Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

12088247_1016849508373839_88991583460209


கடந்த ஆண்டு இதே தினத்தில்தான், பந்து தாக்கி மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்சின் இந்த புகைப்படம், எம்.சி.சி -விஸ்டன் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

இன்று

1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

   

1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

 

1918 - சிங்களம்-முஸ்லீம் கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த சிங்கள தலைவர்களுக்கு கிட்டத்தட்ட 3 வருடங்களின் பின்னர் மன்னிப்பு வழங்கப்பட்டது.

Link to comment
Share on other sites

எவரெஸ்ட் தேசத்தின் முதல் குடிமகள்

 
everest_2605142f.jpg
 

உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் மாற்றங்கள் நேபாளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக கம்யூனிஸ்ட் தலைவர் வித்யா தேவி பண்டாரி (54) சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) துணைத் தலைவரான வித்யா தேவி, அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் காலஞ்சென்ற மதன் பண்டாரியின் மனைவி.

நேபாளத்தின் பெருமை

நேபாளத்தில் நிலவிவந்த 240 ஆண்டுகால முடியாட்சி முறை 2008-ம் ஆண்டில் ஒழிக்கப்பட்டு, அந்நாடு குடியரசு நாடானது. அப்போது உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை முதலில் வகித்தவர் ராம் பரண் யாதவ். அந்த வகையில் தங்கள் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரையே பெண்ணாகத் தேர்ந்தெடுத்த பெருமையை நேபாளம் பெறுகிறது.

இவ்வளவு காலம் இந்து நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த நேபாளம், அதைத் துறந்து செப்டம்பர் 20-ம் தேதி மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக்கொண்ட புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது. இந்த நிலையில்தான் வித்யா தேவி குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறார். புதிய அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதத்துக்குள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

இடதுசாரி பாரம்பரியம்

இடதுசாரி மாணவர் அமைப்பில் 1979-ல் சேர்ந்ததன் மூலம், அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் வித்யா தேவி. விரைவிலேயே நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (எம்.எல்.) சேர்ந்து, மோரங் மாவட்டத்தில் இருந்துவந்த கட்சிகளற்ற பஞ்சாயத்து முறையை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.

அதன் பிறகு புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் மதன் குமார் பண்டாரியைத் திருமணம் செய்துகொண்டார். 1990-ல் பஞ்சாயத்து முறை ஒழிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் போட்டியிடும் ஜனநாயக முறை கொண்டுவரப்பட்டது. அப்போது நேபாள எம்.எல். கட்சி, நேபாள மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதன் குமார் பண்டாரி பொதுச் செயலாளர் ஆனார்.

பெண் உரிமைகள்

இதற்கிடையில், 1993-ல் நிகழ்ந்த மர்மமான ஒரு ஜீப் விபத்தில் மதன் குமார் பலியாக, வித்யா தேவி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவான, நேபாள பெண்கள் சங்கத்துக்குத் தலைமை பதவியேற்று இருபது ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். 1998-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அடுத்தடுத்து இரண்டு முறை கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேபாளப் பெண்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவந்த வித்யா தேவி, சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குத் தீவிரமாக முயற்சித்தவர். அதன்படி அரசின் அனைத்துக் குழுக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென புதிய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் (1994) முன்னாள் பிரதமர் கிருஷ்ணப் பிரசாத் பட்டாராயைத் தோற்கடித்த வித்யா தேவி, 1990-களில் நேபாள அரசின் சுற்றுச்சூழல், மக்கள்தொகை அமைச்சராகச் செயல்பட்டிருக்கிறார். 2009-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற மாதவ் குமார் நேபாள் தலைமையிலான ஆட்சியில், அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல, அந்நாட்டின் முதல் குடிமகளாகவும் மாறி வரலாறு படைத்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/society/women/எவரெஸ்ட்-தேசத்தின்-முதல்-குடிமகள்/article7829592.ece

Link to comment
Share on other sites

ஐன்ஸ்டீனைவிட அறிவாளி இந்தியா வம்சாவளி சிறுமி லைடியா!

 

E=mc2. இது இன்றைய உலகின் இன்றியமையாத சூத்திரங்களில் ஒன்று. இதை கண்டறிந்தவர் ஐன்ஸ்டீன். அவரது IQ (Intelligent Quotient) 160 என கண்டறியப்பட்டது.

