Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக.

* மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன?

* சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான்.

* சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா?

* தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்?

* தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது.

* மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை.

* மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள்.

* இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள்.

* எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது; எனது வலி புரியாதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது.

* தாய்மொழியில் பெயரைக்கூட தாங்காத இனம் எப்படி வாழும்?

* மாற்று அரசியல் கட்சியாக உருவாகி வர இருந்த வாய்ப்புகளை தவறவிட்டவர் அண்ணன் வைகோ அவர்கள்.

* கலைஞர் ஒரு தமிழரா? கலைஞரை நாங்கள் தெலுங்கர் என்று சொல்லவில்லை. ஆந்திராக்காரர்களே சொல்கிறார்கள்.

*

(தொடரும்)

2) கும்மிடிப்பூண்டியில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில்..

* லஞ்சம் ஊழலற்ற அரசு 2016 இல் அமைய வேண்டும்.

* கல்வி, மருத்துவம், சாலை வசதி, சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வசதி அனைவருக்கும் இலவசம். ஏனைய இலவசங்கள் ஒழிக்கப்படும்.

 

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

 • Replies 1.7k
 • Created
 • Last Reply

3) தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

* ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் தூர்வாருதல் எனும் போர்வையில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளையை நேரில் சென்று பார்வைட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள்.

(தொடரும்.)

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம், செப்.11–

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை வழியாக பொன்னங்குறிச்சி வரையிலும் நடந்து சென்று, மணல் அள்ளப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

7c9d4540-6849-4c4b-bc68-5ad3d3c5b537_S_s

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஸ்ரீவைகுண்டம் அணை தொடங்கும் பகுதி முழுவதும் அமலை செடிகள் நிறைந்து உள்ளன. ஆனால் அங்கு தூர்வாராமல், ஆற்றில் உள்ள மணலை அள்ளுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இங்கு தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டு, ஸ்ரீவைகுண்டம் அணை தொடங்கும் பகுதியில் இருந்து முழு அளவில் தூர்வார வேண்டும்.

தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தூர்வாரும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுடன் இணைந்து போராடுவோம். அணையில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதைக் கண்டித்து, வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மணல் அள்ளும் இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

http://www.maalaimalar.com/2015/09/11092750/sand-smuggling-is-srivaikuntam.html

 

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் சீமான் வழக்கு

மதுரை, செப். 12–

c218c655-012f-452b-845a-4fe355393942_S_s

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடர்ந்த வழக்கில் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை தற்போதும் அமலில் உள்ளது.

இதை மறைத்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜோயல் என்பவர் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்றுள்ளார். இந்த உத்தரவு கிடைத்தவுடன் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அங்கு மணல் அள்ளுவதற்கு கடந்த 8.7.2015 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இது தொடர்பான ஒரு வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கிளை கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால் ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கவில்லை. மணல் அள்ளுவதையும் தடுக்கவில்லை.

அங்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளும் வேகத்தைப் பார்த்தால் தாமிரபரணி ஆற்றுக்கு பேரழிவு ஏற்படும். எதிர்கால தலைமுறை பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே, அங்கு மணல் அள்ளுவதற்கு நெல்லை பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தடுப்பணையில் சகதி படியாமல் இருக்க இயற்கையாகவே மணல் வாரி மதகுகள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலு மணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்பு இந்த மனு மீதான விசாரணையை வருகிற 29–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

http://www.maalaimalar.com/2015/09/12095813/seeman-case-filed-madurai-high.html

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அருமையான இணைப்புக்கள்.

நாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி !

நாற்றிசை உலகும் போற்றி மெய் சிலிர்க்க தழைக்குது தமிழ்குடி!
 
மானம் உயிர் மூச்சாய் வீரம் புயல் வீச்சாய் வாழும் தமிழ் மாந்தர் குடி!
தேனின் இனிய தமிழ்மொழியும் தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி!
 
சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!
 
(சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!)
 
கொடுமை ஆயிரம் குமுறல் ஆயிரம்!
அடிமை நிலை வாழ்வில் இனியுமா!
 
படைகள் ஆயிரம் தடைகள் ஆயிரம்!
எனினும் எங்கள் மண் படியுமா!
 
பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!
 
(பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!)
 
புலிக்கொடி வணங்கி நாம் துடிதெழுவோம்!
புயலாய் நெருப்பாய் நாம் வெடிதெழுவோம்!

