யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

உலக மசாலா

Recommended Posts

உலக மசாலா: காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் கானா

 

 
kaanajpg

பெரும்பாலான நாடுகளில் இறந்த மனிதர்களுக்கு ஓரிரு நாட்களில் இறுதிச் சடங்கு செய்து விடுவது வழக்கம். ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கானா நாட்டில் வாரக் கணக்கிலிருந்து வருடக் கணக்கு வரை இறந்த உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துக் கொள்கிறார்கள். யாராவது விரைவில் அடக்கம் செய்துவிட்டால், அது மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதுகிறார்கள். இது பழங்காலத்திலிருந்தே ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கம்தான்.

பல ஆப்பிரிக்க நாடுகள் இன்று இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொண்டன. ஆனால் கானாவில் இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறது. வாழும்போது குழந்தைகள், மனைவி அல்லது கணவன், பெற்றோர் மட்டுமே ஒரு குடும்பமாகக் கருதப்படுகிறது. ஆனால் இறந்துவிட்டால் குடும்பம் என்பது உற்றார் உறவினர்களையும் சேர்த்தே கருதப்படுகிறது. இறந்தவரின் தூரத்து உறவினர், பல ஆண்டுகள் தொடர்பிலேயே இல்லாவிட்டாலும்கூட, அவர் வரும்வரை உடலைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு, வசதிப்படி வந்து சேர்ந்தால்தான் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

 

கானாவைச் சேர்ந்த  பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான எலிசபெத் ஓஹென், "இங்கே இறந்த உடல்களை உடனடியாக அடக்கம் செய்யும் வழக்கம் இல்லை என்பது உண்மைதான். நாங்களும் இப்படி மாதக்கணக்கில் உடல்களை வைத்திருப்பது நல்லதல்ல என்று எவ்வளவோ விழிப்புணர்வு ஊட்டி வருகிறோம். ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரம் தேசிய ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. ஒரு கிராமத் தலைவர் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. அதனால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். வெளியுலகத்துக்கு இது அதிர்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால் கானாவில் இதை ஒரு விஷயமாகக் கருத மாட்டார்கள்.

கோழி, விமானம், ஷூ, பழம், மீன், சிங்கம் போன்ற உருவங்களில் சவப்பெட்டிகளைச் செய்கிறார்கள். உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டால் இறந்த உடலை, அழகாகச் செதுக்கப்பட்டுள்ள சவப்பெட்டிக்குள் வைத்துப் புதைத்துவிடுவார்கள். இந்தச் சடங்குகளுக்கு ஆகும் செலவுகளை உறவினர்கள் பகிர்ந்துகொள்வார்கள். ஒருவேளை குடும்பம் இறந்தவரை உடனே புதைத்துவிட்டால் அத்தனை செலவுகளையும் அந்தக் குடும்பம் மட்டுமே ஏற்க வேண்டியிருக்கும். அதனால் எவ்வளவு காலமானாலும் உறவினர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒருவருக்குத் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆனால் கூட இறந்த பிறகு அவருடைய இறுதிச் சடங்குகளையும் அதற்கான செலவுகளையும் அவரது பிறந்த வீட்டைச் சேர்ந்த உறவினர்கள்தான் செய்ய வேண்டும் என்று இங்கே நடைமுறையில் இருக்கிறது. என்னுடைய பாட்டி 90 வயதில் இறந்தார். நாங்கள் மூன்றே வாரங்களில் அடக்கம் செய்துவிட்டோம். ஆனால் அவரது கிராமத்தில் உள்ளவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை, அவமரியாதை செய்துவிட்டோம் என்றும் கருதுகிறார்கள்" என்கிறார்.   

காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் கானா.

 

http://tamil.thehindu.com/world/article24303798.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

27chskopic

 

 

 

ஜப்பானைச் சேர்ந்த 82 வயது மசாஃபூமி நாகசாகி, 29 ஆண்டுகளாக மனிதர்கள் வசிக்காத தீவில் வாழ்ந்து வந்தார். முதுமையின் காரணமாக அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். “நான் ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்தில் வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நகர வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டது. அதிலிருந்து தப்பி, சோட்டோபனாரி தீவுக்கு வந்து சேர்ந்தேன். மனிதர்கள் வசிக்காத தீவு அது. மீனவர்களே எப்போதாவதுதான் அந்தத் தீவில் இறங்குவார்கள். நான் வந்த ஒரே வருஷத்தில் பெரும் சூறாவளி வீசியது. அதில் என்னுடைய உடைகள் அத்தனையும் காணாமல் போய்விட்டன. அதிலிருந்து உடைகள் அணிவதை விட்டுவிட்டேன். கொசு, வண்டுகளின் கடியிலிருந்து தப்பிப்பதுதான் கடினம். பாம்புகள், சிறு விலங்குகள், பறவைகள் எல்லாம் நிறைய இருக்கின்றன. அவை ஒருபோதும் தேவையின்றி பிற உயிரினங்களைத் தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை என்னுடைய கூடாரத்துக்குள் விஷப் பாம்பு இருந்தது. என்னைக் கண்டதும் சீறியது. நான் ஓரமாக உட்கார்ந்துவிட்டேன். உடனே அது வேகமாக ஓடிவிட்டது. ஒருவர் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. அரிசி, எரிபொருள், குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு எப்போதாவது அருகில் உள்ள தீவுக்குச் செல்வேன். அங்கே என் குடும்பத்தினர் பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். மனிதர்களே இல்லாவிட்டாலும் அந்தத் தீவு எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

 

திடீர் மழை, புயல், சூறாவளி, வெயில் என இயற்கையின் சவாலைச் சமாளித்து உயிர் வாழ்வது அற்புதமான அனுபவம். கடற்கரை முழுவதும் கடல் ஆமைகள் வருவதையும் முட்டையிடுவதையும் குஞ்சு பொரிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தீவில் கடுமையான நோய்கள் வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இயற்கை நம்மைக் காப்பாற்றுகிறதே தவிர, நமக்கு நோய்களைப் பரப்புவதில்லை என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுகொண்டேன். இயற்கைச் சூழல் என்னை நிறையவே மாற்றிவிட்டது. சமீபகாலமாக மீன்களைப் பிடிப்பதில்லை, விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. அதனால் எனக்கு சக்தி குறைந்துவிட்டது என்பது உண்மைதான். நாகரிக நகர வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடிக்காத இரண்டு விஷயங்கள் பணமும் மதமும்தான். இவை இரண்டும் மக்களை ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் இருக்க விடுவதில்லை. உலகத்தையே அழித்துவிடக் கூடியவை. தீவில் இருந்து 60 கி.மீ. தொலைவில்தான் என்னுடைய குடும்பம் இருந்தது. ஆனால் ஒருநாள் கூட நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை. சொர்க்கம் போன்ற அந்தத் தீவிலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்று விரும்பினேன். யாருக்கும் தெரியாமல், யாரையும் துக்கப்பட வைக்காமல் தீவில் வாழும் சக உயிரினங்களைப்போல் என் உயிர் பிரிய வேண்டும். அடுத்த சூறாவளி வந்தால் நான் பிழைப்பது கடினம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என் விருப்பத்துக்கு மாறாக அரசாங்க அதிகாரிகள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை” என்கிறார் மசாஃபூமி நாகசாகி.

இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

http://tamil.thehindu.com/world/article24265158.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பூமிக்கு அடியில் ஒரு தேவாலயம்!

 

 
06chskopic
 
 

ஆர்மினியாவின் அரிஞ் கிராமத்தில் வசித்த 44 வயது லெவோன் அராகெல்யானிடம் அவரது மனைவி டோல்ஸ்யா, தோட்டத்தில் உருளைக் கிழங்குகளைப் பறித்து வரச் சொன்னார். மண்ணைத் தோண்டியவரால், தோண்டுவதை நிறுத்தவே முடியவில்லை. கடந்த 1985-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 23 ஆண்டுகள் நிலத்தைக் குடைந்து, பாதாளத்தில் ஒரு தேவாலயத்தையே உருவாக்கிவிட்டார்! தனி மனிதரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த இடத்தைப் பார்ப்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

“லெவோன் மண்ணைத் தொட்டதும் மந்திரம் போட்டதுபோல் இருந்ததாகச் சொன்னார். மண்ணைத் தோண்டத் தோண்ட, ஏதேதோ குரல்கள் கேட்டதாகவும் அவைதான் தன்னைத் தோண்டும்படிக் கட்டளையிட்டதாகவும் கூறினார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்று 23 வருடங்கள் நாள் தவறாமல் இந்தப் பணியைச் செய்து முடித்திருக்கிறார். முதலில் சில அடி ஆழம் தோண்டுவது சிரமமாக இருந்திருக்கிறது. எரிமலைக் கற்கள் வந்த பிறகு, வேலை எளிதாகிவிட்டது. நவீனக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், சுத்தியல், கடப்பாறை, மண்வெட்டி போன்ற கருவிகளை மட்டுமே வைத்து, அவர் ஒருவர் மட்டுமே இந்தப் பாதாள தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். 280 சதுர மீட்டரில், 20 மீட்டர் ஆழத்தில், 7 அறைகளுடன் இது அமைந்திருக்கிறது.

அனைத்து அறைகளின் சுவர்களும் ஓவியங்கள், சிற்பங்களால் செதுக்கப்பட்டிருக்கின்றன. மின் விளக்கு, காற்றோட்ட வசதி என்று சகலமும் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. தனி மனிதர் கைகளால் உருவாக்கிய இடம் என்று சொன்னால் எல்லோரும் ஆச்சரியப்படுகிறர்கள். தினமும் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவார். அப்போது கூட அந்த வேலையில்தான் மனம் செல்கிறது என்பார். இப்படி அர்ப்பணிப்புடன் செய்ததால்தான் இதை உருவாக்க முடிந்திருக்கிறது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட 450 டிரக் லோடு கற்களையும் மண்ணையும் பல்வேறு பணிகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார். இந்த மாபெரும் பணியைச் செய்த லெவோன், 2008-ம் ஆண்டு 67 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இந்த வேலைதான் அவர் உயிரைப் பறித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு கடுமையாக வேலை செய்யும் ஒருவர் என்னுடன் நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என்பதை உணர்ந்தே இருந்தேன். அவர் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதே நேரத்தில் தனி ஒரு மனிதர் உலகம் வியக்கும் அளவுக்கு ஒரு பணியைச் செய்துவிட்டுப் போனதில் நானும் எங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் லெவோனை நினைத்துப் பெருமைகொள்கிறோம். இந்த உழைப்பைப் புரிந்துகொண்டவர்களால்தான் பாதாள தேவாலயத்தை ரசிக்க முடியும். ஆர்வமாக வரும் சுற்றுலாப் பயணிகளை நானே அழைத்துச் சென்று, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்வேன். முதல் தளம் லெவோனுக்கானது. அவரது கருவிகள், உடைகள், டைரி, படங்கள், புத்தகங்கள், காலணிகள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறோம். கடைசி அறையில் சிறிய தேவாலயம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பாராட்டுவதைக் கேட்கும்போது லெவோன் பட்ட கஷ்டத்துக்குப் பலன் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்” என்கிறார் டோஸ்யா.

தனி மனிதரின் அபாரமான சாதனை!

http://tamil.thehindu.com/world/article24347389.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: ஓய்வில்லாப் போராளி!

