நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

‘கெட்டவைகளை அழிப்பது மேலானது’
 

image_505de4a055.jpgகாசைக் கொடுத்துக் காமத்தைப் பெறும் கூட்டம் பெருகிவிட்டது.இயல்பான காதல்- காமம், சுத்தமான மன இயல்புடனேயே மிளிர வேண்டும். 

காதலையும் காமத்தையும் கட்டுப்பாடற்ற முறையில் முனைவது ஆபத்தானது. கெட்ட நோக்கத்துடன் அத்துமீறி நடப்பது, கொலைக் குற்றத்தை விடக் கொடுமையானது. 

பாலியல் வன்கொடுமை போன்ற செயல்கள், மிகையாவதற்கு முக்கிய காரணம், அடிப்படையான விடயம் போதைப்பழக்கம் மட்டுமல்ல; எந்தவித போதைப் பழக்கங்களுக்கும் அடிமையாகாதவன் கூட, காமவெறியுடன் திரிகின்றான். அப்படிப்பட்டவர்களைக் கண்டுகொள்வதே சிரமமானது. மறைந்திருந்து தாக்கும் மிருகம் போன்றவர்கள். 

மனம் சிதைந்த மூக்கர்களின் சகவாசம், காணக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்பது, பெற்றோரின் அசமந்தப் போக்கு எல்லாமே குற்றங்கள் புரிவதற்குத்  தூண்டுகின்றன. உலகம், விழிப்புடன் கெட்டவைகளை அழிப்பது மேலானது.  

Share this post


Link to post
Share on other sites

கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918

 
 
 
 
கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918
 
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவரதான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.

அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

மண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்தது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 ஜூன் 27-ம்தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர்.

5 டிசம்பர் 2013 அன்று தனது 95-வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நினைவில் நிற்கும் பண்டிகை எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
உங்கள் நினைவில் நிற்கும் பண்டிகை எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

நெகிழ்ச்சிக் கதை

`வாழ்க்கை ஒரு விளையாட்டு; உண்மையான அன்பு என்பது வெற்றிக்கோப்பை’ - அமெரிக்காவைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளருமான ரூஃபஸ் வெயின்வ்ரைட் (Rufus Wainwright) வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார். அந்த வெற்றிக்கோப்பை கிடைப்பது அத்தனை எளிதான காரியமல்ல. நம்மில் பல பேருக்கு நீங்காமலிருக்கும் பழைய நினைவுகள் நெகிழ்ச்சியானதாக, அன்போடு தொடர்புகொண்டவையாகத்தான் இருக்கும். இந்தியர்களுக்கு, தீபாவளி மிக முக்கியமான பண்டிகை. 40 வயதுடைய ஒருவரிடம் போய், `உங்களால் மறக்கவே முடியாத தீபாவளி எது?’ என்று கேட்டுப் பாருங்கள். அத்தனை தீபாவளிகளில் ஏதாவது ஒன்றிரண்டுதான் அவரால் மறக்க முடியாத, கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். நமக்கு நாமேகூட இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம். இத்தனைக்கும் ஒவ்வொரு வருடமுமே தீபாவளி நெருங்கும்போது அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடுகிறோம்; அதற்கான மெனக்கெடல்களில் இறங்குகிறோம். ஆனால், நம் நினைவில் அப்படிக் கொண்டாடிய ஒரு தீபாவளிகூட முழுமையாக மனதில் நிற்பதில்லை. இதற்கான அடிப்படையை வெகு நுட்பமாக விளக்கும் கதை ஒன்று... 

நான்கு பேர்

 

 

நமக்கு தீபாவளி எப்படியோ, அமெரிக்கர்களுக்கு அதுபோன்றது கிறிஸ்துமஸ். அது ஒரு ரெஸ்டாரன்ட். அங்கே சில நண்பர்கள் கூடி, கிறிஸ்துமஸ் விருந்தைக் கொண்டாட்டமாக்கியிருந்தார்கள். விருந்து முடிந்தது. சிலர் கலைந்து போக, நான்கு பேர் மட்டும் களைந்து போக மனமில்லாமல் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தார்கள். தங்களுடைய பழைய நாள்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக பழைய கிறிஸ்துமஸ் நினைவுகளை நோக்கி நகர்ந்தது. தங்கள் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் எது என்பது குறித்துப் பேசினார்கள். அவர்களில் மூன்று பேர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தார். ஒருவர் அவரைப் பார்த்து கேட்டார்... ``சொல்லு ஜேம்ஸ்... உன்னோட பிரமாதமான கிறிஸ்துமஸ் எது?’’ 

 

 

ஜேம்ஸ் சொன்னார்... ``ஒரே ஒரு பரிசுகூட கிடைக்காத கிறிஸ்துமஸ்தான் என்னோட வாழ்க்கையில ரொம்பச் சிறந்தது.’’ இதைக் கேட்டு மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஜேம்ஸ் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்... ``நான் நியூயார்க்லதான் வளர்ந்தேன். மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை அமெரிக்காவை ஆக்கிரமிச்சிருந்த நாள்கள் அவை. நாங்கள் ஏழைகள். எனக்கு எட்டு வயசு நடக்கும்போது என் அம்மா இறந்து போனார். அப்பாவுக்கு ஏதோ ஒரு வேலை... வாரத்துக்கு ரெண்டு, மூணு நாள்தான் வேலை இருக்கும். அதுவே எங்களுக்குப் பெரிய விஷயமா இருந்தது. ஒரு குட்டியூண்டு வீட்லதான் இருந்தோம். நல்ல துணிமணி, சாப்பாடெல்லாம் கிடைக்கிறதே கஷ்டமா இருந்த காலம் அது. நான் ரொம்பச் சின்னப் பையனா இருந்ததால அதெல்லாம் அப்போ எனக்குத் தெரியலை. 

கடிகாரம்

எங்கப்பா ரொம்பப் பெருந்தன்மையானவர். அப்போ அவர்கிட்ட நல்ல கோட், சூட்னு ஒரே ஒரு செட்தான் இருந்தது. வேலைக்குப் போகும்போது மட்டும் அதைப் போட்டுக்கிட்டுப் போவார். வீட்டுக்கு வந்ததும் கழட்டிவெச்சுட்டு, சட்டையையோ, பனியனையோ மட்டும் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பார். அவர்கிட்ட ஒரு பாக்கெட் வாட்ச் இருந்தது. அது, அம்மா அவருக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பரிசாகக் கொடுத்தது. சேர்ல உட்கார்ந்துக்கிட்டு, பாக்கெட் வாட்ச்ல இருக்குற செயினைக் கழட்டிடுவார். வாட்சையே பார்த்துக்கிட்டு இருப்பார். அது அவருக்கு ரொம்ப பெருமை தரக்கூடிய ஒண்ணா இருந்தது. அவரைப் பொறுத்தவரைக்கும் அது விலை மதிப்பில்லாதது. அந்த சந்தர்ப்பத்துல அவரைப் பார்க்கும்போது, அவர் அம்மாவைப் பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கார்னு எனக்குத் தோணும். 

 

 

எனக்கு 12 வயசு நடந்துக்கிட்டு இருந்தது. அப்போல்லாம் என் வயசுப் பசங்களுக்கு `கெமிஸ்ட்ரி செட்’- (Chemistry set) ங்கிறது பெரிய விஷயம். அதை வாங்கிட்டாலே, ஏதோ பெரிய விஞ்ஞானி ஆகிட்ட மாதிரி நினைப்பு வந்துடும். அந்த கெமிஸ்ட்ரி செட்டைவெச்சுக்கிட்டு சின்னச் சின்னதா சோதனைகள் பண்ணலாம்; நிறைய கத்துக்கலாம். அதோட விலை அப்போ ரெண்டு டாலர். அந்த பஞ்ச காலத்துல அது மிகப் பெரிய தொகை. கிறிஸ்துமஸுக்கு ஒரு மாசம் இருக்குறதுக்கு முன்னாடி இருந்தே நான் அப்பாவை தொல்லை பண்ண ஆரம்பிச்சுட்டேன். `அப்பா... எனக்கு கெமிஸ்ட்ரி செட் வாங்கித் தாங்க’னு பேசுறப்போல்லாம் கேட்க ஆரம்பிச்சேன். கிறிஸ்துமஸுக்கு கேட்கிற பரிசுப் பொருள் வேணும்கிறதுக்காகவே, மத்த பிள்ளைகள் மாதிரி கொடுத்த வாக்குறுதியையெல்லாம் காப்பாத்தினேன். நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டேன்; ஒழுக்கமா இருந்தேன். அப்பாகிட்ட வேற எதையும் கேட்காம இருந்தேன். நான் கேட்குறப்போல்லாம் அப்பா ஒரே பதிலைத்தான் சொல்லுவார். `பார்க்கலாம்...’ 

கிறிஸ்துமஸுக்கு மூணு நாளைக்கு முன்னாடி அப்பா என்னை கடைத்தெருவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு. அது, சின்னச் சின்ன தெரு வியாபாரிகள் கடை போட்டிருந்த சந்தை. ரொம்ப மலிவா பல பொருள்கள் கிடைக்கும் மார்க்கெட். அப்பா, என்னை ஒரு கடைக்கு முன்னால நிறுத்தினார். அங்கே இருந்த ஒரு சின்ன பொம்மையை எடுத்துக் காட்டி, `இது மாதிரி ஏதாவது வாங்கிக்கிறியா?’னு கேட்டார். `வேணாம்ப்பா... எனக்கு கெமிஸ்ட்ரி செட்தான் வேணும்’னு நான் சொன்னேன். அப்பா, பல கடைகள்ல என்னை நிறுத்தி, பொம்மைத் துப்பாக்கில ஆரம்பிச்சு என்னென்னவோ எடுத்துக் காட்டினார். நான் கெமிஸ்ட்ரி செட்தான் வேணுங்கிறதுல ரொம்பப் பிடிவாதமா இருந்தேன். அப்பா சொன்னார்... `சரி வா வீட்டுக்குப் போகலாம், நாளைக்கு வந்து பார்க்கலாம்.’ அன்னிக்கி அப்பாவும் நானும் எதுவும் வாங்காம வீட்டுக்குக் கிளம்பிப் போனோம். 

