Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிவியல் இதழ் ஒன்றில் இது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் விண்களம் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

www.paraparapu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NASA Images Suggest Water Still Flows in Brief Spurts on Mars.

NASA photographs have revealed bright new deposits seen in two gullies on Mars that suggest water carried sediment through them sometime during the past seven years.

"These observations give the strongest evidence to date that water still flows occasionally on the surface of Mars," said Michael Meyer, lead scientist for NASA's Mars Exploration Program, Washington.

Full image and caption-

http://www.nasa.gov/mission_pages/mars/images/pia09028.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிவியல் இதழ் ஒன்றில் இது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் விண்களம் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

www.paraparapu.com

முதலில் பூமியில் எத்தனையோ கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்கு தண்ணீர் வசதியை செய்துவிட்டு பின்னர் அண்டவெளியில் ஆராய்ச்சி செய்யலாமே?
Link to comment
Share on other sites

செவ்வாயில் உள்ள திரவ பதார்த்தம் தண்ணீராக இருக்கலாமென சந்தேகம்

செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள குளோபல் சர்வேயர் என்ற விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வு செய்ததில் அங்கு திரவ வடிவிலான பதார்த்தம் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த நாஸா விஞ்ஞானிகள், அது தண்ணீரா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக குளோபல் சர்வேயர்என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இவ் விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்கு ஒருவித திரவ வடிவிலான பதார்த்தம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத் திரவம் ஓடிய தடயத்தை அவதானிக்கும்போது அது தண்ணீராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளனர். செவ்வாயின் தட்ப வெப்பநிலை காரணமாக தண்ணீர் திரவ வடிவில் அதிக நேரம் இருக்க முடியாது. அது உறைந்துவிடும் அல்லது ஆவியாகிவிடும். கிரகத்தின் அடிப்பகுதியில் திரவ வடிவிலான பதார்த்தம் உள்ளதாகவும் சில பகுதிகளில் அது வெளிப்பகுதியில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.viduppu.com/tech/index.php?suba...amp;ucat=2&