ALS என்ற கொடிய நோய் தாக்கினாலும் மனம் தளராமல் ''ஈர்ப்பு சக்தி கொண்ட கருந்துளைகள்" (Black Holes) பிரிவில் பல அரிய கண்டுப்பிடிப்புகள் நிகழ்த்துபவர் ஸ்டீபன் ஹாக்கிங். இவரது IQ 160.

இவர்களை எல்லாம் தனது IQ மூலம் வீழ்த்திருக்கிறார் 12 வயதே ஆன லங்கமை சேர்ந்த லைடியா.

laidiya_vc_1.jpg

IQ அளவு ’’மென்சா’’ என்ற தேர்வு மூலம் கண்டறியப்படும். கட்ரால் lll B எனும் கேள்வி தாளில் 162 மார்க் பெற்றுள்ளார் இந்திய வம்சாவளியான லைடியா.

லைடியாவின் பெற்றோரான கேரளாவை சேர்ந்த அருண் மற்றும் எரிக்கா கூறுகையில், பிறந்த 6 மாதத்திலேயே பேசும் திறனை லைடியா பெற்றதாகவும், 4 வயதில் வையலின் இசையைக் கற்றதாகவும் நினைவு கூர்ந்தனர்.

இங்கிலாந்திலுள்ள எஸ்எக்ஸ் (ESSEX) மாகாணத்தைச் சேர்ந்த லைடியா, சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடையவள். ஹாரி பார்ட்டரே தனக்கு பிடித்த கதைப் புத்தகம் எனக் கூறும் இச்சிறுமி, அக்கதையை மூன்று  முறை வாசித்திருப்பதாகவும் கூறுகிறார்.

கால்செஸ்ட்டர் பொது மருத்துவமனையில் கதிரியக்கராக பணிப்புரியும் அருண், ''ஒரு வருடம் கழித்து தேர்வு எழுதிக்கலாம் என கூறியும் தன் பிடிவாதத்தால் இந்த வருடமே தேர்வை எதிர் கொண்டாள் என் செல்ல மகள். 162 மார்க்  வாங்கி எங்களுக்கு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் லைடியா" என்றார்.

சிறு வயதிலே கணித பாடங்களில் பல பரிசுகள் பெற்றுள்ள லைடியா, அத்துறையில் சாதிப்பதையே தன் இலட்சியமாக கொண்டுள்ளார்.

இந்தியாவின் அடுத்த ராமானுஜராக உயர பறந்திட லைடியாவை வாழ்த்துவோம்!

http://www.vikatan.com/news/article.php?aid=52083

Link to comment
Share on other sites

பளபள சருமத்துக்கு பப்பாளி

ருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி  அருமருந்து.

p15a.jpg

 

 

 

 

 

dot3%284%29.jpgசருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.

dot3%284%29.jpgபப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.

dot3%284%29.jpgபப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.

dot3%284%29.jpgசருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.

dot3%284%29.jpgசருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.

dot3%284%29.jpgகரும்புள்ளிகளை நீக்குகிறது.

dot3%284%29.jpgபப்பாளியை மசித்து, தலையில் பூசி், குளித்துவந்தால் முடி உறுதியடையும்; நன்கு வளரும்.

dot3%284%29.jpgபாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.

குறிப்பு: பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங் பொருளாகச் செயல்படுகிறது. ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின் அமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது. 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

இன்று

1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

   

1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

    

 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட - மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.

 

1987 - விடுசர வித்யா சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

சாலைகளைக் கடந்து செல்லும் ஒரு வாழ்க்கைப் பயணம்

the_fifth_session__2608648f.jpg
 

வாழ்க்கையின் சில பயணங்கள் நமக்கு வேகமாக சில உண்மைகளை உணர்த்திவிட்டு நம்மைக் கடந்துசென்று விடுகிறது என்பதை மிக அழகாக சொல்கிறது The Fifth Season of the year எனும் போலந்து திரைப்படம்.

இப்படத்தில் இடம்பெறும் பயணம் ஒரு அனுபவம் என்றால் இப்படத்திற்கு ஆதாரமாக உள்ள கதை ஒரு தத்துவம் என்று கொள்ளலாம்.

