Jump to content

ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு


Recommended Posts

ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு

 
 
சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி
சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி

ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக அதிக எண்ணிக்கையிலான அகதிகள் வந்துகொண்டே இருக்கின்றனர். எனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளும் நியாயமான அளவு அகதிகளுக்கு புகலிடம் அளிக்க முன்வர வேண்டும்.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் அகதிகளை ஏற்று அவர்களை ஜெர்மனி சமூகத்தினருடன் ஒருங்கிணைக்கிறோம். நாங்கள் பொருளாதார ரீதியாக வலுவான நாடு என்பதில் சந்தேகமில்லை எனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளை விட கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் விஷயத்தில் நம்பிக்கை அளிக்கின்றன. எனவேதான் ஐரோப்பிய கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார் அவர்.

ஜெர்மனியில் நடப்பு ஆண்டு மட்டும் 8 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/ஆண்டுக்கு-500000-அகதிகளுக்கு-புகலிடம்-ஜெர்மனி-அறிவிப்பு/article7629727.ece?homepage=true

Link to comment
Share on other sites

இது ஜூலை மாசம்.. tw_anguished:
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜூலை மாசம்.. tw_anguished:

போன மாதம் ஐரோப்ப யூனியனிலுள்ள கிரேக்கத்துக்கு  உதவ அம்மா காட்டிய தயக்கமும்

உத்தரவாதங்களும் ஒப்பந்தங்களும்...

ஐரோப்பிவிலுள்ள  ரோமேனியர்களை பிடித்து  பிடித்து திருப்பி அனுப்பும் வேகத்துக்கும்

இன்றைய போக்குக்கும் நிறைய வேறுபாடு...

சிரியாவில் மட்டும் தான் இரக்கம் என்பது 

கண் போட்டுவிட்டார்களா என்றே சிந்திக்க வைக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஊரில சொந்தக்காரர் யாரும் இருந்தா சொல்லி அனுபுங்கோ ?

போராட்டத்தை ஊரார் பிள்ளையள் நடத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று, அருகில் உள்ள சிரிய அகதிகள் முகாமுக்கு,  எனது மகள் ஓரளவு பாவித்த...  தனது ஜக்கெற், கம்பளி உடுப்புக்களுடன், வேறு சில உடைகளையும் கொண்டு சென்று கொடுத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரம் இருந்து விட்டு வந்தார். அவர் அங்கு... போக முதல் எம்மிடம் எதுவும் சொல்லவில்லை. வந்த பின்.. அவர் அதனை எம்மிடம் பகிர்ந்து கொண்ட போது... தந்தை என்னும் முறையில், அவரின்  மனித நேயத்தை மெச்சினேன்.   
சிரியாவில் இருந்து வந்தவர்கள், குளிர் தாங்க மாட்டார்கள் அதனால் தான்... கொடுத்தேன் என்று சொன்ன போது, கண்கள் கலங்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மகளுக்கு பாராட்டுக்கள்...!  :)

( இந்தமாதிரி நல்ல குணம் அவங்க தாய் வழியாக வந்திருக்குமோ...! :rolleyes: :) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஊரில சொந்தக்காரர் யாரும் இருந்தா சொல்லி அனுபுங்கோ ?

போராட்டத்தை ஊரார் பிள்ளையள் நடத்தும்.

s-l1000.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

s-l1000.jpg

இதே வேலையாப்போச்சண்ணா...

சண்டைக்காறன் என்ற முகமூடியைப்போட்டபடி

யாழ்களத்தை ஒரு ரண களமாக வைத்திருப்பதற்கு என்றே அலைகிறார்

இது ஒருவித வியாதி...

ஆனால் யாருக்கு யார் வகுப்பெடுப்பது

அதற்கான எல்லை உண்டு

அதன்பின்  ..........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன மாதம் ஐரோப்ப யூனியனிலுள்ள கிரேக்கத்துக்கு  உதவ அம்மா காட்டிய தயக்கமும்

உத்தரவாதங்களும் ஒப்பந்தங்களும்...

ஐரோப்பிவிலுள்ள  ரோமேனியர்களை பிடித்து  பிடித்து திருப்பி அனுப்பும் வேகத்துக்கும்

இன்றைய போக்குக்கும் நிறைய வேறுபாடு...

சிரியாவில் மட்டும் தான் இரக்கம் என்பது 

கண் போட்டுவிட்டார்களா என்றே சிந்திக்க வைக்கிறது....

விசுகர்!
இன்றைய  இனம்புரியாத / கட்டிலடங்காத அகதிகள் வருகைக்கும் கிரேக்க நாட்டின் அரசியல் விளையாட்டிற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.  சட்டங்கள் சீர்திருத்தங்கள் என்று கிரேக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போது....

