Jump to content

ஈழ சினிமா சாத்தியமா?

Recommended Posts

வணக்கம் உறவுகளே!

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு.

2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது.

இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது,

நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள்  நமது சினிமா ஊடாகவே உலக அரங்கில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய கட்டாயமும் நமக்கே இருக்கின்றது.

சினிமா அடித்தட்டு மக்களிடையேயும் ஆளப்பதியும் வலிமையான ஊடகம்.

ஈழகலைஞர்களுக்கு ஓர்படைப்பை உருவாக்குவதில் தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் போது முதல் தடை பணம்,

அதை தாண்டி படைப்பை உருவாக்கினால் ஊடகங்கள் தென்னிந்திய சினிமாவுக்கும், விளையாட்டு செய்திகளுக்கும், கள்ள தொடர்பு செய்திகளுக்கும் ஒதுக்கும் இடத்தில் ஒரு பகுதியை கூட ஈழசினிமா கலைஞர்களுக்கு ஒதுக்க தயங்கும்.

இதனால் சாதாரண மக்களுக்கு இங்கிருந்தும் படைப்புகள் வருகிறது என்ற செய்தியே தெரியாமலுள்ளது.

அதையும் தாண்டி படத்தை முடித்து திரையரங்கிற்கோ, இறுவட்டுகளையோ பணம்கொடுத்து பார்க்க மக்களுக்கு ஆர்வமில்லை,

இதனால் அடுத்த படைப்பை தயாரிக்க இருந்த பணமும் தர்ம கணக்கில் போய்விட்டதால் மறுபடியும் முயற்சி செய்ய முடியாத நிலை.

நல்ல கதைகளை வைத்து கொண்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் சிலர்,

தயாரிப்பாளர் கிடைத்துவிட்டாரே என்பதற்காக கதையே இல்லாமல் படத்தை உருவாக்கும் சிலர்,

தரமற்ற படைப்புகளை 'இது தான் ஈழசினிமா' என நம்பி பார்த்ததால் அடுத்த படைப்பை பார்க்க தயங்கும் பார்வையாளர்கள்.

அரசாங்க அனுமதி, தியேட்டர் அனுமதி, வெளிப்புற படப்பிடிப்புக்கான பொலிஸ் அனுமதி இன்னும் பல அனுமதிகள் கிடைப்பதிலுள்ள சிக்கல்கள் இவற்றை தாண்டி வரும் படைப்பாளிகளின் முயற்சிகள் சிலவற்றையே நாம் யூடியூப்பில் இலவசமாக பார்வையிடுகின்றோம்.

என்றாவது நமக்கான சினிமா உருவாகும், செலவளிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனிருக்கும், தென்னிந்திய கலைஞர்களுக்கு நமது மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை போல் நமது கலைஞர்களையும் அங்கீகரிப்பார்கள்,

ஓர் படத்திற்கு உழைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் அனைவருக்கும் நமது சினிமா வணிகரீதியில் பணமீட்டி சம்பளம் கொடுக்கும் காலம் வரும்,

நமது சினிமாவை நம் மண்ணின் படைப்புகளை நமது மக்களும் புலம்பெயர் உறவுகளினதும் பேராதரவுடன் உலக அரங்கில் தலைநிமிர்ந்து பயணிக்கும் என நம்புகிறேன்.

மேலும் நமது சினிமா வணிகரீதியில் முன்னேறுவதற்கும், படைப்புகளின் தரங்களில் முன்னேற்றமடையவும் தங்கள் ஆலோசனைகள், கருத்துகளை வரவேற்கிறேன்.

நன்றி நண்பர்களே! :)

-கிருத்திகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி கிருத்திகன். நிறையவே எழுதலாம்.
இப்போதைக்கு இது...
நிச்சயம் ஈழத்தமிழரால் தரம் வாய்ந்த சினிமா சாத்தியம்.
உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடிய கதைக் தளங்கள், உணர்வுகள், நிகழ்வுகள்  நிறையவே எம்மிடம் உண்டு.
சிங்கள கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளால்  இது முடியும் எனும் போது எம்மால் முடியாதது எதுவுமில்லை.
முதலில் இது போன்ற உரையாடல்கள்  அவசியம். 
சரியான படைப்பாளிகள் ஒருங்கினைக்கப்பட்டால் சாத்தியப்படும்.
இப்போதைக்கு மூத்த சிங்கள இயக்குனர்கள், கதாசிரியர்கள், அல்லது தென் இந்திய சினிமா துறை போன்ற டெக்னீசியன்சுடன் சேர்ந்து நாமும் (job  shadow) போன்று சேர்ந்து இயங்கினால் நன்மை பயக்கும்.
அதற்கான தளம் உருவாக்கப்படல் வேண்டும்....
ஒரு சின்ன உதாரணம் : 
சுதர்சினி (சிறுகதை) மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை)

