதை என்ற பெயரில் ஒரு பெண் அறைக்குள் நுழைவார். எல்லோரும் மீண்டும் சவப்பெட்டிக்குள் படுக்க வேண்டும். ஒவ்வொருவரின் இமைகளையும் மரண தேவதை மூடிவிடுவார். 10 நிமிடங்களில் மரணத்துக்குப் பிறகு ஒன்றுமே இல்லை என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். ’உயிர் வாழ்தல் எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்தவர்கள் வெளியே வரலாம்’ என்று அறிவிப்பு வரும். எல்லோரும் மரணத்தில் இருந்து மீண்ட உற்சாகத்துடன் சவப்பெட்டியில் இருந்து வெளியே வருவார்கள்.

முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சை…

ரஷ்யாவைச் சேர்ந்த 6 வயது விர்சவியா போரனுக்கு இதயமும் குடலும் உடலுக்கு வெளியே உருவாகியிருக்கிறது. 10 லட்சம் மனிதர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை குறைபாடு இது. உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டிருக்கும் இதயம் மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கிறது. இதயம் துடிப்பதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. ’’குழந்தை பிறக்கும் போதே பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றில் இதயம் வெளியே வந்தது மிக மோசமான குறைபாடு. மருத்துவத்துக்காக அமெரிக்கா வந்தேன். ஆனால் குழந்தையின் உடல் இருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று கூறிவிட் டனர். இவள் வயிற்றில் இருந்தபோதே மருத்துவர்கள் குறைபாட்டைச் சொல்லி, இந்தக் குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றார்கள். 6 ஆண்டுகளைக் கடந்துவிட் டாள். இத்தனைப் பிரச்சி னைகள் இருந்தாலும் அற்புதமாக வரைகிறாள், பள்ளிக்குச் செல்கிறாள், பாடுகிறாள், ஆடுகிறாள். ஒரு குழந்தையாக அவள் எந்தக் குறையையும் எங்களுக்கு வைக்கவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கலாம்’’ என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அம்மா டாரி போரன்.

உங்களின் நம்பிக்கை வீணாகாது டாரி போரன்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முள்ளை-முள்ளால்-எடுக்கும்-சிகிச்சை/article7829478.ece?homepage=true&relartwiz=true

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: 3 மணி நேரத்தில் உருவாக்கிய வீடு!

 
 
masala_2486063f.jpg
 

சீனாவில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டை 3 மணி நேரங்களில் உருவாக்கி சாதித்துவிட்டனர். தொழில்நுட்பத்தில் இது மிகப் பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. மத்திய சீனாவில் இயங்கி வரும் ஸுவோடா கட்டுமான நிறுவனம் இந்தப் புதுமையைச் செய்திருக்கிறது. ஹால், அறைகள், சமையலறை, குளியலறை, மாடி என்று தனித்தனியாகத் தொழிற்சாலையில் உருவாக்குகிறார்கள். உருவாக்கிய அறைகளை க்ரேன் மூலம் கொண்டு வந்து, தேவையான இடத்தில் பொருத்தி விடுகிறார்கள். இந்த வீடுகளுக்கு சிமெண்ட் பயன்படுத்துவதில்லை.

அதற்குப் பதிலாக விலை மலிவான, அதிகம் உழைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு வீட்டை உருவாக்குகிறார்கள். இந்த வீடு குறைந்தது 150 வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். பூகம்பத்தால் கூட வீட்டுக்கு பாதிப்பு நிகழாது. நெருப்பு, தண்ணீர் போன்றவற்றாலும் பாதிப்புக்கு உள்ளாக முடியாது. முக்கியமாகச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் இதில் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். 90 சதவீதம் வீட்டைத் தொழிற்சாலையில் தயார் செய்துவிடுகிறார்கள்.

வீட்டின் உள் அலங்காரம், மின் இணைப்பு போன்றவை மட்டும் இறுதியில் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால் வீட்டுக்குள் மார்பிள், மரம், கிரானைட் போன்றவற்றால் கூடுதல் அலங்காரம் செய்து கொடுக்கிறார்கள். இந்த வீட்டின் சுவர்களில் இருந்து சீன மூலிகைகளின் நறுமணம் பரவுகிறது. செங்கல், சிமெண்ட் மூலம் கட்டும் வீட்டைப் போலவே உறுதியானது. ஒரு சதுர மீட்டரின் விலை சுமார் 36 ஆயிரம் ரூபாய். காப்புரிமை கிடைத்த பிறகு, வீட்டுக்குப் பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும்.

அருமை… ஆனால் விலைதான் அதிகம்…

பெண்கள் பயன்படுத்தும் நகப் பூச்சுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நெயில்ஸ்டார் என்ற சிறிய இயந்திரம் சில நொடிகளில் அழகாக நகப்பூச்சு செய்து விடுகிறது. இயந்திரத்தில் உள்ள திரையில் விதவிதமான நகப்பூச்சு வடிவங்கள் இருக்கின்றன. வேண்டியதைத் தேர்ந்தெடுத்து, பட்டனை அழுத்திவிட்டு, விரல்களை வைத்தால் சில நொடிகளில் நகங்களில் அந்த உருவங்கள் வந்துவிடுகின்றன. கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 6,60,000 தடவை இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது.

எல்லாத்துக்கும் இயந்திரமா…

கடல்வாழ் பறவை சீகல். கடலின் மேலே பறந்து திரிந்துகொண்டே இருக்கக்கூடியவை. திடீரென்று மீன்களோ, மிதவை உயிரினங்களோ கண்களில் பட்டால், தண்ணீருக்குள் பாய்ந்து சென்று உணவைப் பிடித்துகொண்டு மேலே வந்து, இரையாக்கிக்கொள்கின்றன. கில்லர் சீகல் பறவைகள் மீன்கள், இறால்கள், தவளைகளை மட்டுமல்ல பறவைகளையும் பிடித்துச் சாப்பிடக்கூடியவை. சின்னஞ் சிறு பறவையைக் கொத்தி, உயிர் இழக்கச் செய்து, அப்படியே முழுப் பறவையையும் வாய்க்குள் முழுங்கிய காட்சியை ஸ்காட்லாந்து புகைப்படக்காரர் டோகி மெக்கோல் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

ஒரு சின்னப் பறவையின் வாய்க்குள் எப்படி இவ்வளவு பெரிய இரை உள்ளே போகிறது!

சீனாவின் பெய்ஜிங்கில் இயங்கி வருகிறது சாலட் ஸ்வீட்டி உணவு விடுதி. இந்த விடுதியின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்திலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் விதத்திலும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது உணவு விடுதி. ஸ்பர்டன் வீரர்களைப் போல தோலால் செய்யப்பட்ட குறைந்த அளவு ஆடைகளுடன் 100 வெளிநாட்டினர் வீதிகளில் சுற்றி வந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் கூட்டம் கூடிவிட்டது. சீனக் காவலர்கள் எவ்வளவோ சொல்லியும் வீரர் வேடம் போட்டவர்கள் கேட்கவில்லை. நூறு பேரையும் கைது செய்தது காவல்துறை. உணவு விடுதியின் நிர்வாகிகள் தங்கள் தவறுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். ‘’ஓராண்டு நிறைவை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தோம். எங்கள் உணவைச் சாப்பிடுகிறவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று காட்டவே இந்த ஆடைகளைப் பயன்படுத்தினோம்’’ என்கிறார் உணவு விடுதியின் உரிமையாளர்.

ம்… நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-3-மணி-நேரத்தில்-உருவாக்கிய-வீடு/article7463854.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பூனை விலங்கு!

 
ulaka_2607376f.jpg
 

வீட்டில் செல்லப் பிராணி களாக வளர்க்கப்படும் விலங்குகளில் ஒன்று பூனை. குறும்பும் விளையாட்டுமாக இருப்பதால் மனிதர்களின் மனத்தில் முக்கியமான இடத் தைப் பெற்றிருக்கிறது. சமீபத் தில் எடின்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியளிக்கும் செய்தி யைச் சொல்லியிருக்கிறார்கள். அழகாகவும் ஆபத்தில்லாத தாகவும் காட்சியளிக்கும் உங்கள் செல்லப் பூனையின் கண்களில் தெரியும் பொறி, ஓர் உயிரைக் கொல்லும் உணர்வாக இருக்கலாம். சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை.

காட்டுப் பூனைகளின் குணமான ஆதிக்கம் செலுத்தும் பண்பு, உணர்ச்சிவசப்படக்கூடிய இயல்பு, தாக்குதல் தொடுக்கும் மனம் போன்றவை வீட்டுப் பூனைகளுக்கும் இருக்கும். வீட்டுப் பூனைகள் அளவில் சிறியதாக இருப்பதால் மனிதர்களைக் கொல்ல முயற்சி செய்வதில்லை. ஆனால் பூனைகளை செல்லப் பிராணி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், மற்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடக்கூடிய ஒரு சிறிய விலங்கை வீட்டில் வளர்க்கிறோம் என்ற கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ம்… கென்யாவில் சிங்கங்களுடன் நெருங்கிப் பழகிய ஜாய்யைக் கொன்றது சிங்கங்கள் அல்ல, மனிதர்கள்…

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகம் பள்ளி கல்வியில் புதிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறது. பரிசோதனை முயற்சியாக ஓர் ஆரம்பப் பள்ளி வகுப்பை, பெற்றோர்கள் கவனிக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் குழந்தைகளின் வகுப்பறைகளைப் பெற்றோர் கவனிக்கலாம். 200 பெற்றோருக்கு இந்த வசதி செய்யப்பட்டது.

‘‘என் மகள் சரியான இடத்தில் அமரவில்லை. அவள் பார்வை குறைபாடு உடையவள்’’ என்றார் ஓர் அம்மா.

‘‘கேள்விக்குப் பதில் சொன்ன என் மகனை இன்னும் ஆசிரியர் அமரச் சொல்லவில்லை. பாவம் நின்றுகொண்டிருக்கிறான்’’ என்று வருத்தப்பட்டார் ஓர் அப்பா.

‘‘வீட்டில் சரியாகப் பேசாத என் மகள், வகுப்பில் எவ்வளவு வாய் பேசுகிறாள்’’ என்று அதிசயப்பட்டார் இன்னோர் அம்மா. பெற்றோர் கவனிக்கிறார்கள் என்பதை மாணவர்களுக்கும் சொல்லிவிட்டனர். நீண்ட நேரம் குழந்தைகள் அமைதியாகத் தலை குனிந்து இருந்தனர். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் என் பெற்றோர் கவனிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். ஆசிரியர்கள்தான் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டனர். மாணவர்களைச் சாதாரணமாகச் சொன்னால்கூட பெற்றோர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தனர். குழந்தைகளை விளையாட்டுக்குக்கூடத் தொடவில்லை என்கிறார்கள். ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் காலப்போக்கில் நல்ல மாற்றம் வரும் என்று நினைக்கிறது பல்கலைக்கழகம். ஆசிரியர், மாணவர், பெற்றோர் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்வார்கள் என்கிறது.

முக்கியமாக, மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள்…

இங்கிலாந்தில் நவம்பர் முதல் வாரம் சாசேஜ் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக கெவின் டர்னர் என்பவர் உலகின் விலை மிகுந்த சாசேஜை உருவாக்கியிருக்கிறார். மங்கலிட்சா பன்றி இறைச்சி, விலை உயர்ந்த பாலாடைக்கட்டி, அரிய காளான்கள் எல்லாம் சேர்த்து இந்த சாசேஜை உருவாக்கியிருக்கிறார்.

‘‘ஒரு கிலோ சாசேஜ் 70 ஆயிரம் ரூபாய். ஒரு சாசேஜ் 3,300 ரூபாய். சாதாரண சாசேஜ்களை விட 100 மடங்கு விலை அதிகம் என்னுடைய சாசேஜ். இதில் சேர்க்கப்பட்ட பன்றி இறைச்சியில் இருந்து ஒவ்வொரு பொருளும் விலை மதிப்பு மிக்கது. எளிதில் கிடைக்காதவை. அதனால் அதற்குரிய விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்’’ என்கிறார் கெவின் டர்னர்.

இருக்கப்பட்டவர்கள் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்…

மெக்சிகோவைச் சேர்ந்த லானா என்ற நாய் 5 வயது முதல் பல்வேறு மனிதர்களிடம் வளர்ந்து வந்தது. கடைசியாக வளர்த்தவர் பராமரிக்க இயலாத காரணத்தால், நாய்கள் வளர்ப்பு மையத்தில் விட்டுவிட்டார். காலை முதல் மாலை வரை லானா இடத்தை விட்டுச் சிறிதும் அசையவில்லை. மிகவும் சோர்வுடன் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தது. நாய் வளர்ப்பு மையத்தில் பணிபுரியும் டாலியா அயோப், லானாவைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் சமாதானமாகவில்லை. இரவில் கட்டாயப்படுத்தி சிறிது உணவைச் சாப்பிட வைத்தார். அதற்குப் பிறகும் லானா சோர்வுற்றே இருந்தது.

