Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வருகிறார்கள் ஆனைகட்டி ‘மாரி ’கள்...

 
maari_2602753f.jpg
 

அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு கைப்பந்து. அதுவும் பத்து, பன்னி ரெண்டு தையல்களைக் கண்டிருக்கிறது. எனினும், அந்த ஒரே ஒரு கைப்பந்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்களின் கனவுகளை நெய்துவருகிறார்கள் அவர்கள்.

அவர்கள்...?

"டேய்... மாப்ள.. ஆனை கட்டிக்காரங்கடா... சுதாரிச்சுக்க!" என்று எதிர் அணியினர் எச்சரிக்கை கொள்ளும் அளவுக்கு, அந்த வீரர்களின் விளையாட்டில் அப்படி ஒரு தீப்பொறி!

நீலகிரி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ளது ஆனைகட்டி எனும் இருளர் கிராமம். மாவட்டத்தில் எங்கு வாலிபால் போட்டிகள் நடைபெற்றாலும், அங்கு இந்த கிராமத்தின் அணியினரைக் காணலாம்.

வறுமையில் உழன்றாலும் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு சர்வீஸும் அப்படி ஒரு விசையுடன் அமைந்திருக்கின்றன.

மைதானத்தில் ஒரு ஐந்தாறு பேர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ‘துருதுரு' வென ஓர் இளைஞர் ஓடி வருகிறார். அவரைப் பார்த்ததும் அனைவரும் 'ஹே..மாரி!' என்று குரல் கொடுத்து குதூகலமடைகிறார்கள்.

அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி இளைஞர். பல்கலைக்கழக அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்துக்கே பெருமை சேர்த்த வீரர். உள்ளூர் எஃப்.எம்.மில் பகுதி நேர நிருபர். தன்னைப் போன்ற வளரும் வீரர்களுக்குப் பயிற்சியாளர். சுருக்கமாகச் சொன்னால் ‘ஊருக்கொரு இளைய தலைவன்' என்று மாரியைச் சொல்லலாம்.

இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்களுக்கு மாரிதான் முன்மாதிரி!

"அய்யோ அந்த அளவுக்கெல்லாம் நான் இன்னும் வளரலைங்க..." என்று வருகிற சிரிப்பை அடக்க முடியாமல் சொல்கிறார். பேச்சிலும் விளையாட்டிலும் அவ்வளவு ஒரு நேர்த்தி.

"பொறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த கிராமம்தான் சார். பழங்குடிகளுக்கு இருக்குற எல்லாப் பிரச்சினைகளும் இங்க இருக்கு. அதனால் இங்க எல்லா வீட்டுலயும் வறுமையும் இருக்கு. இங்க 18 வகையான கீரை விளையுதுன்னு சொல்றாங்க. அந்தந்த சீஸன்ல கிடைக்கிற கீரை, இங்க விளையுற கிழங்கு வகைகள், பழைய கஞ்சி - இதுதான் எங்க டயட்.

இங்க டீ இலை பறிக்கிறதும், விவசாயமும்தான் முக்கியமான தொழில். அதனால இங்க வளர்ற பிள்ளைகள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே இஸ்கூல் நேரம் போக, மத்த நேரமெல்லாம் காட்டுலதான் வேலை செய்வாங்க.

அதனாலேயே எங்க உடம்புலயும் மனசுலயும் இயல்பாவே வலு இருக்கு. அப்புறம் முக்கியமா நீலகிரி மாவட்டத்துல முக்கியமான விளையாட்டுன்னு பார்த்தா வாலிபால்தான். தோட்ட வேலை செஞ்சு செஞ்சு எங்க கையெல்லாம் காய்ச்சுப் போயிருக்கும். அதனால நாங்க கேம்ல பண்ற ஒவ்வொரு சர்வீஸும் அவ்வளவு அசால்ட்டா, ஆனா செம ஃபோர்ஸா இருக்கும் சார். பாக்குறீங்களா" என்று சொல்லிவிட்டு, அங்கு உள்ள ஒரு சிறுவனுக்கு பந்தை பாஸ் செய்கிறார். அந்தச் சிறுவன் அடிக்கும் சர்வீஸ் எதிர் அணியினரின் கோர்ட்டில் ‘கெத்'தாக விழுகிறது!

"இஸ்கூல்ல டிஸ்ட்ரிக்ட் அளவுல விளையாண்டு நிறைய சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். அது அப்படியே என்னை கோயமுத்தூர்ல இருக்குற ஒரு காலேஜ்ல கொண்டுபோய் விட்டுச்சு. அங்க சேர்ந்ததுல பாரதியார் யுனிவர்சிட்டி அளவுல விளையாட முடிஞ்சுது.

காலேஜ் முடிச்சதுக்கப்புறம் ஊருக்குத் திரும்பிட்டேன். இங்க பார்க்கிறதுக்கு நிறைய வேலை இருக்கே. நம்ம பசங்களை எல்லாம் வளர்த்துவிடணும். கொஞ்சம் கொஞ்சமா இங்க இருக்குற இளைஞர்கள் எல்லாம் காலேஜ் படிக்கிறதுக்காக சமீபகாலமாத்தான் கோயம்புத்தூர், ஈரோடுன்னு கிராமத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க. அவங்கள்ல பாதிப்பேர் வாலிபால் ப்ளேயர்ஸ்தான். இன்னும் கொஞ்ச வருஷத்துல இந்த ஊர்ல இருந்து டிஸ்ட்ரிக்ட், யுனிவர்சிட்டி அளவுல விளையாடக்கூடிய பசங்க வருவாங்க பாருங்க. எங்களுக்கெல்லாம் எங்க ஊர்க்காரங்கதான் ஆதரவு.