 

 
08chskopic
 
 

அமெரிக்காவில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சுதந்திர தேவி சிலையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அன்றும் வந்திருந்தனர். அமெரிக்க அதிபரின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து இங்கே போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கோ நாட்டைச் சேர்ந்த 44 வயது தெரஸ் ஓகோவ்மவ் என்ற பெண், ‘ட்ரம்ப் அமெரிக்காவை நோயாக மாற்றுகிறார்’ என்ற வாசகத்தை அணிந்த டி சர்ட்டுடன் போராட்டத்தில் பங்கேற்றார். திடீரென்று 89 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை மீது எப்படியோ ஏறிவிட்டார். அவரைக் கீழே இறங்குமாறு காவல் துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். “சட்ட விரோதமாகக் குடியேறியதாகச் சொல்லி பிரித்து வைத்திருக்கும் அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோரிடம் சேர்த்தால்தான் இந்த இடத்தை விட்டு இறங்குவேன்” என்றார் தெரஸ். இறுதியில் மீட்புக் குழுவினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். “நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்தேன். உடல் பயிற்சியாளராக வேலை செய்கிறேன். ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து எனக்கு ஓய்வே இல்லை. எங்கெல்லாம் அவரை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் நானும் கலந்து கொள்வேன். ஒவ்வொரு வாரமும் போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குக் கூடச் சென்று வந்திருக்கிறேன். அரசாங்கம் தவறு செய்யும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகப் பெரிய குற்றம். அதனால்தான் போராடிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் தெரஸ்.

 

ஓய்வில்லாப் போராளி!

 

 

ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை போட்டி, ஒரு குடும்பத்தைப் பிரித்துவிட்டது! 40 வயது ஆர்சனும் 37 வயது லுட்மிளாவும் தீவிர கால்பந்து ரசிகர்கள். 2002-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பிறகு அடிக்கடி போட்டிகளில் பேசி, பழகி, நட்பாகி, காதலர்களாக மாறி, திருமணமும் செய்துகொண்டனர். 14 ஆண்டுகளாக நிம்மதியான, அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்த வாழ்க்கையை லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர். “எப்போதும் நானும் லுட்மிளாவும் மெஸ்ஸி, ரொனால்டோ குறித்து விளையாட்டாகக் கிண்டல் செய்துகொள்வோம். இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா தோல்வியடைந்த அன்று, மெஸ்ஸி குறித்து மிக மோசமாகப் பேச ஆரம்பித்தார் லுட்மிளா. ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் கோலை நான் கொண்டாடிக் கொண்டிருந்தேன். மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் என்னை வெறுப்பேற்றுவதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கினார். விளையாட்டு விபரீதமாவதை உணர்ந்து, அவரை எச்சரித்தேன். ஆனால் அதையும் கிண்டல் செய்துவிட்டார். பொறுமை இழந்த நான் ரொனால்டோ குறித்து கிண்டல் செய்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சண்டை பெரிதானது. அவரின் நல்ல குணங்களை நினைத்துப் பொறுமையுடன் இருந்தேன். ஆனால் தூங்கி எழுந்தபோது நடந்த சம்பவங்கள் கோபத்தை வரவழைத்துவிட்டன. ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டேன்” என்கிறார் ஆர்சன்.

விளையாட்டு வினையாகிவிட்டதே!

http://tamil.thehindu.com/world/article24361974.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: வேட்டைக்காரர்களை வேட்டையாடிய சிங்கங்கள்!

 

 
07chskopic
 
 
 

தென்னாப்பிரிக்காவில் உள்ள சிபுயா கேம் ரிசர்வ் பகுதியில் சட்ட விரோதமான காண்டாமிருக வேட்டைக்காரர்களை, வேட்டையாடியிருக்கின்றன சிங்கங்கள். காண்டாமிருகங்களின் விலை மதிப்பு மிக்கக் கொம்புகளுக்காக, அவற்றை வேட்டையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் சட்ட விரோத வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தடையையும் மீறி வேட்டை நடந்துகொண்டிருக்கிறது. “இந்தப் பகுதியில் வேட்டையைத் தடுப்பதற்குப் பல விஷயங்களை மேற்கொண்டிருக்கிறோம். எங்களுக்கே தெரியாமல் காண்டாமிருக வேட்டைக்காரர்கள் இங்கே நுழைந்திருக்கிறார்கள். எங்கள் ஊழியர் ஒருவர்தான் மனிதத் தலைகள் இருப்பதாகச் சொன்னார். மூன்று தலைகளும் உடலின் சில பாகங்களும் 3 ஜோடி ஷூக்களும் இருந்ததைப் பார்த்தோம். சற்று தூரத்தில் வேட்டைக்காரர்கள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் கத்திகளும் இருந்ததைக் கண்டறிந்தோம். எங்களை விட பசியோடு அலைந்த சிங்கங்கள்தான், காண்டாமிருகங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. மேலும் சிலர் கூட வந்திருக்கலாம். அடர்ந்த கோரைப்புற்கள் வளர்ந்திருக்கும் காடு என்பதால் எங்களால் உள்ளே சென்று தேட முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் அவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர்களின் பைகளை ஆராய்ந்தபோது காண்டாமிருகங்களுக்காக நீண்ட நாட்கள் இங்கே இருந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இந்தச் சம்பவத்தின் மூலம் எல்லா நேரத்திலும் வேட்டைக்காரர்களால் வெற்றி பெற முடியாது என்பது மற்ற வேட்டைக்காரர்களுக்குப் புரிய வந்திருக்கிறது. உயிரிழந்தவர்கள் யார், எங்கிருந்து வந்திருந்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் தெரியவில்லை” என்கிறார் இந்தப் பூங்காவின் உரிமையாளர் நைக் ஃபாக்ஸ்.

 

வேட்டைக்காரர்களை வேட்டையாடிய சிங்கங்கள்!

போலந்து நாட்டைச் சேர்ந்த ‘இகாலஜிக்ஸனா’ என்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு 1,83,000 ரூபாய் அலைபேசி கட்டணம் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெண் கொக்கின் உடலில் சிம் கார்டு, ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, பறவைகளின் இடப்பெயற்சி, செல்லும் பாதை, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெண் கொக்கு கருவிகளுடன் பறந்தது. ஓராண்டில் சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அது பறந்து செல்வதைக் கண்காணிக்க வேண்டும் என்பது திட்டம். ஆப்பிரிக்காவிலிருந்து போலந்து திரும்பும் வழியில் சூடானில் கொக்கு தங்கியிருந்தது ஜிபிஎஸ் மூலம் தெரியவந்தது. இரண்டு மாதங்கள் 25 கி.மீ. தூரத்திலேயே கொக்கு பறந்து கொண்டிருப்பதாகக் காட்டியது. திடீரென்று தொடர்பு கிடைக்காமல் போனது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காரணம் புரியாமல் தவித்தனர். தற்போது கொக்கு உடலில் வைக்கப்பட்டிருந்த சிம் கார்டுக்கு 1,83,000 ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்லி பில் வந்து சேர்ந்திருக்கிறது. பிறகுதான் சூடானில் பறவையின் உடலில் இருந்து சிம் கார்டை யாரோ திருடி, பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இப்படி எல்லாம் மனிதர்கள் இருந்தால், எப்படி ஆராய்ச்சி செய்வது என்று மிகவும் வருந்தி, பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருக்கிறது இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு.

அதானே… இப்படிச் செய்தால் என்ன செய்வது?

http://tamil.thehindu.com/world/article24357552.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: மனித நேயப் பயணம்

 

 
israeljpg

ஸ்வீடனைச் சேர்ந்த 25 வயது இசைக் கலைஞர் பெஞ்சமின் லாட்ரா. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடனிலிருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குப் பயணத்தை ஆரம்பித்தார். மனித நேயத்தை வளர்ப்பதும் அத்துமீறி நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதும் இந்தப் பயணத்

தின் நோக்கம். ஒரு சிறிய தள்ளுவண்டியில் தன்னுடைய பொருட்களை வைத்துக் கொண்டு, கால்நடையாகவே கிளம்பினார். புலம் பெயரும் மக்கள் பயணம் செய்யும் பாதைகளிலேயே காடு, மலை, சகதி, வயல், சாலை என்று நடந்து, 4,800 கி.மீ. தூரத்தைக் கடந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியை அடைந்தார். ஆனால் எல்லையில் இருந்த இஸ்ரேல் காவல்படையினர் பெஞ்சமினைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

 

“கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்துதான் விழிப்புணர்வு ஊட்டி வந்திருக்கிறேன். என்னை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நான் எதிர்பார்த்தே இருந்தேன். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை நடந்தேன். 13 நாடுகளில் என்னுடைய பாதங்களைப் பதித்திருக்கிறேன். விடுதிகளில் வசிக்கவில்லை. மக்கள் வசிக்கும் இடங்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் தங்கிக்கொண்டேன். கடுமையான குளிர், மழை, வெயில் போன்றவற்றைச் சமாளித்தேன். வழியெல்லாம் புலம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தேன். அவர்களின் துயரத்தை நேரடியாகக் கண்டேன். எதுவுமே தங்களிடம் இல்லாவிட்டாலும் கூட முன்பின் அறியாத ஒருவனுக்கு அன்பையும் உணவையும் பரிமாறக்கூடிய நல்ல இதயங்களைச் சந்தித்தேன். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இஸ்ரேலின் அநியாயமான ஆக்கிரமிப்புக் குறித்து எடுத்துச் சொன்னேன். பலரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டனர். நான் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன எல்லைக்கு வந்ததும், என்னை அறிமுகம் செய்துகொண்டேன். மிகவும் சந்தோஷமாக வரவேற்று, உட்கார வைத்தனர். தொலைபேசியில் யாரிடமோ என்னைப் பற்றி விசாரித்தனர். உடனே அவர்களது

நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. மிகவும் மோசமாகவும் துன்புறுத்தும் விதமாகவும் நடந்துகொண்டனர். யாரோ நான் பாலஸ்தீனக் கொடியைப் பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்ததைத் தவறாக இவர்களுக்குச் சொல்லிவிட்டனர். இஸ்ரேல் பல ஆண்டுகளாகப் போராட்டக்காரர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் உள்ளே

அனுமதிப்பது இல்லை. நான் ஆஸ்திரியாவில் பாலஸ்தீனக் கொடியுடன் நுழைந்தபோதே என்னைப் பிடித்து, இஸ்திரேலிய தூதரகம் முன்நிறுத்திவிட்டனர். அங்கிருந்துதான் இவர்களுக்குத் தகவல் வந்திருக்க வேண்டும். எதை எதிர்த்து இந்தப் பயணத்தை மேற்கொண்டேனோ, அதன் காரணமாகவே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறேன்” என்கிற பெஞ்சமினை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மத் அப்பாஸ், பெஞ்சமினுக்குக் குடியுரிமையும் ‘மெடல் ஆஃப் மெரிட், என்ற பட்டத்தையும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். ‘‘பாலஸ்தீனத்தை ஆதரித்து இந்த நீண்ட, கடினமான பயணத்தை மேற்கொண்டதன் மூலம் பெஞ்சமின், மனித மனசாட்சியைப் பிரதிபலித்திருக்கிறார்” என்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஹனான் அஸ்ராவி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் அனுமதித்திருந்தால்தான் ஆச்சரியம்!

http://tamil.thehindu.com/world/article24377316.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: தானாகப் பொரிந்த குஞ்சுகள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
19chkansamu
TAMILTHTemplateLibrarynation21clIMG2
19chkansamu

ஜப்பானில் உள்ள ‘ஹோமி ஹிரோய் சாமுராய்’ குழு, தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே குப்பைகளையும் சேகரிக்கிறார்கள். பழங்கால சாமுராய் வீரர்களைப் போல் உடை, தொப்பி, காலணிகளை அணிந்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இன்றைய இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய நடனங்கள் என்று தங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குவதில் வல்லவர்கள். சாமுராய் கலைஞர்களாக இருந்தவர்கள், குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு, ஜப்பான் முழுவதும் பிரபலமாகிவிட்டனர்.

