நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

திமிங்கலத்துடன் ஒரு செல்பி! அடேங்கப்பா….இப்படியா!!

 

 

எங்கும் செல்பி…எதிலும் செல்பி இது ஒரு மோகம் திமிங்கிலத்துடன் ஒரு செல்பி சாத்தியமா? சாத்தியப்படுத்தியிருக்கிறார் தொழின்முறை நீரடி நீச்சல் அடம் ஸ்டெர்ம்.

ஆழ்கடலில் திமிங்கலம் ஒன்றுடன் அவர் எடுத்த இந்த சுயபடமும் அதுகுறித்த காணொளியும் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

டொங்கா நாட்டின் ஆழ்கடல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தாம் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது தமக்கு அருகில் வந்த இந்த திமிங்கலம் தங்களைப் போலவே நீரில் சுழன்று அரை மணி நேரம் நடனம் ஆடியதாக வாய்பிளக்கிறார் அடம் ஸ்டெர்ம்.

https://www.ibctamil.com

Share this post


Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p80a_1534835403.jpg

மிழில் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, அதர்வாவுடன் ‘பூமராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார், மேகா ஆகாஷ். இரண்டு படங்களிலும் தனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் என்பதால், தமிழ் தெலுங்கு என அடுத்து எந்தப் படமும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் சுந்தர்.சி - சிம்பு இணையும், படத்தில் மேகாவை நடிக்க வைப்பதற்குப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சீக்கிரம் வாங்க!


p80b_1534835421.jpg

குங்ஃபூ கலைஞராக இருந்து இன்று உலகளவில் பேசப்படும் நடிகராக வளர்ந்திருப்பவர், ஜாக்கி சான். தன் வாழ்க்கை நிகழ்வுகளையும், தான் சந்தித்த மனிதர்களையும் பற்றி ‘ஜாக்கி சான் நெவர் குரோ அப், ஒன்லி கெட் ஓல்டர் (Jackie Chan: Never Grow Up, Only Get Older)’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். புத்தகத்தின்  ஐம்பதாயிரம் பிரதிகளைத் தன் தொண்டு நிறுவனம் மூலம் பீஜிங்கிலுள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு வழங்கியுள்ளார். 
சிம்பிள் ஜாக்கி!


p80c_1534835441.jpg

1980-ல் ஆரம்பித்துத் தொடர்ந்து 20 ஆண்டுகள் பாப் உலகைக் கலக்கிய மடோனா பல கார்கள் வைத்திருந்தாலும் அவரின் மினி கூப்பர் ரொம்பவே ஸ்பெஷல். இந்தக் காரைப் பற்றி `அமெரிக்கன் லைஃப்’ எனும் ஆல்பத்தில் பாடி ஹிட்டும் அடித்தார். `ஆட்டோ டிரேடர்’ எனும் இணையதளத்தில் இந்தக் கார் இப்போது விற்பனைக்கு நிற்கிறது. இந்தக் கார் இன்னும் மடோனாவின் பெயரில் தான் இருக்கிறதாம். காரின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?  மடோனாவும் அவரின் அப்போதைய பாய் ஃப்ரெண்டு கை ரிச்சியும் `டாப் டூ பாட்டம்’ பார்த்துப் பார்த்து வடிவமைத்த கார் இது. மடோனாவின் கைபட்ட மினியின் ஆரம்ப விலை 5 கோடி... முந்துங்க முந்துங்க!


p80d_1534835460.jpg

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வெப்சீரிஸாக எடுக்கப்படவுள்ளதாம். இதைத் தயாரிக்க இருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். தன் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இந்த வாழ்க்கை வரலாற்றைத் தயாரிக்கவிருக்கிறார் என்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வருமாம். ஷ்யூர் ஹிட்!


p80e_1534835485.jpg

‘டைட்டானிக்’, ‘தி ரீடர்’ படங்களில் நடித்த கேட் வின்ஸ்லெட் சைவ உணவுக்கு மாறிவிட்டார். மாமிச உணவுப் பழக்கத்தால் ஏற்படும் இழப்புகளைக் கூறும் ‘ஈட்டிங் அவர் வே டு எக்ஸ்டின்க்‌ஷன் (Eating Our Way to Extinction)’ என்ற ஆவணப் படத்திற்கு கேட் வின்ஸ்லெட் பின்னணிக் குரல் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார் கேட். பொறுப்பான ரோஸ்!

சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ரஹ்மான். டிவி திரை அல்ல... வெப்சீரிஸ். ‘ஹார்மொனி’ என்கிற ரஹ்மானின் நிகழ்ச்சி ஒன்றை சுதந்திர தினம் முதல் ஒளிபரப்புகிறது ‘அமேசான் ப்ரைம்’. இதில் இந்திய இசையின் நேற்று இன்று நாளைகளை அலசுகிறார் ரஹ்மான். இந்நிகழ்ச்சியை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி தயாரிக்க, தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியம் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் பாரம்பர்ய இசைக்கலைகள், இசைக்கலைஞர்கள் என நிறைய விஷயங்களை அலசப்போகிறாராம் ரஹ்மான். இணையப்புயல்

டகளப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசேன் போல்ட், கால்பந்தாட்டப் போட்டிகளில் களம் காணப்போகிறார். ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் போட்டிகளில் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார் உசேன் போல்ட். கடந்த ஓராண்டாக அதற்கான கடுமையான பயிற்சிகளில் இருந்த போல்ட், கால்பந்திலும் சிறப்பாக ஆடி, பேர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடின காலும்....

டுத்த ஆண்டு ஆஸ்கரில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். கூடுதலாக பிரபலமான படங்களுக்கான விருதுகளும் சேர்க்கப்படவுள்ளன என்று கூறியிருக்கிறார்கள். உலகின் எல்லாத் தரப்பு மக்களும் லைவாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் நேரத்தையும் மாற்றப்போகிறார்களாம். பாப்புலர் படங்களுக்கும் இனி விருதுகள் இருக்கும் என்று கூறியிருப்பதால் குஷியில் இருக்கிறது ஹாலிவுட். நாலு வாங்குறோம்! 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

சீன நாட்டு நாடோடிக் கதை: நம்பிக்கை துணிச்சலைத் தரும்!

 

