Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

மருந்தாகும் குழந்தையின் மலம்: குடல் நலன் பராமரிக்க ஆய்வு

குழந்தையின் மலத்தை பயன்படுத்தி செய்யும் பானத்தை குடிப்பது உடல் நலத்திற்கு நிச்சயம் நன்மை பயக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பை ஏற்படுத்தும் புரோபயோடிக்ஸ் இதிலுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வட கரோலினாவிலுள்ள வேக் ஃபாரஸ்ட் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வை விளக்கும் காணொளி.

Link to post
Share on other sites
  • Replies 11.3k
  • Created
  • Last Reply

‘ராவணஹத்தா' - ஒர் இசைக்கருவியின் பயணம்

 

இசை, காலம் கடந்து பயணிக்கும். இசைக் கருவிகளும் அதன் தன்மைக்கேற்ப புலம்பெயரும்‌. அப்படி புலம்பெயர்ந்த மறக்கப்பட்ட இசைக் கருவிதான் ராவணஹத்தா. ராஜஸ்தான் கோட்டைகளிலும், வீதிகளிலும் மனதை உருக்கும் மெல்லிய இசைக் இசைத்துக் கொண்டிருக்கிறது இந்த ராவணஹத்தா. 

ராவணஹத்தா

ராவணஹத்தா (ராவணஷ்ட்ரோன், ராவண ஹஸ்த வீனா) என்று பல்வேறு பெயர்களால் வழங்கபடுகிறது‌. இக்கருவி இலங்கையில் ஈழ பண்பாட்டு  நாகரிகத்தின் போது தோன்றியதாகத் தெரிகிறது. இது இலங்கை மற்றும் தமிழ் கடலோர முக்குவார் சமூக மக்களிடம் பெரும்பாலும் அறியபட்டது‌. 

 

 

ராமாயண இதிகாசம் இக்கருவியை உருவாக்கியது என்றும் மற்றொரு கதை பேசப்படுகிறது. இலங்கை அரசரான ராவணன் தீவிர சிவபக்தி உடையவர் தன் பக்தியை வெளிப்படுத்த இக்கருவியை மீட்டியுள்ளார். இது ராவணனின் பிரியமான இசைக்கருவி. இறுதி போரில் ராவணன் வீழ்த்தப்பட்ட பிறகு அனுமான் இக்கருவியை வட இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளார் என்கிறார்கள். அன்று முதல் இன்று வரை வட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் தொடர்ச்சியாக இசைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் இளவரசர்கள் இக்கருவியை ஆர்வமுடன் கற்றும் வந்துள்ளனர். இக்கருவி தற்போது 'நாத் பவாஸ்‌' என்ற சமூக மக்களே இசைத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள், `ராவணனே, ராவணஹத்தாவை தங்கள் சமூகத்துக்கு கொடுத்துள்ளார்’ என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ராவணஹத்தா என்ற சிங்கள மொழிச் சொல்லுக்கு `ராவணனின் கை’ என்று பொருள். 

 

 

ராவணஹத்தா

இக்கருவி 80-90 செ.மீ மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மெட்டல் பைப்களும், ஒரு முனையில் தேங்காய் ஓடாலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை மூடியவாறு ஆட்டின் தோல் சுற்றப்பட்டுள்ளது. அதன் நரம்புகள் குதிரையின் முடிகளாலும் மெல்லிய கம்பிகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இசைக்க வில் பயன்படுத்தப்படுகிறது. இதை தற்கால இசைக்கருவியான வயலினின் முன்னோடி என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வரலாற்றை அறியும்போது புலம்பெயர்  கருவியான ராவணஹத்தா உலக கலாசாரத்தை எப்படி செழுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது‌.

 

 

 

அரசர் ஆண்ட காலம் முதல் தங்கள் வலிகளை எளிய மக்கள் ராவணஹத்தாவின் வழியே கடத்தியுள்ளனர். ஒரு காலத்தில் அரசர்களின் மகிழ்ச்சிக்காக  இசைக்கப்பட்ட கருவி, தற்போது தங்களின் வருமையும், நீரற்ற நிலத்தையும் என்னி இசைக்கின்றன. அரச வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திய ராவணஹத்தா எளிய மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துமா?.

https://www.vikatan.com

Link to post
Share on other sites

இங்கிலாந்து பைவெல் அரண்மனையில் கப்பல் மோதி 640 பேர் பலியான நாள்: 3-9-1878

 
 
 
 
இங்கிலாந்து பைவெல் அரண்மனையில் கப்பல் மோதி 640 பேர் பலியான நாள்: 3-9-1878
 
தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பைவெல் அரண்மனையில் பிரின்சஸ் அலைஸ் என்ற கப்பல் மோதி 640 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

1933 - சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.

1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.

1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

2004 - ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

பிரிட்டனிடம் இருந்து கத்தார் விடுதலையான நாள்: 3-9-1971

 
அ-அ+

கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு ஐக்கிய அரபு நாடாகும். இது அராபிய வலைகுடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய நாடாகும்.

 
 
 
 
பிரிட்டனிடம் இருந்து கத்தார் விடுதலையான நாள்: 3-9-1971
 
கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு ஐக்கிய அரபு நாடாகும். இது அராபிய வலைகுடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை ஒட்டி உள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1798 - பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.

1801 - இலங்கையில் நெல் மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1855 - நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1878 - தேம்ஸ் நதியில் "பிரின்சஸ் அலைஸ்" பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1914 - அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

போகிற போக்கில்: விதி வரைந்த ஓவியம்!

 

 

 
vidhijpg

பொதுவாக நீர் வண்ண ஓவியங்கள் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கும். கோவையைச் சேர்ந்த விதி என்பவர் வரையும் ஓவியங்களும் அத்தகையவையே. அவருடைய ஓவியத் திறமையால் மெருகூட்டப்பட்டிருக்கும் வாட்டர் கலர் ஓவியங்கள் பார்வையாளர்களின் மனத்தையும் கவனத்தையும் ஒருங்கே ஈர்க்கின்றன.

சிறுவயதிலிருந்தே விதி நன்றாக ஓவியம் வரையும் திறனைப் பெற்றிருக்கிறார். தனியாக ஓவியப் பயிற்சி வகுப்புகளுக்குச்  சொல்லாமல் வீட்டில் இருந்தபடியே சுயமுயற்சியால் ஓவியம்வரைய அவர் கற்றுக்கொண்டுள்ளார்.

   
 
vidhi%203jpg
 

“எங்க வீட்டில் யாருக்கும் வரையத் தெரியாது. நான் ஸ்கூல் பாடங்களுக்காக வரையும் ஓவியத்தை என் வீட்டில் உள்ளவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். அந்த ஊக்கத்தால் எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது. தினமும் எனக்குப் பிடித்த விஷயங்களை வரைந்து பார்ப்பேன்” என்கிறார் அவர்.

கட்டிட வடிவமைப்புத் துறையில் விதி இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஐந்தாண்டு கல்லூரிப் படிப்பை முடித்த பொறியாளரான விதிக்கு, உடனடியாக வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. எப்போதும் படிப்பு படிப்பு என்ற மனநிலையிலிருந்து  சற்று இளைப்பாற வேண்டும் என விதிக்குத் தோன்றியுள்ளது.

vidhi%202jpg
 

விட்டுப்போன தன் ஓவியப் பயிற்சியை மீண்டும் பொழுதுபோக்காகச் செய்யத் தொடங்கியுள்ளார். பொழுதுபோக்காகத் தொடங்கிய ஓவியப் பணி, தற்போது விதியின் முழுநேரப் பணியாக மாறிவிட்டது. இவரின் ஓவியங்கள் பெரும்பாலும் பூக்கள், இயற்கைக் காட்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

இயற்கைக் காட்சி சார்ந்த ஓவியங்களை அதே அழகுடன் வரைவதில் விதி வல்லவர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் வண்ண பெயிண்டுகளை அவர் பயன்படுத்துகிறார். விதியின் ஓவியங்களுக்கு அது தனித்தன்மையை அளிக்கிறது. பல ஓவியக் கண்காட்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். ஓவிய வகுப்புக்கே செல்லாத விதி, தற்போது பலருக்கு ஓவிய வகுப்புகளும் எடுத்து வருகிறார். இன்று @limitlessart_viddhi என்ற அவரின் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை 29,000 பேர் பின்தொடர்கிறார்கள்.விதி

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

நீராவி இன்ஜின், பெடல் - உலகின் முதல் பைக் உருவானது இப்படித்தான்!