இப்பத்திக்கு எங்களுக்கு இருக்குற ஒரே பிரச்சினை... அய்யன் இளைஞர் நலச்சங்கத்தோட பதிவை இன்னும் புதுப்பிக்க முடியாத நிலையில இருக்கோம். இந்தச் சங்கம் மூலமா வருஷா வருஷம் தீபாவளி சமயத்துல எங்க ஊர்ல எங்களால முடிஞ்ச அளவுக்கு பக்கத்து ஊர்ல வாலிபால் விளையாடறவங்க எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து டோர்னமென்ட் நடத்துவோம்.

எங்க சங்கத்தோட பதிவைப் புதுப்பிக்கணும்னா சில டாக்குமென்ட்ஸ் வேணும்னு சொல்றாங்க. ஆனா நாங்க இருளர்ங்கிறதால எங்களால அந்த டாக்குமென்ட்ஸை வாங்குறதுல நிறைய சிக்கல் இருக்கு. இந்த வருஷம் தீபாவளிக்கு டோர்னமென்ட் நடத்த முடியுமாங்கிறது தெரியலை..!" என்று மாரி சொல்லும்போது, அவர் குரல் உடைகிறது.

விடு மாரி... அதையும் பார்த்துக்குவோம்!

http://tamil.thehindu.com/society/lifestyle/வருகிறார்கள்-ஆனைகட்டி-மாரி-கள்/article7822141.ece

Link to post
Share on other sites
  • Replies 11.3k
  • Created
  • Last Reply

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons
--------------------------------------------------------------------------------------

 
அழகோவியம்s Foto.
Link to post
Share on other sites

கொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்!

* நம் உடலில், 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் வைட்டமின்களான ஏ, சி, ஈ சத்துக்கள் உள்ளதால், ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

* ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள், தோல் நோய்களைப் போக்கும்.

* தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி, சுவாசம் சீரடையும்.

* இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

* ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால், குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வாழைப் பழத்தில் உள்ளதைவிட, பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

* நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும்.

* சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

 
Vikatan EMagazines Foto.
Link to post
Share on other sites
இன்று உலக சேமிப்பு தினம்
இன்று உலக சேமிப்பு தினம்
உலக சேமிப்பு தினம் இன்றாகும். இத்தாலியின் மிலன் நகரில் 1924 ஒக்டோபர் 31ஆம் திகதி பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் பங்களிப்புடன் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சிக்கன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
Link to post
Share on other sites

பரண்: ‘இதுதான் என் இதயத் துடிப்பு'

 

 
kennadi_2602715f.jpg
 

அஞ்சல்தலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள் என பலவற்றையும் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களைப் பார்த்திருப்போம். சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் கென்னடியின் வீட்டுக்குப் போனால், சுவர்க் கடிகாரமல்ல… கடிகாரங்களால் ஆன சுவர் நமக்கு நேரத்தைக் காட்டுகிறது. சீரான தாளகதியில் பெண்டுலங்கள் அசைகின்றன. “இதுதான் சார், என் இதயத் துடிப்பு,” என்றபடி வருகிறார் கென்னடி.

286 சுவர்க் கடிகாரங்கள், 1,700 டைம்பீஸ், 1,100 கைக் கடிகாரங்கள், 75 காந்தி கடிகாரங்கள், இதுதவிர பழங்கால அஞ்சறைப் பெட்டி, விதவிதமான புத்தர் சிலைகள், மினியேச்சர் பொருட்கள் போன்றவை இவருடைய சேகரிப்பில் அடங்கும்.

கடிகாரக் காதலின் ஆரம்பம்

நாகர்கோவில்தான் என்னுடைய பூர்விகம். என்னுடைய தாத்தாவுக்கு ஆங்கிலேயர் ஒருவர் ஷெவ்ரோலே கார் ஒன்றையும் சுவர்க் கடிகாரம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அது, எங்கள் வீட்டின் முன்அறை சுவரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் Ansonia சுவர்க் கடிகாரம். அதற்கு ஒவ்வொரு முறை சாவி கொடுக்கும் போதும், `வெள்ளைக்காரன் ஒன்னோட தாத்தாவுக்கு கொடுத்ததுடே… கவனம்… கவனம்…’ என குடும்பமே சேர்ந்து எச்சரிக்கைக் குரல் கொடுக்கும். காலம் மாறியது.

பேட்டரியால் இயங்கும் கடிகாரம் உலக அதிசயமாகக் கொண்டாடப்பட்டது. குடும்பமே கொண்டாடிய கடிகாரத்தை பரணில் போட்டுவைத்ததை என்னால் தாங்க முடியவில்லை. என்னுடைய அறையில் வைத்து அதைப் பராமரிக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 10, 15 வயது. அந்த வயதிலேயே 20 ரூபாய் கொடுத்து, ஒரு சுவர்க் கடிகாரத்தை வாங்கி வந்தேன். குடும்பமே திட்டித் தீர்த்தது. அதுதான் ஆரம்பம். ஒவ்வொரு கடிகாரத்தின் மெக்கானிசமும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

`குப்பை’ கென்னடி

கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். என்னுடைய செலவுக்கு மாதத்துக்கு 700 ரூபாயை ஊரிலிருந்து அனுப்புவார்கள். அதில் எப்படியாவது சேமித்து மாதத்துக்கு 2 கடிகாரங்களை வாங்கிவிடுவேன். எப்போது பார்த்தாலும் மூர் மார்க்கெட், காயலான் கடை என சுற்றியதால் நண்பர்களின் வட்டத்தில் `குப்பை’ கென்னடி என்று எனக்குப் பட்டப் பெயர் கிடைத்தது!