இதை சரியாக திரைக்கதையில் படைத்தால் உலக சினிமா ...

http://www.yarl.com/forum3/topic/164755-சுதர்சினி-சிறுகதை-–-தமிழினி/#comment-1142709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்தாடற்குரிய விடயம்... கிருத்திகன்...!

தோராயமாக 75 / 80 களில்  ஈழத்தில் திருகோணமலையிலோ அன்றி வேறிடத்திலோ ஒரு தரமான ஸ்ரூடியொ உருவாகியிருக்க வேண்டிய காலகட்டம். அப்பொழுதுதான் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தன. சில படங்கள் நல்ல திரைக் கதை இருந்தும் தொழில்நுட்ப விடயங்களில் சிங்கள , இந்தியப் படங்களில் இருந்தும் பின்தங்கியிருந்ததால் ஒரு வாரத்திலேயே  தியேட்டரை விட்டுத் தூக்கியதும் வேதனையான சம்பவங்கள். அந் நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் மலையாள  ஹிந்திப் படங்கள் கூட ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது கவணிக்கப் பட வேண்டிய விடயம். அதையெல்லாம் தாண்டி ஈழத்துப் படங்கள் நல்ல நிலைமைக்கு விருட்சமாக வளர்ந்திருக்கும்..., அதற்குள்  83லிருந்து இன்றுவரை நாட்டில் அசாதாரண  சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் சிறந்த குறும்படங்களும், ஈழத்துக் கலைஞர்களை உள்வாங்கிய  இந்தியப் படங்களும் வருகின்றது கொஞ்சம் ஆறுதலான விடயங்கள்.

யதார்த்தத்தில் தற்பொழுது எம்  தமிழினம்  ஒரு " போன்சாய் " மரமாக திட்டமிட்டு  குறுக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் விரும்புகின்ற அளவுக்கு மட்டுமே நாம் வளர முடியும்.   தாழியும் தகர்ந்து  கிளைகளும் விரிவது எக்காலமோ ....!

Link to comment
Share on other sites

வணக்கம் கிருத்திகன்7.

மனதைக் குடையும் சில விசயங்கள்....

"யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு"

யுத்த காலப்பகுதியில் யாழிலிருந்து படைப்புகள் வெளிவருவதற்கு ஏதும் தடை இருந்ததா?

"2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது."

2009 முன் துளிர்விட யாழில் என்ன பிரச்சனை?

இது (http://tamilnation.co/media/tamil/aaniver.htm) எந்த கால பகுதியில் வந்திருக்கும்?

"நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள்  நமது சினிமா ஊடாகவே உலக அரங்கில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய கட்டாயமும் நமக்கே இருக்கின்றது."

இந்த மாதிரியா?

நமது சினிமாவை நம் மண்ணின் படைப்புகளை நமது மக்களும் புலம்பெயர் உறவுகளினதும் பேராதரவுடன் உலக அரங்கில் தலைநிமிர்ந்து பயணிக்கும் என நம்புகிறேன்.

தரமான படைப்புக்கள் வரும்போது நிச்சயமாக மக்கள் ஆதரவு கிடைக்கும். 

ஆதரவு தந்தாத்தான் தரமான படைப்பு கிடைக்கும் எண்டா கொஞ்சம் கஸ்டம்தான்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...
On October 27, 2015 at 8:14 PM, Sasi_varnam said:

நல்லதொரு திரி கிருத்திகன். நிறையவே எழுதலாம்.
இப்போதைக்கு இது...
நிச்சயம் ஈழத்தமிழரால் தரம் வாய்ந்த சினிமா சாத்தியம்.
உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடிய கதைக் தளங்கள், உணர்வுகள், நிகழ்வுகள்  நிறையவே எம்மிடம் உண்டு.
சிங்கள கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளால்  இது முடியும் எனும் போது எம்மால் முடியாதது எதுவுமில்லை.
முதலில் இது போன்ற உரையாடல்கள்  அவசியம். 
சரியான படைப்பாளிகள் ஒருங்கினைக்கப்பட்டால் சாத்தியப்படும்.
இப்போதைக்கு மூத்த சிங்கள இயக்குனர்கள், கதாசிரியர்கள், அல்லது தென் இந்திய சினிமா துறை போன்ற டெக்னீசியன்சுடன் சேர்ந்து நாமும் (job  shadow) போன்று சேர்ந்து இயங்கினால் நன்மை பயக்கும்.
அதற்கான தளம் உருவாக்கப்படல் வேண்டும்....
ஒரு சின்ன உதாரணம் : 
சுதர்சினி (சிறுகதை) மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை)

இதை சரியாக திரைக்கதையில் படைத்தால் உலக சினிமா ...

http://www.yarl.com/forum3/topic/164755-சுதர்சினி-சிறுகதை-–-தமிழினி/#comment-1142709

நன்றி சசி வர்மன் அண்ணா :)

தமிழினி அக்காவின் கதை படித்தேன் அருமை.

இணைப்பிற்கு நன்றி.

கதைக்களங்கள் பற்றிய மேலும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்தி உதவுங்கள்.

யாழ்ப்பாணத்தில் பிரசன்ன விதானகே, அசோக் ஹந்தகம ஆகிய சிங்கள இயக்குனர்கள் என்னையும் இன்னும் சில கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கினார்கள். இன்னும் நாம் நிறைய முன்னேற வேண்டியுள்ளது.

மீண்டும் காத்திரமான கருத்துகளுக்கு நன்றி.

On October 30, 2015 at 7:42 PM, suvy said:

நல்லதொரு கருத்தாடற்குரிய விடயம்... கிருத்திகன்...!

தோராயமாக 75 / 80 களில்  ஈழத்தில் திருகோணமலையிலோ அன்றி வேறிடத்திலோ ஒரு தரமான ஸ்ரூடியொ உருவாகியிருக்க வேண்டிய காலகட்டம். அப்பொழுதுதான் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தன. சில படங்கள் நல்ல திரைக் கதை இருந்தும் தொழில்நுட்ப விடயங்களில் சிங்கள , இந்தியப் படங்களில் இருந்தும் பின்தங்கியிருந்ததால் ஒரு வாரத்திலேயே  தியேட்டரை விட்டுத் தூக்கியதும் வேதனையான சம்பவங்கள். அந் நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் மலையாள  ஹிந்திப் படங்கள் கூட ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது கவணிக்கப் பட வேண்டிய விடயம். அதையெல்லாம் தாண்டி ஈழத்துப் படங்கள் நல்ல நிலைமைக்கு விருட்சமாக வளர்ந்திருக்கும்..., அதற்குள்  83லிருந்து இன்றுவரை நாட்டில் அசாதாரண  சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் சிறந்த குறும்படங்களும், ஈழத்துக் கலைஞர்களை உள்வாங்கிய  இந்தியப் படங்களும் வருகின்றது கொஞ்சம் ஆறுதலான விடயங்கள்.

யதார்த்தத்தில் தற்பொழுது எம்  தமிழினம்  ஒரு " போன்சாய் " மரமாக திட்டமிட்டு  குறுக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் விரும்புகின்ற அளவுக்கு மட்டுமே நாம் வளர முடியும்.   தாழியும் தகர்ந்து  கிளைகளும் விரிவது எக்காலமோ ....!

நன்றி SUVY சகோ!

முதன்முதலில் சிங்கள படங்களை தயாரித்ததும், இந்திய தமிழ்படங்களை இலங்கையில் திரையிட்டதும் தமிழர்கள் தான்.

முதலீட்டில் இந்திய படங்களுடன் போட்டியிடவே முடியாது,

கதை விடையத்தில் இனி சாத்திய படலாம்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்களை பகிர்ந்துள்ளீர்கள்.

வாடைக்காற்று போன்ற இலங்கை தமிழ் படங்கள் அக்காலத்தில் திரையரங்கை விட்டு தூக்கியதும் பாடசாலைகளில் காண்பிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன்.