‘‘நாய் வளர்ப்பு மையத்துக்கு வந்ததில் லானாவுக்கு விருப்பமில்லை. மறுநாளே ஒரு குடும்பத்திடம் லானாவை ஒப்படைத்தேன். இப்பொழுது புதிய உரிமையாளரை ஏற்றுக்கொண்டு, சந்தோஷமாக இருக்கிறது லானா’’ என்கிறார் டாலியா.

விடுதி வாழ்க்கை யாருக்குத்தான் பிடிக்கிறது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பூனை-விலங்கு/article7836918.ece?homepage=true&relartwiz=true

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: நிஜ ஹீரோ!

 
masala_2608444f.jpg
 

அமெரிக்காவின் ஓரிகன் பகுதி சாலைகளில் நிஜ வாழ்க்கை ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கார்டியன் ஷீல்ட். இரவு வேளைகளில் நகரமே தூங்கிக்கொண்டிருக்க, ஷீல்ட் மட்டும் நகரப் பாதுகாப்புக்காக தன் வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். இதற்காக சூப்பர் ஹீரோவுக்கான ஆடைகள், தலைக்கவசம், கையுறை, முகமூடி அணிந்துகொள்கிறார். ‘’இந்தப் பணியை விரும்பிச் செய்கிறேன். அதேநேரம் நான் தான் செய்கிறேன் என்று யாருக்கும் தெரிவிக்க விருப்பம் இல்லை.

அதற்காகத்தான் இந்த சூப்பர் ஹீரோ ஆடைகளை அணிந்துகொள்கிறேன். போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களும் நானும் ஒரே பணியைத்தான் செய்கிறோம். அதாவது குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் அவர்கள் என்னை ஆதரிப்பதில்லை. என்னுடைய பணிகளை மக்கள் விரும்புகிறார்கள். என் பணியைப் பாராட்டி ரோந்து காரை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். நான் மக்களுக்காகப் பணி செய்கிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கிறார்கள். இதை விட வேறு என்ன வேண்டும்?’’ என்கிறார் ஷீல்ட்.

மக்கள் ஆதரவு இருக்கிற வரை அசத்துங்க ஷீல்ட்!

அமெரிக்காவில் லோவா பகுதியில் வாழ்ந்த வெர்லின் நஃபே தம்பதியருக்கு 1997-ம் ஆண்டு மைக்கேல் என்ற மகன் பிறந்தான். 3 மாதத்தில் குழந்தையை வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினர். அருகில் இருந்த குழந்தைகளையும் சேர்த்து மைக்கேலுடன் புகைப்படம் எடுத்தால் என்ன என்று தோன்றியது வெர்லினுக்கு. உடனே 3 - 6 மாதக் குழந்தைகளை வரவழைத்தனர். வரிசையாகக் குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தனர். 18 வருடங்களுக்குப் பிறகு மைக்கேலுடன் புகைப்படங்கள் எடுத்தவர்களை வைத்து மீண்டும் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் வெர்லின். இத்தனை ஆண்டுகளில் பலரும் பல இடங்களுக்குச் சென்றிருந்தது தெரிய வந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் எல்லோரையும் ஒருநாள் வரவழைத்து விட்டார். லிமோ காருக்கு முன்பாக குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தது போலவே தற்போதும் புகைப்படங்கள் எடுத்துவிட்டார் வெர்லின். இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அட, நல்லா இருக்கே உங்க ஐடியா!

சீனாவின் ஜினான் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தன் அலுவலகத்துக்கு விடுமுறை கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் அவர் வேலை செய்த அலுவலகத்தை உலுக்கிவிட்டது. ‘’என் கணவர் லாசா பகுதியில் வசித்து வருகிறார். போக்குவரத்து எளிதாக இருப்பதில்லை என்பதாலும் விடுமுறை கிடைப்பதில்லை என்பதாலும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. தற்போது என் கணவரின் முகம் மறந்துவிடும் அளவுக்குச் சென்றுவிட்டேன். 10 நாட்கள் விடுமுறை அளித்தால் கணவரைச் சந்தித்துவிட்டு, திரும்பி விடுவேன். இரண்டு நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து ஆரம்பித்துவிட்டது’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுமுறை அளித்ததோடு, அந்தக் கடிதத்தை இணையதளங்களிலும் வெளியிட்டுவிட்டார்கள்.

பாவம், தொழிலாளர்களை இப்படியா வைத்திருப்பது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிஜ-ஹீரோ/article7841004.ece

உலக மசாலா: நிஜ ஹீரோ!

 
masala_2608444f.jpg
 

அமெரிக்காவின் ஓரிகன் பகுதி சாலைகளில் நிஜ வாழ்க்கை ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கார்டியன் ஷீல்ட். இரவு வேளைகளில் நகரமே தூங்கிக்கொண்டிருக்க, ஷீல்ட் மட்டும் நகரப் பாதுகாப்புக்காக தன் வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். இதற்காக சூப்பர் ஹீரோவுக்கான ஆடைகள், தலைக்கவசம், கையுறை, முகமூடி அணிந்துகொள்கிறார். ‘’இந்தப் பணியை விரும்பிச் செய்கிறேன். அதேநேரம் நான் தான் செய்கிறேன் என்று யாருக்கும் தெரிவிக்க விருப்பம் இல்லை.

அதற்காகத்தான் இந்த சூப்பர் ஹீரோ ஆடைகளை அணிந்துகொள்கிறேன். போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களும் நானும் ஒரே பணியைத்தான் செய்கிறோம். அதாவது குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் அவர்கள் என்னை ஆதரிப்பதில்லை. என்னுடைய பணிகளை மக்கள் விரும்புகிறார்கள். என் பணியைப் பாராட்டி ரோந்து காரை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். நான் மக்களுக்காகப் பணி செய்கிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கிறார்கள். இதை விட வேறு என்ன வேண்டும்?’’ என்கிறார் ஷீல்ட்.

மக்கள் ஆதரவு இருக்கிற வரை அசத்துங்க ஷீல்ட்!

அமெரிக்காவில் லோவா பகுதியில் வாழ்ந்த வெர்லின் நஃபே தம்பதியருக்கு 1997-ம் ஆண்டு மைக்கேல் என்ற மகன் பிறந்தான். 3 மாதத்தில் குழந்தையை வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினர். அருகில் இருந்த குழந்தைகளையும் சேர்த்து மைக்கேலுடன் புகைப்படம் எடுத்தால் என்ன என்று தோன்றியது வெர்லினுக்கு. உடனே 3 - 6 மாதக் குழந்தைகளை வரவழைத்தனர். வரிசையாகக் குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தனர். 18 வருடங்களுக்குப் பிறகு மைக்கேலுடன் புகைப்படங்கள் எடுத்தவர்களை வைத்து மீண்டும் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் வெர்லின். இத்தனை ஆண்டுகளில் பலரும் பல இடங்களுக்குச் சென்றிருந்தது தெரிய வந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் எல்லோரையும் ஒருநாள் வரவழைத்து விட்டார். லிமோ காருக்கு முன்பாக குழந்தைகளை வைத்துப் புகைப்படங்கள் எடுத்தது போலவே தற்போதும் புகைப்படங்கள் எடுத்துவிட்டார் வெர்லின். இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அட, நல்லா இருக்கே உங்க ஐடியா!

சீனாவின் ஜினான் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தன் அலுவலகத்துக்கு விடுமுறை கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் அவர் வேலை செய்த அலுவலகத்தை உலுக்கிவிட்டது. ‘’என் கணவர் லாசா பகுதியில் வசித்து வருகிறார். போக்குவரத்து எளிதாக இருப்பதில்லை என்பதாலும் விடுமுறை கிடைப்பதில்லை என்பதாலும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. தற்போது என் கணவரின் முகம் மறந்துவிடும் அளவுக்குச் சென்றுவிட்டேன். 10 நாட்கள் விடுமுறை அளித்தால் கணவரைச் சந்தித்துவிட்டு, திரும்பி விடுவேன். இரண்டு நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து ஆரம்பித்துவிட்டது’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுமுறை அளித்ததோடு, அந்தக் கடிதத்தை இணையதளங்களிலும் வெளியிட்டுவிட்டார்கள்.

பாவம், தொழிலாளர்களை இப்படியா வைத்திருப்பது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிஜ-ஹீரோ/article7841004.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: குதிரை மேல் குதிரை!

 
masala_2484809f.jpg
 

இங்கிலாந்தைச் சேர்ந்த வெண்டி பால்மர், குதிரைகளை வளர்த்து வருகிறார். பிறந்து 7 வாரங்களே ஆன குதிரை குட்டியின் உடலில், வெள்ளை நிறத்தில் ஒரு குதிரையின் படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. டா வின்சி என்ற பெயர் கொண்ட இந்தக் குதிரையை ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள். டா வின்சியின் தோழி குதிரை வின்னியின் பின்புறம் இதய வடிவம் இருக்கிறது. இரண்டு குதிரைகளையும் நினைத்துப் பெருமைப்படுகிறார் வெண்டி பால்மர்.

ஆஹா! குதிரை மேல் குதிரை!

நேபாளத்தில் உள்ள ஹோக்சே கிராமத்தை, ‘சிறுநீரகக் கிராமம்’ என்று அழைக்கிறார்கள். இங்கே வசிக்கும் பெரும்பாலான ஏழைகள் ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்தவர்கள். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து வரும் புரோக்கர்கள் சிறுநீரகங்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். சிறுநீரகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறு நிலமோ, வீடோ வாங்கிக்கொள்கிறார்கள். 10 ஆண்டுகளாகச் சிறுநீரகம் கொடுக்க மறுத்த கீதா, தன் குடும்பத்தின் நன்மைக்காக இப்பொழுது கொடுத்துவிட்டார்.

அதில் வாங்கிய சிறு வீடு, சமீபத்தில் நடந்த பூகம்பத்தில் இடிந்து போய்விட்டது. பூகம்பத்துக்குப் பிறகு சிறுநீரக வேட்டை அதிகமாகிவிட்டது. எல்லாவற்றையும் இழந்த மக்கள் தங்கள் சிறுநீரகத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு வந்தனர். ஒவ்வோர் ஆண்டும் கள்ளச்சந்தை மூலம் 7 ஆயிரம் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுநீரகம் கொடுக்க மறுப்பவர்களைக் கடத்திச் சென்று, சிறுநீரகம் எடுப்பதும் நடக்கிறது. சிலரை மருத்துவப் பரிசோதனை என்று சொல்லி, சிறுநீரகத்தை எடுத்து, அனுப்பிவிடவும் செய்கிறார்கள்.

கொலை செய்து, இரண்டு சிறுநீரகங்கள் திருடுவதும் நடக்கிறது. இங்கே பெறப்படும் சிறுநீரகங்களுக்கு 6 மடங்கு விலை வைத்து, இந்தியாவில் விற்பனை செய்துவிடுகிறார்கள். நேபாளத்தில் இருந்து வேலை தேடி வரும் இளைஞர்களை பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் மயக்க மருத்து கொடுத்து, சிறுநீரகம் திருடுவதும் நடைபெறுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு இதற்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஐயோ… இந்தக் கொடுமையை யாராவது தடுத்து நிறுத்த மாட்டாங்களா?

நத்தைகளை யாரும் அழகான உயிரினம் என்று சொல்வதில்லை. ஆனால் ஜோருன்னா பார்வா என்ற நத்தைகளைப் பார்த்தால் ‘அழகு’ என்று சொல்லாமல் இருக்க முடியாது. கடலில் வாழும் இந்த நத்தைக்கு, முயலுக்கு இருப்பது போல சின்னஞ்சிறு காதுகள் இருக்கின்றன. அதனால் இந்த நத்தைகளைக் ’கடல் முயல்கள்’ என்று அழைக்கிறார்கள்.

ஜோருன்னா பார்வாவை 1938ம் ஆண்டு, ஜப்பானைச் சேர்ந்த கிகுடாரோ பாபா கண்டுபிடித்தார். ஆனால் அதற்குப் பிறகு இவற்றை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் பள்ளி ஒன்று ஜோருன்னா பார்வா வீடியோவை வெளியிட்டது. உலகம் முழுவதும் வேகமாகக் கவனத்தைப் பெற்றன இந்த நத்தைகள். வெள்ளை, மஞ்சள் நிறங்களில் பளபளப்பான உடலில் சிறு உணர்கொம்புகளுடன் அட்டகாசமாக இருக்கின்றன!

