Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?


Recommended Posts

அனெக்‌ஷர் ‘B’யும் அனெக்‌ஷர் ‘C’யும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 125)

அமிர்தலிங்கத்தை அதிர்ச்சிக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கும்வாறாக, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்திருந்த அனெக்‌ஷர் (பின்னிணைப்பு) ‘பி’யும் இணைக்கப்பட்டிருந்தது. இது, டெல்லியில் இணங்கியவற்றிலிருந்து வேறுபட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கியிருந்தது.   

தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்து, நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்தான் தாம் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவோம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் திட்டவட்டமான முடிவு. 

இதனை இந்தியாவிடமும் ஊடகங்களிடமும் அவற்றினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும் அமிர்தலிங்கம், பலமுறைகள் தொடர்ந்து எடுத்துரைத்திருக்கிறார்.   
இந்த நிலையில், அனெக்‌ஷர் ‘பி’யின் முதலாவது விடயமாக, ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்று ஜே.ஆர் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தமையைப் பெரும் சதியாக அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பார்த்தனர்.   

ஏற்கெனவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்பதை ஜே.ஆர் முன்னிலைப்படுத்தியதானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களோடு, தமிழ் அரசியல் தலைமைகளை முரண்பட வைக்கும் நடவடிக்கையாகவே அமிர்தலிங்கம் பார்த்தார். அதனை கோபால்சாமி பார்த்தசாரதியிடம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.   

மேலும், சர்வஜன வாக்கெடுப்பின்றி, உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பிராந்திய சபைகளாக இணைய, ஜே.ஆர் டெல்லியில் சம்மதித்திருந்த போதும், அனெக்‌ஷர்  ‘பி’யில்‌, சர்வசன வாக்கெடுப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. 

தாம் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டதாக  அமிர்தலிங்கம் உணர்ந்திருக்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பார்த்தசாரதி,  அமிர்தலிங்கம் குழுவினரை அவசர உயர்மட்டச் சந்திப்புக்காக டெல்லிக்கு வரவழைத்தார்.   

இந்திரா - அமீர் மீண்டும் சந்திப்பு  

1983 டிசெம்பர் 30ஆம் திகதி, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் டெல்லி சென்றடைந்தனர். அங்கு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் மற்றும் கோபால்சாமி பார்த்தசாரதி ஆகியோரைச் சந்தித்து, ஜே.ஆரின் ஏமாற்றுத் தந்திரம் பற்றித் தமது விசனத்தை வௌிப்படுத்தினர்.  

 இந்த விடயம், இந்திரா காந்திக்கும் பெரும் விசனத்தையும் அதிருப்தியையும் எற்படுத்தியிருந்தது. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு மாறாக, ஜே.ஆர் செயற்பட்டதை, தனக்கு ஜே.ஆர் அளித்த வாக்குறுதியிலிருந்து மீறியதாகவே இந்திரா காந்தி பார்த்திருக்க வேண்டும்.  

 அமிர்தலிங்கத்திடம், “நீங்கள் கவலைப் படாதீர்கள். நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்ன இந்திரா, 1983 டிசெம்பர் 30ஆம் திகதி மாலையே, ஜே.ஆரைத் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு பேசினார்.   

இந்திரா - ஜே.ஆர் மீண்டும் தொலைபேசி உரையாடல்  

ஜே.ஆரிடம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும் தமிழ் மக்களினதும் மனநிலையை எடுத்துரைத்த இந்திரா காந்தி, எழுந்திருக்கக்கூடிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது பற்றி ஜே.ஆரிடம் பேசினார்.   

தன்னுடைய அமைச்சர்களோடு, இது பற்றிப் பேசிவிட்டு அறியத்தருவதாகச் சொன்ன ஜே.ஆர், தன்னுடைய அமைச்சர்களோடு பேசிவிட்டு, பார்த்தசாரதி மீண்டும் இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்த, பச்சைச் சமிக்ஞை காட்டினார். 

டெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அமிர்தலிங்கம், ஜே.ஆர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றஞ்சுமத்தினார்.   

மேலும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கைவிடாது என்பதே, தமது உறுதியான நிலைப்பாடு என்பதையும் வலியுறுத்தினார்.  

இந்திய உபாயம்  

இதேவேளை, 1983 டிசெம்பர் 31ஆம் திகதி, இலங்கை விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட கூட்டமொன்றை இந்திரா காந்தி நடாத்தினார். வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ரா, கோபால்சாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கைக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர். 

 இந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தி, இலங்கை தொடர்பான ‘இரட்டைப்படை நடவடிக்கை’யை முன்னெடுப்பது பற்றிய முடிவை முடுக்கிவிட்டார்.  

 முதலாவதாக, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் செயற்பாட்டை வௌிவிவகார அமைச்சு கொண்டு நடத்த வேண்டும் என்றும், பின்புலத்தில் இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, ஆயுத ரீதியாகப் பலப்படுத்தும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதென, தனது நூலொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.  

ஜே. ஆரின் உறுதியற்ற நிலை  

இந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அனெக்‌ஷர் ‘பி’யில் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் நடவடிக்கையை ஜே.ஆர் முன்னெடுத்தார். 

அனெக்‌ஷர் ‘பி’ முன்மொழிவுகள், அரசாங்கத்தின் முன்மொழிவுகளாகவே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் 30 மாலை, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தினூடாக,  அதன் செயலாளர் நாயகம் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்ஹ வௌியிட்ட ஊடக அறிக்கையில், அனெக்‌ஷர் ‘பி’யில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவுகள் அல்ல என்றும் சர்வகட்சி மாநாடு இறுதியாகத் தீர்மானிக்கும் முன்மொழிவுகளையே சகல கட்சிகளும் பின்னர் அரசாங்கமும் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.   

இந்த விடயத்தில், அர்ப்பணிப்புடனான செயற்பாட்டுக்கு ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை, தனது அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைக்க ஜே.ஆர் தயக்கம் காட்டியமைக்குக் காரணம், பௌத்த அமைப்புகளிடமிருந்து உண்டான எதிர்ப்பு. 

சர்வகட்சி மாநாட்டில், பதிவுசெய்யப்பட்ட சகல கட்சிகளை மட்டுமல்லாது, பௌத்த பிக்குகளையும் பௌத்த அமைப்புகளையும் ஜே.ஆர் உள்ளிணைத்திருந்தார்.  
 டெல்லி இணக்கப்பாட்டை, அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைப்பதற்கு, பௌத்த அமைப்புகளின் இணக்கம் இருக்கவில்லை என்பதை ஜே.ஆர் அறிந்ததும், ஜே.ஆர் இலாவகமாக அதைத் தவிர்த்து, அனெக்‌ஷர்‘பி’யை முன்வைத்தார்.

அதற்கு, இந்தியாவிடமிருந்து எதிர்ப்பு வந்ததும், அனெக்‌ஷர் ‘பி’யிலிருந்து தன்னையும் தனது அரசாங்கத்தையும் அந்நியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.  
 அனெக்‌ஷர் ‘பி’ ஆனது, அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவு இல்லாவிட்டால், அது யாருடைய ஆவணம், சர்வ கட்சி மாநாட்டு அழைப்பிதழோடு அது ஏன் இணைக்கப்பட்டிருந்தது போன்ற கேள்விகள் எழுவது நியாயம். 

அதற்கு அது, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தின் ஆவணம் என்ற பதில் முன்வைக்கப்பட்டது. ஜே.ஆர் அரசாங்கமானது, இந்த விடயத்தில் பட்டவர்த்தனமாக, எதுவித அர்ப்பணிப்புமின்றிச் செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.   
இது மட்டுமல்ல, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்த விடயத்திலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க கேட்டுக் கொண்டதன்படியே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

இது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விசனமுறச் செய்தது. நடத்துவது தானாக இருந்தாலும், நடப்பவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்க ஜே.ஆர் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்தார்.   

இந்த இடத்தில் ஜே.ஆர், தனது சிங்கள பௌத்த வாக்குவங்கி பற்றி அச்சம் கொண்டிருந்தார். அதனால்தான் அவர்கள் இணங்காத ஒரு தீர்வைத்தர அவர் முன்வரவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். இது யதார்த்தத்துக்கு முரணான வாதம்.  

 ஜே.ஆரின் பல முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பிரபல்யமாக இருக்கவில்லை. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும் அதனடிப்படையிலான தனியார் மயமாக்கலுக்கும் கூட கடும் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறியும் ஜே.ஆர்தான் எண்ணியதைச் செய்து முடித்தார்.   

ஆகவே, இனப்பிரச்சினை விவகாரத்தில், ஜே.ஆரினால் தனது வாக்கு வங்கியையும் அழுத்தக் குழுக்களையும் தாண்டிச் செயற்பட முடியாது என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது. 

இங்கு பிரச்சினை ஜே.ஆரின் நிலைப்பாட்டில்தான் இருந்தது. இந்திய மற்றும் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு ஜே.ஆர் சம்மதித்தாரேயன்றி, அவரது விருப்பும் எண்ணமும் அதுசார்ந்து இருந்ததாகத் தெரியவில்லை.   

அமெரிக்கா, இஸ்‌ரேல் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஜே.ஆர் தனது இராணுவ உறவுகளை அதிகரித்துக் கொண்டு வந்தார். 

ஆகவே, அவரது எண்ணம் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளில்தான் இருந்தது என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாடு 

இதனிடையே டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சென்னையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன் ஒரு சந்திப்பை நடத்த விரும்பினார். சர்வகட்சி மாநாட்டில், தாம் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதே குறித்த சந்திப்பை நடத்துவதற்கான அமிர்தலிங்கத்தின் நோக்கமாக இருந்தது.   

ஆனால், குறித்த அழைப்புக்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமக்குச் சம்மதமில்லை என்ற செய்தியை சில தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அமிர்தலிங்கத்துக்கு அனுப்பி வைத்தன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோருக்கிடையேயான முறுகல் தொடர்ந்து கொண்டிருந்தது.  
மீண்டும் இலங்கை வந்தார் பார்த்தசாரதி

1984 ஜனவரி மூன்றாம் திகதி, கோபால்சாமி பார்த்தசாரதி, இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த பார்த்தசாரதி, இம்முறை கடுந்தொனிப் போக்கை கையாண்டார். டெல்லியில், பார்த்தசாரதியோடு ஏற்பட்ட உடன்பாட்டை ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க வேண்டும் என்பது பார்த்தசாரதியின் வேண்டுகோளாக இருந்தது. மேலும், தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பு உறுதியாகும்வரை, தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப்போவதில்லை; இணைந்த வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கான சுயாட்சிக் கட்டமைப்புத்தான் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை இம்முறை பார்த்தசாரதி, சற்றே கடுந்தொனியில் ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார். 

இந்தியாவுடன் முரண்படும் அரசியல் வலு, ஜே.ஆருக்கு இல்லை  

 ஜே.ஆர் தனது உற்ற நண்பனாகக் கருதிய அமெரிக்கா கூட, இந்தியாவுடன் முரண்பட வேண்டாம் என்றே ஜே.ஆருக்கு ஆலோசனை கூறியிருந்த நிலையில், பார்த்தசாரதியோடு டெல்லியில் இணங்கிய விடயங்களை, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் இணைந்த, அனெக்‌ஷர் ‘சி’யாக அனைவருக்கும் அனுப்பி வைக்க ஜே.ஆர் சம்மதித்தார்.  

 அனெக்‌ஷர் ‘சி’ உடன்பாடு ஏற்பட்டதும் தமிழ் நாட்டிலிருந்த அமிர்தலிங்கத்தைத் தொடர்பு கொண்ட பார்த்தசாரதி, அவர்களை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள உடனடியாக இலங்கை செல்லுமாறு அறிவுறுத்தினார்.   

மீண்டும் இலங்கை வந்த அமீர் குழுவினர்  

1984 ஜனவரி நான்காம் திகதி, ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர், அமிர்தலிங்கம் குழு மீண்டும் இலங்கை வந்தது. 

இலங்கை வந்தடைந்த அமிர்தலிங்கம் குழுவினர், அதியுச்ச இராணுவப் பாதுகாப்போடு, கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.   

இந்தியாவின் அழுத்தம், அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கச் செய்திருந்தாலும், அவருக்கும் நடப்பவைகள் பற்றி நிறைய அதிருப்திகள் இருந்தன. 

ஜே.ஆரின் நேர்மையீனம் பற்றி ஏற்கெனவே அனுபவத்தில் அறிந்திருந்தபோதும், மீண்டும் அது கண்முன்னால் நடப்பதைத் தெரிந்துகொண்டும், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய சூழல் அமிர்தலிங்கத்துக்குச் சிக்கலாகவே இருந்தது.  

 அனெக்‌ஷர் ‘சி’ விவகாரம், ஜே.ஆரிடம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான நல்லெண்ணம் இருக்கவில்லை என்பதையே காட்டியிருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் இதையே அமிர்தலிங்கத்திடம் வலியுறுத்திக் கூறியிருந்தன. இந்தநிலையில் இந்தியாவின் செல்வாக்கும் அழுத்தமும்தான் அமிர்தலிங்கம் கொண்டுள்ள ஒரே பெரும் நம்பிக்கையாக இருந்தது.  

அனெக்‌ஷர் ‘சி’யோடு இந்தப் பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணியபோது, அனெக்‌ஷர் ‘சி’ வேறொரு பிரச்சினையை உருவாக்கியது.   

( அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனெக்-ஷர்-B-யும்-அனெக்-ஷர்-C-யும்/91-209646

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
சர்வகட்சி மாநாடு ஆரம்பம்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 126)

அனெக்‌ஷர் “சி” விவகாரம் 

சர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை அவ்வாறு முன்னிறுத்த, ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. 

யாருடைய முன்மொழிவுகள் என்று சொல்லப்படாமலே, அனெக்‌ஷர் “சி” முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விடயம், “கொழும்பிலும் டெல்லியிலும் நடந்த கலந்தாலோசனையின் விளைவாக எழுந்த முன்மொழிவுகள்” என்பது தான். 

அப்படியானால் அது ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பார்த்தசாரதி ஆகியோரின் இணைந்த முன்மொழிவுகளாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால் ஜே.ஆர், இதைத் தனது முன்மொழிவுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை, இதிலிருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தார். 

ஜே.ஆரின் இந்தப் போக்கு, மற்றைய பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஏனெனில், சர்வகட்சி மாநாட்டுக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பான சர்வகட்சிக் கூட்ட முடிவுக்குப் பின்னர், அம்முடிவை, சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தினதும் ஒருமித்த முடிவு என்ற பாங்கில், ஜே.ஆர் ஏற்கனவே பொதுவிலே முன்னிறுத்தி, தன்னை முடிந்தவரை அந்த முடிவிலிருந்து அந்நியப்படுத்தவே முயன்றமை, வௌிப்படையாகத் தெரிந்தது. 

ஆகவே, புதிதாக வந்திருக்கும் அனெக்‌ஷர் “சி” பற்றியும், சர்வகட்சி மாநாடு பற்றியும் கலந்தாலோசிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி கூடியது. அந்தக் கூட்டத்தில் ஜே.ஆர் சூழ்ச்சி செய்ய முயல்கிறாரோ என்ற சந்தேகம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” பற்றி, ஜே.ஆரிடம் மேலதிக விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க, “நான் அழைக்கச் சொன்னதால் தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஜனாதிபதி ஜே.ஆர், ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தற்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் தமது முன்மொழிவுகளை முன்வைக்க, ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். 

“ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, தனது முன்மொழிவுகளை இன்னும் முன்வைக்கவில்லை. அவர் எம்மை முன்மொழிவுகளைச் முன்வைக்கச் சொல்லி, நாம் சொன்னதனால்தான், தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கினேன் என்று, முழுநாட்டுக்கும் சொல்லும் வகையிலான சூழ்ச்சி ஒன்றுக்கு முயல்கிறார் என்றே நாம் ஐயம் கொள்கிறோம். ஆகவே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்மொழிவுகளை முன்வைக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளின் இந்தப் போக்கானது, தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வை வழங்குவது, ஏதோ செய்யத்தகாத தீட்டைப் போன்றதும், அதைச் செய்வது பெரும் பாவகாரியம் போன்றதுமான தோற்றத்தை உருவாக்குவது போலுள்ளது.

உண்மையில் இந்த நிலை வருவதற்குக் காரணமே, இந்த இரண்டு கட்சிகளும்தான். இனரீதியில் பிளவடைந்த வாக்குவங்கி எனும் சவக்குழியைத் தோண்டியதில், இந்த இரு கட்சிகளின் பங்கு முக்கியமானது. அதுவும் பண்டாரநாயக்கவின் பங்கு, மிக முக்கியமானது. அந்த சவக்குழியை விட்டு வௌியே வருவதற்கு, இரு கட்சிகளும் தயங்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தது. 

ஏனென்றால், ஒன்று அதற்கு முயலும் போது, இன ரீதியாகப் பிளவடைந்த வாக்குவங்கியை பயன்படுத்தி மற்றையது காலை வாரிவிடுமோ என்ற அச்சம் இருதரப்பிற்கும் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்தது சிறிமாவோவின் விருப்பின் பேரில்தான் என்று ஜே.ஆர் சொல்லியமைக்கும், எந்தவொரு முன்மொழிவுகளையும் முதலில் தானோ, தனது கட்சியோ முன்வைக்காமைக்கும் இதுதான் காரணம். 

ஜே.ஆரின் இந்த போக்கு பற்றிக் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் அநுர பண்டாரநாயக்க, “ஜனாதிபதி ஜே.ஆர், பார்த்தசாரதியோடு தான் இணங்கிய முன்மொழிவுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்தியுள்ளதானது, பார்த்தசாரதியை மட்டுமல்ல, முழு நாட்டையும் ஏமாற்றும் செயல்” என்று குறிப்பிட்டார். அனெக்‌ஷர் “சி” விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல, மஹஜன எக்ஸத் பெரமுனவும் (மக்கள் ஐக்கிய முன்னணியும்) அதிருப்தியடைந்திருந்தது. 

ஜே.ஆரின் தந்திரோபாயம்

நடந்தவைகளை முழுமையாகப் பார்க்கும் போது, ஜே.ஆரின் நோக்கம் மிகத் தௌிவாகப் புலப்படுகிறது. ஜே.ஆர், பேச்சுவார்த்தை மூலமான அதிகாரப் பகிர்வுத் தீர்வைவிட, இராணுவ ரீதியிலான தீர்வையே விரும்பினார். தமிழர் மத்தியில் ஜனநாயக அரசியல் தலைமை பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பலமடைவதை, ஜே.ஆர் சாதகமானதாகவே பார்த்திருக்க வேண்டும். 

அப்போதுதான் அந்தப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, இராணுவ ரீதியில் அடக்க முடியும். இடைநடுவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அழுத்தத்தின் விளைவிலானது. குறிப்பாக இந்தியாவின் அழுத்தத்தின் பாலானது. இந்தியாவுடன் முரண்படும் வலு ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதனை நிச்சயம் ஜே.ஆர் செய்திருக்கக்கூடும், ஆனால் அது அவருக்கு இருக்கவில்லை. 

தனது முழுமையான விருப்பமின்றி பார்த்தசாரதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய சூழல் ஜே.ஆருக்கு இருந்தது. அவர் விரும்பி அதைச் செய்திருந்தால், அதைச் சுலபமாக அவர் நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தியும் இருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யாதது, அவரது விருப்பமற்ற மனநிலையைப் பறைசாற்றுகிறது. அந்த உடன்பாட்டை ஜே.ஆர், தானாக இனி நிராகரிக்க முடியாது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்புக் கட்சிகள் அதை நிராகரித்தால், சர்வகட்சி மாநாடு அதை நிராகரித்தது என்று, ஜே.ஆரால் இந்தியாவிடம் அந்த நிராகரிப்பை முன்வைக்க முடியும். அவற்றை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்களுக்குத் தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவையே முன்வைத்தன என்று, பெரும்பான்மை வாக்குவங்கி முன்பு சொல்லிவிட முடியும். ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவை, இந்தத் தந்திரோபாயத்தை உணர்ந்த நிலையில், ஜே.ஆர் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தலை முன்னெடுத்தார். 

ஜே.ஆர் - பௌத்த மகாசங்கக் குழு சந்திப்பு

1984ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, நாயக்க தேரர்களை உள்ளடக்கிய பௌத்த மகா சங்கக் குழுவோடு, சந்திப்பொன்றை ஜே.ஆர் நடத்தினார். 

இந்தச் சந்திப்பில், அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி பலிபனே சந்தானந்த மகாநாயக்க தேரர், அமரபுர ஸ்ரீ தர்மரக்கித நிகாயாவின் பீடாதிபதி மதிஹே பண்ணசிஹ தேரர், அமரபுர ஸ்ரீ சத்தம்மவாச நிக்காயாவின் அதிபதி தலல்லே தம்மானந்த தேரர், வல்பொல ராஹுல தேரர், பெல்லன்வில விமலரட்ண தேரர், மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கலந்துகொண்டிருந்தனர். 

இந்த மகா சங்கக் குழு, அனெக்‌ஷர் “சி” முன்மொழிவுகளை, தாம் முழுமையாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஜே.ஆரிடம் தெரிவித்தது. மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை விட மேம்பட்டதொரு தீர்வுக்கு, தாம் சம்மதிக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருந்தது. 

ஜே.ஆர் எண்ணியது நடந்துவிட்டது. பார்த்தசாரதியோடு டெல்லியில் ஏற்பட்ட அனெக்‌ஷர் “சி” உடன்பாட்டுக்கு, இலங்கையில் செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குகளிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்துவிட்டது. அனெக்‌ஷர் “சி”-ஐத் தவிர்ப்பதற்கு, இதனை பலமானதொரு காரணமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு, ஜே.ஆருக்கு கிடைத்துவிட்டது.

சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு

1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு நடைபெறவிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” தொடர்பில் உரிய விளக்கத்ததை, ஜனாதிபதி ஜே.ஆர் வழங்காததனால், சர்வகட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மஹஜன எக்ஸத் பெரமுனவும், ஜனவரி 8ஆம் திகதி அறிவித்தன. 

ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள் இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலை, வேறுமாதிரியாக இருந்தது.

அமீருக்கு அதிர்ச்சி தந்த யாழ். விஜயம்

1984 ஜனவரி 4ஆம் திகதி கொழும்பை வந்தடைந்திருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர், ஜனவரி 8ஆம் திகதி, யோகேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் தன்னிகர் தலைவனாக கருதப்பட்ட, தமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு தோள்களில் தாங்கி ஆராதிக்கப்பட்ட அமிர்தலிங்கத்துக்கு, அதிர்ச்சிமிக்கதொரு வரவேற்புக் காத்திருந்தது. 
 
யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த அமிர்தலிங்கம் குழுவினரை, சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கும் சுவரொட்டிகள் வரவேற்றன. 

அமிர்தலிங்கத்தின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த யாழ். பல்கலைக்கழகத்துக்கு அமிர்தலிங்கம் விஜயம் செய்தபோது, அங்கு கரவொலிக்குப் பதிலாக, கூச்சல் சத்தமே அமிர்தலிங்கத்தை வரவேற்றது. 

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் மத்தியில் ஆதரவு இருந்ததை அமிர்தலிங்கம் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அத்துடன் தாம் தமது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் நாட்டிலில்லாத ஏறத்தாழ 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருந்த மாற்றம், அவரை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்திருக்கும். 

தமிழ் இளைஞர்களின் நிலைப்பாட்டில் அமிர்தலிங்கம், முழுமையாகக் குறைகொள்ளவும் முடியாது.

ஏனென்றால், இந்த இளைஞர்களிடம் தமிழீழக் கனவை விதைத்ததில், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரின் பங்கு முக்கியமானது.

அன்று இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டு, தோள்களில் அமிர்தலிங்கத்தைச் சுமந்து கொண்டாடக் காரணம், அமிர்தலிங்கம் “சுதந்திரத் தமிழீழத்தை அடைந்தே தீருவோம்” என்று உணர்ச்சி பொங்கப் பேசியதாகும்.

பிராந்திய சபைகளை அடைந்தே தீருவோம் என்று அமிர்தலிங்கம் பேசியிருந்தால், இரத்தத் திலகங்களும், தோள்களில் சுமந்த கொண்டாட்டங்களும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 

தான் வளர்த்துவிட்ட “தனிநாட்டுக்கான” தாகம், இன்று தனக்கெதிராகத் திரும்பியிருப்பதை, அமிர்தலிங்கம் நேரடியாக உணர்ந்து கொண்ட தருணமாக இது இருந்திருக்க வேண்டும்.

ஆனால், சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கு வேறு வழியில்லை. 

இந்தியாவின் இரட்டை வழி இராஜதந்திரக் காய்நகர்த்தலில் அமிர்தலிங்கம் தரப்பும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுத் தரப்பும் சிக்கிப் பிளவடைந்திருந்தன என்றும் இதை நாம் நோக்கலாம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்று உறுதியாக அமிர்தலிங்கத்திடம் சொன்ன இந்தியாதான், மறுபுறத்தில் தமிழீழக் கனவைச் சுமந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கியது.

இது, ஆயுதங்களைக் கொண்டு தனிநாட்டுக் கனவை நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை, தமிழ் இளைஞர்களிடம் உருவாக்கியது. 

இணக்கப்பாட்டினூடான தீர்வொன்றை அடைவதிலிருந்து தமிழ் இளைஞர்கள் விலகத்தொடங்கியதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கலாம்.

மறுபுறத்தில், தனிநாட்டின் சாத்தியப்பாடின்மையை, அமிர்தலிங்கம் குழு உணர்ந்திருந்தது.

ஏனென்றால் அமிர்தலிங்கம் நம்பிய ஒரே சர்வதேச சக்தியான இந்தியா, அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை, அமிர்தலிங்கத்துக்குத் தௌிவாக எடுத்துரைத்திருந்தது. 

தமிழ் மக்களும், தமிழ் அரசியலும் சிக்கியிருந்த மிகப்பெரிய முரண்பாட்டுச்சிக்கல் இதுதான். 

யாழிலிருந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, பெரும் இராணுவப் பாதுகாப்புடன், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்தது. 

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-மாநாடு-ஆரம்பம்/91-210000

Link to comment
Share on other sites

அநாதையான அனெக்ஷர் ‘சி’யும் தொண்டாவின் தத்தெடுப்பும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 127)

அமிர்தலிங்கத்தின் மனத்தாங்கல்  

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் நடந்த முதலாவது சர்வகட்சி மாநாடு, 1984 ஜனவரி 10ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.   

 சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துக்கான விஜயம் அளித்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் வௌிவராதவராகவே இருந்தார்.

சர்வகட்சி மாநாடு ஆரம்பிக்க முன்பு, ஊடகவியலாளர்களோடு உரையாடிய அவர், “எனது வாழ்நாள் முழுவதும், நான் அவர்களின் (தமிழ் இளைஞர்களின்) நாயகனாகவே இருந்துள்ளேன். இன்று அவர்கள், என்னைத் துரோகிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, எனது மக்களுக்கு துன்பத்தையும் அழிவையுமே கொண்டுவரும். நான், அதைத் தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனால், இந்த விடயத்தில் ஜே.ஆர் எனக்கு உதவுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர், என்னைப் பலமிழக்கச் செய்து, ‘பெடியங்களை’ பலமுறச்செய்து, பின்னர் இராணுவபலத்தால் அழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்திருக்கிறார்.   

இந்தக் கூற்றுக்குள், எத்தனை முரண்களும் உண்மைகளும் உள்ளடங்கியிருந்தன என்பதை காலங்கடந்த தரிசனம் உணர்த்துகிறது. தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் இளைஞர்களிடம் விதைத்து உரம்போட்டது யார்? தமது அரசியல் எதிரிகள், தமிழ் இளைஞர்களின் ஆயுதங்களால் மௌனமாக்கப்பட்டபோது, கள்ள மௌனம் சாதித்தது யார்? தமிழீழம் காண, இளைஞர்கள் திரண்டுவர வேண்டும் என்று, அறைகூவல் விடுத்தது யார்? இவற்றின் பின்பு, ஆயுதவழியில் தனிநாடு காணும் முயற்சி, எமது மக்களுக்குத் துன்பத்தையும் அழிவையும் தரும் என்று சொல்லும்போது, அது முரண்நகையாகிவிடுகிறது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையை, ஒரு சிறந்த அரசியல் முதலீடாகக் கருதியிருந்திருக்கலாம். ஆனால், அது இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி, வளர்ந்து பரவி, இன்று தோப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமது அரசியலை அது கடந்துவிட்டது என்னும் போதுதான், தாம் விதைத்ததன் பாரதூரத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உணரத் தொடங்கியிருந்தார்கள் என்று சொல்லலாம்.   

அமிர்தலிங்கம், உரம்போட்ட தனிநாட்டுக் கனவை, இனி அமிர்தலிங்கமே வேண்டினாலும் கலைத்துவிட முடியாத சூழல் உருவாகியிருந்ததுதான் அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஒரு வகையில் பார்த்தால், இதுபோன்றதொரு நிலையில்தான் பண்டாரநாயக்கவும் இருந்தார் எனலாம்.   

தனது அரசியல் இலாபத்துக்காக, தான் வளர்த்துவிட்ட சிங்களப் பேரினவாதத்திலிருந்து, அவர் விரும்பினாலும் கூட, வௌியே வந்துவிட முடியாத கண்ணிக்குள் சிக்கிய நிலையில், பண்டாரநாயக்க இருந்தார் என்ற கருத்தை ஒத்த நிலை. ஆனால், இதில் மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், வெறுமனே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சொன்னதால் மட்டும், தமிழ் மக்களிடையே தனிநாட்டுக்கான வேட்கை உறுதிபெற்றது என்று சொல்ல முடியாது. அவர்கள், உரம் போட்டார்கள்.  

 ஆனால், இலங்கை அரசாங்கமும் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள்தான், தமிழ் மக்களிடையே பிரிவினை எண்ணம் வேறூன்றக் காரணமாகின. 1983 ‘கறுப்பு ஜூலை’ இடம்பெற்றிராவிட்டால், ஜனநாயகத் தலைமைகளை மீறி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருக்க மாட்டார்கள்.   

சர்வகட்சி மாநாடும் ஜே.ஆரின் தந்திரோபாயமும்  

ஜே.ஆர் மீது, அமிர்தலிங்கத்துக்கு நம்பிக்கை இருக்காவிட்டாலும், ‘இந்தச் சர்வகட்சி மாநாடு என்பது, ஒரு வரலாற்று நிகழ்வு; இது ஒரு திருப்புமுனை’ என்ற கருத்தைச் சர்வகட்சி மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர், அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார்.   

சர்வகட்சி மாநாட்டுக்கு வந்த அமிர்தலிங்கம் குழுவை, ஜே.ஆர் நீண்ட புன்னகையோடு வரவேற்றதாகவும் அதைப் பார்த்த எம்.சிவசிதம்பரம், “அவ்வளவும் நஞ்சு” என்று கருத்துரைத்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். சர்வகட்சி மாநாடு பற்றி, ஜே.ஆருக்குப் பெருவிருப்பம் இருக்கவில்லை.   

அமிர்தலிங்கத்துக்கும், ஜே.ஆர் மீது நம்பிக்கையிருக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் அழுத்தத்தின் பேரில், முன்னெடுக்கப்படுமொரு விடயமாகவேதான் சர்வகட்சி மாநாடு மாறியிருந்தது. ஆனால், ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள், இங்கு மிக அவதானமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ‘ஆசியாவின் நரி’ என, தான் விளிக்கப்படுவதற்கான நியாயங்களை, ஜே.ஆர் மீண்டும் இந்தச் சர்வகட்சி மாநாட்டில் உணர்த்தியதைக் காணமுடிகிறது.    

சர்வகட்சி மாநாடாக இருந்தாலும், மத அமைப்புகளையும் உள்ளீர்த்திருந்தார் ஜே.ஆர். இதன் நோக்கம், பௌத்த மகா சங்கத்தை, இந்தச் சர்வகட்சி மாநாட்டின் பங்குதாரராக்குவதாகும். ஏற்கெனவே, ஜே.ஆருடனான சந்திப்பில், பௌத்த மகா சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பிக்குகள் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்த நிலையில், பௌத்த மகா சங்கத்தின் நிலைப்பாட்டை, ஜே.ஆர் ஏலவே அறிந்திருந்தார்.   

இலங்கையிலுள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பெயருக்கு அழைக்கப்பட்டாலும், அவர்கள் இந்தச் சர்வகட்சி மாநாட்டில், ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஒன்றுமில்லை. ஏனென்றால், வௌிப்படையாக இலங்கையில், கிறிஸ்தவ தேசிய அரசியலோ, இஸ்லாமியவாத அரசியலோ அல்லது இந்துத் தேசிய அரசியலோ அன்று நிலவவில்லை.   

ஆனால், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் மேலோங்கியிருந்தது. ஆகவே, ஒரு கிறிஸ்தவ பாதிரியாரதோ, இந்துப் புரோகிதரதோ, இஸ்லாமிய மௌலவியதோ நேரடி அரசியல் வகிபாகம் என்பது பூச்சியம் எனலாம். ஆனால், பௌத்த மகா சங்கம், இலங்கை அரசியலில் நேரடித் தாக்கத்தை செலுத்தத்தக்கது. இந்த யதார்த்தத்தின் ஊடாகத்தான், மதத்தலைமைகள் சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதை நாம் நோக்க வேண்டும்.   

ஆரம்பத்திலேயே அதிர வைத்த ஜே.ஆர்  

சர்வகட்சி மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜே.ஆர், இந்தச் சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்கள் என்று குறிப்பிட்ட சில விடயங்கள் முக்கியமானவை. அது, ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வௌிப்படையாகக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.  
 முதலாவது குறிக்கோளாக அவர் குறிப்பிட்டது, நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல்.   

இரண்டாவதாக, ஒற்றையாட்சியின் தொடர்ச்சியும் ஆட்புல ஒருமைப்பாடும். மூன்றாவதாக, எல்லாவிதமான வன்முறையையும் ஒழிக்க, இணைந்து செயற்படுதல் என்று சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்களைக் குறிப்பிட்டவர், மறந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற சொற்களையோ, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் பற்றியோ வாய்திறக்கவேயில்லை.  

“என்னைப் பெடியங்களுக்கு எதிராகத் திருப்ப, ஜே.ஆர் முயல்கிறார்” என்று அமிர்தலிங்கம், கோபத்தோடு பார்த்தசாரதியிடம் சொன்னதை, இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம். சர்வகட்சி மாநாட்டின்போதும் ஜே.ஆர் அதைத்தான் செய்திருந்தார்.

ஏற்கெனவே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதை, தமிழ் ஆயுதக் குழுக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையாக எதிர்த்திருந்த வேளையில், சர்வகட்சி மாநாடானது இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வைத் தனது குறிக்கோளாகக் கொள்வதற்கு மாறாக, ஒற்றையாட்சியைப் பாதுகாத்தல், வன்முறையை இணைந்து எதிர்த்தல் ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்தி இருந்தது. இது, அமிர்தலிங்கத்தை முழுமையாகத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, நிற்க வைக்கும் தந்திரோபாயம் என்று பொருள் கொள்ளக்கூடிய விடயமே.  

 தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தனிநாட்டுக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கச் சித்தம் கொண்டிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு நேரெதிரான ஒற்றையாட்சி, வன்முறையை இல்லாதொழித்தல் ஆகியவற்றை ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் கொள்கைகளாக முன்வைக்கும்போது, அந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் பங்குபற்றுவது, அமிர்தலிங்கம் மீதான, தமிழ் ஆயுதக் குழுக்களின் விசனத்தை, நிச்சயம் அதிகரிக்கவே செய்திருக்கும்.   

ஜே.ஆரின் தந்திரோபாயத்தை, அமிர்தலிங்கம் அறிந்திருந்தும், வேறொன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்தார் என்பது, ஒரு துன்பியல் நிலை. ஜே.ஆரின் பேச்சின் பின்பும் அமிர்தலிங்கம் அமைதியாகவே இருந்தார்.   

குமாரின் கேள்வியும் தொண்டாவின் தத்தெடுப்பும்  

சர்வகட்சி மாநாட்டில் தமிழர் தரப்பில் மூன்று கட்சிகள் கலந்துகொண்டிருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையாகும். 

முதல்நாள், அமிர்தலிங்கம் அமைதியாக இருந்தாலும், முதல்நாளே துடிப்பாக இருந்த குமார் பொன்னம்பலம், மிக முக்கியமான கேள்வியொன்றை, ஜே.ஆரிடம் முன்வைத்தார்.

 அனெக்ஷர் ‘சி’ பற்றிய கேள்வி அது. குமார் பொன்னம்பலத்தை அறிந்தவர்கள், அவரது பேச்சாற்றலையும் நன்கறிந்திருப்பார்கள். தனது தந்தையாரைப் போன்றே, ஒரு சிறந்த குற்றவியல் வழக்குரைஞரான குமார் பொன்னம்பலம், மும்மொழியிலும் செவ்வனே உரையாற்றக் கூடியவர். அத்தோடு, மிக நேரடியாகவும் சம்பந்தப்பட்டவருக்கு மிகவும் உறைக்கக்கூடிய வகையிலும் பேசும், எழுதும் சுபாவம் கொண்டவர்.  

அவர் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய திறந்த கடிதம், இதற்குப் பெரும் சான்றாகும். கிட்டத்தட்ட ஒரு சின்னக் குறுக்கு விசாரணை போன்றே, இந்தக் கேள்வி பதிலும் அமைந்திருந்தது.  

 அனெக்ஷர் ‘சி’யைச் சுட்டிக்காட்டிய குமார் பொன்னம்பலம், “இவை யாருடைய ஆவணங்கள்” என்று, ஜே.ஆரைப் பார்த்துக் கேட்டார். அதற்கு ஜே.ஆர், “அவை மாநாட்டின் ஆவணங்கள்” என்று பதிலளித்தார்.  

“அவற்றைத் தயாரித்தது யார்” என்று குமார் பொன்னம்பலம் வினவ, “மாநாட்டுச் செயலகம்” என்று ஜே.ஆர். பதிலளித்தார். அதைக் கேட்ட குமார் பொன்னம்பலம், “இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லா ஆவணங்களுக்கும் பெற்றோர் உள்ளனர். ஆனால், அனெக்ஷர் ‘சி’ மட்டும், அநாதையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.   

இதன்போது குறுக்கிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான், அனெக்ஷர் ‘சி’ தன்னுடைய ஆவணம் என்று சுவீகரித்துக் கொண்டார். அநாதையாக இருந்த, ‘அனெக்ஷர் ‘சி’க்கு  தொண்டமான், தனது முதலெழுத்துகளை வழங்கினார். 

அனெக்ஷர் ‘சி’ என்பது, பார்த்தசாரதியுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜே.ஆரும் பார்த்தசாரதியும் இறுதியாக டெல்லியில் இணங்கிய முன்மொழிவுகளாகும்.   

நியாயப்படி அது, ‘ஜே.ஆர் - பார்த்தசாரதி’ இணக்கப்பாடாகத்தான் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் செய்யத் தயாராக இருக்கவில்லை.  தற்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற தனிநபரின் ஆவணமாக, அது சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டின் ஆரம்பக் கட்டமாக, அனைத்துக் கட்சிகளும் தமது ஆரம்ப உரைகளை ஆற்றவிருந்தன.  

 இந்தநிலையில், சர்வகட்சி மாநாட்டில் இருந்த தமிழர்களின் பிரதிநிதிகளான அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர், இணைந்து செயற்படுவது தொடர்பிலான இணக்கப்பாடை எட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.  

 1984 ஜனவரி 19 ஆம் திகதி, அவர்களது ஆரம்ப உரைகள் நிகழ்த்தவிருந்த நிலையில், 18 ஆம் திகதி அவர்கள் தமக்கிடையேயான சந்திப்பொன்றை நடத்தி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, இணைந்து அழுத்தம் வழங்கத் தீர்மானித்தனர்.    

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அநாதையான-அனெக்ஷர்-சி-யும்-தொண்டாவின்-தத்தெடுப்பும்/91-210264

Link to comment
Share on other sites

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வலியுறுத்திய சமஷ்டி
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 128) 

தனித்த தேசமும் பிரிவினையும்  

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறும்போதே, தமிழ்த் தலைமைகள் தமிழருக்கென தனியானதொரு நாட்டை, இலங்கையில் பெற்றிருக்க வேண்டும் என்று சிலர் அவ்வப்போது அங்கலாய்ப்பதுண்டு.   

கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் போது, முஹம்மட் அலி ஜின்னாஹ், முஹம்மதியர்களுக்கென தனியானதொரு நாட்டைக் கோரியது போன்று, தமிழ்த் தலைமைகள் இலங்கையில் கோரியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அங்கலாய்ப்பின் அடித்தளம்.   

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது தொடர்பில், டெல்லி வந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்றின் இரு அவைகளையும் சேர்ந்தவர்களின் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, தமது லாஹூர் பிரகடனத்தின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள், தனித்த இறைமையுள்ள அரசாக வேண்டும் என்ற கோரிக்கையில், முஹம்மட் அலி ஜின்னாஹ் விடாப்பிடியாக இருந்தார்.   

தூதுக்குழு, “நீங்கள் முன்வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கையானது, பெருமளவிலான இந்துக்களை, முஸ்லிம்களின் மேலாதிக்கத்துக்குள் ஆழ்த்தும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா” (அதாவது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களிலுள்ள இந்துக்கள்) என்று கேட்டது.   

அப்பொழுது, “ஆம்! அது உண்மைதான். ஆனால், அதைவிட அதிகளவிலான முஸ்லிம்கள், இந்துக்களின் மேலாதிக்கத்தில் இந்துஸ்தானில் விட்டுத்தான் செல்கின்றேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.   

இந்தப் பதிலினால் ஆச்சரியமடைந்த தூதுக்குழு, “அப்படியானால், இது எவ்வாறு இந்து-முஸ்லிம் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறது; மாறாக, இது இந்து-முஸ்லிம் விரோதப் போக்கை அதிகரிக்காதா” என்று கேட்டது. 

அதன்போது, “நான் குறைந்தபட்சம் மூன்றிலிரண்டு பங்கு முஸ்லிம்களையாவது இந்து மேலாதிக்கத்திலிருந்து விடுவிக்கிறேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.   

“இது தீர்வல்லவே” என்று தூதுக்குழு கூறியபோது, “சிவில் யுத்தமொன்றைத் தவிர்க்க விரும்பினால், இதுவே ஒரே வழி” என்று ஜின்னாஹ் கூறினார்.   

