Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வில்-யாழ்!

 

VIL

5000 ஆண்டுகளுக்கு முன்னரே "வில் யாழ்' தோன்றியது. குறிஞ்சி நில மக்களே முதன்முதலில் பண் இசைத்தனர். அமராவதி கல் ஓவியத்தில் யாழ் உருவம் காணப்படுகிறது. பழங்காலத்தில் போர்க் கருவியாகவும் வெற்றி முரசாகவும் இந்த வில்-யாழ் பயன்பட்டது.
 - நெ.இராமன்.

 

நாதசுரம்

 

 
NADAS

நாதசுரம் என்னும் இசைக்கருவி சங்க நூல்களில் காணப்பெறவில்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த "பரத சங்கிரம்' என்ற நூலில்தான் நாதசுரம் என்ற பெயர் இடம் பெறுகிறது. சாலமரம், ஆலா, ஆச்சா மரங்களிலிருந்து நாதசுரம் உருவாக்கப்படுகிறது.
 - நெ.இராமன், சென்னை.

 

மலையெல்லாம் நீலம்!

 

 
KURNJI

துலீப் மலர்களுக்காக பலரும் நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறார்கள். ஆண்டுதோறும் மலரும் துலீப் மலர்களுக்காக அந்த நாட்டிற்கு செல்லும் போது, நமது குறிஞ்சி மலருக்காக யாரும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்தால் இல்லை என்ற வருத்தமான பதிலைதான் சொல்ல வேண்டும். உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் பார்க்க விரும்பும் இந்த மலர், இங்கே ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து, மலர்ந்து, பார்க்கும் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
சரி, இந்த குறிஞ்சி மலர் எங்கே எல்லாம் வளரும் அல்லது பூக்கும்? 
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசமே நீல நிறத்தில் பட்டாடை உடுத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றும். குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. "ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' என்பது அவற்றின் தாவரவியல் பெயர். மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக் குறிஞ்சி மலர் அதிகம் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி அல்லது நீலமலை என்றும், இந்த ஊட்டியே பெயர் பெற்றது என்று கூறுவோரும் உண்டு.
இந்த குறிஞ்சி மலரில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் உண்டு. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் 150 வகைகள் வரையில் நமது இந்திய திரு நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே காணலாம். 
பழந்தமிழர்களின் நிலவகையில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கியதுடன் இந்த குறிஞ்சி என்ற சொல்லும், மலரும் பின்னி பிணைந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகளை கூறமுடியும். தொல்காப்பியம், அகநானூறு, குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு, அகநானூறு ஆகியவைகளில் இந்த பெயர் அல்லது பூ குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதி வாசிகளும் நீலமலையில் குறிஞ்சிப் பூ சுழற்சியை வைத்து தங்களது வயதை கணக்கிடுகின்றனர் என்று சரித்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் குறிப்பாக நீலகிரியில் உள்ள "தோடர்' இன மக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்றும், மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் "பளியர்' என்ற மற்றொரு பழங்குடியினர் தங்கள் வயதை இப்படிதான் கணித்துக் கொள்வார்களாம். 2006 -ஆம் ஆண்டில் பூத்தது. இந்த வருடம் (2018) ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும். 
சுற்றுலாதுறையின் பல்வேறு சங்கங்களில் தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் இருப்பவரான மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் இந்த குறிஞ்சி மலர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசுகிறார், ""நான் பலமுறை இந்த மலர்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை எனக்கு இந்த குறிஞ்சி மலர்கள் தந்திருக்கின்றன. என்னைக் கேட்டால் குறிஞ்சி மலர் கூட ஒருவகையான அதிசயம்தான். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மலரும் மலர் அதிசயம் இல்லாமல் வேறு என்ன? அதனால் நமது சுற்றுலாத் துறையினர் இந்தப் பூக்களைப் பற்றி அதிகமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்'' என்றார். 
ஊட்டியிலேயே வாழும் செல்வி கூறுகையில், "நான் இந்த குறிஞ்சிப் பூக்களை ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். இதிலிருந்து என் வயதை நீங்கள் குத்து மதிப்பாக தெரிந்து கொள்ளலாம். சென்ற முறை இந்த குறிஞ்சி மலர்கள் மலர்ந்த போது தினமும் அதை பறித்து வந்து என் வீட்டில் பலமுறை அலங்காரமாக வைத்தேன். சென்ற முறை மலர்ந்த பூவை எனது புத்தகத்தில் நான் வைத்திருந்தேன். சிலவருடங்களுக்கு பிறகு அது காய்ந்தாலும் இருந்தது. பின்னர் ஒரு நாள் திடீரென்று அது காணாமல் போய்விட்டது. இந்த முறை மலரும் பூவை நான் பத்திரமாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

http://www.dinamani.com/

Link to post
Share on other sites
  • Replies 11.3k
  • Created
  • Last Reply
வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 14
 

image_a34a613d25.jpg1901 : அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலை முயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார்.

1914 : ஆஸ்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.

1917 : ரஷ்யப் பேரரசு அதிகாரபூர்வமாகக் ரஷ்யக் குடியரசானது.

1940 : ஹங்கேரிய இராணுவம் உள்ளூர் ஹங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு டிரான்சில்வேனியாவில் 158 ருமேனியர்களைப் படுகொலை செய்தனர்.

1943 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

1948 : போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.

1954 : சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1956 : வட்டு சேமிப்புடன் கூடிய 305 ராமாக் முதலாவது வணிகக் கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

1959 : சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960 : அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார்.

1960 : எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1979 : ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982 : லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984 : ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.

1985 : மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1997 : இந்தியாவின் மத்தியப் பிரதேசம், பிலாசுப்பூர் மாவட்டத்தில் விரைவுத் ரயில் ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

1999 : கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன.

2000 : எம்.எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000 : விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2003 : சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003 : ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005 : நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008 : ரஷ்யாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites

வசந்த காலத்தில் சோலையாக மாறிய பாலை நிலம்

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

ஒவ்வொரு வசந்தகாலத்திலும் சில வாரங்கள் காட்டுப்பூக்களால் கம்பளம் விரித்ததுபோல, கெலைடோஸ்கோப் காட்சி போல தென்னாப்பிரிக்காவின் மேற்கு கடல் படுகை நெடுக அமைந்துள்ள வறண்ட நிலம் வண்ணமயமாக மாறிவிடுகிறது.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

இந்த "சிறப்பு பூக்கள்" பாலைவனங்களிலும், உலக அளவிலுள்ள வறண்ட நிலங்களிலும் மலர்கின்றன.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

வசந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் பூக்கள் மலர்வதைப் போல ஒரு சில நாடுகளில்தான் இப்படிப் பூக்கள் மலர்வது தொடர்ந்து நடக்கிறது.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

ஜூலை இறுதி தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவு வரை இந்த மலர்கள் ஆண்டு தோறும் சில வாரங்கள் பூத்துக்குலுங்கும்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

ஆண்டில் முதல் முறையாக வெப்பக்காற்று வீசும்போது, இவை வாடிவிடும்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

அதிலிருந்து விழும் விதைகள் கோடைகால வெப்பத்தில் உலர்ந்து, அடுத்த ஆண்டு மழைக்காலம் வரை அப்படியே கிடக்கும்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

இந்த இயற்கை நிகழ்வை புகைப்படக்கலைஞர் டாம்மி டிரென்சார்டு படம் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

தென் ஆப்பிரிக்காவின் பியேடௌ பள்ளத்தாக்கில் தன்னுடைய மனைவியோடு ஆண்டு விடுமுறையை கழித்தபோது, தன்னிச்சையாக இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்த்த டிரென்சார்டு "இதுவொரு அழகான கனவு காட்சி" என்று குறிப்பிடுகிறார்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

"குறைவான நாட்களே இருக்கின்ற இந்த இயற்கையின் காட்சி எல்லாவற்றையும்விட சிறப்பாகவுள்ளது. தென்னாப்பிரிக்கா காட்டு விலங்குகளை பார்க்கும் இடமென மக்கள் நினைக்கிறார்கள். காட்டு விலங்குகளை பார்வையிடுவதற்கு போட்டியாக இந்த காட்டுப்பூக்களின் காட்சி அமைகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க பாலைவன மலர்களின் கண்கொள்ளாக் காட்சி

 

 

https://www.bbc.com

Link to post
Share on other sites

 

மீன் உணவு நிரப்பி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை

மீன் உணவை நிரப்பி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை இது.

