Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

மனோரமாவுக்கு 'ஆச்சி' என்று பெயர் வந்தது எப்படி?

 

கைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

achi.jpg

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம்.

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53574

Link to post
Share on other sites
 • Replies 11.3k
 • Created
 • Last Reply

வானவில் பெண்கள்: சிறகின்றி பறக்கும் வெற்றிப் பெண்

 
race_2596607f.jpg
 

புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் மாற்றுத் திறனாளி ஓட்டப் பந்தய வீரர் 'பிளேடு ரன்னர்' என்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸ், காதலியைக் கொன்ற காரணத்துக்காக வீட்டுச் சிறையில் இருப்பது செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அவரைப் போன்றே இரண்டு கால்களும் இல்லாத பெலாரஸ் வீராங்கனை உலகை கம்பீரமாக நிமிர்ந்து உட்காரவைத்திருக்கிறார்.

அவர் இரண்டு கால்களும், நான்கு கைவிரல்களும் இல்லாத தத்சியானா க்விட்ஸ்கோ. உபயம்: 1986-ல் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்பு.

தவழுதலிலிருந்து பாய்ச்சலுக்கு

கிழக்கு ஐரோப்பா முழுவதும் கதிரியக்கம் பரவக் காரணமாக இருந்த செர்னோபில் அணுஉலை விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெலாரஸில் தத்சியானா பிறந்தார். மிக மோசமான பிறவிக் குறைபாடுகளுடன். இரண்டு முழங்கால்களுக்குக் கீழே எதுவுமில்லை. இடது கையில் மூன்று விரல்கள் இல்லை. வலது கையில் ஒரு விரல் இல்லை. இவ்வளவு மோசமான உடல்உறுப்புக் குளறுபடிகளுக்கு, தாய்க்கு ஏற்பட்ட கதிரியக்க பாதிப்பே காரணம் என்றார்கள் மருத்துவர்கள்.

பிறவிக் குறைபாடுகளுடன் இருந்த பிஞ்சுத் தளிரின் முகத்தை, ஒவ்வொரு நாள் காலையிலும் பார்த்தபோது அப்பா, அம்மாவின் மனம் வலித்தது. நீண்ட காலத்துக்கு அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வருத்தம் மேலிட ஆதரவற்றோர் இல்லத்துக்கு தாரைவார்த்தார்கள். கால்கள் இல்லாத காக்கை மூலையில் முடங்காதபோது, கால்கள் இல்லாத தத்சியானா மட்டும் பேசாமலா இருப்பாள்? முட்டிகளை இழுத்து இழுத்து தவழக் கற்றாள். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தவழுதல் பாய்ச்சலாக மாறும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யாரும் நினைக்காததை தத்சியானா நிகழ்த்திக் காட்டினார்.

இன்றைக்கு, தொழில்முறை ஓட்டப் பந்தய வீராங்கனைகளுக்கு இணையாக அவர் கால்களால் பறந்துகொண்டிருக்கிறார் - ஒரு மாரத்தான் வீராங்கனையாக, பெண் பாடிபில்டராக. நேரடியாகவும் சமூக வலைதளங்களிலும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் அவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.

வருத்தம் ஏதுமில்லை

தத்சியானாவுக்கு நான்கு வயதானபோது ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு குடும்பம் அவளைத் தத்தெடுத்தது. பதின்பருவத்தைத் தொட்டபோது தத்சியானாவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அன்பு பொங்க அவளைத் தத்தெடுத்த அதே குடும்பம்தான், பிஞ்சு வயதில் அவளைத் தத்துக்கொடுத்த குடும்பம்தான் என்பது. தாரை வார்த்த அவளுடைய பெற்றோர் மனசு மட்டும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கவில்லையே!

“என் அம்மா லூடாவின் 13 வயதுப் படத்தை ஒரு நாள் பார்த்தபோது, என் முகமும் அவருடைய முகமும் ஒன்றுபோல் இருப்பதைப் பார்த்தேன். அம்மாவிடம் கேட்டபோது, அவள் உடைந்து அழுதாள். ‘நான்தான் உன் அம்மா தத்சி. நீ பிறந்த பிறகு தினசரி உன்னைப் பார்க்க தைரியம் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தோம். மனசு பொறுக்காமல் நான்கு வயதில் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்தோம்' என்றார்.”

தன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்ட பெற்றோர் குறித்து தத்சியானாவுக்கு சின்னதாகக்கூட வருத்தமில்லை. தனக்கு எதிராக எதையும் அவர்கள் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்று சந்தேகங்களை தூரமாகத் தள்ளி வைக்கிறார்.

கிடைத்தது கால்

ஐந்து வயதில் பெலராஸில் இருந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ‘மீட்டெடுக்கும் நலஅமைப்பு' என்ற அமெரிக்க மருத்துவர் அமைப்பு, பெலாரஸ் குழந்தைகளுக்கு உதவ முன்வந்த நேரத்தில் அவர்களுடைய கண்ணில் தத்சியானா பட்டார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆறு வயதில் அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. பள்ளி நாட்களில் பெலாரஸில் படிக்கும் அவர், ஒவ்வொரு கோடைக் காலத்திலும் சிகிச்சை பெற தனியாகவே அமெரிக்கா சென்றுவந்தார். அங்கு அவரை மூன்று தத்துக் குடும்பங்கள் மாறிமாறிக் கவனித்துக்கொண்டன.

2008-ல் கான்சாஸ் சிட்டிக்கே இடம்பெயர்ந்த அவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேர்ந்தார். அந்த காலத்தில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கான விலை மதிப்புமிக்க செயற்கை பிளேடு கால்களை இலவசமாகக் கொடுத்தது.

நடக்கிறேன், பறக்கிறேன்

“செயற்கை பிளேடுகளை என் கால்களில் பொருத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தவுடன், நிலத்திலிருந்து ஜிவ்வென்று மேலெழும்பி பறப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றேன். வேகமான ஓட்டத்தை எப்படி நிறுவதெனத் தெரியாமல் விழித்தேன். யாராவது என்னைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஓடியதில்லை என்பதாலும், எப்போதும் பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவதாலும்தான் இப்படி நடக்கிறது” உண்மைதான், கால்கள் அற்ற ஒரு மாற்றுத் திறனாளிக்கு, செயற்கை பிளேடுகள் தரும் சிறகு அப்படிப்பட்டது.

பிளேடுகள் கிடைத்த மூன்றே மாதங்களில் 5 கி.மீ. ஒட்டம் ஒன்றில் முதன்முதலில் தத்சியானா பங்கேற்றார். பிறகு டஜனுக்கும் மேற்பட்ட 10 கி.மீ. ஓட்டப் பந்தயங்களிலும் இரண்டு ஹாஃப் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

ஓட்டப் பந்தயங்களோடு அவருடைய தாகம் தீர்ந்துவிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாடிபில்டிங் பந்தயம் ஒன்றில் பங்கேற்று அசத்தியிருக்கிறார். உடல் முழுமைக்குமான ஜிம் பயிற்சிகளையும் சவாலுடன் செய்துவருகிறார். இதில் பளுதூக்கும் பயிற்சி உள்ளிட்டவை அடங்கும். “எல்லா ஜிம் பயிற்சிகளையும் செய்ய முடியவில்லையே என்று கோபம் வரத்தான் செய்கிறது” என்று சொல்லி வாயைப் பிளக்க வைக்கிறார்.

என் உடல் என் பெருமை

“சில நேரங்களில் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று மனசு ஓரத்தில் ஓர் ஆசை எட்டிப்பார்க்கும். ஆனால், எனக்கு நிஜக் கால்கள் இருந்திருந்தால் இப்போது இருப்பதைப் போல, என் மீதும் என் உடல் மீதும் அதீத விருப்பத்துடன் இருந்திருப்பேனா தெரியவில்லை. இப்போது இருப்பதைப் போல திருப்தியுடன் இருந்திருப்பேன் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.

