Jump to content

சரத் Vs விஷால்: மோதல் முதல் தேர்தல் வரை...!


Recommended Posts

சரத் Vs விஷால்: மோதல் முதல் தேர்தல் வரை...! ( A Complete Report )

 

 நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உச்சகட்ட கொதிப்பில் தகிக்கிறது நடிகர்கள் சரத்குமார் - விஷால் இடையேயான மோதல்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் தொடங்கி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் வரை இரு அணியினரும் மாறி மாறி சுமத்திய குற்றச்சாட்டுக்கள், தங்களுக்கென ஆதரவாளர்களை திரட்ட மேற்கொண்ட முயற்சிகள் என கடந்த சில மாதங்களாக நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே....

 

saravcnews.jpg

 

> > > நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை: விஷால் அணியினருக்கு சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம்!

நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது என்று விஷால் அணியினருக்கு நடிகர் சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க..

s4.jpg


> > > நடிகர் சங்கத் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு: நாசர் நம்பர் 1, சரத்குமார் நம்பர் 2, விஷால் நம்பர் 3 மேலும் படிக்க...

s2.jpg



> > >எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆன்மாக்கள் எங்களை வழிநடத்துகின்றன: விஷால்.. மேலும் படிக்க...

> > >சரத்குமார் மீது  விஷால் ஊழல் குற்றச்சாட்டு! மேலும் படிக்க...

> > >கண்ணீர் விட்ட நாடக நடிகர், நடிகை... கண்கலங்கிய விஷால்! மேலும் படிக்க...

திருச்சியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு கேட்கச் சென்ற விஷால் அணியினரிடம் நாடக நடிகர், நடிகைகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும். நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என அதிரடியாக அறிவித்தார். மேலும் படிக்க...

> > >'சங்கம் களவு போயிடுச்சு... மீட்டெடுக்கப் போறோம்'- சரத் அணியை சீண்டும் வடிவேலு! மேலும் படிக்க...

s3.jpg


விஷால், பெரிய நடிகர் இல்லை. குறைந்த சம்பளம் வாங்குகிறார். அவரால் எப்படி சங்கக் கட்டடம் கட்ட முடியும்? எனக்கு இப்போது படம் இல்லை. அதனால் நான் பேசக் கூடாது என்று சொல்வதெல்லாம் கேட்கும்போது வேடிக்கையாக உள்ளது. நரிக் கூட்டம் என்றெல்லாம் சிம்பு சொல்வது சரியில்லை. அவர் மிகவும் நல்லவர். இப்படியெல்லாம் அவர் பேசக் கூடாது என்பதுதான் எனது கருத்து. மேலும் படிக்க...

> > >'12 ரூபாய் கட்டவில்லையென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்' - மன்சூர் அலிகான் புலம்பல்.. மேலும் படிக்க...

> > >ராதிகா, சிம்புவுக்கு நன்றி: விஷால் குஷால்!.. மேலும் படிக்க...

> > >நடிகர் சங்கம் எங்களால் பிளவுபடுமா?: விளக்கும் விஷால் அணி! மேலும் படிக்க...

s6.jpg




இளம் நடிகர்கள் ஷூட்டிங், கேரவன், ஸ்டார் ஓட்டல், 'உற்சாக' பார்ட்டி இப்படித்தான் தாங்கள் லைஃப் ஸ்டையிலை டைம்டேபிள் போட்டு வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று நடிகர் சங்கம தேர்தல், போட்டி என்று விஷால் களம் இறங்கி இருப்பதைப் பார்த்து, சீனியர் நடிகர்கள் மட்டுமல்ல, இளம் நடிகர்களும் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்க்கிறார்கள்.. மேலும் படிக்க...

> > >சரத்குமாரை எதிர்ப்பது ஏன்? விஷால் அதிரடி பதில்!.. மேலும் படிக்க...
http://www.vikatan.com/news/article.php?aid=53739
தன்னுடைய சொந்தப் பிரச்னை தொடர்பாகத்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த விஷால் நினைக்கிறார்' என்று சரத்குமார் அணியினர் கூறியிருக்கின்றனர். நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்க நினைக்கவில்லை. குடும்பங்களை சேர்த்து வைக்கவே... மேலும் படிக்க...

> > >நடிகர் சங்க தேர்தல்: சமரச முயற்சிக்கு இறங்கி வரும் சரத்குமார் அணி!.. மேலும் படிக்க...

s5.jpg




> > >நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா காட்டமான கேள்வி! மேலும் படிக்க...

  "தேர்தலில் நிற்க வேண்டிய சூழலுக்கு நடிகர் சரத்குமார் அணி தள்ளப்பட்டுள்ளது. நடிகர் விஷால், கார்த்தியை யாரோ தூண்டி விடுகின்றனர். நடிகர் சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தற்போது புகார் கூறுபவர்கள் நடிகர் சங்க கட்டடத்தை இடிக்கும்போது எங்கே இருந்தார்கள். மேலும் படிக்க...

> > >நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு ராதாரவி சவால்! மேலும் படிக்க...

> > > அதிமுக நடிகர், நடிகைகள் தேர்தலில் போட்டியிட திடீர் தடை! மேலும் படிக்க...

> > >விஷால் அணியால் மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும்: சொல்கிறார் ராதாரவி.. மேலும் படிக்க...

எதிர் அணியினர் மாற்றம் கொண்டு வருவோம் என்கின்றனர். அவர்களால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும். நடிகர் சங்க கூட்டங்களுக்கு அவர்கள் வந்தது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கு தகுதி இல்லை. குழப்பம்தான் செய்வார்கள். நல்லதை அவர்களால் செய்ய முடியாது. மேலும் படிக்க...

s11.jpg



> > >விஷால் அணியை கமல் தூண்டிவிடுகிறார்: சரத்குமார் பாய்ச்சல்.. மேலும் படிக்க...


கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையில் இருந்து நடிகர் சங்கத்தை குற்றம் சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன். மேலும் படிக்க...

> > >நடிகர்களுக்கு இலவச காப்பீடு: விஷால் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு! மேலும் படிக்க...


> > >சபாஷ் சரியான போட்டி: விஷால் அணிக்கு கமல் ஆதரவு; ரஜினி ஆதரவு யாருக்கு? மேலும் படிக்க...

s14.jpg



> > > இனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேசம்! மேலும் படிக்க...


> > >'கட்டடம் கட்டுவதா பெரிது'...!- விஷாலை சீண்டும் ராதிகா சரத்குமார் மேலும் படிக்க...

"எனது கணவர் சரத்குமார் முறைகேடு செய்துவிட்டதாக கூறிவரும் விஷாலும், நாசரும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் சும்மா விட மாட்டேன். மேலும் படிக்க...

> > >சிவாஜிக்கு மணிமண்படம் அமைக்காதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்: விஷால் மேலும் படிக்க...

> > >நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் கேவியட் மனு தாக்கல்! மேலும் படிக்க...

> > >நாட்டாமையை விரட்டும் சண்டக்கோழி! மேலும் படிக்க..

> > >சரத்- விஷால் மோதலுக்கு வரலட்சுமி காரணமா?.. மேலும் படிக்க...

> > >ஓட்டுப்போட முதல்வரையும் அழைப்போம்... நடிகர் விஷால் பேச்சு! மேலும் படிக்க

 

Link to comment
Share on other sites

நடிகர் சங்கத் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு: நாசர் நம்பர் 1, சரத்குமார் நம்பர் 2, விஷால் நம்பர் 3

 

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாசருக்கு நம்பர் 1ம், சரத்குமாருக்கு நம்பர் 2ம், விஷாலுக்கு நம்பர் 3ம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

vishal-%20sarath-%20nazar.jpg

தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  2015-18-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய  தலைவர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது.

சரத்குமார்  அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகிறார்கள். மற்றும் இரு அணியிலும் துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்-நடிகைகள் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 3,139 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் வெளியூர்களில் வசிப்பவர்கள் 1,175 பேர். வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் தபால் ஓட்டு மட்டுமே போட முடியும். நேரில் வந்து ஓட்டுப்போடுவதாக இருந்தால் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும்.

தற்போது 241 பேர் நேரடியாக வந்து வாக்குப்பதிவு செய்வதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அவை தேர்தல் அதிகாரியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீதம் உள்ள 934 பேர் தபால் ஓட்டு போடுகிறார்கள். அவர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள் கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அனுப்பி வைக்கப்பட்டது.

முதலில் நேரில் வருவதாகவும், பின்னர் தபாலில் ஓட்டுப் போடுவதாகவும் மாறி மாறி கடிதம் அனுப்பிய 150 பேர் ஓட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தபால் ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டையில் 39, மதுரையில் 22 என 61 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 18-ம் தேதி,  சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டு எண்களை (சின்னங்களை) தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் வெளியிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாருக்கு 2 என்ற சின்னமும், நாசருக்கு 1 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவிக்கு  போட்டியிடும் ராதாரவிக்கு 1 என்ற சின்னமும், விஷாலுக்கு 3 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாருக்கு 5 என்ற சின்னமும், நடிகர் சிம்புவுக்கு 4 என்ற சின்னமும், விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாசுக்கு 1 என்ற சின்னமும், பொன்வண்ணனுக்கு 3 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.எஸ்.கண்ணனுக்கு 1 என்ற சின்னமும், விஷால் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்திக்கு 2 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=53734

Link to comment
Share on other sites

செய்திகளை உடனுக்குடன் இணைக்கும் நவீனனுக்கு நன்றிகள். இருந்தும் மனதில் எழும் கேழ்வி இது.

அது சரி இவங்களில் எவனாவது வெண்டால் நாங்கள் நல்ல படம் பார்க்கலாமா? 

Link to comment
Share on other sites

ஹா ஹா இப்படி யாராவது வந்து கேட்பார்கள் என்று நினைத்தேன் :cool: இந்த செய்தியை இணைக்கும் போது:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சரத்குமார் கூட்டனி பதவியில் இருந்து கொண்டு ஊழல் செய்ய ஆசைப்படுகினம் போல! இந்த தடவை விசால் கூட்டனி நல்ல போட்டியாக இருக்கும்

Link to comment
Share on other sites

நடிகர் சங்க தலைமை பதவிகளை தமிழர்களே வகிக்க வேண்டும்: பாரதிராஜா

 

நடிகர் சங்க தலைமை பதவிகளுக்கு தமிழன் தான் வரவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னைகள் நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால், அரசியல் கட்சிகள் போல ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், தூற்றிக்கொண்டும் இருக்க அவை நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களிலும் அவர்களைப் பற்றிய அவதூறான செய்திகள் வருவது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.

நடிகர் சங்கத்தில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை, படைப்பாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை, தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றச் சொல்லி தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

bharathiraja_1.jpg

 

சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற உடனே என் வேண்டுகோளுக்கு இணங்க நடிகர் சங்க பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இன்று வரை அந்தத் தீர்மானம் எந்த காரணத்தினாலோ நடைமுறைக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், இன்று வரை நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கு காரணம் சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் பிறமொழியை சேர்ந்தவர்களாக இருப்பதால்தானோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

தமிழக திரைப்பட வரலாற்றில், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சங்கத்தைப் பிரித்துக்கொண்டு, அவரவர் மாநிலத்திலேயே புதிய சங்கங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு பிறகு தான் நமது படைப்பாளிகள் எல்லாம் ஒன்றுகூடி தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என பெயர் மாற்றப்பெற்று மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் பெயர் மாற்றம் செய்ய மறுத்து வருகின்றன.