நாட்டுக்குள் நுழையும் சகல அகதிகளையும் உங்களிடமே அனுப்பி விடுகின்றோம் என மறைமுகமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

அரசியல் சித்து விளையாட்டுக்கள் நிறையவே நடக்கின்றன.:innocent:

எதுக்கெடுத்தாலும் காலை தூக்கிறதுகள்..... இந்த திரியுக்கையும் வந்து காலை தூக்கினது ஆச்சரியமுமில்லை...அதிசயமுமில்லை.:cool:

வெளிநாடு வந்தும் இன்னும் பரந்துபட்ட அறிவு வரேல்லையே எண்டதுதான் அதிசயமாயும் ஆச்சரிமாயும் கிடக்கு :unsure:

Link to comment
Share on other sites

இதுவும் ஒரு காரணமாக இருக்கும்

மொழிபெயர்க்க கூகில் ஆண்டவரை கூப்பிடுங்கள்.

Zorgen over Russische troepen in Syrië

Westerse kopstukken hebben woensdag opnieuw bezorgdheid geuit over berichten dat Rusland gevechtstroepen naar Syrië stuurt. 
 

NAVO-chef Jens Stoltenberg zei woensdag op bezoek in Praag dat de groeiende militaire activiteiten van Rusland in Syrië zorgen wekken. En dat maakt het vinden van een politieke oplossing in dat land volgens Stoltenberg alleen maar moeilijker. Hetzelfde zei woensdag de Franse minister van Buitenlandse Zaken, Laurent Fabius.

Rusland zou bezig zijn met militair ingrijpen om te voorkomen dat het regime van de Syrische president Bashar al-Assad bezwijkt. Er zouden meer gevechtsvliegtuigen naar Syrië zijn gestuurd, net als leden van een Russisch marinekorps en er wordt hard aan een nieuwe militaire basis bij de havenstad Latakia gewerkt.

Er is al langer sprake van Russische activiteiten bij de marinebasis in Tartous. Deze basis is de enige marinebasis die de Russen hebben aan de Middellandse Zee en daarom van groot strategisch belang voor Moskou. 

'Experts'

Syrische zegslieden hebben bevestigd dat er meer Russische hulp komt, maar Damascus ontkent net als Moskou dat Russen meevechten met Assads troepen. Voorlopig wordt er alleen gesproken over 'experts' op de grond in Syrië.

De afgelopen dagen werden in de Bosporus meerdere Russische schepen met wapentuig waargenomen, vermoedelijk onderweg naar Syrië. 

Het regime van de clan van de familie Assad is al sinds de tijd van de Sovjet-Unie en het bewind van Assads vader, Hafez al-Assad (1930-2000), zeer nauw verbonden met Rusland.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகர்!
இன்றைய  இனம்புரியாத / கட்டிலடங்காத அகதிகள் வருகைக்கும் கிரேக்க நாட்டின் அரசியல் விளையாட்டிற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.  சட்டங்கள் சீர்திருத்தங்கள் என்று கிரேக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போது....

நாட்டுக்குள் நுழையும் சகல அகதிகளையும் உங்களிடமே அனுப்பி விடுகின்றோம் என மறைமுகமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

அரசியல் சித்து விளையாட்டுக்கள் நிறையவே நடக்கின்றன.:innocent:

எதுக்கெடுத்தாலும் காலை தூக்கிறதுகள்..... இந்த திரியுக்கையும் வந்து காலை தூக்கினது ஆச்சரியமுமில்லை...அதிசயமுமில்லை.:cool:

வெளிநாடு வந்தும் இன்னும் பரந்துபட்ட அறிவு வரேல்லையே எண்டதுதான் அதிசயமாயும் ஆச்சரிமாயும் கிடக்கு :unsure:

உண்மை தான் அண்ணா

ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சிரிய யுத்தத்தக்கு போகின்றார்கள்

அவர்களை இங்கிருந்து அழைத்துப்போகிறார்கள்

அதைத்தடுக்கணும் என அழுதபடி

எந்தவித பாதுகாப்புமில்லாது

எந்தவித விசாரணைகளுமில்லாது

புலநாய்வுகளுமில்லாது

இவர்களாகவே கூட்டி வருகிறார்கள்.

இசுலாமிய சமுதாயம் எந்தநிலையிலும் இவர்களுடன் ஒட்டாது என்பது மட்டுமல்ல

எதிராக செயற்படும் என்று தெரிந்தும் செய்கிறார்கள்

அது தான் புரியவில்லை.