உடல்ரீதியிலும் மனரீதியிலும் உணர்ச்சிரீதியிலும் என்னுடைய மாற்றுத் திறன் காரணமாகவே நான் உறுதியானவளாக இருக்கிறேன். ஓட்டப் பந்தயம் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது. கால்கள் இல்லாவிட்டால் என்ன, என்னால் இப்போது ஓட முடிகிறதே என்று என் மனம் குதூகலிக்கிறது. ஓடும் பிளேடுகளைப் பொருத்திக்கொண்டு பறந்து செல்ல யத்தனிக்கிறேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார்.

இதுவரை அவர் பங்கேற்றது எதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் அல்ல என்பதால், பதக்கம் வெல்லாததைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மாறாக, முகம் தெரியாத ஆயிரக் கணக்கான ரசிகர்களை வலைதளம் மூலமாக வென்று அவர் வாகை சூடியிருக்கிறார்.

“அவர்களுக்கு நான் உத்வேகம் தருவதாக”, எத்தனையோ பேர் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். “என்னைப் போன்ற ஒரு மனுஷியால் என்ன செய்ய முடியும் என்பதை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, இயல்பான திறன் கொண்டோருக்கும் நான் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன். மனதில் உறுதி இருந்தால், எதற்காகவும் அயர்ந்து உட்காரத் தேவையில்லை. வெற்றி நம் கூடவே ஓடி வரும்,” முடிக்கிறார் தத்சியானா.

வெற்றி இவரைப் போன்ற மன உறுதி மிக்கவர்களைத் தேடி வராமல் வேறு யாரிடம்தான் போகும்?

http://tamil.thehindu.com/society/women/வானவில்-பெண்கள்-சிறகின்றி-பறக்கும்-வெற்றிப்-பெண்/article7802699.ece

Link to post
Share on other sites

இன்று ஓவியர் பிக்காஸோவின் பிறந்தநாள்.
அவரது சில நவீன ஓவியங்களின் தொகுப்பு..

1375200_219191288247394_697924873_n.jpg?                1375949_219191308247392_1816081411_n.jpg

 

1385419_219191321580724_155519177_n.jpg?                                  1378087_219191381580718_378701230_n.jpg?

                                                                                    1383835_219191401580716_771948362_n.jpg?

1384145_219191298247393_157777080_n.jpg?

Link to post
Share on other sites

12031470_933880469993981_526829998819908

மைனா மூலம் மனத்தைக் கவ்வி தமிழின் முன்னணி நடிகையாக மாறிய அமலா பாலின் பிறந்தநாள்.

Link to post
Share on other sites

யதார்த்தத்தைப் பதிவுசெய்யும் ஓவியங்கள்

 
 • உள்படம்: இளையராஜா - (கீழே) இளையபாரதி
  உள்படம்: இளையராஜா - (கீழே) இளையபாரதி
 • paint_2_2594483g.jpg
   
 • paint_3_2594482g.jpg
   

யதார்த்த உலகில் வசிக்க விரும்புவர்களைவிட, கனவுலகில் வசிக்க விரும்புபவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால், கனவுலகவாசிகளுக்கும் யதார்த்தத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும்படி அமைந்திருக்கிறது தக்ஷின்சித்ராவில் நடைபெறும் ‘வாழும் யதார்த்தங்கள்’ (Existing Realities) கண்காட்சி. ஓவிய சகோதரர்கள் எஸ்.ஏ.வி. இளையராஜா, எஸ்.ஏ.வி. இளையபாரதியின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.

“இன்றைய அவசர வாழ்க்கையில், அழகான தருணங்களை ரசிப்பதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. மிக இயல்பாக வாழ்க்கையின் யதார்த்தமான தருணங்களை எந்தவிதப் பதிவுகளும் இல்லாமல் கடந்துவிடுகிறோம். அப்படி எந்தவித பதிவுகளும் இல்லாமல், எல்லோரும் கடந்துசெல்லும் அழகான, இயல்பான, ஆழமான தருணங்களையே நாங்கள் இருவரும் ஓவியங்களாக்கியிருக்கிறோம்” என்கிறார் இளையபாரதி.

இவர்கள் இருவரும் மைசூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் இவர்களது சொந்த ஊர். இவர்களுடைய அண்ணன் எஸ்.ஏ.வி. இளஞ்செழியனைப் பார்த்துதான் இளையராஜாவுக்கும், இளையபாரதிக்கும் ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கின்றன. அதனால், இவர்கள் குடும்பமே ஓர் ஓவியர்களின் குடும்பமாகத் தான் ஊரில் அறியப்பட்டிருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐம்பது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை எல்லாமே ‘ஹைப்பர்ரியாலிசம்’ எனப்படும் அதியதார்த்தவாதத்தைப் பேசுகின்றன. கண்காட்சியில் பெரும்பாலும் நீர் வண்ண ஓவியங்களையும், சில தைல வண்ண ஓவியங்களையும் காணமுடிகிறது. “கையாளுவதற்குக் கடினமான நீர் வண்ணங்கள் மூலம் அதியதார்த்தவாதத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடே இங்கே இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள். அத்துடன், இந்த ஓவியங்களின் தருணங்கள் அனைத்தும் எங்கள் இருவரின் பல்வேறு பயணங்களின்போது எடுக்கப்பட்டவை” என்று சொல்கிறார் இளையராஜா.

அதியதார்த்தவாதத்தை ஓவியங்களில் கொண்டுவருவதற்காக, முதலில் தங்களைக் கவர்ந்த, பாதித்தத் தருணங்களை கேமராவில் பதிவுசெய்திருக்கிறார்கள் இவர்கள். அதற்குப்பின்னர், ஒளிப்படத் தருணங்களுக்கு இவர்கள் தூரிகையால் உயிர்கொடுத்திருக்கின்றனர். அதனால், கண்காட்சியின் ஓவியங்களில் ஒருவித நேர்த்தியை உணரமுடிகிறது.

இளையபாரதியின் கங்கைக்கொண்ட சோழபுரம் கோவிலில் விளையாடும் இரண்டு குழந்தைகளின் ‘குறும்பு விளையாட்டு’ என்னும் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதே மாதிரி, இளையராஜாவின் ஓவியங்களில் ‘அதே நேரம்’ என்னும் ஓவியம் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நீண்ட வெட்டவெளிக்காகவே அதிகமாகக் கவர்கிறது. தெருவோர காட்சிகளைப் பதிவு செய்திருக்கும் ஓவியங்கள் யதார்த்தவாதத்தைப் பற்றிய ஆழமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்தக் கண்காட்சி தக்ஷின்சித்ராவில் அக்டோபர் 30ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: http://dakshinachitra.net/

http://tamil.thehindu.com/society/lifestyle/யதார்த்தத்தைப்-பதிவுசெய்யும்-ஓவியங்கள்/article7796312.ece

Link to post
Share on other sites

12185509_933872603328101_302599858640420

அழகு நடிகை அசினின் பிறந்தநாள்.
மலையாளத்திலிருந்து தமிழில் வந்து வெற்றிக்கொடி நாட்டி, பின்னர் தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்று அங்கும் முன்னணி இடம் பெற்ற திறமையுள்ள நடிகை.

