Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

இப்படியும் ஒரு தீபாவளி!

ப்படியும் தீபாவளி கொண்டாடலாம் என மனம் நெகிழும் நிகழ்வை அரங்கேற்றியிருக்கிறார்கள் 'படிக்கட்டுகள்' என்ற இளைஞர்கள் அமைப்பினர். மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த இந்த விழாவின் சிறப்பு, HIV யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டத்தை அரங்கேற்றியது. 

hiv%20kids%20600%201.jpg

தங்கள் அமைப்பு மூலம் பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பொருளாகவும், பணமாகவும் பெற்று, HIV வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவு இன்றி தவிக்கும் HIV வைரஸ் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் விதமாக, அவர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் , பட்டாசுகளும் வழங்கி கொண்டாடினர். 

மனதில் ஆயிரம் கவலைகளுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அந்த குழந்தைகள், தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

உதவி செய்ததோடு, குழந்தைகள் கொண்டாட்டத்தை தாங்களும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் உதவிக்கரம் நீட்டிய சில நல் உள்ளங்கள். மாறுவேடப்போட்டி, நடனம், பாட்டு, பட்டாசு வெடித்தல் என உற்சாகத்துடன் பங்கேற்றனர் குழந்தைகள்.

hiv%20kids%20600%202.jpg

விழாவில் பங்கேற்ற குழந்தை, “ அங்கிள் எங்களுக்கு இங்க வந்தது ரொம்ப ஜாலியா இருந்துச்சு. வீட்டுல தீபாவளி கொண்டாடுனா தனியா இருக்க மாதிரி தோணும். இங்க நிறைய பேர்கூட கொண்டாடினது புதுசா இருந்துச்சு. எங்க எல்லாருக்கும் புது டிரெஸ் கொடுத்துருக்காங்க. அழகா இருக்கு. இதை பத்திரமா வச்சிக்குவோம். எல்லா அண்ணன்களுக்கும் தேங்க்ஸ் சொன்னோம்“ என்றாள் மழலைக்குரலில். 

குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த படிக்கட்டு அமைப்பைச் சேர்ந்த கிஷோரிடம் பேசினோம்.

hiv%20kids%20600%203.jpg

" தீபாவளியை மனம் நிறைய மகிழ்ச்சியோடு கொண்டாடுவது குழந்தைகள்தான். இளைஞர்களால் உருவாக்கப்பட்ட எங்கள் அமைப்பு பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு அங்கம்தான், HIV பாதித்த குழந்தைகளை சந்தோஷம் கொள்ளச்செய்த இந்த தீபாவளி. எத்தனை சேவைகள் செய்தாலும் கடவுளின் குழந்தைகளான இவர்களுடன் தீபாவளியை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த நிகழ்வினால் எங்கள் படிக்கட்டு அமைப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்களை விட ஆதரவற்ற அந்த குழந்தைகளுக்கு அன்றொரு நாள் சந்தோஷத்தை கொடுத்த மனதிருப்தியைத்தான் பெரிதாக எண்ணுகிறோம்.

hiv%20kids%20600%204%5D.jpg

மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை, அமைப்புகள் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களும் தங்கள் கொண்டாட்ட நாட்களை ஆதரவற்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டால், சமூகத்தில் ஆதரவற்றவர்கள் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். அந்த வகையில் படிக்கட்டு நடத்திய இந்த நிகழ்வு ஆதரவற்ற மக்களுக்கு நாம் தூண்டுகோலாக அமையும். முடிந்த வரை இல்லாமையை இல்லாது ஆக்குவோம்” என்றார் .

http://www.vikatan.com/news/article.php?aid=54860

Link to comment
Share on other sites

'பருவ நிலை மாற்றத்துக்காக முதல் குரல் பதிவு- 'ஃபேஸ்புக்கில் இணைந்த ஒபாமா!

 

கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தற்போது, ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.

obama%20facebook.jpg

தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது சொந்த ஃபேஸ்புக் பக்கத்தை நேற்று துவங்கினார்.

ஃபேஸ்புக்கில் இணைந்த சிறிது நேரத்தில், ஒபாமாவின் பக்கத்தை 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

தனது முதல் ஃபேஸ்புக் பதிவில், ஹலோ ஃபேஸ்புக் என்றும், நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்னைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன்" என்று கூறி ஒரு வீடியோவையும் அப்லோட் செய்துள்ளார். அதில் பருவ நிலை மாற்றத்துக்காக ஒபாமா குரல் கொடுத்துள்ளார்.

ஒபாமாவின் பக்கத்தில், பேஃஸ்புக் தலைமை செயல் அதிகாரி ஸ்ரேயால் சாந்த்பர்க் வெளியிட்டுள்ள பின்னூட்ட கருத்தில், "அதிபர் ஒபாமாவே உங்களை ஃபேஸ்புக்கிற்கு வரவேற்கிறேன். உங்களுக்கான சொந்த பக்கத்தை தொடங்கியிருப்பது உற்சாகம் அளிக்ககூடிய ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54897&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Link to comment
Share on other sites

விண்வெளியில் விவசாயம்; சாதித்துக் காட்டிய நாசா!

 

நிலவில் பாட்டி, கால் நீட்டி வடை சுட்டதெல்லாம் அந்த காலம். விண்வெளியிலேயே விவசாயம் செய்வதுதான் இந்த காலம். ‘என்னது விண்வெளியில விவசாயமா?’ என்று நாசா விஞ்ஞானிகளிடம் கேட்டால் 'செஞ்சுடோம்ல...!'  என தம்ஸ்-அப் காட்டுகின்றனர்.

s2.jpg

விண்வெளியில் நாசா விஞ்ஞானிகள் விவசாயம் செய்தது எப்படி என தெரிந்து கொள்ளும் முன், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். நமது பூமியின் மேற்பரப்பில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் ஒன்றினைந்து அமைத்த, சர்வதேச விண்வெளி மையம் உள்ளது. அந்த மையத்தில்தான் நாம் மேற்சொன்ன விவசாய வேட்டை நடந்துள்ளது.

