Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

சாக்கடையை சுத்திகரிக்கும் ரோபோ; கேரள இளைஞர்கள் வடிவமைப்பு

கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சாக்கடையை சுத்திரிக்கம் ரோபோவை கண்டுபித்துள்ளனர்.

ஆளிறங்கும் குழியில் ஆபத்துகளில் மத்தியில் இனி மனிதர்கள் வேலை செய்வதை இது தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ரோபோ என்ன மாற்றங்களை கொண்டு வரும், வேலை இழப்பை ஏற்படுத்துமா என்பது பற்றிய காணெளி.

Link to post
Share on other sites
  • Replies 11.3k
  • Created
  • Last Reply

ஒன்று, இரண்டு, மூன்று... என்ன 18-ஆ?- ஒரே காருக்குள்ள இத்தனை பேரா!


 

 

soldier-inspecting-car-takes-surprising-twist-after-18-people-get-out

 

 

கோயில் திருவிழா, குடும்ப விழாவுக்கு போவதற்காக நம்மூரில் ஒரு லாரி நிறைய ஜனங்கள், டிராக்டரில் ஜனங்கள் ஏன் ட்ரை சைக்கிளில்கூட திணித்து ஆட்களை ஏற்றிச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு காருக்குள் 18 பேர் அடைத்து ஏற்றப்பட்டிருக்கின்றனர்.

டொமினிக்கன் ரிபப்ளிக்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வரும் கார் ஒன்று சோதனைக்காக நிறுத்தப்படுகிறது.

அந்தக் காருக்குள் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியே வர மொத்தம் 13 பேர் வெளியே வருகின்றனர். பின்னால் இருந்த டிக்கிக்குள் இருந்து 5 பேர் என 18 பேர் வெளியே வருகின்றனர்.
அந்த ராணுவ வீர்ர்களே அதிர்ந்து போயினர்.

 

https://www.kamadenu.in/news/world/6375-soldier-inspecting-car-takes-surprising-twist-after-18-people-get-out.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to post
Share on other sites
‘சதாகாலமும் முனைப்புடன் இருக்க வேண்டும்’
 

image_235f301c6c.jpg“நீ நீயாக இரு”. இதை, “நான் நானாக இருக்க வேண்டும்” எனும் கருத்துப்படப் பலர் பேசுகிறார்கள். 

ஒருவரைப் பார்த்து “நீ நீயாக இரு” என்று சொல்வது சரிதானா? கள்வன் ஒருவனைப் பார்த்து, “நீ நீயாக இரு” என்று சொல்லலாமா? நல்லவனாக ஒருவன் இருந்தால், “நீ நீயாக இரு” என்று சொல்லலாம். “நான் நானாக இருக்கிறேன்” என்றால், நான் ஒழுக்கம் உடையவனாக இருக்கிறேன் எனும் திடசங்கற்பத்துடன் வாழ வேண்டும். 

“எனக்குப் புத்திமதி சொல்ல நீ யார், நான் நானாகத்தான் இருப்பேன்” எனச் சிலர் வீம்பு பேசுவதுண்டு. 

நாம், சீரும் சிறப்புடனும் வாழ்ந்திட, எம்மை மெருகேற்றியவர்களாக, சதாகாலமும் முனைப்புடன் இருக்க வேண்டும். இது ஒரு மனோதிடமூட்டும் வழிதான். 

எல்லா விதமான நல்லியல்புகளும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு இந்த இயல்புகள் பிறப்பிலேயே உண்டு. “நான் யார்” எனும் கேள்வியை, மமதையற்ற நிலையில் உணர்ந்தால், எங்கள் உண்மை இயல்பு பற்றி விளங்கிக் கொள்ள முடியும். 

மேலாதிக்க உணர்வுடன், ஒருவரை விமர்சித்து உரையாடுவது நாகரிகமல்ல; பெரியவர்கள், எங்கள் நலனுக்காகச் சொல்வதை ஏற்க வேண்டும். அவர்களுடன் தர்க்கித்தலாகாது. உலகம் என்ற பாடசாலையில், நாம் என்றும் மாணவர்கள்தான்.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் நேரம் அதிகாலை 4.30 ,இப்போதும் செய்திகளை இணைத்துக்கொண்டிருக்கும், நவீனனுக்கு நன்றிகள்.

Link to post
Share on other sites

இயற்கையை தேடும் கண்கள்: வம்புக்கு இழுக்காத கொம்பு!

 

 
deerjpg

மான் இனங்களில் வெளிமான்களுக்கு (ஆங்கிலத்தில், ‘பிளாக்பக்’) ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவற்றின் கொம்புகள்தாம் அந்தச் சிறப்புக்குக் காரணம். சுமார் 24 அங்குலங்கள் வரை அந்தக் கொம்புகள் சுற்றிச் சுற்றி வளர்ந்திருக்கும். ஆனால், ஆண் மான்களுக்குத்தான் இந்தச் சிறப்பு. பெண் மான்களுக்குக் கொம்புகள் இருக்காது.

வடக்கில், ராஜஸ்தான் தால் சப்பர் சரணாலயம், குஜராத் வேலாவதர் தேசியப் பூங்கா போன்றவற்றில் இந்த மான்களை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். தெற்கில், கோடியக்கரையில் இந்த மான்களைப் பார்க்கலாம். ஆனால், இங்குள்ள மான்களின் உடலில் உள்ள பழுப்பு நிறம், வடக்கத்திய மான்களைவிடச் சற்று மங்கலாக இருக்கும்.

 

கூட்டமாக வசிக்கும் இவற்றுக்குப் புற்கள்தாம் முக்கிய உணவு. என்றாலும், நீர்நிலைகள் உள்ள இடங்களில் இவை அதிக அளவில் சுற்றித் திரியும். இவற்றின் தோல், எவ்வளவு வெயிலையும் தாங்கக் கூடியது. அதனால், பகல் நேரத்தில்தான் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

2011-ல் முதன்முதலாக தால் சப்பரில்தான் படமெடுத்தேன். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வெளிமான்களை அப்போது பார்க்க முடிந்தது. பொதுவாக ஆண் வெளிமான்கள் தனிக்கூட்டமாகவும், பெண் வெளிமான்கள் தனிக்கூட்டமாகவும் சுற்றித் திரியும். மாலை நேரம் அது. அப்போது ஒரே ஒரு ஆண் வெளிமான், ஒரே ஒரு பெண் வெளிமானைத் துரத்திக் கொண்டிருந்தது. இணை சேர்வதற்கான விளையாட்டுதான் அது. அப்போது எடுத்த படம் இது.

தங்களது கொம்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக அவ்வப்போது இரண்டு ஆண் வெளிமான்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். பார்ப்பதற்குச் சண்டை போடுவது போலத் தெரியும். சில நேரம் அது உண்மையான சண்டையாகவும்கூட மாறிவிடும். தால் சப்பாரில் அப்படி இரண்டு மான்கள் மோதிக்கொண்ட போது எடுத்ததுதான் இரண்டாவது படம்.

இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துகொண்டு வருகிறது. எனவே, இவற்றை விலங்குக்காட்சி சாலைகளில் வைத்து, செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புல்வெளி நிலங்கள் குறைந்து வருவதே இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமானது!

கட்டுரையாளர்,

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

113 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெண் போராளியின் கடிதம்

 
 
113 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாக்குரிமைக்காக போராடிய பெண்ணின் கடிதம்படத்தின் காப்புரிமைLSE LIBRARY

பிரிட்டனில் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற முதல் பெண் எழுதிய கடிதம் ஒன்றினை, அது எழுதப்பட்ட 113 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் கண்டறிந்துள்ளார். இதற்கு முன்னர் இப்படி கடிதம் இருந்ததென அறியப்படவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான அன்னி கென்னி மான்செஸ்டர் சிறையிலிருந்து 1905ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அடுத்த தினம் இந்த கடிதம் எழுதப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

பெண் வாக்குரிமைக்காக போராடிய பெண்ணொருவரால் அவரது சகோதரிக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் கனடாவிலுள்ள ஒரு காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

"இதுபோன்றதொரு கடிதம் இதற்கு முன்புவரை கிடைக்கப்பெறவில்லை" என்று லின்சி ஜென்கின்ஸ் என்ற அந்த வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

கென்னியின் குடும்பத்தினர் குறித்த தகவல்களை இந்த வரலாற்றாசிரியர் தேடிக்கொண்டிருந்தபோது கனடாவிலுள்ள ஆவண காப்பகம் ஒன்றில் இந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அச்சமின்றி செயல்பட்டார்

"பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற பெண்ணொருவர் எழுதியாக இதுவரை கிடைத்துள்ள ஒரே கடிதம் இதுதான்" என்று ஜென்கின்ஸ் பிபிசியிடம் கூறினார்.

"இந்த கடிதத்தை எழுதும்போது அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து எதுவும் தெரியாது. அதாவது, தங்களது போராட்டம் வெற்றிபெறப்போகிறது என்பதை அறியாமலேயே இந்த கடிதத்தை எழுதியவர் எடுத்த முடிவுகள் அவரது வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகளாகிவிட்டன" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விரிவுரையாளரான ஜென்கின்ஸ் கூறுகிறார்.

அன்னி கென்னிபடத்தின் காப்புரிமைKENNEY PAPERS ARCHIVE, UNIVERSITY OF EAST ANGLIA Image captionஅன்னி கென்னி

"அந்த காலத்தில் இந்த பெண்கள் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்றது என்பது மிகப் பெரிய விஷயமாகும். அப்போது மக்களிடையே அதிர்ச்சியளிக்கும் முடிவாக பார்க்கப்பட்ட இது, இறுதியில் வெற்றியை தேடி தரும் என்று அவர்கள் தெரிந்திருக்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிரிட்டனின் ஓல்ட்ஹாம் பகுதியை சேர்ந்த தொழிலாள வர்க்க பெண்ணான அன்னி கென்னி தனது 10வது வயதிலிருந்து பஞ்சு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார்.

இந்நிலையில், பிரிட்டனில் பெண்களுக்கான வாக்குரிமையை பெற்றதில் கென்னியின் பங்கு அவ்வப்போது மழுங்கடிக்கப்படுவதாக ஜென்கின்ஸ் கூறுகிறார்.

1912 முதல் 1914ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் பெண்களுக்கான வாக்குரிமையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கென்னி முக்கிய பங்காற்றினார்.

113 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாக்குரிமைக்காக போராடிய பெண்ணின் கடிதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வாக்குரிமை சார்ந்த எண்ணற்ற போராட்டங்களில் பங்கேற்ற கென்னி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளதாகவும் ஜென்கின்ஸ் விளக்குகிறார்.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?

1905ஆம் ஆண்டு ஒருமுறை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மறுநாள் மான்செஸ்டரிலிருந்து தனது சகோதரியான நெல்லுக்கு கென்னி இந்த கடிதத்தை எழுதினார்.

"நான் நேற்று காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன் என்று கூறினால் நீ ஆச்சர்யப்படுவாய்" என்று கென்னி தனது கடிதத்தை தொடங்குகிறார்.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?

இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து நீ என் மீது "கோபத்துடன் இருந்தாலும்" நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் என்னை வாழ்த்துவதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

"மான்செஸ்டர் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பற்றியும், நகர சூழ்நிலை பற்றியும் விளக்கிய பிறகு, "என்னால் ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு பணம் அனுப்பமுடியவில்லை" என்று தனது சகோதரியிடம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com

Link to post
Share on other sites

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை

துங்கபத்ரா நதிக்கரையில் மெளனமாக உறங்கி கொண்டிருக்கிறது ஒரு பேரரசு. ஒரு காலத்தில் குதிரைகளின் குளம்பு சத்தம், மலைகள் எங்கும் எதிரொலித்த ஒரு அரசு, இப்போது ஆழ்ந்த அமைதியில் இருக்கிறது. ஹம்பி - ஒரு காலத்தில் விஜயநகர பேரரசின் முன்னாள் தலைநகரம். கோட்டை, சந்தை, எண்ணற்ற கோயில்கள் என எப்போதும் உயிர்ப்புடன் இருந்த நகரம் இப்போது அதன் சுவடுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறது.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

பாகுபலி திரைப்படமும் ஹம்பியும்

பாகுபலி திரைப்படம் பார்த்து வியந்திருப்போம்தானே? வரைகலை துணை கொண்டு உருவாக்கப்பட்ட அந்த நகரம், அதன் கோட்டைகள், நீளமான மதில்கள், வணிக கூடங்கள், கோயில்கள் என அந்த திரைப்படம் நமக்கொரு அலாதி அனுபவத்தை தந்தது தானே? நம் கண் முன்னால் ஒரு மெய்நகர் உலகம் விரிந்ததுதானே? அந்த அனுபவத்தை நிஜத்தில் தருகிறது கர்நாடகா மாநிலத்த்ல இருக்கும் ஹம்பி.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்த ஹம்பி 26 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து இருக்கிறது. அந்த நகரத்திற்குள் நுழைந்ததுமே ஏதோவொரு பண்டைய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வு கிடைக்கிறது.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED Presentational grey line `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறுங்கள். முழு நிலப்பரப்பின் தரிசனம் நமக்கு அங்கிருந்து கிடைக்கும். அதுவும் சூரியன் உதிக்கும் நேரத்தில் அந்த சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதியினை காணலாம். இரு கரைகளை தொட்டு எதையோ அடைந்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பயணிக்கும் இந்த நதியில்தான் ஹம்பியில் அமைந்துள்ள கோயில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.

ஆயிரக்கணக்கான கோயில்கள்

எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி இப்போது ஹம்பியில் மட்டும் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக கூறினார்.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

சிவன் மற்றும் கிருஷ்ணர் கோயில் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள், உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் தினம் தினம் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

அந்த நகரத்திற்குள் நுழையும் இடத்தில் இருக்கும் பழங்கால சுங்கசாவடி, அக்கால வணிக நடைமுறைகளை நமக்கு உணர்த்துகிறது.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

950 மீட்டர் நீளமுடைய சந்தை, 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் குளியலறை, பிரம்மாண்ட அரண்மனையின் எச்சம் என அந்த நகரம் பார்க்க பார்கக வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதைபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

வரலாற்றின் மீது பெருங்காதல் கொண்டவர்களுக்கான மிகச் சரியான சுற்றுலா தளம் `ஹம்பி'. அந்த நகரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் எச்சங்களும், மிச்சங்களும் ஒரு வீழ்ந்த பேரரசின் கதையை நம்மிடம் மெளனமாக சொல்கிறது.

https://www.bbc.com

Link to post
Share on other sites

 

மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமா?

முதுமை அடையும் உடலில் இருந்து விடுபட்டு, என்றென்றும் டிஜிட்டல் வாழ்வு வாழும் முயற்சியாக மனிதரின் மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில்நுட்பம்.

Link to post
Share on other sites

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. சிக்கிம் செல்லும் வழியில் பிரதமர் கிளிக்கிய புகைப்படங்கள் 

Bild könnte enthalten: Himmel, Ozean, Berg, im Freien, Natur und Wasser

Bild könnte enthalten: Berg, Himmel, im Freien und Natur

Bild könnte enthalten: Berg, Himmel, im Freien und Natur

Bild könnte enthalten: Himmel, Berg, im Freien und Natur

https://www.facebook.com/BBCnewsTamil

Link to post
Share on other sites
13 hours ago, நந்தன் said:

லண்டன் நேரம் அதிகாலை 4.30 ,இப்போதும் செய்திகளை இணைத்துக்கொண்டிருக்கும், நவீனனுக்கு நன்றிகள்.

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகும் நவீனன் இணைப்பதை வாசித்திட்டு தான் போறனான்....தமிழசிறி இணைக்கும் கொமடிகளையும் ஒவ்வொரு நாள் காலமையில் விரும்பி வாசிப்பேன் 

 

Link to post
Share on other sites

இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது.

marijuanaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர்.

"கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்," என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார்.

கொதி நீரில் போட்டு இறால்கள் கொல்லப்படுவது அவற்றை கடுமையான வேதனைக்கு உள்ளாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இறால்கள் மட்டுமல்லாது நண்டுகளும் கொல்லப்படும்போது இத்தகைய வலிக்கு உள்ளாவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

இறால்களை கொல்லும் முன்பு அவற்றின் உணர்வுகளை மழுங்கச் செய்ய வேண்டும் என்று சென்ற ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து முடிவு செய்தது.

மெய்ன் மாகாணத்தில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது. சார்லட் கில் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதியை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது.

https://www.bbc.com/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நந்தன் said:

லண்டன் நேரம் அதிகாலை 4.30 ,இப்போதும் செய்திகளை இணைத்துக்கொண்டிருக்கும், நவீனனுக்கு நன்றிகள்.

அது மிசின் செய்யுதெண்டு இஞ்சை கதைக்கினம்.  ?

Link to post
Share on other sites
‘ஏழைகளுடன் தோழமை கொள்க’
 

image_2513dfca82.jpgவாழ்நாள் முழுவதும், சகல சம்பத்துகளுடனும் சௌக்கியமாக வாழ்வதற்கு, எந்த விதமான துன்ப அனுபவங்களோ, எதையும் கண்டுகொள்ளச் சிரமப்படவேண்டிய தேவைகளும் இல்லை. 

ஆனால், இத்தகையவர்கள் தங்கள் பெரும் அறிவு, உலக ஞானம் பற்றிப் பொய்யான தகவல்களைச் சொல்லிய வண்ணம் இருப்பார்ககள். 

உலகில் வறுமையில் வாழும் மக்களின் குடிசைகள், அவர்களின் உணவுத் தேவைகள், வருமானம், அவர்களின் துன்பம் பற்றித் தெரியாதவர்கள், அந்தத் துன்ப நிலை பற்றி, அறியப் பிரியப்படாமல் இருப்பது புதுமையல்ல. 

மனித வாழ்வை ஆராயாமலே, பலர் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பசி தெரியாமலே, கோடானகோடிப் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பழைய கஞ்சி குடித்து வாழ்பவனை, நோக்க நேரம் இருக்கிறதா? 

நாம் எல்லோரும் ஒரே இனம்; அதாவது, மனித இனம் என்று சொல்லிக்கொள்கின்றோம். மனிதனை, மனிதன் தாங்காமல் வெறும் வாய்ச்சொல்லால் மட்டும், ‘ஒரே ஜாதி, ஒரே இனம்’ என்ற சொல்வதால் எதுவும் ஈடேறிவிடாது.  

ஏழைகளுடன் தோழமை கொள்ள, இன்னுமோர் ஏழைதான் முன்வருவான்.  

Link to post
Share on other sites

உலகின் முதல் தானியங்கி டிராம்!

 

உலகின் முதல் தானியங்கி டிராம் வண்டியை அறிமுகப்படுத்துகிறது ஜெர்மனி. பல்வேறு ரேடார் கருவிகள், கேமரா சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த டிராம் வண்டியின் சோதனை ஓட்டம், மேற்கு பெர்லின் அருகில் உள்ள போஸ்ட்டாம் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த டிராம் வண்டி, இருப்புப் பாதையின் சிக்னல்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாதசாரிகள், வாகனங்கள் குறுக்கிடும் சமயங்களில் இந்த டிராம் மனிதர்களைவிட அதி வேகமாகச் செயல்பட்டு வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளும். ஜெர்மன் நிறுவனமான ‘சீமென்ஸ்’ தயாரிக்கும் இந்த டிராம் வண்டியை, கணினிப் பொறியாளர்கள், கணிதவியலாளர்கள், இயற்பியல் அறிஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

 

https://tamil.thehindu.com

 

 

 

Link to post
Share on other sites

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு ‘பீர்’ தீருவிழா

ஜெர்மன் மியூனிக் நகர்த்தில் கோலாகலமாக பீர் திருவிழா தொடங்கி உள்ளது.

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

அக்டோபர் 7 வரை நடக்க இருக்கும் இந்த திருவிழாவில் ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் 7.5 லிட்டருக்கும் அதிகமான அளவில் பீர் பரிமாறப்படும்.

எப்போது தொடங்கியது?

இந்த திருவிழாவானது 1810 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. முதலில் பீர் திருவிழாவாகவெல்லாம் இல்லாமல் குதிரை திருவிழாவாக ஓர் அரச குடும்ப திருமணம் ஒன்றில் தொடங்கி இருக்கிறது. பின் 19 ஆம் நூற்றாண்டில் இது பீர் திருவிழாவாக மாறி இருக்கிறது.

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

இப்போது நடைபெறும் விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு ‘பீர்’ தீருவிழா

 

மியூனிக் மேயர் டையடர் ரைடர் முதல் பீர் பேரலை திறந்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

  •  

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

 

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

  Presentational grey line

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

Presentational grey line

Presentational grey line

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு 'பீர்' தீருவிழா

 

https://www.bbc.com/tamil/

Link to post
Share on other sites

 

நெகிழ வைக்கும் நாய்க்குட்டி - பறவையின் நட்பு 

மைக்கும் பூவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் வட பிரிட்டனில் உள்ள ஒரு கிராமத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

Link to post
Share on other sites

உலகின் மிக அழகான விமான நிலையம் இதுதானோ?

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியாவின் 100வது விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திங்களன்று திறந்துவைத்தார். சிக்கிம் மாநிலத்தைப் போலவே, அதன் விமான நிலையமும் மிகவும் அழகானதாக உள்ளது.

சிக்கிம்

 

இமயமலையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான சிக்கிமில், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா அமைந்துள்ளது. திபெத், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவற்றை சிக்கிம் எட்டு மலைப்பாதைகள் வழியாக இணைக்கிறது.

மாநிலத்தின் முதல் விமானநிலையமான பாக்யாங், தலைநகர் கேங்டாக்கிலிருந்து சுமார் 30 கி.மீ (18 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மலைப்பகுதியிலிருந்து செதுக்கப்பட்ட, "பொறியியல் அற்புதம்" இந்த விமானநிலையம் என்று சிலாகிக்கப்படுகிறது.

சிக்கிம்

 

இந்திய-சீன எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், பாக்யாங் (Pakyong) என்ற கிராமத்தில், கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் 201 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

சிக்கிம்

 

இரு முனைகளிலும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் 1.75 கிலோமீட்டர் நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்கள் இரண்டையும், முனைய கட்டடம் ஒன்றையும் கொண்டுள்ள இந்த விமான நிலையத்தை ஒரே சமயத்தில் 100 பயணிகள் பயன்படுத்த முடியும்.

ஒன்பது வருட காலமாக நடந்த இந்த விமான நிலைய கட்டட பணிகள், கடினமான நிலப்பரப்பு மற்றும் நிலையற்ற வானிலையால் "மிக்க சவாலுடனும், சிரமங்களை எதிர்கொண்டும் மேற்கொள்ளப்பட்டது" என்று இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையை கட்டமைத்த இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிக்கிம்

 

 

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பருவ மழை பொழியும் சிக்கிம் மாநிலத்தின் வானிலை, கட்டுமானப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் உயர் நிலநடுக்கப் பகுதியான அங்கு பாறை சரிவுகளில் பணியாற்றுவது பொறியாளர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று.

சிக்கிம்

 

ஆழமான பள்ளத்தாக்குகளில் 263 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட தளத்தின் மீதுதான், ஓடுபாதை உட்பட முழு விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான "வலுவூட்டப்பட்ட" சுவர்களில் ஒன்று இது என பஞ்ச் லாய்ட் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிக்கிம்

 

அக்டோபர் நான்காம் தேதி முதல், பாக்யாங்கில் வர்த்தக விமான போக்குவரத்து தொடங்கும்.

பல சிகரங்கள், பனிப்பாறைகள் மற்றும் உயரமான ஏரிகள் என அற்புதமான இயற்கை பேரழகு கொண்ட தளங்களை தன்னகத்தே கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை இந்த விமான நிலையம், மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/

Link to post
Share on other sites

ஐ.நா கூட்டத்தில் 3 மாதக் குழந்தை : ஆச்சரியத்தில் மூழ்கடித்த நியூசிலாந்து பிரதமர்

 

தனது 3 மாதக் பெண் குழந்தையுடன்  ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டேர்ன் அனைவரையும்

 

ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

.newsyland.jpg

 

நியூசிலாந்தின் வரலாற்றில் இளம் வயதிலேயே பிரதமரான பெண்  என்ற பெருமை 38 வயதான ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

ஜெசிந்தா தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேஃபோர்டை திருமணம் முடித்துள்ளார்.

ஜெசிந்தா கிளார்க் தம்பதியினருக்கு கடந்த ஜுன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

பிரதமர் பதவியிலிருக்கும் போது குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் என்ற பெருமை ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

குழந்தைளை கவனித்துக் கொள்ள 6 வாரங்கள் பேறுகால விடுமுறையிலிருந்த பிரதமர் ஜெசிந்தா தற்போது தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.

இந் நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் தனது 3 மாத பெண் குழந்தை நீவுடன் கலந்து கொண்ட பிரதமர் ஜெசிந்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு வியப்பிலும் ஆழ்த்தியுள்ளார்.

மனைவி ஜெசிந்தாவிற்கும் மகள் நீவிற்கும் துணையாக கிளார்க் கேஃபோர்ட்டும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நியூசிலாந்தின் வரலாற்றில் இளம் வயதிலேயே பிரதமரான பெண்  என்ற பெருமை 38 வயதான ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

ஜெசிந்தா தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேஃபோர்டை திருமணம் முடித்துள்ளார்.

ஜெசிந்தா கிளார்க் தம்பதியினருக்கு கடந்த ஜுன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

பிரதமர் பதவியிலிருக்கும் போது குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் என்ற பெருமை ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

குழந்தைளை கவனித்துக் கொள்ள 6 வாரங்கள் பேறுகால விடுமுறையிலிருந்த பிரதமர் ஜெசிந்தா தற்போது தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.

இந் நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் தனது 3 மாத பெண் குழந்தை நீவுடன் கலந்து கொண்ட பிரதமர் ஜெசிந்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு வியப்பிலும் ஆழ்த்தியுள்ளார்.

மனைவி ஜெசிந்தாவிற்கும் மகள் நீவிற்கும் துணையாக கிளார்க் கேஃபோர்ட்டும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கூட்ட அரங்கில் ஜெசிந்தா குழந்தையை அணைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் குழந்தையை கையில் வைத்துக் கொண்டே மாநாட்டில் பேசியுமுள்ளார்.

பிரதமர் ஒருவரின் இத்தகைய செய்கை அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

பிரதமர் குடும்பத்திற்கு வழங்கப்படும் முதல் பிரஜை என்ற அங்கீகராத்திற்கமைய நீவிற்கு நியூசிலாந்தின் முதல் குழந்தைக்கான அடையாள அட்டையுடன் கிளார்க் புகைப்படம் ஒன்றை எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

 

http://www.virakesari.lk

Link to post
Share on other sites
‘துணிச்சலுடன் சேவை புரிபவரே மனிதன்’
 

image_0458fd1b1a.jpgதகாத வழியில் சிற்றின்பத்தை நாடினால், பல்லாயிரம் துன்பங்களைக் காவித்திரிய வேண்டி ஏற்பட்டுவிடும். காதல், காமத்தை முறையான நெறியில் பெற, நல்மார்க்கங்கள் உண்டு. நல்மார்க்கங்கள் வாழ்வில் கலந்து விட்டால் அன்பு, குடும்ப உறவுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.

முறையற்ற விதத்தில் காமத்தை வெளிப்படுத்துவது, இறுதியில் அகௌரவத்தை மட்டுமல்ல, சமூகத்திலும் அவப்பெயரை உண்டுபண்ணும் எனத் தெரிந்தும், அதில் சிலர் ஈடுபடுகின்றனர்.

இன்று, செல்வம் தான் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. இது பல போலித்தனங்களை உருவாக்குகிறது. ஆயினும், பணம் இல்லாதவர்கள் எல்லோரும் முறையாக வாழ்கின்றார்கள் என்பதில்லை.

வாழும் முறையை அறிந்திடாமல் வாழ்பவர்களுக்கு, நல்ல பாதைகளை உருவாக்குவது, சுலபமானது செயல் அல்ல; ஆனால் முடியும். எந்தவித அருவெறுப்பும் இன்றி, அவர்களை அரவணைத்து, ஆன்மிகம், அறக்கருத்துகளைப் போதித்திடுக. ஒருமித்துச் செயற்பட மதம், மொழி, சாதி வேறுபாடற்ற அணுகுமுறை தேவையானது.

முதலில் நல்ல மனிதர்கள் ஒன்றுபட வேண்டும். துணிச்சலுடன் சேவை புரிபவரே மனிதன். இணையாதவர்கள் நற்காரியமாற்றத் தகுதி அற்றவர்கள்.

Link to post
Share on other sites

இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!

 

 

இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன.

போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர்.

துஷாரவினால் வரையப்படும் 3D புகைப்படங்கள் இலங்கையர்களால் மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

3D படங்களை வரைவதற்கு போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்தவற்றை கொண்டு படம் வரையும் நடவடிக்கையில் துஷார ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் 3D முறையில் அவர் வரைந்த படம் பார்ப்பதற்கு உண்மையான காட்சி போன்றே காணப்படுகின்றது.

துஷாரவினால் ஏற்கனவே வரையப்பட்ட 3D புகைப்படங்கள் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com

Link to post
Share on other sites

 

பிறக்கும்போதே இரண்டு கால்கள் இல்லை - தடையை மீறி சாதிக்கும் பெண்மணி

தாய்லாந்தை சேர்ந்த கன்யாவுக்கு பிறக்கும்போதே இரண்டு கால்கள் மட்டுமல்ல, பெற்றோரும் இல்லை.

Link to post
Share on other sites

தின்பண்டத்தை திருடி கையும் களவுமாக பிடிப்பட்ட இளவரசர் ஹாரி

 

 
hbnjpg

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அறக்கட்டளை  நிகழ்ச்சி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை மறைமுகமாக எடுத்துச் சென்ற வீடியோ  ஒன்றை நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.

 

இந்த திருமணத்திற்கு பிறகு,  இங்கிலாந்தின் பிரபலமான ஜோடியாக மாறியுள்ள ஹாரியும், மெக்கனும் இங்கிலாந்து சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் தவறாமல் இடப்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஹாரி சமீபத்தில் தொண்டு நிறுவனம்  நிகழ்ச்சி ஒன்றில்  தனது மனைவி மெக்கனுடன் கலந்துக் கொண்ட ஹாரி நிகழ்ச்சியின் முடிவில் தின்பண்டத்தை யாருக்கும் தெரியாமல், பேப்பரில் சுற்றி மறைத்து செல்வார்.

தற்போது  இந்த வீடியோ இங்கிலாந்து நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

https://tamil.thehindu.com

Link to post
Share on other sites

`அழாதே கண்ணா; இறுதி வெற்றி நமதே’ - வைரலான சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஹர்பஜன் சிங் #INDvAFG

3349_thumb.jpg
 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் இறுதி சூப்பர் 4 சுற்று அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. 

கிரிக்கெட்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இறுதியாக நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 49 பந்துகளில் 57 ரன்கள் குவித்த நிலையில், அம்பதி ராயுடு, நபி பந்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுலும் 60 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தோனி, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 246 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜாவும் கலீல் அஹமதும் கலத்தில் இருந்தனர். இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்‌ஷருக்கு தூக்க ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அதை லாகவமாகக் கேட்ச் பிடித்தார். இறுதியில், போட்டி டிராவில் முடிந்தது

 

 

இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் மொத்த மைதானமும் உறைந்த நிலையில் அமைதியாக இருந்தது. கலங்கிய நிலையில் அனைவரது கண்களும் பந்து மீது மட்டும்தான் இருந்தது. அந்த நிலையில் ஜடேஜா அவுட் ஆனது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. உடை மாற்றும் அறையில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தன்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர முடியால் திகைத்து நின்றார் ஜடேஜா. அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகரான ஒரு சிறுவன் அந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர்விட்டு தேம்பி அழத்தொடங்கினான். அந்த சிறுவனை அவன் தந்தை சமாதானப்படுத்தினார். சிறுவன் அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவர் மனதிலும் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நேற்றைய போட்டியில் அழுத சிறுவனின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இனிமேல் அழாதே கண்ணா. நாம் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும் ஆப்கானிஸ்தான் தன் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளை உருவாக்கியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடைசி ஓவர் வீடியோ : 

 

https://www.vikatan.com

Link to post
Share on other sites

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி... ஏன் நம்மால் உணர முடிவதில்லை? #FramesOfReference

 

என்ன நடந்தால், பூமி சுற்றுவது நமக்குத் தெரியும்... விடை சொல்கிறது இயற்பியல்!

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி... ஏன் நம்மால் உணர முடிவதில்லை? #FramesOfReference
 

ந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.

பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. நிறை 5.9722 x 10^24 கிலோகிராம். இந்த அளவு பெரிய பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் எந்த அளவு வேகமாக அது சுழலும். நினைத்தாலே தலை சுற்றுகிறதா?

ஆம், பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். வண்டியில் 80 கி.மீ வேகத்தில் சென்றாலே பறப்பது போல் உணரும் நாம் எப்படி இந்த வேகத்தை உணர முடியவில்லை என்று சிந்தித்துள்ளீரா? காரணம், இதுதான். Frames of reference என்று சொல்லப்படும் குறியீட்டுச்சட்டகம். கண்ணோட்டம் என்று கூட புரிந்து கொள்ளலாம்.

 

 

எளிமையாகப் புரியவேண்டுமானால் ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு ரயிலை எடுத்துக் கொள்வோம். ரயிலில் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். நகர்வதைக் கூட வெளியில் எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வோம். இதில் இரண்டு கண்ணோட்டம் இருக்கும். ஒன்று ரயிலின் உள்ளே இருப்பவரின் கண்ணோட்டம். அவரைப் பொறுத்தவரை, அவர் அப்படியே நிற்பது போலவும், அவரைச் சுற்றி உள்ள நடைமேடை, சுற்றம் எல்லாம் நகர்வது போலவும் தோன்றும். ஏனெனில் இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் ரயிலுடன் இருக்கும்.

 

மற்றொரு கண்ணோட்டம் நடைமேடையில் இருப்பவருடையது. அதில் சுற்றம் எல்லாம் நிலையாய் நிற்க ரயில் நகர்வதாய் அமையும். இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் நடைமேடையில் நிலைத்து வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் ரயில்தான் நகரும். 

இதன் பெரிய அளவீடே பூமியின் சுழற்சி. அந்த நகரும் ரயில், நம் பூமி. நடைமேடை இங்கு அண்ட வெளி. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமி நகர்வது போல் தெரியாது. வானம் நகர்வதாய்த் தெரியும். இதில் பூமி ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். வெளியிலிருந்து பார்த்தால், பூமி நகர்வதாய்த் தெரியும். அப்போது வானம் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு ரயிலைப்போல் இங்குப் பூமிதான் சுழலும். அதுதான் சரியானது.

பூமியின் சுழற்சிக்கும் ரயிலுக்கும் என்ன தொடர்பு?

அதேபோல் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் நமக்கு வேகத்தைக் காட்டாது. ஏனெனில் ரயிலுக்குள் உள்ள காற்றும் சேர்ந்து ரயிலின் வேகத்துக்குப் பயணிக்கும். அதேபோல நம் வளிமண்டலமும் பூமியோடு சேர்த்து அதன் வேகத்துக்கு நகர்வதால் காற்றின் வேகத்திலும் பூமியின் வேகம் வெளிப்படாது.

ஆனால் ஒரு வித்தியாசம். ரயில் வேகம் எடுத்தாலோ வேகம் குறைந்தாலோ அந்த விசையை நம்மால் உணர முடியும். அதற்குக் காரணம் அடிப்படை இயற்பியல் தத்துவம் `விசை = நிறை * முடுக்கம்‘ (F = m * a ) இதில் நிறை என்பதை ரயிலில் இருப்பவருடைய நிறை. வண்டி நிற்கும் போதும் சீரான வேகத்தில் செல்லும் போதும் முடுக்கம் சுழியமாக இருக்கும் எனில் விசையும் சுழியமாக இருக்கும். அதனால் ரயில் நகர்வது உணரப்படாது. அதே நேரம் வேகம் குறையும் போதோ அதிகரிக்கும் போதோ முடுக்கத்துக்கு அளவீடு வரும்; அதனால் விசை எழும். அதனால் விசையை உணர முடியும்.

 

 

ஆனால் பூமியில் உடனடியாக வேகம் எடுக்கவோ வேகம் குறையவோ வாய்ப்பில்லை. ஆண்டுக்கு நானோ நொடிகள் (nano seconds) தாமதமாகச் சுழன்றுகொண்டு இருந்தாலும் அது நிகழ நூற்றாண்டுகள் ஆகும். அதனால் திடீர் விசையை நம்மால் என்றும் உணர முடியாது. நாம் சுழன்று கொண்டு இருக்கிறோம் என்பதை நம் வான வெளியில் ஏற்படும் சுழற்சி கொண்டு உறுதிப்படுத்தலாம். நடைமேடை போன்றது அண்டவெளி. அதுதான் சரியான ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு வைத்தால் பூமி சுழல்வது சரியாய் விளங்கும். பூமியோடு சேர்ந்து நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம் நிலையாய் நின்றுகொண்டே. அந்த வேகத்தை நாம் உணரவில்லை என்றாலும் அதன் விசை நம்மீது இருந்துகொண்டேதான் இருக்கிறது.

https://www.vikatan.com

Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26
 

image_7389e6b1da.jpg1907 : நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.

1918 : முதலாம் உலகப் போர் - அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ் - ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.

1934 : ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.

1950 : ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.

1950 : இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது.

1954 : ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி, கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.

1960 : ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம், ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.

1960 : பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.

1962 : யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1973 : அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.

1983 : அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை, ஒரு கணினியின் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.

1984 : ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.

1987 : தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்.

1997 : இந்தோனேஷிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில், 234 பேர் கொல்லப்பட்டனர்.

1997 : இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.

2002 : செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2007 : வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2008 : சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, வெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

  •  

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.