கண் திறந்த புத்தகம்

நம் நாட்டில்தான் கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்காட்லாண்ட், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் பெரிய மரியாதை இருக்கிறது. அமெரிக்காவின் கனெக்டிகெட் என்னும் இடத்தில் 1890-லேயே கடிகாரத்துக்கென தனி அருங்காட்சியகம் அமைத்திருக்கின்றனர் என்று சொல்லும் கென்னடி, புரூக்ஸ் பால்மர் எழுதிய `எ டிரெஷரி ஆஃப் அமெரிக்கன் கிளாக்ஸ்’ என்னும் புத்தகத்தை படித்த பிறகுதான் தன்னுடைய சேமிக்கும் ஆர்வம் ஒருமுகப்பட்டது. என்னிடம் இருக்கும் சேகரிப்புகள் குறித்து உலகம் முழுவதும் இன்றைக்குத் தெரியும் என்கிறார்.

3 ஆண்டு ஓடும்

லண்டன் கிளாக் டவரில் இடம்பெற்றிருக்கும் கடிகாரத்தைச் செய்த பிக்பென் நிறுவனம் தயாரித்த டைம்பீஸ்கள், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழைமையான கடிகாரம், ஒருமுறை சாவி கொடுத்தால் ஓராண்டு ஓடும் கடிகாரம், ஒருமுறை சாவி கொடுத்தால் 3 ஆண்டுகள் ஓடும் கடிகாரம்வரை இவருடைய சேகரிப்பு விதம்விதமாக விரிகிறது.

கென்னடி விலைக்கு வாங்கிய கடிகாரங்களைத் தவிர, சில கடிகாரங்களுக்குப் பின்னால் நெகிழ்ச்சியான சம்பவங்களும் இருக்கின்றன. “என்னுடைய கணவர் அவருடைய இறுதிக்காலம்வரை மிகவும் பொறுப்போடு பார்த்துக்கொண்ட கடிகாரம் இது. நீங்கள் இதைத் தொடர்ந்து பராமரிப்பீர்கள் என்று நம்பிக் கொடுக்கிறேன்…” என்று ஒரு பழங்கால கடிகாரத்தை கென்னடியிடம் கொடுத்திருக்கிறார் ஒரு பெண்மணி. “விலை மதிக்க முடியாத இந்தச் சேகரிப்புகளைத் தனியார் சிலர் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அரசு வாங்கிப் பராமரிக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. நோக்கம்,” என்கிறார் கென்னடி.

- ஏதாவது ஒரு கடிகாரத்தின் மணி ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும் கென்னடியின் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, சாவி கொடுக்க சோம்பல்பட்டு பழைய வீட்டிலேயே விட்டுவிட்டுவந்த ரிவெக்ஸ் கடிகாரத்தின் நினைவு மனதில் நிழலாடியது.

http://tamil.thehindu.com/society/lifestyle/பரண்-இதுதான்-என்-இதயத்-துடிப்பு/article7821967ece

Link to post
Share on other sites

பக்கத்து வீடு: இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை!

 

tribal_2605131f.jpg
 

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ரெபேகா லோலோசோலி கென்யாவின் சம்புரு பழங்குடியைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளாகப் பெண்கள் மட்டுமே வாழும் கிராமத்தை உருவாக்கி, பெண்கள் சுயசார்புடன் வாழ்க்கை நடத்தப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

சம்புரு பழங்குடிகளில் பெண் களுக்கு உரிமைகளோ மதிப்போ கிடையாது. ஆண்கள் ஆடு, மாடுகளை வரதட்சணையாகக் கொடுத்து, பெண்களைத் திருமணம் செய்துகொள்வார்கள். ஒரு பொருளைப் போன்று வாங்கப்பட்ட பெண்கள், ஆண்களுக்குக் கீழ் அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கிடையாது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது. கட்டாயத் திருமணம், பெண் உறுப்புச் சிதைப்பு போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியாது.

ரெபேகா பள்ளிக் கல்வி பயின்றவர். 18 வயதில் திருமணம், 5 குழந்தைகள். பிரிட்டன் ராணுவ வீரர்கள் ரெபேகா உட்பட 15 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பலாத்காரத்தைக் காரணம் காட்டி, ரெபேகாவை விற்க முடிவெடுத்தார் அவருடைய கணவர். இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தார் ரெபேகா. அங்கே பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்களைக் கணவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. சிலர் உணவின்றி இறந்துபோவார்கள். சிலர் கழுதைப்புலிகளுக்குப் பலியாவார்கள். எஞ்சியிருப்பவர்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, மிக மோசமாக நடத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினார் ரெபேகா.

தன்னந்தனியே

ஒற்றுமை என்று பொருள்படும் ‘உமோஜா’என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார்கள். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். இந்தத் தொழில் சூடு பிடித்தது. அதோடு பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று ஏராளமானவர்கள் உமோஜாவை நாடிவந்தனர். அனைத்துப் பெண்களையும் அன்புடன் அரவணைத்துக்கொண்டார் ரெபேகா.