s1.jpg

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஆறு விண்வெளி வீரர்கள் தங்கி தீவிரமான ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இன்ன பிற பொருட்களையும் நாசா விஞ்ஞானிகள் அனுப்பி வைப்பார்கள். பக்கத்து வீட்டுக்கு பலகாரம் கொண்டுபோய் கொடுப்பது போல் இது எளிதான காரியம் அல்லவே. இதன் சிரமம் அறிந்த விஞ்ஞானிகள், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் முயற்சியின் முழு முதல் வெற்றிதான் இந்த விண்வெளி விவசாயம்.

s4.jpg

’வெஜ் 01’ எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கீரை விவசாயம் கடந்த ஆண்டு நாசா விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்டது. இக்கீரை விவசாயத்திற்கு நாசாவும், ஆர்பிட்டல் தொழில்நுட்ப கழகமும் கை கோர்த்துள்ளனர். அதன்படி, இச்சிவப்பு கீரைகளை விதைக்க தேவையான விதைகளை 15 மாதங்கள் விண்வெளி மையத்தில் வைத்திருந்தனர். அதன் பிறகு, இந்த விதைகளை விதைக்க தலையணை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த ஜூலை 8 ஆம் தேதி அதில் விதைகள் ஒட்ட வைக்கப்பட்டு, இலைகள் முளைத்து 33 நாட்களில் வளர்க்கப்பட்டு உள்ளன.

s3.jpg

இந்த கீரை செடிகளுக்கு தேவையான நீரை ‘சிரஞ்’ மூலம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். அது சரி, நீர் மட்டும் போதுமா? நாம் பூமியில் செடி வைத்தால் அதன் வளர்ச்சிக்கு தேவையான சூரிய ஒளி இயற்கையாக கிட்டும், நாமும் உரம் இடலாம். ஆனால், இவை எல்லாம் அங்கு எப்படி சாத்தியம்? அதற்கும் நம் விஞ்ஞானிகள் வழிவகை செய்துள்ளனர். செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊதா, சிவப்பு நிற ஒளி அலைகளுக்கான எல்.இ.டி. விளக்குகளும், செடிகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு, பச்சை நிற எல்.இ.டி. விளக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

s5.jpg

இப்படி ஒரு வழியாக 33 நாட்கள் முடிந்தது, கீரையும் விளைந்தது. கடந்த திங்கள் அன்று, அறுவடை செய்த சிவப்பு நிற கீரையை சாப்பிட்ட வீரர்கள் அதன் சுவையை மெச்சி உள்ளனர். சிவப்பு நிற கீரையை சாப்பிடும் முன்னதாக, அக்கீரை சிட்ரிக் அமிலம் சார்ந்த ஒரு வகை கரைசல் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சாதனையால், விண்வெளி வீரர்கள் மேலும் பல புதிய உணவு வகைகளை உற்பத்தி செய்ய புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=50988

Link to comment
Share on other sites

  •  

    இன்று

     

    1919 - இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

     

    1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

     

    1957 - கட்டுநாயக்கா விமான நிலையம் இலங்கைக்கு சொந்தமானது என ஆங்கிலேயர்கள் அறிவித்தனர்.

    1993 - இலங்கை சுதந்திர கட்சி தலைவர் அனுர பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக     இணைந்து கொண்டார்.

    1991 - 200 ஆடை தொழிற்சாலை திட்டத்தின் கீழ் முதல் ஆடை தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

1889 - வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.

  

 1909 - ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

12227796_940909162624445_256817818113817

ஹொலிவூட்டின் காதல் காவியம் டைட்டானிக் ஜக்கின் அதாவது Titanic நாயகன் லியர்னாடொ டீ காப்ரியோவின் பிறந்த நாள்.
Happy Birthday Leonardo DiCaprio
தொடர்ந்தும் சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்ற லியர்னாடொவுக்கு ஒஸ்கார் விருது மட்டும் இன்னும் கைவசப்படுவதாக இல்லை

Link to comment
Share on other sites

 

தலாய் லாமாவை சந்தித்த உலக நாயகன் கமல்.

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை நேற்று நடிகர் கமல்ஹாசன், கௌதமியுடன் சந்தித்திருந்தார்.

11227949_940961775952517_652233292654267
 
12227015_940961909285837_482272200662977
 
 
Link to comment
Share on other sites

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 9 வயது சிறுவன்!

 

பார்க்க குழந்தை போல் இருக்கும் இந்த ஒன்பது வயது சிறுவன் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா? இவர் வயது குழந்தைகள் பள்ளி செல்லும் போது இவர் செய்யும் காரியங்கள் உங்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
 

Reuben%20paul.jpg

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வரும் சிறு வயது தலைமை நிர்வாக அதிகாரிதான் ரூபன் பால். கணினி ப்ரோகிராமிங் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு கேமிங் நிறுவனமான ப்ரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான் ரூபன்.

இதோடு இல்லாமல் சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், ஆப் டெவலப்பர் என பல்வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சிறப்புரை வழங்கி இந்த ஆண்டு கிரவுண்டு சீரோ சம்மிட் 2105 குழுவின் சிறப்பு தூதராக ரூபன் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

Reuben%20paul%201.jpg

உலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கருதப்படுவது கிரவுண்டு சீரோ சம்மிட்  ஆகும். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மற்றும் சிறிய உறுப்பினர் ரூபன் பால் ஆவார்.

உங்கள் குறிக்காேள் என்ன என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தான் ஒரு சிறந்த சைபர்ஸ்பை ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் ரூபன் பால்.

http://www.vikatan.com/news/article.php?aid=54908

Link to comment
Share on other sites

12188189_940911229290905_450622335950771

இள வயதில் காலமான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் பென் ஹோலியோக்கின் பிறந்தநாள்.

 
Link to comment
Share on other sites

விடுகதையும் அதில் விளைந்த தமிழும்....

