Jump to content

'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்


Recommended Posts

'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்
 

130084294677.jpgஜேம்ஸ்பொன்ட் வரி­சையில் புதிய திரைப்­ப­ட­மான ஸ்பெக்ரர் திரைப்­படம், கலக்­க­லாக தனது வசூல் வேட்­டையை ஆரம்­பித்­துள்­ளது.

 

டேனியல் கிறேக் 4 ஆவது தட­வை­யாக ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடித்­துள்ள இப்­ப­டத்தை சாம் மெண்டிஸ் இயக்­கி­யுள்ளார்.  

 

லண்­ட­னி­லுள்ள ரோயல் அல்பர்ட் அரங்கில்  கடந்த 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இரவு 8 மணிக்கு ஸ்பெக்ரர் படத்தின் முத­லா­வது காட்சி காண்­பிக்­கப்­பட்­டது.

 

பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வில்­லியம் உட்­பட பலர் இதில் கலந்­து­கொண்­டனர்.

 

அக்­காட்சி ஆரம்­ப­மாகி 15 நிமி­டங்­க­ளின்பின்  பிரிட்­டனில் 647 அரங்­கு­களில் இப்­படம் வெளி­யி­டப்­பட்­டது.

 

முதல் ­நாளில் இப்­படம் 41 லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­களை வசூ­லித்­தது.

 

இப்­ப­டத்தின் விநி­யோக நிறு­வ­னமான சோனி பிக்சர்ஸ் நிறு­வனம், இந்த வசூல் கண்­களைக் கவர்­வ­தாக உள்­ள­தென வர்­ணித்­துள்­ளது.

 

ஜேம்ஸ்பொண்ட் திரைப்­பட வரி­சையில் ஸ்பெக்ரர் 24 ஆவது திரைப்­ப­ட­மாகும்.

 

டேனியல் கிறேக்­குடன் கிறிஸ்டோப் வால்ட்ஸ், லியா சேடொக்ஸ், பென் விஷோ, நயோமி ஹரிஸ், டேவ் பௌடிஸ்டா, மொனிக்கா பெலூசி, ரால்வ் பியன்ஸ் ஆகி­யோரும் இப்­ப­டத்தில் நடித்­துள்­ளனர்.

 

இப்­படம் 30 கோடி டொலர் சுமார் 4140 கோடி ரூபா) செலவில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

 

130084294664.jpg

ஸ்பெக்ரர் வெளியீட்டு விழாவில் பிரெஞ்சு நடிகை லியா சேடொக்ஸ், பிரித்தானிய நடிகர் டேனியல் கிறேக், இத்தாலிய நடிகை மொனிக்கா பெலூசி...

....................................................................................................................................

 

அமெரிக்காவில் எதிர்வரும் 6 ஆம் திகதி இப்படம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=13008#sthash.4o5Y51bo.dpuf
Link to comment
Share on other sites

படத்தின் பெயரை திரும்ப ஒருதரம் சொல்லும்படி இந்தியாகாரர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் பெயரை திரும்ப ஒருதரம் சொல்லும்படி இந்தியாகாரர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஆகாகா,

அது இலங்கை பேப்பர், சனியன்...:unsure:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர். ஏன் பார்க்க வேண்டும் ? ஒரு சின்ன அலசல்!

 

'ஜேம்ஸ் பாண்ட் 007' கிட்டத்தட்ட உலகின் கடைசிநிலை சினிமா ரசிகர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான என்பதை விட பொறாமை வரவழைத்த ஒரு நாயகன். பாண்ட் வரிசையில் இதுவரை 23 படங்கள் வெளிவந்திருக்கின்றன. 24-வது படமாக வெளிநாடுகளில் வெளியாகி லைக்ஸும் விமர்சனங்களும் குவித்துக் கொண்டிருக்கிறது 'ஸ்பெக்டர்’.

Spectre1.jpg

இந்தியாவில் கொஞ்சம் லேட்டாக நவம்பர் 20-ல் ரிலீஸ்.ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே அதிக வசூல் குவித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்கைஃபால்’ தான். ஸ்கைஃபால் படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் கொடுத்த எதிர்பார்ப்புகளால் அதைத் தொடர்ந்து, ஸ்பெக்டருக்கும் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ் தான் 'ஸ்பெக்டர்’ படத்தையும் இயக்கி இருப்பவர். இந்நிலையில் இந்தியாவில் இம்மாதம் வெளியாகவிருக்கும் ஸ்பெக்டர் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ ஒரு சின்ன அலசல்.