தாக்குதல் தொடுக்கும் ஆண்கள்

பெண்கள் தனியாக இயங்கு வதையும் சம்பாதிப்பதையும் பழமையில் ஊறிய பழங்குடி ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுபோல கிராமத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இடத்தைக் காலி செய்ய வற்புறுத்தினர். சொந்தமான இடமாக இருந்தால் யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார் ரெபேகா.

பெண்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தனர். தாங்கள் வசிக்கும் இடத்தைச் சொந்தமாக வாங்கினார்கள். நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தார்கள். சுற்றிப் பார்க்கவோ, தங்கள் பொருட்களை வாங்கவோ ஆண்கள் வரலாமே தவிர, பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் உள்ளே ஓர் ஆணும் அடி எடுத்து வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். கூட்டம் கூட்டமாக ஆண்கள் வந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் பெண்கள் ஒற்றுமையாக நின்று அனைத்தையும் சமாளித்து வருகிறார்கள்.

கல்வி, மருத்துவம், சட்டம்

கல்வி அறிவே தங்கள் நிலையை மாற்றும் என்பதை உணர்ந்தவர்கள், தங்கள் சேமிப்பில் ஒரு பள்ளியைக் கட்டினார்கள். இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். இன்று உமோஜா குழந்தைகள் மட்டுமின்றி, அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இங்கே படிக்கிறார்கள். இரண்டு வேளை சூடான உணவு வழங்கப்படுகிறது.

சுகாதாரத்துக்காக ஒரு மருத்துவமனையையும் உருவாக்கினார்கள். சுகாதாரம், ஆரோக்கிய உணவு, ஹெச்ஐவி குறித்துப் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. சட்டம் குறித்தும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது. சம்புரு பழங்குடிகளிலேயே நீதிமன்றம் சென்று விவாகரத்து கோரிய முதல் பெண்ணாக இருக்கிறார் ரெபேகா.

அறுபது பெண்களும் 200 குழந்தை களுமாக கிராமம் பெருகிவிட்டது. நச்சாமி பெண்கள் குழு என்று பிரித்து, அவர்கள் தனி கிராமத்தில் இயங்கி வருகின்றனர். கோழிப் பண்ணைகளின் மூலம் முட்டைகளையும் இறைச்சியையும் விற்பதுதான் இந்தப் பெண்களின் முக்கியத் தொழில்.

53 வயது ரெபேகா 25 ஆண்டுகளாகப் பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கடினமாக உழைத்துவருகிறார். இன்று சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவருடைய திட்டங்களுக்குப் பல்வேறு நாட்டுத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிடம் இருந்து நிதியும் கிடைத்துவருகிறது.

“பெண் என்றைக்கும் ஆணின் அடிமைதான். பெண்கள் சம்பாதிப்பதும் படிப்பதும் எங்கள் வழக்கத்தை மீறிய செயல். தொடர்ந்து தவறுகளைச் செய்துவருகிறார்கள் இந்தப் பெண்கள். என்றாவது ஒருநாள் எங்கள் கைகளால்தான் ரெபேகாவுக்கு மரணம். ஆண் என்றால் அத்தனை சாதரணமாகப் போய்விட்டதா இவர்களுக்கு?’’ என்று இன்றும் பேசித் திரிகிறார்கள் பழங்குடி ஆண்கள்.

முற்போக்குப் பெண்கள்

உமோஜா பெண்களோ, “அதெல்லாம் அந்தக் காலம். ஆண்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆணின் கொடூரமான முகத்தைச் சந்தித்த பெண்கள்தான் எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் மீண்டும் தங்கள் கணவரிடம் செல்ல கனவில்கூட நினைக்க மாட்டார்கள். அவர்களைவிட கல்வியில் நாங்கள் முன்னேறிவிட்டோம்.

எங்களால் எங்களையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முடியும்போது அவர்களின் தயவு எதற்கு? எங்கள் குழந்தைகளுக்கு ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணத்தை விதைத்து வளர்க்கிறோம். எதிர்காலத்திலாவது பெண்களுக்குச் சிறந்த துணையாக ஆண்கள் உருவாகட்டும்” என்று தெளிவான சிந்தனைகளுடன் சொல்கிறார்கள்.

உமோஜா கட்டுப்பாடுகள்

உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. பாரம்பரிய உடைகளையும் ஆபரணங்களையும் அணிய வேண்டும். புகைப்பிடிப்பதற்கும் பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை. அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

“பெண்களே பேச ஆரம்பியுங்கள். இனியும் மவுனமாக இருந்தால் நம் முன்னேற்றம் சாத்தியப்படாது. நாங்கள் கல்வி, சுகாதாரம், சட்டம், தொழிலில் மட்டுமல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் முன்னணியில் இருக்கிறோம். எங்களுக்கு இணையதளம் இருக்கிறது. எங்கள் கிராமத்தில் பிற்போக்குத்தனமான ஆண்களுக்கு என்றுமே அனுமதி கிடையாது. பெண்களை மதிக்கும் ஆண்கள் எங்கள் மதிப்புக்குரியவர்கள்” என்கிறார் ரெபேகா.

http://tamil.thehindu.com/society/women/பக்கத்து-வீடு-இங்கே-ஆண்களுக்கு-அனுமதி-இல்லை/article7829573.ece?homepage=true

Link to post
Share on other sites

நியூயார்க் நகரைச் சேர்ந்த Alison Moritsugu எனும் ஓவியர் வரைந்த ஓவியங்கள்தான் இது. இதற்காக அவர் மரங்களை வெட்டவில்லை, தானாகவே விழுந்த மரங்களில் ஆயில் பெயின்டிங் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டது. எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். இந்த ஓவியங்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

10006955_1015894881802635_16808376590952

11219586_1015894921802631_78543871320288

12108827_1015894885135968_52760077918737

12190837_1015894861802637_57241379201775

12009727_1015894971802626_84019576996107

11666268_1015894928469297_25423160958092

12065956_1015894925135964_17746641922763

12079554_1015894915135965_75831251269219

 

Link to post
Share on other sites

குப்பை சேகரித்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை பராமரிக்கும் 7வயது சிறுவன்!