3292_thumb.jpg
 
நீராவி இன்ஜின், பெடல் - உலகின் முதல் பைக் உருவானது இப்படித்தான்!
 

வீட்டுக்கு வெளியே பைக் நின்ன காலம் போய், இப்போ பைக்கை நிறுத்த வீடு கட்டும் காலத்துக்கு வந்துட்டோம். `பொல்லாதவன்' தனுஷ்ல இருந்து `AYM' சிம்பு வரைக்கும் பைக்கை வெச்சே படத்தை ஓட்டிட்டாங்க. அந்த அளவுக்கு இப்போ அது நம்ம வாழ்க்கைக்கு முக்கியமாப்போச்சு. தொலைக்காட்சி சீரியல்போல டூவீலர் நம்ம வாழ்க்கையோட ஓர் அங்கமா எப்படி மாறுச்சுன்னு பார்ப்போம்...

பைக்

ஆரம்பகாலம்

 

 

ரேடியோ, கம்ப்யூட்டர், கார் போல பைக்கைக் கண்டுபிடிச்சது ஒருத்தர்தான்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு மாதிரியா உருமாறி இப்போ பல்சரா, ராயல் என்ஃபீல்டா, ஹார்லி டேவிட்ஸனா, ஆக்டிவாவா நம்ம வாழ்க்கையில ஓடிட்டிருக்கு. ரயில் எப்படி நீராவி இன்ஜின் மூலமா ஓடுச்சோ, அப்படித்தான் பைக்கும் முதல் முதலா நீராவி இன்ஜின்னோடுதான் வந்தது. சில்வஸ்டர் ஹோவர்டு ரோப்பர்னு ஓர் அமெரிக்கர்தான் 1867-ம் வருஷம் வேலேசிபேடுக்கு நிலக்கரியில இயங்குற ஸ்டீம் இன்ஜினை வெச்சு பவர் கொடுத்தார். முன் வீலுக்கு பெடல் வெச்ச சைக்கிளை `வெலோசிபேட்'னு சொல்வாங்க. சுமார் 29 வருஷம் கழிச்சு இந்த வெலோசிபேட்ல ரைடிங் போரப்போ கீழ விழுந்து இறந்துபோனார்.

 

 

bike

இதே காலகட்டத்துல பிரான்ஸ் நாட்டுல எர்னெஸ்ட் மீஷோனு ஒருத்தர் அவரோட தந்தையால உருவாக்கப்பட்ட வெலோசிபேட்ல ஆல்கஹால் ஸ்டீம் இன்ஜினை வெச்சு ஒரு பைக்கை உருவாக்கினார். ஆரம்பகட்டத்துல எல்லாமே ஃப்ரன்ட் வீல் பைக்காதான் இருந்தது. முதல் ரியர் வீல் பைக், 1881-ம் ஆண்டு வந்தது. அரிசோனாவுல லூசியஸ் கோப்லாண்டுனு ஒரு கண்டுபிடிப்பாளர் சின்ன சைஸ் ஸ்டீம் இன்ஜினை வெச்சு ரியர் வீலுக்கு பவர் கொடுக்கிற மாதிரி ஒரு பைக்கை உருவாக்கினார். அந்தக் காலத்துல 20 கி.மீ ஸ்பீடுல ஓடின முதல் பைக் இதுதான். கொஞ்சம் பிராக்டிக்கலா வடிவமைச்சு `மோட்டோ சைக்கிள்'-னு பேரு வெச்சு இதை விற்பனை செய்யத் தொடங்கினார். ``றெக்க கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்'னு கோப்லாண்டு போஸ் கொடுக்கும் அந்த போட்டோவில் இருப்பதுதான் மோட்டோ சைக்கிள். உண்மையில் அது ஒரு டிரை- சைக்கிள்.

bike

பெட்ரோல் பைக்

முதல் பெட்ரோல் பைக் 1885-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போ நம்ம பைக்ல இருந்து கார் வரைக்கும் பயன்படுத்துற இன்ஜின், `டெய்ம்லர் ரெயிட்வேகன்' பைக்கில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. 1876-ம் ஆண்டு, நிக்கோலஸ் ஓட்டோங்கிற ஜெர்மன் பொறியாளர்தான் இந்த 4 ஸ்டிரோக்  IC இன்ஜினை உருவாக்கினார். உடனே, கோட்லீப் டெய்ம்லர் அந்த இன்ஜினை தன்னோட பைக்ல பயன்படுத்திக்கிட்டார். நம்ம இப்போ பயன்படுத்துற பெட்ரோல் இன்ஜின் எல்லாமே ஓட்டோ சைக்கிள் முறையில் இயங்குற இன்ஜின்தான்.

 

 

மோட்டார் சைக்கிள்

1880-க்குப் பிறகு பல நிறுவனங்கள் டூவீலர் தயாரிக்கத் தொடங்குச்சு. 1984-ம் ஆண்டு Hildebrand & Wolfmüller என்கிற ஜெர்மன் நிறுவனம் முதல்முறையா மோட்டார்சைக்கிள் தயாரிக்க தனி புரொடக்‌ஷன் லைனைத் திறந்தாங்க. டூவீலர் தயாரிச்ச எல்லா நிறுவனங்களும் கார், லாரினு எதையாவது எக்ஸ்ட்ராவா உருவாக்கிட்டு இருக்க, 1903-ம் ஆண்டு வில்லியம் ஹார்லி, ஆர்த்தர் டேவிட்ஸன் மற்றும் வால்டர் டேவிட்ஸன் மூணு பேரும் சேர்ந்து பைக் மட்டுமே தயாரிக்க ஹார்லி டேவிட்ஸன் நிறுவனத்தைத் தொடங்கினாங்க.

bike

ஹார்லி டேவிட்ஸன் இன்ஜின் குவாலிட்டியை அப்போ இருந்த எந்த நிறுவனத்தாலையும் கொடுக்க முடியலை. அதனாலேயே ஹார்லி டேவிட்ஸன் பிரபலமாச்சு. இதைப் பார்த்துதான் இந்தியன், பியர்ஸ், மார்கெல் மாதிரியான மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் உருவாச்சு. இப்போது இருக்கும் பல மோட்டார் சைக்கிள் நிறுவனங்களும் பல கண்டுபிடிப்புகளும் இதன் தொடர்ச்சிதாம்.

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

இணையத்தில் வைரலான முதல்வரின் உடற்பயிற்சி காணொளி

சேலம், அனுப்பூர் கிராமத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கே ஒரு சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துள்ளார். பின்னர் இறகுப் பந்தும் விளையாடியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Link to post
Share on other sites

முதன்முறையாக ஜப்பானில் இருந்து கலிபோரினியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பான நாள்- 4-9-1951

 
 
 
 
முதன்முறையாக ஜப்பானில் இருந்து கலிபோரினியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பான நாள்- 4-9-1951
 
முதன்முறையாக 1951-ம் ஆண்டு செப். 4-ந்தேதி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாடு, டெலிவிசன் கான்பிரன்ஸ் மூலம் கலிபோரினியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒளிபரப்பப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1939 - இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது

* 1939 - இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது

* 1956 - ஹார்டு டிஸ்க் நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

* 1963 - சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1970 - சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.

* 1971 - அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1972 - ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.

* 1996 - கொலம்பிய புரட்சி ராணுவப் படையினர் கொலம்பியாவின் ராணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

* 2006 - இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

https://www.maalaimalar.com/

Link to post
Share on other sites

பெர்சிய போர் வீரர்களின் உணவு நம் ஃபேவரிட் ஆனது எப்படி?! இது பிரியாணியின் கதை

3277_thumb.jpg
 
பெர்சிய போர் வீரர்களின் உணவு நம் ஃபேவரிட் ஆனது எப்படி?! இது பிரியாணியின் கதை
 

`பிரியாணி' என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பதுதான் நிதர்சனம்! இவற்றின் அசல் பிறப்பிடம் எது என்ற ஆதாரம் இல்லையென்றாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பும் வரலாறு மற்றும் இந்தியாவின் பிரபல பிரியாணிகளின் ஸ்பெஷாலிட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...