பிரான்சில் அதி தீவிர வலதுசாரிக்கட்சித்தலைவி மரின் லு பென் சொல்கிறார்

பிரெஞ்சுக்காரரையே பராமிரிக்க பணமில்லை

அத்துடன் வருபவர்களில் 90 வீதமானவர்கள் ஆண்கள். இளைஞர்கள்.

இவர்கள் குடும்பங்களை விட்டுவிட்டு வேறு ஒரு காரணத்துக்காகவே ஐரோப்பாவுக்குள் நகர்கிறார்கள் என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு காரணமாக இருக்கும்

மொழிபெயர்க்க கூகில் ஆண்டவரை கூப்பிடுங்கள்.

Zorgen over Russische troepen in Syrië

Westerse kopstukken hebben woensdag opnieuw bezorgdheid geuit over berichten dat Rusland gevechtstroepen naar Syrië stuurt. 
 

NAVO-chef Jens Stoltenberg zei woensdag op bezoek in Praag dat de groeiende militaire activiteiten van Rusland in Syrië zorgen wekken. En dat maakt het vinden van een politieke oplossing in dat land volgens Stoltenberg alleen maar moeilijker. Hetzelfde zei woensdag de Franse minister van Buitenlandse Zaken, Laurent Fabius.

Rusland zou bezig zijn met militair ingrijpen om te voorkomen dat het regime van de Syrische president Bashar al-Assad bezwijkt. Er zouden meer gevechtsvliegtuigen naar Syrië zijn gestuurd, net als leden van een Russisch marinekorps en er wordt hard aan een nieuwe militaire basis bij de havenstad Latakia gewerkt.

Er is al langer sprake van Russische activiteiten bij de marinebasis in Tartous. Deze basis is de enige marinebasis die de Russen hebben aan de Middellandse Zee en daarom van groot strategisch belang voor Moskou. 

 

'Experts'

Syrische zegslieden hebben bevestigd dat er meer Russische hulp komt, maar Damascus ontkent net als Moskou dat Russen meevechten met Assads troepen. Voorlopig wordt er alleen gesproken over 'experts' op de grond in Syrië.

De afgelopen dagen werden in de Bosporus meerdere Russische schepen met wapentuig waargenomen, vermoedelijk onderweg naar Syrië. 

Het regime van de clan van de familie Assad is al sinds de tijd van de Sovjet-Unie en het bewind van Assads vader, Hafez al-Assad (1930-2000), zeer nauw verbonden met Rusland.

இதையும் நாங்கள் முதலே சொல்லி விட்டோம்.:cool:

உண்மை தான் அண்ணா

ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சிரிய யுத்தத்தக்கு போகின்றார்கள்

அவர்களை இங்கிருந்து அழைத்துப்போகிறார்கள்

அதைத்தடுக்கணும் என அழுதபடி

எந்தவித பாதுகாப்புமில்லாது

எந்தவித விசாரணைகளுமில்லாது

புலநாய்வுகளுமில்லாது

இவர்களாகவே கூட்டி வருகிறார்கள்.

இசுலாமிய சமுதாயம் எந்தநிலையிலும் இவர்களுடன் ஒட்டாது என்பது மட்டுமல்ல

எதிராக செயற்படும் என்று தெரிந்தும் செய்கிறார்கள்

அது தான் புரியவில்லை.

பிரான்சில் அதி தீவிர வலதுசாரிக்கட்சித்தலைவி மரின் லு பென் சொல்கிறார்

பிரெஞ்சுக்காரரையே பராமிரிக்க பணமில்லை

அத்துடன் வருபவர்களில் 90 வீதமானவர்கள் ஆண்கள். இளைஞர்கள்.

இவர்கள் குடும்பங்களை விட்டுவிட்டு வேறு ஒரு காரணத்துக்காகவே ஐரோப்பாவுக்குள் நகர்கிறார்கள் என்று.

 

நேற்றும் பல அகதிகளை நேரடியாக கண்டேன். அநேகமானவரின் கைகளிலும் ஐ போன்...... தகவல் அனுப்பிக்கொண்டேயிருக்கின்றார்கள். யாருக்கு என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

30 வருடங்களுக்கு முன் முல்லாக்கள் ஐரோப்பாவை நோக்கி படையெடுப்பார்கள் என்று ஒரு அரசியல் ஆய்வுக்கட்டுரையை வாசித்த ஞாபகம் வந்து போகின்றது. 