பேஸ்புக், ட்விட்டர், இணைய வலைப்பூக்கள் என அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அத்தனை பக்கங்களையும் விரல் நுனிகளின் உதவியால் இன்றைக்கு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழ், தமிழர் தமிழ்ப்பண்பாடு என ஒரு காலத்தில் நீட்டி முழங்கிய நம் தமிழர் வாழ்வில், இன்று தமிழ் சார்ந்த அதன் பண்பாடு தொடர்பான தமிழ் சார்ந்த விஷயங்களை ரசிக்கிறார்களா?

சினிமா என்ற ஒன்றை மீறி தமிழின் மற்ற பரிமாணங்களில் அதன் வடிவங்களை கவனிக்கிறோமா? வழக்கொழிந்துபோன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளையாவது எடுக்கிறோமா? இப்படி எந்த கேள்விகளுக்கும் நம்மிடம் பதிலில்லை.

பழங்காலத்தில் தமிழ் என்பது மூன்று பெரும்பிரிவுகளால் வளர்ச்சி கண்டது யாவரும் அறிந்ததே. இயல்பு மாறாத இயற்றமிழாலும், பல்வேறு மன ஓட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும், உத்வேகப்படுத்தும் இசைத்தமிழாலும், கேளிக்கைகளுடன் கொண்டாடப்படும் நாகரீக நாடகத்தமிழாலும் தமிழின் வளர்ச்சி பன்முனைப்புடன் பெருகியது.

முன்னொரு காலத்தில் தமிழைச்சார்ந்த நாடகக்கலைஞர்களின் வாழ்வும், அதை நம்பி பிழைப்பை நடத்திய இசைக்கலைஞர்களின் வாழ்வும் மக்களால் ஊக்கப்படுத்தப்பட்டன. தமிழும் செழுமைபெற்றது. ஆனால் இன்று நம்மில் எத்தனை பேருக்கு தமிழும், தமிழ் சார்ந்த விசயங்களை ரசிக்கவும் பொறுமையிருக்கிறது ?. மாறிவரும் உலகில் "பணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு மக்கள் வாழ்வின் ரசனைகளை வெகு இயல்பாக கடந்து செல்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

தமது குழந்தைப்பருவத்தில் கோவில் திருவிழாவின்போது போடப்படும் நாடகங்களில் கட்டியங்காரனையும் ,கோமாளியின் அங்க சேஷ்டைகளையும் களிக்காமல் வளர்ந்த யாராவது இருக்கிறார்களா...."கதைக்குக்காரணம் என்னவோ என கட்டியங்காரன் விவரிக்கும்போது, அதன்பால் ஈர்க்கப்படாத இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் இல்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு தமிழும் நாடகமும் ஒரு சேர மக்களை ஈர்த்தது.

மொழியின் மாற்று வடிவங்கள் மொழியின் மீது தணியாத ஆர்வத்தை ஏற்படுத்த காரணமாகின. மொழியின் இந்த வடிவங்கள்தான் எதிர்காலத்தில் குழந்தைகள் அதை தேடிப்படிக்க ரசிக்க ஆணிவேராக இருந்தது. ஆனால் இன்று ஒரு தமிழ் ஆசிரியர் தன் மகனை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கும் அளவுக்கு தமிழின்மீதான ஈர்ப்பு வற்றிவிட்டது.

தமிழின் சுவராஸ்யமான மாற்று வடிவங்களில் முக்கியமானது விடுகதை. சின்னஞ்சிறு வயதில் கேட்ட விடுகதையில் தமிழின் சுவராஸ்யம் பொங்கி வழிந்தது. இன்று விடுகதையும் இல்லை, மொழியின் விளையாட்டை ரசிக்கும் குழந்தைகளும் இல்லை. நாளை இதன் நிலை இன்னும் மோசமாகலாம் என எண்ணும்போது இப்போதே இதயம் கனக்கிறது...

இங்கு "தமிழ்" என்பது வியாபாரப்பொருளானபின் அதை தங்களுக்கு முதலீடாக்கிக்கொண்டவர்கள்தான் ஆநேகம் பேர். வீழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதற்கும் மேலே. இத்தகைய சூழலில் விடுகதைக்கென வாழ்ந்த நபர்களை சந்தித்தோம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட மதுரை மாவட்டம், சூலப்புரம் என்னும் கிராமத்தில் "கதைக்குக்காரணம்" (திருவிழாக்களில் தாளம் தட்டுபவர்,திடீரென்று அதை நிறுத்திவிட்டு, விடுகதையைப் போடுவார், அதற்கான பதில்களை மக்களிடம் வினவுவார், பலதரப்பட்ட மக்களிடம் இருந்து, சுவாரஸ்யமான பதில்கள் வரும். சரியான விடை சொன்னவரைக் கௌரவப்படுத்துவார். பின் மீண்டும் நிகழ்ச்சி தாள ஓசையுடன் தொடரும்) என ஊர்த்திருவிழாக்களில் சுற்றித்திரிந்த "கொட்டுக்கார-வெள்ளையனைச்"சந்திக்க நேர்ந்தது சுவராஸ்யமானது.

வறுமைக்கு வாய்க்கப்பட்டவராய், பார்வைமங்கி, பல நாட்கள் சவரம் செய்யாத தாடியுடன், தடியுடன் முதுமையின் வாயிலில் இருந்தார். ஒட்டிப்பிறந்தது "புலமையும் வறுமையும்"எனும் பதம் அவரைக்கண்டதும் கண்முன் நிழலாடியது.

"இப்ப இருக்கிற இளந்தாரி (இளையவயதினர்) பயலுக யாருக்கும் ஒரு விடுகதைக்கூட காரணம் (பதில்)சொல்லத்தெரியுறதில்லை. யாரும் இதில் ஆர்வம் கிடையாது" என வேதனையை வெளிப்படுத்தினார் கொட்டுக்கார வெள்ளையன்.