“ஆனால், இது இரண்டு நாடுகளிலும் வாழ்கின்ற சிறுபான்மையினருக்குத் தீங்காக அமையாதா” (அதாவது பாகிஸ்தானில் வாழ்கிற இந்துக்கள், இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள்) என்று தூதுக்குழு வினவியது.   

அதற்குப் பதிலளித்த ஜின்னாஹ், “இரண்டு பலமான அரசாங்கங்கள் அமைவதுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஏனெனில், அப்போதுதான் இரண்டில் எந்தவோர் அரசாங்கமும் அதன் சிறுபான்மையைச் சீண்டிப் பார்க்க முனையாது” என்றார்.   

“ஆக, நீங்கள் இரு நாட்டினதும் சிறுபான்மையினர் பணயக்கைதிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா” என்று தூதுக்குழு வினவியது.   

அதற்கு, “ஆம்! ஓர் அரசாங்கம், தனது சிறுபான்மையினரை முறைகேடாக நடத்தினால், மற்றைய அரசாங்கம் அதற்கெதிராகத் தன்னுடைய அரசாங்கத்துக்குள் நடவடிக்கையெடுக்கும். இது அடிக்கு அடியாக இருக்கும்” என்று ஜின்னாஹ், தயங்காது பதிலளித்தார்.   

“இது மிகக் கொடூரமான முறை” என்று தூதுக்குழு விமர்சித்தபோது கூட, ஜின்னாஹ் தன்னிலையிலிருந்து விலகவில்லை.   

பாகிஸ்தான் பிரிந்ததைப் பற்றிய இந்தக் குறிப்பை மேற்கோள் காட்டும், சிலரின் அங்கலாய்ப்புக்கு, ஒரு குறிப்பிடத்தக்க காரணமுண்டு. அது பிராந்திய பெரும்பான்மை.   

பாகிஸ்தான் என்ற தனிநாட்டுப் பிரிவினையை, ஜின்னாஹ் பெருமளவுக்கு மாகாண ரீதியிலான பெரும்பான்மையை மையமாகக் கொண்டே கோரியிருந்தார்.   

பிரிவினைக்கு முந்திய இந்தியாவில், இந்துக்கள், பாரதம் தழுவிய ரீதியில் பெரும்பான்மையாக இருந்தாலும், ஜின்னாஹ் கோரிய மேற்கு-பஞ்சாப், வடமேற்கு உள்ளிட்ட மேற்குப் பிராந்தியங்களிலும் கிழங்கு வங்காளத்திலும் பிராந்திய ரீதியில் முஸ்லிம் பெரும்பான்மை பெருமளவுக்கு இருந்தது.   

அத்தோடு முஹம்மதியர்கள் ஒரு தனித்த தேசம்; அந்தத் தேசத்துடைய ஏக குரல் தன்னுடைய முஸ்லிம் லீக் என்பதுவும் ஜின்னாஹ்வினுடைய முழக்கமாக இருந்தது.   

இலங்கை சுதந்திரத்தின் போதான இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் நடவடிக்கைகளும், ஜின்னாஹ் தலைமையிலான இந்திய முஹம்மதியர்களின் பாகிஸ்தான் பிரிவினையும் அவற்றிடையே ஒப்பிட்டும், தனித்தும் ஆராயப்பட வேண்டியது.   

அது, இங்கு அவசியமல்ல. ஆனால், தமிழ் மக்கள் கோரிய பிராந்தியப் பெரும்பான்மை, தமிழ்த் தேசம், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்பவை வரலாற்றில் எங்கும் நடைபெறாத விடயங்கள் அல்ல; புதுமையான விடயங்கள் அல்ல; பேசத்தகாத விடயங்கள் அல்ல.  

‘ஒழுங்கமைக்கப்பட்ட, ஒரு குறித்த நிலப்பரப்பைக் குடிமையாகக்கொண்ட, ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே மாதிரியான மரபுகளையுடைய, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட, ஏனைய, இதுபோன்ற மக்கள் கூட்டங்களிலிருந்து அவர்தம் இன அடையாளம், தன்மை என்பவற்றின் அடிப்படையில் பிரித்தறியத்தக்க மக்கள் கூட்டம் என்பது ஒரு தேசமாகும்’ என்பது தேசம் என்பதற்கு சர்வதேச சட்டங்களின்படியான வரவிலக்கணமாகும்.   

இதனடிப்படையில் இலங்கை வாழ் தமிழ் மக்கள், தம்மை தனித்தேசமாக அடையாளப்படுத்தும் உரித்துடையவர்களாகிறார்கள். அத்தகைய தனித்த மக்கள் தேசமானது, தமக்கான சுயநிர்ணய உரிமையைக் கோருவதோ, தாம் வன்முறை எனும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்கப்படும் போது, அத்தகைய அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசாங்கத்திடமிருந்து பிரிவினையைக் கோருவதோ சர்வதேச சட்டங்களின் கீழ் முரணானதொரு விடயமல்ல.  

 ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தாலும், பிராந்திய ரீதியிலான குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்குத் தயாராகவே இருந்தனர்.   

அனெக்ஷர் ‘ஸீ’ குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் தயாராகவே இருந்தார். அதற்காகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன் முரண்பட வேண்டிய சூழல் இருந்த போதும், அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தார்.  

 ‘பிரிவினை’ என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரையில், அன்று ஓர் ‘உயர்ந்த கருத்தியலாக’ இருந்ததேயன்றி, அதை முன்னெடுக்க அவர்கள் தலைப்படவில்லை.   

ஆகவே, இந்தப் பொழுதிலே, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு இணங்கி, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணும் அரிய வாய்ப்பு, ஜே.ஆரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது.   

ஆனால், ஜே.ஆரின் மனத்திட்டம், தமிழ் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டுவதில் இருந்தது எனலாம்.   
தமிழர்களின் தனித்தேசக் கோரிக்கையையோ, 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் பின்னரான ‘பிரிவினைக்’ கோரிக்கையையோ, சர்வதேச ரீதியில் எதிர்ப்பதற்கு ஜே.ஆரிடம் பலமான காரணங்கள் இல்லை; மாறாக, அந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் காரணங்கள், தமிழ்த் தலைமைகளிடம் நிறையவே இருந்தன.   

அதை எதிர்கொள்ள, ஜே.ஆர் கையாண்ட முதல் வழி அரசமைப்புக்கு ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம், மக்கள் பிரதிநிதிகளோ, அரச பதவி வகிப்பவர்களோ பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுக்க முடியாத சூழலை ஸ்தாபித்தார்.   

ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பிரிவினையை அதற்குரிய நியாயங்களுடன் கோரினால், அதனை எதிர்ப்பது கடினமானது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் வன்முறை வழியில், இதே கோரிக்கையை முன்னெடுக்கும் போது, அவற்றைப் ‘பயங்கரவாதிகள்’ என்று முன்னிறுத்தி, ஆயுத வழியில், அழிக்க முடியும். ஜே.ஆரின் நடவடிக்கைகள் இதையே கோடிட்டுக்காட்டி நின்றன.   

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கத்தின் உரை  

அனெக்ஷர் ‘ஸீ’ முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வகட்சி மாநாட்டில், ஒருமித்து அழுத்தம் கொடுப்பது என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் முடிவெடுத்திருந்தனர்.   

1984 ஜனவரி 19ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உரையாற்றினார். “எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்பொழுது ஆதி வரலாற்றுக்கு நான் செல்ல விரும்பவில்லை. வரலாற்றின் தொடக்கம் முதல் சிங்களவர்களும் தமிழர்களும் இந்தநாட்டில் வாழ்ந்தும் அதிகாரத்தைப் பகிர்ந்தும் ஒருவரையொருவர் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப் போரில் ஈடுபட்டும், இந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தனித்து ஆண்டும் வந்திருக்கிறார்கள் என்று கூறுவது இங்கு போதுமானது. ஒரு சகாப்தமளவுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட விடயமிவை. இதை யாரும் முரண்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. நாம் அனைவரும் இங்கு அந்நிய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவே கூடியிருக்கிறோம்” என்று கூறினார்.   

தொடர்ந்து அவர், காலவோட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து, சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, தொடர்ந்து சிறுபான்மையினர் முன்வைத்த கோரிக்கைகள், 1936இல் தனித்த சிங்கள மந்திரிசபை அமைந்ததைத் தொடர்ந்து, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘சமமான பிரதிநிதித்துவம்’ (50:50), பிரஜாவுரிமைப் பறிப்பு, அதனால் ஏற்பட்ட இனவிகிதாசார மாறுபாடுகள், தனிச்சிங்களச் சட்டம், அதைத் தொடர்ந்த இன ரீதியிலான வன்முறைகள், அஹிம்சை வழிப்போராட்டங்கள், வன்முறை வெறிகொண்டு தாக்கப்பட்டமை, அப்பொழுதே சீ.சுந்தரலிங்கம் போன்ற தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போதும், தமிழரசுக் கட்சியும் சரி, தமிழ்க் காங்கிரஸும் சரி அதை ஏற்றுக்கொள்ளாமை என்ற வரலாற்றை அமிர்தலிங்கம் எடுத்துரைத்தார்.   

அதன்பின், சா.ஜே.வே. செல்வநாயகத்தின், சமஷ்டிக் கொள்கையானது பிரிவினைக்குப் பதில், இனப்பிரச்சினைக்குப் பொருத்தமானதொரு மாற்றுத் தீர்வு என்பதை விளக்கினார். “சமஷ்டி முறையை அரசாங்கத்தைப் புரிந்துகொண்ட எவரும், சமஷ்டி என்பது பிரிவினை என்று சொல்ல மாட்டார்கள். உலகின் மிகப் பலமான இரண்டு தேசங்களான ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகியன சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் ஒற்றுமையோ, பலமோ அவற்றின் அரசியல் கட்டமைப்பினால் பாதிக்கப்படவில்லை. இலங்கையின் அளவில் 3/5 அளவுடைய சிறிய நாடான சுவிட்ஸலாந்து, சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவும் ஏன், 1926இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவே இலங்கைக்கு ஏற்ற அரசாங்க முறைமை சமஷ்டிதான் என்று வாதிட்டார். டொனமூர் ஆணைக்குழு முன்பாக, கண்டி இளைஞர் லீக் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்தது” என்று சமஷ்டி பற்றியும், இலங்கையில் சிங்களத் தலைமைகளே சமஷ்டி கோரிய வரலாற்றை அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார்.   

தொடர்ந்து அவர், “ஆனால், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயத்துக்கான அங்கிகாரத்தையும், சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசாங்கத்தையும் கோரும் போது மட்டும், அது சிங்கள மக்களிடையே இந்த உண்மைகள் தெரிந்திருக்க வேண்டிய அரசியல்வாதிகளாலேயே பிரிவினைக்கான முன்னெடுப்பாகத் தவறாக உருவகப்படுத்தப்படுகிறது” என்று நியாயமான ஆதங்கத்தை முன்வைத்திருந்தார்.  

1984இல் சமஷ்டி தொடர்பில் அமிர்தலிங்கம் பேசிய இதே விடயங்களைச் சுட்டிக்காட்டி, 2017இல் நாடாளுமன்றத்தில் மதியாபரணன் ஆப்ரஹாம் சுமந்திரன் பேசியமையானது, 33 வருடங்கள் கழித்தும் இந்த நிலை மாறவில்லை என்பதையே எமக்கு உணர்த்துவதாக உள்ளது.   

அனெக்ஷர் ‘ஸீ’யையும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்த்த மகாசங்கத்தை சுட்டிப் பேசிய அமிர்தலிங்கம், “இரண்டு நாட்களுக்கு முன்னர், வணக்கத்துக்குரிய பௌத்த மதத் தலைவர்கள், மக்களின் நடமாடும் சுதந்திரம் பற்றிப் பேசக் கேட்டோம். வணக்கத்துக்குரிய மதப்போதகர்களிடம் நான் கேட்க விரும்புவது, தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன நடமாடும் சுதந்திரம் இருக்கிறது? இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் தெற்கில் அமைந்துள்ள அகதி முகாம்களில் இருந்து கப்பல் மூலம் வடக்கு-கிழக்குக்கு அனுப்பப்படும் சுதந்திரம் மட்டும்தான்” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.   

இதைத் தொடர்ந்து, வடக்கு-கிழக்கிலுள்ள பௌத்த ஸ்தலங்கள் தொடர்பிலும், அவை மீட்கப்பட்டு அங்கு சிங்கள-பௌத்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் பௌத்த மகாசங்கத்தினர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலுரைத்துப் பேசிய அமிர்தலிங்கம், சில மிக முக்கியமான கருத்துகளையும் விடயங்களையும் தனது பேச்சில் கோடிட்டுக் காட்டியிருந்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-மாநாட்டில்-அமிர்தலிங்கம்-வலியுறுத்திய-சமஷ்டி/91-210552

Link to comment
Share on other sites

அடையாளத்தை தொலைத்தும் மறந்தும் போன இனம்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 129)

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்கில் பௌத்தம் பற்றிய சில முக்கிய கருத்துகள் உள்ளன. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றையும் அந்தப் இனப்பிரச்சினைக்கான, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயங்களையும் உணர்ந்துகொள்ள, இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகவேனும் நோக்குதல் அவசியமாகிறது.  

சிங்களவர்கள்  

இலங்கையின் இனப்பிரச்சினையானது, மேலோட்டமாகச் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.   

ஆனால், இது முற்றுமுழுதாக ஏற்புடைய அடையாளப்படுத்தல் என்று கூறுவது கடினம். இலங்கையின் பெரும்பான்மை அடையாளமானது, ‘சிங்களம்’ என்ற இன அடையாளம் என்று சொல்வதை விட, ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இனம், மதக் கலப்பு அடையாளம் என்று குறிப்பிடுவதுதான் சாலப் பொருத்தமானது.  

 ஏனெனில், இலங்கையின் பெரும்பான்மை இன அடையாளமாக, ‘சிங்கள-பௌத்த’ அடையாளமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள, சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்தம் என்பவற்றை, இலங்கையின் வரலாறு என்று பொதுவாகக் கருதப்படுவதற்கு ஊடாக நோக்குதல் இங்கு அவசியமாகிறது.   

‘சிங்களம்’ என்பது ‘சிங்கத்தின் வழிவந்தவர்கள்’ என்று பொருள்தருவதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. இலங்கையின் வரலாறு கூறும், பிரதான நூல் என்று கருதப்படும் ‘மஹாவம்சம்’, பிரதானமாக சிங்களவர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் நூலாக அமைகிறது.  

 மஹாவம்சமானது விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. வங்காள இளவரசியான சுப்பாதேவி ஒரு சிங்கத்தினால் கைப்பற்றப்பட்டு, சிங்கத்தின் குகையில் அடைத்துவைக்கப்படுகிறாள். அந்தச் சிங்கத்துக்கும் சுப்பாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன(?!). அந்த ஆண் குழந்தையின் பெயர் சிங்கபாகு; பெண் குழந்தையின் பெயர் சிங்கசீவலி.   

சிங்கத்தின் குகையானது, ஒரு பெரும் கல்லால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சிங்கபாகு வளர்ந்ததும் தன் தாயான இளவரசி சுப்பாதேவியுடனும் சகோதரி சிங்கசீவலியுடனும் அந்தக் குகையிலிருந்து தப்பித்து, ஒரு கிராமத்துக்குச் சென்று வசிக்கிறான்.  

 அந்தச் சிங்கம் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடியலைந்தது கொண்டிருந்தது. அதன்போது, பல கிராமங்களுக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்தது.   

சிங்கத்தின் அட்டகாசத்தால் மக்கள் துன்புறவே, அந்தச் சிங்கத்தைக் கொல்பவர்களுக்குப் பரிசு தருவதாக மன்னர் அறிவித்தார். பரிசைப் பெறத் திண்ணம் கொண்ட சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தை தேடிச் சென்றான். தனது மகனைக் கண்ட சிங்கம் வாஞ்சையோடு அவனருகில் வர, சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தைக் கொல்கிறான்.   

பின்னர், சிங்ஹபுர என்ற இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து ஆட்சி புரிந்த சிங்கபாகு, தனது சகோதரியான சிங்கசீவலியை மணந்துகொள்கிறான். அவனுக்கு 16 இரட்டைக் குழந்தைகள் கிடைக்கின்றன. அந்தப் 16 இரட்டையர்களில் மூத்த இரட்டையர்தான் விஜயனும் அவன் இரட்டைச் சகோதரன் சுமித்தாவும் ஆவார்.

முடிக்குரிய இளவரசனான விஜயன் மிகவும் குழப்பம் விளைவிக்கும் முரட்டு இளைஞனாக இருந்தான். அவனும் அவனது தோழர்களும் மக்களுக்கு பெரும் தொல்லைகளை விளைவித்ததால், அவனைத் தண்டிக்க வேண்டும் என்று மக்கள், மன்னர் சிங்கபாகுவிடம் வேண்டினர்.   

தனது நாட்டில் குழப்பத்தை தவிர்க்க விரும்பிய சிங்கபாகு, விஜயனையும் அவனது தோழர்களையும் ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்தார். அந்தக் கடல் பயணத்தின் இறுதியில், இலங்கைத்தீவின் ‘தம்பபன்னியை’ (தாமிரம் (செப்பு) நிறமுடைய மணல் பூமி என்பதனால் தம்பபன்னி என்றழைத்தனர் என்பார் சிலர்) வந்தடைந்தது.  விஜயன் வந்தடைந்ததும், இயக்கர் குல இளவரசியான குவேனியைக் காண்கிறான். 

குவேனியை மணக்கும் விஜயன், குவேனியின் உதவியுடன் இயக்கர்களின் நகரமான சிறிசவத்துவை அழிப்பதோடு, தம்பபன்னியில் தனது நகரை அமைத்து அங்கு குவேனியுடன் வாழ்கிறான்.    அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன. விஜயனின் தோழர்கள் அநுராதகம், உஜ்ஜயினி, உபதிஸ்ஸகம, உருவெல மற்றும் விஜிதபுர ஆகிய நகரங்களை அமைத்து அங்கு வாழ்கிறார்கள்.   

இவற்றை இணைத்து, ஓர் அரசாக்க விரும்பியவர்கள் அதன் அரசனாக விஜயனை வேண்டுகிறார்கள். விஜயன் அரசனாக வேண்டுமென்றால் அரச வம்சத்தில் வந்த பெண்ணை அவன் மணக்க வேண்டும். அதற்காகக் குவேனியை அவன் விரட்டுகிறான்.   

குவேனி தனது பிள்ளைகளோடு விஜயனைப் பிரிந்து, இயக்கர்களின் மற்றொரு நகரான லங்காபுரவுக்குச் செல்கிறாள். விஜயனை மணக்க பாண்டிய வம்சத்திலிருந்து ஓர் இளவரசி பாண்டிய நாட்டிலிருந்து வரவழைக்கப்படுகிறாள். அத்தோடு விஜயனின் தோழர்களும் மணப்பதற்காக பாண்டிய நாட்டிலிந்து பெண்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.   

சிங்கபாகுவின் வழி வந்தவர்கள் ஆதலால் அவர்கள் தம்மைச் ‘சிங்களவர்’கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலிருந்துதான் சிங்கள இனம் தோன்றியது என்கிறது மஹாவம்சம். இன்னொரு நூலான தீப வம்சமும் இதே கதையைச் சொன்னாலும், அதில் ‘குவேனி’ என்ற பாத்திரம் கிடையாது.   

விஜயனின் வருகையானது கி.மு 543இல் இடம்பெற்றதாகத் தமது ஆய்வுக் கட்டுரையொன்றில் யக்கடுவே சுகுணசீல தேரரும் நிவந்தம தம்மிஸ்ஸார தேரரும் குறிப்பிடுகின்றனர்.   

ஆகவே, சிங்கள இனமானது கி.மு 543இற்குப் பின்னரே உருவாகிறது எனலாம். 38 ஆண்டுகள் ஆண்ட விஜயன் வாரிசின்றி இறந்துபோக, அவனுக்கடுத்ததாக ஆள்வதற்காக, இந்தியாவில் அமைந்திருந்த விஜயனின் சொந்த நாடான சிங்ஹபுரவை, அப்போது ஆண்டு கொண்டிருந்த விஜயனின் இரட்டைச் சகோதரனான சுமித்தாவின் இளையமகன் பண்டுவாசுதேவன், இலங்கை வருகிறான்.   

பண்டுவாசுதேவனோடு 32 மந்திரி புதல்வர்களும் வருகிறார்கள். பண்டுவாசுதேவனிலிருந்து சிங்கள வரலாறு தொடர்கிறது. மஹாவம்சம் கூறும் இதைக் கதையாகப் பார்த்தாலும், கவுதம் குமார் க்ஷத்ரியா தனது மரபணு ஆராய்ச்சியில் சிங்களவர்களின் மரபணுவில் 25.41சதவீதம் வங்காள மரபணுவின் பங்குண்டு என்கிறார்.   

சரப்ஜித் மஸ்தானா தனது மரபணு ஆய்வில் சிங்களவர்களின் மரபணுவில் 57.49சதவீதம் வங்காள மரபணுவின் பங்கிருப்பதாகவும் 42.51சதவீதம் தமிழ் மரபணுவின் பங்கிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இவை எதுவும் முடிந்த முடிபுகள் அல்ல; எனினும், மஹாவம்சம் கூறும் கதைக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.   

சிங்கள மொழி  

சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் காணமுடியாதுள்ளது.  

 சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும் மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு. மேலும், மஹாவம்சம் உள்ளிட்ட நூல்கள், பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

 இலங்கையில் பௌத்தம்  

இலங்கையில் பௌத்த மதம், மௌரிய சாம்ராட்சியத்தின்  சக்கரவர்த்தியாக இருந்த அசோகனின் மகனான மஹிந்த தேரரினால், கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு.   

அன்று, அநுராதபுரத்தின் ஆட்சிபீடத்தில் இருந்தவன்  தேவநம்பியதீசன். இவன் பண்டுவாசுதேவனின் மகனான அபயவின் தங்கை மகனான பண்டுகாபயனின் மகனான மூத்தசிவனின் இரண்டாவது மகன். விஜயனின் வருகையிலிருந்து ஏறத்தாழ 240 வருடங்களின் பின்பு அரசனாகிறான் தேவநம்பியதீசன்.   

ஏறத்தாழ இந்த 240 வருடங்களிலும் பௌத்தம் இலங்கையில் இல்லை. சிங்கள இனம் என்று மகாவம்சம் அடையாளப்படுத்திய விஜயன் அவனது தோழர்கள் மற்றும் மதுரையிலிருந்து வந்த பாண்டிய இளவரசி மற்றும் அவளுடன் வந்த மதுரைப் பெண்களிலிருந்து தோன்றிய இனம் உண்டு.   

சிங்கள மொழி இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை. இந்த ஏறத்தாழ 240 ஆண்டு காலப்பகுதியில் ஒரு தனிமதத்தின் ஆதிக்கமல்லாது, பல்வேறு மதங்களும் நம்பிக்கைகளும் இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக இந்திய மதங்களின் செல்வாக்கு இருந்ததாகவும் தனது ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில் எச்.ஆர்.பெரேரா குறிப்பிடுகிறார்.  

 மஹிந்ததேரர் மற்றும் அவருடன் வந்தவர்களின் போதனையின்படி, தேவநம்பியதீசன் பௌத்தனாகிறான். அதைத் தொடர்ந்து மஹிந்த தேரரின் சகோதரியான சங்கமித்தை கொண்டு வந்த போதி (அரச) மரத்தின் கிளை அநுராதபுரத்தில் நாட்டப்படுகிறது. போதிமரத்தின் வளர்ச்சியோடு, பௌத்தமும் அநுராதபுர இராச்சியத்தில் வளரத்தொடங்கியது.   

பிக்கு சாசனம், பிக்குனி சாசனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. துறவு மடங்கள் கட்டப்பட்டன. புத்தரின் வலது விலா எலும்பைச் சுற்றி தூபாராமய சைத்திய கட்டி எழுப்பப்பட்டது.   

தேவநம்பியதீசன், ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆண்டான் என்கிறது வரலாறு. அவனுக்குப் பிறகு, அவனது சகோதரன் உத்தியன் அரசனாகிறான். இவனது காலத்திலேயே மஹிந்த தேரரும் சங்கமித்தையும் இயற்கை எய்துகின்றனர். உத்தியனது காலத்தின் பின்னர்தான், தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த சேனன்-குத்திகன் என்ற இரு தமிழர்கள் 22 ஆண்டுகள் ஆண்டதாகவும் பின்னர் எல்லாளன்  46 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதாகவும் வரலாறு கூறுகிறது.   

வரலாற்றுச் சிக்கல்  

மஹாவம்சம் கூறும் சிங்கள இனம், பௌத்த மதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட காலங்களில் தோன்றியவை. சிங்கள மொழி அதிலும் பிற்பட்டது. அப்படியானால் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள பெரும்பான்மை அடையாளமான ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இன-மத கலப்பு அடையாளம் எப்போது உருவாகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.  

 இதைவிடவும் விஜயனும் அவனது தோழர்களும் கிழக்கிந்தியாவிலிருந்து தோன்றிய வங்காளிகள்; (சிங்கத்தை தவிர்த்து விடுவோம்). அவர்கள் மணந்து கொண்ட பெண்கள் மதுரையிலிருந்து வந்த பாண்டியர்கள்; அதாவது தமிழர்கள். ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றுவாய் என்பது வங்காள இனமும் தமிழ் இனமுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.   

இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் மஹாவம்சத்திலுள்ள பல்வேறுபட்ட விடயங்களும் ஆய்வுப்பரப்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்களுக்கு உட்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.  செனரத் பரணவிதான, ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன, கே.எம்.டி.சில்வா, ஸ்ரான்லி ஜே. தம்பையா, பேர்சேட் ஹய்ன்ஸ், கே.என்.ஓ. தர்மதாஸ, கணநாத் ஓபேசேகர, ஸ்டீவன் கெம்பர் ஆகியோரின் ஆய்வுகளும் கருத்துகளும் இந்த விடயப்பரப்பில் குறிப்பிடத்தக்கவை.   

இந்த வரலாறும், அடையாளங்களைப் பற்றிய பேச்சும் வாதமும், ஏன் அவசியமாகிறது? எல்லோரும் இந்த மண்ணில் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள்.   

இன்றைய இனங்களானவை, காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கூர்ப்புகளின் விளைவாகத் தோன்றியவை என்ற நிலைப்பாடு மேம்பட்டிருக்குமானால், இந்த வரலாறு மற்றும் அடையாளங்கள் பற்றிய தேடலும் வாதப்பிரதிவாதங்களும் அத்தியாவசியம் அற்றதாகிறது.  


உதாரணத்துக்கு கனடா, அமெரிக்கா என்பவை, குடியேறிகளின் நாடு என்று தம்மை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது. அங்கு பூர்வீகக் குடிகளாக இருந்து, இன்று சிறுபான்மையினராக உள்ள பூர்வீகக் குடிகளையே அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக ‘முதல் தேசம்’ (கனடா) என்றும் ‘பூர்வீக அமெரிக்கர்கள்’ (அமெரிக்கா) என்றும் அங்கிகரிக்கிறார்கள்.   

விஜயன் என்பவனின் வருகையோடு இலங்கையின் வரலாறு தொடங்குவதால் இது குடியேறிகளின் நாடு என்ற கருத்துருவாக்கம் முன்னிலை பெறுமானால், இந்த வாதப்பிரதிவாதங்கள் அவசியமற்றதாகிறது. ஆனால், ஒரு குறித்த இனத்தார் ‘தூய இன’ வாதத்தையும் ‘பூமி புத்திர’ வாதத்தையும் அதாவது தாம் ஒரு தனித்த கலப்பற்ற தூய இனமென்றும் தாம் மட்டுமே மண்ணின் மைந்தர்களென்றும் மற்றையோர் ‘வந்தேறுகுடிகளென்றும்’ வாதங்களை முன்வைக்கும் போது, வரலாறும் அடையாளங்கள் பற்றிய வாதப்பிரதிவாதமும் முக்கியம் பெறுகின்றன.  

குறிப்பாக, சிறுபான்மை இனங்களாக அவர்கள் கருதும் இனங்களின் வரலாறு பற்றியும் பூர்வீகம் பற்றியுமான தேடல்களும் கருத்துகளும் அவசியமாகின்றன.   

இந்த இடத்தில், இலங்கையின் வரலாறு பற்றிய மிகமுக்கிய ஆய்வாளர்களுள் ஒருவரான, செனரத் பரணவிதான சொன்ன ஒரு விடயம் குறிப்பிடத்தக்கது “இன்று சிங்களம் அல்லது தமிழ் பேசும் பெரும்பான்மையானவர்கள் நிச்சயமாக இந்நாட்டின் பூர்வீகக் குடிகளின் வழிவந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி எமக்கு ஒன்றுமே தெரியாது”.   இலங்கையின் வரலாற்றை ஆராய்வது என்பது இந்தத் தொடரின் நோக்கமல்ல. ஆனால் ‘சிங்கள - பௌத்தம் எதிர் தமிழ்’ என்று உருப்பெற்றிருந்த இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள, இலங்கை வரலாற்றைப் பற்றிய குறைந்தபட்ச பரிச்சயமேனும் அவசியமாகிறது.   

‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையளாப்படுத்தல்களுக்குள் தொலைந்துபோன ஓர் அடையாளத்தை, மறந்துபோன ஓர் அடையாளத்தைப் பற்றித் தனது சர்வகட்சி மாநாட்டு உரையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தார். அந்த அடையாளம் ‘தமிழ் பௌத்தம்’.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடையாளத்தை-தொலைத்தும்-மறந்தும்-போன-இனம்/91-210895

Link to comment
Share on other sites

வரலாற்றில் ‘சிங்கள - பௌத்தம்’
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-130)

சர்வகட்சி மாநாட்டில் அமீரின் உரை

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையிலே, அமரபுர பீடத்தின் பீடாதிபதியான மடிஹே பஞ்ஞாசீக மகாநாயக்க தேரர், வடக்கு - கிழக்கு எங்கும், 276 பௌத்த வணக்க ஸ்தலங்கள் பரவிக்கிடப்பதாகவும் அவ்விடங்களில் எல்லாம் பௌத்த பிக்குகள் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதுடன், அத்தலங்களைச் சுற்றிலும் பௌத்தர்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பதுடன்,  இதே விடயத்தை, அகழ்வாராய்ச்சி ஆணையாளர் சிறிசோமவும் பதிவு செய்திருந்தமையை மேற்கோள்காட்டிய அமிர்தலிங்கம், இது பற்றிய தனதும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.  

“இத்தகைய குடியேற்றம், வடக்கு - கிழக்கிலே நிகழ்த்தப்படுமானால், வடக்கு - கிழக்கிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். அதன் பின்னர், தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டால், அவர்களை அள்ளிச் சென்று கொட்ட, ஓரிடமும் இருக்காது. வடக்கு, கிழக்கில் கூட தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார்.   

1983 கறுப்பு ஜூலை இனஅழிப்பின் பின்னர், கொழும்பில் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்ட அகதிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் கப்பல் மூலம் வடக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையையே அமிர்தலிங்கம் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்.   

தமிழ்ப் பௌத்தர்கள்

“வடக்கு, கிழக்கிலே பௌத்த தலங்கள் மற்றும் அதன் சிதைவுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி, பௌத்த தலங்கள் இருப்பதால் அது சிங்களவர்களது பிரதேசம்; எனவே, அங்கு பௌத்த மக்களை, அதாவது, சிங்கள பௌத்த மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று சொல்லும் பிக்குகள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.   

கி.பி 3ஆம் - 4ஆம் நூற்றாண்டுகளில் முழுத் தமிழ்நாடும், பெரும்பான்மைத் தமிழர்களும் பௌத்தர்களாகவே இருந்தனர். அனைவரும் அறிந்த தமிழ் இலக்கியமான மணிமேகலை மற்றும் சிலபல இலக்கியங்களே இதற்குப் பெருஞ்சான்று. வடக்கு, கிழக்கிலே இருந்த இந்தப் பௌத்த தலங்கள் தமிழ் பௌத்தர்களால் வழிபடப்பட்டவை.   வடக்கு, கிழக்கும் சிங்களவர்களுடைய பகுதி என்று உரிமை கோருவதானது, இன்று யூதர்கள் பாலஸ்தீனத்தை உரிமை கோருவதற்குச் சமனானது” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். 

யூதர்கள், அரபு மக்களை அரபு மக்களது நிலத்திலிருந்தும் வீடுகளிலிருந்தும் விரட்டுவது போன்ற கொள்கையையே அடுத்தடுத்து வரும் இலங்கை அரசாங்கங்களும் கையாள்கின்றன என்று அமிர்தலிங்கம் ஆதங்கப்பட்டார்.   

தமிழும் பௌத்தமும்

இலங்கை வரலாற்றில், பெரிதும் பேசப்படாத விடயங்களுள் ஒன்று, தமிழ் பௌத்தம். மௌரியச் சக்கரவர்த்தியான அசோகனின் காலத்திலேயே சோழ, பாண்டிய மற்றும் தம்பபன்னி (இலங்கை) ஆகியவற்றுக்கு பௌத்தம் கொண்டு செல்லப்பட்டதாக கி.மு 258இற்குரிய கல்வெட்டொன்று தௌிவாக உரைப்பதாக தமிழ் நாட்டில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் ஷூ ஹிகோசகே குறிப்பிடுகிறார்.   

தமிழ் நாட்டிலிருந்து, கடல் மார்க்கமாக பௌத்தம் இலங்கைக்கு சென்றிருக்கலாம் என்பது அவரது கருத்து. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பட்டிணம், உறையூர், மதுரை என்பன பௌத்தத்தின் மத்திய நிலையங்களாக இருந்தன என்பதுடன் பாளி மொழிக் கல்வியிலும் முக்கியம் பெற்றிருந்தன.   

இதைவிடவும், புத்தமங்களம், சங்கமங்களம், கும்பகோணம், ஆலங்குடிப்பட்டி, சங்கமங்கை, திருப்படிரிப்புலியூர் போன்ற பல்வேறு இடங்களிலும் பௌத்தம் பரவிப் பெருகியிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம். தமிழ்நாட்டிலே தேரவாத மற்றும் மஹாயான பௌத்தம் இரண்டுமே சிறப்புற்றிருந்தன.   

புத்தகோச, புத்ததத்த, தம்மபால ஆகிய பௌத்த அறிஞர்கள் தமிழ் நாட்டிலிருந்த பௌத்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றும் பேராசிரியர் ஹிகோசகே குறிப்பிடுகிறார். இலங்கையில் பௌத்தத்திற்கு அருந்தொண்டாற்றிய புத்தகோச மற்றும் தம்பபால ஆகியோர் தமிழ் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகளாவர்.   

தமிழ் பௌத்த பிக்குகள், தமிழ் மொழியை அல்லாது பாளியிலே தமது படைப்புகளை எழுதியமைக்கு, புத்தரின் மொழியாகப் பாளி இருந்தமையும் அதனால், பௌத்த மதத்தின் மொழியாக பாளி அறியப்பட்டமையும் முக்கிய காரணம் என்பது ஒருசாராரின் கருத்து. 

ஆயினும், தமிழிலே பௌத்தர்களால் படைக்கப்பட்ட பௌத்த கருத்துகளைக் கூறும் நூல்கள் கடைச்சங்ககாலம் அளவுக்குப் பழையன. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ இதில் பிரதானமானது.   

‘மணிமேகலை’, மணிபல்லவம் என்ற தீவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது இலங்கையின் நயினாதீவுதான் (சிங்களத்தில் நாகதீப) என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைவிடவும், ஐம்பெருங்காப்பியங்களில் மற்றொன்றான ‘குண்டலகேசி’ முழுமையாக கிடைக்கப்பெறாவிடினும், அதில் கிடைத்த பகுதியொன்றில் பௌத்தம் கூறும் கருத்துகள் வௌிப்பட்டிருப்பதைக் காணலாம் என்பதைச் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.   

இதைவிடவும் ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூலானது, தமிழ் மொழியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்படும் போதுள்ள இலக்கண விதிகள் பற்றிக் கூறும் நூலாக ‘புத்தமித்திரர்’ என்பவரால் சோழர் காலத்தில் எழுதப்பட்டமையும் அதன் பாயிரத்தில், பௌத்த மதம் பற்றிக் குறிப்புள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும்.   

ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது, சிலர் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கூடச் சொல்வார்கள்.    

சிங்கள-பௌத்த அடையாளம்

கி.பி 7ஆம் நூற்றாண்டளவில் சைவ-வைணவ பக்தி இயக்கத்தின் எழுச்சியுடன் பௌத்த, சமண (ஜைன) மதங்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குன்றத் தொடங்கி, அது தமிழ் நாட்டில் முற்றாகவே இல்லாது போகிறது. 

இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது.

அதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அது ‘மஹாவம்சம்’ என்ற படைப்பிலிருந்து ஊற்றெடுத்திருப்பதுதான். ‘மஹாவம்சம்’ என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது, ஆனால், அதுகூறும் கதையை வரலாறாகக் கற்பிதம் செய்து கொள்வதில் நிறையச் சிக்கல்களுண்டு.   
இலங்கையின் வரலாறு விஜயனுடன் தொடங்குகிறது என்கிறது மஹாவம்சம், ஆனால், விஜயன் வருகை என்பதே ஒரு கட்டுக்கதை என்று சொல்லும் சாராரும் புலமைத்தளத்தில் உண்டு. விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவாக சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.   

அவரது கருத்தப்படி, நவீன சிங்கள-பௌத்த அடையாளமானது, வரலாற்றைப் புதிய பாணியில் வாசிப்புச் செய்வதனூடாக உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார். பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் பெரும்பான்மையோரை ஒன்றிணைக்கும் தேசியத்துவத்தின் எழுச்சியாக, சிங்கள பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது என்பது குணவர்த்தன உள்ளிட்ட சிலரின் கருத்தாகும். ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற, ‘ஆரிய’ கருத்துருவாக்கமும், சிங்களமொழியின் ஆரிய அடிப்படைகளை முதலாகக் கொண்டு, சிங்கள இனம், ஆரிய இனம் என்ற அடையாளம் கட்டி எழுப்பப்பட்டது.   

மஹாவம்சம் முன்னிலை பெற்றதோடு, குறிப்பாக, தமிழ் மன்னனான எல்லாளனை வெற்றி கொண்ட சிங்கள பௌத்த மன்னன் துட்டகைமுனு, முழு நாட்டையும் ஒன்றிணைத்து, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதான கதை, மஹாவம்சத்தினூடாக முன்னிலைப்படுத்தப்பட்டதும், இவற்றினூடாக, சிங்கள பௌத்த தேசிய எழுச்சி உருவாக்கப்பட்டதையும் லெஸ்லி குணவர்த்தன போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 19 நூற்றாண்டின் பின்னர் கட்டியெழுப்பப்பட்ட பொது வரலாற்று நம்பிக்கையின்படி, எல்லாளன் -துட்டகைமுனு போர் என்பது தமிழ், சிங்கள முரண்பாட்டின் போர் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது என்கிறார் கே.எம்.டி.சில்வா.   

மஹாவம்சத்தைப் ‘பலம்வாய்ந்த கட்டுக்கதை’ என்று விளிக்கும் கே.எம்.டீ.சில்வா, எம்முன்னுள்ள வரலாற்று ஆதாரங்களானவை, எல்லாளனைப் பல சிங்கள மன்னர்களும் ஆதரித்ததாகவும், துட்டகைமுனுவின் அரசியல் அபிலாஷைகள் மீது, ஐயம்கொண்ட பல சிங்கள மன்னர்களையும் துட்டகைமுனு, எல்லாளனை எதிர்கொள்ள முன்பு, எதிர்கொள்ள வேண்டி வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.   

இலங்கையில், சிங்கள - தமிழ் எதிர்ப்புவாதமானது, தென்னிந்தியாவில் தீவிர இந்து எழுச்சியின் (பக்தி இயக்க எழுச்சியின்) பின்னரான, பௌத்த இல்லாதொழிப்புடன் உருவாகியிருக்கலாம் என குணவர்த்தன ஊகிக்கிறார். அங்கு வளர்ந்த, பௌத்த வெறுப்பின் தொடர்ச்சியின் விளைவால், தென்னிந்தியத் தமிழர்கள் மீதான ஐயமும், எதிர்ப்பும் இலங்கையில் வலுத்திருக்கும் எனவும், அந்த ஏழாம் நூற்றாண்டு வரை இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் மற்றும் பல பகுதிகளுக்கும் பொதுவாக இருந்த பௌத்த அடையாளம், அதன் பின்னர்தான் இலங்கைக்குரியதாக மாறியிருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.   

சோழரின் இலங்கை மீதான படையெடுப்பும், கைப்பற்றலும், இலங்கையில் சோழர் ஆட்சியும், ‘சிங்கள-பௌத்தர்’ - ‘தமிழ் சைவர்’ என்ற முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கும் என்றும் சிலர் ஊகிக்கின்றனர். அநுராதபுரம், பொலன்னறுவைக் காலங்களின் பின்னரான கண்டி இராச்சியத்தின் வரலாறு, இவற்றை விடச் சிக்கலானது. அங்கு நிலவிய பௌத்த-இந்து உறவுநிலை, அதுவும் நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சிய ஆட்சி பீடம் ஏறியதற்குப் பின்னரான 75 வருடகால உறவு நிலை மிகச் சிக்கலானது.   

இந்தக் காலப்பகுதியில், பல நாயக்க சம்பிரதாயங்கள் கண்டி இராச்சியத்துக்குள் புகுந்திருந்தாலும், இதே காலப்பகுதியில்தான், நாயக்கர்களுக்கு எதிரான எழுச்சியும் சில சிங்களத் தலைவர்களால் உருவாக்கப்படுவதைக் காண்கிறோம். அவர்களின் துணையோடுதான், பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள்.   

சிங்கள-பௌத்த அடையாளம் பற்றிகட கருத்துரைக்கும் பேராசிரியர் ஸ்ரான்லி ஜே தம்பையா, “இலங்கைத் தீவின் ஆட்புலம் முழுவதும் ஒன்றுபட்ட, சிங்கள இனமும், சிங்கள மொழியும் பௌத்தமும் இணைந்த பொற்கால ஆட்சி துட்டகைமுனுவின் காலத்திலும் இருக்கவில்லை; மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் இருக்கவில்லை. ஆனால், மக்களைச் சிங்கள மயமாக்குதலும், பௌத்த மயமயாக்குதலும் நூற்றாண்டுகளினூடாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடு என்பது மட்டும் உண்மை” என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படியானால் 19 ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால உள்ளிட்டவர்களினால் சிங்கள பௌத்த அடையாளம் எழுச்சியுறச் செய்யப்பட என்ன காரணம்?  


