நவீனன் பதியப்பட்டது October 27, 2015 Share பதியப்பட்டது October 27, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்னம்பலம் பின்பற்றிய அரசியல்வழியில் இது ஒரு திருப்பம்தான். ஆனால், இந்த இணைப்பின் மூலம் ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தமிழ் மக்களுக்கென தமிழர் பிரதேசங்களில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உருவாக்க முடிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பனிக்கட்டித் தொழிற்சாலைகள், மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரி, மானிப்பாய் ஆஸ்பத்திரி, கடற்றொழில் அபிவிருத்தி, கைதடி வயோதிபர் மடம், வட மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்தி எனப் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியமாயின. இது மட்டுமல்லாது இலங்கைத் தேசியக் கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்தும் நிறங்களையும் உள்ளடக்கியது ஜி.ஜி.யினது பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இணைப்பு- அரசியல் ரீதியில் ஜி.ஜி.யின் 50ற்கு 50-யோ, தமிழ் மக்களின் சுயாட்சியையோ வென்றெடுக்கும் வாய்ப்பைத் தரவில்லை. ஜி.ஜி.யின் இந்த நிலைப்பாட்டு மாற்றத்தை சா.ஜே.வே.செல்வநாயகம், சி.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் எதிர்த்ததன் விளைவாகவே பிரிவு உண்டானதாக பல கட்டுரையாளர்களும் கருத்துரைக்கிறார்கள். சிலர், செல்வநாயகம் உட்பட்ட சில முக்கிய தலைவர்களுக்கு கபினெட் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத்தர ஜி.ஜி. தவறியதுதான் பிரிவுக்கு மூல காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். எது எவ்வாறாயினும், குறிப்பிட்ட பிரிவை கொள்கை ரீதியில் செல்வநாயகம் தலைமையிலான குழுவினரால் நியாயப்படுத்த முடிந்திருந்தது. இதனிடையே இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் அன்றைய நாடாளுமன்றினால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அது தொடர்பிலான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் நிலைப்பாடு அவர் மீது பலத்த விமர்சனங்களை உருவாக்கியது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோனதற்கு ஜி.ஜி. ஆதரவளித்தார் என்பது அன்றுமுதல் இன்றுவரை ஜி.ஜி.பொன்னம்பலம் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனமாகும். குறிப்பாக தமிழரசுக் கட்சி அன்று இந்த விமர்சனத்தைக் கடுமையாக முன்வைத்ததுடன், ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு எதிரான வலிமையான பிரசாரமாக இதனைக் கைக்கொண்டது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ன செய்தார், அவர் இழைத்த தவறு என்ன என்பது பற்றி இங்கு ஆராய்தல் அவசியமாகிறது. இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் அக்கறையற்றுச் செயற்பட்டவராக இருக்கமுடியாது. ஏனெனில் அவர் ஆற்றிய 50இற்கு 50 உரையிலாகட்டும், சோல்பரி குழு முன்பு ஆற்றிய உரையிலாகட்டும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சம உரிமை, பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசியவர். குறிப்பாக சோல்பரி குழு தமிழ்க் காங்கிரஸின் சாட்சியத்தைக் கேட்பதற்கென ஒதுக்கிய மூன்று நாட்களில், ஒருநாள் முழுவதையும் ஒதுக்கி இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் பற்றியும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் பேசினார் ஜி.ஜி. ஆகவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் ஜி.ஜி. அக்கறையற்றிருந்தார் என்று சொல்லமுடியாது. அப்படியாயின் அம்மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்குக் காரணமான சட்டங்களுள் ஒன்றுக்கு ஜி.ஜி. ஆதரவளித்தாரா? அப்படி ஆதரவளித்தாராயின் அதன் மூலம் அம்மக்களுக்கு ஜி.ஜி. பெரும் அநீதி இழைத்துவிட்டாரல்லவா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. இந்த விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், எளிமையாக புரியவைக்க முயல்கிறேன். இங்கே இரண்டு சட்டங்கள் முக்கியம் பெறுகின்றன. முதலாவதாக 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச்சட்டம், மற்றயைது 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் காலனித்துவ நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பிரித்தானிய முடியின் குடிமக்களாக இருந்தார்கள். காலனித்துவத்திலிருந்து நாடுகள் சுதந்திரம் பெற்றபோது ஒவ்வொரு சுதந்திர நாடும் தமக்கென குடியுரிமைச் சட்டத்தை வரைந்து கொள்ளுதல் அவசியமானது. அவ்வகையில் 1948இல் அன்றைய டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது சமர்ப்பிக்கப்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தது. குறித்த சட்டமூலமானது பின்வருமாறு வழங்கியது: (அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது (ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன், (இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும். அல்லது, (ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும். இச்சட்டமூலம் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனை அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். இதனைக் கடுமையாக எதிர்த்து அவர் பேசியது 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற ஹன்சார்டின் 1821 - 1861 பக்கங்களில் பதிவாகியுள்ளது. இதனை இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கூட கடுமையாக எதிர்த்தன. ஆகவே, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்கு ஜி.ஜி. பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்பதில் உண்மையில்லை. மாறாக, அனைத்துத் தமிழ்க் கட்சிகளைப் போலவும் அவர் அன்று அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார் - எதிர்த்தே வாக்களித்தார். ஆயினும் அன்றைய அரசாங்கம் அச்சட்டத்தை நிறைவேற்றியது. இதன் பின்னர், ஜி.ஜி.பொன்னம்பலம் - அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் 'எதிர்வினை - ஒத்துழைப்பு' வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தியபோது, பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தார். அதனை அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அன்றைய அரசாங்கத்தில் இணைந்து கபினெட் அமைச்சரானார் ஜி.ஜி.பொன்னம்பலம். பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாகத் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டி.எஸ்.சேனநாயக்க 1949ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார். இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவின்படி இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜா உரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இலங்கை இந்திய காங்கிரஸும், தமிழ்க் காங்கிரஸும் ஏழு வருட காலப்பகுதியை, ஐந்தாகக் குறைக்கக் கோரின. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த மசோதா சட்டமானால் ஏறத்தாழ 100,000 பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்த மசோதாவுக்குத்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்திருந்தார். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் இழைத்த அநீதியை, இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் முற்றாக சரிசெய்து விடவில்லை. அது ஒரு முழுமையான தீர்வுமில்லை. உண்மையில் இதைவிட நியாயமான, முழுமையான தீர்வொன்றுக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் உழைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோக ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்ற கருத்தில் உண்மையில்லை. ஏனெனில், அந்த மசோதாவை ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார். மாறாக இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருதொகை இந்திய வம்சாவளி மக்களுக்கேனும் பிரஜாவுரிமை வழங்கிய இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்துக்கே அவர் ஆதரவளித்திருந்தார் என்பதே நிதர்சனம். அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸிலிருந்து 1949இல் பிரிந்து, இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதானது, ஜி.ஜி.யின் அபிவிருத்தி சார் இணக்க அரசியலுக்கு மாற்றாக தமிழ் மக்களுக்கான சுயாட்சி சார் உரிமை அரசியலுக்கான பாதையின் தொடக்கமாகக் கருதப்படத்தக்கது. தொடரும்... - See more at: http://www.tamilmirror.lk/152667#sthash.pPQmD2sZ.dpuf 1 Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 28, 2015 தொடங்கியவர் Share Posted October 28, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 31-08-2015 09:32 AM Comments - 0 Views - 210 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போகும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவினை எதிர்த்தே இந்த பிரிவு உருவானது. 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக இலங்கையின் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தல்' என்ற கொள்கையினடிப்படையில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) உருவானது. ஆரம்ப காலங்கள் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. புதிதாகத் தோன்றிய கட்சி எதிர்நோக்கும் சவால்களைக் கடந்து வரவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இருந்தது. தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்று மூன்றாண்டுகளுக்குள்ளாக 1952இல் பொதுத் தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் 2 ஆசனங்களை மட்டுமே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெல்லக் கூடியாதாக இருந்தது. கோப்பாயில் சி.வன்னியசிங்கமும் திருகோணமலையில் எஸ்.சிவபாலனும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்கள். காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் தோல்வி கண்டார். அந்தத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான எஸ்.நடேசன் வெற்றி பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 4 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டு தேர்தலில் (தமிழரசுக் கட்சி பிரிவுக்கு முன்பதாக) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டியது. 1952ஆம் ஆண்டு தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லையெனினும், 1956ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமான பெறுபேற்றை வழங்கியது. இதற்குக் காரணம் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. 1952ஆம் ஆண்டு தேர்தல் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் புதிதாக உருவாகியிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டும் முதலாவது பொதுத் தேர்தலாக இருக்கவில்லை. 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான 'மத்திய-இடது கொள்கையை' உடைய குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் புதிதாக தோன்றியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சந்தித்த முதலாவது பொதுத் தேர்தலும் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலே. 1952ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 54 ஆசனங்களை வெற்றிகொண்ட போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெறுமனே 9 ஆசனங்களையே வெற்றி கொண்டிருந்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இது அவர்கள் எதிர்பார்த்த ஆரம்பமாக இருக்கவில்லை. ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை நேரெதிராக மாறியது. 1948இல் சுதந்திரம் பெற்றது முதலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி மேலைத்தேயம் சார்பான ஆட்சியாகவே காணப்பட்டது. இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவினுடைய அணிசேராக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத, கம்யூனிசத்தை கடுமையாக விமர்சிக்கும் கட்சியாக, அரசாங்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இலங்கை - ஐக்கிய நாடுகளில் இணைவதற்கான முயற்சியை அன்றைய சோவியத் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைமறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் எனப்படுகிறது. (பின்னர் 1955-லே இலங்கை ஐ.நா.-வில் இணைந்து கொண்டது) இவ்வாறாக மேலைநாடுகள் சார்பாக இருந்த அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை விழுத்தும் புதிய தந்திரோபாயத்தை 1952 தேர்தல் நிறைவுபெற்றவுடனேயே பண்டாரநாயக்க ஆரம்பித்துவிட்டார். 1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் 'சிங்கள-பௌத்த தேசியம்'. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் 'சிங்கள-பௌத்த தேசியத்தை' அவர் எப்போதோ கையிலெடுத்துவிட்டார். 1937இலேயே சிங்கள மகாசபையை பண்டாரநாயக்க உருவாக்கியிருந்தார். 'மேலைத்தேயம் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பௌத்த கலாசாரத்தை சீரழிக்கிறது. இது ஒரு கிறிஸ்துவர்கள் சார்பான மேட்டுக்குடி ஆட்சி. 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதில் உண்மையில்லை என்று பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலகுகிறதோ அன்றைக்குத்தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்' என தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. இதனை 'சுதேசியம்' என்பதாக பொருள்கோடல் செய்யும் அரசியல் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஓர் இனத்தையும் மதத்தையும் மையப்படுத்திய தேசியம் எவ்வாறு ஒட்டுமொத்த நாட்டின் சுதேசியமாக இருக்க முடியும்? மாறாக அது பெரும்பான்மையின் தேசியமாக, குறுந் தேசியவாதமாகவே கருதப்படவேண்டியதாகிறது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்திரோபாயம் 'மக்கள் ஐக்கிய முன்னணி' (மஹஜன எக்ஸத் பெரமுண) என்ற வடிவில் உருப்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக இருந்தக் கட்சிகளை இந்த முன்னணியின் கீழ் ஒன்றிணைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டு, அவைகளைத் தோழமை ஆக்கிக்கொண்டார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தேசிய மயமாக்கல் கொள்கை, தனியார்மயத்துக்கு எதிரான நிலைப்பாடு என்பனவே இந்தத் தோழமை சாத்தியமாகக் காரணமாயின. வங்கிகள், பெருந்தோட்டங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என்பனவெல்லாம் தேசியமயமாக வேண்டும் என உரைத்த பண்டாரநாயக்க, வணிக மற்றும் வர்த்தகத்துறை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறினார். ஆனால், பின்னர் பண்டாரநாயக்க 'தனிச் சிங்களச்' சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வவைத்த போது அதனைக் கடுமையாக இந்த இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 'பஞ்ச மா பலவேகய' (ஐம்பெரும் சக்திகள்) என்ற பெயரில் பௌத்த பிக்குகள், தொழிலாளர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் ஆகியோரை ஒன்றிணைத்து தனது 1956ஆம் ஆண்டு வெற்றிக்கான பயணத்தை ஆரம்பித்தார் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. 1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பப்பட்டன. 1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார். இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களச் சட்டம்' அமைந்தது. பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற 'சிங்கள-பௌத்த' தேசியவாதமும், 'பஞ்ச மா பலவேகய'வும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக மாறியது. அதுவும் தேர்தல் இடம்பெற்ற 1956ஆம் ஆண்டானது கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும், விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும் இருந்ததானதும் 'சிங்கள-பௌத்த' தேசியவாத உணர்ச்சிகளுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவும் அமைந்தது. இந்நிலையில் இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் 'தனிச் சிங்களம்' என்ற கொள்கையை தனது களனி மாநாட்டில் முன்னிறுத்தியது. ஆனால், இந்த இறுதி நேர மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலனளிக்கவில்லை. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி 51 ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்களே கிடைத்தன. இந்தத் தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வெற்றிகரமான தேர்தலாக அமைந்தது. அதற்குக் காரணம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'சிங்கள-பௌத்த' தேசியவாதம். பண்டாரநாயக்கவினால் எழுச்சியுறச் செய்யப்பட்ட 'சிங்கள-பௌத்த' தேசியவாதம், ஐக்கிய தேசியக் கட்சி தனது சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இருமொழிக் கொள்கையினின்று விலகி பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களக்' கொள்கையை தானும் ஏற்றமை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்க அரசியல் என்பனவெல்லாம் சேர்த்து தமிழ் மக்கள் இவற்றுக்கு மாற்றான தமிழ்த் தேசிய சக்தியாக, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியைத் தெரிவு செய்வதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்தன. 1956ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மிகப்பெரியதொரு வெற்றியை ஈட்டியது. 14 வேட்பாளர்கள் போட்டியிட்டு 10 பேர் வெற்றியீட்டினர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் மட்டும் யாழ்ப்பாணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்துக்கெதிரான தமிழ் மக்களது உரிமைக் குரலாகப் பார்க்கப்பட்டது. சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். தனது தந்தையாரினுடைய 'தனிச் சிங்களச்' சட்டமே இந்தநாட்டின் இனப ;பிரச்சினையின் மூல காரணங்களுள் ஒன்று என 2011 ஜூலை 24ஆம் திகதி இடம்பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். அவர் மேலும், 'தனிச் சிங்களச்' சட்டம் 450 வருடங்களாக பாழ்பட்டிருந்த இலங்கைச் சுதேசியத்தைத் தட்டியெழுப்பியது. ஆனால், அது 'மற்றவர்களான' தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலே ஆகியோரை அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டது, இதனால் அவர்களால் சம உரிமையுடன், கௌரவத்துடன், ஒரு தேசமாக வாழும் நிலை இல்லாது போய்விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். இது சட்டமூலமாகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அங்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள், அன்றைய தலைவர்கள் பதிவுசெய்த கருத்துக்கள், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னான விளைவுகள் என்பவை விரிவாக அலசப்பட வேண்டியதாகும். - See more at: http://www.tamilmirror.lk/153054#sthash.pUERycdN.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 28, 2015 தொடங்கியவர் Share Posted October 28, 2015 ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றம்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3) சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’ இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது. 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ‘சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்’ அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம். சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது. இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனைச் சுற்றி இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை நாம் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானதாகும். சுயநல, பேரினவாத அரசியல் பேச்சுக்களையும், அதற்கெதிரான தீர்க்கதரிசனங்கொண்ட கருத்துக்களையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். DR.N._M._Perera.jpg குறிப்பாக கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் தீர்க்கதரிசனம் மிக்கவையாக அமைந்தன. அதுபோல பேரினவாத அரசியலின் அபத்த முகத்தையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். ஜூன் 14, 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அன்றைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிலிப் குணவர்த்தன (இன்றைய அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவின் தந்தையார்) ‘இந்தச் (தனிச் சிங்கள) சட்டத்தினூடாக எமது தேசியப் போராட்டத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடைவை எய்துகிறோம். சிங்கள மொழியை அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு அது இருந்த நிலைக்கு மீட்டு வருதலானது இந்தத் தீவின் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொன்றாகும்’ என்று பேசினார். அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பதாக, இந்தத் தீவு ஒரு நாடாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அதுபோலவே அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு இலங்கையில் சிங்களம் மட்டும்தான் பேசப்பட்டதா? இலங்கை ஒருநாடாகவே இல்லாத பொழுதில் ஒரு தேசமாக எவ்வாறு இருந்திருக்க முடியும்? வரலாற்றில் கண்டி இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவும், றுகுணு இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவுமே இருக்கின்ற போது, சிங்கள தேசம் கூட அந்நியர் ஆட்சிக்கு முன்பு ஒரு தேசமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன்களை மறந்து, பேரினவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு சட்டத்தை சுதேசியத்தின் பெயரால் நியாயப்படுத்துதல் என்பது எவ்வளவு அபத்தமானது. சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்பது பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட எண்ணக்கரு என்று சொல்லிவிட முடியாது. இலங்கையில் ‘சுயபாஷா’ பற்றி 1932களிலிருந்து முன்மொழிவுகள், வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சிங்கம், தமிழ் எனும் இரு சுதேசியர் பேசும் மொழிகளையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆக்குதல் பற்றியே பேசின. சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943, ஜூன் 22ஆம் திகதி அரச சபையில் (டொனமூர் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை அரச சபை என அழைக்கப்பட்டது) முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்பிரேரணை, 1944ஆம் ஆண்டு மே 24இல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது பேச்சில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட வேண்டும் எனச்சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: ‘தமிழ் மொழியையும் இணைத்துக்கொள்வதற்கான எனது விருப்பம் பற்றி விளக்க விரும்புகிறேன். தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அத்தோடு தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும்’. சிங்கள-தமிழ் தேசிய சமத்துவ நிலையிலிருந்து தமிழ், தமிழ் பேசும் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் எண்ணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்டோர் பேசும் மொழியாக சிங்களம் இருப்பதால், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் எனப் பேசிய அவர், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ்மொழியும், சிங்களமொழியுடன் சம அந்தஸ்தில் இணைக்கப்பட வேண்டும்’ என்றார். அன்று இந்த இருமொழி நிலைப்பாட்டை (அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த) பண்டாரநாயக்க ஏற்றுக் கொண்டார். சிங்கள மொழி மட்டும் எனத் தொடங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விவாதத்தின் இறுதியில் இருமொழி என்ற நிலைப்பாட்டை எட்டியிருந்தார். இது நடந்து ஏற்தாழ 12 ஆண்டுகளின் பின் தனது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான பண்டாரநாயக்க ‘தனிச் சிங்கள’ சட்டத்தைக் கொண்டு வந்தார். பண்டாரநாயக்கவின் ஆதரவாளரும் தீவிர சிய்கத் தேசியவாதியுமான மெத்தானந்த ‘ஐதரசன் குண்டுகளால் கூட தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியாது’ என்று கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தை 1956இல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்தது. ஒன்றுக்கொன்று வைரிகளான இரு பெரும் தேசியக் கட்சிகளும் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தன. தமிழ்க் கட்சிகளும் (இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), இடதுசாரிக் கட்சிகளுமே ‘தனிச் சிங்களச்’ சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெஸ்லி குணவர்த்தன, ‘திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது’ என்று 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரபல சட்டத்தரணியும், வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார். ‘சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்’ என கொல்வின் ஆர்.டி. சில்வா தீர்க்க தரிசனத்துடன் பேசினார். மற்றுமொரு பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி என்.எம்.பெரேராவும் ‘தனிச்சிங்கள’ சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ‘பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது. இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை. அந்த முடிவானது சிங்கள ‘கொவிகம’ தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம் ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நீங்கள் சிறுபான்மையினர் பிரச்சினையை, எமது தோழர்களைக் கொல்வதனூடாக, தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது’ என்று உணர்ச்சி பொங்க கலாநிதி என்.எம். பெரேரா பேசினார். எத்தனை தூரநோக்குடைய கருத்துக்கள். ஆனால், இவையெல்லாம் பண்டாரநாயக்கவையோ, அவருக்கு ஆதரவளித்த ஐ.தே.க-வின் நிலைப்பாட்டையோ மாற்றவில்லை. விரக்தியின் உச்சத்தில் நாடாளுமன்ற உறுப்பின் சி.சுந்தரலிங்கம், பிரதமர் பண்டாரநாயக்கவை நோக்கி இப்படிப் பேசினார்: ‘பிரதமர் அவர்களே எனது வேலை இனி இங்கில்லை, வெளியில்தான் இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிரான, அநீதிக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுப்பது என நான் எண்ணுகிறேன். நீங்கள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்புகிறீர்கள். பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கொன்றை உறுதியளிக்கிறேன், இறைவன் அருளால் நீங்கள் பிரிவடைந்த இலங்கையைப் பெறுவீர்கள்’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். ‘தனிச் சிங்களச்’ சட்டம் பற்றிப் பேசும் போது, ‘ஏற்கெனவே இது இனக் கலவரத்தை உருவாக்கிவிட்டது. இன்றிலிருந்து பத்துவருடங்களில் இது இன்னும் பல மடங்கு அதிகமாகும். இந்தச் சட்டமூலம் நாட்டைப் பிரிப்பதை நோக்கியே நகர்கிறது. இதன் கீழ் உருவாகும் ஒவ்வொரு உத்தரவும் இன்னும் பிரிவினையைத் தூண்டும்’ என கம்யுனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமன் கூறினார். என்.எம்.பெரேரா, ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்களின் கணிப்பின் படி கலவரங்களும் அமைதியின்மையும் உருவானது. இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகத் திகழும் ‘தனிச் சிங்கள’ சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழரது எதிர்ப்பரசியல் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரக வடிவமெடுத்தது. அது பலன் தந்ததா? ( தொடரும்…) http://ilakkiyainfo.com/தனிச்-சிங்களச்-சட்டமூலம/ Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 29, 2015 தொடங்கியவர் Share Posted October 29, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-4) 07-09-2015 09:46 AM Comments - 0 Views - 138 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது. 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 'சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்' அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம். சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது. இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனைச் சுற்றி இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை நாம் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானதாகும். சுயநல, பேரினவாத அரசியல் பேச்சுக்களையும், அதற்கெதிரான தீர்க்கதரிசனங்கொண்ட கருத்துக்களையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். குறிப்பாக கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் தீர்க்கதரிசனம் மிக்கவையாக அமைந்தன. அதுபோல பேரினவாத அரசியலின் அபத்த முகத்தையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். ஜூன் 14, 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அன்றைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிலிப் குணவர்த்தன (இன்றைய அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவின் தந்தையார்) 'இந்தச் (தனிச் சிங்கள) சட்டத்தினூடாக எமது தேசியப் போராட்டத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடைவை எய்துகிறோம். சிங்கள மொழியை அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு அது இருந்த நிலைக்கு மீட்டு வருதலானது இந்தத் தீவின் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொன்றாகும்' என்று பேசினார். அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பதாக, இந்தத் தீவு ஒரு நாடாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அதுபோலவே அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு இலங்கையில் சிங்களம் மட்டும்தான் பேசப்பட்டதா? இலங்கை ஒருநாடாகவே இல்லாத பொழுதில் ஒரு தேசமாக எவ்வாறு இருந்திருக்க முடியும்? வரலாற்றில் கண்டி இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவும், றுகுணு இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவுமே இருக்கின்ற போது, சிங்கள தேசம் கூட அந்நியர் ஆட்சிக்கு முன்பு ஒரு தேசமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன்களை மறந்து, பேரினவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு சட்டத்தை சுதேசியத்தின் பெயரால் நியாயப்படுத்துதல் என்பது எவ்வளவு அபத்தமானது. சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்பது பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட எண்ணக்கரு என்று சொல்லிவிட முடியாது. இலங்கையில் 'சுயபாஷா' பற்றி 1932களிலிருந்து முன்மொழிவுகள், வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சிங்கம், தமிழ் எனும் இரு சுதேசியர் பேசும் மொழிகளையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆக்குதல் பற்றியே பேசின. சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943, ஜூன் 22ஆம் திகதி அரச சபையில் (டொனமூர் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை அரச சபை என அழைக்கப்பட்டது) முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்பிரேரணை, 1944ஆம் ஆண்டு மே 24இல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது பேச்சில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட வேண்டும் எனச்சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: 'தமிழ் மொழியையும் இணைத்துக்கொள்வதற்கான எனது விருப்பம் பற்றி விளக்க விரும்புகிறேன். தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அத்தோடு தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும்'. சிங்கள-தமிழ் தேசிய சமத்துவ நிலையிலிருந்து தமிழ், தமிழ் பேசும் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் எண்ணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்டோர் பேசும் மொழியாக சிங்களம் இருப்பதால், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் எனப் பேசிய அவர், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ்மொழியும், சிங்களமொழியுடன் சம அந்தஸ்தில் இணைக்கப்பட வேண்டும்' என்றார். அன்று இந்த இருமொழி நிலைப்பாட்டை (அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த) பண்டாரநாயக்க ஏற்றுக் கொண்டார். சிங்கள மொழி மட்டும் எனத் தொடங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விவாதத்தின் இறுதியில் இருமொழி என்ற நிலைப்பாட்டை எட்டியிருந்தார். இது நடந்து ஏற்தாழ 12 ஆண்டுகளின் பின் தனது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்தார். பண்டாரநாயக்கவின் ஆதரவாளரும் தீவிர சிய்கத் தேசியவாதியுமான மெத்தானந்த 'ஐதரசன் குண்டுகளால் கூட தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியாது' என்று கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தை 1956இல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்தது. ஒன்றுக்கொன்று வைரிகளான இரு பெரும் தேசியக் கட்சிகளும் 'தனிச் சிங்கள' சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தன. தமிழ்க் கட்சிகளும் (இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), இடதுசாரிக் கட்சிகளுமே 'தனிச் சிங்களச்' சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெஸ்லி குணவர்த்தன, 'திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரபல சட்டத்தரணியும், வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, 'உங்களுக்கு இருமொழிகள் - ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி - இரு நாடு வேண்டுமா' என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார். 'சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்' என கொல்வின் ஆர்.டி. சில்வா தீர்க்க தரிசனத்துடன் பேசினார். மற்றுமொரு பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி என்.எம்.பெரேராவும் 'தனிச்சிங்கள' சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 'பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது. இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை. அந்த முடிவானது சிங்கள 'கொவிகம' தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம் ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நீங்கள் சிறுபான்மையினர் பிரச்சினையை, எமது தோழர்களைக் கொல்வதனூடாக, தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது' என்று உணர்ச்சி பொங்க கலாநிதி என்.எம். பெரேரா பேசினார். எத்தனை தூரநோக்குடைய கருத்துக்கள். ஆனால், இவையெல்லாம் பண்டாரநாயக்கவையோ, அவருக்கு ஆதரவளித்த ஐ.தே.க-வின் நிலைப்பாட்டையோ மாற்றவில்லை. விரக்தியின் உச்சத்தில் நாடாளுமன்ற உறுப்பின் சி.சுந்தரலிங்கம், பிரதமர் பண்டாரநாயக்கவை நோக்கி இப்படிப் பேசினார்: 'பிரதமர் அவர்களே எனது வேலை இனி இங்கில்லை, வெளியில்தான் இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிரான, அநீதிக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுப்பது என நான் எண்ணுகிறேன். நீங்கள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்புகிறீர்கள். பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கொன்றை உறுதியளிக்கிறேன், இறைவன் அருளால் நீங்கள் பிரிவடைந்த இலங்கையைப் பெறுவீர்கள்' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். 'தனிச் சிங்களச்' சட்டம் பற்றிப் பேசும் போது, 'ஏற்கெனவே இது இனக் கலவரத்தை உருவாக்கிவிட்டது. இன்றிலிருந்து பத்துவருடங்களில் இது இன்னும் பல மடங்கு அதிகமாகும். இந்தச் சட்டமூலம் நாட்டைப் பிரிப்பதை நோக்கியே நகர்கிறது. இதன் கீழ் உருவாகும் ஒவ்வொரு உத்தரவும் இன்னும் பிரிவினையைத் தூண்டும்' என கம்யுனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமன் கூறினார். என்.எம்.பெரேரா, ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்களின் கணிப்பின் படி கலவரங்களும் அமைதியின்மையும் உருவானது. இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகத் திகழும் 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழரது எதிர்ப்பரசியல் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரக வடிவமெடுத்தது. அது பலன் தந்ததா? ( தொடரும்...) - See more at: http://www.tamilmirror.lk/153528#sthash.YTNJfVmx.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 30, 2015 தொடங்கியவர் Share Posted October 30, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-5) 14-09-2015 10:18 AM Comments - 0 Views - 192 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கை வரலாற்றில் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. 'தனிச் சிங்கள' சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி ஆக்கியதன் ஊடாக, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டமையானது, சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது. அரச ஆவணங்கள் முதல் அரச இயந்திரத்தினது சகல பகுதிகளும் சிங்களத்தை மட்டும் கொண்டிருக்கக்கூடிய நிலை ஏற்பட்டதால் சிங்களம் அறியாத சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிப்படையும் நிலை உருவானது. 'தனிச் சிங்கள' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளில், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக (பழைய நாடாளுமன்ற கட்டடம் - இன்றைய ஜனாதிபதி செயலகம்), காலி முகத்திடலில், 'தனிச் சிங்கள' சட்டமூலத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராட்டமொன்றை நடத்தினர். இந்தியாவின் தந்தை எனக் கருதப்படும் மகாத்மா காந்தியின் பாதையில், அதன் தாக்கத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் ஏறத்தாழ 300 அளவிலான தமிழரசுக் கட்சியினர் (நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) காலி முகத்திடலில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமைதி வழியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை ரௌடிகளும் காடையர்களும் தாக்கத் தொடங்கினர். சுற்றிவர பொலிஸ் காவலுக்கு நின்றபோதும், பொலிஸார் ரௌடிகளையும் காடையர்களையும் தடுக்கவில்லை. அமைதி வழியில் சத்தியாக்கிரகம் இருந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். சிலர் நாடாளுமன்றக் கட்டடமருகே உள்ள 'பேர' வாவியில் காடையர்களால் தூக்கி எறியப்பட்டார்கள். சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 'தமிழ்த் தேசத்தின் எழுச்சியும் விழுச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் வி.நவரட்ணம் அன்று காலிமுகத்திடலில் நடந்த சம்பவமொன்றை இவ்வாறு பதிவு செய்கிறார்: 'தலைவர்களும் தொண்டர்களும் ஹொட்டேல் முடிவிலே (கோல்‡பேஸ் ஹொட்டேல் முன்பதாக) ஒன்று கூடியபோது, அங்கு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள் அவர்களை நரிக்கூட்டமொன்று பாய்ந்தாற் போல, மனிதாபிமானமற்ற கோழைத்தனமான முறையில் தாக்கினார்கள். சத்தியாக்கிரகிகள் நிலத்திலே தூக்கி வீசப்பட்டார்கள். சத்தியாக்கிரகிகள் வைத்திருந்த பதாதைகள் கைப்பற்றப்பட்டு, அதில் இணைக்கப்பட்டிருந்த மரக் கோல்கள் - சத்தியாக்கிரகிகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டன. சிலர் கீழே போட்டு நசுக்கப்பட்டார்கள், சிலர் அடித்து, உதைக்கப்பட்டார்கள், சிலர் மீது எச்சில் உமிழப்பட்டது. டொக்டர் நாகநாதனைத் தவிர வேறு எந்தவொரு சத்தியாக்கிரகியும் தம்மைத் தாக்கிய காடையர்களை எதிர்த்து வன்முறையைப் பிரயோகிக்க கையைத்தானும் தூக்கவில்லை. ஐந்து காடையர்கள் வரை டொக்டர் நாகநாதனை காலிமுகத்திடலின் எல்லை வரை துரத்தினார்கள். சத்தியாக்கிரகமோ, இல்லையோ, இயல்பிலேயே தன் ஆண்மை சவாலுக்குட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாதவர் அவர், அந்த ஐவரையும் தனது கரங்களையும் கால்களையும் பயன்படுத்தியே தாக்கினார். சத்தியாக்கிரகிகள் நாடாளுமன்றப் பக்கத்திலே பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே உட்கார்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். சத்தியாக்கிரகிகளோடு இணைந்து சட்டத்தரணி பரணவிதான மற்றும் பிதா. சேவியர் தனி நாயகம் அடிகளார் ஆகியோரும் சத்தியாக்கிரகத்தில் அமர்ந்து கொண்டனர்'. அஹிம்சை வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் இவ்வாறாக இம்சைப் படுத்தப்பட்டார்கள். எஸ்.பொன்னையா தன்னுடைய 'சத்தியாக்கிரகமும் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமும் (ஆங்கிலம்)' என்ற நூலிலே பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்துக்கு தனது வாகனத்தில் வருகை தந்த போது, அவர் காலிமுகத்திடல் பகுதியைக் கடக்கும் போது, ஒரு பொலிஸ் அதிகாரி அவரை அணுகி, இங்கு பல காடையர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சத்தியாக்கிரகிகளைத் தாக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனைத் தடுக்க, காடையர்களைக் கட்டுப்படுத்த தாம் ஏதும் நடவடிக்கை எடுப்பதா? என வினவியபோது, பண்டாரநாயக்க 'அதன் சுவையை அவர்கள் உணரட்டும்' என்று கூறிச் சென்றதாக பதிவு செய்கிறார். இந்தச் சம்பவம் உண்மையோ, இல்லையோ, இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு. அந்தக் கடமையிலிருந்து அரசாங்க இயந்திரம் தவறியதானது மாபெரும் வரலாற்றுத்தவறாகும். இந்த வன்முறைகள் இதனோடு நிற்கவில்லை. சுதந்திர இலங்கை அரசியலில் இரத்தக்கறை படிந்த வரலாறு எழுதப்படத் தயாரானது. காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை கொஞ்சம், கொஞ்சமாக மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. கொழும்பு வீதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் பாதுகாப்புக்காக வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது. காடையர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. தமிழர்களை எப்படியாவது 'தனிச் சிங்கள' சட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக பிக்குகளும் சிங்களப் பேரினவாதிகளும் சேர்ந்து இந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக 'இலங்கை: தேசிய முரண்பாடும் தமிழர் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)' என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். இப்படியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, அம்பாறை மற்றும் கல்-ஓயாவில் தனது கோர முகத்தை வெளிக்காட்டியது. கல்-ஓயா குடியேற்றத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரம் சிங்கள மக்கள், குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களைச் சூழ டியமர்த்தப்பட்டிருந்தனர். இங்கு நடந்த வன்முறையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர். இனவாதத்தின் கோரமுகம் 150 உயிர்களைப் பலிவாங்கியது. ஆனால், இது இனவெறித்தாக்குதலின் தொடக்கம் மட்டும்தான். தனிச்சிங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு புறம், அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் மறுபுறம். தமிழர்களின் பெரும்பான்மைப் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமானதொரு முடிவெடுக்க வேண்டிய நிலையில், ஓகஸ்ட் 19, 1956இல் திருகோணமலையில் கட்சி மாநாட்டைக் கூட்டியது. தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எனச் சொல்லப்பட்டாலும், ஆங்கிலத்தில் '‡பெடரல் பார்ட்டி' (சமஷ்டிக் கட்சி) என்றே அது பிரபலமாக அறியப்பட்டது. அந்த 'சமஷ்டி'க்கு தனது திருகோணமலை மாநாட்டில் உயிர்கொடுத்தது 'சமஷ்டிக் கட்சி' (இலங்கைத் தமிழரசுக் கட்சி). திருகோணமலை மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. 01. சமஷ்டி அடிப்படையிலான ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுதனூடாக தமிழ்ப் பிராந்தியங்கள் தன்னாட்சி அதிகாரமுள்ளவையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். 02. தமிழ்மொழியை சிங்கள மொழிக்கு சமனான அந்தஸ்துக்கு மீளக்கொண்டு வருவதனூடாகத் தமிழ் மொழியையும் இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும். 03. நடைமுறையிலுள்ள குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இந்நாட்டின் வாழ்தலினூடாக இந்நாட்டை தமது சொந்த வாழ்விடமாகக் கொண்டுள்ள யாவருக்கு குடியுரிமை வழங்கப்படுதல். (பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான நிவாரணமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது) 04. பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நான்கு தீர்மானங்களும் ஓகஸ்ட் 20, 1957இற்கு முன்பு, அதாவது ஒரு வருடத்துக்குள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அஹிம்சை வழிப் போராட்டம் நடக்கும் என 'சமஷ்டிக் கட்சி' (இலங்கைத் தமிழரசுக் கட்சி) அறிவித்தது. இந்தச் சூழலில் 'தனிச் சிங்களச்' சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இனவாத சக்திகள் பண்டாரநாயக்கவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தன. ஒருவகையில் பார்த்தால் பண்டாரநாயக்க எதிர்பார்க்காத அழுத்தம் இது. இயல்பில் லிபரல் மற்றும் ஜனநாயகவாதியாகவே பண்டாரநாயக்க இருந்தார். இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டவர் பண்டாரநாயக்க. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 'இனவாதத்தை', 'இன-மைய அரசியலை' கையில் எடுத்தவர். இன்று அந்த 'இனவாதம்' அவரை விடுவதாக இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூட முதலில், தமிழ் மக்களுக்கு தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை, உத்தியோகபூர்வ காரியங்களைக் கூட தமிழிலும் ஆற்றக்கூடிய உரிமை ஆகியவை 'தனிச் சிங்கள' சட்டத்தின் உள்ளடக்கமாக வேண்டும் என்றே பேசினார். அவரைப் பொறுத்தவரையில் 'தனிச் சிங்களம்' என்ற 'லேபிள்' அவரது அரசியல் இருப்புக்கு அவசியமான அரசியல் மூலதனமாக இருந்தது. ஆனால், அவர் உருவாக்கியிருந்த, எழுச்சி பெறச் செய்திருந்த பேரினவாதம் அவரை விடுவதாக இல்லை. 'தனிச் சிங்களம்' என்பது தனியே சிங்களமாக இருக்கவேண்டும் என்ற பேரினவாதத்தின் அழுத்தம் பண்டாரநாயக்கவை இறுக்கியது. இதேவேளை சமஷ்டித் தீர்வு வேண்டியும், தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டியும் தமிழ்த் தரப்பு பண்டாரநாயக்க மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது. இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத்தயாரான நிலையில், பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வந்தார். 1957, ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் 'தமிழ்மொழியின் நியாயமான பாவனை' பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைத்தார். 01. தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே கல்வி (உயர் கல்வி உட்பட) பெறும் உரிமை. 02. பொதுச்சேவை நுழைவுத் தேர்வை தமிழில் எழுதும் உரிமை. தேர்வாகும் பட்சத்தில், தற்காலிக சேவையாளராக உள்ளபோது ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் சிங்கள மொழி கற்றுத் தேற வேண்டும். 03. தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தோடு தமிழில் தொடர்பாடக்கூடிய உரிமை. தமிழில் பதில் பெறக்கூடிய உரிமை. 04. தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தமிழில் தொடர்பாடக்கூடிய வசதி. என்பவற்றைத் தனது பொதுவான முன்மொழிவுகளாப் பதிவு செய்தார் பண்டாரநாயக்க. 'சிங்களம் உத்தியோகபூர்வ மொழியானதால், இந்நாட்டின் சிங்களம் பேசாத மக்கள் பாதிக்கப்பட விட முடியாது. ஆதலால், அதனைச் சரிசெய்யவே இந்த முன்மொழிவுகள்' எனக் குறிப்பிட்ட அவர், 'இருதரப்பிலும் தீவிர எண்ணங்கொண்டவர்கள் உள்ளார்கள். ஆனால், தீவிர எண்ணங்களின் அடிப்படையில் நாம் முடிவெடுக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார். பண்டாரநாயக்கவின் இந்த (முன்னைய நிலையிருந்து) 'இறக்கம்', தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சாத்தியமான தீர்வுகளை எட்டக்கூடிய ஒரு சூழலைத் தோற்றுவித்தது. இதனைத் தொடர்ந்துதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று, இரு தரப்பு விட்டுக் கொடுப்புக்களின் பேரில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் உருவானது. - See more at: http://www.tamilmirror.lk/154104#sthash.96MK98T6.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted October 31, 2015 தொடங்கியவர் Share Posted October 31, 2015 (edited) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-6) இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத் தம்மைத் தயாராக்கிக்கொண்டமை என்பன பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வரக்காரணமானது. பெப்ரவரி 4, 1957இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி 'தனிச்சிங்கள' சட்டத்தை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது. இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஹர்த்தால் தினத்தில் வடக்குக்- கிழக்கு ஸ்தம்பித்துப் போனது. இதன் எதிரொலியாக சிங்களப் பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாரூற்றி அழிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை அதிகரித்தது. தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது. மட்டக்களப்பு, மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர்கள் சத்தியாக்கிரகிகளால் முற்றுகையிடப்பட்டார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதி தொழில் அமைச்சர் சிறிவர்த்தன, புகையிரத நிலையத்திலிருந்து வெளியேற முடியாதவாறு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான சத்தியாக்கிரகிகளினால் முற்றுகையிடப்பட்டார். வெளிறேமுடியாத அவர், அடுத்த 'யாழ் தேவியில்' கொழும்பு திரும்பினார். இவ்வாறு தொடர்ந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள்தான் 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 'தமிழ்மொழியின் நியாயமான பாவனை' பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைக்கக் காரணமானது. நாட்டில் இன முறுகல் நிலை உச்சத்தையடைவதை உணர்ந்த பண்டாரநாயக்க, இதைத் தொடரவிடுவது நல்லதல்ல என்பதை உணர்ந்த நிலையில் கொஞ்சம் 'விட்டுக்கொடுப்புக்கு' தயாரானார். இந்த 'விட்டுக் கொடுப்பு' அல்லது 'இறக்கம்', எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும் - சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான (பண்டா-செல்வா) பேச்சுவார்த்தைக்கு வழிகோலியது. முதலாவது பேச்சுவார்த்தை ஹொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்கவின் பாரம்பரிய வீட்டில் நடந்தது. இதில் செல்வநாயகம் தலைமையில் வி.ஏ.கந்தையா, என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், பண்டாரநாயக்க தலைமையில் அமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மற்றும் நவரண்டராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பு றொஸ்மீட் பிளேஸிலுள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதிப் பேச்சுவார்த்தை ஜூலை 26, 1957இல் நாடாளுமன்ற செனட் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகப் பிறந்ததே 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், அதன்போது இடம்பெற்ற சுவாரஸ்யங்கள் என இதுபற்றி எழுத நிறைய விடயங்கள் இருப்பினும், 'தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன' என்ற தேடலை நோக்கிய இந்தத் தொடருக்கு அவை மிகை என்பதால் அதனைத் தவிர்க்கிறேன். ஆனால், ஓரிரெண்டு சம்பவங்களைக் குறிப்பிடுவதானால், 'தனிச்சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு சிங்களத்தில் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. இதனை தேஜா குணவர்த்தன வழக்கில் சாட்சியமளித்தபோதே பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, 'சிங்களம் நிர்வாக மொழியாவது உடனடியாக நடக்காது, முதலில் நான் சிங்களம் படிக்க வேண்டும், நானோ மெதுவாகக் கற்றுக்கொள்பவன்' என்று பண்டாரநாயக்க சொல்லிச் சிரித்ததாக, டி.பி.எஸ்.ஜெயராஜ் தன்னுடைய பத்தியொன்றில் குறிப்பிடுகிறார். மேலும் பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது என்று அன்று இரவு இரு தலைவர்களும் ஊடகங்களின் முன் அறிவித்த போது, உண்மையில் ஒப்பந்தம் எழுத்து மூலத்தில் அமைந்து கைச்சாத்திட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. மறுநாளை காலையில் வி.நவரட்ணம் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மதியத்தின் பின்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. மூன்று மூலப் பிரதிகள் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் ஒரு மூலப்பிரதி பண்டாரநாயக்கவிடமும் இன்னொன்று செல்வநாயகத்திடமும் மற்றையது, அதை வரைந்த நவரட்ணம் அவர்களிடமும் இருந்தது. வி.நவரட்ணம் அவர்களிடமிருந்த பிரதி, பின்னாட்களில் இந்திய இராணுவத்தின் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எ‡ப் போராளிகளால் அழிக்கப்பட்டதாக வி.நவரட்ணம் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தனது பத்தியொன்றில் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' உள்ளடக்கத்தை நாம் அலசுதல் அவசியமாகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்களிடையே இடம்பெற்ற முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பது மட்டுமல்லாது, தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கும், அதை எதிர்த்து சமஷ்டி ஆட்சி வேண்டிய செல்வநாயகத்துக்குமிடையில் இணக்கப்பாடு எந்தப் புள்ளியில் இடம்பெற்றது என்பதையே நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதை இணக்கப்பாடு என்று சொல்வதை விட 'சமரசம்' என்று சொல்வது தான் சாலப்பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இதனை ஓர் 'இடைக்காலச் சமரசமாகவே' பார்த்தது. 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' முக்கிய அம்சம் 'பிராந்திய சபைகள்'. ஏற்கெனவே பண்டாரநாயக்க அரசு நாடு முழுவதிலும் பிராந்திய சபைகளைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூல வரைபுகளைத் தயார் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரு பிராந்திய சபைகளும் வழங்க இணக்கப்பாடு ஏற்பட்டது. வடக்கு-கிழக்கை ஒரு பிராந்தியமாகக் கொள்ள விரும்பிய தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திதரக்கூடியதொன்றாக இருக்கவில்லையெனினும் அதனை செல்வநாயகம் ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தினூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் இப் பிராந்திய சபைகள் அமையும் எனவும் அவை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் மீன்பிடி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள், மின்சாரம், நீரமைப்பு மற்றும் வீதிகள் ஆகியன தொடர்பான அதிகாரங்களைக் கொண்டமைந்திருக்கும் எனவும் இணங்கப்பட்டது. பிராந்திய சபைகளுக்கான நிதி - மத்திய அரசிலிருந்து வரும் எனவும், அத்துடன் வரி வருவாய் மூலமும் இருக்கும் எனவும் இணங்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திகரமான ஒரு தீர்வல்ல. ஆனால், விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதனை ஏற்றுக்கொண்டது. இதைத் தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சி வைத்த முக்கிய கோரிக்கை 'தனிச் சிங்களச் சட்டம்' நீக்கப்பட்டு, தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது. ஆனால், 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி 'தனிச்சிங்களச் சட்டத்தை' நீக்க பண்டாரநாயக்க மறுத்துவிட்டார். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை அவர் 'தனிச்சிங்களச் சட்டத்தை' பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயமாகக் கருதினார். 'தனிச்சிங்களச் சட்டம்' இருக்கும் வரை தன்னுடைய ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் நம்பினார். 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்படி' தேசிய சிறுபான்மையின் மொழியாக தமிழ் அங்கிகரிக்கப்படும் எனவும், 'தனிச் சிங்களச் சட்டத்துக்கு' இடையூறு ஏற்படாத வகையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் எனவும், பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தில் முன்பு முன்வைத்த நான்கு முக்கிய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது. தமிழுக்கு சம-அந்தஸ்து கேட்ட தமிழரசுக் கட்சிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' என்பதுதான் கிடைத்தது. விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதுவும் ஏற்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இணங்கப்பட்டது. உண்மையில் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இங்கு தமிழரசுக் கட்சியினால் 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற அளவை விட இன்னும் அதிகமாக முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், தமிழரசுக் கட்சி அதனைச் செய்யத் தவறிவிட்டது. இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில் தாம் திட்டமிட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிட தமிழரசுக் கட்சி இணங்கியது. 'பண்டா-செல்வா ஒப்பந்தம்' ஒரு சமரசங்களின் தொகுப்பு. உண்மையில் இங்கு அதிகம் விட்டுக்கொடுத்தது என்னவோ தமிழ்த் தரப்புதான். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை பிராந்திய சபைகள் என்பது, அவர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒன்று, அது தமிழருக்கான தனித்துவமான தீர்வு கிடையாது. மேலும், 'தனிச்சிங்களச் சட்டத்திலும்' மாற்றமில்லை, தமிழ் மொழிக்கும் சம-அந்தஸ்து இல்லை, சமஷ்டி முறையில் தீர்வு இல்லை, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுமில்லை. ஆகவே பண்டாரநாயக்க இந்த சமரசத்தை ஒரு வெற்றியாகப் பார்த்தார். இன்னொரு பார்வையில் தமிழ்த் தரப்புக்கும் இது கொஞ்சம் முன்னேற்றகரமான விளைவுகளைத் தந்தது. 'தனிச் சிங்களச் சட்டத்தின்' பின் எந்த அங்கிகாரமுமின்றி இருந்த தமிழ் மொழிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' அந்தஸ்து, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழி, பிராந்திய சபையூடாக அதிகாரப் பகிர்வு என தாம் விரும்பிய சமஷ்டி கிடைக்காவிடினும், முன்னிருந்த நிலையிலும் ஓர் அடியேனும் முன்னேற்றகரமானதொரு தீர்வு கிடைத்தது, அதுவும் இனவாத அரசியல் தலையெடுத்துள்ள பொழுதில் இது கிடைக்கப்பெற்றது சாதகமான ஒன்றே என்று தமிழ்த் தரப்பு சிந்தித்தது. இந்த ஒப்பந்தத்தை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். சி.சுந்தரலிங்கம் அவர்கள், சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'சுதந்திரத் தமிழ் இலங்கையொன்றுதான் ஏற்புடைய தீர்வு' என்று கூறினார். உண்மையில் 'பண்டா-செல்வா ஒப்பந்தம்' செல்வநாயகத்துக்கோ, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ திருப்தியைத் தந்திருக்கவில்லை, இதனை வி.நவரட்ணம் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இது இவ்வாறாக இருக்க பண்டாரநாயக்கவின் தரப்பில் அவர் ஒன்று நினைத்திருக்க, வேறு ஒன்று நடந்தது. 'தனிச் சிங்களச் சட்டம்' தந்த 'வீரன்' என்பதால் தான் எது செய்தாலும் பேரினவாதம் அதனை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு டட்லி சேனநாயக்க தலைவராக இருந்தார். ஆனால், கட்சிக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஜே.ஆர். ஒரு நிபுணர். அரசியல் களநிலைவரங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் அவர் ஒரு சாணக்கியன். பேரினவாத சக்திகளை 1956ஆம் ஆண்டு தேர்தலில் விழுந்திருந்த தன்னையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் மீண்டும் எழுச்சிபெறச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பார்த்தார். ஜே.ஆர். பிக்குகள் முன்னணியும் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதை எதிர்த்தது. இது தான் சமயம் என்பதை உணர்ந்த ஜே.ஆர். கொழும்பிலிருந்து - கண்டிக்கு எதிர்ப்பு நடைபயணம் ஒன்றைத் திட்டமிட்டார் தொடரும்... - See more at: http://www.tamilmirror.lk/154655#sthash.cX2JGD4K.dpuf Edited October 31, 2015 by நவீனன் Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 1, 2015 தொடங்கியவர் Share Posted November 1, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-7) 28-09-2015 01:23 PM Comments - 0 Views - 201 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மரணத்துக்குப்பின் சேர்.ஜோன் கொத்தலாவலதான் பிரதமராவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், அன்றைய ஆளுநர் சோல்பரி பிரபு டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்கவை பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகினார் டட்லி சேனநாயக்க, அத்தோடு அரசியலிலிருந்தும் விலகினார். அதைத் தொடர்ந்து டட்லி சேனநாயக்கவின் உறவினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான சேர். ஜோன் கொத்தலாவல பிரதமரானார். ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 1957இல் டட்லி சேனநாயக்க மீண்டும் அரசியலினுள் பிரவேசித்தார். இவ்வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினுள் இன்னொரு செல்வாக்கு மிக்க தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருந்தார். இந்தத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீள ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவர சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குறிப்பாக 1956ஆம் ஆண்டு தேர்தலில் களனித் தொகுதியில் ஆர்.ஜி.சேனாநாயக்கவினால் தோற்கடிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மீண்டும் அரசியல் எழுச்சிக்கான வாய்ப்பொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தச் சூழலில்தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் உருவாகியிருந்தது. அத்தோடு சிங்களப் பேரினவாத சக்திகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பும் உருவாகியிருந்தது. பிக்குகள் முன்னணி 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. பண்டாரநாயக்க எழுச்சிபெறச் செய்த பேரினவாதம், பண்டாரநாயக்கவுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவதை தமக்கு உகந்த சந்தர்ப்பமாக மாற்ற நினைத்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. 'கலரி பொலிடிக்ஸ்' என்று சொல்லப்படும் ஜனரஞ்சக அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜே.ஆர். இந்தச் சூழலில் ஒரு நடைப் பயணத்தை நடத்தத் திட்டமிட்டார். முதலில் கொழும்பிலிருந்து, அநுராதபுரம் வரை நடைப்பயணம் செல்வது எனவும், அநுராதபுரத்தை அடைந்ததும் அங்கு போதி மரத்தின் முன்பாக, அதனைச் சாட்சியாக வைத்து நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என எல்லோரும் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் திட்டமிட்டார். ஆனால், கொழும்பு- அநுராதபுரம் என்பது தூரம் அதிகமானதாகவும், அதிலும் மக்கள் பெருமளவு வசிக்காத காட்டுப்பகுதி அதிகமாகவும் இருப்பதும் சிக்கலானதாகவும், பயன்குறைவானதாகவும் இருந்தது. அதனால் கொழும்பிலிருந்து- கண்டி வரை நடை பயணம் செய்வது எனவும், தலதா மாளிகை புனித தந்ததாது முன்பு 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் படி நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை எனச் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு, ஒக்டோபர் 8ஆம் திகதி பௌர்ணமி (போயா) தினத்தன்று கண்டியை அடைந்து அங்கு கூட்டம் நடத்துவதே திட்டம். அதன்படி கொழும்பிலிருந்து பெரும் பேரணியாக நடைபயணம் புறப்பட்டது. பண்டாரநாயக்கவும், அவரது அரசாங்கமும் இந்த அரசியல் விளையாட்டின் சூத்திரத்தை அறிந்திருந்தார்கள். இந்த பயணம் வெற்றியளித்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமாக்குவதனூடாகத் தமது அரசாங்கத்தைப் பலமிழக்கச்செய்யும், ஆதலால் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். அரசாங்கத்தின் தேசியப் பத்திரிகைகள் இந்த நடைபயணத்தைக் கடுமையாக விமர்சித்தன. நடைபயணம் கொழும்பிலிருந்து புறப்பட்டநாளில் நடைபயணம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டது, நடைபவனி சென்றவர்கள் தாக்கப்பட்டார்கள். முதல்நாள் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் நடைபவனியில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இரண்டாம் நாள் நடைபயணம் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்லை வரைசென்று அங்கு இரவு தங்குவதாகத் திட்டம். அத்தனகல்லை பண்டாரநாயக்கவின் ஆதரவுப் பிரதேசம். அங்கு ஜே.ஆர். தங்க முடிவெடுத்ததை தனக்கெதிரான தனிப்பட்ட சவாலாக பண்டாரநாயக்க கருதினார். ஜே.ஆரின் பேரணியைக் காலையிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் உறவினரும், கம்பஹாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.பண்டாரநாயக்க வசம் ஒப்படைக்கப்பட்டது. காலையில் இம்புல்கொட சந்தியில் வைத்து பண்டாரநாயக்கவின் தலைமையில் வீதியின் நடுவே கூடியிருந்த பெருமளவிலான ஆதரவாளர்களினால் ஜே.ஆரின் அளவில் சிறுத்திருந்த நடைபவனி தடுத்து நிறுத்தப்பட்டது. பொலிஸாரும் நடைபவனியைத் தொடர்வது வன்முறையை ஏற்படுத்தும் என்பதால் அதனைக் கைவிடச் சொன்னார்கள். ஜே.ஆர். தான் மட்டும் தனியே செல்ல அனுமதி கேட்டார், அதுவும் மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஜே.ஆர். நடைபவனியைக் கைவிடுவதாக அறிவித்தார். ஆனால், 8ஆம் திகதி திட்டமிட்டபடி கண்டியில் கூட்டம் இடம்பெற்றது. அதில் டட்லியும், ஜே.ஆரும் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கண்டித்து உரையாற்றியிருந்தனர். ஜே.ஆரின் கண்டி நடைபயணம் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் நோக்கம் தோல்வியடையவில்லை. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்துக்கெதிரான அலை பெருக்கெடுத்தது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஏறத்தாழ 5 மாதங்களாகியும் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் எடுக்காது இருந்தமை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினரிடத்தே அதிருப்தியை அதிகரித்தது. இந்நிலையில் அதிகரித்துவரும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்தைச் சமாளிக்கவும், சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியாகவும் பண்டாரநாயக்க அரசாங்கம் 1957ஆம் ஆண்டு டிசெம்பரில் புதியதொரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது. அதுவரை மோட்டார் வாகனப் பதிவுகள் இரண்டு ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் கொண்டு இருந்தது. புதிய சட்டத்தினூடாக ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக சிங்கள எழுத்தான ස්රි (ஸ்ரீ)அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் ஒரு தேவையாக இருக்கவேயில்லை, இதனால் அடையப்பெறப்போகும் விளைபயனொன்றும் இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டம் கூட சிங்களம் மட்டும் பேசும் மக்களுக்கு சாதகமானதொன்றென்று கூறலாம், அதாவது ஆங்கிலம் அல்லாமல் சிங்களம் பயன்படுத்தப்படுவதானது, சிங்கள மக்கள் தங்கள் கருமங்களை ஆற்ற ஏதுவாக அமைந்தது, ஆனால் வாகனங்களில் சிங்கள 'ස්රි'யை அறிமுகப்படுத்துவதால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. வெறுமனே சிங்கள பேரினவாத சக்திகளுக்கு கிளுகிளுப்பூட்டுதற்கான ஓர் அடையாளபூர்வ உத்தியாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது தமிழ் மக்களை இன்னும் அலட்சியப்படுத்தி, அவர்களைச் சினங்கொள்ளச் செய்யும் நடவடிக்கையானது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள 'ස්රි'க்குப் பதிலாக 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் கொள்கைப்பிரகாரம் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்த சட்டத்தில் இடம்தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் பண்டாரநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்மொழிப் பாவனைக்கு இணங்கிய பண்டாரநாயக்க, அந்த இணக்கப்பாட்டுக்கு எதிராக தமிழ் 'ஸ்ரீ' யை அனுமதிக்காது, சிங்கள 'ස්රි'யைத் திணித்தமையானது தமிழரசுக்கட்சியையும், தமிழர்களையும் கடும் அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாக்கியது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஒப்பந்தத்துக்கு முரணான நடவடிக்கையொன்றை எடுத்தமை, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது தொடர்பில் கடும் ஐயப்பாட்டை தோற்றுவித்தது. இந்நிலையில், சிங்கள 'ස්රි' திணிப்பை எதிர்த்து அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாரானது. ஜனவரி 1, 1958 முதல் தமிழர்களுடைய வாகனங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது. பல இடங்களிலும் கூட்டங்கள் கூட்டி இந்தக் கருத்தைப் பரப்பியது. தமிழ் 'ஸ்ரீ'-யைப் பயன்படுத்துவதனூடாக சிங்கள 'ස්රි' திணிக்கப்படுவதை எதிர்ப்பதே தமிழரசுக் கட்சியின் நோக்கம். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வாகனங்களில் சிங்கள 'ස්රි'-க்குப் பதிலாக தமிழ் ';ஸ்ரீ'-யைப் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து '(சிங்கள)› எதிர்ப்பு' போராட்டம் வடக்கிலும், கிழக்கிலும் பரவலாகப் பரவியது. பஸ்களில் உள்ள சிங்கள 'ස්රි' அழிக்கப்பட்டு தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது. இதனைப் பற்றி எஸ்.சிவநாயகம் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'யாழ்ப்பாணத்துக்கு சிங்கள 'ස්රි' பொறிக்கப்பட்ட பேருந்துகளை அனுப்பியதனூடாக அரசாங்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இந்த அர்த்தமற்ற புதிய சட்டம் தமிழர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. '(சிங்கள) ස්රි'-க்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றது, அதன் ஒரு பகுதியாக அரசாங்க பஸ்களில் உள்ள சிங்கள 'ස්රි' அழிக்கப்பட்டு, தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது.' சா.ஜே.வே.செல்வநாயகம் நேரடியாக இரண்டு '(சிங்கள)›' எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ஒன்று 1958ஆம் ஆண்டு மார்ச்சில் யாழ்ப்பாணத்திலும், மற்றையது 1958ஆம் ஆண்டு ஏப்ரலில் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பில் பஸ்களில் சிங்கள 'ස්රි' எழுத்தை மாற்றியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட செல்வநாயகம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஒருவார காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மட்டக்களப்புச் சிறையில் ஒருவாரகாலம் சிறைவாசம் அனுபவித்துத் திரும்பினார் செல்வநாயகம். தமிழரசுக் கட்சியின் '(சிங்கள) ස්රි' எதிர்ப்புப் போராட்டம் ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மறுபுறத்தில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்படவேண்டும் என்ற அழுத்தம் சிங்களப் பேரினவாத சக்திகளினால் கடுமையாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் தன் பங்குக்கு இந்த அழுத்தத்தைக் கடுமையாகக் கொடுத்தது. இந்நிலையில் ஏப்ரல் 9, 1958 அன்று 100 பிக்குகள் மற்றும் 300 பேர் கொண்ட குழுவொன்றும் அமைச்சர் விமலா விஜயவர்த்தன தலைமையில் பிரதமர் பண்டாரநாயக்கவின் இல்லத்துக்கு முன் சென்று அமர்ந்து 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பண்டாரநாயக்க, தன்னுடைய கபினட் அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அத்துடன் அக்குழுவினரின் வேண்டுகோளின்படி, தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை இரத்துச்செய்வதாக பிரதமர் பண்டாரநாயக்க எழுத்துமூலம் அறிவித்தார். சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் தலைவர்களிடையே எட்டப்பட்ட முதலாவது உடன்படிக்கை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்குள்ளாகவே, நிறைவேற்றப்படாது கிழித்தெறியப்பட்டது. இங்கு கிழித்தெறியப்பட்டது வெறும் ஒப்பந்தம் மட்டுமல்ல, இலங்கையில் சிங்கள-தமிழ் மக்களிடையேனான இணக்கப்பாடு பற்றிய நம்பிக்கையும் கிழித்தெறியப்பட்டது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டதை 'இலங்கையின் இன உறவுகளின் வரலாற்றில் இது ஒரு கவலை பொருந்திய நாள்' என சௌமியமூர்த்தி தொண்டமான் வர்ணித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலரும் இதனைக் கடுமையாகக் கண்டித்தனர். செல்வநாயகம் தமிழரசுக் கட்சி இந்நிலையயை எதிர்கொள்ளத் தயார் என அறிவித்தார். தான் வளர்த்த பாம்பு தன்னைத் தீண்டியதுதான் பண்டாரநாயக்கவுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் பிரதேசங்களின் '(சிங்கள) ස්රි' எதிர்ப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றன. இதற்கு எதிராக பௌத்த பிக்குகள் அரசாங்கக் கட்டடிடங்களிலிருந்த பெயர்ப்பலகைகளிலிருந்த தமிழ் எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினார்கள். அத்தோடு தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வும், வெறுப்புணர்ச்சியும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆங்காங்கே தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் ஆரம்பமாயின. இந்தச் சம்பவங்கள் மாபெரும் கலவரமாக மாறி இனப்பிரச்சினையின் இன்னொரு கோரமுகத்தை '1958 கலவரமாக' வெளிக்காட்டியது. - See more at: http://www.tamilmirror.lk/155209#sthash.eInUNsLs.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 2, 2015 தொடங்கியவர் Share Posted November 2, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-8) 05-10-2015 09:59 AM Comments - 0 Views - 152 -என்.கே.அஷோக்பரன் சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த வேளையிலே, அதற்கு மறுதாக்கமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை, நாட்டில் ஆங்காங்கே தலை தூக்க ஆரம்பித்தது. தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அனுமதிக்க பண்டாரநாயக்க நினைத்த போதும், தீவிர சிங்களத் தலைமைகள் அதனைப் பலமாக எதிர்த்தன. 'முழு இலங்கையும் சிங்களவருக்கே', 'தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை சிங்களம் மட்டுமே' என்ற கோஷத்தை அவர்கள் முன்வைத்தனர். அதனை எதிர்த்து, தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அங்கிகரிக்கும் திராணி, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிடம் இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வி, சிங்கள 'ஸ்ரீ' அறிமுகம் என தமிழ் மக்களின் குறைந்த பட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல், தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகும் நிலையே காணப்பட்டது. இந்நிலையில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது மாநாட்டை வவுனியாவில் கூட்டியது. இந்த மாநாட்டில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்பட்டதனை எதிர்த்து, அஹிம்சை வழியில் நேரடிப் போராட்டத்தில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து வேலையிழந்த தமிழ்த் தொழிலாளர்களை பொலன்னறுவையில் குடியேற்றும் முயற்சிக்கு, பொலன்னறுவை சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்புக் காணப்பட்டது. இந்த எதிர்ப்பலையை தமக்குச் சாதகமாக்கிய சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள், தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து வவுனியா செல்லும் கட்சியினரைத் தாக்க இந்த மக்களைப் பயன்படுத்தின. 1958ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி பொலன்னறுவை ரயில் நிலையத்தினுள் அத்துமீறி உட்புகுந்த இந்த வன்முறைக் கும்பல், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதத்தை அடித்து நொறுக்கினர். அதிர்ஷ்டவசமாக, இந்த வன்முறைக் கும்பல் தாக்கவிருப்பது பற்றிய தகவல் முன்னமே கிடைத்துவிட்டதால், ஒரு பயணியைத் தவிர ஏனையோர் பொலன்னறுவைக்கு முன்பாக வெலிக்கந்தயிலேயே இறங்கிவிட்டனர். ஒரே ஒரு பயணியோடு வந்த ரயில்;, பொலன்னறுவையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. அதன் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த ஒரே ஒரு பயணியும் தாக்கப்பட்டார். 1958 மே 23ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு சென்ற ரயில் 215ஆவது மைல்கல்லுக்கருகே வைத்து தடம்புரளச் செய்யப்பட்டது. இதில் ஒரு பொலிஸ் சாஜனும், புகையிரதத் தொழிலாளியும் உயிரிழந்தனர். இன்னும் சிலர் படுகாயமடைந்தனர். வெறும் 47 பேர் மட்டுமே பயணம் செய்த அந்த ரயிலில் பெரும்பான்மையாகப் பயணித்தது சிங்களவர்களே. அந்த ரயிலைத் தடம்புரளச் செய்து தாக்கியவர்களது எண்ணம், வவுனியா செல்லும் தமிழ்ப் பயணிகளைத் தாக்குவதாகும், ஆனால், தவறான ரயிலை அவர்கள் தாக்கியிருந்தார்கள். 1958ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி, பொலன்னறுவை ரயில் நிலையத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியது. இதில் அங்கு அதிகளவில் நின்றிருந்த சிங்கள மக்களும் தாக்கப்பட்டனர், ரயில் நிலையத்துக்;கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பொலன்னறுவையில் கடுமையானளவில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே, திருகோணமலையிலிருந்து தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படும் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், அன்று எழுந்திருந்த அரசியல் சூழல் அதற்கு எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்தது. இந்த நிலையில், 1958ஆம் மே 25ஆம் திகதி, பொலன்னறுவையில் கூடிய ஏறத்தாழ 3,000 அளவிலான சிங்கள வன்முறையாளர்களால், தமிழ் மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பெண்கள், கர்ப்பிணிகள் என எந்தவிதப் பேதமின்றி, மனிதாபிமானமின்றி வெறித்தனமான தாக்குதலுக்கு பொலன்னறுவை வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுத்தனர். பொலன்னறுவையைப் பொறுத்தவரை அங்கு பொலிஸாரின் அளவு குறைவாகவே காணப்பட்டது. மூவாயிரம் அளவிலான வன்முறையாளர்களைச் சமாளிக்குமளவுக்கு அவர்களுக்கு ஆட்பலமிருக்கவில்லை. உடனடியாக மேலதிக படைகளைக் கேட்டும், அரசாங்கம் இந்த வன்முறைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதே 1958ஆம் ஆண்டு மே 25இல் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இத்தகையதொரு சம்பவத்தில் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயரான டி.ஏ.செனவிரட்ன, மட்டக்களப்பில் உயிரிழந்தார். டி.ஏ.செனவிரட்ன மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டமைதான் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் வெடிக்க காரணம் என பிரதமர் பண்டாரநாயக்க, மே 26ஆம் திகதி சொன்னார். ஆனால், டி.ஏ.செனவிரட்ன கொல்லப்பட்ட மே 25க்கு 3 நாட்களுக்கு முன்பதாக, மே 22 இலேயே வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பமாகிவிட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற இனவெறித் தாக்குதலுக்கு பிரதமர் பண்டாரநாயக்க காரணம் கற்பித்தாரே ஒழிய, அதனைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் அதுவரை எடுக்கவில்லை. இதைப் பற்றி தனது 'எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)' நூலில், 'சிலோன் ஒப்சேவர்' பத்திரிகையின் ஆசிரியராக அன்று இருந்த டாஸி விட்டாச்சி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்: 'செனவிரட்னவின் பெயரை மட்டும் பிரதமர் தனியே சுட்டிச் சொன்னமைக்குக் காரணமென்ன? கடந்த நாட்களில் பல மக்களும் உயிரிழந்துள்ளார்கள். செனவிரட்ன ஒரு செல்வந்தர் என்பதுதானா அவரது பெயரை மட்டும் இப்படியொரு முக்கியமான சூழலில் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம்?'. சா.ஜே.வே. செல்வநாயகமும், பிரதமர் பண்டாரநாயக்க, செனவிரட்னவின் மரணத்தை சுட்டிக்காட்டியதை கண்டித்தார். செனவிரட்னவின் மரணம் கலவரத்தால் வந்ததா, தனிப்பட்ட பகை காரணமாகக் கொல்லப்பட்டாரா என்பதைக் கண்டறியாது, அன்றைய சூழலில் பிரதமரானவர் செனவிரட்னவினது பெயரைப் பயன்படுத்தியமை மிகத் தவறானது என்று பின்பு நாடாளுமன்றில் பேசிய செல்வநாயகம் சுட்டிக்காட்டினார். 1958ஆம் ஆண்டு மே 25 - 26 அளவில், கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கூட வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. புறக்கோட்டை, மருதானை, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, தெஹிவளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் மீது வன்முறையாளர்கள் இனவெறித்தாக்குதலை நடத்தினர். தமிழ் மக்களின் வீடுகள், கடைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1958ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி காலையில் ஆர்.ஈ.ஜயதிலக தலைமையிலான பல்லினக் குழுவொன்று பிரதமர் பண்டாரநாயக்கவை அவரது ரொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் சந்தித்து உடனடியாக அவசரகால (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு பண்டாரநாயக்க 'நீங்கள் (சிறிய விடயத்தை) மிகைப்படுத்துகிறீர்கள். நிலைமை அவ்வளவுக்கு மோசமில்லை' எனப் பதிலளித்தார். பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு அவசரகாலப் பிரகடனம் செய்வதில் நிறையவே தயக்கம் இருந்தது. 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலின் போது அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க அவசரகாலப் பிரகடனம் செய்ததும், அதனைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் பிரபல்யமிழந்ததும், டட்லி சேனநாயக்க அதன் விளைவாகப் பதவி விலகியதும், அவசரகாலப் பிரகடனம் செய்வதில் பண்டாரநாயக்கவுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கும். அவசரகாலப் பிரகடனத்தை பண்டாரநாயக்க தோல்வியின் சாட்சியாகப் பார்த்தார் என்கிறார் அன்றைய 'சிலோன் ஒப்சேவர்' ஆசிரியர் டாஸி விட்டாச்சி. அதே 27ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்யுமாறு பிரதமர் பண்டாரநாயக்கவிடம் கோரியிருந்தார். ஆனால், பண்டாரநாயக்க எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே 1958ஆம் ஆண்டு மே 27இல் பாணந்துறையில் ஒரு வதந்தி பரவியது. பாணந்துறையிலிருந்து மட்டக்களப்புக்குக் கற்பிக்கச் சென்ற சிங்கள ஆசிரியை ஒருவர், அங்கு தமிழ் வன்முறைக் கும்பலால் மார்பகங்கள் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதன் விளைவாக பாணந்துறைப் பகுதியில் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. இந்த இனவெறிக்கும்பல் பாணந்துறையிலிருந்த இந்துக் கோவிலொன்றுக்குத் தீவைக்க முயற்சித்தது. அது தோல்வியடையவே, அங்கிருந்த கோவில் ஐயர் ஒருவரை உயிருடன் எரித்தார்கள். மட்டக்களப்பு ஆசிரியர் பற்றிய வதந்தி கல்வியமைச்சுக்கும் எட்டவே, அவர்கள் அதைப்பற்றி விசாரிக்க ஓர் அதிகாரியை அனுப்பிவைத்தனர். அவரது அறிக்கையில், அந்த வதந்தியில் இம்மியளவும் உண்மை இல்லை எனவும், பாணந்துறையிலிருந்து சென்று மட்டக்களப்பில் ஓர் ஆசிரியர் கற்பிப்பதாகப் பதிவுகளிலே இல்லை எனவும் தெரிவித்தார். இதைப் போல பல வதந்திகள் பரவின. துளியேனும் உண்மையில்லாத இந்த வதந்திகள் இனவெறியையும் வன்முறையையும் தோற்றுவித்தன. மட்டக்களப்பு, ஏறாவூரிலும் கடுமையான இனவெறித்தாக்குதல் இடம்பெற்றது. கொழும்பில் பரவலாகத் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களுடைய வீடுகள், கடைகள், வியாபாரஸ்தலங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன, தீயிட்டுக் கொழுத்தி எரிக்கப்பட்டன. 1958 கலவரத்தின் வன்முறைச் சம்பவங்கள் பற்றி விரிவாக பல நூல்கள் பதிவு செய்துள்ளன. இதில் டாஸி விட்டாச்சி எழுதிய 'எமர்ஜென்ஸி 1958 (ஆங்கிலம்)' முக்கியமானதொரு ஆவணம். இலங்கையின் முன்னணி பத்தரிகையான 'சிலோன் ஒப்சேவரின்' அன்றைய ஆசிரியரான டாஸி விட்டாச்சி 1958இன் துன்பியல் நிகழ்வுகளைக் காத்திரமாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழர்களை அடையாளங்காண முயற்சித்த விதம், பௌத்தரல்லாத சிங்களவர்களும் தாக்கப்பட்டமை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. ஏனென்றால், இவை இத்தோடு முடிந்துவிடவில்லை. இலங்கையின் இரத்தம் தோய்ந்த இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு கலவரத்திலும் இது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதைக் காணவிளையும் போது, இலங்கையில் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்ந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். சுதந்திர இலங்கை வரலாற்றில் 1956ஆம் ஆண்டு கல்ஓயா கலவரத்துக்;குப் பின்னர், தமிழ் மக்கள் மிகக்கொடூரமானதொரு இனவெறித் தாக்குதலை நாடுதழுவிய ரீதியில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சந்தித்திருந்தனர். தமிழ் மக்களது மொழியுரிமை பறிக்கப்பட்டது, அவர்கள் மீது சிங்கள மொழி திணிக்கப்பட்டது, சிங்கள 'ஸ்ரீ' அவர்களது வாகனங்களில் பொறிக்கப்பட்டது, இதை அஹிம்சை வழியில் தமிழ்த் தலைமைகள் எதிர்க்க விளைந்தபோது, தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பிரதமர் பண்டாரநாயக்கவிடம் நிச்சயம் இருந்தது. ஆனால், அதை அவர் செய்யவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை. 1958 மே 27 நண்பகலை நெருங்கும் வேளையில், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க, மரபினை மீறி, பிரதமர் பண்டாரநாயக்கவை, பிரதமரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார். மதியமளவில், பிரதமரின் சம்மதத்தோடு, ஆளுநர் சேர் ஒலிவர் குணத்திலக்க அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு தழுவிய ரீதியில் வன்முறையை அடக்க இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மொழிப் பிரச்சினை தொடர்பில் இருவேறு தீவிர எல்லைகளிலிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன. - See more at: http://www.tamilmirror.lk/155733#sthash.1DFIi0g8.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 3, 2015 தொடங்கியவர் Share Posted November 3, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 09) 12-10-2015 09:32 AM Comments - 0 Views - 73 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர். இராணுவமும், முப்படையும், பொலிஸும் அன்று ஒப்பீட்டளவில் நேர்மையாக, பக்கச்சார்பின்றி தம் கடமையைச் சரிவரச் செய்யும் அமைப்புக்களாக இருந்தன. பல்லினத்தவர்களும், முப்படையிலும், பொலிஸிலும் இருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கையின் புகழ்பெற்ற நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான பிரட்மன் வீரக்கோன், 'ரெண்டரிங் அன்டு ஸீஸர்' (ஆங்கிலம்) என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், இதுபோன்ற நிலை இதன் பின்னர் இடம்பெற்ற பல்வேறு கலவரங்களில் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன. இவ்விரு அமைப்புக்களையும் இந்தப் பிரச்சினையின் மூலகாரணமாக காட்டியே அரசாங்கம் இந்தக் கட்சிகளைத் தடைசெய்தது. அவசரகாலப் பிரகடனம் செய்த பின் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க பத்திரிகையாளர்களோடு உரையாடும் போது, 'இந்தக் இனக்கலவரம் தற்செயலாக எழுந்த ஒன்று அல்ல. இதன் பின்னால் மிகப்பெரிய சூத்திரதாரி இருக்கிறார். அவர் இதனைத் திட்டமிட்டு, தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்திருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். இந்தக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் யார் என்பது தொடர்பில் நிறைய வதந்திகள் அன்று உலவின். ஆளுங்கட்சிக்குள் இருந்த வலது சார்பான தரப்பு இதனை ரஷ்யாவின் வேலை என எண்ணியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியும் தடைசெய்யப்பட வேண்டும் என விரும்பியது. ஆளுங்கட்சியின் இடதுசாரி தரப்பு இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருப்பதாக எண்ணியது. அன்றைய காலகட்டத்தில் இடதுசாரிகளுக்கு அச்சமூட்டத்தக்க தலைவராக ஜே.ஆர். இருந்தார் என்று தனது 'எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)' நூலில் பதிவுசெய்கிறார் டாஸி விட்டாச்சி. இந்நிலையில், கொழும்பையும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் ஏறத்தாழ 10,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்றனர். வீடுகள் எரியூட்டப்பட்டு, தமிழர்களின் கடைகளும், வர்த்தக நிலையங்களும் சிதைக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு, மரணத்தின் விழும்பில் தப்பியொட்டி அநாதரவாய் நின்ற அம்மக்களை அரசாங்கம் தற்காலிக அகதிமுகாம்களில் வைத்திருந்ததுடன், ஒரு பகுதியினரை கொழும்பிலிருந்து கப்பலேற்றி பருத்தித்துறைக்கு அனுப்பிவைத்தது! கொழும்பில் அகதிகளான தமிழ் மக்களை யாழ்ப்பாணத்துக்;கு கப்பலேற்றி அனுப்பியதனூடாக தமிழர்களுடைய மண் அது என்பதை அரசாங்கம் சொல்லாமல் சொல்லியிருந்தது. காலங்காலமாக கொழும்பில் வசித்த தமிழர்கள்கூட அன்று அகதிகளாய் யாழ் மண்ணுக்கு கப்பலேற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். 1958 மே 22 தொடங்கிய கலவரம் அடுத்தடுத்த நாட்களில் உக்கிரமடைந்து, மே 27ஆம் திகதி நண்பகலுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட அவசரகாலப்பிரகடனத்தை தொடர்ந்து தணியத்தொடங்கியது. ஜூன் 3ஆம் திகதி, நிலைமைகளை ஆராயும் பொருட்டு நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் பண்டாரநாயக்க தலைமையில் கூடியது. 'கனவான்களே, நான் நிலைமையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன். இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்துவிடலாமென்ற தவறான நோக்கத்துடன் இருந்த குழுக்களெல்லாம் கடந்த இரண்டு வாரங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் உடைப்பதில் ஒன்றிணைந்தன. அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்துவதில் நாம் வெற்றிகண்டுவிட்டோம்' என அந்தக் கூட்டத்தில் பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார். சமஷ்டிக் கட்சியைத் (இலங்கை தமிழரசுக் கட்சி) தடைசெய்த போதிலும் அதன் தலைவர்கள் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை, எஸ்.டி.பண்டாரநாயக்க (கம்பஹா), பனி இலங்ககோன் (வெலிகம) ஆகிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரநாயக்கவிடம் அங்கு கேட்டனர். ' நாட்டின் எந்தப் பகுதிகளில் தமிழர்கள் இருந்தாலும் பலம் பொருந்தி வருகிறார்கள், சிங்களவர்களை அவர்கள் இல்லாமல் செய்துவிடுவார்கள். இதனை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?' என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார் ஹொரண தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாகர பலன்சூரிய. இதற்கும் மேலாகச் சென்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் ராஜபக்ஷ, 'அவர்களை (தமிழர்களை) அழித்துவிடுவோம்!' என்று கத்தினார். இது பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு சினத்தை ஏற்படுத்தியது. 'நீங்கள் உண்மையாகவே தமிழர்களை அழிப்பது பற்றி சிந்திக்கிறீர்களா? இந்த அரசாங்கத்துக்கு அது போன்ற எந்த எண்ணமுமில்லை. இந்தக் கருத்தை ஹம்பாந்தோட்டை எம்.பி. லக்ஷ்மன் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். தமிழ்ப் பெண்மணியை மணந்துள்ள நீங்களா இப்படிச் சொன்னது லக்ஷ்மன்?' எனக் கேட்டார் பிரதமர் பண்டாரநாயக்க. தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் பண்டாரநாயக்க, 'இந்தநாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாந்தியுடனும், சமாதானத்துடனும் வாழ வேண்டும். எனது எண்ணமென்னவெனில் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றாக வாழவேண்டும். உங்களுடைய பிரதமராகச் சொல்கிறேன், இந்த இலக்கை அடைவதற்காகவே என்னுடைய அரசாங்கம் வேலை செய்யும்' என்று தீர்க்கமாகச் சொன்னார். ஜூன் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் உரையாற்றினார். ஒரு தளர்ந்து போன செல்வநாயகமாக அவர் காணப்பட்டார். முதல்நாள் அகதிமுகாமில் அவர் கண்டவை, கேட்டவை எல்லாம் அவரைத் தளர்வடையச் செய்திருந்தன எனப் பதிவு செய்கிறார் டாஸி விட்டாச்சி. இரவு 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய தமிழரசுக்கட்சி (சமஷ்டிக் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். சா.ஜே.வே.செல்வநாயகம், டாக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டியிலிருந்து அவர்களது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களது வெளியுலகத் தொடர்பு முற்றாக தடைசெய்யப்பட்டது. கொழும்பில் வீடுகள் இல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 'கோல் ‡பேஸ் ஹொட்டேலின்' இரண்டாவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டனர். வி.ஏ.கந்தையா, டாக்டர். வி.கே.பரமநாயகம், வி.என்.நவரட்ணம், என்.ஆர்.ராஜவரோதயம், சி.வன்னியசிங்கம், சி.ராஜதுரை, அ.அமிர்தலிங்கம் ஆகிய தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள். இதனை விட, ஏறத்தாழ 150 அளவிலான (சில முஸ்லிம்களும் உள்ளடங்கலாக) தமிழரசுக்கட்சியினர் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர். இத்தோடு ஜாதிக விமுக்தி பெரமுணவைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுசான வசதி (அவர்களது வீட்டில் அல்லது 'கோல் ‡பேஸ் ஹொட்டலில்' தடுத்துவைக்கப்படுதல்) கைது செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் பிரதமர் பண்டாரநாயக்க மீது வைக்கப்பட்டது. அவசரகாலப் பிரகடனம் என்பது அங்கிகாரம் பெற்ற காட்டாட்சி என்ற விமர்சனத்தில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் 'அவசரகாலத்தில்' எதையும் செய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவிடும். ஒரு சர்வாதிகாரியின் பலம், 'அவசரகாலத்தில்' ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கும் கிடைத்தவிடும். ஜனாநயக நாடொன்றில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டப் பாதுகாப்புக்கள் எல்லாம் செயலிழந்துவிடும். யாரும், எப்போது சுடப்படலாம், கைது செய்யப்படலாம், மரண விசாரணை தேவையில்லை என்ற நிலை 1958 மே - ஜூன் காலப்பகுதியில் உருவாகி 'அவசரகாலம்' நிறைவடையும் வரை தொடர்ந்தது. பிரதமர் பண்டாரநாயக்க 1958 ஓகஸ்ட் 5ஆம் திகதி தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தமிழரசுக்கட்சி தடைசெய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுதில், மிதவாத தமிழ் மக்களிடையே நல்லெண்ணமொன்றை ஏற்படுத்த பிரதமர் பண்டாரநாயக்க முயற்சித்தார். சட்டமூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய பண்டாரநாயக்க, 'இந்த நாட்டில் தீவிரவாதிகளின் அளவு, அது தமிழராக இருந்தாலென்ன சிங்களவராக இருந்தாலென்ன, மிகச்சொற்பமே. ஆனால், பெரும்பான்மையானவர்கள் நியாமும், மிதவாதமும் மிக்க மக்களே. அந்த மக்கள் எமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் கீழ் ஒற்றுமையாக, தன்மானத்துடனும், சுயகௌரவத்துடனும் இணைந்து முன்னேறிச் செல்லவே எண்ணுகிறார்கள். சுதந்திரமென்பது அனைவருக்குமானது - அது சிங்களவருக்கானது, ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அது தமிழருக்குமானது கூட, அது முஸ்லிம்களுக்கானதும், அது மலே மக்களுக்கானது, அது பறங்கியருக்கானதும், அது எல்லா பிரசைகளுக்குமானது. ஜவஹர்லால் நேரு சொன்னதை நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன், சுதந்திரம் என்பதன் அர்த்தம், உள்ளக இனமுரண்பாடு, அநீதி மற்றும் சிறுபான்மையினரின் ஒடுக்குமுறை என்றால், சுயராஜ்ஜியம் என்பது நரகத்துக்;குப் போகட்டும்' என்று உரையாற்றினார். 'தனிச்சிங்களச்' சட்டம் எழுத முன்பே பண்டாரநாயக்க இதனை யோசித்திருக்கலாம். ஆனால், இந்தப் பொழுதில் பண்டாரநாயக்க இதனையாவது செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்குபற்ற தான் அனுமதிப்பதாக பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசித்தான் தான் இதுபற்றி முடிவெடுக்க முடியும் என் செல்வநாயகம் பிரதமருக்கு அறிவித்தார். பொலிஸ் காவலுடன் தடுத்துவைக்கப்பட்ட உறுப்பினர்கள் செல்வநாயகம் அவர்களது வீட்டில் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தின் பின்பு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் 'சுதந்திர மனிதராக' நாடாளுமன்றக் நடவடிக்கைகளில் பங்கேற்பதானால் பங்கேற்போம் இல்லையெனில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தனர். அவர்கள் இல்லாமலேயே தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்ததச் சட்டம் தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தமிழ் மொழி மூலம் அரசசேவை பரீட்சைகள் எழுதுதல் (சேவையில் இணைந்தபின் குறிப்பிட்ட காலத்துள் உத்தியோகபூர்வ மொழியை (சிங்களம்) கற்றுத் தேற வேண்டும்), வடக்கு, கிழக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிர்வாக விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ மொழிக்கு (சிங்களம்) எந்த பட்சபாதமுமின்றி தமிழில் கருமமாற்றுதல் ஆகிய ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், இவை சட்டரீதியான அங்கிகாரமுடையவை அல்ல. அதாவது இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதமரிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் 1958ல் நிறைவேற்றப்பட்ட போதும் 1966 டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆகவே இதை நிறைவேற்றுவதில் பிரதமர் பண்டாரநாயக்க காட்டிய மும்முரத்தை, இதனை நடைமுறைப்படுத்துவதில் அவர் காட்டவில்லை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற ஆளுமை இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளி. சுதந்திரத்துக்குப் பின்னராக இனப்பிரச்சினையின், குறிப்பாக மொழிப்பிரச்சினையின் தீவரப் போக்கின் ஆரம்பப்புள்ளி. தன்னுடைய ஒக்ஸ்‡போர்ட் பல்கலைக்கழக அனுபவங்கள் பற்றி எழுதும் போது பண்டாரநாயக்க, அங்கு தனது முதலாவது ஆண்டில் தான் சந்தித்த இனரீதியான பாகுபாட்டை, ஒரு வெள்ளை மனிதன் அல்லாதவன், வெள்ளை மனிதனுக்கு சமனாக உருவாவதிலுள்ள சவாலைப் பற்றி எழுதியவர், தான் உணர்ந்துகொண்ட ஞானமாக சொன்னது 'அவர்களுக்குச் சமனானவனாக நான் ஆவதற்கு, முதலில், நான் அவர்களைவிட உயர்ந்தவனாக ஆகவேண்டும்'. ஏறத்தாழ இதேயொரு நிலைக்கு இலங்கையின் தமிழர்களை தள்ளும் கைங்கரியத்தினை பண்டாரநாயக்க தொடங்கி வைத்தார். அதிகாரம் என்ற ஒன்றைக் கைப்பற்றவும், அதனைத் தக்கவைக்கவும் பண்டாரநாயக்க தேர்ந்தெடுத்த பெரும்பான்மை இனவாதம் என்ற ஆயுதம், இன்று அவராலேயே கட்டுப்படுத்த முடியாது அளவிற்கு பரந்துவிரிந்துவிட்டது. இதை நிச்சயமாக பண்டாரநாயக்க உணர்ந்திருப்பார். ஆனால் அதே ஆயுதம் தன் உயிரைப் பறிக்கும் என அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. - See more at: http://www.tamilmirror.lk/156281#sthash.Tv3Qt1Zl.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 4, 2015 தொடங்கியவர் Share Posted November 4, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 10) 19-10-2015 09:32 AM Comments - 0 Views - 82 என்.கே.அஷோக்பரன் LLB(Hons) தமிழ் மக்கள் தனி வழி அரசியலை விரும்பினார்கள் என்ற கூற்று வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ் மக்கள், தாமாக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தனி வழிப் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசியலின் விளைவாக, வேறுவழியின்றி - அதன் மறுதாக்கமாக, தமிழ் மக்களைத் தனி வழி அரசியலை நோக்கிப் போக வேண்டிய சூழல் நீண்ட காலத்தில் உருவானது. இந்த மாற்றத்தை விதைத்ததில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பங்கு முக்கியமானது, ஆகவேதான் அதன் வரலாற்றை ஆழமாக, அகலமாக ஆராய்தல் அவசியமானதாகிறது. காலனியாதிக்கத்தின் விளைவான ஆங்கில மொழியினைத் தவிர்த்து, இந்நாட்டின் சுதேசிய மொழியை காக்கும் நோக்கம் தான் 'உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தின்' நோக்கம் என்றால், அது 'தனிச்சிங்கள' சட்டமாக அன்றி, 'சிங்கள-தமிழ்' சட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் 'தனிச் சிங்கள' சட்டமாக அதனை அறிமுகப்படுத்தியதனூடாக இந்நாட்டின் சிறுபான்மையினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலையை எதிர்கொண்டனர். அடையாளம், மொழி உரிமை, சமத்துவம் என்பவற்றைத் தாண்டி வாழ்வாதாரமும் சிவில் வாழ்வும் பாதிக்கப்படும் நிலையை தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற அரசியல் ஆளுமை, ஓர் இளைஞனாக இலங்கை அரசியலுள் நுழைந்த போது 'சமஷ்டி முறை' அரசு ஒன்றே இலங்கைக்கு ஏற்ற தீர்வு எனச் சொல்லியிருந்தார். அதே மனிதர், அரசியல் அதிகாரத்தை நோக்கிய தனது பயணத்தில், தன்னுடைய பாதையை சுதேசியம் என்ற முகமூடிக்குள் 'சிங்கள-பௌத்த' இன-மைய அரசியலைக் கொண்டதாக மாற்றிக்கொண்டார். தன்னை 'லிபரல்-சோஷலிசவாதி'யாக காட்டிக்கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, 'சிங்கள-பௌத்த' இன-மைய கொள்கைகளை முன்னிறுத்தியதை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கைங்கரியமென வர்ணிப்பவர்களும் உளர். ஆனால், அவர் அவிழ்த்து விட்ட இனவாத சக்திகளை, அவரால் கட்டுப்படுத்த முடியாது போன இடத்தில் அவர் தோற்றுவிட்டார். முதலில் சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கி, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் காட்டிவிட்டு, பின்பு தமிழுக்கும் உரிய இடத்தை வழங்குதல் என்பது பண்டாரநாயக்கவின் திட்டமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதைச் அவர் செய்யவும் இல்லை, அவர் அவிழ்த்துவிட்ட இனவாத சக்திகள் அவரைச் செய்யவும் விடவில்லை. இந்நிலையில் அதே இனவாத சக்தியின் கரத்தால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை அவரது றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் வைத்து, 1959 செப்டெம்பர் 25ஆம் திகதி, தல்துவே சோமராம தேரர் என்ற பௌத்த பிக்குவினது துப்பாக்கியினால் சுடப்பட்டு, சிகிச்சைகள் பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். அவரைச் சுட்டவுடன் சோமராம தேரர் - தான் இதனை நாட்டுக்காகவும், இனத்துக்;காகவும், மதத்துக்;காகவும் செய்ததாகக் கத்திச் சொன்னார். தனக்கு இதுபோன்ற ஒரு நிலை வரும், அதுவும் பௌத்த பிக்கு ஒருவரினால் கொல்லப்படுவார் என பண்டாரநாயக்க துளி கூட எண்ணியிருக்கமாட்டார். அதனால்தான் அன்று பிரதமருக்கு பெரியளவில் பாதுகாப்பும் இருக்கவில்லை. தேசத்துக்;கான தனது இறுதிச் செய்தியில் கூட இதனை 'பௌத்த பிக்குவின் காவியுடையைத் தரித்திருந்த ஒரு முட்டாள் செய்த காரியம்' எனவும் 'அவன் மீது இரக்கம் காட்டுங்கள், அவனைப் பழிவாங்க வேண்டாம்' எனவும் பண்டாரநாயக்க கேட்டுக்கொண்டார். பண்டாரநாயக்கவைச் சுட்டது தல்துவே சோமராம தேரர்வே என்ற சிங்கள-பௌத்த பிக்கு. ஆனால், அன்றிருந்த அரசியல் சூழலில், பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி நாடெங்கிலும் பரவியபோது, அவரைத் தமிழர் ஒருவர் சுட்டுவிட்டதாகவே வதந்திகள் பரவின. அதுவும் அவரை 'சோமராமன்' எனும் தமிழன் சுட்டுவிட்டான் என்றே வதந்தி பரவியது. ஆனால், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க - பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி எட்டியவுடனேயே அவசரகாலப் பிரகடனத்தை மேற்கொண்டதுடன், அவரைச் சுட்டது தமிழரல்ல என்பதை தெளிவாகச் சொல்லுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். 1958 கலவரத்தின் தாக்கம், குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களை மீண்டும் கடும் அச்சத்துக்;கு உள்ளாக்கியிருந்தது. ஒரு பௌத்த பிக்குவான தல்துவே சோமராம தேரரினால் பண்டாரநாயக்க ஏன் சுடப்பட்டார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இதைப்பற்றி பல வதந்திகளும் பரவியிருந்த நிலையில். களனி விகாரையின் விகாராதிபதி மாபிட்டிகம புத்தரகித தேரர் இந்தக் கொலைக்கான சூழ்ச்சியைப் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அன்றைய அரசியலைப் பொறுத்தவரை மாபிட்டிகம புத்தரகித தேரர் ஆதிக்கம் மிக்க ஒருவராகக் காணப்பட்டார். வணிகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடுகாட்டியவராக இருந்த அதேவேளை, 'எக்ஸத் பிக்கு பெரமுணவின்' (ஐக்கிய பிக்கு முன்னணி) முக்கியஸ்தராகவும் இருந்தார். தான் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்குப் பண உதவி செய்பவராகவும் இருந்தார். இந்தக் கொலையை அவர் திட்டமிட்டதற்கு வணிக ரீதியான காரணங்களே முன்னிறுத்தப்பட்டன. அவர் வேண்டிய சில முக்கிய வணிக ரீதியான உதவிகளை பிரதமர் பண்டாரநாயக்க செய்ய மறுத்தமையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்காக தல்துவே சோமராம தேரர் எனும் 'சிங்கள-பௌத்த' தேசியவாத உணர்வு பொங்கிய நபரை, பண்டாரநாயக்க அந்தத் தேசியத்துக்கு விரோதமாக மாறுகிறார், துரோகியாகிறார் என்று நாட்டின் மற்றும் 'சிங்கள-பௌத்த' தேசியத்தின் நலனுக்காகவே இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியிருந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956இல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 'எக்ஸத் பிக்கு பெரமுண' (ஐக்கிய பிக்கு முன்னணி) சார்பில் தேசியவாத சக்திகளை ஒன்றிணைத்து முக்கிய பங்காற்றியவர்களில் மாபிட்டிகம புத்தரகித தேரரும் ஒருவர். அதேவேளை பண்டாரநாயக்க ஆட்சியில், 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து, அதைப் பண்டாரநாயக்கவினாலேயே கிழித்தெறியப்படச் செய்தவர்களில் முக்கியமானவர் மாபிட்டிகம புத்தரகித தேரர். இறுதியில் பண்டாரநாயக்கவின் கொலைக்கும் சூத்திரதாரியானார். பரபரப்பாக நடந்த வழக்கு, மேன்முறையீடுகளின் பின், கொலையாளி தல்துவே சோமராம தேரருக்கு மரண தண்டனையும், கொலைக்கு சூழ்ச்சி புரிந்த மாபிட்டிகம புத்தரகித தேரருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 1958இல் தனது ஆட்சியில் மரண தண்டனையை சட்டரீதியாக பண்டாரநாயக்க இடைநிறுத்தியிருந்தார். ஆனால், அவர் கொலையுண்ட பின், அவரது கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குதற்காக, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினால் மீண்டும் மரண தண்டனை 'முற்காலத்துக்கும் வலுவுள்ள வகையில்' (சநவசழளிநஉவiஎந நககநஉவ) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க விடயமொன்றும் நடந்தது. நாட்டுக்காக, 'சிங்கள-பௌத்த' தேசியத்துக்;காக கொலை செய்த தல்துவே சோமராம தேரர் வழக்கு நடந்துகொண்டிருந்த போதே, வழக்குக்கு பிக்குவினுடையில் வருவதை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட முன்பு கிறிஸ்தவராக மாறிய பின்னே தூக்கிலிடப்பட்டார். பண்டாரநாயக்கவின் கொலை இலங்கை அரசியலில் அன்று ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியிருந்தது. பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த விஜயானந்த தஹநாயக்க, பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின் பிரதமரானார். காலியின் மக்களாதரவுமிக்க அரசியல்வாதியாக இருந்த தஹநாயக்க ஒரு சுயேட்சை அரசியல்வாதியாகவே இருந்தார். பண்டாரநாயக்கவின் 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்று கூட்டணி அமைந்தபோது, அதன் அங்கமாகி, பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். அன்று பண்டாரநாயக்கவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலம்பொருந்திய தலைவராக இருந்தவர் சி.பி.டி சில்வா. பண்டாரநாயக்க கொல்லப்பட்டபோது, சி.பி.டி. சில்வா தனது உடல்நலக்குறைவு சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்தார். அன்று நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்த சி.பி.டி சில்வா, தான் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் இல்லாத சூழலில் தஹநாயக்கவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்ட 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற கூட்டணி உள்ளுக்குள் பிளவுபடத் தொடங்கியது. பிரதமர் தஹநாயக்க தனக்கு எதிராகவும், தனது அரசாங்கத்துக்;கெதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்து. அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்து நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடிவடையும்வரை (1961 வரை) ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாத சூழலில், நாடாளுமன்றைக் கலைக்குமாறு ஆளுநரிடம் பிரதமர் தஹநாயக்க கேட்டுக்கொண்டதன் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 1960ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்லில், 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற பண்டாரநாயக்கவின் கூட்டணி சிதறிப்போனது. தலைவர் இல்லாத நிலையில், உடனடியாக நேரடி அரசியலுக்கு வரும் எண்ணம் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு இல்லாத நிலையில், அவரது ஆதரவுடன் சி.பி. டி சில்வா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டது. லங்கா சமசமாஜக் கட்சி 100 வேட்பாளர்களைக் களமிறக்கியது. பிலிப் குணவர்த்தனவின் கட்சி தனியாகவும், எஸ்.டி.பண்டாரநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய 'போஸத் பண்டாரநாயக்க பக்ஷயவில்' (போஸத் பண்டாரநாயக்க கட்சி) தனியாகவும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய லங்கா பிரஜாதாந்திர பக்ஷயவில் (லங்கா ஜனநாயகக் கட்சி) தனியாகவும், சிங்கள-பௌத்த தேசியவாத தலைவர்களான கே.எம்.பி.ராஜரட்ண 'ஜாதிக விமுக்தி பெரமுணவில்' (தேசிய விடுதலை முன்னணி) தனியாகவும், இன்னொரு தேசியவாதத் தலைவரான எல்.எச்.மெத்தானந்த சிங்கள பௌத்த தர்ம சமாஜ கட்சியில் தனியாகவும் போட்டியிட்டனர். இந்த நிலையின் சாதகத்தன்மையை உணர்ந்து, மீண்டும் அரசியல் களம் புகுந்திருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 'இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லை' என்ற கோசத்துடன் தேர்தல் களத்தை எதிர்கொண்டது. 1960ஆம் ஆண்டு தமிழர்களுக்கு சிக்கலுடனேயே பிறந்தது. 1960ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, 'தனிச் சிங்கள' சட்டம் அமுல்படுத்தப்படும் முதலாவது வேலைநாளாக அமைந்தது. இதனை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஹர்த்தால் போராட்டமொன்றை வடக்கிலும் கிழக்கிலும் அறிவித்தது. மார்ச் மாதம் தேர்தலையொட்டிய பிரசாரங்களில் அனைத்து பெரும்பான்மைக் கட்சிகளும், 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்பதை வேதவாக்காக முன்மொழிந்தன. தாம் ஆட்சிக்குவந்தால் 'தனிச் சிங்கள' சட்டத்தை எந்த சமரசமுமின்றி அமுல்படுத்துவோம் என்பது சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றானது. தனியாகப் புதிய கட்சியொன்றின் மூலம் தேர்தலைச் சந்தித்த பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரையும் மீள இந்தியாவுக்கே அனுப்புவேன் என்று உறுதிமொழி தந்தார். பிலிப் குணவர்த்தன பிரதமராவதற்கு ஆதரவு தருவதாக அறிவித்த மெத்தானந்த, பௌத்த மதத்துக்;கு அரசில் அதன் உரிய உயரிய இடம் வழங்கப்படவேண்டும் எனப் பிரசாரம் செய்தார். சிங்கள-பௌத்த தேசியவாதியான மெத்தானந்தவின் ஆதரவுடன் மார்க்ஸிஸப் புரட்சியாளரான பிலிப் குணவர்த்தன, சிங்கள-பௌத்த இனவாதப் புரட்சியாளரானார். மறுபுறத்தில் எஸ்.டி.பண்டாரநாயக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பப்படவேண்டுமென்றும், வெளிநாட்டினரின் சொத்துக்களும், பெருந்தோட்டங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்மெனவும் பிரசாரம் செய்தார். 'இலங்கைத் தேசியம்' என்ற முகமூடிக்குள் அப்பட்டமான 'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியல் முன்னிறுத்தப்பட்டது. இங்கு அனைத்துப் பெரும்பான்மைக் கட்சிகளினுடைய நிலைப்பாடும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அளவுகள் மட்டுமே ஒன்றுக்கொன்று கூடிக்குறைந்தன. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. 1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/156921#sthash.FiI9LHsh.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 5, 2015 தொடங்கியவர் Share Posted November 5, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 11) 26-10-2015 05:01 AM Comments - 0 Views - 146 என்.கே.அஷோக்பரன் LLB(Hons) 1960ஆம் ஆண்டு மார்ச் 19இல் நடந்த பொதுத் தேர்தலில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களையும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன், சி.பி.டி சில்வா தலைமையில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தது. தமிழர் பகுதிகளில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரேயொரு ஆசனத்தை உடுப்பிட்டித் தொகுதியில் 'உடுப்பிட்டிச் சிங்கம்' எம்.சிவசிதம்பரம் வென்றிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அல் ப்றட் துரையப்பா, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைத் தோற்கடித்து நாடாளுமன்றம் ஏகினார். தனது பதிவு செய்யப்படாத ஈழத் தமிழ் ஒற்றுமை முன்னணி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்ட 'அடங்காத் தமிழன்' சி. சுந்தரலிங்கம் வவுனியா தொகுதியில் மற்றொரு சுயேட்சை வேட்பாளரான ரி.சிவசிதம்பரத்திடம் தோல்விகண்டார். 101 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும், 89 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த மஹஜன எக்ஸத் பெரமுண 10 ஆசனங்களையும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தலைமையில் அவர் புதிதாக உருவாக்கியிருந்த லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷய 4 ஆசனங்களையும் பெற்றிருந்தது. தனது சொந்தத் தொகுதியான காலி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தோல்வியடைந்தார். தனது கட்சிக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்த நிலையில் தனது சொந்தத் தொகுதியில் சிறப்பாக பிரசாரம் செய்ய முடியாது போனது பிரதமர் தஹநாயக்க தோற்றதற்கு காரணமாக இருக்குமென அன்றைய பிரதமரின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார். தான் புதிதாகத் தொடங்கிய போதிஸத்வ பண்டாரநாயக்க பக்ஷயவில் கம்பஹா தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பண்டாரநாயக்க வெற்றிபெற்றிருந்தார். கட்சிகளைத் தாண்டி, தொகுதிகளில் தனிநபர்களின் அரசியல் செல்வாக்குக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் வரை இதுபோன்ற தொகுதி ரீதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகளைக் காணக்கூடியதாக இருந்தது. தேர்தல் முடிவுகளின் பின், எந்தவொரு தனிக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத நிலையில் ஆளுநர் ஒலிவர் குணத்திலக்க, அதிகளவான ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்கவை ஆட்சியமைக்க அழைத்தார். வெறும் எட்டு கபினட் அமைச்சர்களுடன், டட்லி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் 'மஹ களு சிங்ஹளயா' (பெரும் கறுப்புச் சிங்களவன்) என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன தலைமையிலான மஹஜன எக்ஸத் பெரமுண என்பவற்றின் ஆதரவை அவர் எதிர்பார்த்தார். தமிழரசுக் கட்சி - தமிழ்மொழிக்குரிய அந்தஸ்து உள்ளிட்ட சில குறைந்தபட்சக் கோரிக்கைகளை முன்வைத்தே ஆதரவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டிலிருந்தது. இது டட்லி சேனநாயக்கவுக்கு கடும் சவாலாக இருந்தது. 'தனிச்சிங்களச்' சட்டத்தை முழுமையாக அமுலாக்கும் கொள்கையோடு போட்டியிட்டவர்களால், எப்படி தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்சக் கோரிக்கைகளோடு சமரசம் செய்து கொள்வது இலகுவாக இருக்கவில்லை. இந்நிலையில் டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை தோற்கடிக்கப்பட்டது. டட்லி, சிறிதேனும் தாமதமின்றி நாடாளுமன்றத்தைக் கலைத்து மீளத் தேர்தல் நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தினார். இதன்படி, 1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. 1960ஆம் ஆண்டு ஜூலைத் தேர்தலைப் பொறுத்தவரையில், களநிலைமைகள் மாறியிருந்தன. 1960 மே 24ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் மேலும் வலுச் சேர்த்தது. ஆனால், அவர் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொல்லப்பட்டபின், அரசியலுக்கு வருவதை விரும்பாத, பிரதமர் பதவியை தட்டிலே வைத்துத் தந்தாலும் ஏற்கமாட்டேன் என்று சொன்ன ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 8 மாதங்கள் கடந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 'எனது கணவர் பண்டாரநாயக்கவின் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளுக்கு மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தார்கள். நான் அதனைப் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் அடக்குமுறையைப் பிரயோகிக்கும் சக்திகள் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும். எந்த அடக்குமுறைக்கு எதிராக எனது கணவர் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அது தலைதூக்கினால் அவர் தியாகம் வீண்போகும்' என உணர்ச்சி பொங்க தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. 'பண்டாரநாயக்கவை' சுற்றியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்தத் தேர்தல் பிரசாரம் அமைந்தது. சிங்கள இனத்துக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்த 'போதிசத்துவர்' பண்டாரநாயக்க என்ற உணர்ச்சி அலை சிங்களக் கிராமங்கள் தோறும் பரவியது என சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். 'தனிச்சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், இந்திய வம்சாவளி மக்களை திருப்பியனுப்புதல் ஆகிய கொள்கைகளில் ஸ்ரீமாவோ உறுதியாக இருந்தார். மறுதரப்பில் எதிர்க்கட்சிகள், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை கடுமையாக விமர்சித்தன. தனது கணவனின் உயிரிழப்பிலிருந்து ஸ்ரீமா ஆதாயம் தேடுவதாக விமர்சித்தன. ஸ்ரீமாவை 'அழுகின்ற விதவை' ('வாந றநநிiபெ றனைழற') என்றழைத்தன. இவ்வளவுக்கும் ஸ்ரீமாவோ நேரடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை. 1960 மார்ச் தேர்தலில் தனித்துக் களம் கண்ட லங்கா சமசமாஜக் கட்சி ஒரு விடயத்தைப் புரிந்துகொண்டது. தனியே இடதுசாரிச் சோசலிசக் கொள்கைகள் மட்டும் இலங்கையில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு பெறுவதற்குப் பேதாது. முன்னாள் மார்க்ஸிஸப் புரட்சியாளனும், இந்நாள் 'மஹ களு சிங்ஹளயாவுமான' பிலிப் குணவர்தன நிரூபித்துக் காட்டியது போல, சிங்கள-பௌத்த பேரினவாத ஆதரவு நிலையும் அவசியம். சோசலிசக் கொள்கைகளும், சிங்கள-பௌத்த தேசியவாதமும் இணையும்போதுதான் வெற்றி கிட்டுகிறது என்பதை லங்கா சமசமாஜக் கட்சி புரிந்துகொண்டது போலும். இந்தத் தேர்தலில் பண்டாரநாயக்கவின் உறவினரும், பிரபல சட்டத்தரணியுமான ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் முயற்சியில், 1956 போலவே, ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன. 1960 ஜூலை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 98 வேட்பாளர்களைக் களமிறக்கி, 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 128 வேட்பாளர்களைக் களமிறக்கி, வெறும் 30 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. இலங்கை தமிழரசுக் கட்சி 20 வேட்பாளர்களைக் களமிறக்கி, 16 ஆசனங்களைக் கைப்பறியிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், முறையே 21 வேட்பாளர்களைக் களமிறக்கி 12 ஆசனங்களையும், 7 வேட்பாளர்களைக் களமிறக்கி 4 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. மஹஜன எக்ஸத் பெரமுண 55 வேட்பாளர்களைக் களமிறக்கி வெறும் 3 ஆசனங்களையே கைப்பற்றியிருந்தது. தனது லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷயவில் போட்டியிட்டிருந்த முன்னாள் பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, மார்ச் மாத தேர்தலில் தோல்விகண்டபோதும், இம்முறை 444 வாக்குகள் வித்தியாசத்தில் காலி தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 வேட்பாளர்களைக் களமிறக்கியபோதும், உடுப்பிட்டி தொகுதியில் எம்.சிவசிதம்பரம் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் அல்‡ப்றட் துரையப்பா 298 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தை வெற்றிகொண்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி ஏற்றார். உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். உலகமே இலங்கையைத் திரும்பிப் பார்த்த தருணம் அது. பிரித்தானிய பத்திரிகைகள் இதனை சிலாகித்து எழுதியிருந்தன. இந்திரா காந்தி (இந்தியா), கோல்டா மெயர் (இஸ்ரேல்), மார்கிரட் தட்சர் (பிரித்தானியா) என இவருக்குப் பின்பு பலம்பொருந்திய பல பெண் பிரதமர்கள் உருவாகியிருந்தாலும், உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமை ஸ்ரீமாவோ-வையே சாரும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. சோல்பரி யாப்பின் படியான அன்றைய நாடாளுமன்றம், இரு அவைகளைக் கொண்டதாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் என்ற கீழவையையும், செனட் சபை என்ற மேலவையையும் கொண்டதாக, 'வெஸ்ட்மினிஸ்டர்' நாடாளுமன்றத்தையொத்த அமைப்பில் காணப்பட்டது. 30 அங்கத்தவர்களைக் கொண்ட செனட் சபையின் 15 அங்கத்தவர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மற்றைய 15 அங்கத்தவர்கள் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான செனட்டர் எம்.பி. டி ஸொய்ஸா பதவி விலகி வழிவிட, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார். செனட் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இது 'வெஸ்மினிஸ்டர்' மரபுக்கு மாறுபாடாதொன்றாக இருந்தது. 'வெஸ்மினிஸ்டர்' மரபின்படி பிரதமர் எப்போதும் கீழவையான மக்கள் பிரதிநிதிகள் சபையிலிருந்தே நியமிக்கப்படுவார். இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று வகைசொல்லும், பதிலுரைக்கும் கடமைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியது கடமை, அதனைச் செய்வதற்கு அவர் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருப்பது அவசியமாகிறது. இந்த மரபு தகர்க்கப்பட்டு செனட் சபையிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில், குறிப்பாக இனப்பிரச்சினை வரலாற்றில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க எவ்வளவு முக்கியமான ஒருவரோ, அவரைவிட ஸ்ரீமாவோ முக்கியமான ஒருவராவார். ஸ்ரீமாவின் ஆட்சிக் காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகச் சவாலானவையாகவே இருந்திருக்கின்றன. 1960-1965, 1970-1977 என அவர் பிரதமராக இருந்த முதலிரண்டு முறையும் சிறுபான்மையினருக்கெதிரான அநேக அநீதிகள் அரங்கேறின. அத்தனையும் சுதேசியம், தேசியம், சமத்துவம், சோசலிசம் என்ற முகமூடிகளை அணிந்து கொண்டிருந்தன. ஆனால், அவற்றின் விளைவுகள் சிறுபான்மையினரையே பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. சிம்மாசன உரையின் போது 'தனிச்சிங்கள' சட்டமும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் அமுல்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும், அரசாங்கத்துக்குமிடையில் 1960 நவம்பர் 8ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. ஸ்ரீமாவோவின் ஆட்சியில் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்திக்க சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் தயாராகினார்கள். - See more at: http://www.tamilmirror.lk/157475#sthash.XizhhNLL.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 6, 2015 தொடங்கியவர் Share Posted November 6, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 12) 02-11-2015 09:50 AM Comments - 0 Views - 149 -என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 'சுதேசியம்' என்று முகமூடிக்குள்ளாக ஆதிக்கம் பெறத்தொடங்கிய சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்தகட்ட நிலையை, 1960ஆம் ஆண்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்நாட்டின் தமிழர்கள் மட்டுமல்ல, சிறுபான்மை இனத்தவர்களும், சிறுபான்மை மதத்தவர்களும் கடும்சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதொரு சூழ்நிலையை எதிர்கொண்டனர். இதன் முதல்கட்ட சமிக்ஞைகள் 1960இன் இறுதிப் பகுதியிலேயே வெளிவரத்தொடங்கின. 1960 நவம்பர் 8ஆம் திகதி, பிரதமர் ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்துக்கும், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 'அலரி மாளிகையில்' இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், அதன் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம், என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், மசூர் மொளலானா மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், அரசாங்கம் சார்பில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீமாவின் உறவினரும், நிதி அமைச்சருமான ‡பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, நீதி அமைச்சர் செனட்டர் சாம் பீ.ஸி.‡பெர்ணான்டோ, வர்த்தக, உணவு மற்றும் மீன்பிடி அமைச்சர் ரீ.பி.இலங்கறட்ண, அவைத் தலைவரும் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான சி.பி.டி சில்வா, கல்வி மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பதியுதீன் முஹம்மத், அமைச்சர் பி.பி.ஜி.களுகல்ல மற்றும் டொக்டர் சீவலி ரத்வத்தை ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், இதற்கு முன்னர் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாம் முன்னிறுத்திய முக்கிய கோரிக்கைகளைத் தமிழரசுக் கட்சி மீண்டும் வலியுறுத்தியது. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துதல்;, பிராந்திய சபைகளை ஸ்தாபித்தல், தமிழ்மொழியை சிறுபான்மையினரின் மொழியாகவும், வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும் அங்கிகரித்தல், அத்துடன் ஏனைய மாகாணங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ்மொழியில் கருமங்களையாற்றத்தக்க ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தினர். அத்தோடு, குறிப்பாக அரச சேவையில் தமிழ் மக்கள் இணைவதற்கு பாரிய முட்டுக்கட்டையைத் 'தனிச் சிங்கள' சட்டம் ஏற்படுத்தியுள்ளமையையும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசப்பட்டது. இந்தப் பிரச்சினையில் புதிய ஆட்சேர்ப்பு மற்றும் ஏலவே சேவையிலுள்ளவர்கள் என்ற இருதரப்பு இருந்தது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கு முன்பாக சேவையில் இணைந்திருந்த தமிழ் பேசும் மக்களுக்கு 'தனிச் சிங்கள' சட்டத்தின் விளைவாக சேவையில் தொடரமுடியாத நிலையிருந்தது. அதாவது சிங்கள மொழியறிவில்லாத, சிங்கள மொழியில் கருமமாற்ற முடியாதவர்கள் பணியினை இழக்கும் சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. இவர்களை ஆங்கில மொழிமூலத்தில் பணியாற்றவிடுதல் அல்லது சகல பலாபலன்களுடன் அவர்களை ஓய்வு பெறச் செய்தல் என்ற முன்மொழிவை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அவர்களை சிங்களமொழிமூலம் வேலைசெய்ய வற்புறுத்துதல், அது இயலாத பட்சத்தில் அவர்களுக்குரிய பலாபலன்களேதுமின்றி அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்தல் என்பது அநீதியானது என தமிழரசுக் கட்சி கூறியது. மேலும் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பின்பான ஆட்சேர்ப்பின் போது சிங்களம் அறியாமையைக் காரணம் காட்டி தமிழர்களை ஆட்சேர்ப்பிலிருந்து விலக்கக்கூடாதெனவும், ஆட்சேர்ப்பின் பின் அவர்களுக்கு சிங்களம் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்மென்றும், அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கு 'தனிச் சிங்கள' சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி கோரியது. தமிழரசுக் கட்சி இந்தப் பேச்சுவார்த்தைகளில் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளையே முன்வைத்தது. அவர்கள் தனிநாடு கோரவில்லை, சமஷ்டி அரசொன்றைக் கோரவில்லை, அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை, 'தனிச் சிங்கள' சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருப்பினும், அவர்கள் அதனைக் கோரவில்லை. மாறாக தமிழ் மொழிக்கு சிறுபான்மையினர் மொழி என்ற குறைந்தபட்ச அந்தஸ்தையேனும் தருமாறும், தமிழ் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை தமிழ் மொழியில் செய்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்பொன்றையேனும் தரும் தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதன்படி வடக்கு-கிழக்கில் மட்டுமேனும் நிர்வாக மொழியாக தமிழை மாற்றுமாறும் ஆகக் குறைந்தபட்ச நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்தனர். இந்த வரலாற்றறை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். தமிழ் மக்கள் தனிவழி அரசியலை மேற்கொள்ளும் முடிவை இரவோடிரவாக அல்லது அடாவடியாக எடுக்கவில்லை. சமரசமும், அஹிம்சை வழிப் போராட்டமுமே தமிழ்த் தலைவர்களின் வழிமுறையாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தனது கணவரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கனவினை நனவாக்குவேன் என சபதமிட்டு ஆட்சிப்படியேறிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு, அவரது கணவன் நிறைவேற்றிய 'தனிச் சிங்கள' சட்டத்தை அமுல்படுத்த விளைந்தார். ஆனால், அதே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அதன்பின் நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. 1960 நவம்பர் 23ஆம் திகதி மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இருதரப்பும் இணங்கக்கூடிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நிறைய சமரசங்களைச் செய்ய தமிழ்த் தரப்பு தயாராகவே இருந்தது. ஆனால் 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதையே அரசாங்கம் விரும்பியது. இந்நிலையில் நீதி அமைச்சரான செனட்டர் சாம் பீ.ஸி. ‡பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நீதிமன்றங்களின் மொழிச் சட்டமூலம் தமிழரசுக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் மொழியாக சிங்களமொழியை அமுல்படுத்தும் அதிகாரத்தை நீதியமைச்சருக்கு குறித்த சட்ட வழங்கவிருந்தது. நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடக்கு-கிழக்கில் தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற திருத்தத்தை இலங்கை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. இணக்கப்பாடொன்று எட்டப்படுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் போது, இந்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்ததை முதுகில் குத்தும் செயற்பாடாகவே தமிழ்த் தலைவர்கள் பார்த்தனர். தமிழ் மக்கள் நீதியைப் பெறுவதற்குக் கூட சிங்கள மொழி தேவைப்படும் நிலையை இந்தச் சட்டம் உருவாக்கிவிடக்கூடும். இது, இலங்கையிலுள்ள சிங்கள மொழி பேசாத சிறுபான்மையினங்கள் யாவற்றுக்கும் எதிரான அநீதி என்பதுதான் உண்மை. இலங்கை தமிழரசுக் கட்சி வேறுவழியின்றி இதற்கெதிராக தமது வலுவான எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியப்பாட்டிலிருந்தது. அரசாங்கத்தோடு நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது. இந்நிலையில், 1961 ஜனவரி 1ஆம் திகதி 'தனிச் சிங்கள' சட்டம் முழுமையாக அமுலுக்குவரும் என அரசாங்கம் அறிவித்தது. இது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. 1960 டிசெம்பர் 18ஆம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழான, முதலாவது வேலை நாளான 1961 ஜனவரி 2ஆம் திகதி அன்று ஹர்த்தால் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்தனர். அவ்வண்ணமே மக்களிடம் வேண்டினர். இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம் தனது அறிக்கையில் 'இது இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இன்னொரு வஞ்சனையாகும். 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அன்றைய பிரதமரால், இது சிங்களமல்லாத மொழியில் அரசசேவையில் ஏலவே ஈடுபட்டுள்ளோரைப் பாதிக்காதவாறே அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியளித்திருந்தார். இதனை நாம் இன்றைய அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டியிருந்தோம். மறைந்த முன்னாள் பிரதமரின் கனவினை நிறைவேற்றுவதாகச் சொல்லும் இந்த அரசாங்கம் முன்னாள் பிரதமரின் உறுதிமொழிகளை மறந்துவிட்டது' எனக்குறிப்பிட்டார். ஹர்த்தால் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியது. இதனைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கையில் ஈடுபடுத் தீர்மானித்தது. வடக்கு-கிழக்கில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழ் சிங்களமொழியில் இயங்கும் அரச அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துதல் மற்றும் 'தனிச் சிங்கள' அமுலாக்கத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்துதல் எனத் தீர்மானித்தது. அஹிம்சை வழி ஆர்ப்பாட்டங்கள், ஒத்துழையாமைப் போராட்டம் என்பவையெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியினால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருந்த உத்திகளாகும். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் அஹிம்சை வழியில் போராடி பிரித்தானியர்களிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இதையொத்த அஹிம்சை வழி உத்தியே இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றத் தரக்கூடிய சிறந்த வழியென்று சா.ஜே.வே.செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியினரும் நினைத்தனர். இந்நிலையில், இன்னொரு முக்கிய பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத்தொடங்கியது. குறிப்பாக ஒரு சில பௌத்த அமைப்புக்கள் இதனை முன்வைத்தன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அன்றைய பாடசாலைகளின் நிலையைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான பாடசாலைகள் கிறிஸ்தவ மிஷனரிகளினால் நடாத்தப்படுபவையாக இருந்தமையே ஆகும். கிழக்கில் தேசங்களைப் பிடிக்க வந்த ஐரோப்பியர், தம்முடன் ஆயுதம் தாங்கிய போர்வீரர்களை மட்டுமன்றி பைபிள் தாங்கிய பாதிரியார்களையும் அழைத்து வந்தனர். ஒரு நாட்டைக் கைப்பற்ற ஆயுதங்களும், போர் வீரர்களும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு கைப்பறிய ஆட்சியைத் தக்கவைக்க மக்களாதரவு முக்கியம், அதனை ஏற்படுத்துவதற்கு மதம் என்பது மிகமுக்கியமானதொரு கருவி என்ற அரசியல் சூட்சுமத்தை அவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள். இலங்கை வரலாற்றில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்ததாக இருப்பினும் மேலைத்தேய கல்வி முறையின் அறிமுகம், மேலைத்தேய வைத்திய வசதிகள் என அவர்களூடாக பெற்ற நன்மைகளும் அதிகம். மேலும் சுதேசிய மொழிகளுக்கு அவர்கள் செய்த சேவைகளும் அதிகம். ஆனால், ஆங்கில வழிக் கல்வியினூடாக மதமாற்றம் நடப்பதைச் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து பௌத்தர்களும், இந்துக்களும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். அநகாரிக தர்மபால, ஆறுமுகநாவலர் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் விளைவாக மிஷனரிப் பாடசாலைகளுக்கு நிகராக ஆங்கிலக் கல்வியை வழங்கத்தக்க பௌத்த மற்றும் இந்துப் பாடசாலைகள் உருவாயின. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தப் பாடசாலைகள் அனைத்தும் அதனால் பயன்பெற்றன. இலங்கையில் பாடசாலைகள் என்பவை வெறும் கல்விக்கூடங்களாக மட்டுமின்றி அவை ஒரு கௌரவத்தின் சின்னமாகவும் மாறியிருந்தன. ஒருவர் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றார் என்பது முக்கியத்துவமிக்கதொன்றாக பார்க்கப்படும் கலாசாரம் இலங்கையில் இன்றுவரை தொடர்வதைக் காணலாம். ஒருவர் கல்வி கற்ற பாடசாலையானது, அவரது சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் கருவியாக இருத்தல் என்பது பிரித்தானியாவின் பிரபுத்துவ பண்புகளிலிருந்து எமது நாட்டுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை பாடசாலைகள் என்பது வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல அது ஓர் அடையாளச் சின்னமும் கூட என்பதே நிதர்சனம். ஆகவே பாடசாலைகளைத் தேசிய மயமாக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் திட்டம் பலதரப்பட்ட சிக்கல்களை, பல மட்டத்திலும் ஏற்படுத்தியது. குறிப்பாக கத்தோலிக்கர்களின் கடும் எதிர்ப்பை ஸ்ரீமாவோ அரசாங்கம் எதிர்கொண்டது. - See more at: http://www.tamilmirror.lk/158084#sthash.052TRCos.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 9, 2015 தொடங்கியவர் Share Posted November 9, 2015 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 13) 09-11-2015 09:59 AM Comments - 0 Views - 2 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பாடசாலைகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1930களிலிருந்தே பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு இந்தக் கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது. குறிப்பாக 1956இல் எஸ்.டபிள்யூ10.ஆர்.டி.பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் வென்ற பின்பு, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 'ஏமாற்றப்பட்ட பௌத்தம்' என்ற தலைப்பில் நாட்டில் பௌத்தத்தின் நிலை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. பௌத்தத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நிதியளிக்கும் அனைத்துப் பாடசாலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. ஆனால், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இது சார்ந்து நடவடிக்கை எடுப்பதை இலாவகமாகத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், பௌத்த அமைப்புக்களின் அழுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. காலனித்துவ ஆட்சியில் மதம் பரப்பும் முக்கிய நிறுவனமாக இந்தப் பாடசாலைகள் இருந்ததாகவும், அந்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும், அன்று காலனித்துவ ஆட்சியில் காலனித்துவ அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளுக்கு இன்றும் சுதந்திர இலங்கை அரசும் நிதி அளித்துக் கொண்டிருக்கிறது எனவும் ஆனால், அங்கு பௌத்த மாணவர்களுக்கு பௌத்தம் கற்பிக்கப்படுவதில்லை. ஆனால், பௌத்த மாணவர்களுக்கு கிறிஸ்தவம் கற்பிக்கப்படுகிறது எனவும் பௌத்த அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தின. இடதுசாரி மற்றும் கம்யூ10னிஸ்ட் கட்சிகள், குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சிக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குமான உறவு சுமுகமானதாக இருக்கவில்லை. 'மதம் என்பது வெகுஜனங்களுக்கான அபின்' எனச் சொன்ன கார்ள் மாக்ஸின் வழி பின்பற்றும் 'தோழர்களுக்கும்', தமது 'மேயப்பனான' கர்த்தரின் வழி பின்பற்றும் திருச்சபையினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாமை ஆச்சரியமான ஒன்றல்ல. மேலும் கத்தோலிக்கத் திருச்சபையினர் சுதந்திரத்தின் பின் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையும், வெளிப்படையாகவே இடதுசாரிக், கம்யூ10னிஸ்ட் கட்சிகளை விமர்சித்தமையும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் இடதுசாரி, கம்யூ10னிஸ்ட் கட்சிகளிடையே முறுகல் நிலையை உருவாக்கியிருந்தது. 1952ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பாக முதன்மை குரு வண. போர்டின் பின்வருமாறு கூறியிருந்தார்: 'மனதிலே ஒரு துளியேனும் கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள எந்தக் கத்தோலிக்கனும் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட அரசியல் பாசறையைச் சார்ந்த ஒரு வேட்பாளனுக்கு வாக்களிக்கமாட்டான். அது கம்யூ10னிஸமாக இருக்கலாம், அல்லது ஆண்டவருக்கும், திருச்சபைக்கும் எதிரானதொரு கருமத்தை ஆற்ற விளையும் எந்த அரசியல் கொள்கையாகவும் இருக்கலாம்'. 1956ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கள-கத்தோலிக்கர்கள், சிங்கள-கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு இருந்தது. அவர்களும் தங்களைப் பெரும்பான்மைச் சிங்களவர்களாகவே கருதினர், 'தனிச் சிங்கள' சட்டம் என்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் முழக்கத்துக்கும் ஆதரவு தந்தனர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கூட பிறப்பால் ஒரு கிறிஸ்தவரே. ஆனால், இந்த நிலை 1960இல் மாறியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பாடசாலைகளை தேசியமயமாக்கும் கோரிக்கை வலுவடைந்தது. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இதற்கான அழுத்தத்தை வழங்கின. இடதுசாரிக் கட்சிகளும் இதனை ஆதரித்தன. இடதுசாரி கம்யூனி ஸக் கட்சிகளினுடைய ஆதரவுக்கு அவர்கள் அது தமது கொள்கை சார்ந்த நிலைப்பாடு என வியாக்கியானம் சொன்னாலும், கம்யூனிஸக் கட்சிகளுக்கு எதிரான திருச்சபையின் தொடர்ச்சியான நிலைப்பாடும் அதனால் எழுந்த முறுகல் நிலையும் ஒரு முக்கிய பங்குவகித்தது என்பதை மறுக்க முடியாது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் 1960ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினூடாக அரச உதவிபெற்ற அனைத்துப் பாடசாலைகளையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் தேசியமயமாக்கியது. இந்தத் தேசிய மயமாக்கலிலிருந்து 38 பிரபல்யமான கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளுக்கு அவற்றுக்கு அரச நிதியுதவி வழங்கப்படாது மேலும் அவை கட்டணம் வசூலிக்கவும் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவற்றின் விருப்புக்கேற்ப தேசியமயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டது. 1960 காலப்பகுதியில், 1,170 கிறிஸ்தவப் பாடசாலைகளும், 1,121 பௌத்த பாடசாலைகளும், இந்து சபைக்கு (இந்து போர்ட்) சொந்தமாக 161 பாடசாலைகளும், ஆசிரியர் கலாசாலையும் மற்றும் வேறு 6,000 பாடசாலைகளும் இருந்தன. தாம் தன்னிச்சையாக எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காது இயங்க தீர்மானித்த 38 மிஷனரிப் பாடசாலைகளைத் தவிர அனைத்து அரச உதவி பெறும் பாடசாலைகளும் தேசிய மயமாக்கப்பட்டன. இதனால் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளே பெருமளவு பாதிக்கப்பட்டாலும், இந்துப் பாடசாலைகளும் கணிசமானளவு பாதிக்கப்பட்டன. இந்து போர்ட்டின் கீழ் இந்து மாணவர்கள் இந்துப் பாரம்பரிய சூழலில் தரமான கல்வி பெறத் தக்க வகையில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தன. சேர்.பொன் இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசாமி, 'இந்து போர்ட்' இராஜரட்ணம் ஆகிய தலைவர்களால் தன்னலமற்ற தூரநோக்குச் சிந்தனையோடு ஸ்தாபிக்கப்பட்ட இந்து போர்ட், இந்து மக்களின் கல்விக்காக 161 பாடசாலைகளை உருவாக்கி நிர்வகித்து வந்தது. அத்தனையும் 1960-1961இல் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தத் தேசிய மயமாக்கல் சிங்கள-பௌத்தர்களுக்கு சாதகமானதொன்றாக இருந்தது. பாடத்திட்டங்கள் இனி இலகுவாக மாற்றியமைக்கலாம், அனைத்து பாடசாலைகளிலும் சிங்கள மொழிக் கற்பித்தலை கட்டாயமாக்கலாம், பௌத்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்ற நிலை உருவானது. இந்தச் சூழல் சிறுபான்மையினங்களுக்கு சவாலானதொன்றாக இருந்தது. கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் இந்தத் தேசிய மயமாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தனர், கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குள் சென்று அவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசாங்கம், பொலிஸாரை களத்திலிறக்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைந்தது. வத்திக்கான் உடனடியாக தலையிட்டு, தனது பிரதிநிதியாக பம்பாயிலிருந்து கர்தினால் கிரேஷியஸை அனுப்பி, கத்தோலிக்கர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தப் போராட்டம் தொடருமானால் அது கத்தோலிக்கர்களையே கடுமையாகப் பாதிக்கும், எதிர்காலத்தில், கத்தோலிக்கர்களின் நிலை மோசமாகும் என வத்திக்கான் நினைத்தது. இந்தச் சிக்கல் நிலை கத்தோலிக்க மற்றும் ஏனைய இன-மதங்களின் உயர் குழாமினரைப் பாதிக்கவில்லை. அவர்கள் கல்விகற்ற, அவர்களது பிள்ளைகளை அனுப்பிய 'பிரபல்ய' மிஷனரிப் பாடசாலைகள் தேசிய மயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தன. மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்காது அந்த 'உயர் குழாமினரின்' பாடசாலைகளை நிர்வகிப்பது அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. இலங்கையின் முக்கிய தலைவர்களின் பிள்ளைகள் கூட அந்தப் பாடசாலைகளிலேயே கல்வி பயின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தது. தேசியமயமாக்கலின் பின் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு போதிய நிதியாதாரத்தை அரசு வழங்காமல் விட்டுவிடும் என அவர்கள் அஞ்சினர். மேலும் வடக்கு-கிழக்குக்கு அப்பால், தமிழர் சிறுபான்மையினராக உள்ள பிரதேசங்கிளிலிருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயப்படுத்தப்படலாம், அதனால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் வேறு வழியின்றி சிங்கள மொழியிலேயே கல்வி பயில வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அஞ்சினர். பாடசாலைகளின் தேசியமயமாக்கலை, சிங்கள மயமாக்கலாகவே தமிழரசுக் கட்சியினர் கண்டனர். பாடசாலைகளின் தேசியமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுதே, 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்தை ஸ்ரீமாவோ அரசாங்கம் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சி. தமிழ் மொழியின் பாவனை பற்றிய தமது குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் அஹிம்சை வழியிலான நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அறிவித்தது. 1961 பெப்பரவரி மாதத்தில் வடக்கு-கிழக்கு எங்கும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், ஒத்துழையாமைப் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது. அரசாங்கக் கச்சேரி உட்பட அரச அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடத்தினர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. திருக்கோணமலை, வவுனியா ஆகிய நகரங்களில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. தொடர்ந்து இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டங்களால் அவை சுமுகமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திடம் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் அமுல்படுத்துமாறு கோரப்பட்டபோது, ஸ்ரீமாவோவின் வலதுகரமாகவும், அன்றைய ஸ்ரீமாவோ அரசின் மூளையாகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'அது உருவாக்கப்பட்ட காலச்சூழல் வேறுபட்டது. இன்று அதனை நடைமுறைப்படுத்தனால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள தீவிரவாதிகளுக்கு சாதகமானதாக அமையும்' என 1961 பெப்ரவரியில் நடந்த அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறியிருந்தார். சத்தியாக்கிரகம் வடக்கு-கிழக்கில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதனைக் கண்டு, கள நிலவரங்களை அறிந்து வர 'இம்புல்கொட வீரயா' எஸ்.டி.பண்டாரநாயக்கவும், அன்று நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர். விமானநிலையத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அஹிம்சை வழியில் நடந்த சத்தியாக்கிரக, ஒத்துழையாமைப் போராட்டங்களையும் கண்டனர். தமிழரசுக் கட்சியனரின் கோரிக்கையோடு கொழும்பு திரும்பியவர்கள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறியபோது, இதுபற்றி பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசுமாறு ஸ்ரீமாவோ சொன்னதாகவும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசிய போது அவர் 'நாங்கள் விட்டுக்கொடுத்தால் சிங்கள மக்களின் எதிர்வினை எப்படியிருக்கும் என சிந்தியுங்கள்' என அவர் கேட்டதாகவும், அதற்கு தொண்டமான் 'ஆனால் நீங்கள் கடும் நிலைப்பாட்டை எடுக்கும் போது, தமிழ் மக்களின் எதிர்வினையைப் பற்றியும் சிந்தியுங்கள்' எனச் சொன்னதாகவும், அதற்கு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'எங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்வினையைவிட சிங்கள மக்களின் எதிர்வினையே முக்கியமானது எனச் சொன்னதாகவும்', பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் அலட்சியமான பதில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அவர் 'முதலில் கணவனும் (எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க), பிறகு மனைவியும் (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க), இப்போது மருமகனும் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க) சிங்கத் தீவிரவாதிகளைப் பற்றியே யோசிக்கிறார்கள். தமிழர்கள், தமிழர்களின் உணர்வுகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. இதற்கெல்லாம் சிங்கள இனம் என்றாவது ஒருநாள் விலை கொடுக்க வேண்டி வரும்' எனக் கூறியதாகவும் தனது கட்டுரையொன்றில் கே.ரீ.ராஜசிங்கம் குறிப்பிடுகிறார். உண்மையில் கணவனும், மனைவியும், மருமகனும் மட்டுமல்ல, மகளும் கூட இந்தப் பட்டியலில் எதிர்காலத்தில் சேர்ந்து கொண்டார் என்பது இந்த கறுப்பு வரலாற்றின் தொடர்ச்சி. சிங்கள மக்களின் நலன், சிங்கள மக்களின் உணர்வு என குறுந்தேசிய அரசியலுக்குள் சிங்கள மக்களை இழுத்துச் சென்றது இந்த அரசியல் தலைமைகள்தான். நேர்மையான நல்ல அரசியல் தலைமை யாவரையும் ஒன்றிணைக்கும், உள்ளடக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பியிருக்கும், ஆனால் பதவிக்கான போட்டியில், மக்களுக்குள் புதைந்துகிடக்கும் குறுந்தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் தட்டியெழுப்பி, அதற்கு தமது அரசியலால் உரமிட்டு வளர்த்து, இந்த நாட்டை இனவாதத்தின் விடுபடமுடியாத பிடிக்குள் சிக்கவைத்த கைங்கரியத்தை தொடர்ந்து வந்த எல்லா அரசியல் தலைமைகளும் செய்தன. 1961 பெப்ரவரியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமைப் போராட்டங்கள் கடும் நிலையை அடைந்திருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/158663/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B7-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-#sthash.cZfiizF6.dpuf Quote Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 16, 2015 தொடங்கியவர் Share Posted November 16, 2015 (edited) 'தனிச் சிங்கள' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழி போராட்டம் என்.கே.அஷோக்பரன் LLB(Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14) 1961ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கெதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும், ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் கையெழுத்திட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று பொதுச் சேவை உத்தியோகத்தர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தில் 'அன்புடைய சகோதரரே, உங்களுக்கெதிராக தனிப்பட்ட குரோதமேதும் எமக்கில்லை. ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் 'தனிச் சிங்கள' சட்டத்தை நீங்கள் அமுல்படுத்தும் பணியிலிருந்தால், உங்களிடம் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். சிங்களம் பேசும் மக்களுக்கு சிங்களமொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ்மொழி இருக்க வேண்டும். நீதியற்ற, ஜனநாயகமற்ற அரசாங்கமானது, வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் தமிழ்மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்ற தமிழர்களின் ஏகமனதான கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மாறாக, அரசாங்கமானது சிங்களத்தை எங்கள் தொண்டையினுள் திணிக்கப்பார்க்கிறது. அரசாங்கத்தினது இந்த கொடுங்கொள்கையை எதிர்ப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் பிறப்புரிமைக்காக நாங்கள் வாழ்வா-சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆதலால், நாங்கள் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிங்களத்தில் வேலை செய்யாதீர்கள். சிங்கள மூலமான எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடலிலும் ஈடுபட வேண்டாம். சிங்களத்தில் எந்த முத்திரையையும் பதிக்க வேண்டாம், சிங்களத்தில் கையெழுத்திடவும் வேண்டாம்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆங்கிலம் என்பது அந்நிய மொழி, 150 ஆண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது. அக்காலத்தில் கல்விபெற்ற இலங்கையர் ஆங்கிலத்திலேயே கல்வி கற்று தேர்ந்து நிர்வாக சேவையில் ஆங்கிலத்திலேயே பணிபுரிந்தனர். சுதந்திரத்துக்குப் பின், காலனித்துவத்தின் எச்சங்களைத்தாண்டி சுதேசிய மொழிக்கும், கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதே. அநேக காலனித்துவ நாடுகளும் காலனித்துவ அடையாளங்களைக் கைவிட்டு, தமது சுதேசிய அடையாளங்களை மீட்டுக்கொள்ளும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தின. இலங்கையிலும் சுதேசிய மொழிகளையும், கலாசாரங்களையும் மீட்டெடுத்து, அவற்றுக்குரிய இடத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதனைச் செய்யும் போது பெரும்பான்மையினரின் மொழியான சிங்களத்தை மட்டும் முன்னிறுத்தி, சிறுபான்மையினரின் மொழியான தமிழைப் புறந்தள்ளியமையானது சுதேசியத்தை முன்னிறுத்தும் செயலாக அன்றி, பெரும்பான்மையினரின் பேரினவாதத்தை முன்னிறுத்தும் செயலாகவே அமைந்தது. ஒட்டுமொத்த இலங்கையிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருந்தபோதும் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட முன்பு மலையகத்தின் அநேக பிரதேசங்களிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஆகவே, தமிழ் மக்களுடைய மொழியுரிமையைப் புறந்தள்ளி, சிங்களத்தைத் திணித்ததானது இலங்கை அரசியல் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத பெருங்கறையாக உருவாகிவிட்டிருந்தது. இதுவே பலதசாப்தங்களாக ஓடிய இரத்த வெள்ளத்துக்கும் மூலகாரணமானது. 1961 பெப்ரவரி 4 சுதந்திரதினத்தன்று 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் பிரதிகளையும், நீதிமன்ற மொழிச் சட்டத்தின் பிரதிகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளையும் சவப்பெட்டியொன்றிலிட்டு, உரும்பிராயிலிருந்து யாழ்ப்பாணம்வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று, இறுதியில் அதற்கு ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினரான வி.ஏ.கந்தையா இறுதிக் கடன்களைச் செய்து எரியூட்டி, சிங்களத் திணிப்புக்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார். 1961 பெப்ரவரி 20, சத்தியாக்கிரக போராட்டங்கள் வடக்கு, கிழக்கெங்கும் இடம்பெற்றன. அரச அலுவலகங்களை சத்தியாக்கிரகிகள் முற்றுகையிட்டு, 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றன. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோள் இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து 1961 மார்ச் 25இல் வானொலியினூடாக தேசத்துக்கு உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 'எந்தத் தாமதமுமின்றி சத்தியாக்கிரகத்தை உடனடியாக கைவிடுமாறு, சத்தியாக்கிரகம் இருக்கும் தலைவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் பிரச்சினைகளை கேட்க நாம் தயாராக இருக்கிறோம், உரியவற்றைக் கருத்திற்கொண்டபின் தேவையேற்படும் இடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறோம். எனக்கு மேலும் கிடைத்துள்ள தகவல்களின் படி, குறித்த அரசியல் அமைப்புக்கள் சில, தமிழ் மக்களை மொழி உரிமைகளைக் காட்டி தவறாக வழிநடத்தி, வடக்கு- கிழக்கில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதினூடாக தனி நாடொன்றை ஸ்தாபிக்க முயல்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது' எனக் குறிப்பிட்டார். பிரதமரின் வேண்டுகோளைப் பரிசீலித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்தது. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோளானது, எந்தவித நிபந்தனையுமின்றி எமது சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடக் கோரியதற்கு ஒப்பானது. அவர், எமக்கு எதனையும் தருவதற்கு உறுதியளிக்கவில்லை. குறைந்த பட்சம் எமது மொழியுரிமை பற்றி பரிசீலிப்பதாகக் கூட உறுதிமொழியொன்று தரவில்லை மாறாக 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமானால் அதுபற்றிக் கவனத்தில்கொள்வது பற்றியே அவர் பேசினார். ஆகவே, பிரதமரது வேண்டுகோளானது தெளிவற்றதொன்றாக, நிச்சயமற்றதொன்றாகவே இருக்கிறது, இந்த விஷயம் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றிக் கூட அவர் எந்த முன்மொழிவையும் வைக்கவில்லை என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார். பிரதமரானவர் உண்மையில் நல்லெண்ணங்கொண்டிருப்பின் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்தவேனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது, தமிழர்கள் 'தனிநாடு' கேட்கிறார்கள் என்ற பிரிவினைப் பயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் விதைக்கும் விதத்திலேயே தனது பேச்சை அமைத்திருந்தமை கவலைக்குரியது. சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி என்ற யதார்த்தம் பெரும்பான்மை மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை இந்நிலையில், 1961 ஏப்ரல் 4ஆம் திகதி நாட்டில், குறிப்பாக வடக்கு-கிழக்கில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றி ஆராய அமைச்சரவை கூடியது. அமைச்சர் ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான கடும்போக்காளர்கள் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் மூலம் சத்தியாக்கிரகம் அடக்கப்பட வேண்டும் எனக் கூறினர். அமைச்சர் சி.பி. டி சில்வா, சாம் பி.ஸி. ஃபெணான்டோ ஆகியோரைக் கொண்ட மிதவாதப்போக்காளர்கள் இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினர். அமைச்சரவை தமிழ்த் தலைவர்களோடு பேசுவதற்கு ஒப்புதல் அளித்தது. சாம் பி.ஸி.ஃபெணான்டோ, தனது நண்பரும் முன்னாள் மன்றாடியார் நாயகமுமாகிய எம். திருச்செல்வம் அவர்களூடாக, சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையை முயற்சித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். சா.ஜே.வே. செல்வநாயகம், எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் நீதி அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோவை, எம்.திருச்செல்வத்தின் இல்லத்தில் சந்தித்துத்துப் பேசினர். ஆனால், எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. செல்வநாயகம் சாம் பி.ஸி. ஃபெணான்டோவிடம் தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கையளித்தார். தமிழ்மொழி, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் இருத்தல், 'தனிச் சிங்கள' சட்டத்தினால் அல்லற்படும் தமிழ் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அத்துடன் வடக்கு-கிழக்குக்கு வெளியில்வாழும் தமிழ் பேசும் மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும் என்ற குறைந்த பட்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சியோ, முக்கிய தமிழ்த் தலைமைகளோ மிகக் குறைந்த பட்சமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான சமரசத்துக்கு தயாராகவே இருந்தார்கள். ஆனால், அந்தக் குறைந்தபட்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ, அதனை நிறைவேற்றுவதற்கோ சிங்களத் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களால் தொடர்ந்து சொல்லப்பட்ட காரணம் நாம் இதனை ஏற்றுக்கொண்டால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதாகும். சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எங்கே தாம் அவர்களை விசனமடையச் செய்துவிட்டால் அது எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்ற எண்ணத்தால், தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய ஒவ்வொரு அரசாங்கமும் இனமுறுகலைத் தீர்ப்பதில் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத்தவறின. அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோ, தமிழரசுக் கட்சியினரின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை 1961 ஏப்ரல் 6ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அமைச்சரவை தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தீர்மானித்தது. ஏப்ரல் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சி.பி. டி சில்வா, தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கை உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்துடன் ('தனிச் சிங்கள' சட்டத்துடன்) முரண்படுவதால் அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் தொடர்வதைத் தவிர வேறுவழியில்லை என தமிழரசுக் கட்சி அறிவித்தது. தமிழரசு முத்திரை வெளியீடு ஒத்துழையாமை என்பது, அரச இயந்திரம் ஒன்று செயற்படுவதற்கு ஒத்துழைப்பை மறுத்தல். அதுபோல குடியியல் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற போராட்டம் என்பது அஹிம்சை வழயிலான அறப்போராட்ட வடிவமாகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தனது 'குடிசார் சட்டமறுப்பு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹென்றி டேவிட் தூரோ, காந்தியின் போராட்ட வடிவங்களாக சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை மற்றும் குடியியல் சட்டமறுப்பு என்பன இருந்தன. இந்த போராட்ட வடிவத்தை அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கையாண்டார். குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஒரு படியாக அஞ்சலகக் கட்டளைச்சட்டத்தை மீற தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. அச்சட்டமானது முத்திரைகள் வெளியிடும், அஞ்சல் சேவை நடத்தும் அதிகாரத்தை தபால் திணைக்களத்துக்கு வழங்கியது. 1961 ஏப்ரல் 14 அன்று இலங்கை தமிழரசுக் கட்சி 'தமிழரசு' முத்திரைகளை வெளியிட்டது. சா.ஜே.வே.செல்வநாயகம் தமிழரசு தபாலகத்தில் தபால் அதிபராக இருந்து முதலாவது 10 சத முத்திரையை விற்பனை செய்ய, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 'உடுப்பிட்டிச் சிங்கம்' எம்.சிவசிதம்பரம் அதனை வாங்கிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஓரங்கமாக தமிழரசு தபால் சேவை முன்னெடுக்கப்பட்டது. எம்.சிவசிதம்பரம் மற்றும் வி.என்.நவரட்ணம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசு தபால்சேவையில் தபாற்காரர்களாக அஞ்சல் விநியோகிக்க முன்வந்தனர். இந்த குடியியல் சட்டமறுப்புப் போராட்டம் அரசாங்கத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. - See more at: http://www.tamilmirror.lk/159193/-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B9-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.LiWdjWGV.dpuf Edited November 16, 2015 by நவீனன் Quote Link to comment Share on other sites
Recommended Posts