Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP

Recommended Posts

//அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார்//

கொடுத்த வைச்சனிங்கள் கறுப்பிங்க :lol:

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

அடுத்தவர் Basement இல Fast track போடுறதிலும் சொந்த விடயத்தில Basement ல இருக்கிறது மேல் பாருங்கோ....! அடுத்தவன் நினைக்கக் கூடாது என்ர Basement இல்லாட்டி இந்த Track அம்போ என்று..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதநாட்டியமே கடன் வாங்கப்பட்டதுதானே.. போத்துக்கீசரின் பொப்பிசையை கொப்பியடிக்கலாமாம்.. கறுப்பின மனிதர்களின் இசையை கூடாதாம். என்னவோப்பா..

ஆனால் ஒண்டு ஆரும் எங்கடை பெடியள் விஜயின் குத்தாட்டம் ஒன்றை கொப்பியடித்து ஒரு பாடல் செய்து அதை இங்கு நாரதரோ குறுக்ஸ் இவையளில ஆரோ போட்டிருந்தால் நெடுக்ஸ் சொல்லப்போவது.. ஏன் இவையள் விஜயை கொப்பியடிக்கினம் எண்டு தான்.

ஏனெனில் நெடுக்ஸ் தான் எந்த கருத்துக்கு பதிலெழுதுகிறார் என்பதை விட யார் எழுதிய கருத்துக்கு என்றே பாக்கிறார்.

இதே மலேசிய நடனத்தை இங்க இட்டு... இதென்ன காப்பிலிகளின் நடனம் எண்டு நாரதர் அதனை மோசமாக விமர்சித்திருந்தால்.. இதே.. இதே நெடுக்ஸ் அந்த நடனத்திற்கு ஆதரவாக தனது வாதங்களை முன் வைத்திருப்பார்

இலங்கையின் பொப் வடிவத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் பொப் இசை வளர வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இன்றும் இருக்கிறது. ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. போர்த்துக்கேய வடிவில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட வடிவம் இலங்கையின் பொப் வடிவம்.

இது காப்பிலின்ர ஊத்தைப் பாட்டுகள் போலவே நடையும் உடையும் ஆடலும்...போதாக்குறைக்கு தமிழையும் உடைச்சு விழுங்கி சாப்பிட்டு துப்பி...தேவையா உதுகள்...! தேவையானவை கிளாப் பண்ணிட்டு இருங்கோ. நமக்குத் தேவை என்றால் காப்பிலிட ஒறிஷினல் சிடிலையே கேட்டு ஆடிக்கிறம்.

இதென்ன ஈழத்து அரசியல்வாதிகள் போல...நாரதர் குறுக்குஸ் ஏதோ பெரிய மனிதர்களா..அவர்களின் கருத்தைப் பார்த்து கருத்து வைச்சிட்டு திரியினம் என்றது போல அவைக்கு காவடி எடுக்காம பேசாமல் நீங்கள் வந்த காவடியை ஆடி முடியுங்கோ.

இவை இங்க களம் பூராவும் தான் ஒட்டினம். எல்லாத்துக்கும் எழுதிட்டு இருக்கிறமோ. ஆட்சேபிக்க வேண்டியவற்றை கருத்துக்களால் ஆட்சேபிக்கிறம். வரவேற்க ஒன்றும் இன்னும் உருப்படியா வைச்சதாத் தெரியல்ல. வைச்சா வரவேற்பம். :P :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

உங்கட கண்டு பிடிப்புக்கு சபாஷ் கிருபன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=7or7x41yDu0

கறுப்பி அக்கோய்...என்ஜோய்...கிளாப் கிளாப்... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=DlV2ZBh7bf0...ted&search=

இங்கு களத்தில் குருவிச் சண்டை ... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கண்டு பிடிப்புக்கு சபாஷ் கிருபன் சார்

ஒரு குட்டிக்கதை... ஒரு பாழ் கிணற்றுக்குள்ள இரண்டு தவளைகள். இரண்டுக்கும் கிணறுதான் இராட்சியம். அதுகளிற்குள் ஒருவருக்கு மற்றவர் தலைவர் என்ற தலைக்கனம் வேறு. அது முற்றியிருந்த வேளையில் பெரும் மழை. கிணறு வெள்ளம் முட்டியது. இராச்சியத்தை விட்டு வெளில போகவே விருப்பாத இரண்டு தவளைகளும் கிணற்றோடே தங்கிவிட்டன. வெள்ளத்தோடு வந்தது மூன்றாந் தவளை. வந்ததும் கிணற்றைப் பார்த்துச் சொன்னதாம் சபாஷ் இது என்ன பிரமாதமான உலகு என்று..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கண்டு பிடிப்புக்கு சபாஷ் கிருபன் சார்