Link to post
Share on other sites

அடடே அறிவியல்: சூறாவளி கூரையைத் தூக்குவது ஏன்?

aa1_2592655g.jpg
 • aa_2592656g.jpg
   

மழைக் காலம் தொடங்கப் போகிறது. மழைக் காலத்தில் கடலில் சூறாவளி உருவாகும்போது காற்று வேகமாக வீசும் இல்லையா? அப்போது ஓலைக் குடிசைகள் தூக்கி எறியப்பட்டதாக செய்திகள்கூட வரும். சூறாவளிக் காற்றால் கூரைகளெல்லாம் ஏன் தூக்கி எறியப்படுகின்றன? அதற்கு என்ன காரணம்? ஒரு சோதனை செய்து பார்த்து, அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்போமா?

தேவையான பொருட்கள்:

மின் காற்று ஊதி, டிஷ்யூ பேப்பர் ரோல், பி.வி.சி. குழாய்.

சோதனை:

1. ஒரு அடி நீளமும் முக்கால் அங்குல விட்டமும் கொண்ட ஒரு பி.வி.சி. குழாயில் ஒரு டிஷ்யூ பேப்பர் ரோலைச் செருகி வையுங்கள்.

2. டிஷ்யூ பேப்பர் ரோலில் உள்ள பி.வி.சி. குழாயைக் கிடைமட்டமாக, உங்கள் நண்பரைப் பிடித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

3. இப்போது டிஷ்யூ பேப்பர் சுருளுக்குக் கீழே மின் காற்று ஊதி மூலமாகக் காற்றைச் செலுத்துங்கள்.

இப்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பாருங்கள். டிஷ்யூ பேப்பர் சுருளிலிருந்து பிரிந்து மேலே பறந்து, கீழே விழுவதைப் பார்க்கலாம்.

நடப்பது என்ன?

ஒரு குழாயின் வழியே ஒரு வாயு வேகமாகச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது குழாயின் அச்சுக் கோட்டில் திசை வேகம் அதிகமாகவும் குழாயின் உள் விளிம்புப் பகுதியில் வேகம் சுழியாகவும் (சுழல் காற்று) இருக்கும். ஒரு வாயுவின் திசைவேகம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு அழுத்தம் குறைவாக இருக்கும். இதைத்தான் பெர்னோலி தத்துவம் என்று சொல்கிறார்கள்.

காற்று ஊதியிலிருந்து காற்றை டிஷ்யூ பேப்பரின் மீது வேகமாகச் செலுத்தும்போது, அந்தப் பகுதியில் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் டிஷ்யூ பேப்பரின் மறுபுறத்தில் உள்ள வளிமண்டல அழுத்தம், காற்று ஊதப்படும் பகுதியைவிட அதிகமாக இருக்கும். அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்த பகுதியை நோக்கிக் காற்று ஒரு விசையைச் செலுத்துகிறது. இதனால் டிஷ்யூ பேப்பர் சுருளிலிருந்து பிரிந்து மேல் நோக்கிப் பறக்கிறது.

நிலையாக இருக்கும் காற்றின் அழுத்தம், இயக்கத்திலுள்ள காற்றின் அழுத்தத்தைவிட எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும். திசைவேகம் அதிகமாக இருக்கும் இடத்திலும் அழுத்தம் குறைவாகவே இருக்கும். அதாவது, காற்று ஊதப்படும் பகுதியில் அழுத்தம் குறைவாகவும் தாளுக்கு மறுபுறத்தில் நிலையாக உள்ள காற்றின் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். இந்த பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில்தான், டிஷ்யூ பேப்பர் மேலும் மேல் நோக்கி பறக்கிறது.

பயன்பாடு

மழைக் காலங்களில் சூறாவளி வீசும்போது குடிசையின் மேற்கூரைகள் பிய்த்துக்கொண்டு தூக்கி எறியப்படும் அல்லவா? இப்போது டிஷ்யூ பேப்பரை குடிசையின் மேற்கூரையாகவும் காற்று ஊதியிலிருந்து வெளியேறும் காற்றை சூறாவளியாகவும் கற்பனை செய்துகொள்ளுங்களேன். குடிசைக்கு மேலே காற்று வேகமாக வீசுவதால் பெர்னோலி தத்துவத்தின்படி காற்றழுத்தம் குறையும் என்று சொன்னோமல்லவா? குடிசைக்குள்ளே நிலையாக உள்ள காற்றின் அழுத்தம், குடிசைக்கு வெளியே இருப்பதைவிட அதிகம்.

டிஷ்யூ பேப்பர் மீது காற்றை வேகமாகச் செலுத்தும்போது, தாளின் இரண்டு புறங்களிலும் உள்ள காற்றழுத்த வேறுபாட்டினால் டிஷ்யூ பேப்பர் மேலே பறக்கிறது இல்லையா? அதைப் போலவே குடிசையின் கூரைக்கு மேலே காற்று வீசுவதால், அப்பகுதியில் அழுத்தம் குறைந்து மேற்கூரைகள் தூக்கி எறியப்படுகின்றன.

டிஷ்யூ பேப்பர் மீது காற்றை வேகமாகச் செலுத்தும்போது, தாளின் இரண்டு புறங்களிலும் உள்ள காற்றழுத்த வேறுபாட்டினால் டிஷ்யூ பேப்பர் மேலே பறக்கிறது இல்லையா? அதைப் போலவே குடிசையின் கூரைக்கு மேலே காற்று வீசுவதால், அப்பகுதியில் அழுத்தம் குறைந்து மேற்கூரைகள் தூக்கி எறியப்படுகின்றன.

கூரைகள் தூக்கி எறியப்படாமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. கூரைக்கும் சுவருக்கும் இடையே சுமார் இரண்டு அடி இடைவெளி விட்டு கூரைகளை அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் கூரைக்கு மேலேயும் இடைவெளி வழியாகக் குடிசைக்குள்ளும் காற்று செல்வதால், இரு புறமும் காற்றழுத்தம் சமமாக இருக்கும். இதனால் கூரைகள் சூறாவளியால் தூக்கி எறியப்படுவதில்லை.

Link to post
Share on other sites
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த, ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட அபூர்வ யுவதிகள் ஜேர்மன் பல்கலையில் சந்திப்பு
2015-10-26 15:06:55

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த, முற்றிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரு யுவதிகள் ஒருவரையொருவர் முதல் தடவையாக எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்தபோது பெரும் வியப்படைந்துள்ளனர்.

 

12916Ciara-and-Cordelia.jpg

 

இந்த யுவதிகளில் ஒருவரான அயர்லாந்தைச் சேர்ந்த சியரா மேர்பி எனும் யுவதி அயர்லாந்தைச் சேர்ந்தவர்.

 

இவர் வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டமொன்றின் கீழ் ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றுக்கு உயர் கல்வி பயில்வதற்குச் சென்றார். 

 

மற்றொருவரான கோர்டேலியா ரொபர்ட்ஸ் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

 

இவரும், அதே பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில்வதற்குச் சென்றார். 

 

இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்வதற்குமுன், ஜேர்மனிய பல்கலைக்கழகத்தில் சியரா மேர்பியை கண்ட சக மாணவர்கள், “நீங்கள் உங்கள் இரட்டைச் சகோதரியுடன் இங்கு வந்துள்ளீர்களா” என வினவினராம்.
“இல்லையே நான் தனியாகவே இங்கு வந்தேன்.

 

எனக்கு இரட்டைச் சகோதரிகள் யாருமில்லை” என சியரா பதிலளித்தார். 

 

இதேபோன்ற கேள்வியை கோர்டேலியா ரொபர்ட்ஸும் எதிர்கொண்டார். 
ஏன் இக்கேள்வியை தம்மிடம் கேட்கிறார்கள் என கோர்டேலியாவுக்கோ சியராவுக்கோ ஆரம்பத்தில் புரியவில்லை. 

 

ஆனால் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தபோது தாம் இரட்டைச் சகோதரிகளைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பதை உணர்ந்து வியப்படைந்தனர்.