 
NADODI_STORY

மரங்களும், செடி கொடிகளும், புதர்களுமான வனத்தை மீறிக்கொண்டு மலைகளும், குன்றுகளும் நிமிர்ந்து நிற்கின்றன. மலையின் இடுப்பு மடிக்குள் அந்தச் சின்ன கிராமம் இருந்தது. அந்த ஊரில், ஊர் மக்களை விட்டு ஒதுங்கிய நிலப்பரப்பில் ஒரு குடிசையில் வாழ்ந்தார் அந்தக் கிழவர்.
 தனது வாலிப மகனுடன் குதிரைகளையும், தோட்டத்தையும் பராமரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார், கிழவர். ஒருநாள், அவரிடமிருந்த குதிரை ஒன்று காணாமல் போனது. அதனால் குதிரை லாயத்தில் ஒரு சோகம் சூழ்ந்தது.
 "அப்பா, நம்ம குதிரையைக் காணோம்'' என்று பதற்றத்துடன் சொன்ன மகனை அமைதியாகப் பார்த்த கிழவர், ""தேடிப் பார்! அந்த குதிரை நம்மிடமே வந்து சேரும்'' என்று நம்பிக்கையூட்டினார்.
 காணாமல் போன குதிரை, நல்ல குதிரை; பாசமான குதிரை. இவர் வாசம் வந்தாலே வாலையாட்டும். இவரைப் பார்க்கும் அதன் கண்களில் நன்றி உணர்வு ஒளிவீசும். அதில் அக்குதிரையின் ஈர மனது புலப்படும். ஆனால், குதிரை எங்கு தேடியும் புலப்படவில்லை.
 ஊர் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து துக்கம் விசாரித்தனர். துக்கப் புண்ணைக் கிளறிவிட்டு இழப்பு பற்றிய மிகையான சோகத்தை மக்கள் வெளிப்படுத்தினர். நாகரிகம் கருதி பொறுமை காத்துப் பார்த்தார், கிழவர். தலையைத் தலையை ஆட்டினார். ஆனால், மக்களின் ஒப்பாரியும், புலம்பலும் எல்லை மீறி போகவே, கோபப்பட்டு வெடித்தார் கிழவர்:
 ""முட்டாள்தனமா உளறாதீர்கள். ஏன் இப்படி தொணதொணக்கறீங்க? இப்போ என்னாச்சு? குதிரையைக் காணோம். அவ்வளவு தானே? இதற்குப் போய் ஏன் இப்படி சோகத்தைப் பிழிகிறீர்கள்?'' என்று சீறி, கூட்டத்தைக் கலைத்தார்.
 நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. குதிரைகளின் கனைப்புச் சத்தத்தால் விழித்தெழுந்தார் கிழவர். உடனே எழுந்து வந்து பார்த்தால்... காணாமல் போன குதிரை வந்து நின்றிருந்தது. இவரது வருகைக்காக கழுத்தைத் திருப்பிக் காத்திருந்தது. அதனுடன், மேலும் 12 குதிரைகள்.
 "வந்துவிட்டாயா? நல்லது. கூட்டாளிகளுடன் வந்திருக்கிறாயா?'' என்று அப்போதும் இயல்பாகச் சொன்னார் கிழவர்.
 லாயம் கொள்ளாத அளவுக்கு குதிரைகள். லாயம் குதிரை பண்ணையாகவே மாறிவிட்டது.
 ""கிழவருக்கு இலவசமாகக் கிடைத்த 12 குதிரைகள்'' என்ற செய்தி காட்டுத்தீயாக ஊருக்குள் பரவ... ஊர் மக்கள் அனைவரும் வந்து பார்த்தனர். "என்ன இருந்தாலும் கிழவர் மகா யோகக்காரனய்யா! புதையல் கிடைத்தது மாதிரி 12 குதிரைகள். அடடா!'' என்றனர்.
 அவர்களைப் பார்த்து கிழவர் சொன்னார்: ""சாணி விழுந்தால் மண்ணு ஒட்டும் நிலத்திலேயே ஒண்ணு விளைந்தால் நூறாய் விளையும். ஒரு பெண் பல பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். இதிலே என்ன யோகம்? ஒரு குதிரை போய் 12-ஆக வருவதில் என்ன ஆஹா... ஓஹோ... போங்கைய்யா''.
 ஊர் மக்களின் முகம் சுருங்கிவிட்டது.
 இந்த 12 குதிரைகளை அடக்கும் முயற்சியில் வாலிபனான கிழவனின் மகன் பல நாட்களாக மல்லுக் கட்டினான். அப்போது முரட்டுக் குதிரை ஒன்று அவனை ஒரு கிடங்கில் தூக்கி எறிந்துவிட்டது. வலது காலில் முறிவு ஏற்பட்டது. தன் ஒரே மகன், தனக்கான ஒரே ஆதரவு தனது வம்சத்தின் ஒரே வித்து, அவனுக்கு இப்படி ஒரு விபத்தா?
 ஒருகணம் வருத்தப்பட்டார். நிலை குலைந்த மனசில் ஒரு நடுக்கம் உடைந்து உணர்வுகளின் கசிவு.
 எல்லாம் ஒருகணம்தான். கிழவர் சுதாரித்துக் கொண்டார்: "பார்க்கலாம் இந்தத் துன்பத்திலேயும் ஏதாவது நல்லது இருக்கலாம்' என்று. செய்தி அறிந்த ஊர்க்காரர்கள் ஓட்டமாய் ஓடி வந்தனர். கண்ணீர் விட்டார்கள்.
 கிழவருக்கு கோபம் கோபமாக வந்தது. ரௌத்திரமாய் சீறி வெடித்தார். ""போங்கய்யா! இதுல என்ன துரதிருஷ்டத்தை கண்டுவிட்டீர்கள்? நோயில் கிடக்கிறவனுக்கு தைரியம் சொல்லலாம். பயமுறுத்தி பலவீனப் படுத்துகிற நீங்கள் தான் பூமியில் துரதிருஷ்டம். போய்த் தொலையுங்கள்'' என்று ஆத்திரமாக பேசித் துரத்தினார் கிழவர்.
 "ஊர் அனுதாபப்பட்டாலும் சீறுகிறாரே. இந்தக் கிழவருக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பினர்
 மக்கள்.
 அந்த நாட்டு ராஜா நடத்திக் கொண்டிருந்த போரில் மிகப் பெரிய பின்னடைவு. பட்டாளத்துக்குச் சிப்பாய்களைத் தேடி ஊர் ஊராக வலை வீசி அலசினர். எல்லா இளவட்டங்களையும் கட்டாயமாக, இழுத்துச் சென்றனர். "சாகத்தான் போகிறோம்' என்று பயந்து புலம்பினர் இளைஞர்கள்.
 இந்நிலையில், அந்த வனப்பகுதியின் சேனாதிபதி குதிரையில் வந்தார். ஊரிலுள்ள இளவட்டங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய் விட்டார். கிழவனின் மகன் கால் முறிவு ஏற்பட்டிருப்பதால் விட்டு விட்டனர்.
 சாவின் கையில் மகன்களை பறி கொடுத்த தாய், தந்தையர் அனைவரும் அழுது புலம்பினர். தோற்று வரும் படைக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்ட இளைஞர்கள் ஊர் திரும்பவே இல்லை.
 ஊரின் ஒரே இளைஞனான கிழவர் மகன்தான் தப்பியிருந்தான். அவன் கம்பீரமாக உலா வந்தான்.
 இப்போது, எல்லா ஊர்க்காரர்களும் கிழவரை வந்து மொய்ந்தனர்."நீங்கள் யோகக்காரய்யா. ஊனமே உங்கள் மகனைக் காப்பாத்திருச்சே... நாங்கள் வம்சமில்லாமல் நாசமாயிட்டோமே...! நீங்கள் அதிருஷ்டக்காரர்கள்.''
 இதையும் மறுத்து தலையை அசைந்தார்,கிழவர். "இதில் ஒன்றும் அதிர்ஷ்டமில்லை...'' என்று மெதுவாகச் சொன்னார். "எல்லாத்துலேயும் நல்லதுதான் விளையும் எல்லாமே நல்லதுக்குத்தான் எண்ணும் மனோபாவத்தோட நாம இருந்தால்... நம்மைச் சுத்தி நடக்குற எல்லாமே நமக்கு மகிழ்ச்சியைத்தான் தரும். இதிலே யோகம்னு துள்ளுவதற்தோ- துரதிருஷ்டம் சொல்வதற்கோ ஒன்றுமில்லை. துரதிருஷ்டம் அதிர்ஷ்டம் என்று நினைப்பதெல்லாம் மூட நம்பிக்கை. நம்பிக்கை துணிச்சலைத் தரும். மூட நம்பிக்கை பயத்தைத் தரும்'' என்று அமைதியாகச் சொன்ன கிழவரின் தாடியையே எல்லாரும் புரியாமல் பார்த்தனர்.
 இப்போதும் அவரது சொற்களின் ஆழம் அவர்களுக்குப் பிடிபடவில்லை.
 ஆயினும்...
 "பெரியவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்'' என்ற முரட்டு நம்பிக்கையில் மனதைத் தேற்றிக் கொண்டனர் ஊர் மக்கள்.
 - தங்க.சங்கரபாண்டியன்

http://www.dinamani.com/

Share this post


Link to post
Share on other sites

ஊரெல்லாம் 300 பேனர் வைத்து காதலியிடம் மன்னிப்பு கேட்ட காதலன்: இதுதான் வழியா?

 

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி? என்று கூகுள் தேடுபொறியில் தேடினால் மூன்றரை கோடிக்கும் அதிகமான பதில்கள் கிடைக்கிறது!

