Jump to content

யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம்


Recommended Posts

யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம்
 

சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு, புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென ஜேசன் கெனி இன்று அறிவித்தார்.
சிறீலங்காவில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் தெரிவித்த ஜேசன் கெனி அவர்கள்,

யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, சிறீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை மேலும் திடமாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சிறீலங்காவின் வடக்கிற்கான ஒரு அலுவலகத்தை உருவாக்குவதென்பது, அப்பகுதியுடனான இராஜதந்திரத் தொடர்புகளுக்கான ஒரு முக்கிய தளமாகவும், வர்த்தக மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான ஒரு வாய்ப்பாகவும் பயன்படும்.

 

இந்தத் தளத்தில் நின்று, சிறீலங்காவிற்கான கனடாவின் பிரசன்னத்தை மேலும் வளர்த்து, அங்கு மனித உரிமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேன்மைப்படுத்துவதுடன், உறுதியான கட்டுமான வளர்ச்சியையும் பிராந்திய பாதுகாப்பையும் வளரக்க பெரிதும் உதவுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தை வீதி வழியாகச் சென்றடைய 7 மணித்தியாலங்களுக்கு மேல் தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தெரிவுசெய்யப்படும் புதிய கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம், சிறீலங்காவில் நீதியும் சமாதானமும் மலர்வதற்கான உறுதியான ஆதரவை வழங்குவதில் உலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும்.

சிறீலங்காவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்புவதையும், மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியமைப்பதையும், தமிழர்களின் பிரதேசத்தில் உறுதியான மறுமலர்ச்சி ஏற்படுவதையும் கனடா உறுதிசெய்யும் என்று ஜேசன் கெனி தெளிவாக எடுத்துரைத்தார்.

2013ல், ராஜபக்ச ஆட்சியின் சூழ்ச்சிநிறைந்த ஆட்சிக்கெதிராக உறுதியாக நின்ற கனடியப் பிரதமர் ஸ்ரீவன் காப்பர், கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரசாங்க தலைவர்களுக்கான மாநாட்டைப் பகிஸ்கரித்தார்.

அண்மையில் கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ றொப் நிக்கல்சன் விடுத்த அறிவித்தலில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் இலங்கையர்களுக்கு, தொடர்ந்தும் கனடிய நாடு தனது ஈடு இணையற்ற பலமான ஆதரவை வழங்குவதுடன், தெரிவு செய்யப்படும் கொன்சவேட்டிவ் அரசானது, பாகுபாடற்ற,

நீதியும் சுதந்திரமும் கொண்ட சர்வதேச செயற்பாடுகளை, இலங்கை மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் முன்னெடுக்க அனைத்துலக ரீதியில் முயற்சியும் முதலீடும் செய்யும் என்று கூறியதை ஞாபகப்படுத்திய ஜேசன் கெனி,

புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசு, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அங்கு நீதியை முன்னெடுக்க சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் உள்வாங்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

இலங்கையில் அரசு கையகப்படுத்திய நிலங்களை மீளக் கையளிப்பதற்கும், இடம்பெயர்ந்தோருக்கு உதவி வழங்குவதற்கும், மீள்கட்டுமானம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், போரில் பாதிப்படைந்த மக்களுக்கு, குறிப்பாக,

விதவைகளின் அவசிய தேவைகளைக் கவனிப்பதற்கும் புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்த மிகப் பலமான பிராந்திய அழுத்தங்களுக்கு சிறீலங்கா தற்போது முகம்கொடுக்கிறது.

அந்நாட்டின் எதிர்கால நிரந்தர அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவை, தொடர்ச்சியான நம்பகத் தன்மை கொண்ட சமாதான முயற்சிகளிலேயே தங்கியுள்ளது.

இத்தகைய உறுதியான சமாதானம், ஜனநாயகம் போன்றவற்றையும், நிலையான மனித உரிமை மற்றும் சட்ட ஒழுங்கை இலங்கையில் கொண்டுவருவதற்கு, கனடாவில் புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்றும் ஜேசன் கெனி தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.