போற வழியில நான் எவ்வளவு நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டேன், எனக்கு வேற எந்தப் பரிசும் தேவையில்லை, கெமிஸ்ட்ரி செட்தான் வேணுங்கிறதைத் திரும்பத் திரும்ப அப்பாகிட்ட சொல்லிக்கிட்டே போனேன். இப்போ நான் நினைச்சுப் பார்க்குறேன்... நான் கேட்டதை வாங்கித் தர முடியலையேனு அவர் எவ்வளவு குற்றவுணர்ச்சியோட இருந்திருப்பார், நிச்சயமா அவர் தான் ஒரு நல்ல அப்பா இல்லைனுகூட நினைச்சிருக்கலாம். அன்னிக்கி நாங்க வீட்டுப் படியேறும்போது, `நீ கேட்ட கெமிஸ்ட்ரி செட்டை வாங்கித் தர என்னால முடிஞ்சதைச் செய்றேன் ஜேம்ஸ்’னு சொன்னார். அன்னிக்கி ராத்திரி என்னால சரியாத் தூங்கக்கூட முடியலை. அந்த கெமிஸ்ட்ரி செட்டைவெச்சுக்கிட்டு புதுசா எதையோ நான் கண்டுபிடிக்கிற மாதிரியும், `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில என் போட்டோவைப் போட்டு, `இந்தப் பையனுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது’னு செய்தி வந்த மாதிரியும் கனவு வேற வந்துச்சு. 

அன்பை வலியுறுத்தும் கதை

அடுத்த நாள் அப்பா என்னைத் திரும்ப கடைத்தெருவுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். வழியில அவர் ஒரு ரொட்டி பாக்கெட் ஒண்ணை வாங்கி, கக்கத்துலவெச்சுக்கிட்டது இன்னும் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. முதல் கடையிலேயே அப்பா என்னை நிறுத்தினார். `உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ’னு சொன்னார். எனக்கு எல்லாத்தையும் வாங்கணும்னு ஆசைதான். ஆனாலும், எனக்குப் பிடிச்ச கெமிஸ்ட்ரி செட்டை எடுத்தேன்.

அப்பா, பணத்தை எடுக்கறதுக்காக பேன்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டார். அதுலருந்து ரெண்டு டாலர் பணத்தை வெளியே எடுத்தப்போ, அதுல ஒண்ணு கீழே விழுந்துடுச்சு. அதை எடுக்கறதுக்காக அவர் கீழே குனிஞ்சார். அப்போ அவரோட கோட்டுக்குள்ளருந்து பாக்கெட் வாட்ச்சோட செயின் கழண்டு கீழே விழுந்தது. செயின் இருந்துச்சே தவிர, அதோட நுனியில வாட்ச்சைக் காணோம். 

அப்போதான் அப்பா வாட்ச்சை வித்துட்டாருனு எனக்குப் புரிஞ்சுது. எனக்கு கெமிஸ்ட்ரி செட் வாங்கிக் குடுக்கணும்கிறதுக்காக விலை மதிப்பில்லாத அந்த வாட்ச்சை வித்திருக்கார் அப்பா

நான் அப்பாவோட கையை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு கத்தினேன்... `வேணாம்ப்பா.’ அதுக்கு முன்னாடி நான் அவரோட கையை அப்படி இழுத்துப் பிடிச்சதோ, அவர் முன்னாடி கத்தினதோ இல்லை. ``அப்பா நீங்க எனக்கு எதையும் வாங்கித் தர வேணாம். வாங்க, வீட்டுக்குப் போவோம்’னு சொன்னேன். அப்பா, என்னை வெறிச்சுப் பார்த்தார். அப்பாவைப் பார்க்கப் பார்க்க என் கண்ணுலயும் கண்ணீர் வழிஞ்சுது. `அப்பா நீங்க என்னை எவ்வளவு விரும்புறீங்கனு எனக்குத் தெரியும்ப்பா’னு சொன்னேன். அப்பா, வீடு வர்ற வரைக்கும் என் கையை கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டிருந்தார்...’’ 

இதைச் சொல்லிவிட்டு, ஜேம்ஸ் கலங்கிய விழிகளோடு தன் நண்பர்களைப் பார்த்தார். ``உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அந்த கணத்துல எங்ககிட்ட கெமிஸ்ட்ரி செட் வாங்குறதுக்குப் போதுமான பணம் இல்லை. ஆனா, உங்களுக்கு இன்னொண்ணு தெரியுமா... இந்த உலகத்துல இருக்குற எதைவிடவும் அப்பா என்னை ரொம்ப நேசிக்கிறார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்...’’ 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

பூமி நகர்ந்தது உண்மையா? (காணொளி இணைப்பு)

 

கடந்த சில நாட்க்களாக மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து ஆறு போல் ஓடுகிறது என பகிரப்பட்ட காணொளிகள் பழைய காணொளி என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

mangoliya.jpg

பூமி இடம்பெயரும் அதிசயம் எனக் குறிப்பிட்டு மங்கோலியாவில் சமூக வலைத்தளங்களில் இரு காணொளிகள் பகிரப்பட்டிருந்தன. குறித்த இந்த காணொளிக் காட்சிகளானது உண்மைதான் என்றாலும் பரப்பப்பட்ட வதந்திகளைப் போல் பூமி இடம்பெயரவில்லை. அத்துடன் இச் சம்பவமானது மங்கோலியாவில் நிகழவும் இல்லை என தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

முதலாவது காணொளிக் காட்சியில் கருமை நிற மண் ஆறுபோல் இடம்பெயர்ந்து ஓடுகிறது. இரண்டாவது காணொளியில் உயரமான குன்றின் ஒரு பகுதி மெதுவாக சரிந்து வீழ்வது நர்வது போல் சரிந்து வீழ்கின்றது.

இது குறித்து ஆராய்ந்த புவியல் ஆராய்வாளர்கள் நிலச்சரிவு வேகமாக அல்லது மெதுவாக நிகழும்போது இத்தகைய தோற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவிலும் 2010 இத்தாலியிலும் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு காணொளிகளை கொண்டுதான் மங்கோலியாவில் பூமி நகர்ந்தது என பீதி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk

Share this post


Link to post
Share on other sites

தாய் நாகம் மற்றும் 37 குட்டி நாகங்களை மீட்கும் காட்சி

 

ரத்தொழுகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் மண்மேட்டிற்குள் இருந்து 37 நாகப் பாம்பு குட்டிகள் உட்பட 5 அடி நீளமுள்ள தாய் பாம்பொன்றும் மீட்கப்பட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

radholugama.jpg

"நஜா நஜா" என விஞ்ஞானப்பெயர் கொண்டு அழைக்கப்படும் அரிதான இந் நாகப்பாம்பு சாதாரணமாக ஒரு தடவைக்கு 10 தொடக்கம் 30 வரையிலான முட்டைகளை இடும் எனவும் அவ்வாறு தாய்ப்பாம்பால் இடப்படும் அனைத்து முட்டைகளும் வெடித்து குட்டிப்பாம்புகள் பிறப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் ரத்தொழுகம பகுதியில் 37 குட்டிப்பாம்புகள் மீட்கப்பட்டுள்ளமையானது வழமைக்கு மாறானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர் அமைப்பு ஒன்றின் உறுப்பினரான ப்ரதீப் சஞ்சய என்ற இளைஞரே தனியாக குறித்த 37 குட்டிப்பாம்புகள் உட்பட தாய்பாம்பையும் மீட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk

Share this post


Link to post
Share on other sites

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti

 

2000-த்தின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின்  மையப் புள்ளியார் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 23 வயதுப் பெண்தான்!

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர்  ஸ்மிரிதி #HBDSmriti
 

அதுவரை நம்மவர்களுக்கு அவள் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய மகளிர் அணியில் தெரிந்திருந்த இரண்டே பெயர்கள் - மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி. அந்தப் பெயர்களும் சாதனை பட்டியலில் பார்த்துத் தெரிந்ததே தவிர, மேட்ச்சைப் பார்த்து தெரிந்த பெயர்களில்லை. மேட்ச் பார்த்தா அது கிரிக்கெட்டா இருக்கணும், அதுல ஆடுறது பேட்ஸ்'மேனா' இருக்கணும். அவ்வளவுதான். ஆனால், இரண்டே போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் திருப்பினாள் அந்தப் பெண். ஸ்மிரிதி மந்தனா - சாம்பியன்ஸ் டிராஃபி நடந்துகொண்டிருந்தபோதே, மகளிர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து பார்க்கச் செய்தவர். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு இன்று வயது 23!

smriti mandhna

ஆம், 23 வயதுதான். அதற்குள் நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்டார் ஸ்மிரிதி. கடந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பையில் இவர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் பட்டையைக் கிளப்ப, `யாருயா இந்தப் பொண்ணு' என்று கவனிக்கத் தொடங்கினார்கள் நம் தோனி, கோலி ரசிகர்கள். நல்ல உயரம், ஒல்லியான தேகம், குழந்தைத் தன்மை குறையாத முகம், முன் நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றை, இடது கையில் ஸ்டைலிஷாக அமர்ந்திருக்கும் அந்த பேட்... சதம் அடித்ததைக் கொண்டாடும் மந்தனாவின் அந்தப் புகைப்படம் அந்தப் பெண் மீது அதீத கவனத்தை ஏற்படுத்தியது. 