நெடுங்கால நண்பராச்சே. தெரியாமலா போகும்? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டிக்கதை... ஒரு பாழ் கிணற்றுக்குள்ள இரண்டு தவளைகள். இரண்டுக்கும் கிணறுதான் இராட்சியம். அதுகளிற்குள் ஒருவருக்கு மற்றவர் தலைவர் என்ற தலைக்கனம் வேறு. அது முற்றியிருந்த வேளையில் பெரும் மழை. கிணறு வெள்ளம் முட்டியது. இராச்சியத்தை விட்டு வெளில போகவே விருப்பாத இரண்டு தவளைகளும் கிணற்றோடே தங்கிவிட்டன. வெள்ளத்தோடு வந்தது மூன்றாந் தவளை. வந்ததும் கிணற்றைப் பார்த்துச் சொன்னதாம் சபாஷ் இது என்ன பிரமாதமான உலகு என்று..! :P :lol:

அகண்ட உலகத்தினைப் பார்க்கும் நாம் சிலரைப் போல் கிணற்றுக்குள் இல்லை என்று சொல்லியதற்கு நன்றிகள்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகண்ட உலகத்தினைப் பார்க்கும் நாம் சிலரைப் போல் கிணற்றுக்குள் இல்லை என்று சொல்லியதற்கு நன்றிகள்.. :P

இப்படித்தான் அந்த பாழ் கிணற்றுத் தவளைகளும் எண்ணிக்கொண்டிருக்கின்றன. இதுதான் அகண்ட உலகம்..அதில் தான் நாங்கள் சஞ்சரிச்சுக் கொண்டிருக்கின்றோம் என்று. அகண்ட உலகம் என்பதற்கான உங்கள் விளக்கம் என்பது மேற்குலகத்தைப் பின்பற்றுதல் என்பதாகக் கூட இருக்கலாம்..அதுவும் ஒரு பாழ் கிணறுதான்.. பல தவளைகள் அங்கும் இராச்சியம் என்ற படி.................அகண்ட உலகம் என்ற படி............ :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் உச்சரிப்பு நன்றாக இருக்கின்றது. குத்தாட்டம் போட்டு, தமிழ் என்று அசிங்கப்படுத்துவதை விட, இந்தப் பாடலைப் பாராட்டலாம்.

Link to comment
Share on other sites

புதுவித இசைகளை உருவாக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் வெளிநாட்டவரின் இசைதான் சிறந்தது போல் பாவனை செய்வதுதான் அடிமைத்தனத்தின் உச்சம்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பலர் ஈழம் எங்கிருக்கிறது என்றுதெரியாததுபோலத்தான் நடந்துகொள்கிறார்கள். நாலு கழுதை வயதுவரை ஈழத்தில் இருந்துவிட்டு இப்போது எதுவுமே தெரியாததுபோல நடிப்பது நகைப்புக்குரியது. அதேபோலத்தான் நமது பாரம்பரிய இசைகளைக் குறை கூறுவதும் வேற்று இசைகளை சிரமப்பட்டுக் கேட்பதும் இருக்கிறது.

தமிழர்கள் கறுப்பர்களைப் போல் நடந்துகொள்வதை சிங்கப்பூரிலும் கண்டாகிவிட்டது. இது எப்படி வேலை செய்கிறது என்றால், வெள்ளைக்காரனைக்கண்டால் எங்கட தம்பிமாருக்கு பூட்ஸ் துடைக்கவேணும் போல இருக்கும்போல. :P அதனால, வெள்ளைக் காரனை எதிர்க்கக் கூடியவன் கறுப்பன். அதனால் அவர்களைக் கொப்பி பண்ணுகிறார்களாக்கும். <_<

எப்போது ஒருவன் தன் சுய அடையாளத்தை இழக்கத் துணிகிறானோ, அன்றே தன் சுயமரியாதையையும் இழக்கிறான்.

இளயராஜா இசைப்பது தமிழரின் பாரம்பரிய இசையா? இசைக்கு மேற்கு கிழக்கு என்று இல்லை.

மனதுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று தான் இருக்கும்.இளையராஜா செய்யும் கலவையை விடவா இந்த இளஞர்கள் செய்துள்ளார்கள்?

இளையராஜ தலையில் பட்டை சாத்தி சிம்பணி செய்து கலவை செய்தால் ஏற்பீர்கள் இந்த இளஞர்கள் செய்தால் வெளி நாட்டு மோகம்?

நீங்களும் உங்கள் அளவு கோல்களும்.

காபிரி காபிரி என்பது இனவெறியின் பாற்பட்ட சொற் பிரயோகங்கள்.இன்று மேற்குலகில் ஏன் அவர்களின் இசை வடிவங்கள் இளஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன என்று தெரியுமா? ஏன் தமிழ் இளைஞர்கள் இதன் பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சிந்தது உண்டா?

மேற் குலகின் சமூகக் கட்டுமானத்தில் அடி நிலையில் இருக்கும் வந்தேறு குடிகள் எங்கிருக்கிறார்கள்? அதிகாரத்திற்கு எதிரான இசையாக தெருவோரத்தின் இசையாக கறுப்பினத்தவரின் இசை இருப்பதால் தமிழ் இளைஞர்களும் தங்களை அதனோடு இனங்காணுகிறார்கள். நாம் தமிழர் எங்கிற அடையாளத்தை இசை வடிவங்களை எமது இளஞரும் தொடர வேண்டும் என்றால், புலச்சூழலில் உருவாகும் இவ்வாறான கலவைகளையே நாம் ஏற்க வேண்டும்.இல்லாது விடின் அவர்கள் முற்று முழுதாக தமிழ் இசையில் இருந்து மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடுவார்கள். அவர்களின் வாழும் சூழலை மையப்படுத்தாத இசையோ மொழியோ இங்கு வளராது.