யாரந்த நீலத்தொப்பிக்காரர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மகளுக்கு பாராட்டுக்கள்...!  :)

( இந்தமாதிரி நல்ல குணம் அவங்க தாய் வழியாக வந்திருக்குமோ...! :rolleyes: :) )

இருக்கலாம்... சுவி. 
எனக்கு.... முஸ்லீம்களுக்கு, உதவுவதில் உடன் பாடில்லை. ஊரிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அவர்களுடன் பழகிய வகையில், அவர்களின் போக்குகளை அவதானித்த வகையில் ஏற்பட்ட அனுபவங்களே.... இந்த வெறுப்பிற்கு காரணம் என நினைக்கின்றேன்.
ஆனால்... எனது மனநிலையை, பிள்ளைகள் மீது திணிப்பது சரியல்ல என்பதால், அவரின் செய்கையை பாராட்டி விட்டு, பேசாமல் இருந்து விட்டேன். :)

Link to comment
Share on other sites

 

ஹங்கேரியை சேர்ந்த தொலைக்காட்சி கமெரா பெண் ஒருவர், செர்பிய எல்லையில் அகதி ஒருவரின் காலை இடறிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹங்கேரியை சேர்ந்த N1TV என்ற தொலைக்காட்சி நிருபர்கள், செர்பிய எல்லையில் உள்ள Roszke என்ற கிராமத்தில் இருந்த அகதிகளை படம் பிடிக்க சென்றுள்ளனர்.

அந்த கிராமத்தில் holding camp எனப்படும் இடைத்தங்கல் முகாம் அமைத்து அவர்களை தங்கவைத்துள்ளனர்.

பின்னர் அங்கு பொலிசார் வந்தபோது, அந்த முகாமை விட்டு வெளியேறும் ஆர்வத்தில் அனைவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ஓட்டமெடுத்துள்ளனர்.

இதனை படம்பிடித்துக் கொண்டிருந்த அந்த கமெரா பெண், அங்கு ஓடிய இளம் பெண் ஒருவரது காலை இடறி விடுகிறார்.

இந்த சம்பவம் மற்றொரு கமெராவில் பதிவாகியுள்ளது. மேலும், கைகளில் உடைமைகளுடன் தன் குழந்தையுடன் ஓடும் தந்தை ஒருவரையும் அந்த பெண் இடறிவிடுகிறார்.

இதில் கீழே விழும் அந்த தந்தை தன் கையில் உள்ள குழந்தையுடன் சேர்ந்து நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

Stephan Richter என்ற நிருபர் அந்த பெண்ணின் செயல்களை தெளிவாக படம்படித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த விடயம் சர்ச்சையானதை அடுத்து, அந்த பெண்மணி ஹங்கேரி தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், அந்த பெண்ணின் செயல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

11350856_1625981647650616_75486161716207   11990623_1625981734317274_29662957853383

 

 

11234808_1625981794317268_37947296593604

11987106_1625981877650593_47396214562222

நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண் நிருபருக்கு, ஏன் தேவையல்லாத வேலை.sAngry_face_100-103
அதற்குள், கிருமி தொற்றாமல்  வாயை மறைத்தும் துணி கட்டியுள்ளார்.
அவரின் செயலைப் பார்த்து, பொலிசாரே... விசனம் அடைவது படத்தில் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனா.. வாற 500,000 குட்டி போட வெளிக்கிட்டால்.. விரைவில் ஐரோப்பா மத்திய கிழக்கு ஆகும். ஜேர்மனி யூதர்களுக்கு செய்தது போல.. உதுகளையும்.. கூப்பிட்டு வைச்சு கூண்டோட அனுப்பிற பிளானோ தெரியாது. tw_blush:

நேற்று பிரிட்டன் ஆளும் கட்சி எம்பி எங்கட ஆக்களுக்கு வைச்சானே ஒரு சூடு. அசைலம் அடிச்சிட்டு.. அந்த நாட்டுக்கே கொலிடே போகுதுங்க.. இதுங்க எல்லாம் அகதியான்னு..?! வெள்ளைக்காரன் குறிப்பா ஆங்கிலேயன் சிந்திக்க வெளிக்கிட்டான். எல்லாம் எம்மவர் தில்லுமுல்லால் தான். :rolleyes:

Tory MP claims he couldn't get a haircut because refugee barber went on holiday

Adam Holloway told the House of Commons his barber – a refugee seeking asylum in the UK – had gone on holiday to the country he fled from.

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/11851836/Tory-MP-claims-he-couldnt-get-a-haircut-because-refugee-barber-went-on-holiday.html

Refugees going on holiday in the country they fled meant I couldn't get a haircut, says Tory MP who claims people are pretending to be Syrian Read more:

http://www.dailymail.co.uk/news/article-3226709/Refugees-going-holiday-country-fled-meant-couldn-t-haircut-says-Tory-MP-claims-people-pretending-Syrian.html#ixzz3lJWNTg6o Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அரங்கம் என்பது வேறு 
மனிதாபிமானம் வேறு 

உண்மையை பார்க்க போனால் ...
சிரியாவில் சிக்கியவர்கள்தான் உண்மையான அப்பாவிகள் 
எதற்கும் முடியாதவர்கள்.