 

 

சரி, அவர் ஆடியதை பார்க்கலாம் என்று ஹாட்ஸ்டார் திரைகளைத் தொட்டால், அங்கு தவானும், சேவாக்கும் கலந்ததுபோல் ஒரு ஆட்டம். சம்பிரதாயத்துக்காக ஆட்டத்தின் முதல் பந்தை கீப்பருக்கு விடுவது, பௌலர் எப்போ மோசமான பால் வீசுவார் எனக் காத்திருப்பது போன்ற பிசினெஸெல்லாம் அவரிடம் இருக்காது. ஸ்மிரிதியைப் பொறுத்தவரை, அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்திலும் பௌண்டரி என்றே எழுதப்பட்டிருக்கும்போல! சேவாக்கிடம் பார்த்து நாம் வியந்த அதே ஆட்டம்.  அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் வருகிறதா, கவர் திசையில் ஒரு ட்ரைவ்... லெக் சைட் ஃபுல் லென்த் டெலிவரியா, ஃபைன் லெக் ஏரியாவுக்கு... ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனா, இந்தா மிட்விக்கெட்டுக்கு ஒரு புல்... என்ன இவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பது மட்டும்தான் வித்தியாசம். 

ஸ்மிரிதி மந்தனா

இந்திய பேட்ஸ்வுமன்களின் மீது அதுவரை எதிரணியினர் வைத்திருந்த அபிமானத்தை மொத்தமாக மாற்றியது மந்தனாவின் அந்த இரண்டு இன்னிங்ஸ். முன்பெல்லாம், `இந்தியா கூட ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணி 280+ எடுத்துட்டா போதும். அங்கயே மேட்ச ஜெயிச்சிடலாம்' என்ற மனநிலையில்தான் எதிரணிகள் விளையாடும். ஏனெனில், இந்திய பேட்ஸ்வுமன்கள் ரொம்பவுமே சாஃப்ட் கேம் ஆடுபவர்கள். பவுண்டரி அடிக்க ஒரு மோசமான பந்துக்காகக் காத்திருப்பார்கள். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைன் வந்தால் ஒன்-டே மேட்ச்சாக இருந்தாலும், டெஸ்ட் மேட்ச் மோட்தான். ஸ்மிரிதி அதை மாற்றினார். 

உலகக் கோப்பையின் முதல் போட்டி - பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிராக. ஓபனர் பூனம் ராவத் வழக்கமான பாணியில் உருட்டிக்கொண்டிருக்கிறார். நடாலி ஷிவர், கேதரின் ப்ரன்ட், ஹீதர் நைட் கொண்ட பௌலிங் யூனிட்டை அப்படித்தான் டீல் செய்தாகவேண்டும். ஆனால், மறுபுறம் அவர்களையெல்லாம் போட்டு பொளந்துகொண்டிருக்கிறார் இந்த இளம் மங்கை. 11 பௌண்டரி, 2 சிக்ஸர்கள்... 71 பந்துகளில் 90 ரன்களைத் தொட்டுவிட்டார். 21 வயது... 90 களில் ஏற்படும் நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த பந்தில் ஸ்மிரிதி அவுட். ஆனால், அவர் அவுட்டான விதம் நிச்சயம் ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுக்கச் செய்யும். 

ஸ்மிரிதி மந்தனா

90 ரன்களில் பேட்டிங். இன்னும் 23 ஓவர்கள் மீதமிருக்கின்றன. அணியின் ரன்ரேட்டும் ஐந்துக்கு மேல் இருக்கிறது. பொறுமையாக ஆடியிருக்கலாம். இல்லை. `நான் மந்தனா. இதுதான் என் ஸ்டைல். இதுதான் என் ஆட்டம். இதுதான் என் அடையாளம்'... அந்தத் தருணத்திலும் ஒரு ஸ்லாக் ஷாட். ஆனால், மிட்விக்கெட்டிலேயே கேட்சாக வெளியேறினார். இருந்தாலும், அந்த நேரத்தில் அவர் முகத்தில் கொஞ்சம் கூட நெருக்கடி என்பது தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் நம் அணியின் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தை மொத்தமாக உடைத்துவிட்டுச் சென்றார் மந்தனா. அதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு அவர் செய்த மிகப்பெரிய பங்களிப்பு. 

அடுத்த போட்டி... இங்கிலாந்திடம் தவறவிட்டதை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராச் செய்து முடித்தார். சதம் அடித்தார். இரண்டே இன்னிங்ஸ்களில் இந்தியாவின் சென்சேஷன். அதன்பிறகு அடுத்த 7 போட்டிகளிலும் சறுக்கல். ஓராண்டுக்கும் மேல் இடைவெளி. மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி. உலகக் கோப்பையை ஃபைனலில் தவறவிட்ட இந்திய அணிக்கும் அதே நெருக்கடி. ஆனால், தென்னாப்பிரிக்க மண்ணில், பௌலர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில், தன்னையும், இந்திய மகளிர் அணியின் எழுச்சியையும் நிரூபித்தார் ஸ்மிரிதி. அதன்பிறகு அவர் ஆடியது வேற லெவல் ஆட்டம்.

smriti mandhana

தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், இங்கிலாந்து தொடர், இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா முத்தரப்புத் தொடர் என ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு ஃபார்மட்டிலும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 79 பந்துகளில் அரைசதம் கடந்து `என்னால் இப்படியும் ஆட முடியும்' என நிரூபித்தார். ஒவ்வொரு தொடரிலும் தன் அதிரடியோடு முதிர்ச்சியையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். இப்போது இந்திய டி-20 அணியின் துணை கேப்டன், அர்ஜுனா விருது  பரிந்துரை என 23 வயதிலேயே அடுத்தகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஸ்மிரிதி. 

டி-20 போட்டிகளில் இப்போது புதிய இளம் அணி உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் போட்டி அணியின் அணுகுமுறையும் மாற்றம் கண்டுள்ளது. 2000-த்தின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின்  மையப் புள்ளியார் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 23 வயதுப் பெண்தான்!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி: காரை பரிசாக அளித்து நெகிழச் செய்த முதலாளி

 

 

 
owner

வால்டருக்கு காரை பரிசாக அளித்த நிறுவனத்தின் சி இஓ மார்க்லின்   -  படம்உதவி:ட்விட்டர்

வேலையின் முதல் நாளில் நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால், 32 கி.மீ. நடந்துசென்று பணியில் சேர்ந்த ஊழியரைப் பார்த்த முதலாளி அவருக்கு காரைப் பரிசாக அளித்து நெகிழச் செய்தார்.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

     
 

பிரிமிங்ஹாம் நகர் அருகே பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22. கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்தது. இந்த நிறுவனத்துக்குச் செல்ல  32 கி.மீ. தொலைவை வால்டர் கடக்க வேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய காத்தரீனா புயலில் வால்டர் காரின் வீடு தரைமட்டமானதால், புதிய வீட்டில் தனது தாயுடன் வறுமையான சூழலில் வாழ்ந்து படித்து வருகிறார்.

இந்நிலையில் வேலை கிடைத்து முதல்நாள் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், கையில் பணம் இல்லாத காரணத்தால், பெல்ஹாம் நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பிரிமிங்ஹாம் நகருக்கு இரவு நடந்து செல்ல வால்டர் கார் திட்டமிட்டு நடக்கத் தொடங்கினார்.

peljpg

காரை பரிசாக வழங்கியதும் கண்ணீர் விட்டு அழுத வால்டர்

 

அப்போது, அதிகாலை 4 மணி அளவில் சாலையில் ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் அதிகாரி மார்க் நைட்டன் உள்ளிட்ட சிலர் அந்த இளைஞரை மடக்கி எங்கு செல்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அப்போது வால்டர் கார் தன்னுடைய குடும்ப சூழலைக் கூறி வேலைக்கு முதன்முதலாகச் செல்கிறேன், கையில் பணம் இல்லாததால் நடந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட இரக்கப்பட்ட போலீஸார், வால்டர் காருக்கு உணவு வாங்கிக்கொடுத்து விடிந்த பின் செல்லலாம் எனக் கூறி ஒரு தேவாலயத்தில் தங்கவைத்துள்ளனர்.

pejpg

பரிசாக அளிக்கப்பட்ட காரில் வால்டர்

 

அதன்பின் காலையில் அந்த போலீஸ் அதிகாரிகள் வால்டர் காரை அழைத்துக் கொண்டு தங்களின் தோழி லேமே என்பவர் வீட்டுக்குச் சென்றனர். லேமே என்பவர் நாள்தோறும் பிரிமிங்ஹாம் நகருக்கு வேலைக்கு காரில் செல்பவர். அவரிடம் வால்டர் காரின் கதையைக் கூறி, பிர்மிங்ஹாம் நகரில் உள்ள அவரின் நிறுவனத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

வால்டர் காரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த லேமே, தனது காரில் வால்டரை அழைத்துக் கொண்டு நிறுவனத்தில் இறக்கிவிட்டார். மேலும், அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் இந்தக் கதையைக் கூறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

onjpg

தனது முதலாளியை கட்டித்தழுவிய வால்டர்

 

தனது ஊழியரின் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்து வியந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்லின் தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து அவரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும், லேமே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருவதுடன் வால்டரைப் பாராட்டி வருகின்றனர்.

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : ஜூலை 19
 

image_a941c0f833.jpg1903 : பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.

1910 : அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1943 :  டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.

1944  :  இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.

1949  :  முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

1953 : அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, யூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1961 : குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1985 : மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு, சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1987 : எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.

1988 : திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.

1990 : ரஷ்ய - சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1991 : ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

2007 :  பக்தாதில் அல் - கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். 218 பேர் காயமடைந்தனர்.

2012 : விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.

http://www.tamilmirror.lk

Share this post


Link to post
Share on other sites

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

 
 
உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory
 

உண்மை உணர்த்தும் கதை

`ஒரு வெற்றி பெற்ற மனிதனாவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக, மதிப்புமிக்க மனிதனாவதற்கு முயற்சி செய்யுங்கள்’ என்று குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein). `மதிப்புமிக்க’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிடுவதில் அர்த்தமிருக்கிறது. நம்மில் பலருக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிவதில்லை. அதாவது, தங்கள் மதிப்பை தாங்களே உணராதவர்களாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். இந்த உலகில் யாரும் யாரைவிடவும் குறைந்தவரில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. `ஒன்றுக்கும் உதவாது என நினைக்கும் சிறு துரும்புகூட பல் குத்த உதவும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர். இதை மனதில் கொள்வோம். நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்வோம். எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் நம் திறமையின் மேல் நம்பிக்கைவைப்போம். நாம் விலை மதிப்பில்லாதவர்கள்; தனித்துவமானவர்கள். சிலரால் நம்மைச் சரியாக மதிப்பிட முடியாமல் போகலாம். நம் மதிப்பு அவர்களுக்குத் தெரியாததுதான் அதற்குக் காரணமாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டால், மனதை விட்டுவிடக் கூடாது. `அவர்கள் நம்மைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நம்மை நாமே எடை போட்டுக்கொண்டு, நம் மதிப்பைத் தெரிந்து வைத்திருக்கவேண்டியதும் அவசியம். இந்தக் கதை அந்த யதார்த்தத்தை உணர்த்துகிறது.  