இந்த விவாதத்தில் இளையராஜா எங்கே வந்தார்? போகட்டும்... இளையராஜாவின் இசை பாரம்பரிய தமிழ் இசையா என்று கேட்டுள்ளீர். தமிழ் இசை எதுவென்பது உமக்குத் தெரியுமா? அவரது ஒவ்வொரு பாடலும் எந்த ராகத்தில் கட்டப்பட்டது என்று அலசியது உண்டா?

பார்க்க:

http://www.geocities.com/ilaiyaragam/index.html

நீர் ஆசையாகக் கேட்ட அந்தக் கலவைப் பாடலுக்கு உயிர் கொடுப்பது அதில் வரும் "யோவ் யோவ்" சத்தம் என்று நம்புகிறீரா? அல்லது அதன் உயிர் நீர் வெறுக்கும் இளையராஜாவின் மடை திறந்த பாடலா?

இளையராஜா செய்தது சிம்பொனி அல்ல. அது ஓரட்டேரியோ. அது ஒரு பரீட்சார்த்த முயற்சி. அதில் ஒரட்டேரியோவுக்குள்ள அம்சங்கள் எல்லாம் இருக்கிறதென்கிறார் லாஸ்லோ கோவாச்ஸ். நீர் என்னடாவென்றால் சிம்பொனி கலவை என்கிறீர். அதை இந்த ரீமிக்ஸ் உடன் வேறு ஒப்பிடுக்கிறீர். :( இதைக் கேட்டால் யோகியே தற்கொலை செய்துவிடுவார். <_<

இசைக்குத் திசையில்லை. அதுவல்ல வாதம். நீர் மேற்கத்தைய இராகம் ஒன்றைக் கூறினால் அதே சுரங்களுடன் கர்நாடக இராகத்தை நான் சொல்வேன். எல்லாமே 7 சுரங்க்களுக்குள்ளும் 5 அரை சுரங்களுக்குள்ளும் அடங்கி விடுகிறது. இதில் மேற்கு ஏது கிழக்கு ஏது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் தமிழரல்லாத யார் இசைத்தாலும் அதுவே சிறந்ததாகக் காட்டும் மனோபாவத்தைத்தான் நான் சாடியிருக்கிறேன்.

நீர் தமிழர் இம்மாதிரி இசைகளைச் செய்வதற்கு அவர்கள் கறுப்பர்களைப் போன்று அதிகாரத்திற்கு எதிரான இசையாக இதைக் காணுகிறார்கள் என்கிறீர். இதிலிருந்தே இம்மாதிரியான தமிழர்கள் தங்களை அடிமைகளாகத்தான் இன்னும் எண்ணுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர். நானும் அதையேதான் சொல்கிறேன். இதில் விவாதம் இல்லை. :blink:

நான் காப்பிரி என்ற பததை எங்கும் பாவிக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். கறுப்பர் என்று கூறுவது இனவெறி ஆகாது.

புலச்சூழலிலுருவாகும் இவ்வாறான இசைகளை ரசித்தால் போதும். அவைகளை எமது இசையாகக் காட்ட முயன்றால் அது அடிமைத்தனத்தின் உச்சம். இயலாமையின் வெளிப்பாடு. சுய பச்சாதாபத்தின் குறி. தமிழினத்தின் அவலம். முடிந்தால் எமது வழி இசையின் சிறப்புக்களை மற்ற இனத்தவருக்கு எடுத்தியம்பும். மற்ற இசைகளைப் பார்த்துக்கொள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள்.

"புலச்சூழலில் உருவாகும் இவ்வாறான கலவைகளையே நாம் ஏற்க வேண்டும். இல்லாது விடின் அவர்கள் முற்று முழுதாக தமிழ் இசையில் இருந்து மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடுவார்கள். அவர்களின் வாழும் சூழலை மையப்படுத்தாத இசையோ மொழியோ இங்கு வளராது." - இது நீர் சொன்னது.

இந்தப் பாடல் உருவான மலேசியாவில் எத்தனை கறுப்பர்கள் வசிக்கிறார்கள்? எந்தச் சூழலுடன் கலப்பதற்காக அங்கே இந்த இசை? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா தான் அதிகம் சுதேசிய இசைக்கருவிகளையும் இணைத்து இசை வழங்க ஆரம்பித்தவர்..! குறிப்பாக பறை..நாதஸ்வரம்..தவில்..தாரை..தப்

Link to comment
Share on other sites

இந்த விவாதத்தில் இளையராஜா எங்கே வந்தார்? போகட்டும்... இளையராஜாவின் இசை பாரம்பரிய தமிழ் இசையா என்று கேட்டுள்ளீர். தமிழ் இசை எதுவென்பது உமக்குத் தெரியுமா? அவரது ஒவ்வொரு பாடலும் எந்த ராகத்தில் கட்டப்பட்டது என்று அலசியது உண்டா?

