Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்துவ இசைப் பாரம்பரியமும்..பாரம்பரிய இசை வடிவங்களும் கருவிகளும்..

யாழ் எனும் இழை வாத்தியக் கருவியும் முரசு எனும் தோல் வாத்தியக் கருவியும் புல்லாங்குழல் எனும் துளை அல்லது காற்று வாத்தியக் கருவியும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் அடங்கி இருந்திருக்கின்றன...( சிலப் பதிகாரம் இந்த வகையை 5 தாக்கி இருக்கிறது...கீழே உள்ள ஆங்கிலக் கட்டுரையை வாசியுங்கள்..) இன்றும் உலகின் வாத்தியக் கருவிகள் அடிப்படையில் இந்த மூன்று பிரிவுகளுக்குள் தான் அடக்கப்படுகின்றன. இலத்திரனியல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட பின்னும் அடிப்படைகள் என்னவோ மாறியதில்லை.

யாழின் வகைகளில் சில கீழே...! யாழ் இன்று வழமை இழந்து நிற்கிறது...மியூசியத்தில் காட்சிப் பொருளாகி நிற்கிறது..இந்த நிலை நாளை எமது இசை வடிவங்களுக்கும் வரும் என்பது நிச்சயம். தமிழர்கள் காப்பிலிகளின் தோற்றுவாய்கள் என்று சொல்ல தமிழர்களின் பாரம்பரிய இசையாக தூசண ராப் கருத்தில் எடுக்கப்படும் காலமும் இன்னும் 100 ஆண்டுகளில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுயம் விரும்பாத சுதேசிய வெறுப்புணர்வும் தாழ்மை உணர்வும் இருக்கும் வரை தமிழர்கள் பாரம்பரியம் காப்பார்கள் என்றில்லை. பாரம்பரியத்தையே கட்டிக் கொண்டு கிடவுங்கள் என்று சொல்லவில்லை..பாரம்பரியத்தை நவீனத்தோடு கலந்து தனித்துவத்தைக் காப்பாற்றுங்கள் என்பதே வேண்டப்படுகிறது..! அதைச் சிந்தித்து செய்ய வேண்டிய இளைய சமூகம்..கொப்பி பண்ணுதல் எனும் இலகுவான வழியில் தன்னை ஈடுபடுத்தி பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது மட்டுமன்றி இனத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமே..!

அடுத்தவருக்காக படைக்கப்படும் ராப் என்பது வேறு எமக்காக படைக்கப்படும் ராப் என்பது வேறு. எமது கருத்துக்களை ராப் இசை மூலம் ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் அவர்களின் பாணியில் சொல்லுவது ஒரு முறையாக கருத்தில் கொள்ளப்பட்டாலும்..அதையே தமிழர்களின் மத்தியில் ஆதிக்கம் உள்ளதாக தமிழர்களுக்கு உகந்ததாக பின்பற்றுதல்..காட்டுதல்.. தவறான விடயம்..! வழிகாட்டுதல் இன்றி திக்குத்திசை தெரியாது பயணிக்கும் இளைஞர்களே சிந்தியுங்கள்.....

makarayazhie3.jpg

மகர யாழ்

mayilyazhef0.jpg

மயில் யாழ்

vilyazhwr4.jpg

வில் யாழ்

உதவி..

http://www.answers.com/topic/ancient-tamil-music

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

இவை கர்நாடக சங்கீதத்துக்கு உரியவை. திராவிடத்துக்குச் சொந்தமானவை. இந்த ராகங்களைப் பெயரிட்டது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்தது. அதனால்தான் வடமொழியின் தாக்கம் உள்ளது. தமிழர்கள் திராவிடர்கள் என்பதால் இது எமக்கும் சொந்தமான இசையே.

இங்கே முதலில் தமிழிசை என்றால் என்ன என்று வரையறை செய்தால் நல்லது.