தொடர்ந்து விடுகதைகளின் வாயிலாக குழந்தைகளும் இளைஞர்களுக்கும் அக்காலத்தில் தமிழின் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுக்கப்பட்டதை பல்வேறு விஷயங்களைக் கூறி, இப்போதுள்ள இளைஞர்களின் வெறுமையான ரசனைகளை ஆதங்கத்துடன் பட்டியலிட்ட வெள்ளையன், தன் காலத்து இளைஞர்களை கட்டிப்போட்ட பல விடுகதைகளை நமக்கு சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். அவை வாசகர்களுக்காக இதோ

1)"பேயாத பெருமழை பேஞ்சாலும் ,குறுகாத குஞ்சு என்ன குஞ்சு"-
பதில்-மீன் குஞ்சு

2)"ஒரு பாத்தியில நாலு வெள்ளாம, நாலு வெள்ளாம வெளேர்னு இருக்கும்"-அது என்ன?
பதில்--பால்,மோர்,தயிர்,வெண்ணெய்

3) "காடெல்லாம் சுத்தி வரும் கண்டலப்பசுவே..!"
கண்ட தண்ணிய குடிக்காத! வெங்கலப்பசுவே...!அது என்ன?
மிதியடி(அ) செருப்பு

4) "சடுகுடு....சடுகுடுன்னு ஓடற...புறாவே..."
"உள்ளிப்பிடிச்சா...சதையில்ல..."-அது என்ன?
பதில் ---- தண்ணீர்

5)"ஓ...ஓ மரமே...ஒசந்தமரமே...
ஒரு பிடி இலைக்கு கெதிகெட்டமரமே....அதுஎன்ன?
பதில்---கள்ளிமரம்

6)"கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
கையத்தட்டுன்னா...கை..வலிக்கல..
கிண்டிவிட்ட வெள்ளாம வரலை- அது என்ன?

பதில்---கொண்டை சேவல்

7)"அட்டைக்கு ஆயிரம் கண்ணு,"
"முட்டைக்கு மூன்று கண்ணு"- அது என்ன?

பதில்-கட்டிலும் தேங்காயும்

8) "திங்க பழம் காய்க்கும்...திங்காத காய் காய்க்கும்"- அது என்ன?

பதில்--வேப்ப மரம்

9)"ஆகாயத்து மணி ஆட்டு...லா..லா.."
வெட்டி நறுக்கி...லா..லா..
ஏப்பி...சூப்பி...லா...லா- அது என்ன?

விடை-முருங்கைக்காய்

10)"ஒசரப்பறக்குது...மைனா..குருவி..."
"நெஞ்சு அறுத்தா..நத்தம் (இரத்தம்) இல்ல?-அது என்ன?

விடை:ஈசல்

11)"செவலைக்காளை..பட்ட வெளியில் தின்னுது
பச்சைப்புல்..திங்க..மாட்டியுது- அது என்ன?

விடை--தீ

12) கட்ட காளை...பழியா...பாயுது...ஆளா...அது என்ன?

விடை--நெருஞ்சி முள்

13) மண்ணுக்குள்ளயிருக்கிற...மயிராண்டி....
உரிக்க...உரிக்க தோளாண்டி- அது எனன?

விடை---வெங்காயம்

14)"கதைகதையாக்காரணமாம்...
காரணத்துல...ஒரு ஊரணியாம்...
ஊரணியில....ஒரு...உழக்குத்தண்ணி...
குடிச்சுப்பார்த்த இனிச்சுக்கிடக்கு"-அது என்ன?

விடை---இளநீர்

தமிழால் வளர்ந்தவர்களை மட்டுமே,,,கண்ட நமக்கு....தமிழால் வீழ்ந்தவர்களையும் தெரிந்தகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வோம். இவர்களையும் இவர்களால் வளர்த்தெடுக்க்ப்பட்ட மொழியின் மற்ற கலை வடிவங்களை மீட்டெடுக்க தமிழ்கூறும் நல்லுலகம் இனியாவது முற்படுமா...?

https://www.facebook.com/vikatanweb/posts/1020642064661250:0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

12247141_1059261730759734_55878775116053

தீபாவளி கொண்டாடும் டிவில்லியர்ஸ்  மோர்கில்

எங்கடை Mesut Özil லும் தீபாவளி கொண்டாடுறாராம் :grin:

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை Mesut Özil லும் தீபாவளி கொண்டாடுறாராம் :grin:

 

அது என்ன எங்கடை :grin: நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு:cool:

 

Link to comment
Share on other sites

590 அடி உயர கண்ணாடி பாலத்தில் யோகாசனம்
2015-11-12 10:49:38

சீனாவில் தரையிலிருந்து 590 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலமொன்றில் யுவதிகள் பலர் யோகாசனத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். 

 

132182015-11-05T100958Z_1934735649_GF200

ஹுனான் மாகாணத்தின் ஷினியுஷாய் தேசிய புவியியல் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலம் அண்மையில் திறக்கப்பட்டது.

 

984 அடி நீளமான இப்பாலத்தின் அடிப்பகுதி 24 மில்லிமீற்றர் தடிப்புடைய கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. 

 

13218444.jpg

அக்கண்ணாடிக்கும் நிலத்துக்கும் இடையிலான சுமார் 590 உயரமான பகுதியில் காற்றைத் தவிர எதுவுமில்லை. 

 

திகிலான அனுபவத்தை பெற விரும்பும் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவில் நடந்துசெல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

 

132182015-11-05T101655Z_318012650_GF2000

ஆனால், இடையிலேயே சிலர் பீதிக்குள்ளாகி அழுத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பாலத்தின் மீது யுவதிகள் பலர் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

 

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இணக்கத்தையும் பசுமையான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13218#sthash.x2zZ4Vyc.dpuf
Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 12
 
 

article_1447306390-download.jpg1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.

1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.

1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் 'செர்வோனா உக்ரயீனா' மூழ்கடிக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.

1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ஆம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.

1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.

1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.

1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.

1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.

1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனேசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.

1994 - இலங்கையின் 5ஆவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.

2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

- See more at: http://www.tamilmirror.lk/158912#sthash.FKY5jE9F.dpuf
Link to comment
Share on other sites

நவம்பர் 12 உலக நிமோனியா தினம்

 

நிமோனியா தடுப்பது சுலபமே!

 

 

நுரையீரலில் கிருமித்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையில் முதல் இடம் இந்தியாவுக்கே. பெரியவர்களைக் காட்டிலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே நுரையீரல் கிருமித்தொற்றால் அதிகம் பலியாகின்றனர் என்பதுதான் அதிர்ச்சி.