பிரியாணி

வரலாறு:

 

 

பெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'. போருக்காக நாட்டைவிட்டு வெகுதூரம் பயணம் செய்யும் வீரர்கள், கையில் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலாப் பொருள்களை எடுத்துச் செல்வது வழக்கம். போர் நேரம் முடிந்தவுடன், காட்டுக்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி, ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கொண்டுவருவார்கள். பிறகு, நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மசாலா கலவையை, மாமிசம் மீது தடவி, இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர். அதிகாலையில், நன்கு ஊறிய மசாலா மாமிசத்தை, அரிசியோடு கலந்து தண்ணீர் ஊற்றி கனமான பொருளைக்கொண்டு இறுக்கமாக மூடிவிடுவர். பிறகு, ஆழமான குழியில் தீ மூட்டி, இந்தக் கலவைப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அடைத்துவிடுவார்கள். நண்பகல் போருக்குச் செல்வதற்கு முன், நன்கு வெந்து இருக்கும் இந்தச் சாதத்தைச் சாப்பிடுவார்கள்.

முதலில் வெறும் மசாலாவை மட்டுமே உபயோகப்படுத்திய வீரர்கள், பிறகு நறுமணத்துக்காக அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சில வாசனைப்பொருள்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி போர் வீரர்கள் சாப்பிட்ட இந்தக் கலவைச் சாப்பாடு, நாளடைவில் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் கலவை உணவு, மன்னர் குடும்பம் மட்டும் உண்ணும் `பிரியாணியாய்' உருவெடுத்தது.

போர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் இதில் நெய் சேர்க்கும் முறை உருவானது. பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவர்களுக்குப் பரிமாறப்படும் பிரியாணிகளில் நெய் சேர்த்து வழங்கினர். பிறகு, இடத்துக்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான பிரியாணிகள் உருவாகின. அரண்மனைச் சமையலறை வரை மட்டுமே பரவியிருந்த இதன் ரெசிபி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்களுக்கும் போய்ச்சேர்ந்தது.

வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும். திண்டுக்கல் முதல் லக்னோயி வரை ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தனித்துவம் என்ன என்பதை இனி பார்ப்போம்...

திண்டுக்கல் :

பிரியாணி என்றாலே நீள அரிசியான `பாசுமதி' வகை அரிசியில் இருப்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே பொடிப்பொடியாக இருக்கும் `சீரக சம்பா' அரிசி வகைதான். சீரக சம்பா அரிசியின் மணம் நிச்சயம் அனைவருக்கும் வித்தியாச மணமாக இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான மிளகுத்தூள் இதில் உபயோகப்படுத்தியிருப்பார்கள். இதில் நீளமான இறைச்சித் துண்டுகளைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழந்தைகளும் எளிதில் உண்ணக்கூடிய சிறிய இறைச்சித் துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாரின் 'Tangy' டேஸ்ட் இந்த அருமையான திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணியில் நிறைந்திருக்கும்.

 

ஆம்பூர் :

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில், தூங்கிக்கொண்டிருப்போரையும் சுண்டி இழுக்கும் இடம் ஆற்காடு. பாரம்பர்யமிக்க அசல் ஸ்டார் பிரியாணி இங்குதான் கிடைக்கும். ஆற்காடு நவாப் குடும்பத்துக்குச் சமைத்துக் கொடுத்த அனுபவத்திலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆம்பூர் வகை பிரியாணி. சிக்கன், மட்டன், பீஃப் மற்றும் இறால் போன்ற இறைச்சிகளோடு சுவையான ஆம்பூர் பிரியாணியின் தனித்துவம், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் புதினா மற்றும் மல்லித்தழைகள்தான். அதுமட்டுமல்லாமல், புளிக்காத புதிய தயிரில் இறைச்சியை நன்கு ஊறவைத்து, பிறகு சாதத்துடன் சேர்ப்பதால் தனி ருசியை இதில் உணரலாம்.

 

ஹைதராபாதி :

இந்தியாவில் பிரியாணி என்றாலே ஹைதராபாதிதான். முகலாயர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஹைதராபாத்தில், பிரியாணியின் ஆதிக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது. ஹைதராபாத் நிஜாம் சமையலறையில் உருவான இந்தப் பிரியாணியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இறைச்சியை மசாலாவோடு கலந்து இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அரிசியோடு கலந்து தயாராவது 'கச்சி பிரியாணி'. இறைச்சி மற்றும் மசாலாவை ஊற வைத்து உடனே வேகவும் வைத்து, தயாரான கிரேவியை சாதத்தோடு கலப்பது 'பக்கி பிரியாணி'. குங்குமப்பூ மற்றும் தேங்காய் சேர்க்கப்படும் இதில், விதவிதமான நறுமணப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. இவையே இதற்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. இதற்கு பெஸ்ட் காம்பினேஷன், கத்திரிக்காய் தொக்கு.

 

தலசேரி:

தளசேரி

கீமா அரிசி சாதம், முந்திரி, திராட்சை போன்றவற்றோடு நன்கு சமைத்த இறைச்சி மசாலாவைச் சேர்த்தால் `தலசேரி பிரியாணி' ரெடி. மற்ற வகைகள்போல இல்லாமல், மலபார் அல்லது தலசேரிவகை பிரியாணி முற்றிலும் வித்தியாசமானது. பாசுமதி அரிசி வகையை இவர்கள் என்றுமே உபயோகிக்க மாட்டார்கள். முகலாயர்கள் மற்றும் மலபார் உணவு வகையின் பொருள்கள் ஒருசேரக் கலந்து புதுமையான சுவையைத் தருகிறது. உண்ணும் நேரத்தில்தான் கிரேவியோடு சாதம் கலக்கப்படும். இதனால், சுவைக்கேற்ப தேவையான மசாலாவை உபயோகித்துக்கொள்ளலாம்.

லக்னோயி :

இதுதான் பெர்சியன் ஸ்டைல் பிரியாணி. அதாவது, `தம் பிரியாணி'. முதலில் கிரேவி மற்றும் இறைச்சியைப் பாதியளவு வேகவைத்து, பிறகு கனமான பொருளைக்கொண்டு இறுக்கி அடைத்து அதன்மேல் சுடச்சுட கரித்துண்டுகளைப் பரவி, அதன் சூட்டில் ரெடியாவது `தம் பிரியாணி'. இதில் மேற்கத்திய நாட்டு மசாலா அதிகம் பயன்படுத்துவதால், மற்ற பிரியாணிகளைவிட காரம் குறைவாக இருக்கும்.

ருசியான உணவு என்பதால், பலர் தினமும் இதைச் சாப்பிடுவதை வழக்கமாகிக்கொண்டுள்ளனர். எதையும் அதிகம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

டைம்ஸ் சதுக்கத்தில் கூடிய 30,000 தேனீக்கள்
நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ஹாட் டாக் கடை ஒன்றில் 30,000 தேனீக்கள் கூடின. என்ன நடந்தது என்று பாருங்கள்.
Link to post
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : அது ஒரு ‘வரி’ தழுவல் அல்ல!

 

 
iyarkaijpg

வரிக்குதிரைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை தாவர உண்ணிகள். குதிரை, கழுதை போன்ற உயிரினங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை இவை.

ஆப்பிரிக்க நாடுகளில் இதை அதிக எண்ணிக்கையில் காண முடியும். இந்தியாவில் விலங்குக்காட்சி சாலைகளில் மட்டுமே பார்க்கலாம்.

 

வரிக்குதிரை, சமூக விலங்கு. ஆகவே, இவற்றை எப்போதும் குழுவாகத்தான் காண முடியும். எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது.

இந்தக் குதிரைகளின் உடலில் உள்ள வரிகள் ஒரே மாதிரியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால், மனிதர்களின் கை ரேகை, எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறதோ, அதேபோல இந்த வரிகளும் குதிரைக்குக் குதிரை மாறுபடும்.

காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழும். அவை விலங்குக்காட்சி சாலையில் இருந்தால் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

சமீபத்தில் கென்யாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே மசாய் மரா ரிசர்வ் காட்டுப் பகுதியில், மாரா என்ற நதி உண்டு. அந்த நதியை வரிக்குதிரைக் கூட்டம் ஒன்று கடந்து சென்றது. அப்போது எடுத்த படங்கள் இவை.

வரிக்குதிரைகள் அவ்வப்போது, இன்னொரு வரிக்குதிரைகளின் மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்றிருக்கும். பார்ப்பதற்கு அவை ஏதோ கட்டித் தழுவுவது போல இருக்கும். கூடலில் ஈடுபடுகின்றனவோ என்று நினைத்தால், அது தவறு. உண்மையில், அவை ஓய்வு எடுத்துக்கொள்வதற்காகவே அப்படிச் செய்கின்றன.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

பெண்கள் 360: பறிக்கப்படும் விருதுகள்

 

 
p1jpg

பறிக்கப்படும் விருதுகள்

மியான்மாரின் பிரதமராக 1990-ல் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஆங் சான் சூ கி. அவரது விடுதலைக்காக உலகமே போராடியது. அமைதிக்கான நோபல் பரிசு 1991-ல் அவருக்கு வழங்கப்பட்டது. டைம்ஸ் நாளிதழ் அவரை ‘காந்தியின் வாரிசு’ என்றது. மியான்மாரின் மண்டேலா என்று அவரை ஐ.நா. பாராட்டியது. விடுதலையான பின், 2015-ல் நடந்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுப் பிரதமரானார்.

     
 

இந்த ஆட்சியில்தான், உலகையே உலுக்கிய ரோஹிங்கியா இன அழிப்பு நடந்தது. ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். அமே சூ (அம்மா சூ) என்று தன்னை அழைத்த மக்களுக்காகச் சிறு கண்டனத்தையோ வருத்தத்தையோகூட இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் Freedom of Edinburg எனும் உயரிய விருது அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிக்கப்பட்ட ஏழாவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

kavidhaikkujpg
 

கவிதைக்குக் கிடைத்த நீதி

17 வயது ஸ்ரேயா ஷர்மாவும் 19 வயது சர்தக் கபூரும் நண்பர்கள். அந்த உறவை அடுத்த நிலைக்கு வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல சர்தக் கபூர் முயன்றார். அதன் பிறகு ஸ்ரேயாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார். தன் மன உளைச்சலைக் கவிதையாக எழுதி முகநூலில் ஸ்ரேயா பதிவேற்றினார். பின், சர்தக் கபூரின் வீட்டுக்குச் சென்று அவரிடமே அந்தக் கவிதையைக் கொடுத்தார். அதன் பின் சர்தக்கின் வீட்டுக்கு அருகிலிருந்த தெருவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் ஸ்ரேயா.

அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது  விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த திங்களன்று வழங்கப்பட்டது. அப்போது, ‘மரணித்திருக்கவே விரும்புகிறேன். இமை மூடும் பொழுதெல்லாம் இருளால் நிரம்பிய சொர்க்கம் அதனுள் விரிகிறது. அச்சங்கள் அழுத்துவதால் இருப்பே எனக்குக் களைத்துவிட்டது. பொம்மைகளுடன் விளையாடிய எங்களுக்கு நானே இன்று பொம்மையாகிவிட்டேன். ஆண்கள் எப்போதும் ஆண்களே. பெண்களாகிய நாங்கள் ஒருபோதும் அதை வெளிசொல்வதில்லை’ என்று ஸ்ரேயா எழுதிய கவிதையை வாசித்து சர்தக் கபூருக்கு ஆயுள் தண்டனையை நீதிபதி விதித்தார்.

isaiyaijpg
 

இசையை மீட்டவர்

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற இசை வடிவம் Lam Tad. இது மத்திய தாய்லாந்தில் பிரசித்தி பெற்றது. நகைச்சுவை ததும்பும் வரிகள் நிறைந்த  பாடல்களைப் பாடியபடி ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் சீண்டி வம்பிழுப்பது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். 1933-ல் பிறந்த பிரயூன் 15 வயதிலேயே இந்த இசை வடிவின் தேர்ந்த பாடகியாக உருவாகிவிட்டார். இவருடைய பாடல் வரிகள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

isaiyai%202jpg

அவரது பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. தொலைக்காட்சி வரவுக்குப் பின் இந்தப் பாடல் வடிவம் மெல்ல அழிவை நோக்கிச் சென்றது. அழிவிலிருந்து அந்த இசை வடிவை மீட்டு அதற்கு மறுவாழ்வு கொடுத்தவர் பிரயூன் யோம்யாம். இன்று தாய்லாந்து மக்களால் அன்னை என்றழைக்கப்படும் அவரது 87-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

எண்ணமும் சொல்லும்:அச்ச உணர்வு நிலவுகிறது

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மக்களுக் காகக் குரல் கொடுப்பவர்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிய வேண்டும். திடீரென காவல்துறை வந்து, ‘உன்னைக் கைது செய்கிறோம், புணே சிறைக்கு அழைத்துச் செல்கிறோம்’ என்று சொல்லிவிட முடியாது. சட்டம் இதுவரை இப்படிச் செயல்பட்டதில்லை.

ennamumjpg

தற்போது நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர், கீழ் சாதியினர், முஸ்லிம்கள் என மக்கள், குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். மக்களிடையே இன்று பயம் நிலவுகிறது. இன்று நிலவும் அச்ச உணர்வு, நெருக்கடி காலத்திலும் இருந்ததில்லை. அன்று நிலவிய சூழ்நிலை வேறு. இத்தகைய அச்ச உணர்வு நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லை. 2019-க்கு பிறகு ஐந்து ஆண்டுகள் நீடித்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

- தனது குழுவின் பொதுநல மனு தொடர்பாக வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறியது.

யு.எஸ் ஒபன் டென்னிஸில் பால்பேதம்

இந்த வருட யு.எஸ் ஒபன் டென்னிஸ் போட்டியில் விளையாட்டு வீரர்களுடன் கடும் வெயிலும் சேர்ந்து விளையாடுகிறது. முதல் சுற்றுப் போட்டி முடிவதற்குள்ளாகவே ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வெயில் காரணமான பாதிப்பால் போட்டியிலிருந்து வெளியேறினர். வெயிலின் காரணமாகப் பெண்களுக்கு மட்டும் பத்து நிமிடம் ஓய்வு  அளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் அன்று நடந்த மகளிர் போட்டியில் அலிஸ் கோர்னே பங்கேற்றார்.

வழக்கம்போல் பத்து நிமிட இடைவேளை விடப்பட்டது. மைதானத்துக்கு வீரர்கள் திரும்பினர். அப்போதுதான் டி-ஷர்ட்டைத் திருப்பிப் போட்டு வந்திருப்பது கோர்னேக்குத் தெரிந்தது. சட்டெனச் சுதாரித்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் டி-ஷர்ட்டைக் கழற்றி சரியாக அணிந்துகொண்டார். அலிஸ் கோர்னேயின் இந்தச் செயலை நடுவர் எச்சரித்ததோடு, அவருக்கு பெனால்டியும் விதித்தார். ஆட்ட இடைவேளையில் ஆண் வீரர்கள் டி-ஷர்ட்டைக் கழற்றி அணிவது வழக்கம்.

us%20openjpg
 

ஆண்களுக்கு விதிக்கப்படாத பெனால்டி, வீராங்கனைகளுக்கு மட்டும் ஏன் எனக் கேட்டுப் பல்வேறு பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது யுஎஸ் ஒபன் அசோசியேஷன், நடுவரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

https://tamil.thehindu.com/

Link to post
Share on other sites

வாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977

 
 
வாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977
 
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சூரிய குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக வாயேஜர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், முதல் முறையாக செலுத்தப்பட்டதுதான் வாயேஜர் 1 விண்கலம். 722 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த விண்கலம், கேப் கனரவல் ஏவுதளத்தில் இருந்து 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஏவப்பட்டது.

அன்று முதல் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் இந்த விண்கலம், இப்போதும் பூமியில் இருந்து செலுத்தப்படும் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

இதே நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1698 - ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர், தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்க உத்தரவிட்டான்.

1880 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1882 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

1887 - இங்கிலாந்தின் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் பலியாகினர்.