 

Link to comment
Share on other sites

மீனவர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறதா இலங்கை? - சீமான்

ஏன் சந்தேகம்.. உண்மை அதுதானே.. :unsure:

 

 

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணை: வைகோ எச்சரிக்கை

Tamil_News_large_1290480.jpg

துாத்துக்குடி: “துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை துார்வாருவதில் அரசு தாமதம் செய்தால், நாங்களே களம் இறங்கி துார் வாருவோம்,” என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை துார் வார கோரி ம.தி.மு.க., தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் ஜூன் 11ல் துார் வார உத்தரவிட்டது. அரசு தாமதம் செய்ததால், வைகோ ஜூலை 6 ம் தேதி போராட்டம் எனஅறிவித்தார். ஜூன் 30 முதல் அணையை துார் வாரும் பணியை அரசு துவக்கியது. பணிகளை பார்வையிட்ட வைகோ கூறியதாவது: அணை துார் வாரும் பணியில் வேகம் இல்லை. இது வரை நான்கு மணல் அள்ளும் இயந்திரங்கள் மட்டுமே பணியில் உள்ளன. 10 மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், நாங்களே களம் இறங்கி பணிகளை செய்வோம். அணையை எட்டு அடி ஆழப்படுத்தும் போது தண்ணீரை தேக்கி மூன்று போகம் விளைவிக்க முடியும்.

முல்லை பெரியாறு, அமராவதி,காவிரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, என இந்த மக்களுக்கு ம.தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையை துார் வார பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததால், தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போன நீர் நிலைகளை எல்லாம் துார் வார வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.தமிழக நீர் நிலைகளை துார் வாரக்கோரி போராட்டம் நடத்த, அறிவிப்பு வெளியிடப்படும், என தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1290480

இந்தச் செய்தி வந்தது ஜூலை 07, 2015. ஆனால் இன்று நடப்பதோ அந்த அணைக்கட்டுப் பகுதியில் மணற்கொள்ளை. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

ஏழை பாழைகளின் தெருமுனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் - குளித்தலை tw_blush:

இ்ன்று (16-9-2015) புதன்கிழமை மாலை குளித்தலை சட்டமன்ற தொகுதி மத்தகிரி ஊராட்சி மத்தகிரியில் - கொள்கை விளக்கப் பிரச்சாரம் மற்றும் நாம் தமிழர் கட்சி (2016) வேட்பாளர் சீனி.பிரகாசு அவர்கள் அறிமுக கூட்டத்தில் திருப்பூர் சீமா.கண்ணன் மற்றும் திருப்பூர் சுடலையின் அனல் தெரிக்கும் உரை வீச்சு.
கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு அளித்தனர் கிராம மக்கள்

12030461_1696107287284571_29379848627876

12006614_1696107200617913_44367971676294

12038827_1696107250617908_63034910792999

12010536_1696107237284576_33417649975296

https://www.facebook.com/prakash.ks.503/posts/1696108143951152

Link to comment
Share on other sites

17-09-2015: தற்பொழுது இராமநாதபுரம் மாவட்டம் இராசாசிங்கமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.

thirunavukarasu.jpg

Link to comment
Share on other sites

செப். 11, 2015: பன்னாட்டு விசாரணையைக் கோரி நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம். அதைத் தொடர்ர்ந்து சீமான் வழங்கிய செவ்வி.

* தமிழக அரசு மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை.

 

 

செப். 16, 2015: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Link to comment
Share on other sites

17.09.2015: திருவாடானை தொகுதி சட்டமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வனின் தேர்தல் உரை.

 

 

Link to comment
Share on other sites

23.09.2015: ஐயா நல்லகண்ணு, சீமான் உட்பட 200 பேர் கைது..!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீமானைப் போன்ற... தன்மானம், தமிழ் இனப் பற்று கொண்ட தலைவர்களே.... இப்போதைக்கு தமிழர்களுக்கு அவசர தேவை.
திராவிடம் பேசும்.... கொழுத்த அரசியல் கட்சித் தலைமையும், பிராமணமும் தமிழ் நாட்டை விட்டே... ஒழிக்கப் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

ஸ்டாலினின் "நமக்கு நாமே" பயணம் பயன் தருமா? - கேள்வி நேரம் நிகழ்ச்சியில் விவாதம்
 
பங்கேற்பாளர்கள்:
 
1) பரந்தாமன் (திமுக)
2) அறிவுச்செல்வன் (நாம் தமிழர்)
3) சாரதா (ஊடகவியலாளர்)
4) காசிநாத பாரதி (அதிமுக)
 
நெறியாளர்: செந்தில்
 
பகுதி: 1

பகுதி: 2

பகுதி: 3

பகுதி: 4

பகுதி: 5

 

Link to comment
Share on other sites

தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

21.09.2015: நேற்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கூட்டமைப்பில் உள்ள நாரையூரணில் என்ற சிற்றூரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . tw_blush:

12032966_629102817231350_283740936000504

https://www.facebook.com/photo.php?fbid=629102817231350&set=a.277501782391457.1073741833.100003949126848&type=3&theater

