Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

‘அகங்காரத்துடன் சமரசம் பேச முடியாது’
 

image_ac01f2e6e9.jpgஒவ்வொருவருடைய பார்வையும், ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதும் சில சமயங்களில், உடன்பாடாக இருப்பதும் உண்டு. தங்களது எண்ணங்களுக்கு உடன்பாடாக இருந்தால் மட்டும், அவர்களைப் பாராட்டி நட்புடன் பேசிக்கொள்வார்கள்.

தங்களுக்கு ஒவ்வாத கருத்துகள் பிறரிடம் இருப்பின், அவர்களை எதிரிகளைப் போல் நோக்குவது அறியாமை தான். ஏனெனில், எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. தங்களுக்கு விரும்பிய, தங்கள் மூளை சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதனை உணராமல், மற்றவர் கருத்தில் திருப்தியடையாவிட்டால், முரண்படுவது சரிதானா? ஆனால், இருசாரார் கருத்துகளும் தவறானதாகவும் இருக்கலாம்.

கருத்து முரண்பாடுகளை ஆராய்வது நல்லது. அமைதியான தேடல்களில், நற்பயன் கிட்டும். நீதிக்கு, உண்மையில் பக்கச்சார்பு கிடையாது.

எனினும், நீதி வழங்குவதில் தவறுகள் நேரலாம். ஆனால், உண்மைகளுக்கு ஒரே வடிவம் தான். மாறவே மாறாது. அகங்காரத்துடன் சமரசம் பேச முடியாது. அகங்காரம் கொண்டோர், நீதி செலுத்தவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

வடகொரியா சியோலை கைப்பற்றிய நாள்: ஜூன் 28- 1950

 
வடகொரியா சியோலை கைப்பற்றிய நாள்: ஜூன் 28- 1950
 
வடகொரியா 1950-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி சியோலை கைப்பற்றியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்-

* 1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.
 
* 1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
 
* 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
* 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.
 
* 1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.
 
* 1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.

* 1904 - "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
 
* 1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
 
* 1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. * 1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது. * 1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.

* 1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.
 
* 1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
 
* 1994 - ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.

* 1995 - மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். * 2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது
 
 
Link to comment
Share on other sites

நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் காரணம்! - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

 

பொறுமை நமக்கு கற்றுத் தருவது என்ன?

நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் காரணம்! - பாடம் சொல்லும் கதை! #MotivationStory
 

பாடம் சொல்லும் கதை

`பொறுமை மிகக் கசப்பானது. ஆனால், அது தரும் பழமோ மிக இனிப்பானது!’ - தத்துவியலாலர் ரூஸோ (Jean-Jacques Rousseau) உதிர்த்த பொன்மொழி இது. நன்றாக யோசித்துப் பார்த்தால், நமக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம் பொறுமையின்மைதான். இந்த விஷயத்தில் இயற்கையிடம்தான் மனிதர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மரத்தை எடுத்துக்கொள்வோம்... பனி, மழை, வெயில் அத்தனையையும் அது எதிர்கொள்கிறது. பூக்கவேண்டிய நேரத்தில் பூத்து, காய்க்கவேண்டிய காலத்தில் காய்த்து, உதிர்க்கவேண்டிய பருவத்தில் உதிர்த்து தன் கடமையை ஆற்றுகிறது. அந்தப் பொறுமை மனிதர்களில் பலருக்கு இல்லை. பலர் புதிதாக, வித்தியாசமாக எதையாவது செய்யத் தொடங்குவார்கள். ஆனால், வெகு விரைவிலேயே அதைக் கைவிட்டுவிடுவார்கள். ஏனென்றால், குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது. எந்தச் செயலுக்குமே பலன் கிடைக்க, அதனதன் தன்மைக்கேற்ப காலம் பிடிக்கும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். பொறுமையின்மை, நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பலனைக்கூட இல்லாமல் செய்துவிடும். வெற்றியாளனாக உருவாக ஒருவர் அறிவையும் அனுபவத்தையும் பெறும் வேட்கையோடு இருக்க வேண்டும்; நம் செயல்பாடுகளுக்கான முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டும். இந்த பேருண்மையை விவரிக்கும் கதை இது. 

துறவி

 

 

நம் ஊரில் அதிர்ஷ்டக்கட்டை என்பார்களே... அந்த மாதிரி மனிதர் அவர்... வியாபாரி. சீனாவின் ஒரு சிறு நகரத்தில் இருந்தார். விவசாயம் செய்தார்; சிறு உணவகம் நடத்திப் பார்த்தார்; சின்னதாகக் கடை போட்டு பீங்கான் பொருள்களை விற்றார்... எதிலும் லாபம் கிடைக்கவில்லை. எந்தத் தொழில் செய்தாலும் தோல்வி, நஷ்டம். `என்னை துரதிர்ஷ்டம் துரத்திக்கொண்டே இருக்கிறது’ என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. `இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்கிற முடிவுக்கு அவராகவே ஒரு கட்டத்தில் வந்திருந்தார். தோல்வியும் ஏமாற்றமும் தொடர்ந்து துரத்துகிறதே என்கிற விரக்தி நிலை. வாழ்க்கையில் அவ்வளவு பெரிய அடி வாங்கிய பிறகு அவரால் ஊரில் இருக்க முடியவில்லை. `எங்கேயாவது போய்விடுவோம்’ என்கிற எண்ணத்தோடு கிளம்பினார். கால் போகிற போக்கில் நடந்தார். ஊரைத் தாண்டி, ஒரு காட்டுக்குள் பயணம் செய்தார். 

 

 

பசி, தாகம்... எதைத் துறந்தாலும், விடாமல் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் இந்த இரண்டையும் என்ன செய்ய முடியும்? வழியில் ஒரு சிற்றோடை தெரிந்தது. அதில் தாகத்தைத் தணித்துக்கொண்டு நடந்தார். கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பார். பசி, அவருடைய வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது. காட்டுக்கு நடுவே ஒரு சிறு குடிலைப் பார்த்தார் அந்த மனிதர். அதன் வாசலில் நின்று குரல் கொடுத்தார். உள்ளேயிருந்து ஒரு துறவி வெளியில் வந்தார். துறவிக்கு, வாசலில் நின்றிருந்த மனிதரைப் பார்த்ததுமே, அவர் பசியோடு இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. 

``உள்ளே வாங்க!’’ என்று அழைத்தார் துறவி. 

வியாபாரி உள்ளே போனார். துறவி, அவரை அமரவைத்து, சில பழங்களையும் தான் சமைத்துவைத்திருந்த கஞ்சியையும் அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். வந்தவர் பசியாறியதும், மெள்ள அவரைப் பற்றி விசாரித்தார். உள்ளத்திலிருப்பதைக் கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு வடிகால் வியாபாரிக்கு அன்று கிடைத்திருந்தது. தன்னைப் பற்றி, தான் அடைந்த நஷ்டங்கள், தோல்விகளைப் பற்றிச் சொல்லி புலம்பித் தீர்த்தார் வியாபாரி. அவர் சொல்வதையெல்லாம் துறவி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். 

``சொல்லுங்க ஐயா... இவ்வளவு கஷ்டத்துக்குப் பிறகும் நான் வாழணுமா... என் ஊர்ல இருக்கணுமா... அதுக்கு ஏதாவது நியாயமான ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்...’’ 

துறவி எழுந்துகொண்டார். ``என்கூட வாங்க’’ என்று சொல்லி, அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு குடிலுக்குப் பின் பக்கம் சென்றார். 

ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ``அது என்ன?’’ என்று கேட்டார் துறவி. 

``அதுவா... எங்க ஊர்ல பன்னம்னு (Fern) சொல்வோம். சிலர் பரணிச் செடினு சொல்வாங்க. சீக்கிரமே முளைச்சிடக்கூடிய ஒரு தாவர இனம்.’’ 

இன்னோர் இடத்தைச் சுட்டிக்காட்டி, ``அது என்ன?’’ - கேட்டார் துறவி. 

``அது தெரியாதா?’’ 

பரணிச் செடி

``பரணிச் செடியையும் மூங்கிலையும் ஒரே நேரத்துலதான் நான் விதைபோட்டு வளர்க்க ஆரம்பிச்சேன். ரெண்டையுமே ரொம்ப கவனமா வளர்த்தேன். ரெண்டுக்கும் தேவையான தண்ணீர், உரம் எல்லாத்தையும் போட்டேன். சூரிய ஒளி கிடைக்கிற மாதிரியான இடத்துலதான் வளர்த்தேன். ரொம்ப சீக்கிரத்துலயே பரணிச் செடி பூமியிலருந்து முளைச்சு வெளியே வந்துடுச்சு. கிடுகிடுனு வளர ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, மூங்கில் அவ்வளவு சீக்கிரம் வளரலை. ரெண்டு, மூணு வருஷம் ஆச்சு. பூமியிலருந்து சின்னதா ஒரு இன்ச்கூட வளரலை. வளர்ச்சிக்கான எந்த அடையாளமும் இல்லை. அதுக்காக நான் மூங்கில் செடியை விட்டுடலை. தொடர்ந்து தண்ணி ஊத்திட்டு வந்தேன்; நல்லா பராமரிச்சேன். அஞ்சாவது வருஷம்தான் மூங்கில்ல சின்னதா துளிர் விட்டுது. அதுக்கப்புறம் ஆறே மாசம்... கிடுகிடுனு பல அடி உயரத்துக்கு வளர்ந்துடுச்சு. அதுக்காக அந்த மூங்கில் நாலு வருஷம் வளராமலே இருந்துச்சுனு அர்த்தமா?’’ 

 

 

வியாபாரி அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. 

``இதுக்கான பதில் ரொம்ப எளிது. அந்தச் சின்ன மூங்கில் மரம் பூமிக்கடியில வளர ஆரம்பிச்சுது; பூமிக்கு மேல வளரும்போது, தான் பலமா இருக்கணும்கிறதுக்காக முதல்ல வேர்களை பலப்படுத்திச்சு. அதுக்காக நாலு வருஷம் பொறுமையா பூமிக்கடியில காத்திருந்தது. வேர்கள் பலமானதும், பூமிக்கு வெளியே தலை காட்ட ஆரம்பிச்சுது. பலமான அடித்தளம் இல்லைனா, வளர்ச்சியின்போது அதன் வீர்யத்தைத் தாங்க முடியாது; மூங்கிலால வாழவும் முடியாது. வேர் நல்லா பலப்பட்டதும், உயரமா வளர ஆரம்பிச்சுடுச்சு.’’ 

அடுத்து துறவி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க வியாபாரி ஆர்வத்தோடு காத்திருந்தார். 

மூங்கில்

``அந்த மூங்கில் மாதிரிதான் நீங்களும். உங்களுக்கு வாழ்க்கையில கிடைச்ச நஷ்டங்கள், தோல்விகளெல்லாம் கஷ்டங்கள் இல்லை. அனுபவங்கள். அந்த அனுபவங்களையெல்லாம் எவ்வளவு விலை கொடுத்தாலும் யாராலயும் வாங்க முடியாது. இத்தனை நாளா அந்த அனுபவங்களின் மூலமா உங்களோட வெற்றிக்கான வேர்களை பலப்படுத்தியிருக்கீங்க. ஆனா, உங்களுக்குப் பொறுமை இல்லை. அவசரப்பட்டு எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீங்க பொறுமையா இருந்திருந்தீங்கன்னா, அந்த மூங்கில் மாதிரி கிடுகிடுனு வளர்ந்திருப்பீங்க.’’ 