தமிழில் பாடப்படுவதையே நான் தமிழிசை என்பேன்.மற்றவை தமிழரினிசை அல்ல.தெலுங்குக் கீர்த்தனங்கள் தமிழிசை ஆக முடியாது.தமிழிசைக்கென நடக்கும் இயக்கம்பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து இசையின் வடிவம்.இதைப் பற்றித் தான் நான் சொல்லி உள்ளேன்.உலகில் பல்வேறு இசைவடிவங்களுள்ளன.தமிழிலும் உள்ளன.புதிய இசைவடிவங்கள் பல்வேறு சூழல்களால் உருவாகி உள்ளன.குடியிபெயர்தலின் போதோ அன்றி படயெடுப்புக்களின் போதோ ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்திற்கு இந்த இசை வடிவங்கள் குடி பெயர்ந்தன.இன்றைய இணைய உலகில் இந்த குடிப் பரம்பல் இல்லாமலே இசை இணயம் வழியாகவோ அன்றி தொலைக் காட்சி வழியாகவோ ஊடுரூவி விடுகிறது.இவ்வாறான நிலையில் எந்த இசை வடிவம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அணை கட்டி விட முடியாது.கறுப்பினத்தவரால் உருவாக்கப்பட்ட ரப் இசை தமிழ் இழஞர்களை மட்டும் அல்ல கீழ்த்தட்டு வெள்ளை இளஞர்களையும் ஆட்கொண்டுள்ளது.அது ஏன் என்பது சமூகவியல் ஆய்வுக்கு உட்பட்டது. நானிங்கே எனது விருப்பத்தை கூற வரவில்லை, எவரும் தமது சொந்த விருப்பங்களை இன்னொருவர் மீது திணித்து விட முடியாது.எமது சமூகத்தில் சூழலில் நடப்பதைத் தான் கூற விரும்புகிறேன்.இப்படியான நிலையில் நாம் நூதன சாலையில் எம்மாலையே அனுப்பட்டுள்ள யாழை மீட்டுங்கள் என்பது வெறும் கற்பனவாதமாகவே இருக்கும். நான் சொல்வது இந்த இளஞர்களின் இந்த ஈடுபாட்டை சரியான திசையில் நெறிப்படுத வேண்டுமாயின், நாம் இசை வடிவத்தை உள்வாங்கி அதனை தமிசையாக உருமாற்று வதை வரவேற்பதே நடை பெறக்கூடிய காரியம் என்று.

கர்னாடக இசையிலிருந்து, மெல்லிசை ,பின்னர் திரை இசை, கலப்பிசை (fusion) என்று உருவானதை போல, அடுத்த கட்டம் தமிழ் ரப்பாக இருப்பதில் என்ன பிரச்சினை.அந்த வகையில் யோகி பி மற்றும் நற்சத்திராவின் படைப்பு ஒரு புதிய திசையை புல இளஞர்களுக்குக் காட்டி உள்ளது.இதனை காப்பிலி என்று பரிகசிப்பதால் நாம் இன்னும் இன்னும் இவர்களை அன்னியப் படுத்தப் போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பொப் டிஸ்கோ எல்லாம் ஆடி முடித்து விட்டுத்தான் இப்போ ராப் க்கு தாவியுள்ளனர். அதுவும் தூசண ராப். தாவுவதால் இசை வளர்க்கப்படுகிறது என்பது தவறு. இதை இப்படியே அனுமதிப்பின் இன்னும் ஒரு 20 ஆண்டுகளின் பின் ராப் புலம்பெயர்ந்த இடத்தில் இருந்து தாயகத்தில் போய் நின்றாலும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கப் போவதில்லை. கவலை என்பது எமது பாரம்பரிய இசைக்கருவிகள் மேற்கத்தேய நவீன இசைக் கருவிகளின் ஆக்கத்தோடு வழக்கழிந்து போனது போல..( புல்லாங்குழல் மேற்கிலும் விற்கப்படுகிறது..வாசிக்கப்பட

Link to comment
Share on other sites

இங்கே முதலில் தமிழிசை என்றால் என்ன என்று வரையறை செய்தால் நல்லது.

தமிழில் பாடப்படுவதையே நான் தமிழிசை என்பேன்.மற்றவை தமிழரினிசை அல்ல.தெலுங்குக் கீர்த்தனங்கள் தமிழிசை ஆக முடியாது.தமிழிசைக்கென நடக்கும் இயக்கம்பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழிசை பண்ணை அடிப்படையாகக் கொண்டது. இதுபோன்ற அடிப்படைகளிலிருந்துதான் கர்நாடக இசை உருவாகியது என்று சொல்லப்படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Pann

http://en.wikipedia.org/wiki/Carnatic_music

இதிலிருந்து ஒரு செய்தி:

"Ancient South Indian music had certain classical music concepts that Carnatic Music is believed to have inherited. The concept of Pann in Ancient Tamil music is related to Ragas used in Carnatic music. The rhythmic meters found in ancient religious literature resemble the talas that are in use today"

கர்நாடக சங்கீதம் தமிழுக்கு மட்டும் சொந்தமெனக் கொள்ள முடியாது. அதற்காக் தமிழருக்குச் சம்பந்தமில்லாதது என்றும் விட்டுவிட முடியாது. தெலுங்கில் கீர்த்தனைகள் இயற்றப்பட்டது ஒரு பாரம்பரியத்துக்காக. பல கீர்த்தனைகள் தெலுங்கில் தஞ்சை தியாகைய்யர் (தமிழர்) போன்றவர்களால் இயற்றப்பட்டன.

Link to comment
Share on other sites

இன்றைய இணைய உலகில் இந்த குடிப் பரம்பல் இல்லாமலே இசை இணயம் வழியாகவோ அன்றி தொலைக் காட்சி வழியாகவோ ஊடுரூவி விடுகிறது.இவ்வாறான நிலையில் எந்த இசை வடிவம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அணை கட்டி விட முடியாது.கறுப்பினத்தவரால் உருவாக்கப்பட்ட ரப் இசை தமிழ் இழஞர்களை மட்டும் அல்ல கீழ்த்தட்டு வெள்ளை இளஞர்களையும் ஆட்கொண்டுள்ளது.அது ஏன் என்பது சமூகவியல் ஆய்வுக்கு உட்பட்டது. நானிங்கே எனது விருப்பத்தை கூற வரவில்லை, எவரும் தமது சொந்த விருப்பங்களை இன்னொருவர் மீது திணித்து விட முடியாது.எமது சமூகத்தில் சூழலில் நடப்பதைத் தான் கூற விரும்புகிறேன்.இப்படியான நிலையில் நாம் நூதன சாலையில் எம்மாலையே அனுப்பட்டுள்ள யாழை மீட்டுங்கள் என்பது வெறும் கற்பனவாதமாகவே இருக்கும். நான் சொல்வது இந்த இளஞர்களின் இந்த ஈடுபாட்டை சரியான திசையில் நெறிப்படுத வேண்டுமாயின், நாம் இசை வடிவத்தை உள்வாங்கி அதனை தமிசையாக உருமாற்று வதை வரவேற்பதே நடை பெறக்கூடிய காரியம் என்று.

கர்னாடக இசையிலிருந்து, மெல்லிசை ,பின்னர் திரை இசை, கலப்பிசை (fusion) என்று உருவானதை போல, அடுத்த கட்டம் தமிழ் ரப்பாக இருப்பதில் என்ன பிரச்சினை.அந்த வகையில் யோகி பி மற்றும் நற்சத்திராவின் படைப்பு ஒரு புதிய திசையை புல இளஞர்களுக்குக் காட்டி உள்ளது.இதனை காப்பிலி என்று பரிகசிப்பதால் நாம் இன்னும் இன்னும் இவர்களை அன்னியப் படுத்தப் போகிறோம்.

ஒரு அறிவார்ந்த இனம் எப்போதும் தன் சுய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது. அப்படியாயின் நம் அடுத்த தலைமுறை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழே தெரியாமல் வளர்கிறதே? அதில் உமக்கு உடன்பாடுதானா? எத்தகைய திணிப்புகள் இருப்பினும் நம் பாரம்பரியத்தைவிட்டுக்கொடுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராப்பும் மண்ணாங்கட்டியும்.. கனடாக் காரங்கள் சொன்னவங்கள்.. விஜயின்ர குத்தாட்ட பாட்டுக்கு ஆடச் சொல்லி.. எங்கடை தமிழ்ப் பெடியங்கள் உந்த தூசணப் பாட்டுக்களுக்கு ஆடாமல் என்னாத்தை சொல்வேனுங்கோ.. வடு மாங்கா ஊறுதுங்கோ.. எண்ட பாட்டுகளுக்கு ஆடினாங்கள் எண்டால் அதில ஒரு நியாயம் இருக்கும். அல்லது ஒரு வேட்டியைக் கொடுக்காக கட்டி ஆடினாங்கள் எண்டால் அது எங்கடை பண்பாட்டையும் வளத்தது போல கிடக்கும்.. பாத்தியள் எண்டால் அதில விஜய் வேட்டி கட்டிதான் ஆடினாவர். அட உங்கம்மா உங்கம்மா எம்மை சேத்து வைப்பாளா.. அட அட அட..