 

குயிஸ்ஹு: குப்பையை சேகரித்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை 7வயது சிறுவன் பராமரித்து வரும் சம்பவம் சீனாவில் அனைவரையும் உருகச் செய்துள்ளது.

Trush%20boy01.jpg

சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒவு டோங்மிங். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு மாடி கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்ததில், பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்ததில், அவர் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருந்த பணமும் செலவாகி விட்டது. இதைத்தொடர்ந்து அவரது 7 வயது மகன் ஒவு யாகலினை அவருடன் விட்டு விட்டு, மனைவி பிரிந்து சென்று விட்டார்.

Trush%20boy02.jpgஅன்று முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அந்த சிறுவன் பராமரித்து வருகிறான். காலை 6 மணிக்கு விழிக்கும் சிறுவன் யாகலின் காலை உணவை சமைத்து தனது தந்தைக்கு ஊட்டிவிட்டு, பள்ளிக்கு செல்கிறான். பள்ளி முடித்து வீடு திரும்பியதும் மதிய உணவை சமைத்து தந்தைக்கு கொடுக்கிறான்.

அதையடுத்து, அவன் தெருக்களில் உள்ள குப்பைகளைச் சேகரித்து, அதை பணமாக மாற்றி, தனது குடும்ப செலவுக்கும், தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கும் செலவு செய்கிறான். இதனால், அவன் மற்ற சிறுவர்களைப் போல் ஒருபோதும் விளையாடச் செல்வதில்லை.

அந்த சிறுவனின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும், தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருக்கிறார். ஆனால், தனது மகனின் பராமரிப்பை பார்த்து மனம் மாறிய அவர், தான் இல்லாவிட்டால், மகனின் வாழ்க்கை வீணாகப் போய் விடும் என்று நினைத்து தனது முடிவை தற்போது மாற்றியிருக்கிறார்.

Trush%20boy03.jpg

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, குப்பை சேகரித்து பராமரித்து வரும் சிறுவனின் செயல் அனைவரையும் உருகச் செய்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=54501

Link to post
Share on other sites

12186335_936491503066211_265091878799577

இருவர் முதல் இன்று வரை அசைக்க முடியாத அழகி ஐஸுக்கு பிறந்தநாள்.
முன்னாள் அல்ல, எந்நாளுமே பலரும் ரசிக்கும் 'உலக அழகி' இந்திய முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள்..

Link to post
Share on other sites

பெண் எனும் பகடைக்காய்: பெண் என்பவள் வெறும் உடல்தானா?

 
 
penn_2596595f.jpg
 

‘மலரினும் மெல்லிது காமம்’ என்று இலக்கியங்கள் சுட்டும் வரி பிற மிருகங்களிலிருந்து மனிதன் எவ்வளவு மேம்பட்டவன் என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டது. ஆனால், மனிதன் தன்னை மிருகம்தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்.

அதனால்தான் பாலியல் பலாத்கார இழிவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாமும் அது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், இந்த அவலம் மட்டும் நிறுத்தப்படவில்லை. இந்த முறை சின்னஞ் சிறிய இரண்டு பெண் குழந்தைகள். இரண்டரை வயதே நிரம்பிய சின்னஞ்சிறு மலர், பிய்த்து எறியப்பட்டிருக்கிறது. தங்கள் தேவை தீர்ந்த பின் அந்தக் குழந்தையைப் புதரில் வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதே போலவே மற்றொரு ஐந்து வயது சிறுமி.

இவை நடந்திருப்பது மீண்டும் தலைநகர் டெல்லியில். டெல்லி காவல்துறையோ மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காமல் ‘இயங்கி’க் கொண்டிருக்கிறது. இக் குற்றங்களில், இதனைக் குற்றம் என்ற சிமிழுக்குள் அடைப்பதே சரிதானா என்றும் புரியவில்லை. கொடுமை என்று கூறலாமா? இல்லை, சித்திரவதை என்பதுதான் சரியாக இருக்கும். போர்க் காலங்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள்!