1905 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து ரஷ்ய-ஜப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
 
1914 - முதலாம் உலகப் போரில், பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளை வென்றது.

1972 - ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
   
1980 - உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.

1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1872 - விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள்.

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: ஜிப்

 

 
zipjpg

ஜிப் இல்லாத வாழ்க்கையை இன்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? புத்தகம், துணி கொண்டு செல்லும் பைகள், பேண்ட், ஜீன்ஸ் போன்ற துணிகள், ஷூ, சூட்கேஸ் என்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஜிப்பின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஜிப் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன் ஜிப்பின் வேலையைச் செய்துகொண்டிருந்தது பட்டன்.

தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பட்டனின் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் எளிதில் விழுந்துவிடும்,  போடுவதற்கு நேரம் பிடிக்கும் என்பது போன்ற பல பிரச்சினைகள் பட்டனில் இருந்தன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வந்ததுதான் ஜிப்.

 

1851-ம் ஆண்டு புதிய தையல் இயந்திரத்தை உருவாக்கிய எலியாஸ் ஹோவ், தானாகவே துணிகளை இணைக்கும் ஒரு கருவியையும் உருவாக்கினார். இது சிறந்ததாக இருந்தாலும் அவரால் பெரிய அளவுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அவரது தையல் இயந்திரம் அதிக அளவில் விற்பனையானதால், இதை ஒரு பொருட்டாகவும் அவர் நினைக்கவில்லை.

40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள் அமெரிக்காவைச் சேர்ந்த விட்காம்ப் ஜுட்சன், ஷூ லேஸைக் கட்டிக்கொண்டிருந்தார். அது கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தது. அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. எலியாஸ் ஹோவ்வின் யோசனையைச் சற்று மேம்படுத்தி ஒரு கருவியை உருவாக்கினார்.

zip%202jpg
 

அதற்கு ‘அன்லாக்கர் ஃபார் ஷூஸ்’ என்று பெயரும் சூட்டினார். ’யுனிவர்சல் ஃபாஸ்ட்னர்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். சிகாகோவில் நடைபெற்ற கண்காட்சியில் விற்பனைக்கும் வைத்தார். ஆனால் அது வெற்றியைத் தேடித் தரவில்லை.

1913-ம் ஆண்டு கிடியன் சண்ட்பேக், நவீன ஜிப்பை உருவாக்கினார். ‘செபரபிள் ஃபாஸ்ட்னர்’ என்ற தன்னுடைய கண்டு பிடிப்புக்கு 1917-ம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். சண்ட்பேக் கண்டுபிடித்த இரண்டு வரிசைப் பற்களையும் இணைக்கும் ஜிப், வேகமாக அடுத்தடுத்த முன்னேற்றங் களைக் கண்டது.

சண்ட்பேக் மூலம் ஜிப் உருவானாலும் ஜிப் என்று பெயர்க் காரணம் அவரால் ஏற்படவில்லை. பி.எஃப். குட்ரிச் நிறுவனம், சண்ட்பேக் கருவியைப் பயன்படுத்தி புதுவிதமான ரப்பர் ஷூக்களைக் கொண்டுவந்தது. அவர்கள் அந்தக் கருவிக்கு ‘ஸிப்பர்’ என்று பெயர் சூட்டினர். பின்னர் ஜிப்பர், ஜிப், ஃப்ளை, ஜிப் ஃபாஸ்ட்னர் என்ற பெயர்களில் அந்தக் கருவி அழைக்கப்பட்டது.

ஷூக்களிலும் பைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிப், பின்னர் துணிகளிலும் பயன்படுத்தப்பட்டது.

1934-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜிப் தயாரிப்பை இன்றுவரை பின்பற்றி வருகிறது அமெரிக்காவின் ஒய்கேகே என்ற ஜிப் நிறுவனம். 1960-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், உலகின் மிகப் பெரிய ஜிப் உற்பத்தி நிறுவனமாக இன்றும் இருந்துவருகிறது.

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

 

உலகிலேயே மிகவும் குறைவான தூரம் பறக்கும் விமானம்

8 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் ஸ்காட்லாந்தில் இயக்கப்படுகிறது.
 
 
Link to post
Share on other sites
‘சத்தம் போடாமல் சாதனை செய்’
 

image_d57cc67f01.jpgமண்ணுக்குள் சுழியோடி வளர்ந்து, இறுகி, தன் முதுகில் பெரு விருட்சத்தை நிலைநிறுத்துகின்றன வேர்கள். இந்த முயற்சி, தங்களால் முடியாது என எண்ண, வேர்களுக்கு நேரமும் இல்லை. எங்கெல்லாம் நீர், பசளை உள்ளதோ, அங்கெல்லாம் தேடி, தேட்டம் தேடும் மெல்லிய சிறுவேர், பக்கவேர், ஆணிவேர் என, தாய்மை உணர்வுடன் மரத்தைத் தாங்குகின்றன.  

ஆனால் மனிதன், தனக்காகவும் தன் மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உலகுக்காகவும் உண்மையான பொறுப்புணர்வுடன் தாங்கி நிற்கின்றானா? 

சுமைகளைத் தாங்க முடியாமல் ஓடும் தந்தை; பெற்றோரை மட்டுமல்ல, தம்பிமாரை, அக்காமாரை உடன்பிறப்புகளை விட்டோடும் பிள்ளைகள் என்று பொறுப்பற்ற சம்பவங்கள், இன்று ஏராளம், ஏராளம். பொறுப்புடன் கடமைகளை ஏற்பதும் உளமார்ந்த திருப்திதான்.  

உதவி கேட்டு, உங்களை யாராவது நாடினால், உங்களுக்கு வலிமை உண்டு என நம்பித்தானே அவர்கள் வருகிறார்கள். எதுவுமே வெளியே தெரியாமல், தமது வாரிசை, வேர்கள் மௌனத்துடன் உருவாக்குகின்றன.  

சத்தம் போடாமல் சாதனை செய்; உத்தம மைந்தா, உலகைத் தூக்கி நிறுத்து. 

Link to post
Share on other sites

9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் சம்பளம் வாங்கிய பபூன் குரங்கு!

 

ஜாக்கின் சிக்னல் பணிகளைப் பார்க்கிற பெண் ஒருவர் அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறார். முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. நேரடியாக ரயில்வே நிலையத்துக்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில் ஜாக் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் சம்பளம் வாங்கிய பபூன் குரங்கு!
 

“நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல

 யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

 உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!

 

 

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல!”

யாரோ யாரையோ சார்ந்து வாழ ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அதுவே வாழ்க்கையாகிப் போகிற கதைகள் எவ்வளவோ உண்டு. அதில் காலம் கடந்தும் நிற்கிற கதைகள் ஒன்றிரண்டுதான். அதில் ஒன்று மனிதனுக்கும் பபூன் என்கிற ஜாக்குக்கும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த கதை. 

 

 

1800-களின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகர Uitenhage என்கிற ரயில் நிலையத்தில் பாதுகாவலராக இருந்தவர் ஜேம்ஸ் வைட். இவருக்கு ஜம்பர் என்கிற இன்னொரு பெயரும் இருந்தது. ஓடுகிற ரெயிலில் இருந்து அடிக்கடி எகிறிக் குதித்து சாகசங்கள் செய்வதால் அவருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. சில நேரங்களில் ஓடுகிற ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குக் கூட பாய்ந்திருக்கிறார். அதுவே அவரது வாழ்க்கையைத் திருப்பிப் போடவும் காரணமாக அமைந்தது. 1877-ம் ஆண்டு ஜேம்ஸ் ஓடும் ரெயிலில் இருந்து குதிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக  விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த விபத்தில் அவரது இரண்டு கால்களும் பறிபோகின்றன.