அச்சில் களிமண்ணை நிரப்பி சிலை செய்த பின் சிலையின் அடிப்பாகத்தில் மண்ணை அகழ்ந்து எடுத்துவிட்டு அதில் மீன் உணவை நிரப்புகிறார்கள்.

பிறகு வண்ணம் தீட்டுகிறார்கள். இந்த சிலை நீரில் கரையும்போது உள்ளே உள்ள மீன் உணவு, மீன்களுக்கு உதவும் என்பது இந்த சிலையை தயாரிப்பவர்களின் கருத்து.

Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p42e_1536664136.jpg

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு `பேட்ட’ எனப் பெயரிட்டுள்ளார்கள். படத்தின் வேலைகள் பரபரவென நடந்துகொண்டிருக்கின்றன. ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த படமே முடியும் தருவாயில் இருக்க, 2.0 என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஷங்கரோ 2.0 வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். `இனி எல்லாம் கிராபிக்ஸ் கலைஞர்கள் கையில். படம் நவம்பர் 29 ரிலீஸ்’ என அறிவித்துவிட்டு ‘இந்தியன் 2’ வேலைகளில் இறங்கிவிட்டார். களைகட்டும்!


ரபரப்புகள் இல்லாமல் படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ‘காக்கா முட்டை’ மணிகண்டன். விஜய்சேதுபதி நடிப்பில் விவசாயிகளின் வாழ்வைச் சொல்லும் ‘கடைசி விவசாயி’ என்ற படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாம். படத்தின் நாயகன் வேடத்திற்கு முதலில் ரஜினிகாந்தை நடிக்கவைக்க முடிவெடுத்து முயற்சி செய்திருக்கிறார்கள். பிறகுதான் விஜய்சேதுபதி உள்ளே வந்திருக்கிறார். உழவே தலை! 


விஞர் வைரமுத்து  `தமிழாற்றுப்படை’ என்ற பெயரில் கட்டுரைகள் அரங்கேற்றம் செய்துவருகிறார். தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கால்டுவெல் எனத் தமிழைச் செழுமைப்படுத்திய பல ஆளுமைகளைப் பற்றி கட்டுரை அரங்கேற்றம் செய்தவர் இன்னும் ஐந்து ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றவுள்ளார். படை வெல்லும்!


டிசியின் வொன்டர் வுமனுக்குப் போட்டியாக சூப்பர் நாயகி `கேப்டன் மார்வெலை’க் களமிறக்குகிறது மார்வெல் நிறுவனம். இந்தப் பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் பிரை லார்சன். கேப்டன் மார்வெல்லின் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டு வைரலடித்தது மார்வெல். கேல்கேடாட் ரசிகர்களோ ‘நாங்க வேற ரேஞ்ச் ப்ரோ, இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’ என அலட்டிக்கொள்ளவேயில்லை. கெத்துதான்!


p42c_1536664164.jpg

ன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனுக்கும் நவம்பர் மாதம் திருமணம். சமீபத்தில் அதற்காக அமெரிக்காவில் பேச்சுலர் பார்ட்டியெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். திருமணத்தை ஷாருக் தலைமையில்தான் நடத்த வேண்டும் என விடாப்பிடியாக இருக்கிறார்களாம் மணமக்கள். திருமணத்தை இந்திய முறைப்படி நடத்தவிருந்தாலும், அதை இந்தியாவில் நடத்தப்போவதில்லையாம். இத்தாலியில்தான் டும்டும்மாம்! மோஸ்ட் வான்டட்

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

புவி ஈர்ப்பு விசையற்ற இடத்திலும் அசத்திய உசைன் போல்ட்!

உலக அளவில் மின்னல் வேக தடகள வீரராக போற்றப்படும் உசேன் போல்ட் , புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் தன்னை ஆட்ட நாயகனாக நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.

Link to post
Share on other sites

செய்திகளை வாசிப்பது உங்கள்......! - செம சேட்டை ரொனால்டோ #ViralVideo

3349_thumb.jpg
 

யுவெண்டஸ் கிளப் பயிற்சி ஆட்டத்தின்போது ரொனால்டோ செய்த சேட்டை அந்த அணி ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. 

rionaldo_18423.jpg

கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் திறமைக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூற வேண்டும். தன் தனித்தன்மையான கால் பந்தாட்டத்தின் மூலம் உலக ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார். 33 வயது போர்ச்சுக்கல் வீரரான ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். நடந்து முடிந்த ஃபிபா உலகக்கோப்பைக்குப் பிறகு யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

யுவெண்டஸ் அணி பயிற்சி ஆட்டத்தின்போது ரொனால்டோ செய்த குறும்புச் சேட்டை அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யுவெண்டர்ஸ் அணியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியில் அவர்களின் பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்தில் நின்று செய்தியாளர் பேசிக்கொண்டிருக்க அவருக்குப் பின்னர் வந்த ரொனால்டோ சில குறும்புச் செய்கைகளை செய்கிறார். இது உலகளவில் பலரை ஈர்த்துள்ளது.

 

https://www.vikatan.com

Link to post
Share on other sites

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் (செப். 15- 1981)

 
 
 
 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் (செப். 15- 1981)
 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15-ம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

தமிழ்மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

துணை வேந்தர்கள்:

வ. ஐ. சுப்பிரமணியம் (1981 - 1986), ச. அகத்தியலிங்கம் (1986 - 1989),      சி. பாலசுப்பிரமணியன் (1989 - 1991), அவ்வை து. நடராசன் (1992 - 1995), கி. கருணாகரன் (1996 - 1999), கதிர் மகாதேவன் (1999 - 2002), இ. சுந்தரமூர்த்தி, ம. இராசேந்திரன் (2009- 2011), ம. திருமலை (10.2.2012 முதல்)

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
 
* 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வெர்ஜீனியாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்பற்றினர்.
 
* 1873 - பிரெஞ்சு- புரூசியப் போர்: கடைசி ஜெர்மானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
 
* 1916 - முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக டாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
 
* 1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
 
* 1935 - நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
 
* 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையான ஜெர்மனிய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
 
* 1944 - இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலைப்பாட்டை எடுப்பதற்காக பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.
 
* 1945 - தெற்கு புளோரிடாவிலும் பகாமசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
 
* 1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
 
* 1952 - ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
 
* 1958 - நியூ ஜேர்சியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 58 பேர் பலியானார்கள்
 
* 1959 - நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
 
* 1963 - ஐக்கிய அமெரிக்காவின் பேர்மிங்ஹாமில் ஆபிரிக்க- அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1968 - சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
 
* 1975 - பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
 
* 1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
 
* 1987 - இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதம் தொடங்கினார்.