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையிலும் தமிழர்கள் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிகாரமிக்க பதவிகளுக்கு தமிழர்கள் அல்லாதவர்களையே ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பிற மாநிலத்தில் தமிழன் ஒருவன் ஒரு வார்டு உறுப்பினராக பதவி வகிப்பதற்குக்கூட தகுதியற்றவனாகக் கருதப்படுகிறான்.

நடிகர்கள் சங்கம் மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாச்சார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்தத் துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன்தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல.

ஆகையால், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையையும் காப்பாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்.

நடிகர் சங்கத்தில் தமிழகத்தைச் சார்ந்த நடிகர்கள் / நாடக நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், பின்பு ஏன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் உள்ளது?

தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்களிக்கும் முன் ஒரு முறை சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்''என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53801

Link to comment
Share on other sites

கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேசம்!

 

சென்னை: நடிகர் கமலும், தானும் அரை டிரவுசர் காலத்திலேயே நண்பர்கள் என்றும், கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா என்றும்  நடிகர் ராதாரவி ஆவேசமாகப் பேசினார்.

kamal%20-%20ravi.jpg

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, இரு அணியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கத்தில் சரத்குமார் அணியினரும், கே.கே.நகரில் விஷால் அணியினரும், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டனர்.

கோடம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசுகையில், "எனது அப்பா எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்துக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியவில்லை.

தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் தற்போது மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். சட்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதை தட்டி விட்டுவிடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம்.

அதேபோல், ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள் நுழைந்து கடித்தால், இங்கு எனது பேண்டை கழற்ற முடியாது. இங்கிருந்து வெளியே சென்றதும், அந்தப் பூச்சியைப் பிடித்து, நீதானே கடித்தாய் எனக் கூறி அதை நசுக்கிவிடுவேன். அதேபோல், 18-ம் தேதி இரவு வரட்டும், அனைவரையும் நசுக்கி விடுவேன்'' என மிகவும் ஆவேசமாக கூறினார். ( நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து  தங்கள் தரப்புக்கு குடைச்சல் கொடுத்த பூச்சி முருகனையே மறைமுகமாக ராதாரவி குறிப்பிட்டார்.)

கமல் மீது பாய்ச்சல்!

ராதாரவி மேலும் பேசுகையில், " கமலை பற்றி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா?  கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலேயே நண்பர்கள்.இருவரும் மாறி மாறி கெட்டவார்த்தையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வோம். சினிமாவுக்கு யாரும் நிரந்தரம் கிடையாது"  என்றும் ஆவேசம் காட்டினார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53842

Link to comment
Share on other sites

நடிகர் சங்க தலைமை பொறுப்பை தமிழர்களே வகிக்கணும்: சீமான்

 

seeman%202.jpgசென்னை: நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும், ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த நடிகர் சங்கத்தில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த பெருமைகள் பலவைந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும், ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த, பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல. தமிழினத்தின் பெருமைமிகு கலை அடையாளமான அய்யா நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார். எனவே இச்சங்கம் இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றிருப்பது சரியானதல்ல. தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ்நாடு நடிகர் சங்கம் “ என பெயர் மாற்றம் அடைவது தான் மிகச் சரியானதாக இருக்கும்.

மேலும் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள இச்சங்க தேர்தல் தொடர்பான எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகள் பேசித் தீர்த்திருக்க வேண்டியவை. ஆனால் காலம் கடந்து விட்டது. தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையில், முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கு தலைமை தாங்கலாம் என்கிற நிலை இவ்வினத்தின் தன்மானத்திற்கு இழுக்கு. உலகிலேயே தன்மானத்திற்கு இயக்கம் தொடங்கிய தமிழினம் இன்று தனக்கு தலைமையேற்க யார் யாரையோ எதிர்பார்த்து நிற்பது அவமானம்.

ஒரு இனத்தின் தன்மதிப்பு என்பது அவர்களே அவர்களது இனத்திற்கு, நிலத்திற்கு தலைமை ஏற்பதாகும். இல்லையேல் அது அடிமைத்தனதிற்குத்தான் அடித்தளமிடும். இது இனவாதமோ பாசிசமோ அல்ல. பிற மாநிலங்களில் செயல்படுகிற திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர்கள் யாராவது அச்சங்கத்தில் தலைமையையோ முக்கிய பொறுப்புகளையோ ஏற்க முடியுமா?, அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதை இச்சமயத்தில் ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
‘தகப்பன் என்பவன் பெத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் ரத்தவனாக இருக்கவேண்டும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் யாரும் வரலாம், வாழலாம், நடிக்கலாம் ஆனால் வழிநடத்தும் தலைமை தமிழர்களாக இருத்தல் வேண்டும்.  ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தகாரர்களான நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்து நாட்டிற்கு மட்டுமல்ல நடிகர் சங்கத்திற்கும் பொருந்தும் என்பதை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்கிற உணர்வு சார்ந்த எமது கோரிக்கையை எமது கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் அன்போடு வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53872

Link to comment
Share on other sites

தமிழ் நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தாதது ஏன்? இணையத்தில் உலாவரும் கேள்விக் கணைகள்

 

சென்னை: நடிகர் சங்க தலைமை பதவிகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என சொல்லும் இயக்குநர் பாரதிராஜா, ஏன் தனது படங்களில் தமிழ் நடிகைகளை அறிமுகப்படுத்தவில்லை என இணையத்தில் கேள்வி கணைகள் உலா வருகின்றன.
 

bharathiraja%20long.jpg

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "நடிகர்கள் சங்கம் மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாசார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்தத் துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன்தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல" என்று கூறியிருந்தார்.

பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பல்வேறு கேள்விகள் உலா வருகிறது. இது தொடர்பாக பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு, காரசாரமான கருத்துமோதல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம்: ஸ்ரீதேவி (தெலுங்கு), ரதி (இந்தி), விஜயசாந்தி (தெலுங்கு), ராதா (மலையாளம்), மாதவி (தெலுங்கு), ரேவதி (மலையாளம்), ரேகா (மலையாளம்), அமலா (பெங்காலி), ரஞ்சிதா (தெலுங்கு), ரியாசென் (பெங்காலி), சிந்து மேனன் (மலையாளம்), காஜல் அகர்வால் (இந்தி), கார்த்திகா (மலையாளம்).

''இப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிஜாராவின் மருமகளும் மலையாளிதான் என்பதை மறைத்துவிட்டு வசதியாக அவ்வப்போது தமிழ், தமிழன் என்று பேசுகிறார்'' என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேசமயத்தில், ''பாரதிராஜா ஒரு கலைஞர். தனது படத்துக்குத் தேவையென்றால் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பயன்படுத்துவார். அது கலை. இது அதிகாரம். அதிகாரத்துக்கு வர அடுத்த மாநிலத்தவருக்கு உரிமை கிடையாது'' என்று பாரதிராஜாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/article.php?aid=53844

Link to comment
Share on other sites

தேர்தல் ஞாயிறு: சரத்குமார் அணி Vs பாண்டவர் அணி

 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற இருக்கிறது. இம்முறை சரத்குமார் மற்றும் விஷால் என இரு அணிகள் மோதுவதால் கடும் போட்டி நிலவுகிறது.

தென்னிந்திய vishalsarath_2394632f.jpgநடிகர் சங்கத்துக்கான 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை அக்டோபர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி - விஷால் அணி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் நாடக நடிகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என அனைவரிடமும் இரண்டு தரப்பினரும் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வந்தார்கள்.

வாக்காளர்களின் எண்ணிக்கை

இத்தேர்தலில் மொத்தம் 3139 பேர் ஓட்டு போட தகுதியுள்ள வாக்காளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 1175 பேர் சென்னைக்கு வெளியில் மற்ற மாவட்டங்களில் வசிக்கும் நாடக நடிகர்கள் ஆவார்கள். இவர்களது வாக்குகளைக் கைப்பற்ற சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்கள். இத்தேர்தலில் தபால் மூலமாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணபித்தார்கள். அவர்களுக்கு வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு, அவர்களது வாக்குகள் தேர்தல் அதிகாரி பத்மநாபனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

தபால் ஒட்டுப்பதிவு நிறைவு

தபால் ஒட்டு மூலமாக வாக்குப்பதிவு செய்வது இன்று மாலையுடன் முடிவுற்றது. தபால் ஒட்டுகள் மூலமாக 783 வாக்குகள் வந்திருக்கின்றன. அதில் 43 ஒட்டுக்கள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தபால் ஒட்டுகள் போக மீதமுள்ள வாக்காளர்கள் நேரில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்க முன்னேற்பாடுகள்

செயிண்ட் அப்பால் பள்ளியில் உள்ள வகுப்பறை வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை ரகசியமாகவும், சுதந்திரமாகவும் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பதவிக்கு போட்டியிடுபவர்களின் எண்கள் மற்றும் படங்களுடன் அடங்கிய ஒட்டுச் சீட்டு அச்சடித்து தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுப் போடுபவர் யாரை தேர்வு செய்ய விரும்புகிறார்களோ, அவர்களது எண் பகுதியில் டிக் செய்ய வேண்டும். எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை இரு அணியினருமே விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரே இடத்தில் கூட இருப்பதால், அவர்களைக் காண கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடக்க சென்னை மாநகர போலீஸார் தீவிர ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். இன்று இரவு முதலே செயிண்ட் எப்பாஸ் பள்ளிக்கூடம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் அதிகாரி ஆய்வு

இத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் செயிண்ட் எப்பாஸ் பள்ளியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அதுமட்டுமன்றி சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் தேர்தல் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். தேர்தல் ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்கள்.

உடனடியாக வாக்கு எண்ணிக்கை

நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், சிறிது நேரத்திலேயே ஒட்டு எண்ணிக்கை தொடங்கப்பட இருக்கிறது. முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து நேரடி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒட்டுகள் தனி தனியாக எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என வரிசையாக வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தேர்தல்-ஞாயிறு-சரத்குமார்-அணி-vs-பாண்டவர்-அணி/article7774639.ece?homepage=true

Link to comment
Share on other sites

நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு!

 

சென்னை: நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

1.jpg

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் சரத்குமார் அணியினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டு உள்ளது.