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி?படத்தின் காப்புரிமைPRADIP LOKHANDE/BBC

உதாரணமாக, முதலாவதாக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம் தேவை, பிறகு உங்களுடைய செயலால் வருத்தப்படும் காதலிக்கு, உங்கள் நிலையை எடுத்து தெளிவாக விளக்குங்கள்.

அதுமட்டுமல்ல, காதலியின் தரப்பு நியாயத்தையும் கேட்கும் பொறுமை வேண்டும். பிரச்சனை தீர்வதற்காக அதற்கான கால அவகாசத்தையும் கொடுங்கள். பிறகு பரிசு கொடுக்கலாம், கடிதம் எழுதலாம்.

சரி, எவ்வளவுதான் யோசனைகள் கொடுத்தாலும், அனைவருக்கும் தனிப்பட்ட பாணி என ஒன்று இருக்குமல்லவா? பிறருக்கு யோசனை சொல்லி சிக்கலை தீர்க்க உதவும் ஐடியா மணிகளுக்கே இந்த விஷயத்தில் எதுவுமே தோன்றாமல் போகலாம்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகில் உள்ள பிம்பரி-சிஞ்ச்வாட் என்ற ஊரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் தனது காதலியை சமாதானப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைதான் தற்போது அனைவராலும் பரவலாக பேசப்படுகிறது.

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி?படத்தின் காப்புரிமைPRADIP LOKHANDE/BBC

அவர் அப்படி என்ன செய்தார்? நகரம் முழுக்க 300 பாதகைகளை வைத்து அதன் மூலம் தோழியிடம் மன்னிப்பு கோரினார்.

'ஷிவ்டே, ஐ ஆம் சாரி' என்று அவர் வைத்திருந்த பதாகைகளை அவரது காதலி பார்த்தாரா? மன்னித்தாரா? இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்களா? என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

பொது இடங்களில் பதாகைகளை வைப்பது, அதில் காதலியின் குடும்பப் பெயரான ஷிவ்டே என்பதை குறிப்பிட்டிருப்பது காதலிக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது அந்த இளைஞருக்கு தெரியவில்லையா? அதாவது அந்த பெண்ணின் அடையாளம் வெளிப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது, மன்னிக்கும் உணர்வுக்குப் பதிலாக வெறுப்பை தூண்டாதா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எழுகின்றன.

 

 

பொது இடங்களில் வைக்கப்பட்ட மன்னிப்புக் கோரும் அவருடைய பதாகைகளை அந்த ஊரை சேர்ந்த மக்கள் மட்டும் பார்க்கவில்லை. இந்த வித்தியாசமான விளம்பர பதாகைகள் அனைவரையும் கவந்ததன; பத்திரிகைகளில் வெளியாகி, நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் விவகாரமாகிவிட்டது.

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொது இடங்களில் மன்னிப்புக் கோரும் இதுபோன்ற சம்பவங்கள் முதலுமல்ல, முடிவுமல்ல. பல பிரபலங்களும் இப்படி வித்தியாசமான முறையில் மன்னிப்பு கோரியிருக்கின்றனர்.

பிரபல பாடகி ரிஹானாவின் நண்பர் கிரிஸ் பிரவுன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்கும் உபாயத்தை மேற்கொண்டவரே.

2009ஆம் ஆண்டு, கிரிஸ் பிரவுன், தனது காதலி ரிஹானாவை மிக மோசமாக தாக்கினார். அதை அடுத்து அவர் மீது குடும்ப வன்முறை சட்டம் பாய்ந்தது.

அதற்கு சில மாதங்களுக்கு பிறகு மன்னிப்பு கோரும் காணொளி ஒன்றை கிரிஸ் வெளியிட்டார். தனது செய்கைக்காக மன்னிப்பு கோருவதாகவும், தான் ஆரம்பத்திலேயே மன்னிப்பு கோர விரும்பியதாகவும், ஆனால் வழக்கு நடைபெறுவதை சுட்டிக்காட்டி, அமைதியாக இருக்கும்படி வழக்கறிஞர் கூறிவிட்டதாக அந்த வீடியோ செய்தியில் கிரிஸ் கூறியிருந்தார்.

ரிஹானாவிடம் தான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகவும், ஆனால் அவர் மன்னிக்க மறுத்துவிட்டதால், தற்போது பொதுவெளியில் அனைவரின் முன்பு மன்னிப்பு கோருவதாக பகிரங்கமான அந்த வீடியோப் பதிவில் கிரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

 

 

தன் மீதான வழக்குக்காக மன்னிப்பு கோரினாரா? பிறருக்கு முன்மாதிரியாக இருக்கலாம் என்று மன்னிப்பு கோரினாரா? மன்னிப்பு கோரியதில் அவரின் நோக்கம் என்ன?

கிரிஸ் பிரவுனுக்கு, ரிஹானாவிடம் இருந்தோ, நீதிமன்றத்திடம் இருந்தோ மன்னிப்பு கிடைக்கவில்லை. குடும்ப வன்முறை செய்த குற்றத்திற்காக கிரிஸுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

நடனமாடி மன்னிப்பு கேட்டவர்

இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் 'ஷிக்கி நடனம்' மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஷிக்கி தன்னுடைய காதலியிடம் பொது வெளியில் மன்னிப்புக் கோரினார்.

ஷிக்கி வெளியிட்ட வீடியோ பதிவில், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தற்காக தன் காதலியிடம் அவர் மன்னிப்புக் கோரினார். தனது பிரபலத்தை சுட்டிக்காட்டவும், காதலியை சிறுமைபடுத்தி காண்பிப்பதற்காகவும் தான் இவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ விரும்புவதால் மன்னிப்புக் கோருவதாகவும் தனது செயலுக்கு வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஷிக்கி மன்னிப்பு கோரியது அவரது காதலியின் மனதை மாற்றியதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்களே ஷிக்கியை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஆண்கள் என்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும், அவர் பெண்களை பார்க்கும் கண்ணோட்டம் என்ன என்பதை, ஷிக்கியின் மன்னிப்பு கேட்கும் காணொளிப் பதிவு வெளிப்படுத்துவதாக பலர் டிவிட்டர் பதிவுகள் மூலம் ஷிக்கியை விமர்சித்திருந்தனர்.

 

 

பிரபலமான ஒருவர் பொதுவெளியில் மன்னிப்பு கோருவதன் பொருள், சம்பந்தப்பட்டவர்களுக்கான தனிப்பட்ட செய்தி மட்டுமல்ல, பொதுவெளியில் தனது நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதாக இருக்கலாம். ஆனால் நோக்கம் சரியில்லை என்றால் அது மன்னிப்புக் கோரியவரையே பதம் பார்த்துவிடலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஐ.நா-வோ, உலக சுகாதார அமைப்போ அல்லது எந்த உலகளாவிய ஆராய்ச்சியோ, மன்னிப்புக் கோருவதற்கு தர நிர்ணயம் செய்யவில்லை.

ஆனால் காதலி உங்களிடம் பேச விரும்பாவிட்டாலும் கூட நீங்கள் வலியச் சென்று பேச முயற்சிப்பது, முடியாது என்று உறுதியாக சொல்பவரை வலுக்கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவரை பின்தொடரும் நடவடிக்கைகளாக கருதப்படலாம்.

மன்னிப்பு கோரியும், மன்னிக்காவிட்டால், கொடூரமானவராக உலகத்தின் முன் சித்தரிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுவெளியில் இப்படி பகிரங்கமாக கோரப்படும் மன்னிப்பு கோரிக்கை பரிசீலிக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளபட்டாலும், அது உளப்பூர்வமானதாக இருக்குமா? இதயங்களை சேர்க்கும் பாலமாக மாறுமா என்பதை உறுதியாக கணிக்கமுடியாது.