ஓய்வு பெற்ற பியானோ டீச்சர் பார்பராவோடு வாழ்ந்த ஓவியர் இறந்துவிட, வயதான காலத்தில் பார்பரா தனித்துவிடப்படுகிறாள்.

ஓவியரின் இறுதிச் சடங்கில் பேண்ட் வாசிக்க வந்தவர்தான் விட்டெக். பார்பராவின் காதல் கணவரின் சாம்பல் எச்சத்தைக் கடலில் கரைக்கச் செல்லும் பயணத்தில் டாக்ஸி டிரைவராகவும் விட்டெக் வருவது பார்பரா எதிர்பாராதது.

விட்டெக் பல ஆண்டுகாலம் சுரங்கப் பணியாளராக வேலை பார்த்தவர். இறுதிச் சடங்குகளில் பேண்ட் வாசிப்பது தொழிலுக்காக அல்ல. அது ஒரு ஆத்மார்த்தமான காரியம் என்பதற்காகவே செய்துவருபவர்.

இறந்த ஓவியரின் சாம்பல் எச்சத்தை கடலில் கரைக்க பார்பரா மேற்கொள்ளும் பயணத்திற்கு மேலும் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பார்பராவின் காதல் கணவர் இறந்தபிறகு அவளது குடியிருப்பை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிடுகிறார்கள் ஓவியரது வீட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் அவள் எங்கு செல்வாள் என்ற எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. வேறுவழியின்றி வெளியேறவேண்டிய நிலைமை பார்பராவுக்கு. பார்பராவின் கையறுநிலையைப் பார்க்கும்போது பெண்கள் எவ்வகையிலேனும் தங்கள் சுயபலத்தில் நிற்க வேண்டும் என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.

சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலந்து கடற்கரைப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியை நோக்கி தனது காதல் கணவரது அஸ்தியைக் கரைக்க 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்லலாமென பார்பரா நினைக்கிறாள். இடுகாட்டு பொறுப்பாளர்களிடம் விசாரித்து ஒரு டாக்ஸியைக் கொண்டுவர செய்கிறாள். அந்த பயணத்தில் டாக்ஸி ஓட்டுனராக வருபவர் இறுதி சடங்கில் பேண்ட் வாசித்த அதே மனிதர் - விட்டெக்.

டாக்ஸி பயணத்தின்போது வெகு நேரம் மௌனம். நீண்ட மௌனத்தைக் கலைத்து தனது கணவரின் உயர்ந்த குணங்களை அவ்வப்போது டிரைவருடன் பகிர்ந்துகொள்வதில் பார்பராவுக்கு சற்றே ஆறுதல்.

மேலோட்டமாகப் பார்த்தால் கதையின் நாயகர் விட்டெக் (மேரியன் ட்சிடெஸியல்) ஆகட்டும், நாயகி பார்பரா (இவா விஸ்னிவ்ஸ்கா) ஆகட்டும் ஆரம்பத்தில் நாம் பார்க்கத் துவங்கும்போது ஏதோ பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கும் சீனியர் சிட்டிசன்கள் போலத்தான் தோன்றுகிறார்கள். (உலகில் பலரும் வெளித்தோற்றத்திற்கு நமக்கு அப்படித்தான் தோன்றுவார்கள்.)

ஆனால் இவர்கள் கடந்து வந்த வாழ்க்கையில்தான் எவ்வளவு வித்தியாசங்கள். எவ்வளவு வலிகள். சொல்லமுடியாத வாதனைகள்.

பயணத்தின்போது தங்கள் அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் மட்டுமல்லாமல், ஆங்காங்கே சிற்றுண்டி உண்ணச் சென்ற சிறு உணவுவிடுதி, ஒரு காரில் லிப்ட் கேட்டு வந்து திருடிய இளம்பெண் ஒரு பையனோட பைக்கில் தப்பிச்செல்கையில் அவர்களை விரட்டிப்பிடிக்கும் காட்சி, வழியில் ஒரு வீட்டிற்கு சென்று தன் தோழியை சந்தித்து திரும்புதல், ஒரு ராத்தங்கல் உள்ளிட்ட காட்சிகளும் பயணத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன.

வெவ்வேறு வாழ்க்கையிலிருந்து நீண்ட பயணம் செல்வதற்காக சந்தித்துக்கொள்ளும் இந்த இருவருக்குள்ளும் ஏற்படுவது என்ன நட்பா? காதலா? அல்லது நட்பும் காதலுமா? அல்லது ஆத்மார்த்தமானதொரு பிணைப்பா? என்றெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது...