(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாற்றில்-சிங்கள-பௌத்தம்/91-211144

Link to comment
Share on other sites

வரலாற்றில் ‘சிங்கள - பௌத்தம்’
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 131)

சிங்கள - பௌத்த அடையாளத்தின் உருவாக்கம்  

இலங்கையின் பெரும்பான்மை இனம், தன்னைச் சிங்கள- பௌத்தமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால், இன்று புரிந்துகொள்ளப்படும் சிங்கள - பௌத்த அடையாளம், 19ஆம் நூற்றாண்டின் பின்னர் உருவான அல்லது உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதே லெஸ்லி குணவர்த்தன, ப்ரூஸ் கப்ஃபெரர், ஸ்ரான்லி ஜே. தம்பையா போன்றோரது கருத்தாகும்.   

சிங்கள - பௌத்த அடையாளத்தை, ‘நவீன தேசியத்துவ அடையாளம்’ என்று விளிக்கும் ப்ரூஸ் கப்ஃபெரர், “தற்போது துரதிர்ஷ்டவசமாக இனங்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வுக்கும், போருக்கும் எண்ணெய் ஊற்றும் அல்லது ஆதரவளிக்கும் வகையிலான, இந்த நவீன தேசியத்துவ அடையாளமானது, கொலனித்துவ மற்றும் கொலனித்துவத்துக்குப் பிறகான தேசிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு உருவானதாகும்” என்கிறார்.  

 நவீன தேசிய - அரசாங்கங்களின் தோற்றமானது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய தேசிய - அரசாங்கங்களின் தோற்றத்தோடு உருவாகிறது. இந்தத் தேசிய - அரசாங்கங்களானவை, ஒரு தனித்த அரசாங்கத்தை ஸ்தாபித்ததோடு, அந்த அரசாங்கத்திலிருந்து வேறுபடாத தனித்த ஒரு தேசத்தையும் உருவாக்கியது.   

பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்டவர்கள் ‘பிரென்ஞ்ச்’ தேசமாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறே, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தேசத்தின் தோற்றத்தையும் நாம் காணலாம். இந்த பாணியைப் பின்பற்றி கொலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள், தம்மைத் தேசிய - அரசுகளாக வடிவமைத்துக் கொண்டன.   

கொலனித்துவத்துக்கு முன்னர் ஒருபோதும் ஒரு தேசமாக இருந்திராத இந்தியா, கொலனித்துவத்தின் பின்னர், பல சமஸ்தானங்களையும் தேசங்களையும் ஒன்றிணைத்து, நவீன இந்தியாவாக உருவானது. சுதந்திரத்தின் பின்னர், இது இந்திய தேசிய அரசாக உருப்பெற்றது.  

 கொலனித்துவத்துக்கு முன்னர், இலங்கை தனித்த ஒரு தேசமாகவோ, சிங்கள - பௌத்த தேசமாகவோ இருக்கவில்லை. சிங்கள - பௌத்த அடையாளத்தின் எழுச்சியை, 19ஆம் நூற்றாண்டளவில், அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின், பிரித்தானிய கொலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியோடு ஆரம்பமாவதைக் காணலாம்.  

 கிறிஸ்தவ மிஷனரிகளின் மேலாதிக்கத்துக்கு எதிராக, அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின் சிங்கள - பௌத்த எழுச்சியைக் காணலாம். இதற்கொப்பாக வடக்கில், ஆறுமுகநாலரின் எழுச்சியை பலரும் ஒப்பிடுவர். ஆனால், ஆறுமுகநாவலரின் எழுச்சியானது, தமிழர்களிடையேயான ‘சைவ’ எழுச்சியாகவும் தமிழ்ச் சைவத்தின் மறுமலர்ச்சியாகவும்தான் இருந்தது.   

சிங்கள - பௌத்தர்களின் எழுச்சியானது, அவர்களை ஒட்டுமொத்த இலங்கைத் தீவின், பெரும்பான்மைத் தேசியமாக உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றத்தக்க ஜனநாயகப் பெரும்பான்மையை சிங்கள-பௌத்த தேசம் கொண்டிருந்தமையால், இலங்கை அரசாங்கம், சிங்கள - பௌத்த தேசத்தின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டது எனலாம்.  
 
இதன் விளைவுகளைத்தான், 1956 தனிச்சிங்களச் சட்டத்திலிருந்து இன்று வரை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையின் தமிழ்த் தேசிய கருத்துருவாக்கம் என்பது, சுதந்திரத்தின் பின்னரான, சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியாகவே பலம்பெற்றதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  

 ஆனால், இந்த எதிரெதிர் கருத்துருவாக்கங்கள், ஒன்றையொன்று எதிர்த்ததன் மூலம், தம்முள் ஒற்றுமையை அதிகரித்து, தமது உள்ளக பலத்தை வலுவாக்கிக் கொண்டன. அதாவது பலம்வாய்ந்த, சிங்கள-பௌத்த அடையாளம் என்பது கட்டியெழுப்பப்பட்ட தேசம், பிரதேசம், சாதி(குல) எனப் பல்வேறுபட்ட நிலையிலும் பிரிந்திருந்த சிங்கள-பௌத்தர்கள் ஒன்றுபட வேண்டியிருந்தது. அது இலகுவாகவோ, உடனடியாகவோ நடைபெறவில்லை.  

 1920களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சமஷ்டி முறையைக் கோரியது, உள்ளகப் பிரிவினையின் முக்கிய காரணமாகும். கண்டியச் சிங்களவர்களுக்குத் தனி அலகும், கீழ்நாட்டுச் சிங்களவருக்குத் தனி அலகும் பண்டாரநாயக்க கோரியமை, அன்று சிங்கள-பௌத்த மக்களிடையே இருந்த அடிப்படை வேறுபாட்டின் எதிரொலிதான் ஆகும்.  

 காலவோட்டத்தில், ஆட்சி அதிகாரத்தின் சாதகம், பெரும்பான்மை பலத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல காரணங்களின் விளைவாக, அரசியல் ரீதியில் சிங்கள - பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பெரும்பான்மைக்கு எதிராக, ஒடுக்கப்படும் சிறுபான்மையானது, தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டது.  

 தமிழரிடையேயும் மதங்கள், இனங்கள், பிரதேசங்கள், சாதிகள் என்பவற்றைத் தாண்டி, தமிழ்த் தேசியம் வலுவுற நீண்ட காலம் தேவைப்பட்டது. இதன் போக்கிலே ஆரம்பத்தில், தமிழ்த் தேசியத்துக்குள் பங்காளிகளாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழரும், பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம்களும் விலகி, தமக்கான தனித் தேச அடையாளத்தைக் கட்டியெழுப்பிக் கொள்கின்றமையையும் நாம் காணலாம்.  

 ஆகவே, இலங்கையை சிங்கள-பௌத்த தேசமாக அடையாளப்படுத்துவதானது, வரலாற்று ரீதியில் மிகச் சிக்கலானது; பிரச்சினைக்குரியது.

வரலாற்றில் ஆங்காங்கு நடந்தவற்றை, தமக்கேற்றால் போலத் தொகுத்து, தமக்கான அடையாளத்தைக் கட்டமைத்துக் கொள்வதனாலோ, அதைப் பெரும்பான்மை அதிகாரப் பலம் கொண்டு நிறுவிவிடுவதாலோ, அதுவே முடிந்த முடிவென்று ஆகிவிடாது. 

ஆகவே, தமிழ் பௌத்தர்கள் பற்றி அமிர்தலிங்கம், குறிப்பிட்டமைக்குள்ளும் வடக்கு-கிழக்கில் இருக்கும் பௌத்த ஸ்தலங்கள் தமிழ் பௌத்தர்களுடையது என்று சொன்னமைக்குள், வரலாற்றில் காணப்பட்ட பௌத்த அடையாளம் எல்லாம், சிங்கள-பௌத்த அடையாளத்துக்குரியவைல்ல என்ற நியாயம் உட்புதைந்துள்ளது. 

சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தமிழர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்குமான பாதுகாப்பு மற்றும், தமிழ்ப் பிராந்தியங்களின், அதாவது தமிழர் தாயகப் பிராந்தியங்களின் ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு என்பன உடனடித் தேவைகள்” என்று குறிப்பிட்டார்.   
“தமிழர் தாயகப் பகுதிகளை 1957, 1960, 1967 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் பெரும்பான்மைத் தலைவர்களிடையேயான உடன்படிக்கைகள் மற்றும் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன” என அமிர்தலிங்கம் மேலும் சுட்டிக்காட்டினார்.   

1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள், வடக்கு-கிழக்கு பிராந்தியங்களை நிர்வாக மற்றும் நீதிச் செயற்பாடுகள் தொடர்பில், தனித்த மொழிக் கட்டமைப்பைக் கொண்டமையானது, தமிழர் தாயகத்தை மறைமுகமாகவேனும் அங்கிகரித்திருக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் வாதமாக இருந்தது.  

 தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாடென்பது, தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், அதனால் விளைவிக்கப்படும் குடிப்பரம்பல் மாற்றங்களாலும் கடும் பாதிப்பைச் சந்திக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் ஆதங்கமாக இருந்தது.   

1921இல் கிழக்கு மாகாணத்தில் 4%-6% ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களால் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக, தமிழர்களின் ஆட்புல அடிப்படைகள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.  

திட்டமிட்ட குடியேற்றங்கள்  

இந்தவிடயம், இன்றுவரை வாதப் பொருளாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்த் தலைமைகள் முன்வைக்கும் போதெல்லாம், எடுத்த எடுப்பிலேயே, “தமிழர்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, அங்கு சொத்துகள் வாங்கி, தொழிலில் ஈடுபட்டு, வாழ முடியும் என்றால், சிங்கள மக்கள் ஏன், வடக்கு கிழக்கில் வாழ முடியாது?” என்ற கேள்வி சிலரால், குறிப்பாக பெரும்பான்மைத் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.   

இதற்கு, அது சரிதானே என்பது உங்களது பதிலாக இருக்குமானால், நீங்கள் இந்த ஒப்பீட்டுக்குள் புதைந்திருக்கிற ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசத்தைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தையும் சமமாக ஒப்பிடுவது, ஒரு தர்க்கத் தவறாகும் (false equivalency).   

அரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றங்களைச் செய்வதென்பது, குறித்த ஒரு பிரதேசத்தில் சென்று மக்களை குடியேற்றுவதற்காக, அரசாங்கம் வீடு, காணி, உட்கட்டமைப்பு, தொழில், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, வேறு பிரதேசத்திலுள்ள மக்களை, குறித்த ஒரு பிரதேசத்தில் குடியேற்றுவதாகும். 

 வடக்கு, கிழக்கில் இதுபோன்ற திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்வதனூடாக, அங்குள்ள குடிப்பரம்பலைச் சிதைக்கிறது என்பதுதான் தமிழ்த் தலைமைகளின் ஆதங்கமும் குற்றச்சாட்டும். மாறாக, கொழும்பிலே தமிழர்கள் வசிப்பதானது, இயல்பான குடியேற்றம்.  

 தமிழ் மக்கள், தாமாக வாழ்வாதாரம் உள்ளிட்ட இன்ன பலபிற தேவைகளுக்காக, அங்கு வந்து குடியமர்கிறார்கள். வீடுகளையோ, சொத்துகளையோ தமது சொந்தச் செல்வத்திலேயே வாங்கிக் கொள்கிறார்கள்.  

ஆகவே, இதையும், அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் சமமாக ஒப்பிடுவது எப்படி ஏற்புடையதாகும்? வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, நாட்டின் எப்பாகத்திலும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தைத் தமிழ்த் தலைமைகள் எவரும் எதிர்க்கவில்லை என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது.  

 தமிழ் மக்கள் கொழும்புக்கோ,  ஏனைய பிரதேசங்களுக்கோ இயல்பாக இடம்பெயர்வதைப் போல, சிங்கள மக்களும், ஏனைய சகல மக்களும், வடக்கு-கிழக்குக்கு இடம்பெயர்வதை எதிர்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது, ஆனால் அதேவேளை, அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களைச் செய்யுமானால்; அதன் உள்நோக்கம் பற்றிய கேள்விகளும், அது ஒருசாராருக்குப் பாதிப்பாக அமையும் போது, அதற்கெதிரான வலிமையான எதிர்ப்பு, தவிர்க்க முடியாததாகிறது.   

இது, சிங்கள மக்களுக்கு எதிரான, தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு அல்ல; மாறாக, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பு. ஆனால், இதைச் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக உருவகப்படுத்தி, பரப்புரை செய்ததில் பேரினவாத அரசியல் வெற்றி பெற்றிருந்தது.  
அம்பாறையும் தனிஅலகும்  

குடிப்பரம்பல், காணிகள் பற்றிப் பேசியபோது, அமிர்தலிங்கம் அம்பாறை பற்றிக் குறிப்பிட்டுப் பேசியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.   

“1984 ஜனவரி 1ஆம் திகதி, அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினர், தனக்கு அனுப்பி வைத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வின் போது, அம்பாறை தனித்த அலகாகக் கருதப்பட வேண்டும் என்ற முஸ்லிம் லீக்கின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டியதுடன், அங்கு சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலை ஆகியவற்றுக்காக முஸ்லிம் மக்களிடமிருந்து அரசாங்கம் சுவீகரித்த காணிகள், அம்மக்களுக்கு நட்டஈட்டுடன் திருப்பித் தரப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

வன்முறைப் பாதை  

தனது பேச்சின் இறுதியில், அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் வன்முறைப் பாதை பற்றிக் குறிப்பிடவும் அமிர்தலிங்கம் தவறவில்லை. “வன்முறை என்ற ஒரு கூறு, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் நுழைந்திருப்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்”. இவ்வாறு சொன்ன அமிர்தலிங்கம், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகப் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் கையாளப்பட்ட வன்முறை நடவடிக்கைகள், தமிழ் இளைஞர்கள் சிலரை, எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டியது.   

1974ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், ஒன்பது அப்பாவி மக்கள் பொலிஸாரின் நடவடிக்கையால் கொல்லப்பட்டமையானது, தமிழர்களின் ஆண்மைக்குச் சவாலாகக் கருதப்பட்டது. இந்தியாவில் நடந்த ‘ஜாலியன்வாலா பாக் படுகொலைகள்’ அங்கு ஆயுதந்தாங்கிய இளைஞர் இயக்கங்கள் உருவாகக் காரணமானது.  இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமையானது, பொலிஸாருக்கெதிரான எதிர் நடவடிக்கைகளுக்கு காரணமானது. இது, அதிகரித்து அதிகரித்து இன்றைய சிரமம்மிகு நிலைக்கு எம்மைக் கொண்டு வந்திருக்கிறது.   

ஆனால், இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த வன்முறைகளில் தமிழர் பிரதேசங்களில், ஒரு சிங்களக் குடிமகன் கூட பாதிக்கப்படவில்லை. ஆனால், தென்னிலங்கையின் நிலைமை இதற்கு முற்றிலும் எதிரானது. இதற்குப் பதில், தமிழ் இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, சித்திரவதை செய்வதோ, அப்பாவி மக்களுக்கெதிரான வன்முறையோ அல்ல. இது இன்னும் அதிகளவிலான இளைஞர்கள் ஆயுத வழியை நாடுவதற்கே வழிகோலும்.   

அண்மையில் கூட, ஆயுதப்படைகள் வவுனியாவில் தமிழ் மக்களுக்கெதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை அடையாளங்கண்டு, தண்டிக்க வாய்ப்புகள் இருக்கிறதா? தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு இராணுவமாகத் தளம் கொண்டிருக்கும் இராணுவப் படைகள், விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அமிர்தலிங்கம் கோரிக்கை விடுத்தார்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பற்றிய அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு தௌிவின்மையைக் காணலாம். அவற்றை முற்றுமுழுதாக ஆதரிக்கவும் முடியாத, அதேவேளை அவற்றை முழுமையாக நிராகரிக்கவும் முடியாத அரசியல் சுழலில் அவர் சிக்கியிருந்தமையைக் காணலாம்.   

இரத்ததிலகம் பெற்று, வீரவசனம் பேசிய அமிர்தலிங்கம், ஒரே மூச்சில் காந்தியத் திலகமாக முடியாது என்ற யதார்த்தம் கூட, அமிர்தலிங்கத்தின் இந்தத் தயக்கத்துக்குக்  காரணமாக இருக்கலாம். 

 இங்கு, தமிழ் இளைஞர்களது வன்முறைப் பாதையைச் சுட்டிக்காட்டுவோர், அதற்கான காரணங்கள், அதன் தோற்றுவாய், அதைத் தவிர்ப்பதற்கு இருந்த மிக இலகுவான வழிகள் என்பவற்றை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.    

இந்த இடத்தில், அமிர்தலிங்கத்தின் கருத்தை ஆயுத வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சியாகப் பார்த்தல் தவறு. மாறாக,அதைத் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அநியாயமாகத் தவறவிடப்பட்ட அநியாயத்தைச் சுட்டிக்காட்டும் முயற்சியாக நோக்குதலே பொருத்தமானது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாற்றில்-சிங்கள-பௌத்தம்/91-211456

Link to comment
Share on other sites

சர்வகட்சி மாநாட்டில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 132)

அமிர்தலிங்கத்தின் அழுத்தமான நிலைப்பாடு  

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், முதலில், இந்நாட்டிலிலுள்ள தமிழர்கள், ஒரு தனித்தேசம் என்பதை நிறுவினார்.  

 அதைத் தொடர்ந்து, இனப்பிரச்சினையின் வரலாறு, அதன் திருப்புமுனைகள், அதன் சமகால அமைவு என்பவற்றை மேற்கோள்காட்டி, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்கும், முழுமையான உரையொன்றை ஆற்றியிருந்தார்.   

ஆயுதப் போராட்டம் பற்றிய அவரது நிலைப்பாடு, அறுதித் தெளிவுடன் இல்லாத போதும், அதைத் தடுப்பது அரசாங்கத்தினதும், பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது என்பதை, அவர் எடுத்துரைத்திருந்தார்.  

அதேவேளை, 1976ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான, தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்கும், அதனடிப்படையில் தமிழ் மக்கள், 1977இல் தந்திருந்த மாபெரும் மக்களாணைக்கும் குந்தகம் வரமுடியாதபடி, தனது பேச்சின் இறுதியை வடிவமைத்திருந்த அமிர்தலிங்கம், அதைப் பின்வருமாறு பதிவு செய்தார்.   

“அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படுமானால், வன்முறை நடவடிக்கைகளும் அதற்கான ஆதரவும் அடங்கிப்போய்விடும். வன்முறையைத் தடுப்பதற்கு வேறு வழிகளில்லை. வணக்கத்துக்குரிய மதகுருமார் மற்றும் சிலர் தங்களுடைய பேச்சுகளில் குறிப்பிட்ட, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றிக் கருத்துரைக்க, எனக்கு நேரம் போதாதுள்ளது; என்னுடைய சகாக்கள் சிலர், அந்த விடயங்கள் பற்றிக் கருத்துரைக்கக்கூடும். இறுதியாக நான் சொல்ல வருவது இதைத்தான்: இந்த நாடு, மேலும் வன்முறையில் மூழ்கடிக்கப்படப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, தன்னுடைய ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, பொருளாதார ரீதியில் முன்னகரப் போகிறதா, இல்லையா என்பதெல்லாம், மாநாட்டின் கலந்துரையாடல்களின் முடிவில்தான் தங்கியுள்ளது. நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில், தீர்வொன்றை எட்டுவதற்குப் பணியாற்றுமாறு, நான் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்” என்று, தனது பேச்சை அமிர்தலிங்கம் நிறைவு செய்தார்.   

இதன் மூலம், அவர் சொன்ன விடயமானது, தமிழர் தரப்பு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதும் கொள்ளாததும் அரசாங்கத்தினதும் பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தரப்போகும் தீர்வில்தான், பிரிவினையை விட்டுத் தமிழர் தரப்பு இறங்கி வருவது தங்கியிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.   

இலங்கை நாடும் அதற்குட்பட்ட தேசங்களும்  

1956இல் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக எழுந்தது, ஒரு மொழிப்பிரச்சினை; ஆகவே, தமிழ்மொழிக்குச் சம அந்தஸ்து வழங்குவதன் மூலம், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று கருதும் சிலர், இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.   

முதலாவது விடயம், 1956இலிருந்து இன்று ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னும், அரசமைப்பில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழி என்று குறிப்பிட்ட பின்னரும், தமிழ்மொழியின் அமுலாக்கம் என்பதில், யதார்த்தத்தில் எப்படியிருக்கிறது என்று அனைவரும் அறிவர்.   

அதுநிற்க, 1956இல் தனிச்சிங்களச் சட்டத்தினூடாக ஏற்பட்டது, மொழிப்பிரச்சினை என்ற பொருள்கோடலே அடிப்படையில் தவறானது. ஏனென்றால், சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கியதன் அடிப்படை, இலங்கைத் தேசமானது ‘சிங்களத் தேசம்’ என்ற கருத்தியல்தான்.  

1972இல் உருவான முதலாவது குடியரசு அரசமைப்பில், சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டதுடன், பௌத்த மதத்துக்கு, முன்னுரிமை வழங்கியமையுடன், இலங்கைத் தேசமானது ‘சிங்கள-பௌத்த தேசம்’ என்ற கருத்தியலாக உருப்பெறுகிறது.   

அப்படியானால், இந்த அடையாளங்களுக்கு உட்படாது வேறுபட்டு, வரலாற்றுக் காலத்திலிருந்து இந்த நாட்டில் வாழ்கிற மக்கள், எந்தத் தேசத்துக்கு உரியவர்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.   
ஆகவே, தனித்த ‘தமிழ்த்தேசம்’ என்ற கருத்தியலின் உருவாக்கம், எவ்வாறு இருப்பினும், அதற்கு அங்கிகாரமும் பலமும் ‘சிங்கள-பௌத்த தேச’ கருத்தியலால்தான் வழங்கப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.   

சுருங்கக் கூறின், இலங்கை என்ற பூகோள நிலப்பரப்பினுள் வாழும் மக்களில் பெரும்பான்மையினர், தம்மை ஒரு தனித்த அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுத்தி, அதைத் தமது தேசத்தின் அடையாளமாகப் பிரகடனப்படுத்தியதன் ஊடாக, அந்த அடையாளத்துக்கு உட்படாத சிறுபான்மையினரை, அவர்கள் வேறானவர்கள் என்று ஒதுக்கியுள்ளனர்.   

இந்நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரின் தேசத்தவர்கள் இல்லாதவர்களாயின், அவர்கள் வேறொரு தேசத்தவர்கள் என்றே பொருளாகிறது. (இங்கு அரசு, தேசம், நாடு என்பவை, அவற்றின் தொழில்நுட்ப அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க).   

மேற்கின் மறுமலர்ச்சியைத் தொடர்ந்து, எழுந்த ‘தேசிய அரசுகளின்’ அடிப்படையை,கொலனித்துவ விடுதலையில் பின்னர், இலங்கை சுவீகரிக்க விரும்பியிருந்தால், அதன்படி ‘இலங்கைத் தேசம்’ என்ற புதிய கருத்தியலானது, இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்கின்ற அனைவரையும் உள்ளிணைத்து, சமத்துவத்துடன் பிரான்ஸ் தேசத்தைப் போல, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.   

மாறாக, தமது தேச அடையாளங்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘இலங்கைத் தேசம்’ என்ற கருத்தியலை பெரும்பான்மையினர் நிறுவுவதானது, அந்த அடையாளங்களுக்கு உட்படாதவர்களை விலக்கி வைப்பதாகிறது.   

ஆகவே, ‘இலங்கைத் தேசம்’ அல்லது ‘ஒரு தேசம்’ என்ற கருத்தியல், எண்ணுவதற்கு அற்புதமாக இருந்தாலும், இலங்கையின் வரலாறு மற்றும் நடைமுறை அரசியலுடன் அது இணைவொத்தது அற்றதாகவே இருக்கின்றது.   

ஆகவே, ஒரு பன்மைத் தேச அரசு என்பதுதான் இலங்கைக்கு யதார்த்தம். தமிழ்மக்கள், சுயநிர்ணய உரிமையுள்ள தனித்த தேசம் என்று, அமிர்தலிங்கம் நிறுவியதன் முக்கியத்துவம் இதுதான். தொழில்நுட்ப ரீதியில் இது, பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் என்ற பிரச்சினை அல்ல; இது பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசத்தை அடக்குமுறைக்குள்ளாக்கும் பிரச்சினை.   

இதை, அமைதி வழியில் தீர்க்க முயலாதுவிட்டால், சுயநிர்ணய உரிமையுள்ள சிறுபான்மைத் தேசத்துக்கு, அந்தச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், பிரிவினையைக் கோரமுடியும் என்பதுதான் அமிர்தலிங்கத்தின் உரையினுள் உட்பொதிந்துள்ள சூட்சுமமாகக் கருதலாம்.  

குமாரின் தெளிவான நிலைப்பாடு  

அமிர்தலிங்கத்தின் உரையைத் தொடர்ந்து, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான குமார் பொன்னம்பலம், தனது உரையை ஆற்றினார்.   

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைவிட, மேம்பட்ட தீர்வு வழங்க முடியாது என்ற கருத்தையே பதிவு செய்திருந்தார்கள்.குறிப்பாக, ஆரம்பத்திலிருந்தே பௌத்த பிக்குகளின் உறுதியான நிலைப்பாடாக இது இருந்தது.   

குமார் பொன்னம்பலமும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. “மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்போது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரிப்பதானது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அரசாங்கம் தீர்க்க முயற்சி எடுக்கிறது என்ற மாயத்தோற்றத்தையே உருவாக்கும்” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.  

மேலும், அதேதேர்தல் காலத்தில், தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த 
ஆர்.ஈ. ஆனந்தராஜா, “மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம், தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையுமில்லை” என்று பேசியிருந்தார்.  

 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வுக்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டு, முயலத் தயாராக இருந்தநிலை இருந்தது.   

ஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தீர்வல்ல என்பதில் உறுதியாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், சர்வகட்சி மாநாட்டில் குமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையும் இருந்தது. சொல்ல வேண்டியதை, குமார் பொன்னம்பலம் நேரடியாகவே சொன்னார்.   

“தமிழ் மக்களின் கோரிக்கை என்பது தனி அரசுதான்; ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இந்தக் கோரிக்கையின் பின்னால்தான் நிற்கிறார்கள்” என்று, சர்வகட்சி மாநாட்டில் பதிவு செய்த குமார் பொன்னம்பலம், “ஆனால், தமிழ் மக்களைச் சமமான பங்காளிகளாக ஏற்றுக் கொண்டு, அவர்கள் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழத் தயார்” என்றார்.   

அனெக்ஷர் ‘சி’ க்கான ஆதரவு  

இதைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், ஜே.ஆர் அமைச்சரவையின் அங்கத்தவருமான சௌமியமூர்த்தி தொண்டமான், இனப்பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததுடன், ஜே.ஆருக்கும் - பார்த்தசாரதிக்கும் பிறந்து, ஜே.ஆரினால் அநாதையாக்கப்பட்டு, தன்னால் தத்தெடுக்கப்பட்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வாக முன்வைத்தார்.  

இதையொத்த கருத்தையே, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அப்துல் அஸீஸும் பதிவு செய்திருந்தார். 

அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளைச் சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரித்து நின்ற அதேநேரத்தில், லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளிடமும் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் தொடர்பில் ஆதரவான போக்குக் காணக்கிடைத்தது.  

 அகில இலங்கை முஸ்லிம் லீக்கும் பிராந்தியச் சபைகள் அமைக்கப்படுவதற்கு ஆதரவாகவே இருந்தது. பார்த்தசாரதியோடு இணங்கிய அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, ஜே.ஆர்  நிறைவேற்ற எண்ணியிருந்தால், இதைவிட ஏதுவான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.  

ஆனால், ஜே.ஆரின் எண்ணம் அதுவாக இருக்கவில்லை என்பதை அவரது நடவடிக்கைகளே எடுத்துரைப்பதாக இருந்தன. ஜே.ஆர், மதகுருக்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை, சர்வ கட்சி மாநாட்டுக்குள் உள்ளீர்த்தது, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் என்ற விமர்சனங்களை வலுப்படுத்தும் வகையில்தான், வல்பொல ராஹுல தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின், அனெக்ஷர் ‘சி’  க்கான எதிர்ப்புக் காணப்பட்டது.   

ஜே.ஆரின் அடுத்த நடவடிக்கை  

பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் எழுதிய, ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு பற்றிய நூலொன்றில், ‘சர்வகட்சி மாநாட்டை, ஜே.ஆர் தாமதப்படுத்தும்  கருவியாகவே பயன்படுத்தினார்’ என்று பதிவுசெய்கிறார்.   

அதாவது, இராணுவ ரீதியாகத் தன்னைப் பலமாக்கும் வரை, காலம்கடத்தும் ஒரு வழியாக, சர்வகட்சி மாநாட்டைக் கையாண்டார் என்கிறார் பேராசிரியர் வில்சன். ஜே.ஆரின் அடுத்த காய்நகர்த்தல், இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

1984 ஜனவரி 20ஆம் திகதி, மாநாட்டின் ஏழாவது நாளன்று, “மாநாடு இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழு அரசாங்க முறைமை பற்றியும், மற்றைய குழு பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் ஆராயும்” என்று ஜே.ஆர் அறிவித்ததுடன், குறித்த குழுக்கள் எவ்வாறு இயங்கும் என்று, சர்வகட்சி மாநாட்டின் அங்கத்தவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.   

சர்வகட்சி மாநாடு, இரு குழுக்களாகப் பிரிந்து, கலந்துரையாடலில் ஈடுபட்டது. சில நாட்கள், இந்தக் குழுக்களின் கலந்துரையாடல் தொடர்ந்த பின்னர், இரண்டு குழுக்களும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்று ஜே.ஆர் அறிவித்தார்.   

இந்த இணைந்த குழுவில், கட்சிப் பிரதிநிதிகள், மதகுருமார்கள் ஆகியோருக்கு மேலதிகமாக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த இணைந்த குழுவானது, தன்னுடைய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசாங்க முறை மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றிய தமது பார்வையை, அறிக்கையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, அறிக்கையிடுவதற்கான வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டன.   

இந்தக் குழுக்களும், அதன் அறிக்கைகளுக்கு வழங்கப்பட்ட வரைமுறைகளும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய வாதத்தை நீர்த்துப்போகச் செய்ததுடன், இந்தச் சர்வகட்சி மாநாடு பற்றிய ஐயத்தையும் நம்பிக்கையீனத்தையும் தமிழ் மக்களிடையேயும் தமிழ்த் தலைமைகளிடையேயும் ஏற்படுத்துவதாக அமைந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-மாநாட்டில்-தமிழ்-தலைமைகளின்-நிலைப்பாடு/91-211675

Link to comment
Share on other sites

சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 133)

சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’

சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த குழுவாக ஒன்றிணைந்தனர். 

இருவிடயதானங்கள் பற்றியதுமாக, அவர்கள் இணைந்து கலந்துரையாடுவதுடன், அதனடிப்படையிலான அறிக்கையிடல், பின்வரும் தலைப்புகளில் அமைய வேண்டும் என்ற வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.

 அந்த வழிகாட்டும் வரைமுறைகளானவை: 

(1) நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களினதும் உறுப்பினர்கள் நல்லிணக்கத்துடன் வாழத்தக்கதானதும், சகல பிரதேசங்களிலும் தமது கருமங்களை அமைதியான முறையில் கொண்டு நடத்தத்தக்கதுமானதுமான அரசாங்க முறைமையொன்றை உறுதிசெய்தல். 

(2) கல்வியில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.

 (3) தொழிலில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.

 (4) காணி உரிமை நிர்ணய அமைப்பு முறைகளை வழங்குதல்.

(5) சகல பிரதேசங்களிலும் வசிப்போருக்குரிய பாதுகாப்பு அமைப்பு முறைகளை வழங்குதல்.

(6) பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.

(7) வேறு விடயங்கள். இந்தத் தலைப்புகள் எதுவும் நேரடியாக அதிகாரப் பகிர்வு பற்றியோ, அனெக்ஷர் ‘சி’யின் அடிப்படையிலான பிராந்திய சபைகள் பற்றியோ பேசவில்லை. 

இந்த முயற்சியை, காலங்கடத்தும் செயல் என்று சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை வௌித்தெரிய, இன்னும் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது. 

ஜனவரி மாதத்தில் சில தினங்கள், பெப்ரவரி மாதத்தில் சில தினங்கள், மார்ச் மாதத்தில் சில தினங்கள் என்று 1984 மார்ச் 15ஆம் திகதி வரை, இணைந்த குழு கூடிக் கலந்தாய்ந்தது.

பெருந்திரள்வாதமும் இனவாதமும் இனப்பிரச்சினைத் தீர்வும்  

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என தமிழ் சிறுபான்மை முழுவதும் ஒன்றுபட்டு, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை முன்னிறுத்திக் கொண்டிருந்தமை, ஜே.ஆருக்கு பெருஞ்சவாலாக இருந்தது.

அனெக்ஷர் ‘சி’யை முழுமையாகவன்றி, அதன் பெரும்பான்மையையேனும் அமுல்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதை அவர் மிக இலகுவாகவே செய்திருக்கலாம். 

அனெக்ஷர் ‘சி’  முன்மொழிவுகளை ஜே.ஆர் எதிர்ப்பதைவிட, ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களே நிறைய இருந்தும், ஜே.ஆர் அதைச் செய்யத் தயாராக இல்லாதிருந்தது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். இது ஜே.ஆர் என்ற தனிமனிதனின் தவறு என்பதிலும், இந்த நாட்டின் அரசியலில் கட்டமைக்கப்பட்டிருந்த உபாக்கியானத்தின் விளைவென்றே கருத வேண்டும். 

பெருந்திரள்வாத (populism) அரசியல் என்பது, இந்தநாட்டில் இனவாதத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, இந்த நாடு கொண்டாடும் மகாவம்சமே சான்று. 

மகாவம்சத்தின் கதாநாயகனான சிங்கள-பௌத்த துட்டகைமுனு, தமிழனான எல்லாளனைக் கொன்று, வென்று இந்த நாட்டை ஒன்றுபடுத்தி, சிங்கள-பௌத்தத்தை ஓங்குவித்தான் என்ற பகட்டாரவாரமே (rhetoric), இலங்கையின் பெரும்பான்மை அரசியலின் அடிநாதமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், துட்டகைமுனு என்ற பாத்திரமே, தலைமைத்துவத்துக்கான மதிப்பீட்டு அளவையாகிறது. 

ஆகவே, இதன்வழியிலான பெருந்திரள்வாத அரசியலை முன்னெடுப்பதற்கு, இங்கு தமிழர்களை வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. 

சிறுபான்மை இனமொன்று, அதுவும் ஆயுதக்குழுக்கள் சிலதைக் கொண்டுள்ள இனம், அந்த இனம் கோருவதைக் கொடுத்துவிட்டால், இனப்பிரச்சினை தீரும். ஆனால், அப்படி இனப்பிரச்சினை தீர்வதை, எவ்வளவு தூரம் பெருந்திரள்வாத அரசியல் ஒரு வெற்றியாகக் காணும் என்ற கேள்வி எழுகிறது. 

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுமுயற்சிகள், இன்று வரை தோற்றுக் கொண்டேயிருப்பதற்கு, இந்த அரசியல் அடிப்படைதான் காரணமெனலாம். இந்தப் பெருந்திரள்வாத அரசியல் கட்டியெழுப்பிய பகட்டாரவாரப் புனைவானது, ஒரு போலி அல்லது வெற்று மாயை என்பதை எடுத்துக்காட்டும் பலமான பெரும்பான்மை அரசியல் சக்திகள் இலங்கையில் இல்லை என்பதும், அதைத் தகர்த்துக் கொண்டு வௌியில் வரத்தக்க தலைமைத்துவப் பலம், எந்தத் தலைமையிடமும் இதுவரை இருக்கவில்லை என்பதும் துர்ப்பாக்கியமானது. 

ஆகவே, ஜே.ஆர் தீர்வொன்றை வழங்கிவிட்டால், “தமிழர்களுக்கு நாட்டைக் கூறுபோட்டுக் கொடுத்தார்” என்று, சிறிமாவோ தலைமையிலான மற்றைய பெரும்பான்மைப் பெருந்திரள்வாதத் தரப்பு, பிரசாரத்தை முன்னெடுக்கும், 

சிறிமாவோ தரப்பு தீர்வை வழங்கினால், அதே பிரசாரத்தை ஜே.ஆர் தரப்பு முன்னெடுக்கும். அரசியல் பலத்துக்கான, ஆட்சி அதிகாரத்துக்கான இந்தப் பெருந்திரள்வாதச்  சண்டையில் இந்த நாடும், மக்களும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்; இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  

நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை  

அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை நிறைவேற்ற, ஜே.ஆரிடம் எண்ணம் இல்லாதபோதும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சர்வகட்சி மாநாட்டின் மூலம், ஏதாவது நடந்ததாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அந்தச் சூழலில் ஜே.ஆருக்கு வசமாகக் கிடைத்தது, சௌமியமூர்த்தி தொண்டமான் வைத்த ஒரு கோரிக்கை. 

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தலைமையாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான், 1964இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின்படி, அன்று இலங்கையிலிருந்த ஏறத்தாழ, 975,000 இந்திய வம்சாவளி மக்களில் 600,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் கூறுபோடும் “குதிரைப்பேரம்” முடிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில், 506,000 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆக, இந்திய ஒதுக்கீட்டுக்குள் வரவேண்டிய 94,000 பேர் மற்றும் அவர்களது இயற்கைச் சந்ததிகள், தொடர்ந்தும் இலங்கையில், நாடற்றவர்களாகத் தொடர்ந்த நிலையில், அவர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை, சர்வகட்சி மாநாட்டில் தொண்டமான் முன்வைத்திருந்தார். 

இது ஒப்பீட்டளவில் ஜே.ஆருக்குத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தெரிந்தது. அதற்கு, சில காரணங்களை ஊகிக்கலாம். 

இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் கோரிக்கைகளின் முன்னுரிமைகள், இலங்கைத் தமிழ் மக்களின் (குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின்) அரசியல் முன்னுரிமைகளிலும் வேறுபட்டிருந்தன. 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தொண்டமான், அதனின்று விலகிச் செயற்படுவதற்கும் இது முக்கிய காரணமாகும்.

அதிகாரப்பகிர்வு, தனி அலகு என்பவை அன்றைய சூழலில் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருக்கவில்லை. பிரஜாவுரிமை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவையே இந்திய வம்சாவளித் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருந்தன.

இதை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதன் மூலமே, அடைய முடியும் என்பது தொண்டானின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இறுதிவரை அவர் அதன்வழியிலேயே பயணித்திருந்தார். 
இந்த அரசியல் முன்னுரிமைகளின் வித்தியாசத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஜே.ஆர் நினைத்திருக்கலாம். இதுவும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரம்தான். 

தமிழர்கள் என்ற ஓர் அடையாளத்தின் கீழ், தமிழ் பேசுவோர் ஒன்றித்திருப்பதில் இருக்கும் பலம், அவர்கள் பிரதேச ரீதியாக, மதரீதியாகப் பிளவுற்று நிற்கும்போது பலம் குறைந்தவர்களாகிறார்கள். 

மற்றையது, நாடற்றவர்களாக இருக்கும் மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்குவது, தமக்கு ஆதரவான வாக்குவங்கியையும் உயர்த்தக்கூடும் என்றும் ஜே.ஆர் எண்ணியிருக்கலாம். 

அத்தோடு தொண்டமான், ஜே.ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் இதைச் செய்வதும் ஜே.ஆருக்கு சவாலானதாகவே இருந்தது. 

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இலங்கையின் இன-மைய அரசியலை வைத்துப் பார்க்கையில், அன்று, இலங்கையில் வாழ்ந்துவந்த அனைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தால், அது இலங்கையின் சனத்தொகையில், சிறுபான்மையினரின், அதிலும் குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ பத்து இலட்சம் அளவில் உயர்த்தியிருக்கும் என்பது முக்கிய காரணம் எனலாம். 

இன்றும் நாடற்றிருந்தவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினால், தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இதைப் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி ஜே.ஆர் முன்பு தொக்கி நின்றது. 

குறிப்பாக, சர்வகட்சி மாநாட்டுக்குப் பங்காளிகளாக ஜே.ஆர் அழைத்திருந்த மகாசங்கத்தினர், இதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டிய சவால், ஜே.ஆர் முன்பு இருந்தது. 

‘ஆசியாவின் நரி’, ஒரு கல்லில் மீண்டும் சில மாங்காய்களை வீழ்த்துவதற்கு காய்களை நகர்த்தியது.  

மகாசங்கத்தினரைச் சம்மதிக்க வைத்தல்  

தொண்டமானிடம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்க ஜே.ஆர் சம்மதித்தார். அடுத்து, மகாசங்கத்தினரைத் தனியாகச் சந்தித்துப் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளி மக்களில் நாடற்றிருந்தவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கும் முன்மொழிவை, தேர்ந்த இராஜதந்திரத்துடன் முன்வைத்தார். 

இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை மகாசங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மகாசங்கத்தினரிடம் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளியினர் நலன் என்பது மட்டுமே இலங்கையில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரே நியாயமான உரிமை. 

நாடற்றிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை இலங்கைப் பிரஜைகள் ஆக்கிவிட்டால், இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது போகும் என்று மகாசங்கத்தினரின் இந்திய-எதிர்ப்பை, தனது காய்நகர்த்தலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார் ஜே.ஆர். 

ஆனால், இது சிறுபான்மையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமே என்ற ஐயம் முன்வைக்கப்பட்ட போது, தற்போது இலங்கையில் இருக்கும், நாடற்ற இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை, பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டால், மிகக் குறைவானதே என்றும் ஜே.ஆர் சுட்டிக்காட்டினார். 

இதைத் தொடர்ந்து, மகாசங்கத்தினர் தமது முடிவை வௌியிட்டிருந்தனர்.  “தம்மை, இந்தியர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை நாம் கொண்டிருக்கக் கூடாது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு மீள அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிவிட்டு, எஞ்சியவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்குவதன் மூலம், இதை நாம் இலகுவில் சாதிக்கலாம். எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை எதிர்ப்பதில்லை என்று மகாசங்கத்தின் உயர்குழு தீர்மானித்திருக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியது. 

இந்தியாவுக்கு மீள அனுப்பப்பட வேண்டியவர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் சொல்வது, இந்த நாட்டில் தலைமுறைகள் கடந்து, வாழ்ந்துவிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்களது விருப்பு வெறுப்புகளை நோக்காது, கட்டாய நாடு கடத்தும் செயலன்றி வேறேது? 

இந்த விடயம் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டபோது, மனிதாபிமான மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாடற்றவர்களாக எஞ்சியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்திய வம்சாவளி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில், எமது உள் விவகாரங்களில், இந்தியா தலையிடும் என்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ பேசியிருந்தார்.  

சிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா காந்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளியினருக்குப் பிரஜாவுரிமை அளிக்க மகாசங்கத்தினர் சம்மதித்தனர். 

இதன் மூலம் இந்தியா, இலங்கையில் தலையிடும் தார்மீக உரிமையை இழக்கும் என்பது, மகாசங்கத்தினர் இதற்குச் சம்மதிக்க முக்கிய காரணமாக இருந்தது. 

ஏனெனில் இந்த முடிவை, சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்டதை அறிவித்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாசங்கத்தினர், இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர். 

அந்த ஊடக சந்திப்பில் பேசிய வல்பொல ராஹுல தேரர், “மகாசங்கத்தின் உயர்குழாமின் முன்மொழிவின்படி, நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழிக்க, சர்வகட்சி மாநாடு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆகவே, தற்போதிருந்து இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு  எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் பிரஜைகள்; அவர்கள் சார்பில் இந்தியா தலையிட முடியாது” என்றார்.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-மாநாடும்-பிரஜாவுரிமை-பிரச்சினையும்/91-212020

Link to comment
Share on other sites

ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 134)

ஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு 

சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி, இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார். 

முதலாவதாக, அரச முறைமை பற்றிய விடயத்தில், அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில், மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும், அரச முறைமை பற்றியும், எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார்.

இரண்டாவதாக, உள்ளூராட்சி விடயம் தொடர்பில், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில், ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது போல, கிராம சேவகர் மட்டத்திலான கிராமோதய மண்டலங்களும், துணை அரசாங்க அதிபர் மட்டத்திலான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதேச மண்டலங்களும் உருவாக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும், ஆயினும் தேர்தல் முறைமை முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மூன்றாவதாக, “நாடற்ற நிலையை” இல்லாதொழிக்கும் விடயம் தொடர்பில், மகாசங்கத்தினரின் முன்மொழிவின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். நான்காவதாக, இனரீதியான வன்முறை, பயங்கரவாதம் ஆகியன பற்றிய விடயத்தில், நாட்டின் சகல பாகங்களிலும் வன்முறைக்கான காரணங்களும், சகலவிதமான பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதென அறிவித்தார். 

சர்வகட்சி மாநாட்டின் “இணக்கப்பாடு” பற்றிய ஜே.ஆரின் இந்த அறிவிப்பு, தமிழ்த் தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்த தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும், எந்தவிதமான இணக்கப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், உடனடியாகவே ஜே.ஆரின் இணக்கப்பாடு பற்றிய அறிவிப்புக்கு தனது மறுப்பைத் தெரிவித்தார். தாமோ, தனது கட்சியோ எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட்டது பற்றி அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இதற்கு ஜே.ஆர் அளித்திருந்த பதில், அதிர்ச்சிகரமானது. “எனது முடிவுதான் இணக்கப்பாடு” என்று ஜே.ஆர் தெரிவித்தாரென, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். இதைத் தொடர்ந்தான ஜே.ஆரினுடைய அடுத்த அறிவிப்பு, தமிழர் தரப்புக்கு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

சர்வகட்சி மாநாட்டை 1984 மே 9ஆம் திகதி வரை, ஏறத்தாழ 7 வார காலத்துக்கு ஒத்திவைப்பதாக ஜே.ஆர் அறிவித்தார். இந்த நீண்ட ஒத்திவைப்புக்கு என்ன காரணம் என்று அமிர்தலிங்கம் வினவிய போது, குழுக்களின் அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது என ஜே.ஆர் பதிலளித்தார். 

தமிழ்த் தலைமைகளின் கையறுநிலை

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் என தமிழ்த் தரப்பினர், குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை என்பதுடன், அதற்கான தமது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர். இதனை வெறும் காலங்கடத்தும் செயலாகவே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பார்த்தன.

தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலத்தைப் பெறுவதற்கான ஜே.ஆரின் நடவடிக்கைதான் இந்த சர்வகட்சி மாநாடு என்பது, விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. ஆயினும் இந்திய அழுத்தத்தின் பெயரில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தது. 

ஆனால் ஜே.ஆரின் நடவடிக்கைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தை நிரூபிப்பதாகவே இருந்தது. மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை ஏழு வாரங்களுக்கு ஒத்திவைத்த ஜே.ஆர், மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற புதியதோர் அமைச்சை ஸ்தாபித்ததுடன், லலித் அத்துலத்முதலியை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமித்தார். 

அதே மார்ச் 23ஆம் திகதி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும், சர்வகட்சி மாநாடு ஏழுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான தமது கண்டனத்தை வௌிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

அந்தக் கடிதத்தில், “அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

ஜே.ஆரின் தந்திரோபாயம் என்பது மிக இரகசியமாக, எவருக்கும் தெரியாமல் இருந்ததொன்றல்ல. அவரது காய்நகர்த்தல்கள், இராணுவ நடவடிக்கையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை, அமிர்தலிங்கமும் தமிழர் தரப்பும் நன்கறிந்தே இருந்தனர்.

ஆனால் இதற்குப் பொருத்தமான அரசியல் எதிர்வினையாற்றத்தக்க அரசியல் வலு, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இருக்கவில்லை. ஏனெனில் தமிழ் அரசியல் தலைமைகளே, தமது பகட்டாரவார அரசியலால் விதையிட்டு, நீரூற்றி, முளைவிடச் செய்த தனிநாட்டுக்கான ஆயுதவழி என்ற அதே விடயத்தைதான், ஜே.ஆர் அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

இது, தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருவகையான நிர்க்கதி நிலை என்று சொன்னால் மிகையல்ல. ஏனென்றால் இந்தியா என்ற ஒரு விடயத்தை தவிர, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேரம்பேசும் பலம் அவர்களிடம் வேறு இல்லை என்பதை அவர்களும் அறிவர், ஜே.ஆரும் அறிவார்.

ஜே.ஆருடைய எண்ணமும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எண்ணமும் ஒத்ததாக இருந்த நிலையில், இதனை மாற்றத்தக்க வலு தம்மிடம் இல்லை என்பதை, தமிழ்த் தலைமைகள் உணர்ந்தே இருக்க வேண்டும். 

தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது

தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும்  லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டமை தேசிய அரசியலில், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள், இரண்டாம்கட்டத் தலைமைகளிடையேயான பனிப்போரை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், ஜே.ஆருக்கு அடுத்த தலைமை என்பது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவாகவே இருந்தார். எளிய மக்களின் தலைவன் என்றறியப்பட்ட பிரேமதாச, பெரும் மக்கள் செல்வாக்குக்குச் சொந்தக்காரர். “மேட்டுக்குடியினரின்” கட்சி என்று ஐக்கிய தேசியக் கட்சி பற்றி இருந்த பொது அபிப்பிராயத்தை மாற்றியமைத்த ஒரே தலைமை, பிரேமதாசவினுடையது என்றால் மறுப்பதற்கில்லை. 

ஜே.ஆருக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான உறவு, சுமுகமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால் இருவரும் மற்றவரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நன்கறிந்திருந்தனர். அதன் விளைவாக அபிப்பிராயபேதங்கள், முரண்பாடுகள் இருந்த போதும், பிளவடையாது அவர்களின் பயணம் அமைந்தது.

இந்த நிலையில்தான் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க ஆகிய இளம் தலைவர்களுக்கு, ஜே.ஆர் முக்கியத்தும் அளிக்கத் தொடங்கினார். லலித் அத்துலத்முதலி, சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதைவிட, வௌிநாட்டுக் கொள்கை வகுப்பு தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டை விட ஜே.ஆர், லலித் அத்துலத்முதலியின் உள்ளீட்டிலேயே நம்பிக்கை கொண்டிருந்தாரென, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.

ஜே.ஆர் அரசாங்கத்தில், ஜே.ஆர், பிரேமதாச ஆகியோருக்கு அடுத்து, பலம்வாய்ந்த தலைவராக அத்துலத்முதலி கிட்டத்தட்ட உருவாகிக்கொண்டிருந்தார். இது, பிரேமதாசவுக்கு ஒரு சவாலாக மாறத் தொடங்கியது. மேலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரேமதாசவின் பங்கு பெரிதாக இருக்கவில்லை என்று குறிப்பிடும் கே.எம்.டி.சில்வா, அது ஒன்றில் ஜே.ஆரின் விருப்பின் பெயரில், அல்லது பிரேமதாச தானே விலகியிருந்ததன் பெயரில் நடந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

ஆகவே நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜே.ஆருக்கு அடுத்த இரண்டாம் நிலைத் தலைவராக, லலித் அத்துலத்முதலி உருவாகியிருந்தார். இந்த பிரேமதாச - அத்துலத்முதலி பனிப்போர் என்பது, இறுதியில் வௌிப்படையான முரண்பாடாக மாறியதைக் காணலாம். 

1983 “கறுப்பு ஜூலையின்” பின்னரான ஜே.ஆரின் தந்திரோபாய நகர்வின் அடுத்தகட்டம்தான், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இராணுவக்கரம் கொண்டு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இல்லாதொழிக்கும் இந்தத் தந்திரோபாயத்தின் முதற்படியாக, சர்வதேசத்திடமிருந்து ஆயுத உதவி கோரும் நடவடிக்கையை ஜே.ஆர் ஏலவே ஆரம்பித்திருந்த நிலையில், இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணி, அத்துலத்முதலியின் முன்னாலிருந்த முக்கிய பணியாக அமைந்தது. அந்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் வலு, தொண்டர்படை உட்பட்டு ஏறத்தாழ 20,000 ஆகவே இருந்தது. இதனை உடனடியாக உயர்த்த வேண்டிய தேவை இருந்தது. 

சுன்னாகம் சந்தைப் படுகொலை

மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு, மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில்,1984 மார்ச் 24ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் குழு, பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, 26ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், ஒரு விமானப்படை வீரரும் கொல்லப்பட்டனர். விமானப்படை வீரரின் கொலைக்கான பதிலடியை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அல்லாது, அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதி, அடுத்த இரண்டு தினங்களில் நிகழ்த்தப்பட்டது. 

1984 மார்ச் 28, ஒரு புதன்கிழமை. வாரம் மூன்று முறை கூடும் சுன்னாகம் சந்தை, வழமைபோல அன்றும் கூடியிருந்தது. 

திடீரென்று சந்தைக்குள் ஜீப்களில் நுழைந்த விமானப்படையினர், அங்கு கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். “பயங்கரவாதிகள்” நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக, அப்பாவி மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துதல் “பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை” அல்ல, மாறாக “அரச பயங்கரவாதம்”.

சுன்னாகம் சந்தையில் நடந்த படுகொலைத் தாக்குதலில், 8 அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன், ஏறத்தாழ 50 பேர் காயமடைந்தனர். 23ஆம் திகதி அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை மீண்டும் நினைவு படுத்துங்கள்: “அரசாங்கமானது, பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்”.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒத்திவைக்கப்பட்டது-சர்வகட்சி-மாநாடு/91-212318

Link to comment
Share on other sites

சுன்னாகம் சந்தைப் படுகொலையும் தொடர்ந்த வன்முறைகளும்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 135)

சுன்னாகம் சந்தைப் படுகொலை

ஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்.  

குறித்த படுகொலையாளி, குறித்த ஓரினத்தைச் சார்ந்தவர் என்று அறியப்பட்டதால், குறித்த படுகொலைக்குப் பழிவாங்க, குறித்த விமானப்படை, குறித்த இனத்தைச் சேர்ந்த, பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடமொன்றுக்குச் சென்று, திறந்த துப்பாக்கிச் சூடு நடாத்தி, எட்டு அப்பாவி உயிர்களைப் பலி கொண்டதுடன், ஏறத்தாழ 50 அப்பாவிப் பொதுமக்களையும் காயமுறச் செய்தமை, நியாயத்தின் எந்த அளவுகோலின்படி, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்?   

இது ஒரு காடையர் குழுவோ, வன்முறைக் குழுவோ நடத்திய தாக்குதல் அல்ல; அரச படைகள் - அதாவது ஓர் அரசையும் அதன் மக்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள படைகள்; அந்த மக்களின் ஒருசாராரை எந்தவித அடிப்படைக் காரணங்களுமின்றிச் சுட்டுக் கொன்ற கொடூரம் நடந்தேறியிருக்கிறது.   

யுத்த காலத்தின் போதான,குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான, 1949ஆம் ஆண்டின் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தின் 147ஆவது சரத்தானது, தன்னிச்சையாக உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைவித்தல், சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரைத் தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புகள் மற்றும் சொத்துகளை சட்டவிரோதமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்க முடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் என்பவை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.  

 அதாவது, இவற்றில் ஈடுபடுவது யுத்தக் குற்றமாகும். முன்னாள் யுகோஸ்லாவியா தொடர்பிலான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கூட ஆயுதப் போராட்டங்களின் போது, குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இந்த ஜெனீவா ஒப்பந்தங்களில், இன்றுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.  

சுன்னாகம் சந்தைப் படுகொலை என்பது, இதுவரை நடந்த இதுபோன்ற தொடர் சம்பவங்களின் இன்னோர் அத்தியாயம்தான். உள்நாட்டுக்குள் ஆயுதக் கிளர்ச்சி இயக்கங்கள் உருவானால், அதை ஆயுதவழி கொண்டு அடக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், அப்பாவிக் குடிமக்களைக் கொன்று குவித்தல், எவ்வகையில் நியாயப்படுத்தத்தக்கது?   

தொடர்ந்த வன்முறைகள்

‘கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்’ என்ற பதிலடி நியாயம், ஆபத்தானது. ஏனென்றால் காந்தி சொன்னது போல, அது குருடான உலகத்தைதான் உருவாக்கும்.   

ஆனால், இந்த மீயுயர் தத்துவ கருத்துருவாக்கங்களுக்கும் யதார்த்தத்துக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருப்பதை நாம் அவதானிக்கலாம். பதிலடிக்குப் பதிலடி என்பது, ஒரு முடிவிலாத் தொடரி. ஆனால், அது வீழ்ச்சியை நோக்கிய தொடரி என்பதை இருதரப்பும் உணராமை கவலைக்குரியது.  

 யாழ்ப்பாணம் மிக மோசமான ஒரு காலப்பகுதிக்குள் நுழைந்திருந்தது. மார்ச் 28ஆம் திகதி, சுன்னாகம் சந்தைப் படுகொலைகள், இலங்கை ஆயுதப்படைகளால் நடத்தப்பட்டிருந்த நிலையில், 1984 ஏப்ரல் ஒன்பதாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணத்தில் இராணுவ ட்ரக் வாகனம் ஒன்றின் மீது கார்க் குண்டுத்தாக்குதல் நடத்தியது.   

இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், அரச படைகள் யாழ். நகரெங்கும் வன்முறை வெறியாட்டத்தை முன்னெடுத்தன. அரச படைகளின் இந்த வெறியாட்டத்தில் கார், பஸ் உள்ளிட்ட பல வாகனங்கள், பல்வேறு கட்டடங்கள் என்பன பெரும் சேதத்தைச் சந்தித்தன.   

அரச படைகளின் தாக்குதலில் யாழ். அடைக்கலமாதா தேவாலயமும் சேதமடைந்தது. இது மக்களிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்குவதாக அமைந்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   

அரச படைகளின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, யாழ். நகரில் ஆரியகுளம் சந்திக்கருகில் அமைந்துள்ள நாகவிகாரை மீது, காடையர் குழுவொன்று தாக்குதலொன்றை நடத்தியது. இந்தத் தாக்குதலில் நாகவிகாரை பெருஞ் சேதத்தைச் சந்தித்தது. தேவாலயம் மீதான அரச படைகளின் தாக்குதலுக்கான பதிலடி இது என்று ரீ.சபாரட்ணம், கே.ரீ.ராஜசிங்கம் உள்ளிட்ட சிலர் இந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைக்கிறார்கள். இரு தவறுகள், ஒரு சரியை ஒருபோதும் உருவாக்காது. இந்தத் தாக்குதல்களின் விளைவு என்பது இரட்டை அழிவேயாகும்.   

ஜனநாயகப் பாதையா, வன்முறைப் பாதையா?

நாகவிகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனாதிபதி ஜே.ஆருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அதுபோலவே, இது ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வலுவாக முன்னெடுக்கும் வாய்ப்பையும் அவருக்கு உருவாக்கித் தந்தது என்பதையும் மறுக்க முடியாது.   

இந்த இனப்பிரச்சினையை, இராணுவ ரீதியாக எதிர்கொண்டு அழிக்க வேண்டுமானால், தமிழ்த் தரப்பின் ஜனநாயக தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத் தலைமைகள் முன்னணிக்கு வர வேண்டும். அது நடந்துகொண்டிருந்தது. அதை ஊக்குவிக்கும் சில செயற்பாடுகளை, ஜே.ஆர் மற்றும் அவரது அரசாங்கத்தினரின் பேச்சு மற்றும் செயற்பாடுகளில் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.   

ஜே.ஆரும், அத்துலத்முதலியும் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பலமிழந்துவிட்டது; அவர்களுடன் பேசுவதில் பயனில்லை; ஏனெனில் தமிழ் மக்களை இப்போது அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது; அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அவர்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு அச்சப்படுகிறார்கள் போன்ற கருத்துகளை ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்கள்.   

அத்தோடு அரசாங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் அத்துலத்முதலி ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் இரண்டு விடயம் கவனிக்கத்தக்கது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி - அதாவது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகளோடு பேசுவதில் பயனில்லை என்று சொன்னது ஒன்று; மற்றையது, பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை இல்லை என்று சொன்னது. 

இதன் சாரம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கோடிட்டுக்காட்டி நிற்கிறது.   

தமிழர்கள் பிரிவினைவாதிகளா? 

தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள், அவர்கள் தனிநாடு கோரியவர்கள், 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தனிநாட்டுக்கான மக்களாணையை வழங்கி இருந்தார்கள் என்ற கற்பிதங்கள் இங்கு பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை இந்த கற்பிதங்களிலிருந்து சற்றே தள்ளிநிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.   

தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டிலே தனிநாடு தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வு என்று “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” நிறைவேற்றியது உண்மை. 1977 பொதுத் தேர்தலில் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் மக்களாணை பெற்றதும் உண்மை.   

ஆனால், அதைத் தொடர்ந்து யதார்த்தத்தில், தனிநாட்டுக்கானதோ, பிரிவினைக்கானதோ ஏதுவான எந்தவோர் அடிப்படை நடவடிக்கைகளையும் அவை முன்னெடுத்திருக்கவில்லை என்பதும் உண்மை. 

குறிப்பாகத் தனிநாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவோம் என்று 1977 பொதுத்தேர்தலின் போது அறிவித்திருந்ததைக் கூட, அவை முன்னெடுக்கவில்லை.   

அவை, இணக்கப்பாடு மிக்க தீர்வுக்கு தயாராகவே இருந்தன. அதற்கான கோரிக்கைகளையும் அழுத்தத்தையும் அவை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் முன்வைத்து வந்தன. தனிநாடு என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் பகட்டாரவாரப் பேச்சுகளில் மட்டுமே இருந்ததேயன்றி, அவர்களில் செயல்களில் அது எங்கும் இடம்பிடித்திருக்கவில்லை.   

ஆங்காங்கே தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தலைமைகளின் இந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தி காணப்பட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தப் போக்கு எதிர்த்தமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், 1983இல் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.  

 அதன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே ஓங்கத்தொடங்கியது. இப்போது கூட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைத் தடுக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், ஜனநாயக வழியிலான சமரசத் தீர்வொன்றுக்கு தயாராக இருந்த தமிழ்த் தலைமைகளை அரவணைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். மாறாக, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதில் ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.   

மீண்டும் கூடியது சர்வகட்சி மாநாடு

தமிழ் ஜனநாயகத் தலைமைகள் தமது நாடாளுமன்ற ஆசனங்களை இழந்திருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்து கொண்டிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் பிரிவினைவாதிகள் என்ற தோற்றப்பாடு வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.   

இது மிக மோசமான கையறு நிலை. வன்முறை நிறைந்ததாக அமைந்த ஏப்ரல், முடிவுக்கு வந்து, மே மாதம் வந்தபோது, ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது.  

1984 மே ஒன்பதாம் திகதி, ஏழு வார கால ஒத்திவைப்புக்குப் பிறகு, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அதில் உரையாற்றிய அமிர்தலிங்கம், தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பேசுவதால் பயனில்லை என்று ஜே.ஆர் சொன்ன கருத்தை மனதில் வைத்து, “எம்மை இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்களே, இப்போது எமது தகுதியைச் சவாலுக்கு உட்படுத்துவதானது, பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றை எட்டும் எண்ணமேதும் அவர்களுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.   

ஜே.ஆர் தன்னுடைய தந்திரோபாயத்தை முன்னெடுப்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள், பிறகு ஓர் இணைந்த குழு என்று அமைத்து ஆராய்ந்தவர், மே ஒன்பதாம் திகதி மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள் அமைப்பதாக அறிவித்தார்.   

முதலாவதாக, அதிகாரப்பகிர்வின் கட்டமைப்பு: அதிகாரங்கள், செயற்பாடு ஆகியவற்றை வரைவதற்கான பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ தலைமையிலான அதிகாரப் பகிர்வுக் குழு. 

அடுத்ததாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மொழி உரிமைகளை அமுலுப்படுத்தல் தொடர்பில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையாக நடவடிக்கைகள் பற்றி ஆராய அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் தலைமையில் குறைகள் ஆராயும் குழு.  

இந்தக் குழுக்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்ததால் போலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் குழுக்களில் பங்குபற்ற மறுத்துவிட்டன. ஆயினும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டின் பிரதான கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து கருத்தில் கொள்வதாக அவை அறிவித்தன.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுன்னாகம்-சந்தைப்-படுகொலையும்-தொடர்ந்த-வன்முறைகளும்/91-212513

Link to comment
Share on other sites

ஆட்கடத்தலும் இந்தியாவுக்கு வந்த பெருஞ்சிக்கலும்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 136)

சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் இரண்டு குழுக்கள்  

சர்வகட்சி மாநாடு, மீண்டும் 1984 மே ஒன்பதாம் திகதி கூடியபோது, அதில் ஜனாதிபதி ஜே.ஆர், புதிதாக அமைத்த ‘அதிகாரப்பகிர்வுக் குழு’, ‘குறைகள் ஆராயும் குழு’ என்பவற்றில் பங்குபற்ற, தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மறுத்துவிட்டனர்.  

 மாறாக, குறித்த குழுக்களின் அறிக்கைகளை, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அவை மீண்டும் கூடும் போது, தாம் ஆராய்வதாக அறிவித்திருந்தனர். அமிர்தலிங்கமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் எதிர்பார்த்தது போலவே, ஜே.ஆரின் திட்டம் முன்நகர்ந்து கொண்டிருந்தது.  

 புதிய குழுக்களை அமைத்து, ஜே.ஆர் ஆராய்ந்து கொண்டிருந்தமை காலங்கடத்தவே என்று தமிழர் தரப்பு உணர்ந்திருக்கலாம். அதற்குத் துணைபோகாதிருக்கவே, அவர்கள் குறித்த குழுக்களில் பங்குபற்றுவதைத் தவிர்த்திருக்கலாம்.  

 மேலும், இந்தக் குழுக்களில் பங்குபற்றுவதனால், எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற உணர்வு கூட, தமிழர் தரப்பைப் பின்னடையச் செய்திருக்கலாம்.   

ஆனால் ஜே.ஆர், “இந்த இரண்டு குழுக்கள் அமைக்கப்படுவதானது, மிக முக்கியமானது. வடக்கிலுள்ள பல இளைஞர்கள், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி பற்றி ஆராயும் குழுவை ஆவலோடு எதிர்பார்த்துள்ளார்கள். அதிகாரப் பகிர்வு என்பது, அரசியல் கட்சிகளிலுள்ள சிலருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மட்டுமானதுதான்.  ஆனால், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு என்பவைதான், எதிர்கால சந்ததியின் பெரும்பகுதிக்கு உதவிசெய்யும்” என்று ஜே.ஆர் பேசினார். 

தமிழர் அரசியல் பொதுவௌியில், பொதுப்பயன்பாட்டிலுள்ள ‘உரிமை’, ‘சலுகை’ ஆகிய இரண்டில், தமிழர் தரப்பு, அரசியல் உரிமைகளைவிடவும் அரசியல் சலுகைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதுதான் ஜே.ஆர் குறிப்பிட்டதன் இன்னோர் அர்த்தம்.   

உரிமையா, சலுகையா?

பொருளாதார முன்னேற்றம் எந்தவொரு சமூகத்துக்கும் அத்தியாவசியமானது. கல்வி, வேலைவாய்ப்பு என்பவை பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையானவை. இவற்றை மறுப்பதற்கில்லை.   
அதிலும் குறிப்பாக, வடக்கு, கிழக்கு தமிழர்கள் கொலனித்துவ  காலம் முதல், உயர்கல்வி மற்றும் உத்தியோகத் தொழிற்றுறையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள், அத்தோடு விவசாய உற்பத்தி, முயற்சியாண்மையிலும் அவர்களது பங்கு கணிசமாக இருந்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் அறிமுகம் மற்றும் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், சுதந்திரகாலம் முதல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், சமச்சீரற்ற அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையிலேயே சிதைத்தது.   

ஆகவே, தமிழர்களின் அரசியல் பாதையானது, ஆட்சியின் விளைவுகளை, அதாவது சலுகைகளை வேண்டியதாக அமையாது, அந்த விளைவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வேண்டியதாக அமைந்தது.  

 இங்கு, தமிழர் தரப்பு, சுயநிர்ணய உரிமையின்பாலான சுயாட்சியை வேண்டியது, வெறுமனே தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களை ஆளுவதற்காக அல்ல; மாறாக, மற்றவர் ஆட்சியின் கீழ், தமிழ் மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள, மற்றவரின் கருணையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையை இல்லாது செய்யத்தான். இதுதான், தமிழர் தரப்பின் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கான அடிப்படை.   

அது, ஜே.ஆர் சூழ்ச்சிகரமாகக் குறிப்பிட்டதுபோல, வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றைப் பின்னிலைப்படுத்தும் கோரிக்கையல்ல; தமிழருக்கான வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றை தமிழரே தீர்மானிக்க வேண்டும் என்பதேயாகும்.   

பொறுமை காத்த அமீர்  

இந்த இரண்டு குழுக்களும் மே மாதத்தில் ஐந்து முறை சந்தித்து, கலந்துரையாடல்களை முன்னெடுத்தன. இந்தக் கலந்துரையாடல்களில், தமிழர் தரப்பு கலந்து கொண்டிருக்கவில்லை.   

இந்த மே மாத இடைவௌியை, ஜே.ஆர் தனது கிழக்கை நோக்கிய சர்வதேச விஜயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் காங்கிரஸும் அடுத்த நகர்வு என்னவென்று தீர்மானிக்க முடியாத சூழலில் சிக்கியிருந்தன.  

 “ஜே.ஆரை நம்ப வேண்டாம் என்றும், இது வெறும் காலங்கடத்தும், சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்று சொன்னோம்; நீங்கள் கேட்கவில்லை” என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் செய்தியாக இருந்தது.   

மறுபுறத்தில், அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் முழுமையாக நம்பியிருந்த இந்தியா, அவர்களைத் தொடர்ந்தும் பொறுமை காக்குமாறு வேண்டிக் கொண்டது. பொறுமை காப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கும் வேறு வழியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.   

இந்தியாவை அதிரச் செய்த ஒரு கடத்தல் 

இந்தச் சந்தர்ப்பத்தில், அன்று பலமாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான, மக்கள் விடுதலை இராணுவம் எனப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவு, அதன் தாய்வீடு என்று கருதக்கூடிய இந்தியாவுக்கே, அதிர்ச்சிதரும் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.   

ஸ்டான்லி அலன் மற்றும் அவரது மனைவி மேரி அலன் ஆகிய இரண்டு அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.   

அமெரிக்க உதவி நிறுவனமான யு.எஸ்.எய்ட், பருத்தித்துறையில் முன்னெடுத்த நீர்த்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலனையும் அவரது மனைவியையும் 1984 மே 10ஆம் திகதி மக்கள் விடுதலை இராணுவத்தினர், அவர்கள் குடியிருந்த வீட்டுக்குள் புகுந்து கடத்திச் சென்றனர்.   

அவர்கள் கடத்திச் செல்லப்பட்ட கார், காங்கேசன்துறைக் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, அவர்கள் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.  

 மறுநாள், மக்கள் விடுதலை இராணுவம், கடத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கமானது, தமிழக அரசாங்கத்தினூடாகத் தமது இயக்கத்தவரிடம் தரப்படவேண்டும் என்பதோடு, சிறையில் இருக்கும் தமது இயக்கத்தினர் 20 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இது மூன்று நாட்களுக்குள் நடக்காவிட்டால், கடத்தப்பட்ட இருவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும், இதில் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அறியத்தந்தது.

இது, இந்தியாவுக்கு எப்படிச் சிக்கலைத் தந்தது என்றால், இது நடந்த போது, அமெரிக்க உப - ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்), இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கப்பம் கேட்ட கடிதத்தில், 50 மில்லியன் பெறுமதியான தங்கம், தமிழக அரசாங்கத்தின் ஊடாக, தமது இயக்கத்தவரிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், ஈ.பி.ஆர்.எஸ்.எப் இயக்கத்துக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு, அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தனர். ஆகவே, இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு இருந்தது.   

குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி, எம்.ஜி.ஆர் பற்றிய தனது நூலில், எம்.ஜி.ஆரின் கண்ணும், காதும் என்றறியப்பட்ட அன்றைய தமிழக பொலிஸின் இயக்குநர் நாயகமாக (டி.ஜி.பி) இருந்த கே.மோகன்தாஸ் விரிவாக எழுதியிருக்கிறார்.   

இதனைத் தொடர்ந்து, மெற்றாஸில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களான பத்மநாபா, வரதராஜ பெருமாள் மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ் ஆகியோர், விசாரணைக்கு வசதியான ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் மோகன்தாஸ், அவர்கள் முதலில், இதுபற்றித் தமக்கேதும் தெரியாதென்று தெரிவித்ததாகவும், தொடர்ந்த விசாரணையில், இதனைச் செய்தவர்கள் தமது இயக்கத்தவராக இருப்பினும், இது தமக்குத் தெரியாமல், குறித்தவர்களின் சுயமுனைப்பில் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்ததாகவும், எழுதியுள்ள மோகன்தாஸ், நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தால், தான் அதிரடியாக அவர் இருந்த அறைக்குள் சென்று, “அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்கு, இந்த அறையிலேயே நீங்களும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்; அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், நீங்களும் விடுதலை செய்யப்படுவீர்கள்” என்று சொன்னதாகவும், அது வேலை செய்ததன்படி, மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ், உரிய செய்தியைத் தனது சகாக்களிடம் சேர்ப்பித்து, அலன் தம்பதியினரை விடுவித்ததாகவும் பதிவு செய்கிறார்.   

இதை நாம் கருத்திலெடுக்கும் போது, இந்த விடயங்கள், இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இருவரும் பலத்த பதற்றத்திலிருந்தனர்.  

 “தமிழக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் இழக்கும் நிலையை, தமிழ் ஆயுதக்குழுவினர் அடைந்து விட்டார்களோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று, எம்.ஜி.ஆர் குறிப்பிடும் அளவுக்கு இது சிக்கலான ஒரு நிலையைத் தோற்றுவித்திருந்தது.  

 இந்திரா காந்தி கூட, உளவுத்துறையினூடாக உருக்கமான கோரிக்கையை வைக்க வேண்டியளவுக்கு பாரதூரமான ஒன்றாக இது மாறியிருந்தது. 

மே 14ஆம் திகதி, யாழ், ஆயர் முன்னிலையில் குறித்த தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டனர். “அவர்கள் அமெரிக்க உளவாளிகள், அதனை அம்பலப்படுத்தவே, அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்று கடத்தியவர்கள் தரப்பில், மே 17ஆம் திகதியன்று சொல்லப்பட்டது.   

“அவர்கள் நீர்த்திட்டத்துக்காக வரவில்லை; மாறாக, யாழ்ப்பாணத்தைப்  படம்பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவாளிகள் அவர்கள். ஜே.ஆரின் அமெரிக்க விஜயம், விரைவில் நடக்கவிருந்த நிலையில்தான், இதை அம்பலப்படுத்த நாம் இதைச் செய்தோம்.  பிரதமர் இந்திரா காந்தியின் கோரிக்கையின் படிதான், அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏனென்றால், துன்பத்துக்குள் ஆழ்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திரா காந்தி ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அறிவித்திருந்தது.   

கடத்தல் தொடர்பிலான இலங்கையின் அணுகுமுறை  

இந்த விவகாரம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவித பதற்றமும் அற்றதாக இருந்தது. 

முழுப்பதற்றமும் இந்தியாவின் உடையதாக மாறியிருந்தது. கடத்தல் பற்றி முதலில் ஊடகங்களுக்கு அறிவித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “கடத்தல்காரர்களின் கப்பக்கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் அமைதிதான்; பயங்கரவாதத்துக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.   

அத்தோடு, கடத்தப்பட்டவர்கள் கடல்வழியாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தையும் வௌிப்படுத்தியிருந்தார். மறுபுறத்தில், வௌிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், அமெரிக்க தூதுவரைச் சந்தித்து, “அவ்விருவரைப் பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும்” என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்.   

அமெரிக்காவோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்த இலங்கை அரசாங்கம், இந்தச் சம்பவத்தில் மெத்தனப் போக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியாவை அம்பலப்படுத்த, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை, தமிழகத்தில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இயங்குவதை அம்பலப்படுத்த, இதை ஒரு சிறந்த வாய்ப்பாக, இலங்கை அரசாங்கம் பார்த்திருக்கக்கூடும்.   

அலன் தம்பதியினர் விடுதலையான பின்பு, கருத்துத்தெரிவித்த அமைச்சர் அத்துலத்முதலி, “பயங்கரவாதச் சக்திகள், தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகின்றன. இது பற்றி உங்களுக்கு முன்பு ஐயமிருந்திருந்தால், இப்போது அது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஏலவே, இந்திய விரோதப் போக்காளராக, வௌிப்படையாக அறியப்பட்ட பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவுக்கு, இந்தச் சம்பவம் இன்னும் சாதகமாகப் போனது. 

இலங்கையில் பிரிவினையைத் தூண்ட, இந்தியா, தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்குகிறது; தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கத் தொடங்கினார். மறுபுறத்தில், சர்வதேச நாடுகளிடம், இராணுவ உதவிகளைப் பெற்று, இராணுவத்தைப் பலப்படுத்தும் கைங்கரியத்தை ஜே.ஆர் செவ்வனே முன்னெடுத்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்கடத்தலும்-இந்தியாவுக்கு-வந்த-பெருஞ்சிக்கலும்/91-212881

Link to comment
Share on other sites

இந்தியாவை நோக்கி கேள்வியெழுப்பிய பிரேமதாஸ
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 137)

பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்பு 

ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவை வௌிப்படையாக எதிர்த்தவர்களில் முதன்மையானவர் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ. “இலங்கையில் பிரிவினையை இந்தியா தூண்டிவிடுகிறது. பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்கள் வழங்கி, இலங்கையில் முளைவிட்டு வரும் பயங்கரவாதத்துக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது” என்று, அவர் தொடர்ந்து, இந்தியா மீது குற்றம் சுமத்தி வந்திருக்கிறார்.  

 “எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதானால், எங்கள் நாட்டை விழுங்க விரும்பினால், ஒளிவுமறைவின்றி வௌிப்படையாக அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து, ஏன் இங்கு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள்” என்று இந்தியாவை நோக்கி, பிரேமதாஸ தன்னுடைய நாடாளுமன்ற உரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.   

“சீக்கிய மற்றும் காஷ்மீர் பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு கையாளும் இந்தியா, நாம் அப்படி நடக்கக்கூடாது என்று சொல்வது, இந்தியா இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்ட பிரேமதாஸ, “எங்களுடைய பிரதான குற்றச்சாட்டானது, எங்களுடைய மக்கள், அங்கு சென்று, பயங்கரவாதப் பயிற்சி பெற்று, மீண்டும் இங்கு வந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, இந்தியா அனுமதிக்கிறது என்பதாகும். நாங்கள் சீக்கியர்களை இங்கு வந்து, இந்தியா அரசாங்கத்துக்கு எதிராகப் போராடப் பயிற்சியளித்தால், இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? எம்மீது இந்தியா, குற்றம் சுமத்தியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டோம். இன்னொரு நாட்டுக்கு எதிராகப் போர் புரியவோ, இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கவோ எவரும், எமது மண்ணை மட்டுமல்ல, எம்முடைய எதையும் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் கொள்கை. அவ்வாறு மற்றநாடுகளும் நடந்துகொள்ளக் கூடாது என்று, நாம் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய முன்னுதாரணத்தை மற்றைய நாடுகள் பின்பற்ற வேண்டும்” என்று கடுந்தொனியில் பேசியிருந்தார்.   

ஜே.ஆரின் தந்திரோபாயம்

 ஒருவகையில், இது ஜே.ஆரின் இராஜதந்திர நகர்வுகளில் ஒரு பகுதி என்றுகூடச் சொல்லலாம். இந்திய அழுத்தத்தின் பெயரில்தான், சர்வகட்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.   

ஆகவே, இந்திய தலையீட்டுக்கும், அனெக்ஷர் ‘சி’க்கும் உள்நாட்டில் கடும் எதிர்ப்பிருக்கிறது. தனது அரசாங்கத்துக்கு  உள்ளேயே, தனது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பிருக்கிறது என்று காட்டுவதானது, ஜே.ஆர், தான் இதைச் செய்ய விரும்பினாலும், தனது அரசாங்கத்தின் ஆதரவில்லை என்பதை இந்தியாவுக்கு காட்டுவதற்கு இது வாய்ப்பளிக்கும் என்று ஜே.ஆர் கருதியிருக்கலாம்.  

 மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதால் பயனில்லை; ஏனெனில் அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது.   அவர்களே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பார்த்து, அச்சப்படுகிறார்கள் என்ற தொனியிலான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 

இனப்பிரச்சினை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படக்கூடியதொன்றல்ல; மாறாக, இராணுவ ரீதியில் எதிர்கொள்ளப்பட வேண்டிய பயங்கரவாதப் பிரச்சினையே இது, என்று நிறுவுதலே எண்ணமாக இருந்திருக்கும் என்பது, ஊகிக்கக்கூடியதாக உள்ளது.   

மறுபுறத்தில், இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பணியை, ஜே.ஆர் முன்னெடுத்தார்.   

சர்வதேச ஆதரவைத் திரட்டல், 1983 ‘கறுப்பு ஜூலை’ இனஅழிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தலையீடு, இலங்கையில் ஏற்பட்டது முதலும், சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிரான குரல்கள் எழுச்சி பெறத் தொடங்கியது முதல், ஜே.ஆர் அரசாங்கம், சர்வதேச ரீதியில் தனக்கான ஆதரவைப் பலப்படுத்தும் முயற்சிகளை, கடுமையாக முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

குறிப்பாக, இலங்கைக்கெதிரான அழுத்தங்களை சமன் செய்யவும், இலங்கை அரசாங்கம் எதிர்கொள்வது பயங்கரவாதப் பிரச்சினை என்பதை முன்னிறுத்தவும், அதை முன்னிறுத்தி, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.   

இதற்காக ஜனாதிபதி ஜே.ஆர், தன்னுடைய சகோதரரும், மிகச் சிறந்த வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தன்னுடைய விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கும் அனுப்பியிருந்தார்.   

இதைவிடவும், வௌிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ். ஹமீட்டும் பல நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். மறுபுறத்தில், இராணுவ உதவிகளைப் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக, பல ஆய்வாளர்களும் பதிவுசெய்கிறார்கள்.  

 குறிப்பாக, இஸ்‌ரேல், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ மற்றும் புலனாய்வு ரீதியிலான உறவுகள் வளர்க்கப்பட்டன. இந்தியாவைத் தன்பக்கம் திருப்ப முடியாததை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.   

இந்திரா காந்திக்கும், ஜே.ஆருக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் இருந்தது. ஆகவே, இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் பலவற்றுடனான உறவுகளைப் பலப்படுத்தும் அணுகுமுறையை ஜே.ஆர் கையாண்டார்.  

இஸ்‌ரேலுடன் பலமுற்ற உறவு

 இஸ்‌ரேலுடனான இலங்கையின் உறவுகள் ஜே.ஆரின் காலத்திலேயே பலமாகின. அமெரிக்காவின் ஆதிக்கம் இதில் நிறையவே இருந்தது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக இலங்கை வந்த லெப்.ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸ், இலங்கை, இஸ்‌ரேலை அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.   

மேலும், அமெரிக்காவூடாக, இஸ்‌ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதில், ஜே.ஆர் கவனம் செலுத்தினார், இதற்காக ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்தனவை, இஸ்‌ரேலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ஜே.ஆர்.   

இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பிலமைந்த அமெரிக்க தூதுவராலயத்துக்குள் இஸ்‌ரேலிய நலன்களுக்கான பிரிவை ஸ்தாபிக்க இணக்கம் ஏற்பட்டிருந்தது. 

ஜே.ஆர் இதை, அமைச்சரவையில் அறிவித்தபோது, அமைச்சர்களான
 எம்.எச்.மொஹமட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், ஜே.ஆர் இந்த விடயத்தை முன்னகர்த்திச் சென்றார்.  

1984 மே மாதத்தில் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்தானதுடன், மே 24, அமெரிக்க தூதுவராயத்துக்குள் இஸ்‌ரேலிய நலன்களுக்கான பகுதி இயங்கத்தொடங்கியது.  

ஜே.ஆரின் கிழக்காசிய விஜயம்

1984 மே 19 முதல் 31 வரை ஜனாதிபதி ஜே.ஆர், சீனா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குக்கான தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். மே 20ஆம் திகதி, சீனாவிலே சீன ஜனாதிபதி லீ ஸியன்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.   

அதன்போது, இலங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை ஜே.ஆர் வௌிப்படுத்தியிருந்தார். “நாம், அந்நிய ஆக்கிரமிப்பொன்றைச் சந்திப்போமானால், 15 மில்லியன் மக்களும் தமது உயிர் போனாலும், ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்ற தனது வழமையான கருத்தைப் பதிவு செய்திருந்தார்.  

 தொடர்ந்து, சீனப் பிரதமர் ஜாவோ ஸியொங்கை சந்தித்த போதும், ஜே.ஆர், ஆக்கிரமிப்பு பற்றிய தனது கவலையைப் பகிர்ந்திருந்தார்.   

அதற்குப் பதிலளித்த சீனப் பிரதமர், “எந்தவொரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டினுடைய உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை. உங்கள் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் உங்கள் முயற்சியை நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம்.   இலங்கையின் உள்நாட்டு நிலைவரத்தில் முன்னேற்றம் காணப்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். உங்களது தலைமையின் கீழ், உங்கள் நாட்டின் பிரச்சினைக்கு, நியாயமான தீர்வொன்றை நீங்கள் காண்பீர்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. நான் மீண்டும் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இலங்கை தனது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் முன்னெடுப்பதில், சீனா, இலங்கையோடு உடனிருக்கும்” என்றார்.  

 இதைத் தொடர்ந்து ஜே.ஆர், சீனாவிடம் முக்கியமானதோர் இராணுவ உதவிக் கோரிக்கையை முன்வைத்தார். “உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைவரம் என்பது, எங்களுக்கு மிகப்பெரியதொரு பிரச்சினையாக உள்ளது. இதற்காக நீங்கள், எங்கள் கடற்படைக்கு ஆறு ரோந்துப் படகுகளைத் தந்துதவியுள்ளீர்கள், இதையொத்த மேலதிக படகுகளை நீங்கள் தந்துதவினால், அது சட்ட விரோத குடிபெயர்வைத் தடுக்க உதவுவதோடு, வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தடுக்க உதவும்” என்று ஜே.ஆர் மேலதிக ரோந்துப் படகுகளுக்கான கோரிக்கையை, சீனப் பிரதமரிடம் முன்வைத்தார்.  

அதற்கு சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தது. தொடர்ந்து அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆலோசனைச் சபையின் தலைவராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும், சீன அரசாங்கத்தின் மிகப் பலம்வாய்ந்த தலைவராகவும் இருந்த டங் ஷவோபிங்கைச் சந்தித்த ஜே.ஆர், “நீங்கள் முன்னர் தந்துதவியதைப் போலவே, தற்போதும் எம்மைத் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க துப்பாக்கி தாங்கிய படகுகளைத் தந்துதவ வேண்டும். அது எமது வடக்கு எல்லைக்கும், அதிலிருந்து வெறும் 20 மைல்களே தூரமான இந்திய எல்லைக்குமிடையில் நடக்கும் சட்டவிரோத குடிப்பெயர்வை தடுக்கவும் உதவும்” என்று வேண்டினார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய விஜயங்களின்போது, இராணும், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு சார்ந்த உதவிகளை ஜே.ஆர் பெற்றிருந்தார் என்று சிலர் பதிவுசெய்கிறார்கள்.   

ஜே.ஆர் ரோந்துப் படகுகளை வேண்டியதன் முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், படகு மூலம், வடக்கிலிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்று வருவதைத் தடுக்கும் நோக்கில்தான். 

இலங்கையின் உள்விவகாரத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது, மேலும், இலங்கையின் ஆட்புலஒருமைப்பாடு என்பவற்றுக்குச் சீனா கிட்டத்தட்ட வௌிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்ததோடு, கணிசமான இராணு ரீதியிலான உதவிகளும் கிடைத்தன.  

 இது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான வௌிநாட்டு விஜயமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் விஜயங்களின் போது, இலங்கைக்கான கணிசமான நிதியுதவிகளை ஜே.ஆர் பெற்றுக்கொண்டிருந்தார்.   

மீண்டும் கூடிய சர்வகட்சி மாநாடு

1984 ஜூன் முதலாம் திகதி, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்வு, மீண்டும் கூடியது. இந்த அமர்வின்போது, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வடக்கில் அதிகரித்து வந்த இராணுவத்தினரின் வன்முறைகள் பற்றி, சர்வகட்சி மாநாட்டில் பேசியதுடன், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படுவது தொடர்பில் அதிக கரிசனையுடன், வினைத்திறனான முயற்சிகளை எந்தத் தாமதமுமின்றி உடனடியாக, சர்வகட்சி மாநாடு முன்னெடுக்க வேண்டும் என்று கோரினார்.  

 சர்வகட்சி மாநாடு பற்றி, தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்திருந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றிய அமிர்தலிங்கத்துக்கு இதன் மூலம் குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது.   அல்லாது போனால், அது ஜனநாயக வழியிலான தமிழ்த் தலைமையை அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத்தலைமைகள் தமிழ் அரசியலில் முன்னணிக்கு வரவே வழிசமைக்கும் என்பதை அமிர்தலிங்கம் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.   

அமிர்தலிங்கத்தின் ஒரே பெரும் நம்பிக்கையாக இந்தியாவே இருந்தது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்குலகில் தமிழ் மக்களுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னெடுத்து வந்தாலும், தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பலமான வகையில் தமக்கான ஆதரவைத் திரட்டுவதில், பெரும் முனைப்பைக் காட்டவில்லை என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டியதொன்றாகும்.   

ரஷ்யா, சீனா, ஜப்பான் என ஆசியாவின் பலம்பொருந்திய நாடுகளுடன் தமிழ்த் தலைமைகள் தமது உறவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ஜே.ஆர் செயற்படுவது போல, தமிழ்த் தலைமைகளால் செயற்பட முடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் இந்தியாவைத் தாண்டி தமிழ்த் தலைமைகள் யோசித்திருக்க வேண்டும்.  

 ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரையில் அமிர்தலிங்கம் என்பது அவர்களுக்கு ஒரு தெரிவு மட்டும்தான்; மறுபுறத்தில், பல்வேறு ஆயுதத் தலைமைகளும் இந்திய ஆதரவுடன் வளர்ந்து வந்தன.   

அமிர்தலிங்கத்தின் கோரிக்கைக் குரலுக்குச் செவிசாய்க்க ஜே.ஆருக்கு ஆர்வமிருக்கவில்லை. அவரது எண்ணம் முழுவதும், அடுத்து அவர் செல்லவிருந்த அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான விஜயம் பற்றியே இருந்தது. இது அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிருப்தியைத் தந்ததோடு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டிய சூழலுக்கு, அமிர்தலிங்கத்தைத் தள்ளியது. 

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவை-நோக்கி-கேள்வியெழுப்பிய-பிரேமதாஸ/91-213272

Link to comment
Share on other sites

றீகனும் ஜே.ஆரும் குட்டி யானையும்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 138)

வௌ்ளை மாளிகையின் விருந்தினராக ஜே.ஆர்

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், இனப்பிரச்சினை தொடர்பில், மிக முக்கியமான வருடம் என்று, ஒரு வருடம் குறிப்பிடப்பட வேண்டுமானால், நிச்சயம் அது 1984 தான். 

தமிழர் அரசியல்பாதை முழுமையாக மாறிய வருடம். ‘ஈழத்து காந்தி’ என்று பகட்டாரவாரம் செய்யப்பட்ட அரசியல்பாதையிலிருந்து, தமிழர் அரசியலின் பிரதான மையவோட்டம், ஆயுத வழிக்குத் திரும்பிய அல்லது திரும்பச் செய்யப்பட்ட வருடம் இது.

 எந்தவித முன்னேற்றமுமின்றி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள், நட்டாற்றில் விடப்பட்ட நிலையில்தான், சர்வகட்சி மாநாடு பயணித்துக் கொண்டிருந்தது. சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தைத் தனக்குச் சாதகமான முறையில் முடித்துத் திரும்பியிருந்த ஜே.ஆர், 1984 ஜூன் மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். 

வௌ்ளைமாளிகையின் (அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகம் மற்றும் இல்லம்) விருந்தினராக, இலங்கை அரசாங்கத்தின் தலைவரொருவர் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார் என்பது, வரலாற்றில் முதற்தடவை. 

1984 ஜூன் 18ஆம் திகதி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனை, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வௌ்ளை மாளிகையில் சந்தித்தார். பிரத்தியேக சந்திப்புகள் கலந்துரையாடல்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி றொனல்ட் றீகன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தில், இருவரும் ஆற்றிய உரைகள், இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் பற்றியே அமைந்திருந்தன.

இலங்கையின் இனப்பிரச்சினை பற்றித் தனது பேச்சில், றொனல்ட் றீகன் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. அது, ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்கள், இலங்கையின் அணிசேராக் கொள்கை என்பவை பற்றியே அமைந்திருந்தது. 

இந்த விஜயத்தின்போது, ஜே.ஆர் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஒரு யானைக் குட்டியை, அமெரிக்க ஜனாதிபதி றீகனுக்குப் பரிசளித்திருந்தார். அந்தப் பரிசுக்கு நன்றி கூறிய றீகன், ஜே.ஆருடைய கட்சியின் சின்னமும் யானை, என்னுடையதும் அதுவே என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். 

image_ac97723315.jpg

அமெரிக்கப் பத்திரிகைகளில், ‘கறுப்பு ஜூலை’ பற்றி ஞாபகமூட்டும் விளம்பரங்கள் வந்திருப்பதைத் தனது பேச்சில் குறிப்பிட்டுக் காட்டிய ஜே.ஆர், “இலங்கையின் நீண்ட வரலாற்றில், கடினமான காலகட்டங்கள் இருந்துள்ளன. கொலைகள் நடந்துள்ளன; படுகொலைகள் நடந்துள்ளன; கலவரங்கள் நடந்துள்ளன; நல்லவைகளும், தீயவைகளும் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம், அதுபோன்ற ஒரு கெட்ட காலத்தை, நாம் சந்தித்திருந்தோம். ஆனால், எதிர்காலத்தில் அது மறக்கப்பட்டுவிடும். அந்த நாளை, எமக்கு ஞாபகப்படுத்தும் விளம்பரமொன்றை உங்களுடைய பத்திரிகையில் பார்த்தேன். அது கொடுமையான நாள்.  பல மக்களும் கொல்லப்பட்டார்கள். அது அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. அது காடையர் குழுவால் செய்யப்பட்டது. அதற்காக நாம் மிகவும், மிகவும் வருந்துகிறோம். நான், அதை மறக்க நினைக்கிறேன். நாம், என்னுடைய மக்கள் - மக்களில் சிலர் - இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் செய்யாதிருக்க வைக்கவே முயற்சிக்கிறேன். அதில் நான் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன்” என்று பேசியிருந்தார். 

இந்தப் பகிரங்கப் பேச்சுக்கு முன்னதாக, ஜனாதிபதி றீகனுடனான பிரத்தியேக சந்திப்பின் போது, இலங்கையின் இனப்பிரச்சினையின் நிலை பற்றிக் கூறி, இராணுவ உதவிகளை ஜே.ஆர் வேண்டியிருந்தார். 

இராணுவ உதவி குறித்த விடயங்கள் பற்றி, உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்) உடன் கலந்துரையாடுமாறு, றீகன் சொன்னதற்கிணங்க, ஜோர்ஜ் புஷ் (சீனியர்), வௌியுறவுச் செயலாளர் ஜோர்ஜ் ஷல்ட்ஸ், கருவூலச் செயலாளர் பீ‌ற்றர் மக்பேர்ஸன் உள்ளிட்டவர்களைச் சந்தித்த ஜே.ஆர், இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியும் அதன் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.

அத்துடன், இந்திய தலையீடு பற்றியும் அவர்களுடன் பகிர்ந்திருந்தார். “திருமதி காந்தி (இந்திரா காந்தி) பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். ஏனென்றால், எதிர்வரும் பொதுத்தேர்தலில், தமிழ் நாட்டில் வெற்றிபெற வேண்டும் என்பதில், அவர் அக்கறை கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சினை என்னவென்றால், அங்கு இரண்டு தலைமைகள் உள்ளன. ஒன்று கருணாநிதி, மற்றையவர் எம்.ஜி.இராமச்சந்திரன். இவர்களின் எம்.ஜி.இராமச்சந்திரன், முதலில் இலங்கையின் நண்பராகத்தான் இருந்தார். ஆனால், இலங்கை விடயம், அவர்கள் மாநிலத்தில், முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த பின்னர், அவரும் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். நான் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு, திருமதி காந்தியை உடனழைக்கவே விரும்புகிறேன். அவர் பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்துவாரானால், என்னால் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும்” என்று ஜே.ஆர் குறிப்பிட்டிருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில், ரவி பிரசாத் ஹேரத் மேற்கோள் காட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து, ஜே.ஆர் பயங்கரவாத ஒழிப்புக்காக இராணுவ உதவிகளை வேண்டியதாகச் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். உத்தியோகபூர்வமான வகையில், அமெரிக்கா எந்தவித இராணுவ உதவிகளையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளூடாக, இலங்கைக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்தது எனச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். இந்தியாவுடன் நேரடியான முரண்பாட்டுக்கு, அமெரிக்கா தயாராக இல்லாதது, இதற்குக் காரணமாக இருக்கலாம். 

பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்

1984 ஜூன் 19ஆம் திகதி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘த வொஷிங்டன் போஸ்ட்’ இன் தலைவராக இருந்த கதரீன் க்ரஹம்மின் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.ஆர், “தமிழ் பேசும் பிரதேசங்களில், எம்மால் ஓர் அரசியல் பிரசாரக் கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலைதான் இலங்கையில் உள்ளது. ஆகவே, நாம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். இந்தியா என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி, எனக்குக் கவலையில்லை. எமது ஒற்றுமையையும் இருப்பையும் நாம் பேணிக்கொள்ள வேண்டும். திருமதி காந்திக்குப் பிடிக்காத, தகுதியிழந்த ஓர் அரசியல்வாதியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஊடாக, மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார். எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்கிறது. அது, அவர்களுக்கு  உள்ளக அரசியல் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பயங்கரவாதிகள், ஒரு மாக்ஸிஸ அரசை ஸ்தாபிக்க விளைகிறார்கள். இதில், சோவியத்தின் தலையீடு இருப்பதற்கான ஆதாரமெதுவும் என்னிடம் இல்லை. ஆனால், இந்தியா ஏன் (எமக்கு) உதவிகரமான நிலைப்பாட்டை எடுக்காதிருக்கிறது? நான், திருமதி காந்திக்குச் சொல்வது, இரகசியமாக தென்னிந்தியாவிலிருந்தே, இலங்கைக்குப் பயங்கரவாதிகள் வருகிறார்கள். திருமதி காந்தியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை, ஒன்றுபட உந்துதலளிக்காதீர்கள். அத்தோடு அவற்றுக்கு உதவிகளையும் வழங்காதீர்கள் என்பதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் ஒரு வகை இராஜதந்திரம் என்று கூட இதைச் சொல்லலாம். 

இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அதிகம் பேசாது, அதற்கான காரணகாரியங்கள், அரசியல் தீர்வுக் கோரிக்கைகள் இவற்றையெல்லாம் வசதியாகத் தவிர்த்துவிட்டு, இலங்கையிலுள்ள பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சினையாகவும் அதுவும் அந்தப் பயங்கரவாதிகள் மாக்ஸிஸவாதிகள் எனவும், மாக்ஸிஸ அரசைக் கட்டியெழுப்பவே எத்தனிக்கிறார்கள் என்றும், இந்தியாவின் நிலைப்பாடு என்பது கூட வெறும் அற்ப தேர்தல் அரசியல் இலாபத்துக்காக மட்டும்தான் என்பதும் போன்ற விம்பத்தை ஜே.ஆர், அமெரிக்காவில் சமர்ப்பித்தார். 

இதற்குக் காரணம், ஜனாதிபதி றீகனால் அன்று முன்னெடுக்கப்பட்டு வந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மற்றும் அமெரிக்கர்களிடையே இயல்பாகவுள்ள கொம்னியூஸ விரோதம் ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தி எனலாம். 

அத்தோடு, தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் தலையிடுவது, தமிழக மக்களின் அழுத்தத்தால் என்பதை, அது வெறும் அரசியல் தந்திரோபாயமே என்று நிறுவுவதன் ஊடாக, நீர்த்துப்போகச் செய்யலாம் என்றும் எண்ணியிருக்கலாம். 

பிரித்தானியாவில் ஜே.ஆர்

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜே.ஆர் பிரித்தானியாவுக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். 
பிரித்தானியாவுடன், ஜே.ஆர் காலத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. ஏனென்றால், 1982இல் ஆர்ஜென்டீனாவுக்கு அருகில் அமைந்துள்ள  ‘போக்லண்ட் தீவு’களின் இறைமை தொடர்பில், ஆர்ஜென்டீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் போரைத் தொடர்ந்து, பிரித்தானியாவை ஆதரித்த வெகு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. 

1982 நவம்பரில், ‘போக்லண்ட் தீவுகள்’ பிரச்சினை தொடர்பான, ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம் ஒன்றில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த, வெறும் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்று.
பிரித்தானியா உடனான இந்த நெருக்கமான உறவு, இலங்கைக்கு ‘விக்டோரியா நீர்த்தேக்கம்’ உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான உதவிகள் பலதையும் பெற்றுத் தந்திருந்தது.

இதன் அடிப்படையில், சில இராணுவ உதவிகளையும் ஜே.ஆர் வேண்டியிருந்தார். ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தபடி, இராணுவ உதவிகளை அன்று பிரித்தானியா, நேரடியாக வழங்க முன்வரவில்லை. 

மாறாக, இராணுவ வழியைத் தவிர்த்து, இந்திய அனுசரணையுடன், அரசியல் தீர்வு எட்டுவதற்கு முயற்சிக்குமாறு, அன்றைய பிரித்தானிய பிரதமர் மார்க்றட் தட்சர், ஜே.ஆருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதற்குப் பிரித்தானியா, இந்தியாவுடன் முரண்பட விரும்பாததுதான் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

அமெரிக்கா போலவே, பிரித்தானியா நேரடியாக இராணுவ உதவிகளை வழங்காவிட்டாலும், மறைமுகமான உதவிகளை வழங்கியிருக்கிறது என்றும் சிலர் கருத்துரைக்கிறார்கள். 

குறிப்பாக, இலங்கையில் விசேட அதிரடிப் படைக்கான பயிற்சியை, பிரித்தானிய தனியார் இராணுவ நிறுவனம் ஒன்று வழங்கியிருக்கிறது என்பதுடன், பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறது என்று தனது நூலொன்றில் ஃபில் மில்லர் குறிப்பிடுகிறார்.

  இந்தியா அறிந்திருந்தது

அண்மையில், பகிரங்கமாக்கப்பட்ட சில இரகசிய ஆவணங்களின்படி, 1984இல், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பிரித்தானியப் பிரதமர் மார்க்றட் தட்சருக்கு, “நீங்கள், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, 
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சர்வ கட்சி மாநாட்டில் ஆக்கபூர்வமான முன்மொழிகளைச் செய்து, நேர்மறையான தலைமைத்துவத்தை வழங்க அறிவுறுத்துவீர்கள் என்று நாம் நம்புகிறோம். இராணுவ உதவிகளும், கிளர்ச்சி முறியடிப்பு உதவிகளும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது. அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அதை எதிர்கொண்டே தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததாக அறியக் கிடைக்கிறது. 

ஆகவே, ஜே.ஆரின் விஜயங்களையும் அதன் பின்னால் நடப்பவற்றையும் இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தது எனலாம். 

மீண்டும் இந்திராவுடன் ஜே.ஆர் சந்திப்பு

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா என்ற முக்கிய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டுவிட்டு, இந்தியாவைத் தவிர்த்துவிட்டால், அது மிகப்பெரும் இராஜதந்திரப் பிசகாகிவிடும். 

அதுவும் குறிப்பாக, இந்தியாவைப் பகைக்க, ஜே.ஆர் அதிகம் நம்பிக்கை கொண்ட, அமெரிக்காவே தயாராக இல்லாத நிலையில், இந்தியாவையும் சமாளித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஜே.ஆருக்கு இருந்தது. 

ஆகவே ஜே.ஆர், இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு, டெல்லி சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார். 

ஜே.ஆரிடம், பிராந்திய சபைகளை, உங்களால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று, இந்தரா காந்தி மிகுந்த அதிருப்தியுடன் வினாவினார். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்புதான், இதே இந்திரா காந்தியிடம் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு, ஜே.ஆர் தனது, சம்மதத்தை வழங்கியிருந்தார்.

இந்தமுறை ஜே.ஆரின் பதில் வேறானதாக இருந்தது. “அந்த விடயத்தில் என்னால், மக்களை என்னோடு இணங்கச் செய்ய முடியாதுள்ளது. இதை நாங்கள் வழங்கினால், ஒரு கட்சியாக, எங்களுடைய அத்திபாரத்தையே நாம் இழந்துவிடுவோம்” என்று சொன்னார். 

அத்தோடு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்றும், அதுவே, சிங்கள மக்களைக் கடுமையான நிலைப்பாடெடுக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 

ஜே.ஆரின் இந்தப் பதிலும், அவர் முன்னர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியிருந்ததும் இந்திரா காந்திக்குக் கடும் அதிருப்தியை அளித்திருந்தது.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/றீகனும்-ஜே-ஆரும்-குட்டி-யானையும்/91-213645

Link to comment
Share on other sites

பூப்பாதையா? சிங்கப்பாதையா?
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 139)

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது.

இக்கால இழுத்தடிப்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் அவரது கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

 மேலும், ஜே.ஆரின் சர்வதேச விஜயங்களும் அங்கு இலங்கையின் இனப்பிரச்சினையை அவர், அரசியல் பிரச்சினையாக அன்றி பயங்கரவாதப் பிரச்சினையாக முன்னிறுத்தி, இராணுவ உதவிகளைக் கோரியமை என்பன ஜே.ஆர் இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை, தமிழ்த் தலைமைகளுக்கு அழுத்தமாகப் புரியவைத்தது. 

மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், தமிழ்த் தலைமைகளுக்கும் இடையிலான இணக்கம் குறைவடைந்து கொண்டே சென்றது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த் தலைமைகளிலிருந்து வேறுபட்டு, தம்முடைய நிலைப்பாட்டைத் தனித்து முன்வைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது.

1984 ஜூன் 24ஆம் திகதி, விடுதலைப் புலிகள் வௌியிட்டிருந்த அறிக்கையில், எங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்றது; ஏனென்றால், குறித்த தீர்வானது எமது போராட்டத்தின் பார்வையில் திருப்திகரமானதாக இல்லாதிருந்தால்  தாக்குதல்கள் தொடரும் என்று ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் தமது நிலைப்பாட்டை எடுத்தியம்பியிருந்தது. 

இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், தாம் ஜனநாயகத் தமிழ் தலைமைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தமது சுயத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பு வௌிப்படையாக இதன் மூலம் எடுத்துரைத்திருந்தனர். 

அதேவேளை, தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அல்ல; மாறாகத் தாமே என்பதை வலியுறுத்துவதாகவும் இது அமைந்தது. 1983 ‘கறுப்பு ஜூலை’யின் பின்னர், தமிழ் மக்களின் அரசியலில் ஓங்கத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கரம், இப்போது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பின்தள்ளுமளவுக்கு, அவற்றை மீறி ஓங்குமளவுக்கு உயர்ந்திருந்தது. 

ஜே.ஆரின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில், ஜே.ஆரும் இதைத் தான் எதிர்பார்த்திருந்தார் என்பது புலப்படும். இது நிகழும் போதுதான், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை மறைத்து, இந்தப் போராட்டத்தைப் ‘பயங்கரவாதமாக’ முன்னிறுத்தி, அதை இராணுவ ரீதியில் அடக்கலாம். 

ஆகவே இந்த அறிக்கை, ஜே.ஆருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்காது. மாறாகக் காய்கள் அவர் நினைத்தவாறே நகர்வதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.

வளர்த்த கடா மார்பில் பாய்கிறதா?

“எங்கள் பொடியங்கள்” என்று அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள் அன்போடு அழைத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இன்று அந்தத் தமிழ்த் தலைமைகளையே மீறி வளர்ந்திருந்ததானது, அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. 

ஏனென்றால், அவர் இதை எதிர்பார்த்திருந்தார். அதனால்தான், முன்னொருமுறை அவரது பேச்சில் கூட, வரப்போகும் தீர்வானது எம்மை மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் திருப்தி செய்யத்தக்கதாக அமைய வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார். 

மேலும், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அமிர்தலிங்கத்துக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த அதிர்ச்சிகரமான வரவேற்பும் தமிழ்த் தலைமையின் தளம் மாறிக்கொண்டிருந்ததை, அவருக்குத் தௌிவித்திருக்கும். 

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் வௌிப்படையாகவே சர்வகட்சி மாநாடு, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது. கடந்த 17 வருட கால வரலாறு, எமக்கு இதைத் தான் உணர்த்துகிறது. 
பழைய தலைமுறைத் தமிழ்த் தலைமைகள், சிங்களத் தலைவர்களுடன் பேசிப் பேசியே ‘முடியிழந்து’ போனாலும், தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பேச்சுவார்த்தை மூலம் வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை. 

ஒரு புதிய, புரட்சிகரத் தலைமுறை அரசியல் தளத்துக்கு வந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். பழசாகிப்போன, தேங்கிப்போன அரசியல் நடிகர்களால், தமிழ் மக்களை இனியும் மகிழ்வுறுத்த முடியாது. அவர்கள் காலத்தின் தேவைப்பாட்டை இழந்துவிட்டார்கள். ஆகவே, இன்றுமுதல் நாம் விடுதலை வீரர்களின் வரலாறு படைக்கப்போகும் நடவடிக்கைகளைக் காணப்போகிறோம். அவர்களே தமிழ் மக்களின் புதிய பிரதிநிதிகள். அவர்கள் தான் எதிர்காலத்தின் நாயகர்கள்; மாறாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் அல்ல என்ற நிலைப்பாட்டைத் தமது உத்தியோகபூர்வ ஏட்டிலே பிரசுரித்தனர். 

மீண்டும் சத்தியாக்கிரகம்


தமிழ் மக்களின் பிரதிநிதி யார் என்ற பிரச்சினை தமிழ் மக்களிடையே இதற்கு முன்னர் பெரிதாக இருந்ததில்லை. 1956 வரை ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியாகவும், 1956 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டது. 

1972இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தோடு, அந்த இடத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எடுத்துக் கொண்டது. ஆனால், இப்போது முதன்முறையாக, ஜனநாயக அரசியல் கட்சியொன்றிடமிருந்து, அந்தப் பலம் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் கைமாறத் தொடங்கியிருந்தது. 

ஆகவே இந்தச் சூழலில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்று மீண்டும் நிரூபித்தாக வேண்டிய அரசியல் கட்டாயம், அமிர்தலிங்கத்துக்கு எழுந்திருந்தது. அதைச் செய்வதற்கு அவர், அவரது கட்சியின் பாலபாடமான சத்தியாக்கிரகத்தை கையிலெடுத்தார். 

ஜே.ஆரின் நடவடிக்கைகளின் அதிருப்தி கொண்ட அமிர்தலிங்கம், நாங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் போகப் போவதில்லை என்று அறிவித்ததுடன், ‘கறுப்பு ஜூலை’யின்” முதலாவது வருட நினைவேந்தலையொட்டி சத்தியாக்கிரகமொன்றை முன்னெடுக்க நடவடிக்கையெடுத்தார். 

இலங்கைத் தீவில், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வன்முறையற்ற அஹிம்சை வழியிலான மக்கள் போராட்டத்தின் முன்னோடியாக 1983 ஜூலை தமிழருக்கு எதிரான கலவரத்தின் முதலாண்டு நினைவையொட்டிய அஞ்சலி, உண்ணாவிரத மற்றும் வழிபாட்டு நிகழ்வு அமையும் என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

சத்தியாக்கிரகத்தைத் தமது அரசியல் போராட்டத்தை மீட்டெடுக்கும் வழிமுறையாக மட்டுமன்றி, வன்முறை வழிக்கு எதிரான தமது வழியை உணர்த்தும் அடையாளமாகக் கூட, அமிர்தலிங்கம் கையாள முனைந்திருக்கலாம். 

இதைப்பற்றி ஊடகங்களுக்கு, விரிவாக விளக்கமளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதோர் அரசியல் தீர்வொன்று, சர்வகட்சி மாநாட்டினால் எப்போதும் எட்டப்படப் போவதில்லை என்பது, இப்போது வௌிப்படையாகியுள்ளது. தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையான அளவில், தமது உரிமைகளை வென்றெடுத்துத் தருவோம் என்ற நம்பிக்கையை எம்மீது கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், இது மிகப் புனிதமானதொரு காரியம். நாம் எமது கடமையைப் பலவழிகளில் செய்வதற்கு முயன்றிருக்கிறோம். நாம் பேச்சுவார்த்தைப் பாதையில் முயற்சித்தோம்; நாம் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சித்தோம்; நாடாளுமன்றத்தின் ஊடாக இணங்கச் செய்ய முயற்சித்தோம்; நாம் உலக நாடுகளின் அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். ஆனால் சகலதும் பயன்தராது போய்விட்டன. உலகின் பலமற்றிருப்பவர்களுக்கான நடவடிக்கை வழியை, மஹாத்மா காந்தி காட்டிச் சென்றிருக்கிறார். நாம் ஜூலை 25ஆம் திகதி, அந்த வழியில் பயணிப்போம். நாம் உண்மையான சத்தியாக்கிரகிகளாக இருப்போம். இது தமிழ் மக்களுக்குத் துன்பத்தைத் தருமானால், அந்தத் துன்பத்தை முதலில் அனுபவிப்பவர்கள் நாமாக இருப்போம்” என்று தமது அடுத்த கட்ட நடவடிக்கையை உணர்ச்சிகரமாக விளக்கியிருந்தார். 

அரசியல் பயணத்துக்கான பாதை

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்த அஹிம்சை வழி சத்தியாக்கிரகத்தைக் கேலிக்கூத்தாகப் பார்த்தன. ஆயுத வழியே ஒரே வழி என்பதில் அவை உறுதியாக இருந்தன. உங்கள் அஹிம்சை வழி தோற்றுவிட்டது. இனி ஆயுத வழிதான் ஒரே வழி என்ற செய்தியை அவை அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் தெரிவித்ததோடு, துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்தச் செய்தியைத் தமிழ் மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தனர். 

தமிழ் மக்கள் இந்தக் கேலிக்கூத்தில் பங்குபெறக் கூடாது என்பது தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் நிலைப்பாடாக இருந்தது. 

இந்த நிலையில், ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், குறிப்பாக வடக்கில் கணிசமானளவில் அதிகரிக்கத்தொடங்கியிருந்தது. மறுபுறத்தில், அரசாங்கமும் இராணுவத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் வௌிநாட்டு உதவிகளுடன் பலப்படுத்திக் கொண்டிருந்தது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு அரசாங்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்துவதும், அதிலும் குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள் நடத்தும் போக்கும் 1984இல் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.

அடுத்தடுத்த வருடங்களில், இயல்பாகிப் போன வன்முறை நிறைந்த வாழ்வியலின் ஆரம்ப காலம் இது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளை விட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பும் இதைத் தான் விரும்பியிருக்க வேண்டும் போலும். 

ஏனென்றால், பேச்சுவார்த்தை முறையில் இந்த இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டும் என்ற அவசியப்பாட்டை ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் மட்டுமே வௌிப்படுத்தின. ஜே.ஆரும் அதை விரும்பியிருந்தால், அதைச் செய்வதற்கு ஒரு தடையும் இருந்திருக்காது; மறுபுறத்தில், இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் அனைத்தும் அதற்கு ஆதரவளித்திருக்கும். 

ஆனால், ஜே.ஆர், அதைச் செய்யத் தவறியதால், அவரும் இராணுவ வழியையே, அதாவது வன்முறை வழியையே தேர்ந்தெடுத்தார் என்பதே நிதர்சனமாகிறது. 

அமிர்தலிங்கம் தரப்பினர் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நினைவேந்தலை, அஹிம்சை வழியில் அணுகத் தயாரான வேளை மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நிறைவை, வன்முறைத் தாக்குதல்கள் மூலம் நினைவு கொள்ளத் தயாராகிறார்கள் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி எதிர்பார்த்தார். 

ஊடகங்களிடம் பேசிய அவர், “கறுப்பு ஜூலையின் போது, இலங்கைச் சிறைகளில் 51 தமிழ்க் கைதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டதை முன்னிறுத்தி, பயங்கரவாதிகள் 51 அரச படையினரைக் கொல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆகவே, இலங்கை அரசாங்கமும் தாக்குதல்களை எதிர்கொள்ள, மிகவும் எச்சரிக்கையுடன் தயாராக இருந்தது. 

இந்தக் காலகட்டத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இரண்டு அடிப்படைகளில் இருந்தது எனலாம். முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதரான வன்முறைத் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல். அடுத்ததாக, தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டிவிட்டு, அந்த இடத்தை தமதாக்கிக் கொள்ளுதல். 

இதில் ஜனநாயக தலைமைகளை, குறிப்பாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் பிரதிநிதிகள் என்ற ஸ்தானத்திலிருந்து இல்லாதகற்றுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு நிகராக, ஜே.ஆர் அரசாங்கமும் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டது.

இந்த நிலையில், 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோயிலின் முன்றலில் இடம்பெறவிருந்த சத்தியாக்கிரகத்துக்கு வருகை தந்த அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பூப்பாதையா-சிங்கப்பாதையா/91-214031

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 140)

தமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை இனப்பிரச்சினை பற்றிப் பேசும் பலரும், பொதுவாகக் கூறும் கருத்தாகும்.   

நீண்டதோர் அரசியல் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் அனைவரும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. இந்த யதார்த்தத்தையும் பயங்கரவாதத்துக்கு எதிரான இயல்பான மனோநிலையையும் ஒன்றிணைந்ததால் உருவான  கருத்து இதுவாகும். ஆனால், இந்தக் கருத்துக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் உட்பொருளில்தான், ‘தந்திரமான அரசியல்’ ஒளிந்திருக்கிறது.  

 தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் சென்றதுதான் பிரச்சினை; இல்லையென்றால் இதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்று மட்டும் சொல்லும்போது, தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் செல்வதை, அரசாங்கம் விரும்பவில்லை.  

 மாறாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அரசாங்கம் தயாராக இருந்தது என்ற தோற்றப்பாடு, இங்கு உருவாக்கப்படுகிறது. 

ஆனால், வரலாற்றுப் பக்கங்களை உற்று நோக்கும் போது, ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம், சர்வகட்சி மாநாட்டின் ஊடாகத் தீர்வொன்றை எட்டுவதில், அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.  

 மாறாக, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாக இருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிறுத்தப்பட்டால், பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற வாதத்தை முன்வைத்து, இராணுவ ரீதியில் தமிழ் இளைஞர்களை எதிர்கொள்ள முடியும்.  

 ஜே.ஆர் அரசாங்கத்தின் நோக்கம், பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வாக இருந்திருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசி, இனநெருக்கடிக்குத் தீர்வை, மிக எளிதாக ஜே.ஆர் சாதித்திருக்கலாம்.   

மாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஆராய்ந்தவற்றை, மீண்டும் மீண்டும் ஆராயக் குழுக்கள் அமைத்து வந்ததும், தமிழர் தரப்பு, பிராந்திய சபைகள் கோரியிருந்த நிலையில், அதற்கு சம்பந்தமில்லாமல், நாடாளுமன்றத்தில் இரண்டாம் அவையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்மொழிவுகளை மட்டும் முன்வைத்ததும், சர்வ கட்சி மாநாட்டை ஜே.ஆர் கால இழுத்தடிப்புக்கு மட்டும் பயன்படுத்தினார் என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைகிறது.  

 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின், முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடத்திய உண்ணாவிரத சத்தியாக்கிரகப் போராட்டம், அங்கு நடந்த சம்பவங்கள், அதற்குப் பின்னரான ஜே.ஆர் அரசாங்கத்தின் கருத்துகளும் நடவடிக்கைகளும், ஜே.ஆர் அரசாங்கத்தின் உண்மையான உள்நோக்கத்தை, வௌிப்படையாகப் பறை சாற்றுவனவாக அமைந்தன.  

ஆரம்பமே அதிர்ச்சி  

1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகம் இடம்பெறவிருந்த நிலையில், அதில் எவரும் கலந்துகொள்ளக்கூடாது என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. 

சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த, 25ஆம் திகதி அதிகாலையே, வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அருகில் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது.  

 சத்தியாக்கிரகத்தில் மக்கள் பங்குபற்றுவதைத் தடுக்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இதனை நடத்தியிருக்கலாம் என்பது, பலரினதும் கருத்தாகும். காலை ஏழு மணியளவில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அவரது மனைவி மங்கையற்கரசி, எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சமுகமளித்திருந்தனர்.   

அவர்கள் அங்கு வருகை தந்தபோது, ஏறத்தாழ 200 பேரளவிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ஒப்பீட்டளவில் இது மிகச் சிறிய எண்ணிக்கையாகும். இந்தச் சத்தியாக்கிரகத்தின் ஆரம்பமே சிறப்பிழந்து அமைந்திருந்தது.  

கேள்விக் கணைகளால் சூழப்பட்ட அமிர்  

வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், அமிர்தலிங்கம் தலைமையில் அனைவரும் சப்பாணி கட்டியமர்ந்து, வழிபாடு, நினைவேந்தல், உண்ணாவிரதம் ஆகியவற்றுடன் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர். 

சத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வருகை தரத்தொடங்கிய இளைஞர் கூட்டமொன்று, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்டது.   

சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள், சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களிடம், சரமாரியாகக் கடுந்தொனியில் கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள். 

“நீங்கள் இவ்வளவு நாட்களும் எங்கே இருந்தீர்கள்? இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்தியாவில் தங்கியிருந்ததன் நியாயத்தை, அவர்கள் கேட்டார்கள். 

“தமிழ் மக்கள், மீண்டும் மீண்டும் சிங்கள அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்படுவதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் விருப்பத்தை மீறி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியதன் நியாயத்தையும் அந்த இளைஞர் குழு கேட்டது.   

 தொடர்ந்து, “தமிழ் மக்களாகிய நாம், உங்களை ‘தமிழீழம்’ என்ற தனி அரசை அமைப்பதற்கான மக்களாணையோடு, எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது? உங்களுக்குத் தனிநாட்டை அமைப்பதற்காக இயங்குவது, சாத்தியமில்லை என்றால், உங்கள் நாடாளுமன்றப் பதவிகளை நீங்கள் ஏன் இராஜினாமாச் செய்யவில்லை” போன்ற சரமாரியான கேள்விக் கணைகளால், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் துளைத்தெடுக்கப்பட்டார்கள்.  அவர்களைப் பதில் கூறக் கூட, இளைஞர் குழு அனுமதிக்கவில்லை.   

பதில் கூற முனைந்தவர்களை, இடைமறித்த இளைஞர்கள், “தேவைக்கதிகமாகவே நீங்கள் பேசிவிட்டீர்கள்; அதனை தேவைக்கதிகமாகவே நாங்களும் கேட்டுவிட்டோம். இது மக்கள் பேசவேண்டிய நேரம்; அவர்களைப் பேசவிடுங்கள்” என்று கடுந்தொனியில் கூறியிருந்தார்கள்.   

கேள்விகளும் நியாயங்களும்  

அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்களைக் கேள்விகளால் அதட்டிய இளைஞர்களின், சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது. ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, பாதுகாப்பு என்பது பெருங்காரணமாக இருந்தாலும், ஏறத்தாழ ஆறு மாதகாலமளவுக்கு மக்களை, நட்டாற்றில் விட்டு விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்தமை, அவர்கள் என்ன நியாயம் கற்பித்தாலும், ஏற்றுக் கொள்ளமுடியாததே.   

தலைவன் என்பவன், மக்களை அரணாகக் கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவன் அல்ல; மாறாக, தான் அரணாக இருந்து, மக்களைப் பாதுகாப்பவன். 

ஒரு பெரும் இன அழிப்பு நடந்தபோது, அதிலிருந்து உயிர்காக்கத் தப்பிச் சென்றமை கூடத் தவறில்லை; ஆனால், நிலைமை கொஞ்சம் தணிந்த பின்னராவது, நாடு திரும்பியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறே. 

தனிநாட்டுக்கான மக்களாணை கோரியமையானது, ஒரு பெரும் அரசியல் முன்னகர்வு. அதைச் செய்தபோது, அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தமிழ்த் தலைமைகள் தயாராக இருந்திருக்க வேண்டும்.   
ஆனால், தமிழ்த் தலைமைகளின் 1977 பொதுத் தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள், அவை தனிநாட்டுக்கான மக்களாணையை, அரசியல் தந்திரோபாய நடவடிக்கையாகவே கையாண்டிருந்தன, என்ற தோற்றப்பாட்டையே உருவாக்குகிறது.  

ஏனெனில், அவை தொடர்ந்தும் அரசியல் ரீதியிலான, அதிகாரப் பகிர்வை நோக்கிய பாதையிலேயே சென்றமையை நாம் காணலாம். 

இதற்குச் சர்வதேச அழுத்தம், குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் முக்கிய காரணம். சர்வதேசம், குறிப்பாக வல்லரசுகளின் ஆதரவின்றி, பிரிவினை என்பது சாத்தியமில்லை. இது சர்வதேச அரசியலின் பாலபாடம். 

ஆகவே, இந்த எந்த அடிப்படைகளையும் தயார் செய்யாமல் அல்லது தயார் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லாமல், பகட்டாரவாரமாகத் தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்றமையானது, தவறானதொரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.   

மக்களிடம் பகட்டாரவாரப் பேச்சுகளால், ஓர்  அபிலாஷையை ஆழமாக விதைத்துவிட்டு, பின்னர் அதிலிருந்து உடனடியாகப் பின்வாங்குவது என்பது, அவ்வளவு சுலபமானது இல்லை. தமிழ் மக்களின் ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகளாகவே, இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக இருந்துவிட்டதால், தாம் எதையும் செய்யமுடியும் என்ற அதீத நம்பிக்கையில் இதைச் செய்திருக்கலாம். 

ஆனால், அந்த ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் சவால் உருவாகும் என்று, 1977இல் தமிழ்த் தலைமைகள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.   

“உண்ணாவிரதமிருந்த காலம் முடிந்துவிட்டது; துப்பாக்கிகள் சுடத்தொடங்கிவிட்டன; போராட்டம், இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது; நீங்கள் தயவு செய்து, இந்த இடத்திலிருந்து வௌியேறுங்கள்” என்பது சத்தியாக்கிரகிகளை சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் வேண்டுகோளாக இருந்தது.   

தமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு, வாழ்த்துகளையே பெற்றுப் பழகிப்போன அமிர்தலிங்கத்துக்கு, அவர்களிடமிருந்து கேள்விக்கணைகளை எதிர்நோக்குவது, அதிர்ச்சிகரமான அனுபவமாகவே இருந்திருக்கும். எந்தவொரு தலைவனும் சந்திக்கக்கூடிய, மிகக் கொடூரமான அனுபவம் இதுவாகும். இவ்வளவு நடந்தாலும், தமிழ் இளைஞர்களின் முக்கியத்துவத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறுத்திருக்கவில்லை. 

இந்தச் சத்தியாக்கிரகத்தில் உரையாற்றிய எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள், தமிழர்களின் தலைமை, தமிழ் இளைஞர்களின் கைகளில்த்தான் இருக்கிறது என்பதை, வௌிப்படையாகவே கூறியிருந்தார்கள்.   

முடிவுக்கு வந்தது சத்தியாக்கிரகம்  

இந்தச் சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் நோக்கமாக இருந்தது. அது நிறைவேற, அதிக நேரம் தேவைப்படவில்லை. அங்கிருந்த சத்தியாக்கிரகிகளைவிட, அவர்களைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமையின் தீவிரத்தை உணரத் தொடங்கிய சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிய பலரும், கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வௌியேறத் தொடங்கினர்.   

ஆனால், அமிர்தலிங்கமும் அங்கு கூடியிருந்த ஏனைய தமிழ்த் தலைமைகளும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். நேரம், நண்பகலை நெருங்கியபோது, அங்கு கூடியிருந்த சத்தியாக்கிரகிகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆகவே இருந்ததாகச் சிலர் பதிவு செய்கிறார்கள். 

இதன்போது, திடீரென்று அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபன் உள்ளிட்ட சில இளைஞர்கள், உணவுப் பொதிகளோடு நுழைந்ததாக ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.  

 உணவுப் பொதிகளோடு வந்தவர்கள், சத்தியாக்கிரகிகளின் முன்பாக உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு, உணவருந்தத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு, கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றதாகவும் பதிவு செய்கிறார்கள்.   

எது எவ்வாறானாலும், இங்கு நோக்கம், தமிழ் மக்களின் இன்றைய தலைமைகள் யார் என்பதை, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு உணர்த்துவதாகவே இருந்தது. 

எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, சத்தியாக்கிரகத்தை நிறைவு செய்துகொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், அங்கிருந்து வௌியேறியமை, சத்தியாக்கிரகத்தின் நிறைவை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் அரசியலில் ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் செல்வாக்கின் நிறைவையும் கோடிட்டுக்காட்டியது. 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகத்துக்கு ஏற்பட்ட நிலை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை பெரு வெற்றியே. தமிழர் அரசியலில், தமது நிலையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மெருகேற்றிக் கொண்டன.  

 இதே காலப்பகுதியில், தமிழீழ விடுதலைக் கழகம் (டெலோ) தமது தலைவர்களான தங்கதுரை மற்றும் குட்டிமணியின் படுகொலையில் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, அறிவித்திருந்த ஹர்த்தால், வடக்கு-கிழக்கின் முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டிருந்ததும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கைப் பறை சாற்றுவதாக அமைந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலை கண்டு, இன்னொரு தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருந்தது. அதுதான், ஜே.ஆர் அரசாங்கம். இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த, ஜே.ஆர் முனைந்தார். 

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமிர்தலிங்கத்துக்கு-அதிர்ச்சி-கொடுத்த-தமிழ்-இளைஞர்கள்/91-214708

Link to comment
Share on other sites

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோல்வி
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 141)

1983 ‘கறுப்பு ஜூலை’யின் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலையீட்டால் தோல்வியைத் தழுவியிருந்தது.   அங்கு கூடிய தமிழ் இளைஞர்களின் அழுத்தத்தால், சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் விரைவில் வௌியேறத் தொடங்கியதும், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிச்சயமாக, இது தோல்வியைச் சுட்டி நிற்பினும், அமிர்தலிங்கம் அதை, அவ்வாறு பொருள் கொள்வதைத் தவிர்த்தார்.  

 மாறாக, “நா‍ங்கள் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம்; அவ்வளவு தான்” என்பது அமிர்தலிங்கத்தின் பதிற்கருத்தாக இருந்தது.   
ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை, இது அவர்களது நிகழ்ச்சிநிரலின் வெற்றியே. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு மட்டுமல்லாது, மறுபுறத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் கூட, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது.  

 ஐக்கிய தேசியக் கட்சி, சத்தியாக்கிரகத்தின் தோல்வியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முடிவாக அல்லது மரணமாகக் கருதிக் குதூகலம் கொண்டதாக, தன்னுடைய கட்டுரையொன்றில் மேவின் டி சில்வா குறிப்பிடுகிறார். 

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இது பாதையின் முடிவாகும்.  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கதை முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டதோடு, “இந்தச் சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை பற்றி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் என்ன பயன் ஏற்படப்போகிறது, என்கிற ஐயம் உருவாகிறது” என்ற கருத்தையும் பதிவு செய்தார்.   

சத்தியாக்கிரகப் போராட்டத்தின் தோல்வி குறித்த செய்திக்கு, தெற்கில் ஊடகங்கள் பெரும் பிரசித்தம் வழங்கின. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், சர்வதேச அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு நிறையவே இருந்தது.   

குறிப்பாக, இந்தியாவிடமிருந்து சர்வதேசமானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதியிருந்தது. ஆகவே, அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழுத்தம் இருந்தது. தமிழ் மக்களின் ‘தலைநகர்’ என்று கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகப் போராட்டமானது தோல்வியடைந்ததானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின், ‘தமிழர் பிரதிநிதிகள்’ என்ற நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது,  

 ஆகவே, அவர்களுடன் பேசுவதில் பயனில்லை என்று ஜே.ஆர் அரசாங்கம் நிறுவ முயன்றதன் வௌிப்பாடுதான், ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸின் கருத்தின் சாரம். 

இந்தச் சாரத்தின் அடிப்படையிலான அரசியல் பத்திகள், தெற்கில் பத்திரிகைகளில் பிரசுரமாயின. இதன் பின்னணி பற்றிக் கருத்துரைக்கும் ரீ.சபாரட்ணம், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால், அவர்களோடு பேசத்தேவையில்லை என்பதோடு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழும். அதற்கான பதில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் என்றால், முதலாவதாக, ஆயுத வழியில் தனிநாடு கோரும் அவர்கள் சமரசத் தீர்வுக்கு வரப்போவதில்லை, இரண்டு, ஆயுத வழியில் பயங்கரவாதத்தை முன்னெடுப்பவர்களை, மேற்கின் பங்கரவாத ஒழிப்பு நிகழ்ச்சி நிரலோடு ஒத்திசைந்து, ஆயுதரீதியில் அடக்குவதை நியாயப்படுத்தலாம். ஆகவே, இந்த இரண்டு நடந்தாலும், பேச்சுவார்த்தை என்ற ஒன்றுக்கு இடமில்லை. பேசுவதற்கு ஒரு தரப்பு இல்லையென்றால், சர்வதேசம் கூடப் பேச்சுவார்த்தைக்கு தன்னுடைய அழுத்தத்தை தரமுடியாது’ என்று குறிப்பிடுகிறார்.  

 பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஜே.ஆரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் விரும்பவில்லை. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவானது, ஒன்றுக்கொன்று முரண்பாடான, இந்த இருதரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும் சாதகமானதாகவே அமைந்தது.   

பிரித்தானிய அழுத்தம்  

இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்குப் பிரித்தானியாவிலிருந்து இன்னொரு வகையிலான அழுத்தம் ஏற்பட்டிருந்தது. 1983 ஜூலை 28ஆம் திகதி பிரித்தானியாவின் ‘த காடியன்’ பத்திரிகையில், ‘தமிழ் மக்களுக்கெதிரான ஜூலை 1983 வன்முறையை நினைவுகூரல்’ என்ற தலைப்போடு பிரசுரமாயிருந்த செய்தியானது, ‘கறுப்பு ஜூலை’ வன்முறையை நினைவுகூர்ந்ததுடன், அதற்குக் காரணமான, இலங்கை அரசாங்கத்தைக் கண்டிப்பதாக அமைந்ததுடன், அந்தக் கண்டனத்தில் ஏறத்தாழ 80 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டிருந்ததாகவும் பதிவு செய்திருந்தது.   

‘1983 ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளானது, தமிழ் மக்கள் மீதான இனவெறியின் காரணமாக,  தீக்கிரையாக்கப்பட்ட தமிழ் மக்களது வாசஸ்தலங்களும் வியாபாரங்களும் அடையாளம் காணப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துன்பம் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வாகும்’ என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, 53 தமிழ்க் கைதிகள், இலங்கைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்ததுடன், இந்தக் கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில், இதுநாள் வரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.   

மேலும், தனிநபர்களை 18 மாத காலம் வரை, எதுவித நீதி விசாரணையுமின்றித் தடுத்துவைக்கும், படுபயங்கரமான அதிகாரத்தை, அரச இயந்திரத்துக்கு வழங்கிய ஜே.ஆர் அரசாங்கம், நிறைவேற்றியிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்த, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டியிருந்ததுடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பதவியிழக்கச் செய்த, அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தையும் கண்டித்திருந்தது.  

அத்தோடு, ஏறத்தாழ 10 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த அவலத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதில் ஒப்பமிட்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதியாக ஐந்து பிரதான அபிப்பிராய முன்மொழிவுகளை வௌிப்படுத்தியிருந்தார்கள்.   

1. தமிழ் மக்களுக்கு எதிரான, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள், மற்றும் அரசாங்கத்தின் பிடியிலிருந்த 53 தமிழ்க் கைதிகள், சிறைகளில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதோடு, பொதுமக்களைத் தன்னிச்சையாகக் கொன்று, எதுவித நீதிவிசாரணையுமின்றிப் புதைக்கும் அதிகாரத்தை, அரச படைகளிடமிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.  

3. சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரான வௌித்தொடர்பற்ற தனிக்காவல் தடுப்பு, சித்ரதிவதை என்பவற்றை இலங்கை உடனடியாகக் கைவிடவேண்டும்.

4. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன மீள வழங்கப்பட வேண்டும்.   

5. இலங்கை அரசாங்கமானது அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதோடு, தமிழ் மக்களுக்கான நியாயமாக உரிமைகளை வழங்குவதனூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அபிப்ராய முன்மொழிவுகளை முன்வைத்திருந்தனர்.   

1983 கறுப்பு ஜூலை இன அழிப்பு வன்முறை என்பது, மிகப் பாரதூரமான ஒரு விடயம். குறிப்பாக, இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச அரசியலில், இத்தகைய இன மய்ய வன்முறைகளுக்கு எதிராகப் பெரும் வெறுப்பும் கடும் எதிர்ப்பும் இருந்தன.   

இதன் பாரதூரத்தை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார். அதனால்தான்,  கவனத்தை அதிலிருந்து திசை திருப்ப, அவர் பல முயற்சிகளை முன்னெடுத்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது கூட, “கறுப்பு ஜூலையை மறக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

நாஸிப்படைகள் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ‘ஹொலோகோஸ்ட்’ (பெரும் இன அழிப்பு)ஐ இன்றும் சிலர் மறுக்கிறார்கள். ஆனால், இஸ்‌ரேல் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், ‘ஹொலோகோஸ்ட்டை’ மறுத்தல் என்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது.  

 ‘கறுப்பு ஜூலை’ என்பதை ‘ஹொலோகோஸ்ட்டோடு’ ஒப்பிட முடியாது என்று சிலர் வாதிடலாம். ஒரு சிலர், ‘கறுப்பு ஜூலை’ என்பது இன அழிப்பு அல்ல; இனச் சுத்திகரிப்பு என்று வாதாடுவார்கள். சிலர், அது இனச்சுத்திகரிப்பு கூட இல்லை; அது ஓர் இனக்கலவரம் என்பார்கள்.   இன்னும் சிலர், அது இனக்கலவரம் இல்லை; சில காடையர்கள் நடாத்திய, வன்முறைத் தாக்குதல்கள் என்பார்கள்.


 இந்தத் தொழில்நுட்ப ரீதியான வாதப்பிரதிவாதங்கள் எவ்வாறிருப்பினும், மறுக்கமுடியாத உண்மை யாதெனில், 20 ஆம் நூற்றாண்டு கண்ட, ஓர் இனம் அடையாளம் காணப்பட்டு உயிர்களும், உடைமைகளும் வன்முறை கொண்டு, அழிக்கப்பட்ட, பாரதூரமான நிகழ்வுகளில் ‘கறுப்பு ஜூலை’யும் ஒன்று.  

ஜனநாயகத் தமிழ்த் தலைமை, உண்மையில் இன்னும் வினைத்திறனாகச் செயற்பட்டு, சர்வதேச ரீதியில் ‘கறுப்பு ஜூலை’யையும் அதற்கு முற்பட்ட, அதன்பின் தொடர்ந்த இன வன்முறைகளையும் முன்னிறுத்தி, தமிழ் மக்களுக்கான நியாயத்தைக் கோரியிருக்க வேண்டும். 

அதில், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் திருப்திகரமானச் செயற்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் உண்டு.   

அழுத்தத்தைச் சமாளிக்கும் தந்திரோபாயம்  

கறுப்பு ஜூலை என்ற வன்முறையைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் பாலான சர்வதேசத்தின் அனுதாபம் நிறையவே இருந்தது. இதில் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளும் முக்கிய இடத்தை வகித்திருந்தன.   
அதன்பாலாக ஏற்பட்ட சில அழுத்தங்களில் ஒன்றுதான், இந்தப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனமும் அபிப்ராய அறிக்கையும் ஆகும். தமிழ் மக்கள் மீதான அனுதாபத்தை மீறி, தன்னிலையை நியாயப்படுத்த வேண்டுமானால், சர்வதேசத்துக்கு உவப்பற்ற பார்வையில், தமிழ் மக்கள் அமர்த்தப்பட வேண்டும்.   

அதற்குப் பயங்கரவாதத்தை விட, வலுவானதொரு காரணம் இருக்க முடியாது. பயங்கரவாதம் என்ற கட்டுமானத்தைக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான வன்முறையை மட்டுமல்ல, பேச்சுவார்த்தைக்கான அவசியமின்மையையும் நியாயப்படுத்த முடியும். மேலும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சிநிரலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதனூடாக, சர்வதேசத்தின் அனுதாபத்தைத் தம்மீது பதியச் செய்ய முடியும் என்பதே, ஜே.ஆரின் தந்திரோபாயமாகும்.  

 இதை ஜே.ஆர் முதல் ராஜபக்ஷ வரை நாம் காணமுடியும். இதனால்தான், தமிழர் அரசியலில், ஜனநாயகத் தலைமைகள் பின்தள்ளப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிலை பெறுவது, தமிழ் மக்களை விடவும், ஜே.ஆருக்கு அவசியமானதாக இருந்திருக்கும்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அரசியல் பற்றிய அரசியல் பார்வை, புலமைத்தளத்தில் கூட ஆதரவுத் துதி, எதிர்ப்பு விமர்சனம் என்ற இருதுருவ நிலைகளை, இன்றும் கடந்து வராதது கவலைக்குரியது.  

 1984இலிருந்து 2009 வரை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களே, தமிழர் அரசியலின் உந்து சக்தியாக இருந்தன என்பதுடன், போராட்டம் என்பதைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வரையறுத்ததிலும் அவர்களது பங்கு முக்கியமானது.  

 ஆயினும், தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டதானது, தமிழரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். எந்தவொரு போராட்டத்துக்கும், மய்யநிலை போராட்டத்திலிருந்து தனித்தமைந்த, ஒரு ஜனநாயக அரசியல் முகம் அவசியம்.   அது இல்லாதுபோனால், போராட்டம் - அரசியல் என்ற இரு நிலைகளின் சமநிலை தகர்ந்துவிடும். இதைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உணர்ந்துகொள்ள, ஒன்றரை தசாப்தத்துக்கும் அதிகமான காலம் தேவைப்பட்டிருந்தது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டுவிட்டால், போராட்டம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் அரசியல் சூனியத்துக்குள் நிற்க வேண்டிய நிலை உருவாகும். 

நிற்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதங்களும் ஆதரவும் அடைக்கலமும் அளித்தது என்பது, அனைவரும் அறிந்த இரகசியமாக இருந்தது. இதை ஜே.ஆர் நேரடியாக இந்திரா காந்தியிடமே குறிப்பிட்டிருந்தார். பிரதமர் பிரேமதாஸ தொடர்ந்தும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்தநிலையில், 1984 ஆகஸ்ட்டில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே கொஞ்சம் அதிரச்செய்ததுடன், ஜே.ஆரின் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ கோசத்துக்கும் வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-ஐக்கிய-விடுதலை-கூட்டணியின்-தோல்வி/91-215135

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு ஏற்பட்ட சங்கடம்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 142)

இந்திராவுக்கு ‘செக்’ வைத்த ஜே.ஆர்

இலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளித்துவருகிறது என்ற குற்றச்சாட்டை, ஜே.ஆர் அரசாங்கம் மிக நீண்டகாலமாக முன்வைத்து வந்தது.   

இதை, இந்தியா ஆரம்பத்தில் வெளிப்படையாக மறுத்து வந்தாலும், பிற்காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காது மௌனம் காத்தது.   

ஆயினும், பிரதமர் பிரேமதாஸ, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர், தொடர்ந்து பகிரங்கமாக, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.   

அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக, இலங்கை வந்திருந்த வேர்னன் வோல்டர்ஸ், இலங்கை - அமெரிக்க, இலங்கை - இஸ்‌ரேல் உறவுகளைப் பலப்படுத்தும் கைங்கரியங்கள் சிலவற்றை முன்னெடுத்திருந்தார்.   

இராணுவ, உளவு உதவிகள் அதில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வோல்டர்ஸின் இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவில் அமைந்திருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கான பயிற்சி முகாம்கள் பற்றிய செய்மதிப் பட ஆதாரங்கள் பற்றி, இலங்கைக்கு அறியத்தந்ததுடன், இந்தியாவுக்கு இதுபற்றித் தெரிவித்திருந்தார்.   


இதைப் பற்றிக் குறிப்பிட்ட லலித் அத்துலத்முதலி, “இந்தியாவிலுள்ள முகாம்கள் பற்றி, தம்மிடம் தெளிவான செய்மதிப்பட ஆதாரங்கள் உள்ளதாக வோல்டேர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் டெல்லி சென்று, தம்மிடமுள்ள ஆதாரங்கள் பற்றிச் சொன்னதுடன், இனி முகாம்கள் இருப்பதை மறுப்பதை, டெல்லி நிறுத்துவது நல்லது என்று புரிய வைத்தார். அமெரிக்காவிடமுள்ள செய்மதிப் புகைப்படங்கள் வெளியிடப்படலாம். அதன் பின்னர் இந்தியா, முகாம்கள் இருப்பதை மறுதலிப்பதை நிறுத்திக் கொள்ளும்” என்றார்.   

அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, முன்பை விட இந்திராவைப் பலமாக எதிர்கொண்டதற்கு, இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக அமைந்தன.  

 ஜே.ஆர், நேரடியாகவே முகாம்கள் பற்றி, இந்திராவிடம் குறிப்பிட்டார். உடனடியாக அதை மறுத்திருந்த இந்திரா, “அவை ஆயுதப் பயிற்சி முகாம்கள் அல்ல; மாறாக 30,000 க்கும் அதிகமாகத் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்க வைக்க அமைக்கப்பட்ட முகாம்கள்” என்று பதிலளித்தார்.   

“இந்த முகாம்கள் பற்றி உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்” என்று சொன்ன ஜே.ஆர், தன்னிடமிருந்த ஆதாரங்களை, இந்திரா முன், எடுத்து வைத்தார். வரைபடங்கள் உள்ளிட்ட பலதகவல்கள் அடங்கிய அந்த ஆவணங்களில், முகாம்கள் அமைந்துள்ள இடங்கள், அவற்றின் பெயர்கள், அங்கு பயற்சிபெறும், அந்த முகாமைப் பயன்படுத்தும் ஆயுதக் குழுவின் பெயர், அங்கு பயிற்சி பெறும் நபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர், தராதரம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.   

அதிலுள்ள தகவல்கள், இந்திரா காந்திக்கு அதிர்ச்சியைத் தந்திருக்காது; ஆனால், எப்படி இந்தத் தகவல்கள், இலங்கைக்குக் கிடைத்தன என்பது, இந்திரா காந்தியை நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.   

இந்திராகாந்திக்கு, கிட்டத்தட்ட இந்த ஆதாரங்களின் மூலம், ‘செக்’ வைத்ததாகத்தான் ஜே.ஆர் எண்ணியிருக்க வேண்டும். ஜே.ஆரோடு, டெல்லி சென்றிருந்த லலித் அத்துலத்முதலி, “பயங்கரவாதத்தை எவ்வளவுதூரம் நாம் இல்லாதொழிக்கிறோமோ, அவ்வளவுதூரம் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.   

இதைத் தொடர்ந்து, ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளிப்பதென்பதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் முகாம்கள், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்தன என்பதும் பகிரங்கமான இரகசியமாகிவிட்டன.  

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆயுதக் குழுக்கள் பயங்கரவாதிகள்; ஆகவே இந்தியா, பயங்கரவாதத்தைப் போஷித்து, ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை இலங்கை முன்வைத்தது. இந்த அரசியல் காய்நகர்த்தல், ஜே.ஆர் அரசாங்கத்தின் ‘பயங்கரவாத ஒழிப்பு’ நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக அமைந்ததுடன், அரசியல் தீர்வொன்றுக்கான இந்திய அழுத்தத்தைச் சமன்செய்யத்தக்கதொரு வாய்ப்பாகவும் அமைந்தது.  

இந்தியாவுக்கு இது பெரும் இராஜதந்திரச் சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், 1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, சென்னை விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு, இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

மீனம்பாக்கம் விமானநிலையக் குண்டுவெடிப்பு

1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, இரவு 10.50 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்தில், குண்டொன்று வெடித்ததில் 30 பேர் பலியானதுடன், ஏறத்தாழ 25 பேரளவில் படுகாயமடைந்திருந்தனர்.   

இந்தியாவின் முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையமொன்றில், இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   

இந்தச் சம்பவத்தின் விசாரணையின் பின்னர், தெரியவந்த விடயங்கள், இந்தியாவுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்தன.  

குறித்த தினம் இரவு 8.10 மணிக்கு, எயார் லங்கா விமானமொன்று, சென்னையிலிருந்து, கொழும்பு செல்லத் தயாராக இருந்தது. குறித்த விமானத்தில் பயணிக்க, கதிரேசன் என்றொரு நபர் விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்திருந்தார். விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரின் உதவியோடு, இரண்டு பயணப் பொதிகளை, ‘செக் இன்’ செய்திருந்தாலும், குறித்த பயணத்தில் அந்நபர் பயணிக்கவில்லை.  

சில குழப்பங்களின் காரணமாக, இலங்கை செல்லவிருந்த விமானத்துக்குச் செல்ல வேண்டிய அந்தப் பொதிகள், இலண்டன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானப் பொதிகளோடு தொடுக்கப்பட்டுவிட்டன. ஆயினும், குறித்த பொதியின் மீது, அதன் அளவு காரணமாகச் சந்தேகம் கொண்ட சுங்கஅதிகாரிகள், குறித்த பொதியின் ஆய்வுக்காக, பொதிக்குரிய நபரை அழைத்திருந்தனர். பொதிகளுக்குரிய நபர், சுங்கப் பொதி ஆய்வுக்குச் சமுகம்தராததால், குறித்த பொதிகள் சுங்கத்துறையால் தடுத்துவைக்கப்பட்டு விட்டன.   

இந்நிலையில், இலங்கை செல்லவிருந்த எயார் லங்கா விமானம், 8.15 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது.

குறித்த பொதிகள், திட்டமிட்டபடி கொழும்பு சென்ற விமானத்தில் செல்லாததை அறிந்துகொண்ட குறித்த நபர், விமானநிலையத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்று, வேறோர் இடத்திலிருந்து தொலைபேசி மூலம், விமானநிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குறித்த பொதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக அறிவித்திருந்தார்.

சுங்கத்திடமிருந்த குறித்த பொதிகளைச் சுவீகரிக்க, பொலிஸார் முயன்றபோது, முதலில் சுங்க அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். குறித்த நபர் அல்லது அவரின் சகாக்கள், மீண்டும் இருமுறை தொலைபேசி அழைப்பின் மூலம் எச்சரித்திருந்தனர்.   

மூன்றாவது அழைப்பின் பின்னர்தான், சுங்க அதிகாரி, குறித்த பயணப் பொதியை பொலிஸாரிடம் கையளிக்கச் சம்மதித்திருந்தார். ஆனால், இதற்கிடையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலான நேரம் கழிந்திருந்தது. ஏறத்தாழ 10.50 அளவில், குறித்த பொதிகளிலிருந்த குண்டுகள் வெடித்து, 30 பேரைப் பலிகொண்டன.  

இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்குச் சென்னை விமானநிலையம் முற்றாக மூடப்பட்டதுடன், மறுநாள், மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர், சென்னை விரைந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க, சிவில் விமானத்துறை இயக்குநர் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவொன்றையும் அமைத்தார்.   

மறுபுறத்தில், தமிழ்நாடு அரசாங்கம், தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநர் மோகன்தாஸ் தலைமையில், ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.   

பின்னணியில் யார்?

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்த தமிழக முதலமைச்சர் 
எம்.ஜி. இராமச்சந்திரன், இதைக் “கொடியவர்களின் செயல்” என்றார்.   

இந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் வெங்கடராமன், “நாம் இந்த விடயத்தில் திறந்த மனதோடு உள்ளோம்” என்றார். அதாவது, எந்த முன்முடிவுகளோடும் தமிழக அரசு இதை அணுகவில்லை என்பதே, தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இந்தச் சம்பவம் தொடர்பிலான தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.  

 நடந்த சம்பவத்தின் சிக்கல் தன்மையை உணர்ந்துகொண்ட, தமிழகத்திலிருந்த சில இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், குறித்த குண்டுவெடிப்பானது, இஸ்‌ரேல் உளவுத்துறையின் சதித்திட்டமாகும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்கள்.   

ஆனால், விசாரணைகளின் போது, குறித்த தாக்குதலின் பின்னணியில், ‘தமிழீழ இராணுவம்’ என்ற சிறியதொரு தமிழ் இளைஞர் ஆயுதக்குழு இருந்தமை தெரியவந்தது. இந்தக் குழுவின் தலைவராக ‘பனாகொட மகேஸ்வரன்’ என்ற நபர் அறியப்பட்டிருந்தார். பனாகொட இராணுவ முகாமில், தடுப்புக் காவலிலிருந்து தப்பித்தவர்களுள் இந்த நபரும் ஒருவர். விசாரணைகளைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட கதிரேசன் உள்ளிட்ட, 10 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.   

குறித்த சம்பவம் பற்றி, பின்னாளில் குறிப்பிட்ட அன்றைய தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநராக இருந்த மோகன்தாஸ், “சதித்திட்டம் தீட்டியவர்களின் இலக்கானது, சென்னை விமானநிலையம் அல்ல; மாறாகக் கொழும்பு விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்வதுதான் அவர்களது எண்ணமாக இருந்தது. 

கொழும்பு செல்லும் எயார் லங்கா விமானத்தில், குண்டுப் பொதிகளை அனுப்பி வைக்க முயன்றதும், குண்டின் நேரத்தை, அந்த விமானம் கொழும்பை அடையும் நேரத்துக்கு ஏற்றாற் போல தயார் செய்ததும் இதை உறுதி செய்தன” என்றார்.   

இந்தியாவின் சங்கடம்

தன்னுடைய நாட்டினது, முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடித்தமை ஒரு பிரச்சினையென்றால், அதன் விசாரணைகள், குறித்த குண்டுவெடிப்பானது, இலங்கையைக் குறியாக வைத்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றால் முன்னெடுக்கப்பட்டது என்ற உண்மையை, வெளிக் கொண்டு வருவதானது, இந்தியாவுக்கு இன்னொரு பெரும் பிரச்சினையை உருவாக்கியது.   

தாம் தொடர்ந்து மறுத்து வருகின்ற ஒரு விடயமானது, தம்முடைய விசாரணைகளினூடாக வெளிவருவது என்பது இந்தியாவுக்கு மிக சங்கடமானதொன்றாகும்.   

இதனால், விசாரணை அதிகாரியாக இருந்த மோகன்தாஸ், உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்த மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், “இலங்கைத் தமிழ் ஆயுதக்குழுவினரைப் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாம் விமானநிலையக் குண்டுவெடிப்பு வழக்கை, இதேவழியில் தொடர்ந்து விசாரித்தால், அது இலங்கை அரசாங்கத்துக்குத்தான் சாதகமாக அமையும். இந்தியாவில், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் பயிற்சி முகாம்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டை, டெல்லி தொடர்ந்து உத்தியோகபூர்வமாக மறுத்து வருகிற நிலையில், அதை நிரூபிப்பதாக அமைந்துவிடும். மேலும், இது தமிழகத்திலுள்ள தீவிரவாதத் தமிழ் அமைப்புகள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தமிழகத்தையும் சேர்த்த பெரிய தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது” என்று தெரிவித்ததாக மோகன்தாஸ் கூறியிருந்தார். அத்துடன் தனது நூலொன்றிலும் இதைப் பதிவுசெய்துள்ளார்.   

தனக்கேற்பட்டிருந்த சங்கடமான சூழலை, இந்தியா முழுமையாக உணர்ந்தே இருந்தது என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சம்பவம், ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமது நிலைப்பாட்டைச் சத்தமாக வலியுறுத்தும் சந்தர்ப்பத்தைத் தந்திருந்தது.   

இந்தியாவின் அழுத்தத்தை, இதன் மூலம் ஓரளவுக்குச் சமன் செய்ய முடியும் என்று, ஜே.ஆர் கணக்கிட்டிருக்கக் கூடும். சர்வகட்சி மாநாடு, ஜே.ஆரின் இரண்டு அவைகொண்ட சட்டவாக்க சபை பற்றிய முன்மொழிவை ஆராய்ந்துகொண்டிருந்தது.   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இதை நிராகரித்திருந்த நிலையில், தன்னுடைய முன்மொழிவைப் பெரும்பாலும் தன்னுடைய கட்சியினரே ஆராயும் ஒரு காலவிரய நடவடிக்கையாகவே, இது கடந்துகொண்டிருந்தது.   

இதேவேளை, இலங்கையில் செயற்பட்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் பல்வேறு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருந்தன.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவுக்கு-ஏற்பட்ட-சங்கடம்/91-215497

Link to comment
Share on other sites

ஈழப் போரும் இந்தியாவும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 143)

கெரில்லாப் போர்  

இலங்கையின் போராட்ட வரலாற்றை அணுகுபவர்கள், ‘ஈழப்போரின்’ மொத்தக் காலகட்டமாக 1983 முதல் 2009 வரையான 26 வருடங்களை வரையறுப்பது வழமை.  

 மேலும், இந்த ஈழப்போரை காலத்தின் அடிப்படையில் நான்காக வகுப்பர். அதில், முதலாவது ஈழப்போர் என்று 1983 முதல் 1987 வரையான காலப்பகுதி வரையறுக்கப்படுகிறது. அதாவது, 1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்தான இந்திய அமைதிப்படை வருகையின் காலம் வரை, முதலாவது ஈழப்போராகக் கருதப்படுகிறது.  

 1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், முதலாவது ஈழப்போர் ஆரம்பம் என்று வகுக்கப்படினும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லா முறைத் தாக்ககுதல்களில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. 

கெரில்லா போர் முறை என்பது, பாரம்பரிய போர் உத்திகளுக்கு மாறான, பாரம்பரிய இராணுவமல்லாத போராளிகளால் முன்னெடுக்கப்படும் போர் முறையாகும்.   

புரட்சிகள், கிளர்ச்சிகளின் போது, ஆயுதம் ஏந்திய சிவிலியன்கள் அல்லது போராளிகள், தம்மைவிடப் பலமான எதிரியைப் பாரம்பரிய யுத்த நியதிகளுக்கு முரணான வகையில், எதிர்கொள்ளும் போர் உத்தியே கெரில்லாப் போர் எனலாம்.  

 கியூபப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளில், கெரில்லாப் போர் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, சே குவேரா, தாம் கையாண்ட கெரில்லாப் போர் முறை, கெரில்லாப் போர் உத்திகள் என்பன பற்றி ‘கெரில்லாப் போர்முறை’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்.  

 வியட்நாம் போரின் போது, பாரம்பரிய போர்முறையில் தேர்ந்த அமெரிக்க இராணுவத்தை, வியட்நாமின் கம்யூனிஸப் படைகள், கெரில்லாப் போர் முறையில் எதிர்கொண்டு, வெற்றி கண்டிருந்தன.   

இந்தக் கெரில்லாப் போர்முறையையே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் கையாண்டு கொண்டிருந்தன. அதிலும், தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் பாணியிலான கெரில்லாத் தாக்குதல்கள், 1984இல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) உட்பட, இன்னபல பிற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தன.   

இவை தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் கெரில்லாப் போர் முறையையே பின்பற்றியதாக, ஈழப் போரை ஆராய்ந்த போரியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் 26 வருடங்களில், பல குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஒரு குழுவினுடையதாக மாறியிருந்தது. முதலாவது ஈழப்போர், கெரில்லாப் போராக ஆரம்பித்திருந்தாலும், அடுத்தடுத்த போர்கள், பெருமளவுக்குப் பாரம்பரிய போர் முறைக்கு மாறியிருந்தன.   

ஆனால் இந்த மாற்றம், 1984இலேயே ஆரம்பித்துவிட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். நிலப்பரப்பை ஆளுகைக்கு உட்படுத்தும் ஓர் உள்நாட்டுப் போரின் குறிக்கோளை, நீடித்து நிலைக்கத்தக்க வகையில் அடையப்பெற வேண்டுமானால், அது தாக்குதல் நடத்திவிட்டு மறைந்துவிடும் கெரில்லாப் போர் உத்தியால் சாத்தியமில்லை.   

ஆனால், ஒரு பாரம்பரிய இராணுவத்துக்கு எதிராக, பாரம்பரிய முப்படைகளுக்கு எதிராகப் போராளிகளாக மாறிய சிவிலியன்கள், உடனடியாகப் பாரம்பரிய போரொன்றை முன்னெடுப்பது என்பது சாத்தியமே இல்லை.   

முதலில் ஆட்சேர்ப்பு, ஆயுதம், போர்ப்பயிற்சி என்பன அதற்கு அடிப்படை. இவற்றை ஆரம்பத்தில் வழங்கி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வளர்த்தது இந்தியாதான் என்று, ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், அன்றைய இந்திய அரசியலில் பங்கு வகித்தவர்கள் எனப் பலரும் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

 சர்வ நிச்சயமாக, இலங்கைக்குள் தனித்த தமிழீழம் ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை. அது இந்தியாவுக்கு, மேலும் ஆபத்தாகவே அமையும். அப்படியானால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஊக்கமளித்ததில் இந்தியாவின் நோக்கம் என்ன?  

உள்நாட்டுச் சீர்குலைப்பு  

1947 முதல் 1991 வரை, இடம்பெற்ற பனிப்போரில் கையாளப்பட்ட உத்திகளிலொன்று உள்நாட்டுச் சீர்குலைப்பு (internal destabilisation) எனலாம். 

பனிப்போரின் பின்னர், இதன் பயன்பாடு இன்னும் அதிகமானது. உலக அளவில், வல்லரசுகளின் போட்டியால் சீர்குலைக்கப்பட்ட நாடுகளுக்கு, ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய உதாரணமாகும்.   

இலங்கையில் ஆட்சியிலுள்ள அரசாங்கமானது, இந்தியச் சார்புடையதாக இருக்க வேண்டியது, இந்தியாவுக்கு  மிக முக்கியமானதாகும். இதற்கு இலங்கையின் பூகோள அமைவிடமே பிரதான காரணமாகும். இந்திய நலன்களுக்கு மாறுபாடான, வல்லரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வருவது, இந்திய நலன்களுக்கு ஆபத்தானது.  

 ஆகவே, சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா உந்துசக்தியளித்த முஜாஹிதீன்கள் போல, அமெரிக்கச் சார்புடையதாக மாறியிருந்த இலங்கையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா உந்துசக்தியளித்தது.  

இதற்கு அர்த்தம், இலங்கையில் இனப்பிரச்சினையை உருவாக்கியது இந்தியா என்பதல்ல; மாறாக, இலங்கையில் உருவாகியிருந்த இனப்பிரச்சினையையும் அதற்கெதிராகத் தமிழ் இளைஞர்களிடம் பெருவாரியாக எழுந்திருந்த கோபத்தையும் எதிர்ப்பையும் இந்தியா, தனது நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய உத்தியை நாம் அவதானிக்கலாம்.  

 ஆனால், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, இந்த உத்தியில் ஏற்பட்டிருந்த பெருஞ்சிக்கல், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியலாகும். 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்திய மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல், ஒரு புறம் இயங்கிக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில், தமிழ் நாட்டு அரசியலின் நிகழ்ச்சி நிரலிலும், ஈழத்தமிழர் போராட்டம் முக்கிய இடம்பெறத் தொடங்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் மு. கருணாநிதி ஆவார்.  

தமிழ்நாட்டு அரசியல்  

மீண்டும், தமிழ் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.  

தமிழர்களின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதில், ஈழத்தமிழர்கள் பிரச்சினை முக்கியமானதொன்று என்று கருதிய கருணாநிதி, ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்து, எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கத்துக்கும், மத்திய அரசாங்கத்துக்கும்  அழுத்தம் கொடுத்ததோடு, தன்னுடைய அரசியல் நிலையையும் மேம்படுத்திக் கொண்டார்.   

இது, எம்.ஜி.ஆரையும் தமிழீழ போராட்டத்தின்பால் கவனம் கொள்ளச் செய்தது எனலாம். 
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் பலரும், தமிழ்நாட்டிலேயே இருந்த நிலையில், 1984 ஏப்ரல் மாதத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்திக்க விரும்பிய தமிழக முதலமைச்சர் 

எம்.ஜி.ஆர், அந்தச் சந்திப்புக்கான அழைப்பை, உளவுப்பிரிவினூடாகக் குறித்த இயக்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.   

இதேநிலையில், குறித்த தலைவர்களை எம்.ஜி.ஆர் சந்திக்கவிருந்த தினத்துக்கு ஒருநாள் முன்பாக, அதே தலைமைகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான அழைப்பை, கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். டெலோவின் சிறி சபாரட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பத்மநாபா மற்றும் ஈரோஸின் பாலகுமாரன் ஆகியோர், கருணாநிதியைச் சந்தித்திருந்தனர்.  

 புளொட்டின் உமா மகேஸ்வரனும், விடுதலைப் புலிகளின் பிரபாகரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரபாகரனின் நிலைப்பாடு பற்றி, ‘விடுதலை’ என்ற தனது நூலில் அன்ரன் பாலசிங்கம், ‘கருணாநிதி- எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு இடையிலான அரசியல் மோதலில், தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள, பிரபாகரன் விரும்பவில்லை’. அத்துடன், எம்.ஜி.ஆரின் கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருக்கவே, முடிவுசெய்யப்பட்டிருந்தது என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  

 கருணாநிதி உடனான சந்திப்பு, ஊடகங்களில் வௌிவந்திருந்த நிலையில், தான் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை எம்.ஜி.ஆர் உடனடியாக இரத்துச் செய்திருந்தார். தன்னுடைய திட்டத்தை மறுசீரமைத்த எம்.ஜி.ஆர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்திக்க முடிவெடுத்தார்.  அதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரைச் சந்திப்பது, எம்.ஜி.ஆரின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

எம்.ஜி.ஆரின் சந்திப்புக்கான அழைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து நீங்கள் செயற்பட வேண்டுமானால், தமிழக முதல்வரைப் பகைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்ற எச்சரிக்கையுடனேயே வழங்கப்பட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

முதற்கட்டச் சந்திப்பில், பிரபாகரன் கலந்துகொள்ளவில்லை என்றும், ஆனால் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டார்கள் என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  

 இந்தச் சந்திப்பின்போது, அன்ரன் பாலசிங்கத்தால் பயற்சி மற்றும் ஆயுதக் கொள்வனவுக்காக இரண்டு கோடி நிதியுதவி எம்.ஜி.ஆரிடம் கோரப்பட்டது. மறுவார்த்தையின்றி, “நாளை இரவு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி,எம்.ஜி.ஆர் அந்த நிதியுதவியைச் செய்ததாக அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.   

எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் போராட்டத்துக்கு நிதியுதவி செய்ததாக, 2009இன் பின்னர் கைதான கே.பத்மநாதன் என்கிற ‘கே.பி’ கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இங்கு எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகள் அமைப்போடு கொண்டிருந்த அபிமானம் பற்றி, எம்.ஜி.ஆர் குறித்துத் தன்னுடைய நூலில் கருத்துரைக்கும் அத்தர் சந்த், ‘புலிகள் மீதான எம்.ஜி.ஆரின் அபிமானம், தத்துவார்த்தமானது என்பதைவிட, அரசியல் தந்திரோபாயம் சார்ந்தது’ என்கிறார்.  

அவர் மேலும், தமிழக அரசியல் கட்சிகள், ஈழப்போராட்டத்தைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இருதரப்பினதும் செல்லக் குழந்தையாக டெலோ இயக்கமே இருந்தது என்றும், டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகளும் பெரும் வைரிகளாக இருந்தன என்றும், 

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆற்றல் வளத்தை, எம்.ஜி.ஆர் அறிந்துகொண்டிருந்தார் என்றும், மேலும், விடுதலைப் புலிகள், கருணாநிதியோடு நெருங்கிய உறவைக்  கொண்டிருக்காமையும் எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளைப் பெருமளவுக்கு ஆதரிக்கக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.   

இலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்தியாவுக்கு  இருந்த பெரும் சிக்கலும் இதுதான். மத்திய அரசாங்கத்தின் செல்லக் குழந்தையாக ஓர் ஆயுதக் குழு இருந்தது; தமிழகத்தின் ஆளும் கட்சியின் ஆதரவு, இன்னொரு குழுவுக்கு இருந்தது; தமிழகத்தின் எதிர்க்கட்சியின் ஆதரவு இன்னொரு குழுவுக்கு இருந்தது. ஆயினும் சிலர், எம்.ஜி.ஆரின் ஊடாக, மத்திய அரசாங்கமே காய்நகர்த்தியது என்றும் கருத்துரைப்பர்.  

 எது எவ்வாறாயினும், இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில், இந்தியா வெறும் பங்குதாரி மட்டுமல்ல; ஒருவகையில் அதன் சூத்திரதாரியும் கூட என்பதுதான் வரலாற்று உண்மை.   

புதிய தலைமை  

ஆயுதப் போர் என்ற கிரகணம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியலை விழுங்கியிருந்தது. உள்ளூரிலும், வௌிநாட்டிலும், இந்தியாவிலும் அவர்கள் முக்கியத்துவம் இழந்து போயிருந்தார்கள்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால், அரசபடைகள், பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரித்த அளவில் முன்னெடுக்கப்படத் தொடங்கின. அரச படைகளின் பதில்தாக்குதல் நடவடிக்கைகளும் கடுமையாகத் தொடங்கின.  

 தாக்குதல் நடவடிக்கைகள், போர் வரலாறு என்பவற்றை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்பதை, வரலாற்று ரீதியில் அடையாளம் காண்பதே இதன் இலக்கு. அரச படைகளின் பதில்தாக்குதல்கள், அப்பாவித் தமிழ் மக்களைக் கடுமையாகப் பாதித்தன என்பது, மறுக்க முடியாத ஒன்று. அது தமிழ் மக்களை, மேலும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பால், சாய்வடையச் செய்தது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், “எங்கட பெடியள்” என்பது, “எங்கள் தலைவர்கள்” ஆகத் தொடங்கிய காலகட்டம் இது.   

மறுபுறத்தில், ஜனாதிபதி ஜே.ஆர் அமைத்த சர்வகட்சி மாநாடு, தீர்வுக்கான தேடலை இழுத்தடித்துக் கொண்டேயிருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழப்-போரும்-இந்தியாவும்/91-215861

Link to comment
Share on other sites

இலங்கைத் தேசிய அரசும் தமிழ்த் தேசமும்
 
 

  
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 144)

தோற்றுப்போன தேசிய அரசுப் புனைவு  

சுதந்திரத்தின் பின்னர், மேற்கத்தேய தேசிய அரசுகளின் அடிப்படையிலான ஓர் இலங்கைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் முனைப்புகளுக்கு, பெரும் சவாலாக அமைந்தது ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம்.  

 1956இன் பின்னர், ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம், இலங்கைத் தேசியத்தை முழுமையாகத் தனது மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரத் தொடங்கி, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், அது அரசமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.  
 ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற ஒற்றைத் தேசியப் புனைவுக்கு,  1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், உத்தியோகபூர்வமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. 

19ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்ற, நவீன சிங்கள-பௌத்த தேசியவாதப் புனைவின் சிற்பியாக அநகாரிக தர்மபாலவை பலரும் அடையாளப்படுத்தும் அதேவேளை, அவரின் சமகால எதிரிணையாக ஆறுமுக நாவலரை அடையாளப்படுத்துவர். இந்த அடையளாப்படுத்தல், மிக மேலோட்டமான பார்வையின் விளைவானதாகும்.   

அநகாரிக தர்மபாலவால் முன்னெடுக்கப்பட்டது, ஒரு மாபெரும் அரசியல் முன்னெடுப்பு. அவர் வெறுமனே, கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான பௌத்தர்களின் எழுச்சியாக, தனது முன்னெடுப்புகளைச் செய்யவில்லை.   மாறாக, சிங்கள-பௌத்த தேசியவாதம் என்ற பலம்மிக்க அரசியல் புனைவைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தார். 

சிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, வரலாற்றுக் காலத்திலிருந்து தொடர்ந்து வந்ததொரு பலம்மிக்க அடையாளம் என்ற கற்பிதத்தை, வரலாற்றாய்வாளர்கள் பலரும் மறுக்கிறார்கள். சமகாலத்தில் மேலோங்கியிருக்கும், சிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, 19ஆம் நூற்றாண்டின் பின்னர், ஏற்பட்டதொன்று என்பது அவர்களது கருத்தாகும். 

அதற்கு முன்னர், ஒருமித்த சிங்கள-பௌத்த தேசிய கட்டமைப்போ, உணர்வோ இலங்கை என்ற நிலப்பரப்பில் இருக்கவில்லை என்பது அவர்களது வாதமாகும்.   

மறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவின் எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான சைவத்தமிழ் மறுமலர்ச்சி சார்ந்ததாக இருப்பினும் அது, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்கு ஒப்பான சைவத்தமிழ் தேசியவாதத்தையோ, தமிழ்த் தேசியவாதத்தையோ முன்னெடுக்கும் அரசியல் முகத்தைக் கொண்டிருக்கவில்லை.  

 மேலும், ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள் பெரும்பாலும், யாழ்ப்பாண, சைவ, தமிழ், வேளாளர்களை (அல்லது வௌ்ளாளர்களை) மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.   

ஆகவே, தமிழ்த் தேசிய உணர்வு, அல்லது சமகாலத்திலுள்ளது போன்றதொரு தனித்த தமிழ்த் தேசம் என்ற அரசியல் கட்டமைப்பு பற்றி 1956 வரையிலும், அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்படும் வரையிலும், தமிழ்த் தலைவர்கள் பேசவில்லை என்றும், அவர்கள் தமிழ் மக்களின் அல்லது தமிழ்ச் சமூகத்தின் சிறுபான்மையினர் உரிமைகள் பற்றித்தான் பேசினார்களேயன்றி, தமிழ்த் தேசம் என்ற கற்பிதத்தை முன்வைக்கவில்லை என்ற விமர்சனத்தை சிலர் முன்வைப்பார்கள்.   

ஜீ.ஜீ.பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள், ‘சிறுபான்மையினர் உரிமை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையே பயன்படுத்தியிருந்தாலும், அது பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையமைவை, நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியமானதாகும்.   

இலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் சூழலமைவில்தான் அவை முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கை ஒற்றைத் தேசிய அரசாக உருவாக வேண்டுமானால், சிறுபான்மைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால், உருவாகும் இலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசானது, பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கத்துக்குள்  கொண்டுவரப்படுவதுடன், இலங்கைத் தேசியம் என்பது, மேலாதிக்க சமூகத்தின் தேசியத்துக்குள் ஐக்கியமாகி விடக்கூடும் என்ற அச்சத்தின் வௌிப்பாடாகவே அது அமைந்திருந்தது.   

சுருங்கக் கூறின், சுதந்திரத்துக்கு முன்னதாக, டீ.எஸ்.சேனாநாயக்க அறைகூவல் விடுத்திருந்த இலங்கை என்ற ஒற்றைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துழைக்க, தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருந்தன.   

ஆனால், அந்த ஒற்றைத் தேச முயற்சி, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத் தேசியத்தால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, அந்த ஒற்றைத் தேச எடுகோளுக்குள் இருந்து வௌிவர வேண்டிய நிர்ப்பந்தம், தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டது.   

ஆகவே, 1956க்கு முன்னர், தமிழ்த் தலைமைகள், தமிழ்த் தேசம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளாமை, தமிழ் மக்கள் தாம், தனித்த ஒரு தேசம் என்ற உணர்வற்றிருந்தமை காரணமல்ல,  
 மாறாக, டீ.எஸ்.சேனாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அமைப்பதாகச் சொன்ன, மேற்கத்தேய பாணியிலான தேசிய அரசை ஸ்தாபிக்க, தமிழ்த் தலைமைகள் ஒத்துழைக்கத் தயாராக இருந்தமையே ஆகும்.   

ஆனால், இலங்கைத் தேசம் என்ற புனைவு, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத் தேசியத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, மேற்கத்தேய பாணியிலான இலங்கை தேசிய அரசொன்று ஸ்தாபிக்கப்படுவது சாத்தியமில்லை என்று உணர்ந்த பிறகு, தமிழ்த் தலைமைகள் அதிலிருந்து வௌிவந்து, தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்வைத்தன. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய வாதம் கூட, தௌிவான வரையறைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் விமர்சிப்பதுண்டு. 

தமிழ் மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் என வரையறைகள் மாறிக் கொண்டிருந்ததை நாம் அவதானிக்கலாம்.   

மொழி என்ற ஒற்றையம்சம் பலரை ஒன்றிணைத்தாலும், ஒரு தேசம் என்று கருதப்படுவதற்கு அது போதாது. இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்ந்த, சிங்கள-பௌத்தர்களை ஒரு தேசிய அடையாளத்துக்குள் ஒன்றிணைக்கும் அரசியல் நகர்வு, 19ஆம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டிருந்தது.   

தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசிய உணர்வு இருந்திருந்தாலும், அது அரசியல் ரீதியில் ஒழுங்குபடுத்தப்படவில்லை.  

 1956இல் அரசியல் ரீதியில் உருப்பெறத் தொடங்கிய தமிழ்த் தேசியவாதம், 1972இன் பின்னர் பலம்பெறத்தொடங்கி, 1983இன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ்த் தேசத்துக்குத் தத்துவார்த்த ரீதியில் செய்த பங்களிப்பைவிட, அதன் நடைமுறை யதார்த்தத்துக்குச் செய்த பங்களிப்பு அதிகம்.   

வன்முறை நிறைந்த 1984 ஓகஸ்ட்  

1984 ஓகஸ்ட் மாதம், வன்முறைத் தாக்குதல்கள் நிறைந்த மாதமாக அமைந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வடக்கில் அரச படைகள் மற்றும் பொலிஸாரின் மீது தாக்குதல் நடத்துவதும், அரச படைகள் பதில் தாக்குதல் நடத்துவதுமென இரத்தக் கறை படிந்த காலப்பகுதி இதுவாகும்.   

கெரில்லா போர் உத்தியை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கையாண்டு தாக்குதல்களை நடத்தியபோது, பாரம்பரிய போர்ப் பயிற்சி பெற்ற அரச படைகளுக்கு, அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. இது பற்றி இலங்கை மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.   

ஆனால், ஆயுததாரிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகப் பொதுமக்களைப் பழிவாங்குதல் என்பது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றல்ல என்பதைவிட, காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மையானதாகும்.  

 1984 ஓகஸ்ட் எட்டாம் திகதி, குறித்ததொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களால், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பொலிஸார், குறித்த பொலிஸ் நிலையத்தைக் கைவிட்டுச் செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து வௌியேறும்போது, குறித்த நேரத்தில் வெடிக்கத்தக்கதான வெடிகுண்டை வைத்துவிட்டு வௌியேறியதாகவும், சிறிது நேரத்தில், அந்தப் பொலிஸ் நிலையம் வெடித்துச் சிதறியதில், ஏறத்தாழ 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.  

 பொதுமக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் தாமே குண்டுவைத்துவிட்டுப் போவது என்ன நியாயம்? ஓர் ஆயுதக் குழுவைப் போல அல்லது அரசாங்கம் குறிப்பிடுவது போல, பயங்கரவாதிகளைப் போல அரசாங்கமும் அரசபடைகளும் நடந்துகொண்டால், இரண்டுக்கும்  வித்தியாசம் என்ன? 

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும், அரசபடைகள் பதில் தாக்குதல் நடத்தவதும், பொதுமக்களைத் தாக்குவதுமென, 1984 ஓகஸ்ட் மாதமே, வடக்கைப் பொறுத்தவரை மிகப் பயங்கரமான மாதமாக அமைந்ததென, பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள்.   

இந்த வன்முறைத் தீயைப் பார்த்துக் கொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? வழக்கம் போல அவர்கள் இந்தியாவிடம், அதாவது இந்திராவிடம் முறையிட்டார்கள்.  

 இந்தியாவிடமிருந்து வழக்கம் போலவே, தாக்குதல் தொடர்பான கண்டனம் வந்தது. இந்திரா காந்தி, சர்வகட்சி மாநாடு மூலம் தீர்வு காண அழுத்தம் வழங்கினார். இந்தியாவின் விருப்பின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தது.   

ஜே.ஆரும் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டை நடத்திக் கொண்டேயிருந்தார். ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும், எதுவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி சர்வகட்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது.  

தொடர்ந்த சர்வகட்சி மாநாடு  

1984 ஓகஸ்ட் 17ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அரசாங்க முறைமை தொடர்பில் ஆராய்ந்த குழு, தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  

 அதில் அதிகாரப் பகிர்வுக் கூறு தொடர்பில், எந்தத் தௌிவான முன்மொழிவும் குறிப்பிடப்படவில்லை. இது அதிகாரப் பகிர்வுக் கூறு எதுவாகவும் இருக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையைப் பிரதிபலித்தது.   

இந்தச் சர்வகட்சி மாநாட்டின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்ததே அதிகாரப் பகிர்வுக் கூறுதான். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர், அதிகாரப் பகிர்வுக் கூறாக பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்று கோரினர்.   
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும், மகாசங்கத்தினரதும் நிலைப்பாடு, மாவட்ட சபைகள் என்பதிலிருந்தது. பிரேமதாஸ தலைமையிலான குழு, இந்த முடிவைச் சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்விடம் தீர்மானிக்க விட்டிருந்தது.   

பிரேமதாஸ குழுவின் அறிக்கையை, ஏறத்தாழ நான்கு நாட்கள் சர்வகட்சி மாநாடு ஆராய்ந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொறுமையிழந்திருந்தார் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.  

 1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வுக் கூறாகப் பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை என்று உணர்த்தியதுடன், மாவட்ட சபைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை நிராகரித்தார்.  

 தமிழர் தாயகத்தில், தமிழ்ப் பொதுமக்கள் மீது நடைபெற்று வந்த வன்முறைத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், தமிழ் மக்களின் தாயகத்தின் ஒற்றுமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை அடைவதன் மூலம் மட்டும்தான், தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டதுடன், தமிழ் மக்கள் தமது தாயகத்தில் உள்ளகப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, காணித் தீர்வு உள்ளிட்ட அரசியல் அதிகாரங்களைப் பிரயோகிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  

 குறித்த அதிகாரப் பகிர்வுச் சட்டகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வகட்சி மாநாட்டுக்குச்  சமர்ப்பித்த முன்மொழிவுகளில் (அதாவது, சௌமியமூர்த்தி தொண்டமானால் தத்தெடுக்கப்பட்டு, தனது முன்மொழிவுகளாக முன்வைக்கப்பட்ட ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளில்) இருக்கிறது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், இந்த முன்மொழிவுகளிலுள்ள விடயங்களை, உள்ளடக்காத எந்தத் தீர்வும், ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கைத்-தேசிய-அரசும்-தமிழ்த்-தேசமும்/91-216217

Link to comment
Share on other sites

பயனின்றித் தொடர்ந்த சர்வகட்சி மாநாடு: அதிகரித்த வன்முறைத் தாக்குதல்கள்
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 145)

1984 ஓகஸ்ட் மாதத்தில், வடக்கில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. வடக்கில் பொலிஸார், அரச படைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருந்தன.   

இதற்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் ஏற்பட்டிருந்த போட்டியும் முக்கிய காரணமென, ரீ.சபாரட்ணம் சுட்டிக் காட்டுகிறார். மற்ற அமைப்புகளைவிடத் தாம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில், போட்டி மனப்பாங்கோடு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டனவென அவர் பதிவுசெய்கிறார்.  

 யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் தாக்குதல்களும், அவற்றுக்கெதிரான அரசபடைகளின் கோரமான பதில்த் தாக்குதல்களும், தொடர் தாக்குதல்களும் மாறிமாறி நிகழ்ந்த வண்ணமிருந்தன. தமிழ் மக்களின் உயிர்களும், உடைமைகளும் இந்தக் கோர தாக்குதல்களில் பலியாகிக் கொண்டிருந்தன.   

அரசபடைகளின் தாக்குதல்கள், வெறுமனே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இலக்குவைப்பதாக அன்றி, பொது மக்களையும் பொதுமக்களின் உடமைகளையும் பாதிப்பதாக அமைந்திருந்தன.   

1984 ஓகஸ்ட் 11ஆம் திகதி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், அரச படைகள் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்திய இராணுவமானது, மன்னார் நகரெங்கும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது.   

வீடுகள், கடைகள் என நகரெங்கும் இராணுவம் குண்டுமழை பொழிந்தது. மன்னாரில் இராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விவரித்திருந்த மன்னார் ஆயர், “இராணுவ ஆக்கிரமிப்புப் படைகள், தன் வழியில் சிக்கும் அனைத்தையும் அழித்துச் செல்வது போலுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.   

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பதிலளித்த லலித் அத்துலத்முதலி, தன்னுடைய நாவன்மையால் பதிலளித்துச் சமாளித்துக் கொண்டிருந்தார்.  

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விவாதங்களில் வளர்த்த திறமை, தற்போது அவருக்குக் கைகொடுத்தது எனப் பல விமர்சகர்களும் குறிப்பிடுகிறார்கள்.   

மன்னார்த் தாக்குதல் பற்றி பதிலுரைத்த அத்துலத்முதலி, “அது தொடர்பில், மூன்று இராணுவ வீரர்கள் இராணுவ முகாமுக்குள் வரையறுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பில், நடந்தவை பற்றிய எந்தத் தகவல்களும் இல்லை. 

அமிர்தலிங்கத்தின் அதிருப்தி  

அதிகரித்த வன்முறைகள் தொடர்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் முன்னிருந்தது, இரண்டே இரண்டு வழிகள்தான்.   

ஒன்று, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்தாடும் வன்முறை பற்றிய கடும் கண்டனங்களைப் பதிவு செய்வது.

இரண்டாவது, இந்தியாவிடம் முறையிடுவது. இரண்டையும் அவர்கள் செய்தார்கள்.   
சர்வகட்சி மாநாட்டில், அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைக் கடுமையாகப் பதிவு செய்திருந்தார். “தமிழ்பேசும் மக்கள், ஆயுதப்படைகளால் துன்புறுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் ஒன்றும் நடக்காதது போல, இங்கே அமர்ந்து கொண்டிருக்க முடியாது” என்று அவர் பேசியிருந்தார்.   

மறுபுறத்தில், “தமிழர்கள் இந்தத் தீவில் முற்றாக அழித்தொழிக்கப்பட முன்பு, தயவு செய்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றுங்கள்” என்று இந்தியாவிடம் இறைஞ்சியிருந்தார்.   

இந்தியாவிடமிருந்து, இந்திராவின் கண்டனக் குரல் வந்தது. ஜே.ஆரின் நடவடிக்கைகள், இந்திராவின் பொறுமையைச் சோதித்திருந்ததாகவும், சினத்தை அதிகரித்திருந்ததாகவும் பலரும் பதிவு செய்கிறார்கள்.  

ஆயினும், உடனடித் தலையீடு என்பதன் சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. ஆனால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடக்கூடும் என்ற அச்சம், ஜே.ஆருக்கு எப்போதும் இருந்தது. இதற்குக் காரணம், இந்திரா காந்தி என்ற பலமான தலைமை.  

 1971 பங்களாதேஷ் விடுதலைப் போர், 1975 முதல் 1977 வரையிலான ‘எமர்ஜென்ஸி’ (அவசர நிலை), 1984 ஜூனில் இடம்பெற்ற சீக்கியப் போராளிகளுக்கெதிரான ‘ஒபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என, அதிரடி நடவடிக்கைகளை அச்சமின்றி, ஆணித்தரமாக முன்னெடுத்த ஒரு தலைவர், இந்திரா காந்தி.   

ஆகவே, சர்வதேச அரசியல் தந்திரோபாயங்களும், பூகோள அரசியல் தந்திரோபாயங்களும், இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையும் எதைச் சுட்டிக் காட்டினாலும், அவற்றின்படி இலங்கையில், இந்திரா காந்தி இராணுவ ரீதியில் தலையிடமாட்டார் என்று, எவராலும் அடித்துச் சொல்லிவிட முடியாத சூழ்நிலைதான் இருந்தது.   

இந்த நிச்சயமற்றநிலைதான், ஜே.ஆர் ஏனைய சர்வதேச நாடுகளிடம், இந்தியாவின் தலையீடு ஏற்பட்டால், அதை எதிர்த்துத் தம்மை ஆதரிப்பதற்கான ஆதரவுவேட்டையைச் செய்யத் தூண்டியது எனலாம்.  

 வெறுமனே, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் அழுத்தம் மட்டும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு இளைஞர்களிடம், இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடைபெற்று வந்த வன்முறைகளுக்கெதிரான பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்தது.   

1984 ஓகஸ்ட் 13ஆம் திகதி, சென்னையில் தமிழக மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றும் வரும் வன்முறைகளைக் கண்டித்தும், உடனடியாக, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டியும் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தார்கள்.  

 சென்னையில் அமைந்திருந்த இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயம் நோக்கி, பேரணியாகச் சென்ற மாணவர்களைத் தமிழகப் பொலிஸார் தடியடி நடத்திக் கலைத்ததுடன், தொடர்ந்த மாணவர் போராட்டங்களைத் தடுக்கும் முகமாக, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஒருவார விடுமுறையும் அறிவித்திருந்தது.   

பயனற்றுச் சென்றுகொண்டிருந்த சர்வகட்சி மாநாடு  

இந்தப் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான், ஜே.ஆர் தலைமையிலான சர்வகட்சி மாநாடு, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தது. 

பிராந்திய சபைகளைவிடக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வுக்குத் தாம் தயாரில்லை என்பதை, 1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் மிகத் தௌிவாகப் பதிவு செய்திருந்ததோடு, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைப்பது தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், வைத்திருந்த முன்மொழிவையும் அவர் நிராகரித்திருந்தார்.   

அதை நிராகரிக்க, அவர் இரண்டு காரணங்களை முன்வைத்திருந்தார். முதலாவதாக, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவையொன்றை ஸ்தாபிப்பதற்கான குறித்த முன்மொழிவானது, தமிழ்த் தரப்பு நிராகரித்திருந்த மாவட்ட சபைகளை, அதிகாரப் பகிர்வுக் கூறாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.  

 இரண்டாவதாக, குறித்த முன்மொழிவானது, மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதற்குச் சாதகமாக அமையுமேயன்றி, அதிகாரப் பகிர்வுக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.   

ஜே.ஆரைப் பொறுத்தவரையில், சர்வகட்சி மாநாடு என்பது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறை என்பதைவிட, இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தைச் சாந்திப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவே இருந்தது.   

1984 செப்டெம்பர் மூன்றாம் திகதி வரையாக அமர்வுகளில், இரண்டாவது அவை பற்றிய முன்மொழிவைச் சர்வ கட்சி மாநாடு பரிசீலிக்கும் என, ஜே.ஆர் அறிவித்திருந்தார். 

பிரதான எதிர்க்கட்சியான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் தரப்பும் முற்றாக நிராகரித்திருந்த ஒரு முன்மொழிவை, ஆராய்வதால் என்ன பயன்? ஆனால், ஜே.ஆர் அதைச் செய்தார். அவர், பயன்விரும்பி இக்காரியத்தை முன்னெடுக்கவில்லை என்பதை மீளுணர்த்துவதாக இது அமைந்தது.

ஒரு புறத்தில் அதிகரித்து வந்த வன்முறை, மறுபுறத்தில் இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு, அதுவும் மிகக் குறைந்த பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு வழங்கும் பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழ்த் தலைமைகள் கைவிட்டு, இறங்கி வரத் தயாராகத் இருந்த வாய்ப்பான சூழல்.  

 ஆனால், ஜே.ஆர் இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இது பற்றித் தனது நூலில் குறிப்பிடும் அன்ரன் பாலசிங்கம், இது சிங்களக் கடும்போக்குவாத அரசியல் தலைமை என்றும், ஜே.ஆரின் ‘மாக்கியாவலிய’ தன்மையான போக்கு என்றும் விமர்சிக்கிறார்.  

செப்டெம்பர் மூன்றாம் திகதி நடந்த அமர்வுகளைத் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகள், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.  

பருத்தித்துறை படுகொலைகள்  

1984 செப்டெம்பர் மாதமும் தமிழர் பிரதேசமெங்கும் கடும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. செப்டெம்பர் மாதத்தின் முதல்பகுதியில், திக்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு பொலிஸார் பலியாகினர்.   

இதற்குப் பதிலடியாக, பருத்தித்துறை நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பொலிஸார், ஏறத்தாழ 16 பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன், நகரிலுள்ள கட்டடங்களையும் தீக்கிரையாக்கினர்.  

 மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அதன் கட்டடங்களை எரியூட்டியதில், ஏறத்தாழ ஒரு சகாப்தகால வரலாறுகொண்ட ஹாட்லி கல்லூரியின் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.   

1981இல் யாழ். நுலக அழிப்பைத் தொடர்ந்து, தமிழர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பெரிய நூலக அழிப்பு இது. பருத்தித்துறைத் தாக்குதல் தொடர்பில், அமிர்தலிங்கம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.   

இந்தச் சம்பவம் தொடர்பில், பதிலுரைத்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, இந்தச் சம்பவத்தில் ஏறத்தாழ ஆறு முதல் 10 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டதாகவும், சில கட்டடங்கள் தீக்கிரையானதாகவும் குறிப்பிட்டதுடன், அரசாங்கம் பொலிஸ் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், குறித்த நிகழ்வுக்குக் காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.   

அமிர்தலிங்கத்தின் கண்டனத்தை உதாசீனம் செய்த அத்துலத்முதலி, “யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்துக்குத் தெரியாது” என்று, யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கம் இல்லாததைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டவர், அமிர்தலிங்கம் குழுவினரை, தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.   

பஸ் படுகொலைகள்  

செப்டெம்பர் 11ஆம் திகதி, இன்னொரு மிகக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றது. முல்லைத்தீவுப் பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் கண்ணிவெடித்தாக்குதலில் சிக்கி, ஒன்பது இராணுவ வீரர்கள் பலியாகியிருந்தனர்.   

இதேநாள், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த, பொதுமக்கள் பயணம் செய்த பஸ் ஒன்று, வவுனியா அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது. குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பெண்களும், குழந்தைகளும் காட்டுக்குள் துரத்திவிடப்பட்டதுடன், அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஆண்கள் மீது, ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.  

 குறித்த தாக்குதல் அரச படையால் நடத்தப்பட்டது எனக் குறித்த தாக்குதலிலிருந்து தப்பி வந்தவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 

குறித்த தாக்குதல் இராணுவத்தால் நடத்தப்பட்டது என்பதை மறுத்த அரசாங்கம், ஆனால், அது முன்னாள் இராணுவத்தால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்ததோடு, முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.  

 தொடர்ந்து நடந்த தாக்குதல்களில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துப்பார்த்தால், ஏறத்தாழ அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் பின்னர், அது தொடர்பில் எந்த வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை என்பதையும் அவதானிக்கலாம்.   

இந்த வன்முறைச் சம்பவங்கள், அமிர்தலிங்கத்தைக் கடும் அதிருப்தியில் தள்ளியிருந்தது. ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தந்தியடித்த அமிர்தலிங்கம், அரசாங்கத்தின் படைகள் அப்பாவி பஸ் பயணிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது, அந்த அரசாங்கத்தோடு, நாம் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று, அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயனின்றித்-தொடர்ந்த-சர்வகட்சி-மாநாடு-அதிகரித்த-வன்முறைத்-தாக்குதல்கள்/91-216639

Link to comment
Share on other sites

சர்வகட்சி மாநாடு: இணக்கமும் பிணக்கும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 146)

யுத்தம் தொடர்பாகப் பல்வேறுபட்ட தத்துவநிலை விளக்கங்களுண்டு. ‘நியாயயுத்தம்’ என்ற தத்துவ விளக்கமானது, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது.  

 நியாயயுத்தத்தை நாம், மகாபாரத காலத்திலும் காணலாம். மிகச்சுருக்கமாக, இதன் சாரத்தைக் கூறுவதென்றால், யுத்தம் என்பது தார்மீக ரீதியில் தவறானதெனினும், அனைவருக்குமான பெருநன்மை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக யுத்தம் செய்வதில் தவறில்லை.   

இந்தத் தத்துவம் இன்றுவரை, உள்ளூரிலும் உலக அரங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை  அவதானிக்கலாம். ஒவ்வொரு யுத்தமும், ஏதோவொரு வகையில், அனைவருக்கும் நன்மை தரத்தக்க உயர்தார்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, நியாயப்படுத்தப்படுவதைக் காணலாம்.  

 மனித உரிமைகள், அடக்குமுறையைத் தகர்த்தல், சர்வாதிகார எதிர்ப்பு, ஜனநாயகம், விடுதலை, ஆபத்தான ஆயுதங்களை இல்லாதொழித்தல் என அனைவருக்கும் பொதுவான, உயர்தார்மீக சித்தாந்தங்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. இத்தகைய உயர்தார்மீக சித்தாந்தங்கள், அனைவருக்கும் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்த அதேவேளை, உலகளவில் நடந்த பல்வேறு யுத்தங்களையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டமையையும்  காணலாம்.  

 வள்ளுவன் மொழியின் உதவியுடன் சொல்வதானால், ‘புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்’ யுத்தம் தவறில்லை. மிக எளிய மொழியில் சொல்வதானால், “நான்கு பேருக்கு நல்லது என்றால், எதுவுமே தப்பில்லை” என்ற பாணியிலான அணுகுமுறை இது. 

இந்த அணுகுமுறையிலுள்ள சிக்கல் என்னவென்றால், அந்த யுத்தத்துக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகள், அந்த யுத்தத்தில் கொல்லப்படுவதை, உயர்தார்மீகத்தை அடையப் பெறுவதற்கான துணையீடாகப் பார்த்தலாகும்.  

 அதாவது, ஒரு பெரு நன்மையை அடைவதற்காக, சில ‘தியாகங்கள்’ தவிர்க்கமுடியாதவை என்ற பாணியிலான பார்வையாகும். நியாயயுத்தத்தின் இந்தப் பார்வையை, தார்மீக முழுமைக் கொள்கையாளர்கள் மறுக்கிறார்கள்.   

தவறான ஒரு விடயம், ஒருபோதும் சரியாகிவிட முடியாது என்பது அவர்களின் வாதமாகும். யுத்தத்தில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பது, ஒரு முழுமையான உயர்தார்மீகமாகும். அதை மீறுதல், எந்த வகையிலும் நியாயப்படுத்தத்தக்கதல்ல என்பது அவர்களுடைய வாதம்.  

 இரண்டாம் உலக யுத்தத்தில், இந்த உலகம் கண்ட மனிதப் பேரவலத்தின் பின்னர், மறுபடியும் உலகம் அத்தகைய பேரவலம் ஒன்றைக் கண்டுவிடக் கூடாது என்ற உயர்தார்மீக அடிப்படைகளின்படி, ஜெனீவா ஒப்பந்தங்கள் முதல், மனித உரிமைகள் சாசனங்களை வரை உருவாக்கப்பட்டன.  

 பொதுமக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றி, அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் வினவப்பட்டபோது, அவர் இராணுவத்தினுடைய இந்தப் பதில்தாக்குதல்களை மறுக்கவில்லை; மாறாக, தன்னுடைய பகட்டாரவார நாவன்மையால், “முதலில் தன்னுடைய சகாக்கள் கொல்லப்பட்டதைக் கண்ட சில வீரர்கள், தமது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.   

அப்படியானால், கட்டுப்பாடிழந்த குறித்த வீரர்கள் மீது, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாமே என்று வினவியபோது, தார்மீக ரீதியில் இதை அணுகுவதற்குப் பதிலாக, சட்ட நுட்ப ரீதியில் இதை அணுகிய அத்துலத்முதலி, “தனிப்பட்ட வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.  

 மேலும், அரச படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள், குறித்த தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடத்தப்படும் தகவலை, அரசாங்கத்துக்கோ அரச படைகளுக்கோ அறிவிக்கவில்லை என பொதுமக்கள் மீதும் அர்த்தமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.   

ஜெனீவா ஒப்பந்தத்துக்கான முதலாவது குறிப்பு (Protocol I), சிவிலியன்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்படுகிற தாக்குதல்களைத் தடைசெய்கிறது. அதாவது, யுத்தத்தின் போது, வேண்டுமென்றே பொதுமக்கள் மீதோ, பொதுமக்களுள்ள ஸ்தலங்கள் மீதோ தாக்குதல் நடத்துதல் யுத்தக்குற்றமாகும்.  

 மூலமுதலான ஜெனீவா ஒப்பந்தங்களில், இலங்கை கைச்சாத்திட்டிருந்தாலும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கான முதலாவது குறிப்பில் இலங்கை கைச்சாத்திடவில்லை. ஆகவே, நுட்ப ரீதியில், முதலாவது குறிப்பின் ஆளுகைக்குள் இலங்கை உட்படாது.  

 இந்தியா, ஈரான், அமெரிக்கா, இஸ்‌ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் இதில் கையெழுத்திடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நுட்ப ஏதுநிலைகள் எதுவாக இருப்பினும், மனிதப்பேரவலத்தைத் தடுக்கும் மனிதாபிமானச் சட்டங்களின் உயர்தார்மீகம் என்பது அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதே.

1983இன் பின்னர், இலங்கையில் அரச படைகளால் நடாத்தப்பட்ட பல தாக்குதல்களும் இந்தச் சர்வதேச நியமங்களை மீறியதாகவே அமைந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.  

 1984இல் செப்டெம்பரில் மன்னார், பருத்தித்துறை, வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் இதையே சுட்டி நிற்கின்றன. பொதுமக்கள் மீது நேரடியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை.   

ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற போர்வைக்குள், இந்த மனிதப் பேரவலத்தை நியாயப்படுத்த, இலங்கை அரசாங்கம் முயன்றுகொண்டிருந்தது. 

இந்தக் காலப்பகுதியில், யாழின் நிலைவரத்தைப் பதிவு செய்த இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ‘நான், யாழில் சென்ற இடத்திலெல்லாம் மக்கள், அரச படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் பற்றிக் கூறியிருந்தார்கள்’ என்றும், ‘குறிப்பாக, 18-35 வயதான தமிழ் இளைஞர்கள், அரச படைகளால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அரச படைகள், தமிழ் மக்களின் வீடுகள், தமிழர் பிரதேசங்களில் அமைந்துள்ள சந்தைகள், தேவாலயங்கள் என்பன மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.  எந்த இடத்துக்குச் சென்றாலும், அங்கு அரச படைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தையாவது காணக்கூடியதாக இருந்தது’ என்று பதிவுசெய்திருந்தார்.   

ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொண்ட ஓர் ஆயுதமற்ற மக்கள் கூட்டமானது, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையைக் கொண்ட அரச படைகளால், குடாநாட்டுக்குள் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்ததைப் போல, யாழ். மக்கள் உணர்ந்திருந்ததாக யாழ்ப்பாணத்தின் அன்றைய நிலைவரத்தின் சாராம்சத்தை அவர் பதிவுசெய்திருந்தார்.  

ஒன்பதாவது மாதத்தில் சர்வகட்சி மாநாடு  

வன்முறைகள் வெடித்துக் கொண்டிருந்த சூழலில், மீண்டும் சர்வகட்சி மாநாடு 1984 செப்டெம்பர் 21ஆம் திகதி கூடியபோது, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, கடந்த எட்டுமாத காலத்தில், சர்வகட்சி மாநாடு அடைந்திருந்த முன்னேற்றங்கள் பற்றிய எட்டுப் பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.   

அந்த அறிக்கையில், அடித்தட்டு ஜனநாயகக் கட்டமைப்புகளுக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குதல், நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழித்தல், அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவையொன்றை ஸ்தாபித்தல் ஆகிய நான்கு விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டிருந்தது.  

 மேலும் ஜே.ஆர், “இந்த இரண்டாவது அவையானது, சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டதுடன், “அதிகாரப் பகிர்வானது, மாவட்ட சபைகளின் அடிப்படையில் அமையும். ஒரு மாகாணத்துக்கு உள்ளிட்ட மாவட்ட சபைகள் இணைந்து செயற்படக்கூடியதாக அமையும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.   

ஜே.ஆரின் முன்மொழிவுகள், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் திருப்தி தருவதாக இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு இறங்கிவரத் தயாராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கேட்டதெல்லாம், ஜனாதிபதி ஜே.ஆர், இந்தியாவில் பார்த்தசாரதியிடமும், இந்திரா காந்தியிடமும் இணங்கிய ‘அனெக்ஷர் -சி’ முன்மொழிவுகளை நிறைவேற்றுவதை மட்டும்தான்.   

ஆனால், ஜே.ஆரோ இன்று, அதற்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவையொன்றைப் பற்றியும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, திட்டவட்டமாக மறுத்திருந்த மாவட்ட சபைகள் அளவிலான அதிகாரப்பகிர்வு பற்றியும் இணக்கப்பாடு ஏற்பட்டதென அறிவித்துக் கொண்டிருந்தார்.   

இந்த முன்மொழிவுகளில், ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்த ஒரே விடயம், நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழித்தல் என்ற இணக்கப்பாடு மட்டும்தான். ஆனால், அதற்குள் கூட, பிரித்தாளும் தந்திரம் இருக்கிறது என்று சில விமர்சகர்கள் கருத்துரைப்பர்.   

அதாவது, தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கையை, வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத் தலைமைகளான அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் இணைந்தே முன்வைத்திருந்தனர். 

தொண்டமானைப் பொறுத்தவரையில், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுத்தல் மிக முக்கியமானதொரு விடயமாகும்.   

அதை வழங்குவதன் மூலம், மலையகத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம், வடக்கு-கிழக்கு தமிழர் அரசியலிலிருந்து மலையக அரசியலை வேறுபடுத்தும், ஜே.ஆரின் பிரித்தாளும் தந்திரம் இது எனச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.  

 ஆனால், இந்தப் பிரச்சினையை இதே கோணத்தில் மட்டும் நோக்குதல் பொருத்தமானதாக இருக்காது. நாடற்றவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, அதன் முதல் மாநாட்டிலிருந்து முக்கியதொரு கோரிக்கையாக முன்வைத்து வந்திருக்கிறது. அதன்படி, தன்னால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை, தன்னால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை ஜே.ஆர் தூயமனத்துடன் தீர்க்கவும், நிறைவேற்றவும் முயன்றார் என்று மறுதரப்பினர் கருத்துப் பதிகிறார்கள்.   

பிராந்திய சபைகளை வழங்குவதைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எடுகோள்நிலை வாதத்தைதவிர, பிராந்திய சபைகள் அமைப்பதை மறுப்பதற்குப் பலமான நியாயமொன்றை, ஜே.ஆர் அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லை.   

இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரும், தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான லலித் அத்துலத்முதலி வழங்கிய செவ்வியொன்றில், “மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை மட்டுமே, சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.   அதற்கு மேலதிகமான தீர்வொன்றை வழங்கக்கூடிய நிலையில், அரசாங்கம் இல்லை. அதற்கு மேலதிகமான தீர்வை அரசாங்கம் வழங்குமானால், இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, சிங்கள சமூகத்தின் தீவிரப் போக்குடைய சக்திகள் அதிகாரத்துக்கு வருவதுடன், தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்பு இன்னும் கடினமாகும்” என்று கூறியிருந்தார்.  

ஆயினும் ஜே.ஆரின் இந்த முன்மொழிகளை, அமிர்தலிங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை. ஒருவேளை, அப்போது தமிழ் அரசியலில் ஏற்பட்டிருந்த சூழ்நிலை, சர்வகட்சி மாநாட்டிலிருந்து எதையேனும் பெற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தை, அமிர்தலிங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.   

செப்டெம்பர் 30ஆம் திகதி நடந்த சர்வகட்சி மாநாட்டில், மாவட்ட சபைகள் பற்றிய ஜே.ஆரின் முன்மொழிவிலுள்ள குறையை அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டினார்.   

ஒரு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து செயற்பட முடியுமெனினும், குறித்த முன்மொழிவுகளின்படி, தொழில்நுட்ப ரீதியாக அதிகாரப் பகிர்வானது, தனித்தனி மாவட்ட சபைகளுக்கே வழங்கப்பட்டிருக்குமேயன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்த தன்மை அந்த அமைப்புக்கு இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், தமிழ் மக்களின் நிலைப்பாடானது, அதிகாரப்பகிர்வானது வடக்கு-கிழக்கு என்ற தனித்த ஓர் அலகுக்கு வழங்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.   

செப்டெம்பர் 30ஆம் திகதி அமர்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டை நவம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். சர்வகட்சி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-மாநாடு-இணக்கமும்-பிணக்கும்/91-217046

Link to comment
Share on other sites

ஜே.ஆர் எனும் நவீன துட்டகைமுனு
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 147)

வரலாற்றுத் திருமறையும் மனிதக் கடவுள்களும் 

அமெரிக்காவில் அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பற்றிய செய்திகள், பெரும் பரபரப்பை உலகமெங்கும் ஏற்படுத்துகின்றன.  

 குறிப்பாக, அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பல அப்பாவி உயிர்கள் பலியாகின, பலியாகிக் கொண்டிருக்கின்றன. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும், எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெற்றிருப்பதாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  

 இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் வேர், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் அரசமைப்புக்கான இரண்டாவது திருத்தமானது, பொதுமக்களது ஆயுதம் வைத்திருக்கும் உரிமை, மீறப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது.  

அதாவது, அமெரிக்க அரசமைப்பின்படி ஆயுதம் வைத்திருத்தல் என்பது, அமெரிக்கக் குடிமகனின் உரிமையாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசமைப்பு உரிமையால், பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் போது, காலம் மற்றும் சூழல் மாற்றத்துக்கேற்ப, அதை மாற்றியமைப்பதுதான் பொருத்தமானது என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.  

 அமெரிக்க அரசமைப்பின் இரண்டாவது திருத்தம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள், முடிவில்லாத கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு நாம் குறிப்பிட்டு அவதானிக்கக் கூடிய ஒரு விடயம் இருக்கிறது.   

அதுதான், அமெரிக்கர்களிடையே பரவலாகக் காணப்படும் ‘அரசமைப்பு வழிபாடு’. அமெரிக்காவைப் பொறுத்தவரை அரசமைப்பு என்பது, வெறும் அடிப்படைச் சட்டம் மட்டுமல்ல,   அது அமெரிக்க வரலாற்றின் தோற்றுவாய்; ஒரு வல்லரசின் வரலாற்று மூலம். 

அமெரிக்கா என்பது, ஒப்பீட்டளவில் மிக அண்மையில் உருவாக்கப்பட்ட ஓர் அரசு. அமெரிக்க தேச அடையாளம் என்பது, பிரித்தானிய சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து, 13 பிராந்தியங்கள் ஒன்றிணைந்து, ஐக்கிய அமெரிக்க அரசை ஸ்தாபிப்பதுடன் ஆரம்பிக்கிறது. 

அந்தத் தேச அடையாளத்தின் மூல ஆவணங்களாக, அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் மற்றும் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் என்பன கருதப்படுகின்றன.  

 அமெரிக்கர்களின் தோற்றம், வரலாறு, இலட்சியப் புனைவு எல்லாவற்றின் ஊற்றும், அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் அமெரிக்க அரசமைப்புச் சட்டமுமாகும். ஆகவேதான், அவற்றின் மீதான அதீத மோக ஆர்வம், அமெரிக்கர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது.   

இது ஆரோக்கியமானது இல்லை என்று, பலரும் விமர்சித்தாலும், அமெரிக்க அரசியல் யதார்த்தத்தில், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

“அமெரிக்காவை மீண்டும் உன்னதம் ஆக்குவோம்” என்ற டொனல்ட் ட்ரம்பின் அறைகூவலுக்குப் பின்னாலிருக்கும் ‘உன்னதம்’ என்பதில், அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனமும் அமெரிக்க அரசமைப்பும், அதுகூறும் வரலாற்றுப் புனைவின் வழியான கற்பனையும்தான் இருக்கிறது.   

அந்த வரலாற்றுக்கு ‘புனித’த் தன்மை வழங்கப்படுகிறது. இது காலத்தின் தேவைக்கும், அவசியத்துக்கும்  ஏற்ற மாற்றங்களை நிராகரிக்கச் செய்கிறது. மாற்றங்கள், புனிதத்தைக் கெடுப்பதாக, தாம் நம்பிக்கை கொண்ட பழைமையின் உன்னதத்தைச் சிதைப்பதாக சித்திரிக்கப்படுகிறது.   

இதைப் பற்றிக் கவலையுடன் கருத்துரைக்கும் லெக்ஸிங்டன், “வரலாறு திருமறையாகவும் மனிதர்கள் கடவுளாகவும் ஆக்கப்படும்போது, உண்மை பலிக்கடா ஆக்கப்படுகிறது” என்கிறார்.   

மஹாவம்சமும் ஜே.ஆரும்  

அமெரிக்காவுக்குச் சுதந்திரப் பிரகடனமும் அரசமைப்பும் அவர்களது தேச அடையாளத்தின் தோற்றுவாயாகவும் அடிப்படையாகவும் அமைக்கப்பட்டதைப் போல, இலங்கைக்குக் குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால உள்ளிட்டவர்களின் ‘சிங்கள-பௌத்த’ எழுச்சிக்குப் பின்னர், ‘மஹாவம்சம்’ கருதப்படத் தொடங்கியது.   

 மஹாவம்சம் என்பது, அது கூறும் வரலாற்றுக் காலத்துக்குப் பின்னர், எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவாகும். ஒரு வரலாற்றுப் புனைவையே, வரலாற்றின் தோற்றுவாயாகவும் வரலாறாகவும் மாற்றியதுதான் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்.   

ஏனென்றால், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையே மஹாவம்சம்தான். மஹாவம்சம் கூறும் வரலாற்றுப் புனைவானது, சிங்கள-பௌத்த தேசியத்துக்கு, ஒரு ‘பயன்தரு கடந்த காலமாக’ அமைகிறது.

மஹாவம்சத்தின் முக்கியத்துவம் மிக்க அரசியல் சாரத்தை, வில்ஹெல்ம் கைகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, ‘மஹாவம்சம்: இலங்கையின் பெரும் வரலாற்றுக்கூறு’ என்ற நூலின், 25ஆம் அத்தியாயத்தின் 75ஆம் சரத்து பின்வருமாறு கூறுகிறது:  

image_6146ba076d.jpg

 ‘முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை வீழ்த்தியதும் துட்டகைமுனு, இலங்கையை ஒரே இறைமையாக ஆட்சிசெய்தான்’. 

தமிழ் ஆட்சியாளர்களை வீழ்த்தி, இலங்கையை ‘ஒற்றையாட்சி’ அரசாக ஆட்சி செய்தான் என்று மஹாவம்சம் கூறும் துட்டகைமுனு தான், மஹாவம்சத்தின் கதாநாயகன். 

உண்மையில் இலங்கைத் தீவு என்ற முழுமையையும் துட்டகைமுனு, ‘ஒரே இறைமையாக’ ஆண்டானா என்ற கேள்வி இங்கு அவசியப்படவில்லை. ஏனென்றால், ஒரு வரலாற்றுப் புனைவு, வரலாறாக்கப்பட்டது. அதன் மீது, திருமறையைப் போன்ற புனிதமிக்க நம்பிக்கை விதைக்கப்பட்டது. அதுகூறும், ‘கதாநாயகர்கள்’ புனிதர்கள் ஆக்கப்பட்டார்கள். இங்கே உண்மைக்கு அவசியமில்லாமல் போனது.   

இந்த மஹாவம்சம் மீது, அளவற்றதும் அதீத மோகமும் ஆர்வமும் ஜே.ஆருக்கு இருந்தது. இதற்கு அவர் எழுதி அரசாங்க அச்சக திணைக்களத்தின் வௌியீடாக வந்த இலங்கையின் வரலாற்றை கூறுவதாகச் சொல்லும் ‘தங்க இழைகள்’ (Golden Threads) என்ற நூலே சான்றாகும். ‘எங்கள் மண்ணின் கதையின் வரிவடிவம் இது...’ என்று தனது நூலை ஆரம்பிக்கும் ஜே.ஆர், இலங்கையின் வரலாற்றை, மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்.   

விஜயனின் வருகை முதல், பிரித்தானியர் முழு இலங்கைத் தீவையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவரும் 1815 வரை, கடந்த காலமாகவும் 1815 முதல் 1977 வரை தற்காலமாகவும், 1977 அதாவது 5/6 பெரும்பான்மையோடு ஜே.ஆரின் அரசாங்கம் பதவிக்கு வந்த ஆண்டு முதல், இலங்கையின் எதிர்காலமாகவும் வகைப்படுத்தி, இலங்கையின் வரலாற்றைத் தன்னுடைய பார்வையில் பதிவுசெய்கிறார்.   
ஆனால், அது இலங்கையின் வரலாறா என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாகிறது. 
ஜே.ஆர் ஜெயவர்தன எழுதிய வரலாறு, மஹாவம்சத்தின் வழிதொடர்ந்த வரலாறு. அது, ‘சிங்கள-பௌத்தர்’களின் வரலாறு. அதை இலங்கையின் வரலாறாகச் சொல்வதானது, இலங்கையின் மற்றைய தேசங்கள், மற்றைய மக்களுக்கு இடமில்லை; அல்லது அவர்கள் இரண்டாம் தரமானவர்கள் என்று குறிப்பிடுவதற்கு ஒப்பானது.   

விஜயன் முதல், துட்டகைமுனு, பராக்கிரமபாகு என இலங்கையை ஆண்டவர்களைப் பட்டியலிட்ட ஜே.ஆர் அந்தப் பட்டியலின் இறுதியில் தன்னை இணைத்திருந்தார். 

இது பற்றிய தனது ஆய்வு நூலில், சங்கரன் கிருஷ்ணா, ‘ஜே.ஆர் தன்னை, இலங்கையை ஆண்ட இராஜவம்சத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார். மஹாவம்சம் கூறும் மன்னர்களைப் பிரதிபலிப்பதாகவே,தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.  பௌத்த ‘தர்மிஷ்ட’ ஆட்சியை வழங்குவேன் என்ற கொள்கை, பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுத்தல், அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகியவற்றை நகரங்களை இணைத்து, ‘பௌத்த தங்க முக்கோணம்’ பிராந்தியத்தைப் பலகோடிகள் செலவில் ஸ்தாபித்தமை ஆகியவற்றை, ஜே.ஆர் முன்னெடுத்திருந்தார்’ என்று கருத்துரைத்துள்ளார்.  

 தமிழர்களை ஜே.ஆர் அந்நியத் தன்மையுடனேயே விவரிக்கிறார். எல்லாளனையும் சோழ, பாண்டிய, பல்லவப் படையெடுப்புகளை ‘விரும்பத்தகாத இடையீடாகவும் அவற்றினூடான, இந்து மற்றும் மஹாயான பௌத்தம் ஆகியவற்றின் பெரும் செல்வாக்கையும் மீறி, தேரவாதப் பௌத்தம் நீடித்திருந்தமையைப் பெருமையாகவும் ஜே.ஆர் விளிப்பதைச் சுட்டிக்காட்டும் சங்கரன் கிருஷ்ணா, ஜே.ஆரின் இந்த அணுகுமுறையானது, ஒன்றுபட்ட சிங்கள தேசத்தைச் சிதைக்கும் இடையீடாகத் தமிழர்களை வர்ணிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.   

கலிங்க மாகனை ‘புலி’ என்று வர்ணிக்கும் ஜே.ஆர், மாகனது படையெடுப்பின் பின்னர், இராச்சியமானது மலேரியா தாக்கிய பயனற்ற நிலமாகிப்போனது என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டும் சங்கரன் கிருஷ்ணா, அந்தப் ‘புலி’ என்ற வர்ணிப்புக்குள் ஒளிந்துள்ள இனவாத விஷத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.   
மஹாவம்ச மனநிலை  

ஜே.ஆரின் ‘வரலாற்று’ நூலைப் படிப்பவர்களுக்குக் கிடைக்கும் விம்பமானது, இலங்கைத் தேசம் என்பது, சிங்கள தேசம் (சிங்கள-பௌத்த தேசம்) என்பதே என்ற புனைவாகும்; ஏனையவர்களுக்கு அதில் இடமில்லை. குறிப்பாகத் தமிழர்கள் விரும்பத்தகாத அந்நிய இடையீடாகவே பார்க்கப்பட்டார்கள்.  

 இதுபற்றிக் கருத்துரைக்கும் ஒரு விமர்சகர், “ஜே.ஆரின் தேசம் (ஜாதிய) பற்றிய வர்ணிப்பு, நாஸிகளின் ‘ஃவோக்ஸ்’ (மக்கள்) என்ற வர்ணிப்புக்குச் சமமானது. எப்படி நாஸிகள் ‘ஆரிய’ ஜேர்மனியரை மட்டுமே ‘ஃவோக்ஸ்’ என்று கருதினார்களோ, அதேபாணியில் ‘ஆரிய’ சிங்கள-பௌத்தர்களை மட்டுமே ‘ஜாதிய’ ஆக, ஜே.ஆர் கருதினார்’ என்கிறார்.  

 ஜே.ஆரின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு, அவரின் மனநிலையை, தத்துவார்த்த பார்வையை உணர்ந்துகொள்ளுதல் அவசியமாகிறது. பிராந்திய ரீதியிலான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வொன்றை மிக எளிதாக ஜே.ஆர் வழங்கியிருக்கலாம்.   

அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதனூடாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஜே.ஆர் எட்டியிருக்கலாம். ஆனால், அதைச் செய்வதிலிருந்து ஜே.ஆரைத் தடுத்தது எது என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, அவரின் தத்துவார்த்த அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுதல் உதவிசெய்யலாம்.  

 ஜே.ஆர் தன்னை, ‘மஹாவம்ச’ வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்த்தார். கடந்தகால மஹாவம்சத்தின் கதாநாயகன் துட்டகைமுனு என்றால், எதிர்கால மஹாவம்சத்தின் கதாநாயகன் தானாக இருக்க வேண்டும் என்ற அவா, ஜே.ஆரிடம் இருந்ததை அவரது, ‘தங்க இழைகள்’ நூல் தௌிவாகச் சுட்டிக் காட்டுகிறது.  

 இங்கு துட்டகைமுனுவின் பெருமை என்பது, 32 தமிழ் மன்னர்களைத் தோற்கடித்து, இலங்கையை ‘ஒரு இறைமையாக’ ஆட்சி செய்ததில் தான் இருக்கிறது என்று மஹாவம்சம் சொல்வதால், சிங்கள-பௌத்தர்களின் பெருமைமிகு தலைவனாவதற்கு, தமிழ் மன்னர்களைத் தோற்கடித்தல், இலங்கையை ஓர் இறைமையின் கீழ் ஆட்சிசெய்தல் என்ற இரண்டு விடயங்களைத் திருப்தி செய்ய வேண்டிய தேவை, ஜே.ஆருக்கு இருந்திருக்கும்.   

பேச்சுவார்த்தை நடத்துவதாலோ, தமிழ் மக்களுக்குப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதாலோ இனப்பிரச்சினையை ஜே.ஆர் தீர்த்திருக்கலாம், இலங்கையை ஒற்றையாட்சிக்குள் ஆண்டிருக்கலாம்.  

 ஆனால், அடுத்த துட்டகைமுனு ஆக முடியுமா என்பது நிச்சயமில்லை. ஆகவே, அடுத்த துட்டகைமுனு ஆகும் ஜே.ஆரின் இரகசிய கனவுக்குப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு உதவப் போவதில்லை என்பது, சர்வகட்சி மாநாடு மூலம் அரசியல் தீர்வொன்றை எட்டுவதில், ஜே.ஆர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததன் பின்னாலுள்ள மனநிலையை விளக்குவதாக அமைகிறது.   

மஹாவம்சம் என்பதை, இலங்கையின் முழுமையான வரலாறாகக் கொள்வது மிகச் சிக்கலானது எனப் பல்வேறு ஆய்வாளர்களும் மிகத் தௌிவாகக் கருத்துரைத்திருக்கிறார்கள்.  

 தற்காலத்தின் ‘சிங்கள-பௌத்த’ தேச அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் பின்னரான கட்டமைப்பு என்பதை லெஸ்லி குணவர்த்தன, கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் மிகத்தௌிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 

‘சிங்கள’ அடையாளம் என்பது, காலத்துக்குக் காலம் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.  

 எது எவ்வாறு இருப்பினும், ஒரு புனைவுக்குச் சாதகமானதொரு பார்வையை வழங்குவதனூடாக, அதைத் தமது கட்டமைப்பை நியாயப்படுத்த, ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும் என்ற ஷபீரோவின் கருத்துக்கேற்றாற் போல, மஹாவம்ச புனைவானது, சிங்கள தேசக் கட்டமைப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த மஹாவம்ச மனநிலைதான், இனப்பிரச்சினைக்கான அடிப்படையாகவும் அதைத் தீர்ப்பதற்கான முட்டுக்கட்டையாகவும் மாறியிருக்கிறது.

(அடுத்த திங்கட்ழைமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆர்-எனும்-நவீன-துட்டகைமுனு/91-217386

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
ஒரு பௌத்த துறவியின் தூது
 
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 148)

“இலங்கைத் தீவானது புத்தருக்குச் சொந்தமானது. அது மூன்று இரத்தினங்களால் நிறைந்த திறைசேரியைப் போன்றது. அதனால் ஆதிகால இயக்கர்கள், இந்தத் தீவில் வாழ்ந்தது நிரந்தரமற்றதாக அமைந்ததைப் போலவே, தவறான நம்பிக்கையைக் கொண்டவர்கள், இந்தத் தீவில் வாழ்வதும் நிரந்தரமில்லை. பௌத்தரல்லாத ஒருவர், தனது வலிமையைக் கொண்டு இலங்கைத் தீவைச் சில காலம் ஆண்டாலும், புத்தரின் குறிப்பிட்டதொரு சக்தியால், அத்தகையவரது தொடராட்சி நிலைக்காது. ஆகவே, இலங்கை என்பது, பௌத்த மன்னர்களுக்கே பொருத்தமுடையது; ஆகவே, அவர்களது ஆட்சியே நிரந்தரமாக நீடிக்கும்” என்று ‘பூஜாவலிய’ என்ற 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள நூல் குறிப்பிடுகிறது.   
‘சிங்கள-பௌத்த’ மேலாதிக்க மனப்பான்மையை மட்டுமல்ல, இலங்கை ஒரு பெளத்த தேசம் என்ற புனைவின் அடிப்படையையும் இது சுட்டி நிற்கிறது. இதைத் தன்னுடைய, ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில், ‘அரச மதமாகப் பௌத்தம்’ என்ற அத்தியாயத்தில், வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார்.   

அதுமட்டுமல்ல, “இலங்கை பெளத்தத்துக்கு உரியது; ஆகவே சோழர்கள், சேரர்கள் போன்ற பௌத்தரல்லாதவர்கள், இலங்கையின் அரியாசனத்துக்கு உரித்துடையவர்கள் அல்லர்” என்ற நிஸ்ஸங்க மல்லன் காலத்துக் கல்வெட்டுக் கூறுவதையும் போதிசத்துவர்கள் மட்டுமே, இலங்கையின் அரசனாக முடியும் என்ற நான்காம் மஹிந்த காலத்து, ஜேத்தவனாராமக் கல்வெட்டுக் குறிப்பிடுவதையும் வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார்.   

இந்த முயற்சிகள் மூலம், முழு இலங்கையும் ஒரு தனித்த, பௌத்த இறைமைக்கு உட்பட்டது என்றொரு வரலாற்றுப் புனைவைக் கட்டியெழுப்ப முனைகிறார்கள்.  

 இன்று, இலங்கை அரசியலில் கடந்துவிட முடியாத அரசியல் புனைவாக, இது ஆழவேர்விட்ட பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது.   

இதனால்தான் இன்றும், ‘துட்டகைமுனு’ இலங்கை அரசியல் தலைமைகளின் ஆதர்ஷ புருஷராகக் கொள்ளப்படுகிறார்.  

சர்வகட்சி மாநாடு ஒத்திவைப்பும் அமிர்தலிங்கத்தின் அதிருப்தியும்  

சர்வகட்சி மாநாடு மூலம், இந்தியாவில் தான் ஒத்துக்கொண்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு ஏற்ப, அரசியல் தீர்வொன்றை வழங்குவதால், தான் ஆதர்ஷிக்கும் ‘துட்டகைமுனு’ ஆக முடியாது என்பதுதான், ஜே.ஆர்  ஜெயவர்தனவின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.   

ஆனால், இந்தியாவை வௌிப்படையாகவும் முழுமையாகவும் எதிர்த்துச் செல்லும் வலு, ஜே.ஆரிடம் இருக்கவில்லை. ஜே.ஆரை ஆதரித்த ஏனைய சர்வதேச சக்திகளும் நேரடியாக இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை.  

 தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த ஜே.ஆருக்கு, இஸ்‌ரேலின் ஆதரவு அதிகம் இருந்ததாகப் பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள். இஸ்‌ரேலிய உதவியுடன், இலங்கையின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தந்திரோபாயங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.   

இதை வௌிப்படையான சவாலாக இந்தியா பார்த்தது. இஸ்‌ரேலின் ‘மொஸாட்’, அமெரிக்காவின் ‘சீ.ஐ.ஏ’, பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ’, ஐக்கிய இராச்சியத்தின் ‘எம்.ஐ.6’, இந்தியாவின் ‘றோ’ எனச் சர்வதேச சக்திகளின் உளவுத்துறைகள், இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகப் பலரும் பதிவுசெய்கிறார்கள்.   

இது, வெறும் இலங்கைக்குள்ளான இனப்பிரச்சினை அல்ல; மாறாக. பூகோள அரசியல் போட்டியின் ஆடுகளம் என்பதுதான் யதார்த்தமாக இருந்தது. இந்த நிலையில்தான், செப்டெம்பர் 30ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன சர்வகட்சி மாநாட்டை, நவம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.   

பிராந்திய சபைகளை ஜே.ஆர் ஏற்றுக் கொள்ளாததும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும்  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த பார்த்தசாரதியைத் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், சர்வகட்சி மாநாடு தொடர்பிலான தமது அதிருப்தியைப் பதிவு செய்ததுடன், தாம் பொறுமை இழந்துவிட்டதாகவும், சர்வகட்சி மாநாட்டிலிருந்து வௌியேறத் தாம் எண்ணியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   

சர்வகட்சி மாநாடு என்பது, இந்தியாவின் குழந்தை; குறிப்பாக, இந்திராவின் குழந்தை. அது தோல்வியடைவது, இந்தியாவின் தோல்வியாகும். ஆகவே, அமிர்தலிங்கம் தரப்பினரைப் பொறுமைகாக்கக் கோரிய பார்த்தசாரதி, அவர்களுடைய கரிசனங்கள் பற்றி, இந்திரா காந்தி அறிந்திருப்பதாகவும் தமக்கு உள்ள மாற்று உபாயங்கள் பற்றித் தாம் ஆராய்வதாகவும் உறுதியளித்தார்.  

வல்பொல ராஹுல தேரரின் அழைப்பு  

இந்த நிலையில், 1984 ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில், பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தன்னுடைய தலைமையிலான பௌத்த பிக்குகளின் குழுவொன்று, தமிழ்நாட்டில் சென்னை நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், வன்முறை மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று கூறியும் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.   

19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஏற்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத் தீயை, 20ஆம் நூற்றாண்டில் ஏந்திச் சென்றவர்களுள் முக்கியமானவர் வல்பொல ராஹூல தேரர் என்பவராவார். 
வல்பொல ராஹூல தேரர், ஒரு பௌத்த துறவி மட்டுமல்ல, பௌத்தம், குறிப்பாகத் தேரவாத பௌத்தம் பற்றிய புலமையாளர்களில் முக்கியமான ஒருவர்.  

இலங்கை மட்டுமல்லாது, சர்வதேசப் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தவர். இது அவருடைய ஒரு முகம். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத செயற்றிறனாளர் என்பது அவருடைய மறுமுகம். 

தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, பௌத்த துறவிகள் தம் உயிரையும் தரத்தயார் என்ற தேசிய பகட்டாரவார எண்ணத்தைக் கொண்டிருந்தவர் என்பதோடு, சர்வகட்சி மாநாட்டில் மாவட்ட சபைகளைத் தாண்டிய தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதிலும் மிகஉறுதியாக இருந்தவர்.  

 தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, இலங்கைத் தீவின் பௌத்த பாரம்பரியத்தைப் பேணிக் காக்க, பௌத்த துறவிகள் சமூக செயற்பாடுகள் மற்றும் அரசியலில் ஈடுபட வேண்டும் என, ‘பிக்குகளின் பாரம்பரியம்’ (ஆங்கிலம்) என்ற, அவர் 1974இல் எழுதிய நூலில், பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபட, வௌிப்படையாக அறைகூவல் விடுத்தார்.  

பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பிரவேசத்துக்கும் - சமகால அரசியலுக்கும், தமக்கான அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்களின் உருவாக்கத்துக்கும் ஊற்றுவாயாக, வல்பொல ராஹூல தேரரைக் கருதலாம்.   

பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, ‘இலங்கையின் பௌத்த துறவிகள்’ பற்றிய தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிடும் எச்.எல். செனவிரட்ன, ‘மேல்தட்டு பௌத்த பிக்குகளின் போர்வெறியைத் தூண்டும் பிரசாரமும், இராணுவ நடவடிக்கை மூலமான வெற்றியே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்ற கோட்பாடும், பௌத்த துறவறத்தின் சமூக மற்றும் மனிதாபிமான கரிசனைக் குறைவைக் காட்டுகிறது.  பௌத்தத் துறவறமானது, சமாதானம் தொடர்பிலான ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இனப்பிரச்சினை இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கும்’ என்று பதிவு செய்கிறார். 

கௌதம புத்தர் போதித்த, புனித அட்டவழிப்பாதையில் செல்லும் கடப்பாடுடைய பிக்குகளின் அரசியல் ஈடுபாடு என்பது, மதரீதியான பார்வையில் ஏற்புடையதல்ல. இத்தகைய  வாதம் இலங்கை, மியான்மார், தாய்லாந்து உள்ளிட்ட பலநாடுகளின் பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனமாகும்.   

இது தனித்து ஆராயப்படத்தக்க பெரும் வாதப் பரப்பாகும். புலைமைத்தளத்தில், ‘அரசியல் பௌத்தம்’ என்று இதை விளிக்கிறார்கள். யதார்த்தத்தில் மதங்கள், அரசியலின் முக்கிய கருவியாகப் பயன்பட்டதை, பயன்பட்டுக்கொண்டிருப்பதைக்  காணலாம்.  பௌத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல. 

சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியாளர்களான டீ.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவல ஆகியோர் பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பங்களிப்பை விரும்பவில்லை.   
மாறாக, அவர்களை ம‌ய்யநிலை அரசியலிலிருந்து சற்று அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்கள் என்று சில விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள். 

ஆனால், எஸ். டபிள்யு.ஆர். டீ. பண்டாரநாயக்கவின் ‘பஞ்சமாபலவேகய’வுடன் இந்த நிலை மாறுகிறது.   
எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன போன்ற தலைவர்கள், பௌத்தத்தைத் தமது அரசியலுக்குச் சாதகமான கருவியாகப் பயன்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாதது.  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மறுப்பு  

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதியாக அறியப்பட்ட வல்பொல ராஹூல தேரர், ஜே.ஆருக்கும் இனவெறி கக்கும் சிங்கள-பௌத்த தேசியவாதியான அமைச்சர் சிறில் மத்யூவுக்கும்  நெருக்கமானவராகவும் திகழ்ந்தார்.
சர்வகட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தமை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதன் உள்நோக்கம் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.  

சர்வகட்சி மாநாட்டில், வெறும் பிராந்திய சபைகளைக் கோரிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையையே நிராகரித்து, மாவட்ட சபைகளை விட, அதிகமான தீர்வொன்றை வழங்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்த வல்பொல ராஹூல தேரர், தனிநாடு கோரும் தம்மிடம் எந்தச் சமரசத்தை முன்வைக்கப் போகிறார் என்பது, தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் இதற்குப் பின்னால், வேறேதும் நிகழ்ச்சிநிரல் இருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி இருந்தது.    

இந்த நிச்சயமற்ற சூழலில், இதைத்  தவிர்ப்பதே சாலச்சிறந்தது என்று கருதிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் அமைப்புகளின் தலைமைகள், வல்பொல ராஹூல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.   

அவர்கள் இணைந்து அனுப்பிய பதில் கடிதத்தில், ‘பௌத்த துறவிகள் குழுவோடு நாம் பேசத் தயாராக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களோடு பேசுவது தமிழ்மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வைப் பெற்றுத் தராது’ என்று குறிப்பிட்டிருந்தனர்.   

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், வல்பொல ராஹூல தேரரின் அழைப்பை மறுத்து, தனியாகப் பதில் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘நாம் வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்ல; நாம் பயங்கரவாதத்தில் ஈடுபடவுமில்லை; அடிமையாக வாழாதிருப்பது மட்டுமே எங்களுடைய ஒரே எண்ணம். நாம் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நாம் அமைதியாக வாழவே விருப்பம் கொண்டுள்ளோம். அரசாங்கத்தின் ஆயுதம் கொண்ட அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ளவே, நாம் ஆயுதம் ஏந்தியுள்ளோம்.

வணக்கத்துக்குரிய பௌத்த துறவியான நீங்கள், பௌத்த மதத்தை அவமதிக்கும் அரசாங்கமொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதையிட்டு வருத்தம் கொள்கிறோம். நீங்கள் உண்மையில் சமாதானத்தை விரும்பினால், நீங்கள் உண்மையில் பௌத்தத்துக்கும் பௌத்த தர்மத்துக்கும் மதிப்பளித்தால் தயவுசெய்து அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம், அதன் அடக்குமுறையை நிறுத்த அறிவுறுத்துங்கள். எமக்கு அமைதி வேண்டும்; ஆனால், அதற்காக நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திடம் மண்டியிட்டு ஏமாற்றமடைய, நாம் தயாரில்லை’ என்று குறிப்பிட்டிருந்ததாக, ரீ.சபாரட்ணம் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார்.   

1984 ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துப் பரவிய வன்முறைகள், ஒக்டோபர் மாதத்திலும் தொடர்ந்ததுடன், தலைநகர் கொழும்பையும் எட்டிப் பார்த்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரு-பௌத்த-துறவியின்-தூது/91-217753

Link to comment
Share on other sites

இலங்கையின் உயர் குழாம் அரசியல்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 149)

தலைநகரை அதிர வைத்த தாக்குதல்கள்  

வல்பொல ராஹுல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் நிராகரித்ததை, ஜே.ஆர், தனக்குச் சாதகமான பிரசாரமாக மாற்றினார்.   

தாம் சமாதானத்தை விரும்பினாலும், தாம் நேசக்கரம் நீட்டினாலும், ‘பயங்கரவாதிகள்’ அதை ஏற்கத் தயாரில்லை என்ற பாணியில், அந்தப் பிரசாரம் அமைந்திருந்தது. இதன் உட்பொருளாக, இராணுவ நடவடிக்கைதான் ஒரே வழி என்பது வௌிப்படுத்தப்பட்டிருந்தது.  

 ஜே.ஆர் சமாதானத்தையும் சுமுகமான தீர்வையும் விரும்பியிருந்தால், சர்வகட்சி மாநாடும், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு, அவர் இந்தியாவிடம் இணங்கிய, ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளும் அவரது கையில்தான் இருந்தன. அவற்றை மிகச் சுலபமாக நிறைவேற்றியிருக்க முடியும். 

ஆனால், ஜே.ஆரின் நோக்கம், சமாதானமும் சுமுகத் தீர்வுமாக இங்கு இருந்திருக்க முடியாது. தனது, இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையே அவர் தேடிக்கொண்டிருந்தார்.  

வடக்கு, கிழக்கில் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த வேளை, 1984 ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில், தலைநகர் கொழும்பை ஆட்டிப்போட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ‘ஈரோஸ்’ (ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம்) நடாத்தியது.   

1984 ஒக்டோபர் 22ஆம் திகதி, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, பாலியகொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில், தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகள், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தன.   

வடக்கு, கிழக்கில் வன்முறைத் தாக்குதல் நடக்கும்போது, அதற்கப்பால்  உள்ள பிரதேசங்களுக்கு அவை வெறும் செய்திதான். ஆனால், இலங்கையின் தலைநகரில் அது நடக்கும் போது, அது வெறும் செய்தியாகக் கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. 

உடனடியாக ஊடகச் சந்திப்பை நடத்திய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டினார்.   

“பயங்கரவாதிகளின் எண்ணம், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்த, சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதாகும். பயங்கரவாதிகளின் இந்த நோக்கம் நிறைவேறக் கூடாது. ஆகவே, சிங்கள மக்கள் அமைதி காக்கவும்” என்று அவர் வேண்டியிருந்தார்.  

 இந்தத் தாக்குதலின் பின்னணியில், இந்தியா இருந்ததெனச் சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ஜே.ஆர் நழுவி, அமெரிக்கா, இஸ்‌ரேல் உள்ளிட்ட நாடுகளின் பின்புலத்துடன், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு அதிருப்தியை அளித்தது.   

‘ஜே.ஆர், வன்முறை வழியை நாடினால், இந்தியாவும் அதை உரிய வகையில் எதிர்கொள்ளத் தயார்’ என்ற செய்தியை, குறித்த தாக்குதல் உணர்த்துவதாக அமைந்ததுடன், ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பச் சொல்லும் எச்சரிக்கையாகவும் அமைந்தது என அவர்கள் கருத்துரைக்கிறார்கள்.  

 இந்தியாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் ஜே.ஆர், மேற்கின் உதவியுடன் தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்தபோது, மறுபுறத்தில் இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்தது.   

இலங்கை அரசியலில் முக்கியமான திருப்பம்

இதில் ஜே.ஆருக்கு புரிபடாது போன ஒரே விடயம், ஜே.ஆரைப் பின்புலத்தில் ஆதரித்த எந்தவொரு மேற்கு நாடும், இந்தியாவை நேரடியாக எதிர்க்கப்போவதில்லை என்பதுதான். ஜே.ஆருக்கு இன்னொரு விடயமும் புரிந்திருக்காது போயிருந்தது.  

 தமிழர்களின் தலைமை, தமிழ் உயர்குழாமிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது. இந்த மாற்றம்தான், இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு திருப்பம்.  

உயர்குழாமும், இலங்கை அரசியலும்  பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கோல்ப்றூக்-கமரன் அரசமைப்பின் மூலம், உள்நாட்டவருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதிலிருந்து இலங்கையின் அரசியல், இலங்கையின் உயர்குழாமின் கட்டுப்பாட்டில்தான் இருந்துகொண்டிருந்தது.    

பெரும் தனவான்களும், நிலவுடைமையாளர்களும், முதலியார்களும் கொலனித்துவக் காலத்தில், மேற்கத்தேய கல்வி கற்றதன் வாயிலாக உருவான புதிய உயர்-மத்திய தர தொழில் நிபுணர்களையும் கொண்ட உயர்குழாம் தான், இலங்கையின் அரசியலை வடிவமைத்தது.   

இது பற்றிய கடுமையான விமர்சனப் பார்வை, முதலில் இடதுசாரிய அரசியல் ஆய்வாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கை அரசியலின் இந்தப் பரிமாணத்தையும் விளங்கிக் கொள்வது அத்தியாவசியமானது.   

இது தனித்து ஆராயப்படக்கூடிய ஒரு பரப்பு. ஆனால், மிகச் சுருக்கமாகவேனும் இதனை இங்கு நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

இலங்கையின் சுதந்திரத்தை, இரத்தம் சிந்தாது பெற்ற சுதந்திரம் என்று, சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க வர்ணித்தார்.   

ஆனால், 1948இல் இலங்கை பெற்றது சுதந்திரம் அல்ல; மாறாக, டொமினியன் அந்தஸ்துதான். 1947இல் பிரித்தானியா வகுத்தளித்த, பெரும்பாலும் சோல்பரிக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றியமைந்த சோல்பரி அரசமைப்பின்படி, பிரித்தானிய ‘வெஸ்மின்ஸ்டர்’ மாதிரியை ஒத்த அமைப்பு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது,   

இது 1972இல் இலங்கை குடியரசு ஆகும் வரை தொடர்ந்தது. அதாவது 1948இலிருந்து 1972 வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியில், பிரித்தானிய முடியாட்சிக்குக் கீழ்ப்பட்ட நாடுதான். இலங்கையின் அயலவர்களின் நிலையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது.   

இந்தியாவும், பாகிஸ்தானும் விரைவில் தமக்கென்ற சுதந்திர அரசமைப்பைத் தாம் வடிவமைத்துக்கொண்டன. 1946இல் அமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சபை, தன்னுடைய கடமையை 1950இல் நிறைவு செய்ததுடன், அந்த அரசமைப்பு ஏற்கப்பட்டு, 1950இல் இந்தியா குடியரசாகியது. 

 பாகிஸ்தான் 1956இல் குடியரசாகியது. ஆனால் இலங்கையில், 1972இல் இடதுசாரித் தோழர்களுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க கைகோர்த்தது வரை, அதற்கான தேவையை இலங்கை அரசியல் தலைவர்கள் உணரவே இல்லை. 

ஏனென்றால், அதற்கான அவசியப்பாடு, இலங்கையின் உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை.   

இலங்கையின் சிங்கள அரசியல் பரப்பை எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையிலான அவர்களது அரசியல், கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டுச் சிங்களவர் என்ற இருபெரும் பிரிவுகளும், அப்பிரிவுகளுக்குரிய மேற்குறிப்பிட்ட உயர்குழாமால்தான் வடிவமைக்கப்பட்டு, பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது.   

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவும் கண்டியத் தலைவர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் சமஷ்டி கோரியது, கண்டியச் சிங்களவர்களாகிய தம்முடைய தனித்த அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.   

 ஆனால், 1931இல் டொனமூர் அரசமைப்பின் கீழ், சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கைக் குடிப்பரம்பலில் சிங்கள பௌத்தர்கள் அதீத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உணரப்பட்டது. 

இதன் பின்னர், பிரிவடைந்த சிங்கள அடையாளங்களுக்குப் பதிலாக, ஒருமித்த சிங்கள பௌத்த தேசிய அடையாளம்தான் தமக்குச் சாதகமானது என்று, சிங்களத் தலைவர்கள் கருதினார்கள். இது, அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வழிசமைத்தது. 

மறுபுறத்தில், தமிழ்த் தலைமைகள் ஆரம்பத்தில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்காது, இலங்கைத் ‘தேசியஅரசு’ என்ற ஒற்றையாட்சிக்குள், அதிகாரச் சமநிலையைக் கோரின.

இக்கோரிக்கையானது, நிச்சயம் தமிழ் மக்களின் விருப்பின் பிரதிபலிப்பாக இருந்திருக்க முடியாது. மாறாக, மேற்கத்திய பாணியிலான, குறிப்பாக பிரித்தானியாவின் மாதிரியிலான தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்பும், பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற, உயர்குழாமின் எண்ணமாகவே இருந்தது.  

 சுதந்திர இலங்கை அரசியலைத் தீர்மானித்தவர்கள், ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆவார். 
இலங்கையை ஆட்சி செய்த, செய்கின்ற பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுள் டீ.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குடும்ப ரீதியிலான பிணைப்புகளைக் கொண்ட உறவினர்கள்.  

 எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் நிலவுடைமையாளர்கள்.   
இவர்கள் அத்தனை பேரும் ஆங்கிலப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். டீ.எஸ். சேனநாயக்கவையும் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் தவிர, ஏனையவர்கள் அனைவரும் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள்.   இது சிறியதோர் உதாரணம் மட்டும்தான். இலங்கை அரசியலை வடிவமைத்ததும், கொண்டு நடத்தியதும் இப்படிச் சில குடும்பங்களும், உறவினர்களும், நண்பர்களும்தான்.   
தெற்காசியாவின் சந்ததி அரசியலைப் பற்றிய இந்தர் மல்ஹோத்ராவின் நூலில், ‘இலங்கை தான், சந்ததி அரசியலில் மிக முக்கியமானதும், முன்னணியானதுமான நாடு’ என்று குறிப்பிடுகிறார்.  

தமிழ்மக்களின் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையின் தமிழர் அரசியலில் பொன்னம்பலம், குமாரசுவாமி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.   

இதன் பின்னணியில், யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர் என்ற அடையாளம் செல்வாக்குச் செலுத்தியது. அதன் பின்னர், தனித்த குடும்ப செல்வாக்குக்குப்  பதிலாக ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் என, ஆங்கிலக் கல்வி கற்ற, ‘அப்புக்காத்துகள்’ என்ற உயர்குழாமின் ஆதிக்கத்துக்குள் தமிழ் அரசியல் வந்தது.   

இதனாலேயே தமிழர் அரசியலை, ‘அப்புக்காத்துகளின் அரசியல்’ என்று ஹாஸ்யத்துடன் சிலர் விளித்ததை,  அவதானிக்கக்கூடியதாக இருந்தது.   

இதைவிடவும், இதற்குள் பிரதேசவாத, சாதிய அடையாளங்களும் முக்கியத்துவம் பெற்றதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர்களின் செல்வாக்கு, தமிழ் அரசியலை வடிவமைத்தது எனலாம். இங்கு செல்வநாயகத்தை, விதிவிலக்காகச் சிலர் குறிப்பிடலாம்.   

ஆனால், செல்வநாயகம் மேற்குறித்த செல்வாக்குக் குழுவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டவர் அல்லர்; மாறாக, அவர்களுடன் ஒன்றித்துப் பயணித்தவர். இவர்கள்தான், முதன்முதலில் இலங்கை என்ற, ஒற்றையாட்சி தேசிய அரசைக் கட்டியமைக்க முயன்றார்கள்.  

அது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்துக்குள் விழுந்ததும், சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தாலும், ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகவே இருந்தார்கள்.  

 இங்கு சிங்களவர்கள் இடையேயும் தமிழர்கள் இடையேயும் அரசியலானது, சமூகத்தளத்தில் மேலிருந்து கீழ்நோக்கிய, அதிகாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது எனச் சில விமர்சகர்கள்,   குறிப்பாக இடதுசாரி விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள். 

இது, ஒரு மக்கள் கூட்டத்தினது அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதில், அந்த மக்கள் கூட்டத்தின் தலைமைக்கு, அதீத செல்வாக்கை வழங்கியது.   

அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதும், வடிவமைப்பதும் அவர்களின் தலைமைகளாகவே இருந்தார்கள். 

இங்கு தலைமைகள் சொல்வதை, ஆமோதிப்பவர்களாக அல்லது ஆமோதிக்க வேண்டியவர்களாகவே மக்கள் இருந்தார்கள்.  

 அதிகாரப் பகிர்வோ, சமஷ்டியோ, தனிநாடோ, தமிழ்த் தலைமைகள் தாம் விரும்பியதை, தமிழ் மக்களின் அபிலாஷைகளாகப் பிரதிபலிக்கும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்கள்.   

இலங்கை அரசாங்கம், இந்தக் காலகட்டத்தில் மிகக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வை வழங்கி இருந்தாலும், அதை ஏற்றதொரு தீர்வாகத் தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்கும் அரசியல் வலு, தமிழ்த் தலைமைகளிடம் இருந்தது.  

ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழ்த் தலைமைகளின் இந்த அரசியல் வலு, குறைவடையத் தொடங்கியது. 

இதே தமிழ்த் தலைமைகள், அரசியல் பகட்டாரவாரமாக விதைத்த தனிநாடு என்ற அபிலாஷையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மயப்படுத்தி, முன்னெடுக்கத் தொடங்கின.   

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின்பால் தமிழ் மக்களை நகர்த்திச் சென்றது.   

ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தும் செயலானது, ஜே.ஆரின் குறுங்கால அரசியல் திட்டமான, இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமானதாக இருந்திருக்கலாம்.   

ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ, அது தமிழர் அரசியலின் உயர்குழாமின் செல்வாக்கைச் சிதைக்கவும் செய்தது. 

இனி ஜே.ஆர் விரும்பினாலும், மூடிய அறைகளுக்குள் ஒரு சில தலைவர்களுடன் உடன்படிக்கை செய்து, அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியாது என்ற சூழலை உருவாக்கி இருந்தது.  

 தமிழ் மக்களின் அரசியல் இப்போது, உயர்குழாமைத் தாண்டி, மக்கள் மயமாகி இருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-உயர்-குழாம்-அரசியல்/91-218048

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.