பார்க்க:

http://www.geocities.com/ilaiyaragam/index.html

இந்த பட்டியலில் இடப் பட்டிருக்கும் ராகங்கள், தமிழிலா இருக்கின்றன?அப்கரி,அபோஜனி என்னும் பெயர்கள் தமிழ்ப்பெயர்களா?

இது எந்த மொழி?

நீர் ஆசையாகக் கேட்ட அந்தக் கலவைப் பாடலுக்கு உயிர் கொடுப்பது அதில் வரும் "யோவ் யோவ்" சத்தம் என்று நம்புகிறீரா? அல்லது அதன் உயிர் நீர் வெறுக்கும் இளையராஜாவின் மடை திறந்த பாடலா?

பாடல் முழுமை பெற்றது அதன் இறுதி வடிவத்தால்,அதனல் தான் அது இளஞர்களிடம் வரவேற்பைப் பெற்றது.இளயராஜாவின் மடைதிறந்தது பாடலும் அதே யுடியுப்பில் இருக்கிறது.அதற்குக்கிடைத்த கிட்ஸையும் இதற்குக் கிடைத்த கிட்ஸ்சையும் பார்த்தால் தெரியும் எதற்கு வரேவேற்பு இருக்கிறது என்று.

யோகி பியின் பாட்டு மூன்று இடத்தில் இருக்கிறது ,46589 +57547 +17167 = 121,303

இளையராஜாவின் மடை திறந்தது=18,504

http://www.youtube.com/watch?v=PucI_AZLaA0...ted&search=

மேலும் நான் எங்காவது இளையராஜாவைக்குறை கூறி இருக்கிறேனா,அவர் திறமையானவர் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.இங்கே இளயராஜாவை உவமை ஆக்கியது எந்த இசைக்கும் தூயத்துவம் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டத் தான்.மேற் கூறிய ராகங்கள் எந்த மொழி என்று கூறினால் அதற்கான விடை கிடைக்கும்.

இளையராஜா செய்தது சிம்பொனி அல்ல. அது ஓரட்டேரியோ. அது ஒரு பரீட்சார்த்த முயற்சி. அதில் ஒரட்டேரியோவுக்குள்ள அம்சங்கள் எல்லாம் இருக்கிறதென்கிறார் லாஸ்லோ கோவாச்ஸ். நீர் என்னடாவென்றால் சிம்பொனி கலவை என்கிறீர். அதை இந்த ரீமிக்ஸ் உடன் வேறு ஒப்பிடுக்கிறீர். :( இதைக் கேட்டால் யோகியே தற்கொலை செய்துவிடுவார். <_<

சிம்பனியோ ஒரேட்டரியாவோ ஏன் இளையராஜா இந்த மேற்குலக வடிவங்களைத் தேடிப் போக வேண்டும்? இது மேற்குலக மோகம் இல்லையா என்பதே எனது கேள்வி.இளயராஜா செய்தால் ஏற்றுக் கொள்வீர்கள் இளஞர்கள் செய்தால் மேற்குலக மோகம்.இந்த இரட்டை அளவு கோலைத் தான் சுட்டிக் காட்டினேன்.

இசைக்குத் திசையில்லை. அதுவல்ல வாதம். நீர் மேற்கத்தைய இராகம் ஒன்றைக் கூறினால் அதே சுரங்களுடன் கர்நாடக இராகத்தை நான் சொல்வேன். எல்லாமே 7 சுரங்க்களுக்குள்ளும் 5 அரை சுரங்களுக்குள்ளும் அடங்கி விடுகிறது. இதில் மேற்கு ஏது கிழக்கு ஏது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் தமிழரல்லாத யார் இசைத்தாலும் அதுவே சிறந்ததாகக் காட்டும் மனோபாவத்தைத்தான் நான் சாடியிருக்கிறேன்.

இங்கே எவருமே தமிழரின் இசை தாழ்ந்தது என்று கூறவில்லையே, இசைக்குத் திசை இல்லை என்றால் பிறகேன்,கறுப்பின இசை கீழ்மையானது என்று எழுதுகிறீர்? முரணானதாக இல்லையா உமது கருத்துக்கள்?

நீர் தமிழர் இம்மாதிரி இசைகளைச் செய்வதற்கு அவர்கள் கறுப்பர்களைப் போன்று அதிகாரத்திற்கு எதிரான இசையாக இதைக் காணுகிறார்கள் என்கிறீர். இதிலிருந்தே இம்மாதிரியான தமிழர்கள் தங்களை அடிமைகளாகத்தான் இன்னும் எண்ணுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர். நானும் அதையேதான் சொல்கிறேன். இதில் விவாதம் இல்லை. :blink: .

ஏன் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகத் தானே இருக்கிறார்கள், தமிழர்கள் விடுதலை பெற்று விட்டார்களா?அதிகாரத்திற்கு எதிராக எழுப்பப்படும் இசை எவ்வகையில் தாழ்ந்தது?இசைக்குத் திசை இல்லை என்று நீர் தானே மேல எழுதி இருக்கிறீர்?

நான் காப்பிரி என்ற பததை எங்கும் பாவிக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். கறுப்பர் என்று கூறுவது இனவெறி ஆகாது.