பையன்

 

 

சின்ன வயதில் பெரிய சந்தேகம்! சில நேரங்களில் அல்ல... பல நேரங்களில் இது நடப்பதுண்டு. ஒரு சிறுவனுக்கும் அப்படிச் சந்தேகம் ஒன்று வந்தது. சமையலறையில் வேலையாக இருந்த பாட்டியிடம் போனான். 

``பாட்டி... ஒரு சின்ன சந்தேகம்...’’ 

``என்ன கண்ணு?’’ 

``பாட்டியம்மா... என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?’’ 

பாட்டி புரியாமல் பேரனைப் பார்த்தார். 

``இல்லை பாட்டி... புரியலையா? சரி... இப்படிக் கேட்கிறேன். என்னோட மதிப்பு என்ன?’’ 

ஒரு கணம் தன் செல்லப் பேரனை உற்றுப் பார்த்த பாட்டி ஒரு புன்முறுவலை வெளிப்படுத்தினார். ``ஒரு நிமிஷம் இரு. இதோ வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் போனார். வெளியே வரும்போது அவர் கையில், மோதிரம் வைக்கிற சைஸில் சின்னஞ்சிறு நகைப் பெட்டி ஒன்று இருந்தது. அதை எடுத்து பேரனிடம் நீட்டினார். சிறுவன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதற்குள் ஒரு கல் இருந்தது. சாதாரணக் கல் அல்ல, வைரமாகவோ நவரத்தினம் போன்ற ஓர் ஆபரணக்கல்.

 

 

யதார்த்தம் சொல்லும் கதை  

``வாழ்க்கையோட மதிப்பு என்னானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, இந்தக் கல்லோட மதிப்பு என்னனு தெரிஞ்சுக்கிட்டு வா... போ!’’ என்றார் பாட்டி. 

பையன் யோசனையோடு பாட்டியைப் பார்த்தான். 

``என்ன பார்க்குறே... உண்மையைத்தான் சொல்றேன். கெளம்பு. ஆனா, ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கல்லை எந்தக் காரணம் கொண்டும் வித்துடக் கூடாது. புரியுதா?’’ 

``சரி பாட்டி.’’ 

சிறுவன் கிளம்பிப் போனான். முதலில் அவன் கண்ணில்பட்டவர் ஒரு பழ வியாபாரி. அவரிடம் சிறுவன் பேசினான்... ``இந்தக் கல்லு என்ன விலையிருக்கும்?’’ 

அதை ஆராய்ந்து பார்த்த பழ வியாபாரி, ``அப்பிடி ஒண்ணும் விசேஷமான கல்லாத் தெரியலையேப்பா. உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. இந்தக் கல்லைக் குடு. அதுக்கு பதிலா பன்னண்டு ஆரஞ்சுப் பழம் தர்றேன்.’’ 

``இல்லைங்கய்யா. இதை விக்கக் கூடாதுனு என் பாட்டி சொல்லியிருக்காங்க’’ என்ற சிறுவன் அங்கிருந்து நகர்ந்தான். 

தங்கக் காசு

அடுத்து சிறுவன் ஒரு காய்கறி வியாபாரியிடம் போனான். தன் கையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் கல்லைக் காட்டி, ``இது எவ்வளவு மதிப்புப் பெறும்?’’ என்று கேட்டான். காய்கறி வியாபாரி, கல்லை வாங்கிப் பார்த்துவிட்டு, சிறுவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, ``இதுக்கு ஈடா ஒரு மூட்டை உருளைக்கிழங்கு தர்றேன், வாங்கிக்கிறியா?’’ என்று கேட்டார். 

``மன்னிச்சுக்கோங்க பெரியவரே... இதை என்னால விக்க முடியாது’’ என்று சொல்லிவிட்டு கிளம்பிய சிறுவன், ஒரு நகைக் கடைக்காரரிடம் போனான். ``ஐயா... இந்தக் கல்லுக்கு எவ்வளவு தருவீங்க?’’ என்று கேட்டான். 

நகைக் கடைக்காரர் அந்தக் கல்லை வாங்கிப் பார்த்தபோதே அவர் கண்கள் ஆச்சர்யத்தாலும் பேராசையாலும் விரிந்தன. நன்கு சோதித்துப் பார்த்துவிட்டு, ``நல்லது தம்பி. இந்தக் கல்லைக் குடு. 10 லட்ச ரூபா தர்றேன்’’ என்றார். 

``உங்க உதவிக்கு ரொம்ப நன்றி ஐயா. இதை நான் விக்கிறதுக்கு வரலை.’’ 

``சரி... ஒரு பை நிறைய தங்கக் காசு தர்றேன். எனக்கே இதை வித்துடு...’’

``ஐயய்யோ... இது என் பாட்டியோடது. அதை விக்கிற அதிகாரம் எனக்கு இல்லை. இந்தக் கல் எவ்வளவு விலை பெறும்னு தெரிஞ்சுக்க வந்தேன். அவ்வளவுதான்... மன்னிச்சுக்கங்க’’ என்று சொல்லிவிட்டு சிறுவன் கடையைவிட்டு வெளியே வந்தான். 

நகரின் கடைத்தெருவில் நடந்து நடந்து, ஆபரணக் கற்கள் விற்கும் ஒரு பெரிய கடைக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் நுழைந்தான். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் கல்லைக் கொடுத்து, ``இது என்ன விலைக்குப் போகும்?’’ என்று கேட்டான். 

வைரம்

ஆபரணக் கற்கள் விற்கும் முதலாளிதான் கல்லாவில் அமர்ந்திருந்தவர். வைரம், வைடூரியம், பவளம், ரத்தினம்... எனப் பல கற்களை வாழ்நாளில் பார்த்திருந்தவர். ஒவ்வொரு ஆபரணக்கல்லின் மதிப்பையும் நன்கு அறிந்திருந்தவர். அவர், வெகு நேரம் சிறுவன் கொண்டு வந்திருந்த கல்லை ஆராய்ந்தார். கடைசியில் சொன்னார்... ``தம்பி... நான் பெரிய பணக்காரன்தான். ஆனா, என்னோட மொத்த சொத்தை வித்தாலும் இந்தக் கல்லை என்னால வாங்க முடியாது. ஏன்... என் சொத்தைப்போல பத்து மடங்கு சொத்தைக் கொடுத்தாலும் இந்தக் கல்லுக்கு ஈடாகாது’’ என்றவர், கல்லை சிறுவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். 

அவர் சொன்னதைக் கேட்டு சிறுவன் திகைத்துப் போனான்; குழப்பமடைந்தான். வீடு திரும்பியவன், பாட்டியிடம் நடந்ததையெல்லாம் சொன்னான். பிறகு தன் பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டான்... ``இப்பவாவது சொல்லுங்க பாட்டி, என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?’’ 

``இப்பவே உனக்குப் புரிஞ்சிருக்கணுமே கண்ணு, புரியலையா? உன் கையில இருக்குற கல்லுக்கு ஒவ்வொரு வியாபாரியும் ஒரு விலையைச் சொன்னார். அது அவங்க தப்பில்லை. அவங்க, தங்களுக்குத் தெரிஞ்ச அளவீடு மூலமா இந்தக் கல்லைப் பார்த்திருக்காங்க. 12 ஆரஞ்ச், ஒரு மூட்டை உருளைக்கிழங்கு, 10 லட்ச ரூபா பணம், ஒரு பை தங்கக்காசு... இப்படியெல்லாம் விலை போய், கடைசியில விலை மதிக்க முடியாததுல வந்து நிக்குது இதனோட மதிப்பு. அந்தக் கல் மாதிரிதான் நீயும். விலை மதிக்க முடியாதது உன்னோட வாழ்க்கை. ஆனா, மனிதர்கள் அவங்கவங்களோட புரிதல், பொருளாதார நிலை, அவங்களுக்குக் கிடைச்ச தகவல், உன் தோற்றம் இதையெல்லாம் வெச்சுத்தான் உன்னை மதிப்பிடுவாங்க. அதுக்காக மனசை விட்டுறாதே. வாழ்க்கையில உன்னோட உண்மையான மதிப்பை உணர்ந்த யாரோ ஒருத்தரை நீ நிச்சயம் சந்திக்கத்தான் போறே...’’ 

சிரித்தபடி சொன்ன பாட்டி, பேரனின் தலை முடியை செல்லமாகக் கலைத்துவிட்டார். 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: ரேடியோ

 

 
shutterstock1025584864
 
 
 

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ரேடியோதான் செய்தி அறிந்துகொள்ளவும் பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது. தொலைக்காட்சி வந்த பிறகு தன் செல்வாக்கை அது சற்று இழந்தாலும் இன்றும் ரேடியோவின் பயன்பாடு அதிகமாகத்தான் இருக்கிறது. தந்தி, டெலிபோன், ரேடியோ மூன்றும் நெருக்கமான கண்டுபிடிப்புகள். தந்தி, டெலிபோன் கண்டுபிடிப்புகளிலிருந்து பெறப்பட்ட தகவல் பரிமாற்றத்தை வைத்தே ரேடியோ கண்டுபிடிப்பில் பலரும் ஈடுபட்டனர்.

 

1864-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் வானொலி அலைகளைப் பற்றிய கருத்தை உலகத்துக்குத் தெரிவித்தார். 1886-ம் ஆண்டு ஹென்ரிச் ஹெர்ட்ஸ் வானொலி அலைகளில் மின்னோட்டத்தின் வேறுபாடுகளைக் கண்டறிந்தார்.