2.jpg

இந்த மோதலில், நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும், விஷால் குரல் எழுப்பியதை தொடர்ந்து இரு அணியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. வாக்குச்சாவடியை நோக்கி நடிகை, நடிகர்கள் ஓடியதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகை ரங்கீலா வாக்கு செலுத்த வந்தபோது அவரை சரத்குமார் தள்ளிவிட்டதாக நடிகர் வடிவேலு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இரு அணியினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=53918

Link to comment
Share on other sites

''நடிகர் சங்க தேர்தல் பிரசாரம் கூவத்தை விட மோசமாக இருந்தது !''-நடிகர் பார்த்திபன் கருத்து

 

டிகர் சங்க தேர்தலுக்காக சரத், விஷால் தரப்பினர் மேற்கொணட பிரசாரம்  கூவத்தை விட மோசமாக இருந்தததாக நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

parthi.jpg

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பதற்காக சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் கடுமையாக தாக்கி பேசின. இந்நிலையில் இன்று தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் பார்த்திபன், இரு தரப்பினரின் தேர்தல் பிரசாரங்களை கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நடிகர் சங்க  தேர்தல் பிரசாரம் கூவத்தை விடவும் மோசமாக இருந்தது.தனிப்பட்ட தாக்குதல்கள் இருந்தது ஏற்று கொள்ள முடியாதது.  தேர்தல் முடிந்த பிறகாவது அமைதி காக்க வேண்டும். ஒற்றுமை நிலவ வேண்டும் '' என தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53916

Link to comment
Share on other sites

போட்டியிடும் இரண்டு தரப்புமே சரியில்லை.

- திரைப்பட நடிகர்களையும், நாடக நடிகர்களையும் பிரித்து இரண்டு தனி அமைப்புகள் ஆக்க வேண்டும்.

- நடிகர் சங்கத்தின் சொத்துக்களிலும், கடன்களிலும் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் சம அளவில் பொறுப்புக்கள் இருப்பதாக அமைக்க வேண்டும்.

- இந்த அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு உரியனவாக மாற்றம் பெற வேண்டும் (பெயரிலும்கூட).

Link to comment
Share on other sites

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு பாதிக்காது: வரலட்சுமி சரத்குமார்

 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தேர்தலால் விஷாலுக்கு எனக்கும் உள்ள நட்பு பாதிக்காது என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்து விட்டு வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியது:

''அப்பா சரத்குமாருக்கே வாக்களித்தேன். நண்பராக விஷாலுக்கு என் ஆதரவு உண்டு. தேர்தலால் விஷாலுக்கு எனக்கும் உள்ள நட்பு பாதிக்காது. யார் வெற்றி பெற்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அனைவருமே ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறேன்.'' என்று வரலட்சுமி பேசினார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தேர்தலால்-விஷாலுக்கும்-எனக்கும்-உள்ள-நட்பு-பாதிக்காது-வரலட்சுமி-சரத்குமார்/article7777205.ece

Link to comment
Share on other sites

'கவுண்டர்' ராக்ஸ் : ரணகளத்திளும் கிளுகிளுப்பை ஏற்படுத்தி சென்றார்!

 

டிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக 'காமெடி கிங்' கவுண்டமணி இன்று வந்திருந்தார். கவுண்டர் வந்தால் மீடியாக்கள் விடுமா? சார் நீங்க ஏதாவது கண்டிப்பா பேசனும் என்று அடம்பிடித்தன.

 


என்னப்பா ஏதாவது பேசனும்னு சொன்ன எப்படி? என்ன பேசனும்னு கேள்வி கேளுங்க.. என்றார் . உடனே மீடியாக்கள் நடிகர் ரஜினி காந்த், தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டுமன்று சொன்னதையும் கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டுமென்று கூறியதையும் சொன்னார்கள்.

அதற்கு கவுண்டர், நடிகர் சங்கம்னு இருந்தாலோ போதும்... என்று தனது பாணியிலேயே பதிலளிக்க அங்கு கொல்லென்று சிரிப்பு எழுந்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=53935

Link to comment
Share on other sites

கவுண்டரின் பேச்சைக் கேட்க சிரிப்பை அடக்க முடியவில்லை. emoticon_laughing.gif

Link to comment
Share on other sites

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்! சரத் அணி முன்னிலை!!

 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.  ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

sarath_1.jpg

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

தபால் வோட்டுக்கள் எண்ணப்பட்டதில் சரத் அணியின் சரத்குமார், ராதாரவி, சிம்பு, விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

 

அடிதடி, தள்ளுமுள்ளு, பரப்புடன் நடந்த நடிகர்சங்கத் தேர்தல் - புகைப்படத் தொகுப்பு!http://bit.ly/1NOfn9G

3a.jpg

http://www.vikatan.com/news/article.php?aid=53940

 

Link to comment
Share on other sites

நடிகர் சங்க தேர்தல் - விஷால் வெற்றி
 

சென்னை : நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 1376 ஓட்டுகளும், ராதாரவி 1165 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் விஷால் வெற்றி பெற்று இருக்கிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1367134

Link to comment
Share on other sites

நடிகர் சங்கத் தேர்தல்: கடும் போட்டியில் நாசரிடம் தோற்றார் சரத்குமார்!
 

 சென்னை: பெரும் பரபரப்பு, விறுவிறுப்புடன் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் இப்போதைய தலைவர் சரத்குமார் தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாசர் வெற்றிப் பெற்றார். நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகர் நாசர்.

ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது இவர் பெரும் பின்னடைவில் இருந்தார். ஆனால் பின்னர் சென்னை வாக்குகள் எண்ணப்பட்டதும் நாசர் வேகமாக முன்னேறினார். அவர் 1334 வாக்குகள் பெற்றார். சரத்குமார் 1225 வாக்குகள் பெற்றார். 109 வாக்குகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றிப் பெற்றார். சுயேட்சையாகப் போட்டியிட்ட சிவசாமி 4 வாக்குகள் பெற்றார்.

 
 
பொருளாளர் பதவி: வென்றார் நடிகர் கார்த்தி!

Read more at: http://tamil.oneindia.com/
Link to comment
Share on other sites

நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!
 