வியாபாரி, அந்தத் துறவியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். அந்த இறுக்கமான பிடியில் ஒரு நம்பிக்கை தெரிவதை துறவி உணர்ந்தார். வியாபாரி, மேற்கொண்டு ஒரு வார்த்தைகூடப் பேசாமல், திரும்பி தன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

 

18p1_1530014613.jpg

மும்தாஜுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். ரோட்டில் சின்னக் குழந்தைகளைப் பார்த்தால், உடனே தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். தன் குழந்தைகளாக நினைத்து, வீட்டில் வளர்ப்பது அவர் அண்ணன் அஹமதுவின் குழந்தைகளை.


111p1_1530014727.jpg

ந்தோஷம், சோகம், வெறுப்பு, கோபம் இதுபோன்ற உணர்வுகளை ஒருபடி அதிகம் வெளிப்படுத்தக்கூடி யவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ்க் கலாசாரம், உடைகள், உணவுகள் என்று எல்லாவற்றையும் சிரத்தை எடுத்துத் தமிழ்நாட்டு நண்பர்களின் மூலம் கற்றுக்கொண்டாராம். அடிக்கடி துபாய், அமெரிக்கா. ஜப்பான், துருக்கி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது என்றால் ஐஸ்வர்யாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம்.  


46p1_1530014749.jpg

டான்ஸ், கராத்தே, ஸ்விம்மிங், மிமிக்ரி, ஆக்டிங் என சகலகலா வல்லவி யாஷிகா ஆனந்த். வீட்டிலிருப்பதைவிட ஊர் சுற்றியே பழக்கப்பட்ட இவர், புல்லட் ஓட்டிச் சென்றால்தான் அடர்ந்த காட்டுப்பகுதிகளைக் காண முடியும் என்று மாதம் ஒரு முறை அட்வெஞ்சர் பயணம் செய்பவர். யாஷிகாவுக்கு சமூக வலைதளங்களில் நிறைய ஃபாலோயர்ஸ் இருப்பதால், புரமோஷன் வேலைகளையும் செய்துவருகிறார். பல ஏழைக்குழந்தைகளுக்குப் படிப்புக்கான செலவினை மேற்கொள்கிறார்.


78p1_1530014769.jpg

ன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா ஆசையில் மாடலிங்கில் இருந்தவர் ஜனனி. பள்ளிநாள்களிலிருந்தே எப்போதும் எதிலும் தலைமைப்பண்போடு இருக்க வேண்டும் என நினைக்கிற ஆள்! கல்லூரியில்கூட கல்ச்சுரல் செகரட்ரியாக இருந்தவர். ‘பிக் பாஸ்’ முதல் சீசனிலேயே கலந்துகொள்ள அழைத்தபோது வேண்டாமென மறுத்ஸ்ரீதேவிதான் ரோல் மாடல். அதனாலேயே ஸ்ரீதேவி இறப்பின்போது, தாங்கமுடியாமல் பல நாள்கள் அழுது தீர்த்திருக்கிறார்!


61p1_1530014789.jpg

சென்றாயன், மனது சோர்வாக இருந்தால் மனைவியை அழைத்துக்கொண்டு மெரினாவிற்குச் செல்வது வழக்கம். மா.கா.பா ஆனந்த்தான் சென்றாயனுக்கு மிகவும்  நெருங்கிய நண்பர். இப்போது அப்பாச்சி பைக் வைத்திருக்கும் சென்றாயனுக்கு ராயல் என்ஃபீல்ட் மீது அதீத காதல். ஒருநாள் அது தன் வசப்படும் என உறுதியாக இருக்கிறார்.


35p1_1530014809.jpg

சினிமாவில் கேமராமேனாக  என்ட்ரி கொடுக்க  ஆசைப்பட்டவர், ‘பென்சில்’ படத்தின் மூலம் நடிகரானார். படத்தில் நடிக்க ஆரம்பித்தபின், மீடியா படிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார். மிகவும் அடக்க ஒடுக்கமான பையனாக இருக்கும் ஷாரிக், உண்மையில் செம ஜாலிடைப். வீட்டில் எப்போதுமே ஷாரிக், அம்மா (உமா ரியாஸ்கான்) செல்லம்தானாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

106 ஆண்டுகள் பழமையான ‘கேக்’ கண்டெடுப்பு- பழுதடையாமல் இருக்கும் அதிசயம்!!

 

Capture-227.jpg

 
 

 

 

அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார்.

 

இந்த கேக் வைக்கப்பட்டிருந்த பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் பழுதடையாமல் உண்பதற்குரிய வாசத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கைத் தயாரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்று அந்த கட்டடத்தில் பழமையான கருவிகள், உடைகள், அழுகிப்போன மீன் மற்றும் இறைச்சி போன்ற 1,500 பொருள்கள் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது

http://newuthayan.com

Link to comment
Share on other sites

9 நாள்கள், 3580 கி.மீ பயணம்! - ஜாவாவில் ஒரு க்ளாஸிக் அனுபவம்!

 
 
9 நாள்கள், 3580 கி.மீ பயணம்! - ஜாவாவில் ஒரு க்ளாஸிக் அனுபவம்!
 

ஜாவா பைக்குடன் என் முதல் அனுபவம், ஒரு பயணத்தை நோக்கியதாகவே இருந்தது. ``ஜாவா பழைய வின்டேஜ் பைக்காச்சே... எப்படி லாங் ரைடுக்கு செட்டாகும்?'' என்று ஒரு யெஸ்டி பைக் வெறியரைப் பார்த்துக்கேட்டேன். அவர் என்னிடம் கேட்டார்,

``ஜாவா பைக் ஓட்டியிருக்கீங்களா?"

``இல்லைங்க!''

 

 

``ஒரு ஜாவா பைக்கை ஓட்டினாத்தான் உங்களால் அந்த உணர்வைப் புரிஞ்சுக்க முடியும்" என்று தனது ஜாவா `ரோடு கிங்' பைக்கைக் கொடுத்தார் `ரோரிங் ரைடர்ஸ்' க்ளப்பைச் சேர்ந்த சைலேஷ். மெரினாவில் சும்மா ஒரு ரவுண்டு வந்த அனுபவமே சிலாகித்து எழுதும் அளவுக்கு இருந்தது என்றால், கடலைப் பார்த்துக்கொண்டே மொத்தத் தென்கிழக்குக் கடற்கரைச் சாலையையும் பைக்கில் பறந்து சென்றால் எப்படியிருக்கும்! 

 

 

அப்படித்தான் `ரோரிங் ரைடர்ஸ்' க்ளப்பைச் சேர்ந்த ரைடர்கள், ஜாவாவை கடற்கரையிலேயே விரட்டிவந்திருக்கிறார்கள். சென்னையில் ஆரம்பித்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் சிந்துவாரா வரை கடற்கரைச் சாலையிலேயே ஒரு லாங் ரைடு சென்றுள்ளார்கள் `ரோரிங் ரைடர்ஸ்' நண்பர்கள்.  ஜாவாவின் ரோரிங்கை இந்தியா முழுக்க அலறவிடுவது ரோரிங் ரைடர்ஸின் ஹாபி. ``கடற்கரைப் பயணம் எப்படி இருந்துச்சு?" பயணத்தைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தேன்.

``ஒரு நாளைக்கு 400 கி.மீ எங்களோட டார்கெட். மொத்தம் 6 ரைடர்கள், 9 நாள், 3,580 கி.மீ பயணம். 5 யெஸ்டி ரோடு கிங், ஒரு யெஸ்டி க்ளாசிக். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" என்று `பிக் பாஸ்' ஸ்டைலில் தம்ஸ் அப் காட்டினார்கள்.

``எங்களோட ப்ளான் இந்தியாவோட கடற்கரையை பைக்கில் சுற்றிவரணும். போன வருஷம் கன்னியாகுமரி வரை ஒரு ரைடு போனோம். இந்த ரைடு அதோட தொடர்ச்சி. ஒரு வழியா இந்தியாவோட கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சுற்றி வந்தாச்சு. அடுத்த வருஷம் கேரளாவையொட்டியிருக்கும் மேற்குக் கடல் பகுதியில் ரைடு போகலாம்னு இருக்கோம்" என்று உற்சாகமாகப் பேசினார் ரோரிங் ரைடர்ஸின் ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீனிவாசன்.

சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியம்

``மொத்தம் ஆறு இடங்களில் தங்கினோம். மச்சிலிப்பட்டினம், ஶ்ரீகாகுளம், புரி, சம்பல்பூர், ராய்பூர், நாக்பூர், ஹைதராபாத், லெபாக்‌ஷி எனத் தங்கும் இடங்களை முன்பே முடிவுசெய்திருந்தோம். நாங்கள் தங்கும் ஒவ்வொரு நகரத்திலும் அந்த நகரத்தில் இருந்த ஜாவா க்ளப் நண்பர்கள் தங்குவதற்கான வசதிகளைச் செய்திருந்தார்கள். போகும் வழியில் ஜாவா க்ளப் மட்டுமல்லாமல், பல பைக் க்ளப் நண்பர்களையும் சந்தித்தோம். `இந்த ரைடு நண்பர்களைச் சந்திக்கச் சென்றதோ!' என எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. செம ஃபன்!" என்று ஶ்ரீனிவாசன் சொல்ல, ``எந்த ரூட் புது அனுபவத்தைத் தந்தது?'' என்ற கேள்விக்கு, ``ஏரிக்குள்ள பைக்கில் போனதுதான்'' என்றார் சைலேஷ்.

 

 

WhatsApp_Image_2018-06-12_at_8.18.50_PM_

``ஒடிசாவில் சிலிகா லேக் என்று ஓர் இடம் உள்ளது. பைக் ரைடைவிட அங்கு படகில் போனதுதான் செம எக்ஸ்பீரியன்ஸ், செம த்ரில். கடல் பக்கத்திலேயே இருக்கிறது சலிகா ஏரி. இதைக் கடக்க சாலை இருந்தாலும், இங்கு வரும் ரைடர்கள் பைக்கை படகில் ஏற்றி, இந்த ஏரியைக் கடப்பார்கள் எனக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் படகுக்கு மூன்று பைக் என, இரண்டு படகைப் பிடித்து பைக்கை ஏற்றிச் சென்றோம். விடாமல் அலை அடித்துக்கொண்டே இருந்தது. அலையில், ஆடும் படகில் பைக்கைக் கட்டிவைத்துப் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்" என்றார். 