புலச்சூழலிலுருவாகும் இவ்வாறான இசைகளை ரசித்தால் போதும். அவைகளை எமது இசையாகக் காட்ட முயன்றால் அது அடிமைத்தனத்தின் உச்சம். இயலாமையின் வெளிப்பாடு. சுய பச்சாதாபத்தின் குறி. தமிழினத்தின் அவலம். முடிந்தால் எமது வழி இசையின் சிறப்புக்களை மற்ற இனத்தவருக்கு எடுத்தியம்பும். மற்ற இசைகளைப் பார்த்துக்கொள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள்.

காப்பிரி என்ற பதத்தைப் பாவிக்கவில்லத் தான் ஆனால் கறுப்பினத்தவரின் இசை தாழ்ந்தது என்று எழுதியது நிற வெறி.வெள்ளையர்களை விட ஆசியர்கள் அதிக நிற வெறி உடைவர்கள்.

"புலச்சூழலில் உருவாகும் இவ்வாறான கலவைகளையே நாம் ஏற்க வேண்டும். இல்லாது விடின் அவர்கள் முற்று முழுதாக தமிழ் இசையில் இருந்து மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடுவார்கள். அவர்களின் வாழும் சூழலை மையப்படுத்தாத இசையோ மொழியோ இங்கு வளராது." - இது நீர் சொன்னது.

இந்தப் பாடல் உருவான மலேசியாவில் எத்தனை கறுப்பர்கள் வசிக்கிறார்கள்? எந்தச் சூழலுடன் கலப்பதற்காக அங்கே இந்த இசை? <_<

சூழல் என்பது பூகோள ரீதியானது இல்லை, ஏனெனில் இணய யுகத்தில் பூகோள ரீதியான சூழல் கிடையாது.எம் என் எம், டூபக் இன் இசை உலகமெல்லாம் இருக்கும் இளஞர்களை இணய வலையினூடாக சட்டலைட் தொலைக் காட்சியுனூடாக ஒரு செக்கனுக்குள் சென்றடைகிறது.இவர்களின் இந்த இசை வடிவத்துக்குள் தமிழ் புதுக்கவிதையின் வடிவங்களைக் காணலாம்.அதனை இவர்கள் வெகு கச்சிதமாகச்செய்திருப்பதாக எனக்குப்படுகிறது. இந்தப் பாடலில் வரும் வரி ஒன்று,

'கறுப்பின துள்ளிசை மைந்தன் கிடக்கட்டும், செந்தமிழ் துள்ளிசை செல்வங்கள் பிறக்கட்டும்'.. 'புதிய பரிமாணம் இனிப்படை எடுக்கும்'

' ரப் இசை விதியின் சம்பிரதாயத்தில் , மடை திறந்து நதி அலைக்குள் என் கவிதைகளைக் காவும்'

இவர்கள் தங்கள் இசையின் நோக்கை இவ்வாறே கூறுகிறார்கள்.இதையே நான் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்த பட்டியலில் இடப் பட்டிருக்கும் ராகங்கள், தமிழிலா இருக்கின்றன?அப்கரி,அபோஜனி என்னும் பெயர்கள் தமிழ்ப்பெயர்களா?

இது எந்த மொழி?

இவை கர்நாடக சங்கீதத்துக்கு உரியவை. திராவிடத்துக்குச் சொந்தமானவை. இந்த ராகங்களைப் பெயரிட்டது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்தது. அதனால்தான் வடமொழியின் தாக்கம் உள்ளது. தமிழர்கள் திராவிடர்கள் என்பதால் இது எமக்கும் சொந்தமான இசையே.

பாடல் முழுமை பெற்றது அதன் இறுதி வடிவத்தால்,அதனல் தான் அது இளஞர்களிடம் வரவேற்பைப் பெற்றது.இளயராஜாவின் மடைதிறந்தது பாடலும் அதே யுடியுப்பில் இருக்கிறது.அதற்குக்கிடைத்த கிட்ஸையும் இதற்குக் கிடைத்த கிட்ஸ்சையும் பார்த்தால் தெரியும் எதற்கு வரேவேற்பு இருக்கிறது என்று.

யோகி பியின் பாட்டு மூன்று இடத்தில் இருக்கிறது ,46589 +57547 +17167 = 121,303

இளையராஜாவின் மடை திறந்தது=18,504

http://www.youtube.com/watch?v=PucI_AZLaA0...ted&search=

ஆகவே நீர் சொல்லவருவது யாதெனில், யோகி அவர்கள் ராஜா அவர்களை மிஞ்சிவிட்டார் என்பது. :o இருக்கட்டும். உமது தகவலுக்கு... நாயகன் படமும் மனிதன் படமும் தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. நாயகனை விட மனிதன் வசூலில் அள்ளிக்குவித்தது. ஆனால் இன்று இந்த இரு படங்களிலும் மக்கள் மனதில் நிற்பது எது? அடுத்த வருடம் யோகியின் பாடல் போய் இன்னொரு போகியின் பாடல் வந்துவிடும். அதுவும் "மடை திறந்து" வை மிஞ்சும். ஆனால் காலத்தால் நீடு நிற்பது எது?