 
 
 
Tamil_News_large_1367176.jpg
 

சென்னை : பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர்.

அனல் பறந்த தேர்தல் களம்

 

ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் நடந்து முடிந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தேர்தல் விறுவிறுப்பாக, அனல் பறக்க நடந்தது. கடந்த மூன்று முறை தலைவராக இருந்த சரத்குமாரை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணியினர் களம் இறங்கினர். இதனால் இந்தாண்டு தேர்தல் அனல் பறந்தது. தேர்தல் தேதி அறிக்கவிப்பட்ட நாள் முதல் இரண்டு அணியினரும் மாறி மாறி ஒருவர் மீது குற்றம் சாட்டினர். அதிலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவி, சிம்பு போன்றோர் எதிர் அணியினர் மீது கடுமையான வார்த்தைகளாலும், அநாகரிகமான பேச்சாலும் வசை பாடினர்.

 

ஜனநாயக முறைப்படி தேர்தல்

 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், 24 உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பதவிகளுக்காக தேர்தல் நடந்தது. இதில் சரத்குமார் தலைமையிலான அணி மற்றும் விஷால் தலைமையிலான அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

 

சாதித்தது பாண்டவர் அணி

 

நாசர் வெற்றி : நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர், சரத்குமார் மற்றும் சிவசாமி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் நாசருக்கு 1344 ஓட்டுகளும், சரத்குமாருக்கு 1235 ஓட்டுகளும், சிவசாமி என்பவருக்கு 4 ஓட்டுகளும் கிடைத்தன. இதன்மூலம் நாசர் 109 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

 

விஷால் வெற்றி : பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், ராதாவியும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி பெற்று இருக்கிறார்.

 

கார்த்தி வெற்றி : பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் போட்டியிட்டனர். இதில் கார்த்திக்கு 1493 ஓட்டுகளும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1080 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் கார்த்தி 413 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 

அநேக நடிகர்கள் ஓட்டுப்பதிவு

 

நடிகர் சங்க தேர்தலில் மூத்த நடிகர்கள் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை பலர் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், ராதாரவி, விஷால், சரத்குமார், கார்த்திக், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், மன்சூர் அலிகான், சசிகுமார், சமுத்திரகனி, ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம், அர்ஜூன், ஜிவி.பிரகாஷ் குமார், பிரபு, விக்ரம் பிரபு, எஸ்வி சேகர், சாந்தனு, சுரேஷ், பிரசன்னா, கருணாஸ், போண்டா மணி, கிங்காங், ராமராஜன், அம்பிகா, ராதா, ராதிகா, லட்சுமி, சுகாசினி, குட்டி பத்மினி, பசி சத்யா, கே.ஆர்.விஜயா, சீமா, லதா, ரேவதி, அர்ச்சனா, சினேகா, சங்கீதா, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடிகர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

 

83 சதவீதம் ஓட்டுப்பதிவு

 

நடிகர் சங்கத்தில் மொத்தம் 3139 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1824 பேர் நேரடியாகவும், 783 பேர் தபால் ஓட்டுக்கள் மூலம் ஓட்டை பதிவு செய்தனர். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்கத்தில் 83 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1367176

Link to comment
Share on other sites

நடிகர் சங்க தலைமை பொறுப்பை தமிழர்களே வகிக்கணும்: சீமான்

 

seeman%202.jpgசென்னை: நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும், ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த நடிகர் சங்கத்தில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த பெருமைகள் பலவைந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும், ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த, பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல. தமிழினத்தின் பெருமைமிகு கலை அடையாளமான அய்யா நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார். எனவே இச்சங்கம் இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றிருப்பது சரியானதல்ல. தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ்நாடு நடிகர் சங்கம் “ என பெயர் மாற்றம் அடைவது தான் மிகச் சரியானதாக இருக்கும்.

மேலும் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள இச்சங்க தேர்தல் தொடர்பான எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகள் பேசித் தீர்த்திருக்க வேண்டியவை. ஆனால் காலம் கடந்து விட்டது. தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையில், முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கு தலைமை தாங்கலாம் என்கிற நிலை இவ்வினத்தின் தன்மானத்திற்கு இழுக்கு. உலகிலேயே தன்மானத்திற்கு இயக்கம் தொடங்கிய தமிழினம் இன்று தனக்கு தலைமையேற்க யார் யாரையோ எதிர்பார்த்து நிற்பது அவமானம்.

ஒரு இனத்தின் தன்மதிப்பு என்பது அவர்களே அவர்களது இனத்திற்கு, நிலத்திற்கு தலைமை ஏற்பதாகும். இல்லையேல் அது அடிமைத்தனதிற்குத்தான் அடித்தளமிடும். இது இனவாதமோ பாசிசமோ அல்ல. பிற மாநிலங்களில் செயல்படுகிற திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர்கள் யாராவது அச்சங்கத்தில் தலைமையையோ முக்கிய பொறுப்புகளையோ ஏற்க முடியுமா?, அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதை இச்சமயத்தில் ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
‘தகப்பன் என்பவன் பெத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் ரத்தவனாக இருக்கவேண்டும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் யாரும் வரலாம், வாழலாம், நடிக்கலாம் ஆனால் வழிநடத்தும் தலைமை தமிழர்களாக இருத்தல் வேண்டும்.  ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தகாரர்களான நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்து நாட்டிற்கு மட்டுமல்ல நடிகர் சங்கத்திற்கும் பொருந்தும் என்பதை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்கிற உணர்வு சார்ந்த எமது கோரிக்கையை எமது கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் அன்போடு வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53872

அண்ணன் வந்து எங்கடா தம்பி நடிகர் சங்க தலைவர் பதவி னு சரத்குமார கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்...சீமான்  கதறல் 

Link to comment
Share on other sites

அண்ணன் வந்து எங்கடா தம்பி நடிகர் சங்க தலைவர் பதவி னு சரத்குமார கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்...சீமான்  கதறல் 

இன்னும் கொஞ்சம் யோசிங்க.. tw_blush:

Link to comment
Share on other sites

காலில் விழுந்து வெற்றி சான்றிதழ் வாங்கிய பாண்டவர் அணி!