“நாங்கள் முதலில் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே தெருக்களில் நடத்தி வந்தோம். இப்போது சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். ஜப்பானிய நகரங்களில் குப்பைகள் அதிகம். அதிலும் பண்டிகைக் காலங்களில் குப்பை பல மடங்கு அதிகரித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பண்டிகை காலத்தில்தான் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் முடிவை எடுத்தோம். சாமுராய் ஆடைகள், வாளுடன் குப்பை சேகரிக்கும் பெட்டி, குப்பை எடுக்கும் கரண்டி போன்றவற்றையும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துவோம்.

 

நிகழ்ச்சியின் நடுவிலேயே குப்பைகளைச் சேகரித்து விடுவோம். இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகக் கடமை இருப்பதாக நினைக்கிறோம். எங்கள் குழுவின் முக்கிய முழக்கம் மனிதர்களை நேசியுங்கள் என்பதுதான். குப்பை அகற்றுவது மகத்தான பணி என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். பல நகரங்களிலும் எங்களின் குழுக்கள் இயங்கி வருகின்றன” என்கிறார் ஜிடாய்குமி.

கலையுடன் சமூகக் கடமையும் சேரும்போது உன்னதமடைகிறது!

ஜார்ஜியா நாட்டின் மார்மெயுலி என்ற சிறிய நகரத்தின் குப்பைக் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வெளிவருவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். “நான் குப்பைக் கிடங்கு வழியே வரும்போது, காகிதங்கள் பறந்து வருவதுபோல் தோன்றியது. அருகில் சென்று பார்த்தபோது இளம் மஞ்சள் வண்ண கோழிக் குஞ்சுகள் கத்திக்கொண்டு தங்கள் தாயைத் தேடி ஓடிக் கொண்டிருந்தன.

பிறகுதான் தெரிந்தது, நகரில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணை, கெட்டுப்போன முட்டைகளை இங்கே வந்து கொட்டியிருக்கிறது. அவர்கள் கெட்டதாக நினைத்த முட்டைகள் எல்லாம் வெயிலில் தானாகவே பொரிந்து, முட்டை ஓடுகளை உடைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் வெளிவந்துவிட்டன. உடனே இந்த அரிய காட்சியை வீடியோ எடுத்தேன். உள்ளூர் மீடியாக்களுக்கும் தகவல் கொடுத்தேன். இப்போது இந்தச் செய்தி ஜார்ஜியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிவிட்டது. உள்ளூர் மேயர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

பண்ணை உரிமையாளர், கெட்டுப்போன முட்டைகள் என்று தாங்கள் தவறாகக் கணித்துவிட்டதால் இந்தச் சம்பவம் நடைபெற்றுவிட்டது. கோழியில் இருந்து கிடைக்கும் வெப்பநிலை உருவானதால் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்துவிட்டன என்று தெரிவித்திருக்கிறார். பொதுமக்கள் இந்தக் குஞ்சுகளைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்” என்கிறார் சாஹித் பயராமோவ்.

தானாகப் பொரிந்த குஞ்சுகள்!

http://tamil.thehindu.com/world/article24198651.ece

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: அசாதாரண மனிதர்!

 

 
photoJPG

இயற்கைக் காட்சிகள், எளிய மனிதர்கள், நவீன மாடல்களின் ஒளிப்படங் களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகிறார்கள். எடுக்கப் பட்ட விதமும் அபாரமான கற்பனையும் இந்த ஒளிப் படங்களை எடுத்தவர் யார் என்று கேட்க வைத்துவிடுகிறது. இந்தோனேஷி யாவைச் சேர்ந்த 25 வயது அச்மத் ஜுல்கர்னைனைப் பார்ப்பவர்கள் ஒரு நொடி அதிர்ச்சியிலிருந்து மீள்வார்கள். பிறக்கும்போதே இவருக்குக் கால்களும் முழங்கைக்குக் கீழ் கைகளும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் பிறரின் உதவியை எதிர்பார்க்கும் நிலை. குழந்தையாக இருந்தபோது பெற்றோருக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர ஆரம்பித்தபோது சிரமத்தைப் புரிந்துகொண்டு, தானே தன்னுடைய வேலைகளைச் செய்யப் பழகிக்கொண்டார். இடுப்புக்குக் கீழே அரையடி கால்கள் மூலம் நடக்கவும் முழங்கைகளைப் பயன்படுத்தி பொருட்களை எடுக்கவும் ஆரம்பித்தார். சவாலான வாழ்க்கையாக இருந்தாலும் படிப்பில் கவனத்தைச் செலுத்தினார். ஒருநாள் இண்டர்நெட் கபேயில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தபோது, கேமரா குறித்துப் பேச்சு வந்தது. கேமரா அவரை இருகரம் நீட்டி அழைத்தது. அவரது கிராமத்துக்கு அடையாள அட்டைக்காகப் படம் எடுக்க அரசாங்க அலுவலர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தபோதுதான் முதல் முறை கேமராவைத் தொட்டார். அந்த நொடியிலிருந்து கேமரா மீதான ஆர்வம் அதிகரித்தது. கடன் பெற்று ஒரு கேமரா வாங்கினார்.

முதலில் கேமராவைக் கையாள்வதற்குப் பயிற்சி எடுத்தார். முழங்கைகளால் எடுத்து, ஒரு கை மீது கேமராவை வைத்து, வாயால் பட்டன்களை அழுத்திப் படங்களைப் பிடித்தார். பிறகு மற்றவர்களை விடத் தன்னுடைய படங்களை எப்படி வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும் என்று யோசித்தார். கற்பனைகளை விரிவாக்கினார். ஒவ்வொன்றையும் செயல்படுத்திப் பார்த்தார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பமும் ஒளிப்படத்தை மெருகூட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், எடிட்டிங், ரீடச் வேலைகளையும் கற்றுக்கொண்டார். தனக்கான ஒரு வாகனத்தை, நண்பர்களின் உதவியோடு உருவாக்கிக்கொண்டார். பிறரின் உதவியின்றி, இந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு எங்கும் சென்று வந்துவிடுகிறார்.

 

“கேமராதான் என்னைத் துயரத்தில் இருந்து மீட்டது. தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாற்றியது. கற்பனை வளத்தைப் பெருக்கியது. மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்தது. முதல்முறை என்னைப் பார்ப்பவர்களுக்கு என் திறமை மீது நம்பிக்கை வராது. அதனால் என்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்த விரும்பியதில்லை. என் படங்களைக் காட்டிதான், ஒரு ப்ராஜக்ட்டை எடுத்துக் கொள்வேன். என்னுடைய படைப்பு பேசப்படும்பவரை கொஞ்சம் போராட்டம் இருந்தது. அதற்குப் பிறகு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது ஒருவரும் என் உருவத்தைக் கண்டு என் திறமையைக் குறைவாக மதிப்பிடுவதில்லை. நான் மாற்றுத்திறனாளிதான். ஆனால் குறைபாடு கொண்டவன் அல்ல என்பதை அவர்களே எனக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். என்னை முன்னேற்றிக்கொள்வதற்கோ, என் கற்பனைகளுக்கோ நான் வரையறை வைத்துக்கொள்வதில்லை” என்கிறார் அச்மத். இன்று புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞராகவும் ஒளிப்படக் கலையைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுவருகிறார்.

அசாதாரண மனிதர்!

http://tamil.thehindu.com/world/article24385593.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: மிகப்பெரிய குடும்பம்

 

 
familyjpg

உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் உக்ரைன் நாட்டில் இருக்கிறது. டோப்ரஸ்லாவ் கிராமத்தில் வசிக்கும் 87 வயது பாவெல் செமன்யுக் குடும்பம்தான் இந்தப் பெருமைக்குரியது. இவருக்கு 13 குழந்தைகள். 127 பேரன், பேத்திகள். 203 கொள்ளுப் பேரன், பேத்திகள். 3 எள்ளுப் பேரன், பேத்திகள் என மொத்தம் 346 பேர் இந்தக் குடும்பத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ”எங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகள்வரை பெயர்களை நினைவில் வைத்திருக்கிறேன். மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. நாங்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம்.

எங்கள் குடும்பம் பெருகப் பெருக, இந்தக் கிராமத்திலேயே வீடுகளைக் கட்டி விடுவோம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் ஒன்று கூடிவிடுவோம். பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுகள் செய்ய வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட ஆண்டு முழுவதுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்! எங்கள் குடும்பத்திலிருந்து மட்டும் 30 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்

 

கள். இவர்களுக்கே ஒரு பேருந்து தேவைப்படுகிறது. சமீபத்தில் தான் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது கின்னஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறோம்” என்கிறார் பாவெல் செமன்யுக். தற்போது 192 பேர் அடங்கிய மிகப் பெரிய இந்தியக் குடும்பம், உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை வைத்திருக்கிறது. நிச்சயம் பாவெல் இதை முறியடித்துவிடுவார்.

ஒரு கிராமமே ஒரே குடும்பமாக இருக்கிறதே!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரையன் லிம், மனைவி யூன்கியங் சோ மற்றும் குழந்தைகளுடன் 2012-ம் ஆண்டு காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். சோ கார் ஓட்டிக்கொண்டு வரும்போது திடீரென்று பேச்சு பிரையனின் பெற்றோர் பற்றித் திரும்பியது. மிகவும் மோசமாகப் பேசினார் சோ. பேசுவதை நிறுத்தும்படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் பிரையன். வாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் சோ. உடனே காரை நிறுத்தும்படிக் கேட்டார். நிறுத்தாததால், தானே பிரேக்கை அழுத்தினார். அதைத் தடுத்தார் சோ. கோபம் அதிகமான பிரையன் ஓடும் காரிலிருந்து கதவைத் திறந்துகொண்டு குதித்துவிட்டார். இதில் அவரது உடல் மோசமாகப் பாதிக்கப்பட்டது. உடல் தேறியதும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார் பிரையன். “கணவன், மனைவிக்குள் சண்டையும் சச்சரவும் சகஜம். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அல்லது வீட்டுக்குச் சென்று விவாதத்தைத் தொடர்ந்திருக்கலாம். பின் சீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் குதித்த பிரையன் மீதுதான் குற்றம்” என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மீண்டும் வேறு நீதிமன்றத்துக்குச் சென்றார் பிரையன். “பெற்றோரைப் பற்றி இழிவாகப் பேசினால் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாது. பேச்சை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார். காரை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார். எதையும் கண்டுகொள்ளாததால்தான் அவர் கோபத்தில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதனால் உடலாலும் மனதாலும் பிரையன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோதான் குற்றவாளி” என்று தீர்ப்பு கூறினார் அந்த நீதிபதி. வழக்கு மீண்டும் மேல் முறையீடுக்குச் செல்ல இருக்கிறது.

இருவரும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கலாம்…

http://tamil.thehindu.com/world/article24396354.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: வரலாறு முக்கியமென்று தெரியாதா?