மார்கோனியின் காதுகள் மிகப் பெரிதாக இருந்ததால், ஒரு நாள் அவரது அம்மா செல்லமாகக் கிண்டல் செய்தார். உடனே அவரது அப்பா, “இந்தப் பெரிய காதுகளால்தான் அவனால் மிகச் சிறிய ஒலியையும் கேட்க முடிகிறது” என்றார். இந்த விஷயம் மார்கோனியின் மனதில் பதிந்துவிட்டது. மின்காந்த அலைகளை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மின்காந்த அலைகளை ஒலி அலைகளில் செலுத்தி, நீண்ட தூரத்துக்குத் தகவல் அனுப்பும் முயற்சியில் இறங்கினார்.

shutterstock193742822

மார்கோனி

1884-ம் ஆண்டு அமெரிக்க வாழ் செர்பியரான நிகோலா டெஸ்லா, வானொலி அலைகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இது டெஸ்லா காயில் என்று அழைக்கப்பட்டது. இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1895-ம் ஆண்டு, 80 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்புவதற்கான தயாரிப்பில் டெஸ்லா ஈடுபட்டிருந்தபோது, அவரது பரிசோதனைக் கூடம் சிதைந்துவிட்டது.

1894-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் கம்பியில்லாத் தகவல் அனுப்பும் கருவியை உருவாக்கினார்.

மார்கோனியின் பரிசோதனை முயற்சிகளுக்கு இத்தாலி அரசு ஆதரவு அளிக்காததால், இங்கிலாந்துக்குச் சென்றார். 1896-ம் ஆண்டு மோர்ஸ் குறியீடைப் பயன்படுத்தி, 6 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்பிக் காட்டினார். அதே ஆண்டு கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையை உருவாக்கியதற்காக காப்புரிமை பெற்றார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் டெஸ்லா, தன்னுடைய ரேடியோ கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 1900-ம் ஆண்டு டெஸ்லாவின் ரேடியோ தொடர்பான பல கருவிகளுக்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியது.

அதே ஆண்டு ரேடியோவுக்காகக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார் மார்கோனி. ஆனால் காப்புரிமை கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காப்புரிமையைப் பெற்றுக்கொண்டார். 1909-ம் ஆண்டு மார்கோனியின் ரேடியோ தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு கார்ல் பெர்டினாண்ட் பிரெளன் என்பவரோடு பகிர்ந்தளிக்கப்பட்டது.

shutterstock751102678%20Convertedcol

தன்னுடைய பல கருவிகளை வைத்துதான், மார்கோனி ரேடியோவை உருவாக்கியதாக டெஸ்லா வழக்குத் தொடுத்தார். ஆனால் வழக்கு மார்கோனிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து செய்த ஆய்வுகளின் விளைவாகக் கரையில் இருந்து கடலில் இருக்கும் கப்பல்களுக்குச் செய்தி அனுப்பும் கருவியை உருவாக்கி, அதைச் செயல்படுத்தியும் காட்டினார் மார்கோனி.

இதன் மூலம் ஆபத்தில் மாட்டிக்கொண்ட கப்பல்களுக்குத் தகவல் கிடைத்து, மனிதர்கள் உயிர் பிழைத்தனர். அமெரிக்காவுக்குச் சென்று படகுப் போட்டியில் உடனுக்குடன் போட்டி நிலவரங்களை ரேடியோ மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

ரேடியோ, ரேடியோ தொடர்பான பல கருவிகளை உருவாக்கி, புகழும் பணமும் பெற்றார் மார்கோனி. 1943-ம் ஆண்டு டெஸ்லா இறந்த பிறகு, தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே மறைந்தவிட்ட மார்கோனியின் காப்புரிமையை ரத்து செய்து, டெஸ்லாவுக்கு வழங்கியது அமெரிக்க நீதிமன்றம்.

வானொலியைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு எல்லோரும் மார்கோனியைத்தான் பதிலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வானொலி கண்டுபிடிப்பில் பலரின் பங்கு இருப்பதையும் அதில் மார்கோனிக்கும் டெஸ்லாவுக்கும் முக்கியப் பங்கு இருப்பதையும் யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

பாரதியை உலகறிய செய்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார்

 

 

DFFx__HUQAAmdGr_18072018_SPP_GRAY.jpg

71வது சிரார்த்த தினம் இன்று

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆற்றிய அளப்பரிய பணிகளை இன்றும் வையகம் நினைவில் கொண்டிருக்கிறது.

முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலானந்தர். அவரின் 71வது சிரார்த்த தினம் இன்றாகும்.

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் விபுலானந்தர்.

சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வனவாகும்.

தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப் பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்கள் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் பொருந்தாமையினால் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் வெறுத்தனர்.

அப்பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்த போது அங்கு 'பாரதி கழகம்' என்ற சங்கமும் கூட்டி அப்பாட்டுக்களை இசை அறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவித்தார்.

அதன் பின்னரே பாரதியாரின் புகழும், பாராட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின. தேடாதிருந்த பாரதியாரை தமிழுலகம் கனம் பண்ண வைத்த பெருமை விபுலானந்த அடிகளாருக்கே உரியதாகும்.

 

 
 

பாரதியாரைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில் தொட்டிகளில் கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும் பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அபிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.

படித்தவர்கள் ,விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவ விட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?

விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ்நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால் மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும். பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்றுநீரிலே எறிந்து அழித்ததைப் போல தீயிலே போட்டு எரித்ததைப் போல சாதிவெறி பிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற 'கங்கையில் விடுத்த ஓலை' என்னும் அடிகளாரின் கவிதை மலரும் மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக் கொண்டிருக்கின்றன.

அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.

http://www.thinakaran.lk/

Share this post


Link to post
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

 

46p1_1531825280.jpg

ஜி.வி.பிரகாஷ்


“எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம்முக்கு ஒதுக்கிவிடுவேன். டயட்டைப் பொறுத்தவரை, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதேயில்லை. காய்கறிகள்தான். நடிப்புதான் வாழ்க்கை என்றான பிறகு உடம்பைக் கவனிக்கலைனா எப்படி பாஸ்! ஜிம்முக்குப் போகாவிட்டால் அந்த நாளே முழுமை அடையிறதேயில்லை”


19p1_1531825324.jpg

உடலினை உறுதி செய்! - சீமான்

காலையில், நாற்பத்தைந்து நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி... கொஞ்சதூரம் ஓட்டம்... பிறகு, தலை முதல் கால் வரையிலான தசைநார்களுக்கு வலுச்சேர்க்கும், ‘ஸ்ட்ரென்த் எக்ஸர்சைஸ்.’ எந்த ஊரில், எந்தச் சூழலில் இருந்தாலும் இது மூன்றையும் தவிர்ப்பதேயில்லை சீமான். உடற்பயிற்சி முடிந்ததும்  எனர்ஜி டிரிங்க். அறுகம்புல்  சாறு, சுரைக்காய்ச் சாறு, கறிவேப்பிலைச் சாறு, இளநீர் இவற்றில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு மடக்கு மட்டும் தண்ணீர் குடிப்பார் சீமான்.


42p1_1531825352.jpg

மஞ்சிமா மோகன்

“தினமும் காலையில் டீக்குப் பதிலா அருகம்புல் சாறு குடிக்கிறேன். சைவ உணவுகளை மட்டும்தான் சாப்பிடுறேன். அதிலும் குறிப்பா அரிசி வகை உணவுகளைத் தவிர்த்துட்டு, சப்பாத்தி, காய்கறி, கீரை வகைகள் ஆகியவற்றைச் சாப்பிடுவேன்.  மாலை நேரங்களில் யோகா. இரவு இரண்டு சப்பாத்தி, ஒரு டம்ளர் பால் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன். இது எல்லாத்துக்கும் மேல ஒரு நாள்ல நமக்குனு சில மணிநேரங்களை ஒதுக்கணும். அதுல நமக்கு என்ன செய்யப் பிடிக்குமோ, அதை மட்டும் செய்யணும். இதுவும் ஒருவகை தெரபிதான். உங்களுக்கு டான்ஸ் பிடிச்சிருந்தா டான்ஸ் ஆடலாம், பாடலாம், சமைக்கலாம்...என்ன வேணும்னாலும் செய்யலாம். இந்த ஸ்ட்ரெஸ் பஸ்டரை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!”

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

 

இந்த ஊரில் ஓடவும் முடியாது.ஒளியவும் முடியாது.

நான்கு மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் குய்யாங் நகரில், ஒரு நபரை கண்டறிய ஒரு சில நிமிடங்களே தேவைப்படும்.

Share this post


Link to post
Share on other sites

ஒருவேளை மதிய உணவுக்கு ‘7 லட்சம் பில்’: அதிர்ச்சியில் உறைந்த இந்திய கிரிக்கெட் வீரர்

 

 
akash

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா   -  படம் உதவி: பிசிசிஐ

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் இந்தோனேசியா நாட்டுக்குச் சென்று ஒருவேளை மதிய உணவு சாப்பிட்டதற்காக 7 லட்சம் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 450 ரன்கள் வரை சேர்த்துள்ளார். டி20 போட்டிகளிலும், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார். 150-க்கும் மேற்பட்ட முதல்தரப்போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

 

இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் சமீபத்தில் சென்றார். அங்குள்ள குட்டா பகுதியில் இந்திய உணவுகள் தயாரிக்கும் ஹோட்டல் ஒன்றில் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதில் மதிய உணவாக பனீர் டீக்கா, பனீர் மசாலா, சாதம், சப்பாத்தி, வெஜிடபிள் கபாப் உள்ளிட்ட உணவுகளை ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டுள்ளார். ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில் கொண்டுவந்தார்.

வழக்கமான தொகையாத்தான் பில் இருக்கும் என்று நினைத்த ஆகாஷ் சோப்ராவுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத பில் தொகையாக அது அமைந்தது.