 

அப்போதே சக மாணவர்களின் கேள்விக்கான காரணமும் இவர்களுக்குப் புரிந்தது.

 

பின்னர்  நெருங்கிய நண்பர்களாகவிட்ட சியராவும் கோர்டேலியாவும் இப்போது இணைந்தே காணப்படுவதாக சக மாணவ மாணவிகள் கூறுகின்றனர்

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12916#sthash.WokU9SpX.dpuf
Link to post
Share on other sites

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக  5வது  ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

எதனையும் கலாய்க்கும் இணைய சமூகம் இதை மட்டும் விடுமா?

12036947_10153607865030926_3087161186502

12063366_10153608132790926_4059054200593

11215112_10153662021082999_3055802134508

11224778_941272289273143_772438222325738

12063862_10153660215872999_7612751021700

12183847_941335565933482_270675994866738

12187702_752825611513633_768107271609608

12189177_10153660189967999_6193870190929

CSK1bOCUAAETI7S.jpg

CSK94lOUwAAL9iH.jpg

நன்றி sooriyan FM

Link to post
Share on other sites

சித்திரக்கதை: விருந்துக்கு அழைத்த நண்பர்கள்

 
 • chitra_2592659g.jpg
   
 • chitra_jpg1_2592658g.jpg
   

குளத்துப்பட்டி அழகிய சிறிய கிராமம். பெயருக்கு ஏற்ப அந்தக் கிராமத்தில் பெரிய குளமொன்றும் இருந்தது.

அந்தக் குளத்தில் ஏராளமான அல்லிமலர்கள் பூத்திருக்கும். கொக்குகள், நாரைகள் போன்ற பலவிதமான பறவைகள் அந்தக் குளத்துக்கு வந்து நீர் அருந்திப் போகும்.

கோடைக்காலத்திலும்கூட அந்தக் குளம் வற்றாது. அந்தக் குளத்தில் மீன், தவளை, நண்டு ஆகியவை வசித்து வந்தன.

அதில் ஒரு தவளையும் நண்டும் நண்பர்களாகிவிட்டன. இரண்டும் ஒன்றாய் சேர்ந்தே குளத்தைச் சுற்றி வந்தன.

ஏதாவது சாமார்த்தியமாக பேசி, தினமும் ஒரு மீனையாவது நண்டின் வளையருகே தவளை அழைத்து வந்துவிடும்.

வளையிலிருக்கும் நண்டும் ‘லபக்’கெனப் பாய்ந்து மீனைப் பிடித்துவிடும். பிறகென்ன…இரண்டும் சேர்ந்து மீனைத் தின்று, அன்றைக்குப் பசியாறிவிடும்.

இப்படியே நாட்கள் ஓடின.

அந்தக் குளத்தில் ஒரு அழகான கெண்டை மீன் இருந்தது. நல்ல பெரிய மீன். கொழுகொழுவென பெருத்திருந்தது, அந்த மீன்.

தவளைக்கும் நண்டுக்கும் அந்தக் கெண்டை மீனைத் தின்றுவிட ஆசை.

தவளையும் எப்படியெல்லாமோ ஆசை வார்த்தைப் பேசி, கெண்டை மீனை அழைத்துப் பார்த்தது.

கெண்டை மீன் எதற்கும் மசியவில்லை.

நண்டும் தவளையும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டன.

“கவலைப்படாதே. நான் என்னோட வீட்டுக்குக் கெண்டை மீனை விருந்துக்கு அழைக்கிறேன். மீன் வந்ததும், அதுக்குக் கண் தெரியாதபடி செய்துவிடுகிறேன். பிறகு நாம் இருவரும் சாப்பிடலாம்…” என்று நண்டு சொன்னது.

உடனே, “வேண்டாம். நான் என்னோட வீட்டுக்கு மீனை விருந்துக்கு அழைக்கிறேன். அதுவும் வரும். வந்ததும் அதோட துடுப்புகளைக் கடித்துவிட்டால், மீனால் நீந்த முடியாது. பிறகு இருவரும் சாப்பிடலாம்…” என்றது தவளை.

“சரி, நாளைக்கு இருவரும் சென்று மீனை அழைப்போம். அது யார் வீட்டுக்கு வர சம்மதிச்சாலும், அதோட கதை அவ்வளவுதான்…!” என்று சொன்னது நண்டு.

இரண்டும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாக ஓரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது கெண்டை மீன்.

அடுத்த நாள்

கெண்டை மீன் வருவதைக் கண்டதும், தவளையும் நண்டும் மிகுந்த அன்போடு அருகில் சென்று, “நண்பா, எங்கள் வீட்டு விருந்துக்கு நீ வர வேண்டும்…” என்று அழைத்தன.

“நீங்கள் இருவரும் இப்படி ஒரே நேரத்தில் அழைத்தால், நான் யார் வீட்டுக்கு வருவது? முதலில் நான் யார் வீட்டுக்கு சென்றாலும், மற்றவருக்கு வருத்தம் வந்துவிடும். அதனால், முதலில் இருவரும் என் வீட்டுக்கு விருந்துக்கு வாருங்கள். பிறகு நான் உங்கள் வீடுகளுக்கு வருகிறேன்…” என்று கெண்டை மீன் கூறியது.

“அப்படியே செய்வோம்…”என்று இரண்டும் தலையாட்டின.

“என் வீட்டுக்குப் போகும் வழி ரொம்ப சிக்கலானது. நாம் மூவரும் பிரியாமல் இணைந்தே செல்வதற்கு ஒரு யோசனை உள்ளது…” என்றபடி, கயிறு ஒன்றை எடுத்தது கெண்டை மீன்.

கயிற்றின் ஒரு முனையில் தவளையின் காலையும் நண்டின் காலையும் சேர்த்துக் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.

“இப்போது நான் போகிற வழியிலேயே நீங்களும் வரலாம்…!” என்று சொல்லிவிட்டு, உற்சாகமாக கெண்டை மீன் நீந்தத் தொடங்கியது. தவளையும் நண்டும் கூடவே நீந்திச் சென்றன.

திடீரென்று கெண்டை மீன் அங்குமிங்குமாய் துள்ளிக் குதித்தது. வேகவேகமாய் நீந்தியது. குளத்தை சுற்றிச் சுற்றி வந்தது.

கெண்டை மீனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவளையும் நண்டும் திணறின. கால்கள் வேறு கயிறால் கட்டப்பட்டிருப்பதால், இரண்டாலும் வேகமாக நீந்த முடியவில்லை.

“அய்யோ…போதும். எங்களுக்கு விருந்தே வேண்டாம்… ஆளை விடு…!” என்ற அலறின.

கெண்டை மீன் குளத்தைச் சுற்றி பலமுறை வட்டமடித்ததில், தவளையும் நண்டும் அப்படியே சுருண்டு மயங்கின.

“விருந்துதானே கேட்டீங்க. போங்க, ரெடியா இருக்கு…!”

வாலைச் சுழற்றி, கயிற்றோடு சேர்த்துத் தவளையையும் நண்டையும் குளக்கரையில் தூக்கிப் போட்டது கெண்டை மீன்.

http://tamil.thehindu.com/society/kids/சித்திரக்கதை-விருந்துக்கு-அழைத்த-நண்பர்கள்/article7788165.ece

Link to post
Share on other sites

எப்படித் தான் இப்படி விதம் விதமாக இணைப்புகளை தேடி இணைக்கிறீர்களோ தெரியாது.அத்தனையும் முத்துக்கள்...எல்லா இணைப்புகளுக்கும் சேர்த்து நன்றிகள் பல.

உங்கள் கருத்துக்கு நன்றி ரதி.:)

பச்சை தந்து ஊக்கம் தந்த ரதி, tharsan1985, suvy அண்ணா விற்கும் நன்றிகள்:)

Link to post
Share on other sites

கண்ணீரும் புன்னகையும்: கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள்!