 

 
29chskopic
 
 

ஸ்பெயினைச் சேர்ந்த தேவாலயம் ஒன்றில், 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களை மராமத்துச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியச் சின்னங்களைப் பராமரிக்கும் நிபுணர்களிடம் அந்தப் பொறுப்பை வழங்காமல், கைவினை ஆசிரியரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்தச் சிற்பங்களுக்கு பெயிண்ட் மூலம் வண்ணம் அடித்து, உடைந்த தலைக்கவசத்தைப் புதிதாக உருவாக்கி, குதிரையையும் சரி செய்து வைத்துவிட்டார். பழுதடைந்திருந்தாலும் அந்தச் சிற்பங்களில் அழகும் பாரம்பரியமும் நிரம்பியிருந்தது. ஆனால் மராமத்துக்குப் பிறகு கார்ட்டூன் கதாபாத்திரங்கள்போல் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கொதித்தெழுந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வைரலாகிவிட்டன. ‘‘தூய ஜார்ஜ் சிலை சேதமடைந்திருப்பதால், அதை மராமத்துச் செய்து பாதுகாக்க முடிவெடுத்தோம். ஆனால் தேவாலயம் வரலாற்று முக்கியத்துவம் அறியாத ஒரு ஆசிரியரிடம் இந்தப் பணியைக் கொடுத்து, பாழாக்கிவிட்டது. பெயிண்ட் அடித்து கேலிக்கூத்தாக்கி விட்டனர்” என்கிறார் நகர மேயர்.

 

வரலாறு முக்கியமென்று தெரியாதா?

சீனாவைச் சேர்ந்த 31 வயது நியு ஸியாங்ஃபெங், திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் தேடி 8 ஆண்டுகளாக அலைகிறார். இதுவரை 80 ஆயிரம் பெண்களிடம் திருமணக் கோரிக்கையை வைத்திருக்கிறார். ஆனால் ஒருவர் கூட இவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை! “8 ஆண்டுகளுக்கு முன்பு பெண் தேட ஆரம்பித்தேன். உறவினர்களிடம் பெண் கேட்டேன், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் முயற்சி செய்தேன். பிறகு பத்திரிகைகள், இணையதளங்களில் விளம்பரங்களைப் பார்த்து முயற்சி செய்தேன். அதிலும் அமையாததால், ஒரு அட்டையில் எழுதி கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன்.பேருந்து, ரயில் பயணங்களில், கடைகளில், உணவகங்களில், பூங்காக்களில் எல்லாம் பெண்களைப் பார்த்தவுடன் அட்டையைத் தூக்கிக் காட்டுவேன். சிலர் சிரித்துக்கொண்டே செல்வார்கள். சிலர் முறைத்துக்கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் என்னிடம் பேசுவார்கள். ஒரு சில சந்திப்புகளில் விலகிச் சென்றுவிடுவார்கள்.

இந்தத் தேடல் குறித்து 2013-ம் ஆண்டிலேயே தேசிய அளவில் செய்திகள் வெளிவந்துவிட்டன. 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். கணவனை இழந்த, விவாகரத்து ஆன பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன். அவர்களும் நல்ல சம்பளமும் சொந்த வீடும் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஓரளவு வருமானம் இருந்தாலும் சொந்த வீடு இல்லை. அதனால் பலரும் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இன்னும் சிலர் இன்றைய இளைஞர்கள்போல் நான் மென்மையாக, அழகாகக் காதலை வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள். 80 ஆயிரம் பெண்களால் நிராகரிக்கப்பட்டவன் என்பதை இந்த உலகம் நம்ப மறுக்கிறது” என்கிறார் நியு ஸியாங்ஃபெங். 80 ஆயிரம் பேரைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை, அவர்களில் இருந்து ஒரு பெண் கூட கிடைக்கவில்லை என்பது நம்ப முடியாதது. இவர் விளம்பரத்துக்காக இதைச் செய்கிறார் என்கிறார்கள்.

விளம்பரத்துக்காக இப்படிச் செய்யலாமா?

http://tamil.thehindu.com/world/article24286723.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: செவ்வாய்க்கு செல்லும் முதல் பெண்!

marsjpg

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது ஆலிஸா கார்சன், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் முதல் மனிதராகத் தேர்வாகியிருக்கிறார்! 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை நாசா ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஆலிஸாவின் ஆர்வத்தைக் கண்டவர்கள், 33 வயதில்தான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லப் போகிறார் என்பதால் இவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு ‘ப்ளூபெர்ரி’ என்றபெயரை வைத்து, பயிற்சியும் அளித்திருக்கிறார்கள். அத்தனை பயிற்சிகளையும் முடித்து, செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றிருக்கிறார் இவர். 2033-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறை மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள்.

“3 வயதிலே தொலைக்காட்சியில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் கார்ட்டூன் தொடர்களைப் பார்த்திருக்கிறேன். நான் செவ்வாய் கிரகத்துக்குப் போக வேண்டும் என்று அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் வளர வளர ஆசிரியராக வேண்டும், அமெரிக்க அதிபராக வேண்டும் என்றெல்லாம் லட்சியம் மாறிக்

 

கொண்டே இருந்தது. இறுதியில் என் ஆசை செவ்வாய் கிரகத்திலேயே நிலைபெற்றுவிட்டது. 7 வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து அலபாமா விண்வெளி பயிற்சி முகாமுக்குச் சென்றேன். 12 வயதில் அலபாமா, கனடா, துருக்கியில் நடைபெற்ற நாசாவின் 3 பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றிருக்கிறேன். இதன்மூலம் 3 பயிற்சிகளையும் முடித்த முதல் மனிதர் என்ற சிறப்பைப் பெற்றேன். விண்வெளி தொடர்பான நிகழ்ச்சிகள், முகாம்கள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதனால் எனக்கு செவ்வாய்க்குச் செல்லும்பயிற்சி மற்றவர்களை விட எளிதாக இருந்தது. நான் முதல் ஆளாகபாஸ்போர்ட்டைப் பெற்றுவிட்டாலும் 18 வயதுவரை நாசாவின் அதிகாரப்பூர்வமான விண்வெளி வீரராக அங்கீகரிக்கப்பட மாட்டேன். இப்போது ப்ளூபெர்ரி என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை ஆய்வு செய்வதுதான் என்னுடைய பணி. செவ்வாய்க்குச் சென்றால் மீண்டும் திரும்பி வரஇயலாது, திருமணம் செய்துகொள்ள முடியாது, குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்பதை எல்லாம் அறிந்தே செல்கிறேன்.

செவ்வாய் கிரகம் செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதுவரை மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விளக்க உரைகள் நிகழ்த்திக் கொண்டிருப்பேன்” என்கிறார் ஆலிஸா.

“சின்ன வயது விருப்பம் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. ஆனால் ஆலிஸாவுக்கு நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிபுத்திசாலி, கடினமான உழைப்பாளி. எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார். தைரியம் அதிகம். ஆங்கிலம் தவிர ஸ்பானியம், பிரெஞ்சு, துருக்கி, சீனம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். அதனால்தான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன். செவ்வாய் கிரகத்துக்குச் சென்றால், மீண்டும் அவரைப் பார்க்க முடியாது என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால் என்னுடைய பாசம் அவருடைய லட்சியத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எங்களுடன் இருக்கப் போகும் இந்த 15 ஆண்டுகளை நாங்கள் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம்” என்கிறார் ஆலிஸாவின் அப்பா பெர்ட் கார்சன்.

ஆலிஸாவுக்கு செவ்வாய் தோஷம் இல்லை!

http://tamil.thehindu.com/world/article24406901.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: திரைப்படத்தை விஞ்சிய காதல்!

 

 
lovejpg

உக்ரைன் நாட்டில் தோண்டப்பட்ட ஒரு கல்லறையில், ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்த எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. ஆச்சரியமடைந்த ஆய்வாளர்கள், இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்தனர். “இவர்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கணவன், மனைவியாக இருக்கவேண்டும். Vysotskaya, Wysocko என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கு என்று தனித்தனி வரையறைகள் அப்போது இருந்திருக்கின்றன. இந்த எலும்புக்கூடுகள் இருந்த கோலத்தைப் பார்க்கும்போது, மனைவி இறந்த பிறகு இருவரையும் சேர்த்துப் புதைத்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

இறந்த கணவனை விட்டுப் பிரிய மனம் இல்லாததாலும் அடுத்த பிறவியில் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்திலும் இந்தப் பெண் கணவனுடன் சேர்ந்து உயிர் துறக்க முடிவு செய்திருக்க வேண்டும். வலி இல்லாமல் உயிர் போகக்கூடிய விஷத்தை அருந்தி, கணவன் உடலுக்கு அருகில் படுத்து, அவர் தலைக்கு அடியில் வலது கையை வைத்து, முகத்தைத் தன் முகத்தோடு உரசிக்கொண்டு, கால்களைக் கணவன் மீது போட்டு, இடது கையை அவரது மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்திருக்கிறார். இந்தப் பெண்ணின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தச் செயலை அந்தப் பெண்ணே விரும்பிச் செய்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். கட்டாயத்தின்பேரில் இப்படி ஒரு நெருக்கத்தைக் கொண்டுவர முடியாது” என்கிறார் உக்ரைன் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்.

 

திரைப்படத்தை விஞ்சிய காதல்!

துருக்கியின் இஸ்தான்புலில் மெவ்ஜூ உணவகத்தில் ஒரு பெண் சிங்கத்தைக் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்து, காட்சிக்கு வைத்திருக்கின்றனர். உணவகத்தின் மத்தியில் ஒரு சிங்கம் சென்றுவரக் கூடிய அளவுக்கான இடத்தில் இரண்டு புறமும் கண்ணாடியாலும் மேற்பகுதி கம்பிகளாலும் மூடப்பட்டிருக்கிறது. பெண் சிங்கம் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கிறது. குழந்தைகள் சிங்கத்துக்கு அருகில் சென்று ஓடினால் அதுவும் கூடவே ஓடுகிறது. கூண்டை விட்டு வெளியே வருவதற்குப் பெரும் முயற்சி செய்கிறது. சிங்கத்தின் நடவடிக்கைகளை ரசித்தபடியே மக்கள் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

இதே உணவகத்தில் பஞ்சவர்ணக்கிளிகள், அரிய பறவைகள், முதலைகள், குதிரைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்து,ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டார். விலங்குகளைத் துன்புறுத்துவதாக உணவகத்தின் உரிமையாளருக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால் சட்டப்படி எல்லா அனுமதியையும் பெற்றே இந்த விலங்குகள் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்கிறார் இதன் உரிமையாளர் சென்ஸிக். விஷயம் பெரிதாகி அரசாங்கம்வரை சென்றுவிட்டது. இப்போது விசாரணை ஆரம்பித்திருக்கிறது. முதல்கட்டமாக சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டை 3 மாதங்களுக்குள் எடுத்து விடும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர வேறு வழியா இல்லை?

http://tamil.thehindu.com/world/article24417531.ece

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: ட்ரம்புக்கு எதிராக திரண்ட லண்டன் மக்கள்

 

 

 
Baby%20trumpjpg

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், லண்டனுக்கு வருகை தந்ததை ஒட்டி, அவருக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் குவிந்தனர். சுமார் 2.5 லட்சம் பேர் மத்திய லண்டனில் குழுமி, கோஷங்களை எழுப்பினர். ட்ரம்ப் உருவ ராட்சத பொம்மையைப் பறக்க விட்டும் அவரைப்போல் வேஷம் போட்டும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பின், உணர்வுப்பூர்வமாக உரை நிகழ்த்தினார். இதுவரை எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்ற எதிர்ப்பு லண்டனில் நிகழ்ந்ததில்லை. இங்கிலாந்தும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு

நாடுகள். ஆனால் டொனால்டு டிரம்ப் மோசமான கொள்கைகளைக் கொண்டவராக இருக்கிறார். புலம்பெயர்ந்து வரும் மக்களை அவர் நடத்தும் விதமும் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரித்த விஷயமும் மக்களை மிகவும் கோபமடைய வைத்துவிட்டன. அகதிகளைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் அவருடைய வெறுப்புக் கருத்துகள், இன துவேஷம் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த எதிர்ப்புப் பேரணியில் முக்கியப் பங்கு வகித்தன. இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, டொனால்டு ட்ரம்ப் உட்பட பலரும் எதிர்ப்பை எதிர்பார்த்தனர், ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

 

அங்கே போராடும் சுதந்திரமாவது இருக்கிறது…

புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மிராகிள் மில்லி என்ற 6 வயது நாய், உலகிலேயே அதிக முறை க்ளோன் செய்யப்பட்ட நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த நாயிடமிருந்து 49 க்ளோன் நாய்களை உருவாக்கியிருக்கின்றனர். சியோலில் உள்ள

சூவாம் பயோடெக் ஆராய்ச்சி மையத்தில், 2006-ம் ஆண்டு முதல் க்ளோன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மிராகிள் மில்லியின் உரிமையாளர், மில்லியைப் போன்று க்ளோன் செய்து தரும்படிக் கேட்டார். மில்லி சாதாரண நாய் அல்ல.