ஆகாஷ் சோப்ரா சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும், வரி உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 930 பில் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ஆகாஷ் சோப்ரா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

bill1jpg

பாலி நகர ஹோட்டலில் கொடுக்கப்பட்ட பில்: படம்உதவி ட்விட்டர்

 

அதன்பின் அங்கிருந்த சர்வரிடமும், ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரித்துள்ளார். அப்போது, இந்தியாவின் ரூபாய் மதிப்பில், ஒரு ரூபாய்க்கு இந்தோனேசியா மதிப்பில் 210 ரூபியாக்கள் சமம் என்று கூறியுள்ளனர். அதன்படி கணக்கிட்டுப்பார்த்தால் இந்திய மதிப்பின்படி அந்த பில்தொகை ரூ.3 ஆயிரத்து 334 எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கட்டணத்தை செலுத்திவிட்டு ஆகாஷ் சோப்ரா திரும்பியுள்ளார். அந்தப் பில்லை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்ர் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

அதில் ஆகாஷ் சோப்ரா, ''இதுபோன்ற ஒரு மதிய உணவை நான் இதற்கு முன் சாப்பிட்டதில்லை, இந்தோனேசியா உங்களை வரவேற்கிறது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

நீலம் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார் (ஜூலை 20, 1969)

 
 
 
நீலம் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார் (ஜூலை 20, 1969)
 
அமெரிக்காவின் அப்பேல்லோ-11 என்ற விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு இதேநாளில் முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற சம்பவங்கள்

• 1937 - வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி காலமானார்.

• 1962 - கொலம்பியா நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

• 1973 - தற்காப்புக் கலை வல்லுநரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ மரணமடைந்தார்.

• 1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

•  1996 - ஸ்பெயின் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் - ஜூலை 20, 1960

 
அ-அ+

இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார்.

 
 
 
 
உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் - ஜூலை 20, 1960
 
இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார். இவர்தான் உலகிலேயே முதல் பெண் பிரதமர் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய கணவர் சாலமன் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மரணம் அடைந்தார். 

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

மிகச் சரியாக தவறு செய்வது எப்படி? பாடம் சொல்லும் கதை #MotivationStory

 

நாம் இழந்த ஒரு பொருள் ஒருவருக்கு ஆபத்துக் காலத்தில் பயன்பட்டால் அப்போது கிடைக்கும் மனநிறைவு எல்லையில்லாதது.

மிகச் சரியாக தவறு செய்வது எப்படி? பாடம் சொல்லும் கதை #MotivationStory
 

கதை

`நீங்கள் செய்த கடைசி தவறுதான் உங்களுடைய மிகச் சிறந்த ஆசிரியர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல், நுகர்வோர் உரிமைப் போராளியான ரால்ஃப் நாடெர் (Ralph Nader). தவறுகளிலிருந்துதான் நாம் பாடங்கள் கற்றுக்கொள்கிறோம்; நம்மைத் திருத்திக்கொள்கிறோம். தவறே செய்யாத ஒருவர் வாழ்க்கையில் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. சில நேரங்களில் நாம் செய்கிற ஒரு சிறு தவறோ, இழப்போ வேறு யாரோ ஒருவருக்கு நன்மையில் போய் முடியலாம். இந்த பாடத்தை உணர்த்தும் கதை இது...

அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை நிலவிக்கொண்டிருந்த காலம். அவர் ஒரு தச்சுத் தொழிலாளி. அன்றைக்கு அவருக்கு ஒரு தேவாலயத்தில் வேலை. அங்கிருந்து சில துணிமணிகளை சீனாவிலிருக்கும் சில அனாதை விடுதிகளுக்கும் சில சர்ச்சுகளுக்கும் அனுப்ப ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. அதற்காக மரப்பெட்டிகள் செய்வதற்குத்தான் அந்தத் தச்சுத் தொழிலாளி அங்கே போயிருந்தார். வேலை முடிந்தது. வீட்டுக்குக் கிளம்பினார். வரும் வழியில், தன் மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காகச் சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தார். கண்ணாடி இல்லை. மற்றொரு பாக்கெட், பேன்ட் பாக்கெட்டுகள்... எங்கு தேடியும் இல்லை. இப்போது அவர் ஓரிடத்தில் நின்று கடைசியாக தான் என்னென்ன செய்தோம் என்று யோசித்துப் பார்த்தார். மரப்பெட்டிகளில் துணிகளைவைத்து ஆணியடித்து மூடியபோது அவருடைய கண்ணாடி, அவருக்கே தெரியாமல் ஏதோ ஒரு பெட்டியில் விழுந்திருக்க வேண்டும். அவருடைய விலையுயர்ந்த, நல்ல பிராண்ட் கண்ணாடி இப்போது சீனாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

 

 

கண்ணாடி

முதல் நாள்தான் அந்தக் கண்ணாடியை விலைக்கு வாங்கியிருந்தார். விலை 20 டாலர். அன்றைய தேதியில் மிகப் பெரிய தொகை. அந்தத் தச்சுத் தொழிலாளிக்கு ஆறு குழந்தைகள். அவர்களை வளர்க்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வாங்கிய புத்தம் புதுக் கண்ணாடியும் பறிபோய்விட்டது. இப்போது இன்னொரு கண்ணாடியை வாங்க வேண்டும் என்கிற கவலை தொற்றிக்கொண்டது. நொந்து போனார் அவர். தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்தார்... ``இதெல்லாம் நல்லதுக்கு இல்லை கடவுளே. நான் உன்னை எவ்வளவு நம்புறேன். சர்ச் வேலைங்கிறதாலதானே கூலிகூட அதிகம் கேக்காம இன்னிக்குக் காலையிலேயே வேலைக்கு வந்தேன்? என்னோட கண்ணாடியைப் பறிகொடுக்கவெச்சுட்டியே இறைவா..!’

 

 

சில மாதங்கள் கழிந்தன. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சிகாகோவிலிருந்த சர்ச்சுக்குச் சொந்தமான மிஷனரியின் இயக்குநர் அன்றைக்கு அங்கே வருவதாக பேசிக்கொண்டார்கள். அவர் சீனாவிலிருந்தபோது, அமெரிக்காவிலிருந்து அவருக்கும் அனாதை இல்லங்களுக்கும் உதவிய ஒவ்வொரு தேவாலயத்துக்கும் போய் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு அந்த தச்சுத் தொழிலாளியும் போயிருந்தார்.

புத்தகம்

பிரார்த்தனை நேரத்துக்குப் பிறகு மிஷனரியின் சார்பாக, இயக்குநர் பேச எழுந்தார். ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லிக்கொண்டே வந்தார். கடைசியாக இப்படிச் சொன்னார்... ``எல்லாத்துக்கும் மேல இங்கேயிருந்து நீங்க அனுப்பிவெச்சீங்க பாருங்க... அந்த மூக்குக் கண்ணாடி... அதுக்காக ஸ்பெஷலா நான் நன்றி சொல்லியே ஆகணும். சீனாவுல நான் இருந்தப்போ, ஒரு நாள் அனாதை விடுதிக்குள்ள நுழைஞ்ச சில சமூக விரோதிங்க எல்லாத்தையும் உடைச்சுப் போட்டுட்டு, சிலதை தூக்கிட்டுப் போயிட்டாங்க. அப்பிடி உடைஞ்சு போனதுல என் கண்ணாடியும் ஒண்ணு. சுக்கு நூறா உடைஞ்சு போயிடுச்சு. என்கிட்ட பணம் இருந்தாலும், கண்ணாடி வாங்க வழியில்லை. வெளியில வர்றதுக்கே பயமா இருந்த காலம் அது. யாராவது அடிப்பாங்களோ, திடீர்னு வந்து தாக்குவாங்களோனு ஒரு நடுக்கம் இருந்துக்கிட்டே இருந்த நேரம். கொஞ்சம் கொஞ்சமா என்னோட நம்பிக்கையெல்லாம் என்னைவிட்டுப் போய்க்கிட்டே இருந்துச்சு. அதே நேரத்துல மூக்குக் கண்ணாடி இல்லாம எனக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டுடுச்சு. ஒவ்வொரு நாள் பிரார்த்தனையிலயும் `கடவுளே... எனக்கு கண்ணாடி கிடைக்க வழி செய்ய மாட்டியா?’னு கேட்குறதே என் வழக்கமாகிடுச்சு.

 

 

அப்போதான் ஒரு நாள் இந்த சர்ச்சுலருந்து அனுப்பின மரப்பெட்டிகள் வந்து சேர்ந்துச்சு. எங்கள் பணியாட்கள் ஒவ்வொரு பெட்டியாத் திறந்தபோது, இரண்டு போர்வைகளுக்கு நடுவுல இந்த மூக்குக் கண்ணாடி இருந்தது’’ என்று சொன்ன இயக்குநர், தன் பாக்கெட்டிலிருந்து மூக்குக் கண்ணாடியை எடுத்துக் காட்டினார். பிறகு பேச்சைத் தொடர்ந்தார்... ``இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, இந்த கண்ணாடி எனக்காகவே செஞ்சது மாதிரி அத்தனை பொருத்தமா இருந்துச்சு. கண் நல்லா தெரிஞ்சுது. தலைவலி ஓடிப் போயிடுச்சு. இந்தக் கண்ணாடியை அனுப்பிவெச்சதுக்காக இந்த தேவாலயத்துக்கு இன்னொரு முறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்குறேன்...’’

மரப் பெட்டி

தேவாலயத்தின் பாதிரியார் அவசரமாக அவர்கள் சீனாவுக்கு அனுப்பிய பட்டியலை எடுத்து சரி பார்த்தார். அதில் மூக்குக் கண்ணாடி என்கிற பெயர் எந்த இடத்திலும் இல்லை. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தச்சுத் தொழிலாளி தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது. உதடுகள், ``நன்றி கடவுளே... நன்றி கடவுளே...’’ என முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

விக்ரம் அடுத்து `கருடா’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் திரு. படத்தில் விக்ரமோடு் நடிக்கவிருப்பவர் காஜல் அகர்வால். ‘சாமி-2’ முடிந்ததும் இந்தப் படம் தொடங்கும் என்கிறார்கள். சிறப்பு சீயான்!