இந்த கருத்துக்கு நான் பதிலெதுவையும் எதிர்பாக்க வில்லை. ஏனெண்டால் கொடுக்கை கட்டினவர் அவ்வளவு சீக்கிரத்தில இறக்க மாட்டார். மறை கழண்டதுகளுக்கு பதில் சொல்லுற எல்லாருமே மறை கழண்டவை எண்டொரு புதிய விதி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் தட்டு வர்க்கம் எண்டது அதிகாரத்தின் கீழ் அடக்கு முறைகளினால் அல்லல் படுகிறார்களே அவர்கள் தான்.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போட்டுக்கொண்டு.. சிங் இந்த சோங்.. சொய்ங்:. எண்டு பாடினால்.. அதில ஒரு மரியாதை எண்டு எண்ணுறவை.. இன்னமும் வெள்ளை நாயை எசமானா கும்பிடுறவைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராப்பும் மண்ணாங்கட்டியும்.. கனடாக் காரங்கள் சொன்னவங்கள்.. விஜயின்ர குத்தாட்ட பாட்டுக்கு ஆடச் சொல்லி.. எங்கடை தமிழ்ப் பெடியங்கள் உந்த தூசணப் பாட்டுக்களுக்கு ஆடாமல் என்னாத்தை சொல்வேனுங்கோ.. வடு மாங்கா ஊறுதுங்கோ.. எண்ட பாட்டுகளுக்கு ஆடினாங்கள் எண்டால் அதில ஒரு நியாயம் இருக்கும். அல்லது ஒரு வேட்டியைக் கொடுக்காக கட்டி ஆடினாங்கள் எண்டால் அது எங்கடை பண்பாட்டையும் வளத்தது போல கிடக்கும்.. பாத்தியள் எண்டால் அதில விஜய் வேட்டி கட்டிதான் ஆடினாவர். அட உங்கம்மா உங்கம்மா எம்மை சேத்து வைப்பாளா.. அட அட அட..

இந்த கருத்துக்கு நான் பதிலெதுவையும் எதிர்பாக்க வில்லை. ஏனெண்டால் கொடுக்கை கட்டினவர் அவ்வளவு சீக்கிரத்தில இறக்க மாட்டார். மறை கழண்டதுகளுக்கு பதில் சொல்லுற எல்லாருமே மறை கழண்டவை எண்டொரு புதிய விதி இருக்கு

பேசாமல் காவடி ஆட்டம் ஆடித்தான் பாருங்கோவன்..ராப்பை வெண்டிடுவியள். ஆக உங்களுக்கு அடுத்தவையைப் போல நடிக்காட்டி உங்கள அடுத்தவை மதிக்காயினம் என்ற தாழ்வுமனப்பான்மை இருக்கும் வரை நீங்கள் தனித்துவம் பேண முடியாது.

எங்கையோ கனடாவில இருந்த வந்த காப்பிலி கூட... அட இவங்க கூட கொஞ்சம் தங்கட ஸ்ரைலுக்கு செய்யுறாங்கள் எங்கடைய விட வித்தியாசமா என்றுதான் விஜயின் குத்தாட்டத்தைப் பார்க்கிறானே தவிர..எவருமே அதுதான் தமிழரின் இசை வடிவம் என்று சொல்லேல்ல. அது அடுத்தவர முழுசாக் கொப்பி பண்ணாமல் இந்திய சினிமாக்குரிய தனித்துவ முறையில இருக்கிறதால அவங்கள் அப்படிச் சொன்னாங்கள். அதைக் கூட புரிஞ்சுக்க நேரம் எடுக்க முடியாம கருத்து எழுதிற அளவுக்கு எங்கட ஆக்களுக்கு புத்தியும் கீழதான் போயிட்டு இருக்குது..!