ஆனால் அதற்குள் பயணம் கடந்துவிடுகிறது. படத்தின் இறுதியில் இதையெல்லாம் கடந்ததொரு விடையும் உண்டு.

பயணத்தின் ஸ்பிக்நீயூ விச்லேக்ஸ் ஒளிப்பதிவு வழியே இரு பக்கங்களிலும் காணக்கிடைக்கும் போலந்து நாட்டின் சலேசிய நிலப்பரப்பின் இயற்கை காட்சிகளும் மிக மிக அற்புதமானவை...

கடைசியில் போலந்தின் வடக்குக் கடற்கரையும் வந்துவிடுகிறது. கார் டிரைவரிடம் தன்னிடமிருந்து மதிப்புமிக்க மோதிரத்தையும் தந்துவிட்டு படகில் நடுக்கடலில் அஸ்தியைக் கரைக்கச் செல்கிறாள் பார்பரா. திரும்பி வர விருப்பமில்லாதவளாக கடலில் அவளும் கரைந்துவிடுகிறாள் தனது கணவன் சாம்பல் எச்சத்தோடு.

நீண்டதூரப் பயணத்தின் வழியே வந்த ஓவியரின் மனைவி ஒரு எஜமானியாக இல்லாமல் ஒரு தோழிபோல நடந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறார் விட்டெக். அந்தப் பண்பில் மனம் கரைகிறது. சில நிமிடங்களுக்குமுன் வாழ்வைக் கடந்துசென்றுவிட்ட அந்தத் தோழியை நினைத்து, கடலை வலியோடு பார்த்துவிட்டு திரும்புகிறார் விட்டெக்.

இயக்குநரின் திரைக்கதைக்கு தனது உயிரோட்டமான நடிப்பாற்றலால் நம்மையும் தனது பயணத்தில் உடன்வரச்செய்த மேரியன் ட்சிடெஸியலும், இவா விஸ்னிவ்ஸ்காவும் படத்திற்கு உயிரோட்டமான பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

சாலையின் திருப்பங்களைப் போலவே வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளதை இயக்குநர் ஜெர்ஸி டொமரட்ஸ்கி, தூரதேசத்து ரசிகனுக்கும் புரியும்படியான காட்சிப்பூர்வ அழகியலோடு கொடுத்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/world-cinema/சாலைகளைக்-கடந்து-செல்லும்-ஒரு-வாழ்க்கைப்-பயணம்/article7841714.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

மச்சு பிச்சுவை மெச்சுவோம்!

 
machu_2608508f.jpg
 

புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று மச்சு பிச்சு. பெரு நாட்டில் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இது. உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலே உள்ள மலைத்தொடரில் மச்சு பிச்சு அமைந்துள்ளது.

இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் இது. கி.பி.1450-ல் இது கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் உலர் கற்களைக் கொண்டே சுவர்களை எழுப்பியிருக்கிறார்கள். இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றிய பிறகு, பல நூறு ஆண்டுகளுக்கு இந்த நகரம் உலகின் பார்வையைப் பெரிதாக ஈர்க்கவில்லை.

1911-ம் ஆண்டில் வரலாற்று ஆய்வாளர் ஹிராம் பிங்கம் என்பவர் இதைக் கண்டறிந்த பிறகு, மச்சு பிச்சுவைப் பார்த்து உலகமே வாயைப் பிளந்தது. தற்போது உலகளவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. 1983-ம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்த இடத்தை யுனெஸ்கோ அறிவித்தது. 2007-ம் ஆண்டில் ஏழு புதிய உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மச்சு பிச்சுவும் ஒன்றாகத் தேர்வானது.

machu2_2608507a.jpg

http://tamil.thehindu.com/society/kids/மச்சு-பிச்சுவை-மெச்சுவோம்/article7841254.ece

Link to comment
Share on other sites

12191314_937825276266167_397157568142177

இந்திய கிரிக்கெட் அணியின் இளைய துடுப்பாட்டத் தூண்.
இந்திய டெஸ்ட் அணித் தலைவர்.
ஒருநாள் துடுப்பாட்ட ஓட்ட இயந்திரம்...
விறுவிறுப்பும் ஆவேசமும் சேர்ந்த கலவை, விராட் கோளியின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

இன்று

1999 - இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

 

1971 - போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் இலங்கையை வந்தடைந்தது.