 

 

 
1_2596605f.jpg
 

சிறுமிகளைப் பெற்றோர்களே மணப்பெண்ணாக விற்கும் அவல நிலையை ‘பிரைட்ஸ் ஃபார் சேல்’ என்ற ராப் பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சோனிதா அலிஜதெ. இவர், தனது 16 வயதில் பெற்றோர்களால் ஆப்கானிஸ்தானத்துக்கு ஒன்பதாயிரம் டாலர் பணத்துக்காக அனுப்பப்பட இருந்தவர்.

மணப்பெண்ணாக ஆப்கானிஸ்தான் செல்ல மறுத்த சோனிதா, இந்தக் கொடூரமான வழக்கம் குறித்து தானே நடித்துப் பாடியிருக்கிறார். “என் அம்மா இதுகுறித்து என்னிடம் பேசியபோது எனக்குப் பெரிதாக வருத்தம் ஏற்படவில்லை. ஏனென்றால் அன்றைக்குத்தான் எனது பெற்றோர்கள் என்னை நன்கு கவனித்துக் கொண்டார்கள். புதிய ஆடைகள் வாங்கித் தந்தார்கள். பிறகுதான் அதன் பயங்கரம் தெரிந்தது” என்கிறார்.

ஆப்கானிஸ்தானில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்த ஏழைச் சிறுமிகளில் 15 சதவீதம் பேர் ஆண்டுதோறும் இப்படி திருமணத்தை முன்னிட்டு விலைபோகின்றனர். கவிதைகள் மூலம் தனது துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கிய சோனிதா, எமினம்மின் தாக்கத்தில் ராப் பாடல்களை எழுதினார். தற்போது சோனிதா அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உதவித்தொகையுடன் கல்வி பயின்றுவருகிறார். தனது இசைத் திறன்களை வளர்ப்பதிலும் ஈடுபாட்டுடன் இருக்கிறார். முதலில் இவரது பாடல்களால் அச்சம் கொண்ட அவரது அம்மா, தற்போது சோனிதாவின் முதல் விசிறி.

 

பெண்பிள்ளை ஒருமை

2_2596604a.jpg

கேரளத்தில் படிப்பறிவற்ற தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் ஆறாயிரம் பேர் போனஸ் தொகைக்காக இணைந்து போராடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். டாடா நிறுவனத்தின் பங்குகளைப் பெரும்பகுதி கொண்ட கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்துக்கு எதிராக மூணாறு தேயிலைத் தோட்டத்தில், செப்டம்பர் முதல் நடந்த போராட்டத்தில் 20 சதவீதம் போனஸ் தொகையைப் பெற்றுள்ளனர்.

அவர்களது போராட்டத்தைக் கண்டு மாநில முதலமைச்சரே திகைத்து, நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மேற்பார்வை செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போது நாள்கூலியாகத் தரப்படும் 230 ரூபாயை 500 ரூபாயாக உயர்த்துவதற்காகத் தொடர்ந்து போராடிவருகின்றனர். இவர்களது போராட்டத்தில் ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் யாரையும் சேர்க்க மறுத்துவிட்டனர். தேயிலைத் தோட்டத் தொழிலைப் பொறுத்தவரை பெண்கள்தான் இப்பணியின் அத்தனை சிரமங்களையும் தாங்குபவர்கள் என்பதே இவர்களது வாதம்.

இவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகத் தொடங்கிய அமைப்பின் பெயர் பெண்பிள்ளை ஒருமை (Pempillai orumai). “எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. பசியும் வேதனையும் எங்கள் வாழ்க்கையின் அங்கம். பட்டினி கிடந்து இறந்தாலும் கவலைப்பட மாட்டோம். ஆனால் எங்களைச் சுரண்டுவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம். இதுவரை பட்ட வேதனைகள் போதும். நாங்கள் தேயிலையைப் பறித்து, கூடைகளை முதுகில் சுமக்கிறோம். நீங்கள் பணப் பையுடன் செல்கிறீர்கள்” என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் லிசி சன்னி.

சிங்கப் பெண்கள்

3_2596603a.jpg

ஆசிய சிங்கங்கள் பாதுகாக்கப்படும் கிர் சரணாலயத்தில் 48 பெண்கள், வனக் காவலர்களாகப் பணிபுரிகின்றனர். இந்தச் சரணாலயத்தில் உள்ள சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களைப் பாதுகாத்துக் காப்பாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுகின்றனர். 2007-ம் ஆண்டில் கிர் சரணாலயத்தில் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டது. இங்கே 33 சதவீதம் வேலைவாய்ப்புகள் பெண் களுக்கு வழங்கப்படுகின்றன.

முதலில் பெண் வனக்காவலர்களைத் தங்களது வேலைக்கு இடையூறாகப் பார்த்த காவலர்கள் தங்களைப் பயனுள்ள சகாக்களாக ஏற்றுக்கொண்டுவிட்டதாக பெண் வனக்காவலர்கள் தெரிவித்துள்ளனர். பெண் வனக்காவலர்களில் முதலில் பணியில் அமர்ந்த ரஷிலா வாதர், இதுவரை 200 சிங்க மீட்பு நடவடிக்கை களிலும், 425 சிறுத்தை மீட்பு நடவடிக்கைகளிலும் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பெண் வனக்காவலர்கள் இந்தியா முழுவதும் வாழும் பெண்களுக்கு உந்துதல் சக்தி என்கிறார், கிர் சரணாலயத்தின் துணை பாதுகாவலரான சந்தீப் குமார்.

http://tamil.thehindu.com/society/women/கண்ணீரும்-புன்னகையும்-கொஞ்சம்-காதுகொடுத்துக்-கேளுங்கள்/article7802697.ece?homepage=true

Link to post
Share on other sites

12052581_934315589950469_552549078146698

தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர்களில் ஒருவரான, என்றும் மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமாரின் பிறந்தநாள் இன்று.

Link to post
Share on other sites

12140860_934317276616967_251683686943829

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரும், தற்போதைய உப தலைவருமான டேவிட் வோர்னரின் பிறந்தநாள்

Link to post
Share on other sites

உலகையே மாற்றிய அக்டோபர் புரட்சி!

 

ர் இடதுசாரி கட்சியின் போராட்டக் காட்சியை பார்த்தால், அதன் போராட்டக் கொடியில், பொதுவுடைமை விதையை விதைத்த கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகிய ஐந்து தலைவர்களின் படம் கண்டிப்பாக இடம்பெறும். அக்டோபர் புரட்சி நடந்து 98 ஆண்டுகள் ஆகின்றன.

octoberrevolution_vc3.jpg19-ம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ்,  ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. சார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917ல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது.

1917 -ம் ஆண்டில் தோன்றிய அந்த புரட்சி,  பல்வேறு காரணங்களால் எழுந்த ஒன்றாகும். 1894 முதல் 1917 வரை ஆண்ட கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ்,  கொடுங்கோன்மை மிக்கவராயிருந்தார். மக்களின் வறுமை மற்றும் நோய்களைப்பற்றி  கவலைபடாத அவர், ரஷ்புத்தின் என்னும் மதகுருவிற்கு கட்டுப்பட்டவராகவும்,  தன் மனைவியின் சொல் கேட்பவராகவும் விளங்கினார்.

மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களும்  நிலக்கிழார்களால் துன்பத்திற்குட்படுத்தப்பட்டனர். உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலையும்,  பொருளாதாரத் தட்டுப்பாடுகளும் காணப்பட்டன. கல்வியறிவின்மையாலும், நவீன விவசாய முறைகள் கைக் கொள்ளப்படாமையாலும் விவசாயிகள் வருந்தினர். 1861ல் இயற்றப்பட்ட அடிமை மீட்சிச் சட்டமும் அவர்களுக்கு யாதொரு முழுப்பயனையும் வழங்கவில்லை. எனவே உரிமை மற்றும் சமத்துவ எண்ணங்களால் உந்தப்பட்ட அவர்கள்,  கிளர்ச்சிகளை மேற்கொள்ளலாயினர்.