விபத்துக்குப் பிறகு மீண்டு வருகிற ஜேம்ஸ் செயற்கை கால்கள் உதவியுடன் மீண்டும் பாதுகாவலர் பணியை தனக்கு தருமாறு கேப்டவுன் ரெயில்வே நிர்வாகத்திடம் வேண்டுகிறார். ஜேம்ஸ் விபத்தில் சிக்கிய இடைப்பட்ட காலத்தில் வேறு யாரையும் நிர்வாகம் அங்கு பணியமர்த்தவில்லை. ஜேம்ஸ் இருந்த வீட்டுக்கும் ரயில்வே நிலையத்துக்கும் இடையே 500 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது. வீட்டுக்குச் சென்று வரச் சிறிய சக்கர நாற்காலி போன்ற டிராலி ஒன்றை அவர் பயன்படுத்தி வந்தார். கருணையின் அடிப்படையில் மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜேம்ஸ்க்கு வேலை கிடைக்கிறது. ரயில் நிலையத்தைப் பாதுகாப்பது, வந்து போகிற ரயில்களுக்கு சிக்னல் கொடுப்பது, பூங்காக்கள் அமைப்பது என தன்னால் இயன்ற வேலைகளைச் செய்கிறார். ஒரு நாள் அவர் இருந்த நகருக்குப் பக்கத்தில் இருந்த மார்க்கெட்டில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைப் வைத்து டிராலி ஒன்றைப் பபூன் குரங்கு தள்ளிக் கொண்டு வருவதைப் பார்க்கிறார். உடனே அதன் உரிமையாளரிடம் பபூன் குறித்து விசாரித்து அதை விலைக்கு வாங்கி விடுகிறார்.

ஜாக் பபூன் 

விலைக்கு வாங்கிய பபூனுக்கு ஜாக் என்று பெயரிடுகிறார். வீட்டுக்கும் ரயில்வே நிலையத்துக்குமான தூரத்தை பபூன் உதவியுடன் கடக்கிறார். ஜேம்ஸ் டிராலியில் அமர்ந்துகொள்ள ஜாக் ட்ராலியை தள்ளிக் கொண்டு வருவதும் போவதும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில் ஜேம்ஸ் செய்கிற வேலைகளை ஜாக் உள்வாங்க ஆரம்பிக்கிறது. ரயில்களுக்குச் சிக்னல் அளிப்பது, ட்ராக் மாற்றுவது என ஜேம்ஸின் எல்லா வேலைகளின் போதும் உடனிருந்து கவனிக்கிறது.

சிறிது நாள்களில் ஜாக் எளிதாக அந்த வேலைகளைச் செய்யவும் பழகியது. அதற்கு ஜேம்ஸ் சில பயிற்சிகளையும் கொடுத்திருந்தார். ட்ராக் மாற்றுவது, மற்றும் சிக்னல் வழங்கும் வேலைகளை ஜேம்ஸின் கட்டளைப்படி செய்து வர ஆரம்பித்தது. எந்த வேலையாக இருந்தாலும் ஜேம்ஸின் கட்டளை கிடைத்தால் மட்டுமே செய்யும் அளவுக்கு ஜாக் வளர்ந்திருந்தது. 

ஜேம்ஸ் ஜாக் பபூன்

ஜேம்ஸுக்கும், ஜாக்குக்குமான நெருக்கமும் உறவும் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஜாக்கின் சிக்னல் பணிகளைப் பார்க்கிற பெண் ஒருவர், அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறார். முதலில் அவர்கள் நம்பவில்லை. நேரடியாக ரயில்வே நிலையத்துக்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில் ஜாக் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். உடனடியாக இருவரையும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். 

ஆனால், ஜேம்ஸ் ஜாக் தனக்கு உதவியாகத்தான் இருக்கிறது, இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை, வேண்டுமானால் ஜாக்கை சோதனை செய்து பாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறார். ரயில்வே அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொண்டு ஜாக்கை சோதனை செய்கிறார்கள். சோதனையில் ஜாக் வெற்றி பெறுகிறது. சோதனை செய்த அதிகாரிகள் ஜாக்கின் செயலால் ஆச்சர்யமடைகிறார்கள். ஜேம்ஸின் வேலை திரும்பக் கிடைக்கிறது. ஜாக்குக்கு சிக்னல் மேன் என்கிற பதவியும் சம்பளமும் கிடைக்கிறது. உலக வரலாற்றில் இப்போதுவரை ஜாக் பபூன் மட்டுமே ரயில்நிலைய பணியாளராக பணியாற்றியுள்ளது. ஒன்பது வருடங்கள் சம்பளத்துடன் பணியாற்றிய ஜாக் 1890-ம் ஆண்டு காசநோயால் இறந்து போனது.

அது சரி, அப்போது ஜாக்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு 20 செண்டும், ஒரு வாரத்துக்கு அரை பாட்டில் பீரும்! அது மட்டுமின்றி தன் 9 வருடப் பணியில் ஜாக் ஒருமுறைகூட தவறு செய்யவில்லையாம்!

https://www.vikatan.com

Link to post
Share on other sites

இல்லற வாழ்க்கை இன்பமாக நீடிப்பதன் ரகசியம் என்ன?

2

நூறாண்டுகளைக் கடந்து வாழ்பவர்களுக்காகவே பிரபலமான நாடு ஜப்பான். தற்போது நீண்ட காலமாக இணைந்து வாழும் தம்பதியைக் கொண்ட நாடு என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

மணமான ஓராண்டுக்குள்ளாகவே முட்டலும் மோதலும் தொடங்கிவிடும் இந்தக் காலகட்டத்தில் ஜப்பானில் 80 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர் மியாக்கோ - மட்சுமாட்டோ தம்பதியினர்.

 

80 ஆண்டு கால இல்லற வாழ்க்கை, ஒட்டுமொத்தமாக 208 வயது கொண்ட தம்பதி.. உலக அளவிலான கின்னஸ் சாதனை... இது எப்படி சாத்தியமானது?

பொறுமைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார் மியாக்கோ. ''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய பொறுமைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன், நிஜமாகவே!'' என்று சிரிக்கிறார்.

'நன்றியுடன் இருக்கிறேன். அதுவே கண்ணீரை வரவழைத்து விட்டது' என்னும் மியாக்கோவுக்கு 100 வயது. கணவருக்கு 108 வயது. இருவருக்கும் அக்டோபர் 1937-ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

05TH-JAPAN-AGEINGOLDESTCOUPLE1jpg

மியாக்கோ - மட்சுமாட்டோ தம்பதியினர்.

 

ஜப்பான் போருக்குத் தயாரான நேரம். அப்போது மட்சுமாட்டோவுக்குத் திருமணம் செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனாலும் கல்யாணம் நடந்தது. அவர் போர் வீரராக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனாலும் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். இப்போது அவர்களின் பெரிய குடும்பத்தில் கடந்த மாதத்தில் 25-வது கொள்ளுப்பேரன் பிறந்திருக்கிறான்.

இருவர் குறித்தும் பேசிய மகள் ஹிரோமி, ''அவர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் நுழைந்திருக்கிறார்கள். கின்னஸ் விருதைப் பெற்றது அவர்களைப் பெருமைப்படுத்தி உள்ளது. அவர்கள் வழக்கம்போல அமைதியான, அன்பான வாழ்க்கையைத் தொடர வேண்டும்'' என்கிறார்.

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 6
 

image_cc89ef8eb9.jpg1901 : அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

1930 : ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1936 : கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.

1939 : இரண்டாம் உலகப் போர் - தென்னாபிரிக்கா ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.

1946 : இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால்ஆரம்பிக்கப்பட்டது.

1932 : கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில்திறக்கப்பட்டது.

1951 : தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

1955 : துருக்கியில் இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும்எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1965 : இந்திய - பாகிஸ்தான் போர், இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி  லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1966 : தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.

1968 : சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1970 : ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள், பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1990 : யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

1997 : வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

2006 : ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites

 

கென்யாவில் ஆணுறைகளை சற்று வேறுபட்ட வகையில் பயன்படுத்தி வருகின்றனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது ஆணுறைகளை பயன்படுத்துகின்றனர். ஆணுறைக்குள் தண்ணீர் புகாது. எனவே, மீன்பிடிக்க போகும்போது செல்பேசியை பாதுகாக்க ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Link to post
Share on other sites
‘சூரியனில் குடியிருக்கலாம்’
 

image_2b83ac0341.jpgபிரபஞ்சப் பெரு யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். என்னே! பிரமாண்டம் இந்தப் பிரபஞ்சம். அதன் அழகும் விசாலமும் சொல்ல முடியா ஆண்டவன் படைப்பு. எத்தனை பகாடி கோள்கள், நட்சத்திரங்கள், கோடானுகோடி சூரியன்கள்.

