Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

ஐ.நா முன்றலில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ உணர்வுடன் ஆரம்பமானது பேரணி

Recommended Posts

un_tamil_2192015_6.jpg
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம்,

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப் பேரணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

un_tamil_2192015_1.jpg

un_tamil_2192015_2.jpg

un_tamil_2192015_3.jpg

un_tamil_2192015_4.jpg

un_tamil_2192015_5.jpg

un_tamil_2192015_6.jpg

un_tamil_2192015_7.jpg

un_tamil_2192015_8.jpg

un_tamil_2192015_09.jpg

un_tamil_2192015_10.jpg

un_tamil_2192015_11.jpg

un_tamil_2192015_12.jpg

http://www.tamilwin.com/show-RUmtyJRVSVip6A.html

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

இன அழிப்புக்கு நீதி கேட்டு போகைக்குள்ள கூட தலைவரையும் காவிச் செல்கிறார்கள்

Share this post


Link to post
Share on other sites

இனத்தின் தலைவனை தானே தாங்கி செல்கிறார்கள். இல்லாட்டி ஐநா பிடுங்கத்தானே போகுது.

இங்கே யாரும் புலிகளை விசாரிக்கவேண்டாம் என்று கோசம் எழுப்பவில்லையே. விசாரி.....இரண்டுபகுதியையும் விசாரி....குற்றவாளிகளுக்கு தண்டணையை குடு என்று தான் கேட்கிறோம்.

போர்க்குற்றத்தில் புலிகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதைவிட ஐனாவிட்கும் உண்டென்ற கசப்பான உண்மை புரியுமாக இருந்தால் அல்லது ஏற்றுகொள்ளக்கூடிய மனப்பாங்கு வருமாக இருந்தால் இப்படியான குழப்பங்கள் வராது.

ஒருசிலர் ஏன் வீனாய் குழப்புகிறார்கள் என்று சிந்திக்கிறார்கள், அதில்கூட தவறில்லை.......ஆனால் அதையே குரோதநோக்குடன் திரிபவர்கள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அங்குதான் தப்பு நடக்காமல் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 

Share this post


Link to post
Share on other sites

 • Similar Content

  • By தமிழரசு
   கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
   அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
   அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
   இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் படங்களை ஏந்தியவாறு உள்ளதாக அவர் கூறினார்.
   மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வுகள் இன்றைய தினம் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

    
   கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

   இதேவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மேலும் பல அரசியல்வாதிகள் பிரசன்னமாகியுள்ளனர்.
   அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முன்னோக்கி வருகைத் தந்து, அரச மரத்தடி சந்தியில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
   இதனால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