செம்ம த்ரில் ரைடிங்

``ஒரு நாளைக்கு 450 கி.மீ டார்கெட் வைத்துச் சென்றோம். ஒடிசா வரை கடற்கரைச் சாலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்த முறை நகரத்துக்குள் நுழைந்து வந்தோம். போகும்போது சில இடங்களில் சரியான சாலை இல்லை. வெறும் கற்கள்தாம். தெலங்கானாவைத் தொட்ட பிறகு பிரமாதமான சாலையைப் பார்த்தோம். நெடுஞ்சாலை செம ஸ்மூத். ஆனால், வெயில் அதிகம். சாலையில் இரு பக்கமும் பள்ளம். அதைத் தாண்டி மரம் இருந்ததால் சாலையில் நிழல் இல்லை. வெயில், ஸ்மூத் சாலை, கைகளுக்கும் கால்களுக்கும் வேலையே இல்லை. கொஞ்சம் நேரம் பைக் ஓட்டிவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கவேண்டும். இல்லையென்றால், தூங்கிவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. ஹைதராபாத் வரும்போது காலையில் வெயில், மாலையில் மழை என க்ளைமேட் புரட்டியெடுத்தது. எப்படியோ சமாளித்து லெபாக்‌ஷியை அடைந்தோம்" என்றார் ஶ்ரீனி.

``லெபாக்‌ஷியில் 1530-ம் ஆண்டு கட்டப்பட்ட வீரபத்திரன் கோயில் உள்ளது. இதன் கட்டுமானத்தைப் பார்க்கவே பல நூறு கி.மீ தாண்டி வரலாம். நகரம், கோயில் இரண்டையும் அருமையாகக் கட்டியுள்ளார்கள்'' என்று இடத்தைப் பற்றியும்  சொன்னார்.

ரோரிங் ரைடர்கள்

``சில இடங்களில் 30 கி.மீ-க்கு ஒரு பெட்ரோல் பங்க்தான் இருந்தது. பல இடங்களில் தண்ணீர் பாட்டில்கூடக் கிடைக்கவில்லை. உப்புத்தண்ணீர்தான். ஓர் இடத்தில் அடுத்த மருத்துவமனை 100 கி.மீ தொலைவில் என்ற போர்டைப் பார்த்தபோது பயங்கர அதிர்ச்சி. தமிழ்நாட்டில் குறைந்தது 10 கி.மீ-க்கு ஒரு மருத்துவமனையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டிலிருந்து மேலே போகும்போது, பல கிராமங்கள் அடிப்படை வசதிகளில் மோசமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது'' என்று தங்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்கள் ரைடர்கள்.

ஒரு நிமிடம், மருத்துவ மாணவரான எர்னெஸ்டோ குவேராவை, லத்தின் அமெரிக்காவின் `சே'-வாக மாற்றிய அந்த மோட்டார் சைக்கிள் பயணம் எப்படி இருந்திருக்கும் என யோசித்தது மனம். பசி, வெறுமை, சந்தோஷம், பயம், அன்பு, காத்திருப்பு எல்லாம் கலந்த மனிதம் என அனைத்தையும் சேர்த்து ஒரு நினைவாகத் தருகிறது ஒரு பயணம். பயணத்தைப் பாதுகாப்பாக முடித்த ரோரிங் ரைடர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது’
 

image_4489d12e95.jpgஅதீத கற்பனைகள் ஆபத்தானவை. கண்டபடி கற்பனைகளை ஓடவிட்டுத் தரக்குறைவான கதைகளை உருவாக்க வேண்டாம். கலாசார பாரம்பரியங்களைத் தவறான கண்ணோட்டத்துடன் பரப்பியும் வருகின்றனர்.

அறிவைத் தூய்மையாக வைத்திருந்தால், சித்தம் சிதறாது.கற்பனை வளம் உத்தமமாய் அமையும். நற்பண்பு உள்ளவரால்த்தான் அற்புதமான கற்பனையூடாக நல்ல காரியங்களை ஆற்றிட முடியும்.

சோம்பேறிகள் பொழுது போக்குக்காக, மனதைக் கண்டபடி ஓடவிட்டுப் பொய்யான விடயங்களுக்குப் புது வேஷம் கொடுப்பார்கள். சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது.

உழைக்காமல் இருக்கும் மனிதர்களுக்கு, அடுத்தவன் செய்யும் எதுவுமே, அது எளிதானது எனச் சொல்லிவிடுவார்கள். புல்லையே அசைக்கத் தயங்குபவர்கள், மலையை உடைத்துக் கோட்டை கட்டுவார்களா? சொல், செயல் வல்லவனுக்கே உரியது. 

Link to comment
Share on other sites

ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள்: 29- 2007

 
 
 
 
ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள்: 29- 2007
 
கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஆப்பிள் முதன் முதலாக 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தனது செல்போனை வெளியிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். * 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. * 1864 - கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர். * 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.

* 1888 - ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார். * 1895 - சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர். * 1904 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
 

 

 

செஷெல்ஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 29 - 1976

 
அ-அ+

செஷெல்ஸ் பிரட்டனிடம் இருந்து 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி விடுதலை பெற்றது.

 
 
 
 
செஷெல்ஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 29 - 1976
 
செஷெல்ஸ் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன. இது பிரட்டனிடம் இருந்து 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார். * 1925 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது. * 1976 - சீசெல்சு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது. * 1995 - அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.

* 1995 - தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர். * 2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. * 2007 - ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் எது? நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் எது? நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

நெகிழ்ச்சிக் கதை

`நம் எல்லோரிடமுமே பச்சாதாபப்படும் குணம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். என்ன... அதை வெளிப்படுத்தத்தான் போதுமான தைரியம் இல்லை’ - இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்கக் கவிஞரும் மனித உரிமைப் போராளியுமான மாயா ஏஞ்சலோ (Maya Angelou). மற்றவர்களின் மனமறிந்து நடப்பது, பிறருக்காக இரக்கப்படுவது என்பது மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். மற்றவர்களுக்காகப் நாம் இரங்கும்போது, அவர்களின் எதிர்மறை சக்தி விலகி, பாசிட்டிவ்வான சக்தி அவர்களை ஆட்கொள்ளுகிறது. `நமக்காக இரக்கப்படவும், நம்மை நினைத்துப் பார்க்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது’ என்கிற எண்ணமே பெரிய பலத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடும். பெரும் துன்பத்திலிருப்பவர்களைத் தேற்றுவதற்காக உச்சரிக்கப்படும் ஆயிரம் வார்த்தைகளைவிட, பரிவான ஒரு தொடுகை அவர்களைத் தெம்பாக்கிவிடும். இன்றைக்கு விடிகிற ஒவ்வொரு நாளுமே நம்மைக் கிறுகிறுக்கவைக்கிற மாயசக்தியாக மாறிவிட்டது. எது இலக்கு, எது வாழ்க்கை என்பதறியாமல் எதையோ தேடி, எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் நாமும் ஓர் அங்கமாகிவிட்டோம். நெருங்கிய உறவுகளிடம்கூட ஆர, அமர உட்கார்ந்து பேச முடியாதபடிக்கு ஒரு பக்கம் நம்மை முடக்கிப் போட்டுவிட்டு, வேறொரு பக்கம் பரபரபரக்கவைத்து இழுத்துக்கொண்டு ஓடுகிறது வாழ்க்கை. இந்தச் சூழலில் இந்தக் கதை உணர்த்தும் செய்தி அவசியமான ஒன்று. 

மாலை நேரம்

 

 

மாலை நேரம். அமெரிக்காவிலிருக்கும் பிரபல பூங்கா... ஃப்ரெடரிக், தன் பாட்டியோடு அங்கே வந்திருந்தான். அவனுக்கு 12 வயது. ``என்ன ஃப்ரெடரிக்... வந்ததுலருந்து பார்க்குறேன். என்னமோ மாதிரி இருக்கியே! போ உன் ஃப்ரெண்ட்ஸுகளோட ஏதாவது விளையாடு!’’ என்றார் பாட்டி.

 

அவன் பேசாமலிருந்தான். 

``என்ன... உடம்பு ஏதாச்சும் பண்ணுதா?’’ 
 
பாட்டி, அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். 

``அதெல்லாம் இல்லை பாட்டி.’’ 

அதற்குப் பிறகு பாட்டி பேசவில்லை. அவனுக்கு அம்மா நினைவு வந்திருக்கும் என்று அவராக நினைத்துக்கொண்டார். 

ஃப்ரெடரிக்கின் அப்பா பிசினஸ்மேன். அம்மா, ஒரு விளம்பர நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்தார். இருவருக்கும் ஃப்ரெடரிக்கைப் பார்த்துக்கொள்ள நேரமில்லாததால், பாட்டி வீட்டில் அவனை விட்டிருந்தார்கள். பாட்டி வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. சமைத்துப் போட, வீட்டைப் பராமரிக்க, அவனுக்கு வேண்டியதைத் தர... எல்லாவற்றுக்கும் பணியாட்களை அமர்த்தியிருந்தார் ஃப்ரெடரிக்கின் அப்பா. எப்போதாவது நினைத்தாற்போல் அம்மாவும் அப்பாவும் அவனைப் பார்க்க வருவார்கள். `ஹாய் டியர்...’ என்று அவனை வாரி அணைத்து முத்தமழை பொழிவார் அம்மா. அப்பா, அவனுக்காகக் கொண்டு வந்திருக்கும் கிஃப்ட் மூட்டையை விரிப்பார்; தின்பண்டங்களைக் கொடுப்பார். 

 

 

`ம்... படிப்பு எப்படிப் போய்க்கிட்டிருக்கு?’, `ஸ்கூல்ல ஒண்ணும் பிரச்னை இல்லையே!’, `பாட்டியம்மா தினமும் கதை சொல்றாங்களா?’, `உனக்கு வேற ஏதாவது வேணுமா?’, `நேரத்துக்குச் சாப்பிடணும்’... இப்படி வழக்கமான சில விசாரிப்புகளை முன்வைப்பார்கள். `அடுத்த வாரம் கண்டிப்பா வர்றோம் செல்லம்!’ என்று சொல்லிவிட்டு, இருவரும் ஃப்ரெடரிக்குக்கு முத்தம் கொடுப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஒருநாள்கூட அவனோடு தங்கியதில்லை. அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமிருந்ததில்லை. அவன், பாட்டி வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆரம்பத்தில் `அம்மாவை மிஸ் பண்ணுகிறோமே’ என்று அவன் வருந்தியதும் உண்டு. ஆனால், நாளாக ஆக அம்மாவோடு இருப்பதைவிட பாட்டி வீட்டில் இருப்பது எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. அம்மாவோடு இருந்தாலும் இல்லாதது மாதிரிதான். வேலை... வேலை... வேலை... அதைத் தவிர அம்மாவுக்கு வேறு நினைப்பில்லை. இரவில் அவன் சாப்பிட்டு முடித்து, உறங்கப் போகும் நேரத்தில்தான் அம்மா வருவார். அவன் அறைக்குள் வந்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுப் போவார். வழக்கம்போலப் பரபரவென்று தொடங்கிவிடும் அடுத்த நாள். அங்கே அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பரஸ்பர விசாரிப்புகளுக்கோகூட நேரமிருந்ததில்லை. 