ராப் கூத்தென்று காப்பிலியாட்டம் போடுறது காப்பிலிக்கே நக்கலா இருக்கேக்க..நம்மாக்கள் சிலர் பேஷ் பேஷ் சோக்கா இருக்கு என்றிட்டு இருக்கினம். இவைக்குத் தேவை அப்படி ஒரு கூட்டம் இருந்தால் தானே தங்களை பெருமைப்படுத்த அவையை உதாரணத்துக்கு இழுக்க முடியும்..என்னே சிந்தனை..சுதேசியப் பற்று..! :P :lol:

சுயமாத்தான் படைக்க முடியல்ல..அற்லீஸ் இப்படியாவது... கொஞ்சம் ...என்றாலும்..அடையாளத்தையாவது காட்டலாமே...

வேட்டி கட்டி ஆட்டம்..

ராப் மிக்ஸ் பண்ணி வந்த ஒரு வித்தியாசமான வடிவம்...

http://www.youtube.com/watch?v=n9XxYlxreWk&NR

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாக்காரனின்ரை கதையை கேட்டு குத்தாட்டம் போடுற ஒரு சிவகாசி இவர். இது மாதிரி கலையள் தான் வளரோணும்

http://www.youtube.com/watch?v=wirvw8XrYnY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரனின்ரை கதையை கேட்டு குத்தாட்டம் போடுற ஒரு சிவகாசி இவர். இது மாதிரி கலையள் தான் வளரோணும்

http://www.youtube.com/watch?v=wirvw8XrYnY

அற்லீஸ் தமிழன் தமிழனைக் கொப்பி பண்ணினான் என்றாவது கொள்ளலாம். இது காப்பிலி போலவே ஆடனும் பாடனும்..உடுக்கனும் என்றது..வெட்கக் கேடானது.

இது தமிழர் கலை என்று யாரும் சொல்லேல்ல..ஆனால் அடுத்தவையின்ரையை கொப்பி பண்ணாம சிவகாசில உள்ள கிரியேட்டிவிற்றியை கொப்பி பண்ணினது...அடுத்தவன் பார்த்து நக்கலடிக்கக் கூடிய அளவுக்கு இடமளிக்கேல்ல...அப்படி அடிச்சாலும் தமிழன் தான் அடிக்க வேணும்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

கொப்பி பண்ணுறதிலையும் சட்டம் இருக்குதாம்.. விஜய் ஆடினது ஏதோ தமிழரின்ர பாரம்பரிய ஆட்டம் தானே.. தமிழரை தமிழன் கொப்பி பண்ணினானாம்.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போடுவினம்.. ஏனெண்டால் அடிமைச் சேவகம் செய்த புத்தி.. அதை பிழை எண்டு சொல்லாது. ஆனால் கறுப்பினத்தவன் மாதிரி உடுப்பு போடக் கூடாதாம். உது சாதித் தடிப்பில உருவாகி இனத்தடிப்பில வந்து நிக்குது. கலரில எஙஇகளை விட பெரியாக்கள் எண்டு நினைச்சுக் கொண்டு வெள்ளையளின்ர சப்பாத்தை நக்கிறது.. குறைஞ்சவை எண்டு எட்டி உதைக்கிறது.

சிவகாசியில கிரியேட்டிவ்.. பேரரசுவுக்கு சொல்லும்.. சந்தோசப்படுவர்.

கழண்ட கேசுகளோடை (காப்பிரிகள் மாதிரி இதுவும் ஒரு குறிச்சொல்) கதைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

தமிழிலும் நிறையக் கீர்த்தனைகள் இருக்குங்கோ.நீங்கள் கேட்டதில்லையே. அதுபோக பல பிறமொழிக் கீர்த்தனைகள் தமிழர்களால் அம்மொழிக்காகப் பாடப்பட்டவையும் கூட..!

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

தமிழில் கீர்த்தனைகள் பாடப்படுவது இப்போ பொதுவாகி விட்டது. பலரும் அதை உணர்ந்து செயற்படுகின்றனர்.

கொப்பி பண்ணுறதிலையும் சட்டம் இருக்குதாம்.. விஜய் ஆடினது ஏதோ தமிழரின்ர பாரம்பரிய ஆட்டம் தானே.. தமிழரை தமிழன் கொப்பி பண்ணினானாம்.

தமிழனின் ஆட்டமோ இல்லையோ தென்னிந்திய திரைத் தமிழன்ர கிறியேட்டிவிற்றிவ் ... ஒரு தனித் தன்மை இருக்குது அடுத்தவையின்ர ஆட்டத்திலிருந்தும்..வேறுபடுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் ஆட்டமோ இல்லையோ தென்னிந்திய திரைத் தமிழன்ர கிறியேட்டிவிற்றிவ்...