   http://www.tamilwin.com/show-RUmuyBTcSWjwzC.html
  • By தமிழரசு
   விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று விடுத்துள்ளது.
   இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
   ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
   புலிகள் அமைப்புடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் அவர்கள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
   2015ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் சிலவும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது.
   இரண்டாம் இணைப்பு
   மைத்திரி - ரணில் ஆட்சியிலும் கடத்திச் செல்லுதல் மற்றும் இரகசிய சித்தரவதை கூடங்களில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து குற்றம் சுமத்தியுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பை வைத்திருந்த வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் இலங்கைக்கு திரும்ப செல்வது ஆபத்தானது என எச்சரித்துள்ளது.
   எந்தளவுக்கு விலகியிருந்தாலும் மிக நீண்டகாலமாக இருந்தாலும் கீழ் மட்ட செயற்பாட்டளராக இருந்தாலும் விடுதலைப் புலிகளுடன் ஏதேனும் தொடர்புகளை கொண்டிருந்தால், திரும்பி ஊருக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என யஷ்மின் சூகா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் இருப்பாரானால் அவர் கடத்திச் செல்லப்படவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பாரதூரமான ஆபத்து காணப்படுகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
   அதேவேளை தற்போதைய ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 பேர், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாலியல் சித்திரவதை விபரிக்கும், பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்ற அமைப்பு, மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 7 பேர் இவ்வாறான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
   அதேவேளை சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் சித்தரவதை கூடங்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி அவை தொடர்பான வரைப்படங்களுடன் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ‘Silenced: survivors of torture and sexual violence in 2015’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள 45 பக்கங்களை கொண்ட அறிக்கையில், மேலும் 5 பேர் அனுபவித்த பாலியல் வன்முறை அடிப்படையாக கொண்ட சித்திரவதை கூடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது.
   இந்த இரண்டு அமைப்புகளுக்கு கடந்த வருடம் 32 பேர் தகவல்களை வழங்கியுள்ளனர்.
   பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான தமிழர்களில் பெரும்பாலானவர்களின் மூன்றில் இரண்டு வீதத்தினர் ஆண்கள் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பேச்சாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் கூறியுள்ளார்.
   இவர்களில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   அறிக்கையின் படி இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களே இந்த பாலியல் வன்முறைகளை செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்தவர்களில் புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
   இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்துறையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக கருத வேண்டும் என சித்திரவதைகளில் இருந்து விடுதலை அமைப்பு கூறியுள்ளது.
   தொடர்ந்தும் 4 வருடங்களாக நடந்தது போல், 2015 ஆம் ஆண்டிலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இலங்கையில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
   இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவு சித்திரவதைகளை மேற்கொள்வது குறித்த மருத்துவ ரீதியான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாக அந்த அமைப்பின் பேச்சாளர் சோன்யா ஸ்கீடிஸ் தெரிவித்துள்ளார்.
   விசாரணை நடத்திய நபர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கைகொடுக்கும் புகைப்படம் ஒன்றும் சித்திரவதை கூடத்தில் இருந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
   வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்கள் பற்றி வேவுப்பார்க்கப்படுவதுடன் குறிப்பாக வன்னியில் இரந்து தகவல்களை வழங்கும் தமிழ் ஒற்றர்கள் அடங்கிய விரிவான வலையமைப்பும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
   நாட்டுக்குள் சென்ற ஒருவரை கடத்திச் செல்லும் முன்னர் அரச புலனாய்வு சேவைகள் சில நாட்கள் தயார் நிலையில் இருக்கும் எனவும் விமான நிலையத்தில் இருந்து ஆபத்து இன்றி வெளியேறுவது எதிர்கால பாதுகாப்புக்கான உத்தரவாதம் அல்ல என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
   மேலும் வெள்ளை வான் இன்னும் செயற்பாட்டில் இருப்பதான் கவலைக்குரிய விடயம் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் யஷ்மின் சூகா கூறியுள்ளார்.   http://www.tamilwin.com/show-RUmuyBTcSWjv7D.html
  • By தமிழரசு
   வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
   இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும் மேலும் மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

   குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்ட 468 ஏக்கர் நிலப்பகுதியில் வறுத்தலை விளான், தையிட்டி, பளை வீமன்காமம் வடக்கு, தெற்கு பகுதிகளை பார்வையிட்டிருந்தார்.
   இதன்போது மீள்குடியேறியுள்ள தமக்கான வீட்டு திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
   இதேவேளை,  மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண சபைக்குரிய வீதிகள் மற்றும் காணி பிணக்குகள், வீட்டுத்திட்டம், வைத்திய வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொடுக்குமாறு பிரதேச செயலர் சிவமோகனன் கோரிக்கை விடுத்துள்ளார்.
   இரண்டாம் இணைப்பு
   விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் யாழ்.அரசாங்க அதிபர்
   யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தேவைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டிள்ளார்.

   கடந்த 29ம் திகதி வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 468 ஏக்கர் பொதுமக்களின் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் மாவட்டச் செயலரின் பணிப்பிற்கமைய வீதிகள் துப்புரவு செய்யும் பணிகள், மற்றும் காணிகளை அடையாளம் காணும் பணிகள், மீள்குடியேறும் மக்களுக்கான குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   இந்நிலையில், இவற்றை மாவட்டச் செயலர் பார்வையிட்டுள்ளதுடன் மீள்குடியேற்றத்திற்கு வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.


   http://www.tamilwin.com/show-RUmuyBTbSWjv3A.html
  • By தமிழரசு
   சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
   பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார்.
   ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
   இதற்கிடையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
   ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை ஆணைகுழுவில் ஆஜராகினார் என அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
   கோத்தபாய கைது செய்யப்படலாம்?
   ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு சட்டவிதி முறைகளுக்கு மாறாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
   இதனடிப்படையில்,  இது சம்பந்தமான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
   பாரதூரமான மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு சட்டவிதிகளுக்கு மாறாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டமை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
   ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் 89 துப்பாக்கிகளே சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
   அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையானார்.
   ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கோத்தபாய ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
   இன்றைய தினம், பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
   ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பான முறைப்பாடு சம்பந்தமாக இன்றைய தினம் மேலும் 7 பேர் ஆணைக்குழுவின் ஆஜராகியுள்ளனர்.
    
   http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx0G.html