பாட்டி

தனிமை... எல்லா வயதினரையும் கொல்லும் கொடிய நோய். பாட்டி, பேரன் இருவரையுமே அது பாதித்திருந்தது. பேரனின் உற்சாகம் பாட்டியையும் தொற்றிக்கொள்ளும். உண்மையில் பேரன் வந்த பிறகுதான் அந்த முதிய பெண்மணிக்கு வாழ்க்கையின் மேல் சிறு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இன்றைக்கு அவன் என்னவோ போலிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அவன் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். பாட்டி பார்வையைச் சுழலவிட்டார். ஏதோ ஓரிடத்தில் கூட்டமாக நிறையப் பேர் நின்றிருப்பதைப் பார்த்தார். 

``ஃப்ரெடரிக்! அது என்ன கூட்டம்னு போய்ப் பார்த்துட்டு வாயேன்!’’ 

அவன் வேண்டா வெறுப்போடுதான் எழுந்து போனான். போனவன், ஓடி வந்தான். ``பாட்டி... அங்கே... ஒரு ஓவியர் பசங்களுக்கெல்லாம் கன்னத்துல படம் வரைஞ்சுவிடுறார். நானும் வரைஞ்சுக்கவா?’’ 

``என்ன படம்?’’ 

``மானோட தலை, பூ, சூரியன், புலியோட காலு... விதவிதமா வரைஞ்சு விடுறாரு பாட்டி!’’ 

``அப்படியா... வா பார்ப்போம்.’’ பாட்டி எழுந்து கொண்டார். மெள்ள நடந்து கூட்டத்துக்கு அருகே போனார். ஃப்ரெடரிக் சொன்னதுபோலவே, ஓர் ஓவியர் ஒரு குழந்தையின் கன்னத்தில் ஓர் எலியின் தலையை வரைந்துகொண்டிருந்தார். அவர் வரைவதை வேடிக்கை பார்க்கக் கூட்டம் அதிகமிருந்ததே தவிர, வரைவதற்காக இரண்டு குழந்தைகள் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள். பாட்டி ஜாடை காட்ட, மூன்றாவது ஆளாக ஃப்ரெடரிக் நின்றுகொண்டான். 

ஓவியர் முன்னால் நின்றிருந்த இரண்டு குழந்தைகளின் கன்னத்திலும் பூ, பலூன் என்று வரைந்து முடித்தார். ஃப்ரெடரிக் ஆர்வத்தோடு அவர் முன்னே போய் நின்றான். தன் கன்னத்தை உயர்த்திக் காட்டினான். அந்த ஓவியர் பார்த்தார். 

சிறுவன்

``தம்பி... உன் முகம் முழுக்க புள்ளி புள்ளியா தழும்புகளா இருக்கேப்பா. இதுல வரைய முடியாதே!’’ 

பாட்டி முன்னே வந்தார். ``சின்னதாக்கூட எதையாவது வரைய முடியாதா?’’ உடைந்துவிடும் குரலில் கேட்டார். 

``வரையறதுக்கு எங்கே இடம் இருக்கு மேடம்?’’ 

அவ்வளவுதான் ஃப்ரெடரிக்கின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவன் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்து, தான் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு ஓடிப் போனான். பாட்டி முடிந்த வரை வேகமாக நடந்து அவனிடம் வந்தார். 

``ஃப்ரெடரிக் அழுறியா?’’ 

அவன் கண்ணைத் துடைத்துக்கொண்டு சொன்னான்... ``இல்லை பாட்டி!’’ 

``உனக்கு ஒண்ணு தெரியுமா... நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ எனக்கும் உன்னை மாதிரியே முகத்துல தழும்புகள் இருந்துச்சு. இன்னொண்ணு சொல்றேன்... கேட்டுக்கோ...  முகத்துல இருக்குற தழும்புகள் அழகானது.’’ 

``நிஜமாவா?’’ 

``நிச்சயமா. அதைவிட அழகான இன்னொண்ணைச் சொல்லு பார்ப்போம்.’’ 

ஃப்ரெடரிக், பாட்டியின் முகத்தைத் தன் இரு கைகளாலும் ஏந்தினான். அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான்... ``சுருக்கம்.’’ 
 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

"நாங்கள் இப்படித்தான்!" - திருநங்கைகளின் அழகை வெளிக்கொணரும் புது மேக்-ஓவர்

3277_thumb.jpg
 

ஆண்-பெண் என இருவருடைய குணாதிசயங்களைக்கொண்டிருக்கும் திருநங்கைகள், முற்றிலும் பெண்ணாகத் தங்களை மாற்றிக்கொள்ள ஏகப்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மனஉளைச்சலுடன் உடல் உபாதைகளையும் பரிசாகப் பெறுகின்றனர்.

129215_thumb.jpg
 

இது அழகின் மோதல்!

`திருத்திய நீளமான சிகை
மெலிந்து நெளிந்த புருவங்கள்
ஜிமிக்கி தொடும் வளைந்த கழுத்து
அங்கித் தழுவும் மென்மையான தோள்பட்டை
நாணத்தால் போத்திய மார்பு
ஆடைக்குள் மறைந்த குறுகிய இடை
மிதமான சூட்டைக்கூட ஏற்காத மெல்லிய பாதம் 
இவற்றைக்கொண்டிருக்கும் நாங்களே 
அழகில் சிறந்தவர்கள்' என்றது பெண்மை.

`களைந்த குட்டையான சிகை
படர்ந்த அடர்ந்த புருவங்கள்
சுருள் நிறைந்த தாடி 
திடமான கழுத்து
அகன்ற தோள்பட்டை 
எவ்விதச் சூட்டையும் தாங்கும் பாதங்கள்
இத்தனை பெருமைகளைக்கொண்டிருக்கும்
நாங்களே அழகில் உயர்ந்தவர்கள்' என்று போட்டிபோட்டது ஆண்மை.

 

 

`அப்போ எங்களின் அழகு, ஆண்மைக்கானதா அல்லது பெண்மைக்கானதா?' எனப் புரியாமல் ஒதுங்கி நின்றனர் `திருநங்கைகள்'.

எது அழகு என்பதில், நம்மை நாமே எத்தனை நாள்கள்தாம் ஏமாற்றிக்கொண்டிருப்பது? நிறத்தில் வெண்மை, உடலமைப்பில் தொப்பை இல்லாத மெல்லிய இடை இதுதான் `அழகு' என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை. நாடே `டயட்', `பிளீச்சிங்' போன்ற போதையில் மிதந்துகொண்டிருக்கிறது. நோயற்ற ஆரோக்கியமான உடலே என்றும் நிலைத்திருக்கும் அழகு என்பதை மறந்தேபோன `அம்னிஷியா' பேஷன்ட்டாகிவிட்டோம். நாம் நம் அழகுக்கு அழகுச் சேர்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பாவம் திருநங்கைகள் அவர்களின் உண்மையான அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றனர்.

 

ஆண்-பெண் என இருவருடைய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் திருநங்கைகள், முற்றிலும் பெண்ணாகத் தங்களை மாற்றிக்கொள்ள ஏகப்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மனஉளைச்சலுடன் உடல் உபாதைகளையும் பரிசாகப் பெறுகின்றனர். ஆனால், ஒப்பனை நிறைந்த போலியைவிட அசலே சிறந்தது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

Real Beauty

அர்ச்சனா`திருநங்கைகள் ஏன் அவங்களோட அடையாளத்தை மாத்திக்கணும்?' என்று தன் ஸ்டைலிங்கில் அவர்களின் அசலை அடையாளப்படுத்தியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில், ``நான் காலேஜ்ல இருந்தே திருநங்கைகளோடு நிறைய வொர்க் பண்ணிருக்கேன். அவங்களுக்கு ஸ்டைலிங்கும் பண்ணியிருக்கேன். அப்படி எனக்கு அறிமுகம் ஆனவங்க  திருநங்கை ஸ்வேதா.

ஒருமுறை அவங்க எனக்குப் பழைய பிக்சர் ஒண்ணு ஷேர் பண்ணியிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன். காரணம், அதுல திருநங்கைகள் அவங்களோட ஒரிஜினாலிட்டி மாறாம, அவங்க அவங்களாவே இருந்தாங்க. அதுதான் அவங்களோட உண்மையான முகம்னு இப்போ இருக்கிற பல பேருக்குத் தெரியாது. எனக்கும்தான்! அகலமான தோள்பட்டை, முரட்டு முகம், தாடி, மீசை, கிருதா இதுலாம் அப்படியே இருந்துச்சு. அவங்களோட உடலமைப்பையும் அவங்க மாத்திக்கலை. ஆனா, அவங்களும் மேக்கப் போட்டிருந்தாங்க. இல்ல இல்ல... கொஞ்சமா மெருகேத்திக்கிட்டாங்க. மீசைக்குமேல புல்லாக்கு, கிருதாவுக்குப் பக்கத்துல ஜிமிக்கி, வகுடெடுத்துச் சீவிய முடி, கையில வளையல், கால்ல கொலுசுனு அவ்வளவு அழகு! இதுதான் அவங்களுக்கான அடையாளம்னு அந்த போட்டோ பார்த்ததும்தான் புரிஞ்சது. 

 

 

இப்போல்லாம் அவங்களை வெச்சு நிறைய ஃபேஷன் ஷூட் பண்றாங்க. அதுல அவங்களோட அடையாளம் மொத்தமா அழிஞ்சுப்போயிடுது. தெரிஞ்சோ தெரியாமலோ, அவங்களுக்கு வேற ஓர் அடையாளத்தை நாம உருவாக்கிட்டிருக்கோம். அவங்க வேற ஒரு ஜெண்டருக்கு மாறணும்னு அவசியமில்லை. அவங்க ஒரு, மூணாவது தனிப்பட்ட மைனாரிட்டி ஜெண்டர். அவ்வளவுதான். அவங்களோட ஏற்றத்தாழ்வுதான் அவங்களுக்கான அசல் அழகு. அதை எதுக்கு ஆணோட அல்லது பெண்ணோட முகமூடி போட்டு மறைக்கணும்?

`இவ்வளவு அழகா இருக்காங்க... இவங்க திருநங்கையா!' இந்த வார்த்தைகளை நாம எத்தனை பேரு சொல்லிருப்போம்! திருநங்கைனா பொண்ணா அழகாதான் இருக்கணுமா? அவங்க அடையாளத்தை அழிச்சாதான் அழகா? அப்படினா, நாமளே திருநங்கைகள்ல அழகானவங்களை மட்டும்தான் திரும்பிப் பார்க்கிறோம் இல்லியா? ஒரிஜினலா இருக்கிறவங்களை இளக்காரமாப் பார்க்கிறோம். இது ரொம்பத் தப்பு. இதுலாம்தான் அவங்க மனசுல ஆழமாப் பதிஞ்சு, பொண்ணுபோல முழுசா மாறணும்னு தூண்டுது.