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொவிட்-19உம் தடுப்பூசிகளும் சில சிந்தனைகள் என்.கே. அஷோக்பரன் https://www.twitter.com/nkashokbharan இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நோய்த் தொற்றாளர்கள் உத்தியோகபூர்வக் கணிப்புக்களின்படி ஐந்து இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையிலும், கொவிட்-19 மரணங்கள் பதினோராயிரத்தை தாண்டிய நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையானளவில் இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதத்தினருக்கு வழங்கிய மைல்கல்லை சில தினங்கள் முன்பு இலங்கை எட்டிப்பிடித்துள்ளது.  செய்திக்குறிப்புக்களில் அறிக்கையிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மேற்குறித்த மைல்கல்லை இலங்கை எட்டிப்பிடித்த நாளவில், 8,973,670 பேர் சினோர்ஃபாம் தடுப்பூசிகளும், 949,105 பேர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளும், 758,282 பேர் மொடேர்னா தடுப்பூசிகளும், 243,685 பேர் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளும், 43,453 பேர் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் முழுமையானளவில் பெற்றுக்கொண்டுள்ளனர்.  இதே வேகத்தில் இலங்கை தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமானால் விரைவில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெறும் இலக்கை இலங்கை அடையும். தனது சனத்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்ற நிலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி, சகல கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் டென்மார்க் தளர்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அத்தியாவசியத் தேவையும், இன்றியமையாத சூழலும் இலங்கைக்கிருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நாடு திறக்கப்பட்டு, உற்பத்தி, வணிகத்துறைகள் முழுமூச்சுடன் இயங்கத்தொடங்குவதுடன், நாட்டிற்கு கணிசமான வருவாயைக் கொண்டுவரும் உல்லாசப்பிரயாணத்துறை விரைவில் மீளியங்காதுவிட்டால், பொருளாதார ரீதியில் இலங்கை மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும் எல்லையில் நிற்கிறது.  ஆகவே எப்படியாவது தடுப்பூசிகள் பெறத்தக்க சனத்தொகையில் மற்றப்பாதியிலுள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது இலங்கையின் முன்னுரிமைத் திட்டமாக இருக்கவேண்டும் அதனடிப்படையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்த நிலையில் கொவிட்-19 தடுப்பூசி சம்பந்தமான இன்னொரு சவால் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும், கொழும்பு நகரில், 20-29 வயதிற்கிடைப்பட்டோரில் 20 வீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துவௌியிட்ட கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர். றுவன் விஜேமுனி குறிப்பிட்டிருக்கிறார்.  இளைஞர்களிடையே கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முனைப்பு குறைவாக உள்ளதை இது சுட்டிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக சனநெருக்கடி கூடிய தலைநகர இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் அக்கறையற்றிருப்பது அவர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிப்பதோடு, இந்த சமூகத்திலிருந்து கொவிட்-19-ஐ இல்லாதொழிப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஒரு தொற்றுநோயை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதில் தடுப்பூசியின் வீரியம் என்பது அந்தத் தடுப்பூசியை அந்த சமூகத்தில்வாழும் அனைவரும் பெற்றுக்கொள்வதில் பெரிதும் தங்கியிருக்கிறது. சிலரேனும் அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் மூலம் அப்பெருந்தொற்று மீண்டும் தலைதூக்கும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. தடுப்பூசிகளின் வரத்தால், பல ஆண்டுகள் சமூகத்தில் மறைந்துபோன தொற்று நோய்களான measles, mumps போன்றவை, அமெரிக்காவிலுள்ள தடுப்பூசி-மறுப்பு கலாசாரவாதிகளின் தடுப்பூசி மறுப்பின் விளைவாக மீண்டும் அமெரிக்க நகரங்களில் பரவத்தொடங்கிய உதாரணங்களை நாம் காணலாம். ஆகவே தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமை என்பது அதனைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் மட்டுமல்லாது, அவரது குடும்பத்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அவர்கள் வாழும் சமூகத்தவர், நகரத்தவர், நாட்டவர் என அனைவரையும் பாதிக்கும். ஆனாலும், ஒருவருடைய விருப்பிற்கு மாறாக வற்புறுத்தியோ, திணித்தோ தடுப்பூசிகளை வழங்க முடியாது. அத்தகைய செயல் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் உவப்பானதல்ல என்பது ஒருபுறமிருக்கு, அது மருத்துவ விழுமியங்களுக்கு முரணாணது. ஆகவே தடுப்பூசிகள் பற்றிய நம்பிக்கையை மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான பொருத்தமான தந்திரோபாயமாக அமையும்.  இதுவரை 11,000-த்துக்கும் அதிகமான உயிர்களை இலங்கையில் மட்டும் காவு வாங்கியுள்ள இந்த கொவிட்-19 பெருந்தொற்றிடமிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கெஞ்சாத குறையாக வேண்டிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான், இளைஞர்களிடையே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுனைப்பு குறைவாக இருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. இத்தகைய இளைஞர்களிடையே, அமெரிக்க பாணியிலான தடுப்பூசி மறுப்பாளர்கள் ஒரு கொஞ்ச அளவில் இருந்தாலும், பொதுப்பார்வைக்கு, பெரும்பாலான இந்த இளைஞர்களிடையெ தடுப்பூசி மறுப்புச் சிந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக தாம் விரும்பும் தடுப்பூசி வகையைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கும் இளைஞர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். இது தடுப்பூசி அரசியல் பற்றி பேச வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது. இதுவரை இலங்கையில் முழுமையான கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களில் அண்ணளவாக 90 இலட்சம் பேர் சீனத்தயாரிப்பான சீனோர்ஃபாம் தடுப்பூசியையும், அண்ணளவாக 20 இலட்சம் பேர் ஏனைய தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.  