மேலும் நான் எங்காவது இளையராஜாவைக்குறை கூறி இருக்கிறேனா,அவர் திறமையானவர் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.இங்கே இளயராஜாவை உவமை ஆக்கியது எந்த இசைக்கும் தூயத்துவம் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டத் தான்.மேற் கூறிய ராகங்கள் எந்த மொழி என்று கூறினால் அதற்கான விடை கிடைக்கும்.

தூய இசை தான் நல்லது என்று நான் கூறவில்லை. கலப்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும். ஆனால் வேற்று இசைகளை உயர்த்தியும் நமது இசைகளைத் தாழ்த்தியும் கூறுவதைக் கண்டிக்கிறேன். நான் மற்ற இசை வகைகளையும் குறை கூறவில்லை.

இராகங்களுக்கான பதில் மேலே உள்ளது.

சிம்பனியோ ஒரேட்டரியாவோ ஏன் இளையராஜா இந்த மேற்குலக வடிவங்களைத் தேடிப் போக வேண்டும்? இது மேற்குலக மோகம் இல்லையா என்பதே எனது கேள்வி.இளயராஜா செய்தால் ஏற்றுக் கொள்வீர்கள் இளஞர்கள் செய்தால் மேற்குலக மோகம்.இந்த இரட்டை அளவு கோலைத் தான் சுட்டிக் காட்டினேன்.

இந்த இசையை ஏற்றுக்கொள்ளவில்லையென்று யார் சொன்னது? இதுவும் ஒருவித இசை. ஆனால் இந்தமாதிரி இசைகளைக் கேட்டால் மட்டுமே நாகரிகம் போல் பாவனை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. எமது பாடல்களை வேற்று நாட்டவருக்கு அதன் வடிவத்திலேயே அறிமுகப் படுத்தும் துணிச்சல் எத்தனை இளைஞர்களுக்கு உண்டு? ஒரு ஆபிரிக்கரோ அல்லது மேற்கத்தையவரோ ஈழத்தில் வாழ நேர்ந்தால் ராப் இசையை கர்நாடக இசையாக்கிப் பாடுவினமோ? :o

இளையராஜா செய்தால் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறீர். இளையராஜா கர்நாடக சங்கீதத்தை ஓரட்டேரியோவுக்காக மாற்றவில்லை. இரண்டையும் அதனதன் வடிவிலேயே கலந்தார். ஆனால் இங்கே ஆபிரிக்கர் மடைதிறந்து என்று பாடினால் எப்படி இருக்குமோ அப்படிச் செய்திருக்கிறார்கள். அது அடிமை மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடே.

இங்கே எவருமே தமிழரின் இசை தாழ்ந்தது என்று கூறவில்லையே, இசைக்குத் திசை இல்லை என்றால் பிறகேன்,கறுப்பின இசை கீழ்மையானது என்று எழுதுகிறீர்? முரணானதாக இல்லையா உமது கருத்துக்கள்?

நான் சொல்ல வந்தது எமது இசையைக் கேட்டால் நாகரிகக் குறைவு என்று நினைக்கும் இளைஞர்களைப் பற்றி. கறுப்பின இசை கீழானதென்றும் நான் சொல்லவில்லை. <_<

ஏன் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகத் தானே இருக்கிறார்கள், தமிழர்கள் விடுதலை பெற்று விட்டார்களா?அதிகாரத்திற்கு எதிராக எழுப்பப்படும் இசை எவ்வகையில் தாழ்ந்தது?இசைக்குத் திசை இல்லை என்று நீர் தானே மேல எழுதி இருக்கிறீர்?

கறுப்பர்கள் அடிமைகளாக இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே தங்கள் விடுதலை இசையை ராப் வடிவில் இசைத்தார்கள். இந்தியர் வெள்ளையரால் தங்கள் நாட்டிலேயே அடிமைப்படுத்தப்பட்டார்கள். பாரதியார் போன்றவர்களின் விடுதலை கானங்கள் இந்திய இசை வடிவிலே இசைக்கப்பட்டன. (ராப் வடிவில் அல்ல. :blink: ) ஈழத்தவர்கள் சிங்களவர்களால் அடிமைப்படுத்தப்பட்டபோது இப்போது எழுவது தேனிசை செல்லப்பா போன்றவர்களின் இசை. (ராப் அல்ல). திடீரென்று நமக்கும் ராப் இசை விடுதலை இசை ஆகிவிட்டதா? :o

ஈழவிடுதலைப் பாடல்களை இப்படிப் பாடினால் என்ன நடக்கும்?

அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை..யோவ்..யோவ்..

வந்து முத்தமிட ஓடி வருவேன்.... ஷேக் யர் பம்..ஷேக் யர் பம் பம்..

:(

காப்பிரி என்ற பதத்தைப் பாவிக்கவில்லத் தான் ஆனால் கறுப்பினத்தவரின் இசை தாழ்ந்தது என்று எழுதியது நிற வெறி.வெள்ளையர்களை விட ஆசியர்கள் அதிக நிற வெறி உடைவர்கள்.