20.09.2015: மக்கள் சந்திப்பில் இன்று நாகை சட்டமன்ற தொகுதி, திருமருகள் ஒன்றியம் திரு பயந்தாங்குடி I ஊராட்சியில் வீர போகம் , நித்தியப்பேட்டை, காமராசபுரம், கடைவீதி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் அண்ணன் தங்க . நிறைந்த செல்வம்

12047021_628718397269792_800207579613881

12004756_628718383936460_664770370903975

12038415_628718303936468_315305208880036

12027766_628718343936464_752331369765841

12039672_628718283936470_189190720564824

https://www.facebook.com/photo.php?fbid=628718397269792&set=pcb.628718540603111&type=3&theater

 

Link to comment
Share on other sites

மாப்பேடு சதனந்தபுரம் செங்கல்பட்டு

12043180_628717620603203_684615419845855

12039476_628717573936541_895267108979865

11951367_628717570603208_458062220685262

 

Link to comment
Share on other sites

கதிரவன் இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணல்..!

 

Link to comment
Share on other sites

இந்தியாவின் லஞ்ச ஊழல் நிர்வாகம்: நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கான‌ உரையாடல் நிகழ்ச்சி..!

பாகம் 1:

பாகம் 2:

பாகம் 3:

பாகம் 4:

பாகம் 5:

 

Link to comment
Share on other sites

அண்மையில் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு  வழங்கிய‌ பதில்கள்..!

 

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டத்தை செயல்படுத்துவோம் - சீமான் உறுதி

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவாலா காடுகளில் உற்பத்தியாகிறது பாண்டியாறு. சிரபுஞ்சிக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகமாக மழை பெய்யும் இடம் தேவாலா. இங்கே ஆண்டுதோறும் தோராயமாக 7,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது.

இங்கு உற்பத்தி ஆகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள். பாண்டியாறு மேற்கு நோக்கி சென்று கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கள்ளிக்கோட்டைக்கு அருகில் கடலில் பயன்பாடு இல்லாமல் கலந்து வருகிறது. தமிழ்நாட்டில் உருவாகி கேரளக் கடலில் கலக்கும் பாண்டியாறை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பார்வையிட்டார்.

அங்குள்ள மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "1967 ஆம் ஆண்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கேரளா அரசுடன் இணைந்து போடப்பட்ட பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டம் வனச்சூழல் மற்றும் கேரளா அரசின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்குள்ள காடுகளில் அதிக தீமை விளைவிக்கக்கூடிய வெளிநாட்டிலிருந்து வந்த அந்நிய செடி பார்த்தீனியம் மண்டிக்கிடக்கிறது.

காட்டிலும் விலங்குகளுக்கு நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. அதனாலேயே யானைகளும் மற்ற விலங்குகளும் விவசாய நிலையங்களை தேடி வரும் சூழல் உருவாகிறது. அதை எல்லாம் சரிசெய்யாமல், பாண்டியாறைத் திருப்பினால் வனச்சூழல் கெடும் என்பது ஏற்கக்கூடியதல்ல. வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பினால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும். நீராதாரம் மட்டும் இன்றி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறுமென்பதால் கேரள அரசுடன் தமிழக அரசு சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் - மின்சாரம் பங்கீடு என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு 18 டி.எம்.சி அளவிற்கு தண்ணீரும் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பங்கும் கிடைக்கும் .பவானி பாசனங்களுக்கு இருந்து வரும் நீர்ப்பற்றாக்குறையும் நீங்கும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றவும் இது ஏதுவாக இருக்கும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம்" என்றார்.

12049144_633203996821232_219734129995266

12112072_633204006821231_612355229513311

 

12088345_633204000154565_399989421530213
//https://www.facebook.com/jalalu.deen.129/posts/633204260154539?pnref=story//

 

 

Link to comment
Share on other sites

கோவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்..

* வேலைத்திட்டங்களை குறும்படங்கள் மூலம் எடுத்துச் செல்கிறோம்.

* தேர்தல் அறிக்கையை நாம் கொடுக்கவில்லை. ஆட்சியின் செயற்பாட்டு வரைவை மட்டுமே கொடுக்கிறோம்.

* நாட்டின் வளங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனிப்பெரும் முதலாளிகளுக்கானதாக இருக்கக்கூடாது.

* நடிகர் சங்கத் தேர்தல் குறித்து உங்கள் கருத்தென்ன?

* திராவிடப் பன்றிகளில் உண்ணிகள் போல ஒட்டிக்கொண்டு இருந்து பதவி அனுபவித்தவர்களதான் மாற்று அரசியல் கூட்டணியில் இருக்கும் கட்சிகள்.