இலங்கைக்கு முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தனது “வக்சின் மைத்ரீ” திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கியிருந்தாலும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து குறித்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தமையினால், முதலாவது அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது ஊசியைப் பெற்றுக்கொள்ள பலமாதகாலம் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கடைசியில், ஜப்பானின் கருணைப் பார்வையினால், பலருக்கும் அஸ்ட்ராசெனகாவின் இரண்டாவது ஊசி கிடைத்தது. அமெரிக்கா மிகக் குறைந்தளவில் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை உலகளவிலான கோவக்ஸின் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தாலும், சீனாதான் தனது தயாரிப்பான சினோஃபாம் தடுப்பூசியை அன்பளிப்பாகவும், பின்னர் விலைக்கும் இலங்கைக்கு வழங்கியிருந்தது.  கிட்டத்தட்ட 90 இலட்சம் இலங்கையர்கள் இந்த சினோஃபாம் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொண்டிருந்தாலும், சிலர், குறிப்பாக இளைஞர்கள் மேலைத்தேய தடுப்பூசி கிடைக்கும் வரை தடுப்பூசியைப் பெறாது காத்தக்கொண்டிருக்கிறார்கள். இதனை வெறும் மேலைத்தேய மோகமென்றும், அறியாமையென்றும் சாடுவதால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. ஆகவே சீன தடுப்பூசிகள் மீது எவருக்காவது நம்பிக்கையீனமிருந்தால், அதனைக் களைய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நிபுணர்களுக்கும் இருக்கிறது. “சீனப்பொருள்” என்றால் இரண்டாந்தரமான, தரமற்ற பொருட்கள் என்ற விம்பம் பல காலமாக இருந்துவருகிறது. அந்த நிலையைத்தாண்டி சீனா வளர்ந்து பலவருடங்களாகியும், அந்த விம்பம் முழுமையாகத் தளரவில்லை. சீனாவின் அந்த நிலை மாறிவிட்டது என்பதற்கு, உலகின் மிகத்தரமான வணிகநாமங்களான அமெரிக்க மற்றும் ஜப்பான் வணிகநாமங்கள் கூட சீனாவிலேயே தமது உற்பத்தியை முன்னெடுப்பது, உற்பத்தித்துறையில் சீனா கண்டுள்ள வளர்ச்சியை வௌிக்காட்டி நிற்கிறது. தனது தேவைக்கான தடுப்பூசி உற்பத்தியைச் செய்யவே இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கிற சூழலில், தன்னாட்டிற்கும், உலகத்திற்கும் என பெருமளிவல் தடுப்பூசிகளை உற்பத்திசெய்து வெற்றிகரமாக தொடர்ந்து அதனை வழங்கிக்கொண்டிருக்கிறது சீனா.  ஆகவே “சீனப்பொருள்” பற்றிய விம்பத்தை மாற்றியமைப்பது சீனாவின் பொறுப்பாக இருந்தாலும், இன்றைய சூழலில் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில், வெற்றிகரமாக 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் இலக்கை இலங்கை அடைவதற்கு, சீன தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் அவநம்பிக்கை மக்களிடமிருக்குமானால், அதனை முறையாக அணுகி, சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும், மருத்துவ சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது.    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19உம்-தடுப்பூசிகளும்-சில-சிந்தனைகள்/91-281316  
    • எதற்காக இவர் தடுப்பூசியின்  பெயரை குறிப்பிடுகிறார்??? உசத்தி என்று  சொல்லவாறாரா??
    • எங்கே இந்தக் கிராமங்கள்? க. அகரன் ஓர் இனம் வாழ்ததற்கான அடையாளங்களாக, பல்வேறு சான்று பொருட்கள் அந்தப் பிரதேசங்களில் காணப்படும். அவற்றை வைத்தே வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடபால், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், ஒரு கிராமம், மக்கள் இன்றி அழிவடைந்து செல்கின்றது என்றால், நம்பித்தான் ஆக வேண்டும்.  பழம்பெரும் கிராமமமான ‘வெடிவைத்தகல்’ என்ற செழிப்புமிகு, எல்லையோர கிராமமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை சந்தித்துள்ளது.  1985 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர், சுமார் 45 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமம், செல்வச்செழிப்புடன் காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால், மக்கள் சிறுகச் சிறுக வெளியேறி நகர்ப்புறங்களை நோக்கி சென்றுவிட, அக்கிராமம் வனாந்தரமாக காணப்படுகின்றது. ஓமந்தை கிராமத்தில் இருந்து, 24 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இக் கிராமத்தில், தற்போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையினால், அக்கிராமத்தை சேர்ந்த மக்கள், மீளக்குடியேற விருப்பம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர் என, அக்கிராமத்துக்கு அயலில் உள்ள கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.  எனினும், அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றபோது, மக்கள் மீள வருவார்கள் என்ற அவாவோடு அரச அதிகாரிகளின் பரிந்துரையினால், இந்திய அரசின் நிதியுதவியுடன் பாடசாலையொன்று கட்டப்பட்டு, இன்று அது நெல் காய வைக்கும் இடமாக மாறிக் காணப்படுகின்றது. சிதைவடைந்த வீடுகள், சீரற்ற வீதிகள், எப்போது யானை வரும் என தெரியாத வனாந்தரம் என்ற ஓர் அழிந்த கிராமத்த்துக்கு அருகாமையில் உள்ள கிராம மக்களும், தமது அன்றாட கருமங்களை இத்தகைய ஆபத்துகளுக்கு மத்தியில் அச்சத்துடன் கழிக்க வேண்டியிருப்பதால், அவர்களும் தமது பாரம்பரிய கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை காணப்படுகின்றது.   