அன்பும் மன்னிப்பும் பகிரங்கமாக கோரப்படுவதால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான தனிப்பட்ட உணர்வுகளை அடிப்படையாக கொண்டவை. இருவருக்கும் பொதுவான நோக்கம் சரியானதாக மட்டுமல்ல, பொருந்திப் போவதாகவும் இருக்கவேண்டும்.

அதற்கு தவறை ஒத்துக் கொள்ளும் மனம் மற்றும் திறந்த மனதுடன் மற்றவர்களின் தரப்பை கேட்கும் பொறுமை ஆகியவை அவசியம்.

இவை மட்டும் போதுமா? பதிலை கேட்பதற்கும் பொறுமை தேவை. அன்பையோ மன்னிப்பையோ எதிர்த் தரப்பினர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதை சரியான நோக்கத்துடன் புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம்.

 

 

மன்னிப்பை ஏற்றுக்கொண்டால், தன்னுடைய தவறை முழுமையாக சரி செய்வதற்கும், மன்னிப்பு கோரும்போது சொன்னவற்றை சரிவர நிறைவேற்றும் உறுதியும் வேண்டும். மன்னிப்பு கிடைத்ததும் மீண்டும் அதே தவறை திரும்பச் செய்யக்கூடாது.

ஏனெனில் 'ஐ அம் சாரி' என்று சொல்வது தவறை திருத்திக் கொள்வதற்கான இறுதி நடவடிக்கை அல்ல, அதுதான் முதலடி. பிறகு தவறை சரி செய்யவும், மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் மனப்பூர்வமான முயற்சிகள் தொடரவேண்டும்.

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையின் பின்னணி, வார்த்தைகளால் சொல்லித் தீர்த்துவிட முடியாத அடர்ந்த அர்த்தங்களை கொண்டது.

"மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன், மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்" என்ற 'விருமாண்டி' திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

https://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites

 

தடைகளை தகர்த்து காவல்துறை பணியில் திருநங்கை நஸ்ரியா

பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார் திருநங்கை நஸ்ரியா. இடைவிடாத முயற்சியால் காவலராக தேர்ச்சி பெற்ற நஸ்ரியா காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சிக்கு பின்னர் தற்போது அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்திலேயே பணியாற்ற தொடங்கியுள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் (24-8-1875)

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் (24-8-1875)
 
அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆங்கிலக் கால்வாய் ஆகும். வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் இந்த கால்வாய், சுமார் 562 கிலோ மீட்டர் நீளமும் 240 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

இவ்வளவு பெரிய கால்வாயை எந்த செயற்கை கருவிகளின் உதவியும் இன்றி, கேப்டன் மேத்யூ வெப் என்பவர், நீந்தி கடக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், 1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார். டோவரில் இருந்து கலாயிஸ் வரையிலான சுமார் 64 தூரத்தை 21 மணி 45 நிமிடங்களில் கடந்தார். மறுநாள் அதாவது ஆகஸ்ட் 25-ம் தேதி தனது வெற்றிப் பயணத்தை முடித்த அவர், ஆங்கில கால்வாயை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை பதிவு செய்தார்.

1848ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பிறந்த மேத்யூ வெப், 1873ல் ‘எமரால்டு’ என்ற நீராவிக்கப்பலின் கேப்டனாக பணியாற்றினார். அப்போது ஆங்கில கால்வாயை கடக்கும் ஜே.பி.ஜான்சனின் முயற்சி தோல்வியடைந்தது பற்றி படித்தார். அதன்பின்னர் தானும் அந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்று தீவிர பயிற்சி செய்தார்.

1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, அவர் கால்வாயை நீந்தி கடக்க முயன்றார். ஆனால், கடுமையாக காற்று வீசியதாலும், அலைகள் கடும் சீற்றத்துடன் இருந்ததாலும் அவர் தனது முயற்சியை கைவிட்டார். பின்னர் 24-ம் தேதி தனது இலக்கை எட்டினார்.
 
 
இதேபோல் ஆகஸ்ட் 24-ம் தேதியில் நினைவில் நிற்கும் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் கொள்ளை நோயைக் காரணம் காட்டி 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
 
1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

1814 - பிரிட்டிஷ்  படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.

1821 - ஸ்பெயினுடன் மெக்சிகோ நடத்திய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
  
1931 - பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
  
1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
  
1939 - நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
  
1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது

1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கார்ப்பசேவ் விலகினார்.

1972 - நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை இறந்த நாள்.

1954 - பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
  
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரைன் பிரிந்தது.

1992 - மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

1929 - பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத் பிறந்த நாள்.
 

https://www.maalaimalar.com/

Share this post


Link to post
Share on other sites

வலைபாயுதே

 

 

twitter.com/Aruns212

‘இப்படித்தான் நீங்க இருக்கணும்டா!’ என்று பிரிந்துகிடக்கும் மக்களை ஒவ்வொரு முறையும் இயற்கைதான் இணைத்து வைக்கிறது.

twitter.com/teakkadai1

தன் கரியரில் அடுத்தகட்ட நிலைக்குப் போக முடியவில்லை என்று உணருபவர்கள் பழைய பெருமையைப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

p112a_1534928018.jpg

twitter.com/chenthil_nathan

இந்த சத்யம் தியேட்டர் பாப்கார்ன் கும்பல் தொல்லை தாங்கலையே. இதுக்கு முன்னாடி தியேட்டர்லாம் கை மாறினதே இல்லையா? என்னமோ சென்னையின் அடையாளமாம் சென்ட்ரல் ஸ்டேஷனையே இடிச்சிட்ட மாதிரி புலம்பறாங்க.

twitter.com/kumarfaculty

கறிக்கடைகளில் நாட்டுக்கோழிகளைக் கூண்டில் அடைத்து வைத்திருந்தாலும் தப்பிக்கவே பார்க்கிறது. பிராய்லர் கோழிகளுக்குக் கூண்டுகளே தேவை யில்லை...!

twitter.com/Kozhiyaar

பிறந்த தினத்தைக் கவலையோடு எதிர் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள் எனில் நடுத்தர வயதைக் கடக்க ஆரம்பிக்கி றீர்கள் என்று பொருள்!

twitter.com/rdeepakk

தம்பிகள் தேவையான அளவு பிரபாகரனை அசிங்கப்படுத்திட்டதால இப்ப சோழர்களுக்கு வந்திருக்காங்க.

twitter.com/naaraju

10ml’க்கு மேல பெர்ஃப்யூம் போட்டுக்கற வய்ங்களுக்கு, குரோமோசோம்ல கோளாறு வந்துடும்ன்னு ஹீலர் பாஸ்கரை வச்சுக் கிளப்பி விட்டாத்தான்யா அடங்குவீங்க...

facebook.com/Vinayaga Murugan

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கதைசொல்லி சீமான்

twitter.com/SuDLX

பாஜக உருவாக்கிக்கொண்டிருப்பது ஒரு கோரமான முன்னுதாரணம்.  தெற்கில் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் எனும்போது ஆட்சி மாறினாலும் இந்த ஓரவஞ்சனை தொடர வாய்ப்பிருக்கிறது. ஆக  நம் காலத்திலேயே திராவிடநாடு சாத்தியப்படலாம்.  ஆச்சர்யப்படுவதற்கில்லை.

twitter.com/Kannan_Twitz

கிரேவி கம்மியா இருக்கேனு சப்பாத்திய கொஞ்சமா பாத்துப் பாத்து தொட்டு சாப்பிட்டேன். கடைசியில சப்பாத்தி காலியாகிடுச்சி. கிரேவி கால் பிளேட் மீதி இருக்கு. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு ஏமாற்றமானது.

p112c_1534928052.jpg

twitter.com/rahimgazali

கொசு நம்மைக் கடிப்பதற்கான காரணம் நமக்குத் தெரியும். ஆனால் இந்த எறும்பு நம்மை ஏன் கடிக்குதுன்னு எறும்புக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது.

facebook.com/Mugil Siva

எட்டுவழிச்சாலைகளைவிட, தமிழகத்தில் கடைமடை முதல் கடைக்கோடிக் கண்மாய்கள் வரை நீர்ப்பாதைகளைச் செப்பனிடுவதே முக்கியம்.உங்கள் சம்பந்திக்கு இந்த கான்டிராக்டைக் கொடுத்தாவது இதைச் செயல்படுத்துங்கள். தமிழகத்தின் வரலாற்றில் உங்கள் பெயரும் போற்றப்படும்.

twitter.com/ajmalnks

ஜவுளிக்கடைகளில் பெண்கள் பகுதிக்கு குஷன் வைத்த நாற்காலி போடும் நிர்வாகம் ஆண்களுக்கு ஸ்டூல்கூடப் போடுவதில்லை.

twitter.com/lib____

கலைஞர் இல்லாத முதல் சுதந்திர தினம்.

twitter.com/Kozhiyaar

அணைத்து வைக்கப்பட்ட கைப்பேசிக்குள் உள்ளன ஆயிரம் கதறல்கள்!

twitter.com/amuduarattai

செய்தி: கப்பலில் 60,000 யானைகளை ஏத்திட்டுப் போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள் # சீமான்.

