BLUE BIRD

Tamil Canadian Walk 2015 (தமிழ்மக்களுக்கான நடை பவனி)

Recommended Posts

உங்களால் முடிந்தளவு கலந்து கொள்ளுங்கள்

ஒரு உறவின் ஆதங்கம்

சூரியன் இப்பெயாவது சம்பூரில் அஸ்தமித்துள்ளது. இது ஒரு நல்ல சகுனம். இதைப் பார்த்தாவது தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களும் மக்களிற்கான உதவிகளை செய்ய முன் வரவேண்டும். இல்லாதுவிட்டால், மாவீரர்களின் ஆத்மா எப்பொழுதும் உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

முக்கியமாக அனைத்து உறவுகளும் இந்தக் காணொளியைக் காணத்தவறாதீர்கள்!

Share this post


Link to post
Share on other sites

 

fa3340ca-5411-4ef0-ba80-efcb9fbc9994_zps

a7ae31f2-ea99-42ec-8b9b-67757b545bd9_zps

4a9a66c3-2608-4e81-b9b2-5e3aaeaacbe8_zps

Edited by Gari
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்லமுயற்ச்சி...

ஏதாவது செய்யணும்...

Share this post


Link to post
Share on other sites
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

புலம் பெயர் தமிழர்களை ஈழத்தமிழர் விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றெழுதிய பேனாக்கு சொந்தமானவர் கூட நடை பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. நான்கு பேருடன் நடைபெறும் நடை பயணம்,ஈழம் வாழ் தமிழர்களின் நாட்டுபற்று , அழிந்த மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான தேடல்.....புலம் பெயர் தமிழர்கள் இல்லாமல் ஏதும் நடக்காது போல..........

 

 

 

Share this post


Link to post
Share on other sites
வணக்கம் 
யாழ் கள உறவுகளே 
 
இன்று நடைபெற்ற கனேடிய தமிழ் காங்கிரசின் நடைபவனி நிகழ்வில் 41பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் தற்காலிக மனைகளையும் மலசலகூடங்களையும் அமைப்பதற்கு நிதியதவி கிடைத்துள்ளது .ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 2500.00டாலார் செலவில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக திட்டம் செயல்படுத்தப்படும் .
0bd170ac-bf9b-4727-b45a-9307d5c11079_zps
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

அரசியல் சகுனிகள்/ நாதாரிகள் நேரத்துக்கு ஒருகதை கதைப்பார்கள் அண்ணே!  

அதுகளின்ரை கதையை கேட்டு நாங்கள் எங்கடை சனத்தை பேசக்கூடாது அண்ணை. 

Share this post


Link to post
Share on other sites

இலங்கை- திருகோணமலை – சம்பூர் பிரதேசம் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு இலங்கையில் ஆட்சிக்குவந்தபின்னர் மீண்டும் மக்கள் குடியமர முதல் கட்டமாக 848 ஏக்கர் தமிழர்களது சொந்த நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கே 253 குடும்பங்கள் மீள குடியமந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இக் குடும்பங்களில் 41 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்குபவை ஆகும் ( போர் நடைபெற்ற காலத்தில் கணவர்களை இழந்தவிதைவைகள்) அவர்களுக்கான நிரந்தர வீடு அமைத்து கொடுக்கும் செயல்பாட்டை கனேடிய தமிழ் காங்கிரஸ்சுடன் இனைந்து கனடா திருகோணமலை நலன்புரிச்சங்கம், கனடா தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஆகியன ரொறன்ரோவில் தொம்சன் பார்க்கில் நிதிசேர் நடை நிகழ்வு ஒன்றை செய்திருந்தது. இந் நிகழ்வில் த தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் திரு – சரவணபவன் கலந்துகொண்டு சிறப்பித்தார். கனேடிய தமிழ் காங்கிரசு தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஒருகோடி ரூபா நிதி கடந்த ஏழு நாட்களில் திரட்டபட்டுள்ளது.

மேற்படி நிதிசேர் நடை வருடா வருடம் கனேடிய தமிழ் காங்கிரசினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வாகும் – இந்நிகழ்வில் வழமையாக சேர்க்கப்படும் நிதிகள் அனைத்தும் கனேடிய மருத்துவ துறைசார் நிதித் தேவைகளுக்காக கனேடிய தமிழ் மக்கள் சார்பாகஅமைப்பினால் கொடுக்கப்படுவது வழமை – 2015 ம் ஆண்டுக்கான நடைபவனி மூலம் 13-09-15 அன்று சேர்க்கப்பட்ட ஒரு இலச்சத்து பத்தாயிரம் டாலர்களை வழமைபோலல்லாது தாயக மக்களது மனிதநேய மீழ்குடியமர்வு திட்டத்திற்காக குறிப்பாக சம்பூரில் போரினால் பாதிக்கப்பட்ட 41 விதவை தாய்மாரது வீடுகளை மீளவும் கட்டும் நற்திட்டத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.TNA-canada-1

TNA-canada-2

TNA-canada-3

TNA-canada-4

TNA-canada-5

TNA-canada-6

- See more at: http://www.canadamirror.com/canada/49078.html#sthash.UyiMjWqm.dpuf

Share this post


Link to post
Share on other sites
சம்பூரில் கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2015, 01:28.58 PM GMT ]
trinco_thandayuthabani_003.jpg
சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர். சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கனடா வாழ் தமிழ் மக்களது நிதிப் பங்களிப்பின் கீழ், சம்பூர் பகுதியில் திருகோணமலை அரசாங்க அதிபரின் ஊடாக மூதூர் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பெண்களை சந்தித்து குறித்த வீடு தொடர்பான விடையங்களை கலந்துரையாடிய அமைச்சர்,

குறித்த வீடானது 16 x 20 அடி பரப்பினைக்கொண்டதாக அமையும் எனவும் அதனுள் ஒரு அறை ஒரு சமையல் அறை உட்பட ஒரு வரவேற்பறையினைக் கொண்டதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41 வீடுகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 21 வீடுகள் எதிர் வரும் டிசெம்பர் மாதம் பூர்த்தியாக்கப்படும் என உத்தேசித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எஞ்சிய வீடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

trinco_thandayuthabani_001.jpg

trinco_thandayuthabani_002.jpg

 

http://www.tamilwin.com/

 

Edited by Gari
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
சம்பூரில் கணவனை இழந்த பெண்களுக்கான வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2015, 01:17.54 PM GMT ]
trinco_housing_001.JPG
சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர். சி.தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்று உத்தியோகப்பூர்வமாக வீட்டிற்கான அடிக்கல்லை இன்று மதியம் 12.00 மணிக்கு நாட்டி வைத்தனர்.

;

கனடா வாழ் தமிழ் மக்களது நிதிப் பங்களிப்பின் கீழ் சம்பூர் பகுதியில் திருகோணமலை அரசாங்க அதிபரின் ஊடாக, மூதூர் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வீடானது 16 x 20 அடி பரப்பினைக் கொண்டதாக அமைவதோடு அதனுள் ஒரு அறை ஒரு சமையல் அறை உட்பட ஒரு வரவேற்பறையினைக் கொண்டதாக அமைகின்றது மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41 வீடுகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,

அதில் முதற்கட்டமாக 21 வீடுகள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து எஞ்சிய வீடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

trinco_house_001.JPG

trinco_house_002.JPG

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.