Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

நட்பு வளர்பிறை மதி

அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!

சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 02

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

உன்னுடன் பழகுவது ....!!!

அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!

நீ 
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 03

Link to comment
Share on other sites

இன்பத்துக்கு மட்டுமே நட்பல்ல ....!!!

கூடி 
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!

நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 04

Link to comment
Share on other sites

நட்புக்கு அவசியம் அன்று ....!!!

அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ 
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாங் கிழமை தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 05

Link to comment
Share on other sites

நீ 
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

காதலின் ....
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
 
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை .... 
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என்  மரணத்தின் பின் 
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 
Link to comment
Share on other sites

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
 
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
 
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 
Link to comment
Share on other sites

பூவாய் பூப்பதே நட்பு .....!!!

கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!

முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 06

Link to comment
Share on other sites

உனக்கு உறுதுணையாக .....!!!
 
தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!
 
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா  ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 07
Link to comment
Share on other sites

என் உயிர் நண்பனே ....!!!
 
ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில்  மானம் ...
காக்கும் கைபோல் ....!!!
 
நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 08
Link to comment
Share on other sites

அன்புடன் உதவுவதே நட்பு 
 
நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!
 
உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 09
Link to comment
Share on other sites

அது நட்பல்ல ....!!!
 
உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!
 
எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள் 
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!! 
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -10
Link to comment
Share on other sites

நீ 
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்.... 
அழைக்கிறாய் ..!!!

பாவம் 
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!

இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

இன்னுமொரு ஜென்மம் ....
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!

நீ 
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
தப்பு செய்ய போவதில்லை 
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!

நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ 
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!

மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என் 
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான் 
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?

அருகில் 
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!

என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!

Link to comment
Share on other sites

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் காதல் தோல்வியின் வலி மனசுக்கும் தேவையாய் இருக்கிறது...!

கவிதைகள் நன்றாக இருக்கின்றன நன்பரே...! வாழ்த்துக்கள்...!!

Link to comment
Share on other sites

உன் 
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல் 
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
    • இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage  என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣   ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
    • ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்குள் நின்றுகொண்டு நீதியைக்கோரி போராடுகின்றார் என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதான மிகப்பெரிய கொடூரத்துக்கு நீதி கோருவதற்கு அவர் தயாரில்லை. மதத் தலைவராக அவர், தனது அருட்தந்தையர்கள் எத்தனையோ பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டமைக்கோ, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமைக்கோ நீதிகோர இன்னமும் தயாரில்லை. இந்த நாடு சிங்கள - பெளத்தர்களுக்குரியது. பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பேசுபவர் அவர். சிங்கள பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயலும் ஆட்சியாளர்கள் அதற்காக எதையும் செய்வார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பௌத்த- சிங்கள பேரினவாத தரப்புகள் ஆட்சியைப்பிடிப்பதற்கே நடத்தியிருந்தன. அப்படிப்பட்டவர்கள் எப்படி நீதியான விசாரணையை முன்னெடுப்பார்கள் என்ற கேள்வியை அவர் இப்போது முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணையைக் கோரும் தனது நியாயப்பாட்டை வலுப்படுத்துகின்றார். இதையேதான் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி வருகின்றனர். போரை நடத்திய அரசாங்கமே எப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும்? இது இயற்கை நீதிக்கே முரணானதே. எனவே சர்வதேச விசாரணைதான் தீர்வு என்ற கோஷம் தமிழர் தரப்பில் எழுப்பப்பட்டபோது மௌனியாக இருந்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித். இப்போதும் அந்த விடயத்தில் மௌனியாக இருந்து கொண்டு, தனது மதத்தின் மீது நிகழ்ந்த கொடூரத்துக்கு மட்டும் சர்வதேச விசாரணை கோருகின்றார். என்னதான், பக்கச் சார்பானவராகவே அவர் இருந்த போதும், தாக்குதலுக்கான நீதி கோரும் அவரது பயணத்தில் இன்னமும் உறுதியானவராக இருக்கின்றார். அதில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அவர் தயாரில்லை. யாருடனும் சமரசம் செய்ய அவர் தயாராக இல்லை. இந்த இடத்தில்தான் கர்தினாலிடமிருந்து எமது தமிழ்த் தலைமைகள் பாடம் படிக்க வேண்டும். நல்லாட்சிக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து கலப்புப் பொறிமுறைக்கு இணங்கினர். இன்று எதுவுமில்லாத நிலையில் வந்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான நீதி தேடிய பயணம் இன்று ஓய்ந்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள், இந்த விவகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தவர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பிணை யெடுத்துவிட்டு மல்லாக்காகப் படுத்திருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை திரும்பத் திரும்ப ஆயர் மல்கம் ரஞ்சித் முதலானோர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். புதிது புதிதாக ஆதாரங்களைத்திரட்டி ஒப்படைத்துக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்ன செய்கின்றன? தங்கள் கட்சிப் பிரச்சினைகளையே நீதிமன்றம் வரையில் கொண்டு சென்று விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது தமிழ் மக்களுக்கான நீதியைக்கோரும் போராட்டத்தை முன்கொண்டு செல்ல கர்தினால் போன்ற விட்டுக்கொடுப்பற்ற ஒருவரே தேவை.   https://newuthayan.com/article/விட்டுக்கொடுப்பற்ற_தலைமையே_தேவை!
    • யூத மாணவர்களும் பங்கெடுப்பு அதிரும் அமெரிக்கப் பல்கலைகள். சுதந்திரப் பலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும். பலஸ்தீனர்களின் வளங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பல்லாயிரம் யூத மாணவர்களின் பங்கெடுப்புடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கத்துக்கு கனதியான அழுத்தத்தை வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அமரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லொஸ் வெகாஸ் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் இடைத்தங்கல் முகாம்களை அமைத்து போராட்டக்காரர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைக்கழகங்கள் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு வழங்கும் தீவிரமான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும். அத்துடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் விலகியிருக்கவேண் டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். (ச) https://newuthayan.com/article/சுதந்திரப்_பலஸ்தீனத்துக்காக_அமெரிக்காவில்_தீவிரப்_போர்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.