உலகின் மிகச் சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை 2012-ம் ஆண்டு பெற்றிருக்கிறது. இந்த நாய் ஏன் சிறியதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் ஆர்வமாக இருக்கிறார்

கள். அதனால் க்ளோன் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதுவரை 49 க்ளோன் செய்யப்பட்ட நாய்கள் வந்துவிட்டன. 1996-ம் ஆண்டு டோலி ஆடு க்ளோன் செய்யப்பட்ட முறையிலேயே இப்போதும் க்ளோன் உருவாக்கத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தவணையாக 12 நாய்கள் க்ளோன் செய்யப்பட்டு வெளிவந்தன.

இவை ஃப்ளோரிடாவில் ஒன்றாக வசித்து வருகின்றன. அனைத்தும் ஒரே மாதிரி தோற்றம், நடவடிக்கை, குணம் கொண்டவையாக இருக்கின்றன. சில நாய்கள் மட்டும் மிராகிள் மில்லியை விட உருவத்தில் சற்றுப் பெரிதாகக் காணப்படுகின்றன. “மில்லியிடமிருந்து க்ளோன் செய்யப்பட்ட நாய்கள் மில்லியைப் போலவே இருந்தாலும், மில்லியை மீள் உருவாக்கம் செய்ய முடியாது என்பது என் கருத்து” என்கிறார் அதன் உரிமையாளர்.

க்ளோன் செய்வதற்குக் கட்டுப்பாடு எதுவும் கிடையாதா?

http://tamil.thehindu.com/world/article24424814.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: முயற்சி வெற்றியடையட்டும்!

 

 
blindjpg

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்பர் டெஸ்ஸியர் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு பார்வை கிடையாது. பொலிவியாவில் உள்ள Salar de Uyuni, உலகிலேயே மிகப் பெரிய உப்புப் பாலைவனம். இதில் சாதனை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் இவர். ஒரு நாளைக்கு 20 கி.மீ. வீதம் 7 நாட்களில் 140 கி.மீ. தூரம் தனியாக நடந்து செல்கிறார். ஜிபிஎஸ் ஆடியோ உதவியுடன் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். பார்வையற்ற குழந்தை களுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருக்கும் அல்பர், தன்னுடைய பார்வை முற்றிலும் போவதற்குள் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தர். கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளாலும் சாதாரண மனிதர்களைப்போல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கே, இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவக் குழு ஒன்று, சற்று தொலைவில் இவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. எதிர்பாராமல் ஆபத்து நேர்ந்தால் மருத்துவக் குழுவினரை இவரால் தொடர்புகொள்ள முடியும். ஜூலை 17 அன்று தன்னுடைய பயணத்தை பொலிவியாவில் தொடங்கி இருக்கிறார். இந்தப் பகுதியில் -3 முதல் 20 டிகிரி செல்சியஸ்வரை வெப்பநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இதில் சாதாரண மனிதர்கள் பயணம் செய்வதே மிகக் கடினமானது. பார்வையற்ற ஒருவருக்கு மிக மிக சவாலான பயணம். இந்த உப்புப் பாலைவனத்தை அடைவதற்கு குறுக்கு வழியில் சென்றால் தூரம் குறையும். ஆனால் அல்பர் நீளமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். லைகா கிராமத்தில் பயணத்தை ஆரம்பித்து, கோல்சானி கிராமத்தில் முடிக்கிறார். தண்ணீர், உணவு, தூங்கும் பை போன்றவற்றுடன் பயணிக்கிறார். தான் உதவி கேட்காதவரை, தன்னை நெருங்கக் கூடாது என்று மருத்துவக் குழுவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்!

 

விமானத்தில் இருந்து தவறி விழுந்த காஸ்பர் நாய், 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறது. ஜானிஸ் கேவியர்ஸ் தன் நண்பரிடம் காஸ்பரை ஒப்படைத்து, விமானத்தில் ஏற்றிவிடச் சொல்லிவிட்டு, 2 நாட்களுக்கு முன்பே பேருந்தில் கிளம்பிவிட்டார். ஜூன் 29 அன்று சரக்கு விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கான பகுதியில் காஸ்பர் அடைக்கப்பட்டது. நடுவில் ஒரு நிறுத்தத்தில் விமானம் இறங்கிவிட்டுக் கிளம்பும்போது, நாய் இருந்த கூண்டின் கதவை அடைக்க மறந்துவிட்டனர். விமானம் அடகாமா பாலைவனப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கூண்டைத் திறந்துகொண்டு காஸ்பர் குதித்துவிட்டது.

இந்த விஷயம் விமான ஊழியர்களுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. விமான நிலையத்தில் காத்திருந்த ஜானிஸ், காஸ்பர் இல்லை என்றதும் அதிர்ச்சியடைந்தார். தன் நண்பர்கள் மூலம் அடகாமா பாலைவனப் பகுதியில் தேடும் முயற்சியில் இறங்கினார். காவல் துறையும் தேட ஆரம்பித்தது. 6 நாட்களுக்குப் பிறகு காஸ்பர் கண்டுபிடிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டிருக்கிறது. விமானத்திலிருந்து விழுந்து, உயிர் பிழைத்த காஸ்பரை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

‘மிராகிள் காஸ்பர்!’

https://tamil.thehindu.com/world/article24457548.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: சுவாரசியமான காதல்!

 

 

 
mikejpg

நெதர்லாந்தைச் சேர்ந்த 45 வயது மைரி கோர்டனும் 43 வயது ரைஸ் மெக்லெனும் திருமணம் செய்துகொண்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலர் களாக இருந்து, ஒருகட்டத்தில் பிரிந்தவர்கள். பிரியும்போது, 'இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் தனியாக இருந்தால் திருமணம் செய்துகொள்வோம்' என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். "நாங்கள் இருவரும் பிரிந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது மீண்டும் சேர்வோம் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை. ஜாலியாகச் சொல்லிவிட்டுப் பிரிந்தோம். ஆனால் அது இன்று நிஜமாகியிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் பிரிந்த பிறகு, இருவருக்கும் வேறு சிலருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் இருவருமே யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் வேறு வேறு நகரங்களில் வசித்ததால் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைரி என் நினைவுக்கு வந்தார். அவருடன் பழகிய நாட்கள் இனிமையாக இருந்தன" என்கிறார் ரைஸ். "பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு கடையில் ரைஸின் அம்மாவையும் அக்காவையும் சந்தித்தேன். அவர்களிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன். ஓரிரு முறை பேசினேன். அடுத்த ஆண்டு ரைஸின் அம்மா புற்றுநோயால் இறந்து போனார். ஆறுதல் கூறுவதற்காக அடிக்கடி பேச ஆரம்பித்தேன். சில மாதங்களில் நண்பர்களாக மாறினோம். இருவரிடமும் மீண்டும் காதல் துளிர்த்தது. ஏற்கெனவே ஒருமுறை முறிந்த காதல் என்பதால், சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

 

வருடங்கள் கடந்தன. திடீரென்று எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, கால் உடைந்துவிட்டது. அப்போதுதான் என்னைப் பார்க்க அடிக்கடி வந்தார் ரைஸ். இனிமேலும் ஒருவரை விட்டு இன்னொருவரால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தோம். 20 ஆண்டுகளாகி விட்டதே, திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்மதித்தார். மிகத் தாமதமாகத் திருமணம் செய்துகொண்டாலும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம்" என்கிறார் மைரி.  

சுவாரசியமான காதல்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாரி பால்மன் வீகன் உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர். அவர் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் வீகன் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதைப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். "நான் 38 ஆண்டுகளாக வீகன் உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறேன். அன்று முதல் நான் வளர்த்துவரும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் வீகன் உணவுப் பழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டேன். கடைகளில் விற்கும் செல்லப் பிராணிகளுக்கான உணவுகளைக் கூடக் கொடுப்பதில்லை. வீட்டிலேயே காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறேன். என்னுடைய நாய்களும் பூனைகளும் 18 ஆண்டுகள்வரை ஆரோக்கியமாக வாழ்கின்றன. அதனால் நாய்களுக்கும் பூனைகளுக்கும் நான் எந்தவிதத்திலும் கெடுதலை உண்டாக்கவில்லை, கொடுமைப்படுத்தவில்லை" என்கிறார் ஹாரி பால்மன். கால்நடை மருத்துவர் ரிச்சர்ட் கோவன், "பால்மனின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. விலங்குகளுக்கு வீகன் உணவுப் பழக்கம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அசைவ விலங்குகளைக் கட்டாயத்தின் பேரில் சைவமாக மாற்றுவது, அந்த விலங்கின் இயல்புக்கு எதிரானது" என்கிறார்.

என்ன கொடுமை இது?

https://tamil.thehindu.com/world/article24468909.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பயணங்களில் இனி பயமில்லை!

specsJPG

பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பாளர் சிட்ரோயன், புதுமையான கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டால், பயணங்களில் ஏற்படும் தலைவலி, வாந்தி போன்ற உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். வழக்கமான கண்ணாடிகளில் இரண்டு கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் நான்கு கண்ணாடிகள் இருக்கின்றன. கண்ணாடிகளைச் சுற்றி, பிளாஸ்டிக் குழாய்களில் நீல வண்ணத் திரவம் நிரப்பப்பட்டிருக்கிறது. பயணம் ஆரம்பித்தவுடன் இந்தக் கண்ணாடியை 10 நிமிடங்கள் அணிந்துகொண்டால் போதும். உடல் பயணத்துக்கு ஏற்றார்போல் தன்னைத் தயார் செய்துகொள்ளும். அதற்குப் பிறகு படிக்கலாம், திரைப்படம் பார்க்கலாம். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. Seetroen என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியின் விலை ரூ.7,900. ஆன்லைனில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பயணங்களில் இனி பயமில்லை!