இங்கு அகதியாக வருபவர்கள் ஓரளவு பணக்காரகளே 
இவர்களால் ஏழையாக்கபட்டவர்கள் அங்கு மரண வாசலில்.

முள்ளிவைக்கால் நோ பயர் சொனுக்குள் இராணுவம் வேண்டும் என்றே குண்டு வீசியது 
அப்போதான் மக்கள் சிதறி ஓடுவார்கள் 
ஓடுபவர்களை பிடித்து தம்மிடம் ஓடிவந்ததாக படம் பிடிக்கலாம் என்பதால்தான் 
ஆட்லறிகளை அடித்தார்கள்.

ஓடியவர்களை புலிகள் மறித்தார்கள் 
ஒன்றாக இரூந்தால் கூட்டு கொலையை செய்யமாட்டார்கள். 
சிதறி ஓடினால் ..... அவனின் இன அழிப்பு இலகுவாகும் என்பதனால்.
இறுதியில் இன அழிப்புதான் இலகுவாக நடந்தேறியது. 

மரணம் வந்து முன்னால் நிற்கும்போது யாரும் ஓடத்தான் செய்வார்கள் 
இருந்தவர்கள் எப்பாடவது பட்டுகொள்ளட்டும் என்றும் எண்ணி இருக்கலாம் 
தங்கள் உயிரை முதலில் காப்போம்  என்றதகாவும் இருக்கலாம் 

இப்போ சிரியாவில் இருந்து ஓடுபவர்களின் 
கடந்த கால எதிர்கால நிகழ்வுகளை வைத்து 
செயற்படுவது மனிதாபிமானம் ஆகாது.

எதோ எதிலியாகிவிட்டார்கள் ....
எம்மால் முடிந்தவரை உதவி கரங்களை நீட்டுவதானாலேயே 
மனித நேயத்தை காக்க முடியும். 

ஜெர்மனியின் மனிதாபிமானம் 
பாராட்டுக்கு உரியது!

எங்களின் ஆட்களும் (அமெரிக்கா) இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சை நடத்தி இருக்கிறார்கள் 
வேலியில் போகும் ஓணானை பிடித்து யாரும் வேட்டிக்குள் விடுவானா ??
என்ற வாதம் இங்கும் நடக்கிறது 
இதையும் கடந்து .....
ஒரு 5 லட்சம் பேரை என்றாலும் அமெரிக்கா இங்கு கொண்டுவர வேண்டும் என்பதே எனது ஆசை. 

என்னை பொறுத்தவரை 
பிரச்சனைகளை கண்டு ஓடுவது கோழைத்தனம்  
நேருக்கு நேர் நின்று தீர்வு காண்பதே அறிவுதனம்.

ஜெர்மனி தனது அறிவில் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

இருக்கலாம்... சுவி. 
எனக்கு.... முஸ்லீம்களுக்கு, உதவுவதில் உடன் பாடில்லை. ஊரிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அவர்களுடன் பழகிய வகையில், அவர்களின் போக்குகளை அவதானித்த வகையில் ஏற்பட்ட அனுபவங்களே.... இந்த வெறுப்பிற்கு காரணம் என நினைக்கின்றேன்.
ஆனால்... எனது மனநிலையை, பிள்ளைகள் மீது திணிப்பது சரியல்ல என்பதால், அவரின் செய்கையை பாராட்டி விட்டு, பேசாமல் இருந்து விட்டேன். :)

நாங்கள் சிந்திப்பதற்கும் அவர்கள் சிந்திபதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் அது .

நாங்களே உலகமெங்கும் அகதிகளாக ஓடி விட்டு இனி இவங்கள் வந்தால் எங்களுக்கு பிரச்னை என்று சிந்திக்கின்றம் பாருங்கோ எங்களை அடிக்க ஆட்கள் இல்லை .குழந்தைகளுக்கு குண்டை கட்டி விடுகின்றார்களே இவங்களை எப்படி எங்கடை நாட்டிற்குள் விடலாம் என்று அவன் சிந்திக்கவில்லை .அப்படி பாராளுமன்றத்தில் பேசிய வலதுசாரிகளும் இருந்தார்கள் .

முஸ்லிம்கள் என்றால் எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை  மேற்குலக நாடுகளுக்கு நன்கு தெரியும் அவர்களை அப்படியான பயங்கரவாதத்திற்கு தள்ளுபவர்கள் யாரென்றும் அவர்களுக்கு தெரியும் .