நுரையீரலில் ஏற்படும் கிருமித்தொற்று, 'நிமோனியா’ வருவதற்கு ஒரு முக்கியக் காரணம்.  இதுபற்றி விரிவாக அறிந்துகொள்ள, புதுச்சேரியைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் வெங்கடேஷ்வர பாபுவைச் சந்தித்தோம்.

'நம் உடலின் சீரான இயக்கத்துக்கு முக்கியப் பங்கு, திசுக்களுக்கு உண்டு. திசுக்கள் இயங்க, ஆக்சிஜன் தேவை. நாம் சுவாசிக்கும்போது, காற்றை உள்ளே இழுக்கிறோம். அதில் உள்ள ஆக்சிஜனை உள்வாங்கி ரத்தத்தில் கலக்கும் பணியை நுரையீரல் செய்கிறது. நம் உடலில் உள்ள உறுப்புக்கள் பயன்படுத்திய, கார்பன்-டை-ஆக்சைடு கலந்த காற்றை, ரத்தத்தில் இருந்து பிரித்து வெளியேற்றும் பணியையும் நுரையீரல் செய்கிறது. இப்படி, காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நோயை ஏற்படுத்துகின்றன.'

p27.jpg

'நுரையீரல் கிருமித்தொற்று யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்?'

'முக்கியமாக ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 50 வயதைக் கடந்தவர்களுக்கும் நுரையீரல் p26.jpgகிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும், நுரையீரல் முழு வளர்ச்சி பெறாமலும் இருக்கும் குழந்தைகளுக்கு, மிகச் சுலபத்தில் நுரையீரல் கிருமித்தொற்று ஏற்படலாம். இந்தத் தொற்று காரணமாக, மூளைக் காய்ச்சல்கூட வர வாய்ப்பு உண்டு. தவிர, சிகரெட், மதுப் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு நுரையீரல் கிருமித் தொற்று ஏற்படலாம். சிகரெட் பிடிக்கும்போது அதிலுள்ள நச்சுப் பொருள், நம் நுரையீரலைப் பாதித்து, கிருமிகள் தொற்றலாம். மது அருந்துவதால், ரத்தத்தில் நச்சு கலந்து சிறுநீரகங்களும், கல்லீரலும் பாதிக்கப்பட்டு, அது நுரையீரலில் தொற்று ஏற்படக் காரணமாகும். குடிபோதையில் வாயில் உள்ள சில கிருமிகள் நேரடியாக நுரையீரலை அடைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் 90 சதவிகிதம் இந்த நோயினால் தாக்கப்படலாம். ஹெச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நுரையீரல் தொற்று ஏற்படலாம்.'

'நுரையீரல் நோய்த்தொற்றை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த நோயின் அறிகுறிகள் என்ன?'

'எக்ஸ்ரே மூலம் இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். கிருமிகள், காற்றில் பரவும் தன்மைகொண்டதால், மிகச் சுலபமாக ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும். கிருமி, நுரையீரலை அடைந்த பிறகு, ஓரிரு வாரங்களில் அதன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும்.  மூன்று - நான்கு நாட்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை வருத்தி எடுக்கும். பெரியவர்களுக்கு சில நேரங்களில் நெஞ்சு வலி ஏற்படும். சில சமயம் இருமலின்போது ரத்தம் கலந்த சளி வெளியேறும்.'        

'இதற்கான தடுப்புமுறைகள் என்ன?'

'நிமோனியாவைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை 'இன்ஃப்ளூயன்சா’ தடுப்பூசியும் அல்லது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை 'நிமோகோக்கல்’ தடுப்பூசியும் போடுவது நல்லது. இந்த நோயிலிருந்து மீண்டவர்களுக்கேகூட, திரும்பவும் இந்த நோய் வரலாம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். எனவே, கூடுதல் கவனம் தேவை!''

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=88907

Link to comment
Share on other sites

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! (நெகிழ வைக்கும் படங்கள்)

 

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை விலக்கி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன்.

killai%20ravindran%201.jpg
 

சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வக்குமாரி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தீபாவளி பண்டிகையான செவ்வாய்க்கிழமை காலை பிரசவவலி எடுத்தது.

இதனையடுத்து. 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண் செல்வக்குமாரியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சாலை முழுவதும் தெரியவில்லை. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன.

cuddalur%208%281%29.jpg 

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன், கிள்ளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரவீந்திரன் தனது ஜீப்பில் ஆட்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். அப்போது, ஏற்பட்ட பலத்த காற்றில் கிள்ளை ரயில்வே கேட் மூடிக்கொண்டதோடு, ஆம்புலன்ஸூம் பழுதாகி நின்று விட்டது. பின்னர் தனது ஆட்களை கொண்டு கேட்டை தூக்கி ஜீப்பில் கயிற்றை கட்டி ஆம்புலன்ஸை இழுத்து வந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் செல்வக்குமாரிக்கு மதியம் 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

http://www.vikatan.com/news/article.php?aid=54951

Link to comment
Share on other sites

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

 

peter%20karotne%20250.jpg'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இருப்பு பிறரை சபலப்படுத்துவதாக இருக்கவேண்டும்' என்ற உயரிய நோக்குடன் இருக்கும் சன்னி லியோனை நீங்கள் ஃபேஸ்புக்கில் பின்பற்றுவதற்கு தேவை இணையம்.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என்னதான் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனம் வைத்தாலும், அவர்களின் புதுப் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய உங்களுக்குத் தேவை இணையம். உப்பில்லா பண்டம் குப்பையிலே, இணையம் இல்லா கம்யூட்டர் 'ரீசைக்கிள் பின்'னிலே என்பார்கள் நமது இணைய முன்னோர்கள்.