* பணமிருப்பவன் மட்டும்தான் அரசியல் செய்யலாம் என்கிற நிலையைத்தான் இதழியலாளர்களான‌ நீங்கள்  விரும்புகிறீர்களா?
* வயிறு, உயிர், அறிவு, பயன் ‍ இவைதான் நாம் தமிழரின் வேலைத்திட்டங்கள்.

* தனித்து நின்று காங்கிரஸ், பாஜக ஒரு இடமும் வெல்லாது. வெல்ல விட மாட்டோம்.

* தமிழர்கள் இந்திய அடிமைகள். தமிழரிடம் அதிகாரம் சிக்கும்போது மட்டுமே இந்தியம் தமிழர்களை மதிக்க ஆரம்பிக்கும்.

* முன்பிருந்த சீமான் இப்போது தொய்வடைந்து விட்டாரா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 22 ஜனவரி 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, நிறைமதி (இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுறது.) சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.   "சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது" சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, பொங்கல் கொண்டாட்டத்தின்போது... இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா? என்று கேட்டபோது, "இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்று நிறைமதி கூறுகிறார். ‘’ஓடும் வாழ்க்கை பிடித்திருக்கிறது’’ - சாதிக்க போராடும் வீராங்கனை நந்தினியின் கதை ‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன? இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா? தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்? உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, "தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது. பட மூலாதாரம்,FACEBOOK அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது. எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்" என்று விவரிக்கிறார். "247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்" முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, "முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது" என்று அவர் கூறுகிறார். "தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்" என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி. பட மூலாதாரம்,KAYALVIZHI   படக்குறிப்பு, கயல்விழி படித்த பிறகு என்ன செய்வார்கள்? தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி. "எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது. பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஆசிரியருடன் மாணவர்கள் இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது" என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். "நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்" என்று கயல்விழி கூறுகிறார். மாணவர் மகிழன் பேசும்போது, "நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்" என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார். "தாய்மொழி பாசம் அதிகம்" பட மூலாதாரம்,FACEBOOK சீனா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்பதையும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதையும் பார்த்து தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது, சமீபத்திய ஆண்டுகளாக பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக படிப்புவரை ஆங்கில வழி கல்வியின் தாக்கமே தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நிறைமதியிடம் கேட்டபோது, "தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்து மீண்டெழுந்து வருகிறது. இருந்தபோதிலும், உலகின் செம்மொழிகளில் முக்கிய மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும். தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்" என்று நிறைமதி நிறைவு செய்கிறார். (இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) https://www.bbc.com/tamil/global-46945186
  • வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு By NANTHINI 03 FEB, 2023 | 11:44 AM வவுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பல தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணிநேர காலப் பகுதியில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/147325
  • ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது ஃஎப்.பி.ஓ(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.   இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 2,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது. இந்த முடிவு "தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார். தொடர் சரிவில் அதானி குழுமம் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார். அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?30 ஜனவரி 2023 அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்30 ஜனவரி 2023 ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ் - சொன்ன காரணம் என்ன?2 பிப்ரவரி 2023 என்ன நடந்தது? பட மூலாதாரம்,REUTERS அதானி குழுமம் பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த அதானி குழுமம், “தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது,” என்று கூறியிருந்தது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதானி குழுமத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஏழு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகி்ன்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதானி குழுமத்தில் பல இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சில வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயை கடனாக அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. சரிவில் இருந்து எப்போது மீளும்? பட மூலாதாரம்,REUTERS தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனத்தின் போக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான சதீஷ், அதானி நிறுவனத்தின் பங்குகளில் 20% வரை பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாகவும், வெளியில் இருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாகவும் தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாகவும், அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றதன் காரணமாகவும் அதானி எண்டர்பிரைஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருகின்றன. இதன் தாக்கம் சில்லறை முதலீட்டாளர்களிடம் தொடர்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது சிக்கலானது என்று கூறினார். இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் நம்பிக்கை மிகுந்தவையாகவும், ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தது. ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட விளைவைத் தடுக்கும் வகையில் சந்தையில் இழந்த நம்பிக்கையைப் பெறும் விதமாக அதானி தனது நிறுவனத்தின் ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றாலும், சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனம் பெற்றுள்ள கடன்கள் தான். மொத்த கடனில், 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை காப்பீடு நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களாக உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் அதானி குழுமத்திற்கு இருக்கும் அதிக கடன்களைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் அந்த நிறுவனத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படும்போது பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதே போலத்தான் இப்போது நடந்து வருகிறது," என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cy6j048pe16o
  • ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 12:16 PM நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக  குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்தனா நடத்தி குறித்த மிருக துஷ்பிரயோகம் தொடர்பில் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து  ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரந்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி   ஆஷு மாரசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147335
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.