கிராமங்களில் வறுமையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகள்,  நகரங்களுக்கு குடியேற ஆரம்பித்தபோது, பிரச்னைகள் மேலும் சிக்கலடைந்தன. சமுதாய அவலத்தையும் சமுதாய மாற்றத்திற்கான வழிகளையும் சுட்டிக்காட்ட பல எழுத்தாளர்கள் எழுந்தனர். லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, டர்க்னேவ் போன்ற எழுத்தாளர்கள்,  விவசாயிகளின் அவலநிலையை தங்கள் எழுத்துகளால் படம் பிடித்துக் காட்டினர். அத்துடன் மக்கள் மனதில் பழமைக் கருத்துகள் மாறுபட வேண்டியதின் அவசியத்தையும் தோற்றுவித்தனர்.

மார்க்ஸின் மூலதனம் (DAS CAPITAL),  மக்கள் மனத்தில் புரட்சிக் கருத்துகளுக்கு வித்தூன்றின. இதனை ஆதாரமாகக் கொண்டே,  லெனின் பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணினார். அவருடைய நாவன்மையாலும் பேச்சாற்றாலாலும் மக்கள் விழிப்படைந்தனர்.

octoberrevolution_vc1.jpg

ரஷ்யா- ஜப்பான் இடையே 1904-ம் ஆண்டில் நடந்த போரின்போதும், முதல் உலகப் போரின் போதும் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட  தோல்வி,  அந்நாட்டின் நிதி நிலைமையையும் மக்களின் வாழ்வையையும் சீர்குலைத்தன. அரசு எவ்விதமான சீரமைப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளாமல்,  மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கின. இதனால் தொழிலாளர்கள் பணியாற்ற மறுத்தனர். போர் வீரர்கள் போரிட மறுத்தனர்.

1914-ல் முதலில் புரட்சியாளர்கள்,  கிரென்ஸ்கி தலைமையில் ஓர் அரசினை தோற்றுவித்தனர். 1917 ஜூலையில் இவர் தலைமையில் ஆட்சி கைப்பற்றப்பட்டது. மத்திய தர வகுப்பினரின் கையில் இருந்த ஆட்சியானது தொழிலாளர்கள், விவசாயிகள் கைகளுக்கு மாற வேண்டுமென இடதுசாரிப் பிரிவினரான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி விரும்பியது.

octoberrevolution_vc2.jpg

தலைமறைவு வாழ்கைக்கு பின் 1917ல் தாயகம் திரும்பிய லெனின்,  சமதர்மக் கோட்பாட்டை நிறுவ கடும் நடவடிக்கைகள் எடுக்கலானார். வலது சாரி பிரிவினராகவும், மிதவாதிகளாகவுமிருந்த மென்ஷ்லிக்குகளை விட லெனின் தலைமையிலான இடதுசாரிகள்,தொழிலாளர்கள், இளைஞர்கள் நிறைந்த போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் செல்வாக்கு லெனின் கைக்கு மாறியது. அன்று முதல் ரஷ்யா, 'சோவியத் குடியரசு' என அறிவிக்கப்பட்டது.

உலகையே மாற்றிய புரட்சி இதுவாகும். இதற்கு விலையாய்  எண்ணற்ற இழப்புகளை சந்திக்க நேரிட்டது.

'உழைக்கும் மனிதர்களின் மைந்தன்' என தன்னை அறிவித்த லெனின், அதை செய்தும் காட்டினர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54276

Link to post
Share on other sites

10471593_934314566617238_645955574763731

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான இர்பான் பதானின் பிறந்ததினம்

Link to post
Share on other sites

கசப்பு சாக்லேட் - தீர்ப்பு

 

 
child_2598596f.jpg
 

'கசப்பு சாக்லேட்' என்ற தலைப்பில் பிங்கி விரானி 2000-ம் வருடம் புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகத்தில் குழந்தைகள் பாலினக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் யாரும் சில நாட்களுக்கு நல்ல மனநிலையில் செயல்பட்டிருக்க முடியாது. அப்புத்தகம் ஏற்படுத்திய அதிர்வலைகளுக்குப் பின்னர்தான் நாடு முழுவதும் குழுந்தைகள் பாலினக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தைப் பற்றிய விவாதங்கள் பெருமளவில் நடத்தப்பட்டு, நாடாளுமன்றம் 2012-ம் வருடத்திய பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டத்தை உருவாக்கியது.

அச்சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றங்களைப் புரிபவர்களுக்குப் பலவாறான தண்டனைகள் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்துபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அக்குற்றங்களைத் தீவிரமாக்குபவர்களுக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. எவ்விதமான நடவடிக்கைகள் குழந்தைகள் பாலினக் குற்றங்களாகும் என்பதையும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. குழந்தைகள் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டால் அச்சம்ப வங்களை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருப்ப வர்களையும் தண்டிக்கச் சட்டம் வழிவகுத்துள்ளது.

மவுனத்தின் குற்றம்

குழந்தைகள் மீது பாலினக் கொடுமைகள் சுற்றியுள்ள மவுனங்களாலேயே நடத்தப்பட்டுவருகிறது என்று கூறும் பிங்கி இரானி, தான் படித்த ஆய்வுகள், அறிக் கைகள், விசாரணைகள் அடிப்படையில் எழுதிய அப்புத்தகத்தில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் தொடர்ந்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், அவற்றில் 50% அவர்களது இல்லத்திலேயே நடைபெறுகிறது என்றும், அதில் முக்கியமாக அக்குழந்தைகளின் நம்பிக்கை பெற்ற அவர்களது இல்லத்தில் உள்ள பெரியவர்களால்தான் அக்குற்றங்கள் நடக்கின்றன என்றும் கூறுகிறார்.

இக்கருத்தின் தாக்கத்தால், அம்பை ‘அந்தேரி மேம் பாலத்தில் ஒரு சந்திப்பு’ (காலச்சுவடு) என்ற புத்தகத்தில் அண்ணனின் பாலியல் தொல்லை தாங்காமல் ஓடிப்போன தங்கையைப் பற்றியும், பின்னர் தனது அத்துமீறல்களைத் தடுக்க முயன்ற மகள்களையே கொலை செய்த தகப்பனைப் பற்றியும் எழுதியிருப்பார்.

குழந்தைகள் மீது பாலினக் குற்றங்கள் புரிபவர்களது நிலைமை இவ்வாறிருக்க, சென்னை உயர் நீதிமன்றம் கேள்விக்குரிய தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது. போலி கையெழுத்து போட்டு மோசடி ஆவணங்களைத் தயாரிப்பவர்களது கரத்தை வெட்டப் பரிந்துரைத்த அண்மைத் தீர்ப்புபோல, குழந்தைகள் மீது பாலினக் கொடுமை இழைப்போரின் ஆண்மையை நீக்கக் கோருகின்றது இந்தத் தீர்ப்பு!