நாம இதுவரைக்கும் ஃபேம்ல இருக்கிற சில திருநங்கைகளை மட்டும்தான் பார்த்திருக்கோம். ஆனா, சராசரி வாழ்க்கையில இருக்கிற எத்தனையோ திருநங்கைகளோட மனக்குமுறல்கள் கேட்டா நம்மளால நிம்மதியாத் தூங்கவே முடியாது. அவ்வளவு வலி அவங்களுக்குள்ள. இதைப் பற்றி ஸ்வேதாகூடவும் பேசினேன். அவங்க சொன்ன பதில், `திறமையையெல்லாம் யாருமே பார்க்கிறதில்லை. மரியாதையைக்கூட ஆள் பார்த்தும், அழகைப் பார்த்தும்தான் கொடுக்குறாங்க'னு ரொம்பவே கஷ்டப்பட்டுச் சொன்னார்.

Transgender Real beauty

இது எல்லாத்துக்கும் காரணம், நாம மட்டும்தான். அந்தக் குற்றஉணர்ச்சி ரொம்ப நாளா இருந்துச்சு. இந்த Stereo type-பை மாத்தணும்னு நினைச்சேன். இனிமே யாரும் இவங்களுக்கு ஏன் மீசை இருக்குனு கேட்கக் கூடாது. இதுக்காக அஞ்சு திருநங்கைகளைத் தேர்வுசெஞ்சு அவங்களோட உண்மை அழகை ஷூட் பண்ணியிருக்கோம். அவங்களை அவங்களா வாழவிடணும்னு எல்லோரையும் கேட்டுக்குறேன். இப்படி ஒரு கான்செப்ட்னு சொன்னப்போ, நிறையப் பேரு ரொம்பவே தயங்கினாங்க. எல்லாத்தையும் மீறி இதைப் புரிஞ்சுக்கிட்டு எங்களுக்கு சப்போட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி" என்று விடைபெற்றார் அர்ச்சனா ஆர்த்தி.

அழகின் தேடலில், திருநங்கைகளின் ஆச்சர்யமூட்டும் அழகைக் கண்டு வியப்பில் மூழ்கிப்போனேன்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

இசை உலகில் சாதிக்கும் பத்து வயது டிஜே

 

இசை உலகில் திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பதை கென்யாவைச் சேர்ந்த சேர்ந்த பத்து வயது சிறுமி எரிகா நிரூபித்து வருகிறார்.

Link to comment
Share on other sites

அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸில் இருந்து வரும் உணவுகள்

 

 
ambani10

ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தா : கோப்புப்படம்

முகேஷ் அம்பானி, நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ரஷல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு நாளை(30-ம்தேதி) நடக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு உணவுகள் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி, நீடா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்தம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி மும்பையில் ஆண்டலியாவில் உள்ள 27 மாடி சொகுசு இல்லத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றன. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகவே பிரத்யேகமான முறையில் அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ட்ராகிராம் ஆகியவற்றில் இப்போதே வைரலாகிவிட்டது.

இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக நேற்று நடந்த மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாலிவுட்டின் நட்சத்திரங்களான ஷாருக்கான்-அவரது மனைவி , ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, கரண் ஜோகர், மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் ரகசியமான முறையிலும், ஊடகங்களுக்கு கசிந்துவிடாமலும் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு உணவுகள் அனைத்தும் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரான்ஸில் உள்ள நம்பர் ஒன், உயர்தர பேக்கரி நிறுவனமான ‘லாட்ரீ’ பேக்கரியில் இருத்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதை அம்பானி குடும்பத்தார் உறுதி செய்யவில்லை.

1862-ம் ஆண்டில் பாரிஸில் நிறுவப்பட்ட லாட்ரி பேக்கரி நிறுவன ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளிலும், சிங்கப்பூர், துபாய், நியூயார்க், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரங்களிலும் மிகவும் பிரபலமாகும்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான உணவுகளை மும்பையைச் சேர்ந்த புட்லிங் பேங்கட்ஸ் அன்ட் கேட்டரிங் நிறுவனம் செய்து கொடுக்கிறது.இந்த நிறுவனம்தான் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து உணவுகள், கேக், இனிப்புகளை வரவழைக்கிறது என்று கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

முதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள்: ஜுன் 30, 1997

 
முதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள்: ஜுன் 30, 1997
 
ஹாரிபாட்டர் சிறுவர் கனவுருப் புனைவு புதின வரிசையாகும். இது ஜே.கே.ரௌலிங் என்ற பிருத்தானிய பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புத்தகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை மையமாக வைத்து கணினி விளையாட்டுக்களும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 1997- ஜுன் மாதம் 30-ந் தேதி ரெளலிங் ஹரி போட்டர் தொடரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார். இது வணிக நோக்கில் பெருமளவு வெற்றி பெற்றது. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் 300 மில்லியன் படிகள் உலகளாவிய வெளியில் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இந்தப் புத்தகம் 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கதையின் பெரும் பகுதி ஹாக்வாட்ஸ் எனும் மந்திர தந்திரங்களைக் கற்பிற்கும் பாடசாலையிலேயே இடம் பெறுகின்றது. அத்துடன் கதையின் நாயகனுக்கும் கொடிய மந்திரவாதியான வால்டமோட் என்பவருக்கும் இடையிலான சண்டையையே பெருமளவு கதை சுற்றி இருக்கின்றது.

இந்தப் புத்தகங்களின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் இலக்கிய வரலாற்றில் ரௌலிங் அவர்கள் பெரும் பணக்கார எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் புத்தகங்களை ஐக்கிய இராச்சியத்தில் புளூம்பரி நிறுவனமும் அமேரிக்காவில் ஸ்கொலாஸட்டிக் பிரஸ்சும், கனடாவில் ரெயின் கோஸட் புக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் அலன் & அன்வின் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.

1990-ம் ஆண்டில் ஒருநாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக்குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார். இதுபற்றி ரெளலிங் தனது இணைய தளத்திலும் கூறியுள்ளார்.

அதேநாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1912 - கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

* 1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* 1956 - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.

* 1960 - காங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

* 1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.

* 1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.

* 1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.

* 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.

* 2002 - பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.

https://www.maalaimalar.com

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

38p5_1530077111.jpg

சாய்னா நேவாலின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அதில் சாய்னா பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். இதற்காகக் கடந்த சில மாதங்களாக கோபிசந்த் மற்றும் சாய்னாவுடன் தீவிர பாட்மின்டன் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். ஷ்ரத்தா பயிற்சியை முடித்துத் தயாரானால்தான் ஷூட்டிங்கைத் தொடங்க முடியும் எனத் தயாரிப்பாளர் தரப்பு காத்திருக்க, இன்னும் ஒரு மாசம்... இன்னும் இன்னும் என இழுத்தடிக்கிறார் ஷ்ரத்தா. அடுத்த மாதத்திற்குள் பயிற்சியை முடித்தால் ஷூட்டிங், இல்லையென்றால் வேற ஆளைப் பாத்துக்குவோம் எனக் கூறிவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பு. ஆர்வக்கோளாறு பரிதாபங்கள்!


38p6_1530077146.jpg

வெளிநாட்டில் தைராய்டு சிகிச்சை, பேச்சுப் பயிற்சி என கேப்டன் அடுத்த இன்னிங்ஸுக்குத்  தயாராகிக்கொண்டிருக்கிறார். அப்பாவை அல்ட்ரா மாடர்னாக, பழைய பொலிவோடு மாற்றிக் காட்டுவேன் எனத் தன் அம்மாவிடம் வாக்குக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியன். இருவரும் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ படத்தில் மாறுபட்ட கேப்டனை நீங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டிருக்கிறார் ஷம்மு. பழைய பன்னீர்செல்வமா வரணும் கேப்டன்!


38p7_1530077167.jpg

மீபத்தில் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு விசிட் அடித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மெலானியா. அங்கு சென்றபோது பச்சை நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார். அதில் `நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை... நீங்கள்?’ என்று எழுதப்பட்டிருக்க, அடுத்த 24மணிநேரத்திற்கு நியூஸ் சேனல்கள் அதை பிரேக்கிங் நியூஸாகப் போட்டு அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மெலானியா தரப்பில் `ஒரு விளக்கமும் இல்லை, அது ஒரு சாதாரண கோட் அவ்வளவுதான்’ என விளக்கினார்கள். குசும்பு அதிபர் ட்ரம்ப் தன் பங்குக்கு ‘அது போலி செய்தி ஊடகங்களை தான் குறிக்கிறது. மெலானியா அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத்தான் உணர்த்தியிருக்கிறார்’ என ஒரே போடாகப் போட்டுவிட்டார்!  ட்ரம்பிஸ்தானு! 


38p8_1530077182.jpg

பிரபல பின்னணிப் பாடகர் ஏக்கான் ஆப்பிரிக்க நாடுகளில் பல சமூக சேவைகளைச் செய்துவருகிறார். செனகல் நாட்டு அதிபர் மேக்கி சால் 2000 ஏக்கர் நிலத்தை ஏக்கானுக்குப் பரிசளித்தார். அதை அந்நாட்டு மக்களுக்கே அளித்து, ஸ்மார்ட் சிட்டி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஏக்கான். இந்த நகரில் டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும். இந்த நகரத்தில் உபயோகிக்கப்படும் டிஜிட்டல் கரன்சிக்கு ‘ஏக்காயின்’ (Akoin) எனப் பெயரிடப்படவிருக்கிறது. நைஸ் ப்ரோ!


38p1_1530077201.jpg

தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். எதிரிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பிஸ்டல் அல்லது 0.32 துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைக் கேட்டிருக்கிறார். 2009லேயே தோனி இதுபோல துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு, பிறகு போராடி அனுமதி பெற்றார். டெரர் ஃபேமிலி


38p2_1530077215.jpg

பாலிவுட்டில் ‘நடிப்பு ராட்சஷன்’ என வர்ணிக்கப் படும் நவாஜுதீன் சித்திக் இப்போது தமிழ் கற்று வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவரோடு மோத விஜய் சேதுபதியும், நவாஜுதீனும் கைகோக்கப் போகிறார்களாம்! வா தல வா


38p3_1530077251.jpg

திரைப்பட நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் வீரர்கள் கிசுகிசுக்கப் படுவது இயல்பாகிவிட்டது. இந்த லிஸ்டில் தற்போது சேர்ந்திருப்பவர் கே.எல்.ராகுல். இந்தி நடிகை நிதி அகர்வாலுடன் சேர்ந்து டேட்டிங் போகிறார் எனக் கிசுகிசுக்கிறார்கள்.  ‘நாங்க கல்லூரி கால நண்பர்கள்!’ என எஸ்கேப் ஆகிறார், ராகுல்.  கிரிக்கெட்டை விட்ராதீங்க!


38p4_1530077271.jpg

ள்ளிப்படிப்பை முடித்து கனடாவுக்கு ‘ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ்’ படிக்கப் போயிருக்கிறார் விஜய் மகன் ஜாசன் சஞ்சய். அப்பாவைப்போல நடிப்பில் ஆர்வம் இல்லையாம் சஞ்சய்க்கு. சினிமாவில் இயக்கம்தான் அவர் சாய்ஸ். படிப்பை முடித்து வந்ததும் தளபதியே மகன் இயக்கத்தில் நடிப்பார் எனக் காத்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.  சோட்டா சர்கார்!


கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது உயிரிழந்தவர் நர்ஸ் லினி. இப்போது அவர் வேலை செய்த பரம்புரா தாலுகா அரசு மருத்துவமனைக்கு ‘ஏஞ்சல் லினி நினைவு மருத்துவமனை’ என்று பெயரிட்டுக் கௌரவித்துள்ளது கேரள அரசு. சலாம் சேட்டன்மாரே!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?

 
அ-அ+

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay

 
 
 
 
இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?
கோப்பு படம்
 
 
 
 
தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.
 
இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 
 
ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.
 
மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
 
201806301302162895_1_Social-Media-Pic._L_styvpf.jpg
கோப்பு படம்
 
 - உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.
 
- உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.
 
- உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.
 
- வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
 
- 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.
 
- ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
 
201806301302162895_2_Video-Icon._L_styvpf.jpg
கோப்பு படம்
 
- சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.
 
- உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.
 
- ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 
- ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
 
- ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.
 
- 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

 

மாணவர்களுக்கு வித்தியாசமாக பிரியாவிடை கொடுத்த ஆசிரியர்கள்!

தென் மேற்கு இங்கிலாந்தில் பள்ளிப்படிப்பை முடித்துச் செல்லும் மாணவர்களுக்காக, வியப்பூட்டும் பிரிவு உபசார காணொளியை அவர்களின் ஆசிரியர்கள் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

facebook.com/ திருப்பூர் குணா:

அவர்கள், நம்மைக் கண்களை மூடி யோகா செய்யச் சொன்னார்கள். நாம் கண்களைத் திறந்தபோது நமது நிலங்களைக் காணவில்லை; காற்றையும் குடிநீரையும்கூடக் காணவில்லை. பதறி நாம் கேட்டபோது அவர்களின் கையில் துப்பாக்கி முளைத்திருந்தது. துப்பாக்கி களின் மத்தியில் எப்படி யோகா செய்வது?

facebook.com/Karki Bava:

`நாடு வளர, நிலத்தைக் கொடுத்தா என்ன?’ன்னு ஷோல்டரை உயர்த்துற ஆளுங்களை நோட் பண்ணிப்பாருங்க. `ராமர் பாலம் இடிக்கப்படும்’னு, `சேது சமுத்திரத் திட்டத்தை வேணாம்’னு சொன்ன ஆளுங்கதான் கணிசமா இருப்பாங்க. இல்லாத ஒண்ணை இடிக்கக் கூடாது; ஆனா, இருக்கிறதை அவுத்துக் கொடுக்கணும். Very good fellows!

112p1_1530078512.jpg

facebook.com/senthil.nathan.372:

தமிழன் என்று நிரூபிக்க, இன்னும் எத்தனை விஷயங்களை ஷேர் செய்ய வேண்டியிருக்குமோ, தெரியலையே!

facebook.com/ ஜெ.வி.பிரவீன்குமார்:

ஆக்சுவலி அனந்த் வைத்தியநாதன் `பிக் பாஸு’ல கலந்துக்கலை. அவர் இருந்த இடத்துல போயிதான் இவங்க செட் போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

twitter.com/madurai_jinna: 

வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் சிந்தாமல் டீ குடிப்பதும் `யோகா’வில் சேரும்!

112p2_1530078530.jpg

twitter.com/MJ_twets:

அம்மாவுக்குப் பழிவாங்கத் தெரிவதில்லை, மனைவி அப்படியல்ல... ஏதாவது சமைத்து வைத்துவிடுகிறார்!

twitter.com/abuthahir707

அவ்வளவு நேரம் நின்று வரும்போது நாம் இறங்க வேண்டிய இடத்தில்தான் பஸ்ஸில் சீட்டும் காலியாகும்.

twitter.com/kumarfaculty

ரயில்வே ஸ்டேஷனில்...

மனைவி: ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டிருக்கீங்க?  பக்கத்தில இருக்கிறவரைப் பாருங்க..  பொண்டாட்டி யோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?

புருஷன்: வெவரம் கெட்டவளே...  அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி... நான் உன்னைய அழைச்சுட்டுப் போக வந்திருக்கேன்.

112p3_1530078548.jpg

twitter.com/indupriya911

மழை கனமா பெய்ய ஆரம்பிச்சுது. சட்டுனு நின்னுடுச்சு.... யாரோ கவிதை எழுத ஆரம்பிச்சுருப்பாங்க போல!

facebook.com/Mathimaran V Mathi:

இதுவேதான் அது!

வேகமாகப் போகவேண்டும் என்பதால், எதிரில் வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரையும் ஏற்றிக் கொன்றுவிட்டுக் கொடூரமாகப் போகிற காருக்கும், சேலத்திலிருந்து சென்னைக்கு விரைவாக வரவேண்டும் என்பதற்காக விவசாய நிலங்கள், மரம், செடி கொடிகள், இயற்கைவளங்களை அழித்து சாலை அமைப்பதும் ஒன்றுதான்.

112p4_1530078562.jpg

twitter.com/Kozhiyaar

பெரிய அறிவெல்லாம் எனக்குத் தேவையில்லை. வருகிற ஃபார்வர்டு செய்தி உண்மையா பொய்யா என்று உணரும் அறிவு இருந்துவிட்டால் போதும்.

facebook.com/ Bogan Sankar:

`பிக் பாஸ்’ பதிவுகளை மட்டும் தடை செய்யக் கூடிய ஒரு செயலி இருந்தால் நன்றாக இருக்கும்’ என எழுதப்படும் பதிவுகளை மட்டும் தடைசெய்யக்கூடிய ஒரு செயலி இருந்தால் நன்றாக இருக்கும்.

112p5_1530078575.jpg

twitter.com/Araikurai

தலயும் இப்டிதான் சுருட்டெலாம் குடுச்சுக் கிட்டு கெத்தா போஸ் குடுத்திருந்தாரு. கடைசியில டொட்டடொய்னு ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஆட விட்டானுக. பார்ப்போம்.

twitter.com/Raittuvidu

`பிக் பாஸ்’ல சிம்புவை இறக்கியிருக்கணும். ஹரீஷ் கல்யாணை மறுபடியும் சேர்த்திருக் கணும்.  சிம்பு காலையில பூரா தூங்குவாப்ல! நாய் குரைக்கும்! லக்ஸூரி பட்ஜெட் கட்டாகும்! மஹத்/சிம்பு/ஹாரீஸ் மட்டும் ஒரு குரூப்! மத்தவங்க எல்லாரும் எதிர்ப்பக்கம் ஒரு குரூப்! நல்ல என்டர் டெயின்மென்ட்டா இருந்திருக்கும்!

twitter.com/CreativeTwitz

மோடிதான் எனக்கு ராமர் - யசோதா பென். உங்க ராமரைக் கூட்டிட்டு வனவாசம் போயிடுங்க, புண்ணியமாப் போவும்!

112p6_1530078588.jpg

twitter.com/CreativeTwitz

ஆனந்த் வைத்தியநாதன்: சல சல சல ரெட்டைக்கிளவி, தக தக தக ரெட்டைக் கிளவி..!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒன்லி தாய்க்கிழவிதாங்க - பொன்னம்பலம்

twitter.com/ArunkumarTNR

தமிழக வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள்தான் சமூக விரோதிகள்.

-  தமிழிசை.

தமிழிசை மேடம், அது கண்ணாடி!

twitter.com/manipmp:

பாத்ரூம் என்பது பல்லியறை!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

டயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961

 
 
 
டயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961
 
இவரது இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹாரி) ஆகியோர் இங்கிலாந்தின் முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்பட்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008-ல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பத்திகையாளர்களின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.

 

 

கல்பனா சாவ்லா பிறந்த தினம்: ஜூலை 1- 1961

 
அ-அ+

இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார்.

 
 
 
 
கல்பனா சாவ்லா பிறந்த தினம்: ஜூலை 1- 1961
 
இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982-ம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார்.

அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டத்தை 1984-ம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986-ல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988-ம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா V/STOL இல் CFD ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார். FCC KD5ESI என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் பிரிவு அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

கல்பனா 1983-ம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990-ம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார்.

கல்பனா மார்ச் 1995-ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19-ம் நாள், 1997-ம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து ஸ்பார்டன் என்று செயல் குறைப்பாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத சோதனைக்கு பிறகு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87-க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் செயலாற்றினார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதும் வழங்கினர்.

2000-ம் ஆண்டில், கல்பனா STS-107-ல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002-ம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003-ல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் STS-107 இல் விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் SPACEHAB/BALLE-BALLE/FREESTAR மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிலைப் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.

1991-1992-ல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாய் அமைந்தது.

STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

கால்பந்து கூகுள் கொண்டாட்டம்

 

 
29chlrdbrazil

கால்பந்தை உதைத்து விளையாடுவதுபோல் கால்பந்துப் போட்டிகளைப் பார்ப்பதும் ரசிகர்களை எப்போதுமே உற்சாகப்படுத்தும் விஷயம். கடைசிவரையில் முடிவு தெரியாமலே நகரும் போட்டி கடைசி விநாடியில் மாறிவிடும் அதிசயம் கால்பந்தில் மட்டுமே சாத்தியம். மற்ற விளையாட்டுகளில் முடிவை ஓரளவு ஊகிக்க முடியும் ஆனால், கால்பந்தோ ஊகங்களைக் காற்றில்பறக்கவிட்டுவிடும் விளையாட்டு. என்ன ஆகுமோ யார் வெல்வாரா என்ற பதற்றத்துடன் கடைசி விநாடிவரை ரசிகர்களைக் காத்திருக்கச் செய்வதால் தன்னைத் தனித்த விளையாட்டாக அடையாளப்படுத்திக்கொள்கிறது கால்பந்து.

         
 
29CHLRDGOODLE%20DOOLE%201
 

கால்பந்து விளையாட்டை நமது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் சாத்தியம் உள்ளது. கால்பந்தை யார் யாரோ உதைப்பார்கள், எங்கெங்கோ நகரும் என்றபோதும் அது கோல் போஸ்ட்டை மோதும் கணத்தில் நிகழும் ரசவாதத்தைப் பொறுத்ததே அதற்கான மரியாதை. வாழ்க்கையும் அப்படித்தானே? அதனால்தான் பிற விளையாட்டுகளைவிட நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துவதில் ஒரு படி முன்னே நிற்கிறது கால்பந்து. ஒரு விளையாட்டு பலதரப்பட்ட ரசிகர்களைத் தன்னுள் கட்டிப்போடும் திறமையைக் கொண்டது என்றால் அது கால்பந்தாட்டம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

29chlrd2014%20football
 

அத்தகைய ரசவாதமிக்க விளையாட்டு என்பதாலேயே உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ரஷ்யாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் 21-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டு மகிழ்ந்துவருகிறார்கள். 32 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டி அடுத்த மாதம் 15-வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி வரைக்கும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடக்கும் இந்தப் போட்டிகளைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர்.