பஞ்ச்: வாட்ஸ் அப் வதந்தியைவிட, சீமான் வதந்தி பெரிசால்ல இருக்கு.

twitter.com/KalaChinnadurai

இவர்களைத் தவிர்த்துவிட்டு வாழவே முடியாது என்கிற அளவுக்கு நம் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக் கிறார்கள் இளையராஜாவும் வடிவேலுவும்...

twitter.com/nandhu_twitts

கூட யாராச்சும் வந்திருக்காங்களா என்ற டாக்டரின் கேள்விக்கு... அந்த முதியவரின் மெளனம் நோயினும் கொடியது..!

twitter.com/Akku_Twitz

கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள் ஓய்வறியா அலைகளைப் பார்த்தபடி #முரண்

twitter.com/Akitamilachi

அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியான்னு கத்தத் தெரியுது, சாப்டீங்களாமான்னு அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்கத் தோண மாட்டேங்குது... சிலருக்கு!

twitter.com/Thaadikkaran

குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவாம், அடேய் நானும் எங்கம்மாவுக்குக் குழந்தைதான்டா. என்னைக்காவது லீவு விட்டிருக்கீங்களா ஆபீசர் அப்ரசெண்டிகளா..!! #அவலக்குரல்

twitter.com/SolitaryReaper_

ஆனா இந்த ‘எடை குறைவதற்கு முன்’, ‘குறைந்த பின்’ போட்டோக்களில் குண்டா இருக்கும்போதே முகம் லட்சணமா இருக்காப்லயும், அடுத்த போட்டோவில டொங்கடிச்சு இருக்காப்லயும் தோணுதே....

சைபர் ஸ்பைடர்

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி மொழி: வினோத ஆப்பிரிக்க பழங்குடியினர்

பெண்கள் பேசுவதைவிட வித்தியாசமாக ஆண்கள் பேசுகின்ற ஒரே சமூகம் உலக அளவில் உபாங் மக்கள் மட்டுமே.

பெண்களின் மொழியை குழந்தைகள் முதலில் கற்கின்றனர். 10 வயதில் சிறுவர்கள் ஆண்களின் மொழியை கற்பர். கடவுள் பூமியை படைத்தபோது, இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.

அந்த விரும்பத்தை கடவுள் உபாங்கில் இருந்து தொடங்கியதாக மொழியை ஓர் ஆசீர்வாதமாக பார்க்கும் இந்த பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.

Share this post


Link to post
Share on other sites

மகாராணி வாழ்ந்த வீடு: அரிய புகைப்படங்கள் வெளியாகின!

 

625.0.560.350.160.300.053.800.668.160.90-5-1-720x450.jpg

வேல்ஸ் மக்கள் தங்கள் அன்பு இளவரசிக்காக பரிசளித்த வீட்டின் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியாகி வைரலாகி வருகின்றது.

எலிசபெத் மகாராணி தனது சிறுவயதில், தங்கை மார்கரட்டுடன் செலவிட்ட அரிய தருணங்கள் அந்த புகைப்படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறிய வீடு என்று அழைக்கப்படும் அந்த வீடு ராணியார் ஆறு வயதாக இருக்கும்போது அவருக்கு பரிசளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அவருக்குப் பின் அவரது பிள்ளைகள், அவர்களுக்குப் பின் அவர்களது பேரப்பிள்ளைகள் என அந்த வீடு இன்னும் இளவரசிகளுக்கு பிடித்த வீடாக உள்ளது.

அதிலும் இளவரசி Beatrice தனது சிறு வயதின் பெரும்பகுதியை அந்த வீட்டில் செலவிட்டதோடு, உலகின் மிக கவர்ச்சியான வீடு அதுதான் என அதை வர்ணித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

 

 

http://athavannews.com/மகாராணி-வாழ்ந்த-வீடு-அரி/

Share this post


Link to post
Share on other sites

பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)

 
 
 
 
பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)
 
உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜெண்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு.

உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு பறவைகளின் ஆறு என்று பொருள். 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன.

காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. பொய்னஸ் ஏரிஸ்வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ ராணுவ மையமாகவும் செயல்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன.

பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25, 1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கையின் மூலம் 1828-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.

* 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.

* 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

* 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

* 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

* 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

* 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

* 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது.

* 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது.

* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

* 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

* 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

* 2007- கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள்

* 1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி

* 1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்

* 1952 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

இறந்த நாள்

* 1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)

* 1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)

* 1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)

* 1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)

* 2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி

* 2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)

* 2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)

* 2012 - நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

 

` வந்தா ராஜாவாத்தான் வருவேன்...' ’செக்க சிவந்த வானம்’ படத்தின் டிரெய்லர்..!

Share this post


Link to post
Share on other sites

 

வண்ணமயமான நீரூற்று; நிறம் மாறும் ஏரி - இந்த அதிசயங்கள் எங்குள்ளன?

அமெரிக்காவின் வயேமிங்கிலுள்ள எல்லோஸ்டோன் தேசிய பூங்காவிலுள்ள கிராண்ட் பிரிஸ்மடிக் நீரூற்றில் வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வாழும் நுண்ணுயிரிகளால் வானவில் நிறங்கள் தோன்றுகின்றன.

 

ஃபிளை கேசெர் என்று அழைக்கப்படும் நெவாடாவிலுள்ள புவியியல் அதிசயம், புவிவெப்ப நீரை இது உமிழ்வதோடு அதிலுள்ள பாசி பாறையின் நிறத்தை மாற்றி காட்டுவது போன்ற உலக அழகின் அதிசயங்களை நமது கண்முன் கொண்டு வரும் காணொளி.

Share this post


Link to post
Share on other sites

கிருபானந்த வாரியார் பிறந்தநாளில்..!


 

 

vaariyar

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

 

 

மிக அளப்பரிய விஷயங்களைக் கூட மிக எளிமையாகவும் இனிமையாகவும் ரசித்துச் சிரித்து உள்ளுக்குள் ஏற்றிக்கொள்ளும்படியாகவும் நமக்கு வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த தினம் இன்று (ஆகஸ்ட் 25).

இந்த நாளில், வாரியார் சுவாமிகளை வணங்குவோம். அவரின் கருத்துக்களை ஏற்று நடப்போம்.

 

அவர் சொன்ன பொன்மொழிகளில், சில!

* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகுங்கள்.

* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும் போது கவலையும் அடையாதே.

* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால் உணவு சமைக்கும்போது நல்ல எண்ணத்துடன் சமைக்கவேண்டும்.

* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. ஆகவே நம் வாழ்க்கைத் தரம் அதனால் உயர்வு அடைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* பிறரின் குற்றங்களை அலசி ஆராய்வது கூடவே கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது அதைவிட செய்யக்கூடாத விஷயம்.