சூழல் என்பது பூகோள ரீதியானது இல்லை, ஏனெனில் இணய யுகத்தில் பூகோள ரீதியான சூழல் கிடையாது.எம் என் எம், டூபக் இன் இசை உலகமெல்லாம் இருக்கும் இளஞர்களை இணய வலையினூடாக சட்டலைட் தொலைக் காட்சியுனூடாக ஒரு செக்கனுக்குள் சென்றடைகிறது.இவர்களின் இந்த இசை வடிவத்துக்குள் தமிழ் புதுக்கவிதையின் வடிவங்களைக் காணலாம்.அதனை இவர்கள் வெகு கச்சிதமாகச்செய்திருப்பதாக எனக்குப்படுகிறது. இந்தப் பாடலில் வரும் வரி ஒன்று,

'கறுப்பின துள்ளிசை மைந்தன் கிடக்கட்டும், செந்தமிழ் துள்ளிசை செல்வங்கள் பிறக்கட்டும்'.. 'புதிய பரிமாணம் இனிப்படை எடுக்கும்'

' ரப் இசை விதியின் சம்பிரதாயத்தில் , மடை திறந்து நதி அலைக்குள் என் கவிதைகளைக் காவும்'

இவர்கள் தங்கள் இசையின் நோக்கை இவ்வாறே கூறுகிறார்கள்.இதையே நான் வரவேற்கிறேன்.

யார் இசையும் தாழ்ந்ததென்று நான் சொல்லவில்லை. என் நிலைப்பாடு ஏற்கனவே மேலே கூறப்பட்டுள்ளது. எல்லாம் சரி.. ஒரே ஒரு கேள்வி. ஏன் கறுப்பர்களின் இசை, நடை உடை பாவனை ஒன்றையே நம்மவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? சீனாவிலும் புரட்சி நடந்ததே..! அவர்கள் இசையையும் செய்வதுதானே? பிரான்ஸ்..? இத்தாலி?.. ஏன் இல்லை? இதிலிருந்து தெரியவில்லையா.. நாம் நம்மை ஆபிரிக்கரோடு மட்டுமே ஒப்பிடுகிறோம் என்று? இப்படி இருந்தால் எப்படி ஒரு தனி அடையாளமுள்ள ஒரு இனமாக முன்னேறுவது? அவர்களைவிட சிறிது நிறமாக இருக்கிறோம். அவர்களைவிட அதிகம் படிக்கிறோம். ஆகவே அவர்களை மட்டுமே போட்டியாக நினைக்கிறோம். மற்ற இனத்தவரைக் கண்டால் ஆமாம்சாமி போட்டுவிட்டு ஒரே ஓட்டம். சீச்சீ.. அடிமைத்தனம்! அடிமைத்தனம்! வெட்கம்..! வெட்கம்..!

<_<

Link to comment
Share on other sites

எழுவது தேனிசை செல்லப்பா போன்றவர்களின் இசை. (ராப் அல்ல). திடீரென்று நமக்கும் ராப் இசை விடுதலை இசை ஆகிவிட்டதா? <_<

ஈழவிடுதலைப் பாடல்களை இப்படிப் பாடினால் என்ன நடக்கும்?

அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை..யோவ்..யோவ்..

வந்து முத்தமிட ஓடி வருவேன்.... ஷேக் யர் பம்..ஷேக் யர் பம் பம்..

:lol:

http://www.youtube.com/watch?v=U0jYumaMfng

http://www.youtube.com/watch?v=Zm2o0iDIRZ0

தமிழ் ரப் இசைக்கும் புல இளைஞர்கள் தம் இசையால் எவ்வாறு எமது போராட்டத்தை புலத்தில் உள்ள மற்றவர்களுக்கும் காவிச் செல்கிறார்கள் என்பதற்கான சில உதாரணங்கள்.

புலத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை..யோவ்..யோவ்..

வந்து முத்தமிட ஓடி வருவேன்.... ஷேக் யர் பம்..ஷேக் யர் பம் பம்.. :lol:

யார் இசையும் தாழ்ந்ததென்று நான் சொல்லவில்லை. என் நிலைப்பாடு ஏற்கனவே மேலே கூறப்பட்டுள்ளது. எல்லாம் சரி.. ஒரே ஒரு கேள்வி. ஏன் கறுப்பர்களின் இசை, நடை உடை பாவனை ஒன்றையே நம்மவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? சீனாவிலும் புரட்சி நடந்ததே..! அவர்கள் இசையையும் செய்வதுதானே? பிரான்ஸ்..? இத்தாலி?.. ஏன் இல்லை? இதிலிருந்து தெரியவில்லையா.. நாம் நம்மை ஆபிரிக்கரோடு மட்டுமே ஒப்பிடுகிறோம் என்று? இப்படி இருந்தால் எப்படி ஒரு தனி அடையாளமுள்ள ஒரு இனமாக முன்னேறுவது? அவர்களைவிட சிறிது நிறமாக இருக்கிறோம். அவர்களைவிட அதிகம் படிக்கிறோம். ஆகவே அவர்களை மட்டுமே போட்டியாக நினைக்கிறோம். மற்ற இனத்தவரைக் கண்டால் ஆமாம்சாமி போட்டுவிட்டு ஒரே ஓட்டம். சீச்சீ.. அடிமைத்தனம்! அடிமைத்தனம்! வெட்கம்..! வெட்கம்..!