36p1_1531737990.jpg

ஸ்டீன் பீபருக்குக் கல்யாணம். சீக்கிரமே தன் காதலியும் பிரபல நடிகையுமான ஹெய்லி பால்ட்வினை மணக்கவிருக்கிறார். சரியாக ஏழாம் தேதி ஏழாம் மாதம் காத்திருந்து திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த நாளில் அறிவிக்கவேண்டும் என்பது ஜஸ்டின் அம்மாவின் ஆசையாம். அம்மா செல்லம்!


நா.முத்துக்குமார் கடைசியாகப் பாடல் எழுதிய படம்  `சர்வம் தாளமயம்’.  அவர் மருத்துவமனை செல்வதற்கு முதல்நாள் தான் இயக்குநர் ராஜீவ் மேனன் நா.முத்துக்குமாரைச் சந்தித்து ஒரே சிட்டிங்கில் பாடலை எழுதி வாங்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளதாம். ``அவரின் கைப்பட எழுதிய கடைசி வரிகளை வாங்கிய பெருமை கிடைத்தது.  வேதனையிலும் சிறு மகிழ்ச்சி. அந்த அற்புத வரிகளை  ரஹ்மானின் இசை வேறு தளத்துக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது!’’ என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். பேரன்பின் ஆதி ஊற்றே!


னைவி துர்காவுடன் லண்டனுக்குச் சென்றிருக்கிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். விம்பிள்டன் போட்டிகள் நடைபெறுவதால் பார்வை யாளராகக் கலந்துகொண்டார். சென்ற இடத்தில் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜையும் சந்தித்துப் பேசினார். இதை ட்விட்டரில் ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்ள, ஸ்டாலினின் மஞ்சள் சட்டை, நெட்டிசன்களால் செமையாகக் கலாய்க்கப்பட்டது. மஞ்சள் மகிமை!


36p2_1531738006.jpg

வெள்ளப்பெருக்கினால் தாய்லாந்துக் குகையில் சிக்கிக்கொண்டு 18 நாள்கள் தவித்து மீட்கப்பட்ட கால்பந்தாட்டச் சிறுவர்களை வரலாறு மறக்கவே மறக்காது. இருள் நிறைந்த குகையில் 18 நாள்கள் நம்பிக்கையோடு போராடி மீட்கப்பட்ட பையன்களின் கதை சீக்கிரமே திரைப்படமாக இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டன. கூடவே இந்தக் குகையை மியூசியமாக மாற்றவும் முடிவெடுத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இந்த மீட்புப் போராட்டத்தில் எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து ஈடுபட்டனர். இவர்களில் மரணம் அடைந்தவர் சமன் குணன். அவருக்கு உலகெங்கும் இருந்து அஞ்சலிகள் குவிந்துகொண்டிருக்கின்றன. சலாம் சமன்!


36p3_1531738021.jpg

மிழ்நாட்டு அம்மா மெஸ் பாணியில் ஆந்திராவிலும் அண்ணா மெஸ் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே மூன்றுவேளையும் உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படவுள்ளது. ஆந்திராவாடுகள் மொத்தமாகக் கடைகளில் குவிந்து ஆதரவு தர, மேலும் கடைகளைத் திறக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் சந்திரபாபு நாயுடு. அம்மா மெஸ் மாதிரி கைவிட்ராதீங்க!


36p4_1531738036.jpg

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், சச்சினுடன் ட்விட்டரில் செய்த சாட்டிங் இந்த வார வைரல் ஹிட். சிறிய ஓய்வுக்குப் பிறகு விம்பிள்டனில் ஃபெடரர் கம்பேக் கொடுக்க, ‘விம்பிள்டன் முடிந்ததும் இருவரும் டென்னிஸ் - கிரிக்கெட் பற்றிய குறிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்’ என்று லிட்டில் மாஸ்டர் ட்விட்டரில் எழுதினார். ‘எதுக்கு வெயிட் பண்ணணும்? இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்’ என்று ஜாலியாக ரிப்ளை செய்தார் ஃபெடரர்.  அவரின் தீவிர ரசிகரான சச்சின், ஒவ்வொரு வருடமும் விம்பிள்டன் போட்டிகளைத் தவறாமல் நேரில் பார்த்துவிடுவார். இந்த ஆண்டு நேரில் செல்ல முடியாததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.  சாட்டிங் ஜாம்பவான்கள்!


‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ரகளையான காமெடி த்ரில்லர் ஜானர் படமாம். படத்தில் அவர் மிர்ச்சி சிவாவாகவே வருகிறார். நான் யாருமில்ல...


36p5_1531738049.jpg

`ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் ஒதுங்காமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் புதுப்படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார். `ராஞ்சனா’ படத்தின் பார்ட்-2 தான் இது என்கிறார்கள். முதல் பாகத்தில் ‘உயிர்த்தெழுவேன்’ எனச் சொல்லி மரித்துப்போகும் குந்தன் குமார் பாத்திரம் இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டி ருக்கிறதாம். கூடவே தனுஷ் இரண்டாவது முறையாக இயக்குநர் ஆகும் படத்தின் சூட்டிங்கும் சத்தமில்லாமல் சென்னையில் தொடங்கிவிட்டதாம். பிஸி ஸ்டார்!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

வைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்!!!

 

 

புகழ்பெற்ற ஓவியரான கோர்னர் கொலின்ஸ் பிரித்தானிய இளவரசி டயானாவின் படம் ஒன்றை எச்.ஐ.வி இரத்தம் மற்றும் வைர துகள்களை பயன்படுத்தி வரைந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானிய இளவரசி டயானா ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் கை குலுக்கி உலகம் எச்.ஐ.வி குறித்து கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி  வைத்தார்.

இச் சம்பவத்தை நினைவு கூறும் முகமாக கோர்னர் கொலின்ஸ் வரைந்த இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

diana.PNG

"டயானா எச்.ஐ.வி  நோய்த்தொற்றிய ஒரு மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டதைக் கண்டு உலகம் அன்று அதிர்ந்தது, என்றாலும் எச்.ஐ.வி  குறித்த தவறான எண்ணம் இன்னும் மாறவில்லை" என்கிறார் கோர்னர் கொலின்ஸ்

http://www.virakesari.lk

Share this post


Link to post
Share on other sites

உலகின் மிக கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் யார் தெரியுமா…?

 
 

விமானத்தில் பயணம் செய்வது ஒரு சிலருக்கும் கனவாக கூட இருக்கும். அத்தோடு அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும்.

வழங்கப்படும் உணவு, இருப்பிடம், டிக்கெட் சலுகைகள் மற்றும் விமான ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சிறப்பாக இருந்தால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமின்றி, மீண்டும் அதே விமான நிறுவனத்திலேயே பயணம் செய்ய விரும்புவார்கள்.

மேலும், விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களில் பணிபுரியும் விமான ஊழியர்கள் பார்ப்பதற்கு வசீகர தோற்றத்துடன், அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதுபோன்ற பெண்கள் மற்றும் ஆண்களையே தெரிவு செய்வார்கள்.

அந்த வகையில் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தான்,

எமிரேட்ஸ்

1ed5e1fc5ef7e5d7a9b3d25127682f9b.jpg

துபாயை சேர்ந்த ஏர் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு அழகிய சீருடையை வழங்க சமூகவலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்துகிறது.

இந்த நிறுவனம், UAE விமான நிலையத்தில் சொந்த விமான பயிற்சி பட்டறைகளை  நடத்தி வருகிறது.

தாய் ஏர்லைன்ஸ்

thai-airhostess-1024x900.jpg

தாய்லாந்தில் உள்ள மிகப்பிரபலமான இந்த விமான நிறுவனம், தனது விமான பணிப்பெண்களுக்கு பார்ப்பதற்கு நாகரீகமாக இருக்கும் ஆடையை வழங்கியுள்ளது.

ஏர் செர்பியா

afe47199c6db0ac20cf08b5287aac515-air-ser

Jet Airways என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், 1990 ஆம் ஆண்டில் Yugoslavia வில் இருந்து பிரிந்து சென்று, ஏர் செர்பியா என்ற பெயர் மாற்றம் செய்து, கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டது. இன்று வரை இந்த விமானத்தின் பயணம் நன்றாக உள்ளது.

அதுமட்டுமின்றி அழகிய விமானப்பணிப்பெண்களையும் பணிக்கு அமர்த்தி, மக்களுக்கு நற்பயணத்தை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

xsingapore-air-uniform.jpg.pagespeed.ic_

கடந்த ஆண்டு சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த விமான நிறுவனம், உலகின் மிகவும் நேர்த்தியான மற்றும் மரியாதைக்குரிய விமான நிறுவனமாக உள்ளது.

Balmain நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சீருடைகள், விமானத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் ஐகான் மற்றும் sarong kebaya தான் இவர்களின் சீருடையாக உள்ளது.

ஏர் பிரான்ஸ்

avia_glavnaya.jpg

http://metronews.lk

Share this post


Link to post
Share on other sites

‘இடியட்’ என்று கூகுளில் தேடினால் யார் படம் வரும் தெரியுமா?

 

 
trump

இடியட் என்ற வார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் வந்த காட்சி

கூகுள் தேடுதளத்தில் ஆங்கிலத்தில் ‘இடியட்’ என்ற பெயரைப் பதிவிட்டு தேடினால், அதிர்ந்து போவீர்கள். பலநேரங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் இப்போதும் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டுகிறது.

ஒருநேரத்தில் இந்தியில் பிகு என்று பதிவிட்டு புகைப்படத்தைத் தேடினால், பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது. இந்தியில் பிகு என்பது பொய்காரர் என்று பெயர். பிரதமர் மோடியின் புகைப்படம் வந்ததற்கு அனைத்துத் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

அதேபோல, இந்தியில் பப்பு என்று பதிவிட்டபோது ராகுல் காந்தியின் புகைப்படமும் வந்தது. இதைக்காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் முதல் பிரதமர் என்று கேள்வி எழுப்பி புகைப்படத்தைத் தேடினால், பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது. இதுபோன்று கூகுள் தேடுதளத்தில் அவ்வப்போது நகைச்சுவையான, பொருத்தமில்லாத படங்கள் வெளியாகின.