* போற்றுதலையும் தூற்றுதலையும் சரிசமமாக நினைப்பவர்களின் உள்ளத்தில் எப்போதும் அமைதி மட்டும் அல்ல ஆனந்தமும் குடியிருக்கும்!

வாரியார் பத்து!


 

 

vaariyar-swamigal

திருமுருக கிருபானந்த வாரியார்

 

 

சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார்  பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 25). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

l வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் (1906) பிறந்தார். இசை, இலக்கியத்தில் வல்லவரான தந்தை, 3 வயதில் இருந்தே தன் குழந்தைக்கு இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தந்தார். சிறுவனுக்கு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் சித்தித்தது.

 

l ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், மகனை அனுப்பிவைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

l யானைக்கவுனி தென்மடம் பிரம்ம வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அபரிமிதமான நினைவாற்றல் படைத்தவர். சிறந்த முருக பக்தர்.

l திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா உள்ளிட்டவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களை மனப்பாடமாக அறிந்தவர். சொற்பொழிவின்போது, அவற்றை இசையோடு பாடுவார்.

l ‘திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாத இதழை 37 ஆண்டுகளாக நடத்தினார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக ‘தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாக, எளிய நடையில், இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

l சொற்பொழிவுக்கு நடுவே, குழந்தைகளிடம் ஆன்மிக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை அன்புப் பரிசாகத் தருவார். இதற்காகவே முன்வரிசையில் இடம்பிடிக்க சிறுவர்கள் போட்டிபோடுவார்கள்.

l படித்தவர், பாமரர், முதியோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாகப் பேசுவார். பெண்மையைப் போற்றவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுவார். குழந்தைகளுக்குத் தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான்.

l தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ படத்துக்கு வசனம் எழுதினார். துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். எம்ஜிஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான்.

l ஏராளமான கோயில்களில் திருப்பணி நடைபெற உதவியவர். ஆன்மிக, அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். சென்னை தமிழிசை மன்றம் ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது.

l வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87 வயதில் (1993) விமானப் பயணத்தின்போது மறைந்தார்.

https://www.kamadenu.in

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)

 
 
 
 
அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)
 
அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

1970-ம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியூடிபுல் பார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் என பலர் இவரை புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் கிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினர்.

சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிவனவாகவும் செய்திகளை வெளியிட்டன. இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.
 
 
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1768 - கேப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தார்.

* 1795 - திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவர்ட் தலைமையிலான பிரிட்டன் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரிட்டானியர்களாகல் முற்றுகைக்குள்ளானது.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.

* 1920 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

* 1942 - உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.

* 1957 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

* 1972 - 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.

* 1978 - முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.

* 1978 - முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

* 1993 - யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

* 1997 - அல்ஜீரியாவில் 60-க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2006 - திருகோணமலை மூதூர் கிழக்கில் ஸ்ரீலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

பிறப்புகள்:-

* 1880 - கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)

* 1883 - திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)

* 1927 - அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)

* 1933 - வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)

* 1934 - ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)

* 1952 - பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)

* 1956 - மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி
 

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

பில் கேட்ஸின் வீடு

 

 
billgatesjpg

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில் கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்?

பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது ஒர் கற்பனையான அற்புத உலகத்தைக் குறிக்கிறது. அதுபோல ஸாநாடு என்பது பெரும் கம்பீரமும் அழகும் அமைந்த ஒரு கற்பனைப் பகுதியைக் குறிக்கிறது. அந்தக் கற்பனைப் பகுதியைத்தான் நிஜமாக்கித் தன் வீட்டுக்குப் பெயராகவும் வைத்திருக்கிறார் பில் கேட்ஸ்.

 

பில் கேட்ஸ் ஏழு வருடங்கள் செலவழித்து வாஷிங்டன் ஏரிக்கு எதிராகத் தனது இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.

மெடினா என்ற இடத்தில் உள்ளது பில் கேட்ஸின் வீடு. 66,000 சதுர அடி பரப்பளவில் அமைந்த மாளிகை. 2009-ல் இதற்காக அவர் கட்டிய சொத்து வரி 106 கோடி அமெரிக்க டாலர். வெளியிலிருந்து பார்த்தால் வீடு முழுவதுமாகத் தெரியாது. காரணம் பல மரங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. 2,500 சதுர அடியில் ஒரு ஜிம் உண்டு. உணவு அறையின் பரப்பளவு 1,000 சதுர அடி.

படுக்கை அறைகள் எவ்வளவு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஏழே ஏழுதான். “முப்பது, நாற்பது படுக்கை அறைகளை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?” என்று பில் கேட்ஸின் மனைவி ஒரு முறை சிரித்துக் கொண்டே கேட்டதாகச் செய்தி வெளியானதுண்டு. ஆனால் 24க்கும் அதிகமான குளியலறைகள் கொண்ட வீடு இது. அவற்றில் பத்தில் குளியலறைத் தொட்டிகள் உண்டு. வரவேற்பு அறையில் 200 பேர் வரை உட்காரலாம். 22 அடி வீடியோ திரை ஒன்று அதன் ஒரு சுவரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

billgates%202jpg
 

அறைகளில் உள்ள வெப்ப நிலை ஒரு உயர்தர சென்ஸார் அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 60 அடி நீளம் கொண்ட நீச்சல் குளம். நீருக்குள்ளேயே மியூசிக் சிஸ்டம் உண்டு. இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடிச் சுவர் ஒன்று இருக்கிறது. அதற்குக் கீழே நீச்சலடிக்கச் சென்றால் மேல் மாடியை அடைந்து விடலாம்.

கீழ்த்தளத்தில் கார்களை நிறுத்தப் பல இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றில் 10 கார்களை நிறுத்தலாம். கான்க்ரீட், எவர்சில்வர் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி மட்டும் வெகு ரகசியமானதாம்.

ஒரு விருந்தாளி பில் கேட்ஸின் மாளிகைக்குள் நுழைந்து விட்டால் அவருக்கு ‘பின்’ ஒன்றைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் சென்ஸார்களை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மாளிகையை உருவாக்க 300 கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் 100 பேர் எலக்ட்ரீஷியன்கள்.

bill%20gates%203jpg

ட்ராம்போலின் என்பது எலாஸ்டிக் தன்மையுடைய பெரியவர்களும் ஆடக் கூடிய ஒன்று. ஸ்பிரிங் தன்மை கொண்ட இதில் வெகு உயரத்துக்கு குதித்து குதித்து விளையாடலாம். பில் கேட்ஸின் வீட்டில் இது வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அதற்கு 2,500 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீட்டில் உள்ள நூலகத்தில் நிறைய புத்தகங்கள் உண்டு. இதில் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த ஒரு ஓவியத்தை 30.8 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி மாட்டியிருக்கிறார் பில் கேட்ஸ். லியனார்டோ டாவின்ஸியின் கையெழுத்துப் பிரதி ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறாராம்.

ஜில்லோ என்ற ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனம் அந்த வீட்டின் மதிப்பு 18 கோடி டாலர் என்கிறது.

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

 

பாரிஸில் சர்ச்சைக்குள்ளான கழிப்பிடம் - காரணம் என்ன?

சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ள திறந்தவெளி பொது சிறுநீர் கழிப்பிடங்கள்தான் பாரிஸில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. வைக்கோல் நிறைந்த, நாற்றமற்ற இந்த கழிப்பிடங்கள் ஆபாசமானது என்று விமர்சிக்கப்படுகின்றன.

Share this post


Link to post
Share on other sites

''வெங்காயம் - பூண்டு உரிக்கும் மெஷின் அப்பாவோட மூளை... என்னோட டெக்னாலஜி கலந்தது'' - அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி

 
 

"இந்த இயந்திரம் மூலம் வேலை நேரத்தைக் குறைப்பதுடன், அந்த உணவுப்பொருளை நீண்ட நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் முடியுமாம். ஊறுகாய் கம்பெனிகள், கேட்டரிங் சர்வீஸ், பெரிய ஹோட்டல்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் உதவியா இருக்கும்."