:lol:

மிக நியாயமான ஆதங்கம். இவர்களே வெறும் தூசணப்பாடல்களையும் இதே பாணியில் பாடி இணையங்களில் வெளியிட்டுள்ளனர். காப்பிலி பாடுவது போல அப்படியே செய்திருப்பது மிகவும் கேவலமானது பிரதி பண்ணல். இவர்களின் தூசணப்பாட்டையும் கேட்டுவிட்டு...இதையும் கேட்டால்..புரட்சியாகவாவா எண்ணம் உருப்பெறும்...அடுத்தவரை பிரதி பண்ணப் போய் திறமைகள் வீணடிக்கப்படுவது மட்டுமன்றி..எங்களின் விடுதலைப் போராட்டத்தை பழிக்கும் நிலையும் உருவாகும்.

ilainjarso9.jpg

இந்த ஒப்பனை அவசியமா..? ஏன் ஒரு விடுதலைப் போராளி போல வேடம் போட்டு...(இது என்னவோ கொங்கோ கொலைகாரர்கள் போல இருக்கு வேடம்)... இவர்கள் தங்களுக்கு என்று தனியான நடன அமைப்பையும் வசனங்களின் அநாவசிய முறிப்புக்களையும் தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் வரிகளைக் கோர்த்துப் பாடலாமே. இசையைப் பிரதி பண்ணுதல் என்பது வேறு. இது இசை மட்டுமல்ல..ஓசை...நடை உடை பாவனை அனைத்தும் காப்பிலிகள் போல..அமைவது தமிழர்களை ஏதோ காப்பிலிக் கூட்டமாய் காட்டுதலாகத்தான் அமைகிறது. அதுமட்டுமன்றி தூசணப்பாடல்களை இணையத்தில் இதே வடிவில் ஏற்றிவிட்டு அதோடு தாயகத்தின் உணர்வாளர்கள் என்று காட்டுவதற்காக சோகப் படங்களைப் போட்டு துள்ளல் அவசியம் தானா..?????????????!

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழ் வன்முறைக்குழுக்களுக்கு அவர்கள் இப்போ ரமிழ் ரைகர் என்றும் பெயர் வைத்துக் கொள்கின்றனர். ரமிழ் ரைகரின் குணம் தெரியுமோ தெரியல்ல...கன பேருக்கு... கேட்க ஆட்களில்லை என்ற உடன கொஞ்சப் பேர் போடுற ஆட்டம் அப்பப்பா தாங்க முடியல்ல. ஊரில இயக்கத்தை விட்டு ஓடி வந்ததுகள் கலைபட்டதுகள் எல்லாம் இங்க ரமிழ் ரைகர்...வையோட பிரன்ஸ் எல்லாம் ரைகர் காங்...! அவைட வன்முறைக்கும் பெண்களுக்கு ஸ்ரைல் காட்டவும்... கொஞ்ச நாள் ஊரில சேட்டை வெளில விட்டிட்டு பப்பாக் காயைச் செருகித் திரிஞ்சவைட வாரிசுகள் போல..இங்க ரமிழ் ரைகர் என்று கொண்டு ரைகரின்ர மானத்தை வாங்கிக் கொண்டிருக்கினம். இவையள் உண்மையான உணர்வோடதான் படைக்கினமோ இல்ல ஏதோ விளம்பர தேவைக்காகப் படைக்கினமோ என்பதும் இப்போ முக்கியமான கேள்வியாகியுள்ளது.

காப்பிலிகளைப் போல தங்களை பாவனை செய்யப் போய்...அடி வாங்கிக் கட்டி..இப்போ தாங்கள் அவைய வெல்ல வேணும் எண்டு இவை புறப்பட்டு..நடக்குது ஓட்டம்...இடைல மக்கள் சிக்கித் தவிக்கினம். போராட்டம் என்ன பாவம் செய்ததோ தெரியல்ல..துள்ளலுக்கும் குதியலுக்கு கக்கலுக்கும் இடையில கிடந்து சீரழியுது. இதாலதான் சர்வதேச அளவில எங்கட சில பிரச்சாரங்கள் மலினப்பட்டுப் போகுதோ என்றும் எண்ணத் தோன்றுது. சிந்தியுங்கள் இளைஞர்களே..! நீங்கள் உங்களை உங்களாகவே வெளிப்படுத்துங்கள். இசையைக் கொள்ளையடியுங்கள்..வரிகளையும் ஓசையையும்...நடை உடை பாவனையையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்றோ..உங்களை ரவுடிகள் கணக்கில் காட்ட வேணும் என்றே எமது போராட்டம் கேட்கவில்லை. அது போராட்டத்தை மலினப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும்..! உதவி செய்யாட்டிலும் பறுவாயில்லை இப்படி உபத்திரபம் செய்து உள்ள கொஞ்ச நெஞ்ச நல்ல பெயரையும் கெடுத்திட்டியள் என்றால் சோக்கா இருக்கும்..! <_< :P :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.