29chlrd2014%20germany
 

கடந்துமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனி அணியை வீழ்த்துவதே இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ள அணிகளின் இலக்கு. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புக்கு இடையில் கால்பந்தாட்டத்துக்கு கூகுள் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு தினசரி சிறப்பு டூடுல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

29chlrdegypt
 

போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் விளையாடும் நாடுகளின் கொடி, கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு டூடுல்களை வரைவதற்காக, 32 ஓவியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்பு உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது வெளியிடப்பட்ட டூடுல் ஓவியங்கள், தற்போது வெளியாகியுள்ள ஓவியங்கள் அடங்கிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

29chlrdfootball%20%202

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

சின்ன சின்ன வரலாறு –  அழிப்பானை மறவோம்!

 

 
kpng

'நம்ம தலைல பிரம்மா எழுதிட்டானே. இப்படி இப்படித்தான்னு! இதை மாத்த யாரால முடியும்?’ முடியாதுதான். ஆனால், நாமோ நம்மைச் சுற்றியுள்ளவர்களின் எழுத்துக்களை, கிறுக்கல்களை நிச்சயம் சரிசெய்துவிடமுடியும்.

ஞாபகம் இருக்குதானே அரை டிராயர் உருவங்களும் ரெட்டைஜடை முகங்களும்! அப்போது எழுதிக்கொண்டே வருகிற போது ஒரு சின்னத்தவறு நேர்ந்துவிட, அந்தத் தவறை சரிசெய்ய அந்தப் பொருளைத் தேடுவோம். ஆமாம்... ரப்பரின் கதைதான் இது! ரப்பருக்கு இன்னொரு பெயரும் உண்டு.

 

எரேஸர். கனடா, அமெரிக்கா முதலான நாடுகளில் எரேஸர் என்றும் யுனைடெட் கிங்டம், இந்தியா, அயர்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ரப்பர் என்றும் சொல்லப்படுகிறது. ரப்பரின் வரலாறைச் சொல்லும் அதேவேளையில் ஒரு மெல்லிய சோகம் எட்டிப்பார்க்கிறது. இது... இப்போது, பேப்பர்லெஸ் எகானமியை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிற காலகட்டம். எழுதுவதும் குறைந்துவிட்டன. அப்படியே எழுதினாலும் கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்து, வருடங்கள் ஓடிவிட்டன.

 இங்கே அழிப்பான் என்பதோ ரப்பர் என்பதோ ஒரேயொரு பட்டன். டெலிட் பட்டன்! அவ்வளவுதான். சரி... ரப்பரின் சரித்திரம் பார்ப்போம். அழிப்பான் என்கிற ரப்பர் 1770ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ரப்பரின் அழிக்கும் குணத்தை, ஜோசப் ப்ரிஸ்ட்லி என்பவர் கண்டுபிடித்தார். இவரைப்பற்றிய மற்றுமொரு தகவல், ஆக்சிஜன் மற்றும் சோடா நீரைக் கண்டுபிடித்தவரும் இவர்தான்! ஆனால் இவர் இதைக் கண்டுபிடித்ததுடன் நின்று விட்டார்.

ஐரோப்பாவின் எட்வார்ட் நைர்னி என்பவர்தான் ரப்பர் என்பதை ஒரு பொருளாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவருக்கும் ரப்பருக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. ஒருநாள், காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற போது, அழிப்பதற்கு பிரெட்டை எடுப்பதற்குப் பதிலாக வேறொரு பொருளை எடுத்துவிட்டார்.

ஆமாம், நன்றாக மொறுமொறுப்பு இல்லாத பிரெட்டுகள், அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. அப்படித் தவறுதலாக அவர் எடுத்த பொருள்தான் மிகச் சரியானது. ஆமாம்... அதுதான் ரப்பர்! 1770ல், ரப்பர் என்று பெயரிடப்பட்டு செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை ரப்பர்கள் உபயோகத்திற்கு வந்தன.

ஆனால் அதற்கு முன்பாகவே உருட்டப்பட்ட அல்லது தட்டப்பட்ட ரப்பர் அல்லது மெழுகு உருண்டைகள் "கம் இலாஸ்டிக்" அல்லது கெளட்சொவ் என்று வழக்கத்தில் இருந்தது. அழிப்பதற்கு என்பதாக ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை வெகு சீக்கிரமே நலிந்தும் மெலிந்தும் போயின.

அதனால், ரப்பரின் உபயோகம் மட்டுப்பட்டது. தவிர, இப்படி இயற்கையான பொருளை பதப்படுத்தாமல் உபயோகிப்பதால் ரப்பரால் அழிக்கப்பட்ட பக்கங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இவற்றை மனதில் கொண்டு சார்ல்ஸ் குட்யியர் என்பவரால் 1839 ம் ஆண்டு ரப்பர் வல்கனைஸ் செய்யப்பட்டு நாம் உபயோகிக்கக்கூடிய வடிவம் பிறப்பெடுத்தது. இதன் பின் ரப்பரின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்தது.

புட்டி ரப்பர் அல்லது நீடட் ரப்பர் கரி மற்றும் க்ரபைட்டை ஒத்தி எடுப்பதற்கு, வினையில் ரப்பர்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை இலகுவாக அழிக்க, பென்சிலுடன் கூடிய காப் எரேசர், ஆர்ட்கம் எரேசர் என்று வித விதமாக வந்தன.

1932ல் ஆர்தர் டிரெமில் என்பவரால் எலெக்ட்ரிக் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டாரில் பதிக்கப்பட்டு பேப்பரின் மீது சுற்றிச்சுற்றி வந்து அழிக்கும் இது, மிகவும் அழுத்தம் கொடுக்காமல் அழிப்பதால் பேப்பர்கள் கிழியாமல் அழிக்க உதவியது. நாம் படித்த காலகட்டத்தில், செண்ட் ரப்பர் மற்றும் இங்க் ரப்பர்கள் இருந்ததெல்லாம் நினைவிற்கு வரலாம்.

இந்த நினைவே செண்ட் ரப்பரின் மணத்தை நாசிக்கு இன்றும் கொண்டு சேர்க்கின்றன. அதேபோல் இங்க் ரப்பரின் எந்தப் பாகம் பென்சில் மார்க்கை அழிப்பதற்கு, எது இங்க் எழுத்தை அழிப்பதற்கு என்று திகைத்து மாற்றி மாற்றி அழித்துப்பார்த்த நினைவுகளும் வருகின்றன.

தற்போது உபயோகத்திலிருக்கும் எரேசர்கள் இயற்கை அல்லது சிந்தெடிக் வகைப்படும். இயற்கை ரப்பர், ரப்பர் மரத்தின் லேடெக்ஸ்சிலிருந்தும், சிந்தெடிக் வகை ஸ்டெரீன் மற்றும் புடாடீன் எனும் கெமிக்கலில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது தட்டையாக அல்லது உருளை வடிவத்தில் நாம் பார்த்த எரேசர்கள் எடுத்துள்ள புதிய வடிவம் " எர்கோரேசர்".

ஒரு ஸ்பூன் வடிவில் அமைக்கப்பட இந்த எரேசரின் குழிவில், நம் கட்டைவிரல் கொண்டு அழுத்தம் கொடுக்க முடியும். பென்சிலுக்கும் ரப்பருக்கும் உள்ள தொடர்பு...நாம் அழிக்கும் வேகத்திலேயே புரிந்து விடுகிறது. சரி, இரண்டுக்குமான வேறுபாடு? பென்சில்கள் மேனுவலாக அதாவது கைமுறையாக செயல்படுகின்றன.

 எரேசர்கள் கெமிக்கல் முறையாகச் செயல்படுகின்றன. அதாவது, பென்சிலை நாம் பேப்பரில் அழுத்தும்போது பேப்பரில் உள்ள பைபர் தூள்களுடன் பென்சில் லெட்டின் கிரபைட் கலந்து விட்டு நமக்கு பளிச்சென்று தெரிகிறது.

இது மேனுவல். ஆனால் எரேசர்களின் பாலிமர் தூள்கள் பேப்பர் தூள்களை விட பிசுபிசுப்பு அதிகமாக உள்ளதால் அவை ஒரு காந்தம் போல் செயல்படுகிறது. இப்போது எரேசரைப் போலவே அதன் பயனைத் தருகிற பெலிக்கான்களும் வந்துவிட்டன.

ஜெர்மனியைச் சேர்ந்த பெலிக்கன் என்பவர், 1930களில், கண்டுபிடித்தார். அவர் தயாரித்த பொருளுக்கு பெலிக்கன் என்றே பெயர் அமைந்தது. ஏப்ரல் 15ம் தேதி, நேஷனல் ரப்பர் எரேசர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சில விஷயங்களைச் சொல்லும் போது, ‘என்னய்யா... ரப்பராட்டம் இழுஇழுன்னு இழுக்கறாங்களே...’ என்று சொல்லுவோம்தானே. நீங்கள் அப்படியெல்லாம் சொல்லிவிடக்கூடாது என்று ரப்பர் மேட்டரை, இழுக்காமல் முடித்துக்கொள்கிறேன்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : சிங்கத்தின் பூனைத் தூக்கம்!

 

 
30chnvkr1jpg
 
 
 

நான் காட்டுயிர் ஒளிப்படத் துறைக்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிங்கங்களைப் படமெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தான்சானியா நாட்டின் செரங்கிட்டி பூங்காவில்தான் சிங்கக் கூட்டம் ஒன்றை முதன்முதலில் பார்த்தேன். தலையைச் சிலுப்பிக்கொண்டு அவை கம்பீரமாக நிற்பதைப் பார்த்ததும் மெய்மறந்து நின்றேன்.

இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டும்தான் சிங்கங்கள் தென்படுகின்றன. இங்கு தென்படும் சிங்கங்களை ‘ஆசியச் சிங்கங்கள்’ என்றும், ஆப்பிரிக்காவில் தென்படும் சிங்கங்களை ‘ஆப்பிரிக்கச் சிங்கங்கள்’ என்றும் அழைக்கிறார்கள். ஆப்பிரிக்கச் சிங்கங்களை செரங்கிட்டி தேசியப் பூங்காவில் அதிக அளவில் பார்க்க முடியும்.
 

அங்கே சென்ற இரண்டாவது நாள், காட்டுக்குள் ‘சஃபாரி’ சென்றோம். அங்கு மரம் ஒன்றில் பறவைகள் கூட்டம்போல ஏதோ தென்பட்டது. உடனே அதை நோக்கிச் சென்றேன். பக்கத்தில் செல்லச் செல்லத்தான் அவை பறவைகள் அல்ல, சிங்கங்கள் என்பது தெரியவந்தது. பத்துப் பதினைந்து சிங்கங்கள் அந்த மரத்தில் தூங்கிக்கொண்டிருந்தன. ஓநாய்கள் போன்ற விலங்குகள் சிங்கக் குட்டிகளை வேட்டையாடி சாப்பிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

அந்தச் சிங்கங்களுக்குக் காவலாக அந்தக் குடும்பத்தின் தலைவி, அதாவது சிங்கக் குட்டிகளின் தாய் மட்டும் தூங்காமல் கண்காணித்துக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் கண் விழித்துக் கிடந்ததாலோ என்னவோ, அதற்கும் தூக்கம் வந்துவிட்டதுபோல. இரண்டு நிமிடங்கள் அப்படியே தூங்கிவிட்டது. ‘கேட் நேப்’ (cat nap) என்பதை அப்போதுதான் நேரடியாகப் பார்த்தேன். அவை தூங்குவதுகூட அவ்வளவு அழகாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த, பல முறை பிரசுரமான என் ஒளிப்படங்களில் இதுவும் ஒன்று.

