Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிலவில் நிரந்தர ஆய்வு மையம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நிலவில் நிரந்தர ஆய்வு மையம்

வாஷிங்டன், டிச.6:

நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது:

சந்திரனுக்கு தனித்தனியாக மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்வதை விட, அங்கு நிரந்தர மையம் அமைத்து ஆய்வு செய்வதுதான் சிறந்தது என நாசா விஞ்ஞானிகள் குழு முடிவு செய்துள்ளது. சந்திரனின் வடதுருவம் அல்லது தென்துருவத்தில் ஆய்வு மையம் அமையும். இப்பகுதியில் சூரிய வெளிச்சம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.

இதன் மூலம் ஆய்வு மையத்துக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் எளிதில் பெற முடியும். அதோடு இந்த இடத்துக்கு அருகில் நிரந்தர இருளான பகுதியும் உள்ளது. இங்கிருந்து ஐஸ்கட்டிகளை பெறமுடியும்.

மின்சாரம், நீரை எளிதில் பெற வசதியாக சந்திரனின் துருவப் பகுதியில் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

இங்கிருந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவது பற்றி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். சந்திரனில் முதல் முறையாக மனிதன் கால் பதித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேர் கொண்ட குழு சந்திரனுக்கு மேற்கொள்ளும் பயணம் 2020ம் ஆண்டில் தொடங்கும். இவர்கள் சில நாள் தங்கியிருந்து ஆய்வு மையம் அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவர். அதற்கு முன் ரோபோக்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இப்போது, விஞ்ஞானிகள் நிரந்தரமாக தங்கியிருப்பது போல், 2024ம் ஆண்டிலிருந்து நிலவிலும் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஷானா டேல் தெரிவித்தார்.

dinakaran.com

dn061206e1140120cnirc7.jpg

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் போல சந்திரனில் நிரந்தர ஆய்வு மையம் ஏற்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது. இதற்காக 2024ம் ஆண்டிலிருந்து சந்திரனில் விஞ்ஞானிகள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரனில் விஞ்ஞானிகள் 2024ம் ஆண்டில் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகள் பற்றிய கற்பனை கிராபிக்ஸ் படம்தான் இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது.  எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை. இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது. கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/113705
  • ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த  தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அத்தோடு மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.   https://www.virakesari.lk/article/113710  
  • சூடானில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சி தோற்கடிப்பு சூடானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சதி முயற்சியை அடுத்து சூடானிய தலைநகர் கார்டூம் தெருக்களில் இராணு டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஓம்துர்மனில் உள்ள அரசு வானொலியை கட்டுப்படுத்தும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை காலை இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சதித்திட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டிடத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது" என்று அந் நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதாரங்கள் AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளன. சதித்திட்டத்தை திட்டமிட்ட அதிகாரிகளை இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது.   https://www.virakesari.lk/article/113724  
  • உயர்தர மாணவர்களுக்கு விரைவில் பைஷர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு   இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கியுள்ளன என்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.   https://thinakkural.lk/article/138670  
  • என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.