 

அமெரிக்காவைச் சேர்ந்த 59 வயது ராபின் கோஸெனும் இங்கிலாந்தைச் ஒரு பெண்ணும் ஆன்லைன் போகர் விளையாட்டு மூலம் அறிமுகமானார்கள். நட்பு, காதலாகவும் மாறியது. திடீரென்று அந்தப் பெண், தன்னை வந்து சந்திக்காவிட்டால், ராபினின் முதலாளிக்குத் தவறான தகவல்களை அனுப்பி வைக்கப் போவதாக மிரட்டினார். காதலி தன்னைச் சந்திக்கும் ஆவலில் இப்படி விளையாட்டாக மிரட்டுவதாக எண்ணினார். வேலையை விட்டுவிட்டு, கையில் இருந்த சேமிப்புடன் இங்கிலாந்து சென்றார். இருவரும் மிகவும் அன்பாக சில மாதங்கள் வாழ்ந்தனர். வயதான காலத்தில் தனக்கு அருமையான துணை கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தார் ராபின். திடீரென்று அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. "என்னுடைய போனை எடுத்து யாருக்குப் பேசியிருக்கிறேன் என்று பார்ப்பார். நான் எங்கே சென்றாலும் எங்கே இருக்கிறாய் என்று கேட்பார். நான் ஓர் இடத்தைச் சொன்னால், ஜிபிஎஸ் வேறு ஓர் இடத்தைக் காட்டுகிறதே என்பார். வங்கியில் பணம் போடுவது, எடுப்பதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்பார். நான் அமெரிக்காவில் இருக்கும் இன்னொரு பெண்ணுக்குப் பணம் அனுப்புவதாகச் சண்டை போடுவார். ஒரு கட்டத்தில் அவர் என்னை அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பித்தார். நான் மிரண்டு போனேன். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினால், ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்பார். இனி இப்படி நடந்துகொள்ள மாட்டேன் என்பார். தானும் தன்னுடைய பேரக் குழந்தைகளும் என்னை நினைத்து ஏங்குவதாகப் புலம்புவார். அதை நம்பி நானும் வீடு திரும்புவேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒருகட்டத்தில் நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து உளவு பார்க்க ஆரம்பித்தபோது என்னால் அதைத் தாங்க முடியவில்லை. 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து அறையைப் பூட்டிக்கொள்வேன். ஆனால் பக்கத்து அறையில் இருந்து போன் செய்துகொண்டே இருப்பார். கட்டிலுக்கு அடியிலும் அலமாரியிலும் ஒளிந்திருக்கிறார். இனிமேலும் இங்கே வசிப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தேன். எதையும் எடுத்துக்கொள்ளமால், தங்குவதற்கு இடமும் இல்லாமல் காரிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் ராபின்.

ஐயோ… பாவம்..! 

https://tamil.thehindu.com/world/article24480222.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: சீனாவின் அதிசயக் குடும்பம்!

 

 
chinajpg

சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 12 குழந்தைகள் பிறந்து, வளர்ந்திருக்கிறார்கள்! சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த காலத்தில் ஒரு குடும்பம் 12 குழந்தைகளைப் பெற்றிருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 11 பெண் குழந்தைகளுக்குப் பிறகு, ஓர் ஆண் குழந்தை பிறந்த பின்னரே பெற்றோர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தியிருக்கின்றனர். ஆசியாவில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இந்தக் குடும்பமும் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தப் பதினோரு பெண்களும் தங்களின் அன்பு தம்பிக்காக ஏராளமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் தம்பியின் திருமணம் நடைபெற்றது. சகோதரிகள் அனைவரும் சேர்ந்து, திருமணப் பரிசாக ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

“எங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அவர்கள் காலத்தில் ஆண் குழந்தைகள் மிகவும் உயர்வாகக் கருதப்பட்டனர். அந்த ஆசையில் 11 பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். காவோ ஹாவோஸென் பிறந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். என் அம்மாவுக்கு 20 வயதில் நான் பிறந்தேன். 47 வயதில் என் தம்பி பிறந்தான். வீட்டில் எப்போதும் வறுமை. என் தம்பியும் இரண்டு தங்கைகள் மட்டுமே பள்ளி சென்றிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சற்று வளர்ந்த உடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டோம். வீட்டுச் செலவு போக, மீதி இருந்த பணத்தில் கூட எங்களுக்கென்று எதுவும் வாங்கிக்கொண்டதில்லை. தம்பிக்குத் துணி, படிப்பு என்று ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டோம். அரசாங்கத்திடம் பல முறை எங்கள் பெற்றோர் மாட்டிக்கொண்டு, அதிகக் குழந்தைகள் பெற்றதற்குத் தண்டனையாக அபராதங்களையும் கட்டியிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறோம். பதினோரு பேருடன் பிறந்ததால், தான் எந்தவிதத்திலும் கஷ்டப்பட்டதாக எங்கள் தம்பி நினைக்கக் கூடாது என்பதில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருந்தோம்” என்கிறார் மூத்த பெண்.

 

"என் அக்காக்கள் அனைவரும் எனக்கு அம்மாதான். 8 வயதிலிருந்து வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் எப்போதாவதுதான் புத்தாடைகளை வாங்கிக்கொள்வார்கள். அனைவரும் எனக்காகவே செலவு செய்தனர். தண்ணீர் கொண்டுவந்து தருவதைத் தவிர, வேறு எந்த உதவியும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை. அவர்களுக்கென்று தனித்தனி குடும்பம் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து, 23 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்தன. என் சகோதரிகளுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்கிறார் காவோ ஹாவோஸென்.

சமீபத்தில் இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்து, சீனாவைப் பரபரப்பில் ஆழ்த்திவிட்டது. சட்டத்தை மதிக்காமல் 12 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது சரியா என்றும், ஆண் குழந்தைக்காக இத்தனை பெண் குழந்தைகளின் வாழ்க்கையைக் கஷ்டப்படுத்தியது சரியா என்றும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. 

சீனாவின் அதிசயக் குடும்பம்!

https://tamil.thehindu.com/world/article24487077.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: கோவேறு கழுதைக்கு அங்கீகாரம்!

 

 
donkeyJPG

இங்கிலாந்தில் வளர்ப்பு குதிரைகளுக்குப் பயிற்சியளித்து அவற்றுக்கு இடையே போட்டிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கோவேறு கழுதை இனத்தை மட்டும் சேர்த்துக்கொள்வதில்லை. கிறிஸ்டி மெக்லியன், கோவேறு கழுதைகளுக்கும் குதிரைகளைப்போல் உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடினார். இறுதியில் அவருக்கு வெற்றி கிடைத்தது. தான் வளர்த்து வரும் கோவேறு கழுதைக்கு முதல்முறை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். "அயர்லாந்தில் ஆதரவற்ற நிலையில் இந்தக் கோவேறு கழுதையைக் கண்டுபிடித்தேன். தத்தெடுத்து வளர்த்தேன். பயிற்சியும் அளித்தேன். சிறிய குதிரைகளுடன் என்னுடைய 11 வயது கோவேறு கழுதை போட்டியில் பங்கேற்றது. முதல் நாள் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. இந்தப் போட்டியில் பங்கேற்றதில், வரலாற்றில் இடம்பிடித்து விட்டது" என்கிறார் கிறிஸ்டி மெக்லியன்.

அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த கிறிஸ்டிக்கு வாழ்த்துகள்!

 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 62 வயது பேட்ரிக் ரியான், 14 வயதிலிருந்து சிறைக்குச் சென்று வருகிறார். தன் வாழ்க்கையில் மொத்தம் 23 ஆண்டுகள் சிறைக்குள் இருந்திருக்கார். சமீபத்தில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று, சிறைக்குச் சென்றிருக்கிறார். இது அவருடைய 668-வது குற்றமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் மிக அதிக தடவை குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பெயர் இவருக்குக் கிடைத்திருக்கிறது. 668 குற்றங்களில் 469 குற்றங்களுக்குத் தண்டனையை அனுபவித்திருக்கிறார். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் நீதிமன்ற வழக்குகளுக்காகச் செலவு செய்கிறார். ஆனாலும் இவர் தன்னுடைய செயல்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. கடந்த ஏப்ரல் 24 அன்று, குடித்துவிட்டுப் பேருந்தில் ஏறினார். பேருந்திலேயே சிறுநீர் கழித்தார். சக பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் முறையிட்டனர். உடனடியாக அவர் பேருந்தை விட்டு கீழே இறக்கிவிடப்பட்டார். அடுத்த பேருந்தில் ஏறி, மீண்டும் சிறுநீர் கழித்தார். இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டனர். இரண்டு குற்றங்களுக்காக இப்போது 18 மாதங்கள் சிறையில் இருக்கிறார். "மிகப் பெரிய குற்றம் செய்யாததால் மாதக் கணக்கில் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவார். ஏமாற்றுவது, பொய் சொல்வது, செய்யக் கூடாது என்று அறிவிப்பு இருக்கும் இடங்களில் மீறி செய்வது, பெண்களிடம் வம்பு செய்வது, பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வது என்று இவர் செய்யும் செயல்களுக்குக் கணக்கே இல்லை. சிறைக்குள் குடிக்க முடியாது என்பதால் ஒழுங்காக இருப்பார். வெளியே வந்தவுடன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு, தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ஏதாவது செய்து மாட்டிக்கொள்வார். இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக முறை சிறை சென்றவர் இவர்தான். செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் பெயரும் இவருடையதுதான்” என்கிறார் பிரஸ்டன் க்ரவுன் நீதிமன்ற வழக்கறிஞர்.

இதெல்லாம் ஒரு சாதனையா!

https://tamil.thehindu.com/world/article24500674.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: உத்வேகம் அளிக்கும் 80 வயது இளைஞர்!

 

 
80jpg
 
 

60 வயதானாலே முதுகு வலி, மூட்டு வலி வந்துவிடுகிறது. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த 81 வயது டோஷிசுகே கனஸாவா, பாடி பில்டராக இருக்கிறார்! 20 வயது இளைஞர் செய்யும் அத்தனை செயல்களையும் எளிதாகச் செய்து விடுகிறார். இளைஞராக இருந்தபோது பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை அள்ளியிருக்கிறார். 34 வயதில் ஓய்வு எடுத்துக்கொண்டார். பிறகு உடற்பயிற்சி செய்வதைக் கைவிட்டார். மது அருந்தினார். புகைப் பிடித்தார். விரும்பியதை எல்லாம் சாப்பிட்டார். உடல்நிலை மோசமானது. 50-வது வயதில் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் பாடி பில்டராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜிம்முக்குச் சென்றார். உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார். மது, புகைப் பழக்கங்களை விட்டுவிட்டார். மெதுவாக அவரது உடல் மாற்றம் கண்டது. நோய்களும் காணாமல் போயின. இளைஞராக இருந்தபோது தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்தவர், 3 நேரம் மட்டுமே உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, 80 வயதில் உலக பாடி பில்டர் போட்டியில் 6-ம் இடத்தைப் பிடித்தார். வயதான போட்டியாளர் என்ற தங்கப் பதக்கத்தையும் பெற்றார். "85 வயது வரை  என் உடல் ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை பாடி பில்டராக இருப்பேன்” என்கிறார் டோஷிசுகே கனஸாவா.  

உத்வேகம் அளிக்கும் 80 வயது இளைஞர்!