 

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் தேர்தல் அதிகாரி பத்மநாபன் காலில் விழுந்து சான்றிதழ் வாங்கினார்கள்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு வெளியானது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு விஷால் அணியில் போட்டியிட்ட அயூப்கான், கோவை சரளா, சங்கீதா, பால தண்டபாணி, பூச்சிமுருகன், ராஜேஷ், சோனியா, ஜுனியர் பாலையா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, பசுபதி, உதயா, பிரேம்குமார், ஸ்ரீமன், விக்னேஷ், பிரகாஷ், சிவகாமி ஆகிய 20 பேர் வெற்றி பெற்றனர்.

சரத்குமார் அணியில் போட்டியிட்ட 24 பேர்களில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாண்டவர் அணியில் வெற்றி பெற்ற நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோருக்கு தேர்தல் அதிகாரி பத்மநாபன் சான்றிதழ் வழங்கினார். அப்போது, இவர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=53963

Link to comment
Share on other sites

ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்!

 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின் தோல்விக்கு முக்கியமாக 4 காரணங்கள் சொல்லப்படுகின்றன.

நாடக நடிகர்களை குறி வைத்த ரித்திஷ்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை, நடிகர் ராதாரவி அசைக்க முடியாத நபராகத்தான் இருந்தார். திரையுலகில் அவரது அதட்டலும் உருட்டலும்  அனைவருக்கும் தெரிந்த விஷயம். கடந்த 30 ஆண்டுகளாக திரைப்பட சங்கத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து வருபவர். குறிப்பாக நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு அசைக்க முடியாத செல்வாக்கு உண்டு. இந்த நடிகர் சங்கத் தேர்தலில் இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் சரத் தரப்பு முக்கிய பதவிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவதற்கு ஒரே காரணம்,  நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள  தனிப்பட்ட செல்வாக்குதான். 

raha.jpg

நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள செல்வாக்கு விஷால் தரப்புக்குத் தெரியும். இந்த இடத்தில்தான் விஷால் தரப்பு  நடிகர் ரித்திஷை களமிறக்கியது. அதாவது தபால் ஓட்டுகள் போடும் நாடக நடிகர்களின் வாக்குகளை குறிவைத்து ரித்திஷ் செயல்பட ஆரம்பித்து, வைட்டமின் 'ப'-வை இறைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரித்திஷின் இந்த முயற்சி நாடக நடிகர்களிடம் பலிக்கவில்லை.  எனினும், சொற்பமான நாடக நடிகர்கள் விஷால் பக்கம் சாய்ந்துள்ளனர். ராதாரவியின் மீது கொண்ட பற்று காரணமாக நாடக நடிகர்களின் ஓட்டு பெரும்பாலும் சரத் தரப்புக்கே கிடைத்துள்ளது. அதனால்தான், தபால் ஓட்டுகள் எண்ணும் வரை சரத் அணியினர் முன்னிலையில் இருந்தனர்.

தனிப்பட்டத் தாக்குதல்!

வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் இரு தரப்பினரும் தனிப்பட்ட முறையில் தாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக நடந்த பிரசாரத்தின்போது, எதிரணியில் உள்ள நடிகர்களை ராதாரவி சற்று அதிகமாகவே அர்ச்சனை செய்தார்.  ஒவ்வொருவரையும் ஒருமையில் அழைத்து திட்டியது, நடுநிலையில் இருந்த நடிகர் நடிகைகளை எதிரணி பக்கம் சாய வைத்து விட்டதாம்.

நடிகர் பார்த்திபன் நேற்று அளித்த பேட்டியில், கூவத்தைவிட மோசமாக நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரம் இருந்தாக தெரிவித்ததும் இதன் எதிரொலியாகத்தான். சரத்,ராதிகா, ராதாரவி போன்றவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, பக்குவமான அணுகுமுறையையும் கண்ணியமான பேச்சையும் கடைப்பிடித்திருந்தால், நடுநிலை வகிக்கும் நடிகர் நடிகைகள் ஓட்டு சரத் பக்கம் விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒதுங்கிய அதிமுக...

அதிமுக தலைமை எடுத்த முடிவும், சரத்குமார் அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.இந்த தேர்தலில், சரத் தரப்பில் அ.தி.மு.கவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் அதிகம் பேர்  போட்டியிட இருந்தனர். தலைமை உத்தரவையடுத்து அவர்கள் ஒதுங்கிக்கொள்ள, சரத் தரப்புக்கு சற்று பின்னடைவாக அமைந்துவிட்டது. அதே வேளையில் விஷால் தரப்பு ஆதரவு நடிகரான ரித்திஷ் சென்னையில் வசிக்கும் நடிகர்களை தொடர்ந்து கேன்வாஸ் செய்துகொண்டுதான் இருந்தாராம். இதனை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடைசிகட்ட கேன்வாசிங்!