 

2003 - இலங்கை நீதித்துறை மற்றும் நீதிபதிகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

1996 - பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.

 

Link to comment
Share on other sites

'நோ ஷேவ் நவம்பர்!' - ஒரு நெகிழ்ச்சி பின்னணி!

 

க்களோட கவனத்தை ஈர்க்கணும்னா வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு நல்லா தெரிஞ்ச ஒரு குடும்பம் ஆரம்பித்த  லாப நோக்கற்ற நிறுவனம்தான் ’நோ ஷேவ் நவம்பர்‘. தனித்துவமான முறையில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிறுவனத்தினுடைய நோக்கம். விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் புற்றுநோயை தடுப்பது, அதைப்பற்றிய ஆராய்ச்சி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்றவற்றிற்காக நிதி திரட்டவும் செய்கிறார்கள்.

இதன் தனித்தன்மை என்ன?

இதில் கலந்துகொள்பவர்கள் இந்த ஒரு மாதத்திற்கு அவர்களுடைய முடி, தாடி, மீசை ஆகியவற்றை திருத்தாமல் அதற்கு ஆகும் செலவை நன்கொடையாக அளிக்க வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழக்கும் முடியை அவர்களுக்காக நாம் வளர்ப்பது என்பதே இதன் கரு. இதில் ரிஜிஸ்டர் செய்து பங்கேற்பவர்கள் தனியாக நிதி திரட்டும் பக்கம்  ஒன்றை ஆரம்பித்து, பிறரிடமிருந்தும் நிதி திரட்ட முடியும். இதனால் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் ஆகியோருக்கும் தெரியப்படுத்துவதால் இதனுடைய ’ரீச் ‘ அதிகமாக இருக்கும்.

november_vc3.jpg

 


இதன் பின்னணி?

மேத்யூ ஹில் என்பவர்  ’காலன் கேன்சரால்’ (colon cancer)  பாதிக்கப்பட்டு 2007-ம் ஆண்டு இறந்துவிட,  அவர் நினைவாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த அவருடைய எட்டு பிள்ளைகளும் இணைந்து உருவாக்கியதே இந்நிறுவனம். 2009-ம் ஆண்டு ரெபெக்கா ஹில் எனும் அவருடைய மூத்த மகள் இந்நிறுவனத்தை துவங்கி,  அந்த ஆண்டு 2000 டாலர்கள் நிதி திரட்டினார். போன வருடம் இந்நிறுவனம் திரட்டிய தொகை ஒரு மில்லியன் டாலர்.

இவர்கள் ப்ரேஸ்லெட்டுகளும் டி-ஷர்ட்டுகளும் விற்றும் நிதி திரட்டுகிறார்கள். இதைப் பற்றி மேத்யூ ஹில்லின் மனைவியான ஷேரன் கூறும் போது, “மேத்யூ இதற்காக நிச்சயம் பெருமைப்படுவார். அவர் வாழ்க்கை முழுக்க பிறருக்கு வழங்கியே பழக்கப்பட்டவர். அவருக்கு நிச்சயம் நாங்கள் செய்வது பேருவகையைத் தரும்” என்றார்.

இந்த வருடம் க்ரீன் பே போலீஸ் டிபார்ட்மெண்ட் கூட இதில் பங்கேற்க போவதாக அறிவித்திருப்பது இந்நிறுவனத்தின் வெற்றிக்கு சாட்சி.

http://www.vikatan.com/news/article.php?aid=54717

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 05
 
 

article_1446694172-0.jpg1872: அமெரிக்காவில் பெண்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறும் விதமாக சுசான் பி. அந்தனி எனும் பெண் வாக்களித்தார். பின்னர் அவருக்கு 100 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

1895: ஜோர்ஜ் பி ஷெல்டன் என்பவர் அமெரிக்காவில் முதல் தடவையாக வாகனத்திற்கான காப்புரிமை பெற்றார்.