இவ்வளவு அருமைப் பெருமைகளை வைத்திருக்கிற இந்த இணையம் எங்கிருந்து வருகிற‌து என்று கூரைகொட்டகைக்கு அடியில் உட்கார்ந்து யாராவது உங்களை அடித்துக்கேட்டால் என்ன சொல்வீர்கள்? இதோ இந்த கம்ப்யூட்டரில் இருந்து வருது; அதோ அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து வருது; செங்குத்தா நிக்கிற செல்போன் டவரில் இருந்து வருதுனு சொன்னால்  நீங்கள் கம்ப்யூட்டர் இல்லிட்டரேட். இணையம் எங்கிருக்குன்னு சொல்றோம் கேட்டுக்கங்க. இணையத்தின் மூலம்...

இணையம் சரி... அது எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டாரு நம்ம 'பீட்டர் கேரட்டினோ'. ஆமா ஆமா, அவரும் அமெரிக்கக்காரருதான். அங்கிருக்கிற பிரபலமான புகைப்படக்காரர்கள்ல ஒருத்தரு!

இணையம் என்பது கடவுள் மாதிரி கண்ணுக்குத் தெரியாது, ஆனால் ஃபீல் பண்ண முடியும்னு சொன்ன டயலாக்கை எல்லாம் பீட்டர் நம்பவில்லை. கோடிக்கணக்கான டேட்டாக்களை சுமந்து செல்கிற இந்த இணையத்திற்கான அட்ரஸ் பூமிப்பந்தில் எங்கிருக்கிறது என தெரிந்துகொள்ள பீட்டருக்கு பேரவா.

peter%20karotne%20600%2011.jpg

மொபைல், டேட்டாகார்டு, லேண்ட்லைன் மற்றும் செல்போன் வழியாக இணையச் சேவையை வழங்குகிற எல்லா நிறுவனங்களின் நெட்வொர்க் கேபிள்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சங்கமம் ஆகும். அந்த இடத்திற்குப் பெயர் கேரியர் ஹோட்டல். அதுக்காக தலப்பாகட்டி பிரியாணி எல்லாம் கிடைக்குமான்னு கேட்டிடாதீங்க; இது வேற ஹோட்டல். இந்த பல்வேறு நிறுவனங்களின் நெட்வொர்க்கும் இந்த ஹோட்டலில் ஒன்றுசேர்ந்து மிகப்பெரிய ஒற்றை பெரிய நெட்வொர்க் ஆகும்.

இங்கு இணையசேவை நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய டேட்டா சேவை நிறுவனங்களான மைக்ரோ சாஃப்ட் மற்றும் கூகிள் போன்றவை தமக்கென தனித்தனி நெட்வொர்க்கை வைத்திருக்கும்.

peter%20karotne%20600%202.jpg

அமெரிக்காவில் இருக்கும் கேரியர் ஹோட்டல்கள் சிலவற்றை தொடர்புகொண்டார் பீட்டர். 'ஒரே ஒரு நாள் இன்ப சுற்றுலா மாதிரியோ கல்விச் சுற்றுலா மாதிரியோ உங்க ஹோட்டலை சுத்தி பார்த்துக்கலாமா' என்பது பீட்டரின் விண்ணப்பம். சீந்துவார் இல்லை. தொடர் முயற்சியின் பலனாக அவருக்கு ஒரு ஹோட்டலில் அனுமதி கிடைத்தது. ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகளுக்குப் பிறகு, இணையத்தின் உள்ளே சென்றுபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

peter%20karotne%20600%2022.jpg

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றார் பீட்டர். ஆனால், அங்கே சென்ற நிமிடத்தில் இருந்து போரடிக்கத் துவங்கிவிட்டதாம். காரணம், கிலோமீட்டர் கணக்காக நீளும் கேபிள்கள், தி.நகர் துணிக்கடைகளில் வரிசை வரிசையாக புடவைகளை அடுக்கி வைத்ததுப்போல நிறுத்தப்பட்டிருக்கும் சர்வர்கள், அவற்றை குளிர்விக்க பெரிய குளிரூட்டிகள்.

எவ்வளவு நேரம்தான் இவற்றையே வெறித்துக் கொண்டிருப்பது. போதாதற்கு மோடி கூடவே ஒட்டிக் கொண்டு வரும் போட்டோகிராபர் போல எல்லா இடங்களுக்கும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தார் ஒரு செக்யூரிட்டி ஆஃபிசர். ’ஆளை விடுங்கடா சாமி’ என்ற வெளியில் வந்துவிட்டார் பீட்டர்.

peter%20karotne%20600%203.jpg

ஆனால், இணையம் எங்கிருக்கிற‌து என இப்போழுது யாராவது அவரிடம் கேட்டால் அவருடைய பதில், "இணையம் மன்ஹாட்டனில் இருக்கும் ஒரு கேரியர் ஹோட்டலில் இருக்கிறது" என சுருக்கமாக முடித்துக்கொள்கிறார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54965

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.
எழுத்து நடை அருமையாக உள்ளது. "'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இருப்பு பிறரை சபலப்படுத்துவதாக இருக்கவேண்டும்' என்ற உயரிய நோக்குடன் இருக்கும் சன்னி லியோனை" என்று ஆரம்பத்திலேயே நகைச்சுவையாக தொடங்கிய கட்டுரை அதே புன்னகையை முகத்திலிருந்து எடுக்காமலே முடிகின்றது. யாழிலும் இவ்வாறு சுவாரசியமாக எழுதுபவர்கள் (வடிவேலு, ஆதிவாசி...) பலர் இருந்தார்கள். இப்போதும் குமாரசாமி அண்ணை, கோசான், வாலி, தமிழ்சிறீ (அரசியல் கருத்துக்கள் அல்ல) .... போன்றவர்கள் மிஞ்சியுள்ளார்கள். பொதுவான அரசியலற்ற திரிகளில் இவர்கள் பதிவுகளைப் பார்த்து எத்தனை முறை மனம் விட்டு சிரித்திருப்பேன். 

மறுபடியும் நன்றி

Link to comment
Share on other sites

12208645_941663055882389_454740103771112

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத அற்புதப் பின்னணிப் பாடகியான P.சுசீலாவின் 80வது பிறந்தநாள் இன்று.

தசாப்தங்கள் பல கடந்து பாடியவர்.
தாய்மையும் இனிமையும் குரலில் நிரம்பி வழியும்.
ஆனால் அன்பும் தன்னடக்கமும் நிறைந்த ஒரு அதிசயம் - இந்த உச்சம் தொட்ட நட்சத்திரப் பாடகி.