மனிதன் ஒரு சூழ்நிலை விலங்கு போகும் இடத்திற்கேற்ப மாறிவிடுவான் .

கனடாவில் ஆழும் கொன்சர்வ்ர்டிவ் கட்சி சிரிய அகதி விடயங்களை கையாண்ட விதம் பிழை என்று கார்பரின் அரசுக்கு இரண்டு வீதம் வாக்குகள் சரிந்துள்ளது என்று புள்ளிவிபரங்கள் சொல்லுது .

நம்மவர்கள் சிந்திப்பது மற்ற மாதிரி .நல்லா இருப்பீர்கள் மக்களே .:(

Link to comment
Share on other sites

அவர்கள் அகதிகள்தான், குடியேறுபவர்கள் அல்ல!

 
 
துருக்கியிலிருந்து கிரீஸில் உள்ள லெஸ்பாஸ் தீவுக்கு வந்த அகதிகளில் ஒருவர் நிலைதடுமாறி சாய்ந்துள்ளார், குழ்ந்தை ஒன்று அழுகிறது. | படம்: ஏ.பி.
துருக்கியிலிருந்து கிரீஸில் உள்ள லெஸ்பாஸ் தீவுக்கு வந்த அகதிகளில் ஒருவர் நிலைதடுமாறி சாய்ந்துள்ளார், குழ்ந்தை ஒன்று அழுகிறது. | படம்: ஏ.பி.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா மிகப்பெரும் சாட்சியாக இருக்கிறது.

கடந்த பல மாதங்களாக ஆயிரக்கணக்கான சிரியா, ஆப்கனிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் தெற்கு சஹாராவைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் உயிர்வாழவே போராடும் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் ஐரோப்பாவை அடைவதற்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவை நோக்கிய பயணத்தின் முயற்சியில் ஆயிரக்கணக்கானவர் மாண்டு போயுள்ளனர்.

மிகவும் பீதியூட்டும் வகையிலான, துருக்கிய கடலோரப் பகுதியில் கரையொதுங்கியிருந்த மூன்று வயது அய்லான் குர்தியின் இறந்த உடல் படம், மனிதாபிமானத்திற்கு விடுக்கப்பட்ட மாபெரும் சவாலாகவே காட்சியளித்தது

ஐரோப்பா எழுப்பும் சந்தேகங்கள்

இந்த நெருக்கடி மேலும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பாவிற்கு வருவார்கள் என ஐ.நா. கணித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் இக்கணிப்பு கூறுகிறது.

குடியேறும் மக்களுக்காக பல முக்கியமான கொள்கை முடிவுகளை நோக்கி தீவிர கவனத்தை செலுத்த ஐரோப்பா ஒன்றியம் தள்ளப்பட்டுள்ள இச்சூழ்நிலையை நோக்கி உலகின் ஒட்டுமொத்த கவனம் குவிந்துவருகிறது.மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த நெருக்கடியைப் பற்றி ஐரோப்பிய தலைவர்களும் ஊடகங்களும் குடியேறும் நெருக்கடி குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஐரோப்பிய கடற்கரையை நோக்கிவருவது நல்ல வாழ்க்கையைத் தேடலாக, பொருளாதார புலம் பெயர்வாகவே அவர்களால் சித்தரிக்கப்படுகிறது. மத்திய தரைகடல் பகுதி நெருக்கடியில் தத்தளித்துவரும் நிலையில், ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் புலம்பெயர்வு குறித்த விவாதத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

தற்போது நிலவிவரும் ஐரோப்பிய சமூகத்தின் அமைப்புக்கும் நிம்மதியான வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக வருவார்களோ என 'அகதிகளை' குடியேறுபவர்களோடு ஒப்பிடுவதை அங்குள்ள சில ஐரோப்பிய தேசிய அரசியல் அமைப்புகள் தூண்டி வருகின்றன.

ஐநா அகதிகள் சட்டம்

அகதிகள் என்ற சொல்லாடல் சட்டரீதியாகவும் இதரவகையிலும் எவ்வாறு பொருந்துகிறது என்பது விரிவான ஆராய்ச்சிக்குரியது.