குற்றவாளிகளிலும் மேஜர், மைனர் என்று இரண்டு பிரிவு. ஒரே குற்றத்தை இவர்கள் செய்திருந்தபோதிலும் வயதைக் காரணம் காட்டி மைனர் பிரிவு தண்டனைக் குறைப்பு பெறுவது இங்கு கவனிக்கத்தக்கது. நிர்பயா வழக்கில் ஒரு மைனர் இருந்தாரென்றால், தற்போது இரண்டரை வயதுக் குழந்தையைப் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியவர்கள் இருவருமே பதினெட்டு வயதுக்குட்பட்ட மைனர்கள்தான் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

கற்பனை செய்வதுகூடக் கடினமாக இருக்கிறது. 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறார் என்றால் இவர்கள் எப்படி சிறார் ஆவார்கள்? விலங்கினங்களில்கூட சில கட்டுப்பாடுகள் உண்டு. பிள்ளைக் கறி கேட்கும் இந்தக் காம வல்லூறுகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

பெண் உடல் என்றால் சித்திரவதைக்கானது. ஆணுடலில் வலு இருந்துவிட்டால் போதும். பெண் உடலின் மீதான உரிமையை சந்தர்ப்பம் பார்த்தோ அல்லது வலுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டோ அத்துமீறி எடுத்துக்கொள்ளலாம். பதினெட்டு வயது நிரம்பாத சிறுவனாக இருந்தாலும் அவனும் இத்தகைய சதை மிருகம்தான். கேட்டால் பெண்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பொன்மொழிகளை இலவசமாக அருளுவார்கள்.

பெண் உடல்தான் எங்களுக்குப் பிரச்சினை. ஒரு போர்வையால் மூடிக்கொண்டிருந்தால் ஏன் நாங்கள் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்பார்கள். ஆனால், இப்போது டெல்லியில் இரண்டரை வயது குழந்தையும், ஐந்து வயது குழந்தையும் பாலியல் சித்திரவதைக்கு ஆட்பட்டிருக்கிறதே. ஆண் சிந்தனையானது இதற்கும் ஏதாவது ஒன்றைக் கற்பனை செய்து காரணம் கற்பிக்கலாம்.

நிர்பயா நிகழ்வுக்குப் பின், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுவிட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி வர்மா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, மிக நீண்ட அறிக்கையும் தயாரித்து அளிக்கப்பட்டது. வழக்கமாக அமைக்கப்படும் கமிஷன்களைப் போல அல்லாமல், உண்மையிலேயே பெண்கள் மீது உள்ளார்ந்த அக்கறையுடன் அந்த அறிக்கை தயாரிக்கப்படிருந்தது.

இந்த வழக்குகளைப் பொறுத்தவரை அதிகாரம், பதவி போன்றவற்றில் உள்ளவர்கள் எளிதாகத் தப்பிவிடும் சூழலே நிலவுகிறது. ஆனால், வர்மா கமிஷன் அறிக்கைக்குப் பின் இவர்களும் தண்டனைக்குத் தப்பியவர்கள் அல்ல என்ற நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தண்டனையின் மூலம் குற்றவாளிகள் திருந்தினார்களா? ‘இந்தியாவின் மகள்’ என்றே நிர்பயாவை அடையாளப்படுத்தி, இங்கிலாந்து பட இயக்குநர் லெஸ்லீ உத்வின் பி.பி.சி.க்காகத் தயாரித்து அளித்த ஆவணப் படம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தினாலும் குற்றவாளிகளின் அசல் முகங்களையும், அவர்களின் பெண் பற்றிய பார்வையையும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவில்லை. தங்கள் தவறுகளை அவர்கள் உணர்ந்தார்களா என்றால் இல்லை. மாறாக, அதை நியாயப்படுத்திப் பேசினார்கள்.

கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, துடித்துத் துடித்துச் சாவைத் தழுவிய நிர்பயா என்ற அந்த இளம் பெண்ணின் மீதே வாய் கூசாமல் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இரவில் வேற்று ஆண் ஒருவனுடன் வெளியில் வரும் பெண் ஒழுக்கமற்றவளாகத்தான் இருப்பாள் என்றார்கள். வழக்கம் போல பெண்கள் உடையணிந்துகொள்ளும் பாணியைக் குறைசொன்னார்கள். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி முகேஷ் சிங், “அந்தப் பெண் எங்களை எதிர்த்துப் போராடாமல் எங்களை அனுசரித்து நடந்துகொண்டிருந்தால், நாங்கள் அந்தப் பெண்ணைக் கொல்லாமல் விட்டிருப்போம்” என்று கூறியதுதான் இவை அனைத்திலும் உச்சம்.

இவ்வளவுக்கும் அந்த நபர் தண்டனை பெற்ற குற்றவாளி. தண்டனை என்பது தங்களைத் தாங்களே உணர்ந்துகொள்வதற்கும், தவறுகளைத் திருத்திக்கொண்டு, மனமாற்றம் பெறுவதற்கும்தான். ஆனால், வக்கரித்துப்போன அந்த மனம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. தண்டனை காலத்துக்குப் பின், இதே நபர்கள், மீண்டும் இந்தக் குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்ணின் மனநிலை குறித்தும், பெண்களைப் பொறுத்தவரை இது எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பதுவும் குறித்தும் இங்கு எவருக்கும் அக்கறையில்லை. பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படுவது அவள் உடலின் மீது மட்டும்தான் என்பதே அவர்களின் புரிதலாகவும் இருக்கிறது. எப்போதுமே பெண் என்பவள் உடல் என்பதைத் தாண்டி வேறு ஒன்றாகப் பார்க்கப்படுவதில்லை என்பதுதான் பெண்கள் பற்றிக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரின் சொற்கள் மூலமாகவும் வெளிப்படுகிறது.