இதில இந்த தென்னிந்திய கிறியேட்டிவ் காறர் ஆரையாம் கொப்பி பண்ணகினம்..

http://www.youtube.com/watch?v=_MlHZOfZKVc

Link to comment
Share on other sites

வாதிட்டு களைச்சிருப்பியள்.... ஒரு ரிலாக்சுக்கு இதையும் பாருங்களேன்

லம்படா டான்ஸ் போட்டு கலக்கினம்

Link to comment
Share on other sites

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

தமிழன் கர்நாடக சங்கீதத்தை இரவல் வாங்கவில்லை. தமிழ் பண்ணை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த கர்நாடக சங்கீதம்.

http://en.wikipedia.org/wiki/Carnatic_music

தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடுவதைக் கேட்க ஒரு மிகக்குறைந்த கூட்டமே உள்ளது. அதைப் பொதுவாகக் கேட்பவர்கள் யாரென்று நீரே குறிப்பால் உணர்த்தியுள்ளீர். (பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு.. ) :P

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

சங்கீத சபாக்களில பாட்டுக் கேட்கிறது பெரும்பாலும் ரிட்டையர்ட் ஆன கிழ போல்ட்டுகள். அவங்கள்மேல் ஏன் இவ்வளவு காண்டு? விட்டுடுங்களேன். :P

கறுப்பின இசையோடு சேர்ந்து வருவது புகை, போதை, மது மற்றும் மாது.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போடுவினம்.. ஏனெண்டால் அடிமைச் சேவகம் செய்த புத்தி.. அதை பிழை எண்டு சொல்லாது. ஆனால் கறுப்பினத்தவன் மாதிரி உடுப்பு போடக் கூடாதாம். உது சாதித் தடிப்பில உருவாகி இனத்தடிப்பில வந்து நிக்குது. கலரில எஙஇகளை விட பெரியாக்கள் எண்டு நினைச்சுக் கொண்டு வெள்ளையளின்ர சப்பாத்தை நக்கிறது.. குறைஞ்சவை எண்டு எட்டி உதைக்கிறது.

கனடாவில் வேட்டி கட்டினால் இந்த சீசனில எல்லாம் விறைச்சுப் போயிடும். :lol: வேலை நிமிர்த்தம் உடை வரையறையும் உள்ளது. அதையெல்லாம் பார்க்கவேணும்தானே. ஆனால் கறுப்பர்களின் ராப் இல்லாவிட்டால் குடி ஒன்றும் முழுகிப்போகாது. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பர்கள் எம்மை விட எல்லா விதத்திலும் தாழ்ந்தவர்கள் என்ற நிறவெறி மட்டுமே உங்கள் மறுப்புக்களுக்கு காரணம். இத்தோடு நிறுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லை. உமது கருத்துக்களில் "புகை"மூட்டம் தெரிகிறது. முற்றும்.

Link to comment
Share on other sites

ஒரு அறிவார்ந்த இனம் எப்போதும் தன் சுய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது. அப்படியாயின் நம் அடுத்த தலைமுறை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழே தெரியாமல் வளர்கிறதே? அதில் உமக்கு உடன்பாடுதானா? எத்தகைய திணிப்புகள் இருப்பினும் நம் பாரம்பரியத்தைவிட்டுக்கொடுக
Link to comment
Share on other sites

சுய அடையாளம் என்றால் என்ன? எந்த ஆண்டில் ஏற்பட்ட அடையாளம்?தமிழரின் அடையாளம் என்பது மாற்றம் பெற்று வருவது.எந்த காலச்சாரமும் ஒரு குறிப்பிட்ட உறைனிலையில் இருப்பதில்லை.ஒரு காலத்தில் சமணராக இருந்த தமிழர் பின்னர் சைவர் ஆனார்கள்.இசையும் அவ்வாறு தான் கரு நாடகா ,தெலுங்கான வில் இருந்து உள்வாங்கப்பட்டது.இன்று தமிழர்கள் உலகளாவிய ரீதியாக புலம் பெயரும் போதும் உலகம் வீட்டுக்குள் வரும் போதும் உலகளாவிய ரீதியான காலாச்சாரப் பாதிப்புக்கள் இருக்கும்.இங்கே எவ்வளவு தான் கூரையில் நின்று கத்தினாலும் மொழியின் பயனோ அன்றி இசையின் பயனோ உணரப்படாதவிடத்து அது வழக்கொழிந்து விடும். இங்கே ரப்பினால் எவ்வாறு தமிழிசை சாகும் என்கிறீர்கள் என்று விளங்கவில்லை.முன்னர் சிறந்தது தான் நிலைக்கும் என்றீர்கள், அப்படியானால் ரப் இசை உந்த கருனாடக சங்கீததை விடச் சிறந்தது என்கிறீர்களா?ராப் என்பது ஒரு இசை வடிவம்,அது தமிழில் பாடப்பட்டால் அதுவும் தமிழிசை தான்.சமுதாய மாற்றங்களை உள் வாங்காதா மொழி வழக்கொழிந்து விடும்.ஆகவே தான் சொல்கிறேன் புலத்தில் தமிழ் வாழ தமிழ் ரப் ஒரு ஊடகமாகத் தொழிற் படட்டும் என்று.