 
 

அமெரிக்காவின் பீட்டிள்ஸ் இசை மன்னர் ஜான் லெனன். உலகம் முழுவதும் பீட்டிள்ஸ் இசைக்கு ரசிகர்கள் இருந்தனர். இசையை மனித நேயத்துக்கும் அமைதிக்கும் பயன்படுத்தியவர். ‘அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்’ என்ற அவரது பாடல் இன்றளவும் அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1980-ம் ஆண்டு மார்க் டேவிட் சாப்மென் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஜான் லெனன். இதற்கு சாப்மென் சொன்ன காரணம், அவர் இறை மறுப்பாளராக, கம்யூனிஸ்ட்டாக இருந்தார் என்பதுதான். 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கப்பட்டது. கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை பரோல் கேட்டாலும் அதை நீதிமன்றம் நிராகரித்து வருகிறது. ஒவ்வொரு முறை பரோல் கேட்கும்போதும் ஜான் லெனனின் மனைவி யோகோ ஓனோ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இவர் வெளியே வந்தால், தனக்கும் தன் மகனுக்கும் பாதுகாப்பு இருக்காது என்றார். “ஜான் லெனனின் கருத்துகளும் அவரது புகழும் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த மோசமான முடிவை எடுத்தேன். ஆனால் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் பீட்டிள்ஸ் இசை ரசிகர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறேன் என்பது இப்போதுதான் புரிகிறது. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் சாப்மென். “மன்னிக்கக் கடினமாக இருக்கிறது. ஆனால் மன்னிப்பைவிட வேறு நல்ல விஷயம் இருக்க முடியாது” என்று கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார் யோகோ ஓனோ.

பீட்டிள்ஸ் இசை ரசிகர்கள் மன்னிப்பார்களா?

https://tamil.thehindu.com/world/article24508885.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: உயர்ந்த உள்ளம்!

 

 
kidenyjpg

கலிபோர்னியாவில் வசிக்கிறார் 30 வயது ஜெஸிகா மோரிஸ். சமீபத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி இருக்கிறார். பல் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வரும் இவர், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், ‘இந்த ஆண்டு யாராவது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கலிபோர்னியாவில் இருந்து 2 மணி நேர பயண தூரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார் 30 வயது எழுத்தாளர் டேவிட் நச்சேர். இவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ஆறரை ஆண்டுகளாகிவிட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. சிறுநீரக நன்கொடையும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, இறப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானார் டேவிட். ஆனாலும் ஒரே ஒருமுறை இறுதியாக விளம்பரம் கொடுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அந்த விளம்பரத்தை ஜெஸிகாவும் பார்த்தார். தன்னுடைய புத்தாண்டு உறுதிமொழியைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார். டேவிட்டை தொடர்புகொண்டார்.

“விளம்பரத்தைப் பார்த்து சிலர், சிறுநீரகம் நன்கொடை அளிக்க முன்வந்தனர். ஆனால் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். அவர்கள் கேட்டது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் மருத்துவத்துக்கே அதிகம் செலவு செய்துவிட்டேன். பிறந்த மூன்றாவது மாதத்தில் ஒரு சிறுநீரகம் பழுதடைந்துவிட்டது. அதிலிருந்து 27 தடவை அறுவை சிகிச்சைகள் எனக்கு செய்திருக்கிறார்கள். ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு  இரண்டாவது சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. டயாலிசிஸ் மூலம்

 
 

உயிர் வாழ்ந்து வந்தேன். ஒருகட்டத்தில் மாற்று சிறுநீரகம் பொருத்தாவிட்டால் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், முன்பின் அறியாத எனக்கு ஜெஸிகா சிறுநீரகம் நன்கொடை அளிக்க முன்வந்ததில் அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட ஒருவருக்கு, எனக்கு சிறுநீரகம் அளிப்பதன் மூலம் ஏதும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று நினைத்து, வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால் ஜெஸிகா நான் சொல்வதைக் கேட்கவில்லை. முழு மனத்துடன் நன்கொடை அளிக்க வந்துவிட்டார். இவருக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்கிறார் டேவிட்.

“நான் நன்கொடை அளிக்கிறேன் என்று சொன்னதை டேவிட்டால் நம்ப முடியவில்லை. நான் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்த பிறகே நம்பினார். என்னுடைய சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிம்மதியே வந்தது. வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்ட டேவிட், என்னுடைய சிறுநீரகம் மூலம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருக்கிறது. இரண்டு மாத ஏற்பாடுகளுக்குப் பிறகு, இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருவரின் உடல்நிலையும் வேகமாக தேறி வருகிறது. என்னுடைய வாழ்க்கை முழுவதும் டேவிட் நல்ல நண்பராக இருப்பார். அவருக்கு வேறு வாய்ப்பே இல்லை” என்கிறார் ஜெஸிகா.

உயர்ந்த உள்ளம்!

https://tamil.thehindu.com/world/article24517317.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: உள்ளம் கொள்ளை கொண்ட நைஜீரிய தேவதை!

 

 

 
nigeriajpg

உலகின் மிக அழகான குழந்தை என்று கொண்டாடப்படுகிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த 5 வயது ஜேர். இவளது 3 படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. "ஜேருக்கு என்று சிறப்பாக எந்த விஷயத்தையும் செய்யவில்லை. பெரிய கண்களும் பளபளக்கும் தோலும் அடர்த்தியான முடியுமாக இயற்கையிலேயே அழகாக இருக்கிறாள். இவளது படங்களைப் பார்ப்பவர்கள் உயிருள்ள குழந்தை என்றே நினைப்பதில்லை. அழகான பொம்மை என்கிறார்கள் அவளைச் சிரிக்க வைக்க பெருமுயற்சி செய்தேன். ஆனால் அவற்றை விட அவள் இயல்பாக இருந்த படங்களே தேவதையாகக் காட்டின. இவளது கண்ணில் ஜீவன் இருக்கிறது” என்று சிலாகிக்கிறார் ஒளிப்படக் கலைஞர் மோஃப் பாமுயிவா.

உள்ளம் கொள்ளை கொண்ட நைஜீரிய தேவதை!

 

தாய்லாந்தைச் சேர்ந்த டச்சாவிட்டேயின் நண்பர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மிக ஆரோக்கியமாக இருந்த இவர், திடீரென்று இறந்துவிட்டதாக அவரது மனைவி எழுதியிருந்தார். நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணீருடன் தங்களது வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர். கணவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக நிறைய செலவு செய்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உதவுமாறு கோரிக்கையும் வைத்தார். இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் பரவியது. அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் தொலைபேசியில் பேசி, வங்கியில் பணம் போடச் சொன்னார். மகனை இழந்த துக்கத்திலும் 42 ஆயிரம் ரூபாயைத் திரட்டி வங்கியில் போட்டுவிட்டு, மறுநாள் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளையும் டச்சாவிட்டேயின் அம்மா செய்தார். கிராமத்தில் உறவினர்களும் நண்பர்களும் குழுமியிருந்தனர். ஆனால், உடல் வந்து சேரவில்லை. மருமகளின் தொலைபேசியைத் தொடர்புகொண்ட போது அவர் எடுக்கவே இல்லை. உறவினர் ஒருவர் டச்சாவிட்டேயின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டார். அந்த அழைப்பை இறந்து போனதாகச் சொல்லப்பட்டவரே எடுத்துவிட்டார். வேறு வழியின்றி உயிருடன் இருப்பது தெரிந்துவிட்டது. அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. “என் மகனும் மருமகளும் சேர்ந்து இப்படி எல்லோரையும் பணத்துக்காக ஏமாற்றுவார்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என் மகன் உயிருடன் இருப்பதே போதும்” என்கிறார் டச்சாவிட்டேயின் அம்மா. பலரும் பலவிதங்களில் தங்களை இந்த ஜோடி ஏமாற்றிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருவரும் பிடிபட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3.5 லட்சம் ரூபாய் அபராதமும் சுமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.  

ஏமாற்றுவதற்கும் ஓர் அளவில்லையா?

https://tamil.thehindu.com/world/article24538454.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: 3 ஆண்டுகளாக விவாகரத்துக்கு காத்திருக்கும் பெண்

cropjpg

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக விவாகரத்து கேட்டுப் போராடி வருகிறார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. 68 வயது டீனி ஓவன்ஸ், 80 வயது ஹக் ஓவன்ஸை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். 40 ஆண்டு கால மண வாழ்க்கையில், பிரிவதற்கான நியாயமான காரணம் எதையும் டீனி குறிப்பிடவில்லை என்பதால், விவாகரத்து வழங்க இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேல் முறையீடுக்குச் சென்றார். ஹக் ஓவன்ஸ் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாலும் இந்தத் தள்ளாத வயதிலும் மனைவி ஒருநாள் திரும்பி வருவார் என்று காத்திருப்பதாலும் டீனிக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

"என்னுடைய நாற்பதாண்டு வாழ்க்கை அலுத்துவிட்டது. குடும்பத்தை விட வேலை மீதுதான் அதிக அக்கறை காட்டினார். வீட்டில் இருக்கும் நேரம் சிரித்துக் கூடப் பேச மாட்டார். பேசினால் அது விவாதமாகி, விவகாரமாகிவிடும். மற்றவர்கள் முன்பு ஒரு மாதிரியாகவும் தனிப்பட்ட முறையில் ஒரு மாதிரியாகவும் நடந்துகொள்வார். விவாகரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு செயலும் செய்துகொண்டிருந்தார். இதனால் என் மண வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியே இல்லாமல் கழிந்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக என் கணவரை விட்டுப் பிரிந்து, இன்னொரு மனிதருடன் வாழ்ந்து வருகிறேன். இனி அவருடன் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் நீதிமன்றம், என் விருப்பத்தை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார் டீனி.

 

“என் மனைவி மீது எந்தக் குற்றமும் நான் சுமத்த விரும்பவில்லை. அவரிடம் நான் மோசமாக ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. அவரது மனம் மாறும், நிச்சயம் ஒரு நாள் என்னிடம் திரும்பி வருவார். அதனால் நான் விவாகரத்தை நிராகரிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நீதிமன்றத்திடம் கூறினார் ஹக் ஓவன்ஸ்.

‘இந்த வழக்கு எங்களை மிகவும் பாதித்துவிட்டது. சட்டத்தை மாற்றுவது நீதிபதிகளின் வேலை அல்ல. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்ற காரணம் மட்டும் விவாகரத்துக்குப் போதுமானதல்ல. விவாகரத்துக்கான வலுவான காரணத்தையோ அல்லது ஆதாரத்தையோ டீனியால் கொடுக்க முடியவில்லை. டீனிக்காக ஒரு முதியவரின் எதிர்பார்ப்பை எங்களால் நிராகரிக்க முடியவில்லை. இங்கிலாந்து விவாகரத்துச் சட்டப்படி, கணவனும் மனைவியும் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தால்தான், காரணம் இல்லாமல் கூட விவாகரத்து அளிக்க முடியும்.   2020-ம் ஆண்டில் டீனி வழக்கு தொடுத்தால் விவாகரத்து வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கருத்து தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.

பல நாடுகளிலும் இன்று விவாகரத்து எளிதாகியிருக்கும் சூழலில், இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை இருப்பது விநோதமாக இருக்கிறது. இந்த வயதில் டீனியை இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார்கள்.

சேர்வதும் பிரிவதும் தனிப்பட்டவர்களின் விருப்பம் அல்லவா

https://tamil.thehindu.com/world/article24544831.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பணத்துக்காகப் பாலினத்தையே மாற்றிவிடுவதா?