கடல் முயலுக்கு வெல்கம்!

கொலம்பியாவின் காபி தோட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜீப் திருவிழா நடத்தப்படுகிறது. காபி தோட்டங்களில் ஜீப்கள் இன்றியமையாதவை. சரியான சாலை வசதி இல்லாத இடங்களில், சகலத்துக்கும் ஜீப்தான் உதவி வருகிறது. திருவிழாவில் ஜீப் போட்டி முக்கியமானது. ஜீப் நிறைய 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு, பல கிலோமீட்டர் தூரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் போட்டி. சிலர் வீட்டைக் காலி செய்துகொண்டு, அத்தனை சாமான்களையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் தோட்டங்களில் விளைவிக்கப்பட்ட வாழை, கரும்பு, சோளம் போன்றவற்றை எடுத்துச் செல்கிறார்கள்.

சிலர் மரச்சாமான்களை எடுத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலர் விலங்குகளை அழைத்துச் செல்கிறார்கள். அளவுக்கு அதிகமான எடையைச் சுமந்துகொண்டு ஜீப் வருவதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இதில் மனிதர்கள் வேறு உட்கார்ந்திருப்பார்கள். இப்படி ஒருமுறை விழாவில் கலந்துகொண்டு ஜீப் ஓட்டிவிட்டால், அந்த நபர் எவ்வளவு மோசமான சாலைகளிலும் திறமையாக ஓட்டிச் செல்லக்கூடியவராக மாறிவிடுவார். வழியெங்கும் மக்கள் ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். உலகிலேயே மிக நீளமான ஜீப் அணிவகுப்பு என்று இது கின்னஸிலும் இடம்பெற்றுவிட்டது!

கொலம்பியாவில் ஓட்டிடலாம், சென்னையில் ஓட்ட முடியுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குதிரை-மேல்-குதிரை/article7459965.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: அடடா! அற்புதமான அப்பா!

 
 
masala_2609619f.jpg
 

ஷாங்காயைச் சேர்ந்தவர் ஸு சுன்ஸியாவோ. தொழில திபர். தன் இரண்டு வயது மகளுக்காக வீட்டையும் சொத்துகளையும் 2 கோடி ரூபாய்க்கு விற்று விட்டார்.

‘‘என் மகள் தான் என் உலகம். அவளுக்கு என்னால் முடிந்த அனைத்து விஷ யங்களையும் கொடுத் துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். பள்ளிக் கல்வி மூலம் கிடைக்கும் அறிவுக்கு முன்பாக அவளுக்கு உலக அறிவு கிடைக்க வேண்டும். அதற்காக 5 ஆண்டுகள் என் மகளுடன் உலகம் சுற்றி வரப் போகிறேன். இதில் ஓராண்டு சீனாவைச் சுற்றி வருவோம். மீதி நான்கு ஆண்டுகள் உலகப் பயணம். தொழிலதிபரான நான், தவறான முடிவு எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு தொழில் தெரியும்.

எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து விட முடியும். ஆனால் என் மகளுக்கு இந்த வயதில் கொடுக்க வேண்டிய அறிவையும் அனுபவத்தையும் கொடுக்காமல் விட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. 3 மாதங்கள் திட்டமிட்டு, சொத்துகளை விற்று, பயணத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இதோ நாங்கள் பயணம் கிளம்பி 9 ஆயிரம் மைல்களைக் கடந்துவிட்டோம். இதுவரை ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து, மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தை பெரியவளாகும்போது இந்தத் தருணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வாள். என்னை ஒரு சிறந்த அப்பாவாக அவள் நினைத்தால், அதை விட எனக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிட முடியும்?’’ என்கிறார் ஸு.

அடடா! அற்புதமான அப்பா!

அமெரிக்காவின் ப்ரூக்ளினைச் சேர்ந்தவர் நீனா கெனியலி. 63 வயதாகும் நீனா ஒரு தாய்க்கு உரிய அத்தனை விஷயங்களையும் திறம்படச் செய்து வருகிறார். அம்மாவின் அன்புக்காக ஏங்குபவர்களுக்கு, ஓர் அம்மாவாக இருந்து அரவணைக்கிறார், அன்பு காட்டுகிறார், ஆறுதல் அளிக்கிறார். ‘நீட் எ மாம்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஒரு மணி நேரத்துக்கு 2,400 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அம்மாவின் பூரண அன்பைப் பெற முடியும். இந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பார், ஆலோசனைகள் வழங்குவார், பொருட்கள் வாங்குவதற்கும், பார்ட்டிக்கும் கூட உதவி செய்வார். உங்களுக்கு விருப்பமான ஒரு பொருளை அன்போடு பரிசளிக்கவும் செய்வார்.

‘‘இரண்டு மகன்களுக்குத் தாய் நான். அருகில் இருந்த யோகா மையத்திலும் காபி ஷாப்களிலும் நிறைய இளைஞர்கள் கவலையோடு இருப்பதைப் பார்த்தேன். எனக்கும் குழந்தைகள் அன்பு வேண்டும். அவர்களுக்கும் சாய்ந்துகொள்ள ஒரு தோள் வேண்டும். உடனே

‘நீட் எ மாம்’ நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஒரு கப் காபியிலேயே உங்கள் கவலைகளை மறக்கச் செய்யக் கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 6 பேர்களுக்கு அம்மாவாக இருந்து ஆதரவு அளிக்கிறேன். நான் இங்கே வருபவர்களின் வாழ்க்கை முறைகளை விமர்சிக்க மாட்டேன். அவர்களின் சகோதர, சகோதரிகளை ஒப்பிட மாட்டேன். மிக மோசமான பாதிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல மருத்துவரைப் பரிந்துரை செய்துவிடுவேன். மிக முக்கியமாக அவர்கள் விருப்பப்படி இருப்பதற்கு அனுமதிப்பேன். படம் பார்க்கும்போது சூப் கேட்டால் செய்து கொடுப்பேன். ஆனால் அவர்கள் துணிகளைத் துவைத்து தருவதோ, வேறு எந்த வேலையோ செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் அவர்களின் வேலைக்காரி அல்ல, அம்மா’’ என்கிறார் நீனா.

காசிருந்தால் அம்மாவையும் வாங்க முடியும் இங்கே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-அற்புதமான-அப்பா/article7845148.ece

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பசித்தவர்களுக்கு உணவு!

 
masala_2611137f.jpg
 

சான்பிரான்சிஸ்கோவில் சாலைகளிலும் வீட்டு வாசல்களிலும் பழங்கள் தரக்கூடிய மரங்கள் வளர்ப்பதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. சாலைகளில் பழங்கள் விழுந்து, நசுங்கி அந்த இடத்தில் நடந்து செல்பவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்பதால் அனுமதிப்பதில்லை. பழங்கள் கொடுக்காத பூத்துக்கு குலுங்கும் மரம், செடிகளே எங்கும் வைத்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவும் ஓர் அமைப்பினர் ஏற்கெனவே இருக்கும் மரங்கள், செடிகளில் பழங்கள் தரக்கூடிய மரங்களின் குச்சிகளை இணைத்து விடுகிறார்கள்.

அலங்கார மரங்களுக்கு அடியே நிஜ மரங்களை நட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து தண்ணீர் விட்டுப் பராமரிக்கும் பணியையும் செய்கிறார்கள். செடிகளும் மரங்களும் வளர்ந்து, பூத்து, காய்த்து, பழங்களைத் தருகின்றன. அந்த வழியே செல்லும் ஏழைகள் பழங்களைப் பறித்து, பசியாறிக்கொள்கிறார்கள்.

‘‘அனுமதி இன்றி இப்படி அடுத்தவர்களின் இடங்களில் செடிகளை நடுவதும் பராமரிப்பதும் குற்றம். ஆனால் யார் செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். வீட்டின் உரிமையாளர்கள் இந்தப் பழங்கள் கீழே விழுந்து நடக்கும்போது வழுக்கி விழ வேண்டியிருக்கிறது என்று புகார் அளிக்கிறார்கள்’’ என்கிறார் நகர நிர்வாகி க்ளோரியா சான்.

‘‘கடந்த 5 ஆண்டுகளாக இப்படிப் பழங்களை விளைவித்து வருகிறோம். அதிக மணமோ, குப்பையோ இல்லாத பேரிக்காய், ப்ளம், செர்ரி பழங்களை மட்டுமே விளைவிக்கிறோம். ஒரு வேளை பசிக்கு சில பழங்கள் சாப்பிட்டால் கூட போதுமானது. பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதை விட நடைபாதை தூய்மை முக்கியமானதா? இதற்காக வீட்டின் உரிமையாளர்கள் சின்ன இடத்தைத் தரவேண்டியது இருக்கிறதே தவிர, பராமரிப்பு எல்லாம் எங்களுடையதே’’ என்கிறார் டாரா ஹுய்.

பசித்தவர்களுக்கு உணவிடுவது எத்தனை உன்னதமானது!

கனடாவில் உள்ள ஒரு மீனவர் காந்தத் தூண்டிலை வலையுடன் இணைத்து கடலில் வீசினார். சிறிது நேரத்துக்குப் பிறகு பழைய மீன் தூண்டில்கள், கொக்கிகள் ஏராளமாகக் கிடைத்தன. மீண்டும் தூண்டிலை வீசியபோது கத்திகள், கத்தரிக்கோல்கள், பூட்டு போன்றவை கிடைத்தன. இன்னொரு முறை ஒரு கல் கிடைத்தது. அந்தக் கல்லில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும், திசைகளும் எழுதப்பட்டிருந்தன. அடுத்து துப்பாக்கித் தோட்டாவும் துருப்பிடித்த துப்பாக்கியும் கிடைத்தன.

கடலையும் குப்பைக் கிடங்காக மாற்றியாச்சு…

இங்கிலாந்தில் வசிக்கிறார் ஜுலியா காஸ். பிறவியில் இருந்தே அவரது முகத்தின் ஒரு பகுதி கட்டிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. முகம் கோரமாக இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் ஜுலியாவுடன் பேசவோ, விளையாடவோ மாட்டார்கள். ஜுலியாவின் பெற்றோர்கள் குறை தெரியாமல் பார்த்துக்கொண்டனர். பள்ளியில் படித்த காலம் முழுவதும் சக மாணவர்களால் மோசமான கிண்டலுக்கு உள்ளானார் ஜுலியா. மனம் உடைந்து போனபோது, ஜுலியாவுக்கு அறுவை சிகிச்சை செய்து, ஓரளவு முகத்தைச் சரி செய்தார்கள். ஆனாலும் ஒருபக்கம் முழுவதும் தழும்புகள் இருக்கும். முடியை வைத்து மறைத்துக்கொள்வார். ‘‘என் பெற்றோரைத் தவிர என்னிடம் யாரும் நெருங்கிப் பழக மாட்டார்கள். ஒருகட்டத்தில் நானே மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிவிட்டேன். ஆன்லைனில் என் குறை தெரியாததால் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். என்னுடைய தனிமையை அவர்கள் போக்கினர். 18 வயதில் ஒருவன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான்.

நான் குறையை அவனிடம் சொன்ன பிறகு, காணாமல் போய்விட்டான். அன்பே கிடைக்காத உலகில் காதலை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று சமாதானம் செய்துகொண்டேன். இதோ 34 வயதில் கிரஹாம் என்ற அற்புதமான மனிதர் என் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்துவிட்டார். அவரை நேரில் சந்திக்கும் வரை எனக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ஆனால் என் குறை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. குடும்பம் நடத்த உருவம் முக்கியமில்லை, உள்ளம்தான் முக்கியம் என்றார். இந்த ஒரு நல்ல மனிதருக்காகத்தான் இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன். இதுவரை பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் அனைத்தும் காற்றில் கரைந்துவிட்டன. இனி என் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். முதல் முறை தயக்கமின்றி என் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன்’’ என்கிறார் ஜுலியா.

சந்தோஷம் என்றென்றும் நிலைக்கட்டும் ஜுலியா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பசித்தவர்களுக்கு-உணவு/article7849721.ece?homepage=true&relartwiz=true

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பச்சிளம் குழந்தை பயமறியாது!

 
 
child_2613936f.jpg
 

பிரேசிலின் மோஸ்டர்டாஸ் நகரில் வசிக்கிறான் 17 மாதக் குழந்தை லோரென்ஸோ. வீட்டுக்குள் வேலை செய்துகொண்டிருந்த அவனது அம்மா, ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அதிர்ந்து போய்விட்டார். லோரென்ஸோவின் வாய், சட்டை முழுவதும் ரத்தம். அருகில் ஒரு பாம்பு. உடனே தன் கணவரை அழைத்தார். எந்தப் பாம்பு கடித்தது என்று தெரிந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என்பதால் பாம்பை அடித்து, ஒரு பையில் போட்டுக்கொண்டனர். மருத்துவமனைக்கு விரைந்தனர். லோரென்ஸோவுக்கு முதலுதவி அளித்தனர். பிறகுதான் தெரிந்தது, குழந்தையின் உடலில் எங்குமே பாம்புக்கடி இல்லை. நன்றாகப் பரிசோதித்தபோது, உடலில் விஷமும் இல்லை. பாதிக்கப்பட்டது குழந்தை அல்ல, பாம்புதான். ‘‘குழந்தைக்கு அருகே கட்டுவிரியன் பாம்பு தீண்ட வந்தபோது, அது ஒரு பொம்மை என்று நினைத்த லோரென்ஸோ தலையைப் பிடித்துக் கடித்துவிட்டான். சரியான இடத்தில் கடி பட்டதால் பாம்பு காயமடைந்துவிட்டது’’ என்றார் மருத்துவர் கில்மர் கார்டெரி. ‘‘எங்கள் வீட்டு நாய்தான் பாம்பைக் கடித்திருக்கும் என்று நினைத்தோம். மகன்தான் பாம்பைக் கடித்திருக்கிறான் என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை குழந்தை பிழைத்துவிட்டான்’’ என்று மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். கட்டுவிரியன் பாம்புகள் அதிக விஷம் கொண்டவை. கடிபட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் உயிரிழப்பை ஏற்படுத்திவிடக் கூடியவை.

பச்சிளம் குழந்தை பயமறியாது!

பிரிட்டனைச் சேர்ந்த மேகியும் அவரது கணவர் ஆன்டியும் ஹெர்குலஸ் என்ற கரடியை வளர்த்து வந்தனர். 1974-ம் ஆண்டு குட்டியாகத் தத்தெடுத்தனர். தங்கள் குழந்தை போலவே அன்பாகக் கவனித்துக்கொண்டனர். கரடிக்குரிய எந்த குணத்தையும் வெளிப்படுத்தாமல் ஹெர்குலஸும் வளர்ந்து வந்தது. சமைக்கப்பட்ட உணவைத்தான் உண்ணும். தேநீர் பருகும். வீடு முழுவதும் சுற்றி வரும். ஹெர்குலஸின் 10-வது பிறந்த நாளை கேக் வெட்டி, சிறப்பாகக் கொண்டாடினர். 8 அடி உயரம் வளர்ந்த ஹெர்குலஸுக்கு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேகி, ஆன்டியுடன் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறது ஹெர்குலஸ். 2000-ம் ஆண்டில் 26 வயதில் ஹெர்குலஸ் மரணம் அடைந்தது. ‘‘எங்கள் மகனாகவே இருந்தான் ஹெர்குலஸ். அவன் இறந்து 15 ஆண்டுகள் ஆகியும் அவனை எங்களால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அவன் நினைவாகவே இருக்கிறது. எங்களுடன் மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்துவான். சாப்பிடுவான். நடைப்பயிற்சி செய்வான். விளையாடுவான். எங்கள் தோள் மீது கால்களைப் போட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பான்’’ என்கிறார் ஆன்டி. ஹெர்குலஸ் ரோமங்களை வைத்து மேகியோ, ஒரு கம்பளி செய்திருக்கிறார். நினைவு வரும்போதெல்லாம் அதை எடுத்து முகர்ந்து பார்த்துக்கொள்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் வலி குறையவில்லை என்று சொல்லும் இந்தத் தம்பதியர், ஹெர்குலஸ் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரிவு துயரமானது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பச்சிளம்-குழந்தை-பயமறியாது/article7858023.ece

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: சவப்பெட்டி..விற்பனைக்கு!

 
 
masala_2482050f.jpg
 

சவப்பெட்டி விற்பனை தொழிலைச் செய்து வருகிறார் ஜெர்மனைச் சேர்ந்த ரேச்சல் மெர்க்ஸ் என்ற பெண். மனிதனின் இறுதி வழியனுப்பும் நிகழ்ச்சியைப் பிரமாதமாகச் செய்து கொடுக்கும் பணி அவ்வளவு உற்சாகம் தராது. இந்தத் தொழில் செய்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், ஆன்லைனில் பெண்களுக்காக ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, ஏராளமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் 36 வயது ரேச்சல். ‘மிஸ் ஃபேர்வெல்’ என்ற பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. ‘‘46 பேரிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அழகு என்பது நம் குணத்திலும் நம் முதிர்ச்சியான கருத்துகளிலும்தான் இருக்கிறதாக நான் நம்புகிறேன்’’ என்கிறார் ரேச்சல்.

நீங்க சொல்வது உண்மைதான் ரேச்சல்!

சான்பிரான்சிஸ்கோவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஏற்படும் எந்த விதத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் மக்கள் ஜோய் டாலியைத்தான் அழைக்கிறார்கள். அழைப்பு மணியில் இருந்து கம்ப்யூட்டர் வைரஸ் வரை அனைத்து விஷயங்களையும் சரி செய்துவிடுகிறார் ஜோய். இவர் தொழில்நுட்ப வல்லுனர் அல்ல. மந்திரவாதி. ‘‘இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வேலை செய்யவில்லை என்றால், அது கெட்ட ஆவிகளின் வேலைதான். கெட்ட ஆவிகளைத் துரத்தி, மீண்டும் இயங்க வைக்கும் பணியைத்தான் நான் செய்து வருகிறேன்’’ என்கிறார் ஜோய்.

ஒரு நிறுவனத்தில் கருவி பழுதாகிவிட்டது. தொழில் நுட்ப வல்லுனர்கள் வந்து பார்த்தும் பழுது நீங்கவில்லை. யாரோ ஒருவர் ஜோயை அழைத்து வந்தார். எல்லோரும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதேதோ மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரத்தில் அந்த இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவரை நம்பாதவர்கள் கூட ஜோயை நம்ப ஆரம்பித்து விட்டனர். கம்ப்யூட்டர் வைரஸ், ஹேக்கர்ஸ் பிரச்சினைகளைக்கூட தீர்த்துவிடுகிறார் தொழில்நுட்பம் அறியாத ஜோய் என்கிறார்கள். இந்த நவீன காலத்தில் இவற்றை எல்லாம் நம்புகிறார்களே என்று கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் ஜோய் மீது நம்பிக்கை வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அட… சே… இன்னுமா உலகம் இதையெல்லாம் நம்புது…

கனடாவைச் சேர்ந்த 24 வயது இவான் இயம்ஸ், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் படித்து வருகிறார். கல்லூரிக் கட்டணம் அதிகம். அதைச் சமாளிக்க இவானால் முடியவில்லை. அதனால் பல்கலைக்கழக விடுதியில் அவர் தங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். கல்லூரிக்கு அருகில் ஒரு பெண்மணியின் வீட்டுத் தோட்டத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார். தனக்குக் கணிதமும் இயற்பியலும் கற்றுக் கொடுத்தால், தோட்டத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம் என்றார்.

கடந்த 10 மாதங்களாகத் தோட்டத்தில் ஒரு கூடாரம் அமைத்து, தங்கி வருகிறார் இவான். கடுங்குளிர், பனி பொழியும் காலங்களில் மட்டும்தான் சிரமம். மற்றபடி கூடாரம் வசதியாக இருக்கிறது என்கிறார். குளிர் காலத்தில் 3 ஆடைகளைப் போட்டுக்கொண்டு உறங்கிவிடுவார். வீட்டு உரிமையாளர் ஓர் அறையைக் கொடுத்தும், மறுத்துவிட்டார் இவான். படிப்பை முடித்துவிட்டு பாரிஸில் பிஹெச்டி செய்ய இருக்கிறார். அதற்குப் பிறகு நீண்ட நாள் தோழியான மண்டக் என்ற இந்தியப் பெண்ணுடன் திருமணம். ‘‘கூடாரத்தில் வசிப்பவரையா திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்று கேட்கிறார்கள். கூடாரத்தில் வசித்தால் என்ன? புத்திசாலியான இவானுடன் எளிய வாழ்க்கை வாழ்வதே எனக்குப் பிடித்திருக்கிறது’’ என்கிறார் மண்டக்.

எளிய வாழ்க்கையே அழகு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7450989.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: 3 ஆண்டுகளாகத் தண்ணீர் அருந்தாத மனிதன்!

 
masala_2615995f.jpg
 

நாம் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அவசியம். ஆனால் பீட்டர் ஃபிலாக் கடந்த 3 ஆண்டுகளாகத் தண்ணீரோ, வேறு திரவங்களோ பருகாமல் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே தனக்குத் தேவையான நீர்ச் சத்தைப் பெற்றுக்கொள்கிறார். ’’ஆரம்பத்தில் எனக்கும் தண்ணீர் இல்லாமல் நாட்களைக் கடத்துவது கடினமாகத்தான் இருந்தது. தண்ணீரை விட்ட சில நாட்களுக்கு சோடா, சாக்லேட் மில்க் போன்றவற்றைக் குடித்துச் சமாளித்தேன். மிக விரைவிலேயே அனைத்தையும் விட்டுவிடக்கூடிய அளவுக்கு மாறிவிட்டேன்.

2012 மே மாதம் 5-ம் தேதிதான் கடைசியாகத் திரவத்தை உட்கொண்டேன். தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்காக குளோரினும் ஃப்ளூரைடும் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரை வடிகட்டினாலும் காய்ச்சினாலும் இந்த வேதிப் பொருட்களில் இருந்து தப்பிக்க இயலாது. அதனால்தான் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தண்ணீரை நான் குடிப்பதில்லை என்று முடிவு செய்தேன். சின்ன வயதில் மது அருந்துவதில்லை என்று முடிவு எடுத்தேன். பிறகு மாமிசம் சாப்பிடுவதில்லை என்று உறுதி எடுத்தேன். இன்று விகன் உணவு மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய உணவுப் பழக்கத்தைப் பார்த்து என் பெற்றோர்கள் அதிர்ந்து போனார்கள்.

இன்று அவர்களும் விகன் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். ஆனால் தண்ணீர் பருகுகிறார்கள். ஒரு நாளைக்கு 800 முதல் 1000 கலோரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்து பெற்றுக்கொள்கிறேன். என் உணவுப் பழக்கத்துக்குச் சமையலறையே தேவை இல்லை.

என் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை. 26 வயதான நான் என் உணவுப் பழக்கம் மற்றும் தண்ணீர் பருகாததன் மூலம் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்று நம்புகிறேன். மற்றவர்களும் இதைத் தொடரவேண்டும் என்று சொல்ல மாட்டேன்’’ என்கிறார் பீட்டர். ஆனால் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியர் லிசா சாஸ்ஸன், ‘’உடலுக்குத் தண்ணீர்ச் சத்து இன்றியமையாதது. தண்ணீரில் இருக்கும் ஃப்ளூரைட் பற்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம். சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் நன்றாக இயங்க தண்ணீர்ச் சத்து முக்கியம்’’ என்கிறார்.

150 வருட ஆயுளா! போர் அடிச்சிடாதா பீட்டர்?

சீனாவில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் அழகான பொம்மையைத் திருமணம் செய்திருக்கிறார். இளைஞருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சில காலமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தான் இறப்பதற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வாழ்க்கையை வீணாக்க அவர் விரும்பவில்லை. அதனால் ஓர் அழகான பொம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். நிஜத் திருமணத்துக்குத் தேவைப்படும் விலையுயர்ந்த ஆடைகள், அலங்காரங்கள், பாரம்பரிய முறைப்படித் திருமணம், விருந்து என்று அத்தனையும் ஆசை தீர செய்துகொண்டார். அட்டகாசமாகப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அடப் பாவமே…

ப்ளோரிடாவில் வசிக்கும் 65 வயது ரிங்கிள்ஸ், கோமாளி வேஷம் போடுவதைத் தொழிலாகச் செய்து வருகிறார். பிறந்தநாள், திருமண நாள், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களில் கோமாளி வேடமிட்டு, எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். ஒரு விழாவில் கொஞ்சம் பயம் வருவது போல வேடமிடச் சொன்னார்கள். முகம் முழுவதும் வெள்ளை, கண்கள் இரண்டும் கறுப்பு, வாயும் மூக்கும் சிவப்பு என்று அச்சம் தரும் தோற்றத்தில் சென்றார். அன்றிலிருந்து பிடிவாதம் செய்யக்கூடிய குழந்தைகளிடம், அவரைக் காட்டி மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் பெற்றோர்கள்.

இப்பொழுது ரிங்கிள்ஸுக்குத் தொழில் மிகச் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. பூதம் போல் வேடமணிந்து, குழந்தைகளை லேசாக மிரட்டிவிட்டு வருகிறார். ‘’என் 12 வயது மகன் சொல் பேச்சு கேட்கவே மாட்டான். ரிங்கிள்ஸ் வந்து சென்ற பிறகு, அவன் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தேவைப்பட்டால் மீண்டும் ரிங்கிள்ஸை அழைப்பேன்’’ என்கிறார் ஓர் அம்மா. ’’நான் அதிகம் பயமுறுத்த மாட்டேன். ஆனாலும் என் வேடத்தைப் பார்த்த உடனேயே குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். அம்மா, அப்பா சொல்வதைக் கேள், விஷமம் செய்யக்கூடாது, குறும்பு செய்யக்கூடாது, நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வதோடு என் வேலை முடிந்துவிடும். பெற்றோர்கள் நிம்மதியடைகிறார்கள். குழந்தைகள் நல்ல பெயர் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் நிறைவாகவே இருக்கிறது இந்தப் பயமுறுத்தும் வேலை’’ என்கிறார் ரிங்கிள்ஸ்.

சே... இந்த வயதிலுமா பூச்சாண்டி காட்டி, குழந்தைகளை மிரட்டுவது?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/article7864712.ece

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பாவாடை அணியும் ஆண்கள்!

 
masala_2481026f.jpg
 

ஸ்காட்லாந்தில் இருக்கிறது ஹூட்டானன்னி உணவு விடுதி. இங்கே பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பாவாடை அணிந்துகொள்வது பொருத்த மாக இல்லை என்றாலும், நல்ல சம்பளம் என்பதற்காக பாவாடையை அணிந்து வருகிறார்கள்.

சமீப காலமாக இந்த விடுதிக்கு வரும் பெண்கள், மது அருந்திவிட்டு பாவாடை அணிந்திருக்கும் ஊழியர்களைக் கிண்டல் செய்கிறார்கள். சிலர் பாவாடையை இழுக் கிறார்கள். ஆரம்பத்தில் விளையாட்டு என்று நினைத்த ஊழியர்கள், இப்படிப் பட்ட விஷயங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததில் மனம் உடைந்து போனார்கள். இனிமேல் தாங்கள் இந்தப் பாவாடைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய இயலாது என்று எல்லோரும் கூறிவிட்டனர்.

‘‘வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல என்னுடைய ஊழியர்களும் முக்கியம். இனி யாரும் பாரம்பரிய பாவாடையை அணிய வேண்டாம்’’ என்று கூறிவிட்டார் விடுதியின் மேலாளர்.

ஐயோ... ஒருவரின் ஆடையை இழுப்பதும் மோசமாகப் பேசுவதும் அநாகரிகமானது…

ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் லாங்டனும் அவரது நண்பரும் கடல்பாசியில் செய்யும் உணவுகளுக்குக் காப்புரிமை பெற்றிருக்கின்றனர். பசிபிக், அட்லாண்டிக் கடல் பகுதிகளில் கடல் பாசிகள் கிடைக்கின்றன. அங்கே காய்ந்த கடல்பாசிகள் ஒரு கிலோ 2700 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மனித உணவுகளில் கடல் பாசிகளின் பங்கு இனிவரும் காலங்களில் மகத்தானதாக இருக்கும் என்கிறார்கள்.

கடல்பாசிகளில் கனிமங்கள், வைட்டமின்கள், புரோட்டீன் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இவற்றைச் சமைக்கும்போது அற்புதமான சுவையைத் தருகின்றன. பன்றி இறைச்சியை ஒத்த சுவை இருப்பதால், எல்லோரும் கடல்பாசியைச் சாப்பிடலாம் என்கி றார்கள். ஆசிய கடல் பகுதிகளில் சிவப்பு கடல்பாசிகள் அதிகம் விளை விக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

‘‘எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத் தேவையைச் சமாளிப்பதற்காகவே நாங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டோம். கடல்பாசிகளை வைத்து பானங்களில் இருந்து, சாப்பிடும் உணவு வரை தயாரிக்கலாம். பால் கூட சேர்க்காத விகன் உணவு உட்கொள்பவர்களுக்கும் சைவ உணவு சாப்பிடுகிறவர் களுக்கும் கடல்பாசி அருமையான உணவு’’ என்கிறார் கிறிஸ் லாங்டன். கடல்பாசி பணம் கொழிக்கும் தொழிலாக உருவாகி வருகிறது.

கடல்பாசி இல்லாத இடங்களில் செயற்கையாகக் கடல்பாசி வளர்ப்பதும் சூழல்கேடுதான்…

பிரிட்டனைச் சேர்ந்தவர் 31 வயது ஜான் வாட்கின்சன். 10 ஆண்டுகள் ஒரு வங்கியில் ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நல்ல சம்பளம், குடும்பம், நண்பர்கள் என்று இருந்தாலும் ஏனோ மகிழ்ச்சியாக இல்லை ஜான். உடனே தன்னு டைய வேலையை ராஜினாமா செய்தார். பாங்காக் வந்து, தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். லாவோஸுக்கு அருகில் டான் டெட் தீவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு முடிவு செய்தார்.

மூங்கிலால் செய்த ஒரு வீட்டைத் தானே உருவாக் கினார். தனக்குத் தேவையான உணவுகளைத் தானே விளைவித்துக் கொண்டார். தானே மீன்களைப் பிடித்தார். வாத்து, கோழிகளை வளர்த்தார். ஆரோக்கியமான, சுவையான உணவுகளைத் தானே தயாரித்துக்கொண்டார். தினமும் 7 மைல் தூரம் தீவைச் சுற்றி ஓடி வருகிறார். ஆற்றில் குளித்து, துவைத்துக்கொள்கிறார். ஜானிடம் தொலைக்காட்சி பெட்டியோ, தொலைபேசியோ இல்லை. மின்சாரம் மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்.

’’படிப்பு, கம்ப்யூட்டர், இணையதளம் என்று நான் ஏதோ அதிகம் கற்றவன் என்று ஒருகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகுதான் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அறிந்துகொண்டேன். செடி வளர்ப்பு, பால் கறத்தல், மீன் பிடித்தல் என்று இங்குள்ள மக்களிடம்தான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டேன். ஒரு குழந்தையைப் போல அத்தனை கனிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த வாழ்க்கைக் கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு பிரிட்டனில் கிடைக்கவில்லை. குடும்பம், நண்பர்கள் பிரிவைத் தவிர வேறு எந்த வருத்தமும் எனக்கு இல்லை’’ என்கிறார் ஜான். இவருடைய இன்றைய வாழ்க்கை பிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கிறது.

தனக்குத் தேவையானதைத் தானே செய்துகொள்ளும்போது மனநிறைவும் மகிழ்ச்சியும் வரும் ஜான்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7446948.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: என்னதான் சொல்லுங்க, நீங்க செய்தது சரியில்லை பிலிப்...

 
 
dog_2617206f.jpg
 

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிலிப் டுபாண்ட். மெல்வின் என்ற மிக புத்திசாலியான நாயை வளர்த்து வருகிறார். மெல்வின் இல்லை என்றால் தன்னால் வாழ முடியாது, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். மெல்வினைப் போல 2 நாய்களை க்ளோனிங் மூலம் உருவாக்க முடிவு செய்தார். 66 லட்சம் ரூபாய் செலவில் வெற்றிகரமாக 2 நாய்களை உருவாக்கிவிட்டார். கென் கார்டன், ஹென்றி ஃபாண்டெனாட் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இரண்டு நாய்களும் அப்படியே மெல்வினின் செயல்களை ஒத்திருக்கின்றன.

‘‘மெல்வினுக்கு 12 வயதானபோது உடல்நிலை மோசமானது. அப்போதுதான் எனக்கு க்ளோனிங் யோசனை தோன்றியது. என் அன்பு மெல்வினைப் பிரிந்து என்னால் வாழவே முடியாது. அதேபோல மெல்வினின் ஆயுளையும் என்னால் நீட்டிக்க முடியாது. அதனால்தான் க்ளோனிங் செய்துகொண்டேன். என் மருத்துவமனையில் அனுபவம் பெற்ற மெல்வினும் இரண்டு குட்டிகளும் மக்களை வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றன. இரண்டு நாய்களுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும் என்பதற்காக கறுப்பு, சிவப்பு கழுத்துப் பட்டைகளைக் கட்டியிருக்கிறேன்’’ என்கிறார் பிலிப். நாட்டில் எத்தனையோ நாய்கள் பராமரிப்பு இன்றி தவிக்க, 2 நாய்களுக்கு இத்தனை செலவு செய்து க்ளோனிங் செய்தது அநியாயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘எனக்குத் தேவை நாய்கள் அல்ல. என் அருமை மெல்வின் போன்ற நாய்தான். என்னைப் போல சிறப்பு நாய்களை வைத்திருப்பவர்களுக்கு க்ளோனிங் செய்வதற்கு நான் உதவி செய்வேன்’’ என்கிறார் பிலிப்.

என்னதான் சொல்லுங்க, நீங்க செய்தது சரியில்லை பிலிப்…

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரோல்ஃப் பாண்டில் மதுவுக்கு அடிமையாகி, ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போதுதான் மிலன் நகரில் நடக்கும் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்குக் கிளம்பினார். போட்டி முடிந்த பிறகு பார்த்தால், அவருடன் வந்த நண்பர்கள் யாருமே இல்லை. அவருக்கு தான் எங்கே செல்ல வேண்டும் என்ற முகவரியும் மறந்துவிட்டது. மொபைல் போனும் இல்லை என்பதால் அவரால் தன் சொந்த ஊருக்கு வர முடியவில்லை.

‘‘எனக்கு என் முகவரியோ, உறவினர்களோ எதுவுமே தெரியாமல் போய்விட்டது. சட்டைப் பையில் 20 யூரோ மட்டுமே இருந்தது. என் நிலையைப் பார்த்து ஒரு மாணவன், ஸ்லீப்பிங் பேக் கொடுத்து உதவினான். சில நல்ல உள்ளங்கள் உணவு, சிகரெட் கொடுத்து உதவினார்கள். பொது குளியலறையில் குளித்து, துவைத்துக்கொள்வேன். முகவரி நினைவில்லை என்பதால் நான் ஒன்றும் வருந்தவே இல்லை. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த 11 ஆண்டுகளில் அறிந்துகொண்டேன். எனக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையே ஏற்படவில்லை. என்னுடைய பெரும்பாலான நேரத்தை நூலகத்தில்தான் செலவிட்டிருக்கிறேன்’’ என்கிறார் ரோல்ஃப். சமீபத்தில் கீழே விழுந்ததில் ரோல்ஃபின் தொடை எலும்பு உடைந்து விட்டது. மருத்துவமனையில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு தொடர்பு கொண்டனர். தற்போது தன் சொந்த நாட்டில், முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார் 71 வயது ரோல்ஃப்.

ரோல்ஃபை வாழவைத்த மிலன் மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்…

பொலிவியாவில் மண்டையோட்டுத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இறந்தவர்களின் மண்டையோடுகளை வைத்து, பூஜை செய்தால் அதிர்ஷ்டமும் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத ரீதியாக இந்த விழா நடத்தப்படுகிறது. விழா அன்று சுத்தம் செய்யப்பட்ட மண்டையோட்டை மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். சிலர் தொப்பி, கண்ணாடி அணிவிக்கிறார்கள். வீட்டில் இருந்து அலங்காரத்துடன் எடுத்துச் செல்லப்படும் மண்டையோடுகள் எல்லாம் தேவாலயத்தில் வைக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அவரவர் விரும்பியதை வேண்டிக்கொள்கிறார்கள். விழா முடிந்த பிறகு, மண்டையோடுகளை யாருக்கும் தெரியாமல், ரகசியமாகக் கல்லறையில் வைத்துவிடுகிறார்கள். குடும்பத்தினர், உறவினர் மண்டையோடுகள் கிடைக்காதவர்கள், ஏதாவது ஒரு மண்டையோட்டை எடுத்துக்கொள்கிறார்கள். நாம் நினைத்தது நிறைவேறும், நம் குடும்பத்தைப் பாதுகாக்கும், உடல் ஆரோக்கியம் பெருகும் என்று நம்பிக்கையோடு இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழா ஏழை, எளிய மக்களிடமே கொண்டாடப்பட்டு வருகிறது.

வித்தியாசமான விழா…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article7868802.ece

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: துர்நாற்ற திரவம்

 
masala_2618800f.jpg
 

ஆலன் விட்மனும் ஆண்ட்ரூ மாஸ்டர்ஸும் வட கரோலினாவைச் சேர்ந்த நண்பர்கள். இவர்கள் இருவரும் ‘லிக்விட் ஆஸ்’ என்ற ஒரு திரவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரவத்தைத் தெளித்தால் மிக மோசமான துர்நாற்றம் வீசும். “நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தத் திரவத்தை உருவாக்கிவிட்டோம். என் பெற்றோர் ரசாயனப் பெட்டி ஒன்றைப் பரிசாக அளித்தனர். ஒவ்வொன்றையும் பரிசோதித்துப் பார்த்தோம். ஒரு சில ரசாயனங்களைச் சேர்த்துப் பார்த்தபோது இறந்த விலங்குகளின் துர்நாற்றம் வந்தது. இந்தத் திரவத்தை எங்களுடன் சண்டையிடும் மாணவர்கள் மீது தெளித்துவிடுவோம்.

நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவார்கள். அதை மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. ஏதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்தபோது துர்நாற்ற திரவியம் செய்யும் யோசனை தோன்றியது. இதை வாங்குவார்களா என்றும் சந்தேகம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக வரவேற்பு இருக்கிறது. லாக்கர் அறைகளில் இந்தத் திரவியத்தைத் தெளித்தால் திருடர்கள் யாரும் அங்கே நுழைய மாட்டார்கள். பெண்கள் இந்தத் திரவத்தை வைத்துக்கொண்டால், ஆபத்து ஏற்படும்போது எளிதில் தப்பிவிடலாம்” என்கிறார் விட்மன்.

எப்படியெல்லாம் தொழில் செய்யறாங்க இந்த உலகத்துல…

அமெரிக்காவில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான பொது குளியலறைகள், கழிப்பிடங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சான்பிரான்சிஸ்கோவில் மட்டும் 6,500 பேர் வீடு இல்லாமல் பொது இடங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 20 குளியலறைகளும் கழிப்பறைகளும் மட்டுமே இருக்கின்றன. இதனால் பலருக்குக் குளிக்கும் வாய்ப்பு கிடைப்பதே இல்லை.

அவர்களுக்காக லாவா மே என்ற தொண்டு நிறுவனம், நகரும் குளியலறை, கழிப்பறைகளை உருவாக்கியிருக்கிறது. அதாவது பழைய பேருந்துகளை வாங்கி, அதில் கழிப்பறைகளையும் குளியலறைகளையும் பொருத்தியிருக்கிறது. இந்தத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியவர் டோனிஸ் சாண்டோவல். வீடில்லாத வர்களுக்கு உதவுவதற்காகவே தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார். “ஒருநாள் தெருவில் அழுக்கான உடையுடன் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தார். காரணம் கேட்டபோது குளிப்பதற்கு இடமே இல்லை என்றார். அழகான அந்தப் பெண்ணின் முகம் பல அடுக்கு அழுக்குகளால் மோசமாக மாறியிருந்தது.

குளியலறையும் கழிப்பறையும் மனிதனுக்கு இன்றியமையாதவை. உடனே நகரும் குளியலறை என்ற திட்டத்தை உருவாக்கினேன்” என்கிறார் டோனிஸ். இன்று லாவா மே தொண்டு நிறுவனத்தில் ஏராளமானவர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். எங்கெல்லாம் குளியல றைகளும் கழிப்பறைகளும் தேவைப்படுகின்றனவோ, அங்கே பேருந்து சென்றுவிடும். ஒவ்வொரு பேருந்திலும் வாரத்துக்கு 2 ஆயிரம் பேர் குளித்து வருகிறார்கள். இந்தப் பேருந்துகளுக்குப் பணமாகவோ, சுத்தம் செய்யும் பொருட்களாகவோ நன்கொடை அளிக்கலாம்.

அமெரிக்காவிலும் இந்த நிலைமையா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article7872376.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: மீசை வைத்த குழந்தையப்பா...

 
car_2478900f.jpg
 

சீனாவில் வசிக்கிறார் 27 வயது சென் யினிக்ஸி. கடந்த வாரம் நடைபெற்ற ஹைனன் சர்வதேச வாகனங்கள் தொழிற்சாலை கண்காட்சியில் இவருடைய சூப்பர் கார் வைக்கப்பட்டது. காரைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களோ, பாராட்டாதவர்களோ இல்லை. தனி ஒரு நபராக, தன் வீட்டிலேயே சென் இந்த காரை உருவாக்கியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. சென்னுக்குச் சிறிய வயதில் இருந்தே மோட்டார் வாகனங்கள் மீது ஆர்வம் இருந்தது. கார் வடிவமைப்பு பற்றி இரண்டு ஆண்டுகள் படித்தார். வீட்டிலேயே சூப்பர் காரை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார். அதுவும் 30 லட்சம் ரூபாய்க்குள் என்பது எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. மணிக்கு 60 மைல் வேகத்தில் செல்லும் இந்த சூப்பர் சிவப்பு காருக்கும் சென்னுக்கும் மோட்டார் வாகன உலகம் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறது.

வெல்டன் சென்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மகாரே, மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வதற்காக ஹாங் காங் வந்தார். மார்ஷியல் கலைகளில் தேர்ச்சி பெற்று, சண்டை நடிகராக வேண்டும் என்பதுதான் ரிச்சர்ட் லட்சியம். இரண்டு மாதங்களில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெண் குழந்தை வேடம். சிறிய கவுன், தலையில் இரண்டு ரிப்பன் கட்டிக்கொண்டு நடிக்க வேண்டும். நடிக்க ஒப்புக்கொண்ட ரிச்சர்ட், தன்னுடைய தாடியையும் மீசையையும் எடுக்க சம்மதிக்கவில்லை. இந்த வேடமும் புதுமையாக இருக்கிறது என்று எண்ணி விட்டுவிட்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், ரிச்சர்ட்டுக்கு மட்டும்தான் ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து அதுபோன்ற பாத்திரங்களில் நடிக்க அழைப்பு வந்தன. ஜப்பானியர்கள் இதுபோன்ற கதாபாத்திரத்தை விரும்புவார்கள் என்று சொன்னதன் பேரில், ஜப்பான் சென்றார். ஜப்பானிய குழந்தைகளும் பெண்களும் ரிச்சர்ட் விசிறியாக மாறிவிட்டனர். இன்று ஜப்பானில் புகழ்பெற்றவராக மாறிவிட்டார் ரிச்சர்ட். குட்டை ஆடையும் தலையில் ரிப்பனுமாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழாக்கள், இசை ஆல்பங்கள், நடன நிகழ்ச்சிகள் என்று பரபரப்பாக இருக்கிறார்.

மீசை வைத்த குழந்தையப்பா…

பிரிட்டனின் அதி புத்திசாலி நாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது கூப்பர். இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 ஆயிரம் ரூபாய்க்கு கிறிஸ்டி ஃபாரஸ்டர் வாங்கினார். வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கூப்பர் புத்திசாலியானது என்பதை அறிந்துகொண்டார் கிறிஸ்டி. கொஞ்சம் கொஞ்சமாக கூப்பருக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டது கூப்பர். வடிவங்களைச் சரியாகக் கண்டுபிடிக் கிறது. பெரியதிலிருந்து சிறியது வரை உள்ள பொருட்களை வரிசைப்படுத்துகிறது. ’’ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் கூப்பருக்காகச் செலவு செய்து, ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொடுக்கிறேன். அதை 2, 3 மணி நேரங்களில் கற்றுக்கொண்டு, தானே செய்து காண்பித்து விடுகிறது கூப்பர். ஒரு குழந்தையைப் போலவே ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வத்துடனும் ஜாலியாகவும் கற்றுக்கொள்ளும் கூப்பரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை அதைச் செய், இதைச் செய் என்று நான் கட்டாயப்படுத்தியதே இல்லை. கூப்பரே ஏதாவது கற்றுத்தரும்படி என்னைக் கூப்பிடுகிறது’’ என்கிறார் கிறிஸ்டி.

கூப்பர் ஒரு சூப்பர் நாய்…

நியுஸிலாந்தில் உள்ள ஒஹுரா நகரில் 120 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் தொழில்நகரமாக இருந்த இந்த ஒஹுரா, இன்று அழிந்து போகக்கூடிய ஒரு நகரமாக மாறிவிட்டது. இங்கே மின்சார வசதி இல்லை என்பதால், இணையம் போன்ற வெளியுலகத் தொடர்புக்கும் வழியில்லை. பெரும்பாலானவர்களுக்கு வேலையும் இல்லை. அதனால் பிழைப்புக்கும் வழியில்லை. அரசாங்கமும் இந்த நகரை கைவிட்டுவிட்டது. பிரபல புகைப்படக்காரர் டோனி கார்டர் கடந்த ஓராண்டில் மட்டும், 30 தடவை ஒஹுராவுக்குச் சென்று, புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். ‘‘சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை ஆவணப்படுத்துவதே என்னுடைய நோக்கம். இந்த மக்கள் மிகவும் நேர்மையானவர்கள். வெகு விரைவில் இந்த நகர் மறைந்து போக இருக்கிறது என்பது வேதனையானது’’ என்கிறார் டோனி கார்டர்.

ம்… வாழ்ந்து கெட்ட நகரம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/article7440432.ece?ref=relatedNews

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: இலை ஓவியங்கள்

 
 
masala_2620437f.jpg
 

போலந்தைச் சேர்ந்த ஜோன்னா விரஸ்கா உதிர்ந்து விழக்கூடிய இலைகளில் இருந்து அற்புதமான ஓவியங்களைத் தீட்டி வருகிறார். ஓவியம் தீட்டுவதோடு, சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு செய்தியையும் சொல்வதுதான் இவருடைய இலை ஓவியங்களின் சிறப்பு. இலைகளில் உள்ள பச்சையத்தை நீக்கி, நரம்புகளில் இவர் ஓவியம் தீட்டுவதில்லை. இலைகளைச் சேகரித்து, அவற்றைப் பெரிய புத்தகங்களுக்கு இடையே வைத்து விடுகிறார். 2 வாரங்களில் இலைகளில் உள்ள நீர்ச்சத்து உலர்ந்து, காகிதம் போல மாறிவிடுகின்றன. பிறகு அந்த இலையில் ஓவியங்களைத் தீட்டி விடுகிறார் ஜோன்னா.

‘‘காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இவற்றால் சுற்றுச் சூழல் சீர்கெடுகிறது. அதனால் காகிதங்களைப் பயன்படுத்தாமல் என் ஓவியங்களை உருவாக்கி வருகிறேன். தேவை இன்றி யாரும் காகிதம் பயன்படுத்தாதீர்கள். நம் அற்புதமான பூமி மிக மோசமான நிலையில் இருக்கிறது. என்னுடைய இலை ஓவியங்கள் உலக அளவில் பிரபலமாகும் என்று நான் நினைத்ததே இல்லை. இன்ஸ்டாகிராமில் ஓவியங்களைப் போட்டவுடன் உலகம் முழுவதும் இருந்து ஆதரவு குவிகிறது. நிறையப் பேர் காகிதங்களை அவசியம் இன்றி பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜோன்னா.

ஓவியம் போலவே உங்கள் எண்ணமும் அழகு!

லண்டனின் முதல் பெண்கள் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் எம்மா லான்மன்.ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பெண்கள் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கு எங்கள் நிறுவனமே சாட்சி. பொருட்களைப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைப்பதிலிருந்து, அதை இன்னொரு இடத்துக்கு கவனமாக எடுத்துச் செல்வது வரை பெண்கள் பொறுமையோடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்கிறார்கள்.

என் வீட்டில் நான், என் மகள், பேத்தி என்று பெண்களாகவே வசிக்கிறோம். வாழ்க்கை என்ற மிகப் பெரிய விஷயத்தையே பெண்களால் தனியாக எதிர்கொள்ள முடியும்போது இதுபோன்ற வேலைகளை எதிர்கொள்ள முடியாதா என்ற கேள்வி வந்தபோது, தோன்றியதுதான் இந்த வேன் கேர்ள்ஸ் நிறுவனம். ராணுவம், காவல்துறை, ஆம்புலன்ஸ் சர்வீஸ்களில் எல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்.

அதேபோல எலக்ட்ரீசியன், கார்பெண்டர், ப்ளம்பர் போன்ற பணிகளையும் பெண்கள் விரைவில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஆண்கள்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஆண்களை அனுமதிப்போம். மற்றபடி கடினமான வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்துவிடுவோம். அதே சமயம் நாங்கள் ஆண்களுக்கு எதிரி அல்ல. எங்கள் அலுவலகத்தில் ரிஷப்ஷனிஸ்ட் வேலையை ஒரு ஆணுக்குத்தான் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார் எம்மா.

கலக்குங்க கேர்ள்ஸ்!

ஜப்பானில் இருந்து வெளிவரும் ‘மிஸ்டர் பேப்’ என்ற ஆண்கள் பத்திரிகை முழுக்க முழுக்க உடல் எடை அதிகம் கொண்ட பருத்த மனிதர்களுக்காகவே வெளிவருகிறது. இதுவும் ஃபேஷன் பத்திரிகைதான். ‘‘குண்டானவர்களுக்கு, குண்டானவர்களால் உருவாக்கப்படுகிறது இந்தப் பத்திரிகை. குண்டாக இருப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதும்தான் இந்தப் பத்திரிகையின் முக்கிய நோக்கம். உலகம் முழுவதும் எடை குறைப்பு என்ற விஷயம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

குண்டானவர்கள் மிகவும் சோர்ந்து போய்விடுகிறார்கள். குண்டானவர்களுக்கு எப்படி ஆடை அணிவது, ஆரோக்கியமாக எப்படி இருப்பது, காதல், கல்யாணம் போன்றவற்றை எப்படிக் கையாள்வது போன்ற விஷயங்களைத் தருகிறோம். நாங்கள் எடை அதிகரிக்கும்படி சொல்வதில்லை. எங்களைப் பொறுத்தவரை குண்டானவர்கள் நம்பிக்கையோடு வாழவும், அவர்கள் மனத்திலிருந்து தாழ்வு மனப்பான்மையை அகற்றவும் உதவி செய்கிறோம்’’ என்கிறார் பத்திரிகையின் ஆசிரியர் நோரிஹிடோ குராஷினா. ஜப்பானியர்களில் மூன்றில் ஓர் ஆண் எடை அதிகம் உடையவராக இருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் ஆண்கள் உடல் எடை அதிகரித்தும், பெண்கள் உடல் எடை குறைந்தும் காணப்படுகிறார்கள். ஆண்கள் அதிக நேரம் அலுவலகத்தில் பணிபுரிவதால் அவர்களுக்கு ஓய்வுக்கோ, உடற்பயிற்சிக்கோ நேரமே இருப்பதில்லை. அவர்களுக்காகவே இந்தப் பத்திரிகை என்கிறார் குராஷினா. முதல் இதழ் 50 ஆயிரம் பிரதிகள் அடிக்கப்பட்டு, மிக விரைவில் விற்பனையாகிவிட்டன.

ம்… புதிய முயற்சி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7877470.ece?homepage=true&relartwiz=true

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: நத்தை நண்பன்!

 
masala_2477940f.jpg
 

இந்தோனேசியாவில் வசிக்கிறார் 34 வயது புகைப்படக்காரர் குரிட் அஃஷீன். ஜாவாவில் ஒரு மரக்கிளையில் வித்தியாசமான காட்சியைக் கண்டார். நத்தை மீது ஒரு தவளை மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நத்தையால் எளிதாக நகர இயலவில்லை.

ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் தவளையைச் சுமந்துகொண்டு நகர்ந்தது. தவளை ஜாலியாக நத்தையின் ஓட்டில் அமர்ந்திருந்தது. ஒருகட்டத்தில் நத்தையால் நகர முடியவில்லை. வேறு வழியின்றி தவளை, நத்தையை விட்டுச் சென்றுவிட்டது. ஒவ்வொரு நொடியையும் அழகாகப் புகைப்படமெடுத்துவிட்டார் குரிட்.

அட்டகாசம்!

நேபாளத்தைச் சேர்ந்த புஷ்கர் ஒரு நிமிடத்தில் 134 தடவை தன் கால்களால் தலையை அடித்து, உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 8 மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு, நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார். பாதி உடலை 90 டிகிரிக்கு வளைத்து, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி தலையில் அடித்தார். கடந்த 2013ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 127 முறை அடித்திருந்தார்.

இந்த தடவை 134 தடவை அடித்து, அவரது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். ‘’இந்தச் சமூகத்தில் வாழும் ஏழை மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் பல நாடுகளுக்கும் செல்லும்போது பல்வேறு விதமான மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. என் சாதனைகள் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை, ஏழைகளுக்குச் செலவிட முடிவு செய்திருக்கிறேன்’’ என்கிறார் புஷ்கர். தன் வாழ்நாளில் 100 சாதனைகளையாவது செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் புஷ்கர்.

உங்க சாதனைக்குப் பின்னால நல்ல நோக்கமும் இருக்கு, கலக்குங்க புஷ்கர்!

ஜப்பானில் உள்ள எபினார்ட் நாசு விடுதி அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கே நடந்த திருமணத்தில் அல்பகா என்ற விலங்கு கலந்துகொண்டது. ஒட்டகத்தின் உறவினர் இந்தத் தென்னமெரிக்க விலங்கு. இதுவரை யாரும் அல்பகாவை இதுபோன்ற விசேஷங்களில் கண்டதில்லை என்பதால் எல்லோரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். அல்பகாவையும் மணமக்களையும் வைத்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் பொறுமையோடு செய்துகொண்டிருந்தது அல்பகா. ‘’எங்கள் திருமணம் இவ்வளவு வித்தியாசமாக நடைபெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அல்பகாவை மறக்க மாட்டோம்’’ என்று எழுதி, புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டர் மணமகள். இன்று ஜப்பானிய திருமணத்தில் கட்டாயமாக அல்பகா இடம்பெற வேண்டும் என்ற அளவுக்குச் சென்றுவிட்டது.

அடடா! இனி அல்பகா இல்லாமல் கல்யாணம் கிடையாது போலிருக்கே!

கிழக்கு லண்டனில் உள்ள சலூனில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஜானிவாக்கர் மது வழங்கப்படுகிறது. எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த மெழுகை மீசையில் தடவி விடுகிறார்கள். ஒவ்வொரு முறை மதுவை அருந்தும்போதும் மீசையில் இருந்து மெழுகு உள்ளே செல்கிறது. வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது என்கிறார்கள்.

இது 100 சதவீதம் தேனீக்களின் மெழுகால் தயாரிக்கப்படுவதால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. மிளகு, எலுமிச்சை, இஞ்சி என்ற மூன்று சுவைகளில் மெழுகை ஜானிவாக்கர் நிறுவனம் அளித்து வருகிறது. இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் உலகம் முழுவதும் மீசையைத் தம்ளருக்குள் விட்டுக் குடித்துக்கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/article7437492.ece?ref=relatedNews

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: கண்களில் கூடவா விளையாட்டு?

eye_2623470f.jpg
 

டலில் போட்டுக்கொள்ளும் டாட்டூ, இப்பொழுது கண்களுக் கும் பரவிவிட்டது. ஆஸ்திரேலியாவில் கண்களில் உள்ள வெண் பகுதியில் வண்ணங்களை ஊசி மூலம் செலுத்திக்கொள் கிறார்கள். இதுவரை 20 பேர் நிரந்தரமாகக் கண்களை வண்ணமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த லூனா கோப்ரா கண்களை வண்ணமாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ‘‘இது மிக ஆபத்தான விஷயம். வண்ணங்கள் மூலம் நிரந்தரமாகப் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது’’ என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பச்சை, நீலம், கறுப்பு, மஞ்சள் என்று விருப்பப்பட்ட நிறக் கண்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கண்களில் கூடவா விளையாட்டு?

வாஷிங்டனில் வசிக்கும் 28 வயது ஹன்னா ஷா, தன் வாழ்க்கையைப் பிறந்த பூனைக் குட்டிகளைக் காப்பதற்காக அர்ப்பணித்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் பல நூறு பூனைக் குட்டிகளைக் காப்பாற்றி இருக்கிறார். ‘‘எனக்கு 12 வயதில் விலங்குகளைக் காக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. அன்று முதல் நான் இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். சின்னப் பிராணிகளில் இருந்து, சரணாலயங்களில் இருக்கும் பெரிய பிராணிகள் வரை பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன், பிறந்து சில நாட்களே ஆன பூனைக் குட்டி ஒன்று தனியே கத்திக்கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். வளர்ந்த பூனைகள் என்றால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளும். ஆனால் பிறந்த பூனைக் குட்டிகளால் என்ன செய்ய முடியும்? அவற்றுக்கு எதிரிகளும் அதிகம். அதனால்தான் குட்டிப் பூனைகளைக் காப்பாற்றும் பணியை முக்கியமாகக் கருதுகிறேன். நான் குட்டிகளைக் காப்பாற்றுவதை அறிந்த மக்கள், எங்கே பூனைக் குட்டிகள் ஆதரவின்றி இருந்தாலும் உடனே எனக்குத் தகவல் கொடுத்து விடுகிறார்கள். உடனே சென்று, குட்டிகளை மீட்டு வருவேன். 8 வாரங்கள் வரை உணவளித்து, நன்றாகக் கவனித்துக்கொள்வேன். பிறகு தேவைப்படுபவர்களுக்கு வழங்கி விடுவேன். தினமும் நள்ளிரவில் கூட 2, 3 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனாலும் நான் தொந்தரவாக நினைக்கவில்லை. என் வீட்டில் குறைந்தது 10 குட்டிகளாவது எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றன. 8 வாரங்கள் வரை அவற்றுக்குப் பெயர் எல்லாம் வைத்து விடுவேன். பெயர்ப் பஞ்சம் காரணமாக பீன்ஸ், நூடுல்ஸ் என்றெல்லாம் கூட சூட்டிவிடுகிறேன்’’ என்கிறார் ஹன்னா.

பூனைகளின் தாய்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் கார்களை நிறுத்திவிட்டு, நிம்மதியாகச் செல்ல இயலாது. அங்கே கார்கள் திருடு போவது சர்வசாதாரணம். கார்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறார் மாஸ்டர் லோலோ. கராத்தே மாஸ்டரான 36 வயது லோலோ, காங்கோவைச் சேர்ந்தவர். முகத்தில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு, கராத்தே கலைகளைச் செய்து காட்டியபடி ஹாரிங்டன் சாலையில் உள்ள உணவகம் வாயிலில் நிற்கிறார். இதனால் கார் திருடர்கள் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. மகிழ்ந்து போகும் கார் உரிமையாளர்கள் மாஸ்டர் லோலோவுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்கிறார்கள். ‘‘ஆரம்பத்தில் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மக்கள், இன்று ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள். திருடர்களிடமிருந்து கார்களைப் பாதுகாக்கும் பணி எனக்கும் பிடித்திருக்கிறது, மக்களுக்கும் பிடித்திருக்கிறது’’ என்கிறார் லோலோ. ‘‘மாஸ்டர் லோலோ இருப்பதால் எங்களால் நிம்மதியாகச் சாப்பிட முடிகிறது, நீண்ட நேரம் ஷாப்பிங் மாலில் சுற்ற முடிகிறது. கராத்தே மாஸ்டராக இருந்தாலும் மிகவும் மென்மையான மனிதர். இவரைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. இவர் வந்த பிறகு கார்கள் திருடு போகவில்லை. யாராவது பிரச்சினை செய்ய வந்தால், அவர்கள் வேறோரு லோலோவைப் பார்ப்பார்கள். திறமையான இந்த மனிதர், தன்னுடைய கலையைப் பிறருக்கும் கற்பிக்கலாம்’’ என்கிறார் நான்ஸி. பொதுமக்கள் தாராளமாக லோலோவுக்குப் பணம் அளிப்பதால், சக ஊழியர்கள் இவருக்குச் சேரவேண்டிய டிப்ஸ்களைக் கூட அளிப்பதில்லை. அதை லோலோவும் கண்டுகொள்வதில்லை.

வித்தியசமான மாஸ்டர்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7886848.ece

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: அதிசயக் குழந்தை!

 
masala_2624734f.jpg
 

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறான் 5 வயது ராம்செஸ் சங்குனோ. இதுவரை 7 மொழிகளைக் கற்றிருக்கிறான். மிகக் கடினமான கணிதப் புதிர்களை விடுவித்திருக்கிறான். நாம் மனத்தில் நினைக்கும் எண்களைக் கூட தன்னுடைய நுண்ணுணர்வு மூலம் சொல்லி விடுகிறான்.

‘‘மற்ற குழந்தை களைப் போல இவன் பொம் மைகளை விரும்பியதில்லை. பிறந்த 12-வது மாதத்திலேயே படிக்க ஆரம்பித்துவிட்டான். ஆங்கிலம், ஸ்பானிஷ், கிரேக்கம், ஜப்பானிய மொழிகளில் வார்த்தை களைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். 18 மாதங்களில் பெருக்கல் கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டான். 3 வயதில் ஹிந்தி, அரபிக், ஹீப்ரு மொழிகளை வீட்டிலுள்ள கம்ப்யூட்டர் மூலம் கற்றுக்கொண்டான். பள்ளியில் சேர்த்தபோது இவன் ஒருவன் மட்டுமே படிக்கக்கூடியவனாக இருந்தான். ஆசிரியர் இவனை மற்ற குழந்தைகளில் இருந்து தனித்து உட்கார வைத்துவிட்டார்.