 

Link to comment
Share on other sites

இன்று

1989 - இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1912 - இலங்கை முதல் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

 

Link to comment
Share on other sites

'கான்கிரீட் காட்டில் ஓர் தோட்ட வீடு'...! சாதித்து காட்டிய 'முகப்பேர் சிங்'

 

சிறியதாக ஓர் மாடித்தோட்டம் அமைத்து, அதை பராமரிக்கவே, மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், வீட்டைச் சுற்றியும், வீட்டின் மாடியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகளை கொண்டு, தோட்டம் அமைத்து முப்பது ஆண்டுகளாக அவற்றை பராமரித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த ஜெஸ்வந்த் சிங். சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவின்யூவில் இருக்கும், பசுமை நிறைந்த அவரது வீட்டில், அழகிய மாலைப் பொழுதில், அவரைச் சந்தித்தோம். தலையில் டர்பன் கட்டயபடி நம்மை வரவேற்ற ஜெஸ்வந்த் சிங்கிடம், தமிழில் பேச யோசித்த நமக்கு, செந்தமிழில் அழகாய் பேசி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

"எனது சொந்த ஊர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். என்னுடைய தாத்தா, குடும்பத்துடன் 1937ம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். சில ஆண்டுகள் வேலை செய்த பின், சொந்தமாக  கட்டுமான தொழிலில் ஈடுபட தொடங்கினார். தொடர்ந்து எனது தந்தையும் அதே தொழிலை செய்தார். நான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தையுடன் சேர்ந்து நானும் அதே தொழிலை செய்தேன். 1978ம் ஆண்டில் இருந்து, இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக ஓர் துளசி செடியுடன் எங்கள் வீட்டின் தோட்டத்தை அமைக்கத் தொடங்கினோம். செடிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கத் தொடங்கினோம். இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள், ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் பொருத்தமான செடிகள் வளர்த்தோம்.

garnden_vc1.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....


தென்னை, வில்வம், ருத்ராட்சம் போன்ற மரங்கள், போன்சாய் (குட்டி மரங்கள்) முறையில் வளர்க்கப்பட்ட ஆலமரம், அரச மரம், போதி மரம், ஆகியன பச்சை பசேலென வளர்ந்து இப்போது காணப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும், இந்த வீட்டிற்கு தனி சிறப்பை ஏற்படுத்தித் தருபவை, தோட்டத்தை சுற்றி வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் தான்." என்கிறார் ஜெஸ்வந்த் சிங்,

"என்ன சந்தன மரங்களா?" என்று பலர் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்விக்கு ஜெஸ்வந்த் சிங்கிடம் பதில் தயாராக இருந்தது. "வீட்டில் சந்தன மரங்கள் வளர்ப்பதன் மீதான தடை 2002ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுவிட்டது. வீட்டில் தாராளமாக சந்தன மரங்களை வளர்க்கலாம். ஆனால் வெட்டத்தான் கூடாது. இவற்றை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நாங்கள், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களின் முன்னிலையில் தான் வெட்டினோம்" என்றார்.

வீட்டைச் சுற்றி பூத்துக்கிடந்த மலர்களும், வண்ண வண்ண பழங்களும் தம்மை காண, நம்மை அழைக்க, தோட்டத்தை சுற்றிக்காட்டினார் ஜெஸ்வந்த சிங். அவர் முதலில் எங்களிடம் அறிமுகப்படுத்தியது, தமிழ்நாட்டின் அரசு மலரான செங்காந்தளை. "செங்காந்தள் மலர் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இந்த மலர், ஓர் ஆண்டில், மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் பூத்திருக்கும். தேசியக்கொடி போல மேலே சிவப்பு நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும் அமைந்திருப்பது, இந்த மலரின் தனிச்சிறப்பு" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

அடுத்ததாக சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளின் அருகே சென்றோம். வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரம் தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை, கற்பூரப்புல், பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழை போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. "இவற்றில் சில மூலிகைச் செடிகளை காண்பது அரிதாகிவிட்டது. உடலிலுள்ள பல குறைபாடுகளை போக்கும் திறம் வாய்ந்த மூலிகைகள் அனைத்தும், எங்கள் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

garnden_vc2.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....


மூலிகைச் செடிகளை கடந்து சென்றால், வானை நோக்கி வளர்ந்திருக்கும் சந்தன மரங்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றின் கீழே, சிறிய பானைகளில் துளையிட்டு, கூடுகெட்டத்தெரியாத சிட்டுக்குருவிகளுக்கும் ஓர் வசிப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெஸ்வந்த் சிங்.

வீட்டின் வாயிலில், ஒன்பது ராசிகளுக்கும் தனித்தனியாக ஒன்பது வகையான செடிகள் வரிசையாக தொட்டிகளில் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர, இருபத்தியேழு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. "ஆரம்ப காலங்களில் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றில் எனக்கு பெரியளவு ஈடுபாடு இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்துக்கும் ஏற்ற செடிகள் குறித்து அறிந்தேன். அதன்பிறகு தான், அனைத்து ராசி, நட்சத்திரங்களுக்கும் ஏற்ற செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

ராசி செடிகளின் அருகிலேயே அழகிய போன்சாய் மரங்களும் இருந்தன. ஆலமரம், அரசமரம், கொடுக்காபுளி ஆகிய போன்சாய் வகை மரங்கள் தோட்டத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டினார். தொடர்ந்து மாடியில் உள்ள காய்கறி மற்றும் பழச்செடிகளிடம் அழைத்துச் சென்றார் ஜெஸ்வந்த சிங். சிறிய மாடியில், பலவகையான காய்கறிச் செடிகளை தொட்டிகளில் வளர்த்து, பராமரித்து வருகிறார். நாம் தினமும் உபயோகிக்கும் காய்கறிகளான, தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ், ஐந்து வகை கத்தரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், பூக்கோசு, அவரைக்காய், கொடைமிளகாய், நான்கு வகை பச்சை மிளகாய் ஆகியன மாடியை அலங்கரிக்கின்றன.