இந்தியாவெங்கும் 25,000 பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போலீஸ், கோர்ட் என்று வெளியில் வந்தவை இவை. ஆனால், மான, அவமானங்களுக்கு ஆட்பட்டு வெளியில் சொல்லாமல் மறைத்தவை இதில் எவ்வளவு? இந்தியர்களான நமக்கு எவ் வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

கொசுறு

உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ், காரில் பயணித்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவர் குற்றவாளிதான் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற தீர்ப்புகள்தான் நமக்கான தற்காலிக ஆறுதல்கள்.

http://tamil.thehindu.com/society/women/பெண்-எனும்-பகடைக்காய்-பெண்-என்பவள்-வெறும்-உடல்தானா/article7802684.ece

Link to post
Share on other sites

12183808_936697413045620_111739653415396


KING KHAN என்று பெருமைப்படுத்தப்படும் ஹிந்தி சினிமாவின் ராஜா ஷாருக் கானின் பிறந்தநாள்.
மொழிகடந்து எல்லா மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்படும் முன்னணி கதாநாயகன், விளம்பரங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுக்கும் கலகலப்பு நாயகன்..

Link to post
Share on other sites

பெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர்

 

 
leggings_2605145f.jpg
 

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு விசிட் செய்தபோது, அங்கிருந்த வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அணிந்திருந்த உடை நைட்டிதான். இப்போது நைட்டி இல்லாத வீடுகளே கிடையாது இல்லையா! சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து வயது முதிர்ந்தவர்கள்வரை அணிந்து கொள்ளும் ‘தேசிய உடை’ என்ற பெருமையை நைட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

பால் பாக்கெட்டோ, பச்சை மிளகாயோ ஏதோ ஒன்றை அவசரத் தேவைக்கு வாங்க சங்கோஜமில்லாமல் நைட்டி அணிந்தே கடைக்குப் போகும் பெண்கள் இன்று சர்வ சாதாரணம். சங்கோஜிகளாக இருக்கும் சிலர் ஒரு டவலை நைட்டியின் மீது குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். அதற்கு மேல் சங்கோஜம் கிடையாது.

இந்த நைட்டி உடை குறித்து அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னது: “இரவில் மட்டுமல்ல, பகலிலும் வீட்டில் இருக்கும்போது நைட்டிதான் அணிகிறோம். உடலை இறுக்கிப் பிடிக்காமல் தளர்வாக இருக்கும் அந்த உடை எங்களுக்கு வசதியாக இருக்கிறது. வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறது”.

இது அவர்களே, அவர்கள் அணிந்துகொள்ளும் உடை பற்றி, அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய பொதுக் கருத்து.

அடுத்து, லெகிங்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. இது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்த உடை. இன்று இளம் பெண்கள் விரும்பி அணியும் உடை. புதிய விஷயங்களை சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது இளைய தலைமுறைதானே. இந்த நைட்டியையும் மூத்த தலைமுறை மற்றும் அன்றைய கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்து இன்று உலகமே அணியும் ஆடையாக மாற்றியவர்களும் அன்றைய இளம் தலைமுறையினர்தானே. இன்று லெகிங்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். ஏனாம்? இதோ அவர்கள் சொல்கிறார்கள்:

“லெகிங்ஸ், நைட்டி மாதிரி தளர்வான உடை அல்ல. உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைதான். ஆனால், வசதியாக இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களின்போது ஓடிப்போய் வண்டியைப் பிடிப்பது எளிது. நிறைய கலர்களில் கிடைக்கிறது. எல்லா கலர்களிலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகக் குறைவு. டாப்ஸ் மட்டும் தனியாக வாங்கினால் போதும். வித விதமான மேட்சிங்கில் அணியலாம். முக்கியமாக, மாதவிடாய்க் காலங்களில் மிக மிகப் பாதுகாப்பாக உணர வைக்கும்”

இப்போது பேன்ட் ஆண்களின் உடை மட்டுமல்ல; பெண்களும் பேன்ட், ஜீன்ஸ், முக்கால் பேன்ட், அரைக்கால் பேன்ட் எல்லாவற்றையும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். முக்கால் பேன்ட் டீன் ஏஜ் பெண்களின் பெரு விருப்பம். காஷுவலாக வீட்டிலும் அவுட்டிங்கிலும் அணிந்துகொண்டு சுதந்திரமாகப் போய் வருகிறார்கள்.

புடவை- எவர்கிரீன் உடை. ஆயிரம் வசதிக் குறைவுகள் இருந்தாலும் அனைவரும் ஆராதிக்கும் உடை. நகரம், கிராமம், பட்டி தொட்டி, இளசு, கிழடு எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் போய் ஒட்டிக்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது. காட்டன், பட்டு எதுவானாலும் பரவாயில்லை. பெண்களைவிட, ஆண்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை மிகவும் கவர்ந்த உடை என்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோமா?

ஒரு கவிஞர், அதிலும் ‘ஆண் கவிஞர்’ நைட்டியைப் பற்றித் தன் கவிதை ஒன்றில் இப்படி வர்ணிக்கிறார்:

‘சிலிண்டருக்கு மாட்டிய உறை போன்றது’.