1911: ஒட்டோமான் இராஜ்ஜியத்துக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்த இத்தாலி, திரிபோலியை (லிபியா) தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1937: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர், ரகசிய கூட்டமொன்றை நடத்தி, ஜேர்மனியர்களுக்கு 'வாழ்வதற்கான இடத்தை' பெற்றுக்கொள்வதற்கான தனது திட்டம் குறித்து அறிவித்தார்.

1940: அமெரிக்காவில் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1952:அமெரிக்காவில் ஜெனரல் டி.ஐஸனோவர் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

1995: கனடாவில் பிரதமர் ஜீன் செரிஷனை கொல்வதற்கு முயற்சி.

1996: பாகிஸ்தானில் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் அரசாங்கத்தை ஜனாதிபதி பாருக் லெகாரி கலைத்தார்.

2007: சந்திரனுக்கு சீனா அனுப்பிய முதலாவது செய்மதி, சந்திரனை வலம் வரத் தொடங்கியது.

- See more at: http://www.tamilmirror.lk/158371/வரல-ற-ற-ல-இன-ற-நவம-பர-#sthash.V3TKI23h.dpuf
Link to comment
Share on other sites

''என்ன... மன்னர் நடுங்கிப்போய் உட்கார்ந்திருக்கார்?''

''ஃபேஸ்புக்கில் 'போருக்கு வருகிறேன்’னு எதிரி மன்னன் ஸ்டேட்டஸ் அனுப்பியிருக்கிறான். இவர் பழக்கதோஷத்தில் அதுக்கு லைக் போட்டுட்டாராம்!''

Vikatan EMagazines Foto.
Link to comment
Share on other sites

''என்ன... மன்னர் நடுங்கிப்போய் உட்கார்ந்திருக்கார்?''

''ஃபேஸ்புக்கில் 'போருக்கு வருகிறேன்’னு எதிரி மன்னன் ஸ்டேட்டஸ் அனுப்பியிருக்கிறான். இவர் பழக்கதோஷத்தில் அதுக்கு லைக் போட்டுட்டாராம்!''

Vikatan EMagazines Foto.

250l9jt.jpg

Link to comment
Share on other sites

97ஆவது வயதில் பட்டம்
 

article_1446444134-aa.jpgகல்வியில் ஒரு முறை கோட்டை விட்டால், வாழ்க்கையே அவ்வளதுதான் என்று நமது பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டித்தீர்ப்பதுண்டு.

அந்த வார்த்தையை இல்லாம் செய்யும் படியாக, படிக்காமலும் பட்டம் பெறலாம் என்று 97 வயதுடைய பாட்டியொருவர் நிரூபித்துவிட்டார். 79 ஆண்டுகளுக்கு முன்னர், உயர்நிலைக்கல்வியை கைவிட்ட பாட்டியே தனது 97ஆவது வயதில் அதே உயர்நிலைக்கல்வி பட்டத்தைப் பெற்று ஆச்சரியமூட்டியுள்ளார்.

1936ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரிலுள்ள ஒரு கல்லூரியில் உயர்க்கல்வியை தொடர்ந்துள்ளார். இவருடைய பெயர் மார்கரெட் தாமஸ் பெக்கெமா.

உயர்க்கல்வியை தொடர்வதற்கு வந்த முதல் வருடத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக, படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

இந்நிலையில், இவரது நண்பர்களும் உறவினர்களும் சமீபத்தில் பாட்டி ஏற்கெனவே உயர்க்கல்வியை தொடர்வதற்காகச் சென்ற கல்லூரிக்கு அழைப்பை ஏற்படுத்தி, பாட்டியின் கதையை கூறியுள்ளனர்.

இந்நிலையில், உயர்நிலைக் கல்வியைக் கூட முடிக்க முடியாததால் வருத்தப்படும் பாட்டிக்காக, கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க அந்தப் கல்லூரி முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 29ஆம் திகதி  அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அவர் இந்தப் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/158107/-ஆவத-வயத-ல-பட-டம-#sthash.nGTrhicV.dpuf
Link to comment
Share on other sites

12186737_938905559491472_568422453149401

மேற்கிந்தியத் தீவுகளின் சுழல்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூவின் பிறந்தநாள்

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 06
 

article_1446784189-1qq.jpg1632 - முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.

1844 - டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் 'லேடி ஹவ்லொக்' முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1918 - போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

1962 - ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1977 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158467/வரல-ற-ற-ல-இன-ற-நவம-பர-#sthash.mG0ym5W7.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.