1. மெக்ஸிகோவில் நடைபெறும் 'டே ஆப் தி டெட்' திருவிழாவின் சலசலக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து, தி கிராண்ட் ஹோட்டல் லாபி பின்னர் ரூப் டாப் என எதிரியைக் கொல்லப் பறந்தோடும் நாயகன். சிட்டியின் மெயின் ஸ்கொயரில் ஹெலிகாப்டரில் நடைபெற்ற இந்த சண்டைக்காட்சியின் பைலட்டாக ரெட்புல் நிறுவனத்தின் ஏரோபாடிக் விமானி சுக் ஆரோன் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தக் காட்சிக்காக 107 மேக்கப் ஆர்டிஸ்டுகள் அவர்களுக்கு உதவியாக 1500 பேர், இவர்கள் தவிர 36 அடி உயரத்தில் 10 எலும்புக்கூடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது தான் நாயகன் டேனியல் கிரேய்க் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

specture%205.jpg

2. கேசினோ ராயல் படத்தில் வரும் போர்ட் மான்டியோவை இனி மறந்துவிடலாம், ரோம் நகரில் இருக்கும் டைபர் நதியின் கரையில் நடக்கும் கார் சேஸிங் இதுவரையிலான பாண்ட் பட கார் சேஸிங்குகளை பீட் செய்கிறது. ஜாகுவர் நிறுவனத்தின் பவர்ஃபுல் மாடலான Jaguar C-X75 மற்றும் ஆஸ்டன் மார்டினின் DP10 ரக கார்களும் முதன்முறையாக ஆக்சன் அட்டகாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த மாடல் கார்கள் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே கார்கள் தான் சிறப்பு. இந்தப் படம் இன்னும் கண்களுக்கு விருந்து தரும்.

3.'ஸ்பெக்டர்’ படத்துக்காக நான்காவது முறையாக பாண்ட் அவதாரம் எடுத்திருக்கிறார் டேனியல் கிரேய்க். சில மாதங்களுக்கு முன்புவரை இதுதான் டேனியலின் கடைசி பாண்ட் படம் என செய்திகள் வெளியாகின. ஒரு பேட்டியிலும் 'இப்போதைக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்’ எனச் சொல்லியிருந்தார் டேனியல் கிரேக். ஆனால், அவர் வேண்டாம் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும், அவரது ரசிகர்களும் விடுவதாய் இல்லை.எனவே, பரவாயில்லை என அடுத்த படத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனவே டேனியலை நாம் 007 ஆகப் பார்க்க இன்னும் இரண்டு வாய்ப்புகளே. அதில் ஒன்று ஸ்பெக்டர். 

specture%203.jpg

4.  நிறையத் தேடல்களுக்குப் பிறகு 'பாண்ட் கேர்ள்’ வேடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பிரெஞ்ச் நடிகை லியா சீடவுக்ஸ் (Lea seydoux). இவருடன் போனஸாக இன்னொரு கேர்ளுக்கும் வாய்ப்பு தந்திருக்கிறது ஸ்பெக்டர். அவர்... இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சி. உலக சினிமா ரசிகர்களை 'மெலினா’ படத்தில் கிறங்கடித்தவர். 50 வயதானாலும் ரொமான்ஸ் குயின் என்பதால் மோனிகா ரசிகர்களும் பாண்ட் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டபுள் பொனான்ஸா!

5. 'ஸ்பெக்டரில்' சூப்பர் வில்லனாகக் களமிறங்குகிறார், கிறிஸ்டோப் வால்ட்ஸ். ட்ஜேங்கோ அன்செயிண்ட் (Django Unchained)  திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். ஜேம்ஸ் பாண்டின் வில்லனாகக் களமிறங்க எல்லோரும் வரிசையில் நிற்கிறார்கள். இவரோ, சாம் மெண்டிஸ்ஸின் கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

http://www.vikatan.com/cinema/article.php?aid=54617

Link to comment
Share on other sites

"ஜேம்ஸ் பாண்ட், கொஞ்சம் கம்மியா முத்தம் கொடுங்க.." இப்படிக்கு இந்திய சென்சார் போர்டு!
 
  மும்பை: ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டருக்கு இந்திய சென்சார் போர்டு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. மேலும், பாண்ட் கொடுக்கும் உதட்டு முத்த காட்சிகளின் அளவை குறைத்து வெட்டி வீசியுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் கருத்துரிமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
 
ஜேம்ஸ்பாண்ட் வரிசை திரைப்படங்களில் தற்போது வெளியாகி சக்கைபோடு போட்டுவரும் திரைப்படம் ஸ்பெக்டர். உலகமெங்கும் வெற்றிநடைபோட்ட இப்படம் வரும் வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ரிலீசாகிறது.
James Bond will kiss less in India
 இப்படத்துக்கு இந்திய சென்சார் வாரியம், யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளோடுதான் சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற 4 முத்த காட்சிகள், 2 வசனங்கள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனவாம். அந்த கட் செய்யப்பட்ட காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதத்தோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்திருந்தாராம். முத்த காட்சியை மொத்தமாக நீக்க கோராத, சென்சார் போர்டு, தேவையில்லாமல் நீண்ட நேரமாக, அவர் வாய் விளையாட்டு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
எனவே, முத்தக்காட்சிகளின் நீளத்தில் சுமார் 50 சதவீதம் கட் செய்யப்பட்டுள்ளதாம். அதேபோல, ஆங்கிலத்தில் 'எப்' என்ற வார்த்தையில் தொடங்கும், வசனங்களும், 'ஏ' என்ற வார்த்தையில் தொடங்கி ஹோல் என்ற வார்த்தையில் முடியும், கட் செய்யப்பட்டுள்ளனவாம். இதனிடையே, சென்சார் வாரியம், இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமைவாதிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகிறார்கள்.
 
எழுத்தாளரும், இயக்குநருமான, ஷ்ரிஷ் குண்டர் கூறுகையில், "ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.

Read more at: http://tamil.filmibeat.com/news/james-bond-will-kiss-less-india-037667.html
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.