எல்லாமே அழகுதான். அங்கு யார், யார் வசிக்கிறார்கள்? புதுவித வடிவங்கள். ஓசை வராத நுண்ணிய அலை வடிவில் கருத்துப் பரிமாற்றங்கள். சில கோள்களில் இதயம் தொடும் ஓசைகள், வார்த்தையாடல்கள், வசீகர அலங்காரங்கள் என எல்லாவற்றையும் சொல்லக் கூடிய வல்லமை எனக்கில்லை.

பூமியில் காலடி எடுத்து வைத்தபோது, என் சித்தம் அஸ்தமித்ததுபோல் உணர்ந்தேன். பல ஆண்டுகள் அண்டப் பிரபஞ்சத்தில் சஞ்சாரம் செய்தபோதிலும், பூமியில் எந்தத் திருத்தங்களையும் அவதானிக்க முடியவில்லை. வல்லரசுகளின் வாணவேடிக்கைகள், தலைமைத்துவங்களில் துஷ்டர்களின் ஆக்கிரமிப்புகள் என மனிதர்களின் மனங்கள் அதிக சூடாக இருக்கிறது. காடுகள் எரிகின்றன; தானாகவே? ஏரி, குளங்கள் நீர்நிலைகள் காணாமல் போயின. இனமத மொழி பேதம்; அதனால் வெறியாட்டம். எல்லோருடைய உறவுகளும் மமதையுடன்தான்.

உஷ்ணப் பெருமூச்சுடன் சனங்களின் சத்தம். இங்கு வாழ்வதைவிட, சூரியனில் குடியிருக்கலாம். பூமியிடம் நெருப்பை, சூரியன் கேட்கும் காலம். எங்கே போவது நாம்?

Link to post
Share on other sites

கூகுள் தொடங்கப்பட்ட நாள் (செப்.7, 1998)

 
அ-அ+

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயரில் கூகுள் தொடங்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூகுள்.காம் என பதிவு செய்யப்பட்டது. 1998 செப்டம்பர் 15-ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.

 
 
 
 
கூகுள் தொடங்கப்பட்ட நாள் (செப்.7, 1998)
 
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயரில் கூகுள் தொடங்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூகுள்.காம் என பதிவு செய்யப்பட்டது. 1998 செப்டம்பர் 15-ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் கூகுள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத்தளமாக மாறியுள்ளது.

 

 

இரண்டாம் உலகப்போரில் லண்டன் மீது ஜெர்மன் குண்டு வீசியது : செப்.7, 1940

 
அ-அ+

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 30 டன் எடையுடள்ள வெடிகுண்டுகளையும், 13,0000 எரிகுண்டுகளையும் 1940 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசினர்.

 
 
 
 
இரண்டாம் உலகப்போரில் லண்டன் மீது ஜெர்மன் குண்டு வீசியது : செப்.7, 1940
 
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 30 டன் எடையுடள்ள வெடிகுண்டுகளையும், 13,0000 எரிகுண்டுகளையும் 1940 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசினர். இந்த குண்டுவீச்சு தொடர்ந்து 57 நாட்கள் நடந்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற முக்கியமான நிகழ்வுகள்

• 1929 - பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.

• 1943 - டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.

• 1965 - இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.

• 1999 - ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர். 

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p64a_1536044506.jpg

‘சர்கார்’ படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. தன்னுடைய பகுதிகளை மொத்தமாக நடித்துக்கொடுத்துவிட்டாராம் விஜய். சீக்கிரமே படத்தின் டப்பிங் வேலைகளையும் தொடங்கவிருக்கிறாராம். படத்தில் விஜய்க்கு முதலமைச்சர் வேடம் எனக் கிசுகிசுக்கிறார்கள். ‘தலைவா’ இப்போ ‘முதல்வா!’


p64b_1536044524.jpg

கத் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவோடு நெருங்கிப் பழகிவந்தார். இருவருக்கும் இடையே காதல் இருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால் கோபமாக அவருடைய காதலி ப்ராச்சி சமூகவலைதளங்களில் ‘இனி எனக்கும் மகத்துக்கும் இடையில் எதுவும் இல்லை’ என்றெல்லாம் எழுதியிருந்தார். இப்போது மகத் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் ‘`எனக்கும் யாஷிகாவுக்கும் இருந்தது வெறும் ஈர்ப்புதான். மற்றபடி ப்ராச்சியும் நானும் இன்னமும் லவ்வர்ஸ்தான். வெளியே வந்தபிறகு ப்ராச்சியிடம் பேசினேன். அவர் புரிந்துகொண்டார். யாஷிகா குட்கேர்ள். ப்ராச்சிதான் மை கேர்ள்’’ எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஓடவும் முடியாது...


p64c_1536044546.jpg

கால்கடோட் நடித்த ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘வொண்டர் வுமன் 1984’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் இந்திய நடிகை சௌந்தர்யா ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியில் ‘ரான்சி டைரீஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா ஷர்மா. இண்டியன் வொண்டர்!


p64d_1536044582.jpg

த்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்று கூறி, நாடு முழுக்க முக்கியமான ஐந்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்தது அரசு. இதையடுத்து நாடு முழுக்க இருக்கிற மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்கள் #metoourbannaxal (நானும் நகர நக்சலே!) என்ற ஹேஷ்டேகில் இந்தக் கைதுகளை எதிர்த்து அணிதிரண்டு தங்கள் எதிர்ப்பினைப் பரவலாகப் பதிவு செய்தனர். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. `மத்திய அரசின் மக்கள் விரோதக் கைது நடவடிக்கைகள் மக்களின் போராடும் உரிமையைப் பறிக்கிற செயல்’ என்று கடுமையாக விமர்சித்துத் தள்ளினர். அடங்க மறு!


p64e_1536044609.jpg

ந்தியாவிலேயே முதல்முறையாக பயோ எரிபொருளில் விமானத்தை இயக்கி சாதனை செய்திருக்கிறது ‘ஸ்பைஸ் ஜெட்’. சமையல் எண்ணெய், விவசாய மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் இந்த பயோ எரிபொருள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தயாரிப்பதில் 500க்கும் அதிகமான விவசாயிகளைப் பயன்படுத்தியிருக்கிறது டேராடூனைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம். தொடர்ச்சியான விமானத்திற்கான பயோ எரிபொருள் உற்பத்தியின் மூலம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்கிறார்கள். அதோடு பயோ எரிபொருள் பயன்படுத்துவதால் விமானப்பயணங்கள் மாசற்றதாகவும், மலிவாகவும் மாறுமாம்! அட!


p64f_1536044632.jpg

‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படம் மீண்டும் தொடங்குமா, கிடப்பில் போடப்படுமா என்று தெரியாத நிலை நீடிக்க, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், இயக்குநர் சிம்புதேவன். வெங்கட் பிரபு தயாரிக்கவிருக்கும் இப்படம், வழக்கம்போல காமெடி என்டர்டெயினராக உருவாகவிருக்கிறது. முழுக்க நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் நிறைந்த படம் என்பதால், இதில் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். அப்போ இம்சை அரசன் இல்லையா!


 p64g_1536044659.jpg

‘யூ - டர்ன்’, ‘சீமராஜா’ படங்களைத் தொடர்ந்து சமந்தா ஃபேன்டஸி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்கவிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘மிஸ் கிரானி’  படத்தின்  ரீமேக்தான் இப்படம். பிரபல தெலுங்குப் பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். வயசான பொன்வசந்தம்!


p64h_1536044685.jpg

விரைவில் தமிழுக்கு வரவிருக்கிறார் நஸ்ருதீன் ஷா. ஏற்கெனவே காந்தி வேடத்தில் ‘ஹேராம்’ படத்தில் நடித்திருந்தாலும் முதல்முறையாக  தமிழ்ப் படம் ஒன்றில் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சீக்கிரமே படம் அறிவிப்பு வெளிவரும் எனச் சொல்லப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் `உயர்ந்த மனிதன்’ படம் மூலமாக அமிதாப் பச்சனும் தமிழுக்கு வருகிறார். வாங்கண்ணா வணக்கங்கண்ணா!

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

நீண்டகால திருமண பந்தத்தின் ரகசியம் கூறும் உலகின் வயதான ஜோடி

சகிப்புத்தன்மையும், பொறுமையும் இது போன்ற நீண்டகால உறவுக்கு முக்கியமென மியாகோ கூறுகிறார். எங்கள் நீண்டகால உறவுக்கு தான் பொறுமையாக இருந்ததுதான் காரணம். இதுதான் உண்மை என்கிறார் அவர். உலகிலேயே அதிக வயதான திருமண ஜோடி என்ற உலக கின்னஸ் வரலாற்று பதிவை இந்த ஜோடி பெற்றுள்ளது.

Link to post
Share on other sites

இளமை .நெட்: பழைய மென்பொருளின் புதிய அவதாரம்!

 

 
ilamaijpg

மென்பொருள் வல்லுனர் ஒருவர் 'விண்டோஸ் 95’ இயங்குதளத்தைச் செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும் ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவம். வயதானவர்களுக்கு மலரும் நினைவுகள்.

‘விண்டோஸ் 95’ ஒரு காலத்தில் கணினி உலகில் பிரபலமாக இருந்த மென்பொருள். மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குக் கோடிகளை அள்ளிக்கொடுத்த மென்பொருள்.

 

ஏன் ஆர்வம்?

ஒரு பழைய மென்பொருளைச் செயலி வடிவில் மறு உருவாக்கம் செய்வதென்பது தொழில்நுட்ப சாகசம் என்றே சொல்லலாம். அதைத் தான் பெலிக்ஸ் ரைசன்பர்க் (felixrieseberg.com) செய்திருக்கிறார். அவர்தான் இந்தச் செயலியை உருவாக்கியவர்.

ரைசன்பர்க்கைத் தொழில்நுட்ப கில்லாடியாக அறிய முடிகிறது. தொழில்முறை மெசேஜிங் சேவையான ஸ்லேக் நிறுவனத்தில் பணியாற்றும் ரைசன்பர்க், மென்பொருள் கட்டமைப்பான எலக்ட்ரான் உள்ளிட்ட வற்றிலும் முக்கியப் பங்காற்றிவருகிறார்.

இவற்றின் பயன்பாட்டை விளக்குவதற்காகவும் தனது ‘கோடிங்’ வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்தச் செயலியை அவர் உருவாக்கியிருப்பதாகக் கருதலாம். அல்லது உண்மையாக ‘விண்டோஸ் 95’ இயங்குதளம் மீது காதல் இருக்கலாம். எனவே, அந்த இயங்குதளத்தை மறு உருவாக்கம் செய்திருக்கலாம்.

ஆனால், அவரது நோக்கத்தை மீறி இந்தச் செய்தி இணைய உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘விண்டோஸ் 95’ தொடர்பான நினைவலை சார்ந்த விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், ‘விண்டோஸ் 95’, கம்ப்யூட்டர் உலகின் மைல்கற்களில் ஒன்றாக இருப்பதே. இந்த இயங்குதளம் அறிமுகமான காலமும் சரி, அறிமுகமானபோது இதனால் செய்ய முடிந்த விஷயங்களும் சரி புறக்கணிக்க முடியாதவை.

1995 என்பது இணைய காலவரிசையில் முக்கியமான ஆண்டு. பின்னாளில் மின் வணிக ஜாம்பவானாக உருவான அமேசான்.காம் மற்றும் கூகுளுக்கு முன்னர் கோலோச்சிய தேடியந்திரங்களில் ஒன்றான ‘அல்டாவிஸ்டா’ அறிமுகமானது இந்த ஆண்டில்தான்.

இணையத்தின் வலை வாசலாக கோலோச்சிய ‘யாஹு.காம்’ மற்றும் இணைய ஏலத்தை தொடங்கிவைத்த ‘இபே.காம்’ அறிமுகமானதும் இதே ஆண்டில்தான். ஆக, இணையம் வெகுஜனமயமாகத் தொடங்கிய இதே காலத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தை அறிமுகம் செய்தது.

அன்றைய மென்பொருள் ராஜா

ஒரு விதத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி, பரவலாக்கியதில் விண்டோஸ் இயங்குதளத்தின் பங்கு கணிசமானது. இதில் இடம்பெற்றிருந்த, மென்பொருள் அம்சங்களை எளிதாக அணுகுவதற்கான ‘ஸ்டார்ட் மெனு’ உள்ளிட்ட அம்சங்கள், அந்தக் கால இணையவாசிகளை கம்ப்யூட்டர் உலகுக்குள் கைபிடித்து அழைத்துச்சென்றன.

இதிலிருந்த டாஸ்க் பார் வசதி, டெஸ்க்டாப் அம்சம், இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசர் ஆகியவற்றை இன்று நாம் சாதாரணமாகக் கருதலாம். அந்தக் காலகட்டத்தில் இவை டெக்ஸ்டாப் கம்ப்யூட்டருக்கான முக்கியக் கருவிகள்.

இந்த மென்பொருள் சிடி வடிவில் அறிமுகமானதோடு, அப்போதே காலாவதியாகத் தொடங்கிவிட்டிருந்த ’பிளாப்பி டிஸ்க்’ வடிவிலும் வெளியானது. இந்த இயங்குதளத்தை அடக்க 13 ’பிளாப்பி டிஸ்க்’ தேவைப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் மீறி அறிமுகமான சில வாரங்களில் இந்த மென்பொருள் லட்சக்கணக்கில் விற்பனையானது. தொடர்ந்து விற்பனையில் சக்கை போடுபோட்டது. 1990-களில் கணினி, இணையம் பழகியவர்கள் எல்லோருக்கும், நல்லதொரு டிஜிட்டல் நண்பன் ‘விண்டோஸ் 95’.

இதெல்லாம் பழைய புராணம்தான். ஆனால் டிஜிட்டல் உலகின் மறக்க முடியாத பக்கங்கள். நிச்சயமாக, ‘விண்டோஸ் 95’ இல்லாமல், விண்டோஸ் என்.டி.க்கும் ஸ்மார்ட்போன் உலகுக்கும் தாவி வந்திருக்க முடியாது. இவை டிஜிட்டல் பாரம்பரியத்தின் அங்கம் என்பதால் இவற்றைப் பேணி காப்பது நம் கடமை.

அது மட்டுமல்ல, புதுப்புது மென்பொருட்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பழைய மென்பொருட்களை எல்லாம் மறப்பது வரலாற்றுச் சுவடுகளை அழித்துவிடும். அந்தக் கால மென்பொருட்கள் சார்ந்த தகவல்கள், பயன்பாடுகளைத் தொடர முடியாமல் போய்விடும். எனவேதான், டிஜிட்டல் மைல்கற்களைத் தகுந்த முறையில் பாதுகாத்தாக வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான், ரைசன்பர்க், ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தைச் செயலி வடிவில் உருவாக்கி அளித்திருக்கிறார். இந்தச் செயலியை இயக்குவதன் மூலம், ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தில் செயல்பட்ட பெரும்பாலான சேவைகளை அதே பாணியில் பயன்படுத்திப் பார்க்கலாம். ஒரு விதத்தில் இது காப்புரிமையை மீறிய செயல்தான். ஆனாலும், நோக்கம் வில்லங்கமில்லாதது.

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

எரிமலை வெடிப்பை நினைவு கூரும் நெருப்புப் பந்து விளையாட்டு

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில், எரிமலை வெடிப்பை நினைவு கூரும் வகையில் நெருப்புப் பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து கொள்ளும் விளையாட்டு  திருவிழா நடைபெற்றது.

எல் சால்வடாரில் கடந்த 1922 ஆம் ஆண்டு மிகப் பெரிய எரிமலை வெடித்துச் சிதறியது. அதில் இருந்து பரவிய நெருப்பு குழம்புகள், ஊருக்குள் புகுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் அங்கு ஆண்டுதோறும் நெருப்புப் பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்ளும் விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.

r.jpg

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை‌‌ இளைஞர்கள் பாதுகாப்புடன் கொண்டாடினர். வீதியில் ஒருவர் மீது ஒருவர் நெருப்புப் பந்துகளை‌ வீசியெறிந்து தாக்கிக் கொண்டது, பார்வையாளர்களை திகில் க‌லந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

20.jpg

http://metronews.lk/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.