83க்கு பின் வந்த படங்களில் நல்ல பேச்சு தமிழ், மக்கள் அவலங்கள் வெளிப்பட்டன, நிதர்சனம் இவற்றை தயாரித்திருந்தது.

புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையில் இத்தகைய நல்ல படங்கள் வருமா என்பது சந்தேகமே!

நமது இனத்தின் வாழ்வியலை சினிமாவில் உலக அரங்கில்  பதிவுசெய்ய வேண்டியது நம் கடமை, 

மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

On October 30, 2015 at 9:46 PM, சனியன் said:

//வணக்கம் கிருத்திகன்7.//

வணக்கம் சனியன் அண்ணா!

நல்ல கேள்விகள், வரவேற்கிறேன்.

//மனதைக் குடையும் சில விசயங்கள்....

யுத்த காலப்பகுதியில் யாழிலிருந்து படைப்புகள் வெளிவருவதற்கு ஏதும் தடை இருந்ததா?//

கமலாவுடன் கும்பலாக வீதியால் அல்லது வீட்டில் கூடியிருந்தீர்களானால் இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள்.

2010 ல் சனல் 4 வீடியோ வந்திருந்த நேரம்

கமராவுடன் கல்வியங்காட்டில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த நேரம், கோப்பாய் பொலிசாரால் நண்பர்களுடன் விசாரணைக்கு கூட்டி செல்லப்பட்டோம். கமரா, வான் வாகனம் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு, பின் இயக்குனர் கேசவராஜா உதவியால் வீடு திரும்பினோம்,

குறும்படம் பெயர்: அவசரம்.

//2009 முன் துளிர்விட யாழில் என்ன பிரச்சனை?//

அவுட்டோர் ஷூட்டிங்க்கு அனுமதி இல்லை!

6.00க்கு மேல் ஊரடங்கு நேரத்தில் எதுவும் செய்ய முடியாது.

எல்லா இடங்களிலும் ரோந்து நடவடிக்கை இலுந்ததால் கையில் கொப்பி புத்தகம் இல்லாமல் கூடிநின்றால் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட கூடும்.

திரைப்பட கூட்டு தாபன அனுமதி பெற கொழும்பு செல்ல க்ளியரன்ஸ் எடுத்து காரணம் சொல்லி விதானை கடிதம் தந்து, சவுண்ட் பயன்படுத்த ஆமி பாஸ் எடுத்து வெளியிட வேண்டும்.

அதை ஏன் செய்யவில்லை என கேட்டால் நீங்கள் உண்மையிலேயே சிறந்த அறிவாளி தான்.

l

தாங்கள் அனுப்பிய இணைப்பு செயலிழந்துள்ளது.

2002ல் கொளதமனின் செருப்பு போன்ற படங்கள் வெறிவந்துள்ளது,

ஒரு படைப்பு வெளிவருவது,  வேறு ஒரு சினிமா உலகம் துளிர்விடுவது வேறு!

Quote

//இந்த மாதிரியா?

//

ஹா! ஹா!! ஜெயந்தன், உமாசதீஸ் ஆகியோரின் பாடல்கள் இவை,

ஈழசினிமா என விவாதிக்க படுவதற்கும், இந்திய சினிமாவை பிரதி செய்வதற்கும் வித்தியாசமுண்டு, இதுபோல இன்னும் நிறைய வெளிவருகின்றன சமீபகாலமாக!

இதற்கு சம்பந்த பட்டவர்கள் தான் பதில் தர வளண்டும்.

//தரமான படைப்புக்கள் வரும்போது நிச்சயமாக மக்கள் ஆதரவு கிடைக்கும். //

தரமான படைப்பு வரும் போது ஊடகங்கள் ஆதரவு தரவில்லையானால் எப்படி மக்களிடம் போய்ச்சேர்ந்து்மக்கள் ஆதரவு கிடைக்கும்?

இணையத்தில் இருக்கும் 20% மக்கள் ஆதரவு போதுமா? இணையபாவனை்அற்ற 80% மக்கள் ஆதரவு வேண்டுமா என்பதே என் கேள்வி?

//ஆதரவு தந்தாத்தான் தரமான படைப்பு கிடைக்கும் எண்டா கொஞ்சம் கஸ்டம்தான்.//

நன்றி.//

உண்மை தான் அண்ணா.

ஆதரவு தரக்கூடிய தரமான படைப்பு எப்படியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.