நீதிபதி கிருபாகரன், தனது தீர்ப்பில் பாலினக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் மீது காட்டியுள்ள அனுதாபத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேசமயம், குற்றம் இழைப்பவருக்கு எவ்விதத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை நாடாளு மன்ற, சட்டமன்ற சட்டங்களின் மூலம்தான் உருவாக்க முடியும் என்பதும், குற்றங்களுக்கான தண்டனையைத் தக்க விசாரணையின் மூலம் நீதி மன்றங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்பதுமே விதி. நீதிபதிகள் தங்க ளது சொந்த கருத்துகளை நீதி மன்றத் தீர்ப்புகளில் புகுத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது. அவ்வாறிருக்க, மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத்தான் குரலெழுப்புவதாகவும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்க ளின் சார்பாகப் போராடுவது இல்லையென்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், தான் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் அடிப்படையிலேயே அத் தகைய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

முதல் தண்டனைச் சட்டம்

தீர்ப்பில் கண்டுள்ள கூறுகளை ஆராயும்முன் 1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டம் உருவான வரலாற்றைப் பார்ப்போம். சிப்பாய் கலவரத்துக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி பிரிட்டிஷ் - இந்தியாவின் பேரரசி என்று முடி சூட்டிக் கொண்டதுடன், அதை நிர்வகிக்கும் பொறுப்பை இங்கிலாந்து எடுத்துக்கொண்டது. காலனி இந்தியாவில் திருமணம், சொத்து, வாரிசுரிமைப் பற்றிய விதிமுறைகள் சில இருந்தபோதும் கிரிமினல் குற்றவிதிகள் நடை முறையில் இல்லை. குறுநில மன்னர்களும், நிலப் பிரபுக்களும் தங்களுக்குத் தோன்றிய வகையில் கிரிமினல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கினர். இசுலாமியர்கள் ஆண்ட பகுதிகளில் அவர்களது மதப்படி தண்டனைகள் வழங்கப்பட்டன. அப்படிப்பட்ட மாறுகால், மாறுகை வாங்கும் தண்டனைகளை ஆங்கிலேய அரசு பின்பற்றத் தயங்கியது. அத்தண்டனை முறைகள் மக்களது எதிர்ப்பை உருவாக்கும் என்று எண்ணிய காலனியரசு, புதிய தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்க விழைந்தது. மெக்காலே பிரபுவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவர் உதகமண்டலத்தில் தங்கி சில வாரங்களில் எழுதிக்கொடுத்த இந்திய தண்ட னைச் சட்டம் 1860 முதல் அமலுக்கு வந்தது.

பழிக்குப் பழியா?

இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 155 வருடங்களானாலும் நமது தண்டனை முறைகளின் ஆதாரத்தை நாம் மாற்றிக்கொள்ளவில்லை. சட்டங்களால் விதிக்கப்படும் தண்டனைகள் குற்றவாளியைச் சீர்திருத்து வதற்காக ஏற்படுத்தப்பட்டனவே அன்றி, அவர்களைப் பழிக்குப்பழி வாங்குவதற்காக உண்டாக்கப்பட்டவை அல்ல. இதையேதான் காந்தியடிகள் “கண்ணுக்குக் கண் என்பது உலகையே குருடாக்கிவிடும்” என்று குறிப் பிட்டிருந்தார். மாறுகால், மாறுகை வாங்கும் வழக்கங்கள் எல்லாம் மன்னர் ஆட்சிகளோடு மடிந்துவிட்டன. குற்றவாளிகளுக்கான சிறைத் தண்டனையின்போது அவர்கள் மனம் திருந்தி பொது நீரோட்டத்தோடு கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் முறையே நாகரிக உலகின் தண்டனைகளாக இருக்க முடியும். இதன் காரணமாகத்தான் உலகின் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனைக்கு மரண தண்டனை விதித்துவிட்டன.

குற்றங்களைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முறையாகச் செயல்படவில்லை என்றால், அவற்றைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை களை ஆலோசிக்க வேண்டும். அதை விடுத்து, குற்றவாளி களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை முறைகளை மாற்றுவதன் மூலம் குற்றங்களைக் குறைத்துவிடலாம் என்று எண்ணுவது எளிமையான சிந்தனைப் போக்காகும்.

1985-ல் தன்னுடைய மருமகள் புஷ்பாவை வரதட்சணை கொடுமை இழைத்து கொலை செய்த அவரது மாமியார் லச்மாதேவியின் வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.லோதா, அப்பெண்ணுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியதோடு, அவளைத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பொதுமைதானத்தில் தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டார். பொதுவெளியில் கொடுக்கப்படும் தண்டனை மற்ற குற்றவாளிகளுக்கும் பாடமாக இருக்கும் என்று அவர் தீர்ப்பில் எழுதினார். மேலும், பொதுமக்கள் திரண்டு நேரில் காண்பதற்காக ஊடகங்கள் அச்செய்தியைப் பிரசுரிக்கவும் உத்தர விட்டார். இச்செய்தியைப் படித்த சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் காரணமாக அன்றைய அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் நீதிபதிகள் விருப்பு, வெறுப்புக்கேற்பத் தண்டனைகள் வழங்க முடியாது என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படிதான் தண்டனை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டி ருந்தார். சட்டப்படி ஒருவரது மரண தண்டனை சிறைக் கொட்டடியில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலை யில்தான் நடத்தமுடியுமேயொழிய, குற்றவாளியானாலும் நாகரிகமற்ற முறையில் அவர்களது உயிரைப் பறிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தையே மனுவாக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுவெளியில் மரண தண்டனைக்குத் தடைவிதித்தது.

எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான்

ராஜஸ்தானிலிருந்து வந்து மதுரையில் கொள்ளை யடித்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில், 2,000 கி.மீ. தள்ளிவந்து மதுரையில் கொள்ளையடித்த அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பு எழுதினார். அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பைக் கடுமையான கண்டன விமர் சனங்களுக்கு உள்ளாக்கியது. கொள்ளைக் குற்றமும், அதற்கான தண்டனையும் ஒன்றுதான். மதுரையும் ராஜஸ்தானும் இந்தியாவிலேதான் இருக்கின்றன. ஊர்விட்டு வந்து வேறொரு ஊரில் கொள்ளையடிப்பதற்கு வித்தியாசமான தண்டனை இருக்க முடியாது என்று கூறி ஓமா(எ)ஓம்பிரகாஷ் என்ற கொள்ளையனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்தது. அந்தத் தீர்ப்பில் (2012) நீதிபதிகள் தங்களது சொந்த கருத்துகளைத் தீர்ப்பு வழங்கும்போது பதிவுசெய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், பிரமாண வாக்குமூலத்தின் அடிப் படையில், தான் கடமையாற்றுவதாகக் கூறி, மத்திய அரசுக்குப் புதிய சட்டம் இயற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

2012-ம் வருடம் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம், பாலின நடுநிலைமை வகுக்கும் சட்டமாகும். குழந்தைகள் எந்தப் பாலினமானாலும் அவர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களை யார் இழைத்தாலும் (ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை) அவர்களுக்குத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டமாகும். எனவே, அச்சட்டத்தின் கீழ் குற்றமிழைப்பவர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே என்பதாகக்கொண்டு, அவர்களது ஆண்மைத் தன்மையைப் பறிக்கும் தண்டனையை விதிக்கச் சட்டம் இயற்றக் கோரும் தீர்ப்பு எப்படிச் சரியாகும்? இதுபோன்ற குற்றமிழைக்கும் பெண்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? மேலும், பாலியல் வல்லுறவு பற்றிய குற்றங்களும் இன்று விரிவாக்கப்பட்டுள்ளன. வன்புணர்ச்சி தவிர, கைவிரல்களால் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை அலசுவதையும் வன்புணர்ச்சி சட்டம் வரையறுத்துள்ளது. ஆண்குறியைப் பயன்படுத்து பவர்களுக்கு ஆண்மை இழப்பென்றால், விரல்களைப் பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை? அதன்பின், வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் பற்றி குழந்தைகளின் தாயே தனது கணவன் மீதோ (அ) மகன்களின் மீதோ புகார் அளிக்க முன்வருவார்களா?