அகதிகளுக்கான ஐநா சபை உயர் ஆணையத்தின் 1951 அகதிகள் சட்டத்தின்படியும் 1967ஆம் ஆண்டு விதிகளின்படியும் ஒரு அகதி யார் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அதாவது எந்த ஒரு நபரும் ''இனம் காரணமாக துன்புறுத்தல் காரணமாக நன்கு உறுதிசெய்யப்பட்ட அச்சம் காரணமாகவோ, நாட்டுரிமை(Nationality) மற்றும் குறிப்பிட்ட ஒரு சமூகக்குழுவின் அல்லது அரசியல் பிரிவின் உறுப்பினர், நாட்டுக்குள் இருக்கமுடியாமல் வெளியே இருக்க வேண்டும். அல்லது அல்லது பயம் காரணமாக, குறிப்பிட்ட நாட்டின் பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும்''

அகதிகள் சர்வதேச சட்டம்

சட்டத்தில், ஒரு அகதிக்கும் ஒரு குடியேறுபவருக்கும் உள்ள வேறுபாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதன்முதலாக, 'அகதிகள் சர்வதேச சட்டத்தின்' கீழ் வேறுபட்ட மற்றும் தனித்துவமான பாதுகாப்புகளை அகதிகள் பெறுகின்றனர். சர்வதேச புகலிட சட்டத்தின் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ஆயுத மோதல்கள் காரணமாகவும், உள்நாட்டில் உருவான கொந்தளிப்பு காரணமாகவும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படும் சூழ்நிலைகளிலும் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறி தப்பித்து வாழ நினைப்பவர்களுக்கு இந்த அகதிகள் சட்டத்தின் வரையறை மேலும் விரிவடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய நபர்கள் பொதுவாக 'மனிதாபிமான அகதிகள்' என்றே குறிப்பிடப்படுகிறார்கள். அகதிகள் சட்டத்தின்படி தங்கள் நாட்டின் துன்புறுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து காக்கப்படவும் பாதுகாப்புகளைப் பெறவும் இன அல்லது மதப் பாகுபாடில்லாத வகையில் அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்பைப் பெறவும்; நியாயமான மிகச்சரியான புகலிட நடைமுறைகளை அணுகவும், நிர்வாக உதவிகளை, இன்னபிறவற்றைப் பெறவும் சட்டப்படி அகதிகளுக்கு உரிமை உண்டு.

மாறாக, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கிளம்பிவரும் அகதிகளைப் பொறுத்தவரையில் ''எங்களுக்கு அவர்கள்மீது நம்பிக்கை வரவேண்டும்'' என சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களாலும் சில ஊடகங்களாலும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றன.

அகதிகள் குடியேறுபவர்கள்தானா?

மறுபுறம், குடியேறுபவர் (தங்கள் சொந்தநாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள், முக்கியமாக ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடி, உள்நாட்டு கொந்தளிப்பு அல்லது ஆயுதமோதல், அடக்குமுறையை எதிர்த்து அங்கிருந்து தப்பியோடிவருபவராயினும்) சர்வதேச சட்டத்தின் எந்த பாதுகாப்பையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியாத சூழல் உள்ளது. குடியேறுபவர்களுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்து நாடுகள் குடியேறுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் சூழ்நிலையிலும் சொந்தக் குடியேற்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலையிலும் இப்பிரச்சனைகள் எழும்.

சட்டத்திற்கு அப்பால், இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விலும் பாதுகாப்பிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கவல்ல பொது நடத்தைகள் மற்றும் மனப்பான்மைகள் குறித்த கருத்தை வடிவமைப்பதில் விமர்சன முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருவர் புலம்பெயர்ந்தோராக இருப்பது அவரது ஒரு தேர்வாக இருக்கும்பட்சத்தில் சொந்த நாட்டிலிருந்து வந்து நல்ல வாழ்க்கையை தேடுவதற்கான தானாக முன்வந்த ஒரு தன்னிச்சையான செயல் அல்ல அது. சொந்த நாட்டில் உள்நாட்டுக் கலவரம் மற்றும் ஆயுத மோதல் அடக்குமுறை அச்சுறுத்தலிலிருந்து சுய உள்ளுணர்வின் தூண்டுதலின்பேரில் அது உருவாகியிருக்க வேண்டும்.

குடியேறுபவர்களை பிரித்தறிதல்

தவறு, சரி என்பது பின்னரே ஆராயப்பட்டாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்து வருவதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக்கூடிய, கூட்டு ஆர்வத்தைக்கொண்ட ஒன்றாகவே இந்த உலக சமுதாயம் உள்ளது. எனவே குடியேறுபவர்கள், அகதிகளோடு கலந்திருப்பதைக் தீவிரமாக கண்கண்டறிந்து அவர்களை தண்டிப்பது பெரிய விஷயமல்ல. இந்நிலையில் குடியேறுபவர்களுக்கான பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

மாறாக, சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் மத்திய தரைகடல் நாடுகளிலின் நெருக்கடிகளில் இருந்து வரும் அகதிகளைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்கிறார்கள்.

பெரும்பான்மையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் மனித உரிமை மீறல்கள் பெருகுவதாலும் மதக் கிளர்ச்சியாலும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் நாடுகளான சிரியா, எரித்திரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறார்கள்.