தமிழரின் அடையாளம் என்று நான் சொல்வது தமிழர் மட்டுமே வழக்கில் கொண்டுள்ள விடையங்களை. அவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் சில மாற்றங்களை எதிர்க்க வேண்டும். உதாரணமாக ஊடகங்களின் மூலம் ஆங்கிலக் கலப்பு தமிழில் ஏற்படுகிறது. சரி என்று விட்டுவிடலாமா? ஈழத்தில் ஏன் மாய்ந்து மாய்ந்து தமிழில் பெயர்சூட்டுகிறார்கள். அது விதண்டாவாதமா? இசையிலும் மாற்றங்கள் வரும். ஆனால் தமிழ் எப்படி எமக்கு உயிர் மூச்சொ அதே போலத்தான் இசையும் என்னைப் பொறுத்தவரையில். இயல், இசை, நாடகம் தமிழ் கலாச்சாரத்தின் அடி நாதம். ஆனால் அதற்காகப் பிற இசைகளைப் பயிலக்கூடாது என்பதல்ல. பயில்பவர்கள் தமிழ் இசையயும் பயின்று தழைக்கவைக்கவேண்டும். சில இளைஞர்கள் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் அப்படி இல்லை.

மற்றையது, ஏன் நம் தமிழ் இளைஞர்கள் கறுப்பினத்தவரின் கலாச்சாரத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள்? சிங்கப்பூர், மலேசியாவில் மலாய் இனத்தவரோ அல்லது சீனரோ இப்படிச் செய்வதில்லை. கனடாவிலும் இதில் நம்மவர்தான் முன்னிலை. இவை நான் கண்டவை. ஏன் வேறு கலாச்சார வகைகளைத் தொடுவதில்லை?

ஒரு இடத்தில் எந்த இசை வடிவமும் தாழ்ந்தது இல்லை என்று விட்டு இன்னொரு இடத்தில் ஏன் சமூகத்தில் கீழ் மட்டத்தினரின் இசையை நாம் இசைக்க வேண்டும் என்று கேட்பது என்ன விதத்தில் நியாயமாகும்? இது வெறும் உயர் வர்க்கச்சிந்தனை அன்றி வேறென்ன? நாடுப்புற மக்களால் பாடப்படும் சிந்துக்கள் எவ்வாறு உயர் குடி மக்களால் கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டதோ அவ்வாறன ஒரு பார்வையே இது. புலத்தில் முப்பது பவுன் மாசம் மாசம் குடுத்து தமது பிள்ளைகளுக்கு பரத நாட்டியமும்,மிருதங்கமும், கருனாடக இசையும் படிப்பித்துக் குடுக்க எத்தினை பெற்றோரால் முடியும்? வசதி அற்ற மக்களின் பிள்ளைகள் இவ்வாறு தான் தாங்களாகவே தம்மால் இயன்ற இசையை இசைப்பார்கள்.எது தமது சூழலைப் பற்றிப் பாடுகிறதோ ,எது தமக்கு இயற்கையாக வருகிறதோ அதனையே நாடுவார்கள்.இவற்றை இவர்கள் பணம் கொடுத்து கற்க வேண்டியதில்லை.சுயமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.புலத்த
Link to comment
Share on other sites

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம்.

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம். :P :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம்.

:lol:

நன்றி டங்குவார் சார்.

இதையும் கேட்டு பாருங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.