 

20 மணி நேர அசைபோடுதல்

30chnvkr2jpg
இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டும்தான் சிங்கங்கள் தென்படுகின்றன. இங்கு தென்படும் சிங்கங்களை ‘ஆசியச் சிங்கங்கள்’ என்றும், ஆப்பிரிக்காவில் தென்படும் சிங்கங்களை ‘ஆப்பிரிக்கச் சிங்கங்கள்’ என்றும் அழைக்கிறார்கள். ஆப்பிரிக்கச் சிங்கங்களை செரங்கிட்டி தேசியப் பூங்காவில் அதிக அளவில் பார்க்க முடியும்.

சிங்கங்கள், பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. புலி, சிறுத்தை போன்று பூனைக் குடும்பத்தைச் சார்ந்த இதர விலங்குகளைப் போல் தனித் தனியாக அலைந்துகொண்டிருக்காமல், சிங்கங்கள் எப்போதும் குடும்பமாகவே திரியும். சிங்கங்கள் ஒருமுறை சாப்பிட்டால், 20 மணி நேரத்துக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருக்கும். இவற்றுக்குத் தண்ணீர் மிகவும் அவசியம் என்பதால், பெரும்பாலும் நீர்நிலைகளுக்குப் பக்கத்தில்தான் இவை இருக்கும். என்றாலும், சில நேரம் ஐந்து நாட்கள் வரைகூட, இவற்றால் நீர் அருந்தாமல் இருக்க முடியும்.

ஒரு ஆண் சிங்கத்தின் கர்ஜனை 5 கி.மீ. வரை கேட்கும். அதுவே, அதன் எல்லையை இதர விலங்குகளுக்குத் தெரியப்படுத்திவிடும். சிங்கத்தால் வேகமாக ஓட முடியாது. அதனால் தன் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு, குறிப்பிட்ட விலங்கைக் குறிவைத்து வேட்டையாடும். ஆப்பிரிக்காவில் இன்னும் ‘ஆர்கனைஸ்டு கில்லிங்’ எனும் முறைப்படுத்தப்பட்ட வேட்டையாடுதல் பின்பற்றப்படுவதால், சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஜூன் 02
 

image_77ddadec91.jpg1919 : அமெரிக்காவின் 8 மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.

1924 : ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும், அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.

1946 : இத்தாலியில் முடியாட்சியைக் குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் 3 ஆம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

1953 : இரண்டாம் எலிசபெத், பெரிய பிரித்தானியாவின் அரசியாக முடிசூடும் விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

1955 : சோவியத் ஒன்றியமும் யுகோஸ்லாவியாவும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.

1964 : பலஸ்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.

1965 : வியட்நாம் போர் - முதலாவது தொகுதி ஆஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.

1966 : நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.

1967 : மேற்கு ஜேர்மனியில் ஈரானின் அரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1983 : டெக்சசில் இருந்து மொண்ட்ரியால் நோக்கிச் சென்ற எயார் கனடா வானூர்தி விபத்துக்குள்ள்ளானதில், 23 பயணிகள் உயிரிழந்தனர்.

1999 : பூட்டானில் முதல் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

2003 : வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈஸா கசகஸ்தானில் பைக்கனூரில் இருந்து ஏவியது.

2012 : முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக், 2011 எகிப்தியப் புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2014 : தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

திறமையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

 

கடின உழைப்புக்குக் கிடைக்கும் பரிசு அளப்பரியது!

திறமையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory
 

தன்னம்பிக்கைக் கதை

`அறிவு என்பதை நடைமுறைப்படுத்தாதவரை அதற்கு மதிப்பில்லை!’ என்று சொல்லியிருக்கிறார் `சிறுகதை மன்னன்’ என்று குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் (Anton Chekhov). பாடல், நடனம், இலக்கியம், ஓவியம்... என எந்தக் கலையாகவும் துறையாகவும் இருக்கட்டும்... ஒருவர் அதில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தால், அதை வெளிப்படுத்தினால் மட்டும்தான் அதற்கு மதிப்பிருக்கும்; கவனம் பெறும். அந்த  அறிவையும் மழுங்கவிடாமலிருக்க, தொடர் பயிற்சி செய்யவேண்டியது அவசியம். அதாவது கடின முயற்சி. அதுதான், அந்தக் கடின முயற்சிதான் ஒருவரின் அறிவை, திறமையை வெளியே கொண்டு வரும்; அவரை இன்னாரென்று உலகுக்கு அடையாளம் காட்டும்; மேலும் மேலும் உயர வைக்கும். அப்படிப்பட்ட விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதை உரக்கச் சொல்கிற கதை ஒன்று உண்டு... 

ஓபரா இசைக்குழு

 

 

ஜெர்மனி... சீக்கிவில்லி (Cheekyville) என்கிற சிறு நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த ரயில். அதில் பயணம் செய்தவர்களில் பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் மனிதனாக இருந்தான் அவன்... பெயர் வில்லியம் வார்ப்லெர் (William Warbler).  அவன் அடிக்கடி அந்த ரயிலில் பயணம் செய்வது வழக்கம் என்பதால், பலருக்கும் அவனைத் தெரிந்திருந்தது. அவனிடம் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்தது. 

 

 

``இந்த சூட்கேஸோடதான் அவனைப் பார்க்க முடியும்’’ என்றார் தன் அருகிலிருந்தவரிடம் பயணி ஒருவர். வில்லியம் வார்ப்லெரிடம் இருந்த விநோதமாக இருந்த ஒரே பழக்கம் என்னவென்றால், யாருடனாவது அவன் பேசினால், சாதாரணமாகப் பேச மாட்டான். `ஓபரா’ (Opera) பாணியில் பதில் வரும். ஓபரா என்பது ஒரு நிகழ்த்து கலை. மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இன்றைக்கும் இருக்கும் ஓர் அற்புதக் கலை. இந்தக் கலையில் பாடலைப் பாடியபடியே நடிகர்கள் நடிப்பார்கள், நடனமாடுவார்கள், சண்டை போடுவார்கள்... எல்லாமும் செய்வார்கள். உச்சஸ்தாயி குரலில் பாடல் ஒலிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். வில்லியம் வார்ப்லர், யாருடனாவது உரையாடும்போது ஓபரா பாணியைப் பின்பற்றினான். `குட் மார்னிங்’ என்பதை, `கூ... ட்... மா... ர்...னி...ங்...’ என்றால் எப்படியிருக்கும்? அப்படி. 

ஓபரா பாடகர்

முதன்முதலாகப் பார்ப்பவர்கள், `அவனுக்குத் தொண்டையில் ஏதோ பிரச்னை... அதனால்தான் அப்படிப் பேசுகிறான்’ என்று நினைத்தார்கள். ஒருவரிடம்கூட அவன் சாதாரணமாகப் பேசுவதேயில்லை. `என்னப்பா வார்ப்லெர்... சாப்டியா?’ என்று ஒருவர் கேட்டால், `ஓ... சா... ப்... டே...னே...’ என்று ஓபரா பாணியில்தான் அவனிடமிருந்து பதில் வரும். அதோடு, அவன் மற்றவர்களால் கேலி செய்யப்படும் அளவுக்கு மிகச் சாதாரணமான, பழைய உடைகளையே அணிந்திருந்தான். 
பேசுவதற்கு பதிலாக அவன் பாடுவது பலருக்கு வேடிக்கையாக இருக்கும். இப்படி அவனைப் பார்த்துப் பார்த்துப் பழகியவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது ஒரு நாள். நகரெங்கும் போஸ்டர்கள்... ஜெர்மனியிலேயே பிரபலமான ஒரு ஓபரா இசைக்குழுவில் வில்லியம் வார்ப்லெர் பாடப் போகிறான் என்று சொன்னது அந்த போஸ்டர். அந்த இசை நிகழ்ச்சி, ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெறப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

 

 

குறிப்பிட்ட நாளில் நடந்த அந்த `ஓபரா’ நிகழ்வு ஓர் அதிசயம். வார்ப்லெரை முன்பு அறிந்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். பிரமாதமாகப் பாடி, நடித்து, அத்தனை பேரையும் நெகிழ்ந்து போகச் செய்திருந்தான் வார்ப்லெர். நிகழ்ச்சி முடிந்ததும், வார்ப்லெரை பத்திரிகை நிருபர்கள் சிலர் பேட்டியெடுத்தார்கள்.  அவர்களுக்கு பதிலளித்தபோது, பழைய மாதிரி அவன் பாடவில்லை; தேர்ந்த, தெளிவான உச்சரிப்பில் நிறுத்தி, நிதானமாக பதில் சொன்னான். அவனையறிந்தவர்கள் அசந்து போனார்கள். `இந்த மாற்றம் எப்படிச் சாத்தியம்? எதைக் கேட்டாலும், பாடியே பதில் சொல்கிறவன் பேசுகிறானே!’ 

ஓபரா பாடகர்

அன்றைய தினத்திலிருந்து வார்ப்லெர் மாறிவிட்டான். மேடையில் மட்டும்தான் பாடுவான். அவனுடைய இந்த மாற்றம் குறித்து சிலர் சந்தேகப்பட்டார்கள்; சிலர் அவன் பைத்தியமாகிவிட்டானோ என்று நினைத்தார்கள். உண்மையில், அவர்களுக்கெல்லாம் அவன் கூடவேயிருக்கும் அந்த பெரிய சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அதனால்தான், அவனைப் பற்றிக் கண்டதையும் நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 

அந்த சூட்கேஸுக்குள் ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் வார்ப்லெர் தனக்குப் பாடக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சொன்ன பொன்மொழியை பொறித்துவைத்திருந்தான். அந்தப் பொன்மொழி வாசகம்... `பயிற்சி செய்! உனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. எனவே, ஒவ்வொரு நொடியும் பயிற்சி செய்! வாய்ப்பு உடனே வரலாம், கொஞ்சம் தாமதமாகவும் வரலாம். எப்போதாவது பயிற்சி செய்வது என்கிற சிந்தனைக்கே இடம் கொடுக்காதே... கடினமாக உழை! தொடர்ந்து பயிற்சி செய்! நீ உனக்கான வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறாய். அது வந்துகொண்டிருக்கிறது...’ 

இந்த அறிவுரையைத் தன்னுடனே வைத்துக்கொண்டதோடு, அதைப் பின்பற்றியதால் வில்லியம் வார்ப்லெர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தான். அதுவும் எப்படி? அது ஒரு காலை நேரம்... செய்தித்தாள் வாங்கப் போன வார்ப்லெர் இப்படிக் கேட்டிருக்கிறான்... ``ஒ... ரு... பே... ப்... ப... ர்...’ அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வந்த ஓபரா இயக்குநருக்கு, வார்ப்லெரின் இனிய, சங்கீதக் குரல் காதில் விழுந்திருக்கிறது! 

 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.