மேலும், பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி புகட்டுவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. இக்குற்றங்களைத் தடுப்பதற்குப் புத்தாக்கப் பயிற்சி பெற வேண்டியவர்கள் சமுதாயத்தில் உள்ள பெரியவர்களே தவிர, குழந்தைகள் அல்ல. மனித உரிமைக்காகப் போராடுபவர்கள், அனைவரின் உரிமைகளுக்கும்தான் போராடுகிறார்கள். அவர்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் நன்மை அடைபவர்கள் அரசும், காவல்துறையும் மட்டுமாகவேயிருக்கும். எனவே, இயற்றப்பட்ட சட்டங் களை முறையாக நிறைவேற்றுவதற்கு முன் வருமாறு ஆலோசனை கூறுவதே முக்கியம். மாறாக, புதிய சட்டத் திருத்தங்களுக்கு உத்தரவிடுவது எவ்விதத்திலும் பயனளிக்காது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் தமது சொந்தக் கருத்துக்களைக் கலக்காமல்... இக்குற்றத்தைத் தடுக்கும் விதமாகச் செயல்படும் அமைப்புகளையும், ஆர்வலர்களையும் கலந்தாலோசித்துவிட்டுத் தீர்ப்பளிப் பது மிகவும் அவசியம்.

http://tamil.thehindu.com/opinion/columns/கசப்பு-சாக்லேட்-தீர்ப்பு/article7808714.ece?homepage=true&theme=true

Link to post
Share on other sites

12193748_934325736616121_520604661353783

சங்கா இன்று கேக் வெட்டிக் கொண்டாடிய பிறந்தநாள்.
சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு சந்தோஷமாக தனது குடும்பத்தோடு..

Link to post
Share on other sites

12184972_934315289950499_318085051237682

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கியவருமான மார்க் டெய்லரின் பிறந்தநாள் இன்று.

Link to post
Share on other sites

இலவசக் கல்வியளிக்கும் பள்ளியைத் தொடங்குகிறார் ஃபேஸ்புக் நிறுவனரின் மனைவி!

 

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மனைவி ப்ரிஸில்லா சான். இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் முன்னாள் பள்ளி ஆசிரியையும் கூட.

இவர்  கலிஃபோர்னியாவில்,  ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மென்லோ பார்க்கிற்கு அருகிலுள்ள கிழக்கு  பாலோ அல்டோ (East Palo Alto) மற்றும் பெல்லி ஹாவன் (Belle Haven) ஆகிய ஊர்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக,  3 வயது சிறுவர்கள் முதல் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள் வரை அனைவருக்குமான இலவசக் கல்வியளிக்கும் The Primary School(TPS) என்ற பள்ளியைத் தொடங்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் 2016 முதல் இப்பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PriscillaChan.jpg

மென்லோ பார்க், பாலோ அல்டோ ஆகிய நகரங்கள்,  அங்குள்ள மக்களின் சிறந்த கல்வியறிவிற்கும் உயர்ந்த வாழ்க்கைத்தரத்திற்கும் பெயர் பெற்றவை. ஆனால் அருகிலுள்ள கிழக்கு பாலோ அல்டோ (பெயர் கிழக்கு என்றாலும் இந்த ஊர் உண்மையில் பாலோ அல்டோ நகருக்கு வடக்கில் அமைந்துள்ளது!) வறுமைக்கும் குற்றங்களுக்கும் பெயர்போன ஊராம். இப்படிப்பட்ட ஊரில்,  இலவசப் பள்ளி தொடங்குவதன் மூலம் அம்மக்களின் கல்வித் தரமும் வாழ்க்கைத் தரமும் உயரும் என்கிறார் சான்.

ஆரோக்கியத்துடன் கூடிய கல்வி வழங்கும் நோக்கத்துடன் Ravenswood Family Health Centre என்ற நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவ சேவையும் வழங்க உள்ளனர்.

கடந்த சில வருடங்களில் அமெரிக்காவிலுள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மார்க்கும், அவர் மனைவியும் கிட்டத்தட்ட 120 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளனர். தற்போது சொந்தமாகவே பள்ளியும் தொடங்கிவிட்டனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54277

Link to post
Share on other sites

12194910_934671219914906_682950163786299

மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி + மென்பொருள் வல்லுனர், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று...

Link to post
Share on other sites

கணிப்பொறியின் காதலன் பில் கேட்ஸ்: பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் அக்டோபர் 28,1955-ல் பிறந்தார். இவரது தந்தை  வில்லியம் ஹெச்.கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது தந்தை வழக்கறிஞகராகவும், தாயார் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க இயக்குநர் வாரியத்தில் பணியாற்றினார்.

பில் கேட்ஸ் தனது சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார். அவர் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். தன் 13-வது வயதில் சியாட்டில் பெயர் பெற்ற லேக்சைட் பள்ளிக்கு அனுப்பபட்டார். ஒரு டெலிப்பிரிண்டர் வகையை சேர்ந்த கணினி, தினசரி சில மணி நேர கணினி பயன்பட்டுக்காக வாங்கபட்டது. மாணவர்களுக்கு கணினி பயிற்றுவிக்க வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை (PROGRAM) டிக்-ட்க்-டே விளையட்டுக்காக எழுதினார். அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டார். அவரது ஆர்வத்தை பார்த்த பள்ளி, அவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது. அதன் மூலம் அவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது.

bill_vc1.jpg

1973-ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.1974-ம் ஆண்டு இண்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ ப்ராஸ்ஸசரை (micro processor) அறிமுகம் செய்தது. அதன் ப்ரோக்ராம்மிங் பணிக்கு அந்நிறுவனம் பில் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆகியோரிடம் உதவியை நாடியது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படித்தி, வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் ப்ரோக்ராம்மை எழுத ஆரம்பித்தனர். அவர்களின்விடா முயற்சியினால் எழுதப்பட்ட ப்ரோக்ராம் பரிசோதித்து பார்க்கப்பட்டது, முயற்சி வெற்றி கண்டது. அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதன் பின் 1977-ம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் எட்டாவது மாடியில் ஒரு சிறிய அறையில்  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆரம்பித்தார்கள். அச்சிறிய கம்பெனி வளர ஆரம்பித்தது.தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களது திறமைக்கு ஏற்றவாறு பதவி உயர்வு,சம்பள உயர்வு  வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

1981-ம் ஆண்டில் IBM கணினிகளுக்கான  MS DOS என்ற OPERATING SYSTEM அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார். அதன் சிறப்பை எடுத்துக் கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார். 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின. ஒவ்வொரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் மைக்ரோசாப்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனது.

அதன் பின் 1990களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம்.இணையத்தில் உலா வர உதவும் "நெட்கேப்ஸ்" என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார். ஆனால் அதை விற்கவோ, மைக்ரோசாஃப்டோடு இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்தினார் பில்கேட்ஸ்.

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் செயலியை உருவாக்கி அதனை புதிய கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார். அதனால், விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியது.

மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994-ல் பில்கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பில்கேட்ஸும், அவரது மனைவியும் இணைந்து அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான்  விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 8.1 ,10 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

உலகில் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 12 ஆண்டுகளாக பெற்று வந்தவர் இவர்தான். கணினி உலகத்தையே தன் வசப்படுத்திக் கொண்ட பில் கேட்ஸ்சின் பிறந்த தினம் இன்று.

http://www.vikatan.com/news/article.php?aid=54296

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்? ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗
  • அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ .... அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   
  • இல்லாமல் என்ன  அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம்  என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான்  ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் ,  முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை  
  • சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார்.  பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும்.  ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள.  ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள்.  சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 
  • 121 விபத்துக்கள், 14 மரணங்கள், அதுதான் சாராம்சம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.