பின்புறமுள்ள மாடியில், நாற்பதுக்கும் மேற்பட்ட பழ வகைகள் உள்ளன. மூன்று வகையான எலுமிச்சை, நெல்லி, மாம்பழம், இருவகையான ஆப்பிள், சப்போட்டா, விளச்சிப்பழம், பலாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரிச்சை, அத்தி, அன்னாச்சி, மூன்று வகையான ஆரஞ்சு, நாகப்பழம், சீமைப்பலா, கொய்யா, முந்திரி ஆகிய பழங்கள் பார்க்கும் போதே உண்ணத் தூண்டுகின்றன.

பழத்தோட்டத்தின் அருகே, தேனீக்கள் மொய்க்கும் வகையில் சிறிய தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தேனை சேகரிப்பதுடன், செடிகள் நன்கு வளரவும் உதவுகின்றன. சேகரிக்கப்பட்ட தேனை, தேனீக்களை தொந்தரவு செய்யாமல், தம் கைகளைக் கொண்டே வெளியே எடுக்கிறார் ஜெஸ்வந்த சிங்.

எவ்வித மருந்துகளும் தெளிக்காமல், பூச்சிகளிடம் இருந்து செடிகளை காப்பாற்ற, சூரிய சக்தியில் இயங்கி, யூ.வி கதிர்வீச்சினால் பூச்சிகளை இழுக்கும் கருவியினை உபயோகிக்கும் ஜெஸ்வந்த் சிங், இந்தக் கருவியின் மூலம் ரசாயனங்கள் இன்றி இயற்கையான முறையில் செடிகளை பராமரிக்கலாம் என்கிறார். "செடிகளுக்கு பூச்சி மருந்துகள் இன்றி இயற்கை பொருட்களான வேப்ப எண்ணெய் அல்லது மாட்டுச் சாணத்தை கரைத்து தெளிக்கலாம். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து, அதையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

இறுதியாக, வீட்டில் இருக்கும் இயற்கை கழிவுகளைக் கொண்டு, அவரே தயாரிக்கும் உரத்தை காண்பித்து, அதை உருவாக்கும் முறையையும் நம்மிடம் விளக்கினார். "பெரிய தொட்டியை எடுத்துக்கொண்டு, காற்று புகும் அளவிற்குச், அதைச்சுற்றி சிறிய துளைகள் சிலவற்றை அமைக்க வேண்டும். தொட்டியின் கீழ் பகுதியிலும், கழிவு நீர் வெளிவரும் அளவிற்கு, சிறிய ஓட்டை ஒன்றை அமைக்க வேண்டும். தொட்டியின் உள்ளே, நெட்லான் எனப்படும் வலையைக் கொண்டு அடிப்பகுதியினை மூட வேண்டும். பின்னர், ஆறு அங்குலத்துக்கு செங்கற்கள் அல்லது ஜல்லிக்கற்களை நிரப்ப வேண்டும். பின் முட்டை ஓடு, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் வெங்காய்த் தோலைகளைத் தவிர, வீட்டில் மீந்துபோன அனைத்து இயற்கை உணவுப்பொருட்களையும் உள்ளே போட்டு, அதன் மேல் மாட்டு சாணத்தை போட வேண்டும், அதன் பின், மண்புழுக்கள் சிலவற்றை போட்டு, மறுபடியும் மீதமுள்ள உணவுப்பொருட்களை போட வேண்டும். இப்படி சில அடுக்குகளாக உணவுப்பொருட்களையும், சாணத்தையும் போட்டு, இறுதியாக தொட்டியை மூட வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பெரிய தொட்டிக்கு, ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், அறுபதில் இருந்து எழுபது நாட்களுக்குப் பின், இயற்கை முறையிலான உரம் தயாராகிவிடும். ரசாயனங்கள் கலந்து விற்கப்படும் உரங்களை காட்டிலும் வீட்டில் தயார் செய்யப்படும் இயற்கை உரம் மிகவும் சிறந்தது" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

DSC_0315.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....


தனது வீட்டில் விளைவிக்கப்படும் செடிகளிலுள்ள பழங்கள், காய்கறிகள், பூக்கள் என அனைத்தையும் தன் வீட்டிற்கு உபயோகித்து, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிப்பதாக கூறிய ஜெஸ்வந்த் சிங், வீட்டிலேயே, செயற்கை ரசாயனங்கள் இன்றி விளையும் பழங்களையும், காய்கறிகளையும், தானும், தம் குடும்பத்தாரும், தம் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உண்ணும் போது, தாம், மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

மரம் வளர்ப்பதன் அவசியத்தை சுவர்களில் எழுதி மக்களுக்கு விளக்குவதை காட்டிலும், வீடெங்கும் மரங்களையும், செடிகளையும் வளர்த்து, மக்களுக்கு தாம் ஓர் உதாரணமாக திகழுவதாக கூறி பெருமை அடைந்தார் ஜெஸ்வந்த் சிங்.

அவர், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம், "சென்னையின் சிறந்த வீட்டுத்தோட்டம்" என்ற விருதையும் தமிழக அரசிடம் இருந்து பெற்றிருக்கிறார். வீட்டுத்தோட்டம் அமைத்து, அதில் ஏதேனும் சந்தேங்கள் எழுந்தால், தம்மை கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தன் கைப்பேசி எண்ணையும் கொடுத்தார். 9840045621 என்கிற எண்ணில், அவரை தொடர்பு கொண்டு மக்கள் தங்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், அவரை தொடர்பு கொள்பவர்களுக்கு வீட்டுத் தோட்டம் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஜெஸ்வந்த் சிங்கின் அன்புக் கட்டளை. இதற்கும் சேர்த்து நம் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பசுமை நிறைந்த தோட்டத்தை பிரிந்து செல்ல மனமின்றி, அங்கிருந்து கிளம்பினோம்.

http://www.vikatan.com/news/article.php?aid=54967

Link to comment
Share on other sites

சென்னையில் கடும் மழை; தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை

12243423_730981113703386_814845887480565ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.