''வெங்காயம் - பூண்டு உரிக்கும் மெஷின் அப்பாவோட மூளை... என்னோட டெக்னாலஜி கலந்தது'' - அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி
 

வெள்ளைப்பூண்டு, வெங்காயம்  உரிக்கும் மிஷின்களைத் தந்தையுடன் இணைந்து கண்டறிந்து, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார் முத்து ப்ரீத்தி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்து ப்ரீத்தி, “எங்க தாத்தா காலத்திலிருந்து எங்கள் குடும்பத்துக்கு இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் பழக்கப்பட்டது. தாத்தாவுக்குப் பிறகு அப்பா நாகராஜ் மிஷின்கள் உருவாக்குவதில் ஆர்வமாக இருதார். மாடர்ன் ரைஸ் மில்களில் பல இயந்திரங்களைச் செய்துகொடுத்து வேலைகளை எளிமையாக்கினார். கர்நாடக பொன்னி  உள்ளிட்ட வெளிமாநில நெல் அரிசி ரகங்கள், குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்க ஆரம்பிச்சதும், ரைஸ்மில்களுக்குத் தேவைகள் குறைய ஆரம்பிச்சது. அதனால், ரைஸ் இயந்திரங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

அப்பா மகள் - வெங்காயம் பூண்டு

 

 

என்ன செய்யலாம்னு யோசிச்சோம். ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனங்களில் சென்று பார்த்தபோது எலுமிச்சை, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உரிக்க நிறைய நேரம் தேவைப்படறதையும் சிரமம் இருக்கிறதையும் உணர்ந்தோம். அதற்கான மெஷினைக் கண்டுபிடிக்கலாமே என நினைச்சோம். உடனே செயலில் இறங்கின அப்பா, மேனுவல் மெஷின் தயாரிச்சுக் கொடுத்தார். அதற்கு வரவேற்பு கிடைச்சது. என்.ஐ.எஃப் தேசிய விருதையும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் வாங்கினார். நான் எம்.டெக் படிக்கும்போதே இதன்மீது ஆர்வம் வந்துச்சு. கல்லூரி புராஜெக்ட்டாக, மேனுவலாக இருந்த வெள்ளைப்பூண்டு உரிக்கும்  இயந்திரங்களை, ஆட்டோ மிஷினாக மாற்றினேன். இப்போ, அதில் பல நுணுக்கங்களைச் சேர்த்து, இந்திய அளவில் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யறோம்'' என்கிறார்.

 

 

ப்ரீத்தி - வெங்காயம் பூண்டு மெஷின்

இந்த இயந்திரம் மூலம் வேலை நேரத்தைக் குறைப்பதுடன், அந்த உணவுப்பொருளை நீண்ட நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் முடியுமாம். ஊறுகாய் கம்பெனிகள், கேட்டரிங் சர்வீஸ், பெரிய ஹோட்டல்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் உதவியா இருக்கும். வெள்ளைப்பூண்டு, வெங்காயங்களை உரிச்சு, வெளியூர்களுக்கு பாக்கெட் போட்டும் அனுப்பலாமாம். 

ப்ரீத்தி - வெங்காயம் பூண்டு மெஷின்

''இந்த வெள்ளைப்பூண்டு, வெங்காயம் இருப்பதை மூன்று கட்டமாக செய்கிறோம், முதலில், டிரையர் மெஷினில் வைத்து, டைம் செட் செய்யறது. பிறகு, தூசுகள் அகற்றும் இயந்திரத்தில் கொட்டி, முழுமையாகத் தூசுகளை அகற்றுவது, பிறகு, தோலை உரிக்கும் பகுதியில் செலுத்தி தோல்களை உரிபப்து. 1 மணி நேரத்தில் 100 கிலோ வெள்ளைப்பூண்டுகளை தயார்செய்துடலாம். அதேபோல், சின்ன வெங்காயத்தை 1 மணி நேரத்தில் 120 கிலோ முதல் 150 கிலோ வரை உரிச்சு எடுக்கலாம். பெரிய வெங்காயம் 100 முதல் 120 கிலோ வரை எடுத்துடலாம்.

 

 

கைகளால் உரிக்கும்போது 5 கிலோவுக்கே கடுமையா வலி ஏற்பட்டுவிடும். சுகாதாரக் குறைவும் இருக்கும். இந்த இயந்திரம் மூலம் உரிப்பதால், பிரச்னை இருக்காது. ஆனால், அதிக அளவு வெள்ளைப்பூண்டு , வெங்காயம் உரிப்பவர்களுக்குத்தான் இந்த இயந்திரம் சாத்தியம். பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் பல இடங்களிலிருந்து இயந்திரத்தை வாங்கறாங்க. அப்பாவும் நானும் இணைந்து இன்னும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம். ஐ.ஏ.எஸ் ஆகறது என்னுடைய கனவு. அதனுடன் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளும் தொடரும்'' எனப் புன்னகைக்கிறார் முத்து ப்ரீத்தி.

வெங்காயம் பூண்டு

முத்து ப்ரீத்தியின் தந்தை நாகராஜ், “என்னுடைய அனுபவமும் மகளின் டெக்னிக்கல் ஐடியாவும் இணைந்து உருவானதுதான் இந்த இயந்திரம். இதன்மூலம் கிலோ கணக்கில் உரிக்கும் தொழிலாளர்களின் பணிச்சுமை குறையுது. முதலாளிகளின் சிரமங்களும் தவிர்க்கப்படுது. சீனப் பொருள்களுக்குப் போட்டியாக இந்த இயந்திரம் நுணுக்கமாக செயல்படுது. பல ஊறுகாய் நிறுவனங்கள், எங்களைத் தொடர்புகொண்டு இயந்திரங்களை வாங்கறாங்க'' என்கிறார் பெருமையுடன்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 27
 

image_17974a26eb.jpg1916 : முதலாம் உலகப் போர் - ருமேனியா ஆஸ்திரியா, ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர்  ஜேர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

1928 : போருக்கெதிராக கெலொக் - பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.

1939 : உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.

1952 : லக்சம்பேர்க்கில் மேற்கு ஜேர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜேர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

1957 : மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

1962 : நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.

1975 : போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1979 : அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐ.ஆர்.ஏயின் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டு வெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982 : துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென, இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

1985 : நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.

2000 : மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

2003 : செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீற்றர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.

2006 : அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில், 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

http://www.tamilmirror.lk/

Share this post


Link to post
Share on other sites

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம் - சிறப்பு டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுல்

 
அ-அ+

கிரிக்கெட் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என புகழப்படும் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது அதை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல். #DonBradman

 
 
 
 
கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம் - சிறப்பு டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுல்
 
வாஷிங்டன் :

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டான் பிராட்மேன், பலரும் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பல்வேறு சாதனைகளை இன்று வரை தன்னிடம் வைத்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான். அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசமானது.

அதற்கு உதாரணம் 1930-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்தத் தொடரில் முதல் டெஸ்டில் 131, இரண்டாவது டெஸ்டில் 254 ரன்கள் என குவித்து அசத்திய டான் பிராட்மேன். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தை கதற விட்டார்.

ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதம், அன்றைய நாள் முடியும்போது 309 ரன்களுடன் நாட் அவுட் என உச்சத்தைக் காண்பித்தார். ஒரே நாளில் 300 ரன்கள் இன்னும் யாராலும் தாண்ட முடியாத சாதனையாகவே உள்ளது.

அவர் விளையாடிய 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது.