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

உங்களுடைய பாடி ஷேப்புக்கு எப்படி ஆடை அணிய வேண்டும்? ஸ்டைலிஸ்ட் டிப்ஸ்

3354_thumb.jpg
 

என் உடல்வாகுக்கு செட் ஆகுமா, அப்படியானதை எப்படித் தேர்வுசெய்வது, செட் ஆகவில்லையெனில், அதை நமக்கேற்ப மாற்றிக்கொள்வது எப்படி?

உங்களுடைய பாடி ஷேப்புக்கு எப்படி ஆடை அணிய வேண்டும்? ஸ்டைலிஸ்ட் டிப்ஸ்
 

லெஹெங்கா, ஸ்ரக், பிளேசர், லாங் டாப், ஜீன்ஸ் அண்டு டி-ஷர்ட் என டிரெண்டுகளும் ஃபேஷன் அப்டேட்களும் மாறிக்கொண்டே வருகின்றன. விஷேச வீடுகளுக்கு கிராண்டான காஸ்டியூம்ஸ், அலுவலகத்துக்கு சிம்பிள் அண்டு நீட் லுக், அவுட்டிங்குக்கு டிரெண்டி என ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான ஆடையைத் தேர்வுசெய்து அணிந்து அசத்துகிறார்கள் இன்றைய தலைமுறைப் பெண்கள். `ஃபேஷனில் அப்டேட் ஆகும் ஒரு டிரெண்ட், என் உடல்வாகுக்கு செட் ஆகுமா, அப்படியானதை எப்படித் தேர்வுசெய்வது, செட் ஆகவில்லையெனில், அதை நமக்கேற்ப மாற்றிக்கொள்வது எப்படி, இதுகுறித்துப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் சண்முகப் பிரியா.ஸ்டைலிஸ்ட் சண்முகப் பிரியா

``பொதுவாக ஒரு டிரெண்ட் நம் உடலமைப்புக்கு செட் ஆகிவிட்டது எனில், அந்த டிரெண்டிலிருந்து இன்னொரு டிரெண்டுக்கு மாறுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். ஆனால், அடுத்தடுத்து டிரெண்டியாக வலம்வர சில மாறுதல்களைச் செய்துகொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, பெண்களின் உடலமைப்பை ஐந்து வடிவங்களில் குறிப்பிடுவார்கள். செவ்வக உடலைப்பு, தலைகீழ் முக்கோண உடலமைப்பு, ஆப்பிள் அல்லது வட்ட உடலமைப்பு, முக்கோண உடலமைப்பு, உடுக்கை வடிவ உடலமைப்பு எனச் சொல்லலாம். இதில், உங்களின் உடலமைப்பு எது எனத் தெரிந்து அதற்கேற்ப அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

தலைகீழ் முக்கோண உடலமைப்பு:

 

 

உடலின் மேல் பகுதி அகலமாகவும், கீழ்ப் பகுதி சதை குறைந்து ஒடுக்கமாகவும் இருக்கும். இவ்வகையான உடலமைப்புப் பெண்களுக்கு, மாடர்ன் உடைகளைவிட பாரம்பர்ய ஓப்பன் லெஸ் டாப்ஸ் அனார்கலி ஆடைகள் பொருத்தமாக இருக்கும். துப்பட்டாவை சிங்கிள் ஃப்ளீட்டில் பின் செய்துகொண்டால், மாஸ் லுக்கில் கலக்கலாம். அனார்கலி ஆடைகள் அணிந்து அலுவலகம் செல்லும்போது, அதிகப்படியான நகைகளைத் தவிர்த்து இயரிங்ஸ் மட்டும் அணிந்தால் நீட்டாக இருக்கும். ஹாஃப் ஸ்லீவ் உங்களுக்குப் பொருத்தமான தேர்வு. ஸ்லிம் ஃபிட், பென்சில் கட் பேன்ட் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

 

 

முக்கோண வடிவ உடலமைப்பு:

உடலின் மேல் பகுதி குறுகியும், கீழ்ப் பகுதி அகலமாகவும் இருக்கும் பெண்கள், குர்தி அணிந்து அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் ஸ்ரக் மற்றும் லெகின்ஸ் அணிந்தால், ஸ்மார்ட்டாக இருக்கும். அணிகலன்கள் அணிய விருப்பம் உள்ளவர்கள், ஆக்ஸிடைஸ்டு நகைகளைத் தேர்வுசெய்து ஷார்ட்டாக அணிந்துகொள்ளலாம். மேல் பகுதி குறுகலாக இருப்பதால் V நெக் பேட்டர்னை தேர்வுசெய்து, பேட்டட் குர்தி அணியும்போது,  உங்கள் மைனஸும் பிளஸாக மாறிவிடும். ஷார்ட் குர்தாக்களைத் தவிர்ப்பது நல்லது. ஓவர் கோட்கள் அணிந்தால், ஜீனியஸ் லுக்கில் கலக்கலாம்.

செவ்வக வடிவ உடலமைப்பு:

ஆடை

உடலின் மேல் பகுதியும், கீழ்ப் பகுதியும் சமமாக இருந்தால், அதற்குச் செவ்வக வடிவ உடலமைப்பு என்று பெயர். இவ்வகை உடலமைப்பு பெண்கள், வி-நெக், போட் நெக் போன்ற வடிவங்கள்கொண்ட குர்தி, லெகின்ஸ், லாங் டாப் போன்றவற்றைத் தேர்வுசெய்யலாம். க்ளோஸ் நெக் வேண்டாம். சிம்பிளான அணிகலன்களைத் தேர்வுசெய்து அணிந்தால், டிரெண்டியாக இருக்கும். எல்போ ஸ்லீவ் மற்றும் .ஃபுல் ஸ்லீவ் தவிர்ப்பது நல்லது.

உடுக்கை வடிவ உடலமைப்பு :

ஃபேஷன்

உடுக்கை வடிவ உடலமைப்பு பெண்கள், ரொம்பவே ஸ்பெஷல். இவர்களின் உடலமைப்பு மிக அழகானது என்பதால், எல்லா வகையான ஆடைகளும் மாஸ் லுக்கில் இருக்கும். ஆடைகளுக்குத் தகுந்தாற்போல அணிகலன்களைத் தேர்வுசெய்து அணிந்தால் தேவதையாக ஜொலிக்கலாம்.

ஆப்பிள் வடிவ உடலமைப்பு:

ஆடை

கழுத்துப் பகுதியிலிருந்து உடலின் கீழ்ப் பகுதி வரை ஒரே மாதிரியான உடலமைப்பை, ஆப்பிள் வடிவ உடலமைப்பு என்பர். இவர்கள், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவற்றைத் தவிர்த்து, இடுப்புக்குக் கீழ் ஃப்ளோயியான ஆடைகளை அணியலாம். வெஸ்டர்ன் ஆடைகள் அணிய விரும்பினால், பாடி ஷூட் அணிந்து, அதன்மீது ஆடை அணிவது அவசியம்.

 

https://www.vikatan.com/

Link to post
Share on other sites

அறிஞர் அண்ணா: தவறவிடக்கூடாத தகவல்கள்


 

 

10-points-about-anna

தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை வலுவான சக்தியாக உருவாக்கியவரும் ‘அறிஞர் அண்ணா’ என பாசத்தோடு அழைக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாதுரை (C.N.Annadurai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் (1909) பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கினார். குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார்.

* பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு பொருளாதாரம் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பயின்ற பள்ளியிலேயே சிறிது காலம் ஆசிரியராக வேலை பார்த்தார்.

* பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அரசியல் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். தி.க.வின் ‘விடுதலை’ பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார். பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.க.வில் இருந்து விலகி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். ‘திராவிட நாடு’ இதழையும் தொடங்கினார்.

* எழுத்துப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார். திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். இவரது ‘நல்ல தம்பி’ என்ற கதை 1948-ல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ‘ரங்கோன் ராதா’, ‘பணத்தோட்டம்’, ‘குமரிக்கோட்டம்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’ ஆகிய நாவல்கள் திரைப்படங்களாகின.

* நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சார்ந்த முற்போக்கு, சீர்திருத்த நாடகங்கள், மேடை நாடகங்களை எழுதியுள்ளார். சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். இவரது சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன. மணிக்கணக்கில், அடுக்குமொழியில் மடைதிறந்தாற்போல பேசுவதில் வல்லவர்.

* ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கை கொண்டவர். மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதை கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாக முன்மொழிந்தார்.

* இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் 1960-ல் இவரது தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. 1965-ல் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

* மாநிலங்களவை உறுப்பினராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, முதல்வரானார்.

* சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். ‘மதறாஸ் மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றினார். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

* அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 59-வது வயதில் (1969) மறைந்தார். இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளைகளில் தலா ரூ.5,000. இவைதான் மறைந்தபோது இவரிடம் இருந்த சொத்துக்கள்!

https://www.kamadenu.in/

Link to post
Share on other sites

``வெண்சிவப்பு, நீலம், கருஞ்சிவப்பு அட்டகாமா கடல்நத்தை!" - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

 

கடல்நத்தை

பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்று அட்டகாமா அகழி (Atacama Trench) இருள் சூழ்ந்த பகுதியில் மூன்று விநோதமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ஆராய்ச்சிக் குழு தென்கிழக்கு பசிபிக் பகுதியில் தூண்டிலுடன் இணைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி இன்னும் அறியப்படாத பல மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

கடும் குளிர் மற்றும் 1500 மீட்டர் (கிட்டத்தட்ட 24,606 அடி) ஆழத்தினால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றைக் கடந்து அறிவியல் அறிஞர்கள் அட்டகாமா அகழியில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் நத்தை உள்ளிட்ட உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளிகசியும் உடலமைப்போடு இருப்பதை தங்கள் கேமரா உதவியுடன் உறுதி செய்துள்ளனர்.

 

 

ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் லின்லே ``அகழியின் ஆழத்தில் வாழும் கடல்நத்தைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. ஆய்வு செய்யப்பட்ட கேமரா பதிவுகளிலிருந்து ஏராளமான முதுகெலும்பற்ற உயிரினங்கள் அகழியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் கடல் நத்தைகள் அதிக சுறுசுறுப்புடனும் அதிக ஊட்டத்துடனும் காணப்பட்டன” எனத் தெரிவித்தார்.

 

 

மேலும் அவர் ``அவற்றின் ஜெல்லி போன்ற உடலமைப்பு கடும் குளிர் மற்றும் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்டுள்ளது. கடல்நத்தைகளின் உடலில் உள்ள கடினமான பகுதியான பல் மற்றும் உட்செவியின் எலும்பு மட்டுமே அவற்றின் சமநிலைக்கு உதவுகின்றன. கடல் நத்தைகளை கடும் குளிர் மற்றும் அதிக அழுத்தம் இல்லாத பரப்புக்கு எடுத்து வந்தால் அவை எளிதில் உடைந்து விடும் அல்லது வேகமாக உருகிவிடும்” என்று தெரிவித்தார்.

ஆய்வுக்குழு அந்தப் புதிய உயரினத்துக்கு ``வெண்சிவப்பு,  நீலம், கருஞ்சிவப்பு அட்டகாமா கடல்நத்தை” (Rose, the blue, the purple atacama snailfish) என்று செல்லப்பெயர் வைத்துள்ளது. நூறு மணிநேர வீடியோ பதிவுகள், 11,468 புகைப்படங்கள் எனப் பலவற்றை ஆய்வுசெய்து புதிய உயிரினத்தைக் கண்டறிந்துள்ளது ஆய்வுக்குழு.

அறிவியல் அறிஞர்கள் ஒரு கடல்நத்தையை பொறி வைத்துப் பிடித்து வந்து பாதுகாத்து தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தரையிறங்கும் பொறியுடன் கூடிய அமைப்பைப் பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக ஆழப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆய்வாளர்கள்.

கடல்சார் அறிஞர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய ஆராய்ச்சிகள் பற்றி விவாதிக்கும் சேலஞ்சர் கருத்தரங்கம் (Challenger conference) இந்த வாரம் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அங்கு அட்டகாமா அகழியில் கண்டறியப்பட்ட இந்தப் புதிய உயிரினங்கள் பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

உங்களால் இவரைப் போல சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?

நீண்ட காலம், உடல்நலத்துடன் வாழ நான் சிரித்துக்கொண்டே இருக்கத் தொடங்கினேன் என்கிறார் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெலாச்சூ கிர்மா.

உலகெங்கும் பேசுவதற்கான பொது மொழியாக, சிரிப்பை உண்டாக்கினால் நம்மால் நல்லதோர் உலகத்தைப் படைக்க முடியும் என்கிறார் தம்மை 'சிரிப்பு நாயகன்' என்று அழைத்துக்கொள்ளும் இவர்.

Link to post
Share on other sites

பப்புவா நியூ கினியா விடுதலை (செப். 16- 1975)

 

பப்புவா நியூ கினியா விடுதலை (செப். 16- 1975)

 
பப்புவா நியூ கினியாவின் முழுப்பெயர் பப்புவா நியூ கினி சுதந்திர நாடு என அழைக்கப்படும். இந்நாடு ஓசானியாவிலுள்ள பெருங்கடலிட நாடுகளில் உள்ள நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும், மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட பப்புவா மற்றும் இரியன் ஜயா மாகாணங்களைக் கொண்டது. மற்றும் பல தீவுகளையும் கொண்டது. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது.

இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுமங்களும் பரம்பியுள்ளன.

இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத்தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது.

சில இடங்களுக்கு விமானம் (வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888-ல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975-ம் ஆண்டு பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம்பெற்றுக்கொண்டது.

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

பீதியை கிளப்பும் வெதர் ரிப்போர்ட் செய்தி வாசிப்பு: வைரலாகும் வீடியோ


 

 

this-has-got-to-be-the-scariest-weatherreport-ever

 

ஒரே ஒரு முறைதான் சுனாமி வந்துச்சு ஆனா இப்பவும்கூட எங்கையாவது பூகம்பம் வந்தாலும் நம்மூர்ல சுனாமி வரப்போகுதாம்னு கிளப்பிவிட ஒரு கும்பல் தயாராகத்தான் இருக்கு.

அந்த வகையில் அமெரிக்காவை தாக்கியுள்ள புளோரன்ஸ் புயல் குறித்து முன்னறிவிப்பை வழங்கிய வானிலை முன்னறிவிப்பு வழங்கு சேனலான தி வெதர் சேனல் என்ற தொலைக்காட்சி சினிமாவுக்கு நிகராக புயலின் தாக்கம் குறித்தும் வெள்ளம் ஏற்படும் அளவு குறித்தும் கிராஃபிக்ஸ் செய்து காட்சிகளை வெளியிட்டது.

இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பலரும் வருங்காலம் இப்படித்தான் செய்திகள் வாசிப்பு இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

 

 

https://www.kamadenu.in/

Link to post
Share on other sites

'ஆமா... அது எப்படி வாத்யாரே போன் பறக்கும்?!' - 2.0 டவுட்

 

2030-ல் அக்ஷய் குமார் இல்லாமலேயே மொபைல் போன்கள் பறக்கலாம்

'ஆமா... அது எப்படி வாத்யாரே போன் பறக்கும்?!' - 2.0 டவுட்
 

 ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் நடிக்கும் 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. யூடியூப்பில் 3 மொழிகளையும் சேர்த்து மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பார்த்துள்ளனர். டீசரில் வருவதைப் போல் போன்களை ஹேக் செய்வது கூட சரி, அது எப்படிப் பறந்து அந்த உருவங்களை உண்டாக்க முடியும் என்று யோசித்ததில் இதனால் இருக்குமோ என்று சில விஷயங்கள் பிடிபட்டன. 

எந்திரன் படத்தின் முடிவு அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence ) அருங்காட்சியகத்தில் பாகங்கள் பிரிக்கப்பட்ட சிட்டி ரோபோ பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதை மாணவர்கள் வந்து பார்வையிட்டு செல்வார்கள். இது நடக்கும் காலம் 2030. தற்போது டீசரில் சிட்டியை வைத்துத்தான் நடக்கும் பிரச்னைகளுக்கு முடிவுகட்ட முடியும் என்று வசீகரன் அறிமுகப்படுத்தும் போது சிட்டி அதே அருங்காட்சியகத்தில் இருப்பது போல டீசரில் காட்டப்படுகிறது. இதன் மூலம் இது 2030-க்கு பிறகு நடைபெறும் கதை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இன்னும் பதினைந்து வருடங்களில் என்ன கண்டுபிடிப்புகளால் இந்த போன்கள் பறந்திருக்க முடியும் என்று யூகிப்போம்.

செல்ஃபி ஸ்டிக்குகளுக்கு பதிலாகப் போனே கொஞ்சம் தூரம் வரை அந்தரத்தில் பறந்து போட்டோ எடுக்கும் தொழில்நுட்பம் அப்போது வந்திருக்கலாம். இன்றே இதைச் செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இப்போதிருக்கும் ட்ரோன் கேமராக்களுக்குப் பதிலாகக் கூட போன்களை வருங்காலத்தில் நாம் பயன்படுத்தலாம். ஏற்கெனவே எல்.ஜி நிறுவனம் ட்ரோன் போன் ஒன்றை வெளியிடப்போகிறது என்று ஒரு வதந்தி வீடியோ வைரல் ஆனது. மேலும் கையடக்கத்தில் ஏர்செல்ஃபி என்னும் சிறிய ட்ரோன் கேமராக்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும், வெறும் மோட்டார்களின் மூலம் ஓடும் சுழலிகள் உதவியுடன் போனை பறக்கச் செய்யும் வீடியோ ஒன்றை இந்தியர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இது எந்தளவு உண்மை என்பதும் தெரியவில்லை. 

 

 

 

ஆனால் படத்தில் எந்த ஒரு கூடுதல் பாகமும் போன்களில் இணைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சுழலிகள் எதுவும் இல்லாமல் இதைச் செய்ய வைப்பது தற்போதைக்கு நடக்காத ஒரு காரியமே. வேற என்னவாக இருக்கும்? ஒரு வேளைக் காந்த சக்தியோ என்று பார்த்தால் அதுவாக இருக்கவும் வாய்ப்பில்லாதது போலவே தெரிகிறது. போனில் இருக்கும் மேக்னெட்டோமீட்டர் காந்த சக்தியால் ஈர்க்கப்படும் என்பது உண்மை தான். காந்த சக்தி கூடுதலாக இருந்தால் போனும் காந்தமாக மாறிவிடும். ஆனால் போன்கள் பறக்கும் அளவுக்கு ஈர்க்கவேண்டும் என்றால் காந்த சக்தி மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். 10 டெஸ்லா அளவிற்குக் காந்த சக்தி போய்விட்டாலே போன் வேலை செய்யாமல் பழுது அடைந்து விடுமாம். இதில் எங்கே பறக்க வைத்து போன்களின் டிஸ்பிளேகளை கொண்டு அக்‌ஷய் குமார் முகத்தையெல்லாம் கொண்டு வருவது. அதுவும் குறிப்பாக போன்களை மட்டும் எப்படி காந்த சக்தி கொண்டு ஈர்க்க முடியும்?

போன்

இதைத்தவிர வேற ஒரு ஐடியாவும் சிக்குற மாதிரி தெரியல. படத்தைப் பொறுமையா ரிலீஸ் அப்போ பார்த்தாலே தெரியப் போகுது, இந்த வெட்டி ஆராய்ச்சி எல்லாம் எதுக்குனு நீங்க கேட்கலாம். எல்லாம் ஒரு ஆர்வம்தான்.  உங்களுக்கு, வேற என்னவா இருக்கும்னு ஒரு ஐடியா வந்தா மறக்காம கமென்ட்ல சொல்லிட்டு போங்க மக்களே!

 'ஒரு வேளை எல்லாரும் ஃப்ளைட் மோட ஆன் பண்ணி வச்சிருப்பாங்களோ!'

https://www.vikatan.com

Link to post
Share on other sites

வலைபாயுதே

 

 

facebook.com/P Kathir Velu

நம் குரலை நாமே கேட்க அசாத்திய தைரியம் வேண்டும். நாம் நினைத்திருப்பதை விட அதில் கம்பீரம், கணீர் குறைவாகத்தான் இருக்கும்!

facebook.com/Divya Bharathi

p113a_1536744849.jpg

கடல் பார்த்தல் என்பது இப்போதெல்லாம் துயரக் கதை ஒன்றை வாசித்தல் போலாகி விட்டது. கடலில் மாயமான யாரோ ஒருவர், கடலும் வானும் சேரும் அந்த இடத்தில் இன்னும் நீந்திக்கொண்டிருக்கக்கூடும்...

twitter.com/iam_ni_la

சொந்தக்காரன் ஃபங்ஷன் அட்டெண்ட் பண்றது, 500 இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு சமம்

twitter.com/sundartsp

போன தலைமுறைக்கு இட்லியே பண்டிகை உணவாம்; நமக்கு பிரியாணி. அடுத்து அதுவும் தின உணவாகிரும் போல.

p113e_1536745006.jpg

twitter.com/meenamdu

இந்தத் தலைமுறையில் சேலைகட்டச் சொல்லிச் குடுத்த அம்மாவுக்கு நன்றிக் கடனா சுடிதார் போடச் சொல்லிக் குடுத்திடறோம்.

twitter.com/imparattai

திங்கள் கிழமை ஜெயிலுக்குப் போவது போலவும், வெள்ளி அல்லது சனிக்கிழமை ஜெயிலில் இருந்து பெயிலில் வெளியே வருவது போலவும் இருக்கிறது.

p113b_1536744883.jpg

twitter.com/chithradevi_91

ஒரு மணி நேரம் யோகா செய்வதைவிட சிறந்த பலனைத் தருவது அரை மணி நேரம் மொபைலை ஆஃப் செய்து வைப்பது.

twitter.com/yaar_ni

பெத்த புள்ள 30 வயசைத்  தாண்டிப் போய்க்கிட்டிருக்கேன் அது கண்ணுக்குத் தெரியல #செம்பருத்தி நாடகத்துல பார்வதியும், ஆதியும் கல்யாணம் பண்ணுவாங்களா இல்லையானு வீடு வீடா போய்ப் பேசிக்கிட்டிருக்கு எங்க அம்மா...

p113c_1536744935.jpg

twitter.com/JamalanJahir

முழக்கங்களைக் கவிதைகளாகக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம், எப்பொழுது கவிதைகளை முழக்கங்களாக மாற்றப் போகிறதோ?

facebook.com/Sesu Gunaseelan

உறவுக்காரங்க வீட்ல பெண்குழந்தை பிறந்திருக்கு. நல்ல “ட்ரெண்டியா” ஒரு பேரு கேட்குறாங்க #பாசிசபாஜகஒழிக ன்னு வைக்கச்சொல்லப்போறேன்

p113d_1536744969.jpg

facebook.com/Muhi Bullah S

சோபியாவின் பின்னணி குறித்து விசாரித்த உளவுத்துறை கடும் அதிர்ச்சி... @மொத்தம் 8 கோடிப் பேராம்.

facebook.com/Yuva Krishna

ஃப்ளாஷ் நியூஸ்: எச்.ராஜா, இனி விமானங்களில் பயணிக்க மாட்டார். அட்மின் தகவல்.

facebook.com/Aadhavan Dheetchanya

வண்டியை எடுக்கவே முடியாதபடி பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவிட்டு 8 வழி / 80 வழிச் சாலைகளை அமைக்கிறார்கள்.

சைபர் ஸ்பைடர்

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

நீங்கள் உடுத்துவது சாக்கடை நீரிலிருந்து வந்த பட்டுப் புடவையா?

திருமணங்கள் முதல் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்காலங்கள் வரை அனைத்துவிதமான தருணத்துக்கும் ஏதுவான பட்டுப்புடவைகள் உள்ளன.

பெங்களூரு அருகேயுள்ள விவசாயம் செய்யும் கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டதால் விவசாயிகள் பட்டுப்புழுக்கள் விரும்பி உண்ணும் மல்பெரி தாவரத்தை கழிவு நீரை கொண்டு வளர்க்கின்றனர்.

Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 17
 

image_5735d480d2.jpg1900 : பிலிப்பைன் - அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.

1908 : ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1928 : சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.

1930 : குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.

1939 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.

1939 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜேர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.

1941 : இரண்டாம் உலகப் போர்  - சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

1941 : ஈரான் மீதான ஆங்கில - சோவியத் படையெடுப்பு - சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.

1944 : மார்க்கெட் கார்டன் நடவடிக்கை - நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.

1944 :  இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.

1948 : ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.

1949 : டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.

1965 : பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1974 : வங்காளதேசம், கிரெனடா,  கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 : நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978 : இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1980 : போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1980 : நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.

1988 : தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.

1991 : எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.

1991 : லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1997 : பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 : இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

2011 : வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

உலகிலேயே அழகான கையெழுத்தைக் கொண்ட பிரக்ரிதி மாலா: கணினி எழுத்தைவிட மேம்பட்ட கையெழுத்துக்குச் சொந்தக்காரி

 

 
prakriri-malla

பிரக்ரிதி மாலா. | இணையத்தில் வைரலான அவரின் கையெழுத்து

''கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு!''

''உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயுமே பார்த்ததில்லை..!'' - இவையெல்லாம் நம்முடைய, நம் நண்பர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டும் கடந்தும் வந்தவை...

 
 

ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.

9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது.

அழகான, தெளிவான எழுத்துகள்தான் படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.

4png

பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து

நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான பிரக்ரிதி மாலா, குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.

https://tamil.thehindu.com/opinion/blogs/article24953625.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

Link to post
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: ஊக்கு

 

 
pinjpg

ஊக்கைப் பயன்படுத் தாதவர்களே இருக்க முடியாது. பட்டன் விழுந்துவிட்டால் சட்டென்று ஊக்கை வைத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம். பையின் கைப்பிடி அறுந்துவிட்டால் ஊக்கை மாட்டி எடுத்துச் சென்று விடலாம். எதிர்பாராத நேரத்தில் கைகொடுக்கும் ஒரு கண்டுபிடிப்பு ஊக்கு.

பழங்காலத்தில் இருந்தே ஊக்கு போன்ற ஒரு பொருளை மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். துணி, தோலாடைகளை இணைக்க செப்புக் கம்பியால் ஆன ஊக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

நவீன ஊக்கைக் கண்டுபிடித்த பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் ஹண்ட்டைச் சேரும். இவர் ஏராளமான பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1846-ம் ஆண்டு பூட்டுத் தையல் இயந்திரத்தைக் உருவாக்கினார். ஆனால், இந்த இயந்திரத்தின் மூலம் ஏராளமான ஏழைப் பெண்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று இவரது மகள் சொன்னார். அதனால் வால்டர் ஹண்ட், தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெறவில்லை.

1849-ம் ஆண்டு பணக் கஷ்டத்தில் இருந்தார் வால்டர். ஒரு நாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து, நண்பரிடம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவரது கையில் நீண்ட வயர் ஒன்று சிக்கியது. அதை வைத்து ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார். அதில் அவருக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியது. பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து பார்த்தார்.

இறுதியில் ஊக்கின் (Safety Pin) வடிவத்தை உருவாக்கினார். 1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெற்றார். பிறகு அந்தக் காப்புரிமையை டபிள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அதில் கிடைத்த பணத்தை நண்பரிடம் கொடுத்து, கடனை அடைத்தார்.

இவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம்தான் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

pin%202jpg

வால்டர் ஹண்ட்

ஆரம்பத்தில் ஊக்கு, விலை உயர்ந்த பொருளாக இருந்தது. ஜனவரி முதல் அல்லது இரண்டாவது நாளில் ஊக்கை வாங்கி வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் ஊக்கை வாங்கி வைக்கும் அளவுக்குச் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்பினர். நியூயார்க்கில் சாமுவேல் சோல்கம் ஊக்குத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ஊக்குகள் தயாரிக்கப்பட்டன.

வால்டர் கண்டுபிடித்த ஊக்கில் மிகச் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. இரும்பு, செம்பு, எஃகு போன்றவற்றில் ஊக்குகள் உருவாக்கப்பட்டன. மிகச் சிறிய ஊக்கில் இருந்து மிகப் பெரிய ஊக்குகள்வரை அளவிலும் மாற்றங்கள் வந்தன. ஊக்கின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க விலையும் குறைந்து போனது. இன்று ஒரு நாளைக்கு 30 லட்சம் ஊக்குகள் உற்பத்தி செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

துணிகளை வேகமாக இணைக்க வெல்க்ரோ போன்றவை வந்துவிட்டாலும் இன்றும் ஊக்கின் பயன்பாடு உலக அளவில் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஊசியையும் ஊக்கையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு, தாய் மகளுக்குச் சீதனமாகக் கொடுக்கும் பழக்கம் இருந்துவருகிறது.

உக்ரைனில் குழந்தைகளின் சட்டையில் ஊக்கை மாட்டினால், அது கெட்ட சக்திகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஊக்கு  அதிர்ஷ்டத்தைத் தருவதாக நினைக்கிறார்கள்.

 

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்

3268_thumb.jpg
 

இன்னிக்கு ரொம்பப்பேர் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிச்சுப்பார்க்குறாங்க. ஆனா, அது ரொம்ப ஆபத்தானது. அவர்கள் ரெண்டு பேரோட தேவையும் இன்னைக்கு ரொம்ப முக்கியம்.

`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்
 

சுயமரியாதை அறிவு
பகுத்தறிவுப் பாதை உனது
சகமனிதனைச் சமமாய்த்
தொடுவது ஒரு குற்றமென 
சுற்றிவந்த முட்டாள் மனதில் 
இடியென விழுந்தது யார்?
சடங்கினை உதைத்தது யார்?
கடவுளை மறுத்தது
மனிதனை நினைத்தது
சமத்துவம் உரைத்தது யார்?
பெரியார்

பெரியார்

#HBDPeriyar140 என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் காலையிலேயே டிரெண்டாகியுள்ளது. தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான இன்று, சமூக வலைதளமெங்கும் பெரியாரின் கருத்துகளையும் புகைப்படத்தையும் பதிவிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர் இளைஞர்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பெரியாரின் சிந்தனைகளைப் பற்றிய கூட்டங்களையும் விவாதங்களையும் நடத்திவருகின்றனர்.

 

 

சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகிவிட்ட சூழலில், நீலம் பண்பாட்டு மையம், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இணைந்து, பெரியாருக்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. `கலகக்காரன் பெரியார்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை, காஸ்ட்லெஸ் கலெக்டிவின் பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு எழுதிப் பாடியுள்ளார். முழுக்க ராப் இசையில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பெரியாரின் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் பாடலை எழுதிப் பாடியுள்ள அறிவிடம் இதுகுறித்துப் பேசியதிலிருந்து...

 

 

பெரியார்

``பெரியாரோட பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அவருடைய சிந்தனைகளை எடுத்துட்டுப்போறதுக்கான ஒரு சின்ன அறிமுகமா இந்தப் பாடல் இருக்கும். அந்த நோக்கத்துலதான் நீலம் பண்பாட்டு மையம், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல், காஸ்ட்லெஸ் கலெக்டிவ் சேர்ந்து இந்தப் பாடலை உருவாக்கினோம். பெரியார், அம்பேத்கர் மாதிரியான தலைவர்களைப் பற்றி, குறிப்பிட்ட குழுவான மக்கள் மட்டும்தான் பேசிட்டு இருக்காங்க. ஆனா, எல்லா மக்களுக்கான தலைவர்களா அவங்க வாழ்ந்திருக்காங்க. தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை மக்கள் முன்னேற்றத்துக்காகச் சிந்தித்துச் செலவிட்டாங்க. பொதுமக்கள் மத்தியில் இந்தத் தலைவர்களைக்கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியா நான் இந்த மாதிரியான பாடல்களைப் பார்க்கிறேன். அந்தத் தலைவர்களே அந்தக் காலத்துல இதைத்தான் கூறினாங்க. வரும்காலங்கள்ல அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி, மக்களுக்குப் புரியுறவிதத்துல கொள்கைகளைக்கொண்டு சேரக்கணும்னுதான் பெரியாரும் அம்பேத்கரும் சொன்னாங்க. 

இன்னிக்கு நாம ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சோஷியல் மீடியாக்குள்ள போயிட்டுதான் வர்றோம். சோஷியல் மீடியா பயங்கர பவர்ஃபுல்லானது. அதை எப்படிப் ஆக்கபூர்வமா பயன்படுத்துறதுங்கிறதுதான் என்னோட மிக முக்கியமான வேலை. பாப் மார்லேதான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரை வெறுமனே இசைக்கலைஞரா மட்டும் பார்க்க முடியாது. அவரோட பாடல்கள்ல புரட்சிகரமான வரிகளும் நிறைஞ்சிருக்கும். அதைப்போலதான் என் பாடல்களையும், ராப் இசையோடு சேர்த்து கருத்தாழமிக்கப் பாடல்களா உருவாக்கிறதுதான் என் ஐடியா.

 

 

`தெருக்குரல்'கிற பேர்ல நாங்க இளைஞர்கள் கொஞ்சபேர் சேர்ந்து, வாராவாரம் பார்க்ல பாடல் பாடி அதை ஃபேஸ்புக்ல லைவ் பண்றோம். அதுவும் ஒரு சிறு முயற்சிதான். மக்களுக்கானதுதான் கலை. அதை அந்த மக்களுக்குப் பயனுள்ளவிதமாகப் பயன்படுத்துறதுதான் அந்தக் கலைக்கு நாம செய்ற நியாயமான மரியாதை. இன்னிக்கு ரொம்பப்பேர் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிச்சுப்பார்க்குறாங்க. ஆனா, அது ரொம்ப ஆபத்தானது. அவர்கள் ரெண்டு பேரோட தேவையும் இன்னைக்கு ரொம்ப முக்கியம். `எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்...' என்ற வரி இந்த பாட்டுல இருக்கு. அந்த ரெண்டு பேரும் முக்கியமானவங்கன்னு உணர்த்துறதுக்காகத்தான் அந்த வரி. இன்னிக்கு ஒருநாள் மட்டும் பெரியாரைப் பற்றிப் பேசிட்டு, நாளைக்கு வேற டாப்பிக் பேச நகராம, பெரியாரைப் பற்றி தொடர்ந்து பேசணும். அது நம்மளோட கடமை" என்றார்.

'இறப்பினைவிடவும்
சிறப்பது மனிதம்
பகுத்தறிவடையும்
பொழுதினி விடியும்
சரித்திரம் முழுதும்
சமத்துவம் எழுதும்
இருக்கை இணையும் 
பொழுது முடியும்'

என்ற வரிகள் பின்னணியில் ஒலித்தன.

https://www.vikatan.com

Link to post
Share on other sites

 

இ-சிம் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

 

அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான். ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது. அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். சாதாரண சிம் கார்டுகளை போன்று அடிக்கடி தேய்ந்து போகும் பிரச்சனையோ, தொழில்நுட்ப பிரச்சனைகளோ இதில் இல்லை.

Link to post
Share on other sites
 

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934)

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934)
 
சோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து‍ 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945-ல் இருந்து 1991-ல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.

இது, 1917-ல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந்நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945-ல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம்.

எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து‍ நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின. 1930-களில் சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது.

1933-ல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து தூதுவர்களை அனுப்பித்தன. அதன்பின் அதிகாரப்பூர்வமாக 1094-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1851 - நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதன் முதலில் வெளியிடப்பட்டது.
 
* 1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற 'அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ற சொற்பொழிவை ஆற்றினார்.
 
* 1906 - ஹாங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10 ஆயிரத்துக்கும் பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1911 - ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.
 
* 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்க படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
 
* 1919 - நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

* 1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது. *
 
1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
 
* 1932 - நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் "H" எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
* 1939 - இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
 
* 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
 
* 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
 
* 1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
 
* 1962 - ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
 
* 1964 - வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
 
* 1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
* 1972 - இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
 
* 1974 - சூறாவளி ஹோண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.

* 1976 - பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
* 1977 - வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
 
* 1980 - சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
 
* 1982 - லெபனானில் கிறிஸ்தவ துணை ராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
 
* 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.

* 1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
 
* 1997 - 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 
* 2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
* 2007 - மியான்மாரில் பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

https://www.maalaimalar.com

Link to post
Share on other sites

மனதார பாராட்டுங்கள் குழந்தைகளை... அதோடு இதையும் கவனியுங்கள்! #GoodParenting

3354_thumb.jpg
 
மனதார பாராட்டுங்கள் குழந்தைகளை... அதோடு இதையும் கவனியுங்கள்! #GoodParenting
 

"குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள். சரி எல்லா விஷயங்களுக்கும் பாராட்டலாமா, அது சரியா என்பது குறித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபுசியாமளா

"குழந்தைகள் ஏதாவது குறும்பு செய்யும் போதோ தவறு செய்யும் போதோ `இதுக்கு செல்லத்த பாராட்டணுமா... இல்ல திட்டணுமா...  என்று கேட்டு, ஆராயும் திறனையும் முடிவு எடுக்கும் திறனையும் மெள்ள மெள்ளக் குழந்தைக்கு பழக்கப்படுத்துங்கள். இந்தப் பழக்கம் குழந்தையின் முடிவு எடுக்கும் திறனையும் அதிகரிக்கும்.

 

 

 

 

 

 

உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

 

பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.  

உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

உங்கள் குழந்தை தோற்கும் சூழ்நிலையில், 'உன்னோட முயற்சியை அம்மா அக்சப்ட் பண்ணிக்கிறேன். அது சாதாரண விஷயமில்லை. அம்மாவும் நிறைய முறை தோத்துப் போயிருக்கேன். ஆனா, சோர்ந்து போனதில்லை. திரும்பத் திரும்ப முயன்று பார்த்திடுவேன். நிச்சயமா நீ நினைச்சதை அடைஞ்சுடலாம்' என்று பிராக்டிகலாக அதே சமயம் ஆறுதலாகத் தேற்றுங்கள். நீங்கள் சொல்வதுதான் உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். 

பாராட்டு

நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை  குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப்  பண்பை வளர்க்கும்.

பரிசுகள் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பரிசுகளுக்குப் பழக்கப்படுத்தினால், உங்களின் பாராட்டுகளை அவர்கள் உணர வாய்ப்பில்லை. பரிசுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, குழந்தையின் கண்களைப் பார்த்து மனதார பாராட்டுங்கள்.

திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல்,தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.

ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும். 

பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம். அதிகமாக இருந்தாலும் பிரச்னை... குறைந்தாலும் பிரச்னை என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்," என்றார்.

https://www.vikatan.com

 

Link to post
Share on other sites

எது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார்?! - உலக அறிவாளர்கள் தினம்

3277_thumb.jpg
 
எது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார்?! -  உலக அறிவாளர்கள் தினம்
 

``டேய் அங்க பாரு உன் சட்டை மேல பல்லி!" என்று பதறவிட்டு, ``ஏமாந்துட்டியா... ஏப்ரல் ஃபூல்! ஏப்ரல் ஃபூல்" என்று மற்றவர்களை ஏமாற்றி சந்தோஷப்படும் `முட்டாள்கள் தினம்' பற்றி தெரியாத ஆள்களே இருக்க முடியாது. ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்' பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் (எனக்கே நேற்று தான் தெரியும் ).  இந்த தினத்தன்று வெளிநாடுகளில், ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வார்களாம். இதன் முக்கியமான நோக்கம், அனைவருக்கும் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதுதான்.

அறிவாளர்கள் தினம்

ஒருவரை அறிவாளி/முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். `முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், `தலைசிறந்த அறிவாளி' எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் பாரதியார் வரை, அவர்களின் குடும்பத்தாரிடமிருந்தே `முட்டாள்' பட்டம் பெற்ற பலரை, இன்று வரை நாம் கொண்டாடிவருகிறோம். இந்நிலையை என்னவென்று சொல்வது. இங்கு யார் அறிவாளி... யார் முட்டாள்?   

 

 

ஏன், எதனால், எப்படி, போன்ற கேள்விகளில் பிறந்த எத்தனையோ பதில்களை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். முதல்முதலில் நெருப்பைக் கண்டறிதலிருந்து, தனிநபருக்கு எவ்வளவு IQ (Intelligent Quotient) இருக்கிறது என்பதை யூகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் மனிதன், அறிவை வளர்த்துகொண்டேதான் இருக்கிறான். அப்படி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ வியப்பூட்டும் அத்தியாவசிய பொருள்களால்தான் இன்று நாம் அதிநவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 2000`s கிட்ஸ்களுக்கு பெரிய விஷயமாகத் தோன்றாத பொருள்களெல்லாம், 90`s கிட்ஸ்களுக்கு வரப்பிரசாதம். இப்படிதான் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் பல `வாவ்!' கதைகள் இருக்கும். `ஆஹா!' என்று பலமுறை நம்மை பிரமிக்கவைத்த பல தொழில்நுட்ப உபகரணங்களைக் கண்டுபிடித்த மறக்க முடியாத விஞ்ஞானிகளில், தாமஸ் ஆல்வா எடிசன், கிரஹாம்பெல், அலெக்ஸ்சாண்டர் ஃபிளெம்மிங், ரைட் பிரதர்ஸ், நியூட்டன், ஜேம்ஸ் வாட், ஐன்ஸ்டீன், சார்லஸ் பாபேஜ், கலிலியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர் என்றைக்கும் ஸ்பெஷல் இடம்பிடித்தவர்கள்.

அறிவாளர்கள் தினம்

``அப்படினா ஏதாச்சும் கண்டுபிடிச்சாதான் அறிவாளியா?" என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இவர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த அறிவாளிகள். அவ்வளவுதான். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அதை அனைவரும் பயன்படுத்தும் முறையைச் சொல்லிக்கொடுக்கும் அடிப்படை கல்வி முதல் எது சரி, எது தவறு என்பதைப் பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் நம் பெற்றோர்கள் மற்றும் சமூகப் பகுத்தறிவாளர்கள் வரை அனைத்திலும் அனைவரிடமும் `அறிவு' சார்ந்த விஷயங்கள் உள்ளன. ஹிட்லர் முதல் பெரியார் வரை ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துகளும் மாறுபடுமே தவிர, தனிப்பட்ட நபரின் அறிவாற்றலை அவ்வளவு எளிதில் எடை போட்டுவிட முடியாது.

சிறு வயதிலிருந்து, `ஒழுங்கா படி. அப்போதான் அறிவு வளரும்' என்ற வாசகத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். நானும் ஒருகட்டம் வரை அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அதையும் மீறி எத்தனையோ உண்மை விஷயங்கள் இருக்கின்றன என்பதை வெளியுலகை தனியாய் நின்று போராடும்போதுதான் தெரிந்தது. இதேபோல் எத்தனையோ பேர் வெறும் பாடப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை மட்டுமே உண்மை என நம்பி விவாதிக்கின்றனர். நடைமுறை வாழ்க்கையைச் சொல்லித்தரும் `மனிதர்களை'விட சிறந்த புத்தகம் எதுவுமில்லை. மனிதர்களைப் படிப்பதும் அவ்வளவு எளிதல்ல. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் ஒரே அழகிய புத்தகம். 

எங்க தேடினாலும் உலக அறிவாளிகள் தினம்னு ஒன்னு இல்லைன்னு உங்களுக்கு ஏதாவது தோணுதா பாஸ். எனக்கு இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிச்சதுல இருந்து தோணுது. ஒருவேளை புத்திசாலிகள் எல்லாம் சேர்ந்து ஒருத்தர முட்டாளாக்க முட்டாள்கள் தினம் உருவாக்குன மாதிரி, முட்டாள்கள் எல்லாம் சேர்ந்து , புத்திசாலிகளுக்கும் ஒரு நாள உருவாக்கித் தொலைவோம்னு, இப்படி பண்ணியிருப்பாங்களோ? . என்னவோ போங்க !!! 

இதைப் படிக்கும் ஒவ்வொரு சக புத்திசாலிக்கும் வாழ்த்துகள் !

https://www.vikatan.com

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.