நேற்று வாக்கு மையத்துக்கு ஓட்டு போட வந்த நடிகர்- நடிகைகளிடம் கடைசி கட்டத்தில் விஷால் தரப்பு இளைஞர்கள் சூப்பராக கேன்வாஸ் செய்தனராம். அதேவேளையில் சரத் தரப்புக்கு வேலை செய்யக்கூட ஆள் இல்லையாம். கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் சரத் தரப்பு கோட்டை விட்டுள்ளது. இதனால், வாக்குப் பதிவு தொடங்கிய 4 மணி நேரத்துக்குள் விஷால் தரப்புக்கு வாக்குகள் கொத்து கொத்தாக விழத் தொடங்கியுள்ளன. 

இந்த வெற்றி விஷால் அணியினரின் அமோக வெற்றி என்று கருதப்பட்டாலும், சரத் தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.எனவே, விஷால் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளில் மாற்றம் வந்துவிடும்.

http://www.vikatan.com/news/article.php?aid=53973

Link to comment
Share on other sites

நடிகர் சங்கத் தேர்தல்: கமல் சகோதரர் சாருஹாசனின் ஆதங்கம்!

 

மல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பற்றியும், தமிழக சினிமா ரசிகர்களின் மோகத்திற்கு எதிராகவும் காட்டமான கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
 

Charu%20hasan.jpg

அதில், "நான் சங்கத்தின் ஆயுள் சந்தாதாரர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு நான் செல்லவில்லை. அவர்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்று கொண்டதில்லை. நானும் சினிமாவை, இந்தியனின் பெருமையை வளர்க்கும் ஒரு சமூக நல தொண்டு நிறுவனமாக கருதுவதில்லை. வக்கீல் தொழில் செய்யும்போது ஓரளவு ஆங்கிலம் பேசியது தொழில் வளர்ச்சிக்காக. அதை தவிர எனக்கு தமிழ் ஒன்றுதான் பேசத்தெரியும்.
 
சினிமா தொழிலில் நான் அதிகம் நடிக்க அழைக்கப்பட்டதே இல்லை.  மலையாள, கன்னட சினிமாக்களில்தான் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் நடப்பு, வேறு மொழியிலிருந்து வந்தவர்களைத்தான் சிறந்த நடிகர்களாக ஒப்புக்கொள்வது. அந்த காலத்தில் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட எம்ஜிஆர் அவர்கள். அதன் பின் அந்த அளவு சிறந்து விளங்கியது நமது சூப்பர் ஸ்டார்.
 
மற்ற மொழி நடிகர்கள்தான் அதிகம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மதத்தில் கூட தமிழ் கடவுளைவிட வட இந்தியாவின் யாதவ கடவுளைத்தான் சிறப்பாக வணங்குகிறார்கள். தமிழக மக்கள் தங்கள் உழைப்பின் சரிபாதியை சினிமா கொட்டகைகளுக்கு கொடுத்து அரை வயிறு நிரப்பி பள்ளிகளை விட, சினிமாவுக்கு செல்பவர்கள் அதிகமானதால் சினிமா ஆட்சி வந்திருக்கிறது. நேற்று காலையில் ஜன்னல் திறந்தவுடன் சென்னையில் கிரிக்கெட் இருக்கைகள் விற்று போய்விட்டன. அனேகமாக சினிமா ஆட்சி முடிந்தவுடன் ஒரு கிரிக்கெட் ஓபனிங் பேட்ஸ்மன் முதல் மந்திரியாகவும், வேகப்பந்து வீச்சாளர் நிதி மந்திரியாகவும் ஆகலாம். நாடு உருப்படுமா?

மன்னித்து விடுங்கள்.. கல்லூரி கிரிக்கெட்டில் மூன்று கல்லூரிகளிலும் நான்  ஒரு வேகப்பந்து வீச்சாளன். ஒரு கல்லூரியில் கிரிக்கெட் கேப்டன்.  பின்னாளில் நடிகன்.. நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒரு தேசிய விருதும், பிலிம் ஃபேர் விருதும் பெற்றவன்.
 
என்னை யாரும் யோசனை கேட்கப் போவதில்லை. நானும் ஒரு நலிந்த நடிகன்தான். நடிகர் சங்க தேர்தல் முடிந்ததும் இரு கட்சி பெரியவர்களும் கூடி பேசி, என் போன்ற சிலகாலமே உயிருடன் இருக்க போகிறவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.

நான் நடிகர் சங்க வாக்கு சாவடி வரை நடக்க முடியாதவன்... தேர்தலை தொலைக்காட்சி மூலம்தான் பார்க்கிறேன். ஜெயிப்பவர்களுக்கு  பெரிய சுமை காத்திருக்கிறது... தாங்கும் திறமை வரும்படி வாழ்த்துகிறேன்.... வாழ்த்த வயது மட்டும்தான் இருக்கிறது... வளர்க்கும் தகுதி இல்லை... நம் சூப்பர்ஸ்டார் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்... தேர்தலுக்கு பேசவந்தவர்... திராவிடநாடு கேட்டு விட்டு போனது போல்..... தமிழ்நாட்டு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
பின்னால் வந்த கமல்ஹாசன் செளத் இண்டியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷனை இண்டியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் என்று மாற்ற இன்னொரு யோசனை சொல்கிறார்...

இன்றைய சினிமா ரசிகர்கள், “இந்த உலகநாயகனின் தந்தை சுதந்திர போராட்ட வீரராமே? இன்றைய ஆட்சியில் உள்ள லஞ்ச ஊழலுக்கு சுதந்திரம்தான் காரணம். வெள்ளையர்களை திரும்ப அழையுங்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்... உலகநாயகன் தன் யோசனைகளை வெளியே விடாமல் வைத்துக் கொள்வது என் யோசனை... ஒரு வேளை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நினைத்தால்... 'இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் என்று வைத்திருந்தால் நல்லாயிருக்கும்' என்று மாற்றிக் கொள்ளவும்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53983

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.