 

 
palinamjpg

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆண், கார் இன்சூரன்ஸ் கட்டணத்தைக் குறைவாகச் செலுத்துவதற்காகத் தன்னை பெண் என்று சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்! 23 வயது டேவிட், புது பிராண்ட் கார் வாங்க விரும்பினார். ஆனால் அந்த காருக்கான இன்சூரன்ஸ் தொகை மிக அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தது. இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குச் சென்று, தொகையைக் குறைக்க முடியுமா என்று கேட்டார். ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் என்பதைக் குறைக்க முடியாது என்றும், பெண்களுக்கு என்றால் சுமார் 76 ஆயிரம் ரூபாய் குறையும் என்றும் தெரிவித்தனர்.

”நான் நினைத்த காரை வாங்க முடியாதோ என்ற பயம் வந்தது. கார் எனக்குக் கண்டிப்பாக வேண்டும். ஆனால் இன்சூரன்ஸ் தொகையை என்னால் முழுவதுமாகச் செலுத்த முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இறுதியில் என்னுடைய பால் அடையாளத்தை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தேன். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் என் பாலினத்தை மாற்றும்படி கேட்டேன். அவர்களால் முடியாது என்று சொல்லிவிட்டனர். பிறகுதான் பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் சட்டப்பூர்வமாகப் பாலினத்தை மாற்றினால்தான் இன்சூரன்ஸ் தொகை குறையும் என்று தெரிந்தது. இரண்டிலும் எளிதாக என் பால் அடையாளத்தை மாற்றிக்கொண்டேன்.

 

 டேவிட், ஆல்பர்ட்டாவாக மாறினேன். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அதைக் கொடுத்து, பெண்களுக்கான சலுகையைப் பெற்றுக்கொண்டேன். இதில் நான் எந்த விதத்திலும் யாரையும் ஏமாற்றியதாக நினைக்கவில்லை. ஆணுக்கு ஒரு விதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் சட்டம் இருக்கும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? சட்டப்படி நான் பெண். ஆனால் நிஜத்தில் ஆண். இதில் எந்தவிதத்திலும் எனக்குச் சங்கடம் இல்லை. இப்போது மாதம் 6,300 ரூபாய் எனக்கு மிச்சமாகிறது. சட்டத்தில் பால் அடையாளத்தை மாற்றுவதற்கான வழி இருக்கும்போது, அதைப் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை” என்கிறார் டேவிட் என்ற ஆல்பர்ட்டா. இந்த விஷயம் வெளியே தெரிந்து, விவாதிக்கப்பட்டு வருகிறது. இனி யாரும் இப்படிப் பால் அடையாளத்தை மாற்றி, ஏமாற்றக் கூடாது என்பதற்காகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறார்கள்.

அடப்பாவி, பணத்துக்காகப் பாலினத்தையே மாற்றிவிடுவதா?

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் வசிக்கிறார் நிவேஹா ஸ்மித். தனக்கு ஓர் உடை வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டார். அந்த உடையின் விலை மிக அதிகமாக இருந்தது. அவரால் அதை வாங்கிக் கொடுக்க இயலாது. ஆனால் மகளின் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, அந்த உடையை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார். ஒரு நாளைக்கு 3 இடங்களில் உறக்கம், ஓய்வு இல்லாமல் வேலை செய்தார். பணம் சேர்ந்தவுடன், உடையை வாங்கி மகளிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்த நிவேஹா, ஆச்சரியத்தில் குதித்தார். அப்பாவைக் கட்டி அணைத்தார். கண்ணீர் விட்டு அழுதார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது.

அப்பாக்களே அற்புதம்தான்!

https://tamil.thehindu.com/world/article24559740.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: அதிசய நட்பு!

 

 

 

  • 6abef2dfP1445321mrjpg

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினோ ஃபாசோ நாட்டில் இருக்கிறது பாஸோல் கிராமம். இங்கே மோசிஸ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் முதலைகளுடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 150 முதலைகள் வசிக்கின்றன. குளத்தில் அமர்ந்து பெண்கள் துணி துவைக்கிறார்கள். குளத்துக்கு அருகில் இருக்கும் நிலத்தில் ஆடுகளை மேய்க்கிறார்கள். குழந்தைகள் குளக்கரைகளில் விளையாடுகிறார்கள். இவர்களுக்கு அருகிலேயே முதலைகள் ஓய்வெடுக்கின்றன. சிலர் முதலைகளுக்கு அருகிலோ அல்லது அதன் மீதோ அமர்ந்து அரட்டையடிக்கிறார்கள். மனிதர்களுக்கும் முதலைகளைக் கண்டு பயமில்லை. முதலைகளுக்கும் மனிதர்களைக் கண்டு பயமில்லை. 15-ம் நூற்றாண்டில் இந்தக் கிராமத்தில் மழையே இல்லை. எங்கும் வறட்சி நிலவியது. மக்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சில முதலைகள் இந்தக் குளத்தை மக்களுக்கு அடையாளம் காட்டின. அப்போதுதான் இப்படி ஒரு குளம் இருப்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அன்று முதல் முதலைகள் மீது மக்கள் மிகவும் அன்பும் அக்கறையும் காட்டி வருகின்றனர். முதலைகளுக்கு அவ்வப்போது கோழி, இறைச்சி போன்றவற்றையும் வழங்குகிறார்கள். முதலை இறந்து போனால், இறுதிச் சடங்குகளை நடத்தி, புதைக்கவும் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை முதலைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு திருவிழாவையும் நடத்துகிறார்கள்.

“இந்த முதலைகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக இருக் கிறோம். அதற்காகவே இந்த அன்பைக் காட்டுகிறோம். எனக்கு 70 வயதாகிறது. இந்த 70 ஆண்டுகளில் முதலை கடித்தோ, தாக்கியோ ஒரு சம்பவம் கூட நடந்ததில்லை. ஆபத்து அறியாமல் அருகில் சென்று விளையாடும் குழந்தைகளைக் கூட முதலைகள் பொம்மை போலப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. எங்கள் முன்னோர்களுக்கு இவை தீங்கு இழைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்ததாக ஒரு செவி வழி கதை இருக்கிறது. அது உண்மை என்பதுபோலதான் இவையும் எங்களிடம் நடந்துகொள்கின்றன” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

 

மனிதர்களும் முதலைகளும் நெருங்கிப் பழகும் இந்தக் கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்தனர். அவர்கள் முதலைக்கு உணவளிக்கலாம், முதலை மீது உட்கார்ந்து படம் எடுத்துக்கொள்ளலாம். கிராமத்தினரே முதலை களுக்கான கோழி, இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். அவற்றை ஒரு குச்சியில் கட்டி, முதலைகளுக்குக் கொடுக்கலாம். அருகில் பயிற்சியாளர்கள் இருப்பார்கள். சாப்பிட்டு ஓய்வெடுக்கும் முதலைகள் மீது அமர்ந்து படம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்தக் கிராமத்து மக்களுக்கு வருமானத்துக்கும் வழி ஏற்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக மழை இல்லாமல் போய்விட்டது. குளத்து நீரும் ஆண்டுக்கு ஆண்டு வற்றிக்கொண்டே செல்கிறது. வறட்சியைக் கேள்விப்படும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதைத் தவிர்த்துவிடுகின்றனர். வருமானமும் குறைந்துவிட்டது. முதலைகளும் மக்களும் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கின்றனர். ஆரம்பக் காலத்தில் முதலைகள் புதுக் குளத்தை அடையாளம் காட்டியதுபோல, இப்போதும் காட்டும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் இந்தக் கிராமத்து மக்கள்.

இந்த அதிசய நட்பு தொடரட்டும்!

https://tamil.thehindu.com/world/article24569181.ece

Share this post


Link to post
Share on other sites

உலக மசாலா: பொம்மை கையெழுத்து!

 

 

 
signjpg

பெரு நாட்டைச் சேர்ந்த 31 வயது ஜுவான் கார்லோஸ் வாரில்லாஸின் கையெழுத்தைச் சமூகவலைத் தளங்களில் வெளியிட்ட ஐந்தாவது நிமிடத்தில் பிரபலமாகிவிட்டார். கையெழுத்துக்குப் பதிலாக ஒரு பொம்மையை வரைந்து, அதைத்தான் கையெழுத்தாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்குப் பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜுவானையும் அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது. கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்தது. பிறகுதான் அவர்கள் இட்ட கையெழுத்துகளில் ஒன்று படமாக இருந்ததைக் கண்டனர். ஜுவானை அழைத்துக் காரணம் கேட்டனர். கிட்டி என்ற பொம்மையை மிகவும் பிடிக்கும் என்பதால், 16 வயதிலிருந்து அடையாள அட்டையில் பயன்படுத்த ஆரம்பித்து, அதையே கையெழுத்தாகத் தொடர்ந்து வருவதாகச் சொன்னார். இனிமேல் இப்படிப் படம் போடக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள்.

மாற்றி யோசித்திருக்கிறார்!

 

கொலம்பியாவில் வசிக்கும் சோம்ப்ரா என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், காவல்துறையில் பணியாற்றி வருகிறது. வழக்கமான நாய்களை விட சோம்ப்ராவுக்கு நுண்ணுணர்வு அதிகம். அபாரமான மோப்ப சக்தியின் மூலம் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. இதனால் அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் செல்லப் பிராணியாக இருந்துவருகிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சோம்ப்ரா மீது கடுங்கோபம் அடைந்தனர். தற்போது இந்த 6 வயது நாயைக் கொல்பவருக்கு சன்மானத்தை அறிவித்திருக்கின்றனர். 2016-ம் ஆண்டு 2,958 கிலோ கொகெய்ன் ஹைட்ரோகுளோரைடைக் கண்டுபிடித்து கொடுத்தபோது, தலைப்புச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்தது சோம்ப்ரா. கடந்த மே மாதம் பெல்ஜியத்துக்கு அனுப்ப இருந்த 1.1 டன் கொகெய்னைக் கண்டுபிடித்தது. பிறகு 5.3 டன் போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, மக்களின் அன்பைப் பெற்றது. இதுவரை சட்டத்துக்குப் புறம்பாகப் போதைப் பொருள் கடத்தும் 242 பேர், சோம்ப்ரா மூலம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தல்காரர்கள் அதிக அளவில் தங்களது பணத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களது தொழில் நலிவடைந்திருக்கிறது. அவர்கள் காரணத்தை ஆராய்ந்தபோது, சோம்ப்ராவால்தான் இந்த நஷ்டம் ஏற்பட்டதாக உணர்ந்தனர். ரேடார் மூக்கு கொண்ட இந்த நாயை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தனர். நாயைக் கொல்பவருக்கு 5 லட்சம் முதல் 48 லட்சம் வரை சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். இதுவரை ஒரு நாயின் தலைக்கு இவ்வளவு சன்மானம் அளிக்கப்பட்டு யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதாலும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கணிசமான பங்கு வகித்திருப்பதாலும் சோம்ப்ராவைப் பாதுகாப்பதில் காவல்துறை அதிக அக்கறை காட்டி வருகிறது. கொலம்பியாவின் மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் நிறுவனம் சன்மானம் அறிவித்த பிறகு, சோம்ப்ராவுக்குக் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. டர்போ விமான நிலையத்திலிருந்து உராபா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றும் அறியாத சோம்ப்ரா, பாதுகாவலர்கள் புடை சூழ, தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கடத்தல்காரர்களைக் கதிகலங்க வைத்த சோம்ப்ரா!

https://tamil.thehindu.com/world/article24578678.ece

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு