Jump to content

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு!


Recommended Posts

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிவியல் இதழ் ஒன்றில் இது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் விண்களம் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

www.paraparapu.com

Link to comment
Share on other sites

NASA Images Suggest Water Still Flows in Brief Spurts on Mars.

NASA photographs have revealed bright new deposits seen in two gullies on Mars that suggest water carried sediment through them sometime during the past seven years.

"These observations give the strongest evidence to date that water still flows occasionally on the surface of Mars," said Michael Meyer, lead scientist for NASA's Mars Exploration Program, Washington.

Full image and caption-

http://www.nasa.gov/mission_pages/mars/images/pia09028.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிவியல் இதழ் ஒன்றில் இது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் விண்களம் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

www.paraparapu.com

முதலில் பூமியில் எத்தனையோ கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்கு தண்ணீர் வசதியை செய்துவிட்டு பின்னர் அண்டவெளியில் ஆராய்ச்சி செய்யலாமே?
Link to comment
Share on other sites

செவ்வாயில் உள்ள திரவ பதார்த்தம் தண்ணீராக இருக்கலாமென சந்தேகம்

செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள குளோபல் சர்வேயர் என்ற விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வு செய்ததில் அங்கு திரவ வடிவிலான பதார்த்தம் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த நாஸா விஞ்ஞானிகள், அது தண்ணீரா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக குளோபல் சர்வேயர்என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இவ் விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்கு ஒருவித திரவ வடிவிலான பதார்த்தம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத் திரவம் ஓடிய தடயத்தை அவதானிக்கும்போது அது தண்ணீராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளனர். செவ்வாயின் தட்ப வெப்பநிலை காரணமாக தண்ணீர் திரவ வடிவில் அதிக நேரம் இருக்க முடியாது. அது உறைந்துவிடும் அல்லது ஆவியாகிவிடும். கிரகத்தின் அடிப்பகுதியில் திரவ வடிவிலான பதார்த்தம் உள்ளதாகவும் சில பகுதிகளில் அது வெளிப்பகுதியில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.viduppu.com/tech/index.php?suba...amp;ucat=2&

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.