அது அவர் பார்வை. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘இங்கு பெண்கள் எல்லோரும் சிலிண்டர்களா?’ என்பதை மட்டும் சிறு கேள்வியாகக் கேட்டு வைப்போம். அத்துடன் அழுத்தம் மிகுந்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய உடை என்றால், அது இந்தப் பாழாய்ப் போன லெகிங்ஸ்தான். நான் சின்ன வயதில் பார்த்த ராஜா ராணி கதையுள்ள சினிமாக்களில் எல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., காந்தாராவ் போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து, மேலே கவுன் போட்டுக்கொண்டு பாய்ந்து பாய்ந்து கத்திச்சண்டை போடுவார்கள். ராஜ, விஜயலலிதா, ஜெயலலிதா போன்ற ஹீரோயின்களும் ஸ்கின் கலரில் இதைப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த உடை என்பது ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவான உடை என்று அப்போது நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதன் பெயர் லெகிங்ஸ் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. வளர்ந்து பெரிய பெண்ணானதும் நானும் இப்படி உடை உடுத்தி அழகு பார்ப்பேன் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். என்ன செய்வது? கெரகம், நம் ஆசையெல்லாம் நிறைவேறுமா? லெகிங்ஸ் சந்தைக்கு வர இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்ன வயது ஆசையை திருப்தியாக இப்போதுதான் நிறைவேற்றிக் கொண்டேன்.

ஆனால், பாருங்கள்... அநியாயத்துக்கு ஓரவஞ்சனையாகப் பெண்களுக்கு மட்டுமேயான உடையாக அதை இந்த நாகரிகக் கோமாளிகள் மாற்றிவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆண்களும் இதை அணிந்துகொள்ளச் சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்கள் இந்த உடை தங்களுக்கு வசதியானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததைப் போல ஆண்களும் அணிந்து பார்த்தால்தான் அதன் அருமை அவர்களுக்குத் தெரியும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன். அடுத்த வாரம் வரவிருக்கும் தீபாவளிக்கு லெகிங்ஸ் வாங்குவீர்; அணிந்து மகிழ்வீர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கு பாரதியையும் கொஞ்சம் துணைக்கு அழைக்கிறேன்.

ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் ஆடவரே.

கொசுறு

‘பிரதி தின் டைம்’ என்ற அஸ்ஸாமிய செய்தி சானல், சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று பேன்ட் அணிந்திருந்த படத்தைக் காண்பித்து, ‘இப்போதெல்லாம் குரங்குகள் பேன்ட் அணிகின்றன. குவாஹாட்டியில் உள்ள இளம் பெண்கள் ‘ஷார்ட்ஸ்’ அணிகிறார்கள் என்ற செய்தியை ஒளிபரப்பியது. இது குறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி பரூவா, ‘தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, போலீஸைவிட மீடியாக்களுக்குப் பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியுள்ளது’ என கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக சானலின் செய்தி ஆசிரியரும் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

http://tamil.thehindu.com/society/women/பெண்-எனும்-பகடைக்காய்-ஆதலினால்-லெகிங்ஸ்-அணிவீர்/article7829596.ece

Link to post
Share on other sites

இன்று

1977 - றோஹண விஜேவீரவினால் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.

2006 - கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1570 - வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.

 

1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

 

1936 - கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

 

1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

Link to post
Share on other sites

12191313_936696099712418_417135633524703

தற்போதைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் துரித வேகப்பந்து வீச்சாளர், மதிப்பு வாய்ந்த சகலதுறை வீரர் - அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஜோன்சன் பிறந்த நாள்.

Link to post
Share on other sites

ஆப்பிள் சிறுமி...வாட்ஸ் அப் கதை!

 

apple%20girl.jpgப்பிளை வைத்து தனது தாய்க்கு நீதி சொல்லும் சிறுமியின் கதை, வாட்ஸ் அப்பில் வைரலாகியிருக்கிறது. அந்தக் கதை...  


ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் ,"நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு!" என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..

அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்.
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.


உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..

.
"அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு.. நீ எடுத்துக்க!" என்றாள.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து, அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது....!

http://www.vikatan.com/news/article.php?aid=51604

Link to post
Share on other sites

நவம்பர் 2 - ஜார்ஜ் ஃபூல் பிறந்தநாள்!

 

பூலியன் அல்ஜீப்ரா தெரியாத அறிவியல் மாணவர்கள் மிகக் குறைவு.

மிகவும் சுலபமான முறையில்  அமையும் அதன் குறியீடுகளும், வகுத்தல் முறைகளும் வெகு விரைவில் புரிந்து கொள்ளக் கூடிய கான்செப்ட்டுகள் 

உலகப் புகழ் பெற்ற "பூலியன் அல்ஜீப்ரா" வைக் கண்டு பிடித்த ஜார்ஜ் ஃபூலியன் பிறந்த நாள் இன்று. அவர் ஒரு கணித மேதை, கல்வியாளர், தர்க்கவியலாளர், தத்துவஞானி என பன்முகம் கொண்டவராய் திகழ்ந்தார்.

algi_vc_1.jpgஅவரது ஆய்வுகள், வகையீட்டு சமன்பாடு மற்றும் இயற்கணிதம் ஆகிய துறைகளில் இருந்தன. "லாஸ் ஆஃப் தாட்" என்கிற புத்தகத்தை இயற்றியவர். அதில்தான் பூலியன் அல்ஜீப்ராவை அறிமுகப் படுத்தியிருந்தார்.  

நாம் இன்று உபயோகிக்கும் கணினியின் மைக்ரோ கண்ட்ரோலர், மைக்ரோ ப்ராஸசர் என அனைத்துமே பூலியன் அல்ஜீப்ரா கொண்டே இயங்குகிறது. மைக்ரோ கண்ட்ரோலர் வேலைப்பாட்டின் இலக்கணம்தான் பூலியன் அல்ஜீப்ரா.

ராயல் சொசைட்டி ஆஃப் எடன்பர்க்,   "கீத் மெடல்" அளித்து  அவரை கௌரவப்படுத்தியது.

http://www.vikatan.com/news/article.php?aid=54558

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.