அவர், 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். 50-களை 100-ஆக மாற்றக்கூடிய வித்தையில் பிராட்மேனின் சராசரி 69.05. ‘கிரிக்கெட் கடவுள்’ என்று புகழப்படும் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கியது கிடையாது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னிகரில்லா அந்த சாதனையாளனை கௌரவிக்கும் விதமாக பிராட்மேன் கிரிக்கெட் பந்தை விளாசுவது போல் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல்.  #DonBradman

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

தனது மூளையிலிருந்தக் கட்டியை அகற்றும் நேரத்தில் விசித்திரமாக நடந்து கொண்ட யுவதி..!!

 
 

தனது மூளையிலிருந்த கட்­டியை அகற்ற மருத்­து­வர்கள் 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டபோது பெண்­ணொ­ருவர் விழித்­தி­ருந்­த­வாறு பாடல்­களைப் பாடி­ய­வாறும் நகைச்­சுவைக் கதை­களைக் கூறி­ய­வாறும் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் வியப்­பூட்டும் காணொளிக் காட்­சி­யொன்று அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஸ்கொட் லாந்தின் கிளா ஸ்கோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யையும் நகைச்­சுவைக் கலை­ஞ­ருமான சாரா மே பிலோவே (35 வயது) இவ்­வாறு தனது மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­படும்போது புன்­ன­கை­யுடன் பாடிக் கொண்டும் நகைச்­சுவைக் கதை­களை கூறிக் கொண்டும் இருந்­துள்ளார்.

அவர் பயிற்சி பெற்ற பாடகி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவர் கடந்த வருடம் டிசம் பர் மாதம் சுக­வீ­ன­முற்ற நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்­லப்­பட்ட போதே அவ­ருக்கு மேற்­படி நோய் ஏற்­பட்­டி­ருப்­பது அடை­யாளம் காணப்­பட்­டது.

இந்த சத்­தி­ர­சி­கிச்­சையின் போது சாரா­வுக்குத் தெரி­யாமல் கடந்த 15 வருட கால­மாக அவ­ரது தலையில் விருத்­தி­ய­டைந்­தி­ருந்த கட்­டியின் 85 சத­வீ­த­மான பகுதி அகற்­றப்­பட்­டுள்­ளது.

http://www.virakesari.lk/

Share this post


Link to post
Share on other sites

‘வறுமையும், சுகவாழ்வும்’ - பொருளாதார சமனின்மையை சொல்லும் பத்து படங்கள் #2MinsRead

உலகெங்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் மிகப்பெரிய சமூக சிக்கலாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் அரசியல் ஸ்திரமற்றதன்மைக்கும் காரணமாகிறது.

சமனின்மை

 

மெக்ஸிகோ நகரம்

புகைப்பட கலைஞர் ஜானி மில்லர் தன் ட்ரோன் புகைப்பட கருவியுடன் தென் ஆஃப்ரிக்கா, மெக்ஸிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணித்து அங்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வை பதிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது அந்த மக்களின் வாழ்விடங்கள்.

மில்லர் சமனின்மை திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 2016 ஆம் ஆண்டுதொடங்கினார் ஜானி மில்லர். இதன் நோக்கம் மக்கள் எப்படி இந்த பொருளாதார சமனின்மையை எதிர்கொள்கிறார்கள் மற்றும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பதிவுசெய்வதுதான்.

தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த இந்த புகைப்பட கலைஞர் கூறுகிறார், "கேப் டவுனில் விமான நிலையத்தில் நீங்கள் இறங்கிய மறு கனமே, உங்களை சுற்றி குடிசை பகுதிகள் மட்டுமே சூழந்திருப்பை நீங்கள் காண்பீர்கள்".

அங்கிருந்து பத்து நிமிடங்கள் நீங்கள் பயணம் செய்தால் கொஞ்சம் பணக்கார பகுதியினை காண முடியும். இதுதான் தென் ஆஃப்ரிக்காவின் நிலை. உலகம் முழுவதும் இந்த சமனின்மைதான் பல்வேறு நாடுகளில் தொடர்கிறது. ஆனால், அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

உலகம் முழுவதும் இந்த சமனின்மைக்கு எதிரான சவால்கள் எழுந்துள்ளன. இந்த தலைமுறை இதனை கேள்வி கேட்கிறது என்கிறார் மில்லர்.

இந்த சமனின்மையை பொட்டில் அடித்தது போல புரியவைக்கும் புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். இவை இந்தியா, தென் ஆஃப்ரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டவை.

இந்த புகைப்படங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுப்பதில் விசாலமான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார் மில்லர்.

பொருளாதார ஏற்றத் தாழ்வு

 

கேப் டவுன்

Presentational grey line

வறுமையும் சுகவாழ்வும்

 

 

மெக்ஸிகோ நகரம்

Presentational grey line

சமனின்மை

 

ஜோகன்ஸ்பெர்க்

Presentational grey line

வறுமையும் சுகவாழ்வும்

 

மும்பை

Presentational grey line

வறுமையும் சுகவாழ்வும்

 

மும்பை

Presentational grey linePresentational grey line

பசுமையும் பசியும்

 

டர்பன்

Presentational grey line

வாழ்க்கையும் பசி சுமக்கும் வயிறும்

 

மெக்ஸிகோ

Presentational grey line

வாழ்க்கையும் பசி சுமக்கும் வயிறும்

 

ஜோகன்ஸ்பெர்க்

Presentational grey line

ஜோகன்ஸ்பெர்க்

 

ஜோகன்ஸ்பெர்க்

பிற செய்திகள்:

https://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites

 

'தீய்ந்த பிஸ்கட்' என கேலி செய்யப்பட்ட சிறுமி சிஇஓ ஆன கதை

11 வயது சிறுமி ஒருவரை அவரது நிறம் குறித்து பள்ளிகளில் கேலி செய்ய, அவர் அப்பள்ளியில் இருந்து விலகியது மட்டுமில்லாமல் ஒரு தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார். என்ன நடந்தது? தனது கனவுகள் என்ன? தன்னை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்பவர்களுக்கு தான் அளிக்கும் ஆலோசனை என்ன என்பது குறித்து கெறிஸ் ரோஜர்ஸ் விளக்கும் காணொளி இது.

Share this post


Link to post
Share on other sites

சிங்கம், புலிக்குட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி!

நினைத்து பார்க்கமுடியாத விலங்குகள் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒன்றாக ஓடி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கம், புலிக்குட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி!படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் நாய்க்குட்டி ஒன்று சிங்கம் மற்றும் புலிக்குட்டிகளுடன் சேர்ந்து விளையாடுகிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் தாயால் கைவிடப்பட்ட சைபிரிய புலி, வெள்ளை புலி, கழுத்தைப் புலி மற்றும் ஆஃப்பிக்க சிங்கம் போன்றவை அங்குள்ள நாய்க்குட்டிகளின் தாயால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட விலங்குகளும் நாய்குட்டிகளும் ஒன்றாகவே வளர்ந்ததாகவும், அவை தற்போது நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரடிகள், கங்காருக்கள், குரங்குகள் போன்ற கைவிடப்பட்ட பல்வேறு விலங்கினங்களை வளர்த்துள்ளதாக 'பெய்ஜிங் வைல்டு லைப் பார்க்' தெரிவித்துள்ளது.

புலி, சிங்கக்குட்டிகளுடன் நாய்க்குட்டி விளையாடும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

சிங்கம், புலிக்குட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி!

 

சிங்கம், புலிக்குட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி!

 

சிங்கம், புலிக்குட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி!

 

 

https://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 28
 

image_b4b1557de8.jpg1914 : ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை, பெத்ரோகிராது என மாற்றினார்.

1917 : கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1920 : பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1928 : சென்னை மியூசிக் அகடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1938 : அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும், சென் லாரன்ஸ் ஆற்றின் மேலாக, ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1945 : சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1950 : பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1958 : விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1965 : வியட்நாம் போர் – ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1977 : ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் படுகாயங்களால் இறந்தமை, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிகொணரப்பட்டன.

1983 : அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.

2008 : பாக்கிஸ்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவர் பதவியைத் துறந்தார்.

http://www.tamilmirror.lk/

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.