இது சொந்த நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு நல்வாழ்வைத் தேடி வரும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கான ஆலோசனை அல்ல. உண்மையில் பெரிய எண்ணிக்கையில் தென் சஹாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் பெருகி வருகின்றனர்.

இருப்பினும் 'குடியேற்ற நெருக்கடி' என்கிற சொல்லாடல் ஒட்டுமொத்த மத்திய தரைக்கடல் பகுதியில் எழுந்துள்ள நெருக்கடிமிக்கதொரு பிரச்சனையின் ஒட்டுமொத்த தோற்றத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியதாகத்தான் உள்ளது. ஆனால் ஐரோப்பிய தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் பெரிய அளவில் உருவாகியுள்ள நெருக்கடி உணர்வை அதன் உண்மைத்தன்மையை அவர்கள் தவறாக வழிநடத்துவதாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.

(ஜாய் மனோஜ் சான்க்லெச்சா கல்கத்தா, மேற்குவங்க தேசிய பல்கலைக்கழகத்தின் நீதித்துறை அறிவியல் பட்டதாரி, மும்பை சட்ட நிறுவனத்தில் பணியாற்றிவருபவர்.)

http://tamil.thehindu.com/world/அவர்கள்-அகதிகள்தான்-குடியேறுபவர்கள்-அல்ல/article7637762.ece?homepage=true

Link to comment
Share on other sites

அந்தப் பெண் நிருபரின் செயல் சுயமாக வெளிப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பில் அடிப்படை ஜேர்மானியர்களுக்கும் எரிச்சல்.. அந்தந்த நாடுகளுக்கும் எரிச்சல்.

ஆனால் சிரியாவில் மனிதாபிமானம் என்று பேசிவிட்டு, வரும் அகதிகளை நிராகரித்தால் இரட்டை முகம் வெளிப்பட்டுவிடும். ஆகவே சமாளிக்கிறார்கள். இந்தக் குழப்பமான, சங்கடமான நிலையை இந்நாடுகளுக்கு உருவாக்கி விட்டதில் புடின் வெற்றியடைந்துள்ளார். இனிமேல் அமெரிக்கா மீது ஒரு சிறு கறளுடன் இருப்பார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை நாடுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் நிருபரின் செயல் சுயமாக வெளிப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பில் அடிப்படை ஜேர்மானியர்களுக்கும் எரிச்சல்.. அந்தந்த நாடுகளுக்கும் எரிச்சல்.

ஆனால் சிரியாவில் மனிதாபிமானம் என்று பேசிவிட்டு, வரும் அகதிகளை நிராகரித்தால் இரட்டை முகம் வெளிப்பட்டுவிடும். ஆகவே சமாளிக்கிறார்கள். இந்தக் குழப்பமான, சங்கடமான நிலையை இந்நாடுகளுக்கு உருவாக்கி விட்டதில் புடின் வெற்றியடைந்துள்ளார். இனிமேல் அமெரிக்கா மீது ஒரு சிறு கறளுடன் இருப்பார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை நாடுகள்.

பிரான்சிலும் மக்களிடையே பெரும் கொந்தளிப்புத்தான்..

அரச மட்டத்தில் எதை எதையோ செய்கிறார்கள்ழூ

ஏற்கனவே நாடு வெளிநாட்டுக்காறரால் நிரம்பி விட்டது என எனது காது கேட்கவே பேசுகிறார்கள்..

அத்துடன் நடந்த பல பயங்கரவாதத்தாக்குதல்கள்

காவல்த்துறையின் அதிகரித்த பிரசன்னம் கட்டுப்பாடுகளால் மக்கள் ஏற்கனவே விரக்தியடைந்துள்ளநிலையில்........?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை இவர்களை ஒரு நாட்டிலும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அரபு நாடுகளில் பெரும்பாலும் நல்ல பதவிகளில் (விசேடமாக எஞ்சினியர்) இருப்பவர்கள் இந்த சிரிய/எகிப்து நாட்டவர்களே. இவர்கள் மற்ற ஆசிய இனத்தவரை மிகவும் மோசமாக நடத்துவார்கள்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடமை/மேலும் பல மனித உரிமை மீறல்களில் இவர்கள் ஈடுபடுவார்கள். செல்வந்த அரபு நாடுகளே இவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத‌போது, ஏன் ஜெர்மனி ஏற்க வேண்டும்?

Link to comment
Share on other sites

எந்த  எந்த நாட்டு அகதி எந்த எந்த நாட்டில்  அகதி அந்தஸ்து கேக்க வேண்டும் என்று   முன்னாள் அகதிகள்  :) கட்டளை போடுகிறார்கள்:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.