உடனே பள்ளியில் இருந்து அழைத்து வந்துவிட்டேன். இப்போது வீட்டிலிருந்தே படிக்கிறான். மருத்துவர்கள் சொல்வதைப் போல என் மகனுக்குச் சிறப்பான கல்வி அளிக்கப்பட்டால், உலகிலேயே அற்புதமான மனிதனாக வருவான். ஒருவேளை புற்றுநோய்க்குக் கூட இவனால் மருந்து கண்டுபிடிக்கப்படலாம். அவ்வளவு திறமை இவனிடம் இருக்கிறது’’ என்கிறார் ராம்செஸின் அம்மா நிக்ஸ். ராம்செஸைப் பரிசோதித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பாவெல், ‘‘மருத்துவர்கள் டெலிபதியை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் 17 எண்களில் 16 எண்களைச் சரியாகச் சொல்லும்போது அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ராம்செஸுக்குச் சரியான கல்வி அளிக்கப்படுமானால், அவனுடைய புத்திசாலித்தனம் உலகத்துக்குப் பயன்படும்’’ என்கிறார்.

அடடா! அதிசயக் குழந்தை!

டோக்கியோவில் ஷாங்ரிலா என்ற கஃபே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் உடல் பருமன் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது ஷாங்ரிலா கஃபே. இங்கே வேலை செய்யும் அனைத்துப் பெண்களும் உடல் எடை அதிகம் உடையவர்கள்.

ஆனால் இங்கே உடல் ஆரோக்கியம் கெடுக்கும் நொறுக்குத் தீனிகள் இங்கே விற்கப்படுவதில்லை. ரசாயனம் இன்றி விளையும் பொருட்களைக் கொண்டு, சுடச் சுட உணவு தயாரித்து வழங்குகிறார்கள். ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ஷாங்ரிலா மிகப் பிரபலமாகிவிட்டது. இங்கே வரும் உடல் பருமன் மக்கள், தாழ்வுமனப்பான்மை போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆரோக்கியமே அழகு…

இங்கிலாந்தில் வசிக்கிறார் ஜான் டெய்லர். சமீபத்தில் 9 வாரப் பயணமாக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவருடன் 10 வயது ஜாக் ரஸ்ஸெல் என்ற நாயும் கலந்துகொண்டது.

‘‘ஜாக் மாதிரி பயணத்துக்குச் சிறந்த நண்பனைப் பார்க்கவே முடியாது. எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுக்கொள்வான். நடப்பான், ஓடுவான், மலையில் ஏறுவான், படகில் பயணிப்பான், தண்ணீரில் நீந்தி தனக்கான உணவை வேட்டையாடுவான். விமானம் முதல் மனிதர்கள் வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஜாக் மூலம் கற்றுக்கொள்ளலாம். இனி என் பயணங்களில் ஜாக் நிச்சயம் இடம்பெறுவான்’’ என்கிறார் ஜான் டெய்லர்.

உற்ற தோழன்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article7891185.ece?homepage=true&relartwiz=true

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை. எல்லாம் குருமூர்தி உத்தரவு.
  • ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.
  • மர்ம உறுப்பு என்பது private parts என்பதன் தமிழாக்கம். மர்மத்துக்கு என்ன அர்த்தம்? ரகசியம்/மறைபொருள் என்பதுதானே? இதன் இன்னொரு அர்த்தம் privacy. என்னதான் வெக்கை என்றாலும் மேலாடையை து(தி)றந்தாலும் கீழாடையை, அரையில் ஒரு துணியாவது இருக்கும்படி பார்துக்கொள்கிறோம் அல்லவா? ஏன்? ஏன்றால் அந்த பகுதியின் நீள, அகல, கன பரிமாணங்கள் என்ன என்பது எமக்கும், எமக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரிந்த “மர்மங்கள்”.  இவை மர்மங்களாக இருக்க வேண்டும் என்பது எதோ ஒரு கட்டத்தில் எல்லா மனிதநாகரீகங்களும் எடுத்த முடிவு (சில பழங்குடிகளுக்கு இவை இன்றும் மறைபொருள்/மர்மம் இல்லை). எனவேதான் இனப்பெருக்க உறுப்புகளை மஎனும் மர்ம உறுப்பு என்கிறோம்.   
  • இந்தத் திரைப்படத்தை நான் கம்போடியா சென்றபோது விமானத்தில் பார்த்தேன். சலிப்பை ஏற்படுத்தாத படம். அரங்கத்தில் நேரடியாக நடிப்பதைப் பார்ப்பதே ஓர் அலாதியான அனுபவம். நான் The lion King ஐ பார்த்தபோது உணர்ந்து கொண்ட அனுபவம். சில நல்ல அனுபவங்களுக்காக பணத்தை இழப்பது பெரிதல்ல அண்ணா. நாம் அனுபவித்தால்த்தான் அதன் அருமை தெரியும்.
  • Krishnan Nallaperumal 1 ஜனவரி அன்று புதுப்பிக்கப்பட்டது       இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்! இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம்! தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி! வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள்! எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை! உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொழியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது! சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க! வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன. வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன. இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன. உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்! எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது! இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே! தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள்! இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன. தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது! தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது! உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன! ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை! கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது! சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ்கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது! தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி! தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது! சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள்! தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே! எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது. வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று! சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன. நாம் நம் தமிழுக்கும், நம் மக்களுக்கும் எவ்வாறு தொண்டுசெய்யப் போகிறோம்? —————————————————————— திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களின் கேள்வி : "தமிழின் சிறப்புகளை தங்கள் மூலம் அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஒரே சந்தேகம்KA,Ga மற்றும்PA BA விற்கு தமிழில் ஏன் ஒரே ஒரு எழுத்து மட்டுமே இருக்கிறது கா மற்றும் பா." பலரும் கேட்க நினைப்பது; அறியாததால், தமிழ் மொழியின் குறைபாடு என ஏனைய இந்தியமொழி பேசுபவரால் குற்றம் சொல்லப்படும்போது, விடையில்லாமல் பலரும் விழிக்கக் காணலாம். விடை: ஆங்கிலத்தில் KA, Ga என்னும் இரண்டு ககரங்கள்(சமஸ்கிருதத்தில் நான்கு ககரங்கள்- க-வர்க்கம் எனப்படும்), PA, BA என்னும் இரண்டு பகரங்கள் (சமஸ்கிருதத்தில் நான்கு பகரங்கள்- ப-வர்க்கம் எனப்படும்) இருப்பதுபோல், தமிழிலும் மூன்றிற்கும் மேற்பட்ட ககர, பகர ஒலிகள் உண்டு! ஆனால், மூன்றையும், ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு, ஒரே ஒலிக் குழுக்குறி (Phonems) தமிழில் அமைத்துள்ளனர் பண்டைய தமிழர்கள். தமிழ்மொழியின் எழுத்தையும், ஒலி அமைப்பையும் பின்பற்றிய வடமொழி இலக்கணத்தில், பாணினி இதை விரித்து, 'க, ச, ட, த, ப' என்னும் ஐந்திற்கும், ஒவ்வொன்றிற்கும் நான்கு ஒலி எழுத்துக்களாகக் குறித்து, க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்பவை அவற்றின் இன மெல்லின எழுத்துக்களுடன் சேர்த்து, 25 ஒலி எழுத்துக்களை உருவாக்கினார்கள்! தங்கம் - என்ற சொல்லை THAnGam என்றுதான் உச்சரிக்க முடியுமே தவிர, THAnKAm - என்று உச்சரிக்கவே இயலாது. ஏனென்றால், இச்சொல்லின் பிறப்பியல் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்விலக்கண விதிகளைத் தொல்காப்பியம் : பிறப்பியல் சூத்திரங்களை அறிந்து, படித்து, முறையாக,ஓர் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் ஒலி உச்சரிப்பில் தேர்ச்சிபெறலாம். [தொல்காப்பியம் - பிறப்பியல்: மொழிமரபு இங்கு தரப்பட்டுள்ளது. இன்னும், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவையும் கற்றுக் கொண்டால், மொழியை முறைப்படி பலுக்க(உச்சரிக்க) முடியும். உந்தி முதலா முந்து வளி தோன்றி - தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - பல்லும் இதழும் நாவும் மூக்கும் - அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் - உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி - எல்லா எழுத்தும் சொல்லும் காலை - பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - திறப்படத் தெரியும் காட்சியான. 1 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 - சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 - டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 - அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 - அணரி நுனி நா அண்ணம் ஒற்ற - றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட - ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 - நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற - ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் - லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 - பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 - அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை - கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 - மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் - சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் - தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி - ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து - சொல்லிய பள்ளி எழுதரு வளியின் - பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து - அகத்து எழு வளி இசை அரில் தப நாடி - அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 - அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 ] பள்ளியில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் போது, இவையெல்லாம் , முறையாகக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். தமிழ் பற்றில்லாதவர் ஆட்சியாளராய் இருப்பது, ஈராயிரம் ஆண்டுகளுக்கும்மேல் இன்னும் தொடர்கின்றது. சங்க காலத்தில், சராசரித் தமிழனுக்கு, அவரவர் வீட்டில், தந்தைமார்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட முறைப்படியான தமிழ் ஒலிப்புமுறைக் கல்வி, இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலை அடைந்த இந்திய நாட்டின் தமிழ் மாநிலத் தமிழ் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. யாரிடம் சொல்லி அழ! எண்ணாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழர்கள் Phonemes - தமிழ் ஒலிஎழுத்துக்களை உருவாக்கினார்கள். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் அவை பதியப்பட்டு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றியே, வேத, சம்ஸ்கிருத எழுத்துமுறைகள் Phonemes என்னும் ஒலியியல் முறைப்படி, ஆரியர்களால் அமைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் சமஸ்கிருதம் கற்றது 17–18ம் நூற்றாண்டுகளில். 19ம் நூற்றாண்டில், Phonetics - ஒலியியல் என்னும் புதிய துறையை, சமஸ்கிருத ஒலியியல் முறையைப் பின்பற்றி, 'க', 'ங' எழுத்துக்கள் தொண்டை ஒலிகள்(Guttural, கண்ட்யம்) 'ச', 'ஞ' எழுத்துக்கள் அண்ண ஒலிகள் (Palatal, மூர்த்தன்யம்) 'ட','ண' எழுத்துக்கள் நாவொலிகள் (Lingural, தாலவ்யம்) என்றும் வழங்கினர். இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி இலக்கணங்களில் இம்முறையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒலிப்பு முறைகளை உற்று ஆராய்ந்த ஒலியியல் ஆய்வாளர்கள், பாணினி வகுத்த ஒலியியல் முறை தவறானது என்பதைக் கண்டார்கள். உண்மையில், இம் மூன்று வகை ஒலிகளும், தொல்காப்பியத்தில் வகுத்ததுபோல, நாவின் முதல், இடை, கடை ஒலிகள் என்பதைக் கண்டுபிடித்தார்கள்! அதன் பிறகே, ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 என்னும் தொல்காப்பிய ஒலியியல் Phonetics சூத்திரம் எவ்வளவு நுட்பமான அறிவியல் பூர்வமானது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்தனர். பாணினியின் சம்ஸ்கிருத ஒலி இலக்கணம் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது எனபதையும், தொல்காப்பியத்தை சரிவர உணராத பாணினி, ஒலி இலக்கணத்தைத் தவறாகக் குறித்துவிட்டார் என்பதையும் கண்டார்கள் ஐரோப்பியர்கள். சீனர்கள் ஏன் தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது இப்போது இன்னும் தெளிவாக விளங்கும்! இக்கேள்வியைக் கேட்ட திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி! 21.1 ஆயிரம் பார்வைகள் · ஆதரவு வாக்காளர்களைக் காண்க · பகிர்ந்தவர்களைப் பாருங்கள்     Surendhar Nagarajan, Sara Subramaniam, Gnanaskaran Maniமற்றும் கூடுதல் 699 நபர்கள் இதை ஆதரித்து வாக்களித்தனர்   ஆதரவு வாக்கு· 702703   பகிர்க· 41     நன்றி https://ta.quora.com/