2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 35 குடும்பங்கள் வாழ்ந்த கோவில் புளியங்குளம் கிராமத்தில் தற்போது ஒன்பது குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வெடிவைத்தகல் கிராமத்தின் பாதிப்பாகும்.  எனவே, இந்தப் பாரம்பரிய கிராமங்களில், மக்கள் வாழ்வதற்கு ஏதுவான நிலைமைகள் தொடர்பில், சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்து, 11 வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை அரசாங்கம் செலவு செய்துள்ளது. எனினும் அவை சீரான முறையில் பயன்படுத்தப்பாமை பல கிராமங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுகின்றமையை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்நிலை வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியாவில் அதிகம் என்றே கூறலாம். குறிப்பாக, வீமன்கல், வெடிவைத்தகல், புதுவிளாங்குளம் என பல கிராமங்களைக் கூறலாம்.  இவ்வாறு இக்கிராமங்களில் மக்கள் குடியேறாமைக்கு காரணம் என்ன....?. இவை அழிவடைந்து செல்லும் நிலை ஏன் வந்தது என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இவ்வாறான நிலைமைக்கு வெறுமனே அரசாங்கத்தினை மாத்திரம் குற்றம்சாட்டிவிட்டு மக்கள் தப்பித்துக்கொள்ள முடியுமா எனவும் பார்க்க வேண்டும். ஏனெனில் யுத்த காலத்தில் வெளியேறிய மக்கள் நகர்ப்புறங்களில் வசதிவாய்ப்புகளுடன் வாழ்வதன் காரணமாக மீளவும் தமது கிராமத்திற்கு செல்வதற்கு பின்னடிக்கும் நிலை காணப்படுகின்றது. அங்குள்ள வயல் நிலங்களில் செய்கை பண்ண மட்டுமே செல்லும் மக்கள் பயனைப்பெற்றுவிட்டு மீள நகரைநோக்கி திரும்பி விடுகின்றமை கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பே. எல்லையோர கிராமமாக இது காணப்படுகின்றமையால் அயலில் உள்ள சகோதர இனத்தவர்கள் அப்பகுதியில் காணிகளை அபகரிக்க திட்டமிட்டும் வருகின்றனர். மக்கள் தமது கிராமத்தில் குடியேறாத நிலையில் தமது காணிகள் பறிபோகின்றது எனக் கூக்குரல் இடுவதால் எந்த பலனும் இல்லை என தெரிந்த போதிலும் புதிய சந்ததி அக்கிராமங்களில் சென்று குடியேற தயாராக இல்லை என்பதே யதார்த்தம். இவ்வாறான ஓர் நிலைமையையே வவுனியா புதுவிளாங்குளம் என்ற கிராமமும் சந்தித்து வருகின்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஒரு பரம்பரைக்குரிய 25 குடும்பங்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் கோவிலை அண்டியதாக உள்ள இக் கிராமம் விவசாயப் பிரதேசமாகும். முன்னர் பாடசாலை, சிவன் கோவில், சனசமூகநிலையம், அழகான கல்வீடுகள், விளைச்சல் தரும் வயல்கள் என்பவற்றைக் கொண்டு கம்பீரமாக காட்சியளித்த இந்தக் கிராமம் தற்போது பற்றைக்காடாகவும், போரின் சாட்சியாகவும் கண்முன்னே நிற்கின்றது.    சேதமடைந்த சிவன் கோவிலும், சிதைவடைந்த கட்டடம் ஒன்றின் இடிபாடும் மட்டுமே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஒரே சாட்சி. ஏனைய கட்டடங்களின் அத்திவாரங்களை கூட தேடி கண்டுபிடிக்க முடியாத நிலையில் போரின் அவலத்தை இப்பிரதேசம் நேரடியாக சந்தித்துள்ளது. இப்பகுதியில் குடியிருந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக, இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர்.  அவர்களது வாழ்விடங்கள் பற்றைக்காடுகளாக மாறியிருந்ததுடன், அப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளும் செய்து   கொடுக்கப்படவில்லை.இதனால் அங்கு சென்று குடியேறுவதை தவிர்த்த இக் கிராம மக்கள் தற்போது கனகராயன்குளம், மன்னகுளம், வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் வேறு காணிகளைப் பெற்றும், உறவினர்கள், நண்பர்கள் காணிகளிலும் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தக் கிராமம் தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ளது. தரம் 5 வரை இருந்த பாடசாலை கூட தற்போது இருந்த இடம் தெரியாது இருக்கின்றது. மேலும், இப் பகுதிக்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் வீதிகள் கூட சீராக இல்லை. இதனால் தமது பிள்ளைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு, இக் கிராமத்தில் மக்கள் சென்று குடியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.  தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் கூட, அழிவடைந்து செல்லும் கிராமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அழிவடையும் தமிழ் கிராமங்களின் பட்டியல் நீண்டே செல்கின்றது.  நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற போதும் அவை சீராக பங்கிடப்படாமையும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் அபிவிருத்தி திட்டங்களை ஒதுக்குவதன் மூலமும் இன்று பல பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளதுடன், அந்தக் கிராமங்களை கைவிட்டுச் செல்லும் நிலையும் உருவாகி வருகிறது. அந்த வரிசையிலேயே வெடிவைத்தகல், புதுவிளாங்குளம் கிராமங்கள் உள்ளன. எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அபிவிருத்திகளையும் வளங்களையும் சீராகப் பங்கீடு செய்து, அழிவடையும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எங்கே-இந்தக்-கிராமங்கள்/91-281262  
    • கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது.  எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை. இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது. கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/113705
    • ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த  தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அத்தோடு மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.   https://www.virakesari.lk/article/113710  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.