இப்போது ஆங்கிலத்தில் 'இடியட்' (முட்டாள்) என்ற பெயரைப் பதிவிட்டுத் தேடினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புகைப்படம்தான் முதலில் வருகிறது. கூகுள் அல்காரிதத்தில் அதிகமாகத் தேடப்படும் புகைப்படம் முதலில் வரும் என்பதால், டிரம்ப்பின் புகைப்படம் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில போராட்டக்காரர்கள் செய்த விஷமச் செயலால் அல்காரிதத்தில் செயற்கையாகச் செய்யப்பட்ட தவறுகளால் இப்படி டிரம்ப்பின் புகைப்படம் வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகளால் எரிச்சல் அடைந்த ஆன்லைன் பயன்பாட்டாளர்கள், ரெடிட் என்ற இணையதளத்தில் முட்டாள் என்ற வார்த்தையையும், டிரம்ப்பின் புகைப்படத்தையும் இணைக்கும் வார்த்தையை வாக்கெடுப்பு மூலம் உருவாக்கினார்கள். இதைக் கூகுளின் தேடுதளத்தில் அல்காரிதத்தில் இணைத்துவிட்டனர். இதன் காரணமாக யார் இடியட் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் அதற்கு டிரம்ப் புகைப்படத்தைக் காட்டுகிறது. இப்போது இந்த இடியட் என்ற வார்த்தை அனைவராலும் கூகுள் தேடுதளத்தில் பதிவு செய்யப்பட்டு டிரம்ப் புகைப்படத்தைத் தேடி வருகின்றனர்.

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நவீனன் said:

உலகின் மிக கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் யார் தெரியுமா…?

 
 

விமானத்தில் பயணம் செய்வது ஒரு சிலருக்கும் கனவாக கூட இருக்கும். அத்தோடு அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும்.

வழங்கப்படும் உணவு, இருப்பிடம், டிக்கெட் சலுகைகள் மற்றும் விமான ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சிறப்பாக இருந்தால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமின்றி, மீண்டும் அதே விமான நிறுவனத்திலேயே பயணம் செய்ய விரும்புவார்கள்.

மேலும், விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களில் பணிபுரியும் விமான ஊழியர்கள் பார்ப்பதற்கு வசீகர தோற்றத்துடன், அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதுபோன்ற பெண்கள் மற்றும் ஆண்களையே தெரிவு செய்வார்கள்.

அந்த வகையில் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தான்,

எமிரேட்ஸ்

1ed5e1fc5ef7e5d7a9b3d25127682f9b.jpg

துபாயை சேர்ந்த ஏர் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு அழகிய சீருடையை வழங்க சமூகவலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்துகிறது.

இந்த நிறுவனம், UAE விமான நிலையத்தில் சொந்த விமான பயிற்சி பட்டறைகளை  நடத்தி வருகிறது.

தாய் ஏர்லைன்ஸ்

thai-airhostess-1024x900.jpg

தாய்லாந்தில் உள்ள மிகப்பிரபலமான இந்த விமான நிறுவனம், தனது விமான பணிப்பெண்களுக்கு பார்ப்பதற்கு நாகரீகமாக இருக்கும் ஆடையை வழங்கியுள்ளது.

ஏர் செர்பியா

afe47199c6db0ac20cf08b5287aac515-air-ser

Jet Airways என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், 1990 ஆம் ஆண்டில் Yugoslavia வில் இருந்து பிரிந்து சென்று, ஏர் செர்பியா என்ற பெயர் மாற்றம் செய்து, கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டது. இன்று வரை இந்த விமானத்தின் பயணம் நன்றாக உள்ளது.

அதுமட்டுமின்றி அழகிய விமானப்பணிப்பெண்களையும் பணிக்கு அமர்த்தி, மக்களுக்கு நற்பயணத்தை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

xsingapore-air-uniform.jpg.pagespeed.ic_

கடந்த ஆண்டு சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த விமான நிறுவனம், உலகின் மிகவும் நேர்த்தியான மற்றும் மரியாதைக்குரிய விமான நிறுவனமாக உள்ளது.

Balmain நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சீருடைகள், விமானத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் ஐகான் மற்றும் sarong kebaya தான் இவர்களின் சீருடையாக உள்ளது.

ஏர் பிரான்ஸ்

avia_glavnaya.jpg

http://metronews.lk

 

சிறி லங்கன் ஏர்வேய்ஸ் இல்லையா?

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

`டிப்ஸ் மட்டும் 16 லட்சம்!' - ஹோட்டல் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்த ரொனால்டோ

 
 

கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹோட்டல் ஊழியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைத்த சம்பவம் தெரியவந்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது திறமையான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். இவர், சமீபத்தில் எடுத்த முடிவு, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அதாவது, கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடிவந்த ரொனால்டோ, தற்போது யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம்செய்துள்ளார்.  இதற்காக, இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.902 கோடி வழங்கப்பட உள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்காக 451 கோல்கள், பல்வேறு விருதுகள், சாதனைகள் படைத்த இவர், தற்போது யுவெண்டஸ் அணிக்காக விளையாட உள்ளது, அவரது ரசிகர்களிடம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்'' என்று அவர் தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், ரொனால்டோ தனது காதலி மற்றும் குடும்பத்துடன் தற்போது கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

 

 

அங்கு, கோஸ்டா நவரினா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்து கிளம்பும்போது, ஊழியர்களுக்கு ரொனால்டோ இன்ப அதிர்ச்சிகொடுத்துள்ளார். ரொனால்டோ தங்கியிருந்தபோது ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு  சிறப்பாக விரும்தோம்பல் செய்துள்ளனர். ஊழியர்களின் விரும்தோம்பலில் ரொனால்டோ மெய்சிலிர்த்துப்போனதால், ஊழியர்களுக்கு டிப்ஸாக 17 ஆயிரத்து 850 யூரோவை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16 லட்சத்துக்கும் அதிகமாகும். இதை எதிர்பாராத ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் ரொனால்டோவைப் புகழ்ந்துவருகின்றனர். அவரது ரசிகர்களும் வலைதளங்களில் புகழ்ந்து பதிவிட்டுவருகின்றனர்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, நவீனன் said:

அங்கு, கோஸ்டா நவரினா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்து கிளம்பும்போது, ஊழியர்களுக்கு ரொனால்டோ இன்ப அதிர்ச்சிகொடுத்துள்ளார். ரொனால்டோ தங்கியிருந்தபோது ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு  சிறப்பாக விரும்தோம்பல் செய்துள்ளனர். ஊழியர்களின் விரும்தோம்பலில் ரொனால்டோ மெய்சிலிர்த்துப்போனதால், ஊழியர்களுக்கு டிப்ஸாக 17 ஆயிரத்து 850 யூரோவை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

விடிய எழும்பித் தான் காசைக் காணோமே என்று தேடுகிறாரோ தெரியாது.

பரவாயில்லை ஏதாவது சாப்பிட்டு அல்லது உடுத்திக் காட்டினாலே இதைவிட பல மடங்கு கொடுப்பார்கள்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
‘தன்னம்பிக்கை இன்மையே மிகப்பெரிய நோய்’
 

image_aa62876f17.jpgஉங்களை ஒருவர் அடித்து வீழ்த்துவதை விட, உங்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் ஒருவர் சிக்கவைப்பதே, கொடிய பாவமான செயலாகும். 

எவரையாவது வீழ்த்திவிடத் தாக்குதல் நடத்தத் தேவையில்லை என்னும் வித்தையை, வேறுவடிவத்தில் எத்தர்கள் பலர் செயற்படுத்துவதைப் பலர் புரிவதேயில்லை.  

மிகவும் அன்பாகக் கரிசனையுடன் நடித்து, எதிரிகளை வலிமையிழக்கச் செய்வதுடன், அவர்கள் மனத்துக்குள் விஷம்போல், தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி விடுவார்கள். 

“உன்னால் இதைச் செய்ய முடியாது”, “நீ இதைச் செய்வது வீண் முயற்சி” என்ற வாறாகச் சொல்லிச்சொல்லி, அவர்களிடம் பயத்தை உருவாக்கி விடுவார்கள். தன்னம்பிக்கை இன்மையே மிகப்பெரிய நோய்தான். 

உண்மையான நண்பர்கள், பெற்றோர்கள் கூட, ஒன்றுமே புரியாமல் சில தவறான முடிவுகளைச் சொல்லுவதுண்டு. 

ஆனால், நல்ல விதமாக, இயன்றவரை செய்துமுடிக்கும் ஆற்றலை வளர்க்காமல், முயற்சிகளை முடக்குவது சரியானதுதானா? படிப்படியாக முன்னேற, இயன்றவரை ஊக்கம்கொடுக்க வேண்டும். செய் தொழிலுக்கும் பயிற்சியளிக்க உதவுக; உற்சாக மூட்டுக.  

Share this post


Link to post
Share on other sites

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001

 
 
 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001
 
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1-1927; ஜூலை 21- 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு இந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.

நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987-ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.

எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

சிவாஜி பெற்ற விருதுகள்- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1996) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.

 

 

 

சிங்கப்பூரில் மலே இனத்தவர்- சீனவர்கள் இடையே கலவரம் ஏற்பட்ட நாள்- 21-7-1964

 
அ-அ+

சிங்கப்பூரில் மலே இனத்தவருக்கும் சீனவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 23 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 
 
 
 
சிங்கப்பூரில் மலே இனத்தவர்- சீனவர்கள் இடையே கலவரம் ஏற்பட்ட நாள்- 21-7-1964
 
சிங்கப்பூரில் மலே இனத்தவருக்கும் சீனவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 23 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

* 1944 - இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 100ல் இது நிறைவடைந்தது).

* 1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மெர்குரி- ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

* 1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

* 1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

* 1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய- எகிப்தியப் போர் ஆரம்பமானது.

* 2007 - ஹரிபாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.